நல்வரவு_()_


Monday 6 November 2017

சிரிச்சுக் கன நாள் ஆச்சு:)..  சிரிக்கலாம் வாங்கோ:)

சிரிக்கலாம் வாங்கோ என அம்பாக்:) கூப்பிட்டால், சிரிச்சுக்கொண்டே வரோணும்:) சொல்லிட்டேன்:)..
முன்பு நகைச்சுவைகளும் இடைக்கிடை (தொகுத்து)  எழுதி    வந்தேன், பின்பு அப்படியே விட்டுவிட்டேன்.. கொஞ்சம் இங்கின போயும் படிச்சு சிரிச்சு உருண்டு வாங்கோ:) அப்போதான் சாப்பிட்டதும் செமிக்கும்:).. எதுக்கும் லைவ் இன்சூரன்ஸ் எடுத்திட்டுப் போய்ப் படிங்கோ:) பின்பு விழுந்து விழுந்து சிரிக்கும்போது அடிகிடி பட்டால் மீ பொறுப்பல்ல என்பதனை அஞ்சுவின் அந்த மஞ்சள் சுடிதார் - ஷோல் மேல் அடிச்சுச் சத்தியம் பண்ணுறேன்:)..


1.  பூஸ் "ஆர் ஏ டீ ஐயோ....."

ரி சரி உருண்டதெல்லாம் போதும்:)... அதிரா ஜோக் சொல்லப்போறேன் சிரிக்காமல் படிங்கோ:).. நீங்க சிரிச்சால் என்னால சொல்ல முடியாதாக்கும்:)... ஹா ஹா ஹா ஜோக் எனச் சொல்லி ஆட்கள் திரட்டிப்போட்டன்:) ஆனா சொல்லப்போவது?:)... அதுவும் இதுவும் கலந்த தத்துவம் + ஜோக் ஆக்கும்:), என்ன எழுதுறேன் என, எனக்கே புரியுதில்ல:), சரி விடுங்கோ... எப்பூடியாவது எழுதி முடிச்சுப் போடுவன்:)..

கில்லர்ஜி யின் சில போஸ்ட்கள் பார்த்து, எனக்கும் சில நினைவுகள் தோணியதே:)... நம்  மக்களில் பெரும்பான்மையினர், சமுதாயத்துக்குப் பயந்தே வாழ்கின்றனர். அது சரியோ பிழையோ என்று என்னால சரியாகச் சொல்ல முடியவில்லை, ஆனாலும் என்னைப் பொறுத்து சமுதாயத்துக்கு நாம் எதுக்குப் பயப்பட வேண்டும்? நாம் சரியாக நடந்தால் போதும், நமக்கு மட்டும்தான் நாம் பயப்பட வேண்டும், சமுதாயத்துக்கு வாயில் என்ன வருகிறதோ அதை அந்நேரம் பேசிவிட்டுச் செல்ல மட்டும்தான் தெரியும். அனுபவிப்பது என்னமோ நாம்தானே, அதனால பெரிதாக சமுதாயத்துக்குப் பயந்து ஒதுங்கிடக்கூடாது எனத்தான் நான் எண்ணுவேன்.

யாரும் என்னவும் சொல்லட்டும், நான் இப்படித்தான் இருப்பேன் எனச் சொல்லிகொண்டு முன்னோக்கிப் போவோர்கள் முன்னேறுகின்றனர், அடுத்தவரின் பேச்சுக்கு செவி சாய்த்து, பயப்பிடுவோர், தன்னை மாற்ற வெளிக்கிடுவோரால் முன்னேற முடியாது.

ஒரு குட்டிக் கதை:
ஒரு துறவி ஒருவர், காவி உடையோடு, ஒரு ரோட்டோரத்தில், ஒரு வரம்புபோல ஒன்றின் மீது தலையை வைத்து(தலை அணைபோல) சொகுசாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாராம். அப்போ அவ்வழியால் போன இரு பெண்கள் பேசிக்கொண்டார்களாம், அங்கே பார், துறவியின் சொகுசான உறக்கத்தை, அவருக்கும் தலையணை தேவைப்படுதுபோல என...

உறக்கம்போல கண்களை மூடிக்கொண்டிருந்த துறவிக்கு இது கேட்டு விட்டது, உடனே நினைத்தாராம், அதுவும் சரிதானே, எனக்கு எதுக்கு தலை அணை... என எண்ணி, தரையிலேயே நேராகப் படுத்தாராம்.. போன பெண்கள் திரும்பி வந்தனராம், அப்போ சொன்னார்களாம், இங்கே பார் துறவி  உறக்கம்போல நடிக்கிறார் போல இருக்கு, நாம் சொன்னது கேட்டு விட்டது, தரையிலே படுக்கிறார், இவருக்கு எதுக்கு இந்த ஒட்டுக் கேட்கும் வேலை... இவரெல்லாம் துறவியா என..

அப்போதான் துறவி நினைத்தாராம், அதுக்கும் சொல்கிறார்கள் இதுக்கும் சொல்கிறார்கள்.. இவற்றை எல்லாம் காதில் வாங்கினால் நான் துறவியாகவே முடியாது என. இப்படித்தான் இருக்கிறது சமுதாயம். நரம்பில்லாத நாக்கால் .. யாரும் எதுவும் சொல்லட்டும் நமக்கு நாமே நீதிபதி.

***************************************இடைவேளை**************************************
பேபி அதிரா புளொக்ஸ் க்குப் போகேக்கை பூஸ் ஐ விட்டிட்டுப் போங்கோ:)
ப்போ கொஞ்ச நாட்களாக யாருடைய புளொக்குக்கும் என்னால் ஒழுங்காக வரமுடியவில்லை, வந்தாலும் மை வைக்க முடிவதில்லை, இதனால சிலர் என்மீது கோபமாக, அல்லது எதுக்காக அதிரா ஒழுங்கா வருவதில்லை எனக்கூட நினைச்சிருக்கலாம்... மன்னிச்சுக் கொள்ளுங்கோ, இனி முடிந்தவரை வருவேன்... இதுவரை மொபைலூடாகவே வந்தமையால் எல்லா இடத்திலும் கால் வைக்க முடியவில்லை, இனி அச்சிரமம் இருக்காது...._()_.
**********************************************************************************************************

----------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்: கடந்த 3 வருடமாக இந்த பார்க்குக்கு நடந்து வந்து கொண்டிருக்கிறேன்.
மற்றவர்: அவ்ளோ தூரமா? வீட்டிலிருந்து பார்க்?
----------------------------------------------------------------------------------------------------------------
அந்தப் புரத்திலே நடந்து போய்க் கொண்டிருந்த மன்னருக்கு ஏன் திடீரென ஹார்ட் அட்டாக் வந்தது??

அது, மன்னரை ஆரோ அந்தப்புரத்திலிருந்து... மன்னா என்பதற்குப் பதில் “அண்ணா” என அழைத்து விட்டார்களாம்:)...
----------------------------------------------------------------------------------------------------------------
ஆங்ங்ங் இங்கின நீங்க எல்லோரும் சிரிக்கோணும்:)  இவை ஜோக்ஸ் ஆக்கும் ஹா ஹா ஹா
----------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க!!! சொர்க்கத்தில் கணவரும் மனைவியும் சேர்ந்திருக்க முடியாதாமே.. பேப்பரில் போட்டிருக்கு.. உண்மையா?:)..

