நல்வரவு_()_


Sunday 10 November 2019

என் நெ.ஆ பகுதி 2 👸

போன பதிவிலிருந்து மிகுதிக் கதை தொடர்கிறது... இப்போ கோயிலுக்குள் போவோமா?:)..

ந்தக் கோயிலில் கொஞ்சம் கடுமையான சட்டம் கடைப்பிடிக்கிறார்கள், நல்ல கவனிப்பு, நல்ல சுத்தம் சுகாதாரம், நிறைய தொண்டர்கள் நின்று சேவை செய்கிறார்கள்.

கால் தெரியும் ஆடைகள் போட்டு உள்ளே செல்ல அனுமதி இல்லை, மற்றும்படி ஜீன்ஸ் போட்டுப் போகலாம், அத்தோடு தலைமயிர் விரித்துப் போக முடியாது, குட்டி மயிராயினும் பிடிச்சுக் கட்டிக்கொண்டே உள்ளே போக வேண்டும் கர்ர்ர்ர்ர்:)). 

இதன் முதல் பகுதியைக் காண விரும்பினால்.. இங்கு தொடவும்..  “என் நெடுநாள் ஆசை” 

இன்னும் கோயில் கட்டி எழுப்பப்படவில்லை, ஒரு ஓபின் ஹோலிலேயே அமைத்திருக்கிறார்கள் இப்போதைக்கு.
இவதான் மூலஸ்தான அம்மன்..





நந்தியாரின் அழகைப் பாருங்கோ.. ஒவ்வொரு சிலைகளையும் மணித்தியாலக் கணக்காக இருந்து ரசிக்கலாம் அவ்ளோ அழகு, என்னை விட்டிருந்தால் நாள் முழுக்க இருந்து ரசிச்சிருப்பேன்:)..

அங்கு உள்ளே சுற்றிவர இருந்த தெய்வங்கள், பெயர் தெரியவில்லை எனக்கு, படமெடுக்கக்கூடாது என எதுவும் எழுதி இருந்ததாக நினைவில்லை, இருப்பினும் பயந்து பயந்து எடுத்தேன்[பழக்கதோசம் ஹா ஹா ஹா].






இது கோயிலின் பின் வாசலால் வெளியே போனால், நம் ஊர்களில் இருப்பதைப்போல தூரத்து மர அடிகளில்  வைரவர், பிள்ளையார், சிவலிங்கம் என அமைத்திருக்கினம், என்னை மிகவும் கவர்ந்தது இந்த வெளிக்காணியில் இருக்கும் சுவாமிகள்..

இவர்தான் என் ஃபேவரிட் வைரவர்...


பாருங்கோ எவ்ளோ பெரிய காணி, இதில் தெரிவது அப்பிள் மரங்கள்.

அப்பிள் காய்கள் தெரியுதெல்லோ.. யூம் பண்ணி எடுத்தேனாக்கும் உங்களுக்காக:)..


 இது இன்னொரு மரத்தடியில் இப்படி சுற்று மேடைபோல கட்டி அழகாக, அதில் பிள்ளையார் இருக்கிறார்ர்..

இந்த பிள்ளையாரின் பின் பக்கம் தூரப்பாருங்கோ அங்கே ஒரு குட்டிக் குடிசைபோல தெரியுதெல்லோ.. அதில் பெரிய சிவலிங்கம் நந்தி எல்லாம் இருக்கினம், வாங்கோ போய்ப் பார்ப்போம்ம்.. அங்கு சிலசமயம் பாம்புகளும் விசிட் பண்ணுவினமாமே அவ்வ்வ்வ்:))

பெரிய சிவலிங்கம் இருந்தார்...



அந்த சிவலிங்கத்தைத் தரிசிக்கப் போகு முன் இடையிலே குட்டியாக இவர்.. பெரிய காணியை, இவ்ளோ அளகாக புல்லு வெட்டிப் பராமரிக்கிறார்கள், ஆனால் விண்டர் வந்திட்டால் வெளியே இறங்க முடியாமல் இருக்கும். இப்போ அங்கே தெரிகிறதே அதுதான் கோயில்.. இது பின் காணியில் நின்று எடுத்த படம்.


அப்பிள் காய் பிடுங்கப்போகும் அம்சவல்லி அதிரா:))

 அப்பிள் மரத்தின் அடியில ஆரோ இருக்கினம் போல இருக்கே:))


இப்போ மீண்டும் கோயில் மண்டபத்துள் வந்துவிட்டோம் சாப்பிட:), ஆவ்வ் சுவரிலே நாயன்மார்கள்...

நாம் போய்ச் சேர்ந்தபோது 2 மணியாகி விட்டது, கும்பிட்டு முடிச்சு சாப்பிட 3 மணிக்கு மேலாகி விட்டது, இருப்பினும் அவர்கள், எங்களைக் கவனிச்சு, எம்மிடம் வந்து, எத்தனை பேர் வந்திருக்கிறீங்கள், இருங்கோ சாப்பிட்டு விட்டுப் போகலாம் என உடனே தயார் செய்து தந்தார்கள்.., மைசூர்ப்பருப்புக் கறி, கபேஜ்-கரட் கூட்டு, ஒரு தயிர்க்குழம்பு/சொதி ஏதோ ஒரு காய் போட்டிருந்தது.


அங்கிருந்த ஆனைப்பிள்ளை, கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்தார் அதனால ஒழுங்காக படத்தில் தெரியவில்லை.

ஒரு அப்பிள் மரத்தின் கீழே ஊஞ்சல் வைத்திருந்தார்கள், அப்பிள் காய் சாப்பிட்டுக்கொண்டே ஊஞ்சல் ஆடினோம்:))

இது தேர் முட்டியினுள்ளே இருந்த கோயில் தேர்[இரு தேர்கள் இருக்கின்றன இதில்], ஏனோ தெரியவில்லை அன்று கதவு திறந்திருந்தமையால் படமெடுக்க முடிஞ்சது.

ஊசி இணைப்புக்கள்:)

இந்த  “இடை” மற்றர்:) உண்மையோ?:)

இந்தக் கதை நிஜம்தானா?:)
 

நமக்கெதுக்கு ஊர் வம்பு:))

ஊசிக்குறிப்பு👰
 “உடம்பு செயலாற்றுவதால் ஏற்படும் உஸ்ணத்தைவிட, 
சிந்தனையால் ஏற்படும் உஸ்ணம் பல மடங்கு அதிகம்”
இவ்வரிய ஞான தத்துவத்தை, உங்களுக்காகக் காவி வந்தவர்..
உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாசத்துக்கும் உரிய 
புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்😌
========_()_========

110 comments :

  1. கணினியில் ஸ்க்ரால் செய்தாலே நீளமாய் இருக்கிறது பதிவு. நிறைய படங்கள் போல!எல்லாப்படங்களும் அருமை.  அங்கேயும் ஒரு பூஸார் உட்கார்ந்திருக்கிறாரே...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. இம்முறை முதலாவதாய் வந்திருக்கிறீங்க என்ன பரிசு தரலாம்ம்ம்... ஆஆஆஆ அம்மனின் மூக்கிலிருக்கும் அந்த வைர மூகுத்தி உங்களுக்கே:)) பத்திரமாக இடதுபக்கப் பொக்கட்டில் வச்செடுத்துப் போங்கோ இல்லை எனில் மறந்திடப்போறீங்க ஹா ஹா ஹா..

      போனமுறை கோயில் படம் இல்லை அப்பிள் படமில்லை என நெ.தமிழன் ஏசிப்போட்டாரெல்லோ:) அதனால இம்முறை ஒன்றாகவே போட்டு விட்டேன் .. கொலாஜ் ஆக செய்து போட விரும்பவில்லை, ஏனெனில் இப்படங்களை அப்படிப் போட்டால், பாதி அழகு மறைஞ்சிடும்... பூஸார் கோயிலுக்குள் போக ரெடியாகிட்டாராம்:).

      Delete
    2. “தனக்குத் தனக்கென்றால், சுழகு படக்குப் படக்கெண்ணுமாமே”, அப்படித்தான் அதிராவும் இன்று ஞாயிற்றுக்கிழமையில எப்படி இவ்ளோ ஏழியாக எழுந்து போஸ்ட்டும் போட்டிருக்கிறா என நினைச்சிருப்பீங்க:))).. மற்றர் அதுவல்ல.... இதுவும் ஒரு திகில் ராத்திரியாப்போச்சு எங்களுக்கு ஹா ஹா ஹா... நான் இன்று ஈவினிங்தான் இப்போஸ்ட் போடவே இருந்தேன்.

      விசயம் என்னவெனில், இங்கு ஸ்கொட்டிஸ் குழந்தைகளில் ஒரு வழக்கம் இருக்கு, ஒவ்வொருவரும் தம் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்குப் போய் விளையாடி வருவினம், பிரைமறி ஸ்கூலில் ஆரம்பிக்கும் இப்பழக்கம். சில நாட்களில் “ஸ்லீப் ஓவர்” என ஃபிரெண்ட்ஸ் வீடுகளில் தங்கி வருவதும் வழக்கம்.

      ஆனா குழந்தைகளாக இருக்கும்போது பேரன்ஸ் பொறுப்பெடுத்து, கூட்டி வந்து உணவெல்லாம் குடுத்து, பாதுகாப்போம், பின்னர் பேரன்ஸ் என்ன ரைம் கூப்ப்பிடலாம் எனக் கேட்டு, வந்து கூட்டிப் போவர், நம் பிள்ளைகளும் இப்படியே நண்பர்கள் வீடுகளுக்குப் போய் வருவர், இதனால பெற்றோருக்கு கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கும், அதாவது இன்று மகனின் நண்பர்கள் இருவர் நம் வீட்டுக்கு ஆஃப்டர் ஸ்கூல் வருகிறார்கள் எனில், அந்தப் பெற்றோர் ஸ்கூலுக்கு வரத்தேவையில்லை, நாம் போய் ஸ்கூலில் இருந்து நம் காரில் கூட்டி வந்திடுவோம், பின்பு அவர்கள் நைட் வந்து அழைச்சுப் போவினம், மெசேச் அனுப்பிக் கொன்ஃபோம் பண்ணிக் கொள்வோம். பிரைமறி ஸ்கூல்களில் பிள்ளைகளைப் பெற்றோர் போய்k கேட்டில் gateநின்று கூட்டி வருவதுதான் வழக்கம்.

      இதனால பெற்றோர் நண்பர்களாகிவிடுவோம், டெய்லி பார்த்துப் பேசி. அப்படி மகனின் நண்பர்கள் லிஸ்ட்டில் அவர்களின் அம்மாக்களின் ஃபோன் நம்பர்கள் என்னிடம் இருக்கு இப்பவும்... இங்கு அம்மாக்கள்தான் பொதுவா கலந்து பேசி பிள்ளைகளை இப்படி அரேஞ் பண்ணுவது வழக்கம், அப்பாக்கள் தலையிடுவதில்லை-அவர்கள் ரக்‌ஷி ட்றைவர்கள் மட்ட்டுமே:)) ஹா ஹா ஹா... தொடர்கிறேன்..

