நல்வரவு_()_


Friday 10 November 2017

ச்சைப்ஜ்ஜி:)

பஜ்ஜி உறைக்குதோ?:)
வ்வ்வ் பஜ்ஜி பஜ்ஜி.. ஓடிவாங்கோ ஆளாளுக்கு ஒன்று மட்டும் எடுங்கோ. எங்களுக்கு தமிழ்க் கடை வந்ததிலிருந்து என்பாடு கொண்டாட்டமாகவே இருக்குது. எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கக்கூடியதாக இருக்கே.

ந்த மிளகாய் இங்கு சூப்பர் மார்கட்டில் நமக்கு கிடைப்பதில்லை. தமிழ்க் கடையில் கிடைக்குது. இதனை பொரிப்பதை விட கொஞ்சம்  அவணுக்குள் போட்டு எடுத்தால் போதும், எண்ணெய் இல்லாத ஒரு ஹெல்த்தி ஃபூட் கிடைக்கும்:)..

து குட்டிக் குழந்தையிலிருந்து கொள்ளுப்பாட்டி வரைக்கும் அனைவருக்கும் தெரிஞ்ச ரெசிப்பி தானே.. இருப்பினும் அதிரா செய்ததைப் போட்டு உங்களுக்குக் காட்டுவதிலும் ஒரு தனி மகிழ்ச்சி பாருங்கோ:)..

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஆரம்பமே ஒரு குட்டி இடைவேளையில் ஒரு பூஸ் வானலையிலிருந்து ஒரு குட்டிச் செய்தி:)
இங்கு வீட்டுக்கு இன்ஸ்சூரன்ஸ் எடுப்போம் தானே, அதை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேணும், அப்போ சில கேள்விகள் கேட்பார்கள், அதில் ஒரு கேள்வி..”உங்கள் வீட்டில் யாராவது ஸ்மோக் பண்ணுபவர்கள் உண்டா?”..
இன்று ரினியூ பண்ணினோம்.. இக்கேள்வி வந்துது, இல்லை எனப் பதில் சொல்லியாச்சு ... அவர்களுக்கும் மகிழ்ச்சி, பணத்தை உயர்த்தவில்லை.. ஆனா.. அவர்களுக்கு தெரியாது நான் வீட்டுக்குள்ளேயே மாவிளக்குப் போடும் விசயம்.. ஹா ஹா ஹா:).. அதை நினைச்சு எனக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை:)
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

சரி சமைக்கலாம் வாங்கோ..

தில என்னென்ன எல்லாம் இருக்குதெண்டு தெரியுதுதானே?:) நான் எதுக்குச் சொல்லோணும்?:)

ஆங் இது சொல்லோணும், கிழங்கை அவித்து மசிச்சு, உப்பு, தூள், தேசிக்காய் உடன் கொஞ்சம் அஜினோ மோட்டோவும் சேர்த்தேன்..


ழமைபோல வெங்காயம் மிளகாய் வதக்கி, மேலே சேர்த்தவற்றோடு பிரட்டிய கிழங்கையும் கொட்டிப் பிரட்டி இறக்கினால் ஸ்ரவ் ரெடீஈஈஈ:).

ங்கே பாருங்கோ, நான் எப்பவும் சிவப்புக் கிழங்கே வாங்குவேன் சமையலுக்கு, இதில்தான் சுவை அதிகம். இப்படி மிளகாய்க்குள் அடைந்து, மிகுதியை வடைபோல தட்டியும் வைத்திட்டேன்..

வணில் வைத்தாயிற்று.. காஸ் மார் 550 இல் 15-20 நிமிடங்கள் எடுத்தது.

ஆவ்வ்வ் பஜ்ஜி ரெடீஈஈஈ:) ஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் அவதிப்பட்டுக் கையை வைக்கக்கூடா சொல்லிட்டேன்ன்:).. கியூவரிசையில் வந்து.. மொய் , ..........:), வைப்போருக்கே கொடுப்பேனாக்கும்:).
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஊசி இணைப்பு:-


00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

கண்ணாடி உடைந்து, காயமேற்பட்ட பின் வருவதுதான் “அனுபவம்” எனப்படும்
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கிடைச்சுடுச்சூஊஊஊஊ
_()_ _()_ _()_

106 comments :

  1. மாவிளக்கு போடுறதுக்கு - ஹா...ஹா...ஹா... - வா!..

    சாம்பிராணி தூபம் கூட போடறதில்லை..

    யா..யா!..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. முதலாவதா வந்திருக்கும் உங்களுக்கு ஒரு பஜ்ஜிப் பார்சல்:)...

      ஹா ஹா ஹா நான் சாம்பிராணி போடுவேன்.. சிலசமயம் ஃபயர் எலாம் மீக்..மிக்க்க்க்க்,.. மீக்க்க்க்க் என சவுண்டெழுப்பத் தொடங்கிடும்:).. உடனே குளிரையும் பார்க்காமல் ஜன்னல் கதவெல்லாம் திறந்து விட வேண்டி வந்துவிடும்:)..

      Delete
    2. பஜ்ஜி பார்சல் அனுப்பச்..சொன்னீங்கள்.. சரி..

      அது கூட ஒரு கப் கோப்பித்தண்ணி அனுப்ப வேண்டாமா!?..

      Delete
    3. ஹா ஹா ஹா மீள் வருகைக்கு மகிழ்ச்சி துரை அண்ணன்... தோஓஓஓஓஓஓஓஓஓஒ கோப்பியும் வருது.. இதில் சுகர் போடவில்லை:)... நீங்கள் சுவீட்டானவர்:) இல்லை எனில் நிறையப் போட்டுக் குடிங்கோ:) ஹையோ இது வேற சுவீட்டானவர்:)..

      [im] https://i.pinimg.com/736x/7b/ca/4a/7bca4acdfb13e0750248d60c27175849--coffee-break-coffee-time.jpg[/im]

      Delete
    4. ஆகா.. தூங்கி விழித்தால் - கம..கமக்கும் காபி!..

      இதற்குத்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது..

      காபியின் மணமும் சுவையும் போல இனிதே வாழ்க.. வளர்க!..

      Delete
    5. ஹா ஹா ஹா மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  2. >>>> தெரியலம்மா.. நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை..<<<

    நல்லா இருந்தா எனக்கு ஒரு பெக் (!?) எடுத்து வை!..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  3. மிளகாய் பஜ்ஜியா? எண்ணெய்ல பொரிக்கலை. கடலைமாவு காணோம். தட்டின வடையைப் பொரிச்சமாதிரியும் இல்லை.

    இதுக்குத்தான் "விரைவில் அதிரடி ரெசிப்பி வருது" இப்படீன்னு பயமுறுத்தியது இதுக்குத்தானா?

    இதுவரை இப்படிச் செய்துபார்த்ததில்லை. கிறிஸ்துமஸ் சமயம் இங்கு ஹஸ்பன்ட் பசங்களோட வர வாய்ப்பு இருக்கு. செய்துதரச் சொல்லி சாப்பிட்டு கண்டிப்பா பின்னூட்டம் கொடுக்கறேன்.

    BATHI அப்படீன்னா என்ன அர்த்தம்? பஜ்ஹி முழுசா பண்ணத்தெரியலை, பாதி ஸ்டெப்புக்கு அப்புறம் தெரியலையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. ரெண்டாவதா வந்திருக்கிறீங்க.. எங்கட ஆயா இம்முறை உங்களுக்கே:).. என் புளொக் வழக்கப்படி, ரெண்டாவதாக வருபவருக்கு அப்பப்ப ஆயாவைக் கொடுத்தனுப்புவது வழக்கம்:).. இம்முறை குளிர் அதிகமாகிட்டுதா?:).. ஆயா ரொம்ப இருமுறா:) நித்திரையே கொள்ள முடியல்ல வீட்டில ஆரும்:)...

      அதனால ஆயா பத்திரம்.. அவவுக்கு பாலைவனம் ஒட்டகங்கள் ரொம்ப ஆசையாம்.. சுற்றிக் காட்டுங்கோ ஏசிக் காரில ஏத்தி.. பிளீஸ்ஸ்:).. அவ இங்கு நம்மோடிருந்தபோது நல்ல செல்ல ஆயாவா இருந்தவ.. அப்படியே பத்திரமாப் பாருங்கோ இப்போ அவவுக்கு 99 வயசு:).

