நல்வரவு_()_


Monday 24 December 2018

திராவும் திர்வுளும்:)👸

2013 ம் ஆண்டென நினைக்கிறேன் கனடா ரொரண்டோவில பெரிய ஸ்னோ ஸ்ரோம் வந்து, கறண்ட் இல்லாமல் தண்ணியில்லாமல் போய் சனமெல்லாம் ஹோட்டேலில் போய்த் தங்கி வந்த சம்பவம் நடந்துது, அப்போ நாங்களும் அங்கு போயிருந்தோம்.. அப்போ எடுத்த அழகிய:) படங்களில் சில..





இப்படி நேரில காண்பதென்பது மிக அரிதே, அங்குகூட 30 வருடத்துக்குப் பின் வந்ததாக நியூஸ்ல சொன்னார்கள்.. நாம் காண கொடுத்து வச்சோம்:).. ஒரே கண்ணாடிபோல பளிங்காக இருந்தது..



👯👯👯👯👯👯👯👯👯இடை----வேளை👯👯👯👯👯👯👯👯👯
என் கெயார் ஸ்டைல் மாத்தினேன் போனகிழமை:), பின்ன கிறிஸ்மஸ் எனில் மாத்தோணுமெல்லோ:) அதை அறிஞ்சு அஞ்சு அனுப்பிய படம்:))) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
👯👯👯👯👯👯👯👯👯👯👯👯👯👯👯👯👯👯

இது 2015 என நினைக்கிறேன், அக்காவின் மகள் வீணை வாசிப்பா புரோக்கிராம்களில், அப்போ கோயிலில் ஒரு நிகழ்ச்சி, அவசரமாக நேரமாகி விட்டது.. தலையை இழுக்கவில்லை விரிச்சபடி வெளிக்கிட்டா, அக்கா கூப்பிட்டுக் கொண்டிருந்தா பின்னி விடுகிறேன் என, மகளோ இல்லை எனக்கு நோர்மல் பின்னல் எதுவும் பிடிக்காது என்றிட்டா.. நேரமாகிட்டுது ஒரே பதட்டம்.. கோயில் என்பதால் எப்படி விரித்துக் கொண்டு போவது...

அப்போ எனக்கு பேஸ்புக் கை கொடுத்தது, எப்படி தெரியுமோ.. பேஸ்புக்கில் ஹெயார் ஸ்டைல் என ஒரு பேஜ் இருந்துது, அதில் இப்படி விதம் விதமான பின்னல்கள் வீடியோவாகக் காட்டினார்கள், சும்மா பல தடவை பார்த்து வச்சேன், பின்னிப் பார்க்க ஆள் கிடைக்கவில்லை... இது உடனே சொன்னேன், நான் வித்தியாசமான ஸ்டைலில் பின்னுகிறேன் வாங்கோ என, வந்தா.. வைரவரை நேர்ந்துகொண்டு மளமளவென ஆரம்பிச்சேன் சூப்பரா வந்துது.. அவவுக்கும் ஹப்பி:) எப்பூடி என் ஸ்டைல்:)..



ஆங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்சு:)... அதிராவின் கிரிஸ்மஸ் கிஃப்ட்:).. எலக்றிக் லெக் மசாஜ்ஜர்.... எல்லோருக்கும் 25 ஆம் திகதிதானே கிரிஸ்மஸ், ஆனா அதிராவுக்கும் டெய்சிக்கும் 24:). ஏன் தெரியுமோ.. செவ்வாயில் வருகிறமையால நாங்க:) விரதமெல்லோ... விருப்பமானவர்கள் வாங்குங்கோ அமேசனில் தான் வாங்கியது, சூப்பராக இருக்குது.. அப்படியே உள்ளங்காலிலிருந்து, முழங்கால் பின் பகுதி வரை உருட்டி உருட்டி மசாஜ் பண்ணி விடுகிறது...பிசைந்து பிசைந்து விடுகிறது:)..

ஹா ஹா ஹா இம்மலரை மறந்திருக்கவே மாட்டீங்க.. போன டிசம்பரில பூத்து நான் அமளிப்பட்டேனே, இப்போ பூத்து முடிஞ்சிருக்குது.. பாருங்கோ சைஸ் ஐயும் கலரையும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))


இப்போ எங்கள் வீட்டு கிரிஸ்மஸ் ரீ...
 அதிராவின் சீனி அரியதரம் செய்யாமல்:) 
கிரிஸ்மஸ் கொண்டாடும் அஞ்சுவுக்கும்.. 
மற்றும் அம்பேரிக்கா ட்றுத்துக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்....

இது எங்கள் டெய்சிப்பிள்ளையின் கிரிஸ்மஸ் கிஃப்ட்.. [கார்டின் ஹவுஸ்]உள்ளே போகப் பயப்படுகிறா..


ஹா ஹா ஹா..:)

ஊசி இணைப்பு:).

ஊசிக் குறிப்பு 
😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺
ஸ்ரீராம், கீதா போன போஸ்ட்டில் நான் சொன்ன பாடல் யூ ரியூபில் கிடைக்கவில்லை.. பாடல் என்னவெனில்
மாலைக் கருக்கல் வந்து மனசைக் கெடுக்குதடி மயிலே மயிலே...
வாழைக் குருத்து என்னை வாரி அணைச்சுக்கடி மயிலே மயிலே..
 அடி மயிலே மயிலே...... 
நல்ல உற்சாக மியூசிக்குடன் கூடிய பாடல்..
😺😺😺😺😺😺😺_()_😺😺😺😺😺😺

147 comments :

  1. ஹையோ, பிரமாதமான ஹேர் ஸ்டைல்! உங்களோடதைச் சொல்றேன். உங்க அக்கா பெண்ணுடையதைச் சொல்லலை. அது நீங்கதான் பின்னியதானு எனக்கு இன்னமும் ஜந்தேகம்! ஹாஹாக்களும், ஊசி இணைப்பு, குறிப்பு எல்லாமும் அமர்க்களம். கிறிஸ்துமஸ் என்றால் கேக் கொடுப்பீங்கனு பார்த்தால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுவுமே இல்லை! வாங்கியாவது தரக் கூடாதோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ...
      //ஹையோ, பிரமாதமான ஹேர் ஸ்டைல்! உங்களோடதைச் சொல்றேன்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பின்ன என் ஹெயார் ஸ்டைலைப் பார்த்து இங்கு வாய் விரிக்காதோர் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா..
      அந்த கிரடிட் அஞ்சுவுக்கே ஜேறும்:).

      //அது நீங்கதான் பின்னியதானு எனக்கு இன்னமும் ஜந்தேகம்!//

      நான் ஸ்ரீரங்கம் வரும்போது உங்களுக்கும் பின்னி விடுறேன்.. ஆனா நெம்ம்ம்ம்பி தலையைத்தரோணும்:)..

      கேக் இருக்கு அலுத்துப் போச்சு.. இன்று செவ்வாய் என்பதால் கிரிஸ்மஸ் டின்னர் நேற்றே முழுசா:) அவனில வச்சு செலிபிரேட் பண்ணிட்டோம்ம் ஹா ஹா ஹா..

      மியாவும் நன்னி கீசாக்கா. முதலாவதா வந்திருக்கிறீங்க அதுக்காக ஒரு பத்து நிமிடம் காலை உள்ளே வையுங்கோ.. ஹீட்டரையும் போட்டு விடுறேன் என் மசாஜரில்:)..

      Delete
    2. எனக்கு இந்த மசாஜர் எல்லாம் பிடிக்காது அதிரடி, அதனாலே எனக்கு வேணாம். நீங்களே வைச்சுக்குங்க. வயசாச்சு இல்ல! :P :P

      Delete
  2. ஊர் முழுதும் நமக்குக் கிடைக்காத தண்ணீர் ஹோட்டலில் மட்டும் எப்படிகிடைக்கும்? ஹா... ஹா... ஹா... எப்படியோ அப்போ சமாளிச்சுடீங்க! படங்கள் "பயங்கர" அழகாயிருக்கின்றன!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ ரெண்டாவதாக வந்திருக்கும் ஸ்ரீராமுக்கு எங்கட 96 வயசு ஆயாவைக் கொடுக்கிறேன்ன் என் புளொக் வழக்கப்படி:)).. ஸ்ரீராம் ஆயா பத்திரம்.. ஏசி போட்ட ஆடிக் காரில ஆடாமல் ஏத்திப் போங்கோ ஆயாவை:) ஆட்டி விட்டால் பொசுக்கெனப் போயிடுவாவோ என மனம் பதறுது எனக்கு..:)) ஹா ஹா ஹா

      Delete
    2. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. அது என்னவெனில் தண்ணி கிடைக்கும் ஆனா கரண்ட் இல்லாததால வேலை செய்யாதே:).. ஹோட்டலில் ஜெனரேட்டர் போட்டு விட்டால் எல்லாம் வந்திடும்...

      இப்படி கரண்ட் இல்லாமல் போனாலும் டக்குப் பக்கென சரிப்பண்ணிடுவார்கள்.. கொண்டமேனியம் எனப்படும் பிளட்ஸ்களில் இருப்போருக்கு பிரச்சனை இல்லை, அங்கு ஜெனரேற்றர் எப்பவும் இருக்கும்.. பெரும்பாலும் தனி வீட்டில் இருப்போர் பாடுதான் கஸ்டமாப் போச்சு அத்தோடு இந்தக் குளிருக்குள் ஹீட்டரும் வேர்க் பண்ணாதெல்லோ அப்போ ஒரு மணி நேரம்கூட ஹீட்டர் இல்லாமல் இருக்க முடியாது, தண்ணியை சமாளிச்சாலும்.

      இன்னொன்று இங்கு எங்களுக்கு கரண்ட் வயர் எல்லாம் நிலத்துக்கு அடியிலதான் போகும், போஸ்ட் மட்டுமே தெரியும்..

      ஆனா கனடாவில் வெளியாலதான் கம்பி போகுது அதனால பல இடங்களில் கம்பி அறுந்து போச்சாம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).. இப்போ தெரியுதோ ஸ்கொட்லாந்துக்காரருக்கு கிட்னி சார்ப்பு:):)) அதிராவைப்போலவேதேன்ன்ன்ன்ன்ன்:))

      Delete
    3. கொண்டமேனியம் பற்றி சொல்லுங்கள். பலருக்குத் தெரியாது.

      பிலிப்பைன்ஸில் இந்த மாதிரி சிஸ்டம் இருந்தது. எனக்கு அது புதுத் தகவல். அங்கு ஏன் ஃப்ளாட்ஸ் கொஞ்சம் கம்மி விலைமாதிரி தெரியுதுன்னு கேட்டதுக்கு அது 'இத்தனை வருட' லீஸ் மாதிரிதான். (30-50 வருடங்கள்). அதற்குப் பிறகு அவர்களுக்கு உரிமை போய்விடும் (யாரிடம் இருந்து வாங்கினார்களோ அவர்களது ப்ராபர்டி அது). 40-50 வயசில் வாங்கி, இறக்கும்வரை சொந்த வீட்டில் இருக்கலாம் என்று நினைப்பவர்கள் வாங்குவது அது.

      கனடாவில் வேறு மாதிரியா?

      Delete
    4. இதுபற்றி முன்பும் கொமெண்ட்களில் பேசியதாக நினைவு நெல்லைத்தமிழன்..

