நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Saturday, 8 April 2017

நான் ஒரு அரை லூஸு:), எச்சரிக்கை!!!

து நடந்து இப்போ ஒரு மாதமாகுது, சொல்ல நினைச்சு காலம்தான் ஓடிவிட்டது.. இந்தச் சம்பவத்தைச் சொல்ல முன்னர், கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்லிடுறேன். நான் ஒரு அரை லூஸு:).. அதாவது முழு லூஸு அல்ல(நோட் திஸ் பொயிண்ட்:)).

ன்னொன்று யாராவது கொஞ்சம் செண்டிமெண்டாகப் பேசினால், அப்படியே நம்பி மருண்டிடுவேன், யாரும் கண் கலங்கினால், தாங்க மாட்டேன். சிரிக்கும் எல்லோரையும் நல்லவர்கள் என நம்பிடுவேன்... நான் படித்தபோது கொஞ்சக்காலம் ஹொஸ்டலில் இருந்தேன்.. அப்போ என் நண்பியைப் பார்த்து அம்மா சொன்னா (நகைச்சுவையாகத்தான்).. யாராவது சிரிச்சால், அதிரா பின்னாலே போயிடுவா கொஞ்சம் கவனியுங்கோ என:) ஹா ஹா ஹா கர்ர்:)..

ன்னுமொன்று ஒரு விசயத்தை திரும்பத் திரும்ப என்னிடம் 3,4 தடவைகள் பொறுமையாகக் கேட்டால், மனம் இளகி, இருப்பதை எல்லாம் கழட்டிக் கொடுத்திடுவேன், 2,3 தடவைகளுக்கு மேல் ஸ்ரோங்காக, நோ சொல்ல வராது எனக்கு.. இதனாலோ என்னமோ திருமணமான காலம் தொடங்கி, என் கணவர் என்னிடம் அதிகம் யூஸ் பண்ணியிருக்கும் வசனம்..  “யூ ஹாவ் எ குட் ஹார்ட் அதிரா”...[ஆவ்வ்வ் எதுக்கு இப்போ தேம்ஸ்கரை, கூவக்கரை, கிழக்கால வடக்கால இருந்தெல்லாம் புகைப்போகுது:)]இப்படி இன்னும் அடுக்கலாம் வேண்டாம் விட்டிடுவோம்:). விசயத்துக்கு வருகிறேன்.

பிரித்தானியாவில், பெரும்பாலான கொம்பனிகளின் மெயின் ஒபிஸ், இங்கிருக்கும், மிகுதி வேலைகள்.. ரெக்னிக்கல் டிப்பார்ட்மெண்ட், எஞ்சினியறிங் டிப்பாட்மெண்ட் எல்லாம், இந்தியாவிலேயே இருக்கிறது. முக்கியமாக, ரெலிஃபோன், இண்டநெட்.. இவை அனைத்தும் இந்தியாவிலிருந்துதான் பேசிப்பேசி நமக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைப்பார்கள்.

நாம் நமக்கு ஏதும் பிரச்சனை எனில், இங்குள்ள ஒபிஸ் க்கு கோல் பண்ணுவோம், இவர்கள் பிரச்சனையைக் கேட்டு விட்டு, இந்தியாவிற்கு கொனெக்ட் பண்ணி விடுவினம் அல்லது சொல்வார்கள், லைனை கட் பண்ணுங்கோ டெக்னிக்கல் டிப்பார்ன்மெட்டிலிருந்து பேசுவார்கள் என, உடனே இந்தியாவிலிருந்து கோல் வரும்...

னா எதுவாயினும் முதலில் பெயர், அட்றஸ், போன் நம்பர் எல்லாம் செக் பண்ணி பின்னர்.. பாஸ் வேர்ட்டும் கேட்ட பின்னர் ஆரம்பிப்பார்கள்.. இதுதான் நோர்மல்.

ங்கு இன்னொரு விசயத்தையும் நான் சொல்லோணும், இங்கு நாம் இருக்குமிடத்தில் எல்லாமே இங்கத்தைய வெள்ளையர்கள்தான்.. கலப்பே கிடையாது.. விரல் விட்டு எண்ணலாம் 2,3 சைனீஸ் குடும்பங்கள்.. ரெஸ்டோரண்ட் போட்டிருப்பதால் இருக்கிறார்கள்.. மற்றும்படி கொஞ்சத் தூரத்தில் ஒரே ஒரு தமிழ்க் குடும்பம்.. நம் கொண்டாட்டம், போக்கு வரத்து எல்லாம் இங்குள்ள மக்களோடுதான்.

தனாலே எனக்கு தமிழ் பேசுவது, தமிழ் குரலை, எங்காவது தமிழ்ப் புத்தகத்தை... அல்லது நம் நாட்டவரைக் கண்டாலே மிகவும் சந்தோசப்படுவேன்.. ஏதோ ஊரில் இருப்பதுபோல ஃபீல் பண்ணுவேன். இப்படி ஒரு வீக்னெஸ் என்னிடம் இருக்கிறது.

தனால இப்படி இந்தியாவிலிருந்து பேசும்போது, சிறியவர்கள்தானே.. நன்கு மடம் / சேர்  எனக் கதைப்பார்கள் [இங்கு அப்படிக் கதைக்காயினம்].. நீங்கள் இந்தியாவா என்றெல்லாம் கேட்பார்கள்.. ஆனா நாம் பதிலுக்கு கதை கொடுப்பதில்லை எதுக்கு என. இதுவரை தமிழில் யாரும் கதைக்கவில்லை.. அவர்கள் அங்கிருந்து பேசுவது ஓபின் ஒபிஸாக இருக்குமென நினைக்கிறேன், (பக்கிரவுண்டில்)பின்னால் எல்லோரும் பேசுவது சிரிப்பது... கசமுசவென ஒரே மார்கட் ஃபீலிங்காக இருக்கும்.
//////////////////////////////////////////////////ரீ பிரேக்//////////////////////////////////////////////////////
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ப்படி நிலைமை இருக்கும்போது, நமது வீட்டு நெட்டில் ஒரு பிரச்சனை வந்துவிட்டது, ஸ்பீட் குறைந்துவிட்டது போல இருந்துது, கோல் பண்ணி பேசியபோது, உடனேயே ....அதைச் செய்யுங்கோ, இதைக் கழட்டுங்கோ.. என இப்படி ஓடர் போட்டே, திருத்தி விட்டார்கள், அலுவல் முடிந்துவிட்டது.

ம்மிடம் இருப்பது  Fiber internet... இது மிகவும் ஸ்பீட்டாக இருக்கும், download speed 38 mp க்கு குறையாது. [எதுக்கு இதனை சொல்கிறேன் என்பது, கீழே படிக்க புரியும்].

டுத்தநாள், என் கஸ்டகாலமோ என்னமோ எனக்கு லீவு, தனியே வீட்டில் இருக்கிறேன், கொபியூட்டரில் இருந்தேன் குஷியாக. அப்போ ஒரு கோல் வந்துது,  “அன்னோன்” என விழுந்துது.. நம்பர் காட்டவில்லை.

வெளிநாட்டுக் கோல்கள் சிலது அப்படி வரும் என்பதனால் டக்கென எடுத்து ஹலோ சொன்னேன்...

திரே ஒரு இந்திய தம்பி.. அதே பகிரவுண்ட் மியூசிக் கேட்கிறது, சந்தேகமே இல்லை... இதே கொம்பனியிலிருந்து பேசுவதுபோலவே ஆரம்பிச்சார்...

னா பெயர் விபரம், பாஸ்வேர்ட் எதுவும் கேட்கவில்லை.. அதுபற்றி சிந்திக்ககூட எனக்கு ரைம் தரவில்லை அவர்.

லோ மடம்  நான் ........  இருந்து பேசுகிறேன்(எங்கள் இண்டநெட் கொம்பனி பெயர் சொன்னார்) ஹவ் ஆ யூ... ஆ யூ பிஸி?.. என ஆரம்பித்தார்.. வழமைபோல ஆங்கிலத்திலேயே பேசினார்.

நானும் தொடர்ந்தேன், என்னை சிந்திக்கவே ரைம் கொடுக்கவில்லை, அப்ப்படியே.. உங்களுக்கு நெட் பிரச்சனை , கொம்பியூட்டர் நெட் ஸ்லோவாக இருக்கிறது  என, நேற்று பேசியிருந்தீங்க, உங்களிடம் இருப்பது ஃபைவர் இண்டநெட்.. எனவே ஸ்பீட் குறையக்கூடாது madam , இதுக்கு காரணம் உங்கள் கொம்பியூட்டரில் வைரஸ் இருக்கலாம்.. கொஞ்சம் கொம்பியூட்டரை ஓன் பண்ணுங்கோ, நான் கெல்ப் பண்ணுகிறேன் என்றார்.

ம் ஊர்க் குரலைக் கேட்டதும் எனக்கு கொஞ்சம் கூடப் பயமோ சந்தேகமோ எழவில்லை, ஆனாலும் கொஞ்சம் யோசித்தேன் நேற்று திருத்தி முடிஞ்சுதே என, அதுக்கு அந்த தம்பி இடைவேளை விடவில்லை சிந்திக்க, சிரிச்சுச் சிரிச்சுப் பேசினார்... இருப்பினும் என்னில் இன்னொரு கெட்ட/நல்ல பழக்கம் இருக்கு.. எதையும் பொஸிடிவ்வாகவே எடுத்துக் கொள்வேன், 90 வீதமும் எனக்கு சந்தேகம் கிடையாது. யாரும் என்னை ஏமாத்துவதற்கு.. ஒன்றும் செய்யத் தேவையில்லை, சிரிச்சபடி நைஸாகப் பேசினாலே போதும், நம்பிடுவேன். நம்பக்கூடாது என நினைப்பேன், ஆனா அந்நேரம் கவிண்டிடுவேன்:(.

ப்போ , கொம்பியூட்டர் ஓன் லதான் இருக்குது என்றேன், அப்போ ஓகே மடம்... கொஞ்சம் இந்தக் கீயுடன்.. இந்த நம்பரை அடியுங்கள்.. அதில் நான் சொல்லும் பாஸ் வேர்ட்டை அடியுங்கள்.. எனச் சொல்லிட்டே போனார்.. நானும் அடிச்சேன்.. எங்கள் ஸ்கிறீனில்.. கடகடவென ஓடி, 5500 எரர்ஸ் இருக்கு என காட்டியது...

கேட்டார் எத்தனை காட்டுது என, 5500 எனச் சொன்னேன்... ஓ மை கோட் மடம்.. இதனால்தான் உங்கள் இண்டநெட் ஸ்பீட் குறைந்துவிட்டது, டோன் வொறி மடம், நாம் இப்பவே இதனை திருத்தி விடுறோம் என்றார்... இண்டநெட் கொம்பனிக்காரர், நம் கொம்பியூட்டரை எல்லாம் எதுக்கு திருத்த வருகிறார்கள் என நினைச்சேன், ஆனாலும்... இல்ல நம் ஊர்த் தம்பி ஆச்சே.. ஏதோ நல்ல மனதோடு சொல்கிறார் என மனதை மாற்றிவிட்டேன்.

