நல்வரவு_()_


Tuesday 8 October 2013

 என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:)

 “தனிமை”...


என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

என் துயரங்களைத் தலையணையில் இறக்கி வைக்கப் போகிறேன்.
விதியின் சுழற்சியை மீறமுடியாத நேரங்களிலெல்லாம் இப்படி அழுவது என் பழக்கம்.

என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.

பூமி தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறது.
மேகம் தன் கண்களை அடிக்கடி திறந்து மழை பொழிகிறது.
காலங்களின்படி புஷ்பங்கள் மலர்கின்றன.
அலுப்புச் சலிப்பில்லாத இயற்கையின் ஓட்டத்தில் எனக்கு மட்ட்டும் ஏனோ, அடிக்கடி சலிப்பு வருகிறது. இனம் தெரியாத பயம் வருகிறது.
காரணம் இல்லாமல் துணிச்சல் வருகிறது.
ஒன்றும் புரியாத நேரத்தில், ஓ வெனக் கதறவேண்டும்போல் இருக்கிறது.
ஒருதடவை கண்ணீர் விட்டு அழுது முடித்தால், கனம் உள்ளத்தில் குறைகிறது.

என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

நான் ஒரு வலை பின்னினேன், அதில் நானே சிக்கிக் கொண்டேன்.
நான் ஒரு காடு வளர்த்தேன், அதிலிருந்து வெளியேற எனக்கே வழி தெரியவில்லை.
நான் ஒரு கிணறு வெட்டினேன், அதில் நானே விழுந்து விட்டேன்.
ஆக்கியதும் நானே.. என்னை அழித்துக் கொண்டதும் நானே...

சிந்திக்கச் சிந்திக்க எனக்கே என்மீது கோபம் வருகிறது.
என்னை நானே கோபிக்காமல் இருக்க வேண்டுமென்றால், நன்றாக அழ வேண்டும்.
என்னைத் தனியாக அழ விடுங்கள்.

நான் ஒரு மகாகவி(பூஸ்) என்பதில் சந்தேகமில்லை.
எப்படி வாழ்வது என எனக்குத் தெரியாததிலிருந்தே, நான் ஒரு மகாகவி(பூஸ்:)) ஆகத்தான் இருக்கவேண்டுமென்பதில், உங்களுக்குச் சந்தேகமில்லை.

பாம்பின்(பூஸின்)அழகை நான் ரசிக்கிறேன். புலியின் மீது அழகான கோடுகள் இருக்கின்றனவே, அவற்றை நான் தடவிப் பார்க்கிறேன்.
நான் கவிஞனல்லவா? அவற்றை நான் ரசிக்கிறேன்.

ஆனால், பாம்பு என்னைக் விழுங்குகிறது, புலி என்னைக் கடிக்கிறது. நான் என்ன செய்வேன், என்னைத் தனியாக இருக்க விடுங்கள்.. மீ அழப்போகிறேன்...

கற்பூரம் எரிந்து போனபிறகு, அதன் கரித்தூள்கூட மிஞ்சுவதில்லை.
நான் கற்பூரமாக இருந்திருக்கக் கூடாதா?... என்னுடைய காலடிச் சுவடுகள் பூமியில் பதியாமல் இருந்திருக்குமே.

எண்ணங்களை வலிதாகச் சொல்லுகிறேன்... அது எல்லோர் மனதிலும் பதிகிறது.

எனது சிந்தனைப் புஸ்பங்களுக்கு நானே உரம்.என்னைத் தின்ற பிறகுதான், அவை பூத்துக் குலுங்குகின்றன.

தொளிலாளி கட்டிய வீட்டில், தொழிலாளி குடியிருக்க முடியாததுபோல, எனது சிந்தனைகள் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

இறைவனிடம் முறையிட வேண்டும்போல் இருக்கிறது.
இறைவன் தான் வரமாட்டேன் என்கிறார்.என்னை அங்கே வரச் சொல்லுகிறார். சீக்கிரம் போய்விடலாமா என எண்ணுகிறேன்.
கால்கள் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கின்றன.
சாலை சுத்தமாக இருக்கிறது, ஆனாலும் பயணத்தைப் பற்றிய பயம் இருக்கிறது.

பிறருக்காகவே நான் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய அபிலாஷைகளெல்லாம் ஆகாயத்தில் இருக்கின்றன.

எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...

ஆனால் பிறகு ஆருக்காவது நான் திரும்பி வரவேண்டும் என்றால், இறைவன் அதுக்கொரு வழி வைக்கவில்லை.. என்ன செய்வேன்?...

என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.

நான் மூடனாக இருந்திருந்தால், எதையும் சிந்தித்திருக்க மாட்டேன். தாயை அறியாத கன்றுபோல, வாயும் வயிறுமாக வாழ்ந்திருப்பேன்.

நினைக்கத் தெரிந்த மனதை எனக்கு வைத்தது, இறைவன் செய்த குற்றம். அந்தக் குற்றத்துக்கான தண்டனையை, நான் அனுபவிக்கின்றேன்.

அவன் நியதிகளுக்கு நான் கட்டுப் பட்டாக வேண்டும். ஆனால் அவனோ என் தேவைகளை உணர மாட்டானாம், நான் என்ன செய்வேன்ன்?..

நான் அழத்தான் வேண்டும், என்னைத் தனியாக அழ விடுங்கள்...

எதை முழுதாகச் சொல்ல முடியவில்லையோ, அதை உளறிக் கொட்டுவது என் வழக்கம்.
உடைந்து போன கண்ணாடித் துண்டுகளை, ஒவ்வொன்றாக எடுத்து ஒட்ட வைக்க, யார் யாரால் முடியுமோ, அவர்களெல்லாம், சிதறிக் கிடக்கும் இந்தச் சிந்தனைகளை, ஒட்ட வைத்துப் பாருங்கள்...

