நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Friday, 14 April 2017

K சரியும்.. அம்மாவும் மீயும்:)

நாமிருவர் நமக்கிருவர் போதும் என நிம்மதியாக இருந்த குடும்பத்தில:), 5 வருட இடைவெளியின் பின்னர்.. அதிரடியாக வந்து பிறந்த கொயந்தை நான்:). அதனால வீட்டில் அனைவரும் பயங்கர செல்லம் தருவார்கள் . நான் மட்டும் அப்பாவிடம், ஒரு அடிகூட வாங்கியதில்லை. எப்பவும் அம்மாவோடயே ஒட்டி இருப்பேன்.. ஒரு குட்டி இடத்தில் அம்மா இருந்தால்கூட, ஓடிப்போய் ஒட்டி உரசி கஸ்டப்பட்டு அதில் நானும் இருப்பேன்... இப்போ இந்தப் பழக்கம் எங்கள் டெய்சிப்பிள்ளையிலும், சின்னவரிலும் இருக்குது.

பாருங்கோ எத்தனை மணியானாலும், நான் பெட் போகும் வரை, நான் எங்கு இருக்கிறேனோ அங்கே...என்னோடயே  அருகில் என் முகத்தை உற்றுப் பார்த்தபடி..தூங்கித் தூங்கி இருப்பா, கோபம் வந்தால் எட்டி எட்டி கீ போர்ட்டைத் தட்டி விடுவா:), அவவின் பரிதாபம் தாங்க முடியாமல் bed க்கு போயிடுவேன்:). உடனே தானும் ஓடி வந்து தன் பெட்டில் படுப்பா.
இப்படி அம்மாவோடு ஒட்டி இருந்த நான், பின்னர் வளர வளர நல்ல நண்பிபோல மாறி அம்மாவும் நானும் அரட்டை பண்ணுவதில் குறைவே இல்லை.  திருமணமாகி மூத்த மகன் பிறந்த பின்னர்தான் நாம் தனியே வந்து, நான் சமைக்க தொடங்கினேன். அதுவரை சமைப்பதில்லை, ஆனா அம்மா சமைக்கும்போது பெரும்பாலும் பக்கத்தில் இருந்து பார்ப்பேன், அம்மாவும் சொல்லித்தருவா ஒவ்வொரு சமையல் நுணுக்கங்களை.

அதனால முன்ன முன்னம் சமைக்கிறோம், சமைக்க தெரியாதே எனும் கவலையோ.. சமையலில் தப்போ எப்பவும் இருக்கவில்லை எனக்கு. இது ஒருபுறம் இருக்க, எங்கள் அம்மாதான் எங்கள் குடும்பங்களுக்குள் சமையலில் மிகவும் கெட்டிக்காரி.

சமீபத்தில் எங்கள் புளொக்கில் - நெல்லைத்தமிழனின் அல்வா ரெசிப்பியில், கோதுமை அல்வா, அரிசி அல்வா பற்றி பேச்ச்சு நடந்தது .. இதில் கோதுமை அல்வாவை நாம் “மஸ்கட்” என்போம், அரிசி அல்வாவை - “தொதல்” என்போம்... இப்பெயர்கள் சிங்களத்தில் இருந்து வந்தவை எனத்தான் நான் நினைத்திருந்தேன்.. கேரளா பெயர் என்பதுபோல நெ.த சொன்னதாக நினைவு. அது போகட்டும்.

இந்த தொதல் செய்வதில் எங்கள் அம்மா மிக திறமையா செய்வா. தனித்தேங்காப்பாலில் அரிசிமாவைச் சேர்த்துச் செய்வது. ஊரில் அடிக்கடி செய்வோம். குக்கரில் செய்ய முடியாது, தேங்காய்ப்பால் எண்ணெயாகி கொதித்து பறக்கும் அருகிலெல்லாம். ஒரு ஆளைக் கூப்பிடுவோம் தேங்காய் பிளிந்து எடுக்கவும் கிண்டுவதற்கும்... மிகுதிக் கவனிப்பு அம்மா. சூப்பரா இருக்கும். இப்போகூட இலங்கைத்தமிழ்க் கடைகளில்.. தொதல் என கிடைக்குது, ஆனா அம்மா செய்யும் டேஸ்டை எங்கும் காணவில்லை நான்.

இப்படி எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற அம்மாவுக்கு, கேசரி செய்ய முடியவில்லை. பலமுறை நானும் அம்மாவுமாக சேர்ந்து கிண்டி... சக்கரைப்புக்கைபோல கறண்டியால் அள்ளிச் சாப்பிடும் பதமாகவே செய்தோம், துண்டு போட முடியவில்லை.

வேண்டாம் இது என கைவிட்டிருந்த வேளை, ஊரை விட்டு அப்பாவின் ஒபிஸ் குவாட்டேசில் கொஞ்சக் காலம் வந்திருந்த வேளை, பக்கத்தில் ஒரு பிள்ளை சொன்னா, நான் நல்லா செய்வேன் .. இன்ன இன்ன பொருட்கள் தேவை எண்டெல்லாம், சரி என பெரிய ஆரவாரத்தோடு வாங்கி, அப்பிள்ளையை முன்னால் விட்டு நானும் அம்மாவும் பின்னால் நிண்டு.. கிண்டி முடிச்சால்.. அதே சக்கரைப் புக்கை அவ்வ்வ்வ்வ்வ்:)... இது நமக்கினி வேண்டாம் என கைவிட்டாச்சு.

அது முடிஞ்சு, கொழும்பில் நான் வேர்க் பண்ணத் தொடங்கியிருந்த சமயம், அங்கிருந்த ஒரு நண்பி சொன்னா, அதிரா நான் கேசரி நன்கு செய்வேன், நான் சொல்லும் அளவில் செய்யுங்கோ பிழைக்காது, துண்டு வெட்டி எடுக்கலாம் என, இல்ல நான் கேசரியால் நொந்து போயிட்டேன் வேண்டாம் விடுங்கோ என்றேன், அவ விடவில்லை:).. அளவுகள் செய்முறை எல்லாம் சொன்னா.

அதைக் கொண்டு வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். பின்னேரங்களில் அம்மாவும் நானுமாக சேர்ந்து படம், சீரியல் பார்ப்பதுண்டு, ஒருவர் தவறவிட்டால், மற்றவர் பார்த்து கதைகளைப் பரிமாறுவோம்[(இப்பவும் படக்கதை சொல்லுவேன் சில:), இம்முறை அம்மா இங்கு வந்திருந்தபோது,  “முப்பொழுதும் உன் கற்பனைகள்”.. கதை சொல்லி முடிச்சேன் ஹா ஹா ஹா.. அம்மாவின் நிலைமையே இப்பூடி எனில்??:) சரி வாணாம் விடுங்கோ:...]

இப்படி அம்மா ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவ, நான் சொன்னதும், சரி வா கிண்டிப்பார்ப்போம் என எழுந்தா, இல்லை அம்மா..  “பல எலி சேர்ந்தால் புற்றெடுக்காது”.. இம்முறை கரெக்ட்டான அளவுகளில் நானே செய்து வெற்றி வாகை சூடிவிட்டுக் கூப்பிடுறேன், நீங்க எனக்கு படம் பார்த்து கதையின் முடிவைச் சொல்லுங்கோ என சொல்லிவிட்டு கிச்சினுக்குள் போனேன்..[ஏனெனில் அம்மாவும் நானுமாக செய்யும்போது, கொஞ்சம் தண்ணி விடலாமே, இன்னும் கொஞ்சம் றவ்வை போடலாம்போல இருக்கு இப்படிச் சொல்லியே காரியத்தை கெடுத்த நாட்களும் உண்டு]. அதே முறையில் செய்தேன் சூப்பராக வந்துது, அன்றிலிருந்து இப்போ நம் குடும்பங்கள் எல்லோருக்கும் பழக்கிட்டேன்:).. இனிமேல் உங்களுக்கும்:).