டையில் கேட்டார்.. நீங்க இந்தியாவா மடம்?.. இல்ல இலங்கை என்றேன், அதுக்கு மேல் அதுபற்றி அவரும் கேட்கவில்லை, நானும் எதுவும் கேட்பதில்லை விடுப்ஸ்.

ன்ன வைரஸ் யூஸ் பண்ணுறீங்கள்? அதிகமாக என்ன பிரெளசர் பாவிப்பீங்க என்றெல்லாம் சிரிச்சுக்கொண்டே கேட்டார், நானும் எல்லாம் சொல்லிட்டேன்:).

ப்போ சொன்னார் இதை டவுட்லோட் பண்ணி இன்ஸ்டோல் பண்ணுங்கோ என.. கட கடவென எழுத்துக்களைச் சொன்னார், உச்சரிக்கவில்லை.. அது ரீம் வியூவர்.

நானும் செய்தேன், கொஞ்சம் டவுட் வர ஆரம்பித்தது அப்போ, ஏனெனில் ரீம் வியூவர் எனில் என்னவென எனக்கு தெரியும். சரி இப்போ அதன் பாஸ் வேர்ட்டைச் சொல்லுங்கோ என்றார், சொல்லிட்டேன், எங்கள் கொம்பியூட்டருக்குள் வந்திட்டார்... அப்போதான் எனக்கு நடுக்கம்போல வந்திட்டுது, எதுக்கு ரீம் வியூவர் என்றேன், சிரிச்சுச் சிரிச்சே.. இல்ல மடம் இப்பவே அந்த எரர்ஸ் ஐக் கிளீன் பண்ணி விடுறோம் என்றார்.

ப்பட்டியே, அந்த பொக்ஸ் ஐ மறைத்து.. ரீம்வியூவர் அம்புக்குறி மட்டும் சைட்டில் ஒளிச்சிருப்பதுபோல என் ஸ்கிரீனில் தெரிஞ்சுது. உடனே சொன்னார், மடம் பிளீஸ் சுவிஜ் ஏதும் அல்லது கொம்பியூட்டரில் கை வைக்காதீங்கோ, இப்ப ஃபோனைக் கட் பண்ணுங்கோ, 30 செகண்ட்டில் எங்கட எஞ்சினியர் உங்களோடு தொடர்பு கொள்வார் என்றார்.

ட் பண்ணிய கையோடு அடுத்த கோல், ஹலோ மடம் என நம்மூர் பெண்பிள்ளை பேசியது, அது சொல்லிச்சுது, ஓகே இப்போ இதை ரைப் பண்ணுங்கோ, இந்த சேர்ஜ் பாரில் இதை சேர்ஜ் பண்ணுங்கோ என.

நான் அரை லூஸுதானே? முழு லூஸு அல்லவே? எனக்கு புரிந்து விட்டது, இது தப்பாக ஏதோ நடக்கிறது என.. ஆனா எனக்கு பயம் அதிகம், பேசாமல் இருப்பேனே தவிர,  முகம் முறிக்கப் பேசமாட்டேன், சடாரென மறுப்புச் சொல்லவோ எதிர்த்துப் பேசவோ இலகுவில் வராது வாயில். ஏதோ இவர்கள் என்னைச் சுற்றி, இங்கே நம் வீட்டிலேயே நிற்பதுபோல நடுங்கியது உடம்பு, ஆனாலும் ஒரு ஆர்வம்.. என்னதான் நடக்கிறது எனப் பார்ப்போமே என, சொன்னதை செய்தேன்.

ந்தப்பிள்ளை சொன்னதை ரைப் பண்ணிய இடத்தில், காட்டியது, உங்கள் கொம்பியூட்டரில் தப்பில்லை, இது நெட் கொம்பனி தவறான றூட்டரை தந்திருக்கிறார்கள், இதுக்கு நஸ்ட ஈடாக அவர்கள் உங்களுக்கு, 500 பவுண்ட்ஸ் பணமும், புது றூட்டரும், அனுப்பி வைக்கோணும் என[வாசிக்கச் சொன்னா, வாசிச்சுக் காட்டினேன்]. இத்தனையையும் பார்த்த வண்ணம், ரீம் வியூவர் ஒளிச்சிருப்பது தெரியுது ஸ்கிரீனில்.

டனே அவ சொன்னா, நஸ்ட ஈடு பெற்றுக்கொள்ள நான் இப்பவே கெல்ப் பண்ணுகிறேன், விடக்கூடாது என்றா. இவர்கள் அந்தக் கொம்பனி ஆட்கள், அவர்களே அதனை எதிர்த்துக் கதைப்பது ஏற்க முடியாதுதானே.. 90 வீதமும் என் மனதில் முடிவாச்சு.. இது தவறான கோல் என..

னா என்னதான் பண்ணப்போகினம் பார்ப்போமே, இவ்ளோ தூரம் வந்தாச்சே இனி என்ன என நினைச்சேன்.. கை கால் நடுங்குது இருப்பினும் ஆர்வக் கோளாறு:).

னொன்று சொல்ல மறந்திட்டேன், அந்தக் கேள், பேசத் தொடங்கும்போதே, வீட்டில் யாரெல்லாம் இப்போ இருக்கிறீங்க என கேட்டா, நான் மட்டும் என உளறினேன். இப்போ வேறு என்ன எல்லாம் ஓன்ல இருக்கு, உங்கள் மொபைல் எங்கே அதனை சட்டவுண் பண்ணுங்கோ இல்லையெனில் டிஸ்ரேப்பாகும் என்றா.. நான் பண்ணவில்லை (நம்பிக்கையை இழந்திருந்தேன்) அதனால ஓகே பண்ணிட்டேன் என்றேன்.

ப்போ இன்னொரு கொஞ்சம் பாஸ்வேர்ட் சொன்னா அதை ரைப் பண்ணினேன், உடனே எங்கள் கொம்பியூட்டரில் ஸ்கிறீனில்..... எங்கள் நெட் கொம்பனி லோகோ பின்னாலே இருக்க, முன்னாலே எங்கள் பிரித்தானியாவில் இருக்கும் அத்தனை Bank உம் (பெயர்கள்) வந்திருந்துது.

கே மடம், இப்போ உங்கள் பாங்கை செலக்ட் பண்ணுங்கோ என்றா... நாந்தான் அரை லூஸு மட்டுமே முழு லூஸு அல்லவே(இதிலயும் பெருமை எனக்கு:)) உடனே சொன்னேன், சொறி எனக்கு எங்கள் பாங் விபரம் எதுவும் தெரியாது என, உடனே கேட்டா.. பதறுவதுபோல.. ஏனெனில் பழம் நழுவிப் பாலும் விழும் நேரமெல்லோ.. ரீம் வியூவரும் ஓரமா, ரெடியா நிக்கிறார்..

டனே கேட்டா, அப்போ உங்களுக்கு தெரியாதா? உங்கள் பாங் விபரம் யாரிடம் இருக்கு... அது கணவருக்குத்தான் தெரியும் என்றேன், அவர் எங்கே மடம்?.. வேர்க்ல இருக்கிறார்..

வவுக்கு ஒரு தடுமாற்றம்போல வந்திட்டுது, ஓகே அப்போ அவரிடம் சொல்லி பாங் மனேஜரை தொடர்பு கொண்டு நஸ்ட ஈட்டைப் பெறச் சொல்லுங்கோ எனச் சொல்லி, பாய் கூடச் சொல்லவில்லை, சடாரென ஃபோனை கட் பண்ணிட்டா. இதுக்கு எதுக்கு மனேஜரை தொடர்பு கொள்ளோனும்.. அவ ஏமாந்தமையால் வார்த்தைகள் தடுமாறிட்டா.

னா ரீம் வியூவர், உடனே ஏதோ வேர்க் பண்ணுவது தெரிஞ்சது, என் மெளசை என்னால் ஒப்பரேட் பண்ண முடியவில்லை, உடனே பிளக்கை கழட்டி, பவரை ஓவ் பண்ணிட்டேன்.

டனே இங்கத்தைய கொம்பனியோடு பேசினேன், செக் பண்ணி சொன்னார்கள் அது தவறான கோல், நம்மவர்கள் எடுக்கவில்லை, புளொக் பண்ணி விடுறோம் என.

தில ஒரு உண்மை என்னவெனில், ஒரு வெள்ளையர் இப்படிப் பேசியிருந்தால் கொஞ்சமாவது சந்தேகப் பட்டிருப்பேன், நம் ஊரவர்களாச்சே, நமக்கு துரோகம் பண்ணுவினமோ எனத்தான் மனதில் ஓடியது, பயங்கரமாக நம்பிட்டேன்.

திரிகளைக் கூட மன்னிச்சிடுவேன், இப்படியான நம்பிக்கைத் துரோகிகளை உதட்டால் கூட மன்னிக்க மாட்டேன், கடவுளும் மன்னிக்க மாட்டார்.
“இதுவும் கடந்து போகும்”.

னக்கு பின்புதான் கோபம் கோபமாக வந்துது, ஒரு பாங் ஐ, செலக்ட் பண்ணி, பொய் விபரங்களைக் கொடுத்திருக்கலாமோ என:), ஆனா அந்தளவுக்கு தைரியம் எனக்கில்லை:(.

ஊசிக்குறிப்பு....
ரேடியோவில் தவழ்ந்து வந்து காதில் விழுந்த கவிதை வரிகள்... நினைவில் இருப்பதை வச்சு எழுதுகிறேன்...

சின்ன வயதில் சகோதரங்களை 
திருத்த ஆசைப்பட்டேன் முடியவில்லை
கொஞ்சம் வளர்ந்ததும் பெற்றோரைத் 
திருத்த ஆசைப்பட்டேன் முடியவில்லை

பள்ளிக்குப் போனதும் நண்பர்களைத் 
திருத்த ஆசைப்பட்டேன் முடியவில்லை
வேலைக்குப் போனதும் ஊரைத் 
திருத்த ஆசைப்பட்டேன் முடியவில்லை

திருமணமானதும் மனைவியைத் 
திருத்த ஆசைப்பட்டேன் முடியவில்லை
குழந்தைகள் கிடைத்ததும் அவர்களைத் 
திருத்த ஆசைப்பட்டேன் முடியவில்லை

வயதாகி உடல் தளர்ந்து 
தள்ளாடும் போதுதான் எண்ணுகிறேன்..
வாழ்க்கையில் திருத்த வெளிக்கிட்டு 
யாரையும் என்னால் திருத்த முடியவில்லை
அப்போ, சின்ன வயதிலேயே 
நான் கொஞ்சம் மாறியிருக்கலாமோ???
====================================_()_=================================

107 comments :

 1. உங்கலுக்கு நல்ல மனது. இவைகலீல் கூடிய கவனம் தேவை
  ஊசிக்குறிப்பு கவிதை அருமை
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் வாங்கோ... முதலாவதா வந்திருக்கிறீங்க.. இன்று உங்களுக்கே ஆயா சுட்ட மேத்தி பக்கோடா:).

