நல்வரவு_()_


Sunday 16 September 2018

பூணிச் சுண்ல்:)

நீண்ட நாட்கள் ஆயிட்டமையால, யாருமே நம்மை மதிக்க மாட்டினம்:).. அதனால புது ஸ்டைலோடு களம் இறங்குவதுதான் பெட்டர்:)

ன்ன இது நீண்ட காலமாச்சே.. அதிரா புளொக்கையே மறந்திட்டாபோல என எல்லோரும் ஜாலியா இருந்திருப்பீங்க:).. காலைச் சுத்தின பாம்பு கடிக்காமல் விடாதாமே:) அதனால திரும்ப வந்திட்டேன்ன்:).. பூஸோ கொக்கோ:).

சில பொருட்கள் கடையில் கிடைக்காது, நாமாகப் பயிரிட்டால் மட்டுமே கைக்குக் கிடைக்கும். இந்த வகையில், அக்கா வீட்டில்.. அண்ணன் வீட்டில் எல்லாம் பூசணிக் கொடி போட்டு, இலை பிடுங்கிச் சுண்டியதாகவும், ருஷியோ ருஷி எனவும் புலம்பிப் புலம்பி என்னை வெறுப்பேத்தி விட்டார்கள்:).. அதனால இம்முறை நானே நட்டு இலை பிடுங்கிச் சுண்டுவதென முடிவெடுத்து களம் இறங்கினேன்ன்.. வெற்றீஈஈ வெற்றீஈஈஈ:)..

எங்கள் வீட்டுப் பூசணிக் கொடி..


=================ஒரு அவசர இடைவேளை:)===============
இன்று ஒரு டகவல்:)

===============_()_==============

அதில் இலைகளைப் பிடுங்கி வந்து..

சுண்டல்/வறை செய்தேன்.. உண்மையில் நம்ப மாட்டீங்க சுவையோ சுவை.. கடுமையாக வதங்கி அவிய விட்டிடக்கூடாது, ஆனா அதன் பச்சை போகும் வரை வதக்கோணும். அசைவம் சேர்ப்போர் எனில், வெங்காயம் மிளகாய் வதங்கிய பின்னர்.. அதனுள் ஒரு முட்டையை உடைத்து ஊத்தி, பின் இவ்விலைகளைக் கொட்டிச் சுண்டலாம்.

இதில் நான் முட்டை சேர்க்கவில்லை.. இது சைவச் சுண்டல்.

சுண்டல் செய்முறை ஏற்கனவே போட்டு விட்டமையால், இம்முறை சொல்லவில்லை, தேவைப்படுவோர் இங்கு சென்று பாருங்கோ..சுண்டல் செய்முறை

ஊரில் ஒரு பாடல் மொழி:) சொல்லுவினம்..
திருக்கை வறை வறுத்துத் திண்ட உருசியிலே..
காணி வித்தார்.. பூமி வித்தார்ர்..
அத்தனையும் விற்றுத் திண்டார் என...
ஆனா நான் சொல்லுவேன் அதை எல்லாம் தாண்டி இது சுவையோ சுவை...

ஜாலிக் கோனர்:)
உடுப்போடு சேர்த்து, மம்மி என்னையும் காயப்போட்டிருக்கிறா:)), நான் குழப்படியாம்?:) நீங்க இதை நம்புறீங்களோ?:).

மீயும் ஒரு அப்பாஆஆஆஆஆஆவி:).. எங்கட மம்மியைப் போலவேஏஏதான்:)

ஊசி இணைப்பு

ஊசிக்குறிப்பு
 
======================_()_=====================

141 comments :

 1. இடுகை ரொம்பச் சின்னதாகவும் இருக்கு. நிறைய படங்களோ இல்லை பழமொழிகளோ சேர்க்கலையே....

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ நெல்லைத்தமிழந்தான் 1ஸ்ட்டூஊஊஊஉ.. வாங்கோ வாங்கோ.. ஒரு டிஷ் பூசணிச் சுண்டல் உங்களுக்கே:).

   என்னாது இடுகை சின்னனோ அவ்வ்வ்வ்வ்வ்... நான் எப்பவும் பயந்து பயந்தே போஸ்ட் போடுவேன்ன்.. படிப்போருக்கு போறிங் ஆகிடுமோ என... கதம்பமாக இன்னும் சிலதையும் இணைக்க நினைச்சுப் பயத்தில விட்டு விட்டேன்.. அடுத்து பென்னாம் பெரிசாப் போடுவேன் அஜீஸ் பண்ணிக்கோங்க:)

   Delete
 2. ஹாஹா, ஊசி இணைப்பு, ஊசிக் குறிப்பு ரெண்டும் போட்டி போட்டு ஊசிக்குறிப்பு அதிலே ஜெயிச்சுடுச்சு!

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ இம்முறை கீசாக்காவும் ஸ்பீட்ட்ட்ட் லாண்டிங்:).. அங்க சொன்னது.. இங்க பலிக்குது:)) ஹா ஹா ஹா வாங்கோ வாங்கோ.. ஊசிக்குறிப்பு ஜெயிச்சிட்டுதோ.. நன்றி நன்றி.

   Delete
 3. போதை ஏறிட்டா என்று சொல்வதைவிட, திருமணமாகி 2 வருஷமாயிட்டாலே ஆண்களுக்கு பொய் சொல்ல (மனைவியை வருணிக்க) வராது. அப்படியும் வர்ணிச்சாங்கனா, ஏதோ காரியம் ஆகணும்னு அர்த்தம். ஹாஹாஹா.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அனுபவம் பேசுது:).. ஒரு பானை சோற்றுக்கு.. எனும் பயமொயி:) இங்கு பொருந்தும் என நினைச்சுக் கொள்கிறேன்ன்:))..

   அதுக்காகத்தான் பெண்களும் அப்பப்ப தம் ஸ்டைலை மாத்திக் கொண்டே இருக்கோணும்:)) என்பது என் கருத்து:).. வயசு மாற மாற ஹெயார் ஸ்டைல்.. உடுப்பு ஸ்டைலை எல்லாம் அப்டேட் பண்ணிக் கொள்ளோணும்:).. அப்போதானே விதம் விதமா வர்ணிக்க வசதி ஆத்துக்காரருக்கு:)) ஹா ஹா ஹா... திருமணத்தின்போது எப்பூடி இருந்தேனோ.. அப்படியேதான் இப்பவும் இருப்பேன் எனப் பல பெண்கள் அடம் புய்க்கிறார்கள்:)).

   Delete
 4. அது சரி, இந்தக் கீரைச் சுண்டலிலே முட்டை சேர்த்திருக்கீங்களோ? ம்ஹூம் எனக்கு வேண்டாம்! நான் முருங்கைக்கீரையிலே, வெந்தயக்கீரையிலே, மற்றக்கீரை வகைகளிலே செய்து சாப்பிட்டுக்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசாக்கா:).. நான் சேர்க்கவில்லை, விரும்புவோர் சேர்க்கலாம் எனத்தான் சொல்லியிருக்கிறேன்.. அதாவது ரிப்:) குடுத்திருக்கிறேனாக்கும்:)..

   அதேதான்.. தண்ணித்தன்மை இல்லாத அனைத்து இலைகளிலும் செய்யலாம்.. பீற்றூட் முள்ளங்கி, கரட்.. அனைத்து இலைகளும் என்னிடம் தப்ப முடியாது.. சுண்டி விட்டிடுவேன்:)) ஹா ஹா ஹா.

   Delete
 5. என்னாது! ஆரியபவான் பக்கமா? சரியாப் போச்சு!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதுதான் பலவருசமா நடத்திக்கொண்டிருக்கிறேனே கீசாக்கா...

   Delete
  2. ஐயோ... அது ஆறிய பவன் அல்லவா? (ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்பு ஒரு முறை எழுதுவதால்)

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ.தமிழன்:).. ஆறிய பவான் எனினும் சாப்பாடு சுடச் சுடத்தான் கிடைக்குமாக்கும்:).. எங்கட ஆயாவின் கை வண்ணம் அப்பூடி:)

   Delete
 6. உடுப்பு எங்க இருக்கு? அது ஃபேஷன் கடைகள்ல இருக்கும், உடுப்புகளை எடுக்கக்கொடுக்கும் பையல்லவா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அது toys போட்டு வைப்பதற்காக இங்கு விற்கும் கூடை நெ.தமிழன்:).. பிள்ளைகள் சின்னவர்களாக இருந்தபோது ஆளுக்கு ஒரு கலராக வாங்கிக் குடுத்தோம்.. இப்போ அது டெய்சிப்பிள்ளைக்கு நன்கு பிடிச்சுப் போச்ச்ச்:))

   Delete
 7. பூஸாரை ஏன் அடைச்சுப் போட்டுட்டீங்க? எஸ்பிசிஏவுக்குத் தொலைபேசிச் சொல்லப் போறேன்.:))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அவவுக்கு அது மிகவும் பிடிக்கும் கீசாக்கா. அந்தக் கூடையைக் காட்டினாலே ஓடி வந்து ஏறி இருப்பா.. நாங்கள் ஊஞ்சல் பொல ஆட்டி ஆட்டி வீடெல்லாம் தூக்கித்திரிவோம்ம்.. அது அவவுக்கு நல்ல பிடித்தமான விளையாட்டு.. கிச்சின் டோர் ஹண்டிலில் கொழுவிப்போட்டு நான் சமைப்பேன்ன்.. அவ புதுனம் பார்த்துக் கொண்டு படுத்திருப்பா:).. அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீசாக்கா.

