நல்வரவு_()_


Wednesday 9 October 2019

ரோகரா!! அரோகரா!!!🙏


ஸ்ஸ்ஸ் அதிரா.. ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கிறேனாக்கும்:))

ங்ங்ங் “விடாது கருப்பு” என ஒரு மர்மத் தொடர் போனதெல்லோ ஒருகாலத்தில் ரிவியில்:), இப்போ யூ ரியூப்பில் கிடைக்கிறது:).. அது போல “விடாது அதிராவின் தொல்லைகள்”:) எனப்:) படம் படமாப் போட்டுக் காட்டுவேன்:)).. எங்கே மூச்சை நல்லாஆஆஆஆ உள்ளே இழுங்கோ:)).. ஆஅ இப்போ மெதுவாஆஆஆ வெளியே விடுங்கோ:)).. ஆங் இனிக் கோபம் வராது உங்களுக்கு:) இப்போ போஸ்ட்டினுள் நுழைவோமா?:)).

கோமதி அக்காவோ கீசாக்காவோ அதிராவோ கொக்கோ?:)).. மீயும் கோயில் படம் போடுவனே போட்டிக்கு:)).. ஸ்கொட்லாண்டில் கோயில் இல்லை எனில், ரிக்கெட் போட்டு பிளேனேறிப்போய்ப் படமெடுத்து வருவேனாக்கும் ம்ஹூம்ம்:)) ஹா ஹா ஹா.

இது கனடா- ரொரண்டோ வில் இருக்கும் றிச்மன்ஹில்[ஊர் பெயர்] பிள்ளையார்.

இந்தக் கோபுரத்தில் எனக்கொரு சந்தேகம், ஆராவது தீர்த்து வையுங்கோ பிளீஸ்.. அதாவது இது பிள்ளையார் கோயில் என அழைக்கப்படுகிறது.. மூலஸ்தான அதிபதி பிள்ளையார், ஆனா உள்ளே மூன்று மூலஸ்தானங்கள் போல அமைக்கப்பட்டு மூன்று வாசல் இருக்கு... உள்மண்டபம் ஒன்றாக அமைக்கப்பட்டிருகுது.

என் சந்தேகம், பிள்ளையார் கோயில் எனில், பிள்ளையாரின் கோபுரம்தானே பெரிதாக இருக்கோணும், ஆனா இங்கு அப்படி இல்லையே அது ஏன்?

கோயில் உள்ளே கால் கழுவும் வசதி இருக்கு, கழுவியபின் உள்ளே நுழையும்போது இவர்தான் நம்மை அழகாக வரவேற்கிறார். பார்க்க சூப்பராக இருந்தார்.. என் கண்ணே பட்டுவிடும் அளவுக்கு.


 நீங்கள் நினைக்கக்கூடும்.. இது என்ன சிதம்பர ரகசியமோ:) நாங்களும் படமெடுப்போமே என:), ஆனா அதிராவுக்குத்தான் தெரியும் அதன் கஸ்டம்:), ஏன் தெரியுமோ, ஒவ்வொரு இடத்திலும் தமிழிலும் இங்கிலிஸ் இலும் எழுதி பெரிதாக அச்சடிக்கப்பட்டிருக்கு, படம் எடுக்கக் கூடாது என.. அப்போ அதையும் மீறி, இனி ஆட்கள் இல்லாததாகவும் எடுக்கோணும், என் ஃபோனின் கிளிக் சவுண்டை ஓவ் பண்ணி, பிளாஸ் லைட்டை ஓவ் பண்ணி, வேர்க்க விறுவிறுக்க:) ஏதோ மெசேஜ் படிப்பதைப்போல ஆக்டிங் குடுத்து இப்பூடி எடுப்பதெனில் எவ்ளோ கஸ்டம் சொல்லுங்கோ:)) எல்லாம் உங்களுக்காகத்தான்:)..., ஆனா அதனால நான் மூலஸ்தானக் கடவுள் எவரையும் எடுக்கவில்லை...




இது பின் வீதி சுற்றி வந்தபோது.. நல்ல உச்சி வெயில், நேரம் 12-1 மணி.

ஆழ்வார்கள்...



ஆங்ங்ங் இவ ஆரெனத் தெரியுதோ?:) இவதான் வள்ளி அம்மை.. நான் என் வைர அட்டியல் நேர்த்தியை நிறைவேற்ற அளவெடுக்கலாம் எனப் போனேன்ன்:).. அவவிடம் ஓல்ரெடி அட்டியல் இருக்குதே:)) அதனால அளவெடுக்காமல் வந்துட்டேன்ன்:)).. அப்போ இனி வைர அட்டியல் குடுக்கத் தேவையில்லைத்தானே?:).

ஆவ்வ்வ் ஏ அண்ணனை நினைச்சு:) இந்த ஆனைப்பிள்ளையைத் தொட்டேனே:)).. அவர்தானே கீதாவையும் என்னையும் கேட்டார்ர்.. எதுக்கு வாகனங்களைத் தொடும் ஆசை உங்களுக்கு என ஹா ஹா ஹா.. தொடுவதிலும் ஒரு மகிழ்ச்சி:)... முகத்தில் தெரியும் சிவப்பு நிறம், நிலத்தின் கலரின் எதிரொளி..

கனடாவில் பொதுவா அனைத்துக் கோயில்களிலும் யூன், யூலை மாதத்தில்தான் திருவிழா உற்சவம் நடக்கின்றது, அதனால இப்படி தேர் எல்லாம் வெளியே நிற்கிறது, இல்லை எனில் உள்ளே வைத்து மூடி விடுவார்கள், இது திருவிழா முடிஞ்சுவிட்ட நேரம்.

ஓகே அந்தக் கோயில் ட்றிப் முடிஞ்சது.
இது ரொரண்டோவில் இருக்கும் ஷீரடி பாபா, ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் இப்படி அதிகம் மக்கள் வருவார்கள்..


 இது அங்கு சீரடி பாபா கோயிலில் கிடைச்சது, அழகிய மஞ்சள் றோஸ்.. இது அஞ்சுவுக்குக் குடுக்கிறேன்.. இதை இப்படியே வாடாமல் வச்சிருக்கோணும், நான் அடுத்த வருசம் கேட்பேன், இப்படியே இதே பூவாகக் காட்டோணும் ஜொள்ளிட்டேன்:) இல்லை எனில் தேம்ஸ் ல தள்ளுவேன்ன்:)).. இது அந்த நெல்லைத்தமிழனின் மாங்காய் சட்னி மேல் இருக்கும் கடுகின் மீது ஜத்தியம்:))

எனக்கு சின்ன வயசிலிருந்தே பிரான்ஸ் லூர்த் மாதாவைப் பிடிக்கும், அதேபோல நேரில் சென்று தரிசித்ததிலிருந்து அதிக நம்பிகையும் ஏற்பட்டது, அதனால மேரி மாதாவிலும் எனக்கொரு லவ். இது அங்கு ரொரண்டோ மோனிங் சைட் எனும் ரோட்டருகில் இருக்கும் ஒரு மேரி மாதா, எப்போ அங்கு போனாலும் இவவைத் தரிசிக்கத் தவறுவதில்லை.

இதேபோல மேரி மாதா இங்கும் ஒரு சேர்ஜ்ஜில் இருக்கிறா, விரைவில் படமெடுத்துப் போடுகிறேன் அவவையும் அடிக்கடி போய் வணங்குவேன்.

ஊசி இணைப்பு:)

 ஊசிக்குறிப்பு:-
🙏

160 comments :

  1. ஆ.. மீ ?? ஆவ்வ்வ்வ் அழகான பிள்ளையார்.. எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு...
    வைர அட்டியல் கொடுக்காமல் ஏமாற்றலாம் என நினைக்காதேங்கோ...

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ வாங்கோ அம்முலு வாங்கோ.. இம்முறை தான் நீங்க முதல் முறையா வந்திருக்கிறீங்க.. அதனால மேலே வள்ளி கழுத்தில இருக்கும் அட்டியல் உங்களுக்கே:))

      Delete
    2. கர்ர்ர் :) அட்டியலுக்கு பாதுகாப்பா அந்த ஆயாவையும் அனுப்புங்க :)))))))))

      Delete
    3. ஹா ஹா ஹா அஞ்சு:)) இப்பூடிப் பொயிங்கப்பிடா:)) நீங்க 1ஸ்ட்டா வந்திருந்தால் அட்டியல் உங்களுக்கே கிடைச்சிருக்கும்:)) ஆனா விதி வலியது பாருங்கோ:))..

      என் புளொக் வழக்கப்படி 2 வதா வருவோருக்கே ஆயா:)), ஆனாலும் உங்களுக்கு இன்னும் கடவுள் அருள் கிடைச்சிருக்கு:) ஏனெனில் இம்முறை ஆயாவை அனுப்பப்போவதில்லை நான்:))..

      Delete
  2. ஐலவேளை கோபுரம் கட்ட அந்நாட்டில் சட்ட வரையறை இருக்கலாம். இங்கு இருக்கு.
    ஆவ்வ்வ்..திருட்டுதனாமா படம் எடுதீங்களோஓஓ. இங்கும் எடுக்ககூடாது. ஆனா யார் சொல்லி கேட்கினம்.
    எனக்கு பதிவை பார்த்ததும் பிள்ளையாரும், அம்மனும்தான் தெரிந்தார்கள். அப்போ நினைத்தேன் அட்டியல்பற்றி போட்டிருப்பீங்க என்று. அழகா இருக்கு கோயில். இக்கோயிலிலா உள்ளே மரம் இருந்தது பூஸ்...
    எனக்கும் பிரான்ஸ் மாதா மீது நம்பிக்கை இருக்கு. வந்ததற்கு 3 தரம் போயாச்சு.
    அழகான மஞ்சள் பூ...ஊசிகுறிப்பு,ஊசி இணைப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. //ஐலவேளை//
      என்ன டங்கு ஸ்லிப்பாகுதே:)).. அதிரா பக்திமான் ஆகிட்டா எனப் பயம் வந்திட்டுது போலும்:)) ஹா ஹா ஹா..

      //கோபுரம் கட்ட அந்நாட்டில் சட்ட வரையறை இருக்கலாம். //
      அதைச் சொல்லவில்லை அம்முலு, மூன்று கோபுரத்தில் ஒன்று சின்னனாக இருக்கெல்லோ அதுதான் பிள்ளையாருக்கான கோபுரம் போல தெரிஞ்சுது அதனால் கேட்டேன், ஆனா இப்போ டவு வருது.. அதுதான் குண்டுப் பிள்ளையாருக்கான கோபுரமோ என:))

      //அட்டியல்பற்றி போட்டிருப்பீங்க என்று.//
      நான் சொன்னது டப்பா அம்முலு?:))..
      ந்நங்களும் 2 தரம் போயாச்சு.. ஒரு தடவை மெய் சிலிர்க்க சுற்றிக் கும்பிட்டு புனித நீரில் மூழ்கி வந்தோம், 2ம் தடவை நன்கு சுற்றி ரசித்துவிட்டு வந்தோம்.. எத்தனை தடவை போனாலும் அலுக்காது அந்த கோயிலும் சுற்றுச் சூழலும்...

      வரவுக்கு மிக்க நன்றி அம்முலு.. பாருங்கோ அஞ்சுவை இன்னும் காணம் கர்ர்ர்ர்:))

      Delete
    2. அவ்வ்வ் நான் பாட்டு கேட்டுட்டிருந்தேன் 

      Delete
    3. அஞ்சுவின் இடத்தை நான் பிடித்தாயிற்று. எனக்கு எப்பவாகிலும்தான் இந்த சான்ஸ். அஞ்சு இனி வருவா. தயாரா இருங்கோ.பதிலுக்கு...
      டைப் செய்ய சரியா வருது. பப்ளிஷ் ஆனா பிழையா காட்டுது. நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. மரம் இருக்கும் கோவிலா.. அந்த பிள்ளையார் படத்தை சுடுகிறேன். நல்லாஆஆஆ பிடிச்சிருக்கு.
      போட்டிருக்கும் பாட்டி குயிலே கவிக்குயிலே எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. ஶ்ரீதேவியையும்தான்..