   ///உங்கலுக்கு நல்ல மனது///
   பார்த்தீங்களோ மொகமட்.. புதுசா வந்த உங்களுக்கே இது தெரியுது.. இங்கின ஆருக்குமே தெரியமாட்டுதாம்ம்ம் கர்:) தேம்ஸ்ல தள்ளவே தேடித் திரியினம்:).. ஒரு நல்ல மனதுடைய பிள்ளையைத் தேம்ஸ்ல தள்ளினால்ல்.. ஒரு வீட்டுக்கு அல்ல.. ஒரு நாட்டுக்கு.. ஏன் இந்த உலகத்துக்கே இழப்பெல்லோ:)..

   சரி சரி என் சோகம் என்னோடு போகட்டும்:).. ஹா ஹா ஹா.

   உண்மைதான் கவனமாத்தான் இருக்கோணும் என நினைக்கிறேன், ஆனா அந்நேரம் கவிண்டிடுறேன்ன்..

   இந்த ழ/ள போலவேதேன்ன்ன்ன்:).. சரி சரி புதுசா வந்திருக்கும் உங்களை ஓவராக் குயப்பிட்டேன்ன் பயந்திடாதீங்க:) அதிரா இப்பூடித்தேன்ன்:)..

   மிக்க நன்றி வரவுக்கு.

   Delete
  2. மன்னிக்க வேண்டும் நான் ஏற்கனவே இரண்டு முன்று முராய் வந்துள்ளேன்

   Delete
  3. அச்சச்சோ தமிபி மொகமெட்.... நான் அந்த முதலாவதைச் சொல்லல்லே:).. நீங்க பலதடவைகள் வந்திருக்கிறீங்க. நான் சொன்னது, இங்கு பின்னூட்டமிடுவதில் முதலாவதா வந்திருக்கிறீங்க என:)...

   உங்களுக்கு இங்கு பல அனுபவங்கள் தெரிஞ்சிருக்காது:).. இதற்கு முந்தின பதிவுக்கு நீங்க வரவில்லை... நேரம் இருப்பின் கொஞ்சம் போய் அதன் ஆரம்பக் கொமென்ஸ்ட்களை படிச்சுப் பாருங்கோ புரியும்.. முதலாவது பின்னூட்டத்துக்கு என்ன பரிசு... 2 வதுக்கு என்ன பரிசு என்பதெல்லாம்:).

   மிக்க நன்றி, குழம்பிப்போய் இருக்காமல் கேட்டு தெளிவடைவமைக்கு...

   Delete
 2. ஒண்ணு மட்டும் நல்லா புரியுது இந்த பூனை எங்கேயோ செமயா வாங்கிக் கட்டி இருக்கு
  டீம் வியூவர் கொடுத்தீங்க இல்ல நீங்க கொடுத்து ஐந்து நிமிடம் போதும் உங்கள் கணனியில் உள்ள எல்லாத்தையும் அவங்க சுட்டு இருப்பாங்க
  ஐ மீன் வடை மிஸ்ஸிங் ஹா ஹா ஹா இன்டெர்நெட் ஸ்லோ ஆனா முதல்ல ஸ்பீட் செக் பண்ணுங்க பின்னர் Router ஐ re configure பண்ணுங்க முடியலையா ரூட்டர் மாத்துங்க அதை விட்டுத்து அவ பேசினா இவ பேசினா என்று உங்க பெர்சனல் விசயங்களை அவங்க கிட்ட கொடுத்திட்டீங்க வாழ்த்துகள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சீராளன் வாங்கோ.. எங்கே அடிக்கடி காணாமல் போயிடுறீங்க? முதலில் அந்த பேஸ்புக்கை டி அக்டிவேட் பண்ணிடுங்கோ சொல்லிட்டேன்ன்:).

   //சீராளன்.வீSaturday, April 08, 2017 12:39:00 pm
   ஒண்ணு மட்டும் நல்லா புரியுது இந்த பூனை எங்கேயோ செமயா வாங்கிக் கட்டி இருக்கு///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்படி எந்த அசம்பாவிதமும்:) இன்னும் நடக்கல்ல.. நம்போணும்:).

   ///டீம் வியூவர் கொடுத்தீங்க இல்ல நீங்க கொடுத்து ஐந்து நிமிடம் போதும் உங்கள் கணனியில் உள்ள எல்லாத்தையும் அவங்க சுட்டு இருப்பாங்க ///
   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:), ஆனா ஒரு தைரியம் என்னன்னா, எல்லோரும் ஃபோனும், ஐபாட்டும்தான் பாவிப்போம், பாங் எல்லாம் ஃபோனில்தான் செய்வோம், கொம்பியூட்டரில் எதுவும் பெரிசா பண்ணுவதில்லை.. பவர்பொயிண்ட், எம் எஸ் வேர்ட்... பிரிண்டிங்.. இப்படியான வேலைகளுக்கு மட்டுமே பாவிப்பினம்.. நான் தான் அதிகம் புளொக்குக்காக பாவிப்பேன், ஆனா லும் பாங் ஃபோனில்தான் செக் பண்ணுவேன். அதனால பயப்பிட ஏதுமில்லை.

   ஆனா ஒண்டு:)... மிஸிஸ் பிரித்தானியா ஆகோணும் என்பதற்காகப் பக்கம் பக்கமா படங்கள் எடுத்து வச்சிருக்கிறேன் அதை சுட்டிட முடியுமோ.. படங்கள்தான் அதிகம் இருக்கு.

   இன்னொன்று, அவர்கள் ஏதோ ஃபைல் எல்லாம் போட்டிருந்தார்கள் எல்லாம் ரிமூவ் பண்ணி கிளீன் பண்ணிட்டோம், ஆனாலும்.. இனிமேலும் நாம் இதில் பாங் ..bank செக் பண்ணினால் அவர்களுக்கு ஏதும் தெரிய வருமோ?

   Delete
  2. ///அதை விட்டுத்து அவ பேசினா இவ பேசினா என்று உங்க பெர்சனல் விசயங்களை அவங்க கிட்ட கொடுத்திட்டீங்க வாழ்த்துகள் //
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)நல்லவேளை என்னிடம் வேறு எதுவும் கேட்கவில்லை.. மெயில் பாஸ்வேர்ட் கேட்டிருந்தாக்கூடக் கொடுத்திருப்பேன்.. என்னை நம்பமுடியாது:).

   மிக்க நன்றி சீராளன். மறுபடியும் உங்களை இங்கு எப்போ சந்திக்கலாம்?:).

   Delete
  3. நல்லது ! இனிமேலாவது கவனமா இருங்கள்

   காற்றைக் கூட நம்பமுடியவில்லை
   களவாடிச் செல்கிறது மூச்சை !

   அடிக்கடி வருகிறேன் முதலில் உங்கள் வலைப்பூ என் வலையில் தெரியும்படி இணைக்கணும் அதுதான் அடிக்கடி வராமைக்கு காரணம்
   நன்றி பூசாரே வாழ்க வளத்துடன்

   Delete
  4. //மிக்க நன்றி சீராளன். மறுபடியும் உங்களை இங்கு எப்போ சந்திக்கலாம்?:).//

   விரைவில் வருகிறேன் அட்டகாசமான ஒப்பாரி நோ நோ கவிதைகளுடன் நன்றி நன்றி

   Delete
  5. ////முதலில் உங்கள் வலைப்பூ என் வலையில் தெரியும்படி இணைக்கணும் அதுதான் அடிக்கடி வராமைக்கு காரணம் ///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ இவ்ளோ காலமும் இணைக்காமலா விட்டீங்க:).. விடுங்கோ நான் காசிக்குப் போறேன்ன்ன்:) இங்கு வருவோர் எல்லாம் இப்பூடித்தான் பேய்க்காட்டீனம் மீயை:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி மேஜரே..:).

   Delete
  6. ஆரம்பத்தில் இணைத்தே இருந்தது பூசாரே இடையில் என்ன நடந்ததோ தெரியல்ல உங்கள் வலைப்பூவின் புதிய பதிவுகள் எனக்கு தெரிவதில்லை இப்போ கட்டிப் போட்டு இருக்கிறேன் என் வலையில் இனி வருகிறேன் தங்கள் பதிவைக் கண்டதும் ...................ஷப்பா ஒரு வழியா சமாளித்தாச்சு மேஜரா கொக்கா

   Delete
  7. ///விரைவில் வருகிறேன் அட்டகாசமான ஒப்பாரி நோ நோ கவிதைகளுடன் நன்றி நன்றி///

   ஹா ஹா ஹா நீங்க என்னைத் திட்டுவதாயின் நிட்சயம் கவிதையில்தான் திட்டோணும் சொல்லிட்டேன்ன்:) ஏனெனில் உங்கள் இலக்கணத் தமிழ் பாதிதான் எனக்குப் புரியும்:).. அதனால திட்டினாலும் சிரிப்பேன்:)

   Delete
  8. /// மேஜரா கொக்கா///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உது என் கொப்பி வலதாக்கும்:).

   Delete
 3. என் வோட் எண்: 4

  தலைப்பு மிக அருமையும் பொருத்தமாகவும் உள்ளது. :)

  எச்சரிக்கை கதை நல்லா இருக்குது. எல்லோருக்குமே பயன்படக்கூடும். குண்டு தைர்யமாக ஏதேதோ செய்துள்ளது வியப்பாக உள்ளது. நல்லவேளை தப்பித்து விட்டீர்கள், அதிரா.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. நீங்க ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஊஊ:) ஆயாவுக்குச் சொன்னேன்:) ஹா ஹா ஹா..

   ///தலைப்பு மிக அருமையும் பொருத்தமாகவும் உள்ளது. :)///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) அப்போ நான் அரைலூஸேதான் என்பதனை இந்த மாபெரும் சபையில்:) வச்சு எல்லோர் முன்னிலையும் ஒத்துக் கொள்றீங்க அப்படித்தானே?:).. ஹையோ இந்த அநீதியக் கேட்க இங்கின ஆருமே இல்லயா:)..

   //எச்சரிக்கை கதை நல்லா இருக்குது. எல்லோருக்குமே பயன்படக்கூடும்.//
   அதற்காகத்தான் இங்கே எழுதினேன்...

   ///குண்டு தைர்யமாக ஏதேதோ செய்துள்ளது வியப்பாக உள்ளது.///
   குண்டாஆஆஆஆஆ? ங்ஙேஙேஙேஙே யாரைச் சொல்றீங்க கோபு அண்ணன்ன்ன்ன்?:).. இதைப் பார்த்தாலே இங்கின ஒராள் டான்ஸ் ஆடி தேம்ஸ்ல விழப்போறாவே:)..