      எனக்கு தெரிஞ்ச வரையில்... கனடவில் கொண்டமேனியம் என்பது, நல்ல வ்சதியான அட்டாச் பார்த்றூமுடன் கூடிய வீடுகளாக இருக்கும்.. எப்படியும் இரு பாத்றூம் வசதி இருக்கும், செக்குறிட்டி சிஸ்டம் நன்றாக இருக்கும், பயம் குறைவு, விலை சற்று அதிகம் என்பதனால் கண்ட நிண்டோர் எல்லாம் வாங்க மாட்டார்கள் அதனால டீசெண்ட்டாக இருக்கும்.. நல்ல கிளீனாக பராமரிப்பார்கள்.. அதன் பொறுப்பாளர்.. படிகள் லிவ்ட் ஹொரிடோ விசிட்டிங்ஹோல்[கொமெனானது] எல்லாம் சூப்பராக இருக்கும். சொந்தமாக வாங்கி இருப்பது இது, சிலர் வாங்கி வாடகைக்கு விட்டிருப்பினம், பெரும்பாலும் பல கொண்டமேனியங்களில் பப்பி பூஸ் வளர்ப்பது தடா..

      மற்றும்படி பிளட்ஸ் எனில் அங்கு.. அதிகமாக கவன்மெண்ட் காசில் வாழ்வோருக்கு கவன்மெண்ட்டால் கொடுப்பார்கள்.. சொந்தமாக வாங்க முடியாதென்றே நினைக்கிறேன்ன்.. அதில் பல நாட்டுச் சனமும் இருக்கும்... சில இடங்கள் தவிர பெரும்பாலும்... ஊத்தையாகவும் பாதுகாப்புக் குறைவாகவும் இருக்கும்... பார்த்றூம்கூட ஒன்றுதான் இருக்கும் ஒரு வீட்டுக்கு. இனி பெரும்பாலும் வோஷிங் மெசின்கள்கூட கொமனாக கீழே இருக்கும்.. பணம் போட்டுத்தோய்க்க வேண்டும்...

      கொண்டமேனியங்களில் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்....

      நான் இதில் சொல்லியிருப்பது என் கிட்னிக்கு எட்டியது, ஏதும் தவறாகச் சொல்லி விட்டேனோ தெரியவில்லை.. கனடாவிலிருந்தும் என் புளொக் படிக்கிறார்கள் எனக் காட்டுது:), இதில் ஏதும் தப்பிருந்தால் அவர்கள் திருத்தி விட்டால் மகிழ்ச்சி:))

      Delete
  3. நல்லவேளை, பாடலைக்கேட்கும் சிரமம் இல்லை. எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத பாடல்.

    ReplyDelete
    Replies
    1. ஓ பிடிக்காதோ? எனக்கு எம்ஜிஆரைப் பிடிக்காது ஆனா அவரின் பாட்டுக்கள் முக்கால்வசியும் பிடிக்கும்.. வீடியோ இல்லாப் பாட்டாகத் தேடினேன் கிடைக்கவில்லை... இன்னொரு பாடல் அது ரொம்பவும் பிடிக்கும். நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே.... ஆனா அதுவும் வீடியோ இல்லாப் பாடல் இல்லை அதனால விட்டிட்டேன்...

      Delete
  4. விக் வைத்த பூனையோ... அருமையான அலங்காரம்! கீழே விழ வைக்காமல் வைத்திருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான். அழகா இருக்கிறாவெல்லோ:)

      Delete
  5. அந்தப் பின்னலில் அப்படி ஒன்றும் ஸ்பெஷலாய் எனக்குத் தெரியாதது என் குற்றம் இல்லை. எனக்கு அதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்.... நீங்கதான் உங்க 'பாஸ்' தளங்களெல்லாம் படிப்பதில்லைன்னு சொல்லியிருக்கீங்களே... இங்கயாவது உண்மையைச் சொல்லக்கூடாது.

      உங்க தகவலுக்கு..... எனக்கு 'வீட்டில் பார்த்த பெண்'. ஹா ஹா ஹா.

      Delete
    2. இதில் உண்மை என்ன, போய் என்ன!!! பின்னி விடுவார்கள் என்கிற பயம் எல்லாம் இல்லை!

      Delete
    3. சும்மா கலாய்த்தேன் ஸ்ரீராம்... எனக்கும் வித வித பின்னல்கள் எதுவும் தெரியாது, வெளிநாட்டில் பார்க்கும் வரை, அப்புறம் மகள் டிரை பண்ணும்வரை (எப்போவாவது)

      Delete
    4. //எனக்கு அதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதாக்கும்!//
      கூச்சப் படாமல் பாருங்கோ ஸ்ரீராம்.. காசா பணமா:). ஹா ஹா ஹா..

      Delete
    5. //நெல்லைத் தமிழன்

      உங்க தகவலுக்கு..... எனக்கு 'வீட்டில் பார்த்த பெண்'. ஹா ஹா ஹா.///

      ஸ்ரீராம் இதில் நெல்லைத்தமிழன் ஏதோ ஒரு பெருமூச்சுடன் சொல்வதைப்போல இருக்கே உங்களுக்கு ஏதும் புரியுதோ? ஹா ஹா ஹா:)..

      Delete
    6. ஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழனை டென்சனாக்கிட்டார் ஸ்ரீராம்:)..

      ஹா ஹா ஹா பலசமயம் ஸ்ரீராமின் எழுத்து, கோபமாக எழுதுகிறாரா இல்லை கொமெடியாக எழுதுகிறாரா எனக் கண்டு பிடிக்க முடிவதில்லை:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

      Delete
  6. அமேசானில் வாங்கிய அதன் பெயர் என்ன? என்ன விலை? நான் இரண்டு மூன்று மசாஜர்கள் வாங்கி வைத்திருக்கிறேன். அவை உபயோகிக்கவே பொறுமை வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. https://www.amazon.co.uk/gp/product/B0128SIPAI?pf_rd_p=338d5482-a910-4f62-b1e2-a66912b500ea&pf_rd_r=D8CAXX066VHPXZ0KDBB3

      இதில் போய்ப் பாருங்கோ ஸ்ரீராம் இது இந்தியாவிலும் கிடைக்கிறது, எங்களுக்கு தெரிஞ்ச ஒருவர் வாங்கியிருக்கிறார்[ஏதோ டிஸ்கவுண்ட் பிறைஸ்சில் பத்தாயிரத்துக்கு வாங்கியதாகச் சொன்னதா நினைவு.. இதில் ஹீட்டரும் இருப்பதால் குளிர்நேரம் இதமாக இருக்கு.
      உண்மையில் சூப்பராக இருக்குது.

      Delete
  7. நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை நானும் சொல்லிக்கொள்கிறேன். டெய்ஸி புதுமனைப்புகுவிழாவுக்கு பயபப்டுவதேன்?

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகச் சொல்லி விட்டேனே... ஏஞ்சலுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

      Delete
    2. போன போஸ்ட்டில் அஞ்சுவுக்குச் சொல்லிவிட்டீங்கள்தானே அதனால ஓகே...

      அது ஸ்ரீராம், பெட்டிகள் எனில் ஓடி ஓடி ஏறி இருக்கிறா, இது அவவுக்கு அவவின் கரியர் கேஸ் போல[ஹொஸ்பிட்டலுக்கு, கற்றறி கெயார்க்கு] இருப்பதால உள்ளே இருந்தால் தூக்கிப் போய் விட்டிடுவோம் எனப் பயப்படுறா போல இருக்கு.... இன்னும் உள்ளே போகிறா இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      ஏனெனில் அவவுக்கு போனதடவை டேகெயாரில் கொண்டுபோய் விட்டது பிடிக்கவே இல்லை பயந்திட்டா...

      Delete
  8. ஊஇ, ஊகு ஆகியவரை ரசித்தேன். ஹா ஹா ஹா ஏற்கெனவே படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கும் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பாடல் ஈசியாகக் கிடைச்சிடும் என நினைச்சேன்ன்.. ஆனா பாருங்கோ மாமியிடம் இருந்து எடுத்து வரும் சிடிக்களில் பல பாடல்கள் எங்கும் கிடைப்பதில்லை...

      அதேபோலதான்..
      பட்டாம்பூச்சி ரெக்கை கட்டிப் பறக்குது கண்ணா..
      அது சூனியனைத் தொட்டுவிடத் துடிக்குது கண்ணா...
      இப்பாடலும் எங்கும் கிடைக்குதில்லை...

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  9. வணக்கம் அதிரா சிஸ்டர்

    சூப்பர். அனைத்துப் படங்களை கண்டு வியந்து ந..டு..ங்..கிப் போனேன். கண்ணாடியாக தெரியும் பளிங்கு (பூக்களா, பழங்களா) படம் மிக அருமை.

    தாங்கள் தங்களுடைய அக்கா மகளுக்கு செய்து விட்ட ஹேர் ஸ்டைல் மிகவும் அழகாக அமர்க்களமாக உள்ளது. அனைத்தும் திறம்பட கற்று வைத்துள்ளீர்கள்.மனம் நிறைந்த பாராட்டுகள்.

    கால் வலி தீர அருமையான கண்டுபிடிப்பொன்றை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். வாங்குபவர்கள் சார்பாக நன்றி.

    மலரின் படமும், தாங்கள் செய்த கிறிஸ்மஸ் டீரீயும் மிக அழகு.

    டெய்சிப்பிள்ளைக்கு இருக்குமிடம் சின்னதாக இருக்கிறதென்று அபிப்ராயப்படுகிறரோ என்னவோ? அதுதான் பயம் கொண்ட மாதிரி நடிக்கிறார் என நினைக்கிறேன்.

    மிக்ஸி ஜோக் நன்றாக சிரிப்பை மூட்டியது. அதை தூக்கிக் கொண்டு அலையும் காட்சியை கற்பனை செய்து சிரித்தேன்.

    ஊசிகளின் தத்துவங்கள் சுருக்கென்று மனதில் பாய்ந்தன. மனதில் தைத்து நிற்கும் அருமையான வாசகங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நான் இம்முறை கொஞ்சம் முன்னதாக வந்திருக்கிறேன் என நினைக்கிறேன். பொய்த்து போனதாவென்று தங்களுக்கு வந்த கமெண்டுகள் விடுவித்தால்தான் தெரியும். பார்க்கலாம்.!

    தங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ..[என்னைப் பழையபடி கூப்பிட வச்சிட்டீங்களே ஹா ஹா ஹா:)].

      //கண்ணாடியாக தெரியும் பளிங்கு (பூக்களா, பழங்களா) படம் மிக அருமை//
      அவை செரிப் பழங்கள்..

      //கால் வலி தீர அருமையான கண்டுபிடிப்பொன்றை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். வாங்குபவர்கள் சார்பாக நன்றி.//
      இதுபற்றி இன்னும் ஒரு மேலதிக தகவல் கீழே சொல்கிறேன்..

      //மலரின் படமும்//
      அது இடப்பக்கம் இருக்கும் பெரிய பூக்கள் போன வருடம் புதிசுக்கு பூத்தது, வலப்பக்கம் இருப்பது இவ்வருடம் பூத்தது.. ஹா ஹா ஹா.. நானே அது பூத்திருப்பதை கவனிக்கவில்லை, வாடும் தறுவாயில்தான் கண்டுபிடிச்சேன்ன்..