      Delete
    4. ஆவ்வ்வ்வ்வ்.. "கவரிங் "மான் போய் இப்ப பக்தி மான்.... இனி என்னென்ன மான்கள் வரபோகுதோ..ரிச்மன்ஹில் பிள்ளையாரே..
      அஞ்சு கெதியா வாங்கோஓஓ...

      Delete
    5. நானும் நீங்களும் சேர்ந்துதான் வந்தோம் ப்ரியா ..இந்த பூனை போட்ட பாட்டு கேட்டு அங்கே போய்ட்டேன் 

      Delete
    6. ஆஆஆஆ அடுத்தமுறை மறந்திடாதிங்கோ அஞ்சு:) பாட்டுக் கேட்டிடூ வந்தால் ஆயா வருவா:)) ஹா ஹா ஹா..

      அம்முலு//
      டைப் செய்ய சரியா வருது. பப்ளிஷ் ஆனா பிழையா காட்டுது. //
      ஹா ஹா ஹா இதுதான் விதிபோலும்:))..

      //கேள்விக்கு பதில் இல்லை. மரம் இருக்கும் கோவிலா//
      ஆஆஆ பாருங்கோ பதில் எழுத வந்து எழுதும்போது மறந்துவிட்டேன்.. இல்ல அம்முலு அது சிவன் கோயில்.. ஆனா அம்மரம் இப்போ இல்லை, இம்முறை பார்த்தேன் காணவில்லை.

      //அந்த பிள்ளையார் படத்தை சுடுகிறேன்//
      ஆஆஆஆஆஆஅ பர்த்து பிள்ளையாரின் வண்டி பத்திரம்:)).. ஸ்ரீதேவியின் இளமை அழகோ அழகு.. பின்பு பழுதாகிட்டாஅ, ஓவரா மெலிஞ்சு, பிளாஸ்ரிக் சேர்ஜரி எல்லாம் செய்து...

      Delete
    7. //priyasakiWednesday, October 09, 2019 7:36:00 pm
      ஆவ்வ்வ்வ்வ்.. "கவரிங் "மான் போய்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) அது கவரிங் இல்லை ஒரிஜினல் கவரி:)) சே..சே.. என் இமேஜ்ஜையே டமேஜ் பண்ணப்பார்க்கிறா:))..

      //இப்ப பக்தி மான்....//
      மீ விரதமெல்லோ:)) யுத்த ஜைவம் இப்போ:)).. ரெம்ம்ம்ம்ப இளைச்சிட்டேன்ன்:))..

      ///அஞ்சு கெதியா வாங்கோஓஓ...///
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அம்முலு உப்பூடிக் கூப்பிட்டால், வேகமெடுத்து எங்காவது புல்லுத்தடக்கி விழுந்திடப்போறா கர்ர்ர்ர்:)).. அதிராவைப்போல ஸ்பீட்டா ஓடமாட்டா அஞ்சு தெரியுமோ:)) ஹா ஹா ஹா..

      Delete
  3. ஹலோவ்வ்வ் :) என்னிக்குமில்லாமா இன்னிக்கு முதலில் பாட்டு கேட்டேன் ..செம பாட்டு எனக்கு பிடிக்கும் ..ஆனா எங்க அங்கிளை மயிலுக்கு அண்ணனாகிட்டாங்க இந்த படத்தில் அது மட்டும் கொஞ்சம் sad ஹாஹா மயில் குயில் பாட்டு பாடுது ..ஜானகி அம்மா குரல் செம 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. இதில் சிவகுமார் அங்கிள்போல இருக்கே.. அவர் அண்ணாவாக வாறாரோ.. தெரியேல்லையே.. படம் பார்க்கவில்லை.

      ஆனா யூப்பர்ர்ர் பாட்டு என்ன.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்...

      Delete
    2. ஹையோ அந்த நவ ரசம் தான் ஹீரோ ரஜினி அங்கிள் மயிலோட பிரதர் 

      Delete
    3. ஓ அப்படியா.. பார்த்திட்டால் போச்சு:))

      Delete
  4. சாப்பிடறது தூங்கறது இதே வேலையாப்போச்சு குண்டு பூனைக்கு :)
    //ஆங்ங்ங் “விடாது கருப்பு” என ஒரு மர்மத் தொடர் போனதெல்லோ ஒருகாலத்தில் ரிவியில்:), இப்போ யூ ரியூப்பில் கிடைக்கிறது:).. //
    ம்ம்க்கும் இப்படி கண்டது போனதெல்லாம் பாக்கக்கூடாது  நைட் கனவில் வரும் சொல்லிட்டேன் ,ரமணி vs ரமணி பாருங்க 

    ReplyDelete
    Replies
    1. //சாப்பிடறது தூங்கறது இதே வேலையாப்போச்சு குண்டு பூனைக்கு :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சாப்பிடாமல் பட்டியாக மெடிரேசன் செய்யும்போது உப்பூடிச் சொல்லலாமோ.. அபச்சாரம்:) அபச்சாரம்:))... வாய்க்கு வேப்பெண்ணெய் போட்டுக் கழுவுங்கோ:)).

      //ம்ம்க்கும் இப்படி கண்டது போனதெல்லாம் பாக்கக்கூடாது//
      இல்ல அஞ்சு.. எனக்கு மர்மக் கதை, துபறியும் கதை இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது, ஆட்கள் சொல்வதைப் பொறுக்கி வந்து இங்கு சொல்லியிருக்கிறேன்ன்..

      எனக்குத்தான் எதுவும் பார்க்காமலே கெட்ட கனவெல்லாம் வந்து தொலைக்குமே.. யெல்ப்ப்ப்ப் யெல்ப்ப்ப்ப் எனக் கத்துவேன்ன் சத்தம் வராது வெளியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:))..

      //ரமணி vs ரமணி பாருங்க //
      எனக்கு அதென்னமோ பெரிசா பிடிக்காது..அதைவிட நான் சினிமாக் கொமெடிதான் அதிகம் பார்ப்பேன்.

      Delete
    2. //பட்டியாக மெடிரேசன்// - ஐயோ ஐயோ..இதுக்கு என்ன அர்த்தம்னு ஏஞ்சலினிடம் கேளுங்க. ஹா ஹா

      Delete
    3. ஹா ஹா ஹா அது பட்டினியாக என வருமாக்கும்:)) நானும் ஒருகணம் பதறிப்போயிட்டேன் என்ன எழுதினேன் என நினைச்சு:))

      Delete
  5. //ஏதோ மெசேஜ் படிப்பதைப்போல ஆக்டிங் குடுத்து இப்பூடி எடுப்பதெனில் எவ்ளோ கஸ்டம் சொல்லுங்கோ:)) எல்லாம் உங்களுக்காகத்தான்:)..., ஆனா அதனால நான் மூலஸ்தானக் கடவுள் எவரையும் எடுக்கவில்லை...//கோயிலில் சீட்டிங் செஞ்சிருக்கீங்க :) 
    எங்களுக்காக எடுக்கப்போய் உங்களுக்காக வேண்டிக்க மறக்கப்போறீங்க 

    ReplyDelete
    Replies
    1. //கோயிலில் சீட்டிங் செஞ்சிருக்கீங்க :) //

      ஹையோ ஆண்டவா, பரிபாலன சபை இதைப் பார்த்தால், அடுத்தமுறை கோயில் வாசலிலேயே மறிச்சுப் போடுவினமே:))..

      எல்லோரையும் காப்பாத்துங்கோ.. என்னையும்தேன் என வேண்டிக்கொண்டேன்ன்...

      Delete
  6. ஆஹா அந்த பிள்ளையார்தான் செம ஸ்வீஈட் அழகோ அழகு ..கோயில் அழகா சுத்தமா இருக்கு தரையெல்லாம் க்ளீனா க்ளீன் 

    ReplyDelete
    Replies
    1. ஓம் அஞ்சு. இது வசதியான கோயில், அடிக்கடி திருத்த வேலை செய்து நல்ல அழகாக வைத்திருக்கிறார்கள்.. ஒரு பத்து வருடம் முன்பு போனதுக்கு, இப்போ போனோம்ம்..

      Delete
  7. 63 பேரில் மீதி பேர் எங்கே ??நாயன்மார்களில் 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதுதான் டவுட்டில போட்டேன்ன்.. ஒருவேளை அது ஆழ்வார்கள் என வருமோ..

      Delete
    2. அதெப்பூடி 63 என கரெக்ட்டா உங்களுக்கு தெரியும்.. நான் 64 என நினைச்சிட்டேன் ஹா ஹா ஹா.. அது ஆயகலைகள்தான் 64:).

      Delete
    3. ம்கூம் இந்த சந்தேகத்துக்கு குறவில்லை .63 நாயன்மார்கள்னு எங்க மங்கை டீச்சர் சொல்லித்தந்தார் தசாவதாரம் 10அதோட நீங்க போட்டிருக்கிறதில் ஒரு பெயர் தொண்டரடிபொடியாழ்வார் னு காட்டுது ஹாஹா ஆழ்வார்கள் தான் 

      Delete
    4. //நான் 64 என நினைச்சிட்டேன் ஹா ஹா ஹா.. அது ஆயகலைகள்தான் 64:).//

      கீதாக்கவும் நெல்லைத்தமிழனும் வந்து நங்கு நங்குன்னு கொட்டணும் உங்களை 

      Delete
    5. ஒரு பெயர் இல்லை அஞ்சு, பெரிசாக்கினால் எல்லாமும் ஆழ்வார்கள் எனத்தான் காட்டுது:))

      Delete
    6. //கீதாக்கவும் நெல்லைத்தமிழனும் வந்து நங்கு நங்குன்னு கொட்டணும் உங்களை//

      ம்ஹூம்ம்:) நெல்லைத்தமிழனுக்கு நான் தான் சமய சம்பிரதாயம் எல்லாம் இபோ சொல்லிக் குடுக்கிறேனாக்கும்:)), இனிமேல் அதிராவைப் பார்த்துத்தான் அவர் பயப்பூடபோறார்ர் ஹா ஹா ஹா:)). ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த முஸ்தப்பா ரொட்டிக் கடை அடுப்பில போட்டிடுங்கோ அஞ்சு பிளீஸ்ஸ்ஸ்:))

      Delete
    7. ஆழ்வார்கள் 12 பேர் ஒரே காஸ்ட்யூமில் இருக்காங்க மீதிப்பேர் யாருன்னு தெரில 

      Delete
    8. 63 என்பது எனக்கு தெரிஞ்சதாலதான் எண்ணிப்பார்த்தேன் :)இல்லன்னா பக்திமியாவ் என்ன ஏமாத்திபோட்டுடும் :) என்னை யாரும் பேய்க்காட்ட முட்டியாது :))))))))))

      Delete
    9. இப்படித்தான் ராமாயணத்தை மகாபாரதமாக்கினப்போ லைட்டா கேள்விக்குறி போட்டு கேட்டேன் இனி விட மாட்டேன் எங்கே இப்படி சான்ஸ் டைம் கிடைக்கும்னு மீ வெயிட்டிங் 

      Delete
    10. அதில் எழுதியிருந்தார்கள் அஞ்சு.. படமெடுக்கும் அவசரத்தில் ஒழுங்காக கும்பிடவுமில்லை.. பெயர்களைக் கவனிக்கவுமில்லையாக்கும் ஹா ஹா ஹா..

      Delete
    11. அஞ்சு
      //பக்திமியாவ் என்ன ஏமாத்திபோட்டுடும் :) என்னை யாரும் பேய்க்காட்ட முட்டியாது :)//

      சே..சே.. நான் என்ன நினைச்சேன் தெரியுமோ?:), நாயன்மார்களில் அதிகம் பேமஸ் ஆனவர்களை மட்டும் அங்கு வசிருக்கினமாக்கும் என ஹா ஹா ஹா:))

      Delete
    12. //AngelWednesday, October 09, 2019 8:21:00 pm
      இப்படித்தான் ராமாயணத்தை மகாபாரதமாக்கினப்போ லைட்டா கேள்விக்குறி போட்டு கேட்டேன் இனி விட மாட்டேன்//

      ஹா ஹா ஹா அப்போ கேட்டும் நான் கண்டுபிடிக்கல்லியே:))), ஏன் நான் நல்லதங்காள் கதையை, நல்லாச் சொன்னனானெல்லோ?:))

      Delete
    13. //பெரிசாக்கினால் எல்லாமும் ஆழ்வார்கள் எனத்தான் காட்டுது:))// - அதிரா.. ஒரிஜினல் படம் ரொம்ப பெரிதாக்கிப் பார்க்க முடியும். ஆனால் நீங்க ஒண்ணுத்தையும் படிக்காம (ஒருவேளை தமிழ் படிக்கத் தெரியாதோ?) என்னவோ எழுதியிருக்கீங்க.

