நல்வரவு_()_


Thursday 2 April 2020

ண் விழித்தும் ன் செய்யோணும்?:)💁

ங்களில் எத்தனை பேருக்குத் தெரியும், நம் கண்ணுக்குள் இருக்கும் சக்தி?.., ஒருவரின் கண்ணை வைத்தே சொல்லிவிடலாம் பாதி சாஸ்திரம். கண்ணைப் பார்த்தால் தெரியும், அவர் ஹப்பியாக இருக்கிறார், சோகமாக இருக்கிறார், ரயேட்டாக இருக்கிறார்.., அன்பாக இருக்கிறார், கோபமாக இருக்கிறார்... இப்படி அனைத்தையும் கண் காட்டிக் கொடுத்துவிடும், அவர்கள் எவ்வளவுதான், எதுவுமே இல்லாததுபோல சிரிச்சுப் பேசினாலும், உள்மனதைக் கண் காட்டிக் கொடுத்திடும்.

இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த கண்ணில் இன்னொரு சக்தியும் இருக்குது தெரியுமோ. நாம் படங்களில்தான் பார்த்திருக்கிறோம், முக்கியமாக சின்னத்தம்பி படக் காட்சி இன்னும் என் கண்ணிலே நிக்குது, குஸ்புவின் அண்ணன், காலை எழுந்ததும், கண்ணைத் திறக்காமல், குஸ்பு றூமுக்கு வந்து, தங்கை முகத்திலேயே முழிப்பார்..

இப்படி முழிப்பதை, முழிவியளம் என ஒரு விசயமும் நம் மக்களிடையே இருக்குதெல்லோ.. அப்படி எனத்தான் நான் அப்போ நினைச்சேன். ஆனா அந்த முழிவியளத்தில் எனக்கு எப்பவுமே நம்பிக்கை இல்லை.. அது நம் அன்றைய நாளைப்பொறுத்து நமக்கு அமைவது, அதிலும் முழிவியளம் பார்ப்பது தப்பென்பதே என் வாதம்.. சரி அது போகட்டும்..

இப்போ இன்னொரு உண்மை என்ன எனில், நாம் கன நேரம் கண்ணை மூடி நித்திரை கொண்டபின், கண்ணைத் திறக்கும்போது, நம் உடலிலுள்ள பல சக்திகளும் கண்ணூடாக வெளியேறுமாம், அச் சக்தியை ச்சும்மா வெளியேத்திடாமல் இருக்கவே, கண் திறக்கும்போது, நம் உள்ளங்கைகளைப் பார்த்தால் நல்லது, அச்சக்தி மீண்டும் நமக்குள் இறங்கி, நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்...

ஓகே இப்போ கொஞ்சம் மகாபாரதம் படிப்போமா?:)). கொரோனாவால நீங்கள் எல்லாத்தையும் மறந்திருப்பீங்கள், ஆனா அதிரா மறக்க விட மாட்டேனாக்கும்:))..

+++====💪💪💪💪💪💪இடைவேளை💪💪💪💪💪💪====+++
ந்தக் கொடுமையைப் பாருங்கோ:). அதிரா மூணூஊஊ மாசத்துக்கொருக்கால் கே எஃப் சி போனாலே:)) நீ உயிரைக் கொல்றாய் எனக் குதிக்கீனம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் 3 மாதத்துக்கொருக்கால் தான் அதுவும் ஒண்ணே ஒண்ணு:)), ஆனா இப்பூடி டெய்லி எத்தனை உயிர்கள் கொல்லப்படுது தெரியுமோ?:)).. இவை தான் இப்போ கொரொனாவாக மாறியிருக்குதூஊஊஊ:)).. ஹா ஹா ஹா இனிமேலும் அதிராட கே எஃப் சி பற்றி ஆரும் பேசுவினமோ:)).. உயிரில சின்னன் பெரிசெல்லாம் இல்லையாக்கும்:))

+++++++இடைவேளை முடிஞ்ஞ்..போச்ச்ச்ச்ச்:)+++++++
ங்ங்ங் நான் முன்னர் சொன்ன கதையில வந்த மச்சக்கன்னிக்கும் அந்த அரசருக்கும் பிறந்த மகனில ஒருவர்தானே திருதராஸ்டிரன், அவரைத் திருமணம் செய்தவ காந்தாரி, தான் மணம்முடிக்கப் போபவருக்குப் பார்வை இல்லை எனத் தெரிஞ்ச அடுத்த கணமே, தன் கண்களையும் ஒரு துணி கொண்டு சுற்றி விட்டாராம், தான் மட்டும் பார்வையுடன் இருப்பது சரியில்லை என... இப்படியான இவர்களின் மணவாழ்க்கையில் வந்துதித்தவர்களில், ஒருவர்தான் துரியோதனன்.

அந்தத் துரியோதனன், பாண்டவர்களோடு போர் தொடுக்கப் போகிறார் என அறிஞ்சதும், தாய் காந்தாரி சொன்னாவாம், “மகனே, எனக்குப் பயமாக இருக்கிறது, அதனால நான் என் கண்களைத் திறந்து உன்னை ஒருதடவை பார்க்கப் போகிறேன், நீ நீராடிவிட்டு, ஆடையில்லாமல் பிறந்த மேனியுடன் வந்து என் முன்னால் நில்” என.

தாயின் கட்டளைக்குப் பணிந்து, துரியோதனன் குளத்தில் இறங்கி நீராடிவிட்டு, ஆடையில்லாமல் வெளியே வந்தாராம் தாயிடம் போக.. இதனை அறிஞ்ச கிருஸ்ணருக்குப் பயம் வந்துவிட்டது, அதாவது, தாய் துரியோதனைப் பார்த்திட்டால், தாயின் கண்களிலிருக்கும் பலம் வந்து, பின்னர் துரியோதனனை ஒருவராலும் கொல்ல முடியாமல் போய் விடும், எனவே இதைத் தடுக்க வேண்டும் என...

உடனே கிருஸ்ணன் குளக்கரைக்கு வந்து கேட்டாராம் “எங்கே போகிறாய் இந்தக் கோலத்தில்” என துரியோதனனிடம், அவர் சொன்னார் “அம்மாவைப்பார்க்கப் போகிறேன்” என, உடனே சொன்னாராம், இந்த வயதில போய் எப்படி ஆடை ஏதும் இல்லாமல் அம்மாவைப் பார்ப்பாய், அது அசிங்கமில்லையா? அப்படிப் போகாதே, இடையில் ஏதாவது உடுத்திக் கொண்டுபோ என..

துரியோதனனுக்கும் அப்போதான் கூச்சம் வந்து, அதுவும் சரிதான் என நினைச்சு, அருகில் இருந்த வாழை மரத்தின் இலையை அறுத்து, இடையிலே சுற்றிக் கொண்டு போனாராம்..

காந்தாரி, வந்துவிட்டாயா மகனே எனக் கேட்டபடி, திருமணமாகி இத்தனை வருடமாகத் திறக்காமல் இருந்த கண்களைத் திறந்து, பார்த்தாவாம், இடையில் வாழை இலை கட்டியிருக்கவே..  “தப்புப் பண்ணி விட்டாயே மகனே, எதற்கு இடையை மறைத்தாய்”.. எனக் கேட்டுப்போட்டு விட்டு விட்டா.

ஆனால் போரிலே, அந்த வாழை இலையால மறைக்கப் பட்ட தொடையிலேயே அம்பு பாய்ந்ததனாலதான் துரியோதனன் இறந்தார், இல்லை எனில் அவரைக் கொன்றிருக்கவே முடியாது.

இப்போ புரியுதோ, கண்ணை மூடித் திறக்கும் போது எவ்வளவு பவர் வெளியேறுகிறது என, அதனால இனிமேல் எல்லோரும் “துயிலெழும்போது” அதிரா சொன்னதை நினைவில வச்சு, உள்ளங் கைகளைப் பார்த்தபடி எழும்புங்கோ:)).. இப்பூடிச் செய்தால்.... எந்தக் கொரொனாவும் நம்மைத் தாக்காது:)) ஹா ஹா ஹா. 

எதுக்கும் குடையைப் பிடிச்சுக்கொண்டு நிற்பம்:)) 
எல்லாம் ஒரு சேஃப்டிக்காகத்தான்:)))

ஊசிக்குறிப்பு

ஊசி இணைப்பு

=======_()_=======

119 comments :

  1. கத்தாழை கண்ணால குத்தாதே நீ என்ன ?? என்னதிது இந்த பாட்டு காலைலேருந்து ஹம்மிங் னு நினைச்சேன் கண்ணான கண் போஸ்டா  :))கண் விழிச்சதும் காபி குடிக்கணும் :) அதுவும் பெட் காஃபி :))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.... ஒரு சொற்பொழிவாளர் நல்ல விசயம் சொன்னால், ஓகே இனிமேல் நான் அதைக் கடைப் பிடிக்கிறேன் எனச் சொல்லாமல் உப்பூடி அடம்பிடிப்பதனாலதான்.. கொரோனா இப்போ களம் குதிச்சிருக்கு நாட்டில:))

      Delete
    2. ஏஞ்சல் நலமா?
      எப்படி இருக்கிறீர்கள்?