==================================Happy New Year================================
அனைவருக்கும்.. அதிரா குடும்பத்தினரின் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்_()_. வாங்கோ வந்து கைவிஷேடம் எடுங்கோ.. அப்படியே.. இரு பொங்கலும் செய்தேன், கறியும் வச்சேன்... சாப்பிடுங்கோ.. அப்பு சாமீஈஈ எல்லோரையும் காப்பாத்துங்ங்ங்ங்ங்கோ.. என்னையும்தேன்ன்ன்ன்:). நடுவே இருக்கும் பெரீயா “பிங்கி” பூ, இப்போ எங்கள் காடினில் பூத்தது...
==========================================================================
கேசரி

தேவையானவை:

றவ்வை(Semolina) - 1 கப்
கேசரிக்கு எப்பவும் கோர்ஸ் றவ்வை என இருப்பதையே பாவிக்க வேண்டும்.. ஃபைன் றவ்வை களி போலாகிடும்.
கொதி தண்ணி - 1 1/2 கப்
சீனி (sugar)  - 3/4 கப்
நெய் - 2,3 மேசைக்கரண்டி
மாஜரின்/பட்டர் - 150 - 200 கிராம்ஸ்.
நட்ஸ் விருப்பத்துக்கு.[நான் பாவித்திருப்பது மிக்ஸ்ட் நட்ஸ்].
கேசரிப் பவுடர் - 1 தே.கரண்டி.

ஓகே நோட் பண்ணிட்டீங்களோ? அப்போ வாங்கோ குக்கரை ஓன் பண்ணலாம். முதலில் றவ்வையை ஒரு 3,4 நிமிடங்கள் மெல்லிசாக வறுத்து எடுத்து வைக்கவும். பின்பு நெய்யை ஊற்றி நட்ஸ் ஐ வறுத்து அப்படியே நெய்யுடன் எடுத்து புறிம்பாக வைக்கவும்.

இப்போ கொதிக்கும் தண்ணியை ஊற்றி, சீனியை அதனுள் போட்டு நன்கு கொதிக்க விடவும், சீனி கரைந்த பின், கலரிங் சேர்க்கவும். ஒரு ரகசியம் சொல்லட்டோ? கேசரிப் பவுடர் கிடைக்காத நேரம், நான் கறிக்கு பாவிக்கும் மஞ்சள் தூளைப் பாவிப்பேனாக்கும்:) [Turmeric powder].

இப்போ நெருப்பை குறைத்து வைத்துக்கொண்டு, றவ்வையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிண்டவும், முழுவதும் கொட்டியபின், மாஜரினை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிண்டிக்கொண்டே வரவும், முடிவில் நெய்யுடன் சேர்ந்த நட்ஸ் ஐ போட்டுக் கிண்டி, இறக்கவும்..

சிலர் தனி நெய்யில் செய்வார்கள்.. அது கை எல்லாம் ஒட்டுவதுபோல வரும், இது அப்படியில்லை, இன்னுமொன்று ஓவராக நெய்யோ மாஜரினோ சேர்க்கும்போது.. களிபோல.. சக்கரைப் புக்கைபோலாகிடும்.

உடனேயே தட்டில் கொட்டி, கையில் சான்விச் பாக் ஐ போட்டு அழுத்தி விடவும்... சில மணித்தியாலங்கள் அப்படியே விட்டு விட்டு , கட் பண்ணவும்.
[உடனேயே கட் பண்ண வேணுமெனில், அரை மணி நேரம் ஃபிரிஜ்ஜில், மூடி வைத்து எடுக்கலாம்]. இப்போ திரும்படியும் மேலே ஓடிப்போய்:) கட் பண்ணிய துண்டுகளைப் பார்க்கவும்... கவனிக்கவும் பார்க்க மட்டுமே சொன்னேன்:).

இத்துடன் இன்றைய வகுப்பு நிறைவடைகிறது, மீண்டும் இன்னொரு சுவையான குறிப்போடு உங்களை சந்திக்க இருப்பவர்.. அதிரா chef:).

குட்டி இணைப்பு:- 
நெல்லைத் தமிழன் அவர்கள் சொன்னார், சமையல் குறிப்பு எழுதும் நேரம், கதை எழுதுங்கோ, நீங்க நன்றாக கதை எழுதுறீங்க என:)[அதாரது எழும்பி ஓடுறது கர்ர்ர்ர்:)].. இருப்பினும் மனம் பொறுக்கவில்லை குறிப்பெழுதிட்டேன்:). விரைவில் கதையும் எழுதப்போகிறேன்:). இடைக்கிடை சமையலும் போடுறேன்.. அப்போதானே நான் வீட்டில் ஒழுங்கா சமைக்கிறேன்.., அஞ்சுவைப்போல ஊர் சுத்தவில்லை:) எனத் தெரிய வரும்.. haa haa haa:).

இந்தாங்கோ புது வருச வடை... எடுங்கோ.. ஸ்ரொப் ஸ்ரொப்.. கையைக் காட்டுங்கோ.. ஆ மை இருக்கு.. இப்போ ஆளுக்கு ஒன்று எடுங்கோ:)..
இங்கே முதலாவதாக வருபவருக்கு ஆயா சுட்ட வடை தட்டோடு கிடைக்கும்:), 2வதாக வருபவருக்கு.. ஹலோ கிற்றி,  3வதாக வருபவருக்கு.. நியூ இயர் ஸ்பெஷல் 98 வயசு ஆயா:).. பார்ப்போம் யார் ஆயாவைத் தூக்க வருகிறார்கள் என:) ஹா ஹா ஹா.. ஹையோ பயப்பூடாதையுங்கோ, நான் இங்கினதான் இருப்பேன்.. பட்டுப் பட்டென பின்னூட்டங்களை வெளியிடுவேன்:).

ஊசி இணைப்பு:-

92 comments :

 1. வணக்கம் !

  அந்த வடை மட்டும் அனுப்புங்க எனக்கு பிடித்ததே அது மட்டும்தான்

  தமிழன் தைப்பொங்கலைத்தான் புத்தாண்டாக கொண்டாடுகிறான் ஆதலால்
  இனிய சித்திரைத் திங்கள் நல்வாழ்த்துகள் மியாவ் ....வாழ்க நலம்

  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மேஜர் வாங்கோ.. ஹா ஹா ஹா மேலே ஹைலைட் பண்ணியிருப்பதை யாரும் படிக்கவில்லைப்போலும்.. இருப்பினும் நீங்க லக்காளிதான்:)... முதலாவதா வந்த உங்களுக்கு ஆயா சுட்ட வடை தட்டோடு எடுத்துப்போய் பிளேன் ரீ உடன் சாப்பிடுங்கோ... வாவ்வ்வ்வ்வ் தம... மிக்க நன்றி.

   Delete
  2. தட்டோட வடை தந்தமைக்கு நன்றியோ நன்றி ஆமா ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் நம்ம உழவுத் துறையிடம் விசாரித்துப் பார்த்ததில் k சரி நல்லா இருக்குமாம் என்று தகவல் வந்திருக்கு ஆனால் இங்கே எல்லாம் காலியானதால் அடுத்த முறை செய்யும் போது முதல் ஆளா வருகிறேன் என்பதை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகிறேன்

   Delete
  3. மீள் கம்மிங் க்கு மிக்க நன்றி மேஜர்..