கணவன்: அதனாலதானம்மா அதுக்கு சொர்க்கம் எனப் பெயர்:)
----------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: என்னங்க... பக்கத்து வீட்டு மார்கிரட் இறந்திட்டாவாம், நான் அப்படி இறந்தா நீங்க என்னங்க பண்ணுவீங்க?

கணவன்: என்ன கேள்வி இது?:).. எனக்குப் பைத்தியமே பிடித்து விடும்:)..

மனைவி: அப்படி எனில் நீங்க இன்னொரு திருமணம் முடிக்க மாட்டீங்களா?:)..

கணவன்: அது பைத்தியம் என்ன வேணுமெண்டாலும் பண்ணுமே.. யாருக்குத் தெரியும்?:)
----------------------------------------------------------------------------------------------------------------
வசுமதி:  எனக்கு வயிறு, எரி எரியெண்டு எரியுது டொக்டர்..

டொக்டர்: அப்படியா? இப்படி எப்போ தொடக்கம் இருக்கு?

வசுமதி: அது பக்கத்து பிளட்டில இருந்த பரிமளா அக்கா, நாலு அறை வீடு வாங்கிப் போனதிலிருந்து..

டொக்டர்:..????? ..ஙேஙேஙே..:).
----------------------------------------------------------------------------------------------------------------------------------
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஊசிக்குறிப்பு:
அறிவு என்றால் என்ன? 
அடுத்தவர்கள் துன்பப்படும்போது, அதைப்பார்த்த பின்பும், நமக்கெதுக்கு ஊர் வம்பு எனக் காக்கா போயிடாமல், அத் துன்பத்தைத் தீர்க்க முயல்வதே அறிவு.... வள்ளுவர் கிரான்பா:)....
இதை உங்களுக்காகக் காவி வந்திருப்பவர் மேன்மை தங்கிய:) பெருமதிப்புக்குரிய:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..:).
====================================================
ஊசி இணைப்பு:
------------------------------------------------------------------------------------------------------------------

99 comments :

  1. ஹாஹாஆ :) அந்த குண்டு பூஸை ஜிம்முக்கு அனுப்புங்க முதலில் ஓட முடியாம உக்காந்த இடத்தில உடம்பை மட்டும் ஷேக் பண்ணிக்கிட்டிருக்கு பாருங்க :) உங்களை மாதிரியே

    ReplyDelete
    Replies
    1. வாங்கஞ்சு வாங்கோ.... ஹா ஹா ஹா அவருக்கு ட்ரெயிங் குடுத்திருக்கிறேன்:) மையும் மொய்யும் வைக்காமல் போவோரின் கால் சின்னி விரலைக் கடிக்கச் சொல்லி:).. அதுதான் அலேர்ட் ஆ இருக்கிறார்:)..

      Delete
  2. அந்த சமுதாயத்துக்கு பயந்து //நிஜம் தான் மியாவ் வாழ்ந்தாலும் ஏசும் வீழ்ந்தாலும் ஏசும் ..நமக்கு நம் மனசாட்சி போதும்

    ஒரு பெண்மணி இங்கே மகள் பிரைமரி ஸ்கூல் படிக்கும்போது சந்தித்தவர் ..கணவரை பிரிந்தவர் எப்பவும் வித்யாசமா உடையணிவார் .ஒரு வெளிநாட்டு வாலிபருடன் நட்பாயிருந்தார் அங்குள்ள மற்ற பெண்கள் அவருடன் பேசவே மாட்டாங்க .தூர நின்னுகிட்டு அவரைப்பற்றி கோஸிப் செய்வாய்ய்ங்க . அந்த பெண் சொந்த உழைப்பில் வாழ்க்கையை நடத்துகிறார் இன்னும் மற்றவங்க தயவில் வாழ்ந்தா அவ்ளோதான் ..நம் மனதுக்கு நேர்மையா நல்லதை செஞ்சாலே போதும் .அதனால் நான் மட்டும் எப்பவும் அவரை பார்த்தாலே நின்று நலம் விசாரிப்பேன் ..

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான் அஞ்சு.. எங்கள் கொள்கையும் அதுதான், அடுத்தவர் என்ன சொல்லுவினமோ, சிரிப்பினமோ நகைப்பினமோ எண்டெல்லாம் யோசிச்சு நம்மை நாமே கெடுத்திடவும் கூடாது ஒதுங்கிடவும் கூடாது... சொல்பவர்கள் என்னவும் சொல்லிக்கொண்டே போவினம், ஆனா நமக்கு ஒரு பிரச்சனை என வந்தால் நாம்தானே பேஸ்பண்ணோனும்... அப்பவும் இந்த சமுதாயம் வந்து கை கொடுக்குமோ இல்லைத்தானே... அதனால எதுக்கு இதுக்கெல்லாம் பயப்படோணும்... எனத்தான் நானும் எண்ணுவேன், அதேபோல யாரையும் ஒதுக்குவதுமில்லை.

      எங்கள் மகன் 1ம் வகுப்பில் சேர்ந்தபோது, ஒரு குழந்தை அதன் பெற்றோர் றக்ஸ் விற்பவர்களாம்... தம் பிள்ளையாவது படிக்கோணும் எனக் கஸ்டப்பட்டு ஊர் மாறி வந்து இந்த ஸ்கூலில் சேர்த்தார்கள்.. வீடிருக்கும் ஏரியாவில்தானே ஸ்கூலில் சேர்க்க முடியும்.

      உடனே இங்கு சில பெற்றோர் வந்து நமக்கும் சொன்னார்கள், உங்கள் மகனை அந்தப் பிள்ளையோடு சேர வேண்டாம் எனச் சொல்லுங்கோ என... அது 5 வயசுப் பிள்ளை என்ன பாவம் செய்தது?... நாம் எதுவும் சொல்லவில்லை நம் மகனுக்கு.

      பின்பு மகனின் பேர்த்டே கொண்டாட்டம் ஒரு ஹோலில் செய்தோம் அனைத்து வகுப்புப் பிள்ளைகளையும் கூப்பிட்டு, அப்போ இக் குழந்தைக்கும் இன்விடேஷன் கொடுத்தோம்... அப்போ அவர் வந்து நம் மகனிடம் சொன்னாராம்.. யாருமே என்னை பேர்த்டேக்கு அழைப்பதில்லை.. நீ மட்டும் அழைத்திருக்கிறாய்.. ஐ ஆம் வெரி ஹப்பி என... இப்படி இருக்கு சமுதாயம்..

      Delete
    2. //றக்ஸ் விற்பவர்களாம்// rug ? are they travellers ?

      Delete
    3. [im] http://2.bp.blogspot.com/-1Woh9hbt6p0/UbzhnvYQA1I/AAAAAAAABaQ/BWUSNakI8Uw/s1600/5760e0003cff8b50a5a3a1b54e88fa60.jpg [/im]

      Delete
    4. ஹாஹா :) நான் எதோ கார்பெட் விக்கிறவங்கன்னு நினைச்சிட்டேன் :

      Delete
  3. அது என்னவோ படிக்காத ஜோக்ஸ் யாருமே போடமாட்டேன் என்கிறார்கள்! "மறுபடியும்தா"ன் சிரிக்க வேண்டியிருக்கிறது! முதல் படம் புன்னகைக்க விக்கிறது.