   Delete
 8. பூசனி கொடியைக் காண்பித்து, அதில் பூசனிப் பிஞ்சு வந்திருக்குன்னு படம் போட்டிருக்கீங்களோன்னு பார்த்தா, கொடியை வளர விடாமல், அதிலிருந்து இலைகளைப் பறித்து சுண்டல் செய்திருக்கிறீர்களே.... அந்த இலையெல்லாம் சாப்பிட நல்லா இருக்குமா?

  ReplyDelete
  Replies
  1. பிஞ்சுகள் வந்திருக்கு நெல்லைத்தமிழன்.. இன்னும் இலைகளும் வந்து பிடுங்கி வந்து சுண்டோணும்.. குளிர் மழையாக இருப்பதால் கார்டினில் இறங்கிப் படமெடுக்க மனமில்லாமல் இருந்த படத்தைப் போட்டு விட்டேன்ன்..

   ஆனா பிஞ்சு வந்து அப்படியே மஞ்சள் நிறமாகுது.. காய்க்காது இங்கு சாஅன்ஸ் ஏ இல்லை.. நான் நட்டதே இலைக்காகத்தானே:)..

   சூப்பரா இருக்கும் சுண்டல்.. நான் இம்முறை போடவில்லை.. முன்பு கரட்.. பீற்றூட் எல்லாம் போட்டு இலையில் சுண்டல் செய்திருக்கிறேன்.

   Delete
  2. நல்லாருக்கும் நெல்லை இப்படித்தான் செய்வதுட்னு..சைவச் சுண்டல்!!!! நான் பூஷணி கண்ணழகிக்காகவே வளர்ப்பேன். அவள் இந்த இலைகளை அடிக்கடிச்சாப்பிடுவாள்.

   நான் இந்த இலைகளை வீட்டில் செய்தப்ப எல்லோருக்கும் மிகவும் பிடித்துப் போனது.

   பூஷணி பூவில் மேல் பூ ஃபிஃமேல் பூ என்று உண்டு. மேல் பூ என்றால் காய்க்காது.

   அதிரா இந்த இலையில் காரட் பீட்ரூட் வெங்காயம் வதக்கி தேங்காயும் போட்டு உப்பு இட்டு கலக்கி இலையில் ஸ்ப்ரெட் செய்து சுருட்டி விட்டு குச்சியால் பின் செய்துவிட்டு வதக்க வேண்டும். அப்புறம் கட் செய்து சப்பிட நன்றாக இருக்கும்.

   இங்கு இப்ப வளரவில்லை கண்ணழகி வளர விட மாட்டேன் என்கிறாள் அதனால் செய்ய முடியய்லை...

   நல்ல ரெசிப்பி அதிரா

   கீதா

   Delete
 9. டயபடீஸ், ஆஸ்த்மா, ஞாபக மறதி இதெல்லாம் வருவதற்கு அந்த அந்த காய்கறி பழம்லாம் சாப்பிடணுமா இல்லை போவதற்கா?

  தண்ணீர் குடிக்கும் அளவு சரியா? அப்புறம் கிட்னிக்கு நிறைய வேலை வந்து, அது வேலை நிறுத்தம் செய்துடப்போகுது. (அந்தப் பாவம் உங்களுக்கு வந்துடும் என்பதற்காகச் சொன்னேன்)

  ReplyDelete
  Replies
  1. ///
   டயபடீஸ், ஆஸ்த்மா, ஞாபக மறதி இதெல்லாம் வருவதற்கு அந்த அந்த காய்கறி பழம்லாம் சாப்பிடணுமா //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நா ஒண்ணுமே சொல்ல மாட்டேன் போங்கோ.. ஹா ஹா ஹா:))... நில்லுங்கோ என் சிஷ்யை வந்து விளக்கம் அளிக்கக்கூடும்:)).. விசயம் புரியாமல்:)) ஹா ஹா ஹா வெயிட் அண்ட் சீ:)).

   தண்ணீர் குடிக்கும் அளவு சரியாத்தான் இருக்கு.. இது ஓவர் அளவு இல்லை... நம்பிக் குடிங்கோ.. ஆனா ஒன்று நான் அவதானிச்ச அள்வில் தண்ணி குடிப்போரை விட, தண்ணி குடிக்காமல் இருப்போர் தான் ஹெல்த்தியாகவும்.. உடம்பில்லாமலும் இருக்கிறார்கள் ஹா ஹா ஹா:)).. இது வட்ஸப்பில் வந்ததை போட்டேன் இங்கு:).

   மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

   Delete
  2. பாத்திங்களா என் சந்தேகம்தான் எங்க தல :) மாவீரன் நெல்லைத்தமிழனுக்கும் வந்திருக்கு ஹாஹாஆ

   Delete
  3. இப்போல்லாம் மருத்துவக்குறிப்பு பக்கம் போறதில்ல உங்க சிஷ்யை .அதுவும் ஆரோரூட் கஞ்சி சாப்பிட்டு அனஸ்தீஷியாவில் விழுந்த மாதிரில்லாயா இருந்தேன் ஸ்லீப்பிங் பியூட்டி போலெ தூங்கியே இருந்தனே .அலர்ஜி நாற்திசைலருந்தும் தாக்குறதால் எதைப்பார்த்தாலும் பயமாவே இருக்கு .

   Delete
  4. //எங்க தல :) மாவீரன் நெல்லைத்தமிழனுக்கும் வந்திருக்கு ஹாஹாஆ//

   ஹா ஹா ஹா இதுக்காகவே.. இந்தப் பட்டங்களுக்காகவே அவர் இனி கமல் அங்கிள் ரஜனி அங்கிளை எதிர்த்து நிற்கப்போகிறார்ர்:))... சிவனே என தன் பாட்டில இருந்தவரை உசுப்பி விட்டிட்டீங்களே அஞ்சு:))

   Delete
  5. ///அதுவும் ஆரோரூட் கஞ்சி சாப்பிட்டு அனஸ்தீஷியாவில் விழுந்த மாதிரில்லாயா இருந்தேன்//

   நீங்க குடிச்சதும் இல்லாமல் என்னையும் குடி குடி எண்டு.. கூடவே சொர்க்கத்துக்கு கூட்டிப்போகவெல்லோ ஆசைப்பட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்லவேளை மீ தப்பிட்டேன் ஜாமீ.. இல்லை எனில் இந்த சுவீட் 16 லயே பொசுக்கெனப் போயிருப்பேனே..:)

   ஊரில் எங்கள் வீட்டில் அரோரூட் கன்றுகள் நிண்டன.. மணிவாழைபோல இருந்ததா நினைவு.. அதை மருத்துவத்துக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் எனக் கேள்விப்பட்டேன்ன் அதனாலேயே நீங்க சொன்னவுடன் வாங்கிக் குடிக்கவில்லை:)).

   //.அலர்ஜி நாற்திசைலருந்தும் தாக்குறதால் எதைப்பார்த்தாலும் பயமாவே இருக்கு//

   ஹா ஹா ஹா..

   Delete
  6. அது ஒத்துகத்துனா எதையாச்சும் சாப்ட்டா அலர்ஜி வரும் ஆனா இந்த அர்ரோரூட்டுக்கு என்னமா தூக்கம் வந்துச்சி .சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம மயங்கி 4-5 மணிநேரம் தூங்குவேன் :) எனக்கே புரிய ஒன் வீக் ஆச்சு அப்புறம்தான் இது வேலைகாட்டுதுன்னே அறிஞ்சேன் :) நல்லாருக்கேன்னு 3 வேளை சாப்பிட்டது ஒரு குத்தமா :)

   //நல்லவேளை மீ தப்பிட்டேன் ஜாமீ.. இல்லை எனில் இந்த சுவீட் 16 லயே பொசுக்கெனப் போயிருப்பேனே..:)//

   நெக்ஸ்ட் டைம் எது சாப்பிட்டாலும் முதல் வாய் உங்களுக்கு தான் அப்புறம் தான் நான் சாப்பிடுவேன்

   Delete
  7. ஏஞ்சலின் 4-5 மணி நேரம் தூங்கின மாதிரி இல்லையே 45-50 நாள் தூங்கின மாதிரின்னா இருக்கு. தேவதை கிச்சன்ல தூசி படிஞ்சிருக்கு

   Delete
  8. இப்போதான் என்னை மாவீரன்னு சொன்னதைப் படித்தேன். உங்க ரெண்டு பேரையும் நம்பி, நீங்க எழுதற ரெசிப்பில்லாம் செஞ்சு பார்த்து சாப்பிட்டு இன்னும் தெம்பா இருக்கறதுனால பட்டமா? இங்கெல்லாம் என்னை அப்பாவின்னுதான் சொல்றாங்க

   Delete
  9. ம்ம் செய்யணும் :) அநேகமா விரைவில் பெயிண்ட் அடிப்பேன் :)

   Delete
  10. @அஞ்சு
   //நெக்ஸ்ட் டைம் எது சாப்பிட்டாலும் முதல் வாய் உங்களுக்கு தான் அப்புறம் தான் நான் சாப்பிடுவேன் ///

   தாறதுதான் தாறீங்க.. மட்டின் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணி.. மட்டின் ரோல்ஸ்:) அவிச்ச முட்டை இப்படி உள்ளே ஒளிச்சு வச்சுத் தாங்கோ:))