      Delete
    3. இப்படியாக வளரும் குழந்தைகள் ஹை ஸ்கூல் போனதும், இப்பழக்கம் தொடரும், ஆனா பெற்றோர் தலையிடுவதில்லை. அவர்களே தமக்குள் பேசி முடிவெடுத்து, இன்று நம் வீட்டில், நண்பர்கள் தங்கலாமா? என மட்டும் மகன் எம்மிடம் பெர்மிஷன் கேட்பார். பெற்றோர் தொடர்புக்கு வருவதில்லை.. ஹை ஸ்கூல் என்பதால் வளர்ந்திட்டினமாமாம், அப்படியே உணவு குடுப்பதோ யூஸ் குடுப்பதோ எந்தப் பொறுப்பும் நமக்கில்லை, அவர்களே எல்லாம் வாங்கி வருவார்கள், கேட்டாலும் வேண்டாம் என்பினம், அது இங்குள்ள ஸ்டைல்.

      இப்போ ஹை ஸ்கூல் போய் 5 வருடங்களாகிவிட்டது நம் சின்னவர். அப்போ பெற்றோரின் தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. ஆனா பிள்ளைகல் கூட்டம் கூடி ஒவ்வொருவர் வீட்டில் போய் படம் பார்ப்ப்பினம் கேம் விளையாடுவினம் இப்படி நடக்கும்.

      இந்த வகையில், இன்று அதிகாலை பிரித்தானிய நேரம் 4 மணிக்கு லைஃப் ஆக பொக்ஸிங்கோ ட்ரெஸ்லிங்கோ நடக்கப்போகுது, அதுக்கு நம் வீட்டுக்கு நண்பர்களை அழைச்சு வந்து இங்கு சேர்ந்திருந்து பார்க்கலாமோ என மகன் கேட்டார். சரி அதுக்கென்ன பாருங்கோ எனச் சொல்லி, அதுக்கு ஸ்கை ஸ்போர்ட்ஸ் க்கு பே பண்ணி எடுத்துக் குடுத்தோம்.

      நண்பர்கள் 11 பேர் வந்தனர், எப்படி வந்தனர் எனில்.. இரவு பத்து மணியிலிருந்து ஒரு மணிவரை ஒருவர் இருவராக வந்து கொண்டிருந்தனர்.. கீழ் ஹோல் பார்த்றூம் கிச்சின் எல்லாம் அவர்கள் பாவிப்பினம், நாம் மேலே வந்திடுவது வழக்கம். அப்போ ஒரே சத்தமாக டோர் திறப்பது மூடுவதுமாக இருக்கும், அப்போ எப்படி நிம்மதியாக நித்திரை கொள்ள முடியும்... இப்படிக் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது... தொடர்கிறேன்..

      Delete
    4. ஒரு 3.45 மணியளவில்.. ஓஓ..ஓவ்வ்வ் என ஒருவர் ஓங்காளிச்சுக் கேட்டுது.. பார்த்றூமுக்குள் ஓடி கதவை லொக் பண்ணுவதும் கேட்டுது எனக்கு, என்னில் ஒரு பழக்கம் எந்த சாமம் எனினும் ஒரு குட்டிச் சத்தத்துக்கும் கண் முழிச்சிடுவேன்.

      அப்போ சத்தி எடுக்கிறார்கள் ஆரோ என எண்ணிக்கொண்டிருந்தேன், ஒரு பத்து நிமிடமாகியும் அவர் வெளியே வரவில்லை, பின்பு பார்த்தால், நண்பர்கள் எல்லோரும் டோரைத்தட்டி வில்லியம் வில்லியம் எனக் கூப்பிட்டுக் கேட்குது.. ஆனா டோர் திறபடவில்லை, அப்போ எப்படிப் பேசாமல் படுக்க முடியும் நாம், கீழே ஓடிச்சென்று கூப்பிடுறோம் டோரில் அடிக்கிறோம் சத்தமில்லை 20 நிமிடமாகிவிட்டது.. பின்னர் அம்பியூலன்ஸைக் கூப்பிடலாமா என எண்ணிக்கொண்டே, எதுக்கும் அவரின் மொபைலுக்கு கோல் பண்ணுங்கோ எனச் சொல்லி கோல் பண்ணினால், எடுத்து யேஸ் யேச் என்றார் அவ்வளவுதான் பின்பு சத்தமில்லை, அரை மணிநேரமாகிவிட்டது, வேறு வழியின்றி, டோர் லொக்கை கழட்டி, உள் லொக்கை உடைச்சுக் கதவைத்திறந்தால், ஆள் கொமேட்டில் இருந்தபடி, முகம் முழங்காலில் முட்டி இருக்குது, எழும்ப முடியாமல் இருக்கிறார்.. ஒருமாதிரி வெளியே அழைச்சு வந்து, நல்லவேளை 5 வருடத்துக்கு முந்திய ஃபோன் நம்பர் அவரின் அம்மாவுடையது, இருந்தது அடிச்சால், போய் விட்டது, உடனே அவரின் அப்பா வந்து அழைச்சுப்போனார்ர்..

      அவர்களுக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு, தாம் ஆள் கூட்டி வந்து லொக் போட்டு விடுகிறோம் என்றெல்லாம் அந்தரப்பட்டனர்.. அதெல்லாம் வேண்டாம் பிள்ளை சுகமாகிட்டால் போதும் எனச் சொன்னதும், அவரின் அம்மா சொன்னா, அவருக்கு உடல் நலமில்லையாம், போக வேண்டாம் என்றவர்களாம், கேட்காமல் வந்திட்டாராம், நைட் நித்திரை முழிச்சதும் ஆளுக்கு ஓவர் ரயேட் ஆகிவிட்டது.. ஹையோ ஹையோ.. ஒரு கணம் நடுங்கிப்போனோம்ம்.. அதனாலேயே போஸ்ட்டைப் போடுவோம் எனப் போட்டேன் ஹா ஹா ஹா.

      Delete

    5. ஹலோ என்ன ஒரு பதிவு என்று நினைத்து படிக்க வந்தால் நாலு பதிவாக போட்டு இருக்கியனாம்

      Delete
    6. படம்தானே ட்றுத்:) காசா பணமா?:) பார்த்திட்டுப்போங்கோ:)) .. பந்தி பந்தியாக எழுதினால்தான் படிக்க கஸ்டம்:)).. இழுத்தடிக்காமல் ஒரு போஸ்ட்டிலேயே முடிச்சிட்டனே இக்கோயிலை:))

      Delete
    7. //இப்படியாக வளரும் குழந்தைகள் ஹை ஸ்கூல் போனதும், இப்பழக்கம் தொடரும், ஆனா பெற்றோர் தலையிடுவதில்லை. அவர்களே தமக்குள் பேசி முடிவெடுத்து, இன்று நம் வீட்டில், நண்பர்கள் தங்கலாமா? என மட்டும் மகன் எம்மிடம் பெர்மிஷன் கேட்பார். பெற்றோர் தொடர்புக்கு வருவதில்லை.. // அவர்கள் எல்லாம் ப்ளான் செய்துட்டு கடைசியாக ஜஸ்ட் இன்போர்மேஷன் மாதிர்தான் இங்கனயும் அதுதான் நடக்குது..தோளுக்கு மிஞ்சினால் தோழன். இங்குள்ள வள்ர்ப்பையும்,ஊரில் நாங்க வளர்ந்த முறையையும் நினைத்துபார்ப்பேன். ம்ம்..
      அப்பையன் நல்லமுறையில் சுகமானது மனதுக்கு மகிழ்ச்சி. இங்கு நல்ல பழக்கவழக்கம் நாமளும் கடைபிடிக்கவேண்டியது இருக்கு. அவர்கள் தங்கள் நன்றிகளை பொக்கே,அல்லது ஸ்வீட் தந்து சொல்வார்கள். சிலபேர் அளவுக்கதிகமா சங்கடபடுவார்கள் எங்களை கஷ்டத்தை கொடுத்துவிட்டோமே என.

      Delete
    8. இதுயார்... ஒரு மார்க் கேள்விக்கு, 30 மார்க் கேள்விக்கான பதில் எழுதுவது போல, ஸ்ரீராம் போட்ட இரண்டு வரி பின்னூட்டத்துக்கு 3 பக்கத்துக்கு மறு மொழி எழுதியிருக்கிறது?

      ஓ... இது டமிள் டி அதிராவா?

      Delete
    9. இப்போதான் உங்க அனுபவத்தைப் படிச்சுப் பார்த்தேன். ஐயோ... பயமுறுத்தும் அனுபவம்.

      1. அந்த மாதிரி வர்றவங்க பீர்லாம் அடுத்த வீட்டுல எடுத்துப்பாங்களா (அதாவது அவங்க வாங்கிக்கிட்டு வந்து எல்லோரும் சேர்ந்து குடிப்பது).
      2. ஏதாவது ஏடாகூடம் ஆச்சுன்னா (பசங்க பெண்கள் இருபாலாரும் வருவாங்கன்னு நினைக்கிறேன்) - ஏடாகூடம்னா, ஏதேனும் சண்டையோ இல்லை போதை ஏதேனும் பாவிப்பதோ இல்லை ஏதாவது ஆக்சிடண்ட் மாதிரி ஆச்சுன்னா, உங்களுக்கு பிரச்சனை வராதா?
      3. இந்தப் பையனே பாத்ரூமில் வழுக்கி விழுந்திருந்தால், ஏதேனும் உடலுக்கு கோளாறு வந்திருந்தால், முன்னம் ஒருத்தருக்கு நடந்ததுபோல, வழக்குலாம் போடமாட்டாங்களா? Parents உடைய ரெஸ்பான்சிபிலிட்டி அல்லது ரிஸ்க் என்னது?

      என் பெண்ணை, அவளோட டீச்சருக்கு உள்ள ஒற்றைப் பெண்ணுக்குத் துணையாக (இருவரும் வகுப்புத் தோழிகள்தாம்), 'ஸ்லீப் ஓவருக்கு' கூப்பிட்டபோது, நான் அனுமதி கொடுக்கலை.

      Delete
    10. @அம்முலு
      //அவர்கள் எல்லாம் ப்ளான் செய்துட்டு கடைசியாக ஜஸ்ட் இன்போர்மேஷன் மாதிர்தான் //
      இல்லை அம்முலு அப்படிச் சொல்லமுடியாது இந்த விசயத்தில்,பிரைமறி ஸ்கூல்வரை ஓகே ஆனா ஹை ஸ்கூல் வந்தபின் அப்படி இல்லை, ஆரார் எல்லாம் வர இருக்கிறார்கள் என்றெல்லாம் செக் பண்ணித்தான் ஓகே பண்ணுவது இல்லை எனில் ஸ்ரிக்ட்டா “நோ” தான்...

