நல்வரவு_()_


Tuesday 28 November 2017

தேடி வந்த பொக்கிசம் - ஸ்கிப்பி:)

ன்று சதுர்த்தி, அப்போ சதுர்த்தி எனில் பகல் முழுக்க சாப்பிட மாட்டேன், இரவு பிள்ளையாருக்குப் பூசை முடிஞ்சு, சுவாமி வெளிவீதி சுத்துவார், அது பார்த்து வந்தபின்னர்தான்.. புட்டுச் சாப்பிட்டு விரத்தத்தை முடிப்பேன், அதிலயும் பாருங்கோ, மாமி வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோயில் எனில், 5 மணிக்கு எல்லாம் வெளிவீதி சுத்தி முடித்து விடுவார்கள், நமக்கும் களைப்பிருக்காது. 


னா எங்கட வீட்டுக்குப் பக்கத்துப் பிள்ளையார் இருக்கிறார்... அவருக்கு பூசை முடித்து வீதி சுற்றி வர நைட்...7,8 மணியாகிடும்.. எனக்கு மயக்கமே வந்திடும் கர்:)). அதனால நான் இடைக்கிடை மாமி வீட்டுக்கு ஓடிவிடுவேன் பூசை பார்க்க.

போன, என் வைரவர் கதையிலே, "பொட்டு" ப் பாதை வழியே பக்கத்து வீடுகளுக்குப் போகலாம் என்று சொன்னேனெல்லோ... அதேபோல் ஒரு பக்கத்தில் பிள்ளையார் கோயிலும் இருக்கிறது. இதே பாதையைப் பாவித்துப் போய் கோயில் வெளி வீதியில் நின்று சுவாமி வெளிவீதி சுற்றுவதையும் இடைக்கிடை பார்ப்பது வழக்கம். பகலில் போய்க் கும்பிட்டு விட்டு வந்திடுவோம், இரவில் இப்படி வீதியில் நின்று பார்ப்போம். இரு சதுர்த்தியும் இப்படி விரதமிருப்பேன், ஆனா அன்று வளர்பிறைச் சதுர்த்தி என்பதால், நல்ல முன்னிலவாக இருக்கும்.  அப்போ நிலவில் எல்லோரும் கூடி நின்று சுவாமி வீதிசுத்துவதைப் பார்க்க நல்ல அழகாக இருக்கும்.  அதிலும் வடக்கு வீதியிலே சுவாமியை நிறுத்திப்போட்டு, நாதஸ்வரக் கச்சேரி நடக்கும் பாருங்கோ.. சொல்லி வேலையில்லை.. அப்போ ரிலீசான சினிமாப் பாட்டெல்லாம் மின்னி முழக்குவினம்.. என்னா ஒரு ஆனந்தமான காலம் அது...

அந்தக் கோயில் வீதியிலே ஒரு கடை இருந்தது. அது 6 மணியோடு பூட்டிவிடுவார்கள். அப்போ நாங்கள், பெரியம்மா குடும்பம் மற்றும் அயலவர்கள் இப்படி, பெண்களும் குழந்தைகளுமாக எப்படியும் ஒரு 15 பேர் வரை அவ்விடத்துக்கு வருவார்கள்... பொட்டுப்பாதையைப் பாவித்து:).. எல்லோரும் போய் சுவாமிசுற்றுப் பார்த்து, அரட்டை பண்ணி வீட்டுக்கு வருவோம் அந்த நிலவொளியில். அதன் பின்னரேதான் சாப்பிடுவோம். அன்றும் அப்படித்தான் போய் நின்றோம்.

ஒரு சிறிய பூனைக்குட்டி கடை வாசலில் குந்திக்கொண்டிருந்தது. எங்களைக்கண்டதும், மியாவ் மியாவ் எனக் கத்தியபடியே ஓடிவந்தது. சிலருக்கு பூனை கிட்ட வந்தாலே ஏதோ அலர்ஜிமாதிரி, காலால் அடிப்பார்கள். என் காலுக்கு வந்து உரசி உரசிச் சுற்றியது. நான் விட்டுவிட்டேன். அதனால் அது என் காலை விடவே இல்லை. சுவாமி சுற்றி உள்ளே போகும் வரை என் காலையே சுற்றிக்கொண்டிருந்தது. நின்றவர்கள் பகிடி பண்ணினார்கள், அதிராவின் பிரெண்டோ என்று.

சுவாமி உள்ளே போனதும் நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். பூனைக்குட்டி என் பின்னாலேயே வந்தது. சின்னக் குட்டி கத்திக்கத்தி ஓடிவந்தது. அத்தனைபேர் நின்றாலும் அவ்வளவு பேரையும் விட்டுவிட்டு என் பின்னாலேயே வந்து கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கு துரத்த மனம் வரவில்லை. ஊருக்குப் போய் இனிமேல் எதுவும் வளர்ப்பதில்லை என்ற உறுதிமொழி மெதுவாக உடைபட்டதுபோல் இருந்தது. அம்மா எதுவும் சொல்லவில்லை. அப்பா நின்றிருந்தால் விட்டிருக்க மாட்டார்:)..  வீட்டுக்கு வந்துவிட்டோம். பூனைக்குட்டியும் வந்து வாசலில் ஏறிவிட்டது. சின்னக் குட்டி, உள்ளங்கையளவுதான் இருக்கும், ஆனா படு சுட்டியாக இருந்துது.

வீட்டுக்குள் வேண்டாம், என்றா அம்மா, சரி வழி மாறி வந்திருந்தாலும், போய்ச் சேரட்டும் என நினைத்து, அப்படியே குட்டியை வெளியே விட்டு, கொஞ்சப் பால் மட்டும் கொடுத்துவிட்டுக் கதவைப் பூட்டிவிட்டோம். ஆனால் அன்று இரவு நாயாரை அவிழ்த்து விடவில்லை. ஏனெனில் கடித்துவிட்டாலும் என்ற பயத்தில். பூனைக்குட்டியை வளர்க்க நினைக்கவில்லை. ஒருவேளை அது வேறு யாருடையதோ தெரியவில்லையே. காலைவரை எங்கும் போகாமல் நின்றால் பார்ப்போம் என விட்டுவிட்டோம்.

காலைவரை அதே நினைவாக படுத்துவிட்டு, விடிந்ததும் ஓடிவந்து கதவைத் திறந்தேன், வாசலிலேயே படுத்திருந்த அவர் ஓடிவந்தார் மியாவ் மியாவ் என்றபடி. பிறகென்ன பரம்பரைப் பெயரை வைத்துக் கூப்பிட ஆரம்பித்தேன்.  “ஸ்கிப்பி” என்பது நாங்கள் காலகாலமாக வளர்த்த பூனைகளுக்கு வைக்கும் பெயர். சாம்பலும் வெள்ளையும் கலந்த நிறம். சின்னப் பெண் பூனைக்குட்டி. உடனேயே பெயர் அவருக்கு பதிந்துவிட்டது. வீட்டுக்கு ராணியாகிவிட்டார்.

நாங்கள் எப்பவும் முதலாவதாக பூனையையும் நாயையும் நண்பர்களாக்கிவிடுவோம். அந்த முறையில் நாயாரிடம் குட்டியைத் தூக்கிப் போனேன், என்னோடு குட்டி இருந்ததால் நாயாருக்கு பிரச்சனை இல்லை, சிரித்தபடி ஊ... ஊ... என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார், ஆனால் பூனையாருக்குப் பிடிக்கவில்லை, முள்ளம்பன்றிபோல் மயிரெல்லாம் சிலிர்த்து தன் கோபத்தைக் காட்டி நாயைப் பார்த்து ஒருவித சவுண்ட் எழுப்பினார். அதைப் பார்க்க ஒரே சிரிப்பாக இருந்தது, ஒரு சின்ன உருவத்துக்குள் இவ்வளவு கோபமா என்று.

அதன்பின்னர் நாயார் நல்லபிள்ளையென்பதால், பூனையாரோடு மெதுவாக விளையாடத் தொடங்கினார், அப்படியே பூனையும் நாயும் நல்ல நண்பர்கள். பூனையார் என்னுடனேயே தன் பொழுதை அதிகம் கழிப்பார். நான் நடந்து போகும்போதே, ஓடிவந்து பின் பக்கமாகப் பாய்ந்து என் சட்டையில் ஏறி, மெதுவாக நகம் என்மேல் படாதபடி, முதுகிலே நடந்து தோளில் ஏறியிருப்பார்.... இத்தனைக்கும் நான் நடப்பதை நிறுத்த மாட்டேன்:). நான் யாருடனாவது கதைத்துக் கொண்டிருந்தால், இப்படி ஏறி, என் தோழிலேயே சுருண்டு படுக்க வெளிக்கிடுவார்.

நம்பமாட்டீங்கள்,நாய்ப்பிள்ளை நித்திரைகொள்ளும்போது, பூனையார் கிட்டப்போய், அவரது காலைச் சுரண்டுவார், உடனே அவர் காலை விரித்துக்கொண்டு படுப்பார், பூனை அவரின் உள்பக்கத் துடையிலே நித்திரைகொள்ளும். பார்க்க மிகவும் அழகாக இருக்கும். பூனை நித்திரை கொள்ளும்போது, ஏதாவது சத்தம் கேட்டால்கூட நாயார், தலையை மட்டுமே உயர்த்திப்பார்ப்பார், உடம்பை ஆட்டமாட்டார், பூனையின் நித்திரை குழம்பிவிடக்கூடாதென்று மிகவும் கவனமாக இருப்பார்.

காலையில் நான் எழுந்து ரீக் கப்போடு இருக்க, என் கதிரைக் கைப்பிடியிலே பூனையார் இருப்பார், நான் ரீக்கப்பை என் வாய்க்குக்கிட்டக் கொண்டுபோனால், தன் கையால் என் கையைத் தட்டுவார், குடிக்க விடமாட்டார், தனக்குத் தா என்று. பிறகு அவருக்கும் கொஞ்சம் கொடுப்பேன்.(அப்போ யோசிச்சுப் பாருங்கோ அதிராவின் கதியை.. நாயாருக்கு கொஞ்சம், பூனையாருக்கு கொஞ்சம்.. இதனால்தான் அதிரா சரியான மெல்லிசாக இருந்தே.........ன்.).