   Delete
  11. //
   நெல்லைத் தமிழன்Monday, September 17, 2018 5:34:00 am
   ஏஞ்சலின் 4-5 மணி நேரம் தூங்கின மாதிரி இல்லையே 45-50 நாள் தூங்கின மாதிரின்னா இருக்கு. தேவதை கிச்சன்ல தூசி படிஞ்சிருக்கு//

   தூசி எங்க இருக்கு நெ.தமிழன்?:) பாஆஆஆஆஆஆம்ம்பு புத்து ஏற்பட்டுப் போச்சு:)) எலித்தொல்லை அதிகமாச்சு:).. இனி ஆரும் தேவதை கிச்சினில் சாப்பிடாதீங்கோஓஓஓஓஓஓஒ:)).. அப்பாடா நெ.தமிழனின் உதவியினால ஒருமாதிரி கிச்சினை எப்படியும் மூடிடுவா:)) ஹா ஹா ஹா:)

   Delete
  12. wஎ.தமிழன்//
   நீங்க எழுதற ரெசிப்பில்லாம் செஞ்சு பார்த்து சாப்பிட்டு இன்னும் தெம்பா இருக்கறதுனால பட்டமா?//

   ம்ஹூம்ம்.. ஏதோ எங்கட ரெசிப்பியை ஒழுங்காச் செய்து சாப்பிட்டவர் மாஆஆஆஆஆஆறியே ஒரு பில்டப்பூ:)).. ஒரு சிம்பிள்ள்ள்ள்ள்ள் குழைசாதமே இன்னும் செய்த பாடில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எங்கள் மிரட்டுதலுக்குப் பயப்பிடாமல் இன்னும் ஒரு குறிப்புக்கூட செய்யாமல் இருக்கிறீங்க பாருங்கோ:)) அதிலயே தெரியுது நீங்க மாஆஆஆஆஆஆ வீரர்தான் ஹா ஹா ஹா:)

   Delete
  13. ஏஞ்சல் இப்ப புரட்டாசி விரதம் இல்லையோ பூஸார்!! ஸோ துரத்துங்க அவங்களை ஓட்டி ஓட்டித்துறத்துங்க...அதிரா சைவம் இப்ப!!! ஹா ஹா ஹா

   கீதா

   Delete
 10. //நீண்ட நாள் ஆயிட்டமையால யாருமே நம்மை மதிக்க மாட்டினம்//

  அப்படி இல்ல. 16 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பூக்குற குறிஞ்சிப்பூ அல்லவா அதிராவின் இந்தப் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ.. ஹா ஹா ஹா குறிஞ்சி பூப்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை... அதனால் என்ன அதிராவை சிலநேரம் பார்த்தால் சுவீட் 12 மாதிரியும் இருப்பேன்ன் என்பதால் நீங்கள் சொன்னதில் தப்பில்லை:).. ஹையோ ஏன் எல்லோரும் என்னைக் கலைக்கினம்:) அப்பூடி என்ன நான் டப்பா ஜொள்ளிட்டேன்ன்:)..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி அரிவுப்பசிஜி.

   Delete
 11. நீங்களும்வித்தியசமாய் குறிப்புகள்கொடுத்து பதிவர்களின் எல்லாத்திறனையும் சோதிக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ... உங்களோசு சோதனை.... எனக் கதைக்கவே பயமாக்கிடக்கூ:) இப்போ நீங்களே அந்தச் சொல்லைச் சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா..

   நீங்களும் இந்தச் சோதனையில் அடக்கமோ?:) ஹா ஹா ஹா மிக்க நன்றி ஜி எம் பி ஐயா.

   Delete
 12. படங்களையும் பகிர்வையும் ரசித்தேன் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ மிக்க நன்றி.

   Delete
 13. புது ஸ்டைலோடு களம் இறங்குவதுதான் பெட்டர்:)//

  புது ஸ்டைல் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... ஹா ஹா ஹா டாங்ஸ்:). அடிக்கடி கெட்டப்பை மாத்தினால்தான் எல்லோரும் புகழுவினம் என மேலே நெல்லைத்தமிழனுக்கு சொன்னேன்ன்.. அதேபோல நீங்களும் சூப்பர் என்றிட்டீங்க:).

   Delete
 14. போதை ஏறினால்தானே உண்மைகள் வெளியே வரும் இது தலைகீழாக இருக்கிறதே...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நீங்க சரியா கவனிக்கவில்லை... போதை ஏறியமையாலதான் உண்மையைச் சொல்லி அடி வாங்குகிறார் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

   Delete
  2. கில்லர்ஜி... போதை வந்த போது புத்தி இல்லையே, புத்தி வந்த போது நண்பன் இல்லையே... நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்... இது கண்ணதாசன் பாடல்.

   Delete
 15. விவசாயி அதிரா பயிர் செய்து அதில் பலன் கண்டு இருப்பது மிக அருமை.

  உங்கள் பூனைகுட்டி அந்த இலையை முகர்ந்து பார்க்கிறதே அம்மா இதை சமைக்க போகிறாள் எப்படி இருக்குமோ என்று பார்க்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அக்கா. அது டெய்சிப்பிள்ளை.. இலையில பூச்சி புழு இருக்கோ என செக்கிங் நடத்துறா:)..

   Delete
  2. பூஸார் டெய்சிக்கும் பூஷணி இலை பிடிக்குமோ? பைரவர்கள் பூஷணி இலை கோவைக்காய் இலை எல்லாம் சாப்பிடுவாங்க...


   கீதா

   Delete
 16. பூசணி இலை சுண்டல் அழகாய் இருக்கு பார்க்க சுவையும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். முட்டையில்லாமல் செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் இதில் முட்டை போடவில்லை கோமதி அக்கா.. இப்போ போல்ட் எழுத்தில் போட்டு விட்டேன் மேலே:).. அதுசரி பூசணி இலைக்கு எங்கு போவீங்க? ஆரும் தோட்டக்காரர் இருப்பின் கேட்டு வாங்கலாம்.. செய்து பாருங்கோ.

   Delete
  2. இதில் முட்டை போடவில்லை என்று தெரியும். முட்டையும் போட்டு செய்யலாம் என்று சொன்னத்ற்கு சொன்னேன். முட்டையில்லாமலே செய்கிறேன் என்று. தோட்டங்களில் சில நேரம் கிடைக்கும். மார்கழி மாதம் வந்தால் பூசணி பூ கிடைக்கும் அவர்களிடம் சொன்னால் கொண்டு வந்து தருவார்கள். எப்படியும் செய்து பார்த்து விடுகிறேன்.

   Delete
  3. ஓ.. எனக்குப் புரியவில்லை, கீதாக்காவும் முட்டை போட்டிருக்கோ எனக் கேட்டமையால் என் எழுத்து சரியாகப் புரியவில்லைப்போலும் என நினைச்சிட்டேன்ன்:)).. ஓ மார்கழியில் பூசணிப்பூக் குத்துவார்கள் பார்த்திருக்கிறேன்ன்.. அந்நேரம் நிட்சயம் கிடைக்கும்.. ஆனா அது மழை காலம் என்பதனால் பூச்சி புளுக்கள் இருக்க வாய்ப்பிருக்கு பார்த்து வாங்குங்கோ.. அத்தோடு முத்திய இலைகளை தவிர்த்து குருத்தோடு வரும் பிஞ்சிலைகளாக கேட்டு வாங்குங்கோ..

   Delete
  4. அதிரா பூஷணி வின்டர் வெஜ் தானே....அம்பேரிக்காவில் தாங்க்ஸ் கிவிங்க் டே வரும் போது பூஷணி குவிந்து கிடக்கும். மலை மலையாய்....

   கீதா

   Delete
 17. ஜாலிக் கோனர்:)
  நன்றாக இருக்கிறார்.
  ஊசி இணைப்பு, ஊசிகுறிப்பு எல்லாம் சூப்பர்.

  ReplyDelete
 18. இன்று ஒரு தகவல் நன்றாக இருக்கிறது.
  அவர் அவர் உடலுக்கு எது ஒத்துக் கொள்கிறதோ அதை கடைபிடிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான், அடுத்தவர் சொல்கிறார்களே என உண்ணாமல்.. நமக்கு ஒத்துக் கொள்வதைத்தான் தெரிவு செய்யோணும்.

   Delete
 19. நவக்கிரகம் பாடல் பிடித்த பாடல்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஓ.. படம் நவக்கிரகமோ.. எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு பாட்டு. மிக்க நன்றிகள் கோமதி அக்கா அனைத்துக்கும்.

   Delete
 20. ஹலோவ்வ்வ்வ் மியாவ் :) எப்பவுமில்லாம பாட்டை டச் பண்ணேன் :) சூப்பர் பாட்டு நல்ல குரல் :) அங்கிள் சிவகுமார் அந்த காலத்தில் ஹேண்ட்ஸம்மா இருந்திருக்கறே :) அது ஆக்ட்ரஸ் லஷ்மியா ? என்னே ஒரு அழகு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. அவ லக்ஸ்மி ஆன்ரிபோலதான் இருக்கு.. ஆனா நான் எப்ப்வும் வீடியோப் பார்ப்பது குறைவு.. பாட்டை மட்டும் கேளுங்கோ சூப்பரா இருக்குதெல்லோ...

   Delete
  2. சினிமாவும் ந்ல்லா இருக்கும் அதிரா. பாலசந்தர் படம்.