    முனிவர் கதை நடுவில் ஒரு வரி மிஸ்ஸிங் என்று நினைக்கிறேன்.

    இந்த சமூகத்துக்கு பயப்படுவது என்பது எப்படி வேண்டுமானாலும், இரண்டு பக்கமும்பேசக்கூடிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... என்னாதூஊஊஊஉ எல்லா ஜோக்ஸ் உம் தெரியுமோ ..ஙேஙேஙே... :).. சரி சரி சினிமாவில் பலதடவை ஜோக்ஸ் பார்த்தாலும் அலுக்காமல் சிரிக்கிறோமே அப்படி நினைச்சிட வேண்டியதுதான்:).

      ஒரு வரி மிஸ்ஸிங்கா? இப்பவும் படிச்சுப் பார்த்தேன் சரிபோலத்தான் எனக்குப் படுது... அது ஒரு போஸ்ட் போடுவதுக்குள் 30 தரம் எழும்பி ஓடவேண்டியும் 15 ஃபோன் கோல்ஸ்களுக்கு ஆன்சர் பண்ண வேண்டியும் வந்திடுது... இப்படி இருக்கு என் பாடு... இந்தப் போஸ்ட்கூட காதில் போனை வைத்தபடியே அவசரமாக போஸ்ட் பண்ணி விட்டு வெளியே போய் வந்தேனாக்கும்:) அதனால தப்புக்கள் நடக்க வாய்ப்பிருக்கு:)..

      உண்மைதான் சில நேரங்களில் பயப்படாததுபோல இருந்தால் தனியே ஒதுக்கி விட்டிடுவார்கள்.. வெளி ஊர்கள் எனில் எந்தப் பிரச்சனையுமில்லை, ஊருக்குள் எனில் நாம் விரும்பாவிட்டாலும் செவி சாய்க்க வேண்டி இருக்கும். ஆனாலும் தொட்டதுக்கும் பயப்படக்கூடாது எனத்தான் நான் நினைப்பேன்ன்.. நியாயம் என்று ஒன்றிருக்குதெல்லோ?:)..

      Delete
  4. /இதுவரை மொபைலூடாகவே வந்தமையால் எல்லா இடத்திலும் கால் வைக்க முடியவில்லை, இனி அச்சிரமம் இருக்காது...._()_.//

    இதில் சொற்பிழை இருக்கிறது :) கால் மற்றும் வால் என்று வந்திருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்:) வாலை எங்கேயும் வைப்பதில்லை:) முன்னங்காலில் நின்றபடி கொமெண்ட் போட்டு விட்டு றிவேர்ஸ்ல வந்திடுவேன்:)..

      Delete
  5. பதிவைப் படித்துவிட்டேன். பிறகு எழுதுகிறேன். இதை ஒட்டிய கதை,

    ஒரு பெரியவர், தன் பையனையும், கூடவே ஒரு குதிரையையும் நடத்திக் கூட்டிக்கொண்டுபோனார். ரோடுல பார்த்தவங்க, குதிரை இருக்கும்போது பையனை நடத்திக்கூட்டிக்கிட்டுப் போறாரே என்றனர். சரி என்று அவரும், குதிரைமேல் பையனை உட்காரவைத்து தான் நடந்துகொண்டு போனார். பாவம், வயசானவர் நடந்துவரார், சின்னவன் குதிரையில் உட்கார்ந்து வரானே என்றனர். சரி என்று, தான் குதிரையில் ஏறிக்கொண்டு பையனை நடந்துவரச்சொன்னபோது ரோடில் செல்வோர், வயசானாலும் இவருக்கு புத்தி எங்க போச்சு, பையனை நடந்து வரச் சொல்லி, தான் மட்டும் குதிரையில் ஏறிக்கொண்டு வருகிறாரே என்றனர். அவரும், சரிதான் என்று பையனையும் தன் மடியில் வைத்துக்கொண்டு குதிரையில் உட்கார்ந்து வருவதைப் பார்த்த சிலர், சே.. ஒரு விலங்கை இப்படியா கஷ்டப்படுத்துவது, இரண்டு பேர் ஏறிவந்தால், இந்த வெயிலில் குதிரை எவ்வளவு கஷ்டப்படும் என்றனர்.

    பிறருடைய விமரிசனங்களுக்குப் பயந்துகொண்டிருந்தால், நாம் நிம்மதியா இருக்கவே முடியாது.

    ஆமாம்.... ஜோக் போடறேன்னு சொல்லிட்டு அதை மட்டும் மறந்துட்டீங்களே.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.... ஹா ஹா ஹா எனக்கும் நினைவு வருது, நானும் இக்கதை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..

      அதேதான், விமர்சிக்க மட்டுமே இச்சமுதாயத்துக்கு தெரியும்... ஆனா உதவி தேவை என வரும்போது ஓடிவந்து செய்வினமோ இல்லை நமக்காக தாமும் பட்டினி இருப்பினமோ இல்லைத்தானே அப்போ எதுக்கு இவர்களுக்கெல்லாம் பயப்படொணும் எனத்தான் நானும் நினைப்பேன்.. சிலர் ஓவரா பயப்பிடுவினம் அவர்களுக்கும் நல்ல பேச்சுக் கொடுப்பேன் .. எதுக்குப் பயப்படுறீங்க என...

      Delete
    2. //ஆமாம்.... ஜோக் போடறேன்னு சொல்லிட்டு அதை மட்டும் மறந்துட்டீங்களே.//

      [im] https://www.google.co.uk/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwip9LHerarXAhWRSxoKHbr0AWwQjRwIBw&url=http%3A%2F%2Fwww.likecool.com%2FPicture_of_day__nbsp_running_cat--Pic--Gear.html&psig=AOvVaw3SnXWBuvwPQ28YJVMnkQ2S&ust=1510071693659383 [/im]

      Delete
    3. ஜோக்குகள் ரொம்பப் பழசு. இன்னொண்ணு... நகைச்சுவைக்கு பில்ட்-அப் கொடுத்தால் எதிர்பார்ப்பு அதிகமாகும், என்ன எழுதினாலும் ரசனை கம்மியாயிடும். மற்ற பகுதிகள் நல்லா இருக்கு.

      Delete
    4. ///ஜோக்குகள் ரொம்பப் பழசு.///
      ஆஆஆஆங்ங்ங்ங்ங் விடுங்கோ விடுங்கோ.. மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்.. ரொம்பப் பழசுன்னு ஜொள்ளிட்டாரே:)..

      //நகைச்சுவைக்கு பில்ட்-அப் கொடுத்தால் எதிர்பார்ப்பு அதிகமாகும்,///
      ஹா ஹா ஹா இங்கினதான் நீங்க தப்பா நினைச்சிட்டீங்க:).. இதில ஒரு பென்னாம்பெரீய தத்துவத்தையே அதிரா சொல்லிட்டேன்ன்:) அயாவது வந்தூஊஊஊ:).. எதிர்பார்ப்பு அதிகமானால்.. ஏமாற்றம் இருக்கும்:) அதனால மக்களே:) எதிர்பார்ப்பை எப்பவும் குறையுங்கோ:) எந்த பில்ட்டூஊஊஊஉ அப்புக்குக்கும் மயங்கிடாதீங்கோ:)... ஹா ஹா ஹா எப்பூடி?:).. மேலே பார்த்துக் கீழே பார்த்து உருண்டு பிரண்டெண்லாம் ஓசிச்சு:) எதையாவது சொல்லிச் சமாளிச்சிட வேண்டியதுதேன்ன்:) ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன்... இனி உங்களுக்குத் தெரியாததா தேடிப் பிடிச்சுப் போடப்பார்க்கிறேன்:) இல்லை எனில் ஹையோ இது எதுவுமே எனக்குத் தெரியாதே.. வட் அ ஜோக்.. வட் அ ஜோக் எனச் சிரிக்கோணும் :)

      Delete
    5. நானும் படிக்காத ஜோக்கைத்தான் படித்து ரசிக்கணும்னு நினைக்கறேன். ஆனா பாருங்க... ஜோக்கை படிச்ச உடன், எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு தோணுது. (அப்புறம்தான் இப்பத்தானே படிச்சோம்னு தோணுது) படிக்காம எப்படி சிரிக்கிறது.. சொல்லுங்க...

