நல்வரவு_()_


Wednesday 5 April 2017


வாழைத் தண்டு போல உடம்பு+ மாங்காய்ப் பச்சடி..:)

அதிரா சமையல் என்றதும் எதுக்கு இப்பூடிப் பிதுங்குது விழிகள் எல்லாம் கர்ர்ர்ர்ர்:)
லைப்பைப் பார்த்ததும் பழைய பாட்டெல்லாம் நினைவுக்கு வருமே... எப்பவும் என் போஸ்ட்டுக்கும் தலைப்புக்கும், அத்தோடு எனக்கும் சம்பந்தம் இருப்பது மிக மிகக் குறைவே:). சரி சமைப்பதற்கு முன் அதிராவின் கிச்சினைப் இங்கே பார்த்திட்டு வாங்கோ... ஹொட்டேலுக்குப் போய் சாப்பிடமுன் கிச்சினை செக் பண்ணுவது நல்லதாமே:)..


வாழை மரத்தில் மட்டும்தானே கழிவே இல்லாமல் அனைத்தையும் பாவிப்புக்கு எடுக்கிறோம்... அதிலிருந்து சில சமையல் குறிப்புக்கள்... இது ஏற்கனவே, நான் செய்து அனுப்பி 2008 ஆம் ஆண்டு, அறுசுவை எனும் தளத்தில் வெளிவந்துள்ளது , அங்கு என் படங்களை மிகக் குட்டியாக்கியே வெளியிட்டனர்,  என் ஒரிஜினல் படங்கள் எல்லாம் எங்கள் பழைய கொம்பியூட்டரில் உள்ளது, இப்போ தேடி எடுக்க அலுப்பாக இருக்கும் காரணத்தால், அங்கிருந்த படங்களையே எடுத்தேன்... அவை மிக குட்டியாக இருக்கு அஜீஸ் பண்ணுங்கோ:)..[இம்முறை படங்கள் தெளிவே இல்லை:( வெறி சொறி:).

வாழைப்பூ வெள்ளைக்கறி...
ஊரில் நாம் வாழைப்பொத்தியைப் பிரித்துப், பூவை மட்டும் பாவித்த வரலாறே கிடையாது. இப்படித்தான் பொத்தியாக வெட்டிப் பாவிப்போம், இப்போ Blender  இல், உடைத்தெடுக்கும் கப் ஒன்று இருக்குதுதானே, அதில் போட்டும் அடித்து எடுக்கலாம் இப்படி. ஆனா நான் எப்பவும் இப்படிக் கையால்தான் கெத்திடுவேன்:).

தேவையான பொருட்கள்..:
வாழைப்பூ - 500 கிராம்
மைசூர் பருப்பு - 50 - 75 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பற்கள்
பால் - 100 மி.லி
தேசிக்காய் - பாதி
கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

மேலே காட்டப்பட்டுள்ளதுபோல், வெட்டி எடுத்த பூவை கொஞ்ச நேரம் தண்ணியில் ஊறவிட்டு, நன்கு பிழிந்து எடுத்து, அதனுள், பருப்பு, வெங்காயம், மிளகாய், உள்ளி அனைத்தையும் சேர்த்து,  பூ மூழ்கும் அளவைவிடப் பாதியளவு தண்ணி விட்டு மூடி அவிய விடவும்.

தண்ணி வற்றி, பருப்பு அவிந்ததும், பாலை ஊற்றி கொதித்ததும் இறக்கவும். தண்ணி அதிகமாயின் கறி தண்ணியாகிவிடும், இக்கறி திக்காக இருக்க வேண்டும். முதல்[வடி] பால் தான் சிறந்தது, விருப்பப்படி கொஞ்சம் விட்டாலும் ஓகே, ஆனால் பால் சேர்த்தால்தான் சுவை கிடைக்கும்.

 இறக்கும்போது, கறிவேப்பிலை சேர்த்து, இறக்கியபின், தேசிக்காய் பிளிந்து விடவும். 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$இடைவேளை$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$முடிஞ்ஞ்ஞ்:)$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழைப்பூ வடை:
இங்கேயும் வாழைப்பூ என்பது, மேலே நான் காட்டிய முறையில், வாழைப்பொத்தியை வெட்டி எடுத்ததே. இது  ஒரு தமிழ்நாட்டு அக்காவின் ரெசிப்பி பார்த்துச் செய்தேன்.

வாழைப்பூ - 150 கிராம்
பொட்டுக்கடலை - 6 மேசைக்கரண்டி
செத்தல் மிளகாய் - 5
பெருங்காயம் - கால் தேக்கரண்டியை விட குறைவு
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 30 கிராம்
மோர் - ஒரு டம்ளர்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வாழைப்பூவை சுடுமோரில் ஊறவிட்டு, நன்கு பிழிந்து எடுக்கவும். பொட்டுகடலை, செத்தல், தேங்காய்ப்பூ சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

வெங்காயத்தைக் குட்டியாக அரிந்து, வாழைப்பூவில் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பிசைந்து, உப்பை அளவு பார்க்கவும், வடை மா பதமாக எடுத்து, குட்டிக் குட்டி வட்டமாக தட்டிப் பொரித்தெடுக்கவும்.