      Delete
    2. //மிளகாய் பஜ்ஜியா? எண்ணெய்ல பொரிக்கலை. கடலைமாவு காணோம். தட்டின வடையைப் பொரிச்சமாதிரியும் இல்லை.//

      ஓம் இந்த மிளகாயை வாங்கினால் கொஞ்சம் ஒலிவ் ஒயில் தடவிப்போட்டு , சும்மா அவணில் போட்டு எடுப்பேன் சூப்பரா வரும்.. இதை எதுக்கு எண்ணெயில் பொரிச்சு உடம்பைக் கெடுக்கோணும்... அவண் வசதி இல்லை எனில் ஸ்ரே ஃபிரை பண்ணலாம்.

      கடலை மா வில் தோய்ச்சால் எண்ணெயில் பொரிக்கோணும்.. அதனால தோய்க்கவில்லை.. இது ஹெல்த்தி ஃபூட் ஆக்கும்..க்கும்..க்கும்..:).

      தட்டிய வடையையும் அவணில் போட்டு எடுத்தேன், படத்தைப் பெரிசாக்கிப் பாருங்கோ தெரியும்.. கடசிப் படத்திலும் ஒரு வடை வச்சிருக்கிறேனே... எதுவும் எண்ணெயில் போடவில்லை.

      நான் எதுவும் வீட்டில் பொரிப்பதில்லை.. மீன் இறைச்சி கூட அவணிலும், கிரிலிலும் வச்சு எடுப்பேன், பொரிக்க மாட்டேன்ன்.. வெள்ளிக்கிழமையில் மட்டும் பப்படம் பொரிப்பேன்.. இல்லை எனில் சாப்பிட மாட்டினம் என்பதால்.

      ஆனா எங்கள் புளொக்கில் போடவும், இப்படி குறிப்புக்கள் வெளியிட மட்டுமே பொரித்த சமையல் செய்கிறேன்:)..

      Delete
    3. //இதுக்குத்தான் "விரைவில் அதிரடி ரெசிப்பி வருது" இப்படீன்னு பயமுறுத்தியது இதுக்குத்தானா?//

      ஹா ஹா ஹா இல்ல அது இன்னொரு இடத்தில வெளிவருமாக்கும்:)..

      ///செய்துதரச் சொல்லி சாப்பிட்டு கண்டிப்பா பின்னூட்டம் கொடுக்கறேன்.//
      மிக்க நன்றி.. வாக்குக் கொடுத்தால் மீறக்கூடாது:).. என் கொள்கையும் அதுதான்:).. ஹையோ எப்பூடி எல்லாம் மிரட்டிச் செய்ய வைக்க வேண்டி இருக்கு:)..

      மிளகாய் இருப்பின், ஒண்ணும் பண்ண வேண்டாம், கொஞ்சம் உப்பும் எண்ணெயும் தடவிப்போட்டு அவணில் வச்சு எடுங்கோ.. றைஸ் உடன் சாப்பிட சூப்பரா இருக்கும்.

      //BATHI அப்படீன்னா என்ன அர்த்தம்? பஜ்ஹி முழுசா பண்ணத்தெரியலை, பாதி ஸ்டெப்புக்கு அப்புறம் தெரியலையா?//

      BATHI ஆ அப்பூடி எங்கேயாவது எழுதிட்டேனோ?:) தெரியல்லியே... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது அதிரா ஸ்பெஷல்:).. நான் எது செய்ஞ்சாலும் அது டிபரண்டாக இருக்கோணும் எனத்தான் விரும்புவேன்:) அதனாலதான் இப்பூடி:)..

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்... படம் பார்த்து முடியுங்கோ.

      Delete
    4. நெல்லை தமிழன் //காஸ் மார் 550 இல்//
      இதுலயும் க் /gas மார்க் / காணோம் :)


      //மிக்க நன்றி நெல்லைத்தமிழன்... படம் பார்த்து முடியுங்கோ.//
      noooo dont go :) பூஸ் டாபிக் சேஞ் பண்ண பாக்கறாங்க :)

      Delete
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சூஊஊஊஉ டோண்ட் டிசுரேப்பு கிம்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் பிள்ளையை சான்றோன் எனக் கேட்ட தாய்:) என்பதுபோல:).. என் ரிவியூ படிச்சு ஒருவர் படம் பார்க்கிறார் எனும்போது, எனக்கு எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமோ.. அதைக் கெடுக்கப் பார்க்கிறா கர்:).. நீங்க கொண்டினியூ பண்ணுங்கோ நெ.தமிழன்.. அஞ்சுவை நான் பார்த்துக் கொள்றேன்:).. ஒரு பஜ்ஜி கொடுத்தாலே ஓடிப்போய்க் குல்ட்டுக்குள் பூந்திடுவா:) எங்கிட்டயேவா ஹ ஹா ஹா:)..

      Delete
  4. படங்கள் நல்ல தெளிவு.

    //தமனாக்காவை டச்சு பண்ணவும்//

    இந்த வார்த்தை எனக்கு தவறாக தோன்றுகிறது காரணம் எல்லோருக்கும் அக்கா முறை வராது சிலருக்கு கொழுந்தியாள் முறைகூட வரலாமே.....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...
      அது படங்கள் என் ஐஃபோன் பிளஸ் ல எடுக்கிறேன்.. அதனாலயாக இருக்கும்.

      //இந்த வார்த்தை எனக்கு தவறாக தோன்றுகிறது காரணம் எல்லோருக்கும் அக்கா முறை வராது சிலருக்கு கொழுந்தியாள் முறைகூட வரலாமே.....///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நெலைத்தமிழன் சண்டைக்கு வரப்போகிறார் இப்போ:).. தமனாக்கா அவரின் ஆள் எல்லோ:) ஹா ஹா ஹா:)..

      உங்களுக்குத்தான் கொழுந்தியாள் உகண்டாவில இருக்கிறாவே கில்லர்ஜி:) அதை விட்டுப்போட்டு எதுக்கு இதெல்லாம் ஹா ஹா ஹா ஹையோ எனக்கு இன்று சந்திராஸ்டமமாம்:) நான் வாயே திறக்க மாட்டேன் ஜாமீஈஈஈ:).

      மிக்க நன்றி கில்லர்ஜி:)..

      Delete
  5. உங்க மாவிளக்கும்,கடைசி ஜோக்கும் வாசிச்சு சிரித்து முடியல அதிரா.. சூப்பர்.
    இருங்க போன் செய்து சொல்லிவிட ஆள் வருவா இன்சூரன்ஸ் காரனுக்கு..ஹா..ஹா..
    ஏன் அஜினமோட்டோ சேர்க்கிறீங்க. அது அவ்வளவு நல்லதில்லை. தவிர்க்கபாருங்கோ. இங்கு அது தடை. உங்க மிளகாய் பஜ்ஜி பார்க்க ஆஹா....ஓஹோ.. ஏன் கறுப்பாக விட்டீங்க...
    இதை பஜ்ஜி மாவில் தோய்த்து செய்திட்டு,, சூடா டீ யோடு சாப்பிட....ச்ச்ச்ச்ச் ஆஆஆ
    வைரகற்கள் எல்லாம் வெளியில வந்திட்டுது போல.. அஞ்சு கெதியா வாங்கோஓஓஒ....
    ஏதோ எழுததொடங்கி இடையில் நிற்குது. லைட் ஏன் சரிஞ்சு போச்சு.. பஜ்ஜியில A எழுத்து சரியா தெரியல..
    தமிழ் கடை வந்தது உங்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ தெரியாது.ஆனா உங்க வூட்டுக்காரருக்கு திண்டாட்டம்தான்.
    நானொரு சிந்து பாட்டு எனக்கும் பிடிக்கும்.
    இங்கனயும் இந்த சிவப்பு கிழங்குதான் வாங்குவது..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..
      இம்முறை பஜ்ஜி ஆறமுன் வந்திட்டீங்க:).. அஞ்சுப் பிள்ளை லேட்டு:) அவவுக்கு பஜ்ஜி இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா:).

      அஜினோமோட்டோ மட்டர்.. அஞ்சு பொயிங்குவா என எதிர்பார்த்தே எழுதினேன்:) நீங்க முந்திப் பொயிங்கிட்டீங்க ஹா ஹா ஹா:).. அது கூடாதுதான் அம்முலு.. ஆனா கட்லட், பிரியாணி இப்படி யானவற்றிற்கு கொஞ்சம் சேர்ப்பேன் சூப்பரா இருக்கும். அடிக்கடி எல்லாம் சேர்ப்பதில்லை.