      Delete
    6. //ஜோக்கை படிச்ச உடன், எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு தோணுது. (அப்புறம்தான் இப்பத்தானே படிச்சோம்னு தோணுது) ///

      ஹா ஹா ஹா பார்த்தீங்களோ.. துவக்குக் காட்டி மிரட்டின பின்புதானே உண்மையை ஒத்துக் கொள்றீங்க:)... இந்த விசயத்தில மட்டும் கரீட்டாக் கொமெண்ட் போடும்போது மறதி வந்திடுதே உங்களுக்கு கர்ர்:)..

      இப்பூடிப் பிரச்சனைதான் ஸ்ரீராமுக்கும் இருக்கும்போல:).. படிச்ச ஜோக் எனப் பொசுக்கெனச் சொல்லிட்டாரே:) அவரும்:)....

      இப்போ சிரிங்கோ நெ.தமிழன்:)..

      Delete
  6. அண்ணான்னு சொன்னதுக்கு ஹார்ட் ஹர்ட் ஆனவர் அநேகமா மதுரை பாண்டிய மன்னர் இப்போ நியூ ஜெர்சியில் வசிக்கும் இவராகத்தான் இருக்கணும் :))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கரெக்ட் அஞ்சு:) இப்போ இதைப் படிச்சாலும் செகண்ட் அட்டாக் வந்திடப்போகுது:)

      Delete
    2. ஹை ஏஞ்சல் நீங்களும் அதையேதான் சொல்லிருக்கீங்களா....நானும் அதே...அதிரா கண்டிப்பா ஹர்ட் ஆகப் போறார் ஹாஹாஹாஹா...ஆனாலும் மீசைல மண் ஒட்டலைனு பாருங்க பீலா விடுவார்....ஹாஹாஹா

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா கீதா:) ட்றுத்தால இப்போ இதைப் படிக்க முடியாதாம்:) பிக்கோஸ் அவர்தான் ஐ சி யு ல இருக்கிறாரே.. அங்கே நெட் படிக்க அனுமதி நஹி:) ஹா ஹா ஹா:)..

      Delete
  7. ஊசி இணைப்பின் தத்துவம் "புல்"லரிக்க வைக்கிறது.

    ஊசிக்குறிப்பு : இப்போ எல்லாம் எதுக்கு வம்பு என்று போய்விடுவதே உத்தமம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நாம் எதுக்கு வம்பெனப் போனாலும் அது தானா முளைக்குமாமே:).. ஹையோ இப்போ எனக்கெதுக்கு இந்த வம்பு:) மிக்க நன்றி ஸ்ரீராம்... அடுத்ததடவை உங்களுக்குத் தெரியாத ஜோக்ஸ் ஆப்போடுறேன்.. ஆனா பலமாச் சிரிக்கோணும் சொல்லிட்டேன்:).

      Delete
  8. நோ எனக்கு சொர்க்கம் வேணாம் :) சேர்ந்தே நகரத்தில் நரகத்தில் இருப்பதே ஆனந்தம் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இங்கு எனக்கொரு கொமெடி நினைவுக்கு வருது..

      நோய் வாய்ப்பட்டிருக்கும் கணவனைப் பார்த்து மனைவி: என்னங்க.. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க:) உங்களுக்கு ஒன்றென்றால் நான் மட்டும் உயிரோடிருப்பேன் என்றா நினைக்கிறீங்க.. நானும் உங்க கூடவே வந்திடுவேன்...

      கணவன்:.. ஹையோ எனக்கு முச்சந்திச் சாத்திரியார் அப்பவே சொன்னார்:).. நீ செத்தாலும், உன்னைப் பிடிச்ச சனியன் உன்னை விட்டுத் தொலையாது என:) அது சரியாத்தான் இருக்கும்போல:)...

      ஹா ஹா ஹா:).. நரகத்திலயும் சிட்டி கேய்க்குதோ உங்களுக்கு?:)

      Delete
  9. ஹாஹா எல்லா ஜோக்ஸும் சூப்பர் :) மார்க்ரெட் அக்கா மேட்டரை வச்சி இப்படிலாம் யோசனை வருது பாருங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் அஞ்சு.. அன்றாட வாழ்க்கையில் நடப்பதையேதானே கொமெடியாக்கிடுறாங்க...

      Delete
  10. துன்பம் விஷயத்தில் உங்க க்ரான்ப்பா சொன்னது நமூருக்கு தான் மிக பொருத்தம் இங்கே வெளிநாடுகளில் பலர் விரும்ப மாட்டாங்க .
    எதையும் கேட்டுத்தான் செய்யணும் இங்கே .

    ReplyDelete
    Replies
    1. அது கரீட்டுத்தான்:) வள் கிரான்பா சொன்னது நம்ம ஊர் ஆட்களுக்காகத்தானே... மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  11. வணக்கம் பூஸ் !

    எல்லாம் நல்லா இருக்கு ஆனால் சத்தியம் சுடிதார் ல பண்ணக்கூடாது நல்லா தலையில அடிச்சு பண்ணனும் அப்போதான் அது சத்தியம் !ஹா ஹா ஹா

    நகைச்சுவை நல்லா இருக்கு அதிலும் சொர்க்கம் பைத்தியம் இரண்டும் செம செம ..

    அழகாய் நகைச்சுவை அடுக்கிச் சொல்லிட
    அதிரா வந்ததும் தெரியலையே - இதில்
    பழமை இருந்தும் பைத்திய நகைச்சுவை
    புதிதா புதிரா புரியலையே !

    அம்புலிப் பருவத் தடங்காப் பிள்ளை
    அப்பாவி ஆனாள் எப்போது ? - அட
    வம்பிழுத் திட்டால் வாயை உடைத்திட
    வருவாள் அரிவாள் இப்போது !


    சுகமான பதிவுகள் தொடரட்டும் பூசாரே ஊசிக்குறிப்பில் உள்ளம் ஒன்றியது நன்றி !
    தமன்னா ஐந்து !

    ReplyDelete
    Replies
    1. சீராளன்... கவிதை சூப்பர். ஆனால் இரண்டாவதில், "அம்புலி" க்கு ஏற்றவாறு இரண்டாவது வரியில் "அப்பாவி" அமையவில்லை. வருவாள் அரிவாள் என்பதும் வருமே அரிவாள் என்று வந்திருக்கவேண்டும். அவங்க "அரிவாள்"க்கு உவமை இல்லையே. அல்லது "அரிவாள்" என்பதை வினைச் சொல்லாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா?