வாழைத்தண்டுப் பிரட்டல் கறி:
பொயிண்டுக்கு வந்தாச்சு, ஊரில் வாழைமரங்கள் வெட்டி எறிவோம், தண்டினை யாரும் தேடுவதே இல்லை. வெளிநாட்டுக்கு வந்து தமிழ் நாட்டு நட்புக்கள் கிடைத்தபின்பே, வாழைத்தண்டும் சமைக்கலாம் என தெரிய வந்தபோது.. வாழைத்தண்டு கிடைக்கல்லே:(..

சமீபத்தில் எங்கள் தமிழ்க் கடையில் பார்த்ததும், காதலாகிக் கசிந்து..கண்ணீர் மல்க ஓடிப்போய் ஒரு தண்டு எடுத்து வந்து, என் யொந்தக்:) கிட்னியை ஊஸ் பண்ணி செய்தேன்ன்ன்ன்.. சூப்பராக வந்துது கறி:).[மண்சட்டியில் சமைத்தேனாக்கும்].

வாழைத்தண்டை இப்படி வெட்டி, கொஞ்சமா க்ரில் பண்ணினேன், நொன்ஸ்ரிக் பானில் வாட்டியும் எடுக்கலாம் என நினைக்கிறேன்.

க்றில் பண்ணியதை, குட்டிக் குட்டியா வெட்டி,

நல்லெண்ணெயில் பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு வாட்டி, இந்த குட்டிக்குட்டியையும் போட்டு வாட்டி, கறித்தூள் உப்பு சேர்த்து வதக்கி, , மட்டமாக தண்ணி விட்டு அவிய விட்டேன், டக்கென தண்ணி வத்தும் அதனால் எப்பவும் ஸ்லோ ஃபயர்..:).
பிரட்டலானதும் இறக்கி தேசிக்காய் பிளிந்து விட்டேன்ன்.. என்னா சுவை தெரியுமோ?, சொல்லாவிட்டால் கண்டுபிடிக்க முடியாது என்ன கறி என்பதை:).
இதில் வாழைப்பூ வறை/சுண்டல், வடகம் செய்வோம், அதை இன்னொரு தடவை சொல்கிறேனே:)
..................................
ஊசி இணைப்பு:
ஒரு டிஸ் கறி வாங்கினால், ஒரு குட்டி டிஸ் மாங்காய்ப் பச்சடி இலவசம்:..
பெரிய, பிஞ்சு மாங்காய் ஒன்று எடுத்து தோல் நீக்கவும், ஒரு இஞ்சு அளவு இஞ்சி:) எடுத்து தோல் நீக்கவும்.. இரண்டையும் கரட் Scraper இல் ஸ்கிரேப் பண்ணி எடுக்கவும்.  சின்ன வெங்காயம் உங்கள் விருப்பப்படி குட்டியாக வெட்டிப் போடவும், பச்சை மிளகாய் போடவும், 2 மேசைக்கரண்டு உடன் தேங்காய்ப்பூச் சேர்த்து, உப்பும், கொஞ்சம் தேசிக்காயும் சேர்த்து மெதுவாகப் பிரட்டி விடவும். நன்றி. _()_ 
[ஸ்ஸ்ஸ் ஆசைக்கு ஒரு பிங்கலர் பாவிக்க வழியில்லாமல் போச்சே இன்று கர்:)]
========================================================================
============================================================================

106 comments :


 1. thamizmanam

  Your Blog is Aggregated under FREE Aggregation Category

  வோட்டு போட போன இடத்தில் மேலே உள்ளது வந்து என்னை மிரட்டி விட்டது அதிரா. அதனால் என்னால் வோட்டும் போட முடியலே, பதிவுக்கு ஃபர்ஸ்டாவும் வர முடியலை. நினைத்தால் ஒரே அளுவாச்சியா வருது. டிஷ்யூ பேப்பர் நிறைய காலியாகி மிகப்பெரிய டர்க்கி டவல் வைத்துக்கொண்டு ....... இனிமேல் தான் பதிவைப் படிக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... சேச்சே.. அந்த டோக்கி.. சே சே டார்க்கி டவலை தூர வீசுங்கோ.. ஏனெனில் நீங்கதான் 1ஸ்ட்டூஊஊ:).. வாழைத்தண்டுப்பிரட்டல் கறி உங்களுக்கே..:) இம்முறை ஆயா அஞ்சுவுக்கே ஹா ஹா ஹா:)..

   இந்த டமில்மனம்:) ரொம்ப மோசம் இணைப்பிற்கு கொண்டு வரவே பாடாய்ப் படுத்துது கர்:).. இப்போதான் வோட் போட முடிகிறது...

   Delete
  2. போட்டுட்டேன் .... ஹைய்யோ .... ஒருவழியாப் போட்டுட்டேன். பேரெழுச்சியுடன் விடியற்காலம் 3.20 க்கு போட்டுட்டேன். விடுவோமா. எங்கிட்டயே வா .... நாலாம் தடவையாப் போட்டுட்டேன்.