   Delete
  3. உங்கள் பொது அறிவுக்கு. நடிகை லக்‌ஷ்மிக்கு ஐஸ்வர்யா என்று ஒரு மகள் உண்டு. ஐஸ்வர்யாவுக்கு ஒரு பெண் குழந்தை, இப்போ கல்யாண வயதில் என்று நினைக்கிறேன். லட்சுமி உங்களுக்கு ஆன்டியா? அப்போ நான் நினைத்தது சரிதான் ஆன்ட்ரீரீரீரீரீரீரீ

   Delete
  4. லக்ஷ்மி, சிவகுமார் ஜோடி நல்லா இருக்கும். ஆனால் லக்ஷ்மி நடிச்ச முதல் படத்திலே சிவகுமாருக்குத் தங்கையாக வருவார். இடைவேளைக்கு முன்னே செத்துப் போவார். அந்தப் படத்திலே சிவகுமாருக்கு ஜோடி விஜயகுமாரி! என்னடா இதுனு யோசனையா இருக்கும் எனக்கு. விஜயகுமாரி சிவகுமாரை விட நிறைய வயசு பெரியவங்க இல்லையோனு தோணும். ஆனால் இப்போ சன் தொலைக்காட்சித் தொடர் வாணி-ராணியில் ராதிகாவுக்கு ஜோடி பப்லுவாம். அதுக்கு இது பரவாயில்லைனு தோணிச்சு! பப்லு வாய் விட்டு அழுது பேட்டி கொடுத்திருக்கார். பாவமா இருந்தது! சிரிப்பாவும் வந்தது! :) பப்லு பேட்டியைப் பார்த்ததும் தான் அந்த சீரியலில் அவர் ராதிகாவுக்கு ஜோடினே தெரிஞ்சது. இன்னொரு ஜோடி வேணு அர்விந்தாம்! இஃகி, இஃகி, இஃகி, இஃகி! :)))))

   Delete
  5. அது சரி லக்ஷ்மி நடிச்ச முதல் படம் என்னனு சொல்லுங்க பார்ப்போம்! எனக்குத் தெரியுமே! ஹையா, ஜாலி! :)))))

   Delete
  6. //லக்ஷ்மி நடிச்ச முதல் படம் என்னனு சொல்லுங்க பார்ப்போம்! //

   பூ... சுபலமான கேவ்ளி...!

   இந்தப் படம் பற்றி நான் ஒரு கட்டுரை எழுத நீண்ட காலமாக யோசித்து வருகிறேன். இன்னும் காலம் கைகூடவில்லை! இந்தப் படத்தில் தஞ்சை சிவகங்கைப் பூங்கா தொங்குப் பாலத்தில் ஒரு பாடல் காட்சி வரும்.

   Delete
  7. மெயில் பாக்சில் படித்த வரி எங்கே இருக்குன்னு தேடி அங்க வந்து பதில் கொடுக்கற கஷ்டம் இருக்கு பாருங்க... ரொம்பக் குஷ்டமுங்க.... சே கஷ்டமுங்க...

   Delete
  8. எனக்கு இதான் வசதியா இருக்கு! சட்ட்னு கிடைச்சுடும்.:))) லக்ஷ்மி நடிச்ச படம் பேர் சொல்லவே இல்லை! சுலபமான கேள்விக்கு சு"ப"லமான கேள்வியாம்! இஃகி, இஃகி, பேர் தெரியலை. கு.வி.மீ.ம.ஒ. :)))))

   Delete
  9. அக்கா... எனக்குத் தெரியும் என்பதால்தான் அம்சமாய் க்ளூ கொடுத்தேன். சிவகங்கைப் பூங்கா பற்றி! ஜீவனே இல்லாமல் பதில் கொடுத்திருப்பேனா!

   //சுலபமான கேள்விக்கு சு"ப"லமான கேள்வியாம்! இஃகி, இஃகி, பேர் தெரியலை. கு.வி.மீ.ம.ஒ. :)))))//

   நல்லாப் பாருங்க... கேள்வின்னா இருக்கு?!!!

   Delete
  10. //கோமதி அரசுMonday, September 17, 2018 1:53:00 am
   சினிமாவும் ந்ல்லா இருக்கும் அதிரா. பாலசந்தர் படம்.//

   ஓ பார்க்கிறேன் கோமதி அக்கா.. நான் எப்பவும் ஏதும் நல்ல பாட்டு காதில விழுந்தால் அதை வச்சுத்தேடி படம் பார்ப்பேன்ன்.. அப்படியே நல்ல நகைச்சுவைக் கட்டம் கேட்டால்ல்... அதன் படம் தேடிப் பார்ப்பேன்ன்.. அப்பூடித்தான் நேற்றும் ஒரு வீடியீக் கட்டம் நல்லாயிருக்கே என அஞ்சுவுக்கு அனுப்பினேன்.. இப்போ படம் தேடித்தந்திருக்கிறா.. விக்ரம் நடிச்சது.. பார்க்கப்போறேன்ன்:)... இப்படியாகத்தான் பல படங்கள் பார்த்து வருகிறேன்.

   Delete
  11. @நெ.தமிழன்:)
   //லட்சுமி உங்களுக்கு ஆன்டியா? அப்போ நான் நினைத்தது சரிதான் ஆன்ட்ரீரீரீரீரீரீரீ//

   இதுக்குத்தான் அம்மம்மா சொல்றவ.. ஆளும் வளரணும்:) அனுபவமும் வளரணும் என:)).. ஹா ஹா ஹா அதிராவுக்கு சுவீட் 16 ல வந்த அனுபவம்:) நெ. தமிழனுக்கு இன்னும் வரல்லியே:))... அதாவது இக்காலத்தில பேர்த் சேர்ட்டிபிகேட் பார்த்தால் மட்டும்தான் வயசைக் கண்டுபிடிக்க முடியுது பலரில்:))

   இப்படி நிலைமை இருக்கும்போது... பாட்டீஈஈஈஈஈஈ என்றால் அவர்களின் மனம் ஒடிஞ்சிடாது?:)).. அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தோணுமே தவிர:) அடுத்தவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கக்கூடாது.. மேலே என் ஊசிக்குறிப்பை இப்போ படியுங்கோ:)).. ஹா ஹா ஹா நெ.தமிழன் யூப்பர் மாட்டீஈஈஈஈஈஈ:))..

   ஹையோ உண்மையில் ஒரு சம்பவம்.. இன்ரநெட்டில் நான் கால் வச்ச ஆரம்ப காலம், ஒருவரை எல்லோரும் மேடம் மேடம் என அழைத்துக் கொண்டிருந்தார்கள்.. எனக்கு பப்ளிக்கில் ஒருவரை அப்படி மேடம்/சேர் என அழைக்கும் பழக்கமில்லை நம் நாட்டில். பெரிய பதவியில் இருப்போரை அங்கு போனால் மட்டுமே அப்படி அழைப்போம்... மற்றும்படி பொது வெளியில்.. அக்கா, அண்ணா, அங்கிள், மாமா, அன்ரி... இதை விட நன்கு வயதானால்.. பாட்டி, ஆச்சி, அம்மா... ஐயா .. அப்பு... இப்படித்தான் அழைத்துப் பழக்கம்.

   அதனால எனக்கு அவவை அக்கா எனச் சொல்லவும் முடியவில்லை.. வயதில் பெரிதாக இருந்தா.. மேடம் சொல்ல முடியவில்லை.. பழக்கமில்லை.. போனால் போகுதென அன்ரி என அழைச்சிட்டேன்ன்ன்..

   அவ்ளோதான்.. என்னை விரட்டி விரட்டி காரணமே இல்லாமல் அட்டாக் பண்ணத் தொடங்கிட்டா:).. எனக்கு அப்போ புரியவில்லை.. பின்னர் என் பெயர் அங்கு அதிகம் ஓங்கத் தொடங்கிட்டுது.. அவ கொஞ்சம் ஒதுங்கிப் போயிட்டா.. பின்புதான் கண்டு பிடிச்சேன்.. அதிலிருந்து இந்த வம்பே வாணாம் என அக்கா என அனைவரையும் அழைக்கத் தொடங்கினேன்:))... அனைத்தையும் விட பெயர் சொல்லி அழைப்பதே பிரச்சனை இல்லாதது, ஆனா அது மரியாதைக் குறைவாகிடுமெல்லோ நம் கலாச்சாரத்துக்கு:))..

   இப்போ ஜொள்ளுங்கோ லக்ஸ்மி ஆன்ரி எனச் சொன்னது டப்போ?:).. ஆஆஆஆஆ நெ.தமிழன் ஏன் ஓடுறார்ர்ர்ர்?:). ஹா ஹா ஹா.

   Delete
  12. //
   Geetha SambasivamMonday, September 17, 2018 7:24:00 am
   அது சரி லக்ஷ்மி நடிச்ச முதல் படம் என்னனு சொல்லுங்க பார்ப்போம்! எனக்குத் தெரியுமே! ஹையா, ஜாலி! :)))))//

   இனிமேலும் எங்காவது கீசாக்கா வந்து.. எனக்கு சினிமா பெரிசாத் தெரியாது என சவுண்டு விட்டாவோ.. நேரே காவிரிதான்ன்ன்ன் ஜொள்ளிட்டேன்ன்ன்.. சீரியல்கள்கூட அக்கு வேறு ஆணி வேறாகப் பார்க்கிறா:)) ஆனா பேச்சு மட்டும் நான் ஒண்ணும் பார்ப்பதில்லை என்பதைப்போலவேதேன்ன்ன்ன் கர்ர்ர்:)).. ஹா ஹா ஹா இதுக்கு விடை ஸ்ரீராம் சொல்லிட்டார் போல இருக்கே:)

   Delete
  13. @ஸ்ரீராம்
   பூ... சுபலமான கேவ்ளி...!