      இரண்டாவது வரிசை - பேயாழ்வார், திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், அடுத்த மூன்று ஆழ்வார்கள் இல்லை. ஸ்ரீ வேதாந்த தேசிகர், இராமானுசர், மணவாள மாமுனிகள்-இவங்க மூணுபேரும் ஆச்சார்யர்கள்-குரு, அடுத்து தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஸ்ரீ பூதத்தாழ்வார், பொய்கைப்பிரான்.

      முதல் வரிசை - திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், அடுத்து ஆண்டாளா இருக்கணும். அப்புறம் ஸ்ரீதேவி, விஷ்ணு, பூதேவி. அப்புறம் உள்ள ஆழ்வார் மதுரகவி ஆழ்வார். அப்புறம், திருமங்கை ஆழ்வாரின் மனைவி குமுதினி, அடுத்து திருமங்கை ஆழ்வார்.

      Delete
    14. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      சத்தியமாகப் பெரிசாக்கிப் படிச்செல்லாம் பார்த்தேன், நான் என்ன நினைச்சேன் தெரியுமோ.. நாயன்மார்களின் பெயரும் ஆழ்வார் என முடியலாமெல்லோ:)) ஹா ஹா ஹா .. அப்பூடி நினைச்சிட்டேன்ன்.. ஆனா அங்கு கோயிலில், ஒவ்வொரு கட்டிடத்துக்கும் மேலே, உள்ளே இருப்பது ஆர் என பெயரிட்டிருக்கிறார்கள், அப்படித்தான் வள்ளியையும் கண்டு பிடிச்சேன்:)).. ஆனா பதறிப் பதறிப் படமெடுத்தமையால:)) பெயரைக் கவனிக்கத் தவறிட்டேன்:))..

      ஆவ்வ்வ்வ் மிக அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறீங்க நன்றி நன்றி... இனிமேல் மறக்க மாட்டனே.. அப்பூடித்தான் நினைக்கிறேன்:)) ஹா ஹா ஹா...

      Delete
  8. கவரி //பக்திமான் அதிரா:)// எப்போ பக்தி ஆச்சு :))
    ஹலோ பக்திமான் என்றால் என்ன மீனிங் தெரியுமோ கண்ணால் அசைவம் பார்க்கக்கூடாது காலமுழுக்க 

    ReplyDelete
    Replies
    1. //கண்ணால் அசைவம் பார்க்கக்கூடாது காலமுழுக்க //

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சூரன்போர் முடிஞ்சு.. பாறணை முடியும்வரை பார்க்க மாட்டனே:)) மீ ஜொன்னா ஜொள்ளுத்தான்:))..

      இப்பூடியே அதிராவைச் சைவமாக்கும் பிளான்ன்:))கர்ர்ர்ர்ர்ர்:).. தூண்டிலில் மீன்கள் மாட்டும் ஆனா அதிரா மாட்டமாட்டேனாக்கும்:))

      Delete
    2. //பாறணை முடியும்வரை// - இது பாராயணை

      Delete
    3. விரத காலம் முடிந்து சாப்பிடுவதைப் "பாரணை" என்றே சொல்வார்கள். ஏகாதசி விரதம் முடிந்து மறு நாள் "துவாதசிப் பாரணை" தான் சரி. "பாராயணை" என்றொரு வார்த்தையே இல்லை. பாராயணம் எனில் தினம் தினம் ராமாயணம், மஹாபாரதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், கந்த சஷ்டி கவசம், கந்த புராணம் எல்லாம் படிப்பது. அதிரா சரியாச் சொல்லி இருக்காங்க! ஆனால் இந்த "ர" "ற" "ழ", "ள" "ல" குழப்பம் இன்னும் தீரலை. "பாறணை"னு எழுதி இருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த அழகிலே தமிழிலே "டி" எல்லோ! :P :P :P :P

      Delete
    4. //நெல்லைத்தமிழன்Thursday, October 10, 2019 5:27:00 am
      //பாறணை முடியும்வரை// - இது பாராயணை//

      பாராயணம் எனில் படிப்பதை/பாடலை எல்லோ சொல்லுவினம் நெ.தமிழன்?:).. பாராயணம் பண்ணு என்பினமெல்லோ..

      Delete
    5. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. சத்தியமாக அம்மா மேல் ஆணையாக இப்பதில் படிக்காமல்தான் மேலே நெ.தமிழனுக்கு பாராயணம் பற்றிச் சொன்னேன்...

      இதேதான் ஊரில் கேட்டிருக்கிறேன்.. பாராயணம் பண்ணுவது என கோயில் விசயங்களில் பேசும்போது காதில் படும்.. சரியாக சொல்ல முடியவில்லை..

      // "பாரணை//

      அவ்வ்வ்வ்வ்வ் இதில எனக்கு டவுட் இருந்ததுதான், ஆனா பறவாயில்லை, கறுப்பு எனத்தானே நான் எழுதுவேன்.. அப்படியே.. பேச்சு வழக்கும் எங்கள் விடுகளில் ற போட்டுத்தான் பாறணை என்போம்ம்.. அப்பூடியே ஜொள்ளிட்டேன்ன் அது டப்பா கீசாக்கா?:)) ஹா ஹா ஹா.

      //இந்த அழகிலே தமிழிலே "டி" எல்லோ//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா நீங்க என்ன வேணுமெண்டாலும் திட்டுங்கோ என்னை:)) ஆனா இந்த டி யில மட்டும் கை வச்சிடாதீங்கோ:)) குடுத்த டி யைப் பறிச்சுப்போடுவினமோ என நடுங்குது ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    6. //பக்திமான் கண்ணால் அசைவம் பார்க்கக்கூடாது காலமுழுக்க // - இது யார் சொன்னாங்க ஏஞ்சலின்? அதிரா ஒருவேளை 'கவரிமான்', 'பக்திமான்' எல்லாம் மான்களின் வகைன்னு நினைச்சிருக்கலாம். ஆனால் பக்திக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? இரண்டும் வேறு வேறு அல்லவா?

      Delete
    7. //அதிரா ஒருவேளை 'கவரிமான்', 'பக்திமான்' எல்லாம் மான்களின் வகைன்னு நினைச்சிருக்கலாம். ஆனால் பக்திக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? இரண்டும் வேறு வேறு அல்லவா?//

      ஆஆஆஆஆஆ வாங்கோ நெல்லைத்தமிழன்.. எனக்காக இண்டைக்கு மைக்கைப் பிடிச்சுப் பேசியிருக்கிறீங்க:)) மான் இருந்தால் அது அசைவம் கரீட்டு:)).. பக்திக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம்?.. ஆமா அதுவும் கரீட்டு:)).... ஆஆஆஆஆ நான் தமனாக்காவின் கைல கால்ல விழுந்தாவது ஒத்துக்கொள்ள வைக்கிறேன்ன்.. தோ புறப்படுறேன்ன் தமனாக்கா நெல்லைத்தமிழனுக்கே:)) ஹா ஹா ஹா...

      Delete
    8. //பக்திக்கும் உணவுக்கும் என்ன சம்பந்தம்?.. ஆமா அதுவும் கரீட்டு:))....// - இப்படி இல்லையென்றால், உடலுழைப்பு செய்து கிடைத்தவற்றை உண்டுவாழ்பவர்களுக்கு கடவுளே கிடையாது என்றாகிவிடும் அல்லவா? உணவு சாப்பிடுவது ஒருவரின் சொந்த விருப்பம் (அடுத்தவரிடம் திணிக்காதவரை). அதற்கும் கடவுளைக் கும்பிடுவதற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

      ஆனால், நாங்கள் நம்புவது (மற்றும் நிறைய பெரியவர்கள்..தியானத்தில் ஈடுபடுபவர்கள், வள்ளலார் போன்றவர்கள்) சாத்வீக உணவுதான் ஒருவரை இறையுடன் ஒன்ற வைக்கும், பக்தி உணர்வு, சத் குணத்துடன் இருத்தல் போன்றவை அதிகமாகும். அதனால்தான் வெங்காயம், பூண்டு போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வதில்லை.

      Delete
  9. வள்ளியம்மைக்கு புடவை சார்த்தின கைக்கு மோதிரம் உங்களது கொடுங்க நெக்ஸ்ட் டைம் .அழகா நீட் ஆக உடுத்தி விட்டிருக்காங்க :)ஆமா அந்த யானை கால் மெலிசா செஞ்சிருக்காங்க போல் ஆனா ஜோலோஜொலிக்கிறஆர் 

    ReplyDelete
    Replies
    1. //புடவை சார்த்தின கைக்கு மோதிரம் உங்களது கொடுங்க நெக்ஸ்ட் டைம் //

      மோதிரம் மோதிரம் அது கல்லுடைஞ்சு போச்சுது அஞ்சு:)) அதனால அது வாணாம்ம்.. நீங்க அந்த ஜோடி வளையலைத் தாறீங்களோ?:)

      ஆனைப்பிள்ளைக்கு கால் மெல்லிசா இருக்கோ? ஆஆஆ நேரில அப்படித் தெரியேல்லை.. படத்தில தெரியுதோ.. ஒருவேளை அவரும் அதிராவைப்போல விரதமாக்கும்:)) எனக்கெதுக்கு ஊர் வம்பு:))

      Delete
  10. ஆமாம் இந்த டைம் நீங்க போனப்ப செம் சூப்பர்ப் க்ளைமேட்டோ வானம் பளீர்னு வெளிச்சமா இருக்கு .இங்கே அப்படி காணகிடைக்க கஷ்டம் .
    தேங்க்ஸ் அந்த மஞ்சள் ரோஜாக்கு .பத்திரமா வைப்பேன் டோன்ட் ஒர்ரி 

    ReplyDelete
    Replies
    1. படு வெயில் அஞ்சு... மத்தியானமாகிட்டு வெளிக்கிட்டுப் போக, அன்றுதான் சக்கரைப்புக்கை செய்திருந்தார்கள், நாம் கும்பிட்டுவிட்டுப் போக முடிஞ்சுபோச்செனச் சொல்லியிருந்தேனே...

      றோஜாவுக்கு தண்ணி ஊத்தி..குட்டிபோடப்பண்ணி, எனக்கொரு குட்டி தாங்கோ:))

      Delete
  11. ஊசிகுறிப்பு சூப்பர் .ஏமாந்தாலும் அதுவும் ஒரு லெசன் என்று போய்டணும் இப்போ பூனை எதுக்கு கடமை உரிமைலாம் யோசிக்றது  :) பக்திமியாவ் ஆனதாலா :)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு முக்கியம் கடமை நேர்மை எருமை எல்லோ:)) அதேன்ன்ன்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அஞ்சு.. நிம்மதியா நித்திரை கொள்ளுங்கோ.. என் அடுத்த போஸ்ட் விரைவில வரும்:)) அதுக்கு ஓடி வரோணும் எல்லோ:))

      Delete
  12. இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம் ஆனால் தாழ்ந்து போவதில்லை//

    இது மிக உண்மை....

    ஏமாற்றுபவர்கள் வெற்றி பெறலாம் ஆனால் கடைசிவரை சாதிப்பதில்லை//

    இது மிக மிக தவறு ஏமாற்றுபவர்கள்தான் சாதிக்கிறார்கள் இன்றைய உலகில்... உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்தவர்களையே சொல்லுகிறேன் கலைஞர், ஜெயலலிதா மோடி இவர்கள் ஏமாற்றி வெற்றி பெற்றவர்கள்தான் ஆனால் இவர்களும் ஏதோ ஒரு வகையில் பலவற்றை சாதித்துதான் இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. ஆவ்வ்வ்வ் இன்று என்ன ஒரே உணர்ச்சிப் பரவசமாப் பொயிங்குது ஹா ஹா ஹா:)..

      அது ஏமாற்று வேலை எனச் சொல்வதை விட ஒரு வித ஸ்ராரெஜி எனச் சொல்லலாமோ:)..