என்னை மட்டும் தனியாக இருக்க விடுங்கள்.. ஏனெனில் நான் அழப் போகிறேன்:).
+++++++++++++++++++++++++++++++++ __( ) __++++++++++++++++++++++++++++++++++

ஊஊஊஊசி இணைப்பு:
அடடா.. எப்பவுமே பகிடியாகத் தானே அதிரா பேசுவா:) இண்டைக்கு என்னாச்சோ ஏதாச்சோ?:) என எண்ணிக் கொண்டே.. உங்க உங்க குலதெய்வங்களையும்:) வேண்டிக்கொண்டு:).. அதிராவுக்கு இப்படி ஏதும் கவலைகள் வந்திருக்கப் படாதென:)... படிச்சிருப்பீங்களே [இல்லயே நாங்க ஏதும் அப்படி கும்பிடேல்லையே:) எண்டு மட்டும் சொல்லிடாதீங்க பிளீஸ்ஸ்:) சுவீட் 16 கார்ட்:) தாங்காது:) ரொம்ப மென்மையாக்கும்:)).. 

ஹா..ஹா..ஹா.. அதுதான் மீ சொல்ல வருவதென்னவென்றால், இம்முறை வாங்கி வந்த கண்ணதாசனின் கட்டுரைப் புத்தகத்திலே ஒரு பகுதி...  தலைப்பு “தனிமை”... படிச்சேன், சற்று வித்தியாசமாக இருக்கே பகிரலாமே என...

இன்று எங்களுக்கு கும்மிருட்டு.. + குளிர்.. அதனால, ரேபிள் லாம்பைப் போட்டு விட்டு.. ஒண்ணொண்ணா புத்தகம் பார்த்து ரைப் பண்ணிய பதிவாக்கும்... ச்சோஓ:) . இதனை ஆரும் மிஸ் “சூஸ்”:) பண்ணினால்ல்.. மீ அவிங்களை “சூ” பண்ணிடுவேன்ன்.. ஹையோ இது வேற சூ:).  மிஸ் “சூஸ்” என்பது.. கொப்பி பண்ணிப் போய் எங்காவது வெளியிடுதல்:)[ இதையும் என்னையே சொல்ல வைக்கிறியே முருகா!!!!)]... நீங்க கேட்டால் நான், மாட்டேன் என்றா சொல்லிடப் போறேன்ன்ன்:).
=================================================================




62 comments :

  1. நெஞ்சுக்குள் ஆழ இறங்கிக்கொண்டிருக்கின்றது ஒவ்வொரு வரியும் அதிரா...

    என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.....:’(

    த ம.3

    ReplyDelete
  2. கண்ணதாசன் சொன்ன வரிகள் அத்தனையும் அற்புதம்!...

    நிச்சயமாக எம் உணர்வுகளை அப்படியே ஒரு எழுத்துத் தவறவிடாமல் கோர்த்து எழுதப்பட்ட வரிகள்!

    நெஞ்சுக்குள் ஆழ இறங்கிக்கொண்டிருக்கின்றது ஒவ்வொரு வரியும் அதிரா...

    என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்...

    வருகிறேன்.. சிறிது நேரத்தில்...:)

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியும் அருமை ..பகிர்வுக்கு நன்றி படித்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ஒரு சபாஷ்


    நானும் முதலில் பயந்துபோனேன் என்னதிது அழணும்னு /தனிமை வேணும்னு ..பூசாருக்கு என்னாச்சோ என்று

    ஒரு வேண்டுதலும் வைத்து விட்டேன் உடனடியாக ..இறைவனிடம்
    அதனால் முதலில் நீங்க உங்க பவழ பிரேஸ்லெட் ..அந்த வாட்ச் ,,பச்சை கல் மோதிரமேல்லாம்
    எனக்கு அனுப்பிடுங்க ..நான் நேர்த்தியை கடவுளுக்கு செலுத்திடறேன் :))

    ReplyDelete
  4. என்னாச்சி என்று பயந்து விட்டேன்... கண்ணதாசனின் "தனிமை" கட்டுரையை பதிவாக்கியமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. எதை முழுதாகச் சொல்ல முடியவில்லையோ, அதை உளறிக் கொட்டுவது என் வழக்கம்.
    உடைந்து போன கண்ணாடித் துண்டுகளை, ஒவ்வொன்றாக எடுத்து ஒட்ட வைக்க, யார் யாரால் முடியுமோ, அவர்களெல்லாம், சிதறிக் கிடக்கும் இந்தச் சிந்தனைகளை, ஒட்ட வைத்துப் பாருங்கள்...

    ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய வரிகள்..!

    ReplyDelete
  6. இளமதி said...
    நெஞ்சுக்குள் ஆழ இறங்கிக்கொண்டிருக்கின்றது ஒவ்வொரு வரியும் அதிரா...

    என்னைக் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவிடுங்கள் நான் அழப்போகிறேன்.....:’(

    த ம.3//

    [co="red purple"]வாங்கோ இளமதி வாங்கோ.. அச்சச்சோ ச்சும்மா இருப்போரை எல்லாம் மீ அழவச்சிட்டனோ?:)...

    நோஓஓ அழுதது போதும் வாங்கோ:).. மீக்கு எப்பவும் 4 வோட்தான் கிடைக்குது :) 4ம் நெம்பருதான்:) பொருத்தமாக்கும்:).

    ஓம்.. ஒவ்வொரு வருகளும் நச்சென இருக்கு... பலதடவைகள் படிக்கச் சொல்லுது.. அதனால்தான் பகிர நினைத்தேன்ன்.. மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  7. Cherub Crafts said...
    ஒவ்வொரு வரியும் அருமை ..பகிர்வுக்கு நன்றி படித்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ஒரு சபாஷ்
    [co="red purple"]வாங்க அஞ்சு வாங்க.. [/co]

    நானும் முதலில் பயந்துபோனேன் என்னதிது அழணும்னு /தனிமை வேணும்னு ..பூசாருக்கு என்னாச்சோ என்று
    [co="red purple"]ஹா..ஹா..ஹா.. இத தான் மீ எதிர்பாத்தேன்ன்ன்:) [/co]

    ஒரு வேண்டுதலும் வைத்து விட்டேன் உடனடியாக ..இறைவனிடம்
    அதனால் முதலில் நீங்க உங்க பவழ பிரேஸ்லெட் ..அந்த வாட்ச் ,,பச்சை கல் மோதிரமேல்லாம்
    எனக்கு அனுப்பிடுங்க ..நான் நேர்த்தியை கடவுளுக்கு செலுத்திடறேன் :))

    [co="red purple"] ஹையோ என்ர புளியடி வைரவா:) அஞ்சு விடமாட்டபோலிருக்கே:) இதைக் காப்பாத்தச் சொல்லி:) இப்போ மீ முச்சந்தி முனியாண்டீஸ்வரருக்கு.. முழங்கால்ல நடந்துவருவதா வேண்டப்போறேன்ன்ன்.. கையில அஞ்சுவைப் பிடிச்சுக்கொண்டு:)..