   Delete
  2. ஹாஹா :) குண்டு தைரியசாலி

   Delete
  3. ///AngelinSaturday, April 08, 2017 8:35:00 pm
   ஹாஹா :) குண்டு தைரியசாலி//
   ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
   கோபு அண்ணன்!!! கும்பகர்ணனின் சகோ மாதிரி நித்திரைகொண்டு எழும்பி வந்து படிச்சிட்டுக் கிழிக்கிறதுக்குள்ள, அஞ்சு பார்த்திட்டாவே.. இப்போ என்ன பண்ணுவேன்:)..

   Delete
 4. முதல் படம் அழகோ அழகு. (அதாவது அய்ய்கோ அய்ய்கு)

  இடைவேளை ஜோக் அருமை.

  ஊசிக்குறிப்பு எக்ஸலெண்ட்.

  ReplyDelete
  Replies
  1. ////(அதாவது அய்ய்கோ அய்ய்கு)///
   நோஓஓஓஓஒ உங்கள் தமிழில் சொற்பிழை இருக்கிறது கோபு அண்ணன்ன்ன்:) அது “அயகோ அயகூஊஊஉ எனத்தான் வரோணும்:) ஹா ஹா ஹா...

   மிக்க நன்றிகள் 4ம் வோட்டுக்கும்... பின்னூட்டங்களுக்கும்...

   Delete
 5. உண்மையை ஒத்துக்கறதுக்கு ஒரு பரந்த மனசு வேணும் ஆனா பாதிதான் ஒத்துக்கிட்டீங்க அந்த மீதியும் சொல்லணும் முழு :) அரை இல்லை முழு :))))))))
  ரிவர்ஸ் ஆர்டரில் வருவேன் :) ஆமா இன்னிக்கு அந்த ஆயா யாருக்கு
  அஞ்சாவது வோட்டு அஞ்சுவோடது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ... ஹையோ பெயரையும் ஃபிஸ் படத்தையும் பார்த்தாலே கை கால் எல்லாம் ரைப் அடிக்குதே:) அது ஒண்ணுமில்ல மீ ரொம்ப ஸ்ரெடியான ஆள் ஆக்கும்:).. சரி இருங்கோ.. நெஸ்டமோல்ட் வாங்கினனாங்கள் தமிழ்க் கடையில.. கொஞ்சம் குடிச்சிட்டுத் தொடர்றன்:)..

   ///உண்மையை ஒத்துக்கறதுக்கு ஒரு பரந்த மனசு வேணும்// தங்கூஊ தங்கூஊஉ இண்டைக்கு இங்கு ரொம்பக் குளிருதூஊ.. மைனஸ்4:)

   Delete
  2. /// ஆனா பாதிதான் ஒத்துக்கிட்டீங்க அந்த மீதியும் சொல்லணும் முழு :) அரை இல்லை முழு :))))))))//
   நான் நினைச்சேன்ன்ன் நினைச்சேன்ன் ஓவரா குளிரும்போதே புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்:).

   ///ரிவர்ஸ் ஆர்டரில் வருவேன் :)///
   ஹையோ ஆண்டவா.. ரிவேர்ஸ் ஆவா இம்முறையும்.. இது தெரியாம நான், ஆயாவை பின் வாசலில் நித்திரை கொள்ள விட்டிட்டனே.. காத்து வரும் அங்குதான் என அடம்புடிச்சா:).. கவனம் உளக்கிப் போடாதையுங்கோ.. ஆயாவுக்கு இன்னும் செல்ஃப் இன்சூரன்ஸ் எடுக்கல்ல:) இனித்தான் எடுத்துக் குடுக்கப்போறேன்:).

   ///ஆமா இன்னிக்கு அந்த ஆயா யாருக்கு///

   ஹா ஹா ஹா இம்முறை ஆயா ரொம்ப யங்கா:) ஸ்லிமா:) அயகா இருக்கிறாவா.. அதனால அவவை அனுப்பல்லே:) அடுத்தமுறை பார்ப்போம்:)

   ///அஞ்சாவது வோட்டு அஞ்சுவோடது /// அது உங்களுக்காகத்தான்.. றிவேர்ஸ்ல.. சொறி டங்கு ஸ்லிப் ஆகுதே:) றிசேஃப்ல வச்சிருந்தோம்ம்ம்:)

   Delete
 6. ஊசிகுறிப்பு செம :) எப்பவும் அடுத்தவங்க அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு சொல்ற நாம் எப்படி இருக்கணும்னு நமக்கேன் தோணலை :)
  சரி விடுங்க உங்களுக்கு வயசாச்சி நானாச்சும் திருத்திக்கறேன் :)

  ReplyDelete
  Replies
  1. haahaa :) தாங்க்ஸ் தம்பி

   Delete
  2. ///AngelinSaturday, April 08, 2017 4:30:00 pm
   ஊசிகுறிப்பு செம :) எப்பவும் அடுத்தவங்க அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு சொல்ற நாம் எப்படி இருக்கணும்னு ///நமக்கேன்/// தோணலை :)///

   எச்ச்சூச்ச்மீஈஈஈஈ... ஒரு சின்ன திருத்தம்... அது “நமக்கேன்”:) அல்ல.. “எனக்கேன்”:) என வந்திருக்கோணும்:).. ஹா ஹா ஹா .

   ///சரி விடுங்க உங்களுக்கு வயசாச்சி நானாச்சும் திருத்திக்கறேன் :)///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்த பப்புளிக்குப் பிளேசில ஒரு சுவீட் 16 பிள்ளையை இப்பூடியா மானபங்கப்படுத்துவது?:) குயின் அம்மம்மா இதைப் பார்த்தாவோ.. ரத்தக் கண்ணீர் வடிக்கப்போறாவே... நான் இப்போ என்ன பண்ணுவேன் முருகா.. நேக்கு லெக்கும் ஆடல்ல:) காண்ட்ஸ் உம் ஓடல்ல:)..

   Delete
  3. //AngelinSaturday, April 08, 2017 4:30:00 pm
   ஊசிகுறிப்பு செம :)///

   இதுக்குத்தானே இப்பூடிச் சொன்னீங்க சீராளன்..?:)

   ///சீராளன்.வீSaturday, April 08, 2017 5:39:00 pm
   கரெக்டு///
   தங்கூஊஊஊஊ தங்கூஊஊஊஉ.. ஹா ஹா ஹா ஹையோ அஞ்சுட கண்ணில மட்டும் இது பார்க்கும்போது மறையோணும்.. ஏதோ படத்தில எழுதின பென் போலவே:)

   Delete
  4. ///AngelinSaturday, April 08, 2017 6:29:00 pm
   haahaa :) தாங்க்ஸ் தம்பி//

   ஆஹா அஞ்சுவுக்கு என்னா பெரியாஆஆஆஆ மனசு?:).. அஞ்சு கிலோ ஏறிட்டேன் அதிரா என அன்று.. லெட்டர் போட்டபோதே நினைச்சேன்ன்.. அஞ்சுக்கு வெயிட் மனசிலதான் என:) அது கரீட்டுத்தான்ன்:)... என்னை வாழ்த்தியதை, சீராளன் கரீட்டு என்றிட்டார் என.. அதுக்கு வந்து தாங்ஸ் சொல்லிட்டீங்களே.. நீங்க எங்கேயோ இருக்க வேண்டியனீங்க:) அஞ்சு:) ஸ்ஸ்ஸ்...அப்பா நேக்கு ரொம்பப் பதறுது:) பெலயீனமாம்ம்:) அந்தர அவசரத்துக்கு அம்முலுவையும் காணம்.. கீதாவையும் காணம்..:) ஒரு கப் ஹொட் மொக்கா:) பிளீஸ்ஸ்ஸ்ஸ்... :)

   Delete
  5. hello :)ஹாஹா :) குண்டு தைரியசாலி நான் இன்னும் 57 கிலோ தான் :) டெய்லி 14000 ஸ்டெப்ஸ் நடக்கிறேன் :)

   Delete
  6. /// இன்னும் 57 கிலோ தான்///
   எனக்கு ஒரு வியாதி இருக்கு:)புரட்டிப் போட்டுத்தான் படிப்பேன்:).. 75 கிலோவாஆஆஆஆ?:) சொல்லவே இல்ல:)... அவ மட்டும் றிவேர்ஸ்ல படிப்பாவாம்ம் அப்போ நாங்க மட்டும் பிரட்டப்படாதோ என்ன?:)).. பூஸா கொக்கா?:).. ம்ஹூம்ம்:).

   //டெய்லி 14000 ஸ்டெப்ஸ் நடக்கிறேன் :)// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதில நம்பர்கள் அழிஞ்சிருக்கு அஞ்சு..:) கண்ணுக்கு தெரியுதில்ல:).

   Delete
  7. 57-2 KG :) NOW READ IT IN REVERSE ORDER MY DEAR :)

   Delete
  8. ரிவேஸ்ல படிச்சா... 2....75 என வருதே.. ஓஹ் மை கடவுளே.. றாத்தலா கிலோவா?:).. எதுக்கும் எங்க வீட்டு வேயிங் மெசினை கொண்டு வாறென் நாளைக்கு தேம்ஸ் கரையில வச்சிட்டு ஏறி நிண்டு செக் பண்ணிடலாம்ம் டீல்?:).

   Delete
 7. //நம்பிக்கைத் துரோகிகளை உதட்டால் கூட மன்னிக்க மாட்டேன், கடவுளும் மன்னிக்க மாட்டார்.//ஹலோ மேடம் மியாவ்
  கடவுள் நமக்கு அறிவை கொடுத்திருக்கார் பல கோடி மக்கள் ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியா கவனிக்க முடியாது நாம தான் அலெர்ட்டா இருக்கணும் ...நானும் நம்பிக்கையை கொன்றவர்களை மன்னிப்பதில்லை ./பொய் விபரங்களைக் கொடுத்திருக்கலாமோ/.வேணாம் அதிரா ஒரு பொய்யரிடம் நாமும் பொய் டீட்டெயில்ஸ் குடுத்து நம்மை தாழ்த்தணுமா ..உங்களுக்கு bad நடக்காம தப்பிச்சீங்களே அதுவே கடவுள் கிருபை

  ReplyDelete
  Replies
  1. ///ஹலோ மேடம் மியாவ்///
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யங்க சிஸ்டர் மியாவ்வ் அப்பூடிக் கூப்பிட்டாலும் ஓகே:).. பட் மீ மேட ராசி இல்லை:)... இப்பூடி அலேர்ட்டா இருக்காட்டில் அவ்ளோதேன்ன்:) நம்மள குழிக்குள் தள்ளிடுவினம்:).. நாம ஆரு:).