   சும்மா என்னா சுத்து சுத்துது .... என்னா கத்து கத்துது .... ஒருவழியாப் போட்டு முடிப்பதற்குள் நான் மிகவும் டயர்ட் ஆகிட்டேன்.

   ஜில்லுன்னு ஒரு ரீ கொடுங்கோ. சூடா ஒரு இளநீர் கொடுங்கோ .... அதிரா.


   த.ம. 4

   Delete
 2. இந்தத் தலைப்பைப் பார்த்ததும் உடனே டக்குன்னு ‘பணமா பாசமா’ படம் நினைவுக்கு வந்துடுச்சு. சூப்பர் படம் அது. இந்தப்பாடலும் சூப்பரா ஜாலியாக இருக்கும்.

  மேலே கொடுத்துள்ள வீடியோ எனக்கு ஓபன் ஆகலை. ஆனால் இந்தப் படம் பலமுறை விரும்பிப்பார்த்துள்ளேன். இதில் வரும் இனிமையான எல்லாப்பாடல்களையும் கேட்டுள்ளேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அலேக் !

   இப்போ வீடியோ ஓபன் ஆகி ஆசை தீர மீண்டும் பார்த்துட்டேன்.

   அடுத்த ப்ளேன்லேயே ஐ கோயிங் மலேயா ! அலேக் !!

   Delete
  2. ஓம் இது நிட்சயம் எல்லோரும் பார்த்திருப்பீங்க... அந்தக் காலத்தில் மிகக் குறைவாகவே படங்கள் வெளியாகின என்பதால், ஒரு படம் வெளியானால் கிட்டத்தட்ட அதை எல்லோரும் பார்த்த பின்பே அடுத்த படம் வெளியாகியிருகும் என நம்புகிறேன், ஆனா இப்போ அப்படியா... கிலுகிலுவென எலி குட்டி போட்டதுபோலவே வருதே டெய்லி:)..

   நான் இன்னும் படம் பார்க்கவில்லை.. ஆனா பாட்டு பலதடவை ரேடியோக் கேட்பதனால் காதில் ஒலிக்கும்.. அருமையான பாடல்...

   Delete
  3. ///வை.கோபாலகிருஷ்ணன்Wednesday, April 05, 2017 3:19:00 pm
   அலேக் !

   இப்போ வீடியோ ஓபன் ஆகி ஆசை தீர மீண்டும் பார்த்துட்டேன்.

   அடுத்த ப்ளேன்லேயே ஐ கோயிங் மலேயா ! அலேக் !!///

   ஆவ்வ்வ்வ் கவனம் கோபு அண்ணன்.. பார்த்து.. தடக்கி விழுந்திட்டால் பிறகு நான் என் புளொக்குக்கு இன்சூரன்ஸ் இன்னும் போடல்ல:) வீடு வித்துத்தான் கட்டோணும்:)..

   ஹா ஹா ஹா நல்ல பாடல்தானே? ரசிக்கும்படியா இருக்குது.

   Delete
  4. கரெக்டா சொன்னீன அதிரா முன்னாடி எல்லாம் படங்கள் ரொம்பக் குறைவாகத்தான் வரும் இப்போ டக் டக்குனு வருது பல படங்கள் தெரியாமலேயே போயிடுது...

   கீதா

   Delete
  5. @Geethaa

   [im]https://s-media-cache-ak0.pinimg.com/originals/95/e1/56/95e156099e858d965fc729e55cb55c78.jpg[/im]

   Delete
 3. வடைகளைப் படத்தில் பார்க்கும்போதே சும்மா மொறுமொறுன்னு ஜோரா இருக்குது. நாக்கில் நீர் வருது. பசி எடுத்துடுச்சு. அதனால் புறப்பட்டுட்டேன். பகிர்வுக்கு நன்றிகள், அதிரா.

  ReplyDelete
  Replies
  1. அதிரா, எனக்கு ஒரு டவுட்டு ......

   //சாப்பாடு டேஸ்டா இருந்தா நான் ஏன்டி டிவி பார்க்கறேன்?//

   உங்க வீட்டுக்காரரும் இப்படித்தான் அடிக்கடி சொல்லுவாரோ ? :)

   வாழைத்தண்டுப் பிரட்டல் கறி முதலியவற்றைப் பார்த்ததும் இந்த டவுட் எனக்கு வந்திடுச்சு. :) மிகவும் ..... பாவம் ..... அவர்.

   Delete
  2. உண்மைதான், இதுதான் நானும் செய்த முதலாவது கடைசியுமான வாழைப்பூ வடை, ஆனா இப்போ எமக்கு இங்கு பூக் கிடைப்பதால் இந்த சனி ஞாயிறில் செய்யும் ஆசை வருது... உண்மையில் மொறுமொறு என மிகவும் நன்றாகவே இருந்துது.