    மியாவும் நன்றி அஞ்சு.[/co]

    ReplyDelete
  8. திண்டுக்கல் தனபாலன் said...
    என்னாச்சி என்று பயந்து விட்டேன்... கண்ணதாசனின் "தனிமை" கட்டுரையை பதிவாக்கியமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...//

    [co="red purple"]வாங்கோ தனபாலன் வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. நீங்களும் பயந்திட்டீங்களோ?:) நல்லவேளை நேர்த்தி எதுவும் வைக்கல்ல இல்ல?:))..

    மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி said...

    ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய வரிகள்..![co="red purple"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ... ஓமோம்.. அற்புதமான வரிகள்... ஆனா சிலர்:) படிக்கும்போது.. அதிராதான் எழுதியிருக்கிறா எனப் படிச்சவையாம்:)).. ஹா..ஹா..ஹா மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  10. ஹா ஹா ஹா.. பயந்துட்டீங்களோ...:)

    நீங்க இப்படி பதிவு போட்டா நாங்களும் அதுக்கேத்தமாதிரி ஒரு ஆக்ட் குடுத்துப் பார்த்தம்.. அவ்வளந்தான்...:)

    ஆனா.. அருமையான பகிர்வு அதிரா..
    தேடினாலும் கிடைக்காது இப்படிப் புத்தகங்கள். ..
    எங்கை வாங்கினியள் இந்தப் புத்தகத்தை...

    அருமை..!

    ReplyDelete
  11. அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் ஊரில வச்சிருந்தம் தொடரா...
    இங்கை வரேக்கை ஒண்ணும் எடுத்துவரேலை..
    இப்ப எதுவுமில்லை..:(

    எனக்கும் படிக்க ஆவல்.. ஆனா எங்கை இங்கை வாங்குறது...

    ஏதோ உங்களின் பகிர்வில எண்டாலும் அறிய இப்பிடிக் கிடைச்சது சந்தோசம் அதிரா!...

    மிக்க நன்றி!

    ReplyDelete
  12. வணக்கம்

    ஒவ்வொருவரையும் ஆக்க பூர்வம்மாக சிந்திக்கவைக்கும் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. //என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:)//

    நோ நோ நோ அதிரா நோ !

    நீங்க தனியா அழவேக்கூடாது.

    நல்லவேலையாக இதுபோல ஒரு பதிவு போட்டதனால் மட்டுமே எல்லோருக்கும் தெரிய வந்தது.

    எல்லோரும் சேர்ந்து உங்களுடன் அழ வந்துட்டோம்.

    >>>>>

    ReplyDelete
  14. தனியா அழக்கூடாது என்று சொன்னதனால் .....

    தனியா சிரிக்க ஆரம்பிச்சுடாதீங்கோ அதிரா .....

    அது அதைவிட ஆபத்தூஊஊ.

    >>>>>

    ReplyDelete
  15. //பிறருக்காகவே நான் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய அபிலாஷைகளெல்லாம் ஆகாயத்தில் இருக்கின்றன.

    எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...//

    நோ அதிரா நோ .... மேலே போகாதீங்கோ. இப்போதைக்கு முருங்கை மேல் வேண்டுமானால் ஏறிக்கோங்கோ.

    அதுவும் முருங்கை மேல் ஏறும் முன், என் ஒரு பதிவுக்கு பின்னூட்டமிட வேண்டியுள்ளது. அந்தக்கடமையை முதலில் முடித்து விட்டு ஏறுங்கோ.

    பகுதி 61/1/2

    http://gopu1949.blogspot.in/2013/10/61-1-2.html

    ”ஓடித்தாவும் மனதை இழுத்துப்பிடித்தல்” என்ற உங்களுக்கு மிகவும் தேவையான தலைப்பு.

    >>>>>

    ReplyDelete
  16. //அடடா.. எப்பவுமே பகிடியாகத் தானே அதிரா பேசுவா:) இண்டைக்கு என்னாச்சோ ஏதாச்சோ?:) என எண்ணிக் கொண்டே.. உங்க உங்க குலதெய்வங்களையும்:) வேண்டிக்கொண்டு:).. அதிராவுக்கு இப்படி ஏதும் கவலைகள் வந்திருக்கப் படாதென:)... படிச்சிருப்பீங்களே//

    ஆமாம். அதே அதே அதிரபதே ! மிகவும் கவலையாகி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக டிஷ்யூ பேப்பருடன் மட்டுமே படித்தேன். நம்புங்கோ, அதிரா.

    //[இல்லயே நாங்க ஏதும் அப்படி கும்பிடேல்லையே:) எண்டு மட்டும் சொல்லிடாதீங்க பிளீஸ்ஸ்:) சுவீட் 16 கார்ட்:) தாங்காது:) ரொம்ப மென்மையாக்கும்:)).. //

    இங்கு தான் குபீரென்று சிரித்தேன். ;))))))

    >>>>>

    ReplyDelete
  17. //ஹா..ஹா..ஹா.. அதுதான் மீ சொல்ல வருவதென்னவென்றால், இம்முறை வாங்கி வந்த கண்ணதாசனின் கட்டுரைப் புத்தகத்திலே ஒரு பகுதி... தலைப்பு “தனிமை”... படிச்சேன், சற்று வித்தியாசமாக இருக்கே பகிரலாமே என...//

    அதானே பார்த்தேன் !

    அதிராவே எழுதியதாக்கும் என்று அசந்தே பூட்டேன்.


    >>>>>

    ReplyDelete
  18. வழக்கம் போல அழகான பூனைப்படங்களுடன், அற்புதமான நகைச்சுவைப்பதிவு.

    படிக்க ஆரம்பித்ததும் என்னவோ ஏதோ என மனம் தத்தளித்தாலும் முடிவு சுபமாக சுகமாக அதிரா பாணியில் அட்டகாசமாக ஸ்வீட் சிக்ஸ்டீனாக இருந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  19. I can certainly find the difference between Poosar's writing & Kannadasan's writing Ms.Myaaav! Grrrrrrrr! :)

    இருந்தாலும் டைட்டிலும் முதல் சில வரிகளும் கொஞ்சம் குழப்பிவிட்டதென்னவோ உண்மை! ;) ஆனா சீக்கிரமே தெளிவாகிட்டமில்ல? ஹாஹா!