   இதுக்கெல்லாம் உளவுத்துறையா?:).. ஓ யாராவது சாப்பிட்டு ஓகே சொன்னால்தான் நீங்க சாப்பிடுவீங்களாக்கும்:) மேஜர் ஆச்சே ஹா ஹா ஹா.

   ஆணித்தரமாக் கூறியதை நான் பசுமரத்தாணிபோல பதிச்சிட்டேன்ன்.. முதலாவது ஆளாக வந்திடுங்கோ நெக்ஸ்ட் ரைம் ஆயா உங்களுக்கே:) ஹையோ டங்கு ஸ்லிப்ட்.. கே றைட்:)(சரி) உங்களுக்கே:).

   Delete
 2. எல்லாம் நன்றாகவே உள்ளது ஊசிக்குறிப்பும் நல்லா இருக்கு ஆனா ஒன்றுதான் பிடிக்கல்ல ............அது என்னண்ணா அஞ்சுவை வம்புக்கு இழுப்பது ( அப்போதானே நான் வீட்டில் ஒழுங்கா சமைக்கிறேன்.., அஞ்சுவைப்போல ஊர் சுத்தவில்லை:) எனத் தெரிய வரும்.. haa haa haa:).)

  இரவைக்கு இருக்கு கச்சேரி

  ReplyDelete
  Replies
  1. ///அது என்னண்ணா அஞ்சுவை வம்புக்கு இழுப்பது //

   //இரவைக்கு இருக்கு கச்சேரி//

   ஹா ஹா ஹா அஞ்சுவை வம்பிழுக்காட்டில் எனக்கு தூக்கமே வராது:).. முன்பு எனில் நம் கெட்டகிருமிக் கூட்டம் நிறையப்பேர் இருந்தாங்க மாறி மாறி வம்பிழுக்கலாம்:) இப்போ அஞ்சுதான் மாட்டி.. அப்போ விட்டிடுவேனா நான்?:)..

   மிக்க நன்றி சீராளன்.. முதல் ஆளாக வந்திட்டீங்க இம்முறை.

   Delete
  2. ஆவ் தாங்க்ஸ் சீராளன் ..பாருங்க மியாவ் என் தொண்டர் படை பொங்கி எழுவாங்க இன்னொருத்தரம் வம்பிழுத்தா அவ்ளோதான் :) பெரிய க்ளாசில் பட்டர் டீ போட்டு குடிப்பேன் :))

   Delete
  3. ///பாருங்க மியாவ் என் தொண்டர் படை பொங்கி எழுவாங்க இன்னொருத்தரம் வம்பிழுத்தா அவ்ளோதான் :) ///
   என்னாதூ தொண்டர் படையா?:) உங்களுக்காக நீங்களே உருவாக்கினதா?:) விடுங்கோ விடுங்கோ நான் டீக் குளிக்கப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்:)

   Delete
 3. அதிரடியாக பிறந்ததால்தான் அதிரா என்று பெயர் வைத்தார்களோ... ?

  தங்களது கணினி எனது HP கணினி என்று நினைக்கிறேன் சரியா ?
  அபுதாபியில் இன்றுவரை விலை குறையாதது இது மட்டுமே...

  எங்கள் வீட்டில் லொதல் என்று சொல்வோம்

  K சரியை "சுவைத்தேன்"

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர் ஜீ வாங்கோ.. ஹா ஹா ஹா நான் கொஞ்சம் அதிரடி தான்:).

   ஓம் ஏச்பி தான்.. ஓ அப்படியா... உங்களிடம் இருப்பதும் இதுவோ சந்தோசம்.

   எங்கள் ஊரில் பேசத் தொடங்கும் குழந்தைகள்தான் லொதல் என்பினம் ஹா ஹா ஹா..

   வந்தமைக்கும் சுவைத்தமைக்கும் மிக்க நன்றி.

   Delete
  2. சொல்ல மறந்திட்டேன்ன் கில்லர் ஜீ.. இரண்டாவதாக வந்த உங்களுக்கு, மேலே வடை டிஷ் இன் அருகிலிருக்கும் Hallo Kitty:)

   ..மேலே வடைத்தட்டின் கீழே மறைந்திருக்கும் எழுத்துக்களைப் படிச்சால் புரியும்:). கொஞ்சம் ஸ்பீட்டா ஓடி வந்தமையால் ஆயாவிடம் இருந்து தப்பிச்சிட்டீங்க:). ஹா ஹா ஹா.

   Delete
  3. எனக்கும் சரியாக பேச்சு வராது சிலர் என்னை வாயில்லாப்பூச்சி என்றே அழைப்பர்

   Delete
  4. ஹா ஹா ஹா மீண்டும் கில்லர்ஜீ... வாயில்லாப் பூச்சி எனச் சொல்லியே இவ்ளோ பேசிட்டீங்க:).. ஒருவேளை என்பக்கம் வந்ததாலாக இருக்குமோ?:)..
   மிக்க நன்றி.

   Delete
 4. கேசரி நாங்களும் செய்து பார்த்தோம்...

  ஐயோ...!

  "கவனிக்கவும் பார்க்க மட்டுமே சொன்னேன்" என்று சொன்னதை வீட்டில் சொல்லவில்லை...

  நடந்ததும் அதுவே... (என்னால் பார்க்க மட்டும் என்பது வேறு விசயம்)

  நடந்தது என்னவென்றால் :-"ஃபிரிஜ்ஜில் வைத்து, உவ்வே...!" எனது செல்லம் (மகள்...!)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ..
   //கேசரி நாங்களும் செய்து பார்த்தோம்...//
   இது எப்பவாக்கும்?:) .

   ///ஐயோ...!//
   ஆண்டவா என்னாச்சூஊஊ? இப்போ எதுக்கு எமதர்மனின் ஃபைவ் ஐ(மனைவியை) கூப்பிடுறீங்க?:) ஹா ஹா ஹா..

   ///"கவனிக்கவும் பார்க்க மட்டுமே சொன்னேன்" என்று சொன்னதை வீட்டில் சொல்லவில்லை...//
   ஹா ஹா ஹா நீங்க இன்னொன்றையும் பார்க்கத் தவறிட்டீங்க:).. ஹையோ ஹைலைட் பண்ணியிருக்கும் எழுத்துக்குள் ஒளிச்சு வச்சிருக்கும் ஆயாவைக் கவனிக்கவில்லை. ஹா ஹா ஹா ஏசிபோட்ட காரில்தானே வந்தீங்க?.. கடவுளே ஆயா பத்திரம்.. இம்முறை புதுவருடத்தில் யாருக்கு ஆயா லக்காக கிடைப்பாவோ என ஏங்கிட்டிருந்தேன்:).. அது உங்களுக்கே..:)

   ஆயாவுக்கு ரொம்ப வயசாகிட்டுதா.. ரொம்ப முடியல்ல, பகலில் தூங்கிறா.. இரவு முழுக்க இருமுறா:).. எதுக்கும் ஒரு ரொனிக் ஏதும் வாங்கிக் கொடுத்திட்டு, காரை ஸ்பீட்டா ஓடாமல் மெதுவா கூட்டிப் போங்கோ பத்திரம் ஆயா:).. ஹா ஹா ஹா..

   /// (என்னால் பார்க்க மட்டும் என்பது வேறு விசயம்)//
   ஹா ஹா ஹா புரிஞ்சு போச்ச்ச்:) சுவீட்டுக்கு எதுக்கு சுவீட்டூஉ:).