   வாழைப்பூச் சாப்பிட மறுப்போருக்கு இப்படிச் செய்து கொடுத்தால் சாப்பிட்டிடுவினம்... ஓ நீங்க ரைம் க்கு ரைம் ஒயுங்கா சாப்பிடுறீங்க போல தெரியுது... ஒயுங்கா எக்சசைஸ் உம் பண்ணிடுங்கோ... ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
  3. ///வை.கோபாலகிருஷ்ணன்Wednesday, April 05, 2017 3:28:00 pm
   அதிரா, எனக்கு ஒரு டவுட்டு ......///

   ஹா ஹா ஹா டவுட்டே வாணாம்ம்ம்:) எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருவோர் அடிக்கடி சொல்லும் வசனம் “நீங்க ஒரு ரெஸ்ட்டோரண்ட் ஓபின் பண்ணுங்கோ பிளீஸ்”.. என்பதுதான்:) அவ்ளோ ஜூப்பரா இருக்குதாம் என் சமையல்9சத்தியமா)... ஹா ஹா ஹா ஹையோ வெயார் இ மை முருங்கிமரம்ம்ம்ம்:))

   Delete
  4. //எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருவோர் அடிக்கடி சொல்லும் வசனம் “நீங்க ஒரு ரெஸ்ட்டோரண்ட் ஓபின் பண்ணுங்கோ பிளீஸ்”.. என்பதுதான்//

   அவர்களால் உங்களை நேரிடையாக ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதால், உங்களை இதுபோலத் தட்டி விட்டுள்ளார்கள். சாப்பிட வரும் பொதுஜனங்கள் பார்த்து தர்ம அடி கொடுக்கட்டுமே என்ற நல்ல எண்ணமாக இருக்கும். :)

   Delete
 4. அதிரா !!நல்லவேளை ஆயா எனக்கில்லை ..நான் ரிவர்ஸ் ஆர்டரில் இருந்து வரேன் முதலில் வோட்டு போட்டாச்சு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ...

   ஹா ஹா ஹா நீங்க ரிவேர்ஸ்ல இருந்து வருவீங்க எனத் தெரிஞ்சுதான்.. ஆயாவுக்கு மேக்கப் எல்லாம் போட்டு.. பின் வாசலிலேயே ஈசிச்செயார் போட்டு இருக்க விட்டிட்டேன்ன்.. ஒழுங்கா, பத்திரமா கூட்டிப் போயிடுங்கோ:) தலையை அடிக்கடி சொறிகிறா:)) ஹா ஹா ஹா.. பேன் இருக்கோ எனவும் செக் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈ:)..

   Delete
  2. கர்ர்ர் அந்த பேன் புடிச்ச ஆயா எனக்கு வேணாம் இதுக்கு பயந்தே நான் பின்னாலிருந்து வரேன் :) ஆயாவை முதல் பின்னூட்டம் போட்டவங்களுக்குத்தான் கொடுக்கணும் ட்ரெண்ட் மாற்றக்கூடாது :)

   Delete
  3. ஹா ஹா ஹா நோஓஓஓ நீங்கதான் தப்பா புரிஞ்சு வச்சிருக்கிறீங்க:) என் புளொக் வழக்கப்படி.. முதலாவதா வருவோருக்கு.. ஆயா சமைச்ச உணவும்.. ரெண்டாவதா வருவோருக்கு ஆயாவையும் கொடுத்து அனுப்புவேன்:)..

   அதுவும் ஆயா நல்ல ஸ்ரெடியா இருந்தால் அனுப்பாமல் பேசாமல் விட்டிடுவேன்:).. இப்படி பேனோடும்:) ஹா ஹா ஹா லொக்கு லொக்கு என இருமிக்கொண்டும் இருப்பின் மட்டுமே அனுப்பி வைப்பேன்:)...

   ஆயாவுக்கு குளிர் ஒத்துக்காது அஞ்சு, காரில் ஏசியைக் கொஞ்சம் குறைச்சு.. ஆடாமல் அலுங்காமல் கூட்டிப்போங்கோ பிளீஸ்ஸ்:).

   Delete
  4. ஹா அப்போ வைகோ சார் மாட்டிக்கிட்டார்
   கீதா

   Delete
  5. எனக்கு ஏற்கனவே ஒரு ஆயாவை அனுப்பிட்டாங்கோ :)

   இது எங்கட அஞ்சுவுக்காக ஆசையாகக் கொடுக்கப்பட்டுள்ள ஆயாவாக்கும்.

   Delete
  6. ///Thulasidharan V ThillaiakathuThursday, April 06, 2017 8:05:00 am
   ஹா அப்போ வைகோ சார் மாட்டிக்கிட்டார்
   கீதா//

   ஹா ஹா ஹா இல்ல கீதா, கோபு அண்ணன் இம்முறை ஸ்பீட்டா ஓடி முதலாவதா வந்ததினால் தப்பிச்சுட்டார்ர்ர்:)...

   அஞ்சு அஞ்சு இஞ்சில:) ஹீல்ஸ் போட்டிருந்தாவா...ஓட முடியல்ல ஸ்பீட்டா:).. 2 ..ண்டா வந்து ஆயாவைத் தூக்கிட்டு சொறி டங்கு ஸ்லிப்:) கூட்டிக்கொண்டு போறா.. இட்ஸ் ஓகே.. குயிலிங் ஏதும் சொல்லிக்கொடுத்து ஆயாவுக்கு ஏதும் நல்ல ஒப் கிடைக்க அஞ்சுவால முடியும் எனத்தான் இப்பூடி நடந்திருக்கு:) ஹோட் இஸ் கிரேட் பாருங்கோ:).