    ReplyDelete
  20. "தொளிலாளி கட்டிய வீட்டில், தொழிலாளி குடியிருக்க முடியாததுபோல, எனது சிந்தனைகள் எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை". இது போன்ற அருமையான கருத்துக்களுடன் கட்டுரை நன்றாகவே இருக்கிறது. இதை எங்களோடு பகிர வேண்டும் என்று நினைத்து உங்கள் பாணியில் இதை பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  21. நானும் தலைப்பைப்பார்த்ததும் உண்மையில் பயந்துதான் போயிட்டேன்.இப்படி நினைக்க வைத்ததில் உங்களுக்கு வெற்றிதான். கண்ணதாசனின் ஆழமான, அற்புதவரிகள்.அதை பதிவாக்கி போட்டமைக்கு நன்றிகள்.//உடைந்து போன கண்ணாடித் துண்டுகளை, ஒவ்வொன்றாக எடுத்து ஒட்ட வைக்க, யார் யாரால் முடியுமோ, அவர்களெல்லாம், சிதறிக் கிடக்கும் இந்தச் சிந்தனைகளை, ஒட்ட வைத்துப் பாருங்கள்...// கண்டிப்பாக சிந்திக்க வைக்கும்வார்த்தைகள்.நன்றி அதிரா.

    ReplyDelete
  22. இளமதி said...
    ஹா ஹா ஹா.. பயந்துட்டீங்களோ...:)

    நீங்க இப்படி பதிவு போட்டா நாங்களும் அதுக்கேத்தமாதிரி ஒரு ஆக்ட் குடுத்துப் பார்த்தம்.. அவ்வளந்தான்...:)

    [co="red purple"]என்னாதூஊஊஊஉ ஆக்ட் பண்ணினீங்களா?:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நானும் என்னமோ ஏதோவாக்கும் என ஓடிப்போய் ஜேர்மனிக்க்குப் போட்டிட்டனே:) பிளேன் ரிக்கெட்டுத்தான்:)).. நல்லவேளை அதன் பைலட் எங்கட ரெண்டுவிட்ட:) அண்ணாதான்:) அதனால இப்பவே கான்சல் பண்ணிடுறேன்:).. ரிக்கெட்டை... [/co]

    தேடினாலும் கிடைக்காது இப்படிப் புத்தகங்கள். ..
    எங்கை வாங்கினியள் இந்தப் புத்தகத்தை...

    [co="red purple"]அது உண்மைதான், முன்பு தேடி எதுவும் கிடைக்கவில்லை.. இது பரிசில் ஒரு ஷொப்பில் நிறையக் கண்ணதாசன் புத்தகங்கள் இருந்தன... அனைத்தையும் வாங்கோணும்போல இருந்துது.. ஆனா வெயிட் ஏத்தமுடியாதே என அடக்கிட்டேன்ன்ன்ன்:)). [/co]

    ReplyDelete
  23. //இது பரிசில் ஒரு ஷொப்பில் நிறையக் கண்ணதாசன் புத்தகங்கள் இருந்தன...//

    ஆங்... என்ன பரிசிலயோ... அப்ப அங்கை இருக்கிற எங்கட மணியம் கஃபே ஓனரப் பிடிக்க வேண்டியதுதான்...:)))

    மிக்க நன்றி அதிரா.. பார்ப்பம் அங்கிருந்து எடுக்க முயற்சி பண்ணுவம்..:)

    ReplyDelete
  24. கவிஞரின் கைவண்ணத்தால் மனத்தின் ஓவியம் மிக அழகாகப் பளிச்சிடுகிறது. தனிமையில் ஏங்கும் மனங்கள் உண்டு. இங்கே தனிமைக்காக ஏங்கிக்கிடக்கிறது ஒரு மனம். உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்துதான் ரசிக்கவேண்டுமென்னும் அவசியமில்லை. ஒவ்வொரு துண்டுகளிலும் பிரதிபலிக்கும் பிம்பங்களையும் ரசித்து மகிழலாம். இங்கே ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் யதார்த்தமும் கவித்துவமும் ரசிக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி அதிரா.

    அதிரடி அதிராவின் இயல்புக்கு மாறான விரக்தியான எழுத்தும் எழுத்துநடையும் ஆரம்ப முதலே இது உங்களுடையதாய் இருக்காது என்று எண்ணத்தோன்றியது. பகிர்வுக்கு மீண்டும் நன்றி அதிரா.

    ReplyDelete
  25. நான் இதனை வாசிக்கும் பொழுதே இது கண்ணதாசனின் படைப்பாக இருக்குமோ என்று இடை இடையே தோன்றினாலும் யார் கண்டது நம்ம அதிராவால் எப்படி என்றாலும் எழுத முடியும் என்று நினைத்து வாசித்தேன்.முடிவில் முடிச்சு அவிழ்ந்தது.நன்றி பகிர்வுக்கு, தனிமை எத்தனை கொடுமையானது அனுபவிப்பவர்களுக்கு தெரியும் அதிரா.

    ReplyDelete
  26. என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:) ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விட மாட்டோம்! விடமாட்டோம்!!

    ஏன்னா, எனக்குத் தெரிந்து நீங்கள் இப்பதான் முதல் முதலாக அழப் போறீங்க!

    ஒருவர் ஒரு காரியத்தை முதல் முதலாக செய்யும் போது, அதை செலிபிரேட் பண்ணோணும் என்று திருவள்ளுவர் - ஆத்திசூடியில சொல்லியிருக்கிறார்.

    அதால, நீங்கள் அழுவதை நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று கைதட்டி, ரசிச்சு, வீடியோ எடுத்து, அதை யூ டியூப் ல அப்லோட் பண்ணி, ஃபேஸ்புக்குல சேர் பண்ணி......ஸப்பா எவ்ளோ வேலைகள் இருக்கு!!

    நீங்கபாட்டுக்கு தனிய அழுத, இதெல்லாத்தையும் நாங்கள் எப்படி பண்றது??