      //அதுதான் பயம் கொண்ட மாதிரி நடிக்கிறார் என நினைக்கிறேன்.//
      இதுக்குப் பதில் மேலே ஸ்ரீராமுக்குச் சொல்லியிருக்கிறேன் பாருங்கோ.. உள்ளே ஏறிவிட்டால் நாம் பூட்டிப்போட்டு ஊசிபோடக் கொண்டு போயிடப்போறோம் எனவும் பயப்படுறா:)..

      Delete
    2. ///நான் இம்முறை கொஞ்சம் முன்னதாக வந்திருக்கிறேன் என நினைக்கிறேன். பொய்த்து போனதாவென்று தங்களுக்கு வந்த கமெண்டுகள் விடுவித்தால்தான் தெரியும். பார்க்கலாம்.!//

      உண்மைதான் நீங்க இம்முறை 1ஸ்ட் கிளாஸ் பெட்டியிலேயே ஏறிட்டீங்க ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் கமலா சிஸ்டர்..

      Delete
    3. நன்றி.. நன்றி என்னை முதல் வகுப்பு வண்டியில் ஏற்றி விட்டதற்கு..

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    படங்கள் அழகு. இப்படி பனி பொழிந்த இந்திய நகரில் சில சமயங்கள் இருந்ததுண்டு - சுற்றுலாப் பயணியாக... ஆனந்த அனுபவம் அது! எப்போதாவது பனிப்பொழிவு என்றால் ஓகே! இங்கேயும் இப்போது நல்ல குளிர்காலம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. இருக்கலாம் பார்த்திருப்பீங்க சுற்றுலாக்களில் அங்கும்.. ஆனா இது எப்பவும் கிடைக்காது, ஸ்னோ என்பது வேறு.. இது ஒருவித பனிப்பொழிவாகி கண்ணாடிப் பளிங்காயிட்டுது ஊரெல்லாம்.. ஸ்னோ பெரும்பாலும் சொஃப்ட்டாக இருக்கும்.

      ஓம் நாங்களும் நியூசில் பார்த்தோம் பிரித்தானியாவை விட இம்முறை டெல்லியில் குளிர் அதிகம் எனப் போட்டிருந்தார்கள்.. கிட்டத்தட்ட இப்போ நம் குளிர்தான் அங்கும் இருக்குது போலும்.

      மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  11. கிறிஸ்மஸ் தின வாழ்த்துகள்.

    கறண்ட்- கரண்ட்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      ஹா ஹா ஹா ஓகே புரொபிஸரே இனிக் கரண்ட்:)) கரட்:)...

      Delete
  12. //பெரிய ஸ்னோ ஸ்ரோம் வந்து, கறண்ட் இல்லாமல் தண்ணியில்லாமல் போய் சனமெல்லாம் ஹோட்டேலில் போய்த் தங்கி வந்த சம்பவம் நடந்துது, அப்போ நாங்களும் அங்கு போயிருந்தோம்.. அப்போ எடுத்த அழகிய:) படங்களில் சில..//

    துன்பமான வேளையிலும் இன்பம் தரும் காட்சிகள்.
    அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.

    கண்ணாடி பூக்கள், கண்ணாடி குச்சிகள் போல்பனி பொழிவு அருமை.
    பார்க்க அழகு, ஆனால் உடலை குத்தும் குளிர் இல்லே!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...

      ஸ்னோ கொட்டும்போது பொதுவா குளிராது, பின்னர் ரெண்டு மூன்று நாட்கள் தேங்கி இருக்கும்போதுதான் பயங்கரமாக குளிரும்.

      அது அந்நேரம் நான் கனடா போயிருந்தோம், அப்போ நாங்களும் வருவதை அறிஞ்சு எங்கள் அன்ரியாட்கள் தங்கள் மகளின் 21 ஆவது பேர்த்டேயை ஹோல் எடுட்த்து செய்ய [உறவினரோடு சின்னதாக] பிளான் பண்ணியிருந்தார்கள்.

      நைட் பேர்த்டே பார்ட்டி, காலையிலிருந்து கொட்டுது கொட்டுது காற்றோடு ஒரே கொட்டு... அப்போ புரியவில்லை, பார்ட்டியை கான்சல் பண்ணியிருக்கலாம்.. இல்லை வைப்போம் வைப்போம் என இழுபட்டு ஈவினிங் நாங்கள் அண்ணனின் வாகனத்தில் ஏறி ஹோல் போனோம்.. அண்ணன் வீட்டுக்கு பக்கத்திலதான் ஹோல்.. தூரத்து உறவினர்களை வர வேண்டாம் என்றே சொல்லி விட்டார்கள், பாவம் அன்ரியோ நிறைய ஃபூட் ஓடர் கொடுத்ததோடு, ரேஸ்ட்டாக இருக்கட்டுமே என நிறைய மட்டின் கறி வீட்டில் செய்து எடுத்து வந்திட்டா வெள்ளெனவே..

      நாங்கள் அண்ணனோடு ரோட்டில் இறங்கியதும் பார்த்தால்.. ரோட் லைட் எல்லாம் நின்றுபோச்சு.. அண்ணன் இப்படி விசயத்தில் கொஞ்சம் சுயநலமாக:)[சேஃப் ஆக செயல்படுவார்] அப்போ சொன்னார் இல்லை வேண்டாம் திரும்பிடலாம் என, வெளிக்கிட்டாச்சு போய்ப் பார்க்கலாமே என எல்லோரும் உள்ளே இருந்து உசார் கொடுக்க[பேர்ட்டே காரரும் பாவமெல்லோ].. சரி என ஹோல் வாசலில் ஒரு மாதிரி வானை உருட்டி உருட்டி கொண்டு போய் நிறுத்தினால், அந்த பில்டிங் மேல் கூரையில் இருந்து பென்னாம் பெரிய சத்தத்தோடு பெரீஈஈஈஈஈய ஒரு ஐஸ் கட்டி அப்படியே உடைந்து கீழே விழுந்துதா... அது காரிலோ இல்ல ஆளிலோ விழுந்திருந்தால் கதை சரி:)..

      அந்த சத்தத்தோடு அண்ணன் சொல்லிட்டார் வேண்டாம் திரும்புவோம் உள்ளே போக வேண்டாம் என, அக்கா அத்தானும் வந்திருந்தார்கள் நமக்கு முன்பே... அத்தான் இந்த விசயத்தில் என் கணவரைப்போல துணிஞ்சு இறங்குவார்...:).. அப்போ அவர் சொன்னார் இல்ல பிள்ளை பாவம் கொண்டு வந்த கேக் ஐ டக்கென வெட்டிப்போட்டு திரும்பிடலாம் என..

      அதனால உள்ளே ஓடி, ஜெனரேற்றரில் கரண்ட் இருந்துது, டக்குப் பக்கென கேக் கட் பண்ணி படமெடுத்துப் போட்டு, அப்படியே உணவுகளெல்லாம்.. 3,4 குடும்பங்கள் மட்டுமே.. அப்போ எல்லோருக்கும் அதனை பங்கு போட்டுக் குடுத்தனுப்பிப் போட்டு அவர்களும் ஊர்ந்து ஊர்ந்து:) வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தனர்.. அன்றைய நாளை மறக்கவே முடியாது:)).. ஆனா இப்படியான நிகழ்வுகள் நடக்கும்போது கும்பலாக இருக்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் பயம் தெரியாது...:)..

      Delete
    2. அனுபவம் பயங்கரம்.
      இறைஅருள் காப்பாற்றி விட்டது.மறக்க முடியாத நினைவுதான்.

      Delete
  13. "எதிரிய ஒழிக்க அவனை..." - நீங்க முதல்ல ஏஞ்சலினோட நட்பானீங்களா இல்லை ஏஞ்சலீன் உங்களோட முதல்ல நட்பானாங்களா?

    வேற காராணம் இல்லை..... சும்மாதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அஞ்சுதான் என்னை முதலில் தன் ஃபிரெண்டாக்கினவ:))... ஓ அப்போ இதுதான் காரணமோ?:) எனக்கு இப்படி ஓசிக்கத் தெரியல்லியே ஹா ஹா ஹா.. இன்று நைட் அல்லது நாளைக்கு அவ வந்திடுவா என நினைக்கிறேன்..:) வந்ததும் வெடி வெடிக்கும்:))

      Delete
  14. "கையில் சூலம் கொண்டோ" - இது உண்மையான வார்த்தை. கடவுள் மனித ரூபத்தில்தான் வருவார் (தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பது சாஸ்திரம்). கஷ்ட காலத்தில் உதவுபவன், பசிக்கும்போது அன்னமிடுபவன், குளிர்/மழைல கஷ்டப்படும்போது நமக்கு உடையோ இல்லை போர்வையோ தருபவனைவிட கடவுள் சிறந்தவராக இருந்துவிடமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. அதேதான் நெ.தமிழன் இதுபற்றி ஒரு கதை முன்பு எழுதியிருக்கிறேன், இப்போ கேட்டு விட்ட பாவத்துக்காக இதை நீங்க படிக்கோணும்:).. இல்லை எனில் கெட்ட கெட்ட கனவாகக் கண்டு கட்டிலால விழுவீங்க ஜொள்ளிட்டேன்ன்:)..

      https://gokisha.blogspot.com/2014/11/blog-post_18.html

      Delete
    2. ஹா ஹா ஹா இங்கு ஒரு உண்மையை உளறப்போறேன்ன்ன்:)) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)).. இப்போ கோபு அண்ணனும் இந்த லிங்கில் போய் நெ.தமிழன் ஸ்வாமிக்கு[அவரது முறையில:] பதில் போட்டிருக்கிறார் ஹா ஹா ஹா:)).. ஹையோ என்னை அடிச்சுக் கலைக்கப்போறார் கோபு அண்ணன்... அவர் இப்போ யூ ரியூப்பில எல்லோ பிஸியாக இருக்கிறார் தெரியுமோ:)) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:).

      Delete
    3. அதிரா... யூ டியூபில் அவர் பிஸியா இருக்கறார். அவர்கிட்ட, காணொளி வெளியிடுங்கோ, இப்போ வெறும்ன பேச்சு மட்டும்தான் வருதுன்னு சொன்னேன்.

      அவரென்ன நம்மை மாதிரி 'படம் காட்டப்' பயந்தவரா?

      Delete
    4. @நெ தமிழன்
      ///அவரென்ன நம்மை மாதிரி 'படம் காட்டப்' பயந்தவரா///
      ஹா ஹா ஹா அப்படிப் போடுங்கோ:)... ஹையோ இனி நாங்க இருந்த பாடில்லை:).. ஹா ஹா ஹா கோபு அண்ணனை நேரில் கண்டு களிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை ஹா ஹா ஹா:)..

      Delete
  15. 'கணவனை'ப் பற்றி இவ்வளவு கிண்டலடிக்கறாங்களே..... மனைவியை நம்பித்தானே கணவன் குடும்பத்துக்காக ஆபீசுல அல்லாடறான். (உடனே மனசில் சமீபத்திய அபிராமி-பிரியாணிக் கடைக்காரனோடு நட்பு-தன் இரண்டு குழந்தைகளைக் கொன்றது-கணவன் நல்லவேளையாக தப்பித்தது ஞாபகம் வருது)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதில ஒன்றை நீங்க புறி:)ஞ்ஞிக்கோணும்:))).. இந்த மீம்ஸ் எல்லாம் போடுவதே ஆண்கள்தானே:) .. ஆடு கத்தியை எடுத்து வந்து வெட்டு வெட்டு என்றதாமே அக்கதையாவெல்லோ இருக்குது இது...:) ஹா ஹா ஹா...