   Delete
  2. ///நாம தான் அலெர்ட்டா இருக்கணும் ...நானும் நம்பிக்கையை கொன்றவர்களை மன்னிப்பதில்லை //

   அது உண்மைதான் அஞ்சு, ஒவ்வொரு தடவையும் நினைப்பேன் கவனமா இருக்கோணும் என, ஆனா அந்தநேரம் நம்பித் தொலைச்சிடுறேன். உண்மையே... நம்பிக்கைக்கு தீங்கு செய்தோரை மன்னிக்கவே முடியாது, நம்பிக்கை என்பது எல்லோரிலுமோ வைக்கிறோம்... நம்ம்ம்ம்ம்பி சிலரில் மட்டுமே நம்பிக்கை வைத்துப் பழகிறோம்.. அதில் துரோகம் செய்தால் எப்படி மன்னிப்பது.

   //வேணாம் அதிரா ஒரு பொய்யரிடம் நாமும் பொய் டீட்டெயில்ஸ் குடுத்து நம்மை தாழ்த்தணுமா ..உங்களுக்கு bad நடக்காம தப்பிச்சீங்களே அதுவே கடவுள் கிருபை///

   அது என்னமோ உண்மைதான், சே சே.. நான் கோபத்தில் கண்டதெல்லாம் நினைப்பேனே தவிர, பொய் சொல்லும் தைரியம் எனக்கில்லை அஞ்சு.

   Delete
 8. நம் ஊரவர்களாச்சே, நமக்கு துரோகம் பண்ணுவினமோ எனத்தான் மனதில் ஓடியது, பயங்கரமாக நம்பிட்டேன்.//

  கர்ர்ர்ர்ர் ..இன்னுமா உங்களுக்கு உலகம் புரியல்ல ..பெரும்பாலும் ஏமாற்றுவோர் நமது நாட்டு ஆட்கள் தான் இங்கே ..எனக்கு லேண்ட் லைனுக்கு பாக்கிஸ்தான் லருந்து கால் வந்தது 50000 பவுண்ட்ஸ் விழுந்திருக்குன்னு ..நான் சொன்னேன் அதை எனக்கு அனுப்பாதே அப்படியே பாகிஸ்தானில் உள்ள ஏழை மக்களுக்கு கொடுத்திடுங்க என்று சொன்னேன் ..அதோட மீண்டும் எடுக்கலை அவன்

  ReplyDelete
  Replies
  1. ////கர்ர்ர்ர்ர் ..இன்னுமா உங்களுக்கு உலகம் புரியல்ல ..பெரும்பாலும் ஏமாற்றுவோர் நமது நாட்டு ஆட்கள் தான் இங்கே ///
   உண்மைதான், ஆனா நாங்க இருக்கும் சூழல் அப்படி நம்ப வைக்குது என்னை. என் வொயிஸ் கேட்டு..இது நம் நாட்டவர் ஆச்சே என நினைச்சாவது அவர்கள் கட் பண்ணியிருக்கலாம் ஃபோனை.. இது நன்கு தெரிந்தும் இப்படி ஏமாற்றிக் கொண்டு போயிட்டார்கள் முடிவுவரை.. :(.

   ///நான் சொன்னேன் அதை எனக்கு அனுப்பாதே அப்படியே பாகிஸ்தானில் உள்ள ஏழை மக்களுக்கு கொடுத்திடுங்க என்று சொன்னேன் ..அதோட மீண்டும் எடுக்கலை அவன்///

   ஹா ஹா ஹா ... மீயும் பூலாந்தேவிதான் அஞ்சு:) ஆனா உங்கள் அளவு தைரியம் வராது உடனுக்குடன் நேரே பேச...

   Delete
  2. ஹாஹா :) நான் பூலான்தேவியாக்கப்பட்டேன் :) உங்களுக்கு ட்ரெயினிங் கொடுக்கறேன் முதலில் என் அக்கவுண்டுக்கு 50 பவுண்ட்ஸ் அனுப்பிடுங்க இது ஜஸ்ட் ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் பிறகு 3 மாசம் ட்ரெயினிங் அதுக்கு மொத்தமா 300 பவுண்ட்ஸ் ..தட்ஸால் நீங்களும் பூலான் தேவியாகிடலாம்

   Delete
  3. எனக்கு பூலாந்தேவியின் வாழ்க்கை வரலாறு கதை தொடர் கிடைச்சுது, அதைப் படிச்சு, பத்திரமா புக் போல செய்து வச்சிருந்தேன்ன்.. நம் நாட்டு இடம்பெயர்வுகளால் எங்கோ தவறி விட்டதே:(.

   ஹா ஹா ஹா கர்:).

   Delete
 9. நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க...
  தேன் தமிழ் போல் வான் மழை போல்...
  சிறந்து என்றும் வாழ்க...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ டிடி, என்ன கனகாலமா காணாமல் போயிட்டீங்க, கண்ணுபட்டிடிச்சோ என ஓசிச்சேன்:)..

   எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்.

   எனக்கு மனதுக்குப் பிடித்த பாடல் வரிகள் காதில் விழுந்தால், உடனே கையிலிருக்கும், பாக்கிலிருக்கும்.. ஏதாவது நோட் புக்கில் அதை எழுதி வைப்பது என் பழக்கம்.. சின்ன வயதிலிருந்தே இது தொடருது.

   இதனால பல நேரம் வரிகள் இருக்கும், அது என்ன பாடல் என்றே கண்டுபிடிக்க முடியாமல் போய் விடும்..

   மிக்க நன்றி டிடி.

   Delete
 10. ஹையோ பூனை //ஆனா பெயர் விபரம், பாஸ்வேர்ட் எதுவும் கேட்கவில்லை.. அதுபற்றி சிந்திக்ககூட எனக்கு ரைம் தரவில்லை அவர்.// இங்கே official அழைப்புக்கள் அப்புறம் இப்படிப்பட்ட அழைப்புக்கள் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி சர் நேம் dob பாஸ் வெர்ட் தானே அதை யோசிக்காம எப்படி இவ்ளோ நேரம் பேசினாங்க

  ReplyDelete
  Replies
  1. அதேதான் அஞ்சு, ஆனா திடீரென இப்படி கோல் வந்திருப்பின் யோசிப்பேன், இது முதல் நாள் நாம் கூப்பிட்டுப் பேசியதால், இது டக்கென அடுத்தநாள் அதுபற்றி பேசியதும், இன்னும் ஏதோ ஸ்பீட்டாக்கி விடப்போகிறார்கள் என நினைச்சிட்டேன்ன்:)..

   இதுக்குப் பின்பு என் மொபைல் நெட்டில் ஒரு பிரச்சனை, கோல் பண்ணிப் பேசினேன்.. ஒரு தம்பி, விடாமல் 2 நாட்களாக தானே கோல் பண்ணி(இந்தியாவிலிருந்துதான்), நான் எனக்கு இப்போ சட்டிஸ்ஃபைட், இனி ஏதும் பிரச்சனை எனில் நானே கோல் பண்றேன் எனச் சொன்னபின்னரே கை விட்டார்ர்.. இப்படியும் இருக்கிறார்கள்...

   முதல் நடந்த பிரச்சனையால், 2ம் தடவை நிறையவே பயப்பிட்டு, கவனமாக இருந்தேன்.. இப்படி சில தவறானவர்களால் , நல்லவர்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டி வந்திடுது..:(.

   Delete
  2. ஆம் அதிரா தவறானவர்களால் நலல்வர்களையும் சந்தேகப்பட வைக்கிறது...அப்படியாகிப் போனது உலகம்...

   கீதா

   Delete
  3. அதேதான் கீதா... அதேநேரம் உண்மையானவர்களைச் சந்தேகப் பட்டிடக்கூடாதே என நினைச்சே, எனக்கு சந்தேகம் வந்தாலும் டக்குப் பக்கென முறிப்பதில்லை.. அமைதியாகப் பதில் கொடுப்பேன்.

   Delete
 11. என்னிடம் 3,4 தடவைகள் பொறுமையாகக் கேட்டால், மனம் இளகி, இருப்பதை எல்லாம் கழட்டிக் கொடுத்திடுவேன், 2,3 தடவைக

  // நோ நோ நம்பாதீங்க நான் 30 தரமாச்சும் கேட்டிருப்பேன் இன்னும் அந்த பச்சைக்கல் நெக்லஸ் எனக்கு வரலியையே :)

  ReplyDelete
  Replies
  1. என்னது பச்சைக்கல்லு நெக்லஸ் ஆஆஆஅ ஆஹா அலட்டா இருந்துக்கோ அதிரா

   Delete
  2. சீராளன் ..என் பக்கம்தான் சப்போர்ட் இருக்கணும் அப்போதான் ஒரு பவுன் மோதிரம் உங்களுக்கு தருவேன் .இப்டிலாம் பூனையை அலெர்ட் செய்து காரியத்தை கெடுக்கக்கூடாது

   Delete
  3. ஓஓஓஓஓ கமிசன் இருக்கா இதை முதலிலே சொல்லி இருக்க வேண்டியதுதானே அக்காச்சி அந்தர் பல்டி அடிச்சிருப்போம்ல

   சரி சரி சொன்ன சொல் தவறக் கூடாது மியாவ் அதுக்குப்புறம் எங்க பேச்சை நாங்களே கேட்க்கமாட்டோம்

   Delete
  4. @angelin//// நோ நோ நம்பாதீங்க நான் 30 தரமாச்சும் கேட்டிருப்பேன் இன்னும் அந்த பச்சைக்கல் நெக்லஸ் எனக்கு வரலியையே :)//

   karrrrrrrrrrrr:) அது வள்ளிக்குக் கொடுக்க எல்லோ வச்சிருக்கிறேன்:) நேர்த்திக்கடனை தீர்த்தபிறகு, இருக்கிறதெல்லாம் அஞ்சுவுக்குத்தேன்ன்:)..

   Delete
  5. @சீராளன்...///
   நான் ரொம்ப அலேர்ட்டாக்கும் இந்த நெக்லெஸ் விசயத்தில மட்டும்:).. அதை கல்லில கட்டி தேம்ஸ்ல போட்டு வச்சிருக்கிறேன்.. நீந்திப் போனால் மட்டுமே எடுக்கலாம்:) ஒரு ரகசியம் சொல்றன் கேளுங்கோ.. அஞ்சுவுக்கு நீந்தத் தெரியாது :) நான் நல்லா நீந்துவனாக்கும்:)(ஹா ஹா ஹா).

   Delete
  6. ///AngelinSaturday, April 08, 2017 8:44:00 pm
   சீராளன் ..என் பக்கம்தான் சப்போர்ட் இருக்கணும் அப்போதான் ஒரு பவுன் மோதிரம் உங்களுக்கு தருவேன்///
   கடவுளே திருச்செந்தூர் வைரவா... மலைக்கோயில் முருகா.... ஆரு நம்மைத் தேடி வந்தாலும்.. கூட்டுக் கட்சியில் இணைச்சிடுறாங்களே:) மீ எப்பவும் தனிக்கட்சி அமைக்க வேண்டிய கட்டாயமாகிப்போகுது:)... ஆனாலும் மீ ரொம்ப நல்ல பொண்ணு:).. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேனாக்கும்:).