    ஸோ, தனிய அழ நாட் அலவுட் :) :) :)

    ReplyDelete
  27. என் துயரங்களைத் தலையணையில் இறக்கி வைக்கப் போகிறேன். //

    தலையணை பாவம் இல்லையா?? :)))))

    ReplyDelete
  28. பூமி தன் கடமையை ஒழுங்காகச் செய்கிறது.
    மேகம் தன் கண்களை அடிக்கடி திறந்து மழை பொழிகிறது.
    காலங்களின்படி புஷ்பங்கள் மலர்கின்றன.///

    பார்ரா...!

    ReplyDelete
  29. நான் ஒரு வலை பின்னினேன், அதில் நானே சிக்கிக் கொண்டேன்.
    நான் ஒரு காடு வளர்த்தேன், அதிலிருந்து வெளியேற எனக்கே வழி தெரியவில்லை.
    நான் ஒரு கிணறு வெட்டினேன், அதில் நானே விழுந்து விட்டேன். ///

    நான் ஒரு பின்னூட்டம் டைப் பண்ணினேன் - தவறுதலாக அதை நானே அழித்துவிட்டேன் :))))

    ReplyDelete
  30. ஆனால், பாம்பு என்னைக் விழுங்குகிறது, புலி என்னைக் கடிக்கிறது. நான் என்ன செய்வேன், //

    நீங்கள் ஏன் ஒரு வித்தியாசத்துக்கு, கரடியை தடவ கூடாது?? :)))

    ReplyDelete
  31. எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...

    ஆனால் பிறகு ஆருக்காவது நான் திரும்பி வரவேண்டும் என்றால், இறைவன் அதுக்கொரு வழி வைக்கவில்லை.. என்ன செய்வேன்?...///

    கொன்னுட்டீங்க :)))))

    ReplyDelete
  32. அடடா.. எப்பவுமே பகிடியாகத் தானே அதிரா பேசுவா:) இண்டைக்கு என்னாச்சோ ஏதாச்சோ?:) என எண்ணிக் கொண்டே.. உங்க உங்க குலதெய்வங்களையும்:) வேண்டிக்கொண்டு:) ///

    ஹா ஹா ஹா நெவர். நாங்களாவது நம்புறதாவது.

    அதிரா என்றால் சிரிப்பதற்கென்றே பிறந்தவர். எந்தநாளும் சிரித்து கலகலப்பாக இருப்பவர். ஒரு புன்னகை அரசி, ஒரு புழுங்கல் அரிசி. ஒரு சுவீட் சிக்ஸ்டீன். இப்படித்தான் மனதிலே பதித்து வைத்திருக்கிறோம்.

    நீங்கள் அழப் போகிறீர்கள் என்றால் அதை நாங்கள் நம்புவோமா என்ன??

    சரி சரி, அந்த கண்ணதாசனின் உரைநடை ரொம்ப சூப்பர். அதை நீங்கள் பட்டி, ரிங்கரிங் செய்தது அதைவிட சூப்பர்.

    ஆனா, நைஸா சோகமா எழுதுறமாதிரி எழுதி, எங்களுக்கு பல்ப் கொடுக்கலாம் என்று ஐடியா போட்டீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்குறீங்க்க :))))))

    ReplyDelete
  33. 2008rupan said...
    வணக்கம்

    ஒவ்வொருவரையும் ஆக்க பூர்வம்மாக சிந்திக்கவைக்கும் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    [co="red purple"]வாங்கோ ரூபன்.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு.. மிக்க நன்றி. [/co]

    ReplyDelete
  34. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:)//

    நோ நோ நோ அதிரா நோ !

    நீங்க தனியா அழவேக்கூடாது.

    [co="red purple"]வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. [/co]

    நல்லவேலையாக இதுபோல ஒரு பதிவு போட்டதனால் மட்டுமே எல்லோருக்கும் தெரிய வந்தது.

    எல்லோரும் சேர்ந்து உங்களுடன் அழ வந்துட்டோம்.

    [co="red purple"]என்னாது என்னோடு சேர்ந்து எல்லோரும் அழப்போறீங்களோ?:)) வாணாம்ம் வாணாம்ம்ம். நான் அழவே இல்லை.. உஸ்ஸ் ஸப்பா.. இதைவிட சிரிச்சுக்கொண்டே இருந்திடலாம் போல இருக்கே சாமீஈஈஈஈ...:) [/co]

    ReplyDelete
  35. வை.கோபாலகிருஷ்ணன் said...
    தனியா அழக்கூடாது என்று சொன்னதனால் .....

    தனியா சிரிக்க ஆரம்பிச்சுடாதீங்கோ அதிரா .....

    அது அதைவிட ஆபத்தூஊஊ.

    [co="red purple"]துன்பம் வரும்போது சிரிங்க என “அவ்வையார்” சொல்லியிருக்கிறா:) [/co]

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...

    அதுவும் முருங்கை மேல் ஏறும் முன், என் ஒரு பதிவுக்கு பின்னூட்டமிட வேண்டியுள்ளது. அந்தக்கடமையை முதலில் முடித்து விட்டு ஏறுங்கோ.

    பகுதி 61/1/2///

    [co="red purple"]என்ர வைரவா... இப்பூடி ஒரு கொடுமை:) இந்த ஹோல் வலையில்:) இது ஆருக்காவது நடக்குதா?:) எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?:) [/co]

    ReplyDelete
  37. வை.கோபாலகிருஷ்ணன் said...
    வழக்கம் போல அழகான பூனைப்படங்களுடன், அற்புதமான நகைச்சுவைப்பதிவு.

    [co="red purple"] மியாவும் நன்றி கோபு அண்ணன் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.[/co]

    ReplyDelete
  38. Mahi said...
    I can certainly find the difference between Poosar's writing & Kannadasan's writing Ms.Myaaav! Grrrrrrrr! :)
    [co="red purple"]வாங்கோ மகி வாங்கோ.. அதெப்பூடி?:))[/co]
    இருந்தாலும் டைட்டிலும் முதல் சில வரிகளும் கொஞ்சம் குழப்பிவிட்டதென்னவோ உண்மை! ;) ஆனா சீக்கிரமே தெளிவாகிட்டமில்ல? ஹாஹா!//
    [co="red purple"]ஹா..ஹா..ஹா.. அது அது.. உண்மையைச் சொல்லிட்டீங்க பாருங்க:) அங்கதான் நிக்கிறீங்க:).. மியாவும் நன்றி மகி. [/co]

    ReplyDelete
  39. Viya Pathy said...
    [co="red purple"] வாங்கோ வியபதி வாங்கோ.. படித்து ரசித்தமைக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  40. priyasaki said...
    நானும் தலைப்பைப்பார்த்ததும் உண்மையில் பயந்துதான் போயிட்டேன்.இப்படி நினைக்க வைத்ததில் உங்களுக்கு வெற்றிதான்

    [co="red purple"]ஆவ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ.. நிஜமாவோ?:) எனக்கு தெரியும்.. எப்படியும் கொஞ்சமாவது குழப்பத்தோடுதான் எல்லோரும் படிப்பீங்களென... அதனாலதான்ன்.. டக்குப் பக்கென முடிவில உண்மையையும் சொல்லிவிட்டேன்ன்..