      Delete
    2. வாங்கோ மேஜரே வாங்கோ..

      //எல்லாம் நல்லா இருக்கு ஆனால் சத்தியம் சுடிதார் ல பண்ணக்கூடாது நல்லா தலையில அடிச்சு பண்ணனும் அப்போதான் அது சத்தியம் !ஹா ஹா ஹா ///
      ஹா ஹா ஹா அப்பூடியோ சங்கதி.. இது தெரியாமல் போச்சே எனக்கு:) ஜொள்ளிட்டீங்க இல்ல? அடுத்த தபா:) தேம்ஸ் கரைக்கு வருவா தானே அப்போ பார்த்துக் கொள்கிறேன்:).

      அடடா அருமையான கவிதையுடன் வந்திருக்கிறீங்க.. மீக்கும் நிறைய டவுட்டுகள் வருதே.. இருங்கோ நெ த உடன் சேர்ந்து மீயும் புரட்டி எடுக்கிறேன் கேள்விகளில்:)..

      மிக்க நன்றி மேஜரே..

      Delete
    3. ///ஆனால் இரண்டாவதில், "அம்புலி" க்கு ஏற்றவாறு இரண்டாவது வரியில் "அப்பாவி" அமையவில்லை.//

      ஆங்ங்ங் இது கிளவி ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. இது கேள்வி..

      அப்பாவின் செல்லப் பிள்ளை என வந்திருக்கலாமோ? அம்புலிக்குப் பதில்?:) ஹா ஹா ஹா:).

      //அவங்க "அரிவாள்"க்கு உவமை இல்லையே. ///
      என்னாது ஒரு அப்பாவியைப் பார்த்து அரிவாள் எனச் சொல்லிட்டாரோ?:) இதை நான் திங்கு பண்ணவே இல்லையே.. இருங்கோ மீ இப்பவே பிரித்தானியாக் காண்ட் கோர்ட் போகிறேன்ன்ன்.. நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்:))..

      //"அரிவாள்" என்பதை வினைச் சொல்லாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா?//
      அதேதான் நெல்லைத்தமிழன்.. அப்படித்தான் நினைக்கிறேன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி..

      Delete
  12. ஹலோ உங்க தளம் என்னங்க லோடு ஆகுது ஆகுது ஆகிட்டே இருக்குது ஹும்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      அது அந்நேரம் அஞ்சு இங்கதான் நிண்டவ:) அதனாலதான்:).. மற்றும்படி ஒண்ணும் இல்லை:) ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு நயகரா வின் மேற்கால எறிஞ்சுபோடுங்கோ:)

      Delete
  13. விவரம் இல்லாத துறவியாக இருக்கிறாரே தலையனையை துறந்த அவர் அதற்கு பதிலாக அந்த பெண்களை அழைத்து அணைத்துபடுத்திருந்தால் நல்ல தூக்கமும் வரும் பெண்களும் அவரை மீண்டும் குறை கூறி இருக்க மாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).. அஞ்சு..கீதா.. ஓடிவாங்கோ பெண்களை எவ்வளவு மட்டமாகச் சொல்லிட்டர்ர்ர்:).. அதுவும் ஒரு புரட்சிப்போராளி:).. பெண்களுக்காகப் போராடி உண்ணாவிரதம் இருக்கும் தெகிறியசாலி:)... பெண்களைக் காப்பாற்றவென்றே தேம்ஸ்லில் அடிக்கடி குதிக்கும் ஒரு அப்பாவி.... இதெல்லாம் நாந்தேன்ன்:)...

      அப்பூடிப்பட்ட என் பப்புளிக்குப் புளொக்கில் வந்து இப்பூடிச் சொல்லிட்டாரே:).. வாங்கோ எல்லாப் பெண்களும் ஓடிவந்து ஒட்டு மொத்தமா “அண்ணாஆஆஆஆஆஆஆஆஆ” எனச் சவுண்ட் கொடுப்போம்ம்:)... அந்தச் சவுண்டில் நியூ ஜெர்ஷியே கலங்கி ஆடிப்போகட்டும்:)... எங்கிட்டயேவா?:)).. ஐ சி யு வில இருந்தாலும் அடங்குறாரா பாருங்கோ:)..

      Delete
  14. இந்த மதுரை மன்னருக்கு அந்த புரத்தில் வரும் சத்தம் எல்லாம் அண்ணா என்று கேட்காது ஏண்ணா என்றுதான் கேட்கும் அதனால அட்டாக் எல்லாம் வராது அவருக்கு வரும் ஒரு அட்டாக் பூரிக்கட்டை அட்டாக் மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. ட்றுத் நீங்க இப்போ அந்தப்புரத்திலிருந்தா பேசுறீங்க?:) ஹா ஹா ஹா அதுதான் என்னென்னமோ எல்லாம் பேசுறீங்க:)... ஹையோ நேக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

      Delete



  15. ஊசி குறிப்பு மிக நன்றாக இருக்கிறது அதனால் நீங்கள் தேம்ஸ் நதியில் குதிக்க கஷ்டப்படுவதை பார்த்து அப்படியே செல்லாமல் உங்களின் பிரச்சனையை தீர்க்க உங்களை அதன் உள்ளே ஒரு கல்லை கட்டி தள்ளிவிடனும்...அதைத்தானே இந்த ஊசி குறிப்பில் சொல்ல வறீங்க....ஹீஹீ நீங்க சொன்ன பிறகு அதை கேட்கவில்லைன்னா நன்றாக இருக்கிறது அதனால் உங்க பிரச்சனையை தீர்க்க நான் முயல்கிறேன் ஒகேதானே இந்த டீல் உங்களுக்கு மட்டுமல்ல வலைத்தளம் வரும் அனைவருக்கும் பிடித்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இந்த அப்பாவியை(இது என்னைச் சொன்னேன்:) தெளிவாச் சொல்லாட்டில் ஆருக்கும் புரியாதாக்கும் கர்ர்ர்).. எப்போ தேம்ஸ்ல தள்ளலாம்.. அதை ஃபயர்வேர்க் வச்சுக் கொண்டாடலாம் என உலகமே கண்ணில மண்ணெண்ணெய்:) விட்டுக் காத்திருக்குது?:) அதுதான் நடக்காது:)..

      எனக்குத் தனியேக் குதிக்கப் பயம்.. அஞ்சுவைக் கையில் பிடிச்சுக் கொண்டே குதிப்பேன்:)..ஆனா அஞ்சு மாட்டாவாம்:) கர்:)

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  16. ஜோக்குகள் சிரிக்கும்படியாகவே இருக்கின்றன.
    அன்பு-வம்பு ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அப்பாத்துரை வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  17. அனைத்தையும் ரசித்தேன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  18. எப்படியோ.. கொஞ்சம் போல சிரிச்சு வைப்போம்..
    ரொம்பவும் சிரிச்சம் என்டால் பக்கத்து காணிக்காரன் பயித்தியம் எண்டு கதைச்சுப் போடுவான்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ... ஹா ஹா ஹா இந்தக் காலத்தில சிரிச்சாலும் ஏதும் சொல்லுவினம்.. சிரிக்காட்டிலும் ஏதும் சொல்லுவினம்:) அதனாலதான் நான் மேலே சொல்லிட்டேன்ன் சமூகத்துக்குப் பயப்படாதீங்கோ என:) கமோன்ன்.. நீங்க நல்ல வடிவாச் சிரியுங்கோ.. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  19. உண்மை சமூகத்திற்கு எதற்கு பயப்படணும் ?