      டோண்ட் கெயார் பேரன்ஸ் உம் இருக்கிறார்கள்தான் சிலர், ஆனா அப்படிக் குடும்பங்களோடு நாமும் பெரிசாக இப்படிக் கொண்டாட்டங்களுக்கு அனுமதிப்பதில்லை, வளர்ந்துவிட்டமையால் கொஞ்சம் கவனமாகவே, அதே நேரம் மனம் நோகாதபடி மூவ் பண்ண வேண்டி இருக்கு.

      மற்றும்படி நீங்க சொன்னதுபோல அம்முலு.. பொதுவா வெள்ளைகள் பொக்கே தருவார்கள் தொட்டதுக்கெல்லாம்.

      மிக்க நன்றி.

      Delete
    11. //நெல்லைத்தமிழன்Monday, November 11, 2019 4:30:00 pm
      இதுயார்... ஒரு மார்க் கேள்விக்கு, 30 மார்க் கேள்விக்கான பதில் எழுதுவது போல, ஸ்ரீராம் போட்ட இரண்டு வரி பின்னூட்டத்துக்கு 3 பக்கத்துக்கு மறு மொழி எழுதியிருக்கிறது?//

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. பாருங்கோ முதலாவதாக வந்தார் என என் திகில் அனுபவத்தைச் சொன்னேன், ஆனா ஸ்ரீராம் தவிர ஏனையோர் இதுக்கு பதில் சொன்னார்கள் , ஸ்ரீராம் மட்டும் திரும்பிப் பார்க்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா சரி விடுங்கோ எனக்குப் பழகிப்போச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா.:)..

      Delete
    12. ///1. அந்த மாதிரி வர்றவங்க பீர்லாம் அடுத்த வீட்டுல எடுத்துப்பாங்களா (அதாவது அவங்க வாங்கிக்கிட்டு வந்து எல்லோரும் சேர்ந்து குடிப்பது).//

      நெல்லைத்தமிழன் இந்த விசயத்தில ஊரில் இருக்கும் நம்மவர்கள் நினைப்பது, வெளிநாடெனில் இப்படிக் குடிப்பதென்பது சாதாரணம் என, அதேபோல வெள்ளைகள் எனில் கட்டுப்பாடு இல்லாதவர்கள் கண்டபடி உடுப்புப் போடுவார்கள் அதனால ஒழுக்கமில்லாதவர்கள் இப்படியும்...

      இதுக்கு ஒரு கதை, கேரளாவில் இருந்து ஒரு உயர் பதவிக்கு இங்கு ஒருவர் வந்தார், அவர் வரும்போதே, வெள்ளைகள் எனில் எதுக்கும் இணங்குவார்கள், என்னவும் பண்ணலாம் எனும் மைண்ட் செட்டப்பில் வந்திருக்கிறார் போலும்:)

      அதேநேரம் இன்னொன்று, இங்கு ஆணோ பெண்ணோ, தொட்டுப் பேசுவார்கள் தோளில் தட்டிப் பேசுவார்கள், பக்கத்து செயாரில் வந்திருப்பார்கள் இதெல்லாம் நோர்மல்... இதையும் பார்த்துவிட்டோ என்னவோ..

      இந்த கேரளாவால் வந்தவர், ஒரு பெண்ணுடன் சேட்டை யாக ஏதோ தப்பாக ரச் பண்ணியிருக்கிறார்.. அது உடனே பொலீஸ் கேசாகி, பின்பு கோர்ட்டுக்குப் போய், கூட இருந்தோர் எல்லாம் நல்ல விதமாக சாட்சி சொல்லி, தெரியாமல் நடந்திட்டுது என்பதுபோல அதனை முடிச்சு விட்டார்கள் ஹா ஹா ஹா.

      இப்படித்தான் குடிப்பதென்பதையும் சிம்பிளாக நினைக்கிறீங்க அப்படி இல்லை, இங்கு நிறையக் கட்டுப்பாட்டுடந்தான் வெள்ளைகள் பிள்ளை வளர்க்கிறார்கள், சாமமானாலும் காரில் வந்து கூட்டிப் போவது, இறக்குவது இப்படி கவனமாகவே இருப்பினம்..

      இவர்கள் 15-16 வயசினர்தானே, அதனால இவர்கள் எப்படிக் குடிக்க முடியும், நல்ல குடும்பத்து வெள்ளைகள் நம்மை விட ஸ்ரிக்ட்டாக இருப்பினம், ஆனா என்ன ஒன்று, நம்மவர்களை விட மிக அருமையாக 18 வயசு வரை பிள்ளை வளர்ப்பார்கள், பின்பு கைவிட்டு விடுவார்கள்...கைவிட்டுவிடுவர்கள் என்பதை விட, பிள்ளைகளை எதிர்க்க மாட்டார்கள், உன் விருப்பம் என்பதுபோல ஏற்றுக் கொள்வார்கள். அதே நேரம் வசதியுள்ள பெற்றோர் 18 க்கு மேலும் உதவுவோரும் இருக்கினம்...

      தொடர்கிறேனே... ஹா ஹா ஹா..

      Delete
    13. அதனால 18 வயதின்மேல்தான் குடிக்க முடியும், அதுக்கு கீழ எனில் எந்தப் பெற்றோரும் அனுமதிக்க மாட்ட்டினம், ஏதோ 2 கப் பியர் மட்டும் 16 வய்சுக்கு மேல் pubபப்புக்குப் போய்க் குடிக்கலாமாம்.. அது சட்டம்.

      இதுபற்றி சொல்வதாயின் போஸ்ட் அளவு வரும், இருப்பினும் சுருக்கிச் சொல்கிறேன், இதனாலதான் இங்கு ஏரியா வுக்கு ஏரியா வேறுபடும், அந்தந்த ஏரியாவில் இருப்போர், அந்தந்த ஏரியா ஸ்கூல்களில்தான் பிள்ளைகளைச் சேர்க்க முடியும், மாறி சேர்க்க முடியாது.

      அதனால வீடு வாங்கும்போது அல்லது வாடகை எனினும் நல்ல ஏரியாப் பார்த்தே வாங்குவர், அப்படி எனில் ஸ்கூலிலும் நல்ல குடும்பத்துப் பிள்ளைகள் படிப்பினம், ஏரியாவும் பாதுகாப்பானதாக இருக்கும், வீடுகளும் விலை அதிகம்.

      சில கூடாத ஏரியாக்கள் இருக்கு, அங்கெல்லாம் பெரிய வீடுகள் மலிஞ்ச விலையில் வாங்கலாம், அங்கு எப்படி எனில், குடும்பமாக ட்றக்ஸ் விற்போர், மற்றும் குடிப்போர், களவு.. இப்படி அதிகம் இருக்கும்...

      அதனால நம்மவர்கள் இங்கு எங்கயும் ஏரியாப்பார்த்தே பிள்ளைகளைச் சேர்ப்பர், இங்கு என்றில்லை கனடாவிலும் இப்படித்தான்.

      அப்படித்தான் நாங்களும். அத்தோடு குடும்பங்கள்[பெற்றோர்] தெரியாதோரை அனுமதிப்பதில்லை இந்த நைட் தங்கலுக்கு... இதனால அப்படி குடிக்கும் பிரச்சனை இல்லை + ஆரும் அனுமதிக்கவும் மாட்டார்கள்... எல்லோரும் சிறியவர்கள்தானே..

      Delete
    14. ///2. ஏதாவது ஏடாகூடம் ஆச்சுன்னா (பசங்க பெண்கள் இருபாலாரும் வருவாங்கன்னு நினைக்கிறேன்) -///

      ஹா ஹா ஹா இது இன்னொரு விசயம், இந்த வயசில போய்க்கு கேள்ஸ் எனமியாம்:)) அதேபோல கேள்ஸ்க்கு போய்ஸ் எனமியாம் ஹையோ ஹையோ.. இப்படிக் கெட்டுகெதருக்கெல்லாம் கேஎள்ஸ் ஐ சேர்ப்பதில்லை, பொதுவாக போய்ஸ் சேர்ந்தால் பேய்ப்படங்கள் பார்ப்பது, கேம் விளையாடுவது, இப்படி மச் பார்ப்பதெல்லோ.. இது எங்கே கேள்ஸ்க்குப் பிடிக்கப் போகுது.. அதனால கேள்ஸ் வேறு கூட்டம் போய்ஸ் வேறு கூட்டம் எங்கும் ஒன்றாக சேர மாட்டினம், ஆனா ஏதும் பேர்த்டே பார்ட்டி எனில் மட்டும் இருபாலாரையும் வீட்டுக்கு அழைப்பினம், அதுவும் 9-12[நைட் நேரம்] அப்படித்தான் பார்ட்டி இருக்கும், ஸ்லீப் ஓவர் எல்லாம் இல்லை.

      ஆனா சிலருக்கு[மிகச் சிலருக்கு இந்த வயசில] கேள்பிரெண்ட் இருக்கும் அது வேறு விசயம்:).. ஹா ஹா ஹா..

      Delete
    15. //ஏதாவது ஆக்சிடண்ட் மாதிரி ஆச்சுன்னா, உங்களுக்கு பிரச்சனை வராதா?//

      சின்னவர்கள்தானே அதில அவர்களுக்குள் என்ன பெரிய பிரச்சனை வரப்போகுது எனும் நம்பிக்கைதான். நமக்கு பிரச்சனை வர வாய்ப்பில்லை, அவர்கள் அத்தனை பேரும்தானே சாட்சி, ஆனா உடனே பொலீஸ் வரும், நம்மை எல்லாம் கூட்டிப்போய் விளக்கம் எடுப்பினம்.. அப்படியான தொல்லைகள் வரும்தான்..

      Delete
    16. ///3. இந்தப் பையனே பாத்ரூமில் வழுக்கி விழுந்திருந்தால், ஏதேனும் உடலுக்கு கோளாறு வந்திருந்தால், முன்னம் ஒருத்தருக்கு நடந்ததுபோல, வழக்குலாம் போடமாட்டாங்களா? Parents உடைய ரெஸ்பான்சிபிலிட்டி அல்லது ரிஸ்க் என்னது?///

      12 வயசுக்கு உட்பட்டவர்கள் எனில்தான் நாம் பொறுப்பு, இதில் நாம் பொறுப்பாக ஏதுமில்லை, ஆனா ஏடா கூடமாக ஏதுமெனில் பயம்தான், தெரியவில்லை, ஈசியாகச் சொல்லிவிட முடியாதுதான், சிலது அனுபவப்பட்டால்தானே புரியும், மகன் பாவம் எனத்தான் இப்படி அனுமதிப்பது, நாங்கள் பெரும்பாலும் நோ சொல்லுவது குறைவு, முடிஞ்சவரை அஜஸ்ட் பண்ணுவோம், ஆனா இம்முறை மகன் பயந்திட்டார், அதனால இனிமேல் அவரே கேட்க மாட்டார் என நினைக்கிறேன் ஹா ஹா.. நாம் மறுத்தால், மறுத்துவிட்டார்களே எனும் வேதனை வாழ்க்கை முழுக்க இருக்கலாம் அவர்களுக்கு, அனுபவப்பட்டால் அவர்களே இனி யோசிப்பினமெல்லோ ஹா ஹா ஹா..