ஒருநாள்கூட பூனையார், நகத்தால் என்னைக்கீறியதில்லை. நான் எவ்வளவுதான் உருட்டினாலும், உருண்டு உருண்டு விளையாடும் கடிக்காது. இரவிலும் அதிகம் என் பக்கத்திலேயே படுத்திருப்பார். சின்னப்பூனைதான், ஆனால் நல்ல உருண்டைக்குண்டாக இருந்தது. அது சிறியவகை இனம் என நினைக்கிறேன், பார்த்தால் குட்டி என்றுதான் சொல்வார்கள்.

ஒருநாள் வழமைபோல் நான் காலை எழுந்து கதிரையில் இருந்து ரீ குடித்தேன், பூனையாரும் வந்து கைப்பிடியிலே இருந்தார், ஆனால் பெரிதாக ஹப்பியாக இல்லை. ரீயும் கேட்கவில்லை. அப்போ நான் வழமைபோலவே அவரோடு சேட்டை செய்தேன், உடனே மியாவ் என்று பெரிய சத்தத்தோடு என் கையிலே மெதுவாகக் கீறிவிட்டது, எனக்கு ரத்தம் வந்தது. கோபமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது எனக்கு. பின்னர் அன்றுபகல் அதிகநேரம் படுத்திருந்தது, ஆனாலும் வழமைபோலவே இருந்தது. அன்று அவருடைய செயல் எனக்கு புதினமாக இருந்துது.

இரவு படுத்துவிட்டோம், மறுநாள் காலை விடிந்ததும், என்னை பெரிதாகக் கத்திக்கத்திக் கூப்பிட்டது, என் அறைக்குள் வந்து என்னைப் பார்த்துக் கத்தும், பின்னர் வெளியே ஓடும், மீண்டும் என் அறைக்குள் வந்து கத்தும் வெளியே ஓடும், அதன் செயல், என்னை எழுந்துவா என்பதுபோல் இருந்தது. சரி என்னவென்று பார்ப்போம் என எழுந்தேன், கத்திக்கத்தி முன்னால் ஓடியது மற்ற அறைக்கு. அங்கு ஒரு பக்கத்திலே ஒரு சூட்கேஸ், அதனுள் பழைய புத்தகங்கள் இருந்தது, அந்த சூட்கேஸ் மூடுப்படாமல் இருந்தது. என்னை அந்த அறைக்குள் கூட்டிச் சென்று விட்டுவிட்டு, அச் சூட்கேசுக்குள் தலையைக் கொடுத்துக் கத்தியது.

அப்போ நான் சூட்கேசைத் திறந்தேன், ஐயோ, அதனுள் தாயைப்போலவே ஒரு குட்டி இறந்து கிடந்தது. அதுவரை எங்களுக்குத் தெரியாது அவ கர்ப்பமாக இருக்கிறா என்று. பின்னர்தான் அம்மா சொன்னா, ராத்திரி கத்திக்கத்தி உன் அறைக்கு வருவதும் போவதுமாக இருந்தது என்று. பின்னர் என்னை எங்கேயும் போகவிடவில்லை, கலைத்துக் கலைத்துக் கூப்பிட்டுக் குட்டியைப் பார், என் பிள்ளையை எழுப்பித்தா என்பதுபோலவே என் பின்னால் கூப்பிட்டுக்கொண்டே திரிந்தது. என்னிடம் ஓடிவரும் நான் என்ன என்றால், முன்னே ஓடி திரும்பிப் பார்க்கும், நான் பின்னால் வருகிறேனோ என்று. அன்று அப்பூனை தவித்த தவிப்பு, என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் தாமதிக்காமல் குட்டியை எடுத்துவிட்டோம், சூட்கேசையும் ஒழித்துவிட்டோம், அன்று முழுவதும் கத்தியது பின்னர் மறந்துவிட்டது.

மீண்டும் ஒரு குட்டி போட்டது, முன்பு போட்ட அதே நிறத்தில், ஒரு குட்டிதான் போட்டது. அது ஆண்பிள்ளை. செல்லம் என்றால் அப்படியொரு செல்லம். நான் அதற்கு "குட்டான்" எனப் பெயர் வைத்துக் கூப்பிட்டேன், குட்டான்.... என்றால், வாலை மேலே உயர்த்திக்கொண்டு ரொக்கட் வேகத்தில் வந்து நிற்பார். எங்கள் வீட்டுக்கு வரும் மரக்கறி விற்கும் ஆச்சி, அதைப் பார்த்திட்டுச் சொன்னா, என்ன பிள்ளை இது பூனைக்குட்டியில்லை, முயல்க்குட்டிபோலவே இருக்கென்று.

கொஞ்ச நாளில் குட்டான் வளர்ந்து வந்தது. எனக்கு அதை யாருக்கும் கொடுக்கும் எண்ணமில்லை. ஆனால் எங்கள் ஒன்றுவிட்ட மாமி சொன்னா அதைத் தனக்குத் தரும்படி. நான் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போவேன் என்பதால், குட்டானைப் பார்த்துக்கொள்ளலாம் என்று, சம்மதித்துக் கொடுத்தோம். இடையிடை போய்ப் பார்த்துவிட்டும் வந்தேன். அவர்களும் குட்டான் என்றே அழைத்தார்கள். அப்படியான ஒருநாளில்தான் அந்த நிகழ்வு நடந்தது.

மாலை 7 மணியிருக்கும், எனவுண்ஸ் பண்ணினார்கள், இன்னும் 2 மணிநேரத்துள், யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும், ராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள் என்று.

ஒருநாள் அல்லது 2 நாட்கள் எங்காவது போய்விட்டு திரும்பி வாறதுதானே என நினைத்துப் புறப்பட்டோம். அதுவே கடைசியானது. பின்பு நான் போகவே இல்லை அங்கு, சில மாதங்களின் பின்பு மாமா போயிருந்தார், அப்போ அதேபோல, வாசலிலே நாயாரின் துடையில் பூனையார் படுத்து இருவரும் நித்திரையில் இருந்ததாகவும், தான் சாப்பாடு போட்டு விட்டதாகவும் சொன்னார்.

பின்னர் பூனையைக் காணவில்லை என்றும், நாய் இறந்துவிட்டதென்றும் அறிந்தோம். சில வருடங்களின் பின்னர் நான் திரும்பிப் போனபோது, என்னால் அந்த விட்டில் நிற்கவே மனமில்லாமல் இருந்தது. ஓடி ஓடி நாய் படுத்த இடம் பூனை உலாவிய இடமெல்லாம் பார்த்தேன். அந்த சோகத்தை இப்போ நினைத்தாலும் கண்ணீர் வரும்.. அன்று அந்த இரவு திடீரெனத்தானே வெளிக்கிட்டோம், ஒரு சூட்கேசை மட்டும் கையில் எடுத்து வந்தோம், வெளிக்கிடும்போது வைத்த பொருள், வைத்த இடத்திலேயே இருந்தது. என் றெசிங் ரேபிளில், கியூரெக்ஸ் வைத்த இடத்திலேயே காய்ந்து போய்க்கிடந்தது, சீப்பு தூசியில் உக்கியபடி இருந்தது, மடித்த உடுப்புக்கள் அப்படியே இருந்தன. மனதில் மட்டும் பாரம் அதிகமானது, அந்த வெளிக்கிட்ட இரவின் பின்னர் என்னைத் தவிர எல்லோரும் அங்கு தங்கினார்கள் நான் மட்டும் இன்றுவரை அங்கு தங்கவேயில்லை. இனிமேல் பார்ப்போம்.

நம் நாட்டுப் பிரச்சனைகளால்தான் இனிமேல் எந்தப் பிராணியும் வளர்ப்பதில்லை என அடிக்கடி முடிவெடுப்போம், ஆனாலும் இப்பவும் வளர்க்கிறோமே:).

இன்று போஸ்ட் பெருத்து விட்டது, படிக்கும் உங்களுக்கு போரடிக்குதோ தெரியவில்லை, அஜீஸ் பண்ணுங்கோ பிளீச்ச்ச்ச்ச்ச்:)..

ஊசி இணைப்பு:

ஆவ்வ்வ்வ் டங்கூ:)

=========================_()_=======================

83 comments :

  1. என் புளொக் இப்போ தமிழ்மணத்தில் 6ம் இடத்தில் இருக்கிறதாம்:) என்ன கொடுமை இது வைரவா?:).. அடிக்கடி தப்புத்தப்பாக் காட்டுவதே டமில்மனத்துக்கு வேலையாப்போச்சுது போல கர்ர்ர்:))

    ReplyDelete
  2. எப்பவும் சிரிக்க வைக்கும் உங்க எழுத்து இன்னிக்கு என்னை அழ வச்சிடுச்சி அதிரா :(
    என்னால் தொடர் கமெண்ட்ஸ் போட முடில பிறகு வரேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. இப்படிக் கதைகள் ஒன்றா இரண்டா.. , இலங்கை தமிழ் மக்கள் ஒவ்வொருவரிடமும் பெரிய பெரிய சோகக் கதைகள் நிட்சயம் ஒளிஞ்சிருக்கும்.. அதனோடு ஒப்பிடும்போது இதுவெல்லாம் பெரிதாக இருக்காது...

      என்ன பண்ணுவது சின்னதோ பெரிசோ கவலை கவலைதான்.. போஸ்ட் எழுதும்போது எனக்கும் கண்களில் கண்ணீர் ஓடியது.. மனதை மாற்றி விட்டேன்..:(..

      Delete
  3. பூணையோடு போய் நானும் ஊர் நினைவுகளில் மூழ்கிவிட்டேன்))) இடப்பெயர்வில் தொலைத்தவை அதிகம்! பூனையும் நாயும் உறங்கும் காட்சி உண்மையில் கற்பனையில் சிலிர்க்கின்றது! விலங்களுக்கு இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. நான் நினைச்சிருந்தேன் நீங்க பயணம் தொடங்கியிருப்பீங்க என, இங்கு கண்டது மகிழ்ச்சி.

      அதென்னமோ உண்மைதான் நேசன், ஒரே வீட்டுப் பூனை எனில் அவ்வீட்டு நாயார், தன் குழந்தைபோல பாதுகாப்பார், ஆனா அடுத்த வீட்டுப் பூஸார் எட்டியும் பார்க்க முடியாதே...