    நம் மனசாட்சிக்கு நேர்மை அறிந்தால் போதும் பதிவை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      அதேதான்... சமூகம் நமக்கு என்ன பண்ணும்.. பணம் கொடுத்தால் நல்லவர்கள் எனத் தூக்கி தலையில் வைக்கும். கவனிக்காமல் போனால்ல் திட்டிக்கொண்டிருக்கும்.. ஹா ஹா ஹா .. சினிமாவிலும் அதேதானே நடக்கிறது:)..

      மிக்க நன்றி வரவுக்கு.

      Delete
  20. அது என்ன மஞ்சள் ஷால் மேல சத்தியம் அப்படியே உணர்ச்சிவச பட்டுட்டேன்
    ஹா ஹா ஹா ஹா சிரிச்சேன் தெரியாது இல்லையா அதுதான் ஹா ஹா போட்டு இருக்கேனாக்கும்
    சைடில் எல்லா பூஸாரையும் மாத்தியாச்சு அழகா இருக்கு
    என்ன ஒரு தத்துவம் ஊசி குறிப்புல
    வாவ் ஊசி இணைப்பு
    இங்கன போலீஸ் பிடிக்காதில கையை வச்சிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ..

      //அது என்ன மஞ்சள் ஷால் மேல சத்தியம் அப்படியே உணர்ச்சிவச பட்டுட்டேன் ///
      இது இது இதைத்தான் மீ எதிர்பார்த்தேன்:).. ஹா ஹா ஹா:)..

      //இங்கன போலீஸ் பிடிக்காதில கையை வச்சிட்டேன்///
      ஹா ஹா ஹா கர்ர்ர்:) மாறிக்கீறி வோட் போடுப்பட்டிட்டாலும் எனும் பயத்திலயே கையில கை வைச்சிடாதீங்கோ என்றேன்:)..

      மிக்க நன்றி பிளவர் ஐ:).

      Delete
  21. அதிரா ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு மிகவும் அருமை....ஜோக்குகள் இரண்டு...அண்ணா மற்றும் சொர்க்கம் ரசித்தோம்..இன்று எங்கள் ப்ளாகில் அப்பாதுரை சாரின் கதை செம காமெடி...பாருங்க..

    கீதா: அதிரா ஊசிக் குறிப்பு நல்லாத்தான் இருக்கு ஆனா இங்க அப்படிப் போனா வம்புல வீணா சிக்கிடுவோம். ஸோ முன்னாடி மாதிரி இல்ல. கண்டுக்காம போறதுதான் அப்படியாகிப் போனது மனிதம்...நல்லா தெரிஞ்சவங்களுக்குச் செஞ்சாலே அப்படித்தான் ஆகுது. இருந்தாலும் மனசு கேக்காது...நாமதான் ஊசி இணைப்பை ஃபாலோ செய்யணும்னு நினைப்போமே!!! அதனால் வம்புல சிக்கினாலும் அம்பு செய்வோம்னு...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் , கீதா வாங்கோ.. ஹா ஹா ஹா பதில் போட தாமதமாகிட்டுது மன்னிச்சுக்கோங்க:).. அங்கு எங்கள் புளொக் மொட்டை மாடியில்தான் நேரே லாண்ட் பண்ணினேன்:) பின்புதான் இங்கு வந்தேன்:) அதனாலயே இந்த லேட்..

      ஹா ஹா ஹா அது என்னமோ உண்மைதான் கீதா, இப்போ நமக்கெதுக்கு ஊர் வம்பு என்றே மக்கள் வாழப் பழகிவிட்டினம்.. ஆனா அதில் மேலே ஒரு சொல் போடத் தவறிட்டேன்.. வள்ளுவர் சொன்னது.. நட்புக்குள் என வந்திருக்கும்போல:)..

      மிக்க நன்றிகள் துளசி அண்ணன், கீதா.

      Delete
  22. அண்ணானு மதுரைத் தமிழனைத்தானே கூப்பிட்டா!! மதுரைத் தமிழன் சொர்க்கம்தான் னு சொல்லிப்போடுவார் பாருங்கோ!!!! அங்கதான் பூரிக்கட்டை அடி இல்லாம இருக்கலாம்னு...அங்கயும் மாமி எங்க இருந்தாலும் பூரிக்கட்டை பறந்து வந்து அடிக்கும்னு சொல்லிப் போடுங்கோ...ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நான் அஞ்சுவின் கொமெண்ட்டில் போட்ட ஜோக் அவருக்கு கரெக்ட்டாப் பொருந்தும் என நினைக்கிறேன்:) அதாவது சொர்க்கம் போனாலும் பூரிக்கட்டையும் கூடவே போகும் ஹா ஹ ஹா:)

      Delete
  23. Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ...
      யூ ரூ டிடி?:).. ஹா ஹா ஹா எப்பூடியோ சிரிச்சிட்டீங்க:).. மிக்க நன்றிகள்.

      Delete
  24. என்னால் சில நாட்களுக்கு என்தா ப்ளாக் வர முடியாது. காரணம் அக்கா அப்பாவி athira
    அவர்களின் ஜோக்ஸ் கேட்டு விழுந்து விழுந்து சிரித்ததாள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மொகமெட் வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) நல்லவேளை நீங்க நல்ல தம்பி என்றதால போலீஸ் ஆமி எண்டெல்லாம் ஓஒடிப்போய் வழக்குப் போட்டு நஸ்ட ஈடு கேட்கல்ல:).. பிறகு நான் என் பொன்னான புளொக்கை வித்தெல்லோ கட்ட வேண்டி வந்திருக்கும் ஹாஅ ஹா ஹா... மிக்க நன்றி மொகமெட்.

      Delete
  25. சமூதத்துக்குப் பயந்து நாம் முடிவெடுத்தால் நாம் தான் முட்டாள்கள். சமூகம் பலதும் சொல்லும். அதுவா வந்து நம்மைக் காப்பாற்றப் போகிறது?!!! எனவே நம் மனசாட்சிக்கு எது சரியெனத் தோணுதோ அதைச் செய்து கொண்டே செல்ல வேண்டியதுதான் நீங்கள் சொல்லியிருப்பது போல். நல்ல பதிவு அதிரா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //சமூதத்துக்குப் பயந்து நாம் முடிவெடுத்தால் நாம் தான் முட்டாள்கள். சமூகம் பலதும் சொல்லும். அதுவா வந்து நம்மைக் காப்பாற்றப் போகிறது?!!!//

      அதே அதே.... மிக்க நன்றி கீதா.

      Delete
  26. மகுடம் சூட்டியமைக்கு வாழ்த்துக்கள் அதிராஆஆஆ....
    சிரிச்சிட்டு வாறன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் காதுக்குள்ள சொல்லுங்கோ:).. மியாவும் நன்றி அம்முலு:)..

      Delete
  27. அதாரது பென் ஜோக்ஸ்:) ஐப் படிச்சுப் போட்டும் சிரிக்காமல் போறது?:) என்னா தெகிறியம்?:))

    [im]https://whyevolutionistrue.files.wordpress.com/2016/01/rjlfna6edvom68880o1d.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ஆ... சிரிசிட்டு வாறன் என்று சொன்னதுக்கே துப்பாக்கிய காட்டுறீங்க.. சரிவராது பிஷ் ஐ காட்டவேண்டியதுதான் ....ஐயோ பயத்தில டங்கு ஸ்லிப்பாகுது.. கூப்பிடவேண்டியதுதான்....
      ..அஞ்சு இங்கன வாங்கோ... பூசாரை ஒருக்கா என்ன எண்டு கேளுங்கோ.....