      Delete
    3. thanks akkaa @கோமதி அக்கா நலமா இருக்கோம் .நீங்க அனைவரும் நலம்தானே 

      Delete
    4. நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம் ஏஞ்சல்

      Delete
    5. அதிராவும் நலம் கோமதி அக்கா:))

      Delete
  2. //பிஞ்சு சொற்பொழிவாளர் அதிரா:)//

    ஹை பிஞ்சு சொற் பிழிவாளர் :) இதுவும் நல்லாருக்கே :))

    ReplyDelete
    Replies
    1. அஞ்சுஊஊ😂😂😂😂

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்ல வேளை “பிஞ்ச”:).. எனச் சொல்லிடுவினமோ ஆரும் எனப் பயந்தேன்ன்:)) அந்த வெள்ளை வைரவர் என்னைக் காப்பாத்திப்போட்டார்ர்:))) ஹா ஹா ஹா..

      Delete
    3. ஹாஆஹாஆஆ :) நட்டநடு ராத்திரி தூக்கக்கலகத்தில் இருந்தேன் :)ஆனாலும் இப்போ தோணுது 
      பிஞ்ச சொற் எலி வாலர் :) பிஞ்சு சொற்பிழை வாளர் 

      Delete
  3. /அவர்கள் எவ்வளவுதான், எதுவுமே இல்லாததுபோல சிரிச்சுப் பேசினாலும், உள்மனதைக் கண் காட்டிக் கொடுத்திடும்.//
    கண்ணாடி போட்டிருந்தா எப்படி தெரியும் என்னை யாரும் பேய்க்காட்ட முடியாதது .அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு தான் சொல்வாங்க :)

    ReplyDelete
    Replies
    1. //என்னை யாரும் பேய்க்காட்ட முடியாதது//

      நான் இதை வெளியே ஜொள்ள வாணாம் என விட்டிருந்தேன்:)).. இப்போ ஆடு அரிவாளைக் குடுத்து.. என்னை வெட்டு வெட்டு எண்ட கதையாக இருக்கும்போது விடுவனோ:))..

      அஞ்சுவை நான் ஏப்ரல் ஃபூல் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))).. எங்கட டெய்சிக்கு ஒரு பேபி வந்திருக்குது வளர்க்கப்போறோம் என்றேன், உடனே மெயிலுக்கு மேல மெயில்.. படம் அனுப்பு படம் அனுப்பு என ஹா ஹா ஹா... ஏப்ரல் ஃபூல் என்றேனா:)) 24 மணி நேரமா ஆளுமில்ல மெயிலுமில்ல ஹா ஹா ஹா.. பூஸோ கொக்கோ:))..

      //கண்ணாடி போட்டிருந்தா எப்படி தெரியும்//

      ம்ஹூம்ம்.. ஒரு பூவைப் பிடுங்கி மூக்கில காட்டினா, ஓட்டமெட்டிக்கா கண்ணாடியைக் கழட்டப்போறீங்க:)) ஹா ஹா ஹா..

      Delete
  4. அந்த அறிஞர் அண்ணா ஊசிகுறிப்பு ரீசண்டா போட்டீங்க :)குட்நைட் சொல்ல மாட்டேன் :) பேய் வந்தாலும் பரவாயில்லை :) 

    ReplyDelete
    Replies
    1. அது அது அது வந்து அஞ்சு.. நீங்க இப்போ வல்லாரை ஊஸ் குடிப்பதில்லையா:))).. அதனால நியாஆஆஆஆஆஅபக ஜக்தி:)) இன்னும் இருக்கோ எனச் செக் பண்ணினேனாக்கும்:))...

      //பேய் வந்தாலும் பரவாயில்லை :) //
      அல்லோ இப்போ இத்தாலி முழுவதும், உங்கட ஏரியாவைத்தானாமே சுத்துகினம் என பிபிசில வந்துதே:))

      Delete
  5. முழிவியளம் = ராசி 

    ReplyDelete
    Replies
    1. [im] https://s-media-cache-ak0.pinimg.com/736x/93/1c/2a/931c2a54a17d293dc65e789dd7d1fb55--tom-and-jerry-jerry-oconnell.jpg[/im]

      Delete
  6. //கண் திறக்கும்போது, நம் உள்ளங்கைகளைப் பார்த்தால் நல்லது, அச்சக்தி மீண்டும் நமக்குள் இறங்கி, நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்...//
    ம்க்கும் தினமும் நாங்க  கண் முழிக்கிறது ஜெஸி முகத்தில்தான் :) சார் இப்போ நாளைக்கு என் கையை பார்ப்பேன் எனக்கு சக்தி இறங்காட்டி ஓடி ஓடோடி வந்து கட்டிபுடிப்பேன் உங்களை :)) 

    ReplyDelete
    Replies
    1. //ஓடி ஓடோடி வந்து கட்டிபுடிப்பேன் உங்களை :)) //

      சே சே எதுக்கு ஜண்டை:)) ஜமாதானமாகிப் போயிடலாம்:))

      [im] https://i.ytimg.com/vi/rVx1BJZq77M/hqdefault.jpg[/im]

      Delete
  7. // அதிரா மூணூஊஊ மாசத்துக்கொருக்கால் கே எஃப் சி போனாலே:))//உண்மையை தெளிவா சொல்லணும் மூணு மாசத்துக்கொருமுறை kfc ஆனா டெய்லி மெக்டானால்ட்ஸ் சரிதானே கணக்கு 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்:) உண்மையிலயே எனக்கு மக்டொனால்ட்ஸ் பிடிக்காது...

      Delete
  8. காந்தாரி துரியோதனன் கதை உங்கள் பாணியில் சொன்னது அருமை .ஆனா இந்த புராணங்களில் வரும் கேரக்டர்ஸுக்குத்தான் எத்த்னை வேதனைகள் .காந்தாரி பாவம் எதுக்கு நல்லா தெரியற கண்ணை   கட்டணும் ?  கணவருக்கு கண்ணா இருந்து வழிகாட்டடியிருக்கலாமே ?நிறைய male chauvinist  இருந்திருக்காங்க அக்காலத்தில் ஒருத்தர் கூட வேண்டாம்னு சொல்லலை பாருங்க      கண்ணை கட்டிக்கோன்னு விட்டுட்டாங்க .துரி ஒழுங்கா அம்மா சொல்பேச்சு கேட்டிருந்தார்னா மஹா பாரதம் வேற  திசை போயிருக்கும் ஆனா  இதுதான் நியதி இப்படித்தான் நடக்கும்னு இருந்தா  யாராலும் ஒன்னும் செய்யவே முடியாதது .ஆனாலும் புராணக்கதைகள் கொஞ்சம் வயலன்ஸ் அதிகம்தான் எங்க பழையஏற்பாடு பைபிள் மாதிரி .

    ReplyDelete
    Replies
    1. //ஆனா இந்த புராணங்களில் வரும் கேரக்டர்ஸுக்குத்தான் எத்த்னை வேதனைகள் //

      அது மட்டுமில்ல அஞ்சு, எத்தனை கர்க்ட்டர்கள், அதிலும் ஒருவருக்கு பல மனைவி, பல பிள்ளைகள், இதை எல்லாம் நினைவில வச்சு எழுதுவது மிக கஸ்டம்... உண்மையைச் சொன்னார், காந்தாரிக்குப் பதில் குந்தி என எழுதிட்டேன், பின்னர் டவுட் வந்து செக் பண்ணியதால் தப்பி விட்டேன்:))..

      //எதுக்கு நல்லா தெரியற கண்ணை கட்டணும் ?//

      அதைத்தான் நானும் நினைப்பேன் அஞ்சு, ஆனா அவ தானாக விரும்பியே கட்டினாவாம், அவர்கள் அரச பரம்பரை... என்பதால், அனைட்துக்கும் வேலை ஆட்கள் உண்டு என்பதாலும் அது ஓகே,.
      இல்லை எனில் அப்படிக் கண்ணைக் கட்டினால் இக்காலத்தில தேம்ஸ்ல தள்ளிப்போடுவினம், “கொழுப்புத்தானே எதுக்கு நல்லா இருக்கும் கண்ணைக் கட்டிப் போட்டு நம்மை வந்து தொல்லை பண்ணுகிறாய்” என ஹா ஹா ஹா..

      //அக்காலத்தில் ஒருத்தர் கூட வேண்டாம்னு சொல்லலை பாருங்க //
      அது கணவரோடு மனைவியும் உடன் கட்டை ஏறியே தீரோணும் எனச் சொன்ன காலமெல்லோ..

      //துரி ஒழுங்கா அம்மா சொல்பேச்சு கேட்டிருந்தார்னா மஹா பாரதம் வேற திசை போயிருக்கும்//
      உண்மைதான் ஆனா அதுக்காகத்தானே கிருஸ்ணனைப் படைச்சிருக்கினம் போலும்...

      //ஆனாலும் புராணக்கதைகள் கொஞ்சம் வயலன்ஸ் அதிகம்தான்//
      உண்மைதானே, அதைத்தான் நான் சொல்லுவேன், இக்க்காலத்திலதான் கொடுமை அதிகம் என்பினம், ஆனா இவை எல்லாம் இன்று வந்த விடயங்கள் அல்ல, நம் ஜீன்ஸ் இல் இருப்பவையே...