      Delete
  4. சுவாமி வீதியுலா என்றால் நல்ல கச்சேரி நடக்கும் அப்ப எல்லாம். இப்ப எல்லாம் அவசரயுகம்.

    ReplyDelete
    Replies
    1. கச்சேரி பற்றிச் சொல்லி வேலையில்லை நேசன்.. இரவில் நடக்கும் இப்படிக் கச்சேரிகளும், நாம் நண்பிகளாக கூட்டமாக நின்று ரசிப்பது, அதிலும் நம்மைக் கண்டு விட்டால் சில இடங்களில் சில பாடல்களை வாசிப்பார்கள்.. நமக்காகவே வாசிப்பதுபோல இருக்க்கும்:)... அதெல்லாம் என்னா ஒரு ஆனந்தம்.

      ஆனா அதேபோல இப்பவும் ஊரில் நடக்கிறதாம்... ஆட்கள்தான் எல்லோரும் புதியவர்கள்.. நமக்கு தெரிந்தோர் பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் இருக்கினம்.

      மிக்க நன்றி நேசன்..

      Delete
  5. குட்டான் ஸ்கிப்பி பப்பி எல்லாம் பொக்கிஷமான நினைவுகளை தந்திருக்காங்க .கண் முன்னே அந்த தூசி படிந்த மேசை கியூடெக்ஸ் எல்லாம் சினிமாகாட்சி போல வந்து போகுது எனக்கு .
    படிக்கும் எனக்கே இவ்ளோ வலிக்குது அப்போ அங்கிருந்த வாழ்ந்த உங்களுக்கு எப்படி கவலையா இருந்திருக்கும் :(

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் ஊரை விட்டே வந்து விட்டோம் அஞ்சு, மாமா தான் போய் வீட்டைக் கவனித்தவர், அப்போ என் அறையை மட்டும் அப்படியே விட்டிருந்தார், ஏனெனில் என் அறைக்குள் போகவே கவலையாக இருக்குமாம், சரி அதிரா வந்து பார்க்கும் வரை அப்படியே விடுவோம் என வைத்திருந்தார்....

      இப்படி ஸ்ரோறிகள் சொல்லிக்கொண்டே போகலாம் ... அதை எல்லாம் நினைத்தால் கவலைதான்...

      Delete
  6. பூனையும் நாயும் முயலும் உறங்கும் காட்சி எங்க வீட்டிலும் இருந்தது .
    அதுமாதிரி பூனை குட்டி போட்டு கூப்பிடும் அம்மாவை அல்லது எனக்கு காட்ட ..கோழியும் அப்படிதான் வெளியில் முட்டை இட்டு பழைய சோபாவில் கீழே யாருக்கும் தெரியாம இட்டு பொரிச்சி குஞ்சுகளை வீட்டுக்கு வரிசையா கூட்டி வரும் அதெல்லாம் நினைவுக்கு வருது

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் அஞ்சு... என் கையிலேயே நான் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்தேன்... என் மடியிலேயே நித்திரை கொள்ளுவார்.. இப்போ நம் குழந்தைகளுக்கு இப்படி இனிய அனுபவம் எதுவுமே இல்லையே... அப்படிப் பார்க்கையில் நாம் கொடுத்து வைத்தனாங்கள்:)..

      Delete
    2. அதிரா !! எங்க வீட்டில் நாங்க ரெண்டு அணில் குட்டிகளை வளர்த்தோம் எங்கோ மரத்தில் தவறி விழுந்து வீட்டுக்கு வந்தாங்க
      கண்ணே திறக்கலை.. நாங்க இங்க் பில்லரில் பால் கொடுத்து நல்ல வளர்ந்ததும் அதுங்களை கொய்யா மரத்தில் விட்டோம் கனத்த மனதுடன் ..அப்படியும் வந்து பார்த்து செல்லும் அவை எங்களை :) அவற்றை வெளியில் விட காரணம் அவை வீட்டில் அங்குமிங்கும் ஓட
      வீட்டில் இருந்த பூஸார் எலின்னு நினைத்து கவ்வ பார்த்தார் .
      அப்படியும் எங்க வீட்டு பின்பக்கம் முற்றத்தில் ஒரு பெரிய பை தொங்கவிட்டிருந்தோம் ஒரு நாள் அதில் கீச் சத்தம் கேக்குது இவங்க மரத்தில் கூடு கட்டாம அதில் குட்டி போட்டு வச்சி பிறகு கூட்டி போயிருக்காங்க :)

      Delete
    3. அடடா இதை இப்போதான் பார்க்கிறேன் அஞ்சு... குழந்தையில் பழகிவிட்டால் அவை நம்மை மறக்காயினம்..

      பழைய நினைவுகள் என்றும் இனிமையே.. கவலை கொடுத்தாலும்கூட...

      Delete
  7. அவ்வ் முழு பாட்டையும் கேக்கபோறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கேழுங்கோ:).. நான் ஒரு பாடல் என் சிடியில் கேட்டு விட்டுத் தேடினேன் கிடைக்கவில்லை, இது கண்ணில் பட்டது, பட்டுக்கோட்டை என எழுதி இருந்தமையால் தூக்கி வந்திட்டேன்ன்.. ஏனெனில் கண்ணதாசன் அங்கிளுக்கு அடுத்து பட்டுக்கோட்டை யாரிலும் எனக்குப் பேய் லவ்வூஊஊ:),,

      Delete
  8. அதிரா என்ன லேசா நகைசுவையாய் ஆரம்பித்து கனமாய் முடித்துவிட்டீர்கள் மனம் மிகவும் சுணங்கி கனமாகி விட்டது இப்பொது போகிறேன் அப்புறம் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ...

      சே..சே.... என்ன பண்ணுவது, மனம் கனமாகிறதுதான், ஆனால் இப்படி எவ்வளவோ கடந்து வந்திட்டோம்ம்..

      /// இப்பொது போகிறேன் அப்புறம் வருகிறேன்// விழிமேல் வழி வைத்து.. சே..சே.... வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்ன் சேவலார் கூவியதும் வந்திடுங்கோ:)) ஹா ஹா ஹா... மிக்க நன்றி பூவிழி.

      Delete
  9. ஆ..பட்டுக்கோட்டையார் இந்த பாட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும். நாங்க இரவு நேரம் அதுவும் பெளர்ணமி என்றா கேட்கவேண்டாம் மல்லிகை பந்தல் இருக்கு அதற்கு கீழே வாங்கு போட்டு எல்லாரும்(அக்காமார்,அம்மா,பக்கத்துவீட்டு அக்காவை) இருந்து கதைத்துகொண்டிருப்போம் அதிரா. அப்ப ரேடியோவும் சின்னதா பாடிக்கொண்டிருக்கும். இந்தபாட்டு வந்தால் ரசித்து கேட்போம்.அம்மாவுக்கும் பிடிக்கும். சிட்டிவேஷன் சோங் காக மாறிவிடும்...

    திருவிழாவை ஞாபகப்படுத்தி, வடக்கு வீதி கச்சேரியையும் சொல்லி, ஸ்கிப்பி வந்த வரலாற்று கதையை எழுதி சோகமாக்கிவிட்டீங்க.. என் வீட்டு செல்லங்களையும் நாங்க இடம்பெயர்ந்தபோது நாயாரை மட்டுமே கொண்டு செல்லமுடிந்தது. பூசாரை காணவே இல்லை. வெடிச்சத்தத்துக்கு பயந்து எங்கோ போய்விட்டதோ அல்லது ஒளிந்து கொண்டதோ தெரியல. இப்ப நினைத்தாலும் மிகவும் கவலையா இருக்கும்..

    இப்படி எழுதி பழைய ஞாபத்தை வரவைச்சு ஊருக்கே போகவைச்சதுக்கு ..கர்ர்ர்ர்ர்.. நித்திரை போச்சு.அதுவும் கடைசி பந்தி வாசிச்சு...... அழாத குறைதான்..நாங்க திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் 4சுவர்கள்தான் இருந்தது. வீட்டுக்கதவுகள் கூட இல்லை. வளவை பார்க்க பயமா வேறு இருந்தது.... மறக்கவியலாத நினைவுகள்.

    ஊசி இணைப்பு அருமை..
    (கொமண்ட் வருமா,வராதா)..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...
      ///அதுவும் பெளர்ணமி என்றா கேட்கவேண்டாம் மல்லிகை பந்தல் இருக்கு///

      ஆவ்வ்வ்வ் மல்லிகைப் பந்தலோ... பெளணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போலே முன்னால் போனாள், பின்னால் சென்றே பொண்ணு ஊருக்குப் புதுசோ என்றேன்ன் ஓஓ மேலே கேய்க்காதேஏஏஏஏஏ.. ஹா ஹா ஹா நினைவு வந்திட்டுது:))..

      நிலா வெளிச்சத்தில் முற்றத்தில் இருந்து அப்பம்மா அம்மம்மாவிடம் கதை கேட்பது, ஹொஸ்டலில் கூடி இருந்து கதைத்தது எல்லாம் என்ன ஒரு காலம்...

      நான் சொன்னதை விடப் பெரிய கதைகள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் அம்முலு...:(..

      //இப்படி எழுதி பழைய ஞாபத்தை வரவைச்சு ஊருக்கே போகவைச்சதுக்கு ..கர்ர்ர்ர்ர்.. நித்திரை போச்சு//

      ஹா ஹா ஹா நீங்கதான் எனக்கு காசு தரோணும்:) ரிக்கெட் எடுக்காமல் செலவில்லாமல் ஊருக்கு அனுப்பியிருக்கிறேன்ன் இதுக்குப் போய் கர்ர்ர்ர்ர்ர் சொல்லலாமோ?:))..

      எங்கள் இன்னொரு வீடு அப்படித்தான் அம்முலு.. எழும்பியது எழும்பியதுதான் கால் திரும்ப வைக்கவே இல்லை.. கண்ணிவெடி இருக்கலாம் என மிரட்டியதால்.. அதுவும் பெரீய வீடு 4 அறைகள் ஹோல், டயனிங் கோல், கிச்சின், ஹொரிடோ என... அது அப்படியே மண்ணாகி.. மரங்கள் முளைச்சு.. சரி விடுங்கோ.. இப்படி எத்தனை கதைகள்... எதுவும் வேண்டாம்ம் உயிர் தப்பினால் போதும் எனும் எண்ணத்தோடுதானே அப்போ மக்கள் இருந்தனர்.