   இந்தப் படம் பற்றி நான் ஒரு கட்டுரை எழுத நீண்ட காலமாக யோசித்து வருகிறேன்.////

   என்னாது பூவும் கேவ்ளியுமோ?:) என்னாமாதிரி டமில் டுள்ளி வெளாடுது ஹா ஹா ஹா:)).. பதிலைச் சொல்லியிருக்கலாமெல்லோ.. நமக்கெல்லாம் இதுக்கு விடை எங்கே தெரியப்போகுது.. கூகிளில் தேடித்தான் சொல்ல முடியுமாக்கும்:))

   Delete
  14. ///ஸ்ரீராம்.Monday, September 17, 2018 10:00:00 am
   மெயில் பாக்சில் படித்த வரி எங்கே இருக்குன்னு தேடி அங்க வந்து பதில் கொடுக்கற கஷ்டம் இருக்கு பாருங்க... ரொம்பக் குஷ்டமுங்க.... சே கஷ்டமுங்க...///

   ரொம்பக் குஸ்டம்தேன்ன்:)) ஹையோ நேக்கும் காரணம் இல்லாமலே டங்கு ஸ்லிப்பாகுதே:).. ஹா ஹா ஹா ரொம்பக் கஸ்டம்தேன்:)).. நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கிறீங்க:))

   Delete
  15. @கீசாக்கா
   சுலபமான கேள்விக்கு சு"ப"லமான கேள்வியாம்! இஃகி, இஃகி, பேர் தெரியலை. கு.வி.மீ.ம.ஒ. :)))))//

   படப்பெயர் “சுபம்” ஆக இருக்குமோ?:)...

   //கு.வி.மீ.ம.ஒ. :)//
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதுக்காக கெட்ட வார்த்தையில எல்லாம் திட்டக்கூடா:)) கீசாக்கா கர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

   Delete
  16. இல்லை அதிரா... தப்பில்லை. சும்மா கலாய்ச்சேன்.

   வீரா படம்னுதான் ஞாபகம். அதில் மீனா, ரோஜா இருவரும் ரஜினிக்கு ஜோடி. அதில் மீனாவும் ரோஜாவும் ஒருவரை ஒருவர் அக்கான்னு அழைச்சுக்குவாங்க (ரியல் லைஃபில் மீனா வயதில் சின்னவராக இருந்தபோதும்)

   Delete
  17. நெ.தமிழன்////
   இல்லை அதிரா... தப்பில்லை. சும்மா கலாய்ச்சேன்//
   ஹா ஹா ஹா அது எனக்குத் தெரியுமே:)..
   ஊரில என்னைவிட 9 வயது மூத்த அண்ணன் ஒருவர் என்னை அக்கா என்பார் நான் ஸ்கூல் படிச்ச காலத்தில:).. எங்கட அப்பா அம்மாவில தனக்குப் பயமாம் அதனால அப்படிக் கூப்பிட்டிட்டால் பிரச்சனை இல்லை எனச்சொல்லி நகைச்சுவையா கூப்பிடத் தொடங்கியவர்... இப்பவும் எப்போதாவது கதைப்பார்.. அக்கா என்றுதான் ஹா ஹா ஹா:)..

   Delete
 21. என்னாது பூசணியில் சுண்டலா !! நிஜம்மாவா சொல்றீங்க ??
  டேஸ்டியா இருந்ததா ?
  ஆமா டெய்சி அங்கே என்ன செய்றா :) ஜெசி இந்த புத்தர்கிட்டயே சுத்துவா எதுக்குன்னா எலிக்குட்டிங்க ஒளிஞ்சிருக்கும் தோட்டத்தில்

  ReplyDelete
  Replies
  1. இப்போ புரியுதொ? நான் கேட்டனே இது என்ன என்று? நீங்க அப்போ கண்டு பிடிக்கவில்லைத்தானே?:)... உண்மையில சூப்பரா ஒரு இனிப்பான சுண்டல் அஞ்சூ.. உடம்புக்கும் நல்லதாம்.

   இது நமக்குத் தெரியாது. அக்கா வீட்டில பெரிய கொடியாக வேலியில் நின்ற மரமெல்லாம் ஏறிச் சுற்றி விட்டதாம், அப்போ ரோட்டால போன ஒரு அவ்றிக்கன் லேடி வந்து கேட்டாவாம்.. இந்த இலையை பார்த்து நீண்ட காலமாச்சு.. நாங்க ஊரில் சமைப்போம் இப்போ கிடைக்கவில்லை, இங்கு பார்த்ததும் ஆசையாக இருக்கு சமைக்க தருவீங்களோ என...

   நாங்கதான் சமைப்பதில்லையே.. அப்போ என்ன பண்ணுவீங்க எனக் கேட்ட இடத்தில இப்படி சுண்டல் போல..செய்வோம் எனச் சொன்னாவாம்.. அன்றிலிருந்துதான் இந்தச் சுண்டல் ஆரம்பமாச்ச்ச்ச்ச்:).. இன்னும் கொஞ்சம் இலைகள் கொடியில இருக்கு பிடுங்கிடோணும் பழுக்க முன்பு.

   அது டெய்சிப்பிள்ளை.. நான் பொகும் இடமெல்லாம் ஒட்டிக் கொண்டே வருவா:)) ஹா ஹா ஹா.

   Delete
  2. எங்க வீட்ல மணத்தக்காளி குச்சி மட்டும் நட்டு ஒரு போகம் விளைச்சல் சில பழங்களை தொட்டிலையே விட்டேன் கம்போஸ்ட் மூடிட்டா நெக்ஸ்ட் சம்மருக்கு செடியா வளரும்

   Delete
  3. அது எனக்கு குட்டியா கன்று வந்துது அஞ்சு ஆனா காய்க்கவில்லை... உங்களுக்கு கொஞ்சம் கிளைமேட் கீரை வகைக்கு கை கொடுக்குது.. இங்கு கீரை எதுவும் வராதாமே..

   Delete
 22. அவசர இடைவேளை :) ஆமா அப்படீன்னா நான் டெய்லி 2.3 லிட்டர்ஸ் குடிக்கணும் .இது தனியாவே குடிக்கணுமா இல்லின்னா கிறீன் டி ஹெர்பல் டெஸ்ன்னும் குடிக்கலாமா ?

  ReplyDelete
  Replies
  1. அது நம் மக்கள்ஸ்ஸ்க்கு அவசரமா மருத்துவ சேவை குடுக்க நினைச்சு இடைவேளை விட்டேன்ன் ஹா ஹா ஹா:)..

   தாராளமாக.. காலையில் இருந்து நீங்க நீராகக் குடிக்கும்.. ரீ.. கொஃபி.. அனைத்தும் இதில் கவுண்டாகும்..

   Delete
  2. இல்லை அதிரா. பொதுவா வெறும் தண்ணீர்தான் இதுக்கு அர்த்தம். இதைத்தவிர நாம் சாப்பிடும் நீருள்ள உணவு,

   Delete
  3. @நெ.தமிழன்..
   ஓ அப்படியா? ரீ யைக்கூட கணக்கில் எடுக்கலாம் என்றார்களே...

   Delete
 23. ஹலோவ் மியாவ் இப்போ கன்பியூஸ் ஆகிட்டேன் ரெண்டாவது படத்தில் படம் அப்புறம் ஹெட் ஏக் அல்சர் ஆஸ்த்மா எல்லாம் போட்டிருக்கே இதெல்லாம் சாப்பிடணுமா தவிர்க்கணுமா டாக்டர் மியாவ் :))))))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மேலே மாவீரருக்கும்[உங்க முறையில:)] இதே டவுட்தானே வந்திருக்கு:)... ஹா ஹா ஹா சாப்பிடோணும் எனத்தான் வரும்.. அந்த வகுப்புக்கு மட்டும் அன்று நான் அப்செண்ட்:)...

   பொதுவா கவனிச்சுப் பாருங்கோ அஞ்சு.. டெய்லி ஒரு கரட் சாப்பிட்டாலே போதும் போல இருக்கே:).. முன்பு அப்பிளைச் சொன்னார்கள் இப்போ கரட் ஆம்ம். ஹையோ ஹையோ..:)

   Delete
  2. இங்கே வெட்ஸ் சொல்றாங்க முயலுக்கு நிறைய காரட் கூடாதாம் :) டயபடீஸ் வருமாம் :) இதுக்கென்ன சொல்றீங்க

   Delete
  3. என்னாதூஊஊஊஊ முசல்பிள்ளைக்கு டயபட்டிஸ் ஆமோ.. ஓ மை கடவுளே:)) ... முசலுக்கு இருக்கும் மருவாஅதைகூட மனிசருக்குக் கிடைப்பதில்லை ஹா ஹா ஹா.. கரட்டில் இனிப்பு அதிகம் என்பதாலோ.. ஆனா அது இயற்கை இனிப்பு உடம்புக்கு நல்லதுதானே... அப்போ கரட்டோடு வேப்பங்குழையும் சேர்த்துக் குடுத்திட்டால் போச்ச்ச்ச்ச் ஹா ஹா ஹா:).