      மிக்க நன்றி ட்றுத்.. அவ்ளோ தூரத்திலிருந்து ஓஒடி வந்திட்டீங்க.. பாருங்கோ இன்னும் கீசாக்காவைக் காணம்:))

      Delete

    2. கீசக்க்கா மோடிக்கி மங்களம் பாடி ஒரு பதிவு போட்டு இருக்காங்க அதனால வர தாமதம் ஆகி இருக்கும்

      Delete
    3. ஹா ஹா ஹா மோடி-மங்களம் எனக் கேட்டதும் கீசாக்கா ஓடி வந்திட்டா:)).. அவ ட்றம்ப் அங்கிளையும் கைவிடேல்லை என்பதனை ட்றுத்துக்கு அறியத்தருகிறேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  13. மாப்பிள்ளை என்னவா இருக்கார்.

    பேஸ்புக்குல நிறைய பேருக்கு ப்ரண்டாக இருக்கிறார்.


    அப்படியா அவரின் ப்ரென்ட்ஸ் பெயரி சிலவற்ரை சொல்லுங்கள்


    அதிரா, ஏஞ்சல் , ப்ரியசகி,


    இவங்களுக்கு எல்லாம் ப்ரென்டாக இருந்தால் மாப்பிள்ளைக்கு நல்லாவே சமைக்க தெரியாது.. சாரிங்க எங்களுக்கு உங்க மாப்பிள்ளை வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. என்ன லாஜிக் இதுல மதுரைத் தமிழன்....

      அவங்களுக்கு ஃப்ரெண்டா இருந்தால், (அ, ஏ) மாப்பிள்ளை, 'ஓ.. பொண்ணுகளுக்கு சமைக்கத் தெரியாதா.. அப்படீன்னா இப்பவே சமையல் கத்துக்கிட்டாத்தான் தன் வாழ்க்கை தேறும்' என்று புத்திசாலித்தனமா யோசிச்சு, நல்லா சமையல் செய்யக் கத்துக்கிட்டிருப்பாரே.

      Delete
    2. உன் நண்பர்கள் யாருன்னு சொல்லு நான் உன்னை பற்றி சொல்லுகிறேன் என்ற லாஜிக்த்தான் இதெல்லாம் என்ன லாஜிக் என்று ஆராய்ச்சி பண்ணக் கூடாது


      மாப்பிள்ளைக்கு நல்லாவே சமைக்க தெரியும் ஆனால் கல்யாணத்திற்கு அப்புறம் அவருக்கு பொண்டாடிக்கு சமைச்சு போட்டு நேரம் வேஸ்டக்கா டைம் இல்லை அதனாலதான் அவங்க அவங்களுக்கு வேண்டியதை அவங்க அவங்க சமைக்கனும் அதுதானலதான் மாப்பில்லை வீட்டார் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்

      Delete
    3. //மாப்பிள்ளை என்னவா இருக்கார்.

      பேஸ்புக்குல நிறைய பேருக்கு ப்ரண்டாக இருக்கிறார்.//

      ஹா ஹா ஹா ட்றுத் உங்களுக்குத் தெரியாது:), பேஸ்புக்கில் பல பல பெரியாட்களை ஃபிரெண்ட்ஸ் ஆக்கி வச்சிருந்ப்போர் எல்லாம் பெரியாட்களாம்:)) போகிற போக்கில் காதில அடிபட்டுதே:)) ஹா ஹா ஹா..

      இப்போ உங்களிருவருக்கும் நல்லாச் சமைக்கத் தெரியுமெல்லோ:))).. பிறகெதுக்கு அஞ்சு அதிரா என கணக்கெடுப்பெல்லாம் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete


  14. என்னங்க் அதிரா உங்க ஆள் உயர படத்தை போட்டுவிட்டு அதை தேர் என்று சொன்னால் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு ட்றுத்தில தான் டவுட்டாக இருக்கு:).. கனடாப் பக்கம் போனால் என் புளொக்கைக்காட்டிவிடுவாரோ கோயில் பரிபாலன சபையினருக்கு என:))..

      அதிரா ஜொன்னா நம்போணும் ட்றுத்:).. ஏன் தெரியுமோ?.. அதிரா பொய் ஜொள்ளமாட்டேனாம்ம்:))

      Delete
  15. வணக்கம் அதிரா

    படங்களுடன் கோவில் தரிசனம் நன்றாக இருக்கிறது . கோவில் படுசுத்தமாக உள்ளது ஒவ்வொரு படங்களிலும் அழகு மிளிர்கிறது. இன்று தங்களால் கனடாவிலிருக்கும் கோவில்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்

    ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டம் கிடைத்த சந்தோஷத்தில் அழகாக உள்ளனர். என்னைப் பொறுத்த வரை இவர்கள் அனைவருமே ஆண்டவனின் அடியார்கள். ஆண்டவனின் அருகாமையை, அருளை உணர்ந்தவர்கள். இந்த புண்ணியம் பெற எத்தனைப் பிறவிகளோ? ஆனால் சைவ, வைணவ பற்று உள்ளவர்கள் இந்த பெயர் மாற்றத்தை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஹா.ஹா.ஹா.

    மஞ்சள் ரோஜா மிக அழகு. அதை அஞ்சுவிடம் கொடுப்பதற்கு முன், "நீ ஒரு வருடம் வாடாமல் அப்படியே இருக்க வேண்டுமென" அதனிடம் உறுதி மொழி வாங்கிக் கொண்டீர்களா.! அதுதான் உண்மையான நியாயம். ஹா. ஹா.

    ஊசி இணைப்பு தறபோதைய நிலையை அழகாக விளக்குகிறது. ரசித்தேன்.
    ஊசிக்குறிப்பு தத்துவம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. நீங்க எப்போ வந்தீங்க? நான் உண்மையில் இன்னும் கமலாக்கா இப்பக்கம் வரவில்லையே.. என் போஸ்ட் தெரியவில்லையோ என எண்ணிக் கொண்டிருக்கிறேன்ன்..


      //கோவில் படுசுத்தமாக உள்ளது ஒவ்வொரு படங்களிலும் அழகு மிளிர்கிறது.//

      உண்மைதான், இந்தக் கோயில் மிக அழகும் சுத்தமுமாக இருக்கு.. அதுவும் மிகப் பெரிய இடமாக இருப்பதனால், கோடை வெயிலுக்கு உள்ளே இருக்க சில்லென சூப்பராக இருந்துது.

      Delete
    2. //ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டம் கிடைத்த சந்தோஷத்தில் அழகாக உள்ளனர்//

      ஹா ஹா ஹா ஓ அதனை நீக்கிவிட நினைச்சு மறந்திட்டேன்ன்:))

      //ஆனால் சைவ, வைணவ பற்று உள்ளவர்கள் இந்த பெயர் மாற்றத்தை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஹா.ஹா.ஹா.//
      ஆவ்வ்வ்வ் அப்படி வித்தியாசம் இருக்கோ.. நாயன்மாருக்கும் ஆழ்வார்களுக்கும்...

      //"நீ ஒரு வருடம் வாடாமல் அப்படியே இருக்க வேண்டுமென" அதனிடம் உறுதி மொழி வாங்கிக் கொண்டீர்களா.! அதுதான் உண்மையான நியாயம். //

      என்ன இப்பூடி டகுப் பக்கென கட்சி மாறிட்டீங்க கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா றோஜா பாவம் பேசத் தெரியாதெல்லோ:)) அதனாலதான் அஞ்சுவை மிரட்டியிருக்கிறேன்ன்:)).. அவவும் பயத்தில ஓகே எண்டிட்டா ஹா ஹா ஹா:))..

      மிக்க நன்றிகள் கமலாக்கா...

      Delete
  16. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மஹாவிஷ்ணுவோடு நான்கு ஆழ்வார்கள் மேலேயும் ,மீதி எட்டு ஆழ்வார்கள் நடுவில் ராமாநுஜரோடும் இருக்காங்க. நாயன்மாராம் நாயன்மார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தத் தமிழே ஒழுங்காப் படிக்கத் தெரியலை, இதிலே தமிழிலே "டி"எல்லோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ பக்திமான் பட்டம் வேறேயா! கிழிஞ்சது!

    ReplyDelete
    Replies
    1. கீதாம்மா நல்லா கொட்டுங்க கீதாம்மா நல்லா கொட்டுங்க ஹீஹீஹீ

      Delete
    2. அதானே! ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க!

      Delete
    3. கீசாக்கா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா கற்பூரம் மாதிரியாக்கும்.. இப்போ பாருங்கோ ஆழ்வார்கள் என மாத்திப்புட்டேனே:)) ஜிங் ஜக் ஜிங் ஜக்க்க்க்:)) ஹா ஹா ஹா..

      உண்மையில கீசாக்கா.. நாயன்மார் எனில், திருநாவுக்கரசர், அப்பர், சம்பந்தர் பெயர்கள் இருக்கோணுமே என தேடினேன் .. அதில இல்லை எல்லோ.. சரி கொஞ்சப்பேரை மட்ட்டுமே இக்கோயிலில் வச்சிருக்கினமாக்கும் என நானாவே ஒரு முடிவுக்கு வந்தேன்:)) அது டப்பா கீசாக்கா?:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. ட்றுத் இப்போ அதிரா பக்கமா கீசாக்கா பக்கமா என முடிவெடுக்க முடியாமல் இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      கீசாக்கா நீங்க டக்குப்பக்கென மோடி அங்கிளை வாழ்த்தி ஒரு போஸ்ட் போடுங்கோ:)) ஹா ஹா ஹா.. நன்றி ட்றுத்.. ஓடி ஓடி வாறீங்க இம்முறை.

      Delete
    5. நேற்று வேலையில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டதாலும் இன்று எனக்கு ஆஃப் டே என்ப்தால் ஒடி ஒடி வர முடிந்தது... மற்ற நாட்களில் காலியில் 4 மணிக்கு எழுந்துதால் இரவு படுக்க 11 அல்லது 12 மணியாகிவிடுகிறது அதனால் உடல் டையார்ட் ஆகிவிடுவதால் சில நேரங்களில் பதிவுகள் படித்தாலும் பதில் போட முடியவில்லை அவ்வளவுதான் விஷயம்

      Delete
    6. ஓ நோட் பண்ணிட்டேன் ட்றுத்... மிக்க நன்றி மீள் வருகைக்கு.

      Delete
  17. ஊசிக்குறிப்பும் சரி,ஊசி இணைப்பும் சரி, அருமை வழக்கம்போல்.பொருத்தமானது அனைவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீசாக்கா.. மிக்க நன்றி.

      Delete
  18. ஆனையாருக்குச் சாப்பாடே போடலையோ? ரொம்பவே இளைச்சு இருக்கார். அப்புறமா கோயில் கோபுரங்களுக்கும் கருவறைக்கு மேல் இருக்கும் விமானங்களுக்கும் வித்தியாசம் உண்டு. கோபுரம் எனில் கோயில் நுழையும்போதே வந்துடும். விமானம் எனில் அது கருவறைக்கு மேல் இருக்கும். எல்லாக் கோயில்களிலும் விமானங்கள் கட்டாயமாய் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறைப்படி கட்டப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் விமானம் மகுடாகம முறையில் கட்டப்பட்டது. அதைப் பற்றி விவரிக்கப் போனால் பல பதிவுகள் எழுதலாம். இங்கே நீங்க பார்த்தது அனைத்தும் மூலஸ்தான உம்மாச்சிங்களுக்கு மேலே இருக்கும் விமானங்கள். தி/கீதா தன் பதிவுகளில் ஸ்ரீரங்கம் கோயில் கோபுரங்களைப் போட்டிருக்காங்க. அந்தக் கோயில் விமானமும் போடுவாங்க என நினைக்கிறேன். ப்ரணவஹர விமானம் என அதற்குப் பெயர்.

    ReplyDelete
    Replies
    1. அட...   இதோ சொல்லி இருக்காரே....

      Delete
    2. ஓ கீசாக்கா இதைத்தான் கோயில் விமானம் என்பதோ.. ஆனா பெரும்பாலும் கோயில் விமானங்கள்.. கூரைக்கு உள்ளேயேதான் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்ன் அதனாலதான் இக்குழப்பம்.. அப்போ இது கோபுரம் எனச் சொல்லக்கூடாது அப்படித்தானே...

