ஸ்ஸ்ஸ் ஏன் முறைக்கிறீங்க எல்லோரும்.. நம்புங்கோ:) இது எங்கட வீட்டுக் கார்டின் இல்லை:).. நம்பமாட்டினமாம் கர்ர்:).. ஹா..ஹா..ஹா..:).
பிரித்தானியாவில் SURREY எனுமிடத்தில் இருக்கும் கார்டின்.. பெரீஈஈஈஈய பரப்பளவில் அனைத்து மரக்கறிகள், பழங்கள் என எல்லாம் செய்து.. சனங்களை ஓபினாகப் போக விடுவினம். ரிக்கெட் எதுவுமில்லை. நாம் போய் அங்கு பாக் இருக்கும் எடுத்துப் போய் நம் விருப்பத்துக்கு பிடுங்கி பாக்கில் போட்டு எடுத்து வந்து கொடுத்தால் நிறுத்து விலை போடுவினம். நடந்தெல்லாம் போக முடியாது, காரில்தான் போய் ஒவ்வொரு இடமாக பார்க் பண்ணிப் பண்ணிப் பார்க்கோணும்.. அவ்ளோ பெரிசூஊஊஊஊ:)..
பெரிதாக எந்த செக்கியூரிட்டியும் கிடையாது. எம் இஸ்டத்துக்கு பழங்கள் பிடுங்கி முடிந்தவரை சாப்பிடலாம்..
எனக்கு புளொக்கில் போடும் பிளான் இருக்கவில்லை, அதனால அனைத்தையும் படமெடுக்கவில்லை. முன்பும் போயிருக்கிறோம். எத்தனை தடவை போனாலும் அலுக்காது.
பீற்றூட், கரட், ஸ்பினாஜ்(கீரை), பலவகை பீன்ஸ், உருளைக்கிழங்கு, கபேஜ், லீக்ஸ், மறோ, ஹொலிபிளவர்... சோளம்..
பழங்களில்.. ஸ்ரோபெரி, பிளாக்பெரி, கிரான்பெரி... கிட்டத்தட்ட அனைத்து பெரிகளும்... சில பக்கம் நாம் போகவில்லை களைத்து விட்டோம்ம்..
சூரியகாந்தி கண்டோம்ம்.. அதில் அதிசயம் என்னவெனில் இம்முறைதான் முதன் முதலில் மரூண் கலரில் கண்டோம்...
சரி வாங்கோ கார்டின் பார்க்கலாம்...
----------------------------------------------------------------------------------------------------------------------
இது பீற்றுட்... பெரிய வயல் போல இருந்துது, நம் விருப்பத்துக்கு எதை வேணுமானாலும் பிடுங்கலாம்.. கொடுமை என்னவெனில் நம் மக்கள்ஸ்ஸ்.. ஆடு மாடு உளக்குவது போல அனைத்தையும் உளக்கி, ஓடியாடித்தான் பிடுங்குகிறார்கள்..
இதேபோலத்தான் ஸ்பினாஜ்.. கீரை வயலும்... தேடித் தேடிப் பார்த்து நல்ல குருத்து இலைகளாகப் பிடுங்கி வந்தோம்... கடையில் வாங்கும் ஸ்பினாஜ் சலாட்போல தண்ணி இலையாக இருக்கும்.. இது நல்ல தடிப்பு.. சரியாக பொன்னாங்கண்ணிக் கறிபோல இருந்துது சுவை.. ஒரு மாதமாக பிரிஜ்ஜில் வைத்துச் சமைத்தேன்.. பழுதாகவே இல்லை.
எனக்கு நீண்ட காலமாக ஆசை, பீற்றூட் இலைகள் பிடுங்கி வறை செய்யோணும் என.. அதனால் ஆசை தீர பார்த்துப் பார்த்து, பிடுங்கி வந்தேன். இந்த பீற்றூட் கிழங்குகள்.. நான் எப்பவுமே சாப்பிட்டிராத ருசியாக இருந்தன அவ்ளோ இனிமை. சனங்கள் பிடுங்கிறார்கள்.. பின்பு கிழங்கு கொஞ்சம் சின்னனெனில் எறிந்து போட்டு மற்றதைப் பிடுங்குகிறார்கள்... பார்க்கப் பார்க்க கவலையாக இருந்துது.