   Delete
  7. ///சரி சரி சொன்ன சொல் தவறக் கூடாது மியாவ் அதுக்குப்புறம் எங்க பேச்சை நாங்களே கேட்க்கமாட்டோம்//
   நான் எங்கே சொன்னேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 சீராளன்:).. அது அஞ்சுதான் கொமிசன் தருவாவாம்ம்:)... கொமிசன் வாங்க எண்டால் எல்லோரும் கியூவரிசையில:) நிக்கினமே ஆண்டவா:).

   Delete
 12. ஹாஹா நான்லாம் unknown நம்பர்களை ப்லோக் செஞ்சிருக்கேன் செட்டிங்சில் லாண்ட்லைன் அப்புறம் என் மொபைல் ரெண்டுக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஃபோனில் நானும் செஞ்சுட்டேன். லேன்ட்லைனிலும்.

   கீதா

   Delete
  2. இல்ல அஞ்சு, கீதா... எங்களுக்கு அதிகமாக வெளிநாட்டுக் கோல்களே வரும்... அதில் பலது... அன்னோன் அல்லது பிறைவேட் என்றே வரும்.. அதனால எதையும் புளொக் பண்ணுவதில்லை..

   கோல்கள் ஆன்சர் பண்ணுவேன், ஏதும் பிஸ்னஸ் நோக்கமாகப் பேசினால், நான் கொஞ்சம் இப்போ பிஸி , பின்பு பேச முடியுமா? எனச் சொல்லிக் கட் பண்ணி விடுவேன்... இது எனக்கு முதல் அனுபவம்:).

   Delete
 13. //“யூ ஹாவ் எ குட் ஹார்ட் அதிரா”...[ஆவ்வ்வ் எதுக்கு இப்போ தேம்ஸ்கரை, கூவக்கரை, கிழக்கா//

  ஹையோ ஹையோ உங்களுக்கு ஹார்ட் மட்டுமே குட் ஆம் ..

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹஹஹ் ஏஞ்சல் என்னாச்சு நம்ம மதுரை சகோ கண்ணுல இது படலை போல....

   Delete
  2. ///AngelinSaturday, April 08, 2017 4:56:00 pm
   //“யூ ஹாவ் எ குட் ஹார்ட் அதிரா”...[ஆவ்வ்வ் எதுக்கு இப்போ தேம்ஸ்கரை, கூவக்கரை, கிழக்கா//

   ஹையோ ஹையோ உங்களுக்கு ஹார்ட் மட்டுமே குட் ஆம் ..///

   ஹா ஹா ஹா கர்ர்ர்:) எப்பூடித்தான் கிட்னியை ஊஸ் பண்ணி நம்மளை நல்லவிதமாக் காட்டிப் புகழ்ந்து எழுதினாலும்.. கவிட்டுப் போடுவதிலேயே குறியாச் சுத்தீனம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   அது “வரப்புயர” போல எடுத்துக் கொள்ளோணும் சொல்லிட்டேன்ன்:).

   Delete
  3. ///Thulasidharan V ThillaiakathuSunday, April 09, 2017 11:47:00 am
   ஹஹஹஹஹ் ஏஞ்சல் என்னாச்சு நம்ம மதுரை சகோ கண்ணுல இது படலை போல....///
   இல்ல கீதா, ட்றுத்திட கண்ணில இது பட்டது, ஆனா படாதமாதிரி நழுவிட்டார்.. ஏன் தெரியுமோ?:)... இப்போதான் அவருக்கு.. பூரிக்கட்டை ஏன் பறக்கிறது என்றதன் அர்த்தம் புரியுதாம்:)... ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).

   Delete
 14. indian scammers என்று இவர்களைத்தான் சொல்லுவார்கள் . காசு பிடுங்குவதுதான் இவர்கள் வேலை .இணையத்தில் இவர்கள் பற்றிய நிறைய செய்திகளை காணலாம் .யூடியுப்பில் காண கிடைக்கும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரிகாலன் வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க என நினைக்கிறேன், நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி.

   ஓ .... இப்படி நிறைய ஏமாற்றுவோர் உண்டு என்றெல்லாம் அறிந்திருக்கிறேன் தான், ஆனா அவர்கள் அணுகிய விதம்... என்னை ஏமாற்றி விட்டது... சும்மா ஏதும் பணம் கிடைக்கும்... லொட்டி வின் பண்ணிட்டீங்க... இப்படி என்ன சொன்னாலும் மயங்க மாட்டேன்ன்.. இது டெக்னிக்கலா அணுகி விட்டார்கள்.

   Delete
  2. மறந்திட்டேன், மிக்க நன்றி கரிகாலன்.

   Delete
 15. எப்படியெல்லாம் ஏமாற்ற, பணம் பிடுங்க ஆட்கள் காத்திருக்கிறார்கள்.... நாம தான் பாத்து சூதானமா இருந்துக்கிடணும்.....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட்.. உண்மைதான், உலகமெல்லாம் நடக்குதுதான், தெரிஞ்சிருந்தும், செண்டிமெண்ட்டாப் பேசும்போது நம்பித் தொலைச்சிடுறேன்.. நான் என்ன பண்ண என் மனது இப்படி.. அவர்களைக் கடவுள் கவனிப்பார்ர்.

   மிக்க நன்றி.

   Delete
 16. எங்க வீட்டுலதான் இப்படிபட்டலூசு இருக்குன்னு நினைச்சா நமக்கு நட்பா வந்த சேர்ந்தவங்களும்மு இப்படி லூச இருக்காங்களே

  ReplyDelete
  Replies
  1. ஹும் நானும் 1/2 தான் இப்ப 1/4 ஆகிருக்கேன்...ஹிஹிஹி

   கீதா

   Delete
  2. வாங்கோ ட்றுத் வாங்கோ... ஹா ஹா ஹா அது உங்க ராசி அப்படிப்போல:).. இல்ல இந்தக்காலத்தில வலு உஷாரா இருந்தாலும் சிலர் ஏமாந்திடுறார்கள். அதனால ஏமாறாமல் இருக்கோணும், ஆனா இந்சம்பவத்துக்காக முரட்டுக் குணமாக மாற மாட்டேன் நான், மாறவும் முடியாது.. லூஸாவே இருந்திட்டுப் போயிடறேன்ன்:).

   Delete
  3. ஹா ஹா ஹா கீதா, அந்தக் கால் போதும்... உங்களைக் கவிழ்க்க:).

   Delete
  4. நல்லவேளை நான் ஏமாந்தது ஒன்னும் ட்ரூத்துக்கும் அதிராக்கும் கீதாக்கும் தெரியாது ..நான் சொல்லவே மாட்டேன்

   Delete
  5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
 17. இப்படிபட்ட போன் கால்கள் வந்தால் எப்படி கிண்டல் பண்ணனும் என்று என் பொன்னுக்கு நல்லா ட்ரெய்னிங்க் பண்ணி வைச்சு இருக்கேன் அவளே அழகாக சமாளிச்சு பேசுவா

  ReplyDelete
  Replies
  1. சூப்பர்!!! மதுரை தமிழன்னா சும்மாவா!!!

   கீதா

   Delete
  2. நல்ல விசயம், உண்மை ட்றுத் இக்காலப் பிள்ளைகள் இதில் வலு உஷார்.

   போன கிரிஸ்மஸ் க்கு முதல் ஒரு நாள், அன்று எங்கள் விரதம் ஏதோ முடிவு நாள். மாலை இருட்டுக்குள் ஒரு 25 மதிக்கத்தக்க ஒரு boy வந்து கதவைத் தட்டினார். வீட்டில் அப்போ நானும் மூத்த மகனும் மட்டுமே இருந்தோம்.

   போய்க் கதவைத் திறந்தேன், வெளியே அந்த வெள்ளைத் தம்பி... பா ...பா.. என்றார், உடனே ஒரு காட்டை எடுத்துக் காட்டினார்... அதில் இருந்துது நான் ஒரு டெஃப், எனக்கு கிரிஸ்மஸ் கொண்டாட பணம் தேவை, அதுக்காக பென்சில் ஓவியங்கள் வரைந்து விற்கிறேன், தயவு செய்து வாங்கவும் என...

   கையிலிருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாகக் காட்டினார், பூனையை அழகாக மிக சூப்பராக வரைந்திருந்தார்.. அதைத் தொட்டு.. க..க.. என்றார்.. கட் ஆம் cat.

   எனக்கு பாவமாகி விட்டது, அதன் விலை 15 பவுண்ட்ஸ் என அதில் எழுதி இருந்தது, வெயிட் என கையால் சைகை காட்டி விட்டு உள்ளே வந்தேன் பணம் எடுக்க... அப்போ மூத்தவர் மேலிருந்து ஓடிவந்து என்னம்மா என்றார், சொன்னேன்.. நோ நம்பாதீங்கோ.. வாங்க வேண்டாம் என்றார்.

   அப்போதான் எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துது, சரி வேண்டாம், ஆனா பாவமாக இருக்கு பார்க்க, கிரிஸ்மஸ் கொண்டாட சேர்க்கிறேன் என வேறு சொல்லிட்டார்ர்.. போனாப் போகுதென 5 பவுண்டுகள் கொடுத்து சொன்னேன், எனக்குப் படம் வேண்டாம், இதை கிவ்ட்டா வச்சுக் கொள் என.

   மனதில் நினைத்தேன், இன்று கோயிலுக்குப் போயிருந்தால் உண்டியலில் போட்ட பணமாக நினைப்போம் என. இப்படி எனக்கு ஆரும் எதுவும் கேட்டால் மனம் கேட்கவே கேட்காது.

   Delete
  3. ///Thulasidharan V ThillaiakathuSunday, April 09, 2017 11:40:00 am
   சூப்பர்!!! மதுரை தமிழன்னா சும்மாவா!!!//

   ஆமா.. ஆமா.. ச்ச்ச்சும்மா இல்லை:) கோஸ்ட்லிதான் எனச் சொல்ல வந்தேன்ன்:).

   Delete
  4. ன்னாது வெறும் படத்தை காட்டி பேபே னத்துக்கு 5 பவுண்ட்ஸா !!! இது நல்லாருக்கே ..
   நாளைக்கு ஒரு யங் கேர்ள் உங்க வீட்டு கதவை தட்டும் ஒழுங்கா 10 பவுண்ட்ஸ் கொடுக்கணும் சொல்லிட்டேன்

   Delete
  5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).. கேட்டால் கொடுக்காமல் விடமாட்டேன், ஆனா பிரச்சனை என்னன்னா.. எப்பவும் எதுக்கும்... கார்ட் ஐயே யூஸ் பண்ணுவதால், கையில் பணமாக இருப்பது குறைவு... எடுத்து வைச்சிருப்பேன்.. முடியமுன் ஆரும் வந்து கதவைத் தட்டினால் கொடுப்பேன்:). கொடுக்கும்போது நினைப்பேன், ஒரு சான்விச் வாங்கினாலே.. 4,5 பவுண்டுகள் கொடுக்கிறோம்.. இது புண்ணியமா போகட்டுமே என..