    மியாவும் நன்றி அம்முலு. [/co]

    ReplyDelete
  41. இளமதி said...

    மிக்க நன்றி அதிரா.. பார்ப்பம் அங்கிருந்து எடுக்க முயற்சி பண்ணுவம்..:)
    [co="red purple"]பண்ணுங்கோ பண்ணுங்கோ... அல்லது இப்பவே உங்கட அட்ரசைச் சொல்லுங்கோ:) நான் படிச்சு முடிச்சதை அங்கின பார்சல் பண்ணி விடுறன்:). [/co]

    ReplyDelete
  42. வணக்கம் அதிரா...!

    தலைப்பை பார்த்தவுடன் லைட்டா கவலை ( சத்தியமாங்க ) நம்மஅதிராவுக்கு என்னாச்சு என்று ஆனால் வாசிக்க வாசிக்க சந்தேகம் இது எங்கே சுட்டு இருப்பாங்க / அல்லது எதனோட உல்டா என்று உடனே வாசிப்பதை நிறுத்திட்டு கடைசி வரிகளை பார்த்தேன் ( சந்தேகம் வந்தா உடனே தீர்த்துக்கணும்ல ) அப்பாடா நம்ம தல கண்ணதாசன் வரிகள் சந்தோசம் வந்ததும் மீண்டும் எல்லாம் வாசித்தேன்,

    பிடித்த வரிகள் // எனது சிந்தனைப் புஸ்பங்களுக்கு நானே உரம்.என்னைத் தின்ற பிறகுதான், அவை பூத்துக் குலுங்குகின்றன.//

    வாழ்த்துக்கள் அதிரா

    மேலும் தொடரட்டும்

    வாழ்கவளமுடன்

    ReplyDelete
  43. கீத மஞ்சரி said...
    கவிஞரின் கைவண்ணத்தால் மனத்தின் ஓவியம் மிக அழகாகப் பளிச்சிடுகிறது.

    [co="blue green"]வாங்கோ கீதமஞ்சரி வாங்கோ.. [/co]
    தனிமையில் ஏங்கும் மனங்கள் உண்டு. இங்கே தனிமைக்காக ஏங்கிக்கிடக்கிறது ஒரு மனம். உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்துதான் ரசிக்கவேண்டுமென்னும் அவசியமில்லை. ஒவ்வொரு துண்டுகளிலும் பிரதிபலிக்கும் பிம்பங்களையும் ரசித்து மகிழலாம். இங்கே ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் யதார்த்தமும் கவித்துவமும் ரசிக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி அதிரா.
    [co="blue green"] அடடா நீங்களும் ஒரு தத்துவக் கவிதை சொல்வதுபோல கலக்கிட்டீங்க.. உண்மைதான், ஒட்டவைக்க முடியாதெனில்.. துண்டுகளை ரசிக்கப் பழகிட்டால் போச்சு..:) [/co]

    அதிரடி அதிராவின் இயல்புக்கு மாறான விரக்தியான எழுத்தும் எழுத்துநடையும் ஆரம்ப முதலே இது உங்களுடையதாய் இருக்காது என்று எண்ணத்தோன்றியது. பகிர்வுக்கு மீண்டும் நன்றி அதிரா.
    [co="blue green"] ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி கீதமஞ்சரி. [/co]

    ReplyDelete
  44. Asiya Omar said...
    நான் இதனை வாசிக்கும் பொழுதே இது கண்ணதாசனின் படைப்பாக இருக்குமோ என்று இடை இடையே தோன்றினாலும் யார் கண்டது நம்ம அதிராவால் எப்படி என்றாலும் எழுத முடியும் என்று நினைத்து வாசித்தேன்

    [co="blue green"]வாங்கோ ஆசியா வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. எல்லோரையும் ஏச்சுப் புட்டேனே அதிரா ஏச்சுப் புட்டேனே...:) [/co]

    முடிவில் முடிச்சு அவிழ்ந்தது.நன்றி பகிர்வுக்கு, தனிமை எத்தனை கொடுமையானது அனுபவிப்பவர்களுக்கு தெரியும் அதிரா.

    [co="blue green"] தனிமை கொடுமை அது உண்மைதான்ன்.. ஆனா குடும்பத்தைப் பிரிந்து தனியே இருப்பதைவிட, குடும்பத்தோடு இருக்கும் தனிமை உயர்ந்ததுதானே... எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்ன்.. இருப்பதை திறம் என எண்ணிட்டால் கவலை குறையும்..

    மியாவும் நன்றி ஆசியா. [/co]


    ReplyDelete
  45. MaaththiYosi Jeevan said...
    என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:) ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விட மாட்டோம்! விடமாட்டோம்!!

    ஏன்னா, எனக்குத் தெரிந்து நீங்கள் இப்பதான் முதல் முதலாக அழப் போறீங்க!

    [co="green green"] ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ மணியம் கஃபே எம்டி :)வாங்கோ... ஹா..ஹா..ஹா.. என்னது? அப்போ இது என் “கன்னி அழுகையா”???? [/co]

    அதால, நீங்கள் அழுவதை நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று கைதட்டி, ரசிச்சு, வீடியோ எடுத்து, அதை யூ டியூப் ல அப்லோட் பண்ணி, ஃபேஸ்புக்குல சேர் பண்ணி......ஸப்பா எவ்ளோ வேலைகள் இருக்கு!!