      //(கொமண்ட் வருமா,வராதா)..///

      ஹா ஹா ஹா வந்திடுச்சே:))... மிக்க நன்றி அம்முலு.. ஊர் நினைவால உடனேயே லாண்ட் ஆகிட்டீங்க... மிக்க நன்றி. இதுக்காகவே அடிக்கடி ஊர் க் கதைகளை எழுதப்போகிறேன்:)) ஹா ஹா ஹா.

      Delete
  10. ஜாலியாக படித்து வரும்போது முடிவு மனதை கனக்க வைத்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி...
      உண்மைதான், அனுபவிக்கும்போது வேதனை.. வெளியே வந்தபின்பு திரும்பிப் பார்க்கும்போது எங்கேயோ வந்துவிட்டோம்.

      மிக்க நன்றி.

      Delete
  11. மனத்தை நெகிழச் செய்த பதிவு. எத்தனை இயலாதவர்கள் மறைந்தனரோ, கொடுமையான கடைசி காலத்தைச் சந்தித்தனரோ, நாடு விட்டு நாடு சென்று, புதிய இடத்திலும் செழித்து வளரமுடியாமல், வளர்ந்த இடத்தின் நினைவையும் அழிக்க முடியாமல் துன்பப்படுகின்றனரோ. போர்ச்சூழல் இருந்த 20+ வருடங்கள் எப்படி பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது!

    அதிலும் பலர், தாங்கள் சேர்ந்த நாடுகளில் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்களே. அதற்குப் பொருத்தமான ஊசிக்குறிப்பு. பாராட்டுக்கள்.

    ஊரின் சதுர்த்தி, பிள்ளையார் ஊர்வலம், கதைபேசித் திரும்புதல்..... கிராமச் சூழ்நிலையைக் கொண்டுவந்துவிட்டீர்கள். சினிமாப் பாடல்கள் எதைப் பாடியிருப்பார்கள் என்பதை நினைவுகூர்ந்திருக்கலாம். பொதுவாக "சிங்கார வேலனே தேவா" போன்ற நல்ல பாடல்களை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.

    வீட்டின் செல்லப் பிராணிகள்.... இதனைப் பற்றி எப்போது படித்தாலும் எனக்கு ஆச்சர்யம்தான். அவங்க காட்டுற பாசத்துக்கும் நாம நம் குடும்பத்துல காட்டுற பாசத்துக்கும் வித்தியாசமே இல்லை.
    பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //அதற்குப் பொருத்தமான ஊசிக்குறிப்பு. பாராட்டுக்கள்.//
      ஹா ஹா ஹா மிக்க நன்றி, சத்தியமாக நான் இதற்காகத் தேடிப் போடவில்லை, என்ன போடலாம் என என் ஃபோனில் தேடினேன், இவர் கிடைச்சார்ர்.. ஆஹா நல்லாயிருக்கே எனப் போட்டபின்னர்தான் எனக்கே தெரிஞ்சுது ... தானா அமைஞ்சிட்டுது என:)..

      ///சினிமாப் பாடல்கள் எதைப் பாடியிருப்பார்கள் என்பதை நினைவுகூர்ந்திருக்கலாம். பொதுவாக "சிங்கார வேலனே தேவா" போன்ற நல்ல பாடல்களை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.///

      ஹா ஹா ஹா நீங்களே கேள்வியும் கேட்டு உப்பூடிப் பதிலும் சொன்னால்.. நான் என்ன பதிலைச் சொல்லுவதாம்:)).. ஆரம்பம் பக்திப்பாடல்கள் தான் வாசிப்பார்கள், ஆனா சுற்றி நிற்கும் இளவட்டங்கள் விடவே மாட்டார்கள்.. பாடலைச் சொல்லி, வாசிக்கச் சொல்வார்கள்...

      ரிப்பீட்டில் வன்ஸ்மோர் கேட்டு வாசிச்சதும், மனதில் இடம்பிடிச்சதுமான ஒரு பாடல்... “ஒட்ட ஒட்டக் கட்டிக்கோ... கெட்டியாக ஒட்டிக்கோ..”:).. ஹா ஹா ஹா.. பாடல் கேட்பதை விட அவர்கள் நாதஸ்வரத்தில் மேளத்தோடு வாசிக்கும்போது.. என்னா ஒரு இனிமை தெரியுமோ:)..

      Delete
  12. இதைப் போல விலங்குகள் நம்முடன் அன்பு கொண்டு பழகுவதெல்லாம்
    முந்தைய பிறவியின் பந்தம் என்று சொல்வார்கள்...

    இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்டால் -
    Birth Certificate, Residence Certificate - இதையெல்லாம் எங்கே போய்த் தேடுவது.. நம்மாலும் சும்மா இருக்க முடியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன்..
      //முந்தைய பிறவியின் பந்தம் என்று சொல்வார்கள்...//
      //இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்டால் //
      //நம்மாலும் சும்மா இருக்க முடியவில்லை..//

      ஹா ஹா ஹா.. நல்லவேளை பதிலையும் சொல்லிச் ஜமாளிச்சிட்டீங்க:)) மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  13. இலங்கைத் தமிழர்கள் நிறைய பேர் வலையில் நட்புகள் புலம்பெயர்ந்தவர்கள் யாராவது அந்தபுலம்பெயர் அனுபவத்தைப் பகிர மாட்டார்களா என்றுதோன்றும் நீங்கள் ஏன் எழுதக் கூடாது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி அம் பி ஐயா...
      //புலம்பெயர்ந்தவர்கள் //
      இதற்கான சரியான மீனிங் எனக்குத் தெரியவில்லை... இலங்கைத்தமிழர்களில், வீட்டை விட்டுப் போவதும் பின்பு திரும்பி வந்திருப்பதுமான நிகழ்வுகள் அதிகம்.. பெரும்பாலும் இதை அனைவருமே அனுபவித்திருப்பார்கள்...

      எனக்கு இதில் பெரிதாக அனுபவங்கள் இல்லை.. இந்த இடம்பெயர்வு மட்டும்
      எங்களுக்குத் திடீரென ஏற்பட்டது... இதுபற்றி முடிந்தால் பின்னர் விளக்கமாக எழுதுகிறேன். ஆனா இது ஒன்றும் பெரிதல்ல.. இதைவிட எவ்வளவோ பெரிய பெரிய கொடுமைகள் எல்லாம் நம் மக்கள் அனுபவித்திருக்கின்றனர்... நீங்கள் இதுபற்றி அறிய ஆவலாக இருப்பது மகிழ்ச்சி.

      மிக்க நன்றி.

      Delete
    2. புலம் பெயர்ந்தவர்கள் - சொந்த நாட்டை விட்டுப் போய், வேறு நாட்டில் அடைக்கலம் புகுந்து, அந்த நாட்டையே சொந்த நாடாக்க்கொண்டு வாழ்பவர்கள்.

      நாங்க, கான்டிராக்ட் முடிஞ்சதும் தாய்நாட்டுக்குச் சென்றுவிடுவோம். நீங்க ஸ்காட்லாந்த் சிடிசனாகிவிட்டீர்கள். உங்களை புலம் பெயர்ந்தவர்கள் என்று சொல்வார்கள்.

      Delete
    3. ஓ இதுதான் எனக்குச் சரியாகப் புரியாததால் கேட்டேன், மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      ஆனா இன்னும் எனக்கு இது சரியாகப் படவில்லை மனதுக்கு. ஏனெனில் இலங்கையில் எந்த ஒருவருக்கும் சொந்த வீடு அல்லது காணி இல்லாமல் இருக்கவே இருக்காது.. சிங்களவர்கள் பற்றித் தெரியாது ஆனா தமிழர்களில் சொந்த வீடு இல்லாத ஒரு தமிழரைக் காட்டவே முடியாது.

      இப்படி இருக்கையில், பலர் உயிருக்காகவும்.. பலர் வேலை நிமித்தமாகவும் வெளிநாட்டில் வந்து குடியேறிவிட்டோம்.

      நாங்கள் கொழும்பிலேயே பிரச்சனை இல்லாமல் இருந்தோம், தொடர்ந்து இருந்திருக்கலாம், ஆனா சொந்த பந்தம் எல்லாம் வெளிநாட்டில் என்பதனால், எல்லோரும் வெளியே வந்திடுங்கோ என ஃபோஸ் பண்ணியமையால், வேர்க் பெமிட்டில்தான் வந்தோம் இங்கு. பின்னர் சிட்டிசன் ஆகிட்டோம்.

      ஆனா இங்கு வாழ்ந்தாலும், கடும் பிரச்சனைக் காலங்களில், ஊரில் இனி வீடிருந்து என்ன பண்ணப்போகுது எனச் சிலர் அவசரப்பட்டு விற்றிருந்தாலும், இப்போ பிரச்சனை முடிந்ததும், முதல் வேலையாக ஓடிச்சென்று, காணி வீடு என வாங்கி விட்டு விட்டனர்.

      அப்போ எங்கிருந்தாலும் சொந்த நாட்டை யாரும் கைவிடவில்லையே.. இலங்கையர்களைச் சந்திக்கும்போது கேட்டுப்பாருங்கோ.. என்ன சொல்வார்கள் எனில்.. குழந்தைகள் இங்கேயே பிறந்து வளர்வதால், அவர்களை இப்போ அழைத்துப் போக முடியாது, ஆனா நம் பிற்காலத்தில் ஊரில்தான் போய் இருக்கப் போகிறோம் என. வெளிநாட்டுப் பென்சன் ஊரில் இருந்தும் எடுக்கலாம்.

      அத்தோடு டுவல் சிட்டிசன் முறையும் இருக்குதெல்லோ, நம்மவர்களில் பலர் டுவல் சிட்டிசன் எடுத்து வைத்திருக்கிறார்கள்...

      அப்போ எப்படி நம்மைப் புலம்பெயர்ந்தவர்கள் எனும் லிஸ்ட்டில் சேர்க்க முடியும்? இதுதான் என் சந்தேகம் கிளவி..சே.சே.. கேள்வி எல்லாம்:)..