   அஞ்சு தேம்ஸ்கரையில நடக்கும்போதே.. எனக்கு நெஞ்சு புஸுக்குப் புஸுக்கு என அடிக்கும்.. :) ஹீல்ஸ் தடக்கி தண்ணிக்க விழுந்திட்டாலும் என:).. போடாதீங்கோ ஹீல்ஸ் ஐ என்றால்.. ஹையோ என் பேச்சை ஆரு கேட்கிறா.. ஒரு பூஸ் குட்டிகூடக் கேய்க்காதாம்.. சரி விடுங்கோ.. இதுவும் கடந்து போகட்டும்..:)

   Delete
  7. ///வை.கோபாலகிருஷ்ணன்Thursday, April 06, 2017 8:23:00 am
   எனக்கு ஏற்கனவே ஒரு ஆயாவை அனுப்பிட்டாங்கோ :) ///

   ஹா..ஹா..ஹா.. பார்த்தீங்களோ கரெக்ட்டா.. “ஒரு ஆயா” எனக் கணக்கு வச்சிருக்கிறார் கோபு அண்ணன்:)... வர வர என்பக்கம் வரும் எல்லோரும் அலேர்ட் ஆகவே வாறாங்கோ:) ஹா ஹா ஹா.. :).

   Delete
  8. //ஹா..ஹா..ஹா.. பார்த்தீங்களோ கரெக்ட்டா.. “ஒரு ஆயா” எனக் கணக்கு வச்சிருக்கிறார் கோபு அண்ணன்:)...//

   அந்த ஒரு ஆயாவுக்கே ஒன்பதாயிரம் வியாதிகள் இருந்தன. அதனால் அவங்களை மறக்கவே முடியலை. அந்தக் கணக்கெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

   ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருப்பேனாக்கும். இது தான் இந்தப்பதிவின் 100 வது பின்னூட்டம். அதற்கு ட்ரீட் என்ற பெயரில் இன்னொரு ஆயாவைக் கொடுத்துடாதீங்கோ அதிரா. பார்த்து நல்லா இளம் வயசுக் குட்டியா கையில் ஒரு புட்டியுடன் அனுப்புங்கோ. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :)))))

   Delete
  9. சே..சே... கோபு அண்ணன் உங்களுக்கு முதலாவதா வந்த உங்கள் தலையில் இம்முறை ஆயாவைக் கட்டி அனுப்புவேனா?:) எனக்கு மனச்சாட்சியே இல்லையா?:)..

   நீங்க கேட்டபடியே உங்களுக்கு இந்தாங்கோ “புட்டி” உடன்.. “குட்டி”:) ஹா ஹா ஹா..
   [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQL7dqcHrmC4cPXkKhVHllHh4g3JMgE5A_pdG_C8RYHQwBvaZPx[/im]

   Delete
 5. //ஒரு இஞ்சு அளவு இஞ்சி:) //

  மை சந்தேகம் ஒரு இஞ்சு எந்த அளவு இருக்கும் விலாவாரியா விளக்கவும்

  ReplyDelete
  Replies
  1. ஒரு இஞ்ச் INCH = 2.5 Cms.

   ஒரு அடி அதாவது One Foot Scale = 12 INCHES = 30 செண்டிமீட்டர்

   இதுகூடத் தெரியாத என அதிரா ஒரு அடி ஸ்கேலை எடுத்து ஒரு அடி வைக்கப் போகிறாள் ..... எனக்கு ஒரே பயமாக இருக்குது. :)

   Delete
  2. //AngelinWednesday, April 05, 2017 12:26:00 pm
   //ஒரு இஞ்சு அளவு இஞ்சி:) //

   மை சந்தேகம் ஒரு இஞ்சு எந்த அளவு இருக்கும் விலாவாரியா விளக்கவும்///

   ஹா ஹா ஹா அது ரெண்டுமே இஞ்சி என வந்தால் அழகாக இருக்காது என நினைச்சு.. ஒன்றை “இஞ்சு” ஆக்கிட்டேன்ன்ன்:).. இருங்கோ கீழே கோபு அண்ணன் விளக்கமா விளக்கிறார்ர்:)..

   Delete
  3. அய்யய்யே கோபு அண்ணன்... ஒரு அஞ்சாம்:) கிளாஸ் வரையாவது ஸ்கூலுக்குப் போயிருந்தாவே என்றால்:) இதுபற்றி விளக்கம் கொடுக்கலாம் அஞ்சுவுக்கு:)... இது எப்பூடி புரிய வச்சாலும் அவோக்குப் புரியாது:)..சரி சரி படிச்சதும் கிழிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்( நான் பிறகு தேம்ஸ்க்குப் போக வாணாமோ?:)).