      மற்றும்படி மனைவிமாரின் கொடுமைகளும் எவ்வளவோ இருக்கிறதே...:). என்னைப்பொறுத்து இக்காலத்தில் கணவன்மார்கள்தான் பாவம் என்பேன்:).. நிறையவே விட்டுக் கொடுக்கிறார்கள்.. நிறையப் பணிஞ்சு போகிறார்கள்.. நிறைய வேலைகளில் பங்கெடுக்கிறார்கள்.. அதனால மனைவிகளுக்கு தலைக்கனம் அதிகமாகி நிறைய இடங்களில் தப்பு நடக்கிறது:(.

      Delete
  16. 'மாலைக் கருக்கல்' என்பதைப் படித்தபோது இந்தப் பாடல்தான் மனசில் வந்தது.

    https://www.youtube.com/watch?v=6rpew8KQmHQ

    ReplyDelete
    Replies
    1. மாலைக் கருக்கல் என்றதும் எனக்கும் இதே பாடல்தான் நினைவுக்கு வந்தது. மிக இனிமையான பாடல். சோக பாடல் கொஞ்சம் அஇனிமை !!

      Delete
    2. ஓம் இப்பாடல் தான் மாலை என்றதும் வருது, ஆனா இதன் ஹீரோயினைப் பார்த்தால் கில்லர்ஜி இப்போ ரென்ஷனாகிடுவார் ஹா ஹா ஹா.. அவருக்கு அவவைப் பிடிக்காதெல்லோ:))

      Delete
  17. எலெக்டிரிக் லெக் மசாஜர் - ஆஹா..... எனக்கு இப்போது உடனடித் தேவையானது அல்லவா?

    ஆரம்ப ஜோர்ல நிறைய தடவை, தினமும் ரெகுலராக உபயோகப்படுத்துவீங்க. நினைவு வச்சிக்கிட்டு, 6 மாதம் கழித்துச் சொல்லுங்க. எவ்வளவு நாட்கள் உபயோகப்படுத்தினீங்க என்று.

    ReplyDelete
    Replies
    1. ஆரம்ப ஜோர்ல....

      ஆமாம் அதுவும் உண்மைதான். ஆர்வமா வாங்கி வச்சுட்டு அப்புறம் அப்படியே போட்டுடுவோம். ஆனால் நான் வைத்திருப்பதெல்லாம் கையில் வைத்து நாம் ஆங்காங்கே வைத்துக்கொள்ளவேண்டும். இப்படி அமைதியா அதில் கால்களை இருத்தி அமர்ந்திருத்தல் சுகமாயிருக்கும் என்று தோன்றியது.

      Delete
    2. வெளிநாடுகள்ல, மால் களில், இதுபோன்று இருக்கும். குறைந்த பட்ச காசைப் போட்டால் (40-60 ரூபாய்), 5 நிமிஷம் மசாஜ் பண்ணிவிடும். இது அனேகமா எல்லா இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.

      அதை விடுங்கள், தி.நகரில் பாண்டிபஜார், வாணிமஹால் இடையில் ஒரு ஹோட்டலில் சில வருடங்களுக்கு முன், ஆபீஸ் விஷயமா வந்திருந்தபோது தங்கினேன். அங்க ஒவ்வொரு ரூமுக்கும் இதுபோன்று மஸாஜ் செய்துகொள்ளும் சேர் வைத்திருந்தார்கள். ஆனா பாருங்க, எனக்கு நேரமே இல்லாததால், அதனை உபயோகித்துப் பார்க்கும் ஆசை அப்போ இல்லை (நான் இருந்த ஊர்லதான் எப்போவும் இதனைப் பார்க்கிறேனே அதனால்)

      என்னிடமும் ஹேண்ட் மசாஜர் ரொம்ப வருஷமா சும்மா இருக்கு. இடுப்பு மசாஜர் அப்போ அப்போ உபயோகப்படுத்துவேன் (Tummy குறையும் என்ற கான்சப்ட், ஆனால் குறைந்தமாதிரி எனக்குத் தோன்றியதே இல்லை).

      மசாஜரை விடுங்கள்... நிறைய வீடுகளில் டிரெட் மில் போன்ற எக்சர்சைஸ் எக்யுப்மெண்ட்ஸ், துணி காயப்போடும் ஸ்டாண்ட் ஆகத்தான் இருக்கு.

      Delete
    3. //எலெக்டிரிக் லெக் மசாஜர் - ஆஹா..... எனக்கு இப்போது உடனடித் தேவையானது அல்லவா?//
      உடனேயே வாங்கிடுங்கோ... நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையைத்தவிர வேறில்லை நம்பி வாங்குங்கோ நெ.தமிழன்.

      உண்மையில் எனக்கு வோக் போனால் கால் உழையும்.. ஆராவது எனக்கு கால் பிடிச்சு விடுவதே வீட்டில் பெரிய தொல்லையாக இருக்கும்:) ஹா ஹா ஹா.. அத்தோடு எனக்கு சில குளிர்நாட்களில் அல்லது வெள்ளைப்பூசணிவகை, சுரக்காய் வகை .. சில பழங்கள் சாப்பிட்டால் உள்ளங்கால் ஐஸ்போல குளிரும்.. சொக்ஸ் போட்டு அடங்காது...

      அதனால இதில ஹீட்டரும் இருக்கு.. ஹீட் பண்ணிக்கொண்டே மசாஜ் பண்ணுது.. அதனால சூப்பரா இருக்கு... அதிலும் பின் கால் தசையை நன்கு நசித்து மசாஜ் பண்ணுது.. சிலசமயம் நோவது போலவும் வருது அவ்ளோ மசாஜ் பண்ணுதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      இதில் இன்னொரு முக்கியமான விசயம் கேள்விப்பட்டேன், இது “சுவீட்” ஆட்களுக்கு:)[நான் இதில் அடக்கமில்லை:)].. மிக நல்லதாம், அதாவது சுகர் இருப்போருக்கு அதிகம் கால் பிரச்சனை வருகிறதெல்லோ அதாவது நரம்புகள் இயங்காமல் ரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது,[பலருக்கும் கால் மரத்துப் போகிறதாம் அதனால சிலசமயம் உணர்வின்றி கீழே விழுந்துவிடுகிறார்கள்.. கால் தடக்குப் பட்டு] அவர்கள் இப்படி டெய்லி மசாஜ் பண்ணுவதால், ரத்த ஓட்டம் அதிகமாகி கால் பிரச்சனை சீராகும்.

      உண்மைதான் நெ.தமிழன் பலது ஆரம்பம் பாவிப்போம் பின்பு விட்டிடுவோம், ஆனா எக்ஸசைஸ் மெசின்கள்தான் அதிகம் அப்படி.. இது நமக்கு வேலை இல்லையெல்லோ.. அதனால பாவிப்பேன் எனத்தான் நினைக்கிறேன்.

      Delete
    4. @ஸ்ரீராம்
      //இப்படி அமைதியா அதில் கால்களை இருத்தி அமர்ந்திருத்தல் சுகமாயிருக்கும் என்று தோன்றியது.//
      உண்மைதான்.. சுவிஜ் ஐப் போட்டால் பத்து நிமிடம் மசாஜ் பண்ணுது.. நாம் ரிவி பார்க்கலாம் கொமெண்ட்ஸ் போடலாம்.. ஸ்டோரி படிக்கலாம்:)) காலைக் கொடுத்துவிட்டு..
      எதுக்கும் ஸ்ரீராம் ..ஷோ றூம் போய் நேரில் பார்த்தபின் வாங்குங்கோ...

      Delete
    5. @நெ.த
      //இது அனேகமா எல்லா இடங்களிலும் பார்த்திருக்கிறேன். //
      இங்கு பெரும்பாலும் எல்லா மோல்களிலும் இருக்குது.. மசாஜ்சிங் செயார்ர்.. அது முதுகு எல்லாம் சொறிஞ்சு விடும்.. கூச்சம் காட்டும்.. ஹா ஹா ஹா அப்படி ஒன்று வாங்க விருப்பம் ஆனா இடம் பிடிக்கும்..

      //(Tummy குறையும் என்ற கான்சப்ட், ஆனால் குறைந்தமாதிரி எனக்குத் தோன்றியதே இல்லை).///
      ஹா ஹா ஹா சுவீட்டையும் சாப்பிட்டு இதையும் எதிர்பார்க்கலாமோ?:).

      //நிறைய வீடுகளில் டிரெட் மில் போன்ற எக்சர்சைஸ் எக்யுப்மெண்ட்ஸ், துணி காயப்போடும் ஸ்டாண்ட் ஆகத்தான் இருக்கு//
      இது உண்மைதான், ஆனா இதனை உடைகவேணும் என்றே நான் கிழமையில் 2,3 நாட்களாவது நடப்பேன்.. டெய்லி காலை 10 நிமிடம் மாலை 10 நிமிடம் நடக்கோணும் என லிஸ்ட் போட்டேன்ன் ஆனா அதை ஃபலோ பண்ண முடியவில்லை:).. இப்போ குளிருக்கு வெளியே நடக்க முடியாது என்பதால, இங்கு ட்ரெட் மில் பிரயோசனம்...

      Delete
  18. //அதை அறிஞ்சு அஞ்சு அனுப்பிய படம்:)))// - உங்களை அப்ரிஷியேட் பண்ணும்விதமா ஏஞ்சலின் அந்தப் படத்தை அனுப்பினதாத் தெரியலையே..... ஒரு வேளை பொறாறாறாறாமையோ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. பொறாமையா மீக்கா :) ஹையோ எனக்கு அந்த ஹேர் ட்ரெஸ்ஸிங் மேக்கப் போடும் கடைங்க பக்கம் போகவே பயம் .மூச்சு அடைக்கும் :) எனக்கு லோக்கல் அனஸ்தேஷியா அந்த கெமிக்கல்ஸ் தான் :)

      Delete
  19. பனிப் படங்களை மிக மிக ரசித்தேன்..... அந்த மாதிரி இடங்களுக்கு இந்த ஜென்மத்தில் போகும் வாய்ப்பு கிடைக்குமான்னு யோசிக்கிறேன்.

    எனக்கு பனி சூழ்ந்த இடங்களுக்கு குறைந்தது இரண்டு வாரங்களாவது போய் இருக்கணும்னு ஆசை. இன்னும் அதிகப் பனி... ஆஹா... நினைக்கவே சந்தோஷம் கொப்பளிக்கிறது.

    படங்கள் நல்லா இடுக்கப்பட்டிருக்கின்றன (நீங்க எடுத்தீங்களான்னு சந்தேகம்தான்)

    ReplyDelete
    Replies
    1. இது பனி என்பதைத்தாண்டி ஒருவித்தியாசம் நெ.தமிழன், கனடா ஆட்கள்கூட இப்படிக் காணவில்லையாம்.. பனி எனில் சொவ்ட்டா குமிஞ்சிருக்கும் பின்பு கல்லுப்போலாகும்..