   // :-"ஃபிரிஜ்ஜில் வைத்து, உவ்வே...!" எனது செல்லம் (மகள்...!)//

   ஓ.. இல்ல இதெல்லாம் வெளியே வச்சு ஒரு நாளில்/ 2 நாளில் சாப்பிட்டால்தான் சரி. நான் சொன்னது அவசரத்துக்கு செய்தவுடன் கட் பண்ண விரும்பினால்.. கொஞ்ச நேரம் ஃபிரிஜ்ஜில் வச்சால்.. கட்டியாகிடும் என்பதற்காக.

   மிக்க நன்றி டிடி. மீண்டும் சொல்றேன் ஆயா பத்திரம், கவனமா பார்த்துக்கொள்ளுங்க:).

   Delete
  2. haaaaa haa a :) டிடி சகோ பாவம் நீங்க :) ஹைலைட் பண்ணி அதில் 98 வயசு ஆயாவை ஒளிச்சிருக்கு இந்த பூனை
   நாங்கதான் ரிவெர்ஸ் ஆர்டார்ல படிக்கிறதால கண்டுப்பிடிச்சேனே

   Delete
  3. ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு உப்பூடி சத்தமா சிரிச்சு ஆயாவை எழுப்பிடப்போறீங்க.. அவ ஆழ்ந்து தூங்குறா சகோ டிடியின் கார் சீட்டை சரிச்சுப் போட்டு:).. காரில “சோதனை மேல் மேல் சோதனை போதுமடா சாமீஈஈ” எனும் தனக்கு மிகவும் பிடித்த பாட்டைச் சத்தமாகப் போட்டுக் கேட்டபடி.. மிக கவனமாகக் காரோடிக்கொண்டிருக்கிறார் டிடி..:) ஹா ஹா ஹா முடியல்ல சாமீஈஈஈ:).

   Delete
 5. தொதல் எனக்கு வேண்டா ,பொத்தல் வடே போதும் ..சூப்பர் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. ஹா ஹா ஹா உங்களுக்கு தொதலும் இல்லை, ஆயாவும் இல்லை:) ஆயாவை இப்போதான் பத்திரமா எங்கட டிடி கூட்டிப் போறார்... ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

   Delete
 6. மியாவ் ஐயம் வெறி :) பிசி ..நீங்க செஞ்சத தற்போது சாப்பிட முடியாத நிலைமை :) அதை அவர்கள் ட்ரூத்துக்கே கொடுங்க :) வேற யாருக்கும் தரக்கூடாது :)

  அப்புறம் நான் 57 கிலோலருந்து இன்னும் ஒரு 5 கிலோ குறைய யோசிச்சிருக்கேன் :) நீங்க எடுத்துக்கோங்க அந்த அஞ்சை என்கிட்டருந்து :)))))))))))))

  ரிவர்ஸ் ஆர்டார்ல வந்து நிறைய பின்னூட்டம் போட ஆசைதான் ..ஆனா ஒண்ணே ஒன்னு மட்டும் கண்ணில் படுது
  அது //பிளிந்து//ழ ழ :)

  bye தற்சமயம்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.... நோ ட்றுத்துக்கு ஃபிரிஜ்ல இன்னும் மீன் குழம்பிருக்காம், மாமி 4 நாள் லீவில நிற்பாவெல்லோ:) இனி செவ்வாய்க் கிழமைதான் ஃபிரிஜ்ஜையே திறப்பார் :).

   என்னாது ஓமக்குச்சியாகி சினிமாவில் குதிக்கும் ஐடியா ஏதும் இருக்கா?:).. நான் 59 கிலோவாக்கும்.. இனிக் குறைய மாட்டேன்ன்:).. ஹா ஹா ஹா..

   அட பிளிந்திட்டேனா.. அவ்வ்வ்வ் டவுட்டே இல்லாமல் ரைப் பண்ணித் தள்ளினேனே:).. சரி விடுங்கோ இதுவும் கடந்து போகும்:) இப்பூடித்தான் சமாளிக்கோணும்:).. ஹா ஹா ஹா..

   Delete
 7. //இன்னொரு சுவையான குறிப்போடு உங்களை சந்திக்க இருப்பவர்.. அதிரா chef:).// OMG GOD SAVE THE WORLD

  ReplyDelete
  Replies
  1. ///SAVE THE WORLD//

   யேச்ச்ச் யேச்ச்ச்.. சேவ் த சில்றென் போல சேவ் த வேல்ட் என சரைட்டி ஆரம்பிச்சிச்சிருக்கிறேன்.. உண்டியலில் மாதம் 5 பவுண்ட்ஸ் போடுங்க..:)...

   தங்கள் பொன்னான நேரத்தில் ஒரு பகுதியை எனக்காகவும் ஒதுகியமைக்காக மிக்க நன்றிகள் ஹா ஹா ஹா.

   Delete
 8. ஏழாவது வோட் என்னோடது. இரண்டு நாட்களாக நெட் கிடைக்காததால் இங்கு வருகைதர தாமதமாகிவிட்டது.

  கேஸரி + வடைகளை, தலையோடு கால் கண்ணால் பார்த்துட்டேன்.

  செய்முறை விளக்கம் பற்றி நெல்லைத்தமிழன் ஸ்வாமீ வந்து கருத்தளிப்பார்.

  முதல்படம் அனிமேஷன் சூப்பர்.

  ஓட்டை வடைகள் ஆறி ஜில்லிட்டுப்போய் ஊசிப்போனது போல இருப்பினும், ஊசிக்குறிப்பு நன்றாக மொறுமொறுன்னு இருக்குது. :)

  இனிய ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. இவ்வாரம் முழுக்க நானும் பிஸியாக இருந்தமையால்.. அப்பப்ப எட்டிப் பார்த்திட்டு ஓட மட்டுமே முடிஞ்சுது...

   மிக்க நன்றி கோபு அண்ணன் வாழ்த்துக்கும் வோட்டுக்கும்.. வோட் கிடைக்கும் வேகத்தைப் பார்த்தால்.. அடுத்த மகுடம் எனக்குத்தேன்ன்ன் ஹா ஹா ஹா.. பகவான் ஜீ ட கண்ணில இது பட்டிடக்கூடாது:).

   Delete
 9. பூஜை அறைப் படங்கள் சும்மா ஜொலிக்குது.

  இது யார் வீட்டு பூஜை அறையைப் போட்டோ பிடித்து வந்தீர்கள் அதிரா????? :)

  ReplyDelete
  Replies
  1. ///இது யார் வீட்டு பூஜை அறையைப் போட்டோ பிடித்து வந்தீர்கள் அதிரா????? :)///
   ஆண்டவா.. ஆஞ்சநேயா .. முருகா.. வள்ளிக்கு கொடுப்பதாக நேர்ந்த வைர அட்டியலை இன்னும் கொடுக்கவில்லை என்றோ இப்பூடிச் சோதிகிறாயப்பா:).. ஹா ஹா ஹா ..

   [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ1xxSz44Nd2pvTX_5y40oVdQNG4JH9ZkaDVCdiBQVBcvo24_uO[/im]

   Delete
  2. ஐயோ அதிரா யாருது.....அழகா சாமி கும்பிடுறாங்கோ......பூசார் அழகு!!!

   கீதா

   Delete
 10. ஃபேஸ்புக் ஜோக் பிரமாதமாக உள்ளது. :)

  அதிரடி அதிரா போலவே அவள் சொன்னதும், நான் மிகவும் பலக்கச் சிரித்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. /// நான் மிகவும் பலக்கச் சிரித்து விட்டேன்.///
   பார்த்தீங்களோ.. என்னால உங்கள் ஆயுள் டெய்லி கூடிக்கொண்டே வருது.. நன்றி சொல்லுங்கோ:) ஹா ஹா ஹா..