      நன்றி கீசாக்கா .. நன்றி ஸ்ரீராம்.. யேஸ் கீசாக்கா ஜொள்ளிட்டாஆஆ.....

      Delete
    3. //ஆனையாருக்குச் சாப்பாடே போடலையோ? ரொம்பவே இளைச்சு இருக்கார்.//
      அவர் டயேட்டாம் கீசாக்கா:))

      Delete
  19. ஆழ்வார்கள் பன்னிருவர். நாயன்மார்கள் அறுபத்து மூவர்.

    கீழ என்ன எழுதியிருக்குன்னு தமிழ் படிக்கக்கூடத் தெரியாதா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. இதற்கான பதிலை மேலே பல இடங்களில் சொல்லிட்டேன்ன்ன்ன்.. படிச்சேன்ன் ஆனா எனக்கு சில நாயன்மார்கள் பெயர்தானே தெரியும் என்பதால, இதிலிருக்கும் பெயர்கள் எனக்குத் தெரியாத நாயன்மார்களின் பெயர்களாக இருக்கலாம் என நினைச்சது டப்போ?:) ஹா ஹா ஹா..

      Delete
  20. //இனி வைர அட்டியல் குடுக்கத் தேவையில்லைத்தானே?:).// - உங்க ஸ்கூல்ல, அதிராவுக்கு போன மாசம் கொடுத்த சம்பளத்தையே இன்னும் அவங்க கணக்குல இருந்து எடுத்துச் செலவழிக்கலை. இந்த மாசம் எதுக்கு சம்பளம் கொடுக்கணும்னு நினைச்சுடப் போறாங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் அது போனமாசம் குடுத்தது முடிஞ்சுபோச்ச்ச்:)) ஆனா வள்ளி கழுத்தில அட்டியல் இருக்குதெல்லோ:) இதுகு மேல இன்னொன்று எதுக்கு?:) அவ ரெண்டு அட்டியல் கட்டுவாவோ என்ன?:)) ஹா ஹா ஹா..

      எப்பூடியாவது நானும் நேர்த்தியைக் குறைக்க ட்றை பண்ணுகிறேன்ன் விடுகினம் இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  21. இந்த ஆனைக்கு என்ன நாலு தந்தங்கள் இருக்கு? ஆனா வாகனம் அழகா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. இப்போ திரும்ப ஓடிப்போய் பார்த்தேன். அது நாலு இல்லையாக்கும் கர்:)).. கீழே தந்தத்தை ஏதோ ஸ்ரைல் கட் பண்ணி விட்டிருக்கிறார்கள்.. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ.. வாகனம் நல்ல பளிங்காக கலர்ஃபுல்லாக இருந்தது.

      Delete
  22. //ரொரண்டோவில் இருக்கும் சிரடி பாபா,// - உங்களை இதுக்குத்தான் சொல்றது... மோடி அங்கிள் மீட்டிங்குக்குப் போன கீதா சாம்பசிவம் மேடம் பதிவுகளைப் படிங்க... ஆனா படங்களை உத்து உத்துப் பார்க்காதீங்கன்னு. அப்படி பார்த்ததனால், ஷீரடி சாய்பாபா கோவில் படங்களுக்குப் பதிலாக பெண்களின் சடைகளோடு கூடிய படத்தைப் போட்டிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. //உங்களை இதுக்குத்தான் சொல்றது... மோடி அங்கிள் மீட்டிங்குக்குப் போன கீதா சாம்பசிவம் மேடம் பதிவுகளைப் படிங்க.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அங்கு போய்ப் படிக்கும்போது மண்டையில் பதியாத பலவிசயங்கள், இப்படி என் பக்கம் சண்டையிட்டுக் கண்டுபிடிக்கும்போது ஈசியாகப் பதிஞ்சிடுது:))..

      பூஸோ கொக்கோ.. ஓடி ஓடிப்பிழை திருத்தம் செய்திட்டேன்ன்:)) ஏனெனில் தெய்வக்குத்தமாகிடப்போகுதே எனும் பயத்தில ஹா ஹா ஹா..

      Delete
  23. //ஒரு சேர்ஜ்ஜில் இருக்கிறா// - சர்ச்சுன்னு எழுதலாம். சேர்ச்சுன்னு உங்க பாஷைல எழுதலாம். இது என்ன மொபைல் சார்ஜ் மாதிரி எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹையோ ஹையோ.. ஆங்கிலத்தைத் தமிழில் எழுதுவதே டப்பூ:)) இதில வேற பிழை கண்டுபிடிக்கினமாமாம்ம்ம்ம் ஹா ஹா ஹா ஓகே இனி சேர்ச்:))

      Delete
  24. டொரண்டோ கோவில் உலா, படங்கள் பதிவு மிகவும் பிடித்திருந்தது. தங்கள் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முயல்வது நெகிழ்வாக இருந்தது. இன்னுமே நிறைய படங்கள் போட்டிருக்கலாம். இனியும் படங்கள் வரும் என்று நினைக்கிறேன். (கணவர், பசங்க படங்களை.. நம் பாரம்பர்ய வேஷ்டியோடு... போட மறந்துடாதீங்க)

    ReplyDelete
    Replies
    1. //தங்கள் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முயல்வது நெகிழ்வாக இருந்தது//

      இது உண்மைதான், இல்லை எனில் நம் பிள்ளைகளுக்கு என்ன தெரியும்.. ஏன் நமக்குக்கூட இலங்கை இந்தியா போய்த்தானே கோயிலைப் பார்க்கும் நிலைமை வந்திருக்கும் இல்லாட்டில்.

      //இனியும் படங்கள் வரும் என்று நினைக்கிறேன்.//
      இன்னும் சில கோயில்ப் படங்கள் வரும், ஆனா பயந்து பயந்து ஒட்டி ஒட்டி ஒளிச்சு ஒளிச்சு எடுத்தமையால ஒழுங்கான படங்கள் இல்லை கர்ர்:))..

      //(கணவர், பசங்க படங்களை.. நம் பாரம்பர்ய வேஷ்டியோடு... போட மறந்துடாதீங்க)//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது உங்கட செல்பியை கோபு அண்ணன் என் வட்சப்புக்கு அனுப்பிய பின்புதானாக்கும்:))

      Delete
  25. சும்மா படங்களைப் போடறீங்களே தவிர விளக்கம் மிஸ்ஸிங்.

    வெள்ளி த்வஜஸ்தம்பம், பிள்ளையார் கோவில்/சன்னிதி முன்னால் இருக்கிறது. தாமிர த்வஜஸ்தம்பம் எந்த சன்னிதி முன்னால் இருக்கிறது?

    உங்களுக்குத் தெரியுமா? கோவிலில் விழுந்து வணங்குவது, த்வஜஸ்தம்பம் பக்கத்தில்தான். அதாவது த்வஜஸ்தம்பத்தைத்தான் விழுந்து வணங்குவோம். அதைத் தாண்டி எங்கும் விழுந்து வணங்குதல் கூடாது.

    தேர் மிக அழகாக இருக்கு.

    கடவுளை படம் எடுக்கலைன்னு சொல்லிட்டு வள்ளியை படம் எடுத்திருக்கீங்க. முருகர், தெய்வானைலாம் எங்க?

    ReplyDelete
    Replies
    1. //சும்மா படங்களைப் போடறீங்களே தவிர விளக்கம் மிஸ்ஸிங்.//
      எல்லோருக்கும் புரியும்தானே என நினைச்சேன் நெல்லைத்தமிழன்..

      //வெள்ளி த்வஜஸ்தம்பம், பிள்ளையார் கோவில்/சன்னிதி முன்னால் இருக்கிறது. தாமிர த்வஜஸ்தம்பம் எந்த சன்னிதி முன்னால் இருக்கிறது?//
      ஓ அதை நான் கவனிக்கவில்லையே.. அநேகமாக முருகன் வள்ளி தெய்வானைக்கு முன்னால் போலதான் தெரியுது, இருக்கும் அமைப்பு பார்க்க.

      இது ஒரு கோயிலுக்குள் மூன்று நான்கு தனிக்கோயில்கள்போல இருப்பதனால் எனக்கு குழப்பம். ஒரு பக்கத்தின் பெரீஈஈஈஈய வெங்கடசலாபதி சிலையுடனும் ஒரு கோயில் இருக்கு.. சிலை பார்க்க அழகோ அழகு.. மிக அழகாகவும் சோடித்திருந்தார்கள், ஆனா அதில் கூட்டம் அதிகமாக இருந்தமையால் படமெடுக்க முடியவில்லை.

      Delete
    2. //உங்களுக்குத் தெரியுமா? கோவிலில் விழுந்து வணங்குவது, த்வஜஸ்தம்பம் பக்கத்தில்தான்.//
      ஓ.. பக்கத்தில் என தெரியாது, ஆனா அதைத்தாண்டி உள்பக்கம்[மூலஸ்தானப்பக்கம்] விழுந்து கும்பிடக்கூடாது என்பது மட்டும் தெரியும்..

      //அதைத் தாண்டி எங்கும் விழுந்து வணங்குதல் கூடாது.//

      ஓ அப்போ உள் வீதி சுற்றும்போது, வீதியில் இருக்கும் குட்டிக் குட்டிக் தெய்வங்களை விழுந்து வணங்குகிறோமெல்லோ.. அது செய்யக்கூடாதோ?..

      நன்றி நன்றி.. இப்படித்தான் இன்னும் மிகப் பெரிய தேர்கள் ஊரில் இருக்கு.

      //கடவுளை படம் எடுக்கலைன்னு சொல்லிட்டு வள்ளியை படம் எடுத்திருக்கீங்க. முருகர், தெய்வானைலாம் எங்க?//

      ஹா ஹா ஹா அது வள்ளியை மட்டும் தனியே இப்படி, வைரவருக்குக் கட்டுவதைப்போல குட்டி அறை கட்டி வச்சிருக்கிறார்கள்.. ஆனா முருகன் வள்ளி தெய்வானை சகிதம் மூலஸ்தானத்தில் இருக்கிறார்..அ தனால படம் எடுக்கவில்லை. தெய்வானையை இப்படி தனியாக வைக்கவில்லையே ஏன்?..

      அனைத்துக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்..

      Delete
    3. //குட்டிக் குட்டிக் தெய்வங்களை விழுந்து வணங்குகிறோமெல்லோ..// - எனக்குத் தெரிந்து த்வஜஸ்தம்பத்துக்கு அப்பால் விழுந்து வணங்கக்கூடாது. ஏதேனும் ஆகம காரணம் இருக்கும். அதுனால எந்த சன்னிதியுமே நின்றபடி கைகூப்பி வணங்கலாம். கீழே சாஷ்டாங்கமாக வணங்கக்கூடாது. இதுக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. அதாவது அங்கப் பிரதட்சணம் என்று மூலஸ்தானத்து பிராகாரத்தில் செய்வாங்க.

      அதெல்லாம் இருக்கட்டும். ஆனா வெளிநாட்டில் இருக்கும் இந்த மாதிரி கோவில்கள் பக்தியையும், (ரொம்ப தூரத்திலிருந்து மக்கள் வருவதால் அங்க உணவும் அதாவது கேண்டீனும் இருக்கும்னு நினைக்கிறேன்) சமூகத்து மக்களைக் காணும் வாய்ப்பையும் கொடுப்பதால் ரொம்பவே நிறைவா மனசுக்குத் தோணுது. அதுனால விழுந்து வணங்குவது போன்ற சின்னச் சின்ன விலக்குகள் பெரிய தவறல்ல.

      Delete
    4. //ஆனா வெளிநாட்டில் இருக்கும் இந்த மாதிரி கோவில்கள் பக்தியையும், (ரொம்ப தூரத்திலிருந்து மக்கள் வருவதால் அங்க உணவும் அதாவது கேண்டீனும் இருக்கும்னு நினைக்கிறேன்)//

      அப்படி இல்லை நெல்லைத்தமிழன், தமிழ் மக்கள் இருக்கும் இடங்களில்[வெளிநாட்டில்] கோயில்கள் அதிகம் கட்டியிருக்கிறார்கள்.. ரொரண்டோவில் மட்டும் எத்தனையோ கோயில்கள் உண்டு... அதனால தூர இருந்து மக்கள் வருவது என்றில்லை.. பக்கத்துப் பக்கத்துக் கோயிலையே கவனிப்பார்கள்.. அத்தோடு வெளியே திரும்பும் இடமெல்லாம் சாப்பாட்டுக் கடைகளும் உண்டு.