   நான் அடிக்கவெல்லாம் மாட்டேன்ன்.. வேணுமெண்டால்ல்.. அவ 80 கிலோ ஆனாலும் பறவாயில்லை.. இழுத்து தள்ளி.. புஸ் பண்ணி... இருங்கோ சிரிச்சிட்டு வாறேன்ன்:)).... முருங்கி மரக் கொப்பில ஏத்தி விட்டிடுவேன்ன் ஹா ஹா ஹா:).

   Delete
  4. அங்குலம் அங்குலம் அங்குலம்ம்ம்ம்ம்ம்ம் ..ஒரு இன்ச் இஸ் ஒரு அங்குலம்
   அதிராக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தே நான் மெலிஞ்சிட்டேன்

   Delete
  5. ஹா ஹா ஹா ஓம் அங்குலம் என்ன.. நான் அங்குலம் என்பது இஞ்சியை விட நீஈஈஈஈஈஈளம் என ஓசிச்சிட்டேன்ன் ஹா ஹா ஹா :)) இது சரிவராது இனி நான் ஹிந்திதான் பேசப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)

   Delete
  6. ஏஞ்சல் இப்படி பரீட்சையில் கேக்குறாமாதிரி கேப்பாங்களா ஹிஹி பாவம் அதிரா புள்ள...விட்டுருவோம்...
   கீதா

   Delete
  7. அது கீதா அடிக்கடி பூனையை இப்படி கேள்வி கேட்டு யோசிக்க வைச்சாதான் நாம் இனி வரப்போகும் அவங்க நொந்த சேசே சொந்த ரெசிபிஸ்லருந்து தப்பிக்கலாம் படிச்சதும் ஷ்ரேடரில் போட்டு பீஸாக்கிடுங்க

   Delete
  8. /////Thulasidharan V ThillaiakathuThursday, April 06, 2017 8:07:00 am
   ஏஞ்சல் இப்படி பரீட்சையில் கேக்குறாமாதிரி கேப்பாங்களா ஹிஹி பாவம் அதிரா புள்ள...விட்டுருவோம்...
   கீதா///

   ஐ பி எஸ் ஆகோணும் என ஆசைப்பட்ட பிள்ளை:)(அஞ்சு).. சரி போகட்டும் அதிராவிடம் ஆவது கேள்வி கேட்டு தன் ஆசையை நிறைவேத்தட்டும் என விட்டிட்டேன் கீதா:)... என்னா பெரிய மனசு அதிராக்கு என சொல்வது கேக்குது.. தங்கூ தங்கூ:).. ஹா ஹா ஹா.

   Delete
  9. @Angelin///
   படிச்சதும் ஷ்ரேடரில் போட்டு பீஸாக்கிடுங்க/// ஆமா ஆமா கீதா, அந்த பீஸ் ஐ பிஸ் க்கு அனுப்பிடுங்கோ.. ஏதாவது குயில் செய்ய உதவும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 6. /என்னா சுவை தெரியுமோ?, சொல்லாவிட்டால் கண்டுபிடிக்க முடியாது என்ன கறி என்பதை:)//
  ஐ லைக் யுவர் நேர்மை எருமை பெருமை கருமை ..உங்களுக்கே தெரியாத டிஷ் என்றால் ஹா ஆஹா nanga எப்படி கண்டுபுடிப்போம் அந்த கிண்ணத்தில் இருப்பது என்ன ? கண்டுபிடித்து தருவோருக்கு கிண்ணமும் அதில் உள்ள எதோவும் பரிசாக அதிரா அளிப்பார்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வரவர என் புளொக்... அதிகம் சைவப் பார்வையாளர்களால் நிரம்புவதால்.. அசைவமாக பேசுவதை குறைச்சிட்டேன்ன்.. உண்மையில் அது இறைச்சிக்கறிபோலவே இருந்துது எனச் சொல்ல வந்தேன்ன் ஹா ஹா ஹா...:)

   எனக்கு முக்கியம் கடமை நேர்மை எருமை தேன்ன்ன்ன்:)

   Delete
  2. ஐயோ ஆமாம் ஏஞ்சல் வாழைத்தண்டைப் பார்த்ததும் பயந்துவிட்டேன். வெளுப்பாக இல்லையா இருக்கும் இது எப்படிக் கறுப்பாகனு நினைச்சு...நல்ல காலம் க்ரில்னு எழுதியிருந்தாங்க அதிரா...

   ஆனா இரும்பு வாணலில சமைச்சா தண்டு கருப்பாகும் தான்....ஆனாலும் முதலில் பயந்துட்டேன் ஹிஹீ

   கீதா

   Delete
  3. நீங்க வேற கீதா அவங்க சொல்லாட்டி அது மர சீவல்னு நினைச்சிருப்பேன் இதையும் படிச்சதும் ஷ்ரேடரில் போட்டு பீஸாக்கிடுங்க

   Delete
  4. ///Thulasidharan V ThillaiakathuThursday, April 06, 2017 8:08:00 am
   ஐயோ ஆமாம் ஏஞ்சல் வாழைத்தண்டைப் பார்த்ததும் பயந்துவிட்டேன். வெளுப்பாக இல்லையா இருக்கும் இது எப்படிக் கறுப்பாகனு நினைச்சு...நல்ல காலம் க்ரில்னு எழுதியிருந்தாங்க அதிரா...//

   அது வந்து கீதா, என் யொந்தக் கதை யோகக் கதையைக் கேளுங்கோ:)... மேலே சொல்லியிருக்கிறேனே... எனக்கு இதுதான் முதல் அனுபவம், வாழை பார்த்ததுண்டு, வாழைத்தண்டு என பார்த்ததே கிடையாது.