      Delete
    2. அங்கன திரும்ப போய் சிரிச்சு,உருண்டு வாறதுகுள்ள துப்பாக்கிய எடுக்கிறீங்க.. மகுடம் சூட வோட்டு போட்டால் துப்பாக்கியா காட்டுறீங்க..
      சிரிச்ச சிரிப்பெல்லாம் பயத்தில போயிட்டுது..

      Delete
    3. ஹலோ மியாவ் தைரியம் இருந்தா நேருக்கு நேர் நின்னு பேசணும் ஒளிஞ்சிருந்து அட்டாக் கூடாது :)

      Delete
    4. சே..சே..சே.. இப்போதான் நெல்லைத்தமிழனின் புளியோதரை செய்து முடிச்சேன்ன்.. கஜூவும் போட்டுச் செய்தனா சூப்பரோ சூப்பர்.. இந்தாங்க அம்முலுக்கும் அஞ்சுக்கும் ஒவ்வொரு வாய் மட்டும் தீத்தி விடுறேன்:).. ஓவராக் கேய்க்கப்பூடாது.. நான் மேசைக்குக் கீழ ஒளிச்சிருந்து சாப்பிட்டு முடிக்கப்போறேன்... அப்போதான் ஆரும் பங்கு கேய்க்க மாட்டினம்...

      அதுக்குள்ள இங்கின பெரிய அட்டகாசம் நடக்குதே ... துவக்குக் காட்டித்தானே சிரிக்க வைக்க வேண்டிக்கிடக்கு அம்முலு.. இல்லாட்டில் ஆரும் சிய்க்க மாட்டினமாம் கர்:)..

      தெகிறியம் இருந்தா நேரில வரட்டாமாம்:)... இருங்கோ அஞ்சு தைரியம் அங்கிளைக் கேட்டுப் பார்க்கிறேன் அஞ்சு கூப்பிடுறா கொஞ்சம் தேம்ஸ் பக்கம் வருவீங்களோ என ஹையோ ஹையோ:).. ஹா ஹா ஹா.. எப்பூடி எல்லாம் என் பக்கம் வருவோரைச் சமாளிக்க வேண்டிக்கிடக்கு வைரவா:)..

      Delete
  28. வசுமதி: எனக்கு வயிறு, எரி எரியெண்டு எரியுது டொக்டர்..

    டொக்டர்: அப்படியா? இப்படி எப்போ தொடக்கம் இருக்கு?

    வசுமதி: அது குழை சாதம்னு ஒண்ணோட ரெசிப்பி பாத்து செஞ்சு சாப்பிட்டதிலிருந்து டொக்டர்..

    டொக்டர்: இதுக்கு மருந்து கஷ்டமாச்சே.. சரி சரி... எங்க ரெசிப்பி பாத்தீங்களோ அங்கேயே ஒடியல் கூழ்னு ஒரு மருந்து இருக்கும். அதச் சாப்பிட்டீங்கன்னா, கழுத்துக்குக் கீழே வயித்துக்குள்ள என்ன நடந்தாலும் உங்களுக்குத் தெரியாது.

    வசுமதி: ..????? ..ஙேஙேஙே..:).

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் வாழைக்காய்ப் பிரட்டலை சைட் டிஷ் ஆகவும் சேர்த்திருக்கலாமே:) இருங்கோ தோஓஓஓஓஓஓஓ வருது என் அடுத்த “அதிரடி” ரெசிப்பி:)..

      Delete
    2. 'வாழைக்காய் பிரட்டலை' பக்கத்தில் சாப்பிடுவதற்காக எடுத்துவைத்திருந்தார். ஆனால் 'கூழ்' சாப்பிட்டபின், வாயைத் திறக்க முடிந்தால்தானே 'பிரட்டல்', 'உருட்டல்' எல்லாம் சாப்பிடமுடியும்?

      'அதிரடி' ரெசிப்பியை வெளியிடுங்க. சைவமாக இருந்தால், படித்துக் கருத்திடுகிறேன். ஏதேனும் இனிப்பு வகை செய்து எழுதினால் என்ன? நீங்க மாவிளக்கு ஒன்றுதான் எழுதியிருக்கீங்க.

      Delete
    3. ஹா ஹா ஹா இல்லயே என் கேசரி யை எப்பூடி மறந்திட்டீங்க? டேட்ஸ் கேக் சைவம் செய்து போட்டிருக்கிறேன், மாம்பழக்கேக் செய்து போட்டிருக்கிறேன்:).. ஓடர் தேவை எனில் எடுத்துத்தாங்கோ:)...

      எனக்குத்தான் இனிப்புப் பிடிக்காதெல்லோ.. அதனால இனிப்பு ஐட்டம் செய்வதும் பிடிப்பதில்லை பெரிசா:)..

      Delete
    4. இதை நீங்க நிட்சயம் படிக்கோணும்.. பார்க்கோணும் நெல்லைத்தமிழன்:)..

      http://gokisha.blogspot.com/2012/09/blog-post_7006.html

      Delete
    5. SORRY... கேசரியை நிஜமாகவே மறந்துவிட்டேன். அதை, கேக் மாதிரி சதுரம் சதுரமாக கட் பண்ணக்கூடிய அளவில் செய்திருந்தீர்கள். அதிலும் உங்க அம்மா உதவிக்கு வர்றேன்னு சொன்னபோது வேண்டாம் என்று சொல்லி நீங்கள் மட்டும் செய்தேன் என்று எழுதியிருந்தீர்கள். படம் கூட என் கண்ணில் தெரிகிறது (ஞாபகம் இருக்கு).

      Delete
    6. ஹா ஹா ஹா..

      ///அதிலும் உங்க அம்மா உதவிக்கு வர்றேன்னு சொன்னபோது வேண்டாம் என்று சொல்லி நீங்கள் மட்டும் செய்தேன் என்று எழுதியிருந்தீர்கள். //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதெல்லாம் ஒயுங்கா நினைவில இருக்குதே:)

      Delete
  29. அந்தப் புரத்திலே நடந்து போய்க் கொண்டிருந்த மன்னருக்கு ஏன் திடீரென ஹார்ட் அட்டாக் வந்தது??

    சபா மண்டபத்துக்குப் பதிலா, அந்தப்புரத்துல அமைச்சரவைக் கூட்டம் நடந்துக்கிட்டிருந்ததாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அபோ ஹார்ட் அட்டாக் வரத்தானே செய்யும்:)

      Delete
  30. எனக்குத் தெரிஞ்சு பூனை, குட்டிதானே போடும்? உங்க வீட்டுப் பூனை (மேலே முதல்ல போட்டிருக்கும் பூனை), அடை காப்பதுபோல் தெரிகிறதே... உங்க வீட்டுப் பூனை முட்டை போட்டு அடைகாக்கும் ஜாதியா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு புதிய கண்டுபிடிப்பு நெல்லைத்தமிழன்.. வேணுமெண்டால் ரெஸ்ட் பண்ணிப் பாருங்கோ...