   Delete
 24. இலை பார்க்க பசுமையா இருக்கு நானும் போட்டேன் ஆனா லேட் :) அது காய் வரதுக்குள்ள செத்துடும் குளிரில் .இப்போ ஸ்லைட்டா பூச்சியும் வந்து அது மேலே பிளாக்பெரி செடியும் படர்ந்து முள்ள இருக்கு அதை தொட முடியாது
  ஆனா பிரென்ச் பீன்ஸ் அமோக விளைச்சல் நான் படத்தை எடுக்குமுன்னே சமைச்சிட்டேன் :)
  உங்க திருக்கை பழமொழிலாம் பார்க்கும்போது எங்காவது சொல்லிவச்சாவது இல்லை வாங்கி செய்யணும் போலிருக்கு
  ஷட்ரக்ன்னு ஒரு ஜமைக்கா அங்கிள் இருக்கார் அலாட்மென்டில் கேட்டு எடுஜ்கறேன் பூசணி இலைகளை

  ReplyDelete
  Replies
  1. நானும் லேட்டாத்தான் நட்டேன் அஞ்சு... ஆரம்பம் கண்ணில் தெரியல்ல.. பின்பு கடசியிலதான் பார்த்தேன் 50 பென்ஸ்க்கு போட்டிருந்தார்கள்.. வந்தா வா போனால் போ என நட்டேன்ன்.. ஆனா பாருங்கோ ஒரு பூச்சி புளு அண்டவில்லை இன்னும்.. இனி எது நடந்தாலும் ஓகே.. நான் தான் 2ம் தடவையாகவும் சுண்டப் போகிறேனே.

   ஏன் அஞ்சு பீன்ஸ் எனில் இப்பவும் காய்க்குமே.. என்னுடையது இப்பவும் ஒண்ணு ரெண்டா காய்க்குது:).. ஆனா இலைகள் பழுக்கத் தொடங்கிட்டுது. ஜமெய்க்கா ஆட்கள்தான் அதிகம் பூசணி விரும்பிகள் என நினைக்கிறேன்..

   Delete
 25. /நான் குழப்படியாம்?:) நீங்க இதை நம்புறீங்களோ?:).// ஆனா அப்பாவிலாம் இல்லை :)
  டெய்சி நான் நம்புவேன் நபரின் பிக்கோஸ் தாயை போல் பிள்ளை :)
  அது சரி டெய்சி ஒழுங்கா ஜிம்முக்கு போகணும் @) பிரபு சொல்ல சொன்னான் இப்படி கிடைச்ச பாகில் ஏறி உக்கார கூடாது சொல்லிட்டேன் :)

  ReplyDelete
  Replies
  1. ///டெய்சி நான் நம்புவேன் நபரின் பிக்கோஸ் தாயை போல் பிள்ளை :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அம்மா குழப்படி இல்லை:))..

   டெய்சி ஜிம்முக்கு ஒழுங்காப் போறா.. மர உச்சியில் ஏறி சாகஜம் பண்ணி கீழே இறங்குவா.. வேலியின் விழிம்பால அணில்பிள்ளையைக் கலைச்சுப் போவா.. உங்கட குண்டு மாப்பிள்ளையால இதெல்லாம் முடியுமோ?:) அவருக்கு வீடு வீடாய்ப் போய் ஓசிச்சாப்பாடு சாப்பிட்டு விட்டு சொகுசா நித்திரை கொள்ளத்தானே விருப்பம்:)).. டெய்சிக்கும் உழைக்கும் மாப்பிள்ளை வேணுமாம்:)) முதல்ல குண்டரை அஞ்சு எலியாவது பிடிச்சு வீரத்தைக் காட்டச் சொல்லுங்கோ:).. பின்பு பொம்பிளை குடுப்பதைப் பற்றி முடிவெடுக்கிறோம்ம்:))..

   டெய்சியை அம்பேரிக்காலயும் கேட்டிருக்காக அப்புறிக்காலயும் கேட்ட்டிருக்காக என்பதனை குண்டுப்பிரபுவின் காதில் பட வையுங்கோ பிளீஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.

   Delete
  2. டெய்சி பிள்ளைக்கு வீரம் நிறைந்த உழைக்கும் மாப்பிள்ளை வேண்டுமோ! சூப்பர்.

   Delete
  3. பின்ன என்ன கோமதி அக்கா...அந்தக் குண்டர் விடிய எழும்பி வந்து அஞ்சுவிடம் ஓசிச்சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டுப்போட்டு... அந்த வீட்டுக் கேள்ஸ் உடன் பொழுதைக் கழிச்சுப் போட்டுப் போகிறார்ர்:) அவரை நம்பி எப்பூடி ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணான எங்கட பொம்பிளையைப் பிள்ளையைக் குடுக்க முடியும் சொல்ல்லுங்கோ?:)))

   Delete
 26. ஊசிகுறிப்பு சூப்பர் :)

  ReplyDelete
  Replies
  1. டங்சூ... ட்டாங்ஸ்ச்சூஊஊஊ:). உண்மைதானே.. மன நிம்மதிக்காக.. மகிழ்ச்சிக்காகத்தானே ஒருவரோடு நட்பாகிறோம்.. சேர்ந்ததனால் நிம்மதி.. மகிழ்ச்சி போனதெனில் அதில் என்ன இருக்கு.

   Delete
 27. டெய்சி ஏறியிருக்கும் நெட் பாக் எங்க வீட்ல ப்ளூ கலரில் இருக்கு .இன்னும் soft toys மக்களது கொஞ்சம் அதில் இருக்கு ஜெசி ஏறி விளையாடுவா டூ டைம்ஸ் கழட்டு விழுந்து இப்போ கீழிருந்து தட்டுறா :)

  ReplyDelete
  Replies
  1. நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் எச்சூஸ்மீ :) மியாவ்

   Delete
 28. /பூஸணிச் சுண்டல்:)//

  கர்ர்ர்ர் யாருமே கவனிக்கல :) இது பூசணி இலை சுண்டல்
  பென்ச் மேலேறுங்க மியாவ்

  ReplyDelete
  Replies
  1. அது வந்து காமாட்ஷி அம்மாவின் ஸ்டைலில ஹெடிங் போட்டேன்ன்:)).. இப்போவெல்லாம் நெல்லைத்தமிழன் ஃபுரொபிசர்.. வாயே திறப்பதில்லை:) பொல்லுக்குடுத்து எதுக்கு அடி வாங்கோணும் என பேசாமல் காக்கா போயிடுறார்ர் ஹா ஹா ஹா...

   அனைத்துக்கும் மிக்க நன்றி அஞ்சு.

   Delete
  2. அதிராதான் தெளிவாச் சொல்லியிருக்காங்களே, பூசணி விளைவதில்லை, ஒன்லி இலைதான் என்று. அப்போ பூசணிச் சுண்டல்னா, பூசணி இலைப் பொறியல் என்றுதான் அர்த்தம். எப்படியெல்லாம் ஏஞ்சலினுக்கு டவுட் வருது. இதுனாலதான் நிறைய எழுத்துப் பிழைகள் உங்களுக்கு இப்போலாம் வருது.

   Delete
  3. [im]https://thumbs.gfycat.com/OffbeatFaroffElk-max-1mb.gif[/im]

   Delete
  4. @நெல்லைத்தமிழன்:)..

   ஹா ஹா ஹா சாட்சிக்காரர் காலில் விழுவதைக் காட்டிலும் சண்டைக்காரர் காலில விழுவது பெட்டராமே:)) ஹா ஹா ஹா குற்றம் சாட்டிக்கொண்ட வந்தவரையே எழுத்துப் பிழை சொல்லிக் குற்றவாளி ஆக்கிட்டார்ர் நெ.தமிழன்:)).. அவ்வ்வ்வ்வ்வ் குருமாற்றம் எனக்கு இப்பவே ஆரம்பமாகிட்டுதுபோல:)) மீ சேவ்ட்:))

   Delete
 29. நவகிரகம் பாடல். எஸ் பி பிக்கு அதில் ஹம்மிங் வாய்ப்பு மட்டும்! அந்த வகையில் இது ரேர் சாங்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. இப்போதெல்லாம் நீங்க லேட்டாத்தான் வாறிங்க அப்பூடின்னு மீ சொல்ல மாட்டேனாக்கும்:)). ஓ நல்ல தகவல்.. எனக்கு பாட்டு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.. உடனேயே இங்கு போட்டு விட்டேன்ன்..

   Delete
 30. அங்கு பூசணி கடைகளில் கிடைக்காதா? டெய்சி மேற்பார்வையில் விவசாயம் நடக்கிறது போல! இலை போட்டு சுண்டலா? இந்த முயற்சி எல்லாம் நான் இதுவரை செய்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. பூசணி கிடைக்கும் ஸ்ரீராம், இது இலைக்காக வளர்த்தேன் என்றேன்.. இலை கிடைக்காதே:).