      Delete
    17. //என் பெண்ணை, அவளோட டீச்சருக்கு உள்ள ஒற்றைப் பெண்ணுக்குத் துணையாக (இருவரும் வகுப்புத் தோழிகள்தாம்), 'ஸ்லீப் ஓவருக்கு' கூப்பிட்டபோது, நான் அனுமதி கொடுக்கலை.//

      இல்லை நெ தமிழன் இது தப்பு, நீங்க ஓவர் ஸ்ரிக்ட் என்பதுதான் நமக்குத் தெரியுமே:)), நன்கு தெரிஞ்ச குடும்பம் எனில் ஓரிரு தடவை விடுவதில் என்ன தப்பிருக்கு? என் கணவர் எபப்வும் சொல்லுவார், பிள்ளைகள் நெடுகவுமோ நம்மைக் கேட்கப்போகினம்?... அதுவும் ஒவ்வொரு வயதில ஒவ்வொரு ஆசை, 5 வயசில குட்டிக் கார்கள், லெகோக்கள் இப்படிக் கேட்பினம்.. சொக்கலேட் ஐஸ்கிரீம்.. பின்பு 10 வயசில கேம்ஸ், அதுக்கு மேல பிராண்டட் குளோத்ஸ்.. இப்படி ஒவ்வொரு வயசில ஒவ்வொரு ஆசை வரும், பின்னர் அந்த ஆசை வராது, அதனால கேட்கும்போது முடிஞ்சவரை ஓகே பண்ணிடோணும் என்பார், இப்ப போய் ரோய்ஸ் கார் வாங்கிக் குடுத்தால் ஏற்றுக் கொள்வாரோ மகன்.. இல்லைத்தானே, அப்படித்தான் சிலதை நாம் விட்டுப்பிடிக்க வேண்டும், துப்பரவுக்குக் கூடாது எனில் மட்டும் அட்வைஸ் பண்ணிப் புரியவைக்கலாம்...

      உங்கள் சந்தேகங்களை ஓரளவு தீர்த்துவிட்டேன் என்றே நினைக்கிறேன் ஹா ஹா ஹா.

      Delete
  2. நகைச்சுவைப் பாடல் வகையைச் சேர்ந்த 'அடுத்தாத்துப் பாடல்' சுவாரஸ்யம். இந்த படத்தில் நாகேஷ் நடிப்பு பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..எனக்கும் இப்பாடல் நகைச்சுவைக்காகவே பிடிக்கும்.

      Delete
  3. அம்மனுக்குப் பக்கத்திலிருந்து தாடி மனிதர் ஒருவர் படமெடுக்கும் உங்களை முறைத்துக்கொண்டு இருக்கிறாரே...!!!

    ReplyDelete
    Replies
    1. அது அக்கோயிலில் வைத்திருக்கிறார்கள் ஸ்ரீராம், ஆரோ சுவாமியார் என நினைக்கிரேன், அந்த நாயன்மார்கள் இருக்கும் ஹோலிலும் இருக்கிறது அப்படம் பாருங்கோ.

      Delete
  4. அம்மன் மேல் அதிக பக்தி போல...    நிறைய படங்கள் அம்மன்!    வேஷ்டி  கட்டியவரை அந்துமணி போல மறைத்திருக்கிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. அது அம்மன் கோயிலல்லவோ ஸ்ரீராம், அதனால நிறைய அம்மனும் சிவலிங்கமுமாக இருந்தது எல்லா இடத்திலு, எனக்கும் ரொம்பப்பிடிக்கும் இருவரையும்:).

      //வேஷ்டி கட்டியவரை//
      வேஷ்டியைத்தானே காட்டச் சொன்னார் நெ.தமிழன்:)) ஹா ஹா ஹா படங்கள் ஏதும் போட வீட்டில் அனுமதி இல்லை ஸ்ரீராம், அப்படி இருந்தும் நான் ஏதோ கொஞ்சம் அப்படி இப்படிப் போட்டும் விடுகிறேன்:))

      Delete
  5. சட்டென சமைத்துப்போட்டு பசியைத் தீர்த்த அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், மத்தியானப் பூஜை உடன் லஞ்சும் முடிஞ்சுவிட்டது, நாம் போக லேட்டாகிவிட்டதெல்லோ, ஆனா இக்கோயில் ஊருக்குள்ளே இருப்பதனால் மக்கள் தேடிப் போகிறார்கள் என்பதனால் நல்ல உபசரிப்பு. இக்கோயிலுக்குக் கிட்ட ஒரு பெரிய யூனிவசிட்டியும் இருக்கு, அப்பிள்ளைகளும் வருவார்கள்.

      நாம் போன அன்று, வேறு ஊரிலிருந்து ஒரு பஜனைக்கோஸ்டிபோல ஸ்கூல் பிள்ளைகளைக் கூட்டி வந்திருந்தனர், அவர்கள் அங்கு ஒருபுறம் இருந்து பாடிக்கொண்டிருந்தார்கள்.

      Delete
  6. தமிழை அழிக்க முடியாதுதான். எத்தனை காலமாக பிழைத்து வருகிறது!  அப்போதிருந்த சில வார்த்தைகளுக்கு சிலசமயம் வேறு அர்த்தங்கள் இப்போது!

    ReplyDelete
    Replies
    1. ஓ அர்த்தம் மாறுகிறதோ அது எப்படி?

      Delete
    2. நாறும் - என்றால் வாசனை அடிக்கும் என்று 10ம் நூற்றாண்டில் அர்த்தம். இப்போ நாறும் என்பது 'நாற்றமடிக்கும்' என்று அர்த்தமாகிவிட்டது. வாசனை என்றால்தான் பழைய காலத்து 'நாறும்' என்பதற்கான வார்த்தையாகிவிட்டது.

      Delete
    3. அல்லோ நெல்லைத்தமிழன்.. நான் குட்டியாக இருந்தபோதும், இப்பவும் நாறும் என்றால்.. அது நாற்றம் எனத்தான் தெரியுமாக்கும்:)) ஹா ஹா ஹா.. நீங்கள் எதுக்கு தமிழுக்கு மட்டும் பத்தாம் நூற்றாண்டை துணைக்கு அழைக்கிறீங்க? கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      ஓகே புரியுது...

      Delete
  7. புயல் அடித்தால்தான் அந்த இடை சற்றே அசையும் போலஒரு படம் போட்டிருக்கிறீர்கள்! 

    என்னடா இதயம் அடைக்கிறதே என்று பார்த்தேன்.  இந்த உருவம் உள்ளே விழுந்தால் அடைக்காமல் என்ன செய்யும்?

    ReplyDelete
    Replies
    1. //புயல் அடித்தால்தான் அந்த இடை சற்றே அசையும் போலஒரு படம் போட்டிருக்கிறீர்கள்! //
      வேறு படம் தேடிப் போட்டால் மட்டும் குட்டி இடையாக இருக்குமோ கர்ர்ர்:)), இருப்பினும் நீங்களே இப்பூடிச் சொல்லி அவகட:) மனசை நோகடிக்கலாமோ ஹா ஹா ஹா:))).

      //என்னடா இதயம் அடைக்கிறதே என்று பார்த்தேன்//

      ஹா ஹா ஹா அடைக்கும் அடைக்கும்:), இருப்பினும் ஸ்ரீராம் அனுக்கா 39 வயசை கேக் கட் பண்ணிக் கொண்டாடியதை அறிஞ்ச பின்னரும் நீங்க கைவிடாமல் இருக்கிறீங்க பாருங்கோ:)).. இதிலிருந்து என்ன தெரியுது?:) நீங்க உண்மையில் அனுக்காவின் அழகில சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே:) மனசின் அழகில:)) தான் மயங்கியிருக்கிறீங்க என்பது எமக்குப் புரியுது:))

      Delete
  8. ஊசிக்குறிப்பு ஓகே.  சிந்தனைகள் தரும் கனம் அதிகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  9. //தலைமயிர் விரித்துப் போக முடியாது, குட்டி மயிராயினும் பிடிச்சுக் கட்டிக் கொண்டே உள்ளே போக வேண்டும்//

    நீங்கள் இதைக் கடைப்பிடிக்கவில்லை போலும்

    ஊசிக்குறிப்பு ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. vஆங்கோ கில்லர்ஜி வாங்கோ

      ///நீங்கள் இதைக் கடைப்பிடிக்கவில்லை போலும்//
      சே..சே.. கடவுள் உள்ள்?ஏ விட்டாலும் குருக்கள் விடமாட்டாராம்:) என்பதுபோல, என்னை மட்டும் விடுவினமோ, எனக்குத்தான் அடுத்தவர்கள் ஏதும் குறை சொல்லுமுன்னம் நான் செய்திடோணும் எனும் மனநிலையில் இருப்பேன், காண்ட்பாக்கில் நல்லவேளை வூல் பாண்ட் இருந்துது எடுத்துப் போட்டேன், கோயிலை விட்டு வெளியே இறங்கியதும் கழட்டிப்போட்டேன்ன் பூசோ கொக்கோ:)) ஹா ஹா ஹா.

      பிள்ளைகளும் அப்படித்தான், எல்ல்லோரும் தலை விரிச்சபடி வந்தார்கள், காரால இறங்கியதுதான் தாமதம் கடகடவெனப் பின்னி வூல் போட்டார்கள், திரும்ப வெளியே வந்ததும் கழட்டிப் போட்டினம் ஹா ஹா ஹா.. நம்மிடம் இல்லை எனில் அங்கு தருவார்களாம், ரிபன், வேஷ்டி எல்லாம்:)

      Delete
    2. //AngelSunday, November 10, 2019 12:51:00 pm
      HAaaa haa super sago//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் ஜொன்னனே:) இப்பூடியான விசயம் எனில் முதல்ல கண்ணில தெரிஞ்சிடுமே:) என்ன களைப்பில இருப்பினும்:))

      Delete
    3. //காண்ட்பாக்கில் நல்லவேளை வூல் பாண்ட் இருந்துது எடுத்துப் போட்டேன், கோயிலை விட்டு வெளியே இறங்கியதும் கழட்டிப்போட்டேன்ன் பூசோ கொக்கோ:)) ஹா ஹா ஹா.// நான் அப்படத்தை பார்த்ததும் இப்படித்தான் நீங்க செய்திருப்பீங்கள் என்று நினைத்தேன். ஹா..ஹா..ஹா..
      நானும் இப்படித்தான் செய்றது..ஹி..ஹி..ஹி. பாக் ல் எல்லாம் இருக்கும்..