      Delete
  9. சரி இப்போ சொற்பிழிவாளர் நாளைக்கு வில்லுபாட்டுக்காரர் தானே பட்டப்பெயர் 

    ReplyDelete
    Replies
    1. //வில்லுபாட்டுக்காரர்//

      ஆவ்வ்வ் இதுவும் நல்லா இருக்கு.

      எங்கள் ஊர்களில்.. “சின்னமணி வில்லுப்பாட்டுக் குழு” இருந்தது, அவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி எனில்.. பக்கத்து ஊர்ச் சனமெல்லாம் வந்திடுவார்கள்.. அவ்ளோ கொமெடியாக, சூப்பராக இருக்கும்..

      Delete
  10. ////எல்லோரும் “துயிலெழும்போது” அதிரா சொன்னதை நினைவில வச்சு, உள்ளங் கைகளைப் பார்த்தபடி எழும்புங்கோ:)).. இப்பூடிச் செய்தால்.... எந்தக் கொரொனாவும் நம்மைத் தாக்காது:)) ஹா ஹா ஹா.//இதை பிபிசி குட்மார்னிங் ஷோவில் நாளைக்கு ஒளிபரப்ப சொல்றேன் 

    ReplyDelete
    Replies
    1. //இதை பிபிசி குட்மார்னிங் ஷோவில் நாளைக்கு ஒளிபரப்ப சொல்றேன் //டங்ஸ் அஞ்சு டாங்ஸ்.. அப்பூடியே என் ஃபீஸ் ஐயும் வாங்கித் தந்திடுங்கோ:)).. ஜோன்சன்ஸ் மாமாவால இப்போ வெளியே வரமுடியாதே எனும் தைரியம் தான் எனக்கு:))

      Delete
  11. அதிரா உங்களுக்கோர் ஐடியா தரேன் :) ஒரே கதையா எழுதுவதை விட ஒவ்வொரு கதாபாத்திரத்தைப்பற்றி விரிவா எழுதுங்களேன் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும் 

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சாச் சொல்ல மாட்டேனா அஞ்சு ஹா ஹா ஹா.. நிறைய எழுத வெளிக்கிட்டால் பிழை விட்டிடுவேனாக்கும்:)).. இப்பூடிக் கொஞ்சம் எனில் தப்பிடலாம்.. ஆனா இதுக்கும் கீசாக்கா அரிவாள் எடுத்திட்டா:)... அதை வல்லிம்மாவும் ஆமோதிச்சிட்டா:)).. ஹா ஹா ஹா ..

      மிக்க நன்றி அஞ்சு...

      Delete
  12. பாடல் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஸ்ரீராம் ஏன்ன்ன்ன்?..

      வாங்கோ வாங்கோ..

      Delete
  13. நல்லவேளை,  'இன்று யார் முகத்தில் முழித்தேனோ'  வீட்டில் வருவதில்லை!  அப்புறம் குடும்பத்தில் எப்போ பார்த்தாலும் சண்டை வந்து விடும்!

    ReplyDelete
    Replies
    1. அது ராசிப்பலன் படிதான் நடக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  14. உள்ளங்கையைப் பார்பபது போல சிலர் உடனே நேராகப்போய் தன்முகத்தை தானே கண்ணாடியில் பார்ப்பர்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தன்னைப் பார்த்துத்தானே பயந்து கத்திடுவர்:))

      Delete
    2. தன்னைப் பார்த்துத், தானே.. கொமாவை விட்ட்டுவிட்டேனாக்கும்:))

      Delete
  15. கொசுவைக் கொன்ற கணக்கெல்லாம் எடுத்தால் எனக்கு அந்த பேப்பர் போறாது.ஒவ்வொன்றாய்க் கொல்லவும் முடியாது.    கூட்டம் கூட்டமாகத்தான்.

    ReplyDelete
    Replies
    1. அந்த உயிர்கள்தானாமே இப்போ கொரொனாவா மாறியிருக்காம்:)).. கொசு எனில்தானே பயப்பிடாமல் அடிப்பீங்க:)).. இப்போ கொரொனாவைத் தொட்டுக் காட்டுங்கோ பார்ப்போம் ஹா ஹா ஹா..

      Delete
  16. துரியோதனன் தொடையில் அம்புபட்டு உயிரிழக்கவில்லை.  பீமன் அவன் தொடையைப் பிளந்து கொன்றான்.  அந்த மல்யுத்தமும் கூட தர்மபுராட்டத்துக்கு மாறாகவே நடந்தது என்று வியாசர் சொல்வார்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் ஸ்ரீராம், நீங்க சொன்னதும் நினைவு வந்திட்டுது.. நான் ரேடியோவில் கேட்பவற்றையே தொகுப்பாக்குவேன்.. இது பல நாளாக எழுத நினைச்சு இருந்தது.

      தொடையாலதான் இறந்தார் என்றது மட்டும் நினைவில் இருந்தது...

      Delete
  17. *துரியோதனன் தொடையில் அம்பு பட்டு உயிரிழக்கவில்லை.  பீமன் அவன் தொடையைப் பிளந்து கொன்றான்.  அதுவும் கிருஷ்ணன் கொடுத்த யோசனையில்...  அந்த மல்யுத்தமும் கூட தர்மப்போராட்டத்துக்கு மாறாகவே நடந்தது என்று வியாசர் சொல்வார்.  

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் வயசுல பெரியவங்க சில சமயம் ஞாபக சத்தி குறைவாக தவறாக ஏதாவது சொல்லாம் அதை பொதுவுல் சரி செய்ய கூடாது ஒகே வயசான மனசை நோக அடிக்க கூடாது

      Delete
    2. @ ஸ்ரீராம்//அதுவும் கிருஷ்ணன் கொடுத்த யோசனையில்... //

      ஓம்... கிருஸ்ணனாலதான் அங்கு பல பிரச்சனைகள் நடந்திருக்குது.

      Delete
    3. //
      Avargal UnmaigalFriday, April 03, 2020 6:14:00 pm
      ஸ்ரீராம் வயசுல பெரியவங்க சில சமயம் ஞாபக சத்தி குறைவாக தவறாக ஏதாவது சொல்லாம்///

      [im] https://i.ytimg.com/vi/oUvSMQ05mOY/hqdefault.jpg [/im]

      Delete
  18. குடை வைத்துக்கொள்வார்க்கு தானாகவே ஒரு சோஷியல் டிஸ்டன்ஸ் மற்றவர்களிடமிருந்து கிடைக்கிறது என்று இங்கு ஒரு வாட்ஸாப் மீம் வந்தது.   வெயிலுக்கும் ஆச்சு, மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரமும் ஆச்சு என்று சொல்லபப்ட்டிருந்த மீம் அது!

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியோ நான் பார்க்கவில்லை ஹா ஹா ஹா அதுவும் நல்ல ஐடியாத்தான்..

      Delete
  19. ஊசிக்குறிப்பு...  மீண்டும் புன்னகைத்தேன்!  ஊசி இணைப்பு...   நோ கமெண்ட்ஸ்!  குட்நைட் குழந்தை அழகு!

    ReplyDelete
    Replies
    1. //ஊசி இணைப்பு... நோ கமெண்ட்ஸ்! //

      ஓ அப்படியோ.. நான் அதைப் பார்த்ததும், அதுவும் சரிதானே என நினைச்சிட்டேன் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  20. ஐயோ ஐயோ. அதிரா மகாபாரதத்தையும் குழப்பிட்டா. குழம்பிட்டா. (திரிதராஷ்ட்ரன்).  
    கீசாக்கா வந்து பாடம் எடுக்கப் போறாங்கோ.

    சீனியர், ஜூனியர் நல்ல விளக்கம். 

    இங்கே DD யில் ராமாயணம் போட்டதால் அண்ணா சொன்ன இராவணன் பற்றிய விளக்கம் போட்டீங்களோ? ராவனன் இலங்கையானதால் சப்போர்ட்டா? 

    கண்களுக்கு சக்தி உண்டு சரி. அதற்கு இந்த மஹாபாரதக் கதை தான் எடுத்துக்காட்டோ?  "கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா? " போன்ற கதைகள் உள்ளனவே. புரியவில்லை என்றால் கூகிள் செய்து பாருங்கள். 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

      //Jayakumar ChandrasekaranFriday, April 03, 2020 3:02:00 am
      ஐயோ ஐயோ. அதிரா மகாபாரதத்தையும் குழப்பிட்டா. குழம்பிட்டா. (திரிதராஷ்ட்ரன்).
      கீசாக்கா வந்து பாடம் எடுக்கப் போறாங்கோ.//

      ஆஆஆ ஹையொ மெதுவாப் பேசுங்கோ:)).. ஆருக்கோ கொரொனா வந்திட்டுதோ எனப் பயந்திட்டேன் ஹா ஹா ஹா:))..

      கரீட்டு கீசாக்கா களம் குதிச்சிட்டா...:)

      //இங்கே DD யில் ராமாயணம் போட்டதால்//

      இல்ல எங்களிடம் தமிழ் சேவை எதுவும் இல்லை... இது எல்லாம் “பூஸ் ரேடியோ” செய்யும் மாயம்:))..