      Delete
    2. //உங்க மிளகாய் பஜ்ஜி பார்க்க ஆஹா....ஓஹோ.. ஏன் கறுப்பாக விட்டீங்க...//

      ஹா ஹா ஹா இல்லை கறுப்பாகவில்லை.. மிளகாய் சரியான பிஞ்சு.. அதனால் கூட வதங்கிவிட்டதுபோலும்... அவணை ஓவ் பண்ணியவுடன் இறக்கியிருக்கோணும், நான் கொஞ்சநேரம் சூட்டிலேயே விட்டுவிட்டேன்.

      //வைரகற்கள் எல்லாம் வெளியில வந்திட்டுது போல.. அஞ்சு கெதியா வாங்கோஓஓஒ....//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).. ஹீல்ஸ் உடன் கடைக்குப் போயிருக்கிறா:) இச்சத்தம் கேட்டு ஓடிவந்து விழுந்திடப்போறாவே. ஹையோ நான் என் புளொக்குக்கு இன்னும் இன்ஸ்சூரன்ஸ் எடுக்கல்லியே:))..

      ///லைட் ஏன் சரிஞ்சு போச்சு..//
      ஹா ஹா ஹா இக்கேள்வியை ஆரும் கேட்பினம் என எதிர்பார்த்தேன் கேட்டிட்டீங்க.. அது லைட் அல்ல.. வாசனை மெழுகுவர்த்திதான். அதன் ஸ்டைல் சரிஞ்சதுபோலதான் இருக்கும்.. நான் கமெராவை மேலே பிடித்துப் படமெடுப்பதனால், சேப் சரியாக பிடிபடவில்லை.

      இல்ல பஜ்ஜியில் எழுத்து போட நினைக்கவில்லை.. ச்சும்மா வைத்தேன் அது ஏ போலாகிட்டுது:).. ஹா ஹா ஹா.. என்னாமாதிரி உத்தூஊஊ உத்துக் கவனிக்கிறீங்க:) நானும் இப்படித்தான்:) ஹா ஹா ஹா:).

      Delete
    3. ஹா ஹா ஹா கொண்டாட்டம் நமக்கு.. ஆனா தமிழ்க்கடையால திண்டாடுவது பிள்ளைகள் இருவரும்:(.. அவர்களுக்கு தமிழ் மரக்கறி எதுவும் பிடிக்காது:).. ஆனா வெள்ளிக்கிழமையில் 4 கறிகளாவது வச்சு மிரட்டி, கெஞ்சி, கதைகள் சொல்லி சாப்பிட வச்சிடுவேன். பெரியவர் கொஞ்சம் ஓகே, சின்னவர் ...ஸ்கூல் விட்டு, டோர் திறந்து உள்ளே வரும்போதே... ஐ டோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் வோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் றைஸ் அண்ட் கறீஈஈஈஈஈஈ என்றபடியேதான் வருவார்:)... அவரின் பாஷை பழக்க வழக்கம் எல்லாமே ஸ்கொட்டிஷ் பிள்ளைபோலவே இருக்கு:)...

      தமிழ் சாப்படு குப்பையாம்:) அதனை தான் சாப்பிடமாட்டாராம், நான் தான் தீத்தி விடோணுமாம்:).. அதனால தான் யூனிவசிட்டி போகும்வரை என்னையே தீத்தி விடட்டாம்..:) அப்போ யூனிவசிட்டி போனால் என்ன பண்ணுவீங்க எனக் கேட்டேன்.. அங்குதான் 3 நேரமும் ஸ்கொட்டிஸ் ஃபூட் வாங்கிச் சாப்பிடுவாராம்:)) இப்பூடித்தான் இருக்கு இங்குள்ள நிலைமை.. சரியான செல்லம்:).

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
    4. Priya irunga varen shop LA irukken

      Delete
    5. ஆவ்வ்வ்வ்வ் வழிவிடுங்கோ.. வழி விடுங்கோ... சுனாமியாஆஆஆஆஆஆஆ ஆடுதே என் புளொக்க்க்:)

      [im] https://s-media-cache-ak0.pinimg.com/originals/bf/91/6d/bf916d1f2cc4b7ede7c6f8c81f9bba0b.jpg [/im]

      Delete
    6. கெதியா வாங்கோஓஓஒ அஞ்சு. பூசாரை பிடியுங்கோஓஓஓ...

      Delete
    7. /உங்க மிளகாய் பஜ்ஜி பார்க்க ஆஹா....ஓஹோ.. ஏன் கறுப்பாக விட்டீங்க...// அது அவன்ல போட்டுட்டு பொன்னியின் செல்வன் படிக்க போயிருக்கும் பூஸ் :)
      பாருங்க எவ்ளோ கைநடுக்கமிருந்தா அந்த CANDLE ஷேட் ஆடியிருக்கு :) ஹாஆஹா :)

      Delete
    8. ஆஆஆவ்வ்வ்வ்வ் கூட்டுச்சேர்ந்திட்டாங்கையா:) கூட்டுச் சேர்ந்திட்டாங்க:)...

      அஞ்சுவால என் ஸ்பீட்டுக்கு ஓட முடியாது அம்முலு:) ... மீ 1500 மீட்டரில 2வதா வந்தேனெல்லோ:)...

      ஹா ஹா ஹா கர்:) நான் சாவதற்குள் பொ செல்வன் படிச்சு முடிச்சிடோணும் எனக் கங்கணம் கட்டியிருக்கிறேன்:).. அதுதான் படிச்சு முடிக்கப் பயம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ ஹா ஹா ஹா:).. கண்டில் அது ஸ்டைலாக்கும் ஹையோ ஹையோ:)..

      Delete
  6. ////நெல்லைத் தமிழன்Friday, November 10, 2017 8:42:00 am
    இடைவேளை தாண்டி கொஞ்ச நேரம் வரை நேற்று இரவு பார்த்தேன். சில இடத்துல கொஞ்சம் நீளமாக காட்சி இருந்தாலும் செம சிரிப்பு. ரொம்ப மாதங்களுக்கு அப்புறம் இரவு 10 மணிவரை முழித்து படம் பார்த்தேன். ஙழமையா 8:30-9 க்குள்ள படுத்துடுவேன். மீதி இப்போ பார்க்கணும். நல்ல படம். பதிவுக்கு நன்றி.////

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என் பட ரிவியூ பார்த்து நெல்லைத்தமிழன் படம் பார்க்கத் தொடங்கிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்...... புலியைக் கூடப் படம் பார்க்க வைச்ச பூஸ்ஸ்ஸ்:).. ஹா ஹா ஹா:).. சந்தோசம் பொயிங்குதே... நேக்கு சந்தோசம் பொயிங்குதே..:)..

    ReplyDelete
  7. ஆஆஆஆஆஆஆஆஆ பச்சமொளகா பஜ்ஜியா. பாக்கும்போதே ஒரைக்குதே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தேனம்மை வாங்கோ.. நீண்ட இடைவெளியின் பின்பும் மறக்காமல் வந்திருக்கிறீங்க மிக்க நன்றி. ஹா ஹா ஹா இது ஒரைக்காது ஆனா கடிக்கும்:))

      Delete
  8. பஜ்ஜியா பெயரையாவது மாற்றி இருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ... ஹா ஹா ஹா.. இப்பெயர்கள் எல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்தது:).. அதனால பெயர் மாற்றப் பெர்மிஷன் தேவை:))..

      மியாவும் நன்றி.

      Delete
  9. உத்திரப்பிரதேசத்தவர்கள் வைத்திருக்கும் ஸ்வீட் கடைகளில் (இந்த ஊரில்) தினமும் டோக்ளா என்ற உணவு உண்டு. அதுக்கு இந்தமாதிரி உப்பு எண்ணை போட்டு வதக்கின மிளகாய் தருவார்கள். ரொம்ப வருஷமா மிளகாய் மட்டும் வேணாம்னு சொல்லுவேன். சாப்பிட்டுப் பார்த்தபோது காரமே இல்லாமல் ருசியாக இருந்தது. உள்ள உருளை மசாலா வைத்திருப்பதால் இன்னும் நல்லா இருக்கும்.

    மெழுகுவர்த்தியோட மிளகாய் வைத்திருக்கற டிரேயைச் சுற்றி என்ன எழுதியிருக்கீங்க? B A T H I என்று?

    நீங்க உங்க ரெண்டாவது பையனைப் பற்றி எழுதியிருந்தபோது, நம்ம கலாச்சாரத்திலிருந்து அடுத்த தலைமுறை புதிய கலாச்சாரத்தில் (at times mixed culture) வளரும்போது கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும். உங்க பெற்றோரோட அவங்களால interact செய்ய முடியுதா?