      Delete
    4. //நானும் இப்படித்தான் செய்றது..ஹி..ஹி..ஹி. பாக் ல் எல்லாம் இருக்கும்..//

      ஹா ஹா ஹா அதேதான் அம்முலு, இதைவிட பனடோல், சுவீட்ஸ் சிலசமயம் நட்ஸ் இப்படி எல்லாம் வச்சிருப்பேன்:))

      Delete
  10. வணக்கம் அதிரா சகோதரி

    மதில் மேல் பூனை அந்த பக்கமா, இந்த பக்கமா என்ற யோசனையில் இருக்கும் போது மேலும் யோசிக்க விடாமல் படமெடுத்து விட்டீர்கள் போலும்...! மிக அழகாக உள்ளது.

    கோவில் அம்மன் படங்கள் மிக அழகாக உள்ளன. சுத்தம் சுகாதாரம் பளிச்சென்று தெரிகிறது. கோவிலுக்குச் செல்ல கண்டிஷன்கள் அருமையாக உள்ளது. குருவாயூர் போன்ற பெரிய கோவில்களிலும் இந்த மாதிரி கண்டிஷன்கள்தான். அங்கு நெல்லை தமிழருக்கு மட்டும் விதிவிலக்கா? ஆண்கள் மேல் சட்டை அணிந்து செல்லலாமா? ஹா. ஹா. ஹா.

    வெளியில் இருக்கும் இடங்களில் உள்ள கணேசர், சிவன், நந்திகேஷ்வரர் அனைத்தும் அழகு. ஆப்பிள் மரங்கள் நிறைய இருக்கின்றனவே..! பச்சை பசேலென கண்களை கவர்கிறது.

    பச்சை நிற ஆப்பிள் பறிக்க செல்லும் பச்சை நிற தேவதையா? ஆமாம்.. பச்சை நிறம் தங்களுக்கு மிகவும் பிடித்தமானதா ? இல்லை அந்த நிறத்திற்கு உங்களை பிடிக்குமா? எதுவாயினும் பச்சை நிறத்தில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. !

    ஊசி இணைப்புக்கள் ஜோர்.. பாரபட்சமின்றி "இருவருக்காகவும்" (யார் அந்த இருவர் என்பது இருவருக்கும் புரியுமென நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா.) இணைத்து விட்டீர்கள்.. இருவருக்கும் இணைத்த கவிதையும் அற்புதம்.

    ஊசிக்குறிப்பு அருமை. மாலையா, காயங்களா என்பதை மனது தீர்மானித்து செயல்பட வேண்டும்.

    புலாலியூர் புஸானந்தா அவர்களின் கருத்து மிகச் சரியானது. சிந்தனை பன்மடங்காகப் பெருக, பெருக உடலில் ஏற்படும் உஷ்ணத்தில் உடல் செயலாற்றவும் மறுக்கிறது. உண்மை.. உண்மை...! ஆனால், அதை பொருட்படுத்தாமல், இவ்வளவு களைப்பிலும் நான் இன்று தாமதமின்றி விரைவாக வேறு வந்திருக்கிறேன். (காரணம் தங்கள் பதிவின் சுவாரஸ்யம் என்னை இழுத்து வந்து விட்டது.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. அது பூஸார் கோயிலுக்குள் போக ரெடியாகிறார்:).

      //ஆண்கள் மேல் சட்டை அணிந்து செல்லலாமா?//
      அதுதானே, அதை மட்டும் விட்டு வச்சிருக்கினம், ஒருவேளை குளிர்நாடுகள் என்பதனால இச்சட்டம் கொண்டுவர முடியாமல் இருக்கக்கூடும். யாழ்ப்பாணம் நல்லூருக்குள் எந்த ஆண்களும் சேட் உடன் உள்ளே போக முடியாது, அதுவும் தனியார் கோயில் என்பதால் சட்டம் அதிகம்.

      //ஆப்பிள் மரங்கள் நிறைய இருக்கின்றனவே..! பச்சை பசேலென கண்களை கவர்கிறது.//
      முந்தி அது அப்பிள் தோட்டமாக இருந்திருக்கலாம், கோயிலுக்காக அப்படியே காணியை வாங்கியிருக்கின்றனர்.

      //பச்சை நிறம் தங்களுக்கு மிகவும் பிடித்தமானதா ? இல்லை அந்த நிறத்திற்கு உங்களை பிடிக்குமா?//

      ஹா ஹா ஹா அப்படி இல்லை கமலாக்கா, எனக்குப் பிடிச்சது பிங், பேப்பிள் ஒரேஞ் மஜந்தா... ஆனா அதைவிட எது கிடைச்சாலும் கண்ணுக்கு அழகெனில் போடுவேன், இது தானா அமைஞ்சது:).. சிமிக்கி வாங்க கடைக்குப் போயிருந்தபோது, அங்கு இந்த சுடிதார் போட்டிருந்தார்கள் , அண்ணியுடன் போயிருந்தேன், அண்ணி சொன்னா உங்களுக்கு நல்லா இருக்கும் வாங்குங்கோ என, அதனால வாங்கினேன்:)..

      Delete
    2. //(யார் அந்த இருவர் என்பது இருவருக்கும் புரியுமென நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா.)//
      ஹா ஹா ஹா அதுதான் வலையுலகத்துக்கே தெரியுமே:))

      //இவ்வளவு களைப்பிலும் நான் இன்று தாமதமின்றி விரைவாக வேறு வந்திருக்கிறேன். (காரணம் தங்கள் பதிவின் சுவாரஸ்யம் என்னை இழுத்து வந்து விட்டது.)//

      ஓ மிக்க மிக்க நன்றி.. போனதடவை ரெயின் புறப்பட்டு விட்டமையால் ஓடிவந்து ஏறியதிலேயே களைச்சிருப்பீங்க ஹா ஹா ஹா நன்றி கமலாக்கா.

      Delete
  11. படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
  12. காற்று அடித்தால் அசைகிற இடை மாதிரி இல்லையே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ

      //காற்று அடித்தால் அசைகிற இடை மாதிரி இல்லையே//
      ஏதோ பொறாமையில பேசுறமாதிரி இருக்கே:)) ஹா ஹா ஹா:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

      Delete
  13. ஹலோ என் படத்தை என் அனுமதி இல்லாமல் ஊசி குறிப்புக்கு மேலே எப்படி நீங்க போடலாம்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லும் வடிவேல் அங்கிளையோ சொல்றீங்க:)).. அவரும் உங்களைமாதிரித்தான் ஆனா ஒரு சின்ன வித்தியாசம்:) நீங்க மாமியிடம் அடி வாங்குவீங்க:) அவர் ஊரெல்லாம் அடி வாங்குவார் ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  14. அம்மன் அழகாகவும் தெய்விகமாயும் இருக்கா. அது சரி, வேலுடனும் சேவல்கொடியுடனும் இருக்கிற முருகனைக்கூடவா யார்னு தெரியலை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இந்த அழகில் சஷ்டி விரதம் வேறே இருந்திருக்கீங்க! முருகன் யார்னே தெரியாமல்! :))))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //வேலுடனும் சேவல்கொடியுடனும் இருக்கிற முருகனைக்கூடவா யார்னு தெரியலை?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதை நீங்க கண்டுபிடிப்பீங்க எனத்தான் மீ ஜொள்ளவில்லையாக்கும்:)), அந்த குரூப்பில் வைரவரும் அழகாக இருக்கிறாரே பாருங்கோ...

      //இந்த அழகில் சஷ்டி விரதம் வேறே இருந்திருக்கீங்க//
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:) இது வள்ளி காதில விழுந்துதோ அவ்ளோதேன்ன்:)) கீசாக்காவின் கனவில வந்து மிரட்டுவா:)) பின்ன நான் கொஞ்ச நஞ்ச நேர்த்தியா வச்சிருக்கிறேன் அவவுக்கு இன்னும் ஒன்றுகூடக் குடுத்தபாடில்லையே.. முருகா ...:))

      Delete
  15. ஊசி இணைப்புக்கள் ஸ்ரீராமுக்காகவா? ஊசிக்குறிப்புச் சொல்லுவது உண்மை தான். உங்க முகத்தையும் காட்டலை. உங்க இணையையும் முகத்தை மறைச்சுட்டீங்க! :))))) வைரவர் தனியா உட்கார்ந்திருக்கார் போல!

    ReplyDelete
    Replies
    1. ///ஊசி இணைப்புக்கள் ஸ்ரீராமுக்காகவா?//

      அச்சச்சோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன இப்பூடிப் பொத்தாம் பொதுவாச் சொல்லிட்டீங்க:)) பாருங்கோ ஸ்ரீராம் ஓடிவந்து எதிர்ப்பார் என வெயிட் பண்ணினேன்:) ம்ஹூம்ம்.. போனாப்போகுது இருவரையும் வச்சிருக்கலாம் என நினைச்சாரோ என்னமோ:)) ஹா ஹா ஹா நல்லவேளை நெல்லைத்தமிழன் இன்று இங்கில்லை:)).. அது கீழே இருப்பது தமனாக்காவெல்லோ கீசாக்கா:))..

      முகத்தை மறைச்சிட்டேன் எனக் கவலை வேறை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க குட்டிக் குஞ்சுலுவையே காட்டப் பயப்பிடுறீங்க:)).. எனக்கு வீட்டில் ஸ்ரிக்ட்டான ஓடர், படங்கள் மற்றும் பேஷனல் விசயம் எதுவும் பப்ளிக்கில் வேண்டாம் என்பது கீசாக்கா.. அதனால போட மாட்டேன், எதையும் சொல்லவும் விரும்புவதில்லை, இது நெ.த கேட்டார் என்பதற்காக மகனின் வேஷ்டி கட்டிய படம் அது...

      வெளியே மேபிள் மரத்தடியில் வைரவர் தனியா வீடு கட்டி தன் வாகனப்படை பாதுகாப்புடன் இருக்கிறார், சூம் பண்ணிப் பாருங்கோ, அங்கு ஒரு வைரவ சூலம் இருக்கு, அதில் வடை மாலையும் தொங்குது, பறவைகள்கூடக் காணவில்லைப்போலும், நேரில் என் கண்ணுக்கு தெரியவில்லை:)) படத்தில தெரியுதே ஹா ஹா ஹா.