      //ராவனன் இலங்கையானதால் சப்போர்ட்டா? ///

      ஹா ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) சே..சே.. நான் அப்படியில்லை எனக்கு தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:)).. மற்றும்படி ஜாதி மத, நாடு,கலர் பேதமெல்லாம் பார்க்க மாட்டேன்ன். ஆனா ராவணனைப் பார்த்தால் நல்லவர்போல தெரிகிறார் சில படங்களில் ஹா ஹா ஹா:))

      Delete
    2. பல கதைகள் இருக்கும், அதில் மகாபாரதமும் ஒன்றெல்லோ..

      //"கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா? " போன்ற கதைகள் உள்ளனவே. புரியவில்லை என்றால் கூகிள் செய்து பாருங்கள். //

      இக் கதையை வச்சுத்தானே, நான் அப்பப்போ சொல்லுவேனே.. “பூஸோ கொக்கோ” என:)) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி ஜேகே ஐயா.

      Delete
  21. அடடே மகாபாரதக் கதையை கொரோனாவோடு இணைத்த உங்கள் திறமையை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      //உங்கள் திறமையை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.//
      இன்னும் கிடைக்கேல்லையோ கில்லர்ஜி:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  22. இந்த ஊசிக்குறிப்பைப் பார்த்தேன்.

    ஊர்ல உள்ள பெண்கள் பத்தினியாக இருக்க, ஆண்கள்தான் காரணம். ஏன் என்றால், ஆண்கள் மட்டுமே நல்லவர்கள் என்று நான் சொன்னால் அதைக் கேட்டுக்கொண்டு எல்லாப் பெண்களும் சும்மா இருந்தால், ஊசிக் குறிப்பை நான் ஒத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //ஊர்ல உள்ள பெண்கள் பத்தினியாக இருக்க, ஆண்கள்தான் காரணம்//
      ஹா ஹா ஹா எப்பூடித்தான் அடிச்சாலும் அடங்கவே மாட்டாராமே:)).. நீங்களும் மண்ணுண்ணிபோலத்தான் போலும் அது இராஜி:)) அப்பூடி:)) ஹா ஹா ஹா..

      //ஆண்கள் மட்டுமே நல்லவர்கள் என்று நான் சொன்னால்///

      அவர்கள் செய்யும் தவறை ஒத்துக் கொண்டாலே பெரிய விசயமாக இருக்குதே, எந்த மனச் சஞ்சலமும் இல்லாமல், நான் எந்த தப்பும் பண்ணவில்லை.. அந்தப் பெண் பத்தினி இல்லை, கரெக்டர் சரியில்லை என வாய் கூசாமல் சிலர் சொல்வதைப் பார்க்க, அப்படியே ஓடிப்போய் உதையோணும் போல கோபம் வரும் ஹா ஹா ஹா..

      அப்போ எல்லோருமே ராவணைத் திட்டுறீங்க... நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டிட்டேனோ நல்லவர் என :)).. அவரின் முகத்தைப் பார்த்து அப்பூடி நினைச்சது டப்பா நெ தமிழன்?:)) ஹா ஹா ஹா

      Delete
  23. வாழைமரம் துரியோதனன் - இதை முன்பு தூர்தர்ஷன் மஹாபாரதத்தில் பார்த்திருக்கிறேன். அப்போதான் இந்தக் கதையே தெரியும். அதில் வாழை இலைகளை அழகாகச் சுற்றிக்கொண்டிருப்பார். நீங்க சொல்லியிருப்பதுபோல ஒரு வாழை இலையை அறுத்து இடையில் சுற்றமுடியாது (நடுவில் வாழை இலைக் காம்பு சுருளாது..இலை உடைந்துவிடும் ஹா ஹா)

    ReplyDelete
    Replies
    1. //இதை முன்பு தூர்தர்ஷன் மஹாபாரதத்தில் பார்த்திருக்கிறேன். //

      ஹா ஹா ஹா பல வருசங்களுக்கு முன்பு போனதுதான், நான் அதில் ஒரு சீரியல்கூடப் பார்த்ததில்லை, எனக்கு ஏனோ அப்படிப் பார்க்கப் பிடிக்கவில்லை, எங்கட அப்பா அடிச்சுப் பிடிச்சு ரைம் செட் பண்ணி வந்திருந்து பார்ப்பார்ர்...

      //நீங்க சொல்லியிருப்பதுபோல ஒரு வாழை இலையை அறுத்து இடையில் சுற்றமுடியாது (நடுவில் வாழை இலைக் காம்பு சுருளாது..இலை உடைந்துவிடும் ஹா ஹா)//

      ஹா ஹா ஹா அது தூரதர்ஷன் ஆட்களிடம் வாழைத்தோட்டம் இருந்திருக்கும் அதனால அப்பூடிப் பல இலைகளைக் காட்டியிருப்பினம் போலும்:))..

      அக்காலத்தில், அவர்கள் அனைத்தையும் மந்திரத்தாலேயே மடிய வைப்பினமே:)))

      Delete
  24. ஆத்தாடி...! இவ்வளவு இருக்கா...?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி..

      இதுக்கே இவ்ளோ றியாக்ஸனோ.. ஏதோ கொரோனா வந்ததைப்போல ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  25. //நம் உடலிலுள்ள பல சக்திகளும் கண்ணூடாக வெளியேறுமாம், அச் சக்தியை ச்சும்மா வெளியேத்திடாமல்// - இது என்ன புதுக் கதையா இருக்கு. இது மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லையே....

    சரி சரி.. உங்களுக்கு ஒரு பயங்கரமான கேள்வி..... கூடு விட்டு ஆவி போகும்போது அது எப்படி வெளியேறுகிறது?

    ReplyDelete
    Replies
    1. ///இது என்ன புதுக் கதையா இருக்கு. இது மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லையே....//

      ஹா ஹா ஹா இதுக்காகத்தான் அதிரா பக்கம் வாங்கோ, வந்து ஒழுங்கா போஸ்ட் படிச்சுப் பொது அறிவை:)) வளர்த்துக் கொள்ளுங்கோ எனச் சொன்னால் ஆரு கேய்க்கிறா:)) ஹா ஹா ஹா..

      //சரி சரி.. உங்களுக்கு ஒரு பயங்கரமான கேள்வி..... கூடு விட்டு ஆவி போகும்போது அது எப்படி வெளியேறுகிறது?//

      ஹையோ ஆண்டவா.. இப்போ எதுக்கு அந்த ரெண்டெழுத்தைக் கூப்பிடுறீங்க:))).. இத்தாலி எல்லாம் இங்கின தான் சுற்றுலாச் செய்கினமாம்:)) என நடுங்கிக்கொண்டிருக்கிறேன் நான்:)) ஹா ஹா ஹா..

      இது பயங்கரத்தைவிடப் பயங்கரமா இருக்கே:))..
      நம் உடலிலுள்ள அத்தனை துவாரங்களினாலும் எனத்தான் அறிஞ்சேன்..

      மிக்க நன்றிகள் நெ தமிழன்.

      Delete
  26. அடடா என்னா ஒரு சொற்பொழிவு. நான் எத்தனையோ சொற்பொழிவு கேட்டிருக்கேன் ஆனா இப்படி ஒரு சொற்பொழிவு கேட்கவில்லை. பாரதத்தையும்,கொரோனாவையும் இணைத்து பேசியபேச்சு கண்டிப்பா வரலாற்றில் வரப்போகுது. ஆனாலும் உங்க திறமைக்கு பாராட்டுக்கள். வீட்டில இருந்து கண்டதையும் கலந்து சாப்பாடு செய்து சாப்பி(ட்டு)டுவது மாதிரி, நல்லா யோசிக்கிறீங்க. இன்சூரன்ஸ் எடுங்க எதுக்கும்...
    ஊசி இணைப்பு ஒன்னுமே சொல்லலை. நானும் குட்நைட் சொல்லமாட்டேன். எனக்கு பேய் எப்படி இருக்குமென பார்க்க ஆசை. அதனால் வரட்டும். ஊரில புளியமரத்தடியால போகாதே.அதால போகாதே என சொல்வார்கள். ஏன் என விளங்கேல்லை. ஏற்கனவே புளிய மரத்தடியில் வைரவர் சுவாமியை வைத்து கும்பிடுகிறார்கள். அப்ப எப்படி பேய் வரும் என கேட்டால் பதில் இல்லை. சும்மா இருஎன அடக்கிவிடுவினம். கர்ர்ர்ர்ர்ர்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      //அடடா என்னா ஒரு சொற்பொழிவு//
      ஆஆஆ டங்கூ டங்கூ:)) பின்ன அதிராவை விட்டால் வீடியோவிலயும் பேசுவேனாக்கும்:))..

      //நான் எத்தனையோ சொற்பொழிவு கேட்டிருக்கேன் ஆனா இப்படி ஒரு சொற்பொழிவு கேட்கவில்லை.///

      நெல்லைத்தமிழனின் தங்கச்சி போலவே பேசுறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. பின்ன அதிரா எப்பவும் டிப்ப்ப்பரெண்டாவே இருப்பேனாக்கும்:)) எலோரும் ஜொள்றதை.. மீ ஜொள்ள மாட்டேன்ன்:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்கக்கூடாது:)) பிறகு ....னாவை அனுப்பிடுவேன்:)) ஹா ஹா ஹா..