இது பீன்ஸ்ஸ், இவ்வளவுதான் இந்த மரத்தின் உயரம்.. சூப்பர் சுவை.
இது பிளாக் பெரி.. இப்போதான் கறுப்புக் கறுப்புக் கொத்து கொத்துப் பழங்கள் சாப்பிட முடியவில்லை ஒரே புளிப்பு(முத்தவில்லை).. அதனால மக்கள் பிடுங்கி பிடுங்கி எறிந்திருக்கிறார்கள்..
இது ராஸ்பெரி... இனிமையோ இனிமை.. கடையில் எனில் ஒரு 15 பழங்களுக்கு மட்டும் 2 பவுண்டுகள் கொடுக்க வேண்டும்.. இது போதுமானவரை சாப்பிட்டோம். அங்கிருந்த ஸ்ரோபெரியின் இனிப்போ சொல்லி வேலையில்லை அப்படி ஒரு இனிப்பு.
இது மரோ.. பச்சையாக இருக்கும்... கியூகம்பர் போல.. நாம் இதுக்குள் போகவில்லை.. எல்லாமே பெரிய பெரிய வயல்போலத்தான்.
இவைதான் சூரிய காந்தி.. பெரிதாக்கிப் பாருங்கோ மரூண் கலரிலும் இருக்கிறது.
ஏனைய படங்கள் எடுக்கவில்லை. கபேஜ்/கோவா/முட்டைக்கோஸ்.. எல்லாம் அப்படியே பிடுங்கி விரிந்திருக்கும் இலைகளை.. அது நல்ல பிஞ்சு இலைகள்தான்.. ஆனா ஓசியில கிடைக்கும்போது அப்படித்தானே...:) உள்ளே இருக்கும் முட்டைபோன்றதை மட்டுமே எடுக்கினம்...
உருளைக்கிழங்கு ஏரியா, ஒரு மெஷின் நிக்குது, அது கொஞ்ச இடத்தைக் கிளறி விடும்... அதில் விருப்பமான கிழங்கை மக்கள் பார்த்து பொறுக்கியபின்.. இன்னும் கொஞ்ச ஏறியாவைக் கிளறி விடும்...
இப்படித்தான் சோளக்காடும்:).. பொத்தியை முறித்து உரிச்சுப் பார்க்கினம் சின்னனெனில் வீசிவிட்டு மற்றதை முறிக்கினம்...
அதைப்பற்றிக் கேட்பார் பார்ப்பாரே இல்லாமல் விட்டிருக்கு... ஆனா இப்படிக் கார்டின் நடத்தி ஆசைக்கு எம்மை எல்லாம் அனுபவிக்க வைக்கும் அவர்கள் வாழ்க...
ஊசிக்குறிப்பு:
புறுணம் என்னவெனில்... நண்பி குடும்பமும் வந்திருந்தார்கள்.. அதுதாங்க நான் ஏற்கனவே இங்கு சொல்லியிருக்கும், என் ஸ்கூல் நண்பி. அப்போ அங்கு இடையிடையே “மணத்தக்காழி” பார்த்தனே.. ச்சும்மா ச்சும்மா ஆங்காங்கு முழைத்திருந்தது.. குட்டிக் குட்டிப் பழங்களோடு... சந்தோசம் தாங்க முடியவில்லை.. உடனே நண்பியைக் கேட்டேன்.. இதுதானே “மணத்தக்காழி” என... உடனே என்னைப் பார்த்துக் கேட்டா... அப்படீன்னா?????????... இதுக்கு மேல என் நிலைமை எப்பூடி இருந்திருக்கும்:) என் வாய்க்கு சட்டர் போட்டிட்டேன்ன்ன்ன்ன்:).. படங்கள் எடுக்காமல் விட்டிட்டேன்ன், இப்போதான் ஃபீல் பண்ணுறேன்.
======================================================================
“நம்மை மீறி நடக்கும் விஷயங்களை நினைத்துப் ஃபீல் பண்ணி, நம் கொன்றோலில் இருக்கும் விஷயங்களைக் கோட்டை விட்டிடக் கூடாது”
இந்த அளப்பெரிய தத்துவத்தைக் கண்டு பிடித்துக் காவி வந்தவர்: பெருமதிப்புக்குரிய:) புலாலியூர்ப் பூஸானந்தா:)
======================================================================