ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யோகாச் செய்யும்போது ஆரும் டிசுரேப்பு பண்ணக்குடா:))
|
Tweet |
|
|||
இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யோகாச் செய்யும்போது ஆரும் டிசுரேப்பு பண்ணக்குடா:))
|
Tweet |
|
|||
பாதி ஞானி, ஆகிவிட்ட அதிரா👧
சரி சரி இப்போ எதுக்குப் பாதி ஞானி எனச் சொல்றேன் எண்டுதானே ஓசிக்கிறீங்க:)), அதுவந்து பாருங்கோ, கங்காதேவியில போய் முக்கோ முக்கென முக்கி எழும்பி வந்தேனாக்கும்:)..
|
Tweet |
|
|||
ராமர் எப்படி இறந்தார்?:)
எனக்கொரு டவுட்டூஊஊஊஉ என்னதான் கம்பராமாயணம் படிச்சு, கரைச்சுக் குடிச்சாலும் (என்னைச் சொன்னேன்:)), ராமர் கடசியில எப்படி இறந்தார் என டவுட்டாகவே இருக்கெனக்கு:)..
|
Tweet |
|
|||
அப்படி எதுவும் நடக்காது!! நடக்கவும் கூடாது!!!
பலபேர் என்னை மறக்கும் நிலையில இருப்பீங்களெனத் தெரிஞ்சுதான், மறப்பதற்குள் ஓடி வந்திட்டேன்..
மறக்க முடியாதே.. மறக்கும் உருவமில்லை அதிரா:)).. ஹா ஹா ஹா என்னென்னமோ எல்லாம் எழுதத்தோணுது அஅஅடக்கிடுறேன்.
இந்தமுறை பேர்த்டேக்கு லப்டொப் கிடைச்சுதா, அதில இனி புளொக் எழுத ஆரம்பிக்கோணும் என, இவ்ளோ காலமா, தமிழ் பொண்ட் டவுன்லோட் பண்ண நேரம் போதாமலும், பலதை மறந்த காரணத்தாலும் நாட்கள் நகர்ந்து விட்டது.
என்னையும் அஞ்சுவையும் தேடி, கூப்பிட்டு அலுத்துப் போய்க் கை விட்டிருப்பீங்கள், கோமதி அக்கா சமீபத்தில தேடி மெயில் போட்டா, அப்பவே வந்திடலாம் என அஞ்சுவை முன்னால போங்கோ மீ பின்னால வாறேன் எனச் சொன்னேன், அஞ்சுவும் சொன்ன பேச்சுக்கு ஓடினா, ஆனா என்னிடம் தமிழ் பொண்ட் செட் பண்ணாததால், எனக்கு கொப்பி பேஸ்ட் எல்லாம் பிடிக்காத காரணத்தாலும்.. அத்துடன், வந்தால் கொஞ்சம் பேசோணும் எல்லோருடனும் எனும் காரணமாகவும், எல்லாம் செட் பண்ணி வரக் கொஞ்சம் லேட்டாயிடுத்து:) அது டப்பா கீசாக்கா?.
பொதுவா, கொமெண்ட் இல் தேடுவோருக்குப் பதிலாவது போட்டிடுவேன், விட்டு விட்டு இரு தடவைகள் கில்லர்ஜி தேடினார், பதில் போட முடியாமல் போயிட்டுது, மன்னிச்சுக்கோங்கோ கில்லர்ஜி.
இதுக்கு மேல நான் என்ன பேசுறது எனத் தெரியேல்லை, இது வெள்ளோட்டம்தானே அதனால அப்படி இப்படித்தான் இருக்கும்.. இனிமேல்தான் ஒழுங்கா எல்லாம் செட் பண்ணோணும்.
|
Tweet |
|
|||
“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏
மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை.. அது என்னமோ கொஞ்சக்காலமாக ஒரு வெறுப்பு, புளொக்கே வேண்டாம் என ஒரு எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, வேலையும் முழுநேரமானதும், எதுவும் வேண்டாம் என மனம் சொல்லியது, அப்படி இருந்தும் விடக்கூடாது என இடைக்கிடை ஃபோஸ் பண்ணி புளொக் வந்தாலும் ஏதோ ஒன்று மனம் வெறுக்க வைத்து, ஓஃப் ஆக்கிக் கொண்டே இருந்தது, அது என் ராசி அப்படித்தான், எப்பவும் எதிலும் நிலையாக இருக்க விடாது:))..
அப்படி இருக்கையில்தான், போன வருட மார்ச் லொக்டவுனில் ஆரம்பித்த யோசனை, ஒரு யூ ரியூப் சனல் திறக்கோணும் என்பது, எங்கள் ஆட்களும் எல்லோரும் அப்பப்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஒரு சனல் திறக்கலாமே என... பொறுத்திருந்தேன், 2021 வந்ததும் டமால் எனக் குதித்து விட்டேன்.
ஆனா இங்கு சொல்ல ஒரே ஷை ஷையா இருந்துதா:)).. அதனால கொஞ்ச நாள் போகட்டும் என இருந்தேன், ஆனா என் செக் அதுக்குள் போஸ்ட் போட்டு விட்டா:)), அதனால எனக்கும் கொஞ்சம் ஷை குறைஞ்சு போச்ச்ச்:)).
உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் அஞ்சு மூலம் என் சனல் முகவரி[நன்றி அஞ்சு].. இருப்பினும் நானும் நினைவு படுத்தோணும் எல்லோ:))..
இதுதான் என் சனல்... “athees palace”
ஆரம்ப காலம் பலரும் என்னை அதீஸ் எனவே அழைப்பினம், அப்போ அந்தப் பெயரிலேயே ஆரம்பித்தேன், அதிராவாக இல்லையாக்கும்:)).
இதுவரை பார்க்காதோர், subscribe பண்ணாதோர், ஒரு தடவை பண்ண முடிஞ்சால் பண்ணி விடுங்கோ பிளீஸ். அஞ்சு மூலம் அறிந்து, வந்து பண்ணிய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்_()_.
என்னில எப்பவும் ஒரு பழக்கம், ஒரு அலுவல் எனில், ஒழுங்காகச் செய்யோணும், இல்லை எனில் செய்யாமலே இருக்கலாம் என எப்பவும் நினைப்பேன்.. அதாவது “செய் அல்லது செத்துப்போ” என.
இது காந்தித்தாத்தா சொன்ன வசனம். நான் குட்டியாக இருந்தபோது, எங்கட அண்ணன், அவர் படிக்கும் மேசை, ஒரு கோனரில் இருந்தது, அந்தக் கோனர் சுவரில பென்சிலால சில வசனங்கள் அழகாக எழுதியிருப்பார். அதில இந்த வசனம் இருந்தது, அப்பவே எழுத்துக் கூட்டிப் படிச்சு மனதில பதிச்சுக் கொண்டேன், விளக்கமே தெரியாமல்:)).. அதனால நிறைய நேரத்தை எடுக்கிறது சனல் இப்போ:))
|
Tweet |
|
|||