      கோயில்களில் டெய்லி மத்தியானச் சாப்பாடு உண்டு.. சில நாட்களில் முடிஞ்சுவிடும்... அதாவது வெள்ளி செவ்வாய்களில், ஏனைய நாட்களில் பெரும்பாலும் கிடைக்கும்.

      அதிகமாக குழைசாதம், சக்கரைப்பொங்கல்.. அல்லது சாதம் சாம்பாறு, கறி இப்படி, ஒரு பொக்ஸ்ஸில்[ரெஜிபோம்] போட்டுக் குடுப்பினம்..

      ஒருதடவை பிள்ளையார் கோயில் ஒன்று போனோம், கும்பிட்டு முடிய கூப்பிட்டுத்தந்தார்கள்.. பொக்ஸ்களில் போட்டு, அப்படியே சிவ்ன் கோயில் ஒன்று போனோம்.. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் பூஜை எல்லாம் முடிஞ்சு மக்கள் போய் விட்டார்கள்.. அப்படி அமைதியான நேரத்தில்தான் எனக்கு கும்பிடப்பிடிக்கும்.. போனபோது, அன்றும் சொன்னார்கள் உள்ளே பிரசாதம் இருக்கிறது எடுத்துக் கொண்டு போங்கோ என.. பார்த்தால் அந்த ரெஜிபோம் பிளேட்களில் குழைசாதம் பப்படம் பொரிச்ச மிளகாய் இருந்தது...:)..

      மிக்க நன்றிகள் நெ.தமிழன், கிடைக்கும் நேரங்களில் தவறாமல் பதில்கள் தருகிறீங்கள்.

      Delete
  26. அட!! பக்தி "மான்" ஆகிட்டீங்களா அதான் துள்ளி துள்ளி குயிலே கவிக்குயிலேன்னு!! பாட்டா...அதுசரி அந்தக் கவிக்குயிலும் நீங்கதானல்லோ?!! பழைய அவதாரம்!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. மீ இப்போ பக்தியின் உச்சக் கட்டத்தில எல்லோ இருக்கிறேன்ன்:))..

      //அதுசரி அந்தக் கவிக்குயிலும் நீங்கதானல்லோ?!!//

      ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ கீதா:)) ஸ்ரீதேவி ரசிகர்கள் இங்கு நிறையப்பேர் உலாவுகின்றனர்:))

      Delete
  27. சகோதரி அதிரா என்ன உங்கள் பெயர் மாறிக் கொண்டே இருக்கிறது? அதிராதானே உங்கள் பெயர்? இல்லையா?

    கனடாவில் கோயில் தரிசனம் அருமை.

    படங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கின்றன. உங்கள் செலவில் நான் சுற்றிப் பார்த்துக் கொள்கிறேன். இதற்கு முன் வாஷிங்க்டன் மாளிகை எல்லாம் போட்டீர்களே.

    படம் எடுக்கக் கூடாது என்று இங்கும் கோயில்களில் உண்டு. அங்கும் இருந்தும் நீங்கள் எடுத்து போட்டிருக்கிறீர்களே. எங்களுக்காக என்று. மிக்க நன்றி அதிரா

    எல்லாமே ரசித்தேன்.ஊசிக்குறிப்பு இணைப்பு எல்லாம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. நீங்கள் எங்கும் வராமல் கொமெண்ட்ஸ் அனுப்பிக் கொண்டிருப்பது.. ஏதோ நீங்கள் தூர வெளிநாட்டில் இருப்பதைப்போலவும், நாமெல்லாம் ஒரு நாட்டில் இருப்பதைப்போலவும் ஃபீலிங்காக இருக்கு ஹா ஹா ஹா.

      //சகோதரி அதிரா என்ன உங்கள் பெயர் மாறிக் கொண்டே இருக்கிறது? அதிராதானே உங்கள் பெயர்? இல்லையா?//
      என்ன இப்பூடிக் கேட்டுப்போட்டீங்க துளசி அண்ணன்:)).. இந்த ஜந்தேகத்துக்குக் காரணம் கீதாவாத்தான் இருக்கும் கர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

      அது துளசி அண்ணன், எல்லோரும் தம் பட்டத்தை பெயருக்குப் பின்னால சூட்டுவினம், ஆனா நான் என் பெயரை விட:) கிடைச்ச பட்டங்களுக்கே முக்கியத்துவம் தருகிறேன் என்பதனால முன்னால போடுறேன்:)).. அத்தோடு ஒன்றிரண்டு எனில் மாத்தாமல் வச்சிருக்கலாம், இது எண்ணிலடங்காப் பட்டங்களெல்லோ:)) ஹா ஹ ஹா..

      நீங்கள் தவறாமல் போஸ்ட் படிச்சு ரசிப்பது மிக்க மகிழ்ச்சியைக் குடுக்கிறது.. மிக்க மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.

      Delete
  28. ஹப்பா துளசியின் கமென்ட் போட்டாச்சு இனி என் வேலையைக் கவனிக்கலாம் ஹிஹிஹி.. உங்கள் போஸ்ட் எல்லாம் மாலையில் வருவதால் ராக்கோழியான அவர் படித்துவிடுகிறார். மீ மாலை வேலை, நெட் படுத்தல் என்று 9. 9.30க்கு சாமி ஆடத் தொடங்கிவிடுவேன் ஹா ஹா ஹா

    சரி சரி இப்ப உங்க போஸ்ட்...பூஸார் குண்டுனு ஏஞ்சல் சொல்றதுல டப்பே இல்லை இல்லை!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா..

      //பூஸார் குண்டுனு ஏஞ்சல் சொல்றதுல டப்பே இல்லை இல்லை!!!!! ஹா ஹா ஹா//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது ஆழ்நிலைத்தியானத்தில் இருக்கும்போது, காத்து உள்ளே போய்க் குண்டாத் தெரியுதாக்கும்:)) ஹா ஹா ஹா.

      Delete
  29. இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் அதிரா...இப்பவும் கேட்டு ரசித்தேன்.

    கோபுரம் படங்கள் செம அழகு. ஆனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோமதிக்கா கீதாக்கா ........ நானும்தான் எல்லாம் நிறைய கோபுரம் எடுத்து வந்து கொஞ்சம் போட்டேனே!!!!!!!!! இனியும் வரும் பாருங்க... ஹிஹிஹிஹி......

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் பாட்டு என்ன கீதா...

      ஓ நீங்க ஒண்ணே ஒண்ணு:) கண்ணே கண்ணெனப் போட்டுவிட்டு கூக்குரல் எழுப்பக்கூடாதாக்கும்:))) ஹா ஹா ஹா.. இல்லை கீதா கோபுரம் எனச் சொல்லவில்லை, கோயில் தரிசனப் படங்களை மட்டுமே இப்போ கோமதி அக்கா போட்டுக்கொண்டிருக்கிறா, அதேபோல கீசாக்காவும் அதிகம் போடுவது.. ஓரிடத்தில் இருந்து எடுத்த ஒம்பேஏது வியூக் கோயில் படங்கள்:)) அதைச் சொன்னேனாக்கும்:))

      Delete
  30. அதிரா பொதுவாக நான் அறிந்த படி கர்ப்பக்கரகம் மேல் இருக்கும் கோபுரம்/விமானம் சிறிதாகத்தான் இருக்கும் கோயிலின் முகப்பு, மற்றும் பெரிய கோயில்களில் இருக்கும் வடக்கு தெற்கு மேற்கு என்றிருக்கும் கோபுரங்கள் தான் பெரிதாக இருக்கும். கோயிலின் உள்ளே கர்ப்பக்ரக கோபுரம் சிறிதுதான்

    அடுத்தா நான் போட இருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலின் கர்ப்பக்ரக விமானம் பொன்வேயப்பட்ட விமானமாகச் சிறிதாக இருக்கும்....பாருங்கள் அப்ப தெரியும். அக்கோயிலின் எல்லா கோபுரங்களும் வரும். கருவறை மீதான கோபுர விமானம் சிறிதாகவும் இது விமானம் என்றுதான் சொல்லப்படும், மற்றவை கோபுரங்கள் அவை தான் பேசப்படுகிறது. ஸ்ரீராங்கம் கோயிலின் ராஜகோபுரம், வெள்ளை கோபுரம் என்று பேசப்படுவது போல...அதன் கர்ப்பக்கிரக/கருவறை விமானம் சொல்லப்படுவதில்லை. இது பொதுவாக எல்லாக் கோயில்களுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது..

    ஆனால் எனக்கு இது ஏன் அப்படி என்ற தத்துவம் எல்லாம் தெரியாது. கீதாக்கா, கோமதிக்கா, துரை அண்ணா, பானுக்கா, நெல்லை போன்றவங்க இதன் தத்துவம் சொல்லுவாங்க.

    நான் இதை நோ செய்திருக்கிறேனே தவிர தத்துவம் அறிய முற்பட்டதில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. // கோயிலின் உள்ளே கர்ப்பக்ரக கோபுரம் சிறிதுதான்//

      கீசாக்கா சொன்னபின்புதான் எனக்கு கோபுரத்துக்கும், கோபுரவிமானத்துக்குமான வித்தியாசம் தெரிஞ்சது கீதா, ஆனா நான் கேட்டது, இது பிள்ளையார் கோயில் என்பதால், பிள்ளையாருக்குத்தானே பெரிய கோபுரவிமானம் கட்டியிருக்கோணும் என, கீசாக்கா சொல்றா ஒவ்வொரு தெய்வத்துக்கும் அளவு இருக்கிறதாம் .. இப்போதான் என் சந்தேகம் தீர்ந்தது.

      //பாருங்கள் அப்ப தெரியும். அக்கோயிலின் எல்லா கோபுரங்களும் வரும்.//
      ஓ பார்க்கிறேன்..

      நன்றி கீதா

      Delete
  31. புகைப்படம் எடுக்கக் கூடாதுனா ஏன் எடுத்தீங்க அதிரா. இப்படிப் போடும் போது தெரிந்தால் பிரச்சனை வராதோ?

    இங்கு நாங்க எடுக்கக் கூடாதுனா எடுப்பதில்லை அதிரா. உள்ளே கேட்டுக் கொண்டு சம்மதித்தால் மட்டுமே எடுக்கிறோம். அதனாலதான் என்னால் பல கோயில்களின் படங்கள் போட முடிவதில்லை. ச

    அனுமதி இல்லை இதைப் பத்தி துரை அண்ணா வருத்தப்பட்டு சொல்லியிருப்பார். எனக்கும் அக்கேள்வி எழுந்ததுண்டு.,,கீதாக்கா, கோமதிக்கா எல்லாரும் சொல்லிருப்பாங்க....நாம் எடுக்க மாட்டோம் எடுக்கக் கூடாது ந்னு போட்டிருப்பதால ஆனால் அதே கோயில் படங்கள் அபிஷேகங்கள் எல்லாம் இணையத்தில் வீடியோவாகவும் படங்களாகவும் அதுவும் கருவறை விக்ரகம் உட்பட எல்லாம் வந்திருக்கு என்று . எப்படி அவங்களுக்கு மட்டும் அனுமதின்னு எடுக்க கூடாதுனா எல்லாருக்கும் தானே என்று..

    நானும் உங்களை மாதிரி யாரும் பார்க்காதப்ப எடுக்க முனைவேன். ஆனா கூட வருபவர்கள் என்னைத் திட்டி தடுத்துவிடுவாங்க அதனால எடுக்க முடியறதில்லை.

    ஸ்ரீரங்கம் கோயில்ல இந்த வெளிச் சுற்றில் எடுக்க பைசா கட்டி கேமராவை எடுத்துச் சென்றேன்....நோட் திஸ்...கேமராவுக்குப் ரூ ஆனால் செல்ஃபோன் எல்லாரும் வைச்சிருந்தாங்க அதுக்கு ரூ வாங்கவில்லை!!!!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //புகைப்படம் எடுக்கக் கூடாதுனா ஏன் எடுத்தீங்க அதிரா. இப்படிப் போடும் போது தெரிந்தால் பிரச்சனை வராதோ?//
      என்ன இப்பூடி மிரட்டுறீங்க கீதா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பயமாத்தான் இருக்கு எனக்கு... அதனால கோயில் பெயர் போடாமல் விட்டிடலாமா என யோசித்தேன்.. பின்பு பெயர் போடாவிட்டால் நீங்கள் எல்லோரும் கேட்பீங்களெல்லோ.. அதனால போட்டேன்ன்.. என்னைப் பிள்ளையார் காப்பாத்துவார் எனும் நம்பிக்கை இருக்கு:)).