      இது அப்படியில்லை, அப்படியே மரங்கள்.. வீடுகளில் கண்ணாடிபோல தொங்கியது.. பார்க்க சூப்பரோ சூப்பர்ர்....

      //படங்கள் நல்லா இடுக்கப்பட்டிருக்கின்றன (நீங்க எடுத்தீங்களான்னு சந்தேகம்தான்)//

      ஜொள்ளட்டோ ஜொள்ளட்டோ.. இந்தப் பனிப்படங்கள் மட்டும் மீ எடுக்கவில்லை, நான் போகவில்லை வெளியே.. படத்தில் இருப்பது அண்ணாவின் மகளும் எங்கட சின்னவரும்... :)

      Delete
    2. அப்போ நாங்கள்லாம் உங்க பதிவை கூர்ந்து படிக்கிறோம்னு ஒத்துக்கோங்க.

      அதுனாலதான் நீங்க எடுக்கற படங்களுக்கும் மற்றவங்க படங்களுக்கும் உடனடியா வித்தியாசம் தெரியுது. ஹாஹா.

      அடுத்த ஜெனெரேஷன் படங்கள் நம்மைவிட நல்லாவே எடுப்பாங்க(க்கா)- ஏன் சீராளன் மட்டும்தான் இப்படிச் சொல்லணுமா?)

      Delete
    3. ///
      அப்போ நாங்கள்லாம் உங்க பதிவை கூர்ந்து படிக்கிறோம்னு ஒத்துக்கோங்க///
      ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் மீ ரன்னிங்ங்ங் 200 மைல் பேர் அவரில:) ஹா ஹா ஹா:).... காகம் இருக்கப் பனம்ப்ழம் விழுந்த கதையா இருக்குமோ:)..

      Delete
  20. //வைரவரை நேர்ந்துகொண்டு மளமளவென ஆரம்பிச்சேன் சூப்பரா வந்துது.. அவவுக்கும் ஹப்பி:) எப்பூடி என் ஸ்டைல்:)..//

    வைரவருக்கு என்ன நேர்ந்து கொண்டீர்கள் அதிரா? வைரவேலா, வைரகிரீடமா?
    பின்னல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //வைரவருக்கு என்ன நேர்ந்து கொண்டீர்கள் அதிரா? வைரவேலா, வைரகிரீடமா?//
      ஹா ஹா ஹா கோமதி அக்கா அது வைரவர்தான் நினைவு வச்சிருப்பார்:)).

      Delete
  21. //அப்படியே உள்ளங்காலிலிருந்து, முழங்கால் பின் பகுதி வரை உருட்டி உருட்டி மசாஜ் பண்ணி விடுகிறது...பிசைந்து பிசைந்து விடுகிறது:)..//

    நல்லா இருக்கே!

    ReplyDelete
  22. டிசம்பரில் பூத்தபூ அழகு.

    ReplyDelete
    Replies
    1. இல்ல கோமதி அக்கா.. அது போனவருடம் பூத்திருப்பது.. இங்கு போஸ்ட்டில போட்டேன் அப்படங்கள்.. இம்முறை பூத்திருப்பது குட்டியா வலது பக்கம் பூத்திருப்பது:).. பாருங்கோ ஒரு பூ விதையில்கூட எப்படிப் பேய்க்காட்டுகிறார்கள்.. முதன்முதலில்தான் அழகா கலரா பெரிசா பூக்குது கர்ர்ர்ர்:).

      Delete
  23. இப்போ எங்கள் வீட்டு கிரிஸ்மஸ் ரீ...
    அதிராவின் சீனி அரியதரம் செய்யாமல்:)
    ஏன் அப்படி அதிராவின் சீனி அரிதாரம் செய்து மற்றவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் பற்கள் ஏதும் சேதம் அடைந்தால் என்ன செய்வது என்று அஞ்சுகிறாறோ அஞ்சு

    கிரிஸ்மஸ் கொண்டாடும் அஞ்சுவுக்கும்..
    மற்றும் அம்பேரிக்கா ட்றுத்துக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

    நானும் சொல்லிக்கிறேன் உங்களுடன் சேர்ந்து. வாழ்த்துக்கள் இருவருக்கும், இருவர் குடும்பத்தினர்களுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //ஏன் அப்படி அதிராவின் சீனி அரிதாரம் செய்து மற்றவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் பற்கள் ஏதும் சேதம் அடைந்தால் என்ன செய்வது என்று அஞ்சுகிறாறோ அஞ்சு//
      ஹா ஹா ஹா கர்ர்:) அப்படி இல்லை கோமதி அக்கா:), சரியாச் செய்யாட்டில் நான் தேம்ஸ்ல தள்ளிப்போடுவேன் எல்லோ:) அந்தப்பயம்:)) அவவுக்கு:).

      மிக்க நன்றி.

      Delete
  24. டெய்சிப்பிள்ளை வீட்டுக்குள் இருக்கும் அதன் வீட்டைப்பார்த்தே பயபடுகிறார்களே!
    வெளியே வைத்தால் என்ன செய்வார்.

    ReplyDelete
    Replies
    1. இது பெரிய கதை கோமதி அக்கா.. எங்கட டெய்சிப்பிள்ளைக்கு எப்பவும் வெளியே போகோணும் உள்ளே வரோணும்.. என்ன குள்ர் மழை என்றாலும்.. அப்போ நாங்கள் வேர்க்குக்கு அல்லது எங்காவது வெளியே போய் விட்டால், திரும்பி வரும்போது குளிரில நடுங்கிக் கொண்டு வெயிட் பண்ணுவா நமக்காக, அதனால அஞ்சுதான் சொன்னா இப்படி கார்டின் ஹவுஸ் வாங்கி வாசலில் வைத்து விட்டால் அவ வெயிட் பண்ணுவா அதுக்குள் என.. அதனாலதான் வாங்கினோம்.. ஆனா அவவுக்கு பயமாக இருக்கு.. சிலசமயம் வெளியே வைத்தால் ஏறி இருக்கக்கூடும்.

      Delete
  25. மிக்ஸியை தூக்கிக் கொண்டு அலைவது சிரிப்பி வந்து விட்டது.
    ஊசி இணைப்பு நல்ல யோசனை.
    ஊசிக்குறிப்பு கடவுளை காண்பவர்கள் பாக்கியவான்கள்.
    ஊசிக்குறிப்பு அருமை.

    ReplyDelete
  26. Replies
    1. உங்களுக்கும் பிடிக்காதோ இப்பாடல்.. எனக்கு என்னமோ அதில் சொர்க்கம் என வருவதால ஒரு கவர்ச்சி:)) ஹா ஹா ஹா..

      அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  27. எப்போ போஸ்ட் போட்டீங்க...ஹோ இப்ப தினம் தினம் போடுவேன்னு சொன்னதாலா..ஆஹா

    உங்க ஹேர் ஸ்டைலும்,. உங்க அக்கா மகளுக்குச் செஞ்ச ஹேர் ஸ்டைலும் ஜூப்பர்...எனக்கு உங்க ஹேர் ஸ்டைல் பிடிச்சுது...

    பனிப் படங்கள் எல்லாம் செம...ஹையோ என்ன அழகு...அதுவும் ஆப்பிள்கள் எதோ கண்ணாடிக்குள் இருப்பது போல...அது ஆப்பிள்தானே? இல்லையோ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ... யேஏஏஏஏஏஏச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் இனிமேல் டெய்லி போஸ்ட்தேன்ன்ன்ன்:)) பாருங்கோ நாளையில இருந்து அஞ்சுவும் ஸ்ராட் பண்ணுவாவாக்கும்:)) ஹா ஹா ஹா:)..

      //உங்க ஹேர் ஸ்டைலும்,//
      ஹா ஹா ஹா நன்னி நன்னி...

      அது கிட்ட யூஊஊஊம்:) பண்ணி எடுத்திருக்கு அவை செரிப்பழங்கள்...

      Delete
  28. மெரி கிறித்துமஸ்!!! ஏஞ்சலுக்கு, உங்களுக்கும் எல்லோருக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. [im]http://image.blingee.com/images15/content/output/000/000/000/49f/336263056_1888531.gif[/im]

      Delete
  29. கால் மசாஜர் கேள்விப்பட்டேன்...இங்க படமும் போட்டிருக்கீங்க...

    ஆமாம் வயசானவங்களுக்கு கால் மசாஜர் தேவைதானே....(கீதாக்கா, நெல்லை, ஸ்ரீராம் என்ன சொல்லுறீங்க...ஆமாம் கீதான்னு போடுங்க!!!!!ஹா ஹா ஹா)

    டெய்சிப் பிள்ளையின் வீடு ரொம்ப அழகா இருக்கு....அதிரா...க்யூட் ரசித்தேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஸ்ரீராம் என்ன சொல்லுறீங்க...ஆமாம் கீதான்னு போடுங்க!!//

      ஹி ஹி ஹி......

      Delete
    2. கீதா ரங்கன்... விளையாட்டுக்கும் அப்படிச் சொல்லாதீங்க. இந்த ஊருக்கு வந்தப் பிறகு எனக்கு ஒவ்வொரு பார்ட்டும் ரிப்பேர் ஆயிக்கிட்டிருக்கு. 7-8 மாசமா குதிகால் ரிப்பேர். இப்போ எல்லாரும் சொல்றாங்க, ரொம்ப வருஷமா டிரெட் மில், ரொம்ப தூர நடைப்பயிற்சி இதுதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம்னு. நான் பல சமயங்களில் ஒரு நாளுக்கு 8-10 கிலோமீட்டர் நடைப்பயிற்சி அல்லது 1 மணி நேரம் டிரெட் மில் பண்ணுவேன்.

      Delete
    3. //கால் மசாஜர் கேள்விப்பட்டேன்...இங்க படமும் போட்டிருக்கீங்க...
      //
      இதில எத்தனையோ விதமா இருக்குது கீதா, காலுக்குள் தண்ணி விட்டு தண்ணியை சூடாக்கியபடி மசாஜ் பண்ணுவதும் இருக்கு.. கால் இல்லை பாதம்.

      //ஆமாம் வயசானவங்களுக்கு கால் மசாஜர் தேவைதானே....(கீதாக்கா, நெல்லை, ஸ்ரீராம் என்ன சொல்லுறீங்க...ஆமாம் கீதான்னு போடுங்க!!!!!ஹா ஹா ஹா)///

      ஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீராம் இல்லை எனத் தலை ஆட்டிட்டாரேஎ ஊஊஊஊஊஊஊ லலலாஆஆஆஆஆஆ:) அதாவது வந்தூஊஊஊஉ ஹா ஹா ஹா என்றால் ஆமாம் என அர்த்தம் ஹிஹிஹி என்றால் அதுக்கு எதிர்ப்பதமாக்கும்..பிக்கோஸ் மீக்கு டமில்ல டி எல்லோ:))..

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஉ..

      நன்றி கீதா .. டெய்சிப்பிள்ளையிடம் தகவல் சொல்லிடுறேன்:)..

