நல்வரவு_()_


Monday 9 January 2017

இது நானேதான்..


மிக நீஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பின் திரும்படியும் என் முன்னங்காலை முதன் முதலில் எடுத்து வைக்கிறேன், ஏதோ மீண்டும் பழையபடி கலக்கோணும் புளொக்குகள் எல்லாம் எனும் நம்பிக்கையோடு... என்னை வாழ்த்தி ஆஜீர்ர்ர்ர்ர்ர்ர்ர் வதியுங்கோ:)...


நிறையப்பேர் என்னை மறந்திருக்கலாம், மறக்க நினைச்சிருக்கலாம், மறக்காமல் இருக்கலாம்... நினைச்சுக்கொண்டும் இருக்கலாம்:)... அனைவருக்கும் ஒண்ணு டெல்ல ஆசைப்படுறேன்.. அது என்னவெண்டால் நான் யாரையும் மறக்கேல்லை, ஏன் தெரியுமோ... இப்போதானே “சுவீட் 16” பேர்த்டே கொண்டாடினேன்(எனக்குத்தேன்:)).. [தெளிவாச் சொல்லாட்டில் குறுக்க குறுக்க கேள்வி கேட்பினம்.. எங்கிட்டயேவா?:))...

எனக்கு எழுத ஒண்டும் இப்போ வருகுதில்லை... எல்லோரும் கொஞ்சம் புளொக் பக்கமும் வாங்கோ... பெயர் சொல்லி அழைக்கப் பயமா இருக்கு ... தப்பித் தவறி யாரையாவது தவறவிட்டு, வந்ததும் வராததுமா மனதைப் புண்படுத்திட வாணாம் என நினைச்சு... எல்லோருக்கும் ஓபின் இன்விட்டேஷன் வைக்கிறேன்...

இலங்கை கம்பன் கழகத் தலைவர் திரு ஜெயராஜ் அங்கிள் ஒரு பேச்சின் போது சொன்னார், “தலைமுறை மாற்றம்” என்பதை முதன்முதலில் 2005 ஆண்டில்தான் நான் உணர்ந்தேன் என... அதாவது அவரது அலுவலகம் நல்லூரடியில் இருந்தது (இப்பவும் அங்குதானாக்கும்)... அப்போ 90 களில் அவர் மிகவும் பிரபல்யம்...

அதனால் அப்போ தான் அந்த வீதியால் போகும்போது அனைவரும் தலையசைத்து வணக்கம், நலம் விசாரிப்பார்களாம், பின்னர் இடம்பெயர்வு வந்தது 1995 இல் அப்போ அவரும் ஊரை விட்டு தமிழ்நாடு, கொழும்பு என அதிக காலம் வாழ்ந்திட்டு பின்பு 2005 இல் யாழ்ப்பாணம் போய் , 1990 காலம்போல் அதே வீதியால் போனபோது யாருமே கண்டுகொள்ளவில்லையாம்... அதாவது தலைமுறை மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் இவரை பெரிதாக புரியவில்லையாம்...

இதேபோலதால், இடைவெளி விடும்போது தலைமுறை மாற்றங்கள் ஏற்பட்டுவிடும்... அதனால நாங்க இடைவெளியில்லாமல் இருக்க முயற்சிக்கோணும் என ஜொல்லிக்கொண்டு..... மீண்டும் வருகிறேன்...