      Delete
  32. இன்று எபி போஸ்ட், கீதாக்கா போஸ்ட் பூஸார் போஸ்ட் எல்லாம் போகணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். துரை அண்னா பக்கம் போகலை, கீதாக்காவின் சாப்பிட வாங்க பக்கம் போகலை....ஹையோ அங்கும் இங்கும் ஓடி இன்று என்ன செய்யப் போறேனோ....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சில சமயம் இப்படித்தான் ஆகிடுது, நேற்று பார்க்கிறேன் எங்கள்புளொக் போஸ்ட்டின் பின்பு எந்தப் போஸ்ட்டும் இல்லை:)) நான் போகுமிடங்களில்..

      Delete
  33. பாடல் பிடித்த பாடல்தான்.
    ஸ்ரீதேவியின் பழைய மூக்கு பிடிக்கும். அப்புறம் கூர்மையான மூக்கை மாற்றி அமைத்து கொண்டார், ஹிந்தி சினிமாவிற்கு.

    கோவில் பின்னனி சூப்பர். நீலவானமும், வெண்மேகமும் அழகு.
    கோவில் உள்ளே படம் எடுக்க அனுமதி கிடைத்ததா?
    அனைத்து படங்களும் அழகு.
    ஒரு படத்தில் உங்கள் விரல் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      யேஸ் அவர் மூக்கும் வாயும் பின்னாளில் பிளாஸ்ரிக் செர்ஜரி செய்ததாக அறிஞ்சேன்.. அவர் பின்னாளில் பழுதாகிப்போயிட்டா.. ஏதோ வருத்தம் வந்தவர்போலவே தெரிஞ்சா..

      //ஒரு படத்தில் உங்கள் விரல் தெரிகிறது.//

      விரலா அவ்வ்வ் எனக்குத் தெரியல்லியே:)).. நன்றி கோமதி அக்கா.

      Delete
  34. //ஃபோனின் கிளிக் சவுண்டை ஓவ் பண்ணி, பிளாஸ் லைட்டை ஓவ் பண்ணி, வேர்க்க விறுவிறுக்க:) //

    ஓ தெரியாமல் எடுத்த படமா? உங்களை கோவிலில் வைத்து இருக்கும் காமிரா படம் எடுத்து இருக்கும், அடுத்த தடவை கோவிலுக்கு போகும் போது உங்களை பார்த்து கொள்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ///உங்களை கோவிலில் வைத்து இருக்கும் காமிரா படம் எடுத்து இருக்கும்//
      அச்சச்சோ எல்லோரும் ஒரு அப்பாவியை மிரட்டுறீங்களே:)).. நான் இனி கொஞ்சக்காலம் அங்கு போகாமல் விடப்போகிறேன் ஹா ஹா ஹா..

      Delete
  35. //ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டம் கிடைத்த சந்தோஷத்தில் அழகாக உள்ளனர். என்னைப் பொறுத்த வரை இவர்கள் அனைவருமே ஆண்டவனின் அடியார்கள். ஆண்டவனின் அருகாமையை, அருளை உணர்ந்தவர்கள்.//

    கமலா ஹரிஹரன் சொன்னது போல் ஞானி அதிராவிற்கு எல்லோரும் ஒன்று தான்.


    அன்பை உணர்த்தும் மஞ்சள் ரோஜாவை ஏஞ்சலுக்கு கொடுத்து விட்டு அப்படியே மகிழ்ந்து இருப்பதை விட்டு ஏன் இந்த கொலை வெறி சபதம்?




    ReplyDelete
    Replies
    1. ///கமலா ஹரிஹரன் சொன்னது போல் ஞானி அதிராவிற்கு எல்லோரும் ஒன்று தான்.//

      ஹா ஹா ஹா இது யூப்பரூஊஊஊ கோமதி அக்கா.. பாருங்கோ இதை கீசாக்கா, நெல்லைத்தமிழன் பார்க்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதுதானே ஞானிகளுக்கு ஏது பேதம்:))... எனக்கு சைவமும் ஒன்றுதான் அசைவமும் ஒன்றுதான் ஹா ஹா ஹா:))

      Delete
  36. பக்திமான் அதிரா செய்து வைத்த பாபா தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
    கொலு வேலைகளால் உடல் சோர்ந்து இருந்தது, தெம்பு தர வேண்டிக் கொண்டேன்.

    மாதா படம் அழகு, மாதா பின்புறம் உங்கள் படம் தெரிகிறதே!

    ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ கோமதி அக்கா இம்முறை அனைத்தையும் கண்டுபிடிச்சிட்டா ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      அது உண்மைதான் சிலசமயம் எனக்கும் எங்கும் போகப் பிடிக்காது...

      Delete
  37. உண்மையிலேயே பிள்ளையார் படம் மட்டுமல்ல எல்லா படங்களுமே அழகே.

    உட்புறப்படங்கள் ஏதோ மாலில் எடுத்தது போலவே இருக்கிறது எல்லாம் காலமாற்றம்.

    //இரக்கப்படுபவன் ஏமாந்து போகலாம் ஆனால் தாழ்ந்து போவதில்லை//

    என்னைச் சொன்னது போன்ற உணர்வு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. மிக்க நன்றி.

      //உட்புறப்படங்கள் ஏதோ மாலில் எடுத்தது போலவே இருக்கிறது எல்லாம் காலமாற்றம்//
      ஏன் மோல் போல, கோயில் வளவு இருப்பது டப்பா?:)).. நாட்டுக்கு ஏற்ற சைனிங்:)).

      //என்னைச் சொன்னது போன்ற உணர்வு.//

      ஓ... பலருக்கு இது ஒத்துப்போகும்...

      மிக்க நன்றிகள் கில்லர்ஜி.

      Delete
  38. மேகப் பின்னணியில் கோவில் படம் அழகாய் இருக்கிறது. மூன்றுகோபுரங்களா?  கீதா அக்கா வந்து விளக்கம் சொல்வார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      அதேதான் கீசாக்கா வந்தபின்னர்தான் எனக்கும் புரிஞ்சது...

      Delete
  39. பிள்ளையார் அழகாகவே இருக்கிறார்.  அங்கேயும் படங்கள் எடுக்கக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. அதேதான் ஸ்ரீராம், பெரும்பாலான கோயில்கள் இப்போ இப்படி அழகு சிலைகளாக தெய்வங்களும் நகைகளோடும் இருப்பதால், இப்படி விதிமுறை.... இன்னொரு கோயில் போனோம்.. அது சொல்லி வேலையில்லை தகதக என தங்கக்கோயில் போல இருக்கு.. அது தனி ஒருவர், இலங்கையர் தன் சொந்தக் கோயியிலாக கட்டி நடத்துகிறாராம்.. அங்கும் படம் எடுக்கவே முடியவில்லை, இருந்தாலும் கொஞ்சம் எடுத்தேனே...பின்பு வரும்.

      Delete
  40. கோவில் நேர்த்தியாகவும், பணப்பளபளப்பாகவும் இருக்கிறது!  அப்படியிருந்தால் செயற்கையாக இல்லையோ!!!

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமோ ஸ்ரீராம்.. நாம் நம்மூர்களில்.. பழைய கால மன்னர்கள் கட்டிய கோயில்களை வழிபட்டு வருவதால் நமக்கு அது பழகி விட்டது.. ஆனா இது இங்கு இப்போ ஒரு 30 வருடத்துக்குட்பட்ட கோயில்கள்தானே அனைத்தும்.. எப்படி இருந்தாலும் கோயில் கோயில்தானே.. உள்ளே போனால் வெளியே வர மனம் விரும்பாது.

      Delete
  41. ஓ...   பாபாவும் அங்கே இருக்கிறாரா?  வருக்கும்பக்தர்கள் பெருகியவண்ணம் இருக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. எந்தக் கோயிலிலும் பக்தர்களுக்குக் குறைவில்லை... மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  42. வெளிநாட்டில் இப்படி எல்லாம் தான் இருக்கும் கோயில் இங்கும் நவீன கோயில்கள் இப்படித்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிறது அதிரா இருந்டாலும் நம் நாட்டு அந்தக்காலத்துக் கல்லில் உள்ள கோயில்கள் இன்னும் அழகோ? இருந்தாலும் இறைவன் எல்லா இடத்திலும்தானெ இருக்கிறார் இல்லையா? எங்கிருந்தால் என்னா எல்லா இறைவன் இருக்கும் எல்லா இடங்களும் அழகுதான் !!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாம் இதை மாற்றிப் பார்க்கோணும் கீதா, நம்மவர்கள் வெளிநாடு வந்து நிலம் வாங்கி கோயில் கட்டி.. இப்படி நம்மூர் போல ஆக்கியிருக்கிறார்களே.. இல்லை எனில் நாம் கோயில் பார்க்க எங்கு போவோம்ம்...

      Delete
  43. அந்த உச்சி வெயில் நு போட்டிருக்கீங்களே அந்தப் படம் வாவ்! ஏதோ கோயிலில் இருந்து புகை போவது போல மேகம்...அழகான தெக்கினிக்கி ஃபோட்டோ!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சரியான வெயில்.. அதுவும் உச்சி வெயில் கீதா, வெளி விதி சுற்ற ஆசையாக இருந்துது சுற்றி வந்தோம்.

      Delete
  44. அதிரா அது நாயன்மார்கள் அல்ல. ஆழ்வார்கள்! ஆழ்வார்கள் 12 பேர். அதில் ஒருவர் மட்டுமே பெண். அது ஆண்டாள்.

    நாயன்மார்கள் 63. நாயன்மாரில் மூன்று பெண்கள். யாழில் ஒரு தீவுக் கோயிலில் உண்டே இல்லையோ?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா. மாற்றி விட்டேன் கீதா, இலங்கையில் இருக்கலாம்.. நான் பார்த்தும் இருக்கலாம்.. அவதானிக்கவில்லை.. இப்போகூட இப்படி புளொக்கில் போட்டு பின்னிப் பெடல் எடுப்பதாலேயே நிறைய விசயம் புரிகிறது:)...

      Delete
  45. பிள்ளையாயார் வாவ்! என்ன அழகு இல்லையா...மனம் கவர் பிள்ளையார்!!

    பிள்ளையார் எப்படி இருந்தாலும் அயகோ அயகுதான்!!!

    வைர அட்டியல் வேண்டாம்னா வைர நெக்லஸ் கொடுக்கலாமல்லோ அந்த அட்டியல் என்ன கலர் கல் அல்லது டிசைன் பார்த்து ஒரு செட் கம்மல், மாலை, வளையல் நெத்திச்சுட்டி. சந்திர பிறை சூரியப் பிறை எல்லாம் வாங்கிக் கொடுக்கலாமல்லோ இனி அதை நேர்த்திகடனா சொல்லுங்க இல்லைனா நான் உங்களுக்காக சொல்லிக்கறேன் ஹா ஹா ஹாஹ் ஆ..

    வைரம் இல்லைனா ப்ளாட்டினத்துல வேண்டிக்கங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நாங்க விட மாட்டோம் அதிராவின் நேர்த்திக் கடனை...அப்பப்ப நினைவுபடுத்திட்டே இருப்போமாக்கும்!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நாங்க விட மாட்டோம் அதிராவின் நேர்த்திக் கடனை...அப்பப்ப நினைவுபடுத்திட்டே இருப்போமாக்கும்!!!!!!!!!!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      அது வள்ளிக்கு முருகனுக்கு மிதியடியில இருந்து ஒட்டியாணம் மூக்குத்தி என நிறைய நேர்த்தி இருக்குது கீதா:))

      Delete
  46. நம்மவர்கள் தான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க மாட்டார்களே அங்கும் யார் கனவிலாவது வந்து கோவில் கட்டச்சொன்னார்களா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜிஎம்பி ஐயா வாங்கோ..

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) எப்பவும் நெகடிவ்வாகவேதான் சிந்திப்பீங்களோ:)).. இருக்கலாம்.. எப்படியாவது நமக்கு கோயில் கிடைச்சதில் மகிழ்ச்சி.. மிக்க நன்றிகள்.