      //ஆனாலும் உங்க திறமைக்கு பாராட்டுக்கள்.//

      ஆஅ என்வலப் ஏதும் இல்லையோ அம்முலு?:))..

      //வீட்டில இருந்து கண்டதையும் கலந்து சாப்பாடு செய்து சாப்பி(ட்டு)டுவது மாதிரி, நல்லா யோசிக்கிறீங்க. இன்சூரன்ஸ் எடுங்க எதுக்கும்...///
      கண்டது கற்கப் பண்டிதை ஆகலாம்:)) ஹா ஹா ஹா.. அது எனக்க்காக அஞ்சு எடுத்திருக்கிறா இஞ்சூஊ... ரன்ஸ்:))

      Delete
    2. ///எனக்கு பேய் எப்படி இருக்குமென பார்க்க ஆசை. அதனால் வரட்டும்.//

      ஆவ்வ்வ்வ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... உலகம் போகிற போக்கைப் பார்ட்த்ஹால் உங்கட ஆசை நிறைவேறினாலும் ஆகலாம்:)).. மனிசர் பாதி ஆவி பாதி என்றாகிடுமோ எனப் பயம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ... மேல்மருவத்தூர் மாசாணி அம்மாள் தான் எல்லோரையும் காப்பாத்தோணும்...

      //ஏற்கனவே புளிய மரத்தடியில் வைரவர் சுவாமியை வைத்து கும்பிடுகிறார்கள். அப்ப எப்படி பேய் வரும் என கேட்டால் பதில் இல்லை//

      அது நைட் டியூட்டிக்கு வருவினம்:)) வைரவருக்கு ரயேட் எல்லோ.. அவர் நைட் ல நித்திரை கொள்ள வாணாம்ம்?:)) ஹா ஹா ஹா என்னைக் கேட்ட்டிருக்கலாமே அம்முலு.. நான் உங்கள் எல்லோரது டவுட்டையும் டக்க்கூஊஊஊஊஊ டக்கெனக் கிளியர் பண்ணி விடுவேனே:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.

      Delete
  27. இந்தக் கண் பவர் பற்றி நிறைய சொல்வதுண்டு அதிரா...

    கண்ணாலேயே மயக்கும் சக்தி உண்டு என்று அதாவது வசியம் செய்வதுகூட உண்டாமே...ஏழாம் அறிவு படத்தில் கூடக் காட்டியிருப்பாங்க.

    எல்லாவற்றிற்கும் நல்லது ஒரு புறம் கெட்டது ஒரு புறம் உண்டு..நாம் நல்லதைப் பார்ப்போம்...

    நீங்க சொல்லியிருக்காப்ல ஆமாம் எங்க க்டும்பத்தில் சிலர் அடிக்கடி சொல்வாங்க யார் கண்ணுல முழிச்சேனோ என்று மீ அதுக்கு எதிர்..அப்படி நாம் சொல்லக் கூடாது என்று.எனக்கும் பிடிக்காது.

    இன்னும் இப்படிச் சொல்வதுண்டு நரி முகத்தில் முழித்தால் என்றெல்லாம் சொல்லுவாங்க..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. இம்முறை உடனேயே வந்து 2 ..ண்ட் கிளாஸ் ல ஏறிட்டீங்கள்:))..

      //கண்ணாலேயே மயக்கும் சக்தி உண்டு//
      ஹா ஹா ஹா கண்ணைப் பார்த்தே காதலிச்சோர்ர்ர்... எங்கட மோகன் அங்கிள்- அமலாக்கா மூவி:))..

      //மீ அதுக்கு எதிர்..அப்படி நாம் சொல்லக் கூடாது என்று.எனக்கும் பிடிக்காது.//
      அதேதான் என் கொள்கையும் கீதா, ஊரில பூனைகளைக் கண்டால் புறப்பட மாட்டினம்.. ஆனா இங்கு நாங்கள் பெரும்பாலும் டெய்ஷியிலதான் முழிக்கிறோம்:)).. வெளியே போகும்போதும் அவவுக்கு... பாய் பாய் சொலுவோம்ம்..

      உண்மைதான் கீதா, சிலர் இப்பவும் சிலதைக் கடைப்பிடிப்போரும் உண்டு, அது அவரவர் நம்பிக்கை..

      நன்றி கீதா.

      மிகுதிக்குப் பதில்கள் நாளைக்குத் தருவேன், மன்னிச்சுக்கோன்ங்ங்ங்ங்ங்:))..

      Delete
  28. அப்புறம் கை பார்த்தலை சிலர் அதில் லச்சுமி இருக்க்கா அத்னால காலையில் எழுந்ததும் கை பார்த்தால் ஐஸ்வரியம் உண்டாகும் என்பார்கள். அதற்கு ஒரு ஸ்லோகமும் சொல்லுவாங்க..

    எனக்கென்னவோ இது போன்ற பழக்கங்கள் இல்லை. ஆனால் எழுந்ததும் ப்ரேயர் செய்வேன் படுக்கும் முன்னும் ப்ரேயர். படுத்தும் வாய் ப்ரேயர் ஸ்லோகம் எல்லாம் இல்லை...இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே அப்படியே உறங்கிவிடுவேன்.

    நீங்கள் சொல்லியிருக்கும் கை பார்க்கும் போது கண் பவர் பற்றியது புது தகவல் அதிரா....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///அப்புறம் கை பார்த்தலை சிலர் அதில் லச்சுமி இருக்க்கா அத்னால காலையில் எழுந்ததும் கை பார்த்தால் ஐஸ்வரியம் உண்டாகும் என்பார்கள்.//

      ஓம் கீதா, அது நான் நினைப்பது, நிறைய விசயங்கள், நம் மக்கள் சும்மா சொன்னால் செய்ய மாட்டார்கள் என, கடவுளைக் காட்டிச் செய்ய வைத்தார்கள்.

      //நீங்கள் சொல்லியிருக்கும் கை பார்க்கும் போது கண் பவர் பற்றியது புது தகவல் அதிரா....//
      ஓ உண்மையாவோ.. அப்போ அதிராவுக்குத்தான் பாரதக் கதை தெரியுமாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  29. எனக்கு ஒரு கேள்வி அதிரா....கையைப் பார்க்கும் போது அந்தச் சக்தி வெளியே சென்றிடாதோ?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா குட் கொஸ்ஸன்:)) இதைப் புதன் கிழமையில் கேட்டிருக்கலாம்:)).. கையை அப்படியே முகத்தை மூடிப் பார்க்கோணும் கீதா:))

      Delete
  30. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கண் விழித்ததும் என்ன செய்யோணும்?:)💁 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சிகரம் பாரதி மிக்க நன்றி.

      Delete
  31. துரியோதனன் கதை அறிந்த ஒன்று. அதில் பீமன் துரியோதனின் தொடையை கதையால் பிளந்து என்று வரும்.

    ஆனால் மகாபாரதப் போர் கிருஷ்ணர் பல யுக்திகள் சொல்லித்தான் பாண்டவர் படை வெல்லும். தருமத்திற்கான போர் என்று சொல்லப்பட்டாலும் எனக்கு இதில் நிறைய கேள்விகள் எழுவதுண்டு. கேட்டு குட்டிம் பெற்று இறை நம்பிக்கை இல்லாதவள் என்று பெயரும் பெற்று....இறை நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு இதுவரை விளங்கவே இல்லை!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //கேட்டு குட்டிம் பெற்று இறை நம்பிக்கை இல்லாதவள் என்று பெயரும் பெற்று....இறை நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு இதுவரை விளங்கவே இல்லை!!//

      ஹா ஹா ஹா அது கிருஸ்னனை, மற்றும் ராமரை எல்லாம் கோயில் கட்டிக் கும்பிடுவதால், இக்கதைகளையும் இறை நம்பிக்கையோடு ஒப்பிடுகின்றனரோ... ஆனா உண்மையில இப்போரில எவ்வளவு கொடுமை நடந்திருக்கு... மக்களின் உடல்களின் மீது நடந்து நடந்துதானாமே போர் நடந்தது... என்ன கொடுமை..

      Delete
  32. குடை பூஸார் செம க்யூட்..அது சரி குடை கொரொனா ப்ரொட்டெக்ஷன்?!!!! சோசியல் டிஸ்டன்சிங்க்!!! ஹா ஹா ஹா...அப்ப பேக் பேகும் சொல்லலாமோ?!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அது சரி குடை கொரொனா ப்ரொட்டெக்ஷன்?!!!//

      ஹா ஹா ஹா அது நான் தெரிஞ்சு போடவில்லை, போட்டபின் ஸ்ரீராம் மேலே சொன்னார் கொரோனாவுக்கு நல்லதென:))

      Delete
  33. ஊசிக் குறிப்பு வடிவேலு மீம்ஸ் ஹா ஹா ஏற்கனவே ரசித்திருக்கிறேன் இப்போதும்...