      Delete
  16. இங்கேயும் அதாவது யு.எஸ்ஸிலும் "ஸ்லீப் ஓவர்" உண்டு. ஆனால் எல்லாப் பெற்றோரும் ஒப்புக்கொள்வதில்லை என நினைக்கிறேன். சின்ன வயசுக் குழந்தைகள் எனில் பொறுப்பு அதிகம் எடுத்துக்க வேண்டி இருக்கும் என்பதாலோ என்னவோ!

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக வெள்ளைகள் நம்மவர்களோடு சேர்வது குறைவு கீசாக்கா, ஆனா இந்த ஸ்கொட்டிஸ் மட்டும் வித்தியாசம், நம் ஊரவர்கள்போல நம்மோடு ஒட்டி நல்ல அன்பாக இருப்பினம், நல்ல குணங்களும் பழக்கவழக்கமும் நன்று. ரோட்டில் கடிப்பிடிப்பது, அசிங்கமான எந்த வேலையும் காண முடியாது, பெற்றோரை நன்கு கவனிப்பார்கள்.. தம் குடும்பங்களுடன் ஒற்றுமையாக அதிகம் இருப்பார்கள், ஆனா இப்போதைய ஜெனரேஷன் மாறி வருகிறது.

      உண்மைதான் குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும்போது மிகக் கவனமாக பாதுகாத்து அனுப்ப வேண்டும், ஆனா என்ன பண்ணுவது அப்படிப் பயப்ப்பிட்டால் நம் பிள்ளைகளும் பாவமெல்லோ.. அவர்களுக்கும் அப்படி சேர்ந்திருக்கும் ஆசை இருக்கும்தானே என நினைச்செ றிஸ்க் எடுப்பது.

      Delete
    2. ரோட்டில் கட்டிப்பிடிப்பது என வந்திருக்கோணும், ரயேட்டாக இருக்கெனக்கு அதனால நிறைய எழுட்த்ஹுப் பிழை வருது:)) கர்ர்ர்ர்ர்ர்

      Delete
  17. நல்லவேளையாகக் கதவை உடைச்சுத் திறந்து உள்ளே இருந்த மயக்கமான பையரை வெளியே கொண்டு வந்தீர்கள். தொலைபேசி அழைப்பும் போய்ச் சேர்ந்திருக்கிறது. உண்மையிலேயே உறக்கமில்லா இரவு தான். அந்தப் பையர் உடல் நலம் இப்போது தேவலையா? நீங்க விசாரித்தால் சொல்லுங்க. அனைவருக்காகவும் பிரார்த்தித்துக்கொள்கிறோம். எல்லாம் நல்லபடியா ஆனதுக்கு இறைவனுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் மெசேஜ் அனுப்பிக் கேட்டேன், அவர் இன்று முழுவதும் நித்திரை கொண்டு இப்போ பெட்டராக இருப்பதாகவும், தான் மிகவும் ஃபீல் பண்ணுவதாகவும்[எங்களைக் கஸ்டப்படுத்தி விட்டதாக நினைச்சு] பதில் போட்டா. நான் சொன்னேன் இல்லை எங்கள் மகனைப்போலதானே அவரும் நமக்கு, அதனாலென்ன என.

      பின்பு இப்போ வன் அவர் முன்பு டோர் பெல் அடிச்சது, போய்ப் பார்த்தால், வில்லியத்தின் அப்பா அம்மா இருவரும் பொக்கே ஒன்று கையில் பிடிச்சுக் கொண்டு நிக்கினம், என்னைக் ஹக் பண்ணி சொறி சொல்லி தந்தா பொக்கேயை, பின்பு உள்ளே வந்து கதைத்து, டோரையும் பார்த்துவிட்டுப் போனார்கள்.

      இங்கு இப்படித்தான் ஏதும் சின்ன விசயம் எனுனும் ஒரு பொக்கே வாங்கிக்கொண்டு ஓடி வருவார்கள்.. நாமும் எதிர்பார்த்தோம் சிலசமயம் இப்படி வரக்கூடும் என ஹா ஹா ஹா.

      உண்மைதான், இரவு ஒருகணம் பயந்தே விட்டோம்ம்.. கடவுளைத்தான் உடனே நானும் வேண்டியபடி இருந்தேன்.

      மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
  18. கோவில் படங்கள் அனைத்தும் அழகு...

    ஊசிக்குறிப்பு(ம்) அருமை...!

    ReplyDelete
  19. யார் செகண்டா வந்தது ?? பரவால்ல இன்னிக்கு முதல் வந்தவங்க கூட அந்த ஆயாவை அனுப்பி வைங்க :))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

      ஹா ஹா ஹா நேற்று ஆயாவைத்தந்ததுக்கு மூச்சே காட்டாமல்:)) இன்று மட்டும் எப்படி பெரிசா சவுண்ட் வருது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. முதலாவதாக வந்தவருக்கு ஆயா வாணாமாம் அனுக்கா போதுமாம்:)).. போதுமென்னும் மனமே பொன் செய்யும் மருந்தா இருக்குமோ இது ஹா ஹா ஹா:)))

      Delete
  20. //அத்தோடு தலைமயிர் விரித்துப் போக முடியாது, குட்டி மயிராயினும் பிடிச்சுக் கட்டிக்கொண்டே உள்ளே போக வேண்டும் கர்ர்ர்ர்ர்:)). //இது எதுக்கு கர்ர்ர்ர் ???உண்மையில் தலை மயிரை விரித்து போடுவது மிகவும் அந்த ஹைஜீனான செயல் எங்கெனாலும் விரிச்சு போட்டுக்கலாம் ஆனா கோயில் அப்புறம் கிச்சன் இந்த இடங்களில் கட்டாயம் ரப்பர் பாண்ட் போடணும் .சில சமையல் நிகழ்ச்சில் பார்ப்பேன் பொங்கல் வைக்கும்போது தலை விரி கோலமா பொங்கல் வைக்கிறது பார்த்தா ஒரு டப்பா நிறைய பேன்ஸ் புடிச்சி தலைல விட தோணும் எனக்கு :))))))

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான் அஞ்சு, அத்தோடு ஆபட்த்ஹும் எல்லோ.. கோயில்களில் விளக்குகள் எரிஞ்சுகொண்டிருக்குமெல்லோ.

      Delete
  21. அடடா அந்த பிள்ளை இப்போ நலம்தானே ?. சிலருக்கு இங்கே பல ப்ராப்லம்ஸ் இருக்கு .உணவு அலர்ஜில துவங்கி எத்தனையோ .எங்க வீட்டுக்கு மகள் நண்பிகள் வருவாங்க .நான் முதலிலேயே கேட்டு வச்சிப்பேன் உணவு அலர்ஜி எதாச்சும் இருக்கானு .நல்லவேளை கதவை உடைச்சிங்க .கடவுளுக்கு நன்றி சொல்லுங்க .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு, இது நாம் எதுவும் குடுக்கவில்லை நல்ல வேளையாக ஆனா எல்லோரும் சேர்ந்து ஓன்லைன் ஓடரில் ஃபூட் எடுத்துச் சாப்பிட்டார்கள், இவருக்கு ஏற்கனவே ஃபீவர் இருந்திருக்கு அது வேர்ஸ் ஆகிவிட்டது போலும், சின்னவர்கள்தானே நண்பர்கள் ஒன்று சேருகின்றனர் எனும்போது, போகாமல் இருக்க மனம் கேட்காதெல்லோ.. நாமே இந்த வயதிலயும் மனதைக் கொன்றோல் பண்ண முடியாமல் இருக்கிறோம்:)).. ஐ மீன் என் சுவிட் 16 லயும் எனச் சொன்னேன்:)) ஹா ஹா ஹா..

      கடவுளை விட வேரொன்றும் அறியேன் பராபரமே... நம் கையில் எதுவும் இல்லையே....

      Delete
  22. ஹையோ  சாமிங்க போர்த்தியிருந்த சேலை எல்லாம் பளபளா எனக்கே சேலை கட்ட ஆசை வருது .படங்களும் செம க்ளியர் .சாமிகளும் ஜெகஜோதியா இருக்காங்க 

    ReplyDelete
    Replies
    1. அது அங்கிருக்கும் சிலைகளும் ஆடைகளும் மிக சூப்பராக இருந்தது அஞ்சு, கும்பிடுவதைக் காட்டிலும் ரசிக்கவே ஆசையாக இருந்தது.

      Delete
  23. ஹாஹாஹா அந்த ஆப்பிள் மரம் பக்கம் அம்ச எலி :) கிகி :) அம்சவலீ :) அய்கா பச்சை சல்வாரில் கோயிங் :)அம்சவல்லிக்குப்பதில் பசுமைவல்லின்னு மாத்தியிருக்கலாம் இன்னிக்கு 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அம்சவல்லி எனில் அமுது குடுக்கும் அழகான வல்லி எனப் பொருளாம்:)) நெல்லைத்தமிழன் ஜொள்ளிட்டார்ர்:)) அதுதான் உங்களுக்கு எலி எல்லாம் வருது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)..

      Delete
  24. //அப்பிள் காய் சாப்பிட்டுக்கொண்டே ஊஞ்சல் ஆடினோம்:))//இது வரைக்கும் ஓகே .நீங்க ஆட்டிட்டிருக்கும்போதே அந்த ஊஞ்சல் வெயிட் தங்கமா கழண்டு விழுந்ததை சொல்ல மறந்துட்டிங்க :)

    அந்த கோயில் அமைந்த இடமும் சூழலும் பசேல்னு இருக்கு 

    ReplyDelete
    Replies
    1. கழண்டு விழுந்தாலும் விழுந்திருக்கலாம்:) ஹா ஹா ஹா முன்பு இப்படித்தான் கேபிள் காரில் இங்கு ஓரிடத்தில் போனோம், அடுத்த கிழமையே நியூஸ் வருது, கேபிள் அறுந்து விழுந்து இருவருக்கு கால் முறிஞ்சதால தற்காலிகமாகப் பூட்டியிருக்குதென:)).. அப்போ என் ஆத்துக்காரர்:) சொன்னார், அதிரா நாங்க எதில ஏறினாலும் அது உடனே பூட்டப்பட்டிடுது:)), நமக்குப் பிடிக்காத ஏதும் இருப்பின் வாங்கோ ஒருதடவை போனால், உடனே இழுத்து மூடிவிடுவார்கள் என ஹா ஹா ஹா.

      Delete
  25. எண்ணங்கள் பற்றிய ஊசிகுறிப்புண்மை .அதனால்தான் இயன்றவரை எல்லாரையும் அனுசரிச்சு போக ட்ரையிங் .அப்படியும் சில நேரம் மனசு பொறுக்காம திட்டிட்டு கடவுள்கிட்டசாரி கேட்டுடுவேன் 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நாம் எல்லோரும் மனிதர்கள்தானே.. அப்பப்ப எல்லாக் குணமும் எட்டிப் பார்க்கட்த்தான் செய்யும்.