   //இந்த முயற்சி எல்லாம் நான் இதுவரை செய்ததில்லை.///

   இப்படி சொல்லித் தப்பக்கூடாது:).. எங்கள் புளொக்கில் வரும் குறிப்புக்களில் ஒன்றை மாதம் ஒரு குறிப்பாக நீங்களே செய்து போடவேண்டும் என பிரித்தானிய மேன்மை மிகு.. நீதிபதி அவர்கள் ஆணையிடுகிறார்ர்.. அது நாந்தேன்ன்:))

   Delete
 31. நடுவில் சில காலம் ஒரு நாளைக்கு தண்ணீர் 8 லிட்டர் குடிக்கவேண்டுமாக்கும் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். அப்புறம் கிட்னிக்கு ஓவர் வேலை தரக்கூடாது மூன்று லிட்டர் போதும் என்று சாசனம் செய்தார்கள். எனக்கு ஸ்டோன் பிரச்னை வந்தபோதுதான் தண்ணீர் குடிக்கும் அளவு பற்றியெல்லாம் கவலைப்பட ஆரம்பித்தேன். மறுமுறை அந்த வலியை எதிர் நோக்கும் தைரியம் இல்லாமல் என் தண்ணீர் அளவில் இப்போது கவனமாக இருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நாமெல்லாம் வந்தபின் காப்போன் தானே...:). இங்கு எந்த வருத்தம் எனினும்.. முதலில் நிறையத் தண்ணி குடியுங்கோ என்பதே மருந்தாக டொக்டேர்ஸ் சொல்கின்றனர் கர்ர்ர்ர்:)).... உண்மைதான் கிட்னி ஸ்டோன்ன்.. வலி என்பது தாங்க முடியாத ஒன்றுதானாம்ம்..:(.

   Delete
 32. நீங்கள் திறந்து விடுவதற்காகக் காத்திருக்கும் வலைப்பின்னலுக்குள் காத்திருக்கும் டெய்ஸி பாவமா இருக்கு பார்க்க..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹையோ ஓவரா இரக்கப்படாதீங்கோ.. அவ விருப்பமாகத்தான் இருக்கிறா வேணுமென்று.. அப்பாவிபோல அக்ட் பண்றா கர்ர்ர்ர்ர்ர்:)).. மேலே மூடி போடவில்லை.. தனக்கு தேவை எனில் ஜம்ப் பண்ணி வெளியே குதிப்பா. இது பிடிச்ச விசயம் அவவுக்கு.. :)) அதனாலேயே பொறுமையா இருக்கிறா:)) ஹா ஹா ஹா:).

   Delete
 33. ஊசி இணைப்பு - ஊசிக்குறிப்பு தலைப்பில் என்ன வித்தியாசம். சில பேர் உண்மை சொல்லவேண்டியே போதி ஏற்றிக்கொள்(ல்)வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஊசிக்குறிப்பில் விசயம் இருக்கும்.. தத்துவம் இருக்கும்:).. ஊசி இணைப்பில் என்ன வேணுமெண்டாலும் இருக்கும்:)) ஹா ஹா ஹா கவனிச்சு வந்தால் கண்டு பிடிப்பீங்க:).

   //போதி ஏற்றிக்கொள்(ல்)வார்கள்//
   ஹா ஹா ஹா கூகிள் ஜதி பண்ணி விட்டதே போதையை:))

   Delete
 34. நேற்று வெளிவேலைகள் நிறைய... காலை பதிவு இட்டுவிட்டுச் சென்றவனால் இரவு வரை கணிணிப் பக்கமே வர இயலவில்லை. எனவே நிறைய பெண்டிங்... நண்பர்களின் பின்னூட்டங்களை அப்புறம்தான் படிக்கவேண்டும். மற்ற இடங்களுக்கு விஜயம் செய்து விட்டு அப்பால வாரேன்!

  ReplyDelete
  Replies
  1. அதுதான் நாம் இருக்கும்போது நீங்க இல்லாமல் போயிடுறீங்க.. நீங்க இருக்கும்போது நாம் பிசியாகிடுறோம்ம்.. ராசி அப்படிப்போலும்:)) எங்கே போயிட்டீங்க என நினைச்சோம்ம்.. சில சமயங்களில் அப்படித்தான்.. எதுக்கும் முடியாமல் போய் விடும்.

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்:).

   Delete
 35. வணக்கம் சகோதரி

  விதவிதமான செய்திகளுடன் பதிவு சூப்பர்.
  பூசணி சுண்டல் ருசி அருமையோ அருமை. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். ஆனால் இங்கே ருசிக்க முடியாது. ஊரில் எங்கள் அண்ணா வீட்டில்தான் தற்சமயம் பூசணி போட்டுள்ளார்கள்.அங்கு செல்லும் போது கண்டிப்பாக இந்த முறையில் செய்து பார்க்கிறேன். நன்றி.

  படங்கள் பசேலென்று அழகாக உள்ளது. உங்கள் உழைப்பை கூறுகின்றன.

  ஜாலி கோனார் "மியாவ்" அழகாக சமர்த்தாக உங்களுடன் ஒத்துழைத்து இருக்கிறதே.! வியப்புத்தான்.. அழகாக இருக்கிறது.

  ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பும் மிக அருமை. மற்றும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. @Kamala HariharanMonday

   வாங்கோ வாங்கோ..

   //கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். ஆனால் இங்கே ருசிக்க முடியாது. ஊரில் எங்கள் அண்ணா வீட்டில்தான் தற்சமயம் பூசணி போட்டுள்ளார்கள்///

   ஓ அப்போ நிட்சயம் இலைகள் கிடைக்கும் உங்களுக்கு.. செய்து பாருங்கோ..

   //ஜாலி கோனார் "மியாவ்" அழகாக சமர்த்தாக உங்களுடன் ஒத்துழைத்து இருக்கிறதே.! //

   ஹா ஹா ஹா அது அவவுக்குப் பிடிச்ச விளையாட்டு..

   மிக்க நன்றிகள் வரவுக்கு.. மகிழ்ச்சி.

   Delete
 36. ஆகா...

  பூசனிச் சுண்டலும்
  பூசாரின் ஊஞ்சலும்

  அருமை.. அருமை!..

  அதை விட
  அப்பளக் குழவி அடியோடு
  ஊசிக் குறிப்பு!..

  அருமையோ அருமை!..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..
   ஹா ஹா ஹா கவிதை நடையில கொமெண்ட் போட்டு விட்டீங்க:)..

   //அப்பளக் குழவி அடியோடு
   ஊசிக் குறிப்பு!.//

   ஹா ஹா ஹா அப்பளக்குழவி அடியா?:) ஹையோ அடியும் புரியல்ல நுனியும் புரியல்லியே:))..

   மிக்க நன்றிகள்.

   Delete
 37. புது ரெசிபி நல்லாயிருக்கு... 'ஊசி'கள் சிறப்பு...!

  ReplyDelete
 38. எல்லாக் கீரையும் கலந்து சுண்டுற நேரம் பூசணித்துளிர் சேர்க்கிறனாங்கள். ஆனால் தனிப் பூசணி இலையில செய்து சாப்பிட்டது இல்லை அதிரா. அடுத்த தரம் பூசணி வளரேக்க கட்டாயம் உங்கட நினைவு வரும். :-) சுண்டிச் சாப்பிட்டுட்டு எப்பிடி இருந்தது எண்டு வந்து சொல்லுறன்.

  இப்பதான் எனக்கு திரும்ப உங்கட ப்ளொக் சரியாத் திறக்குது.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர் வந்திருகிறாக.. வாங்கோ இமா வாங்கோ.. நலம்தானே.. டிக்‌ஷியும் சிஸ்டரும் நலம்தானே?..

   // பூசணித்துளிர் சேர்க்கிறனாங்கள்//
   சிலர் துளிரை மட்டும்தான் எடுப்பினமாம் இமா, ஆனா அப்படியில்லை, கடும் முத்தல் இல்லாத இலைகளை எடுக்கலாம்.. குருத்தை மட்டும் எனில், என் ஒரு கொடியில் எதுவும் எடுத்துச் சுண்ட முடியாதெல்லோ. பெரிய தோட்டத்தில் எனில் ஓகே..

   //அடுத்த தரம் பூசணி வளரேக்க கட்டாயம் உங்கட நினைவு வரும். :-)//

   வரணும்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி இமா.

   Delete
 39. அம்முலு... எனக்கும் மிச்சம் ஸ்பெஷலான தோழி. எப்பவும் அவதான் கதைப்பா. நான் தான் ஒருநாளும் ஃபோன் பண்ணுறேல்லயே! ;-)

  உங்கட மாவிளக்கைப் போன முறை பார்த்த நேரமே நினைச்சனான் ஒரு தரம் சாப்பிட்டுப் பார்க்க வேணும் என்று. திரும்பவும் படம் காட்டி ஏங்க வைக்கிறீங்கள். எனக்கும் ஒரேயொரு விளக்கு அனுப்பிவைங்கோ அதீஸ்.

  செவ்வந்தி... இங்க போன வருசம் தான் முதல் முதல் ஆயிரக் கணக்கில பூத்துது. அதுக்கு முதலெல்லாம் மரம் வைச்சுப் பார்த்திருக்கிறன். நத்தை சாப்பிட்டுரும். ஆனால் போன வருசம் பூத்த மாதிரி ஒரு காலமும் பூக்கேல்ல. செபாட படத்துக்கு ஒவ்வொரு நாளும் வைக்கவென்றே பூத்த மாதிரி. ட்ரைவ்வே நெருப்புப் பூத்த மாதிரி இருக்கும். டெய்ஸிக்கு பூ வாசம் விருப்பம் போல. ;)

  ப்ரிங்கிள்ஸ் டின்னுக்கு இது பெட்டர் எண்டு டெய்ஸி நினைப்பா. ;)

  ReplyDelete
  Replies
  1. @இமா
   /// எப்பவும் அவதான் கதைப்பா.//

   ஆஆஆஆஆஆஆ அம்முலு ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டா:) இப்பூடிப் பப்புளிக்கில போட்டு உடைச்சிட்டீங்களே:)) ஹா ஹா ஹா:).