      Delete
  14. பாருங்க நாயனாரை பூனையுடனான ஸ்நேகத்தை மிருகங்கள்கூட ஒற்றுமையாய் இருக்கு அன்புடன் மனிதன் தான் மறந்துவிடுகிறான் நீ வேற நான் வேற என்று
    என்ன உங்க பூனையாரும் ரீக் (டீ தானே )குடித்தாரா ???(ம் உங்க அம்மா பதிவில் வந்திருந்தால் சொல்லி இருப்பாங்களோ 'அடி நீ மக்கில் தானடி ரீக் எடுத்து போவாய்'ஹா ஹா ஹா )
    பூனையார்தான் ரொம்ப தோஸ்தாகிவிட்டார் போலிருக்கிறது அப்போவே இருந்து
    காலம் மாறட்டும், காட்சிகள் மறையட்டும், வண்ணங்கள் விரியட்டும், வசந்தம் வீசட்டும், வாய்ப்புகள் தட்டட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி... வழிமேல் விழி வைத்திருந்தேன் வீண் போகவில்லை:) வந்திட்டீங்க.

      உண்மைதான் நட்பாகாவிட்டால்தான் சண்டைப்பிடிப்பார்கள், நட்பாகிவிட்டால் மிருகங்கள் நல்ல ஒற்றுமையாக இருப்பார்கள்.. துரோகம் செய்ய நினைப்பதில்லை மனிதரைப்போல்.

      காலம் இப்போ எவ்வளவோ மாறிவிட்டது...
      மிக்க நன்றி பூவிழி.

      Delete
  15. முதல் பகுதி போட்டு இவ்வளவு நாட்கள் கழித்து இரண்டாம் பகுதியைத் தொடர்ந்து விட்டுப்போன பகுதியைப் படிக்க இங்க வாங்கோ, அங்க வாங்கோ என்றால் என்ன நியாயம்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஹா ஹா ஹா.. நீங்க ரெண்டு நாளாக படு பயங்கர பிசியாக இருப்பதைப்போல உணர்கிறேன்.. அதனாலதான் உங்களுக்கு பகுதி ஒண்டு மறந்து போச்ச்ச்ச்ச்:)..

      Delete
    2. //நீங்க ரெண்டு நாளாக படு பயங்கர பிசியாக இருப்பதைப்போல உணர்கிறேன்.. //

      ஆனாலும் உங்களுக்கு ஏஎஸ்பி பவர்.... பி எஸ் பி பவரோ.... சரி கியூ எஸ் பி பவர் அதிகம்!

      Delete
    3. ஹா ஹா ஹா என் உள்பட்சி அப்படிச் சொல்லியது:).. அம்மாவின் தலையில் பேன் பார்த்தாலும்.. வேலியில் போகும் ஓணான் என்ன கலர் எனச் சொல்லுவேனாக்கும்.. தலையைத்திருப்பாமல்:)) ஹா ஹா ஹா...

      ///ஏஎஸ்பி பவர்.... பி எஸ் பி பவரோ.... சரி கியூ எஸ் பி பவர் அதிகம்!///
      ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊ தமிழாக்கம் பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      Delete
  16. பிள்ளையாருக்கும் கர்!! அநியாயம்!

    பிள்ளையார் தனியாக வீதிவலம் வருகிறாரா? அட.... இதுமாதிரி ஸ்வாமி சுற்றுகளில் நடக்கும் நாதஸ்வர கச்சேரி பற்றி ஸ்விஸ் ஹேமா தளத்தில் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //பிள்ளையாருக்கும் கர்!! அநியாயம்!//
      ஹா ஹா ஹா எங்கட பக்கத்துப் பிள்ளையார் எங்களுக்கு பெஸ்ட் ஃபிரெண்ட் மாதிரி...:) நாங்கள் படுபயங்கரமா அவரைத்திட்டுவோம்:) நல்லாத் திட்டும் வாங்குவார்.. அதே நேரம் பூக்கள், மாலைகளும் கட்டிக் கட்டிப் போட்டு மகிழ்விப்போம்...:) அதிலயும் எங்கள் பெரியம்மாவின் மகள்.. அக்கா ஒருவர் இருக்கிறா.. அவ பிள்ளையாரைத்திட்டும்போது நாமெல்லாம் விழுந்து விழுந்து சிரிப்போம்:)).

      //பிள்ளையார் தனியாக வீதிவலம் வருகிறாரா?//
      வளர்பிறைச் சதுர்த்தியில் அன்று பிள்ளையார் தனியாக வெளி வீதி சுத்தி வருவார்.. ஏன் அங்கு அப்படி இல்லையோ?..

      //நடக்கும் நாதஸ்வர கச்சேரி பற்றி ஸ்விஸ் ஹேமா தளத்தில் படித்திருக்கிறேன்.//

      ஹா ஹா ஹா ஓம் ஹேமா இதுபற்றிச் சொல்லுவா... சுவாமி சுத்துவரை மிஸ் பண்ணினாலும்.. இந்த வடக்கு வீதியில் நடக்கும் மேளக் கச்சேரியை யாரும் மிஸ் பண்ண விரும்புவதில்லை.. அதனாலேயே பலர் கோயிலுக்குள் போகாவிடினும் வீதியில் நின்று பார்ப்பார்கள்.

      கோயிலுள் போவதாயின் மேக்கப் பண்ணோனுமெல்லோ:))..

      Delete
  17. நாயையும் பூனையும் நண்பர்களாக்குவதற்குள் நாக்கு தள்ளிவிடும்!

    //ஓடிவந்து பின் பக்கமாகப் பாய்ந்து என் சட்டையில் ஏறி, மெதுவாக நகம் என்மேல் படாதபடி, முதுகிலே நடந்து தோளில் ஏறியிருப்பார்....//

    சிரிப்பாக இருக்கிறது. ஆச்சர்யம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னமோ அது கஸ்டமானதாக தெரிவதில்லை, கொஞ்சம் மினக்கெட்டாஅல் போதும்... பூஸாரைத்தூக்கி வச்சுக்கொண்டு, நாயாரைக் கூப்பிட்டு மணக்க விட்டு... தொடக்கூடாது அடிப்பேன்ன்... எனச் சொல்லிக் கொடுத்தால் உடலேயே கண்ணைச் சிமிட்டுவார் நாயார்.. ஆனா பூனைப்பிள்ளைக்குத்தான் நினைப்பு தன்னில மயங்கி நாயார் கிட்ட வருகிறார் என.. அதனால அடிக்கடி உடம்பைச் சிலிர்த்து தன் எதிர்ப்பைக் காட்டுவினம் புதிதுக்கு.

      //சிரிப்பாக இருக்கிறது. ஆச்சர்யம்.//
      ஹா ஹா ஹா உண்மைதான், என்ன பண்ணினாலும் நான் அடிக்கவோ, தட்டி விடவோ மாட்டேன் என்பது தெரியும் அதனால்தான் இப்படி, ஆனா இந்த ஸ்கிப்பி இப்படி ஏறுவதைப்போல ஏனைய பூனைகள் ஏறுவதில்லை, ஏனெனில் நாங்கள் வளர்த்தவற்றும் இவ மட்டும்தான் ஸ்மோல் மேட்...

      Delete
  18. //என் தோழிலேயே//

    தோளிலேயே

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இம்முறை என் செக்:) எனக்கு இதை மெயில அனுப்பினா:) எடிட் பண்ணினேன், சரியாகப் பண்ணுப்படவில்லைப்போலும் கர்ர்:)).. ஹா ஹா ஹா நன்றி.. என்ன இருந்தாலும் மீக்கு டமில்ல டி ஆக்கும்:))

      Delete
    2. ஹா ஹா ஹா ஒரு தோழை:) மாற்றினேன்..:) மற்றத் தோழைக் கோட்டை விட்டுட்டேன்ன்ன்ன்:)) ..என் அறிவு பார்த்து மீ வியக்கேன்ன்ன்ன்ன்:))

      Delete
  19. பழகிய, வளர்ந்த இடத்தை விட்டு வெளியேறி - அதுவும் புழங்கிய பொருட்களை விட்டுச் செல்வது என்பதும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நீங்கள் அங்கு இல்லாத நாட்களிலும் அந்த நாயாரும், பூனையாரும் அங்கேயே இருந்திருக்கிறார்கள் என்பது நெகிழ்வு. உங்களைத் தேடியிருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது அந்த நிகழ்வு பற்றி ஒரு போஸ்ட் போட நினைக்கிறேன்ன் .. போட விருப்பமாக இருக்கு ஆனா தெரியல்ல...

      இரவு சித்தப்பா வீட்டில் தங்கி விட்டு விடிய வந்திடலாம் என நினைச்சே திடீரென வெளிக்கிட்டோம்ம்...

      யோசிச்சுப் பாருங்கோ.. சும்மா இரவு மம்மல் இருட்டு.. வீட்டில் ஹாயா இருக்கிறோம்ம்.. ஆனா தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் இருக்குது.. திடீரென ரோட்டால் எனவுன்ஸ் பண்ணிக்கொண்டு போகிறார்கள்.. உடனடியாக யாழ் நகரை விட்டு வெளியேறுங்கள்.. இராணுவத்தினர் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்கள் என.. அப்போ எப்படி இருக்கும்.. அந்த நேரத்துக்கு முக்கியம் உயிர் தானே?:(.. உடனே வெளிக்கிட்டதுதான், இப்படி ஒரேயடியாக வெளியே வருவோம் என நினைக்காததால் கடசியா நாய் பூனையைத் தடவிக்கூட விடவில்லை.. நல்லவேளை அவிட்டு விட்டிட்டு வந்தோம்.

      நிட்சயம் நம்மைத் தேடியிருப்பார்கள்.. நம் வீட்டில் மட்டுமில்லை ஊரிலேயே மனிதர் இல்லையே அந்நேரம்..

      Delete
  20. ஊசி இணைப்பு மனதைத் தேற்றுவதாக இருக்கிறது.