      Delete
    4. எதுவும் ஓவராக செய்யக்கூடாதுதானே நெ.தமிழன்.. நாங்கள் 2004 இல் இருந்தே ரெட்மில் வச்சிருக்கிறோம்.. வாங்கிய உடனேயே என் கணவரின் அட்வைஸ்.. ஓடாதீங்கோ.. ஸ்பீட் வோக் போதும் என்பதே.. இதில் ஓடினால் முழங்கால் தேய்ந்து வலி வந்திடும்.. நடைகூட நான் விறுக்கு விறுக்கென நடக்க மாட்டேன்ன்.. என்சோய் பண்ணிக்கொண்டே நடப்பேனாக்கும்...

      இந்த விறுக் விறுக்குக்கு:) ஜொந்தக்காரர் அஞ்சுவாக்கும்:)) ஹா ஹா ஹா.

      Delete
    5. / ரொம்ப தூர நடைப்பயிற்சி இதுதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம்னு. நான் பல சமயங்களில் ஒரு நாளுக்கு 8-10 கிலோமீட்டர் நடைப்பயிற்சி அல்லது 1 மணி நேரம் டிரெட் மில் பண்ணுவேன்.//

      கன்னாபின்னாவென வலியுடன் மொழிகிறேன் நெல்லைத்தமிழன் ..

      அதே தவறை நானும் செய்த்து நவம்பர் லருந்து கஷ்டப்படறேன் .அதுவும் ஆளில்லா ரோட் என்பதால் வேகமா நடப்பேன் இந்த pedometer ஆப் போட்டு ..கலோரிஸ் குறைய குறைய வெறி ஏறும் அப்படி செஞ்சி இப்போ :( டாக்ட்ரா சொல்லிட்டாங்க கொஞ்சம் நாள் அடங்கி கிடைக்க சொல்லி .

      Delete
    6. உண்மை, விருட், விருட்டுனு நடந்து தான் நானும் என் கால்களை மோசமாக்கிக் கொண்டேன். இது அனுபவபூர்வமாய் உணர்ந்திருக்கேன். அப்போல்லாம் ரொம்பப் பெருமையா இருக்கும். :(

      Delete
  30. டெய்சிப் பிள்ளை வீட்டிற்குள் போகாமல் வீட்டின் மேலேறி நிக்கிறா பார்த்ததும் சிரிப்பு வந்தது. க்யூட்டா இருக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆராட்சி பண்ணுறாவாம்ம்.. ஏதோ இது தனக்கானதில்லை என்பதுபோல டோண்ட் கெயாராக இருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      Delete
  31. உங்கள் அக்கா மகள் வீணை வாசிப்பது ஆஹா....சூப்பர்..இப்போதும் தொடர்கிறாரா? என் மகனும் வீணை வாசிப்பான் ஆனால் கல்லூரி போன பிறகு தொடர முடியவில்லை. இனி செட்டில் ஆன பிறகுதான் வாசிக்கனும் அவன் வீணை சென்னையில் இருக்கு. அவன் செட்டில் ஆன பிறகு அங்கு கொண்டு போணும்...

    வீணை வாசிப்பது ரொம்ப நல்ல விஷயம் அதிரா...அவருக்கு எங்கள் வாழ்த்துகள் சொல்லிடுங்க அதிரா...தொடர்ந்து வாசிக்கச் சொல்லி கச்சேரி எல்லாம் கொடுக்கச் சொல்லுங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் அக்கா மகள் வீணை வாசிப்பது ஆஹா....சூப்பர்..இப்போதும் தொடர்கிறாரா? //
      ஓம் கீதா.. அவவும் எங்கள் மூத்தவரும் ஒரே வயதுக்காரர்கள்.. இப்போ யுனி ஸ்ராட் பண்ணியிருக்கிறா.. இன்னும் வீணை தொடருது.. அது மட்டுமில்லை டான்ஸ், மியூசிக் இரண்டுமே.. இப்பவும் கிளாஸ் போகிறா, ஆடுகிறா நிகழ்ச்சிகளில்.. அரங்கேற்றம் வைக்கும் பிளானில் இருக்கிறார்கள். என்னாகுமோ தெரியவில்லை.

      அவ வீணை பழகுவது இந்திய வீணை வித்துவான்.. பார்க்க ஒருமாதிரி:) இருப்பாரே அவரிடம்தான்:).. அவரது தலைமையில் வேறு ஆட்கள் அங்கு பழக்குவார்களாம், பின்பு வருடத்தில் ஒரு தடவையோ என்னமோ அவரும் நேரில் வருவாராம்.. ஸ்கைப்பிலும் இடைக்கிடை சொல்லிக் கொடுப்பாராம்.

      ஓ மகனையும் வீட்டிலாவது இடைக்கிடை வாசிக்க சொல்லுங்கோ.. வெளிநாட்டில் பெரியாட்களும் கோயில் நிகழ்வுகளில் வாசிப்பார்கள் சும்மா.

      எனக்கு பழகோணும் என ரொம்ப ஆசை.. ஆனா வயலின் கொஞ்சக் காலம் பழகினேன்.. நாட்டுப் பிரச்சனையால எதையும் ஒழுங்கா தொடர முடியாமல் போச்ச்ச்ச்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆனா டான்ஸ் மட்டும் ஸ்கூல் முடியும்வரை பழகினேன்.

      Delete
  32. அந்த மலர் இப்பத்தான் பூத்து முடிச்சதா? போன வருடம் போட்டது நினைவிருக்கு..பாருங்க டேஸ் ஆர் காலப்பிங்க்!! என்ன ஃபாஸ்ட்!!..

    .அழகு கலர் இல்லையா..சூப்பர்...கலர் என்ன அழகு!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா அதில் வலது பக்கம் இருக்கும் குட்டி வெள்ளைதான் இவ்வருடத்தையது:) ஒப்பிட்டுப் பார்ப்பதற்கே பழசையும் போட்டேன்.

      Delete
  33. மிக்சிய எடுத்துட்டு வெளிய போனார்// ஹா ஹா ஹா நினைச்சேன்...வேறு ஒன்றும் நினைவுக்கு வந்துச்சு...

    அது சரி இன்னும் அந்த மனைவி லொக்கேஷன் ஆப் வைச்சுக்கலை போல நல்ல காலம் தப்பினார் கணவர்...

    அது ஒரு ஆப் இருக்காம்...நாம் எங்கிருக்கு....அது வீட்டில் பல பிரச்சனைகளைக் கொண்டு வரும்னு அந்த ஆப் க்குத் தடையும் போட்டதா கேள்விப்பட்டேன் ஆனால் இந்த டெக் உலகில அப்படித் தடை போட முடியுமா என்னன்னு யோசனை வந்துச்சு...அந்த ஆப் நல்ல ஆப்பு வைக்கும்...ஹா ஹா அஹ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அது சரி இன்னும் அந்த மனைவி லொக்கேஷன் ஆப் வைச்சுக்கலை போல//

      ஹா ஹா ஹா இப்போ எல்லோரிடமும் பாஸ்வேர்ட் தானே அதனால எந்த அப் ஐயும் கள்ளமாப் போட்டிட முடியாதே:)).. நல்ல குறட்டை விட்டு தூங்கும் கணவர் எனில் மட்டும் கையைப் பிடிச்சு பிங்கர் ஃபிரிண்ட் வச்சு திறக்கலாம் ஹா ஹா ஹா..

      அந்த அப் இருந்துது கீதா, முக்கியமா பிள்ளைகளுக்காக போட்டுக் குடுக்க நல்லது... ஆனா இப்போ இல்லை என நினைக்கிறேன் இங்கு யாரும் பாவிப்பதாக தெரியவில்லை.

      ஆனா இந்தியாவில் ஓட்டோவில் ரக்‌ஷியில் பெண்களை கடத்துவது பல பிரச்சனைகள் தோன்றியதால், பெற்றோர் அந்த அப் ஒன்று போட்டுக் குடுக்கிறார்களாம்.. சேஃப்ட்டிக்காக.. ஆனா பெண் பிள்ளைகள் வேர்க்க்கு வந்ததும், கோல் ஃபோவேர்ட் குடுத்து இன்னொரு மொபைலை கள்ளமாக வைத்துக் கொண்டு, மற்றதை ஒபிஸில் வைத்துப் போட்டு சுற்றுவார்களாம் ஹா ஹா ஹா பாருங்கோ உலகம் எப்படி போகுதென:)..

      Delete
  34. கிறிஸ்துமஸ் ட்ரீ அழகா இருக்கு. லைட்டிங்கோட!!..(வெள்ளை வெள்ளையா அரிதாரம் பூசினாப்போல இருக்கே ஹிஹிஹிஹி)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அரிதாரத்தைப் பூச ஆசைஈஈஈ:)).. மிக்க நன்றி.

      Delete
  35. கிறிஸ்துமஸுக்கு ட்ரீல கிஃப்ட் தொங்க விடலயா? இல்ல என் கண்ணுக்குத் தெரியலையோ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கிவ்ஃப் எல்லாம் கீழேதான் மர அடியில் வைப்பது கீதா, பக் பண்ணி.. வச்சிருக்குது பாருங்கொ நிலத்திலே..

      Delete
  36. உங்கள் அக்கா மகளிற்கு நீங்கள் போட்ட ஹேர் ஸ்டைல் போல கிட்டத்தட்ட நான் பி ஏ படிக்கும் போது என் தோழிக்கு ஹேர் ஸ்டைல் போட்டியில் போட்டுவிட்டேன் ஆனால் அவள் முடியை பிரித்து சின்னச் சின்னதாகப் பின்னி, நடுவில் ராக்குடி வைத்து அதைச் சுற்றி கொண்டை போட்டு, சின்ன பின்னல்கள் கொண்டையிலிருந்து தொங்குவது போலவும், கோண்டைக்கு க்ரீடம் போல மேலே மடித்து இருப்பது போல மேலே போட்ட சின்னப் பின்னல்களை அப்படி மடித்துப் போட்டு வெள்ளைப் பாசியும், ப்ளாஸ்டிக் பிங்க் பூவும் ஆங்காங்கே பின் செய்து என்று போட்டுவிட்டேன்....

    கீதா

    ReplyDelete
  37. அந்தப் பாட்டில் வரிகள் வார்த்தைகள் சரிதானா அதிரா...நானும் தேடிப் பார்த்தேன் வேறு வேறு மாலைக்கருக்கலில் பாட்டு எல்லாம் வருது ஆனால் இந்தப் பாடல் வரலை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வரிகள் சரிதான்.. நான் முடிந்தால் பின்பு அப்பாடலை ரெக்கோர்ட் பண்ணி இங்கு போடப் பார்க்கிறேன்ன்.. கிடைக்காட்டில்.. இன்னும் டீப்பாக தேடவில்லை.

      Delete
  38. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு ரெண்டும் நல்லாருக்கு அதிரா...

    ஊசிக்குறிப்பு செம...அதே அதே அதே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் கீதா அனைத்துக்கும்.

      Delete
  39. அக்கா மகளுக்கு செய்து விட்ட கூந்தல் அலங்காரம் அட்டகாசம். பின்னியெடுத்து விட்டீர்கள்.
    ஊசிக்குறிப்புகள் பலே!
    டொரொண்டோ ஸ்னோ ஸ்டாராமை என்னால் ரசிக்க முடியவில்லை. அங்கிருக்கும் என் மகள், மருமகன், பேத்தி குளிரில் என்ன கஷ்டப்படுவார்களோ என்று தோன்றுகிறது. 😙

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ... எப்பவாவதுதான் எட்டிப் பார்க்கிறீங்க கர்ர்:).