   //எனக்கும் ஒரேயொரு விளக்கு அனுப்பிவைங்கோ அதீஸ்.///

   ஹா ஹா ஹா நான் இங்கு சப்ளை பண்ணுறேன் இமா:).. தினை மாவில் தனி தேனும் வாழைப்பழமும் சேர்த்துச் செய்து பாருங்கோ.. சுவையோ சுவை...

   //அதுக்கு முதலெல்லாம் மரம் வைச்சுப் பார்த்திருக்கிறன். நத்தை சாப்பிட்டுரும். //
   அதேதான் இமா.. நானும் நிலத்தில நட்டு.. ஸ்லக் அப்படியே குறுக்கே தறித்து விழுத்தியபின் நடுவதை விட்டு விட்டேன், இது இம்முறை அம்மா வந்து நின்று.. ஒரே பிடி வாங்கி சாடியில் வையுங்கோ என.. அதனால சாடியில் வைட்த்ஹமையால்ல்.. இப்பவும் அப்படியே பூக்களோடு நிக்குது...

   //டெய்ஸிக்கு பூ வாசம் விருப்பம் போல. ;)//

   அப்படி என்பதைவிட, நான் எதைத் தொடுகிறேனோ அதை அவ ஓடி வந்து மணப்பா எனச் சொல்வது பொருந்தும்.. வீட்டுக்குள்ளும்.. நான் கபேட் அடுக்கினாலும்.. கிச்சினில் பிளேட்ஸ் ஐ எடுத்து தட்டில் அடுக்கினாலும், அவசரமா கைக்குள்ளால நுழைந்து செக்கிங் நடக்கும்.. தானும் ஜெல்ப் பண்றாவாமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)...

   கொமெண்ட் இடம் மாறிப் போட்டு விட்டீங்களோ...

   மிக்க நன்றிகள் இமா.

   Delete
  2. //கொமெண்ட் இடம் மாறிப் போட்டு விட்டீங்களோ...// ;) நினைச்சன் மாத்திப் போட்டுட்டன் எண்டு, ;)

   Delete
 40. அந்தப்பாட்டில் வரும் பூனை என்ன ஸ்டைல்! என்ன அழகு! சூப்பர்! உங்கள் பூனையை இந்த மாதிரி அலங்கரிக்க வேண்டாம் குறைந்த பட்சம் கூடையில் போட்டு மூடாமலாவது இருக்கலாமே. பாவம். அது சாதுவாக இருக்கு(அதிராவின் கையால் சாப்பாடு சாப்பிட்டும் எப்படி ?)

  பூசணி இலைக்கு நான் எங்கே போவேன்?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..

   //அந்தப்பாட்டில் வரும் பூனை என்ன ஸ்டைல்! என்ன அழகு! சூப்பர்! //
   டங்கூ டங்கூ:) பூஸ் என்றாலே ஸ்டைல் தானே:)) ஹா ஹா ஹா..

   //உங்கள் பூனையை இந்த மாதிரி அலங்கரிக்க வேண்டாம் குறைந்த பட்சம் கூடையில் போட்டு மூடாமலாவது இருக்கலாமே.//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அந்தக் கூடையைக் காட்டினாலே ஓடிவந்து ஏறி இருப்பா.. தூக்கிக் கொண்டு திரியுங்கோ என, கையால அவவைத் தூக்கினால் பிடிக்காது அவவுக்கு:)).

   ////அது சாதுவாக இருக்கு(அதிராவின் கையால் சாப்பாடு சாப்பிட்டும் எப்படி ?) //
   ஹா ஹா ஹா என் கைச் சாப்பாடெல்லாம் இல்லை.. அவவுக்கு ரெட்மேட் கட் ஃபூட்ஸ்தான்.. அவவுக்கு மட்டும் எப்படியும் மாதம் 25/30 பவுண்டுகள் செலவாகும்.. சாப்பாட்டுக்கு மட்டும்:)) பொஸ் லேடி அவ:)..

   //பூசணி இலைக்கு நான் எங்கே போவேன்///
   ஸ்கொட்லாந்திலேயே நடத்திக் காட்டி விட்டேன்:).. இந்தியாவில் இருக்கும் நீங்கள் அப்படிச் சொல்லலாமோ கர்ர்ர்ர்ர்:))..

   Delete
 41. லட்சுமி நடித்த முதல் படம் ஜீவனாம்சம். அதை வைத்து அவரை ஜீவனாம்சம் லட்சுமி என்று கொஞ்ச நாள் அழைத்துக் கொண்டிருந்தார்கள். அது பாலச்சந்தர் படமல்ல, மல்லியம் ராஜகோபால் படம்.

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ்வ் கீசாக்கா ஓடிவாங்கோ விடை இங்கே லீக் ஆகிட்டுது... ஹா ஹா ஹா... கேள்விப்படாத படம்.

   பாலச்சந்தர் படம் எனக் கோமதி அக்கா+ஸ்ரீராம் சொல்லியிருப்பது, மேலே நான் போட்டிருக்கும் பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்... “உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது”.... பாடல்...

   மிக்க நன்றிகள்.

   Delete
  2. இஃகி, இஃகி, லக்ஷ்மி நடிச்ச முதல் படம பாலச்சந்தர் படம்னு சொல்லலை! :) மேலே அதிரடி டாக்டர் போட்டிருக்கும் பாடல் காட்சி இடம்பெற்ற படம் நவகிரகம்,, பாலசந்தர் படம். :)

   Delete
  3. கீசாக்கா
   ////மேலே அதிரடி டாக்டர் ////
   ஹா ஹா ஹா வரவர நமக்கு பதவி கூடிட்டே வருதூஊஊஊ:)..

   இப்போதெல்லாம் ஶ்ரீராம் கஸ்டப்படுறாரே என நினைச்சே பெயர் போட்டுக் கொமெண்ட் குடுக்கிறேன் ஹா ஹா ஹா:)..

   Delete
 42. ஆஹா... பூசணி இலையில் சுண்டலா... நல்லாத் தான் இருக்கு.

  ஊசி இணைப்பு, குறிப்பு இரண்டும் ரொம்பவே ரசித்தேன்.

  ReplyDelete
 43. ஆ.. கனநாளா காணேல்லையே என நினைச்சேன் போஸ்டை. பூசணி சுண்டல் நான் அடுத்த வருடம் செய்து பார்க்கிறேன் அதிரா.ஏனென்றா இலைக்கு எங்கன போவேன்.நானும் உங்களை போல செய்துதான் இலை எடுக்கனும். இதை பார்க்க நூல்கோல் இலை சுண்டல் போல இருக்கு. பார்க்க நல்லா இருக்கு படம். முன்பு காரட் இலை போட்டனீங்கல்லோ.இப்பவும் அதை செய்கிறேன். கோவா தான் எனக்கு சரியாக வராது குழைந்துபோகுது.
  ஆஹா.. டெய்சி அழகா போஸ் கொடுக்கிறா. பொதுவா பூஸ் களுக்கு இப்படியானவை பிடிக்கும். எங்கட வீட்டில பிரப்பம்கூடை இருந்தது. காணவில்லை என்றால் அதற்குள் இருப்பா (ரோஸி). சின்னப்பிள்ளைகள் போலதான் அவையளும்.
  பாட்டு நான் சமீபத்தில் ஒரு எப் எம் ரேடியோ போட்டார்கள் கேட்டேன்.. நல்லபாட்டு.
  ஸ்டைலிஷ் ஆ பூஸார் வீடியோவில இருக்கார்.
  ஊசிஇணைப்பு,ஊசிகுறிப்பு சூப்பர்.
  பரவாயில்லை சின்ன பதிவானாலும்,பிரயோசனமான பதிவு.சிம்பிள் அண்ட் ஸ்வீட்.
  நிறைய சமைத்தாலும் எதை சாப்பிடுவது என தெரியாது.எல்லாதிலும் கொஞ்சமா எடுக்கனும். 4 வகை நச்சென வைத்தால் ரசித்து,ருசித்து சாப்பிடலாம். இது போஸ்ட் க்கு சொன்னேன். ஹா..ஹா..ஹா

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ வாங்கோ அம்முலு வாங்கோ... மற்படியும் காணாமல் போயிட்டீங்களோ என நினைச்சேன்...

   நமக்கு தேவையானதை பயிரிட்டுத்தான் எடுக்கோணும் இந்த நாடுகளில்.

   உண்மைதான்.. எங்காவது ஒளிச்சிருந்து வோச் பண்ணுவதுதான் இவர்களுக்குப் பிடிக்கும்.. கபேட் திறந்திட்டால் உடனே உள்ளே போய் உடுப்புக்குள் ஒளிச்சுப் படுப்பா:)..

   ஓ பாட்டு கேட்டிருக்கிறீங்களோ.. மகிழ்ச்சி.

   நாலு வகையில நச்சென////
   ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு வருகைக்கு.

   Delete
 44. பூசணியில் சுண்டல்..


  ஆஹா புது புதுசா ரெசிப்பி வருதே வைரவா...

  இந்த இலைக்கு நான் எங்க போக...இனி பயிரிட்டு வளத்ததா தான் உண்டு..

  பார்க்கவே நல்லா இருக்கு அதிரா...

  ReplyDelete
 45. ஊசி இணைப்பு குறிப்பு ரெண்டும் செம...லாஸ்ட் அந்தத்தத்துவம் தான் அருமை.

  மீயும் அவ்வளவா வர இயலவில்லை...

  ஸ்டைல் செமைஅய இருக்கு...ரசித்தேன் அதிரா

  கீதா

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.