   Delete
 11. குட்டி இணைப்பில் ..... //[அதாரது எழும்பி ஓடுறது கர்ர்ர்ர்:)]..//

  நானில்லை. நம்புங்கோ. ஏனெனில் என்னால் ஓடவே முடிவது இல்லை.

  //அஞ்சுவைப்போல ஊர் சுத்தவில்லை:) எனத் தெரிய வரும்.. haa haa haa:).//

  நம் அஞ்சு பாவம் இல்லையா? இதைப்படித்தால் எவ்ளோ வருத்தப்படுவாங்கோ, அதிரா.

  ஏனோ இங்கு இன்னும் வரக்காணுமே. ஒருவேளை நிஜமாலும் நீங்க சொல்லுவதுபோல ஊர் சுற்றப்போய் இருப்பாங்களோ என சந்தேகம் வரத்தான் செய்கிறது.

  ஆனால் எனக்கு அந்த சந்தேகம் ஏதும் கிடையாது. சர்ச்சுக்குப்போய் ஏதேனும் சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்பாங்கோ. அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க அதிரா.

  ReplyDelete
  Replies
  1. //நானில்லை. நம்புங்கோ. ஏனெனில் என்னால் ஓடவே முடிவது இல்லை.//
   ஹா ஹா ஹா நீங்க நடக்கவெளிக்கிட்டாலும் விடமாட்டேன், இருந்து கதை படிச்சிட்டுத்தான் போகோணும்:).

   //நம் அஞ்சு பாவம் இல்லையா? இதைப்படித்தால் எவ்ளோ வருத்தப்படுவாங்கோ, அதிரா.//

   உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது புரியாது கோபு அண்ணன், அது முந்தின அஞ்சு:).. இப்போ நான் ஃபுல் ட்ரெயினிங் குடுத்து வச்சிருக்கிறேன்ன்.. ஆர் வந்து எவ்ளோ அடிச்சாலும்... ஸ்ரெடியா நிக்கோணும் என்னைப்போல என:).. ஆனா என்ன அதுக்கான பீஸ் ஐத்தான் இன்னும் தரல்ல அவ.. கொஞ்சம் அனுப்பி வைக்கச் சொல்லுங்கோ கோபு அண்ணன் புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு:)..

   Delete
  2. ////ஆனால் எனக்கு அந்த சந்தேகம் ஏதும் கிடையாது. சர்ச்சுக்குப்போய் ஏதேனும் சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்பாங்கோ. அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க அதிரா.//

   நீங்க எவ்ளோ அனுபவசாலி கோபு அண்ணன், கரீட்டாச் சொல்லிட்டீங்க:), நான் சுவீட் 16 தானே.. எனக்கு அனுபவம் போதல்ல.. தப்பா நினைச்சுட்டேன் ஊர் சுத்தப் போயிட்டா என...:)

   அது நீங்க சொல்வது முற்றிலும் கரிட்டு:)... என்னைப்போல சுவீட் 16 ஆட்கள்தானே ஊர் சுத்தப் போவினம்... அஞ்சுவைப் போல66 ல இருப்போர் எல்லாம் சேர்ஜ் க்குத்தான் போவினம்:)).. ஹா ஹா ஹா முடியல்ல என்னால.

   நீங்க ஓடுப்பட்டு வந்து கரீட்டா ஆயாவைப் பொறுப்பெடுப்பீங்க என எதிர்பார்த்தேன்.. ஹா ஹா ஹா.. உங்கள் நெட் உங்களைக் காப்பாற்றி விட்டது ஆயாவிடமிருந்து.. மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.

   Delete
  3. கோபு அண்ணா :) நான் சர்ச்சில் தான் இருந்தேன் நேற்றும் இன்றும் குட் ப்ரைடே ஈஸ்டர் நிறைய வேலை :) இந்த குண்டு தைரியசாலி பூனைக்கு ஒண்ணுமே தெரில :)

   Delete
  4. நீங்க எப்பூடிக் கூக்குரல் போட்டாலும் இப்போ அவருக்குக் கேய்க்காது:) அவருக்கு இப்போ நெட்டூ கட்டாம்ம்ம்:)..

   Delete
 12. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  புது வருச வடை சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் வாங்கோ.. ஓ நன்றி.. சக்கரைப் பொங்கல், வெண் பொங்கலும் இருக்கு...மிக்க நன்றி..

   Delete
 13. முதலிலேயே பூனை தூங்கி விழுகிறதே...! அதிரடியாய் பிறந்ததால் அதிராவா!

  ( கில்லர்ஜியும் அதையே சொல்லியிருக்கிறார்! )

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. பூஸார் ஓவரா சக்கரைப் புக்கை சாப்பிட்டு விட்டார் போலும் ஹா ஹா ஹா:).

   ஸ்ஸ்ஸ் நான் பிறக்கும்போது ரொம்ப அமைதியாக சிரிச்சுக்கொண்டே பிறந்தேனாம்ம்:) கிக் கிக் கீஈஈஈ:)[பயந்திடாதையுங்கோ கொஞ்சம் வித்தியாசமாச் சிரிச்சேன்]

   Delete
 14. முன்ன முன்னம் = முதன் முதலில்!

  றவ்வை = ரவை அல்லது ரவா!

  சரிதானே?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா சரி:).. அது பேச்சு வழக்கை அப்பூடியே சொல்லிட்டேன்..

   பொன்னியின் செல்வனில் முதல் பாகத்தில்.. கல்கி அவர்கள் சொல்லியிருக்கிறார்ர்... “வந்தியத் தேவனின் குதிரை.. மெள்ள மெள்ளப் போனது” என:) ஹா ஹா ஹா அப்போ அதிரா எவ்ளோ பெட்டர்ர்ர்ர்:) சரி சரி யாருக்கும் சொல்லிடாதீங்க..படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீஸ்:).

   Delete
 15. //இப்படிச் சொல்லியே காரியத்தை கெடுத்த நாட்களும் உண்டு]//

  ஆக, இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது அம்மாவுக்கு சரியாகச் செய்ய வராது. நான்தான் நன்றாகச் சமைப்பேன் என்று! சரிதானே!

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோஒ அபச்சாரம் அபச்சாரம் ஹா ஹா ஹா.. அம்மாவின் சமையலை அடிக்க[மிஞ்ச]முடியாது என்னால.. அது என்ன சொல்ல வந்தேன் எனில் 2,3 பேர் சேர்ந்து ஒரு அலுவலில் ஈடிபடும்போது, கதைபேச்சால் கவனம் சிதறிடும்.. அடுத்தது அட்வைஸ் கூடி காரியம் கெட்டாலும் கெட்டுவிடும்:)... என்னை மாட்டி விடுவதிலேயே எல்லோரும் குறியா இருக்கினம்.

   Delete
 16. வடை நல்ல ஷேப்பில் வந்திருக்கிறது. அது எங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான் எங்கள் வீட்டில் நானும் அக்காவும் சூப்பரா தட்டிப் போடுவோம். அது முன்பு ஊரில் எங்கள் வீட்டின் முன்னால் ஒரு குட்டி வைரவர் இருந்தார் என சொல்லியிருக்கிறேனெல்லோ.. அவருக்கு வெள்ளி செவ்வாய்களில் அப்பப்ப வடைமாலை போடுவதுண்டு.. அப்போ தட்டிக் கொடுப்போம் வடையை.. அதனால்கூட இருக்கலாம்.