   Delete
 18. அதிரா இப்படி எதிர்காலத்தில் நீங்கள் ஏமாந்திட கூடாது அதனால என்ன செய்யறீங்கன்னா உங்க பேங்க் அக்கவுண்டில் இருந்து எல்லா விபர்ங்களையும் எனக்கு இமெயில் பண்ணிடுங்க அதை நான் இங்க்கே இருந்தே கண்காணிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அதானே பார்த்தேன்....ஹஹஹாஹஹ்

   Delete
  2. உது நல்ல ஐடியாத்தான் ட்றுத்... முதலாவதாக லண்டன் பிரைவேட் பாங் எக்கவுண்டைத் தருகிறேன்:) அதுக்கு நீங்க... தேம்ஸ்க் கரைக்கு கொஞ்சம் வரோணும்..

   ஊசிக்குறிப்பு:- கிரிஸ் ஏதும் பூசியிருக்கக்கூடாது:). ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்... இப்போ எல்லாம் ஓவர் பிஸிபோல தெரியுதே..

   Delete
  3. //Thulasidharan V ThillaiakathuSunday, April 09, 2017 11:39:00 am
   அதானே பார்த்தேன்....ஹஹஹாஹஹ்//

   அதுதான் கீதா ஓல்ரெடி சொல்லிட்டீங்களே.. ட்றுத் சும்மா இல்லை என:) ஹா ஹா ஹாஅ..

   Delete
 19. #சின்ன வயதிலேயே
  நான் கொஞ்சம் மாறியிருக்கலாமோ???#
  மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோன்னு உலகம் சொல்லும் !அதனாலே 'உலகம் ஆயிரம் சொல்லட்டுமே ,உனக்கு நீதான் நீதிபதி'ன்னு போய்கினே இருங்கோ :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. அதுவும் உண்மைதான்.. எங்கட கண்ணதாசன் அங்கிளும் அப்படித்தானே சொன்னார்ர்.. யாருக்காகவும் உன்னை மாற்ற வெளிக்கிடாதே என..

   ஆனா இதில இருக்கும் தாத்தா, தான் தானாக இருந்திருந்தால் பறவாயில்லை.. எல்லோரையும் திருத்த ட்ரை பண்ணியிருக்கிறார்.. அதுதானே தப்பு.

   சிலர் எப்ப பார்த்தாலும் அடுத்தவரைக் குறை கூறுவது, குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பார்கள்... அவர்கள் முதலில் தம்மிடம் இருக்கும் குற்றம் குறைகளைத்தான் திருத்த முற்பட வேண்டும்.

   நம் நாட்டில் பயங்கர யுத்தம் நடந்த காலத்தில்.. இங்கிருக்கும் சில பெரியவர்கள் கூடினால்ல்.. உடனே, சே தப்புச் செய்திட்டார்கள், இன்னும் நல்லா அடிச்சிருக்கோணும், சீ சீ இன்னும் கொஞ்சம் கூடுதலா தாக்கியிருக்கலாம் என குறை கூறுவார்கள்... தம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லாம் இங்கு பத்திரமாக இருக்கினம், அடிபடுவது யாரோ பிள்ளைகள்தானே...

   அப்படி வசனங்கள் என் காதில் கேட்டால், மனதிலேயே திட்டுவேன், அடுத்தவரை சண்டையிடு என, இங்கே பாதுகாப்பாக இருந்துகொண்டு சொல்வதைக் காட்டிலும், ஊருக்குப் போய்ச் சண்டைப் பிடிக்கலாமே என...

   எனக்கு கடமை.. நேர்மை.. எருமைதான் முக்கியம்... ஹா ஹா ஹா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ஒரு ஃபுளோல வந்திட்டுது விட்டிடுங்கோ.. மிக்க நன்றி.

   Delete
 20. நம்முடைடைய நிறை குறைகளைத் தெரிந்திருக்க வேண்டும் எப்போது யார் எப்படி பிஹேவ் செய்கிறார்கள் என்பதும் தெரிந்திருக்க வேண்டும் எப்போதூம் கெக்கே பிக்கே என்று இருந்தால் தலையில் மிளகாய் அரைப்பார்கள் பி கேர்ஃபுல் அதிரா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா GMB வாங்கோ.. உண்மைதான், தெரியாமலில்லை... எல்லாம் தெரிகிறது, நாட்டில் இப்படி எல்லாம் நடக்கிறது என்றும் தெரிகிறது... இருப்பினும் என்ன பண்ணுவது, நல்லபிள்ளையாக இருந்தாலும் தப்பாகிடுது, வாய் காட்டினாலும் தப்பாகிடுது:).. கவனமாகத்தான் இருக்கோணும்.
   மிக்க நன்றி.

   Delete
 21. அதிரா நானும் இப்படித்தான் இருந்தேன் இப்போதும் கூட அப்பப்போ இப்படித்தான். ஆனா மொபைல்லயும் சரி, கம்ப்யூட்டர்லயும் சரி இப்படி யாராவது சொன்னா ரெஸ்பாண்ட் பன்றது இல்ல. அதுவும் மொபைல்ல நிறைய கால்ஸ் வரும் நான் ப்ளாக் பண்ணி வைச்சுட்டேன்...இப்படித்தான் என் கசின் பேங்க் கால்னு நினைச்சு பேசி பின் கொடுக்க அவன் அக்கவுண்டிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் பத்தாயிரம 7 டைம்ஸ் அவன் கண்ணு முன்னாலேயே போச்சு...இவன் சொல்லச் சொல்ல இவனுக்கு மொபைல் மெசேஜ் வருது பேங்கிலிருந்து பணம் வித்ட்ரா ஆகுதுனு...அப்பொதான் இவன் ஐயோ நாம வித்ட்ரா பண்ணலையே அந்த ஆளுதானு நினைச்சு இவன் பேச அந்த கால் கட். உடன் இவன் அழைத்தால் அது வேலை செய்யலை...அவ்வளவுதான்...

  நாமதான் இனி ரொம்ப கேர்ஃஃபுல்லா இருக்கணும்...தேங்க் காட் நீங்க முழிச்சுக்கிட்டிங்க....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எங்களுக்கு இங்கு எப்பவும் இதுவரை எந்தத் தொல்லையும் வந்ததில்லை கீதா, எண்ணிச் சொல்லக்கூடியளவு 1,2 கோல்கள்.. ஏதும் இன்சூரன்ஸ் சம்பந்தமாக அப்படி ஏதும் பிஸ்னஸ் கோல்ஸ் வந்திருக்கு.. அவற்றுக்கெல்லாம் உடனேயே சொறி சொல்லி கட் பண்ணிடுவோம்.

   மொபைலுக்கெல்லாம் எந்தத் தொல்லையான கோல்ஸ் உம் வருவதில்லை. எங்கள் லாண்ட் லைன் நம்பர்.... டிறெக்றி யில் போட்டிடக்கூடாது எனச் சொல்லி வச்சமையால்கூட இருக்கலாம். இங்கு பலருக்கு இதுபற்றி தெரியாது, நம் நம்பரை ஓட்டமெட்டிக்காக டிறெக்றியில் இணைத்து விட்டிடுவார்கள்.. அதனைப் பார்த்தே பல கோல்கள் வர வாய்ப்பிருக்கு.

   ஆனா இங்கு பாங் சிஸ்டமும் கண்டபடி யாரும் பணம் எடுக்க முடியாதளவு ஸ்ரிக்ட் ஆகத்தான் இருக்குதென நினைக்கிறேன், தெரியல்ல.

   ஓ உங்கள் கசின் க்கு நடந்தது கொடுமை. இங்கு அனைத்துமே கொம்பியூட்டர் சிஸ்டம்தான். இப்போ நாம் ஒருவரோடு தொடர்பு கொள்ளும்போது, அவர் நம் பாஸ்வேர்ட் கேட்கிறாரெனில்.. நாம் சொல்லும் பதில் கொம்பியூட்டருக்கு மட்டுமேதான் கேட்கும்.. அது ஓகே எனச் சொல்லும் இவர்களுக்கு.. அதனால நம்மோடு பேசும் யாரும் எதையும் அறிய முடியாதளவு பாதுகாப்பாக இருக்கிறதென அறிகிறேன். தெரியல்ல... போக வேண்டும் என எழுதியிருந்தால் யாரால் தடுக்க முடியும்?...

   Delete
 22. பூஸார் சூப்பரா கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ணுராரே. அப்ப இனி அதிரா பூஸாரை கால் அட்டென்ட் பண்னச் சொல்லுங்கோ. அவர் ரொம்ப இன்டெலிஜன்டா அவங்களை துரத்திடுவார்..இல்லைனா இது போல கால்ஸ் கு பதில் மியாவ் நு போட்டு வைச்சுக்கங்கோ வாய்ஸ்...அப்போ இப்படிக் கூப்பிடறவங்க பயந்து ஓடிடுவாங்க...ஃபோனுக்குள்ள பூனை மாதிரி பேய் அப்படினு ஹஹஹஹ்..ஐடியா நல்லாருக்கா...ஹிஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நல்ல ஐடியாக் கீதா, நான் பூஸைவிட சூப்பரா கத்துவேன் மியாவ் என:).. மிக்க நன்றி கீதா.

   Delete
 23. கவனமாக இருக்க வேண்டாமோ.. இப்படியா எல்லாவற்றையும் அவர்களிடம் உளறுவது? நல்லவேளை நல்ல நேரத்தில் ஊசிவாங்கி விட்டீர்கள். அதான் பின் வாங்கி விட்டீர்கள். இனியாவது கவனமாக இருங்கள்.

  தம வோட் போட்டாச்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ..

   ///ஊசிவாங்கி விட்டீர்கள்///
   ஹா ஹா ஹா என்னா முன்னேற்றம்... :) என் ட்ரெயினிங் நல்லாவே மாற்றுது எல்லோரையும் ஹா ஹா ஹா... அங்கின பார்த்தேன்ன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கூட வருதே உங்களுக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)..

   யேஸ் இனிக் கவனமாகத்தான் இருப்பேன், ஆனாலும் பாருங்கோ.. இன்னொருவழியால வந்து ஏமாத்திப் போடுவினம்..:) அதாவது... ஒரு சொல்லில் ழ பிழை விடுவேன்.... அதனை திருத்துவார்கள் எல்லோரும்.. பின்பு அதில் வலு கவனமா இருப்பேன்.. இன்னொரு சொல்லில் கோட்டை விட்டிடுவேன்:) அது என் ராசி அப்பூடி:).. சரி விடுங்கோ... நல்லவேளை தப்பிக்கொண்டோம் எதுவும் நடக்காமல்.