    குட்னைட் சொல்லும் பாப்பாவின் கைகளைப் பாருங்கள் என்ன அழகு இல்லையா...அது சரி நாங்க பேய்க்கு எல்லாம் பயப்படவே மாட்டோமே பேய்க்கே பேய்க்காட்டிடுவமாக்கும்!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நாங்க பேய்க்கு எல்லாம் பயப்படவே மாட்டோமே பேய்க்கே பேய்க்காட்டிடுவமாக்கும்!!!!!!!!//

      இருங்கோ இருங்கோ.. எல்லோரும் தைரியசாலிகளாகவே பேசுறீங்க.. பார்க்கலாம்:)) இன்னும் கொஞ்சக்காலம் போகட்டும்:))

      Delete
  34. ஓ இன்று சொற்பொழிவு என்பதால் பிஞ்சு சொற்பொழிவாளரா!!!!!

    கீதா

    ReplyDelete
  35. கண்பவருக்கு காந்தாரியின் இந்தக் கதையைச் சொல்லியிருக்கீங்களோ....இன்னும் கண் பவருக்கு நிறைய கதைகள் உண்டு அதிரா...

    நாம் யோக தியானப் பயிற்சியால் கண்களில் பவரைத் தேக்கி வைக்க முடியும்ந்தான்....

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது முக்கியமாகக் கண்களைச் சொன்னதுதானே கண்களில் தெரியும்!!! அடுத்து வாயில் அதாவது ஒரு சிரிப்பிலேயே....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பல கதைகளில் இதுவும் முக்கியமான ஒன்று கீதா... நம்மோடு சம்பந்தப்படுகுதெல்லோ.. காலையில கையைப் பார்ப்பது ஈசி, ஆனா ஒரு குருவியைக் கூட இப்போ நம்மால் எரிக்க முடியாது:)) அப்போ எப்பூடி கொக்கென நினைத்தாயோ.. கதையைச் சொல்லுறதாம் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் கீதா அனைத்துக்கும்.

      Delete
  36. // நான் முன்னர் சொன்ன கதையில வந்த மச்சக்கன்னிக்கும் அந்த அரசருக்கும் பிறந்த மகனில ஒருவர்தானே திருதராஸ்டிரன்,// ஹையோ, ஹையோ, ஹையோ, நச், நச், நச்! மச்சகன்னிக்கும் ராஜாவுக்கும் பிறந்தவர்களில் சித்ராங்கதனும், விசித்திர வீரியனும் என்று அல்லவோ படிச்சிருக்கேன். பின்னர் இருவரும் இறந்துவிட விசித்திர வீரியனின் மனைவியர் அம்பிகைக்கும், அம்பாலிகாவுக்கும் வியாசர் மூலம் திருதராஷ்டிரனும், பாண்டுவும் பிறப்பார்கள். இன்னொரு குழந்தை வேண்டும் என சத்யவதியாகிய மச்சகன்னி ஆசைப்பட மாமியாரின் வேண்டுகோளை நிறைவேற்ற இருவரும் சேர்ந்து பணிப்பெண்ணை அனுப்பி வைக்க அவளுக்குப் பிறந்த குழந்தையே விதுரர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      ஓ இவ்ளோ டீப்பாகப் போயோ திருதராஷ்டிரன் பிறந்தார்ர்.. நான் மச்சக்கன்னியின் டிரெக்ட் டெலிவரி:) எண்டு ரேடியோவில கேட்டதாக நினைவிருந்துதா[சுகிசிவம் அங்கிளின் ஸ்பீச் போட்டார்கள்] அப்பூடியே எழுதிவிட்டேன்:) ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா... மனதில போட்டு வைக்கிறேன் இந்த விளக்கத்தை..

      Delete
  37. சரி, சரி, இப்போ மிச்சம் மீதிப் பதிவையும் படிச்சுட்டு வரேன். ஆரம்பமே குழப்பம். இன்னும் என்னென்ன இருக்கோ! :))))

    ReplyDelete
    Replies
    1. சே..சே ஆரம்பம்தான் குழப்பம் பின்னர் நல்லா இருக்கும்..:)) ஆரம்பம் சொர்க்கமாக இருப்பின் பின்னர்தான் குழப்பமாகியிருக்கும் ஹா ஹா ஹா குழப்புறேனோ..

      Delete
  38. ஊசிக்குறிப்பு ஓகே, ஊசி இணைப்பு தப்போ தப்பு! ராவணன் சீதையைத் தினம் தினம் துன்புறுத்தினான் தன்னை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று. அவன் ஏன் சீதையைப் பலவந்தம் செய்யவில்லை என்றால் அது அவனுக்கு இருந்த சாபத்தினால் தான். தன் அண்ணன் குபேரனின் மகனின் (நளகுபேரன்) மனைவியானவளும் தனக்குப் பெண்ணிற்குச் சமானமானவளுமான ரம்பாவை பலவந்தம் செய்ததால் அவனுக்கு நளகுபேரனும் ரம்பாவும் இனி வரும் காலத்தில் அவனிடம் சேருவதற்கு விருப்பமில்லாத பெண்ணை அவன் வலுக்கட்டாயமாக அனுபவித்தால் அவன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என சாபம் கொடுக்கிறார்கள். இது வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. அதனால் தான் ராவணன் சீதையை நெருங்கவில்லை. மேலும் சீதை முன் பிறவியில் வேதவதியாக இருந்தபோதும் ராவணனுக்கு சாபம் கொடுத்திருப்பாள். அதுவும் ஒரு காரணம். மற்றபடி ராவணன் ஒன்றும் யோக்கியன் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. //மற்றபடி ராவணன் ஒன்றும் யோக்கியன் அல்ல.//

      ஆவ்வ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா எதுக்கு கீசாக்கா இவ்ளோ கோபம் ராவணனில:)).. இருப்பினும் நான் நினைப்பது, என்னதான் சாபம் இருந்தாலும், தன் மனதைக் கட்டுப்படுத்தித்தானே இருந்தார், சிலர் எனில், தலை வெடிச்சாலும் வெடிக்கட்ட்டும் என சீதையைத் துன்புறுத்தியிருக்கலாமெல்லோ...

      சரி சரி விடுங்கோ நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா.

      Delete
  39. பாட்டு கேட்ட நினைவே இல்லை.
    இப்போதுதான் முதல் முதலாக கேட்டேன்.


    //நாம் கன நேரம் கண்ணை மூடி நித்திரை கொண்டபின், கண்ணைத் திறக்கும்போது, நம் உடலிலுள்ள பல சக்திகளும் கண்ணூடாக வெளியேறுமாம், அச் சக்தியை ச்சும்மா வெளியேத்திடாமல் இருக்கவே, கண் திறக்கும்போது, நம் உள்ளங்கைகளைப் பார்த்தால் நல்லது, அச்சக்தி மீண்டும் நமக்குள் இறங்கி, நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்...//
    நீங்கள் சொல்வது சரி அதிரா.

    கண்களில் அற்புதமான சக்தி இருக்கிறது.

    நம் கைகளால் கண்களை சிறிது நேரம் பொத்திக் கொண்டு இருந்தால் உடல் முழுவதும் ஆற்றல் உண்டாகும் என்பார்கள்.

    உடற்பயிற்சியின் போது கண் பொத்துதல் பயிற்சி உண்டு.


    //எங்களில் எத்தனை பேருக்குத் தெரியும், நம் கண்ணுக்குள் இருக்கும் சக்தி?.., ஒருவரின் கண்ணை வைத்தே சொல்லிவிடலாம் பாதி சாஸ்திரம். கண்ணைப் பார்த்தால் தெரியும்//


    கண்ணை வைத்தே சொல்லிவிடலாம் தான்.


    // குஸ்புவின் அண்ணன், காலை எழுந்ததும், கண்ணைத் திறக்காமல், குஸ்பு றூமுக்கு வந்து, தங்கை முகத்திலேயே முழிப்பார்..//

    பியர்ஸ் சோப்புக்கு விளம்பரம் வருகிறதே ! (ம்மாவிடம் குழந்தை சொல்வது போல் லக்கியான முகம் என்று) தன் தோழிகளையும் அழைத்து வருவாள் லக்கியான தன் அம்மா முகத்தில் முழிக்க.


    அவர் அவர் கைகளை பார்த்துக் கொள்வது நல்லதுதான். கரத்தில் அதிர்ஷ்டம் (லட்சுமி) இருப்பதாக சொல்வார்கள். வீரம்,(சக்தி)

    கண்களின் ஆற்றலை பெருக்க அடிக்கடி கண் பொத்துதல் நல்லது.


    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      //பாட்டு கேட்ட நினைவே இல்லை.
      இப்போதுதான் முதல் முதலாக கேட்டேன்.//
      ஓ.. இதை நான் அடிக்கடி ரேடியோவில் கேட்பேன்,

      //உடற்பயிற்சியின் போது கண் பொத்துதல் பயிற்சி உண்டு.//

      ஓ...

      //பியர்ஸ் சோப்புக்கு விளம்பரம் வருகிறதே ! (ம்மாவிடம் குழந்தை சொல்வது போல் லக்கியான முகம் என்று) தன் தோழிகளையும் அழைத்து வருவாள் லக்கியான தன் அம்மா முகத்தில் முழிக்க.//

      ஓ அப்படியோ ஹா ஹா ஹா நான் பார்த்ததில்லை.

      //கண்களின் ஆற்றலை பெருக்க அடிக்கடி கண் பொத்துதல் நல்லது.//
      ஓம் நானும் அறிவேன் கோமதி அக்கா, கண்ணுக்கு நல்லது இப்படி இடையிடை செய்வது.

