வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ... என்ன இது ஆதவன் எண்டால்ல்.. சூரியன்:) அப்போ சூரியன் பார்ப்பது என்ன.. புளொக்கில் போடுமளவுக்கு பெரிய விஷயமோ என்றுதானே ஓசிக்கிறீங்க?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுதான் இல்ல:) இது வேற “ஆதவன்”...:) இது அதிராவின் “கன்னிப் பதிவாக்கும்” :)..
அதாவது “மணியம் கஃபே ஓனர்”, மாத்தி ஓசிப்பவர்.. மணி, எப்பவோ ஒருநாள், சினிமா விமர்சனம் ஒன்று எழுதுங்கோ என அன்போடு கேட்டுக் கொண்டார், மைண்டில போட்டு வச்சேன்ன்... இன்று திடீரென ஒரு உஷார் வந்திச்சா.. அதுதான் மளமளவென எழுதுறேன்ன்.
சரி இது என் கன்னி.. சினிமா விமர்சனமென்பதால், தவறுகள் தப்புக்கள் ஏற்படலாம்ம்.. பொறுத்துக்கொண்டு படிங்கச் சொல்லி, மேன்மை மிகு பிரித்தானிய ஹைகோர்ட் ஜஜ்:) ஆணையிடுகிறார்:).
இது புதுப் படம் அல்ல, ஆனாலும் அலுக்காமல் பார்க்கக் கூடிய படம். சூரியாவும் நயந்தாராவும் மெயினாக இருக்கிறார்கள். வடிவேல் அங்கிள் ஆரம்பம் முதல் முடிவுவரை தூள் கிளப்புகிறார். அவரின் நகைச்சுவைக்காகவே இடையில் நிறுத்த மனமில்லாமல் படம் பார்க்க தோன்றியது.
சூரியாவின் பெயர்தான் ஆதவன். சூரியா ஒரு கோஸ்டியில் சேர்ந்து, அவர்கள் கூறும் வேலைகளை.. அதாவது தடயம் ஏதுமில்லாமல் ஆட்களை முடிப்பது, மிகச் கச்சிதமாக நடத்திக் கொடுக்கிறார். அப்போ அவருக்கு ஒரு ஓடர் கொடுக்கப்படுகிறது, மிகவும் பிரபல்யமான ஜஜ் ஒருவரை முடிக்கச் சொல்லி.
அப்போ அந்த ஜஜ் வீட்டுக்குள் எப்படியும் உள்ளே போனால்தான் இது சாத்தியம் என நினைக்கிறார். அந்த ஜஜ் வீட்டில் சமையல்காரராக வடிவேல் இருக்கிறார். ஜஜ் வீடு பெரிய கூட்டுக் குடும்பமாக இருப்பதனால் தன்னால் தனிய சமைக்க முடியாது தன் மருமகனை அழைத்து வருகிறேன் என புறப்படுகிறார் வடிவேல். மருமகன் கல்கத்தாவில் “அவுரா Bridge” அருகே நிற்பதாக சொல்கிறார். அழகான ஒரு bridge அது. அங்கு வடிவேல் “புறம்போக்கு” என்பதற்கு ஆங்கிலத்தில் அழகான விளக்கம் கூறூவார் நேரில் பார்த்து ரசியுங்கோ:). வடிவேலின் மருமகனை இந்த சூரியா கோஸ்டி கடத்தி விடுகிறது, கடத்திப் போட்டு வடிவேலிடம் சொல்கிறார்கள், சூரியாவை மருமகனாக அந்த வீட்டுக்குக் கூட்டிப் போகும்படி. தவிர்க்கமுடியாமல் வடிவேல் சூரியாவை தன் மருமகன் எனக்கூறி ஜஜ் வீட்டுக்குள் கூட்டிப் போய் விடுகிறார்.
===========================INTERVAL===============================
நான் ஆரியா - நயந்தாரா நடித்து வெள்ளிக்கிழமை வெளிவந்த “ராஜா ராணி” படம் பார்த்து விட்டேன்ன்.. சூப்பர்ர்.. பார்க்க விரும்புவோர் பாருங்கோ...
சூரியா... காய்கறிகள், மீன் எனக் கொண்டு போகிறார் ஜஜ் வீட்டுக்கு, இரவு, ஒவ்வொரு மரக்கறிகளையும் உடைப்பார், உள்ளே ஒளித்து வைத்திருந்த புளட்டுகள், துவக்கு எல்லாம் வெளியே வரும் அதனை வடிவேல் பார்த்து, வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் படும் அவஸ்தை ரசிக்கக் கூடியதாக இருக்கு.| அடடா 4D ல பார்க்கிறபோது, என்னா ஒரு அழகாக இருக்கிறா நயந்தாரா:) =======================இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:) ========================= |
அங்கு ஜஜ்ஜின் மருமகளாக நயந்தாரா இருக்கிறார். ஒவ்வொரு தடவையும் ஜஜ்சைக் கொல்ல வெளிக்கிட்டு, அது தோல்வியில் முடிகிறது... முடிவில் ஜஜ்ஜைக் கொல்கிறாரா...? ஜஜ் ஆர்? சூரியா ஆரு என்பதை நேரில் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கோ...
எப்பூடி என் விமர்சனம்? சோட் அன்ட் சுவீட்டாக இருக்கோ? . இதுவரை பார்த்திராதவர்கள் பாருங்கோ.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊசி இணைப்பு:
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
“நம் சுயமதிப்பை இழந்துதான், ஒருவரின் அன்பையோ ஆதரவையோ பெறமுடியுமென்றால், அதைவிட நாம் அநாதையாக இருப்பதே மேல்” ..
இவ் ரோஷமுள்ள:) அரிய தத்துவத்தை, உங்களுக்காக, மிகவும் பயபக்தியுடன் சுட்டு வந்தவர்..
உங்கள் பேரன்புக்குரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|
|
Tweet |
|
|||












