   சமீபத்தில் தமிழ்க் கடையில் கறுப்புக் கறுப்பா குட்டிக்குட்டித் துண்டா இருந்துதா, உடனே தூக்கி, கவுண்டரில் கேட்டேன் இது என்ன என.. ஒருவேளை தாமரைத் தண்டாக இருக்குமோ என நினைச்சேன்ன்...

   அவர் சொன்னார் இது வாழைத்தண்டு என... வாவ்வ்வ் என கொடுத்தேன், அவர் எங்கட “பிரதேர்ஸ் ஸ்கூல” படிச்சவராச்சே.. அதனால ஒரு சகோதர பாசம், உடனே சொன்னார், இது சரியில்லை உள்ளே இருக்கு எடுத்துத் தாறேன் என.. ஒரு வெள்ளையான குட்டி உருண்டை தந்தார்...

   அதை வீட்டுக்கு வந்து ஃபிரிஜ்ஜில் வச்சேன்... 2 நாளில் கொஞ்சம் கறுப்பாகிட்டுது.. பின்பு எடுத்து அப்படியே துண்டாக்கி கிரில் பண்ணினேனா.. டெம்பிளேட்லி...கொம்பிளீட்லி.. பிளாக் ஆகிட்டுது கர்ர்:)..

   இதுவரை எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தேனா, இப்போ இங்கு கொமெண்ட் போட முடியவில்லை என எங்கட மஞ்சள்பூ மகீ.. மெயில் அனுப்பி சொன்னா,

   அதிரா ”அதிலே உள்ள நாரை நீக்கி தண்டை மட்டும் நறுக்குவதே ஒரு கலை!! எங்கம்மா அழகாச் செய்வாங்க,”.. ... இதைப்படிச்சதும் ..ங்ங்ஙேஙேஙேஙேஙே... நாரை நீக்கோணுமா? எனக்கிது தெரியாதே.. அதனால்தான் ஓவர் கறுப்போ என நினைச்சேன்ன்.. சரி விடுங்கோ.. இந்தச் சனிக்கிழமை கிடைத்தால் வாங்கி வெள்ளையாச் செய்கிறேன்:).

   நான் சமைத்திருப்பது மண்சட்டியில் கீதா... இப்போ என் வீட்டில் சமையல் எல்லாம் மண் சட்டியில்தேன்ன்ன்ன்:)..

   Delete
  5. ///AngelinThursday, April 06, 2017 8:41:00 am
   நீங்க வேற கீதா அவங்க சொல்லாட்டி அது மர சீவல்னு நினைச்சிருப்பேன் //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   Delete
 7. வாவ் !! வாழைப்பூ பொட்டுக்கடலை வடை நல்லாருக்கே ஆனா இந்த பேலியோ புலி ஆயில் பாத் எடுத்த பருப்புகளை டச் பண்ணாது அதை அப்படியே இருங்க மல்டி கிட்ட கேட்டு சொல்றேன் யாருக்கு தரன்னு ..
  மல்ட்டி சேஸ் கிவ் இட் டு அவர்கள் ட்ரூத் அங்கிள் :)

  ReplyDelete
  Replies
  1. அது குழைப்பதற்காகத்தான் பொட்டுக்கடலை சேர்க்கிறோம் இல்லையெனில் குழைக்க முடியாதெல்லோ, வேணுமெனில் நீங்க இதற்குப் பதில் ஏதாவது கொஞ்சம் மா சேர்த்துக் குழையுங்கோ.. (அவித்த மா).

   ///மல்ட்டி சேஸ் கிவ் இட் டு அவர்கள் ட்ரூத் அங்கிள் :)///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ட்றுத் அப்பப்பா என, முறைகளை தப்பில்லாமல் ஒழுங்காச் சொல்லிக் கொடுங்கோ:).

   Delete
 8. அதிரா நாங்க பூ இதழ்களை தான் செய்வோம் ஒரு ஸ்ரீலங்கன் அக்கா எனக்கு நீங்க செய்றா மாதிரி சொன்னாங்க ஆனா எனக்கு வாயில் வைக்க முடில கசப்பு .எங்க மக்கள் அழகா க்ளீன் பண்ணுவாள் வாழைப்பூ :) அம்மா ட்ரெயினிங் .
  அப்புறம் தேங்காய் துருவல் இல்லாம வாழைப்பூ செய்யமாட்டாம் .

  ReplyDelete
  Replies
  1. அது அப்படி இல்லை அஞ்சு. இப்படித்தான் நாம் செய்வோம்.. ஒரு காலத்திலும் இலங்கையர்கள்.. பொத்தியை உடைத்து பூவை எடுத்துச் செய்ததா சரித்திரத்தில இருக்காதென்றே நம்புகிறேன்.