    பதிவை முழுவதும் என் மெயில் பெட்டியிலே படித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. //பதிவை முழுவதும் என் மெயில் பெட்டியிலே படித்து விட்டேன்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  21. அதிரா வேண்டாம் அதிரா இப்படியான பதிவுகள் வேண்டாம்..நான் அழுதுவிட்டேன்....ப்ளீஸ் நீங்கள் எப்போதும் போல் அதிரடியாகப் புயலாக வந்துகொண்டே இருங்கள் அதிரா....ப்ளீஸ்!! அன்றைய இரவு நீங்கள் எல்லோரும் எப்படி வீட்டை விட்டு...ஹையோ எங்கு போய் இருந்தீர்கள்?!! எப்படி இருந்திருப்பீர்கள்...அந்தச் செல்லங்கள் இரண்டும்...நீங்கள் எல்லாம் இல்லாமல்...

    உங்களை எலலம் நினைத்து முடியலை சாமீ...முடியலை..அதிரா மனம் ரொம்ப வேதனையாகி அழுதுட்டேன் பா....எனக்கும் மிகவும் பிடித்த ஊர் இலங்கை..அதுவும் உங்கள் ஊர் எல்லாம்...சிறிய வயதில் வந்திருக்கேன் என்றாலும் இன்னும் என் மனதை விட்டு நீங்காத ஒன்று. அங்குப் பிரச்சனை தொடங்குகிறது என்றதால் தான் நாங்களும் 1970 லியே வந்துவிட்டோம். என் அப்பா 1975 பிரச்சனை இன்னும் வலுக்கவும் வந்துவிட்டார். ஆனால் நீங்கள் எல்லோரும் அந்தப் பகுதியிலேயே இருந்தவர்கள்...இப்போது நீங்கள் சொல்லியது அப்படியே மனதில் காட்சிகளாய் விரிந்தது...மனம் ரொம்ப நொறுங்கிவிட்டது..அதிரா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      //அதிரா வேண்டாம் அதிரா இப்படியான பதிவுகள் வேண்டாம்..நான் அழுதுவிட்டேன்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்கே இப்படிக் குழறினால் நம்மவர்கள் அடிக்க வருவினம்:(.. ஏனெனில் நான் சொன்னது ஏனைய பிரச்சனைகளோடு ஒப்பிடுகையில் தூசியிலும் குறைவு கீதா... இதுவே பெரிசாகத் தெரியுதே.. அப்போ எத்தனை பேருக்கு எவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கு அதை எல்லாம் அறிஞ்சால்ல்ல்ல்ல்ல்...

      இப்படி எத்தனையோ சம்பவங்கள் கீதா... இப்போ மனது ஆறி விட்டது, அப்போது அதெல்லாம் நினைத்துப் பார்க்கவே நடுங்கும் நிகழ்வுகள்..

      உண்மையில் பிரச்சனைகள் பெரிதானது இந்திய ஆமி வந்துபோனதன் பின்பு என நினைக்கிறேன் கீதா.. இந்த இடம் பெயர்வு நிகழ்ந்தது 95 இன் பிற்பகுதி.. அதன்பின் இன்னும் மோசமாகி... 2009 இல்தான் முடிவுக்கு வந்தது.

      இதை எல்லாம் படிக்க மாட்டேன் எனச் சொல்லக்கூடாது கீதா.. நாம் பெற்ற துன்பத்தையும் நீங்கள் அறிந்திருப்பது நல்லதுதானே... கஸ்டம்தான் என்ன பண்ணுவது..

      Delete
  22. அதிரா ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க...என்னால மீண்டும் கமென்ட் போட முடியலை...மனசு ரொம்ப வலிக்குது...ப்ளீஸ் அப்படியே...எப்படி நீங்கள் எல்லோரும் அன்று ஃபேஸ் பண்ணியிருப்பீர்கள்..எத்தனை வலிகள் உங்கள் எல்லோருக்கும் இல்லையா...வேண்டாம் அதிரா இனி உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது பிரார்த்திக்கிறேன் அந்த வைரவரை...முடியலை அதிரா...சத்தியமாய்...இப்ப போறேன்...அடுத்த பதிவு ஹேப்பியாக இருந்தால் வருவேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீதா... ஈசியாக எடுங்கோ... நடந்தவை யாவும் நடந்தவைதானே....

      //எப்படி நீங்கள் எல்லோரும் அன்று ஃபேஸ் பண்ணியிருப்பீர்கள்..எத்தனை வலிகள் உங்கள் எல்லோருக்கும் இல்லையா//

      இதுபற்றிச் சொல்ல ஆசைதான்.. பார்ப்போம் இன்னொரு நாளில்..

      அடுத்த போஸ்ட் ஹப்பிதான் கீதா வந்திடுங்கோ... என் இன்பத்தில் பங்கெடுக்கும் நீங்கள் துன்பத்தில் பங்கெடுக்க மாட்டேன் என்கிறீங்களே!!.. இது ஞாயமோ?:).. ஹா ஹா... இல்ல கீதா புரியுது எல்லோராலும் எல்லாத்தையும் தாங்க முடிவதில்லை.. அனுபவிப்பவர்களைக் காட்டிலும்.. அதைப் பார்ப்போர் கேட்போருக்கு வலி அதிகம் என நினைக்கிறேன்...:(..

      மிக்க நன்றி கீதா.

      Delete
  23. அதிராவ் !! இப்படி வளர்த்த ஜீவராசிகளை விட்டு வருவது ரொம்ப கடினமே .இன்னிக்கு நியூஸில் சொல்றாங்க ..உங்க பேராண்டி ஹாரி இளவரசர் திருமணம் செய்ய போற பொண்ணு மெகன் ஒரு ரெஸ்க்யூ செல்லத்தை வளர்க்கிறாராம் ..அது ரொம்ப வயதானது அதனால் பிளைட்டில் டிராவல் செஞ்சி லண்டன் வர முடியாதலாம் அது அவருக்கு ஹார்ட் ப்ரேக்கிங்கா இருக்கபோதுன்னு .

    ஒரு சந்தோசம் அரச குடும்பத்தில் நம்ம மாதிரி எண்ணங்களுடன் ஒரு பெண் !!

    ReplyDelete
    Replies
    1. //மெகன்//
      என் சிஸ்டரைப்:) பார்த்தால் டயானா ஆன்ரியின் சாயல்.. ஸ்டைல் தெரிகிறதெல்லோ அஞ்சூ:)).. என்னிடம் கேட்டபின்னர்தான் தம்பி ஹரி ஓகே சொன்னார்ர்:).. ஹா ஹா ஹா சரி சரி.. 4 அடி தள்ளி நிண்டே பேசுங்கோ அஞ்சு:)..

      //ஒரு சந்தோசம் அரச குடும்பத்தில் நம்ம மாதிரி எண்ணங்களுடன் ஒரு பெண் !!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஓல்ரெடி நான் அக்குடும்ப உறுப்பினர் என்பதை மறந்து பேசலாமோ?:)) ஹா ஹா ஹா:)..

      Delete
  24. துளசி ஊரில் இருக்கிறார் அதான் உங்க பக்கம் பார்க்க முடியலை...பின்னர் வரேன் அதிரா...இன்னும் என் மனம் மீளவில்லை..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ கீதா நீங்கள் போட்டாலே துளசி அண்ணனும் சேர்ந்து போட்டதற்குச் சமந்தானே.. புறிம்பாக வேறு மொய் எதுக்கு... மிக்க நன்றி கீதா...

      Delete
  25. "என் புளொக் இப்போ தமிழ்மணத்தில் 6ம் இடத்தில் இருக்கிறதாம்:) என்ன கொடுமை இது வைரவா?:).. அடிக்கடி தப்புத்தப்பாக் காட்டுவதே டமில்மனத்துக்கு வேலையாப்போச்சுது போல "

    பொதுவா பெண்கள், அலுத்துக்கறாப்போல, தற்பெருமை பேசுவார்கள் என்பது என் எண்ணம். உதாரணம்,

    1.எங்க வீட்டுக்காரருக்கு என்ன சொன்னாலும் புரியறதில்லை. செலவழிக்காதீங்கன்னு சொன்னாலும், இந்தப் பிறந்த நாளுக்கு எனக்கு தங்க நெக்லஸ் வாங்கித்தந்தார்.
    2. ஸ்.. அப்பா.. இந்தப் பெரிய வைர மூக்குத்தியைப் போட்டதிலிருந்தே மூக்கு அப்போ அப்போ வலிக்கறாப்பலயே இருக்கு (இது, மற்றவர்கள் தன் வைர மூக்குத்தியைப் பார்க்கவேணும் என்பதற்காக)
    3. இனி வேற வீடு பார்க்கவேண்டியதுதான் போல. என்ன சொன்னாலும் புதுப் புது புடவையா வாங்கித் தந்துக்கிட்டே இருந்தா, வைக்க எங்க இடம் இருக்கு. எங்கிட்ட 500 புடவை சேர்ந்துடுத்து (இப்படீன்னு, தங்ககிட்ட அத்தனை புடவை இருக்கறதை விளம்பரப்படுத்துவாங்க).

    நீங்களும் இந்த தெக்கினிக்குதானே உபயோகப்படுத்தியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ///பொதுவா பெண்கள், அலுத்துக்கறாப்போல, தற்பெருமை பேசுவார்கள் என்பது என் எண்ணம். உதாரணம்,///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” ஆக்கும்..க்கும்:))..

      இப்பூடியும் ஒரு சூட்சுமம் இதில் இருப்பது எனக்குத் தெரியாமல் போச்சே:)..

      உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமோ நெல்லைத்தமிழன்:).. பேசிக்கலி.. ஓசிக்கலி:) பெண்கள் அப்பாவிகள்:).. ஆனா பல ஆண்கள்தான்:).. இப்படி நினைத்தாயா அப்படி நினைத்தாயா என பலப்பல கேள்விகளைக் கேட்டு, தெக்கினிக்குகளை:)) ஹா ஹா ஹா சொல்லிக் கொடுத்து விடுகின்றனர்... அது நல்ல விசயமாகத் தெரியவே:) பெண்களும் டக்கெனக் கடைப்பிடிக்கத் தொடங்கி விடுகினம்:)).. இப்போ தெரியுதோ..:) பெண்களுக்கு இப்படியான புத்திகளைச் சொல்லிக் கொடுத்திட்டு பின்பு கஸ்டப்படுவதும் உங்களைப்பொன்றோர்தான் ஹையோ ஹையோ:)).. இனி நாளைக்கு இந்த தெக்கினிக்கை(ஹையோ இதற்குள் ஸ்ரீராம் ரோயல்ட்ட்டி கேட்டு சண்டைக்கு வந்திடப்போறாரே:)).. அஞ்சுவும் கடைப்பிடிக்கப்போறாவே கர்ர்ர்:))

      Delete
    2. சின்ன வயதில் அப்பா அடிக்கடி கதைகள் சொல்லுவார்... அப்படிச் சொன்னதில் ஒரு கதை..:)..