    [co="green"]ஹையோ என்ர ஆலமர அடிவேரில இருக்கும் வைரவாஆஅ:)) இது என்ன ஓதனை...:)) பிச்சை வாணாம் நாயைப் பிடிங்க.. என ஆச்சே என் நிலைமை:) [/co]

    [im]http://allabouthomerenovation.com/wp-content/uploads/2013/05/small_356400109.jpg[/im]

    ReplyDelete
  46. MaaththiYosi Jeevan said...
    ஸோ, தனிய அழ நாட் அலவுட் :) :) :)
    [co="purple"] இல்ல இல்ல:) மீ அழவே இல்ல:) அப்பூடியெண்டால் என்ன?:)) மீ சிரிக்கிறனாக்கும்:)) உஸ்ஸ் அப்பாடா... தத்துவம் பேசப் போய்ய் இப்பூடியாச்சே என் நிலைமை:))
    [/co]
    [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTd0IFuN6T1Zr-sPeF9grEgC-HRdCFX9_fGi0XnySNBN1jhIfJBSQ[/im]

    ReplyDelete
  47. வணக்கம் சகோதரி. தங்களின் வலைப்பக்கத்திற்கு முதல் வருகை. பதிவின் தலைப்பு மற்றும் கொஞ்சம் படிக்கிற வரை என்னடா நம்மலோட முதல் வருகையிலயே மியாவ் க்கு என்ன சோகம்னு தெரியலயேனு குழம்பித் தான் போனேன். அப்புறம் தான் தெரிந்து பூஸ் சுட்ட கண்ணதாசன் வரிகள் என்று. கவியரசர் கண்ணதாசன் வரிகளை எங்க கவியரசி (அதிராமியாவ்) எழுதும் போது ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  48. உண்மையிலேயே சற்று நடுக்கத்தோடு தான் படித்தேன் சகோதரி...
    சில வரிகள் படிக்கும் போதே எங்கோ படித்த ஞாபகம் நெஞ்சில் உதித்துவிட்டது.....

    கவியரசரின் உன்னதமான வார்த்தைகள்....

    "சித்திரத்தாள் அடிச்சுவட்டை
    தேடிப்பார்த்தேன்
    தென்றல் வந்து போனதற்கு
    சுவடா உண்டு
    கைத்திறத்தால் தடவிப்பார்த்தேன்
    அன்னாள்
    கால் பட்ட இடத்தில்
    இளஞ்சூடு கண்டேன்"""""
    இப்படி ஒவ்வொரு எண்ணத்திலும்
    நெஞ்சில் நிலைப்பவனல்லவா.....

    கவிவேந்தனின் வரிகளை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரி...
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  49. அன்புள்ள அதிரா,

    வணக்கம்.

    என் தொடரின் அடுத்தபகுதி [பகுதி-65] இன்று, இப்போது நான்கு சிறிய பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட்டுள்ளன.

    இணைப்புகளும் தலைப்புகளும் :-

    http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html
    65/1/4 தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன்

    http://gopu1949.blogspot.in/2013/10/65-2-4.html
    65/2/4 அமுத மழையில் நனைந்த அதிர்ஷ்டசாலிப் பெண்மணிகள்.

    http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html
    65/3/4 அமுத மழையில் நனைந்த அதிர்ஷ்டசாலி ஆண்கள்.

    http://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html
    65/4/4 கரும்புகளை ருசித்த எறும்புகள்


    இதில், அடியேன் தொடர்ந்து எழுதிவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய ஆன்மிகத் தொடருக்கு, இதுவரை ஒரேயொரு முறையேனும் வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள அனைத்துத் தோழர்கள் + தோழிகள் பெயர்களும் தனித்தனியே குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இது 2013ம் ஆண்டில் அடியேன் அளித்திடும் வெற்றிகரமான 100வது பதிவாகையால், சில சுவாரஸ்யமான செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன்.

    இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.


    தாங்கள் அன்புடன் வருகை தந்து, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கருத்தளித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

    அன்புடன்
    கோபு
    [VGK]

    ReplyDelete
  50. நானும் பூசார் அழுகின்றா உருக்கமாக என்று ஓடிவந்தாள் இப்படியா???:)))

    ReplyDelete
  51. ஞான மாலிகா நான் தேடிப்படிக்க வேண்டிய ஆசைக்கு வித்து இட்டுவிட்டீர்கள் பார்ப்போம் கையில் கிடைக்கின்றதா என்று!

    ReplyDelete
  52. MaaththiYosi Jeevan said...
    ஆனால், பாம்பு என்னைக் விழுங்குகிறது, புலி என்னைக் கடிக்கிறது. நான் என்ன செய்வேன், //

    நீங்கள் ஏன் ஒரு வித்தியாசத்துக்கு, கரடியை தடவ கூடாது?? :))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்ல ஐடியா:)..

    ReplyDelete
  53. MaaththiYosi Jeevan said...
    எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...

    ஆனால் பிறகு ஆருக்காவது நான் திரும்பி வரவேண்டும் என்றால், இறைவன் அதுக்கொரு வழி வைக்கவில்லை.. என்ன செய்வேன்?...///

    கொன்னுட்டீங்க :)))))///

    [co="blue green"] ஹா..ஹா..ஹா.. என்னா ஒரு அருமையாக கற்பனை பண்ணியிருக்கிறார் கவிஞர்.. நானும் அதிசயித்திட்டேன்ன்ன்ன்.. உண்மைதானே.. அவசர முடிவெடுத்து தற்கொலை முயற்சி பண்ணுவோரெல்லாம்ம்.. இவ்வசனத்தை ஒருமுறை திரும்ப படிச்சால்ல் முடிவை மாத்திடுவினம்.. [/co]

    ReplyDelete
  54. MaaththiYosi Jeevan said...


    அதிரா என்றால் சிரிப்பதற்கென்றே பிறந்தவர். எந்தநாளும் சிரித்து கலகலப்பாக இருப்பவர். ஒரு புன்னகை அரசி, ஒரு புழுங்கல் அரிசி. ஒரு சுவீட் சிக்ஸ்டீன். இப்படித்தான் மனதிலே பதித்து வைத்திருக்கிறோம்.

    நீங்கள் அழப் போகிறீர்கள் என்றால் அதை நாங்கள் நம்புவோமா என்ன??

    சரி சரி, அந்த கண்ணதாசனின் உரைநடை ரொம்ப சூப்பர். அதை நீங்கள் பட்டி, ரிங்கரிங் செய்தது அதைவிட சூப்பர்.