      Delete
  40. ஆனா இப்பூடி டெய்லி எத்தனை உயிர்கள் கொல்லப்படுது தெரியுமோ?:)).. இவை தான் இப்போ கொரொனாவாக மாறியிருக்குதூஊஊஊ:)).. ஹா ஹா ஹா இனிமேலும் அதிராட கே எஃப் சி பற்றி ஆரும் பேசுவினமோ:)).. உயிரில சின்னன் பெரிசெல்லாம் இல்லையாக்கும்:)//

    ஆமாம், செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்பூடித்தான்.. பூச்சியை அடிப்போரை, நுளம்படிப்போரை எல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கிருக்கிறேன் ..

      Delete
  41. மகாபாரத கதையை கொரானாவுடன் இணைத்து கதை சொன்னதற்கு குடையை பிடித்துக் கொண்டு இருக்க வேண்டியது தான். முன் ஜாக்கிரதை முத்தம்மா தான்.

    ஊசிக்குறிப்பு , ஊசி இணைப்பு எல்லாம் நல்லா இருக்கிறது.
    பட்டுக் கோட்டையார் பாடலை கேட்டு வளர்ந்த குழந்தை போல! பேய்க்கு பயபடாமல் இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ///முன் ஜாக்கிரதை முத்தம்மா தான்///
      ஹா ஹா ஹா...

      //பட்டுக் கோட்டையார் பாடலை கேட்டு வளர்ந்த குழந்தை போல! பேய்க்கு பயபடாமல் இருக்கே!///

      அதுக்கு பேய் வராது, ஏனையோருக்குத்தான் வரும் எனும் தைரியம் போலும் ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  42. ///அச் சக்தியை ச்சும்மா வெளியேத்திடாமல் இருக்கவே, கண் திறக்கும்போது, நம் உள்ளங்கைகளைப் பார்த்தால் நல்லது,//
    எச்சூஸ்மீ வில்லேஜ் விஞ்ஞானி அதிரா ..டெய்லி  கையில் போனை வைச்சி அதில் கண் விழிச்சா போன் சார்ஜ் ஆகுமா ???டவுட் 10001 

    ReplyDelete
    Replies
    1. 😂😂😂😂😂 👌👌👌அஞ்சு. சிரிச்சு முடியல.

      Delete
    2. [im]https://image.shutterstock.com/image-photo/cute-little-girls-giving-high-260nw-470911574.jpg[/im]


      @ அம்முலு :)))))))))))))))))))))))))))))

      Delete
    3. //எச்சூஸ்மீ வில்லேஜ் விஞ்ஞானி அதிரா .//

      ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்:)) ஸ்கொட்டிஸ் அஞ்ஞானி.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே..:) விஞ்ஞானி எனச் சொல்லோணுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      //டெய்லி கையில் போனை வைச்சி அதில் கண் விழிச்சா போன் சார்ஜ் ஆகுமா ???டவுட்///
      ஆகுமே:))ஆனா வேர்க் பண்ணாதாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. https://image.shutterstock.com/image-photo/cute-little-girls-giving-high-260nw-470911574.jpg

      //

      [im] https://assets.rbl.ms/843514/300x.jpg [/im]

      Delete
  43. பதிவில் இணைத்திருக்கும் பாடல் இது வரை கேட்டதில்லை. நன்றாக இருக்கிறது.

    விடிந்ததும் கைகளைத் தேய்த்து, உள்ளங்கைகளைப் பார்ப்பது நல்ல வழக்கம்.

    மஹாபாரதக் கதை - ம்ம்ம்ம்... எத்தனை எத்தனை கிளைக்கதைகள். இது உண்மையாகவே நடந்ததா என்பதை யார் அறிவார்.

    பதிவு நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      //பதிவில் இணைத்திருக்கும் பாடல் இது வரை கேட்டதில்லை. நன்றாக இருக்கிறது.//

      ஓ கோமதி அக்காவும் இதுவரை கேட்டதில்லை என்கிறா.. நல்லா இருக்கும், வீடியோவாக இல்லாமல் சும்மா கேட்க. நன்றி.

      //இது உண்மையாகவே நடந்ததா என்பதை யார் அறிவார்.//

      அதேதான், ஒவ்வொருவரும் பாரதக்கதை சொல்லும்போது, ஒவ்வொரு கிளைக் கதைகளைப் புகுத்திச் சொல்கின்றனராம் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  44. அன்பு அதிரா,
    பதிவுப் பாடல் அழகு. சொற்பொழிவிலதான் சில
    பிழைகள். எப்பவோ நடந்தது விட்டுடலாம்.
    ராவணன் அயோக்கியன் தான். இன்னோருத்தர் மனைவி
    மேல ஆசை வைத்ததே தவறு.
    மற்றதை கீதா சொல்லிவிட்டார்கள்.
    நானும் கைகளைப் பார்த்து ஸ்லோகம் சொல்லிவிட்டே
    எழுந்திருப்பேன்.

    குடைபிடிக்கும் பூசார் வெரி ஸ்வீட்.

    கலகலப்புக்கு மறு பெயர் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ..

      //சொற்பொழிவிலதான் சில
      பிழைகள். எப்பவோ நடந்தது விட்டுடலாம்.//

      ஹா ஹா ஹா நன்றி வல்லிம்மா...

      //நானும் கைகளைப் பார்த்து ஸ்லோகம் சொல்லிவிட்டே
      எழுந்திருப்பேன்.//
      ஓ... நல்லது வல்லிம்மா...

      //கலகலப்புக்கு மறு பெயர் அதிரா.//

      ஆஆஆஆஆஆஅ நன்றி வல்லிம்மா நன்றி.

      Delete
  45. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கண்களுக்கு எத்தனை சக்தி.. அத்தனையும் அறிந்து கொண்டேன். நல்ல விளக்கத்துடன் அருமையாக கோர்த்து சொல்லியிருக்கிறீர்கள்.

    சிலர் கண் விழித்ததும், உள்ளங்கைகளை பார்ப்பார்கள். கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொள்வார்கள். (பிறரை குற்றம் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படாது என்ற நியாயம் தெரிந்த உத்தமர்கள் அவர்கள். ஹா. ஹா.) சிலர் தன் வீட்டில் தனக்கு பிடித்தவர்களை வரச் சொல்லி சின்னத்தம்பி படம் மாதிரி.... ஆனால். மனைவி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்பவர்களும் உண்டு. நான் கண் திறந்தவுடன் இப்போதெல்லாம் மொபைலில் மணி பார்க்கிறேன். என்னைப் பொறுத்த மட்டில் நம் விதிப்படி அன்று என்ன நடக்கிறதோ அதுதானே நடக்கும் என நம்புவேன்.

    மகாபாரத கதை நல்ல உதாரணம். பீமனின் ஆயுதமாகிய கதாயுதத்திற்கு அந்த காந்தாரியின் கண்படாத இடமாகிய துரியோதனனின் தொடை பலியாகியது. இது கிருஷ்ணரின் ராஜதந்திரம். ஆனால் வருடக்கணக்காக கட்டியிருந்த கண்களின் சக்தி வஜ்ரமாக மாறியது வியப்புதான். அந்த கதையை இணைத்து நீங்கள் பதிவு எழுதியதை ரசித்தேன். இனி கொஞ்ச நாட்களுக்கு கண் விழித்ததும் உங்கள் நினைவுதான் வரும்.:)

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ...

      //கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொள்வார்கள். (பிறரை குற்றம் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படாது என்ற நியாயம் தெரிந்த உத்தமர்கள் அவர்கள். ஹா. ஹா.)//
      உண்மைதான், இதுவும் நல்ல விசயம் தானே, எது நடந்தாலும் நாமே பொறுப்பு எனும் மனநிலை வரும்.

      //என்னைப் பொறுத்த மட்டில் நம் விதிப்படி அன்று என்ன நடக்கிறதோ அதுதானே நடக்கும் என நம்புவேன்.//

      அதேதான், ஆனா இது கைகளைப் பார்ப்பதால், நம் உடலில் சக்தி அதிகரிக்குமாம்.. உற்சாகம் கிடைக்குமாம்...

      //இனி கொஞ்ச நாட்களுக்கு கண் விழித்ததும் உங்கள் நினைவுதான் வரும்.:)
      //

      ஹா ஹா ஹா ஹையோ ஆவ்வ்வ்வ் என்னை நினைக்கும் நாட்கள் எல்லாம் கமலாக்காவுக்கு நல்ல நாளாகவே அமைச்சிடுங்கோ செல்லக்கதிர்காமத்து வைரவரே....ஹா ஹா ஹா..

      Delete
  46. எங்க வூட்டு அம்மா கண்ணிற்கு மட்டுமல்ல கைகளுக்கும் அதீத சக்தி உண்டாக்கும்.. என் மனைவி தன் கண்ணால் என்னை நோக்கி உடனே தரையை நோக்கினால் கிழே உட்கார் என்று அர்த்தம் அந்த சக்தியை உடனடியாக புரிந்து செயல்படவில்லையென்றால் அதன் பின் அவரின் கை பவர் வெளிப்பட்டுவிடும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மதுரை தமிழன் சகோதரரே

      இப்போது நலமாகி விட்டீர்களா? உங்கள் வீட்டில் அனைவரும் நலமே வாழ பிரார்த்திக்கிறேன். பழைய நகைச்சுவை பாணிக்கு திரும்பி வந்ததற்கு வாழ்த்துக்கள்.