      மூவர் ஒரு இடத்தில் சந்தித்துப் பேசுகின்றனராம்.. மூவரும் அன்று புதிதாக, ஒருவர் கடுக்கன் தோடும், மற்றவர் பவுண் பல்லும், மற்றவர் தங்க மோதிரமும் போட்டு வந்திருந்தார்களாம்... அதை எப்படி ஒருவருக்கொருவர் காட்டுவது எனத் தெரியாமல்...

      தங்கப் பல்லுக் கட்டியவர் வாயை விரித்து விரித்துச் சொன்னாராம்ம்ம்.. “கீஈஈஈஈஈஈரை விற்குது.. கீஈஈஈஈஈரை விற்குது” என... இதைப் பார்த்து கடுக்கன் தோடு போட்டவர் சொன்னாராம்.. தலையை ஆட்டி, கடுக்கன் குலுங்க.. “எங்க விக்குது? எங்க விக்குது?” என...

      அதுக்கு பவுன் மோதிரம் போட்டவர் .. அந்த விரலை நீட்டிக் காட்டிச் சொன்னாராம்ம்.. “அங்க விக்குது.. அங்க விக்குது” என.. ஹா ஹா ஹா எல்லாம் ஒவ்வொரு தெக்கினிகுத்தானே:))

      Delete
  26. கனடாவில் இருக்கும் எழுத்தாளர் (மருத்துவர் என நினைக்கிறேன்) முத்துலிங்கம் அவர்கள் எழுதிய கதைகளையும் ஒரு நாவலையும் வாசித்திருக்கிறேன். சாஸ்திரி என்பவர் இணையத்தில் (அவர் பிரான்ஸில் இருக்கிறார் என நினைக்கிறேன்) எழுதிய கதைகளையும் (உண்மைச் சம்பவங்களை சிறிது முலாம் பூசியிருக்கலாம்) படித்திருக்கிறேன். இந்த மாதிரித் துன்பங்கள் நம் எதிரிக்குக்கூட வரக்கூடாது.

    கிட்டத்தட்ட, தனக்கு உரிமையான இயல்பான இடத்திலிருந்து வேறொடு வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, சம்பந்தமேயில்லாத இடத்தில் நடுவதைப்போன்றது அது. எத்தனை பெற்றோர்கள், தாங்கள் செத்தாலும் பரவாயில்லை, சோறு தண்ணி இல்லை என்றாலும் பரவாயில்லை, நம்ம குழந்தைகளாவது எங்காவது உயிரோடு இருக்கட்டும் என்று, இருக்கிற காணியை விற்று, 'உயிரோடு இருக்கட்டும்' என்ற ஒரே நோக்கத்துக்காக வெளிக்கிட்டிருப்பார்கள். பலர், சரியான விசா இல்லாமல், கள்ளத்தனமாக வேறு ஒரு தேசத்துக்குச் சென்று, கஷ்டப்பட்டு, புகலிடம் பெற்று, வாழ்க்கையை நடத்த எத்தனை சிரமம்... எத்தனை இலங்கைத் தமிழர்களுக்கு, அவர்களது உறவினர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர், சொந்த நாட்டில் ஒருவரும் இல்லாமல்... பாவம்தான்.

    ReplyDelete
    Replies
    1. //இந்த மாதிரித் துன்பங்கள் நம் எதிரிக்குக்கூட வரக்கூடாது//
      உண்மைதான் நெல்லைத்தமிழன்.. நான் சொன்ன விசயம் எல்லாம் குட்டிக் குட்டி தான் என்றே சொல்லோணும்.. எத்தனை குடும்பங்களில் எத்தனை உயிர் இழப்புக்கள்.. அதை எல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும்.. பணத்தால் வாங்கும் எதையும் நாம் எங்கு போயாவது வாங்கிடலாம் ஆனா உயிர் இழப்பை என்ன எனச் சொல்வது...

      உண்மைதான் இப்போ எங்களைப் பொறுத்தவரை... .. ஊரில் குறிப்பிட்டுச் சிலரே நெருங்கிய சொந்தம் என இருக்கிறார்கள்..

      அந்நேரத்து நிலைமை.. எதுவும் வேண்டாம் உயிர் தப்பினால் போதும் என்பதுதான்..

      Delete
  27. முடிவு மனதை கனக்க வைத்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட்.. உங்களுக்குத் நாட்டுக் கதைகள் எல்லாம் தெரிஞ்சிருக்கும்தானே... மிக்க நன்றி.

      Delete
  28. இங்கே ஒரு பெரிய இடத்தில வீடு கட்ட ஐந்து மிக உயரமா வளர்ந்த மரங்களை வெட்டி சாச்சாங்க :(
    அந்த மரங்களில் பல பறவைகள் கோடையில் கூடு கட்டி வாழ்ந்திருந்தது .இவங்க வெட்டும்போது நவம்பர் பறவைகள் மைக்ரேட் செய்து வேறிடம் போன நேரம் ..காலி கூண்டு மட்டும் இருந்தன வீழ்ந்த மரங்களில் .
    அப்போ தோணிச்சு மைக்ரேட் செஞ்ச பறவைங்க திரும்பி வந்து தங்கள் வீட்டை தேடுமேன்னு கவலையா போச்சு :(
    எல்லா மனுஷங்களுமே இப்படி கெட்டவங்களா மாறிட்து வராங்க :(
    உங்க பதிவை வாசிச்சப்போ மற்றும் பல இடங்களில் வாசித்த கேட்ட சம்பவங்கள் இந்த அகதிகளாக்கப்பட்டோர் நிலை எவ்ளோ கொடிதுன்னு உணர வைக்குது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு, நமக்கு எவ்வளவோ துன்பம் நேர்ந்தாலும், பலதைப் பார்த்தாலும் .. கேட்டாலும்.. நாம் திருந்துறோமா? இல்லையே? ஏனைய உயிர்களைத் துன்புறுத்திக்கொண்டுதானே இருக்கிறோம்...:(.. இப்படி எண்ணும்ப்போதுதான் மனிதர்கள் அதிகம் சுயநலவாதிகளோ என எண்ணத் தோணுது.

      Delete
  29. பின்னூட்டம் பெரிதாவை தவிர்தல் அனைவருக்கும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ புலவர் ஐயா வாங்கோ...

      நீங்கள் இப்போ கொஞ்ச நாட்களாக பின்னூட்டம் பற்றிக் கவலைப்படுகிறீங்கள், காரணம் புரியவில்லையே... எதுக்காகப் பின்னூட்டத்தில் அதிகம் பேச வேண்டாம் என்கிறீங்கள்.

      எனக்குத் தெரிந்தவரையில் இதுக்கு விளக்கம் சொல்கிறேன்...

      நாம் புளொக் எழுதுவது.. பெயருக்காகவோ.. புகழுக்காகவோ.. இல்ல பணத்துக்க்காகவோ இல்லை.. வெறும் சந்தோசத்துக்காகவும்.. பொழுதுபோக்குக்காகவும் .. நம் உணர்வுகளை எல்லோரோடும் பகிரும்போது கிடைக்கும் திருப்திக்காகவுமே...

      அப்போ சும்மா சும்மா போஸ்ட்டைப் போட்டு விட்டு ஓடிக்கொண்டிருப்பதிலும் பார்க்க, இப்படி அதுபற்றியோ இல்லை அதை ஒட்டி பல ஊர்க் கதைகள் பலவிசயங்களோ பேசுவதில் என்ன தப்பிருக்கு... நமக்கு இது பிடிச்சிருக்கு.. அதனால்தானே பலதையும் பின்னூட்டத்தில் பேசுகிறோம்.

      நீங்கள் ஒவ்வொரு போஸ்ட்டையும் பார்த்தீங்களெண்டால் தெரியும், போஸ்ட்டில் இருக்கும் விசயத்தை விட, கொமெண்ட்டில் பேசப்பட்டிருக்கும் விசயங்களே அதிகம்.. கிட்டத்தட்ட டபிள்.. ட்றிபிள் போஸ்ட் போல ஆகிவிடுகிறது ஒவ்வொரு போஸ்ட்டும்.. இது மகிழ்ச்சிதானே? இதில் என்ன உங்களுக்குப் பிடிக்கவில்லை?.. கொமெண்ட் பொக்ஸ் கண்டுபிடிச்சுக் கொமெண்ட் போடுவது கஸ்டமாக இருக்கோ?.. அதுக்கு ஏதும் வழி இருக்கோ தெரியவில்லையே.... நேரே கேசரை கீழே இழுத்தால் பொக்ஸ் வந்துவிடும்.. மற்றும்படி இப்படிக் கதைப்பது மகிழ்ச்சிதானே ஐயா... நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை அப்பப்ப எம்மோடு பகிரலாமே பின்னூட்டத்தில்.

      மிக்க நன்றி.

      Delete
  30. அதிரா அவர்களுக்கு ஏற்ற மாதிரி 'ஊசி இணைப்பை'த் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள். (ரொம்ப சந்தோஷப் படாம மீதியையும் வாசிங்க).

    சொன்னது கண்ணன். ஆனா படம், ராமர் (வில்லோட). அதிராவுக்கேற்ற 'இராமாய பாரதம்' அல்லது 'மஹா ராமாயணம்'

    ReplyDelete
    Replies
    1. /// (ரொம்ப சந்தோஷப் படாம மீதியையும் வாசிங்க).///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      //சொன்னது கண்ணன். ஆனா படம், ராமர் (வில்லோட). அதிராவுக்கேற்ற 'இராமாய பாரதம்' அல்லது 'மஹா ராமாயணம்'///

      ஹா ஹா ஹா எப்பூடி இப்பூடி எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க?:)...