என் இனிய புளொக் ஓனர்கள்.. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

==========================================================================
நாம் போகுமிடமெல்லாம் - நம் மனதும்
கூடவே வருவதில்லை...
ஜிப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா
====================================================================

50 comments :

  1. இல்லை எனக்கு நம்பிக்கை வரலை //கையை நீட்டுங்க கிள்ளி பாக்கணும்

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் இம்முறை லாப் எலி அஞ்சூஊஊஊஊஉ.. வாங்கோ அஞ்சு வாங்கோ... நோஓஓ வந்ததும் வராததுமா என் கையை நீட்டச் சொல்றீங்க, நா மாட்டேன்ன்ன்.. இருங்கோ எதுக்கும் என் வைரக்கல்லு முகோதிரத்தை:) கொஞ்சம் கழட்டி ஒளிச்சு வச்சிட்டு வாறேன்ன்:)

      Delete
  2. அதுவும் அந்த வைர மோதிரம் போட்டு கையை நீட்டுங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா என்னா டெலிபதி:) உந்த தேம்ஸ் மேல இருக்கும் கல்லில் இருக்கும் குருவி மேல் சத்தியமா... தலைகீழாசனம் செய்யும் ஆசான் தொங்கும் மரத்தின் கொப்பு மேல் சத்தியமா, இந்தக் கொமெண்ட்டைப் படிக்காமலேதான் மேலே பதில் போட்டேன்ன்..

      Delete
  3. காமெடி கலாட்டாக்களுக்கு அப்பால் ..வெற்ற்ரி ஹாப்பி டு ஸீ யூ ஹியர் மியாவ்
    வெல்கம் பின்னே :) தொடர்ந்து எழுதவும் மறுபடியும் அந்த கலகல பிளாக் காலத்தை நீங்கள் கொண்டு வரணும்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதுதான் ஆசை அஞ்சு... 450 கொமெண்ட்டுகள்கூட எழுதிக் கலக்கிய காலமெல்லாம் இனியும் திரும்ப வருமா தெரியல்ல.. ஏனெண்டால் உலகம் எங்கேயோஓஓஓஓ போயிட்டுது.. இருந்தும் முடியும்வரை தொடர ஆசை .. எல்லோரும் ஒத்துழைக்கோணும்.. மிக்க நன்றி அஞ்சு..

      Delete
  4. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நானும்
    ப்ளோக் எழுதி நாளாச்சு நானும் வர எண்ணி உள்ளேன் நேரம்தான்பிரச்சி சினை ..முயற்சித்திருவினையாகும். வாங்க வாங்க

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ் நிலாமதி.. மறக்காமல் வந்திருக்கிறீங்க வாங்க வாங்க... நிட்சயமா ஏழுத தொடங்குங்கோ, நானும் முடிந்தவரை வந்து போவேன்ன்.. தம்பி ஜூஜினும் வருவார் என நம்புறேன்.. மிக்க நன்றி.

      Delete
  5. எங்கேயோஓஓஓஓஓஓஓஒ கேட்ட குரல் :) இந்த ராசிக்கு தலைக்கு மேலிருந்தவர் இறங்க ஆரம்பித்துள்ளதால் கானாமல் போனவர் எப்படியும் வந்துவிடுவார் என அண்டார்டிகா சித்தர் சொல்கிறார் . :)

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆவ்வ்வ்வ் பபபபபச்சைப்ப்.....பூ... அஞ்சு ஓடியாங்கோ, அதாரது ஜெய்ட தவத்தைக் கலைத்தது... சித்தர் அண்டாட்டிக்காவுக்கு இடம்பெயர்ந்திட்டாரோ?:) ஹா ஹா ஹா இனி அப்போ ஒபாமா அங்கிளின் மீட்டிங்கை அண்டாட்டிக்காவில வைக்க வாணாம் என சொல்லி அனுப்போணும்... வாங்க ஜெய் வாங்க...

      Delete
  6. சோதனை மேல் சோதனை அவ்வ்வ்வ் Your comment will be visible after approval. :)திரும்ப அப்படியே எஸ்கேப் ஆகிடாதீங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல ஜெய், என்னை எங்கின கண்டாலும் உடனே புடிச்சூஊஊஊ தேம்ஸ்ல தள்ளிடோணும் என ஆடர்:) ஆம்ம்ம்ம் அதுதான் பயத்தில அப்புறூவல் போட்டிட்டேன்ன்... சரி சரி சமையல் குறிப்பு ரெண்டு போடுங்க ஜெய்.. கீரைக்கும் கடைக்கும் எதிரிக்கடை வேணும்(எதிர்க்கடை இல்லாமையால் அங்கின மீன்குஞ்சொண்டு வாயில வாற ரெசிப்பி எல்லாம் எழுதித் தள்ளுறா:)).. நான் அஞ்சுவைச் சொல்லல்லே:)).. மிக்க நன்றி ஜெய்.. நீங்களும் தொடர்ந்து வாங்கோ களமிறங்குங்கோ..