    ReplyDelete
    Replies
    1. //சாப்பிட்டுப் பார்த்தபோது காரமே இல்லாமல் ருசியாக இருந்தது//

      அதேதான் குழந்தைகூடச் சாப்பிட முடியும்..

      //B A T H I என்று?//
      ஓ ஹையோ அதில் B இல்லை.. அது சும்மா கற்களைப் பரப்பியிருக்கிறேன்.. ATHI.. எனத்தான் எழுதியிருக்கிறேன் அதிராவை சுருக்கி:).. ஹா ஹா ஹா..:).

      Delete
    2. //நம்ம கலாச்சாரத்திலிருந்து அடுத்த தலைமுறை புதிய கலாச்சாரத்தில் (at times mixed culture) வளரும்போது கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும். உங்க பெற்றோரோட அவங்களால interact செய்ய முடியுதா?//

      இது பற்றி நிறையவே சொல்லலாம் நெல்லைத் தமிழன்.. பிள்ளைகளில் தப்பில்லை.. இதை நான் அடிக்கடி சொல்வதுண்டு... நாம் இருக்கும் சூழல் அப்படி... அவர்கள் முழுக்க முழுக்க ஸ்கொட்டிஸ் உடனேயே வளர்வதால்.. இவர்களுக்கு, நம் ஆட்களுக்கும் - வெள்ளைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

      ஆனா அனைத்தையும் சொல்லிக் கொடுத்தே வளர்க்கிறோம்.. சொல்லுக் கேட்பினம், வாய் காட்டுவதோ.. எதிர்த்தேதும் பேசுவதோ கிடையாது.. சொவ்ட்டானவர்கள் இருவரும், எல்லோரோடும் நன்கு மூவ் பண்ணுவினம், அப்பா அம்மாவோடு (கிரான் பேரன்ஸ்)எல்லாம். எங்கள் அப்பா இருக்கும்போது, பக்கத்தில் இழுத்து அணைச்சுப் பிடிச்சபடி ஊர்க்கதை எல்லாம் சொல்லுவார்.. அவர்களுக்குப் புரியுதோ இல்லையோ சொல்லிக்கொண்டிருப்பார்:).. ஹா ஹா ஹா.

      சின்னவருக்கு ஸ்கூலில் நட்புக்கள் பேசுவதைக் கேட்டு வந்து.. அதுதான் நம் கலாச்சாரமும் என நினைக்கிறார்ர்..

      18 இயேர்ஸ் ஆனால் நான் உங்களோடு இருக்க முடியாதுதானெ? ரூம் எடுத்துப் போய் விடவேண்டும் எல்லோ என்றார்:) ஹா ஹா ஹா.

      பேரன்ஸ் உடன் ஸ்லீப் பண்ண மாட்டேன் ஃபிரெண்ட்ஸ் அறிஞ்சால் சிரிப்பார்கள் என்பார்.

      மூத்தவருக்கு போன வருடம் 16 வயது கொண்டாடி, ஒரு மாதம் முடிஞ்ச பின் .. சின்னவர் ஓடி வந்து கேட்கிறார்... அவர் இப்போ பப் pub போகத் தொடங்கிட்டாரா என?:) ஹா ஹா ஹா.. ஏனெனில் இங்கு 16 பேர்த்டே முடிஞ்சால் பப் க்குள் போக அனுமதி உண்டு:).. அவருக்கு புரியுதில்லை தானும் ஒரு ஸ்கொட்டிஸ் என்பதுபோலவே நினைக்கிறார்:).. இன்னும் ரைம் எடுக்கும்.. புரிஞ்சு கொள்ள.. இப்போ பேபி ஆகவே இருக்கிறார்..

      இங்கு வெளிநாட்டில் வாழும் நம்மவர்களின் எந்தப் பிள்ளைகளும்.. அண்ணா, அக்கா என முறை சொல்லி அழைத்து நான் காணவில்லை.. பெயர் சொல்லியே அழைக்கிறார்கள்.. சின்ன வயதில் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் ம்ஹூம் முடியவில்லை... எல்லோரும் அப்படியே இருப்பதனால் விட்டாயிட்டு.

      மிக்க நன்றி.

      Delete
  10. அட என்னாத்த சொல்வேணுங்கோ
    இதை பஜ்ஜின்னு சொல்லுறாங்கோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ச்ச்சும்மா பஜ்ஜி எனச் சொல்லப்பூடா:) “அதிராஸ் ஸ்பெஷல் பஜ்ஜி:)”

      Delete
  11. இதை ப்ஜ்ஜின்னு சொல்லி தவறாக யூரோப் உணவை அறிமுகப்படுத்தி இருக்கீங்க பஜ்ஜியின் பெயரை களங்கப்படுத்தியதால் உங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுத்து உங்கள் வீட்டில் உள்ள வைர நெக்லசை எல்லாம் அபராதமாக எடுத்து கொள்ளப் போகிறோம் பாலசுப்பிர மணியன் அவர்கள் சொன்னது போல இதற்கு வேற பெயர் வைத்திருக்கலாம் ஆனால் பஜ்ஜின்னு போட்டதால் எனது விழிகள் சிவக்கின்றன் கரங்கள் துடிக்கின்றன தமிழா பொறுத்தது போது பொங்கி எழு என்று நெஞ்சம் துடிக்கிறது.... கொஞ்சம் வெயிட் வசனங்கள் சரி வர வரமாட்டேங்கிறது சரக்கு 2 கிளாஸ் போட்டுட்டு வரேன்

    ReplyDelete
    Replies
    1. ஹையோ அஞ்சுதான் என் நகைகளில் எப்பவும் கண் வச்சிருப்பா:) அதனாலதான் லொக்கரில் வச்சுப் பூட்டி, கீயைத் தேம்ஸ்ல வீசிட்டேன்ன்ன்:).. இப்போ நீங்க எதுக்கு கண் வைக்கிறீங்க?:) யாருக்கோ பிரசண்ட் பண்ணப்போறீங்களோ இதை எடுத்து கர்ர்:).

      //எனது விழிகள் சிவக்கின்றன் கரங்கள் துடிக்கின்றன தமிழா பொறுத்தது போது பொங்கி எழு///
      வெயிட் வெயிட்.. ட்றுத் இந்தாங்கோ இந்தாங்கோ.. மங்கோ லஸி.. குடிச்சிட்டுத் தொடருங்கோ:).. கடவுளே என் புளொக்கில வச்சு எந்த அசம்பாவிதமும் நடந்திடாமல் காப்பாத்தப்பா:).. வள்ளிக்கு வைர ஒட்டியாணம் போடுவேன்:)..

      Delete
  12. இந்த மிளகாய் உரைக்கவே உரைக்காது ஆலப்பினோவில் அதன் விதையை எடுக்காமல் செய்து பாருங்கள் அதன் பின் உங்கள் கண்ணில் இருந்து வரும் கண்ணிரால் தேம் நதி இரண்டு அடி உயர்ந்துவிடும்

    ReplyDelete
    Replies
    1. //உரைக்கவே உரைக்காது//
      ஹையோ இதெப்பூடி டமில் றீச்சேர்ர்ர்ர்ஸ் இன் கண்களில் படாமல் போச்ச்ச்ச்ச்:).. அஞ்சூஊஊஊஊஉ இதை நீங்க பார்க்கவே இல்லையோ?:).. அல்லது உரைப்புத்தான் கரீட்டோ?:) இல்லயே உறைப்பு எனத்தானே வரும்.. நான் கொயம்பிட்டேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

      நாங்கள் பிட்ஷா, சப்வே வாங்கும்போது jalapenos தான் போடச்சொல்ல்லிக் கேட்போம்ம்.. ஆனா வாங்கியது கிடையாது மிளகாயாக.

      Delete
    2. உரைப்பு வேற அர்த்தம் ..இது சொல்வது னு வரும் .

      பட் வெறி sad இம்முறை அதிரா தமிழ் க்ரீக்ட்டு :)

      உறைப்பு மீனிங் உறைப்பு
      காரம்; எரிவு; சுவைக்கூர்மை

      Delete
    3. ம்ஹூம்ம்ம் நேக்கு டமில்ல டி ஆக்கும்.. நானாவது டமில்ல பிழை விடுவதாவது:)

      Delete
  13. பஜ்ஜின்னா ஏஞ்சல் மாதிரி அல்லது உங்களை மாதிரி பார்ப்பதற்கு பூசினார் போல இருக்கனும் ஆனால் இங்கு என்னவோ என்னைப் போல அதாவது கொத்தவரங்காய் போல ஒல்லியாக இருக்கிறது அதனால இதை வத்தல் தொத்தல் என்ற பெயரை வைக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர் :) நாங்கல்லாம் ஒருநாளைக்கு 40 க்ராம்ஸ் தான் கார்ப் சாப்பிடறோம் :) எங்க படங்களை பார்த்தா இவ்ளோ மெலிஞ்சிருக்கீங்களேன்னு வருத்தப்படுவீங்களே அதுக்குதான் நாங்க போட்டோ போடாம வச்சிருக்கோம் .