   Delete
  2. நோஊஊஊ ஸ்ரீராம் :) இவங்க ரெசிப்பி எல்லாத்தையும் பார்த்துட்டு அப்புறமா சொல்லணும் ப்ளீஸ் அந்த அருகூட்டு வடையை கொஞ்சம் பார்த்து அப்புறம் காம்ப்ளிமெண்ட்ஸ் கொடுங்க :)

   Delete
  3. அது வடையா? ஓசையா?:) கோள் மூட்டும்போது கரீட்டா மூட்டோணும் சொல்லிட்டேன்ன்:) ஹா ஹா ஹா :)

   Delete
 17. இந்தத் தித்திப்பு உப்புமா செய்ய இவ்வளவு பாடா! இருப்பதிலேயே சுலபமானதாச்சே... என் பாஸ் இதில் பட்டம் வாங்கியவராக்கும்!

  தம வாக்குப் போட்டாச்...

  ReplyDelete
  Replies
  1. செய்வது சுலபம்தான், இப்போ குழந்தைகள்கூடச் செய்கிறார்கள்... போனவாரம் ஒருநாள், வறுத்து வச்சால் அவசரத்துக்கு உப்புமா செய்யலாமே என, ஒரு கிலோ றவ்வையை அக்கா வறுத்து வச்சிட்டு போயிருக்கிறா.

   கிச்சினுக்குள் வந்த அக்காவின் மகள் இதைப் பார்த்ததும், கிச்சின் டோரைப் பூட்டிப் போட்டு அவ்ளோ றவ்வையையும் கொட்டி, கேசரியாக செய்து.. உடனே எனக்கு படம் அனுப்புறா, சித்தி அம்மாவுக்கு தெரியாமல் கேசரி செய்திட்டேன் எப்படி இருக்கு சொல்லுங்கோ என... அது மேலே ஒரெ நெய் வழிகிறது.. ஆனா சூப்பர் கலரும் பார்க்க நன்றாக இருந்துது.

   நான் சொன்னேன் நெய் கூடிவிட்டது, பேப்பர் டவலால் ஒற்றி எடுத்து விடுங்கோ என. உடனேயே அப்படிச் செய்து நேராக்கி எடுத்திட்டு அக்காவுக்குச் சொல்லியிருக்கிறா.. சுவை நன்றாக இருந்தது என அக்கா சொன்னா.

   நான் படங்களில் சீரியல்களில் பார்த்ததுண்டு, கேசரியை கறண்டியால்தான் அள்ளிப்போட்டுச் சாப்பிடுவார்கள்.. எனக்கது பிடிப்பதில்லை... இப்படி கட்டியாக, கேக் துண்டுபோல வரவேண்டும் என்றே பாடுபட்டுக் கண்டு பிடிச்சேன்ன்:))..

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா சமைச்சதை விட விளக்கம் சொல்றதிலேயே பாதி மெலிஞ்சிடுவன்போல இருக்கே முருகா:)..

   உங்கள் பாஸ்:) க்கு வாழ்த்துக்கள்.

   ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம், வோட்டுக்கும்.

   Delete
 18. அது கேசரியா அல்வாவா என்று சந்தேகம் வருகிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா GMB வாங்கோ.. ஹையோ இந்த வயசில சந்தேகம் எல்லாம் வரப்பிடாது.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 19. கேசரி! :) மஞ்சப்பொடி போட்ட கேசரியா... அது சரி! என் பக்கத்தில் பச்சைக் கேசரி பத்தி ஒரு பதிவு இருக்கு! கீழே லிங்க் கொடுத்துருக்கேன்...

  http://venkatnagaraj.blogspot.com/2015/01/blog-post_28.html

  கேசரியும், வடையும் லேட்டா வந்ததால் தீர்ந்து போச்சே! அதுவும் ஒரு விதத்தில் நல்லது தானே... மத்தவங்கள சாப்பிட வச்சுப் பார்க்கறதுல ஒரு சந்தோஷம் கிடைக்குது தானே!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இம்முறை மஞ்சள்பொடி அல்ல கேசரிப் பொடி:) ஹையோ விளக்கம் சொல்லியே பாதி மெலிஞ்சிட்டேனே வைரவா:).

   ஓ பச்சைக் கேசரியா? போய்ப் பார்க்கிறேன்.. நான் சிவப்பு இடியப்பம் செய்வேனே:).

   ///கேசரியும், வடையும் லேட்டா வந்ததால் தீர்ந்து போச்சே!//
   ஹா ஹா ஹா ஏழியா வந்திருந்தாலும் உங்களுக்கு கிடைக்காது:) ஏனெனில் கையில் மை இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா ஆமா ஆமா மத்தவங்களை சாப்பிட வச்சுப் பார்க்கிறது, பின்னூட்டம் போட்டுப் பார்க்கிறது.. வோட் போட்டுப் பார்க்கிறது அனைத்திலுமே சந்தோசம் கிடைக்குதே..

   மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 20. கேசரி கிண்டவா இத்தனை சலிப்பு [[[ மிகவும் இலகுவான செயல் !

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ.. ஹா ஹா ஹா கர்:) கிண்டுவது கஸ்டமில்லை, கட் பண்ணக்கூடிய பதத்துக்கே எடுப்பதே கஸ்டம்.

   Delete
 21. புதுவருட வடையுடன் தொதல் தந்தால்தான் புத்தாண்டு வாழ்த்துச்சொல்லுவேன்[[ !மிகவும் தொதல் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா தொதல் பிடிக்காத இலங்கையர்கள் இருக்க மாட்டினம்..இங்கு வீட்டுக்குள் கிண்ட விரும்புவதில்லை நேசன், அம்மா வந்திருந்தபோது கேட்டேன்ன்.. 2,3 தேங்காய்களில் கொஞ்சமா செய்வோமா என... ஆனா பெரிசா அக்கறை எடுக்கவில்லை. ஒருதடவை முயற்சிக்கப்போறேன்.. அப்போ சரி வந்தால் தருகிறேன்:).

   Delete
 22. Replies
  1. மிக்க நன்றி நேசன்.. வோட் போட்டமைக்கும்.

   Delete
 23. அதிரராவ் யாருமே தட்டில் இருக்கற அந்த பணத்தை பாக்கலை :) எனக்கு அவ்வா k சரி வடை வேணாம் அந்த தட்டு மட்டும் வித் பவுண்ட்ஸ் தாங்க

  ReplyDelete
  Replies
  1. அதுக்கென்ன, இப்பவே எடுத்து வாறன் .. பொழுதுபட்டாலும் பறவாயில்லை கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வாங்கோ:).. உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்:)

   Delete
 24. //இந்தாங்கோ புது வருச வடை... எடுங்கோ..//
  ஓகே ஆனா எந்த வருஷம்னு சொல்லாததால் நான் டச் பண்ண மாட்டேன் :) நேக்கு உயிர் முக்கியம்

  ReplyDelete
 25. //பாருங்கோ எத்தனை மணியானாலும், நான் பெட் போகும் வரை//
  ஜெசி மடில ஏறி படுத்துப்பா இப்போகூட மடில வச்சிட்டே டைப்பிங்

  ReplyDelete
  Replies
  1. ஹையோ இல்ல அஞ்சு, நான் சின்ன வயசிலிருந்து வளர்த்த பூஸ்களில் இவ மட்டும் படு வித்தியாசம்.. தூக்குவது பிடிக்காது, மடியில் எல்லாம் படுக்க மாட்டா. பக்கத்தில் வந்து ஒட்டிக்கொண்டு இருப்பா, முன்னங்கால்களை மட்டும் என் மடிமீது வைத்து தூங்குவா, அதுவும் என்னோடு மட்டுமே இப்படி.. மற்றும்படி நைட்டில் மட்டுமே நம்மீது ஏறிப் படுப்பா, அதுவும் ஆடாமல் அசையாமல் படுக்கோணும்.. ஆடினால் எழும்பி பாய்வா.. பொல்லாதது கர்:) ஹா ஹா ஹா:).