      Delete
  7. வணக்கம் கும்புடுறேனுங்கோ

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ் இது நம்மட சுரேக்காவோ? இப்பூடி மெலிஞ்சிட்டீங்களே.. நிஜமா இது இப்போதைய படமோ?? வாங்கோ வாங்கோ.. நானும் முன்னங்காலால கூப்பிக் கும்பிடுறேன்.. தொடர்ந்து வரோணும் நீங்க என நான் தலைகீழ் ஆசானிடம் சொல்லி செய்வினை செய்யப்போறேன்ன்:).. ஹா..ஹா.. மிக்க நன்றி சுரேக்கா.

      Delete
  8. Replies
    1. வாங்கோ கருண் வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க என நினைக்கிறேன் மிக்க நன்றி... வேடந்தாங்கல் எனும் ஊர் எனக்கு ஏனோ ரொம்ப பிடிக்கும் அங்கு பறவைகள் சரணாலயம் இருப்பதால்.. ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே எனும் பாடலில் இவ்வரிகள் வரும் அப்போ தொடக்கம் எனக்குப் பிடித்த ஊராகிவிட்டது வேடந்தாங்கல்... மிக்க நன்றி.

      Delete
  9. வாங்கோ அதிரா, வணக்கம். வலைப்பக்கம் தங்களின் மீண்டும் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    //என்னை வாழ்த்தி ஆஜீர்ர்ர்ர்ர்ர்ர்ர் வதியுங்கோ:)...//

    மாட்டேன். பூசாரை ஆசீர்வதிப்பவர்கள் குரங்கார் என்று ஆகிவிடும்.

    (மேலே காட்டியுள்ள படத்திலிருந்து புரிந்து கொண்டேன்)

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணன் வாங்கோ வாங்கோ... எல்லோரும் வருவீங்க என எதிர்பார்த்தேன் ஆனா இவ்ளோ ஸ்பீட்டா எல்லோரும் வருவீங்க என எதிர்பார்க்கவேயில்லை.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு...

      ஹா ஹா ஹா கரீஈஈஈட்டாப் புரிஞ்சிட்டீங்க.. படம்போடும்போது எனக்குள் நினைச்சுச் சிரிச்சேன் அதை அப்படியே சொல்லிட்டீங்க.. மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
  10. வாங்கோ வாங்கோ ரொம்ப நாளா உங்களை தான் தேடிட்டு இருக்கோம்...

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ் அபி வாங்கோ அபி வாங்கோ... என்னாது என்னைத் தேடிட்டு இருந்தீங்களோ?:) ஹையோ நினைச்சேன்ன் இப்போ தேம்ஸ் பாசி படர்ந்திருக்கு இப்போ போய் தள்ளினா அதிராவால் எழும்பி ஓடமுடியாதென அஞ்சுவோட கூட்டுச்சேர்ந்த சதிதானே:) நா மாட்டேன்ன்.. இப்போவெல்லாம் கிரீஸ் பூசிட்டுத்தான் திரிகிறேன் பிடிச்சுப் பாருங்க பார்ப்போம்ம்:)..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி அபி... மிகவும் ஹப்பியா இருக்கு தொடர்ந்து வாங்கோ..