      அது வந்து இப்போ, ஆராவது கீழே விழுத்துவதை எல்லாம் பொறுக்கி, நான் பேசிக்கொண்டு திரிகிறேன் எல்லோ:).. அப்பூடிக்கூட இருக்கலாமே:)).. ஹா ஹா ஹா.. கடவுளே இது மட்டும் அஞ்சுவின் கண்ணில பட்டிடாமல் என்னைக் காப்பாத்துங்கோ வைரவா:)..

      Delete
  31. "என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா" - பாடல் உங்க ஜெனெரேஷனைச் (அதிரா) சேர்ந்தது என்றாலும், என்னால் ரசிக்க முடிந்தது. என் அம்மா காலத்தைய பாட்டு.

    "எனக்கு மயக்கமே வந்திடும் கர்:)). அதனால நான் இடைக்கிடை மாமி வீட்டுக்கு ஓடிவிடுவேன் பூசை பார்க்க" - அப்படீன்னா, 'வீட்டுப் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் வெளிக்கிட்டபின்பு தரிசனம் செய்துட்டுத்தான் விரதத்தை முடிக்கணும்... ஆனால் எனக்கு விரதத்தைவிட, பிரசாதம் சாப்பிடுவதுதான் முக்கியம்கறதுனால, எந்தப் பிள்ளையார் சீக்கிரம் வெளிவீதிக்கு வருகிறாரோ, அவரைப் போய் தரிசனம் செய்துவிட்டு உடனே சாப்பிட்டுடுவேன்'னு சொல்றீங்களா? அருமையான விரதம்.

    ReplyDelete
    Replies
    1. ///பாடல் உங்க ஜெனெரேஷனைச் (அதிரா) சேர்ந்தது என்றாலும், என்னால் ரசிக்க முடிந்தது.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமோ.. இப்போ வயதானவர்கள்.. புதுப்பாடல் கேட்கின்றனர்:).. இப்போதைய அதாவது சுவீட் 16 தலைமுறை:).. பழைய பாடல்கள் கேட்கின்றனர்.

      அக்காவின் மகன், கடையில் வாங்கி சிடி எடுத்து வந்தார்.. என்ன எனக் கேட்டேன் தனக்குப் பிடிச்ச பழைய பாடல்கள் என்றார்.. இத்தனைக்கும் அவர் கனடாவிலேயே பிறந்து வளர்கிறார்.

      எங்கள் சித்தப்பாவுக்கு 65 வயதாகிறது... அவருடைய காரிலே போகும் பாட்டு... ஏய் கந்தசாமி.. உன் இம்சையால நான் நொந்தசாமி:).. ஹா ஹா ஹா.. ஆன்ரி பேசிக்கொண்டிருப்பா.. நல்ல பாட்டாகப் போடுங்கோவன் என ஹா ஹா ஹா:).. பாட்டைக் கேட்டுக் கேட்டுத் தலையை ஆட்டி ஆட்டிக் காரோடுவார்ர்..:).

      Delete
    2. ///அப்படீன்னா, 'வீட்டுப் பக்கத்துல இருக்கிற பிள்ளையார் வெளிக்கிட்டபின்பு தரிசனம் செய்துட்டுத்தான் விரதத்தை முடிக்கணும்...//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) நீங்க வேற:) பிள்ளையாரை நினைச்சு பகல் முழுக்க சாப்பிடாமல் இருப்பது அவருக்கென்ன தெரியாதோ?:)..

      //எந்தப் பிள்ளையார் சீக்கிரம் வெளிவீதிக்கு வருகிறாரோ, அவரைப் போய் தரிசனம் செய்துவிட்டு உடனே சாப்பிட்டுடுவேன்'னு சொல்றீங்களா? அருமையான விரதம்.///

      ஹா ஹா ஹா அது தப்போ?:).. எங்கட பிள்ளையார் கோயில் ஐயருக்கு நேர காலமே இல்லை:).. அவர் தன் வேலை எல்லாம் முடிச்சு ஆடிப்பாடி வந்து சேர லேட்டாகிடும் ஹா ஹா ஹா ... என்ன பண்ணுவது கொஞ்சம் என்னையும் கவனிக்கத்தானே வேணும்:) மயங்கி விழுந்திட்டால் எப்பூடிப் படிக்க முடியும்???)..

      விரதம் எனப்படுவது யாதெனில்.. உணவை விடுத்தோணும் சுருக்கியேனும், நம்மால் முடிந்தவரை மனதைக் கட்டுப்படுத்துவது என 7ம் வகுப்பில படிச்சதிலிருந்து.. நான் பயப்பிடுவதில்லை.. ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.. மீள் மீள் வருகைகளுக்கும்.

      Delete
    3. அது விடுத்தேனும்... என வரோணும்:)..

      Delete
  32. தங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டு விட்டது நன்றி !

    காலதாமதம் கவிப்புயலே கண்டிப்பாக மீண்டும் வருவேன் நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சீராளன் வாங்கோ.. இடையில் காணவில்லையே... கிரிஸ்மஸ் வருவதால் எல்லா வேர்க் பிளேசிலும் பிஸியாக இருக்கும் என நினைக்கிறேன்.

      //கண்டிப்பாக மீண்டும் வருவேன்//
      சொன்ன வாக்கைக் காப்பாத்திடுவீங்கதானே மேஜர்?:).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  33. நயப்பிள்ளை க்குள் பூனைக்குட்டி ,,,,...உறங்கியது...மிக வியப்பா இருக்கு அதிரா...

    ரொம்ப அழகா கவிதையா இருந்துச்சு...



    மனம் கனக்க வைத்துவிட்டது....முடிவில் வாசிக்கும் போது...

    ReplyDelete
    Replies
    1. அச்சோ அதிரா..அது நயப்பிள்ளை இல்ல ..நாய்ப்பிள்ளை...

      அந்த சொல்லாடல் அழகாக இருந்துச்சு...ஆன பிழையாய் எழுதிட்டேன்...

      Delete
    2. வாங்கோ அனு வாங்கோ... உண்மைதான் ஃபோட்டோ ஏதும் எடுத்திருக்கவில்லை, இவ சின்ன இனம், நாயார் பெருஞ்சாதி இனம் என்பதால், அவரின் உள் துடையில் சுருண்டு படுப்பா இவ... பார்க்க ரொம்ப அழகா இருக்கும்..

      எழுத்துப் பிழை புரிஞ்சது...

      மிக்க நன்றி அனு.

      Delete
  34. தமிழ் மணம் மகுடம்
    வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ... இப்படி மகுடத்தை இணைச்சுக் காட்டித்தான், எனக்கும் மகுடம் கிடைச்சதே என பெருமை பேச முடியுது, ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன்:) ஹா ஹா ஹா:) மிக்க நன்றி..

      Delete
  35. சந்தோஷமாய்ப் படிக்க ஆரம்பித்து சோகத்தில் முடிந்து விட்டது. ஊசிக் குறிப்பு அருமை! ரொம்பவே பிசியோ? எங்கே உங்களை என்னோட வலைப்பக்கம் காணவில்லை? நானும் இங்கே தாமதமாத் தான் வர முடிஞ்சது! உங்கள் இழப்பின் வலி நன்கு புரிகிறது. பழகிய இடத்தை மீண்டும் காணும்போது ஏற்படும் மன பாரம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ...
      அப்படிப் பெரிய பிசி எல்லாம் இல்லயே கீதாக்கா... உங்கள் பக்கம் வந்தேன் தானே.. எதையோ மிஸ் பண்ணிவிட்டேனோ...
      அது நான் உங்கள் பலோவராக மறந்து விடுகிறேன்.. எங்கள் புளொக்கில் பார்த்தே உங்களிடம் வருவேன், ஆனா பெரும்பாலும் மொபைலூடாகவே கொமெண்ட்ஸ் போடுவதால் , கண்ணில் தெரியாமல் போய் விடுகிறது போலும்..
      மிக்க நன்றி.

      Delete
  36. பின்னர் பூனையைக் காணவில்லை என்றும், நாய் இறந்துவிட்டதென்றும் அறிந்தோம். சில வருடங்களின் பின்னர் நான் திரும்பிப் போனபோது, என்னால் அந்த விட்டில் நிற்கவே மனமில்லாமல் இருந்தது. ஓடி ஓடி நாய் படுத்த இடம் பூனை உலாவிய இடமெல்லாம் பார்த்தேன். அந்த சோகத்தை இப்போ நினைத்தாலும் கண்ணீர் வரும்//

    கண்ணீர் வந்து விட்டது அதிரா எனக்கும். இழப்புகள் இன்னொரு வடிவில் வந்து சேரும் என்று ஆறுதல் படித்துக் கொண்டாலும் சொந்த நாட்டை , வீட்டை இழந்து சிறு பெட்டியுடன் கிளம்புவது சோகம் தான்.
    நாங்கள் இலங்கை போன போது ஒரு கடற்கரைக்கு அழைத்து சென்றார்கள் அதை சுற்றி பெரிய பெரிய வீடுகள் ஆள் இல்லாமல் கிடந்தது.
    யாழ்பாணம் போக தடை விதிக்கப்பட்டு இருந்தது அதனால் போகவில்லை.

    பூனைகுட்டியின் சோகம் மனதை கனக்க வைத்து விட்டது.

    ReplyDelete
  37. பணத்தால் வாங்கும் எதையும் நாம் எங்கு போயாவது வாங்கிடலாம் ஆனா உயிர் இழப்பை என்ன எனச் சொல்வது...

    உண்மைதான் இப்போ எங்களைப் பொறுத்தவரை... .. ஊரில் குறிப்பிட்டுச் சிலரே நெருங்கிய சொந்தம் என இருக்கிறார்கள்..

    அந்நேரத்து நிலைமை.. எதுவும் வேண்டாம் உயிர் தப்பினால் போதும் என்பதுதான்.//

    நீங்கள் சொல்வது உண்மை அதிரா.

    ReplyDelete
  38. வீட்டில் வளர்க்கப்படும் நாயும், பூனையும் நண்பர்களாக இருப்பார்கள்.
    வெளி நாய்கள் கொஞ்சம் துரத்தும் பூனையை.
    அதுகளுக்கு பாசம், நேசம் காட்டத்தெரியும்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.