      இல்லை பானுமதி அக்கா இப்படி அடிக்கடி வராது.. அதுதான் சொன்னேனே அது 30 வருடங்களுக்கோ என்னமோ பின்பு வந்ததாம் அப்படி.

      மற்றும்படி வழமையாக அங்கு ஸ்னோக் கொட்டும்தானே அங்குள்ளவர்களுக்கு அது பழகி விட்டது.. அதனால கவலைப்பட ஒன்றுமில்லை.

      மிக்க நன்றி.

      Delete
  40. ஆவ்வ்வ்வ்வ்வ் மீ வந்திட்டேன்ன்ன்ன்
    [im] http://image.blingee.com/images18/content/output/000/000/000/71e/699508174_1936992.gif[/im]

    ReplyDelete
  41. கனடா படங்கள் அனைத்தும் ஸூப்பர்.
    மிக்ஸி நகைச்சுவை ரசிக்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி பிறகு வருகிறேன் எனச் சொன்னதும்:), ஆனா இம்முறை பெரிசா ஏதோ சொல்லப் போகிறார் என நினைச்சிருந்தால்ல்.. இப்பூடி ஒற்றை வரியில போட்டு விட்டிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  42. வணக்கம் பூசாரே ! முதலில் எல்லோருக்கும் இனிய நத்தார்தின நல்வாழ்த்துகள் ! வாழ்க நலம் !

    அருமையான படங்கள் பாடலும் அருமை ஊசிக் குறிப்பு ஊசி இணைப்புகள் எல்லாம் நன்றே அதிலும் சிகை அலங்காரம் அருமையிலும் அருமை ஒண்ணே ஒண்ணுதான் சரியாப்படல்ல அந்தப் சோம்பேறி இயந்திரம்(எலக்றிக் லெக் மசாஜ்ஜர்....)அவ்வ்வ்வவ்

    மின்னலின் அடிபட மேகம்
    ..மிகைப்பட அழுததும் மண்ணில்
    புன்னையும் மல்லியும் பூத்துப்
    ..பொலிந்தது போலொரு காட்சி
    தன்னிலை இழந்ததும் தண்டில்
    ..தாங்கிய பனிதனில் கண்டேன்
    என்னுளக் கூண்டிலும் அந்த
    ..எழிலினில் குளிர்புக நின்றேன் !

    ஆமா அந்த மிக்சி என்னாவாயிருக்கும் ஹா ஹா ஹா !

    எங்கேடா இந்தக் கிறுக்கன் வாராமல் இருந்திட்டு இன்று வந்தானே என்று கல்லெல்லாம் எடுக்கக் கூடாது எதுவானாலும் வாயில குணமா சொல்லணும் ! ஆங்........




    ReplyDelete
    Replies
    1. சீராளன்... எப்போவும்போல் நல்லா எழுதறீங்க. என்ன... இடைக்கிடை நெடுங்காலம் காணாமல் போயிடறீங்க.

      முதல் இரண்டு வரிகள் மிக அருமை. மின்னல் இட்ட அடியினால், இடியை வெளிப்படுத்தும்போது அது மிகைப்பட அழுதது (பிறகு மழை மூலம்) என்று நல்லாச் சொல்லியிருக்கீங்க. பனியை மலர்களுக்கு உவமையாக்கியிருக்கீங்க.

      தன்னிலை இழந்ததும் தண்டில்
      ..தாங்கிய பனிதனில் கண்டேன் - இதுல எனக்கு பொருள் தவறாத் தருது. இதைப் பார்த்து நீங்கள் ஏன் தன்னிலை இழக்கணும்? அப்புறம்தான் தண்டில் தாங்கிய பனியை பார்ப்பதாக எழுதியிருக்கீங்க.

      அப்படி இல்லைனா, 'தன்னிலை இழந்ததும் தண்டில் தாங்கிய பனிதனைக் கண்டேன்' அல்லது, 'தன்னிலை இழந்து தண்டு தாங்கிய பனியினைக் கண்டேன்' என்றல்லவா வரவேண்டும்?

      உடனே, 'பழமொழியை ரசிக்கணும், ஆராயக் கூடாது' என்று கமலஹாசன் ஒரு படத்தில் சொல்வதுபோல் சொல்லிடாதீங்க..ஹா ஹா.

      Delete
    2. ஆவ்வ்வ்வ் வாங்கோ மேஜரே வாங்கோ.. கார்ட் பெட்டியில தாவி ஏறிட்டீங்க இம்முறை:) இல்லை எனில் ரெயின் புறப்பட்டிருக்குமாக்கும்:)..

      //ஒண்ணே ஒண்ணுதான் சரியாப்படல்ல அந்தப் சோம்பேறி இயந்திரம்///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்லை எனில் நாம் அடுத்தவர் உதவியை எல்லோ நாடோணும்:), அதுவும் இல்லாட்டில் மரங்களிலதான் காலைத் தேய்த்து மஜாஆஆஆஆஆஜ்ஜூஊஊஉ பண்ணோணும் கர்ர்ர்ர்:)))..

      ஆஹா பனிக்கான கவிதை குளிர்ச்சியாக இருக்குது.

      எங்கே போயிருந்தீங்க இவ்ளோ காலமாக? இளமதியும் நீங்களும் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      //எதுவானாலும் வாயில குணமா சொல்லணும்//

      ஹா ஹா ஹா என்னா அறிவு..என்னா அறிவு.. நான் அந்தக் குட்டிப் பொண்ணுக்குச் சொன்னேன்:))

      மிக்க நன்றி சீராளன்.. வருடக் கடசியில வந்து சைன் பண்ணிட்டீங்க:).. இனி அடுத்த வருடம்தான் வருவீங்கபோல:).

      Delete
    3. wஎ.தமிழன்
      //தன்னிலை இழந்ததும் தண்டில்
      ..தாங்கிய பனிதனில் கண்டேன்//

      இது என் கிட்னிக்கு தெரிஞ்சவரை.. தன்னிலை இழந்தது எனச் சொல்வது மேகத்திலிருந்து வடியும் கண்ணீரை[மழையை] என நினைக்கிறேன்..

      அது வசனம் மாறுபட்டு நிற்குதோ..
      தன்னிலை இழந்ததும்,
      தண்டில் தாங்கிய,
      பனிதனில் கண்டேன்... இப்படிப் பார்க்கோணும் என நினைக்கிறேன்:)) ஹா ஹா ஹா மீயும் கவிமாமணி எல்லோ:))

      Delete
    4. இருக்கலாம் அதிரா. அப்படி இருந்தால், இடையில் இரண்டு வரிகள்

      புன்னையும் மல்லியும் பூத்துப்
      ..பொலிந்தது போலொரு காட்சி

      வந்தால் பிறகு சொல்வது அதற்கும் முந்திய வரிகளுக்குச் சேராது.(வலிந்து சேர்க்கக்கூடாது)

      Delete
    5. ஓஒ அப்போ வெயிட் பண்ணுவோம் கவிஞருக்கு... அவர் சைனா போர்டரில காவலுக்கு நிற்கிறாரோ என்னவோ:).. மேஜர் ஆச்சே:)..

      Delete
  43. நாளை முதல் மூன்று நாள் அல்லது நான்கு நாள் விடுமுறை.
    அத்தையின் முதலாம் ஆண்டு திவசம். ஊருக்கு போகிறேன் வந்து பதிவுகளை படிப்பேன் என்பதை சொல்லிக்கிறேன். தினம் ஒறு பதிவு போடுவதாக சொன்னீர்கள் அதனால்.

    ReplyDelete
    Replies
    1. ஓ கோமதி அக்கா.. போயிட்டு நலமே வாங்கோ..

      //தினம் ஒறு பதிவு போடுவதாக சொன்னீர்கள் அதனால்.//
      ஹா ஹா ஹா அதை நீங்க நம்பிட்டீங்களோ?:) “அதிகம் கொக்கரிக்கும் கோழி, சிறிய முட்டைகளை இடும்”...:)

      Delete
    2. //“அதிகம் கொக்கரிக்கும் கோழி, சிறிய முட்டைகளை இடும்”...:)//

      ஏஞ்சலினை மனசுல வச்சு இதைப் படிச்சா, அதிகம் கொக்கரிக்கும் கோழி, அனேகமா சேவலாத்தான் இருக்கும். முட்டை இடவே இடாது. ஹா ஹா

      Delete
    3. ஹா ஹா ஹா அப்போ அஞ்டு சேவலோ?:) ஹா ஹா ஹா:)..

      Delete
    4. அஆவ் கனடா ஸ்னோ கொள்ளை அழகு ..இதை அங்கே போட்டிருந்திங்க .அந்த செரிஸ் க்லேஸ் படம் ..
      அதே டைம் இங்கே வந்தது ஆனா கொஞ்சமா .இந்த வருஷம் ஸ்னோ வரலை ..எனக்கு யூகே ஸ்னோ பிடிப்பதில்லை .ப்ராப்பரா சால்ட் போட்டு விட மாட்டாங்க இங்கே மெயின் ரோட்ஸுக்கு மட்டுமே போடறாங்க .

      அந்த படங்களை பத்திரமா பிரிண்ட் எடுத்து வைங்க மியாவ் அதோட ஒரு படத்திலும் உங்க பேரை போடாம விட்ருக்கீங்க ..சுலபமா சுட்டுருவாங்க போட்டோ களவானிஸ்

      Delete
    5. ஹாஹா :) ஹேர் ஸ்டைல் ஜூப்பரோ ஜூப்பர் :) ஆமா டெய்சி அடையாளம் கண்டுபிடிச்சாளா உங்கள :)

      Delete
    6. condominium ..இப்படி ஆங்கிலத்திலும் எழுதிடுங்க மியாவ் பக்கத்தில் ..
      எனக்கு என்னமோ இங்கே யூகே வீடுகளே பிடிச்சிருக்கு :) ஆசைபட்டமாதிரி பறவைகளுக்கு அணில்களுக்கு நாம் உணவு தரலாம் .#அந்த condo வீடுகளில் நிறைய ரூல்ஸ் இருக்குமில்லையா . நம்ம லைஃப் பப்பி பூஸ் இல்லாம பூர்த்தி அடையாதே

      Delete
    7. அக்கா மகள் ஹேர் ஸ்டைல் அழகா இருக்கு ..உங்களை நம்பி தலையை கொடுத்தாளே குழந்தை :) அதுக்கே பாராட்டணும் .
      இதையும் அங்கே போட்டிங்க :) சடையில் மல்லி மலர்களா ..