      Delete
    2. ஆமா கூட்டு சதி குழம்பு சதி பொரியல் சதி ..இந்த குண்டு பூனையை தள்ளி விட போய் நானும் அபியும் கைகாலை உடைச்சிக்கிறதுக்கா :)

      Delete
    3. ஹா ஹா ஹா அது அது உந்தப்பயம் எப்பவும் இருக்கோணும்:)

      Delete
  11. வந்திட்டாங்க அதிரா..இனி பட்டையைக் கிளப்புவோம்ல.நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ ஆசியா.... அதிகம் கொக்கரிக்கும் கோழி சிறிய முட்டைகளை இடுமாம்ம் அப்பூடி ஆகிடக்குடா என் நிலைமை என பயந்து பயந்தே கால் வச்சேன்.... பட்டையைக் கிளப்பிடுவோம்:) மிக்க நன்றி ஆசியா.

      Delete
  12. ஆதிராவுக்கு __()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ . :-) திரும்ப இங்க பார்க்க சந்தோஷமா இருக்கு. கலக்குங்கோ!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதீஸ்.

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ் வாங்கோ றீச்சர் வாங்கோ.. இத்தனை கும்பிடு போட்டு என்னைக் கூச்சப்பட வச்சிட்டீங்க:)... எனக்கும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்த மகிழ்ச்சியா இருக்கு... இனிமேல் வாணாம் நேரம் போதாது எனத்தான் நினைத்திருந்தேன், ஆனா அஞ்சுவின் அன்புத் தொல்லையால் எனக்கும் மனதில் உற்சாகம் பிறந்திட்டுது. வாங்கோ இமா எல்லோரும் கலக்கலாம்.. மிக்க நன்றி.

      Delete
    2. ஆஹா !! என்கண்ணில் பட்டிருச்சே கட்டாயம் சொல்லியாகணுமே சொல்லட்டுமா சொல்லட்டுமா :)
      அ அ அ

      Delete
    3. நோஓஓஒ நேக்குத் தமிழ்ல டீ ஆக்கும் இப்போ நான் பிழை விடுவதேயில்லை இது அந்த , அஞ்சுட பின் வளவில் இலையில்லாமல் நிற்கும் மரத்தின் மீது சத்தியம்ம்ம்ம்... இப்போ சொல்லுங்கோ பார்ப்போம்ம்ம் ஓஓஓ லலலாஆஆ:)

      Delete
    4. ஹய்யயோ ஹையோ :) குறில் நெடில் ஆகியது நல்லா பாருங்க கமெண்டை
      ஆ ஆ ஆ

      Delete
    5. கிக் கிக் கிக்க்க்க்க்க் அதூஊஊஊஊஊஊ நான் அங்கின நெடில்தான் பாவிப்பேனாக்கும்..க்கும்..க்கும்..:) ஹையோ எப்பூடில்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கு முருகா:)

      Delete
  13. NINDA IDAIVELIKKU PIRAKU BLOG PAKKAM UNGALAI PAARTHATHIL MIKKA MAKILCHI AKKA:)

    NERAM KIDAIKKUMPOTHU AVVAPPOTHU BLOG THUSI THATTIKKONDIRUNGAL.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மகேஷ்... அக்காவை மறக்காமல் வந்திருக்கிறீங்க, மிக்க நன்றி... தொடர்ந்து எழுதோணும் எனத்தான் வந்திருக்கிறேன், இப்படியே அனைவரின் ஒத்துழைப்பும் இருப்பின் தொடரலாம் இல்லையெனில் மனம் சோர்ந்திடும்.. மிக்க நன்றி மகேஷ்.

      Delete
  14. வணக்கம் அதிராஆஆஆஆஆஆஆவ்!! மியாஆஆஆஆஆஆவ்!! எல்லாரும் நலம்தானே?? 😊

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் மஞ்சள் பூஊஊஊஊஊஊ மீ இஸ் ஹைடிங்கூஊஊஊ.. என்னோட படு கோபமா இருக்குமென நினைக்கிறேன் மகிக்கு:).. வாங்கோ மகி.. நலமோ நலமில்லையோ இந்த வருடம் தொடர்ந்து எழுதோணும் எனக் கங்கணம் கட்டி வந்திருக்கிறேன்.. நீங்களும் எல்லோரும் தொடர்ந்து எழுதோணும்... மியாவும் நன்றி மகி.

