இது ஒரு வேதனைக்குரிய உண்மைச் சம்பவம்.. கதை கேட்டதும் என்னமோ போலாகிட்டேன், என்ன செய்வது வாழ்க்கை மிகக் குறுகியது, ஒவ்வொருவரின் தலை எழுத்து ஒவ்வொரு விதமானது, இதில் பூஸ், பப்பி கூட விதி விலக்கல்ல.
எங்கள் அண்ணன் குடும்பம் ரோட்டில் போய்க் கொண்டிருந்தார்களாம், கனடா ரோட்டுக்கள் பற்றி நான் ஏற்கனவே “அதிரா தியேட்டர் - கனடா” எனும் லேபலில் நிறைய சொல்லிட்டேன்... பெரிய பெரிய ரோட்டுக்கள் அதுவும்.. பெரும்பாலும் எங்கேயும் குறைந்தது 4 இருக்கும். அப்போ இவர்கள் போய்க் கொண்டிருந்தபோது, ஒரு குட்...ட்ட்டிப் பூஸ் ரோட்டைக் கடக்கிறதாம்..
அவ்ளோ வாகனத்துள் அந்தப் பெரிய ரோட்டை, ஒரு பெரிய எலியளவு சைஸில், ஒரு பூஸ் குட்டி கடக்கிறதாம், இதைப் பார்த்ததும், உடனே நடு ரோட்டிலேயே காரை நிறுத்திப்போட்டு, அண்ணன் இறங்கி ஓடிப்போய், ட்ரபிக் போலீஸ் போல ஏனைய கார்களுக்கு சைகை காட்டி நிறுத்தச் சொல்லி, அவசரமாக அப் பூஸ் குட்டியை பிடிச்சுக் கொண்டு பக்கத்திலே ஒரு இரும்பு வேலியாம் உள்ளே ஒரு பில்டிங்,
அப்போ இவர் உள்ளே போய் அந்த பில்டிங் கோனரில் விட்டு விட்டு ஓடி வந்து காரை எடுத்திட்டார். டென்சன்தானே... நடு ரோட்டில் கார் நிற்கும்போது அவரால் எதையும் யோசிக்க முடியவில்லை, அப் பூஸ் குட்டியை காப்பாற்றினால் போதும் என மட்டும்தான் எண்ண முடிஞ்சிருக்கு.
அப்போ மீண்டும் காரை எடுத்துக் கொண்டு போகப்போக, காருக்குள்ளிருந்து அண்ணியும் பிள்ளைகளும் சத்தம் போடத் தொடங்கிட்டினமாம், எதுக்கு அங்கு கொண்டு போய் விட்டீங்க அதை, வீட்டுக்கு எடுத்துப் போயிருக்கலாம், அல்லது ஒரு பெட்ஷொப் ல குடுத்திருக்கலாம் எனப் பெரிய அட்டகாசமாம்.
அப்போதான் அண்ணனுக்கும் மனதில் தட்டியதாம், சரி எடுத்துப் போய் பெட்ஷொப்ல குடுக்கலாமே என, [இவ்ளவுக்கும் நிறையத் தூரம் ஓடியிருப்பார்கள்தானே] உடனே காரை திருப்பிக் கொண்டு அவ்விடத்துக்கு வந்திருக்கிறார்கள்...
அங்கு கண்ட காட்சி, அந்தப் பூஸ்குட்டி திரும்ப வெளிக்கிட்டு அதே ரோட்டை திரும்பவும் குரொஸ் பண்ணிய இடத்தில், வேறு ஏதோ வாகனம் அடித்துப் போட்டுப் போயிருக்கு.. இவர்களுக்கு மனமே கலங்கிப் போச்சாம்... விதி வலியது:(.
ஊசிக்குறிப்பு:)
இணுவில் மாம்பழத்தை..
கோண்டாவில் கொய்யாவை...
கொக்குவில் அணில் பார்த்துக்...
கொட்டாவி விட்ட கதை...
இனி இருக்கவே இருக்காதூஊஊ.... [ மேலே பாடல் கேளுங்கோ]
என்ன தலை சுத்துதோ என் பாட்டுக் கேட்டு?:).. கிட்டத்தட்டப் 15 வருசமா எங்கள் இந்த ஊரில ஒரு தமிழ்க் கடை இல்லையே என நான் ஏங்காத ஏக்கம் இல்லை:), அழாத நாளில்லை:).. ஒவ்வொருவரும் தமிழ்க்கடையில் அது வாங்கினேன் இது வாங்கினேன் எனக் கேட்டுக் கேட்டுக் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காலம் 2016 உடன் மலையேறிப்போச்ச்ச்:)) எங்களுக்கும் இலங்கைத் தமிழ்க் கடை வந்திட்டுதூஊஊஊஊஊஉ... அங்கு இல்லாத சாமான் இல்லை.. மண் சட்டியில் இருந்து அனைத்து இலைவகைகள், நெக்டோ சோடா, விழா/ளாம்பழம்:), றம்புட்டான் அனைத்துமே உண்டு.. இனி பனங்கிழங்கும் வருமென எதிர்பார்க்கிறேன்ன்.. சந்தோசம் பொயிங்குதே:).
===========================================================================
இனிமேல் ஈமெயிலில் பெற விரும்புவோர் மெயில் ஐடியை போட்டு வையுங்கோ பிளீஸ்.. இணைப்பு குடுத்திருக்கிறேன் வலது பக்கத்தில்...
இனிமேல் ஈமெயிலில் பெற விரும்புவோர் மெயில் ஐடியை போட்டு வையுங்கோ பிளீஸ்.. இணைப்பு குடுத்திருக்கிறேன் வலது பக்கத்தில்...
===========================================================================
|
|
Tweet |
|
|||
