      Delete
    2. ///பஜ்ஜின்னா ஏஞ்சல் மாதிரி அல்லது உங்களை மாதிரி பார்ப்பதற்கு பூசினார் போல இருக்கனும் ///
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கண்படுத்தாதீங்க கர்ர்ர்:) ஏற்கனவே அஞ்சுவுக்கு கண்ணில கண்டம்:) எனக்கும்தேன்ன்:).. இதில வேற நீங்க கண் போடாதீங்க:).. அது உங்கட உடம்பு எத்தனை பூரிக்கட்டையைத்தான் தாங்கும்:).. ஏதாவது அவிச்ச முட்டை அப்பூடிச்:) சாப்பிட்டு குண்டாகுங்கோ:) ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
    3. அதேதான் அஞ்சு.. எதைப்பற்றிப் பேசினாலும் பொறுப்போம்:) ஆனா இந்த வெயிட்டைப் பத்தி மட்டும்:)).. ஹா ஹா ஹா :)

      Delete
  14. //இது குட்டிக் குழந்தையிலிருந்து கொள்ளுப்பாட்டி வரைக்கும் அனைவருக்கும் தெரிஞ்ச ரெசிப்பி தானே..//

    யெஸ் யெஸ் :) குட்டிப்பிள்ளை அஞ்சு முதல் பாட்டிஇஇஇ அதிரா வரை எல்லோருக்கும் தெரிந்தன்னு தெளிவா சொல்லணும் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கஞ்சு வாங்கோ..
      //அஞ்சு முதல் பாட்டிஇஇஇ அதிரா///
      ஹா ஹா ஹா இதில் எங்கு கொமா வை வைப்பது?:).. பாட்டிக்குப் பக்கத்தில வச்சால்.. அஞ்சு முதலாவது பாட்டி என நினைச்சிடப்போகினமே மக்கள்ஸ்ஸ்:)

      Delete
  15. //மாவிளக்குப் போடும் விசயம்.. ஹா ஹா ஹா:).. அதை நினைச்சு எனக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை:)//
    அது மாவிளக்கு இல்லை :) சொக்கப்பனைன்னு தெரிஞ்சா இன்சூரன்ஸ்காரன் அலறிடுவான் :)இருங்க உங்க வீட்டு படத்தை ஸ்கொட்டிஷ் இன்சூரன்ஸ்காரங்களுக்கு fwd செஞ்சிடறேன் :) இல்லைன்னா இன்ஸ்டாக்ராம்ல /ட்விட்டர்ல போட்டு விடறேன்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹாஹாஹாஹா...செம கலாய்த்தல்!!!

      கீதா

      Delete
    2. ///சொக்கப்பனைன்னு தெரிஞ்சா இன்சூரன்ஸ்காரன் அலறிடுவான் :)//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. 3 மணித்தியாலமா அதனாலதானே நான் இடத்தை விட்டு நகராமல் அதிலேயே நிண்டெரிச்சேன்ன்:)..

      ஹா ஹா ஹா கீதாவுக்கு என்னா சிரிப்பூ கர்ர்ர்:))

      Delete
  16. //உடன் கொஞ்சம் அஜினோ மோட்டோவும் சேர்த்தேன்..//

    கர்ர்ர்ர்ர் 13576897)((*^$"!!£$^&*யோபேர்ட்யூயோப்{)((*&%$£"! எவ்ளோ தைரியம் :) என்னை வச்சிக்கிட்டு அஜினோமோட்டோ :)

    ReplyDelete
    Replies
    1. அதானே!!! என்னையும் சேர்த்துக்குங்க...நல்லா போடுவோம் பூஸாருக்கு! பூஸார் தேம்ஸ்ல ஒளிஞ்சுக்கரதுக்குள்ள...ஹாஹாஹாஹா

      கீதா

      Delete
    2. நான் இப்பூடிப் பல பக்கத்தாலும் கோடரி கத்தி கல்லு எல்லாம் பறக்கும் என எதிர்பார்த்தே எழுதினேன்:) ஹா ஹா ஹா:)...

      என்னை உங்களால் பிடிக்க முடியாது இப்போ.. ஏனெண்டால் மீ கட்டிலுக்குக் கீழ:).. இங்கின மெல்லிய ஆட்கள் மட்டுமே பூர முடியுமாக்கும்:)..

      Delete
  17. மக்களே :) திஸ் இஸ் STUFFED GRILLED PEPPERS :) இதை பஜ்ஜின்னா அந்த ரியல் பஜ்ஜி மயங்கி விழும் :) HAAAHAAA

    ReplyDelete
    Replies
    1. ஹாஆஆஆஆ!!! ஏஞ்சல் நானும் இதைச் சொல்லிருக்கேன்...ஹைஃபைவ்!!!!

      கீதா

      Delete
    2. ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்.. என் பபபபச்சைப் பஜ்ஜியின் பெயரை மாற்ற இங்கின சிலர்:) சதித்திட்டம் தீட்டீனம்:).. நான் பெயரை மாத்த ,மாட்டேன்ன்ன்ன்ன்:).. எங்கிட்டயேவா?:) இது பஜ்ஜிதான்ன்ன்ன்ன்ன்:).. மொழகாய்:) பஜ்ஜி:)

      Delete
    3. ஆஹா அதிரா STUFFED GRILLED PEPPERS காப்பி பண்ணி அதற்கு பஜ்ஜி என்று மறு பெயர் சூட்டி பதிவிட்டு இருக்கிறார். அதனால் அவருக்கு அபராதம் விதிக்க ஏஞ்சல் மற்றும் கீதா அவர்களிடம் ஆலோசனை நடத்தபட்டு முடிவில் மதுரைதமிழன் இடும் அரசியல் பதிவுகளுக்கு கட்டாயம் அதிரா கருத்து சொல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது அதை மீறினால் அவரின் வைர நெக்ல்ஸ் பறிமுதல் செய்யப்படும்

      Delete
    4. சபாஷ் சரியான தண்டனை :)

      Delete
    5. ///மதுரைதமிழன் இடும் அரசியல் பதிவுகளுக்கு கட்டாயம் அதிரா கருத்து சொல்ல வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தலைப்பைப் பார்த்தே உள்ளே வருகிறேன்.. அரசியல் தலைப்பெனில் நுழைவதில்லை:).. பல லட்சம் கொடுத்தாலும் எனக்கு ஏனோ அலர்ஜியாகவே இருக்குது அரசியல்:).

      Delete
  18. அதிரா :) நீங்க செஞ்ச STUFFED மிளகாய் நல்லா இருக்கு .உண்மையில் எண்ணெய் இல்லாம ஹெல்தியா சாப்பிடறது நல்லது .
    அதோட இதில் இன்னும் ஒன்றிரண்டு வேரியேஷன் செய்யலாம் மிளகாயை ஒரு பக்கம் கீறி அந்த சீட்ஸ் எடுத்திட்டு அதில் சீஸ் துருவி அவனில் வைக்கலாம் .இன்னொன்று வெங்காயம் எண்ணையில் வதக்கி அனியன் சமோசா பில்லிங் செய்வோமே அது மாதிரியும் வச்சி பேக் செய்யலாம் ..உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்கும் நல்லா இருக்கு ஆனா /நோ அஜினமோட்டோ / கேட்டோ :)

    ReplyDelete
    Replies
    1. அதோட இதில் இன்னும் ஒன்றிரண்டு வேரியேஷன் செய்யலாம் மிளகாயை ஒரு பக்கம் கீறி அந்த சீட்ஸ் எடுத்திட்டு அதில் சீஸ் துருவி அவனில் வைக்கலாம் .இன்னொன்று வெங்காயம் எண்ணையில் வதக்கி அனியன் சமோசா பில்லிங் செய்வோமே அது மாதிரியும் வச்சி பேக் செய்யலாம் // யெஸ் ஏஞ்சல்...