      Delete
    2. இன்னது கங்கணமா எங்கே கட்டியிருக்கீங்க ?? தங்கத்தில இல்லை வைரத்திலயா :)

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர் என்ர வைரக்கல்லுமேலயே கண்ணு இந்த பிஸ்க்கு.... என்னிடம் இமிடேஷன் மட்டும்தான் இருக்குதென்பதை இத்தால் சகலருக்கும் அறியத் த்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றேன்ன்ன்ன்ன்ன்... எங்கிட்டயேவா?:)

      Delete
  15. உங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தானபாலன் வாங்கோ.. மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      Delete
  16. akkaa, wish you happy new year, again ungala paathathula meeka magelche..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி வாங்கோ... அக்கா உங்களிடம் வராமலே விட்டிடுவேன் ஆனா நீங்க மறக்காமல் வருவீங்க மிக்க மகிழ்ச்சி யூஜின், மிக்க நன்றி.

      Delete
  17. உண்மைதான் பெரிய தலைமுறை மாற்றம் ஏற்பட்டு விட்டது. நான் ஸ்கூல் சேர்ந்தப்போ நீங்க கடைசியா எழுதீனீங்க. இப்போ காலேஜ் முடிக்க போறேன்.. :-) எங்களை மாதிரி சின்ன பசங்க சீக்கிரம் மறந்திடுவோம். அப்புறம் வணக்கம் சொல்ல மாட்டோம். :-)
    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    அடிக்கடி எழுதுங்க !!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹாஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). வாங்கோ கவிக்கா வாங்கோ... ச்ச்சும்மா ஒரு பேச்சுக்கு எழுதினா உடனேயே அதிராவை தேMஸ்ல தள்ளிவிடத் துடிக்கிறதே வேலையாப்போச்ச்ச்ச்ச்ச்:). நல்லவேளை நீங்க மறக்க முன் நான் களமிறங்கிட்டனே... மிக்க நன்றி கவிக்கா தொடர்ந்து வாங்கோ. யேஏஏஏஏச்ச்ச்ச் அடிக்கடி எழுதி அஞ்சுவை தேம்ஸ்ல தள்ளுறதுதான் என் குறிக்கோள்:).

      Delete
  18. வாழ்த்துக்கள். அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பாரதி, முதல்தடவையாக வந்திருக்கிறீங்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.. உங்கள் புளொக் ஐடி கொஞ்சம் தாங்கோவன்.

      Delete
  19. வாவ்! நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் சொல்றேன்..முந்தாநாள் உங்களை நினைச்சேன். வருக..வருக.. தொடர்க..வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. முகப்புத்தகத்தில் எல்லாமே மனுஷங்க அவங்க மத்தியில் ஒரே ஒரு குண்ண்ண்ண்டு பூனை இருந்ததே எங்கே காணோம்னு தானே நினைச்சீங்க கிரேஸ் :)

      Delete
  20. வாவ்வ்வ்வ் வாங்கோ கிரேஸ் வாங்கோ, இல்லை சிலநேரங்களில் அதிர்வலைகளால் நமக்கு உள்ளுணர்வு சொல்லும், பெரும்பாலும் நாம் இவற்றை ஆராய்வதில்லை அதனால் காரணம் புரிவதில்லை. மிக்க நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  21. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ஒரு ஈ மெயில் சபஸ்க்ரிப்ஷன் வைக்கக் கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ, முதன் முதலா வந்திருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி. ஓ நான் இதுவரை Subscription பற்றி யோசிக்கவில்லை, எப்படி வைப்பதெனவும் ஆராய்ச்சி பண்ணவில்லை, முடிந்தால் செய்துவிடுறேன்.. மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.