      Delete
  47. பிள்ளயார் அழகோ அழகு!!! பிள்ளையார் எப்படி இருந்தாலும் அழகுதான்...இதோடு என்று நினைக்கிறேன் ஒரு கருத்து போட்டேன் கரன்ட் போயிடுச்சு அந்தக் கருத்து வந்ததோ இல்லையோ என்று தெரியலை. வேர்டில் தான் அடித்தேன் ஆனால் வேர்டும் அதை சேவ் செய்யாமல்போயிடுச்சு...

    கோயில் அழகு அந்தக் காலத்துக் கோயில் என்றால் அது கற்களால் சிலைகள் என்று தனி இல்லையா..என்றாலும் எல்லா இடத்திலும் இறைவன் இருப்பதால் இறைவன் இருக்கும் இடம் எல்லாம் கோயில்தான்...ஆனால் கோயில் அழகு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ நானும் கவனிக்கவில்லை ரெண்டுதரம்.. பிள்ளையார் அழகு எனச் சொல்லிட்டீங்க:) இப்படி ரெண்டுதரம் அதிராவைக்கூடச் சொன்னதில்லை கர்ர்ர்:)

      Delete
  48. சரி சரி வள்ளியம்மைக்கு வைர அட்டில இருந்தால் என்ன அதுக்கு செட்டாக கம்மல், வளையல் நெக்லஸ் நெத்திச்சூடி, சந்திரப் பிரபை சூரியப்பிரபை என்று வைரத்தில் அதிரா வாங்கி கொடுப்பதாத நேர்த்திக் கடன் வைக்கலாமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இல்லை பிளாட்டினல்த்தில்..

    நாங்க விட மாட்டோம் உங்களை நினைவு படுத்திக் கொண்டேதான் இருப்போமாக்கும் ஹிஹிஹிஹி...நீங்கள் நேர்ந்துக்கலைனா சொல்லுங்க நாங்க உங்களுக்குப் பதிலா நேர்ந்துக்கறோம் அதிரா விரைவில் கொடுத்துடுவாங்கனு!!!!!!....அதிரா இதை எல்லாம் தேவானை நோட் செய்துகொண்டே இருக்கார்...கேர்ஃபுல்!!!! ஹா ஹா ஹா ஹா ஹா
    முருகர் பாவம்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் தேம்ஸ் கரையில ஆச்சிரம் கட்டி உண்டியலும் வச்சிருக்கிறேன்ன்.. நீங்க எல்லோரும் வந்து விதம் விதமாக ஜாதம்:)) என் குழைஜாதம் உட்பட:) சாப்பிட்டிட்டுப் போறீங்களே தவிர உண்டியலுக்குள் ஆரும் காசு போடுவதுபோல தெரியல்ல கர்ர்ர்:)).. உண்டியல் நிரம்பிட்டால் நான் நேர்த்தியை நிறைவேத்திடுவேனெல்லோ... ஹா ஹா ஹா

      Delete
    2. ஹூக்கும் உங்க கலெக்ஷன் எல்லாம் செக் ஏஞ்சல்தானே கணக்கு வைச்சுருக்காங்க..!!!!!! ஹா ஹா ஹா

      ஹான் ஜொல்ல மறந்துவிட்டேனே என் பையனும் குழை சாதம் அதுவும் இலங்கைக் கறிப்பொடி அவனுக்கு கொடுத்துவிட்டிருந்தேனே அந்தப் பொடி போட்டுச் செய்தானாம். மட்டை அரிசி நாங்களும் பயன்படுத்துகிறோமே. இங்கு பெரும்பாலும் மட்டை அரிசிதான்...அவனுக்கும் பிடிக்கும் அந்தச் சிவப்பு. நல்லா வந்துச்சுன்னு சொன்னான். இங்கு அப்போ வந்திருந்தப்ப செய்து கொடுத்தேன்னு சொன்னேன் இல்லையா...

      மீண்டும் நான் இங்கு செய்யும் போது ஃபோட்டோ எடுத்து வைக்கிறேன் அதிரா எல்லோருக்கும் சொல்லணுமில்லையா!! அதிராவின் குழை சாதம் கீதாவும் செய்து பார்த்திட்டா பாருங்கோன்னு...நீங்க சொல்லிக்கலாம்!!! முன்பும் செய்தேன் ஆரும் நம்ப மாட்டாங்க ஹிஹிஹி ஃபோட்டோ போடணுமல்லோ...ஞாயிறு அன்று செய்வேன் அப்ப ஃபோட்டோ எடுத்து விடுகிறேன்...

      கீதா

      Delete
  49. ஹைஃபைவ் அதிரா...கை அடிங்கோ...

    நானும் மேரி மாதா எங்கு கண்டாலும் கும்பிடுவேன். பிடிக்கும் அது ஸ்கூல் தொட்டு வந்த பயக்கம்! இப்பக் கூட அந்தப் படங்கள் இருக்கு போடுகிறேன் ஸ்ரீரங்கம் முடிந்ததும் சர்ச் ஃபோட்டோக்கள் மாஸ்க் என்று உள்ளன...மேரி மாதா சூப்பரா இருக்காங்க..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா நன்றி.. எனக்கென்னமோ மேரி மாதா எனில் ஒரு தீவிர லவ் என்றுகூடச் சொல்லலாம்.

      Delete
  50. ஹையோ அதிரா இப்பூடி கை எல்லாம் காட்டலாமோ...

    நெல்லை ரேகை பார்த்திடப் போறார்....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதனாலதான் பாதியாக கட் பண்ணிப்போட்டேனாக்கும் பூஸோ கொக்கோ:)

      Delete
  51. ஆவ்வ்வ் ஏ அண்ணனை நினைச்சு:) இந்த ஆனைப்பிள்ளையைத் தொட்டேனே:)).. அவர்தானே கீதாவையும் என்னையும் கேட்டார்ர்.. எதுக்கு வாகனங்களைத் தொடும் ஆசை உங்களுக்கு என ஹா ஹா ஹா.. தொடுவதிலும் ஒரு மகிழ்ச்சி:).//

    அதே அதே அதிரா விட்டால் அதில் அமர்ந்து பார்க்கும் ஆர்வமும் உண்டு ஆனால் சின்னப் பிள்ளையா இருந்தப்ப எங்க ஊர்ல கோயிலுக்குள் போய் வாகனங்கள் அடுக்கி இருக்கும் இடத்தில் அதில் ஏறி உட்கார்ந்து பார்க்கும் பழக்கம் உண்டு..யாரும் பார்க்காதப்பதான் ஹா ஹா ஹா...

    ஆனை வாகனம் ரொம்ப அழகா இருக்கார் இல்லையா...தக தகன்னு அந்தக் கண் மனிதக் கண் போலவே வெள்ளையின் நடுவில் விழி என்று

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசில கோயிலுக்குப் போனால்ல், வாகன அறை என பெரிதாக ஓரிடம் இருக்குமெல்லோ.. அதற்குள் புகுந்து விளையாடுவதே வேலை:)..

      Delete
  52. தேரும் ரொம்ப அழகாக இருக்கு அதிரா...நல்ல டிசைன்...இலங்கையில் இருந்தப்ப நம்ம வீட்டு வழியா தேர் எல்லாம் போகும்...ஜிந்துப்பட்டி முருகன் கோயில் விழாவின் போது...

    ஷீரடி கோயில் இங்கும் இதே போலத்தான் இருக்கிறது எங்கும் சின்னதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் ஒரே போலத்தான் இருக்கிறது நான் பார்த்த வரையில்...நானும் செல்வதுண்டு இங்கு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ நன்றி கீதா மிக்க நன்றி.. நீங்களும் என்னினம்:)) ஹா ஹா ஹா..

      Delete
  53. ஹா ஹா ஹா மாப்பிள்ளை வெட்டின்னு சொல்றார்!!!

    ஊசிக் குறிப்பும் அருமை...

    எல்லாம் ரசித்தேன் அதிரா
    ரொம்ப கும்மி அடிக்கலை...கரன்ட் போய் போய் வருது ...இனும் போக வேண்டியவை இருக்கே...அதை முடித்து மீண்டும் இங்கு பார்க்க முடிந்தால் இரவு வரேன் இல்லைனா நாளை காலைதான் அதிரா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றிகள் கீதா அனைத்துக்கும். நானும் எல்லோருக்கும் பதில் போட முடியாமல் இருக்குமெனக் கவலைப்பட்டேன் ஆனாலும் போட்டு விட்டேன்.

      Delete
    2. அதிரா எனக்கும் இங்கு கரன்ட் பிரச்சனை, நெட் பிரச்சனை என்று போகுது. அதனால் எல்லாம் லேட்டாகிப் போகுது...இன்னும் அடுத்த பதிவு ரெடி செய்யலை நான் ஹிஹிஹி
      கீதா

      Delete
  54. வணக்கம் அதிரா சகோதரி

    கோபுரங்களின் அழகைச்சொல்ல அப்போது (முதல் கருத்தில்) விட்டுப் போய்விட்டது. வானத்தின் நீலநிறம் பின்னணியில் ஜொலிக்க அதில் தவழும் வெண்மை நிற மேகங்கள் ஆனந்தமாக உலா வர, கோபுரங்கள், "நான் அழகா? இல்லை, என் அழகால், வானமும், மேகமும் அழகா?" என வாக்குவாதம் நடத்த முற்படும் வேளையில், நீங்கள் சட்டென புகைப்படங்கள் எடுத்து, உங்கள் புகைப்படங்களின் அழகை நிரந்தரமாக நிலைநாட்டி விட்டீர்கள். அருமை.

    பிள்ளையாரும், தேரும் அவ்வளவு அழகாக இருக்கின்றனர். முருகனின் துணைவியரில், வள்ளிக்கு இத்தனை நாள் நேர்த்திக்கடன் இருக்கிறதென்று சொல்லி வந்தீர்கள்.. அதை தாங்கள் ஒரு வழியாக பைசல் ஆ(க்கு)வதால், தெய்வானைக்கு இருப்பதாக அவரே வந்து (அதே வைர அட்டிகை) என் கனவில் கூறினார். (ஒரு வேளை அவர்கள் இருவரும் கூடிப்பேசி, தங்களிடமிருந்து அட்டிகை பெறாமல் விடுவதில்லையென்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும்.. ஹா ஹா. ஹா. )

    அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //என வாக்குவாதம் நடத்த முற்படும் வேளையில், நீங்கள் சட்டென புகைப்படங்கள் எடுத்து, உங்கள் புகைப்படங்களின் அழகை நிரந்தரமாக நிலைநாட்டி விட்டீர்கள். அருமை.//

      ஹா ஹா ஹா கண்கூசும் வெயிலில் சன்கிளாஸஸ் போட்டபடி எடுத்தேனாக்கும்:)) நன்றி.

      //தெய்வானைக்கு இருப்பதாக அவரே வந்து (அதே வைர அட்டிகை) என் கனவில் கூறினார்.//
      ஹா ஹா ஹா நான் வள்ளிக்குத்தான் நேர்த்தி வச்சிருக்கிறேன்ன்.. நீங்க என்னை வம்பில மாட்டிவிடப் பார்க்கிறீங்க:)) கர்ர்ர்ர்:))..

      மிக்க நன்றி மறக்காமல் படங்களை மனதில வச்சு திரும்ப வந்து கொமெண்ட் போட்டமைக்கு கமலாக்கா.

      Delete
  55. phoneல் பதிவு படித்தேன் அதிரா ஆனால் கருத்திட முடியவில்லை ,,,..


    வெண் மேகங்களுக்கு நடுவே

    வெண் கோபுரங்கள் ....ஆஹா கொள்ளை அழகு ...

    பிள்ளையார் ...அட்டகாசம் அமர்ந்து இருக்கும் தோரணை வாவ்..


    அழ்வார்கள் தரிசனம் கண்டேன் ..

    கோவில் வெகு சுத்தம் ...

    வள்ளி அம்மை ...பக்தியாய் தரிசித்தேன் புடவையின் அழகோடு

    மேரி மாதா ..அமைதி

    ReplyDelete
  56. இரண்டு கோவில்களும் அழகு. கஷ்டப்பட்டு எடுத்த படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது அதிரா.

    ஊஸிக்குறிப்பு - நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.