      நானும் சொல்ல நினைச்சேன்...அஜினோமோட்டோ சேர்க்க வேண்டாம்னு அதிராக்கு நீங்களும் சொல்லிட்டீங்க...அதிரா நோட் திஸ்..அஜினோமோட்டோ நல்லதில்லை...

      கீதா

      Delete
    2. இது அஞ்சு. பிள்ளைகள் சாப்பிட விரும்புவார்கள் எனில் சீஸ் போட்டு வைக்கலாம்.. அவர்களுக்கு பெரிசா பிடிக்காது. நான் செய்ய நினைச்சது ரின்பிஸ் கறிபோல கட்லட் ஸ்டைலில் செய்து ஸ்ரவ் வைக்க.. ஆனா பின்பு சைவமாக்கிட்டேன்.

      Delete
    3. அஞ்சு, கீதா.. அஜினோமோட்டோ ஒரு சிட்டிகை அளவுதான் போட்டேன்:).. அதுவும் இது எப்பவோ கனடாவிலிருந்து வாங்கியது, மறைவிடத்தில் ஒரு பக்கட் இருந்து, ட்றோயர் கிளீன் பண்ணும்போது கண்ணில் பட்டுது.. டேட் செக் பண்ணினேன் 2019 வரை இருக்கு.. அதனால டக்குப் பக்கெனப் போட்டேன்ன்:)) ஹா ஹா ஹா...

      Delete
    4. ஆமாம் ஏஞ்சலும் கீதாவும் ஐடியா சொன்னதற்கு அப்புறம் நானும் பேசாமல் இருந்தால் இந்த சமுகம் என்னை ஒதுக்கி வைத்துவிடும் அதனால் நான் ஒரு குட் ஐடியாவை சொல்லுகிறேன். இந்த மிளகாய்க்குள் கிழங்கை வைத்தால் அது ஆரோக்கியம் அல்ல அதனால் இன்னும் ஒரு 20 மிளாகாய் எடுத்து அதை மிக்ஸியில் அரைத்து அதை இந்த மிளகாய்க்குள் வைத்து அவனில் எடுத்து சாப்பிட்டு பாருங்களேன் சாப்பிட்ட பின் சந்தோஷத்தில் நீங்கள் போடும் ஆட்டம் மிக அட்டகாசமாக இருக்கும். அதற்கு நான் கியாரண்டி

      Delete
    5. ஹாஹ்ஹா :) பூஸ் அவ்ளோதான் பாவம்

      Delete
    6. //Avargal UnmaigalFriday, November 10, 2017 10:55:00 pm
      ஆமாம் ஏஞ்சலும் கீதாவும் ஐடியா சொன்னதற்கு அப்புறம் நானும் பேசாமல் இருந்தால் இந்த சமுகம் என்னை ஒதுக்கி வைத்துவிடும்//

      இன்னுமா ஒதுக்கல்ல இந்த சமூகம் உங்களை?:) ஹா ஹா ஹா:)..

      //அதற்கு நான் கியாரண்டி//
      முதல்ல லைவ் இன்சூரன்ஸ் எடுத்திடுங்கோ ட்றுத்:).. ரெசிப்பி கொடுத்தவர் நீங்கள் என்பதால் சொல்கிறேன்:)..

      Delete
  19. ஆமா வடையை தட்டினீங்க சரி அதுக்கு லேசா மேல்மாவு போட்டா கட்லெட் ஆகியிருக்கும் :) ஹாஹா ..எண்ணெயில் முங்கி நீராடினால்தான் தான் வடை
    அப்புறம் நீங்க என்ன மிளகாய் யூஸ் செஞ்சீங்க ?
    இன்னும் கொஞ்சம் லைட் கலரில் பனானா வாக்ஸ் சில்லி /பனானா சில்லி கிடைக்கும் அதுவும் செம ருசி

    ReplyDelete
    Replies
    1. யெஸ் ஏஞ்சல்..ஹாஹாஹா எண்ணைல முங்கி நீராடினா ...இதை ரொம்ப ரசிச்சேன்....

      மேல்மாவு போட்டா கட்லெட்// யெஸ்...கடலைமாவு பேட்டர்ல முக்கிப் பொரிச்சா போண்டோ.....ப்ரெட்ட்ல ஸ்டஃப்ட் பண்ணி ரோல் பண்ணி தாவால கொஞ்சமா எண்ணை விட்டு ஃப்ரை பண்ணினா ப்ரெட் ரோல்..இல்லை பொரிக்கணும்...சப்பாத்திக்குள்ள ஸ்டஃப் பண்ணி ஆலு பராந்தா....இப்படி சொல்லிட்டே போகலாம் இல்ல?!!

      //இன்னும் கொஞ்சம் லைட் கலரில் பனானா வாக்ஸ் சில்லி /பனானா சில்லி கிடைக்கும் அதுவும் செம ருசி// ஆமாம் ஏஞ்சல் ரொம்ப நல்லாருக்கும்..

      கீதா

      Delete
    2. நோ நோ...:) இது ஹெல்த்தி வடை அஞ்சு:).. இதைப் பொரிப்பதில்லையாக்கும் கர்:) பொரிச்சுச் சாப்பிட்டு மீ குண்டாகட்டும் எனும் ஐடியாப்போல:)..

      இது மட்டும்தான் எங்கட கடையில் இருந்துது, உறைப்பு மருந்துக்கும் இல்லை இதில் கர்:))

      Delete
    3. ஹா ஹா ஹா கீதா.. விதம் விதமா அவிட்டு விடுறீங்க.. நானும் இந்தியாவில் street food சமையல் பார்ப்பேன்.. விதம் விதமாக் காட்டுவினம்... பார்க்க ஆசையாக இருக்கும்...

      Delete
  20. ஆங் அப்புறம் அந்த chilli எதுக்கு A ஷேப்பில் போட்டீங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஸ்ஸும்மா ஸ்டைலா வச்சேன்ன்ன் அது அப்பூடி ஆச்ச்ச்ச்ச்:)).. இன்னொரு வடை வச்சிருந்தா ஏ ஆகவே இருந்திருக்கும்:)... அது அடல்ஸ் ஒன்லி இல்ல.. அதிராவின் முதலெழுத்தாக்கும் கர்ர்ர்:))

      Delete
  21. அந்த பூஸ் குட்டி எதுக்கு நாக்கை துருத்துது :)

    Lil Bub American celebrity cat இப்படித்தான் நாக்கை வெளியில் வச்சிருக்கும் அதுக்கு எதோ மைல்டு சிக்கனஸ் ஆனா அதையும் தாண்டி ரொம்ப ஹாப்பி அந்த கிட்டி

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் பாவம் அந்த பூஸ் குட்டி! மிளகாய கடிச்சுட்டு வந்திருக்கும் ஹா ஹா ஹா.

      ஜோக்ஸ் அபார்ட் பைரவர்களும் சரி கிட்டிஸ் சரி நாக்கை முன் பல்லிக்கிடையில் துருத்தி வைத்திருந்தால் நீங்கள் சொல்லியிருப்பது போல் அவர்கள் சிக் என்று அர்த்தம். ப்ரௌனி கூட இன்டெர்னல் ப்ளீடிங்க் ஆன அந்த லாஸ்ட் ஹவர்ஸ்ல நாக்கு முன் பற்களிடையே துருத்தி லைட்டாக வெளியில் தெரிந்தது. எனக்கு இப்படி ஒவ்வொன்றும் அவளை நினைவுபடுத்துகிறது..வலையில் என்னை ஈடுபடுத்தி டைவர்ட் செய்தாலும் இன்னும் மனது அவளது இறப்பை ஏற்க முடியவில்லை...

      கீதா

      Delete
    2. //அந்த பூஸ் குட்டி எதுக்கு நாக்கை துருத்துது :)///
      என் பபபபச்சை மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட எபெக்ட் போலும்:)

      Delete
    3. உண்மைதான் கீதா, மறப்பதென்பது கடினம்..

      நாங்க இம்முறை டெய்சியை Cattery யில் தானே விட்டிட்டுப் போனோம், அங்கு போய் என்னால நிம்மதியாகவே இருக்க முடியவில்லை.. காலையில் அவ கூப்பிடுவதுபோல சத்தம் கேட்கும்.. திடுக்கிட்டு முழிப்பேன்ன்.. இப்படி நிறையவே கஸ்டப்பட்டேன்ன்..:(.