      தங்கள் வீட்டு கண் பவர் மட்டுமல்லாது கை பவரையும் சேர்ந்து நகைச்சுவையாக்கியதை ரசித்தேன்.:)) இதுதான் கண்ஜாடை என்பதோ? "கண்ணாலே பேசி, பேசி கொல்லாதே..!" என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete

    2. நலம்தானம்ம்மா......... உங்களது பதில் கருத்தைரசித்து சிரித்து மகிழ்ந்தேன்

      Delete
    3. vஆங்கோ ட்றுத் வாங்கோ.. நலமாக இருக்கிறீங்கள் என்பது தெரியுது, மகிழ்ச்சி..

      //Avargal UnmaigalFriday, April 03, 2020 6:20:00 pm
      எங்க வூட்டு அம்மா கண்ணிற்கு மட்டுமல்ல கைகளுக்கும் அதீத சக்தி உண்டாக்கும்.//

      ஹா ஹா ஹா இல்லையே.. இப்போ கொஞ்ச நாளாக பூரிக்கட்டை சமாச்சாரம் எதுவும் நடந்ததாக, நீங்கள் கொம்பிளைன் பண்ணல்லியே:))..

      //மனைவி தன் கண்ணால் என்னை நோக்கி உடனே தரையை நோக்கினால் கிழே உட்கார் என்று அர்த்தம்///

      ஹா ஹா ஹா இது பல வீடுகளில் நடப்பதுதான், ஆட்களோடு இருக்கும்போது, கண்ணாலதான் மிரட்டி வேலை வாங்க முடியும் ஹா ஹா ஹா..

      //அந்த சக்தியை உடனடியாக புரிந்து செயல்படவில்லையென்றால் அதன் பின் அவரின் கை பவர் வெளிப்பட்டுவிடும்///

      ஹா ஹா ஹா எதுக்கும் மேசைக்குக் கீழயே இருங்கோ ட்றுத்:)).. இன்னும் எத்தனை மாசமாகுமோ.. வெளியே செல்ல:))..

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  47. வணக்கம் சகோதரி

    அந்த இறந்த கொசு எண்ணிக்கை வியப்பாக உள்ளது. இவ்வளவு கொசுக்களா நாம் கொல்லுகிறோம். அது காந்தாரியின் கண் பார்வை படாத இடமானதால் தப்பிக்க வாய்ப்பில்லாமல் அதுவும் மரணத்தை தழுவி விட்டது போலும்.:) வைரஸை பரப்பும் கொசுக்களை தினமும் கொன்று குவிப்பதில், அதன் நண்பனான இந்த கொடும் வைரஸ் நம்மை பழி வாங்குகிறதா? நல்ல கற்பனை. ரசித்தேன்.

    குடை கொண்டு பாதுகாப்பாக இருக்கும் பூசார் மிகவும் அழகு.

    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை. ஆனால், ஊசி இணைப்பு எனக்கு கொஞ்சம் நெருடுகிறது.

    என் பதிவுக்கு வந்து கருத்துரைத்த உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி. நானும் இன்னமும் உடன் பதில் கருத்து இட இயலவில்லை என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு அனைவரும் கூடுமிடம் (கொரோனாவிற்கு இது மட்டும் காது கேட்டு விடக்கூடாது கடவுளே... ஹா.ஹா.ஹா.) என்பதால் இங்கு வருகிறவர்கள் தெரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    என் குழந்தைகள் வீட்டிலிருந்து ஆபீஸ் வேலைகள் பார்ப்பதால் அவர்கள் குழந்தைகளை எப்போதும் பார்த்து கொள்வதிலேயே நேரம் பறக்கிறது. அதிகம் உபயோகிப்பதால் நெட்டும் ஸ்லோவாக வருகிறது. எனவே குட்நைட் நானும் சொல்லிக்கிறேன். நாளை காலையில் அனைவரையும் சந்திக்கிறேன். பகிர்வு அத்தனைக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //இவ்வளவு கொசுக்களா நாம் கொல்லுகிறோம்.//
      ஹா ஹா ஹா இனிமேல் எண்ணிப்பாருங்கோ:)).. அதன் பின்னர் சூ சூ எனக் கலைச்சு விடுவீங்கள் கொல்லாமல்:))...

      //ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை. ஆனால், ஊசி இணைப்பு எனக்கு கொஞ்சம் நெருடுகிறது.//

      ஹா ஹா ஹா... ஆனா இக்காலத்து பல நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அக்காலத்தில கொஞ்சம் பெட்டராக இருந்தார்களோ எனவும் எண்ண தோணுது, கடசி கடவுளுக்காவது பயப்பிட்டார்கள் அந்நாளில்.. இப்போ அதுவும் இல்லையே...

      //இங்கு அனைவரும் கூடுமிடம்//
      ஹா ஹா ஹா அதனாலதான் அதிரா கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறேன்:)) எல்லோரும் மாஸ்க் கட்ட்டிக்கொண்டே இங்கு வரோணும் என:))..

      //அவர்கள் குழந்தைகளை எப்போதும் பார்த்து கொள்வதிலேயே நேரம் பறக்கிறது. ///
      உண்மைதான், இப்போ எல்லோரும் வீட்டில் நிற்பதால்.. எல்லா வீடுகளிலும் எப்போ விடியுது எப்போ இருளுது எனத் தெரியாமல் திண்டாடுகின்றனர்...:)

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  48. ஊசிக்குறிப்பு (ஜூனியர்/சீனியர்) ஜோக் நல்லா இருக்கு. :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...

      ஆஆஆஆஆஆஆ கோபு அண்ணன் வெளிக்கிட்டு வந்திட்டார்ர்.. கொரொனாப் பயத்தில எங்கும் வரமாட்டீங்களோ என நினைச்சேன் ஹா ஹா ஹா..

      வடை வாங்கப்போறேன், குண்டா சுவீட் வாங்கப் போறேன் என எங்கும் வெளிக்கிட்டுத் திரியாமல், நல்லபிள்ளையாக வீட்டுக்குள் இருங்கோ கோபு அண்ணன்.. மிக்க நன்றி.

      Delete
  49. ஆஆஆ இன்று காலையிலேயே பதில் எல்லாம் குடுத்து முடிச்சிடுவோம் என நினைச்சேன், ஆனா ஈவினிங்கூட வர முடியாமல் பிஸியாகிட்டேன்.. அதனால எல்லோரும் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்ங்... எப்படியும் நாளைக்குள் முடிச்சிடுவேன்:)))

    ReplyDelete
  50. ஆஹா! எனக்கு போட்டியா கதை சொல்ல இன்னொருத்தர் வந்துட்டாங்க. கண்ணில் இவ்ளோ விஷயம் இருக்கா? வடிவேலு ஜோக் சூப்பர். குடை பிடிது நிற்கும் பூசார் அழகோ அழகு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானு அக்கா வாங்கோ..

      நன்றி.

      Delete
  51. அதிரா ஏஞ்சல் பின்னூட்டடத்தை படிப்பாரா என்று தெரியாது, எனவே நான் எழுதியிருப்பதை அவரிடம் சொல்லுங்கள். காந்தாரி கண்களை கட்டிக் கொண்டாள் என்பதை அப்படியே லிடரலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தன் கணவனால் கண்களால் எதையும் அனுபவிக்க முடியாது என்பதால் தானும் அந்த அனுபவங்களை துறந்தாள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி காசு சேர்த்தார் என்பதை எப்படி புரிந்து கொள்கிறோம்?

    ReplyDelete
    Replies
    1. ஆஆவ் !!!  பிஞ்சு சொற்பொழிவாளர் மயில் தூதுவிட்டார் உங்க பின்னூட்டம்  பற்றி :)படிச்சேன்க்கா ..அது புரியுது கணவர் பார்க்க முடியாததை தானும் அனுபவிக்க துறந்தது ..ஆனா மனசு 90 களில் வந்த மகளிர்  மட்டும் ரேவதி மாதிரி ஜம்புவதை தவிர்க்க முடில :) 

      Delete
    2. //தன் கணவனால் கண்களால் எதையும் அனுபவிக்க முடியாது என்பதால் தானும் அந்த அனுபவங்களை துறந்தாள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.//

      இதுக்காகத்தான் நான் இப்போ டக்குப் பக்கென கண்ணகி கோவலனை கூடையில சுமந்து போய் மாதவி வீஇட்டில இறக்கிய கதையை எழுதோணும்:)).. சே..சே... அதிரா இல்லை எனில்.. அதிராவின் சொற்பொழிவு இல்லை எனில்:)) நம் மக்களுக்குப் பாதிச் சரித்திரம் தெரியாமலே போய்விடும்போல இருக்கே .. ஹா ஹா ஹா ஹையோ... ஆரும் கிட்ட வந்து அடிக்கப்பிடாது:)) 4 அடி தள்ளியே நிக்கோணும் எனும் தைரியத்தில எழுதுகிறேன் ஹா ஹா ஹா:))

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.