      எவற்றுக்கெல்லாம் காது உள்புறமாக இருக்கோ அவை முட்டை இடுமாம். காது வெளிப்புறமாக இருப்பின்.. குட்டி போடுமாம்... நான் தேடித்தேடி ஓசிச்சேன் கரீட்டூஊஊஊஊஊ.. என் காதையும் செக் பண்ணினேன் ஆவ்வ்வ் அதே அதே அதிரபதே:)... ஹா ஹா ஹா மீள் வருகைகளுக்கு மிக்க மகிழ்ச்சி.

      Delete
    2. "கரீட்டூஊஊஊஊஊ.. ........அதே அதே அதிரபதே" - என்ன சொல்லியும் 'அவர்' வலையுலகிற்கு வருவதாக இல்லை. வாட்ஸப்பே போதும் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவரை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

      Delete
    3. உண்மைதான், கொம்பியூட்டரில் வைரஸ் என மூடி முடிக்கிறார் கர்:).. வைரஸ் கொம்பியூட்டருக்கில்லை.. அவருக்குத்தான்:).. ஹா ஹா ஹா வெளியே வந்தால் சந்தோசம்தான்.

      Delete
  31. ஜோக் என்று சொல்லி பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போவதாகக் கூறுவதுபோல் இருந்தது சரிபடித்தால் சுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக்ஸ் வருமோ என்று ஏமாந்தது தான் மிச்சம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ... மிக்க நன்றி.

      Delete
  32. குண்டுபூனை எங்கே பிடிச்சீங்க. நான் வாசிக்காத ஜோக்ஸ் எல்லாமே உண்மையில் படித்து ரசித்து சிரித்தேன்.
    எப்பவுமே மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என பயந்து வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சின்ன மாற்றம் கூட செய்யபயப்படுவார்கள். நீங்க முதல் பந்தியில் சொன்னது முற்றிலும் உண்மை அதிரா. இங்கும் இருக்கிறார்கள்.
    நியாய்மான காரணங்கள் தவிர மற்றபடி மைகார்,மைபெற்றோல் கொள்கைதான் நாங்க. மனச்சாட்சிக்கு மட்டுமே பயம்.
    நல்லதொரு ஊசிக்குறிப்பு.

    ReplyDelete
    Replies
    1. /குண்டுபூனை எங்கே பிடிச்சீங்க.//

      /ஹையோ ப்ரியா அது அதிரா செல்பி :)

      Delete
    2. வாங்கோ அம்முலு வாங்கோ.

      //குண்டுபூனை எங்கே பிடிச்சீங்க.//
      ஹா ஹா ஹா அதுவா? அவர் அஞ்சு வீட்டுப் பக்கமா உலாவந்தார்:)..

      வெளிநாட்டில் பிரச்சனை குறைவு அம்முலு.. நம் நாட்டிலும் நம் நாட்டவரிலும்தான் இந்தப் புரணி பேசும் குணமும் இருக்கு.. அதுக்குப் பயந்து ஒடிந்து ஒளிப்போரும் இருக்கினம்.

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
    3. //AngelinTuesday, November 07, 2017 9:26:00 pm
      /குண்டுபூனை எங்கே பிடிச்சீங்க.//

      /ஹையோ ப்ரியா அது அதிரா செல்பி :)///

      சமைக்காமலே குண்டாகியிருக்கும் அஞ்சுவும்:) சமைச்சுச் சமைச்சே:) வயக்கெட்டுப் போன அதிராவும்:)

      [im] http://images.all-free-download.com/images/graphiclarge/fat_cats_and_thin_cats_picture_168814.jpg [/im]

      Delete
    4. படத்தில் தவறு இருக்கிறது. ரெண்டு பேரையும் சொல்லும்போது முதலில் சொல்லும் பேர் நமக்கு இடது புறம் இருப்பவருக்கும், அடுத்த பெயர் வலது புறம் இருப்பவருக்குமானது. எப்படி இந்த மிஸ்டேக் விட்டீங்க?

      Delete
    5. ///ரெண்டு பேரையும் சொல்லும்போது முதலில் சொல்லும் பேர் நமக்கு இடது புறம் இருப்பவருக்கும், அடுத்த பெயர் வலது புறம் இருப்பவருக்குமானது. ///

      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது என்ன புயுக் கதை???:) நான் பிறந்து வளர்ந்து இந்தப் 16 வருடத்தில:) இப்பூடிக் கேள்விப்படவே இல்லையே:).. கடவுளே அஞ்சுட கண்ணில இது பட்டிடக்கூடாது முருகா:).. வள்ளிக்கு வைர மூக்குத்தி போடுவேன்:)..

      Delete
    6. ஹாஆஅஹா :) பட்டுடுச்சே பார்த்திட்டேனே :)
      சிலருக்கு எண்களை மாத்தி சொல்றதே வழக்கமாம் :) எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ரைட்டுக்கு left காட்டுவாங்க :)
      4 னு சொல்லிட்டு அஞ்சு விரலை காட்டுவாங்க :) நீங்க கூட பாருங்க அதைத்தான் செஞ்சிருக்கீங்க அதோட இவ்ளோ நாளும் 61 வயசை இடம் மாத்தி போட்டுட்டிருக்கீங்க தானே :)

      Delete
  33. [im]http://4.bp.blogspot.com/-1_KnlwGCDqs/Tk7D0LjTgtI/AAAAAAAACFQ/X_N_9LXu2ak/s1600/fashion_catspg19.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் மிக்க நன்றி:) இது நமக்குள் இருக்கட்டும்.. படமெடுட்த்ஹேன் இன்னும் இணைக்கல்லியே மேலே:)..

      [im] https://i.ytimg.com/vi/L9byeiD1k_o/maxresdefault.jpg[/im]

      Delete
  34. தாமதமாய் வந்து சிரிக்கிறோமேனு நினைச்சால் ஏற்கெனவே சிரிச்சது தான். அதனால் வெறும் புன்னகை மட்டுமே! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ... ஹா ஹா ஹா நீங்க தாமதமாக, ரெயின் புறப்பட்ட பின் வந்தமையாலதான்:).. சிரிக்க முடியவில்லைப்போலும்:).. இனிமேல் ரெயின் எஞ்சினிலயே ஏறிடுங்கோ ஹா ஹா ஹா:).

      மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
  35. நரம்பில்லாத நாக்கால் .. யாரும் எதுவும் சொல்லட்டும் நமக்கு நாமே நீதிபதி.
    ...


    கரெக்ட்டு...கரெக்ட்டு ..



    வடை சுட்டு ரொம்ப நாள் கழிச்சு ..வந்ததால் மை வடை ஆறிப்போச்சு...

    ....

    கமெண்ட்ஸ் ல எப்படி picture insert பண்றீங்க...

    picture லிங்க் மட்டும் add பண்ணா picture டிஸ்ப்ளே ஆகுமா..?

    ReplyDelete
  36. வாங்கோ அனு வாங்கோ.. ஏன் இவ்ளோ லேட்டு?:).. ரொம்பத் தூரமோ?:)..

    லிங் ஐ எடுத்து வந்து இங்கு பேஸ்ட் பண்ணிப்போட்டு.. அதன் முன்னே .. [im] எனவும்.. முடிவில் [/im] இப்படியும் போட வேண்டும்.

    முயற்சி செய்யுங்கள் மிக்க நன்றி அனு.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.