      Delete
  22. ஜோக் :))) கர்ர்ர் ஹாஆஹா
    ம்ம் அனுபவம்... அடியே படலைன்னு பெருமையா சொல்லிக்கறதா விட அடிபட்டு வலியுணர்ந்து அனுபவம் பெறுவது நல்லது

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் அடிபட்டால் மட்டுமே அனுபவம் கிடைக்கும் அஞ்சு.. அடுத்தவர் சொல்லும்போது சீரியஸ் ஆக எடுக்க மாட்டோம் எதையும்... தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பதைப்போலத்தான்...

      மியாவும் நன்றீஸ்ஸ்ஸ்:)..

      Delete
  23. துளசி: அட! இதுக்குப் பெயர் பஜ்ஜியா? பஜ்ஜி என்றால் மாவு இருக்குமே. பார்க்க நல்லாருக்கு. சூப்பர்.

    கீதா: பாருங்கோ அதிரா இன்னைக்கு நீங்க பஜ்ஜி போட்டதும் சுடச் சுட சாப்பிட ஓடி வந்துட்டோம்!!!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பாஆஆஆ..இதை ஸ்டஃப்ட் சில்லி ஃப்ரை என்று சொல்லலாமோ அதிரா!! அல்லது க்ரில்ட்..

    ரொம்பப் பிடிக்கும். குடைமிளகாயிலும் செய்யலாம், பஜ்ஜி மிளகாய்னு கிடைக்குமே அதிலும் செய்யலாம். அப்புறம் இந்த மிளகாயிலும்...நானும் எண்ணெய் வேண்டா என்றால் அவனில் வைத்துவிடுவேன். இல்லை என்றால் கொஞ்சம் எண்ணெய் தாவாவில் போட்டு மிள்காயை பரத்தி வைத்துவிடுவேன்...அவனில் க்ரில்லிலும் செய்யலாம். இப்படிக் கத்தரிக்காயில் காம்பு எடுக்காமல் கீறி ஸ்டஃப் செய்து க்ரில் மோடில் வைத்தால் நல்லாருக்கும். நார்த் இண்டியாவில் இப்படி மிளகாயை எண்ணை விட்டு ஃப்ரை பண்ணிய மிளகாய் கடிக்கத் தருவார்கள்...கட்லெட், சமோசா, டோக்ளா, இப்படிச் சிலதுடன்...உப்பும் போட்டிருப்பார்கள். நன்றாக இருக்கும்

    நான் அஜிநோ மோட்டோ சேர்க்க மாட்டேன். அம்சூர் பௌடர் சேர்த்தால் நன்றாக இருக்கும் நீங்கள் எலுமிச்சை சேர்த்திருக்கீங்க இல்லையா...நான் அம்சூர் சேர்த்துச் செய்வேன். இனி தேசிக்காய் சேர்த்துச் செஞ்சு பார்க்கறேன்...சூப்பர் ரெசிப்பி..அதிரா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.. ஹா ஹா ஹா துளசி அண்ணன்.. இது ..அதிராஸ் ஸ்பெஷல் பஜ்ஜி:).. இனிமேல் பிரித்தானியா வந்தால் ரெஸ்டோரண்ட்டில் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கோ:).

      ///இதை ஸ்டஃப்ட் சில்லி ஃப்ரை என்று சொல்லலாமோ அதிரா!! அல்லது க்ரில்ட்.//
      நோ கீதா நோ:) எனக்குப் பஜ்ஜி எனும் பெயர்தான் புடிச்சிருக்கு:) நான் மாத்த மாட்டேனாக்கும்:).. கொப்பி வலதுக்கும் அப்ளை பண்ணிட்டேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)..

      குடை மிளகாய் உறைக்காது என்பதால் விருப்பமில்லை இப்படிச் செய்ய. இது உறைக்கும் என நினைச்செல்லோ வாங்கினேன் கர்:) உறைக்கவே மாட்டுதாமே:).. பஜ்ஜி மிளகாய் எனத்தான் கடையில் சொன்னார்கள் இதுக்கு பெயர் கீதா..

      இலங்கையில் ரெயின்களில்... பருப்பு வடை விற்பார்கள்.. அதுக்கு செத்தல் மிளகாயைப் பொரிச்சு முழுசாஅ.... சேர்த்துக் கொடுப்பார்கள்.

      அம்சூர் பவுடர் என்பது மங்கோ பவுடரோ? இங்கது தேடினேன் கிடைக்கவில்லை.
      நான் இப்படியானவற்றிற்கு எலுமிச்சை/தேசிக்காய்தான் சேர்ப்பேன் கீதா..
      மிக்க நன்றிகள்.

      Delete
  24. நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருப்பது என்பது இதுதானா? (முதல் படம்)


    அய்யய்யோ... அஜினமோட்டோ உடல்நலத்துக்கு எதிரானது ஆச்சே! "கிழங்கை அவித்து மசித்து சரி...என்ன கிழங்கு? சர்க்கரை வள்ளிக் கிழங்கோ!

    இதை பஜ்ஜி என்றா சொல்வார்கள்!

    ஊசி இணைப்பு புன்னகைக்க வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      அது பஜ்ஜி சாப்பிட்டு உறைக்குதாம்:)..

      ஹையோ ஆண்டவா... தெரியாமல் சொல்லிட்டேன்ன் அஜினோமோட்டோ பற்றி.. எல்லாரும் இப்பூடிப் பதறுறீங்க:) ஒன்றை மட்டும்தான் நான் நினைப்பேன்ன்... என்ன சாப்பிட்டாலும் சாப்பிடாட்டிலும்.. போகும் ரைம் வந்திட்டால் போய்த்தானே ஆகோணும் என ஹா ஹா ஹா:)..

      இல்ல உருளைக்கிழங்கு... இது இந்தியாவில் இல்லை எனக் கேள்விப்பட்டேன்.. இங்கு சிவப்புக் கலரிலும் கிடைக்கும்.. இது சுவை அதிகம்.. சிவப்பும் வெள்ளையும் கலந்தும் கிடைக்கும் சில சீசனில்:)..

      //இதை பஜ்ஜி என்றா சொல்வார்கள்!//
      கர்ர்:).. இது அதிராஸ் பஜ்ஜி:) ஏனெனில் இதுவரை ஆரும் இப்பூடிச் செய்ததில்லையே:))..

      ஹா ஹா ஹா...

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  25. பஜ்ஜி நல்லா இருக்கிறது.அஜினோமோட்டோ சேர்க்காமல் செய்து பார்க்கிறேன். இங்கும் சிவப்பு கிழங்கு கிடைக்கிறது.
    ஊசி இணைப்பு நல்ல சிரிப்பு.
    மாவிளக்கு போட்டாலும் சத்தம் போடுதா? பெரிய மாவிளக்கா?


    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா.. வாங்கோ..

      ஓம் வெளிநாடுகளில் கிடைக்கும்.. செய்து பார்த்துச் சொல்லுங்கோ..

      மாவிளக்குக்கு சத்தம் போடாது ஃபயர் அலாம்.... புகைக்கு மட்டுமே அடிக்கும்.

      இது இன்ஸ்சூரன்ஸ் காரர் நினைக்கினம்.. வீட்டில் ஸ்மோக் பண்ணுவோர் இருப்பின், நெருப்பு பிடிக்கும் அபாயம் இருக்கலாம் என... இங்கு நம்மவர்கள் இல்லையே.. எல்லாம் வெள்ளைகள் என்பதால்... நாம் விளக்கு கொழுத்துவது, மா விளக்குப் போடுவது பற்றி எல்லாம் இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  26. எனக்கு பிடித்த பாட்டு ஆரம்பம் அடடா எப்படி இப்ப மாட்டிவிடறது தப்பிச்சிட்டீங்களே அஞ்சு சும்மாவா இருந்திங்க பஜ்ஜி புதுமை நான் இதுமாதிரி செய்தது இல்லை பஜ்ஜி மாவில் கலந்துதான் செய்து இருக்கிறேன்
    ஹேய் ஹே ஊசி குறிப்பு ல எதோ சொந்த விருப்பம் தெரியுதே ஹா ஹா
    அனுபவம் சான்ஸே இல்லை அதிரா செம ஹீ ஹீ மையை வச்சாச்சு லைனில் வரலாமா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ... இதுமாதிரி அதிகம் புதுமைகளை இனி நீங்க அடிக்கடி சந்திப்பீங்க.. அதிராவின் ஆரியபவான் கிச்சினில் இருந்து:)) ஹா ஹா ஹா:)..

      மை..மொய் வச்சிட்டால் லைனில வாங்கோ பஜ்ஜி தருவேன் சுடச்சுட. ஆங்ங்ங் ஒண்ணே ஒண்ணுதேன்ன்:))...

      மிக்க நன்றி பூவிழி.