      Delete
    2. Am I a cat?:))

      [im] https://i.pinimg.com/originals/6b/5b/c3/6b5bc3d911b10c375d37db2e6defdeb7.jpg [/im]

      Delete
  26. மரத்துக்கிட்ட எல்லாம் வெளிநாட்டு பைரவர்களை  வைச்சிருக்காங்க :) நெக்ஸ்டைம் போனா சொல்லுங்க எங்க நாட்டு பைரவர்கள் வைக்க சொல்லி :))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. //வெளிநாட்டு பைரவர்களை//
      அதைட்த்ஹான் நானும் கவனிச்சேஎன் ஹா ஹா ஹா

      மிக்க நன்றிகள் அஞ்சு, மீ 3 ரயேட்ட்:)) நாளைக்கு வேலை.. ஓகே நல்லிரவு:)) வைரவர்க் கனவுகளாக வரட்டும்.. அதுவும் வெளிநாட்டு வைரவர்கள்:)) ஹா ஹா ஹா.

      Delete
  27. ஆவ்வ்வ்.. அழகான கோவில் ஊரில் இருப்பது போல. இருக்க். விண்டரில் எப்படி இருக்கும். பசுமையா இருக்குமா. அழகான அம்மன். சில கடவுளரை பார்த்தால் (செய்திருக்கும் அலங்காரங்களை) பார்த்துக்கொண்டிருக்கலாம் மாதிரி. இந்த அம்மனும் அப்படித்தான் இருக்கா.
    வெளிக்காணியில் இருக்கும் கடவுள்கள் கூட அப்படியே ஊர் மாதிரி இருக்கு. பச்சை அப்பிள் ஊரில் மாங்காய் காய்த்திருப்பது போல இங்கு இது. அங்கால காடு மாதிரி இருக்கு. தனியார் கோவிலா இது.? சுற்றுபிரகார சுவாமிகளும் அழகா இருக்கு. இக்கோவிலில் அபிஷேகம் செய்யமாட்டார்களா? ஒரு டவுட்டுதான் எல்லாமே பளபளப்பா இருக்கு...
    ஊசிகுறிப்பு அருமை. நாம் என்ன விதைக்கிறோமோ அதுதானே வரும். ஊசி இணைப்புக்களில் ஊர் வம்பாஆ..
    சிந்தனைகள்தானே எல்லாவித உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். அப்போ உஷ்ணம் ஏறும்தானே..அரிய தத்துவம் பூஸானந்தா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. இம்முறை ரெயினுக்குக் கரி:) தீர்ந்து போச்சு.. அதை அம்பேரிக்கா போய் வாங்கி வர இவ்ளோ லேட்டாகிட்டுது:)) அதுக்கு முதலில் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:))..


      இதுவும் இலங்கையர் ஒருவரின் தனிக்கோயில் எனத்தான் சொன்னதாக நினைவு.. சரியாக தெரியவில்லை, ஆனா தனியார்கோயில்தான், தமிழ்க் கோயில்தான்.

      அனைத்துக்கும் மிக்க நன்றி அம்முலு.
      இது ரொரண்டோ பக்கம் என்பதனால், விண்டரில் ஸ்னோ இருக்கும் எனத்தான் நினைக்கிறேன்.

      Delete
  28. கோவில் படங்கள், மூர்த்திகள் படங்கள் மிக அழகு, அருமை.

    புலம் பெயர்ந்தவர்கள் கஷ்டப்பட்டு தங்கள் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்கள். ரொம்பவும் பாராட்டணும்.

    ஆனாலும் சிலர், கோவிலைக் கட்டி, அதன் மூலமாக பண வரவைப் பார்த்து, அதை பிஸினெஸாக்கிடறாங்க என்றும் படித்தேன் (கேனடாவில்). அது உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //புலம் பெயர்ந்தவர்கள் கஷ்டப்பட்டு தங்கள் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்கள். ரொம்பவும் பாராட்டணும்.//
      இது உண்மைதான், தமிழ்நாட்டில்கூட பல தமிழ்ப்பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது[இலங்கையில் இந்த நிலைமை இன்னும் வரவில்லை என்றே நம்புகிறேன்], ஆனா கனடாவில் அப்படி இல்லை, முக்கால்வாசிக் குழந்தைகளும் தமிழ் எழுதப் படிக்க மற்றும் மியூசிக், வீணை, நடனம், திருக்குறள் என அங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளே முன்னணியில் இருக்கிறார்கள்.

      //ஆனாலும் சிலர், கோவிலைக் கட்டி, அதன் மூலமாக பண வரவைப் பார்த்து, அதை பிஸினெஸாக்கிடறாங்க என்றும் படித்தேன் (கேனடாவில்). அது உண்மையா?//

      இருக்கலாம் நெல்லைத்தமிழன், நாம் உட்பட ஆருமே நமக்கு நன்மை இல்லாத ஒன்றைச் செய்ய விரும்ப மாட்டோம்ம்.. அப்படி இருக்கையில் அவர்களும் அப்படி ஏதும் பிஸ்னஸ் போக்காகவும் ஆரம்பிச்சிருக்கலாம், ஆனா நன்மையை மட்டும் நாம் எடுப்போமே.. அது அவர்கள் பிரச்சனை, அதனால நமக்கு நஷ்டமில்லைத்தானே.. நமக்குக் கோயில் தானே கிடைச்சிருக்கு.. அது ஒரு பெரிய வரப்பிரசாதம் இல்லையோ?.. இல்லை எனில் ரிக்கெட் போட்டு ஊருக்குப் போய்த்தானே ஒரு தேரை நேரில் காட்ட முடியும் பிள்ளைகளுக்கு... இப்படித்தான் இந்த விசயத்தில் நாம் சிந்திக்கிறோம்... ஒரு வீடு கட்டவே எவ்ளோ யோசிக்கும்போது, துணிஞ்சு ஒரு கோயிலைக் கட்டுவதென்பது மிகப் பெரிய றிஸ்க் தானே.. அதைத்துணிஞ்சு செய்கிறார்களெல்லோ.

      Delete
  29. லிங்கமும், ஆவுடையாரும் மேட்ச் ஆகலை. பொதுவா இரண்டும் ஒரே கல், நிறமாகவே இருக்கும். இங்க விதவிதமா, ஆவுடையார் பளிங்குக் கல், மரம் மாதிரியான தோற்றம் என்று வித விதமாக இருக்கு. லிங்கத்தின் நிறத்துடன் மேட்ச் ஆகலை.

    ReplyDelete
    Replies
    1. ஓ எனக்கு இதுபற்றி தெரியவில்லை, இரண்டும் கிரனைட் கற்களால்தான் செய்யப்பட்டிருக்குது ஆனா கலர் வேறாக இருக்குது...

      Delete
  30. நந்திகேஸ்வரர், சிவலிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். இங்க என்னடான்னா, சிவலிங்கத்தைச் சுற்றி வேலி போட்டு, அதற்கு அப்பால் நந்திகேசுவரர் சிலை இருக்கு.

    கீதா சாம்பசிவம் மேடம், படங்கள்லாம் போட்டாங்கன்னா, அதுல முக்கியமான ஆட்களைவிட (மோதி), பெண்கள் போட்டோதான் அதிகம் இருக்கும். ஹா ஹா. நீங்க என்னடான்னா, ஒரு படத்திலயும் கேனடா ஆட்களைக் காணவிடாமல் பச்சை கலர்ல அந்தப் பகுதியையே வெட்டி எடுத்திருக்கீங்க. என்ன ரசனையோ!

    ReplyDelete
    Replies
    1. ///அதற்கு அப்பால் நந்திகேசுவரர் சிலை இருக்கு.//

      அத்திவாரம் ஒன்றாக இருக்கு, இது வெளியே தனி இடம் என்பதனால ஸ்னோ குளிருக்கு இப்படிப் பண்ணியிருப்பார்களோ தெரியவில்லை எனக்கு..

      //நீங்க என்னடான்னா, ஒரு படத்திலயும் கேனடா ஆட்களைக் காணவிடாமல் பச்சை கலர்ல அந்தப் பகுதியையே வெட்டி எடுத்திருக்கீங்க. என்ன ரசனையோ!//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), எனக்கு எங்களைக்காட்டினாலும் காட்டலாமே தவிர அடுத்தவர்களைக் காட்டுவது தப்பெல்லோ.. குற்ற உணர்ச்சியாக இருக்கும்.

      இன்னொன்று நெல்லைத்தமிழன், நீங்க கேட்டதுக்காகவே வேஷ்டிப்படமொன்று போட்டேன்:)), ஒரு நாளில், நீங்க எப்படியும் மொபைலில் பார்த்திருப்பீங்களென நம்பி நீக்கி விட்டேன்.. பார்க்கவில்லையோ?... பார்க்காவிட்டால் இனி மீ ஒண்ணும் பண்ண முடியாதாக்கும் ஹா ஹா ஹா...

      Delete
  31. ஆப்பிள் மரம் என்பதால் தைரியமாக மரத்தின் கீழே உட்கார்ந்துட்டீங்க.

    நம்ம ஊர் புளியமரமா இருந்தா இந்த தைரியம் வந்திருக்குமா? (இல்லை ஒருவேளை கேனடா ஆவிகள் அந்த ஊர் ஆப்பிள் மரத்துலதான் இருக்கும்னு உங்களுக்குத் தெரிஞ்சிருந்தால் இப்படி மரத்துக்கீழே உட்கார்ந்திருப்பீங்களா>)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்லை அதுக்குக் கீழ இருக்கும்போதும் பயமாகவே இருந்துது ஏன் தெரியுமோ? கீழே குனிஞ்சு உள்ளெ போனதும் ஒரே இருட்டாக இருந்துது மேலே பார்க்க, பயமாகத்தான் இருந்தது, உடனே ஓடி வந்திட்டேன் ஹா ஹா ஹா..

      Delete
  32. //இருங்கோ சாப்பிட்டு விட்டுப் போகலாம் என உடனே தயார் செய்து தந்தார்கள்.// - அந்த கோவில் ஆட்களோட டெடிகேஷன் இதுல தெரியுது.

    பஹ்ரைன், ஹரே கிருஷ்ணா கோவிலிலும் அப்படித்தான். காலைல போனோம்னா, சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவாங்க. (அதுக்காக நான், தாங்க ஒரு தட்டுன்னு உட்காரமாட்டேன். அவசியம் இல்லாம வெளில எங்கயுமே சாப்பிடமாட்டேன், அதிலும் காசு கொடுக்காம). அந்த ஊர்ல, ஹரே கிருஷ்ணா பக்தர்கள் அவங்க வீட்டுல வாரம் ஒரு தடவை ஏதேனும் சத்சங்கம் நடத்தும்போதும் இந்த மாதிரி வரும் எல்லோருக்கும் முழுச்சாப்பாடு, இனிப்போட போடுவாங்க. அந்த மாதிரி உயரிய பக்தி, அன்புலாம் பெரும்பாலும் நான் வேற எங்கயும் பார்த்ததில்லை.