   Delete
 26. நான் லேட்டு அதுக்குள்ள எல்லோரும் வந்து கும்மி அடிச்சு வடையையும் கேசரியையும் சாப்பிட்டு காலிப்பண்ணிட்டாங்க சரி சரி அடுத்த தடவை சிக்கிரமா வந்தா போச்சு ... அதுவரைக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்களை சொல்லி விடை பெறுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ... சித்திரைப் புத்தாண்டும் ஈஸ்டரும்.. ஹொலிடேயும் வந்தமையால் எல்லா இடத்திலும் எல்லோரும் பிஸியே...

   மிக்க நன்றி.

   Delete
  2. நான் ரொம்பவே லேட்டுங்கோ....கும்மி அடிச்சு முடிச்சுட்டீங்களே....

   கீதா

   Delete
  3. அப்போதானே நான் வீட்டில் ஒழுங்கா சமைக்கிறேன்.., அஞ்சுவைப்போல ஊர் சுத்தவில்லை:) எனத் தெரிய வரும்.. haa haa haa:).// இதை மதுரைத் தமிழன் பார்க்காம விட்டுட்டார் போல!!!ஹஹஹஹ்...ச்கே கும்மி அடிக்க ஆளில்லை...ஹும்....

   கீதா

   Delete
  4. ஆமாம் சகோ...மதுரை...நானும் லேட்டானதுனால வடை எல்லாம் ஊசிப் போச்சு....

   கீதா

   Delete
  5. தாமதமானாலும் வருகை தந்தமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது கீதா.. நன்றி.

   Delete
 27. //வருஷப் பிறப்பும் அதுவுமா, இப்பூடித் தூக்கித் தூக்கி அடிக்குதே கர்ர்ர்ர்:)//

  வடை பொங்கல் பார்த்ததிலிருந்து மயக்கமா இருக்கு ..நான் கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போடப்போறேன் ..உங்க மேலே

  ReplyDelete
  Replies
  1. கேஸ் போட முன்னம் எதுக்கும் ஒருக்கால் செக் பண்ணிடுங்கோ அது என்ன மயக்கம் என்பதை:) ஹையோ மயக்கத்துக்கெல்லாம் மீ பொறுப்பில்லை சொல்லிட்டேன்ன் ஹா ஹா ஹா :).

   Delete
  2. ஏன் ஏஞ்சல் சாப்பிட முடியலையேனா? ஹஹஹ்

   கீதா

   Delete
 28. Replies
  1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. எது அருமை எனச் சொல்லவே இல்ல:).

   Delete
 29. தாமதமா வந்து கருத்திடறேன்.

  1. மஸ்கட் அல்வா வேறு.. திருநெவேலி கோதுமை அல்வா வேறு. (இதை வீட் அல்வா என்பினம்). மஸ்கட் அல்வா, நாகர்கோவில், தூத்துக்குடியில் நிறையச் செய்வார்கள். மஸ்கட் அல்வா, தேங்காய்ப் பால் ஊற்றிச் செய்யப்படுவது. கோதுமை அல்வா, நெய், சீனி போட்டு செய்வது.

  2. கேசரி என்பது கரண்டியில் எடுத்துப் போடுவதுபோல்தான் இருக்கணும். நீங்கள் FRUIT CAKE கணக்கா, பர்ஃபி மாதிரி கட் பண்ணியிருக்கீங்களே. ஒருவேளை, கேசரின்னா என்னன்னு கேட்டா, TAMIL FRUIT CAKE னு சொல்றதுக்கா? இருந்தாலும் நல்லா இருக்கறமாதிரிதான் தெரியுது. ஒருவேளை நல்லா இல்லையோ? 3 நாளா, ஒண்ணுகூட குறையாமல் இருக்கு.

  3. கேசரிக்கு எப்படி 1 ஸ்பூன் கேசரிப் பவுடர் போடணும்? ஒருவேளை நீங்கள் லிக்யுட் கலர் சொல்கிறீர்களா? ரவையை (சன்னமாக இருந்தாலும்) நல்லா வறுத்துக்கிட்டீங்கன்னா, தேவையான அளவு (கொஞ்சம் கூட இருந்தாலும் தப்பில்லை) நெய்யும் கேசரி செய்யும்போது சேர்ந்தீங்கன்னா, கேசரி 'களி'யாகாது.

  4. ரெண்டுபேர் சேர்ந்து ஒரே டிஷ் பண்ணுவது, கடைசியில் 'உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட' என்று சொல்லும்படியாயிடும். அவங்க அவங்களுக்குத்தான், அவங்களோட அளவும் செய்முறையும் தெரியும். கூட யாரேனும் இருந்தால், குழப்பமாயிடும்.

  5. பூசை அறையில், கேசரிக்குப் பின்னால், வெள்ளையா, பிரௌன் கலர்ல என்ன பண்ணி வச்சிருக்கீங்க. நான், படத்தைப் பார்த்துட்டு, ஒண்ணு மஸ்கட் அல்வா, இன்னொண்ணு கோதுமை அல்வா (கேரளால இப்படித்தான் பாளம் பாளமா கடைல அடுக்கிவைத்திருப்பாங்க) அப்படின்னு நினைச்சேன்.

  ReplyDelete
  Replies
  1. //2. கேசரி என்பது//

   இல்ல இல்ல எனக்கென்னமோ அப்படி பாயாசம்போல, பொங்கல் போல சாப்பிடுவது பிடிக்கவில்லை.. அதை ஸ்ரீராம் சொன்னதுபோல தித்திப்பு உப்புமா எனச் சொல்லலாம்:)... எனக்கு துண்டாக வரோணும் என்றே போராடிக் கண்டு பிடிச்சேன்ன்... இங்கே கடைகளிலும், ரெஸ்டோரண்ட்களிலும் கேசரி துண்டாகவே கிடைக்குது.

   //ஒருவேளை நல்லா இல்லையோ? 3 நாளா, ஒண்ணுகூட குறையாமல் இருக்கு.///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அள்ள அள்ளக் குறையுதில்ல:) அதோட நிறையப்பேர் சுவீட்டான ஆட்கள் ஹா ஹா ஹா:)

   Delete
  2. நெல்லைத் தமிழன்Sunday, April 16, 2017 4:11:00 pm
   தாமதமா வந்து கருத்திடறேன்.//

   வாங்கோ நெ.த வாங்கோ... அதனால் ஒன்றுமில்லை.. வந்தது மகிழ்ச்சியே.

   ///கோதுமை அல்வா, நெய், சீனி போட்டு செய்வது.///
   இதைத்தான் மஸ்கட் என்போம்... கோதுமை மாவில் தண்ணி ஊற்றி வைத்து பின்னர் பிளிந்து மாவெடுத்து அதனை நெய்யில் வதக்கி எடுப்பது.. இப்படிச் செய்வதைத்தான் மஸ்கட் என்போம்.. மஸ்கட் க்கு பால் சேர்க்க மாட்டோம்.

   கொமெண்ட் பப்ளிஸ் ஆகல்ல கர்ர்.. அதனால ஓடர் மாறிவிட்டது மன்னிக்கவும்.

   Delete
  3. ///3. கேசரிக்கு எப்படி 1 ஸ்பூன் கேசரிப் பவுடர் போடணும்?//

   ஹா ஹா ஹா கர்:) அது தே.கரண்டி எனத்தானே போட்டுள்ளேன்ன்.. தே கரண்டி என்பது tea spoon. Powder தான் சேர்த்தேன்.