      Delete

  27. பஜ்ஜிக்கு அஜினோமேட்டோ சேர்த்த முதல் தமிழச்சி நம்ம அதிராவாகத்தான் இருக்கும். அதனால் இன்றுமுதல் "அஜினோமேட்டோ அதிரா" என்று அழைக்கலாம் என நினைக்கிறேன் சரிதானே ஏஞ்சல் & கீதா

    ReplyDelete
    Replies
    1. யெஸ் :) அஜினோமோட்டோவுக்கே அஞ்சாத அதிரா ..இதுவும் நல்ல இருக்கு

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது அபாண்டமான பொய்:).. இந்தியாவிலயும் பலர் சேர்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.. பின்பு இடையில்தான் சேர்க்காதீங்கோ எனச் சொன்னார்கள்.. மஹி நூடில்ஸ் போல. இப்போ இங்கு மஹி நூடில்ஸ் கிடைக்குதே, இங்கத்தைய சுப்பமார்கட்டுகளில்.... இவர்கள் செக் பண்ணாமல் விற்க மாட்டார்களே..

      அஜினோமோட்டோ அதிரா.. அஞ்சாத அதிரா என்றெல்லாம் பெயர் வச்சால் நான் புகழின் உச்சிக்குப் போயிடுவேன்:).. ஏதோ மோட்டோ கொம்பனி உரிமையாளர் என நினைப்பார்கள் எல்லோரும்:)..

      Delete
  28. சரியாப் போச்சு போங்க, மிளகாய் ஸ்டஃப் பண்ணிட்டு அதை பஜ்ஜிங்கற பேரிலே கொடுக்கறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கடலை மாவில் உப்பு,மி.தூ. பெ.தூ சேர்த்துக் கரைத்து அதில் முக்கி பஜ்ஜி போட வேண்டாமோ? முதல்லே பேரை மாத்துங்க! அப்புறமா வரேன் எடுத்துக்க! :))

    ReplyDelete
    Replies
    1. அஜினோமோட்டோ பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்க! உடல் நலத்துக்கு நல்லதில்லை.

      Delete
    2. வாங்கோ கீதாக்கா வாங்கோ...
      //முதல்லே பேரை மாத்துங்க! அப்புறமா வரேன் எடுத்துக்க! :))//
      ஹையோ இது என்ன அப்பாவி அதிராவுக்கு வந்த ஜோதனை:).. போகாதீங்கோ கீதாக்கா போகாதீங்கோ.. பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்ன்:)... நான் என்ன வெறும் பஜ்ஜி எண்டோ சொன்னேன்ன்?:) அதனாலதான் பபபச்சைப்பஜ்ஜி எனப் பெயர் வச்சேனாக்கும் ஹா ஹா ஹா:)..

      அஜினோ மோட்டோவை எறிஞ்சே விட்டேன்ன்.. இங்கு அது கடையில் வாங்க முடியுமோ என்றுகூடத் தெரியாது, இது கனடா தமிழ்க் கடையில் வாங்கியதா நினைவு.

      மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
  29. பார்க்க நல்லா இருக்கு. கொஞ்சம் அனுப்பி வைத்தால் சுவைக்க வசதி!

    ம்ம்ம். மொய் வச்சாச்சு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ... ஹா ஹா ஹா அனுப்பினால் போச்சு..

      மிக்க நன்றி.

      Delete
  30. 1)இளம் சுஹாசினியின் படத்தப் போட்டு இளசுகளை ஈர்க்க முயற்சித்ததை
    முதற்கண் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    2) மிளகாய் பஜ்ஜி பிடிக்கும் ஆனா அவனுக்குள்ளேந்து வந்த மொளகாயப் பாத்தா.. பஜ்ஜீ-ன்னு அலறத் தோணுதே. நிஜ பஜ்ஜியே… நீ எங்கே, எப்போது காட்சியளிப்பாய்? எந்தன் கலிதீர்ப்பாய் ?

    3) அம்மாவையே அலற விடுதே அந்தப் பொண்ணு? ஹஸ்பண்டு ஏன் குடிக்கவேண்டிருக்குன்னு நல்லாவே புரியுது; பொறந்தாலும் ஆம்பளயாப் பொறக்கக்கூடாது

    4) அதிராவுக்கான பின்னூட்டத்தப் படிக்கறதுக்கே அடுத்த ஜென்மம் தேவப்படுதே..சாமீ !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஏகாந்தன் அண்ணன் வாங்கோ...
      //1)இளம் சுஹாசினியின் படத்தப் போட்டு இளசுகளை ஈர்க்க முயற்சித்ததை
      முதற்கண் வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

      ஹா ஹா ஹா அது ஸ்ரீராமின் பாட்டுக்கு எசப்பாட்டு:) ஹையோ படிச்சதும் கிழிச்சு.. அந்த நீங்க நடக்கும் பூங்காவின் இடது பக்கம் இருக்கும் வோட்டர் ஃபோலில் வீசிடுங்கோ பிளீஸ்:).

      //நிஜ பஜ்ஜியே… நீ எங்கே, எப்போது காட்சியளிப்பாய்? எந்தன் கலிதீர்ப்பாய் ?//
      ஹா ஹா ஹா உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்குது:).. ஆனா அதைப் பார்த்திட்டும் பதறி ஓடிடக்கூடாது:) நிண்டு நிதானமா பத்து வரி பேசோணும் என அட்வான்ஸ் ஆகக் கேட்டுக்கொள்ளப்படுறீங்க:)..

      Delete
    2. //அம்மாவையே அலற விடுதே அந்தப் பொண்ணு?// ஹா ஹா ஹா ரொம்ப வெகுளிப்பெண்ணாக அம்மா வளர்த்திட்டாபோல:)..

      //பொறந்தாலும் ஆம்பளயாப் பொறக்கக்கூடாது //
      ஹையோ இப்ப கொஞ்சக்காலமாக இதைத்தான் சொல்றீங்க வை திஸ் கொலை வெறி?:)... ஆனா எனக்கு என்னமோ பெண்ணாக இருப்பதுதான் படுபயங்கரமாகப் பிடிச்சிருக்கு.. எப்பவும் பிடிக்கும்.. என்றைக்குமே நான் ஒரு ஆணாகப் பிறந்திருக்கலாமோ என நினைச்சதே கிடையாது.. பெண்ணாக இருப்பது எவ்ளோ சொகுசு தெரியுமோ? ஹா ஹா ஹா..

      //அதிராவுக்கான பின்னூட்டத்தப் படிக்கறதுக்கே அடுத்த ஜென்மம் தேவப்படுதே..சாமீ !//

      ஹா ஹா ஹா 8ம் நம்பர் காரருக்கு மட்டும் அடுத்த ஜென்மம் இல்லையாமே:).. நீங்க 8 இல்லை எனில் இன்னொரு ஜென்மம் கன்ஃபோம்ம்ம்:)..

      அதிரடியாக மின்னாமல் முழங்காமல் சிரிக்க வச்சிட்டுப் போயிருக்கிறீங்க.. மியாவும் மியாவும் நன்றிகள்.

      Delete
  31. பஜ்ஜி சூப்பர்
    எனக்கு ஒரு பார்சல் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிடுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ..

      ஓ நீங்க இலங்கையிலோ இருக்கிறீங்க... சிறீலங்கன் எயாலைன்ஸ் ட்றைவர்:) இடம் கொடுத்தனுப்பியிருக்கிறோம்.. ஐடெண்டிகார்ட்டைக் காட்டி வாங்கவும் பிளீஸ்ஸ்:).. ஹ ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  32. நீண்ட தூரம் வந்தேன் !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ புலவர் ஐயா வாங்கோ...

      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  33. சுட்டமிளகாய் டேஸேடிதான். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ காமாட்ஷி அம்மா வாங்கோ.. வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  34. அட பேக்டு மிளகாயும்...வடையும்...

    நல்ல மனமாதான் இருக்கு...அதிரா

    இந்த மிளகாய் நான் சாப்பிடுவது இல்லை...

    பட் வடை பேக் பண்ணலாம்...இதுவரை செஞ்சது இல்லை...சிக்கரம் செய்யணும்....இந்த லிஸ்டே பெருசா போகுதே சாமீ...மீ பாவம் ...எப்போ செஞ்சு சாப்புடுறது...

    ReplyDelete
  35. பஜ்ஜி சூப்பர் அதிரா!
    குடிப்பதற்கான அந்தப்பெண்ணின் விளக்கம் இன்னும் சூப்பர்!

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.