    ஆனா, நைஸா சோகமா எழுதுறமாதிரி எழுதி, எங்களுக்கு பல்ப் கொடுக்கலாம் என்று ஐடியா போட்டீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்குறீங்க்க :))))))
    [co=" green"]ஹா..ஹா..ஹா... லேட்டா வந்தாலும்.. உங்கட கிட்னியின் பவரைக் காட்டிக் கேள்விகள் கேட்டிட்டீங்க:)).. மியாவும் நன்றி வரவுக்கும் அனைத்து பின்னூட்டங்களுக்கும்..ம.க. ஓனர்ர்... [/co]



    ReplyDelete
  55. சீராளன் said...
    வணக்கம் அதிரா...!

    தலைப்பை பார்த்தவுடன் லைட்டா கவலை ( சத்தியமாங்க ) நம்மஅதிராவுக்கு என்னாச்சு என்று ஆனால் வாசிக்க வாசிக்க சந்தேகம்///
    [co="blue green"]ஹா..ஹா..ஹா.. வாங்கோ சீராளன்.. வாங்கோ.. மொத்தத்தில அதிரா எல்லோரையும் ஏச்சுப்போட்டேனே:)).. மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  56. அ. பாண்டியன் said...
    வணக்கம் சகோதரி. தங்களின் வலைப்பக்கத்திற்கு முதல் வருகை.
    [co="blue green"] வாங்கோ பாண்டியன் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி. [/co]

    பதிவின் தலைப்பு மற்றும் கொஞ்சம் படிக்கிற வரை என்னடா நம்மலோட முதல் வருகையிலயே மியாவ் க்கு என்ன சோகம்னு தெரியலயேனு குழம்பித் தான் போனேன். அப்புறம் தான் தெரிந்து பூஸ் சுட்ட கண்ணதாசன் வரிகள் என்று.
    [co="blue green"] ஹா..ஹா..ஹா... அப்போ இந்த முதல்வரவை நீங்க ஒருபோதும் மறக்க மாட்டீங்க..:) [/co]

    கவியரசர் கண்ணதாசன் வரிகளை எங்க கவியரசி (அதிராமியாவ்) எழுதும் போது ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது.
    [co="blue green"] அச்சச்சோ என்னாது கவியரசியா?:)) ஹா..ஹா..ஹா.. நீங்க என் பக்கம் புதுசு என்பதால அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிட்டீங்க:)))..

    வரவுக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி பாண்டியன். [/co]

    ReplyDelete
  57. மகேந்திரன் said...
    உண்மையிலேயே சற்று நடுக்கத்தோடு தான் படித்தேன் சகோதரி...

    [co="blue green"] ஹா..ஹா..ஹா.. வாங்கோ மகேந்திரன் அண்ணன் வாங்கோ..

    உண்மைதான் கண்ணதாசன் அவர்களின் சில வரிகள் ஒருதடவை படிச்சால் போதும்.. அப்படியே பதிந்துவிடும்..

    மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  58. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்புள்ள அதிரா,

    வணக்கம்.

    என் தொடரின் அடுத்தபகுதி [பகுதி-65] இன்று, இப்போது நான்கு சிறிய பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட்டுள்ளன.

    இணைப்புகளும் தலைப்புகளும் :-

    [co="blue green"]13ம் ஆண்டின்100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராமல் இருக்கும்...:) கோபு அண்ணனின் பக்கம்.. விரைவில் வந்து பின்னூட்டமிட்டு முடிப்பேன் என்பதனை... தேம்ஸ் கரையில் பார்க் பண்ணியிருக்கும்:) படகின்:) முதலாவது படியின்மீது:) அடித்துச் சத்தியம் செய்கிறேன்ன்:))...

    ஹா...ஹா..ஹா.. மியாவும் நன்றி.. மெதுமெதுவா எனினும்.. வருவேன். [/co]

    ReplyDelete
  59. [co="blue green"]வாங்கோ தனிமரம் வாங்கோ.. மிக்க நன்றி. [/co]

    ReplyDelete
  60. அன்புள்ள அதிரா,

    வணக்கம்.

    ஓடியாங்கோ, ஓடியாங்கோ ....

    உடனே ஓடியாங்கோ ...............

    கிளி வந்து கொத்துவதற்கு முன் ஓடியாங்கோ:


    http://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html

    http://gopu1949.blogspot.in/2013/10/66.html

    http://gopu1949.blogspot.in/2013/10/67.html

    http://gopu1949.blogspot.in/2013/10/68.html

    இப்படிக்கு,

    கணக்குப்பிள்ளைக்கிளி
    22.10.2013

    ReplyDelete
  61. [co="OrangeRed"]நோ ஓஓஓஓஒ நா வரமாட்டேன் எனக் கிளியாரிடம் சொல்லிடுங்கோ:) ஏனெனில் போனதடவை தமிழ்மணம் வோட் பண்ணாதோர் வீட்டுப் பக்கம் போகமாட்டமாக்கும்:)) ஹா..ஹா..ஹா.. ஒரு வோட்டுக்கு எப்பூடியெல்லாம் பயமுறுத்த வேண்டிக்கிடக்கே:)) [/co]

    ReplyDelete
  62. //நோ ஓஓஓஓஒ நா வரமாட்டேன் எனக் கிளியாரிடம் சொல்லிடுங்கோ:) ஏனெனில் போனதடவை தமிழ்மணம் வோட் பண்ணாதோர் வீட்டுப் பக்கம் போகமாட்டமாக்கும்:)) ஹா..ஹா..ஹா.. ஒரு வோட்டுக்கு எப்பூடியெல்லாம் பயமுறுத்த வேண்டிக்கிடக்கே:))//

    Sorry. மறந்து போச்சு. இப்போ என் கிளியார் பறந்து போய் வோட் அளித்து 8ஐ 9ஆக மாற்றி விட்டார் என்பதை அறியவும்.

    தாங்களும் இப்போ கிளி போல உடனே பறந்து வந்து பின்னூட்டம் கொடுக்கவும்.

    சேச்சே, இந்த அதிராவிடம் ஒரு பின்னூட்டம் வாங்க என்ன பாடு பட வேண்டியுள்ளது, ஆண்டவா! ;)))))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.