    கர்னாடகாவிலும் அந்த மாதிரி ஒரு கோவில்ல வற்புறுத்தி எங்க எல்லாரையும் உட்காரவைத்து சாப்பாடு போட்டாங்க.

    கோவில்ல சாப்பிட்டோம்ன அது தரும் திருப்தி அதிகம். (கடவுளோட பிரசாதம் சாப்பிடறோம் என்று மனசு நினைக்கும்)

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் கேட்டார்கள், நாம் வேண்டாம் என்றிருந்தால் விட்டிருப்பினம், ஆனா நமக்கும் அவ்வளவு பசியில்லை எனினும், கோயிலில் சாப்பிடுவதில் ஒரு ஆசை, திருப்தி:))..

      தூரப் பிரயாணம் என்பதால், அங்குதானே கடைகளுக்கு குறைவில்லை, வடை, சமோசா, ரோல்ஸ் பற்றிஸ் என ஒரு தொகை உணவு எல்லோரும் வாங்கி கொண்டு வந்திருந்தார்கள்..

      //கோவில்ல சாப்பிட்டோம்ன அது தரும் திருப்தி அதிகம்//

      இதேதான் இதைத்தான் மேலே சொன்னேன்.

      Delete
  33. ஊசிக் குறிப்பு பார்த்தேன்... ஆங்கிலம் Tnk u... தமிழ் நன்றி, நறி என்றெல்லாம்.

    சொல்றாங்களே தவிர, பாரணை என்பதை பாறணைனு எழுதற, உஷ்ணம் - உஸ்ணம், வின்'டர் - விண்டர், அழகாக - அளகாக - என்றெல்லாம் தமிழ்க் கொலை செய்ய நிறைய ஆட்கள் இருக்கு என்று அவங்களுக்குத் தெரியலை போலிருக்கு

    ReplyDelete
    Replies
    1. //பாரணை என்பதை பாறணைனு எழுதற//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அல்லோ. இதில நான் எழுத்துப்பிழைதான் விட்டேன்ன்.. நீங்கள் பொருளையே மாத்திப் பாராயணம் என முடிச்சிட்டீங்க ஹா ஹா ஹா கர் அதை மறந்திட்டாரே:))..

      அது வி..ன்..டர் என ..ன் போட்டால், ஓட்டமட்டிக்கா ..ண் என அடிக்குதே அப்போ ஆரில டப்பூ சொல்லுங்கோ?:)) ஹா ஹா ஹா...

      Delete
  34. ஆப்பிள் மரங்கள், பழங்கள் படம் மிகவும் அழகாக இருந்தது. பியர்ஸ் மரங்களையும் படம் எடுத்திருக்கலாம். அடுத்த முறை பிளம்ஸ் மரங்கள், பழத்தோட படங்கள் எடுக்க மறக்காதீங்க.

    இன்னும் க்ளோஸப் படங்களா எடுத்திருக்கலாம். லேடஸ்ட் ஆப்பிள் போன் என்றுதான் பேர். படங்களை க்ளோஸப்பா எடுக்கத் தெரியலையே.

    ReplyDelete
    Replies
    1. //பியர்ஸ் மரங்களையும் படம் எடுத்திருக்கலாம்.//

      நீங்க குழப்பியிருக்கிறீங்க நெ.தமிழன், பெயார்ஸ் மரங்கள் நிற்பது அன்ரி வீட்டில்[கோயிலில் இல்லை], அப்படங்கள் இருக்கோணும் தேடிப் போடுறேன்.

      //லேடஸ்ட் ஆப்பிள் போன் என்றுதான் பேர்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் அடுத்த போஸ்ட் படிச்சால் இன்னும் என்னவெல்லாம் சொல்லுவீங்களோ:))..
      இம்முறை ஒன்றன்பின் ஒன்றாக பல விசயங்கள் வந்து, ஒரே ரயேட்டாகி இங்கின வர முடியாமல் போச்சு, அதனால உடன் பதில் தர முடியவில்லை, மன்னிக்கவும்.. மிக்க நன்றிகள்.

      Delete
    2. நான் ஒன்றும் குழம்பலை. நீங்கதான் சொல்லியிருக்கீங்களே... உங்கள் ஆன்'டி வீட்டில் இருந்தது என்று. அந்தப் படங்கள் எங்கே என்றுதான் கேட்டேன். இதெல்லாம் நாம் பொதுவா பார்க்கமுடியாத மரங்கள் இல்லையா?

      Delete
    3. லண்டன் ஹோட்டலுக்கு முதல் முறை சென்றிருந்தபோது (ரொம்பப் பெரிய ஹோட்டல் அது), ரிசப்ஷனில், ரூம் புக் பண்ண/அல்லது செக் இன் பண்ண பெரிய கியூ இருந்தது. அந்த மேஜையில் இரண்டு பெரிய கிண்ணங்களில் (1 அடிக்கும் அதிகமான உயரம்) ஏகப்பட்ட ஆப்பிள்கள் வைத்திருந்தார்கள். யார் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று. அவ்வளவு ஃப்ரெஷ் அப்பிள்கள், அந்தக் குளிரில்... எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. வெட்கப்படாமல் 3 எடுத்து சாப்பிட்டுவிட்டேன். ஹா ஹா

      Delete
    4. ஓ அதையா கேட்டீங்க நெ தமிழன்.. போடுறேன் அத்தோடு வைன் கிரேப்ஸ் உம் நிண்டது கொத்துக் கொத்தாக் காய்களோடு அதையும் போடுறேன்:) எல்லாம் போட்டு முடிய அடுத்த ஹொலிடேக்கு வெளிக்கிட்டு விடுவோம் ஹா ஹா ஹா.

      Delete
    5. ///வெட்கப்படாமல் 3 எடுத்து சாப்பிட்டுவிட்டேன். ஹா ஹா//

      ஓ.. அதனாலென்ன, இங்குள்ள பெரிய சூப்பமார்கட்டுக்களில்[tesco, morrison, costco]]போன்றவற்றிலிம் அப்பிள் ஒரேஞ் வாழைப்பழம் எப்பவும் இருக்கும், சாம்பிளுக்காக, நாம் எடுத்துச் சாப்பிடலாம், ஆனா பெரும்பாலும் சில குழந்தைகள் மட்டுமே எடுப்பினம், எப்பவாவது நெஞ்சுக்குள் எரிப்பதைப்போல ஏதும் இருந்தால், நானும் எடுப்பதுண்டு, மற்றும்படி இடைக்கிடை சில பிரெட், கேக் இப்படியானவற்றையும், துண்டுகளாக வெட்டி குத்திச் சாப்பிடுவதுக்கு வூட் ஸ்ரிக்கும் வைத்திருப்பினம், நமக்காகத்தானே வைக்கிறார்கள், ஆரும் எடுக்காட்டில் அது காபேஜ் தான், திரும்ப யூஸ் பண்ண மாட்டினம்...

      நன்றி நெ.தமிழன்.

      Delete
  35. புகைப்படங்கள் அனைத்தும் அழகு! ஊசிக்குறிப்பு அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. மிக்க நன்றிகள்.

      Delete
  36. எல்லோரும் மன்னிக்கவும் பதில்கள் தருவேன், ஏனோ இம்முறை புளொக் பக்கம் வர முடியாமலிருக்கு...

    ReplyDelete
  37. //ஒவ்வொரு சிலைகளையும் மணித்தியாலக் கணக்காக இருந்து ரசிக்கலாம் அவ்ளோ அழகு, என்னை விட்டிருந்தால் நாள் முழுக்க இருந்து ரசிச்சிருப்பேன்:)..//

    நீங்கள் சொல்வது உண்மை அதிரா. பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோவில் சிலைகள் அழகு.
    வைரவர் தோட்டத்திலும் அழகு. உள்ளே இருப்பவரும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      உண்மைதான் சில சிலைகளில் இருந்து கண்ணை எடுக்கவே முடியாமல் இருக்கும். இக்கோயில் ஊர்க்கோயில்போல வெளியே எல்லாம் தெய்வங்களை வைத்திருப்பது எனக்கு மிகவும் பிடிச்சுப் போச்சு, ஊர்களில்கூட இவ்ளோ பெரிய காணியுடன் கோயில்கள் இருக்குமோ தெரியவில்லை.

      Delete
  38. பச்சை வண்ண ஆடை கட்டி வந்த பச்சைக்கிளி ஊஞ்சல் ஆடும் அழகை மறைத்து விட்டீர்களே!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது நான் தனியே ஆடவில்லையெல்லோ:))

      Delete
  39. பாடல், பதிவு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை.

    ReplyDelete
  40. //பிள்ளை சுகமாகிட்டால் போதும் எனச் சொன்னதும், அவரின் அம்மா சொன்னா, அவருக்கு உடல் நலமில்லையாம், போக வேண்டாம் என்றவர்களாம், கேட்காமல் வந்திட்டாராம்,//

    அந்த பிள்ளை நலம் தானே!

    திகிலான இரவுதான் உங்களுக்கு.
    ஊரார் வீட்டு பிள்ளை நம் வீட்டில் வந்து சுககேடு வந்து விட்டதே ! என்று மனம் பதறும் தான்.
    எப்படியோ பிள்ளையின் அம்மா முன்பே உடல் நலக்குறைவு என்று சொல்லி விட்டார்கள். நிம்மதி படித்து.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கோமதி அக்கா, அவர் ஒரு கிழமை ஸ்கூலுக்குப் போகவில்லையாம், பின்பு எங்கள் வீட்டுக்கு வந்தார், திரும்ப திங்கள் ஸ்கூல் வந்து அரை நேரத்துடன் வீட்டுக்குப் போய்விட்டார் என மகன் சொன்னார். இப்போ நலமாகிட்டார், அவருக்கு சின்னனிலிருந்தே சிவியர் வீசிங் பிரச்சனையும் இருக்குது. அவர்கள் குடும்பத்தை எங்களுக்குப் பத்து வருடமாகத் தெரியும், நல்ல பெற்றோர் அவர்கள்.

      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  41. அம்மன் வெகு அழகு ...


    நந்தியாரும் , சுப்ரமணியரும் பள பள வென்று மின்னுகிரார்கள் ..


    அந்த காணி அங்கு பிள்ளையார் , சிவன் எல்லாருமே அழகா மனதை கொள்ளை கொள்கிறார்கள் அதிரா ...


    தேர் வாவ் ...

    பசிக்கு உடனே உணவு சமைத்து கொடுத்த விடம் மிகவும் பிடித்தது ..

    ஆஹா ஆப்பிள் ...சூப்பர்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.