   மிக்க நன்றி ஸ்ரீராம்.. இம்முறையும்.. வேகமாக ஓடியாந்து கார்ட் பெட்டியில் ஏறிட்டீங்க:).. ரெயின் போகிற வேகத்தையும்.. நீங்கள் ஓடிவரும் வேகத்தையும் வச்சுக் கணக்குப் பார்க்கையில் .. இனிமேல் நீங்க ட்ரெயினை மிஸ் பண்ணி... :) அதனால ஹாண்ட் கோர்ட்டில் ஆஜராகவேண்டியும் வரலாம்:).. .

   மிக்க நன்றி ஸ்ரீராம்.. ஆஆஅ.. மை வச்சமைக்கும்.

   Delete
 24. கவனமா இருக்கணும்னு சொல்றது சுலபம். அந்த நேரத்துல, விதியோ என்னவோ நம்மை கவனமாக இருக்கவிடாது. நான் நல்ல காலத்திலேயே, சென்னையில் பஸ் பிரயாணத்தின்போது, சட்டைப் பையின் குறுக்கே கையை வைத்துக்கொண்டுதான் பிரயாணம் செய்வேன் (பிக்பாக்கெட் தொல்லை).

  87ல், சென்னையில் ஒரு இன்ஸ்டிடியூட்டில் இருந்தபோது, நான் மட்டும்தான் இருந்தேன். உரிமையாளர் என்னைப் பார்த்துக்கொள்ளச்சொல்லியிருந்தார். அப்போது மின்சார இலாகாவிலிருந்து ஒருவன், பெரிய ரெஜிஸ்டரைக் கொண்டுவந்து கதவைத் தட்டினான். என்னவென்று கேட்டதற்கு, மின்சார பில் நிறைய பாக்கி இருக்கிறது. இப்போது உடனே 600 ரூ கட்டவில்லையானால், மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்றான். ரெஜிஸ்டரில் எங்கள் இன்ஸ்டிடியூட் பெயரும், பாக்கி உள்ள பணமும், அட்ரசும் இருந்தது. என் கையில் இருந்த 600 ரூபாயைக் கொடுத்தேன் (மின்சாரம் இல்லைனா, சாயந்திரம் உள்ள கம்ப்யூட்டர் கோர்ஸ் நடைபெறாது. SERVER ரூம் இயங்காது என்ற பதட்டத்தில் இதைச் செய்தேன். அந்த அவசரத்தில் ரசீது வாங்கிக்கொள்ளவில்லை. உடனே சந்தேகம் வந்து, என் நண்பன் வந்தவுடன், இருவரும் தி.நகரில் உள்ள மின்சார அலுவலகத்துக்குச் சென்று கேட்டால், அவர்கள், SIMPLEஆ, 'ஆமா சார். ரெஜிஸ்டர் களவு போயிடுத்து. யார்கிட்டயோ பணம் கொடுத்து ஏமாந்துட்டீங்க' என்று சொன்னார்கள். (அப்புறம் உரிமையாளர், என் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டு அந்த ரூபாயை, நான் வேண்டாம் என்று சொல்லியும் தந்துவிட்டார்). இதுபோல் எங்க அப்பாவும், கோயமுத்தூரில் வேறு ஒரு முறையில் 70களில் ஏமாந்ததைச் சொன்னார்.

  எனக்கு நிறைய மெயில்கள், 'CONFIDENTIAL. I AM FROM SOUTH AFRICA. GOLD DUST...' போன்று பல வரும். ஒரு 5-6ஐ மட்டும் என் குழந்தைகளுக்கு SAMPLEஆகப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். எப்படியெல்லாம் எத்தர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளட்டும் என்று. மற்றபடி வரும் மெயில்களை, முதல் வார்த்தை படித்தவுடனேயே DELETE செய்துவிடுவேன்.

  இதைவிட பெரிய பெரிய எத்தர்கள் உண்டு. எங்கள் ஆபீஸில் நான் இன்-சார்ஜ் ஆக இருக்கும் துறை சம்பந்தமாக நடைபெறுவது. அதையெல்லாம் சொன்னால் பின்னூட்டம் ரொம்ப நீண்டுவிடும்.

  ReplyDelete
 25. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ, இப்போ கொஞ்சம் பிசியாக இருப்பதால உடனுக்குடன் பதில் போட முடியவில்லை மன்னிக்கவும்.

  //நெல்லைத் தமிழன்Wednesday, April 12, 2017 7:34:00 am
  கவனமா இருக்கணும்னு சொல்றது சுலபம்.// உண்மைதான் இதைத் தலைப்பா வச்சே இன்னொரு உண்மைச் சம்பவம் எழுத நினைவு வருது.. பின்பு சொல்லிடுறேன் பதிவாக,.

  ஓம் பிக்பொக்கட் பயம் பல நாடுகளில் உண்டு.. இங்கு இல்லை ஆனாலும் லண்டன் ஸ்டேசன், ரெயின்களில் உண்டுதான்.

  ஹா ஹா ஹா புக்கை களவெடுத்தே பணம் பறிக்கிறார்களா நம்ப முடியவில்லை.. அப்படி எனில் கஸ்டமஸ்க்கு ஒரு சின்ன தகவலாவது கொடுத்திருக்கலாமே அவர்கள்.

  அப்படி மெயில்கள் நிறைய வருவதுண்டு... உங்கள் ஓன்லைன் பாங்கை... செக் பண்ணுங்கள் இல்லையெனில் நிறுத்தப்போகிறோம்ம்...

  ஈபேயில் 80 பவுண்டுக்கு பொருட்கள் வாங்கியிருக்கிறீங்க, அது நீங்க வாங்கவில்லையெனில்... உடனேயே இதை லொக்கின் பண்ணி செக் பண்ணுங்க என பல மெயில்கள் வருது... அதெல்லாம் பார்த்தவுடன் டிலீட்தான்... சிலது ஓபின் பண்ணினாலே வைரஸ் வருமாமே... எங்கு போய்க் கொண்டிருக்கு உலகம்..

  ஹா ஹா ஏமாற்றுச் சம்பவங்கள் நிறைய வச்சிருக்கிறீங்கபோல.. மனதில் தோன்றியதைப் பகிர்ந்தமைக்கு மிக்க மிக்க நன்றிகள்.. நெ.த.

  ReplyDelete
 26. அச்சச்சோ....எப்படி எல்லாம் ஏமாத்துகிறார்கள்...

  பரவாயில்லை கடைசியில் உஷார் ஆயிட்டீங்க....நல்லது..நிஷா வோட பதிவிலயும் இது போல் அவங்க அனுபவம் ஒன்ன சொல்லி இருந்தாங்க.....  நாம எவ்வளவு தான் கவனமா இருந்தாலும் புதுசு புதுசா ஏமாத்தும் போது என்ன செய்றது...

  ஆனாலும் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு...நான்னெல்லாம் அவ்வளவு நல்லவங்க இல்ல... யாரையும் ஏமாத்த கூடாது....அதே மாதரி யாராவது ஏமாத்திட்டா ரொம்ப கோபம் வரும்....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. இவ்வாரம் பிஸியாகவே ஓடுது.. உண்மைதான், நான் ஒன்றில கவனமா இருந்தா, இன்னொன்றில ஏமாத்திடுறாங்க.. மிக்க நன்றி அனு.

   Delete
 27. தாமதமாக வந்ததால பதிவைவிட பெரிய பின்னோட்டங்களையும் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நானும் இங்கு வருவோரின் பின்னூட்டங்களையே அதிகம் ரசிப்பதுண்டு.. அதில்தான் சந்தோசமே..

   Delete
 28. வழக்கம் போல் wow ஓசி குறிப்பு..இல்ல ஊசி குறிப்பு...

  ReplyDelete
 29. நீஈஈஈஈஈளமா இருக்கே அப்பாலிக்கா வாரன்.வாசிச்ச வரைக்கும் அருமை.இல்ல நீங்க லூசு இல்ல எங்கட செல்லம்

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ சுரேக்கா வாங்கோ... நோஒ நான் பேச மாட்டேன்ன் உங்களோடு கோபம்:).. ஹா ஹா ஹா சரி சரி இன்று வருசம் என்பதால கோபத்தைத் தூக்கி தேம்ஸ்ல வீசிட்டேன்ன்.. நலம்தானே?..

   //இல்ல நீங்க லூசு இல்ல எங்கட செல்லம்//
   ஹா ஹா ஹா அப்பப்ப இடையில வந்து இப்பூடி எதையாவது சொல்லி பூஸ்ட் தந்திட்டு ஓடிடுறீங்க.. சரி சரி மெதுவா வந்து படிங்கோ.. நான் புது போஸ்ட்டுக்கு மூவ் ஆகிறேன்:).. மிக்க நன்றி சுரேக்கா.. சுசி செல்லத்துக்கும், அக்காவின் மகனுக்கும் அதிராவின் ஹப்பி நியூ இயர் எனச் சொல்லிடுங்கோ...

   Delete
 30. தெரியாதவங்களுக்கு tramviewer கொடுக்குறது தெரியாதவங்களுக்கு உங்க கம்ப்யீட்டரையே கொடுக்குற மாதிரி..
  நீங்க பண்ணின காரியத்துக்கு இந்த பதிவோட தலைப்பில்லை இந்த புளோக்கோட தலைப்பைதான் “நான் ஒரு அரைலூசு”னு வச்சுக்கணும். ;-/

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கவிக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்:).. “நடந்தவை யாவும் நடந்தவை தானே”..:) ஹா ஹா ஹா இப்போ என்ன பண்றது:).. திட்டத் திட்டத் சிரிச்சுக்கொண்டு இருக்க வேண்டியதுதேன்ன்:)..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி கவிக்கா.

   Delete
 31. தலைப்பைப் பார்த்தபின், உடனே இப்படி எழுதத் தோணித்து. ஆனால் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் எழுதவில்லை.

  "அதிரா... உங்களை நீங்க எப்பயும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. பாதிதான் புரிந்து வைத்துள்ளீர்கள்"

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லத் தமிழன் வாங்கோ..

   /// ஆனால் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் எழுதவில்லை.// ஹா ஹா ஹா அப்படிப் பயம் எப்பவும் வேணாம்ம்.. நான் எப்பவும் தப்பாக எடுக்க மாட்டேன்ன், நீங்க ஓட்டினால் பதிலுக்கு நானும் ஓட்டுவேனே தவிர, தப்பா எல்லாம் எடுக்க மாட்டேன்..:).

   ////"அதிரா... உங்களை நீங்க எப்பயும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. பாதிதான் புரிந்து வைத்துள்ளீர்கள்"///
   ஹா ஹா ஹா கர்ர்ர்:) அப்போ முழுசேதான் என முடிவே கட்டிட்டீங்களோ?:).. ஹையோ நல்லவேளை இதை இனி பெரிசா ஆரும் பார்க்க மாட்டாங்க:).. இமேஜ் டமேஜ் ஆகிட முன்பு காசியில் போய் ஞானியாக இருந்திட வேண்டியதுதான்:)..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி நெ.த [உங்கட கண்டுபிடிப்புக்கு:)].

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.