      Delete
    8. கண்ணாடியில் கிறிஸ்துமஸ் மரத்தின் லைட்ஸ் அழகா விழுந்திருக்கு ..வாழ்த்துக்களுக்கு தாங்க்ஸ் :)
      நான் ப்ரெசன்ட்ஸ் பிரிச்சா பின்னேதான் படம் எடுக்க மறந்ததை நினைச்சேன் :)
      ஜெசியோட ப்ரசண்ட் இன்னும் வந்து சேரலை :)

      டெய்சியோட குட்டி வீடு உள்ளே ட்ரீட்ஸ் வைங்க பழகிடுவா ..மழை வந்தா தானே உள்ளே போய் உக்காருவா

      Delete
    9. // ஆங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்சு:)... அதிராவின் கிரிஸ்மஸ் கிஃப்ட்:).. எலக்றிக் லெக் மசாஜ்ஜர்....//

      ஆங் நானும் வந்தாச்சு :)
      இதெல்லாம் 60 வயதுக்கு மேலேதான் யூஸ் பண்ணுவாங்கன்னு உங்களை ஓட்ட நினைச்சாலும் :)
      விருட் விருட் னு நடந்து காலை நாசமாக்கிட்ட நான் கிண்டல் செய்வது மாபெரும் தவறு :)
      ஆகவே பணிவோடு செல்கிறேன் .என் நேர்மையை நீங்க பாராட்டியே ஆகணும் .

      Delete
    10. ஆஆஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. நீங்க ஏன் கஸ்டப்பட்டு இப்போ கொமெண்ட்ஸ் போடுறீங்க நான் ஒண்ணும் கீசாக்கா மாதிரி சண்டைக்கு வரமாட்டேன்....

      ,........
      ஸ்ரெயிட்டா காண்ட் கோர்ட் தேன் எனச் சொல்ல வந்தேன் ஹா ஹா ஹா:).

      //அந்த படங்களை பத்திரமா பிரிண்ட் எடுத்து வைங்க மியாவ் அதோட ஒரு படத்திலும் உங்க பேரை போடாம விட்ருக்கீங்க ..சுலபமா சுட்டுருவாங்க போட்டோ களவானிஸ் //

      உண்மைதான் அஞ்சு, நானும் நினைச்சேன் பின்பு யோசிச்சேன் மீதான் ஞானியாச்சே:) ஞானிகளுக்கு என்னுடையது உன்னுடையது என்ற பேதமிருக்கக் கூடாதெல்லோ:)) ஹா ஹா ஹா:)..

      யேஸ் அவை இரண்டும் உங்களுக்கும் எனக்கும் மட்டும் “அங்கு” போட்டபோது தெரியும், அம்முலு இருந்திருந்தாலும் தெரியும், சீராளன் மறந்திட்டார் கர்ர்:))

      Delete
    11. //AngelWednesday, December 26, 2018 8:56:00 pm
      ஹாஹா :) ஹேர் ஸ்டைல் ஜூப்பரோ ஜூப்பர் :) ஆமா டெய்சி அடையாளம் கண்டுபிடிச்சாளா உங்கள :)//
      டெய்சிப்பிள்ளைக்கு இந்த ஸ்டைல்தான் பிடிச்சிருக்காம்ம்:)) ஏனெண்டால் எப்பவும் என் முகத்தையே உற்றுப் பார்க்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    12. //#அந்த condo வீடுகளில் நிறைய ரூல்ஸ் இருக்குமில்லையா .//

      அது உண்மைதான் அஞ்சு, ஆனா கனடாக் கொண்டோக்கள் யூகேபோல இல்லை, இங்கு எப்படி தொடர்மாடி எனினும் தனித்தனி பில் போட்டிருப்பார்கள்[எலக்றிக் மீட்டர்], ஆனா அங்கு அன்லிமிடெட்.. கரண்ட் . அப்போ அந்த குளிருக்கு தாராளமாக ஹீட்டர் போடலாம், நீங்க எத்தனை எக்ஸ்ரா ஹீட்டரும் வாங்கிப் போடலாம்... ஒரு சட்டையைக்கூடப் போட்டு தோய்ப்பினம் வோசிங் மெசினில்... மற்றும் சமைப்பது பிரச்சனை இல்லை.. கரண்ட்.

      எப்பவுமே எல்லா லைட்ஸ் உம் போட்டிருக்கும்.. அதேபோல சமரில் 24 மணி நேரமும் ஏசி வேலை செய்யும்... அனைத்துக்கும் சேர்த்து மெயின்ரனென்ஸ் எனும் பெயரில் ஒரு தொகை கட்ட வேண்டும் அவ்வளவுதான்.

      ஆனா இப்போ வீடு வாங்கியோரெல்லாம் மிக கஸ்டப்படுகிறார்கள்.. இப்படி விசயங்களால்.. அங்கு பச்சைத்தண்ணிக்கும் மீட்டர் இருக்காம், அப்போ கார்டின் செய்வோர் கூட யோசிச்சு யோசிச்சுத்தான் தண்ணி விடுவார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா.. உண்மைதானே... கட்டாதே...

      Delete
    13. //உங்களை நம்பி தலையை கொடுத்தாளே குழந்தை :) அதுக்கே பாராட்டணும் .//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கு தெரியுமோ அஞ்சு? நான் கிளாஸ்க்குப் போய் எதுவும் கற்றதில்லை ஆனா நான் செய்தாத கை வேலை இல்லை, இப்போ பாருங்கோ உங்களைப் பார்த்து குயிலிங் செய்கிறேன் அதுபோலத்தான் அனைத்தும்.

      எனக்கு ஒரு 14,15 வயசாக இருக்கும்போதே, குட்டீசைக் கூப்பிட்டு அவர்கள் அம்மாவின் அனுமதியுடன் ஹெயார் கட் பண்ணி விட்டிருக்கிறேன் ஸ்டைல் ஸ்டைலா ஹா ஹா ஹா அப்போ கமெரா, புளொக் இருந்தால் எவ்ளோ நல்லது:).


      //இதையும் அங்கே போட்டிங்க :) சடையில் மல்லி மலர்களா //
      யேஸ். உங்களுக்கு இன்னொன்றும் சொல்லோணும்... இந்த மல்லி:) என நாங்க எபவும் சொல்ல மாட்டோம்ம்.. மல்லிகை எனத்தான் சொல்லுவோம்.. மல்லி எனில் அது கொரியண்டர் மட்டும்தான். அப்போ என் ஃபிரெண்ட் இந்தியா போயிருந்த சமயம் சொனனா, கார்க் அக்தவை திறக்கவே முடியாதாம் ட்ரபிக் லைட்ஸ்களில்.. மல்லி மல்லி எனக் கூவிக்கொண்டு வந்து நீட்டுவினமாம்[அப்போதான் அதிசயித்தோம் என்ன மல்லி யா என:)].. ஆசைக்கு வாங்கி வாங்கி வச்சேன் என்றா, இலங்கையில் நாம் இப்படி பூ வைப்பதில்லை.. பெரும் விசேசங்களுக்கு அல்லது கோயில், பெரிய திருவிழா நாட்களில் மட்டுமே வைப்போம்.

      //டெய்சியோட குட்டி வீடு உள்ளே ட்ரீட்ஸ் வைங்க பழகிடுவா ..மழை வந்தா தானே உள்ளே போய் உக்காருவா//
      இன்னும் வெளியே வைக்கவில்லை அஞ்சு.. அவ மணந்து பார்த்திட்டு ஓடுறா, அந்த மரம் ஒரு ஸ்ரோங் ஸ்மெலாக இருக்குது, இனி வெளியே வைக்கோணும்.

      Delete
    14. //இதெல்லாம் 60 வயதுக்கு மேலேதான் யூஸ் பண்ணுவாங்கன்னு உங்களை ஓட்ட நினைச்சாலும் :)
      விருட் விருட் னு நடந்து காலை நாசமாக்கிட்ட நான் கிண்டல் செய்வது மாபெரும் தவறு :)
      ஆகவே பணிவோடு செல்கிறேன் .என் நேர்மையை நீங்க பாராட்டியே ஆகணும் .//

      ஹா ஹா ஹா இப்பவாவது ஒத்துக் கொள்ளுங்கோ அதிரா “வருமுன் காப்போன்ன்ன்”., அஞ்சு “வந்தபின் காப்போன்”:). ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி அஞ்சு அனைத்துக்கும்.

      Delete
    15. / எப்பவும் என் முகத்தையே உற்றுப் பார்க்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.//
      ஹயோ அந்த டெய்சி உற்று பிறப்பது பயத்தில் :) அம்மா வாசனை வருது ஆனா யாரோ மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறா

      Delete
    16. ssss spelling mistake :) பார்ப்பது

      Delete
  44. ஹலோவ் மியாவ் இது மா பெரும் மியாவ் சதி .வேணும்னே நான் பிஸியான நேரத்தில் போஸ்ட் போட்ருக்கீங்க
    கர்ர்ர்ர் :))

    ReplyDelete
    Replies
    1. நீங்க கிறிஸ்மஸ் அன்று குளிக்காமல் அந்த நேரத்தை சேஃப் பண்ணி வந்து கொமெண்ட்ஸ் போட்டிருக்கலாமெல்லோ.. நட்பா குளிப்போ முக்கியம்?????:)

      Delete
  45. அந்த hyacinth பழைய பல்பா ? போன வருஷத்து பல்ப் இந்த வருஷம் முளைச்சதா ?
    அது இப்படித்தான் முதல் டைம் பளபளன்னு வளரும் செகண்ட் டைம் இப்படி இது புது விதை பல்புகளை வாங்க வைக்க ஐடியா

    ReplyDelete
    Replies
    1. அதே பழசுதான் அஞ்சு... அதுதான் பாருங்கோ எவ்ளோ ஏமாற்று வேலை..கர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    2. எல்லா விதை பாக்கெட்டில் எக்ஸ்பயரி தேதி போட்டிருக்காங்க .அதன் கால வரையறை அவ்ளோநாள்தான் .போன வருஷம் வாங்கின ஸீட் மலர் மிக்ஸ் இந்த வருஷம் போட்டா முளைக்காது .இது தெரியாம நாம் பை ஒன் கெட் ஒன் என்று வாங்கறோம் மிச்சத்தை வச்சி போட்டா வளருமா நெக்ஸ்ட் இயர் ? இந்த பல்புகளிலும் எக்ஸ்பயரி தேதி இருந்திருக்கும் .இப்படி தேதி கனக்கில்லைன்னா அவங்க பிசினஸ் ஹோகயா ஆச்சே :) இங்கே ரோட்டோரம் தோட்டங்களில் வருஷ வருஷம் புது செடி மற்றும் பல்ப் கிழங்கைத்தான் நடுவாங்க .

      Delete
    3. இது என் பிரெண்ட் தந்த கிவ்ட் அஞ்சு, செடியாகத்தான் தந்தவ...

      Delete
  46. ஜோக் வாசித்து சிரித்து வயிற்றுவ்லியே வந்துவிட்டது. ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு சூப்பர்.
    இப்படங்கள் முதல் பார்த்தமாதிரி இருக்கே... ஹா..ஹா.. அழகாக இருக்கு பூஸ் தலையலங்காரம்.
    நீங்க செய்ததும் (ஹேர்ஸ்டைல்)அழகா இருக்கு.
    இம்முறை இன்னமும் ஸ்னோ வரவில்லை..

    /ஹா ஹா ஹா இம்மலரை மறந்திருக்கவே மாட்டீங்க.. போன டிசம்பரில பூத்து நான் அமளிப்பட்டேனே, இப்போ பூத்து முடிஞ்சிருக்குது.. பாருங்கோ சைஸ் ஐயும் கலரையும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))// கடவுளே இதை எப்படி மறப்பது.......

    ReplyDelete
  47. பனி படர்ந்த படங்கள் எல்லாம் கொள்ளை அழகு அதிரா...

    hair ஸ்டைல் சூப்பர் ...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.