   ///ரவையை (சன்னமாக இருந்தாலும்) நல்லா வறுத்துக்கிட்டீங்கன்னா, தேவையான அளவு (கொஞ்சம் கூட இருந்தாலும் தப்பில்லை) நெய்யும் கேசரி செய்யும்போது சேர்ந்தீங்கன்னா, கேசரி 'களி'யாகாது.//

   ஓ அதேதான், அந்த வேர்க்பண்ணிய இடத்துப் பிள்ளைதான் சொல்லித்தந்தா, வறுத்துப் போடவேணும் என. ஓம் இப்போதெல்லாம் நெய்யும் சேர்க்கிறேன்.. மிக்க நன்றி.

   //கூட யாரேனும் இருந்தால், குழப்பமாயிடும்.//
   உண்மையே சமைக்கும்போது, சமையல் தெரிஞ்சவர்களை அருகில் வச்சுக்கொண்டு சமைப்பதென்பது கஸ்டமான ஒன்று:).

   Delete
  4. ///5. பூசை அறையில், கேசரிக்குப் பின்னால், வெள்ளையா, பிரௌன் கலர்ல என்ன பண்ணி வச்சிருக்கீங்க.//
   ஹா ஹா ஹா நீங்க நான் எழுதியதை சரியா கவனிக்கவில்லை. நாங்க ஒருகாலமும் சுவாமிப் படத்துக்கு கேசரி வைக்க மாட்டோம், இது வீட்டிலுள்ளோருக்கும் நட்புட்களுக்கு கொடுக்கவும் செய்தேன் கேசரி.

   படத்தில் வெண்பொங்கல். பால் + பயறு + நட்ஸ்+ சேர்த்து செய்தேன், கறுப்பாக இருப்பது சக்கரைப் புக்கை.. இரண்டையும் இறுக்கமாகச் செய்து, சில்வர் டிஸ் ல போட்டு தளிசை எனக் கோயிலில் ஐயர் ஆட்கள் வைப்பினமெல்லோ.. அப்படி வைத்திருக்கிறேன், அருகில் டிஸ் இல் இருப்பது கத்தரிக்காய் வாழைக்காய் உருளைக்கிழங்கு சேர்த்து வத்தல்குழம்புபோல செய்தேன் புக்கையோடு சாப்பிட.

   ஹா ஹா ஹா அல்வா எதுவும் செய்யவில்லை, செய்தாலும் படத்துக்கு அதெல்லாம் நாம் வைக்க மாட்டோம். அது நவராத்திரி காலங்களில் எனில் அப்படி விதம் விதமா தினம் தினம் வைப்போம்.

   மிக்க நன்றி நெல்லைத் தமிழன்..

   Delete
  5. இதில் கோதுமை அல்வாவை நாம் “மஸ்கட்” என்போம், அரிசி அல்வாவை - “தொதல்” என்போம்... இப்பெயர்கள் சிங்களத்தில் இருந்து வந்தவை எனத்தான் நான் நினைத்திருந்தேன்.. கேரளா பெயர் என்பதுபோல// ஆமாம் மஸ்கோத்து அல்வா என்பது தேங்காய்பால் போட்டுச் செய்வது. நாகர்கோவில், கேரளாவில், தூத்துக்குடியில் ரொம்ப ஃபேமஸ். அங்கதான் செய்வாங்க... ரொம்ப நல்லாருக்கும்....

   கீதா

   Delete
  6. நாங்க ஒருகாலமும் சுவாமிப் படத்துக்கு கேசரி வைக்க மாட்டோம், - இது எதுனால அதிரா? என்ன காரணம்னு கேட்டு எழுதுங்க.

   Delete
  7. ஆவ்வ் இங்கு பல கொமெண்ட்ஸ்களுக்கு நான் பதில் போடாமல் விட்டுவிட்டேன்ன்ன்:(.. இப்போ நெ.தமிழனின் புதுக் கொமெண்ட் பார்த்து இங்கு வந்தேன்.. அதேதான் கீதா.

   அது எனக்கு சரியான பதில் சொல்லத்தெரியவில்லை நெ.த... நாங்கள் சுவாமிக்கு பலகார வகை செய்து வைப்பதெனில் எண்ணெயில் பொரித்தனவற்றைத்தான் வைப்பது வழக்கம்... வடை, முறுக்கு, சீனிஅரியதரம்[சீனிப் பலகாரம்] பால்ரொட்டி, எண்ணெயில் பொரித்த ரொட்டி.. சீனிப்புட்டு.. பொங்கல்.. இப்படி..

   கேசரி, தொதல், மஸ்கட்.. இப்படியானவை படைக்க மாட்டோம்ம்... பாயாசம்கூட இப்போ தான் நவராத்திரி தினங்களுக்கு படைக்கிறேன்.. ஊரில் படைக்க மாட்டோம். பின்பு அம்மாவைக் கேட்டுப் பார்க்கிறேன் ஏதும் காரணம் இருக்கோ என.

   Delete
 30. கேசரி பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாதே.....வடையும் மிகவும் பிடிக்கும் உங்கள் வடை நாவில் நீர் ஊற வைக்குது....ஆனால் எடுக்க முடியாதே!!

  கீதா: கேசரி ஒரு சிட்டிகைதான் கலர் சேர்ப்பதுண்டு சில சமயம் சேர்க்காமலேயே செய்துவிடுவேன் அதிரா. ரவையை நன்றாக வறுத்துக் கொண்டு செய்தால் பிசு பிசுப்பு இருக்காது. நன்றாக இருக்கும் வாசனையாகவும் இருக்கும். நெய் அதிகம் சேர்க்காமலும் செய்யலாம். சேர்த்தால் நாக்கு அடிமையாகும்!!!! ஹஹஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன், கீதா..

   //கேசரி பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாதே.....வடையும் மிகவும் பிடிக்கும் உங்கள் வடை நாவில் நீர் ஊற வைக்குது....ஆனால் எடுக்க முடியாதே!!//

   ஹா ஹா ஹா கவிதைபோல இருக்கு.

   நானும் வறுத்துத்தான் செய்வேன் கீதா, ஓவரா அல்ல கொஞ்சமாக வறுப்பேன்..

   மிக்க நன்றி.

   Delete
 31. நாமிருவர் நமக்கிருவர் போதும் என நிம்மதியாக இருந்த குடும்பத்தில:), 5 வருட இடைவெளியின் பின்னர்.. அதிரடியாக வந்து பிறந்த கொயந்தை நான்:). .....  oh ..சூப்பர் ...

  நானும் சேம் பின்ச் ...மூனாவது குழந்தை ...

  இங்க இரண்டு அண்ணாக்கள் ..அங்க எப்படி ...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. இங்கு ஒரு அண்ணா, ஒரு அக்கா:)..

   Delete
 32. கேசரி நல்லாயிருக்கு ..ஆன துண்டு போட்டு சாப்பிடறது எல்லாம் சரிவராது ...கிண்ணத்துல ஸ்பூன் போட்டு சாப்பிடணும் ...அப்பதான் டேஸ்ட்டே ..

  அம்மா , அத்தை , அண்ணிகள், நாத்தனார் எல்லாம் கலர் கலரா சூப்பரா செய்வாங்க ...எனக்கு நான் செய்றதைவிட ...அவங்க எல்லாம் செய்றது தான் ரொம்ப பிக்கும் ...வஞ்சிக்காம சாப்பிடுவேன் ...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இனிப்பு வகை பெரிதாக பிடிக்காது.. வீட்டில் எல்லோருக்கும் சொக்கலேட் ஐட்டம்தான் பிடிக்கும்.. இப்படியானவை பிடிக்காது.

   Delete
 33. வடையும் , ஊசிக்குறிப்பும் ....

  நல்லா இருக்கு ...

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.