   ஆனா நல்ல இனிமையாகவே இருக்கும். கயர்ப்புக்கு 3 காரணங்கள் உண்டு.

   1. ஊரில் சாப்பிடும் பழங்களின் வாழையில் இருந்து வரும் பொத்திகளை பிடுங்கி.. ஆடு மாட்டுக்கே போடுவார்கள், மொந்தன் வாழை என இருக்கு(கறி சமைக்க மட்டும் பயன்படும் வாழைக்காய்).. அதன் பொத்தி மட்டுமே சமைக்க பாவிப்போம்.. அதுதான் சுவை அதிகம் கயர்க்காது.

   ஆனா இங்கே வெளிநாட்டில், அப்படி ஊரில் வீசுவதை எல்லாம் கலந்து கட்டி இறக்குமதி செய்து விற்கிறார்கள்.. அதனால்தான் கயருது:(, ஆனா அனைத்திலும் மருத்துவக் குணங்கள் ஒன்றுதான்.

   இந்த மொந்தன் வாழைப்பொத்தியில் சாம்பல் பூசியதுபோல இருக்கும்.. பார்த்து வாங்குங்கோ இனி.. இதெல்லாம் அம்மாவின் ட்ரெயினிங் எனக்கு:).

   Delete
  2. இரண்டாவது .. அதிகம் வாடினாலும் கயரு ஊறியதுபோல கறுத்து விடும்.. கயர்க்கும்.

   3. சிலபேர் வெட்டி விட்டு உப்பு நீரில் ஊற வைப்பார்கள் இதுவும் கைக்கும்...
   தேங்காய்ப்பூ போட்டு செய்வதுதான் வறை/ சுண்டல்.. இன்னொரு தடவை சொல்கிறேன் என்றேன்.

   மகள் செய்வாவா?.. ரொம்ப நல்லது, உண்மைதான் பொம்பிளைப்பிள்ளைகளுக்குத்தான் இதில் பொறுமை அதிகம்... எங்கள் வீட்டிலும் இப்படியான சொறி வேலைகளை நான் தான் பொறுமையா இருந்து செய்து கொடுப்பேன்ன்.. சின்னனிலிருந்தே:).

   Delete
  3. அதிரா மொந்தன் வாழை ரொம்ப நலல்து. பழமும் ரொம்பவே நல்லது...அது போல பேயன் பழமும் ரொம்ப நல்லது. நீங்க சொல்லியிருக்கறாது போல சாம்பல் பூத்திருக்குனா அது செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்டது. ஒரு மருந்து புகை போட்டு...நல்லதல்ல வாங்கக் கூடாது..நீங்க சொல்லியிருக்கற மாதிரி...

   கீதா

   Delete
  4. ஓம் கீதா மொந்தன் வாழைதான் சமையலுக்கு பாவிப்போம்.. அதுக்கு சாம்பல் மொந்தன் எனத்தான் ஊரில் சொல்வோம். ஆனா பழுத்திட்டால் எறிந்திடுவோம் சாப்பிடுவதில்லை ஏனோ தெரியேல்லை.

   பேயன் பழமா? கேள்விப்பட்டதில்லை.

   இல்ல கீதா, இது பழத்தைச் சொல்லவில்லை, காய்.. சாம்பல் கலராக இருக்கும், பொத்தியிலும் சாம்பல்போல இருக்கும்..அது மரத்தில் பார்க்கவே தெரியும், ஊரிலும் பார்த்திருக்கிறேன்..

   பழம் எனில் நீங்க சொல்வதுபோல இருக்கலாம்.. அப்படி பழம் நான் காணவில்லை.. இதை சேர்ஜ் பாரில் பேஸ்ட் பண்ணிப் பாருங்கோ.. மேலே சாம்பல்போல இருக்கெல்லோ.. இதுதான் நல்லது...

   https://www.google.com/search?q=hi+fi+cat&newwindow=1&client=aff-maxthon-maxthon4&hs=6At&affdom=maxthon.com&channel=t23&source=lnms&tbm=isch&sa=X&ei=y_gdVcmZFdDSoASy7oC4CA&ved=0CAgQ_AUoAQ#tbs=simg:m00&tbnid=85oLinGl-bVxAM:&docid=rtKrbXE58pWHEM&tbm=isch&*&imgrc=85oLinGl-bVxAM:

   இந்த வாழைக் காயிலும் பாருங்கோ அங்காங்கு சாம்பல் பூச்சு தெரியுது.. இதுதான் ஒரிஜினல் சாம்பல் மொந்தன்...

   https://www.google.com/search?q=hi+fi+cat&newwindow=1&client=aff-maxthon-maxthon4&hs=6At&affdom=maxthon.com&channel=t23&source=lnms&tbm=isch&sa=X&ei=y_gdVcmZFdDSoASy7oC4CA&ved=0CAgQ_AUoAQ#tbs=simg:m00&tbnid=Z4qHWcvdS4VhiM:&docid=roLSxwtVsWrHeM&tbm=isch&*&imgrc=Lk2FwKZnyo3GZM:

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆஆஆ.. ஒரு கப் சூஊஊஊஊஉடா மங்கோ லஸி பிளீஸ்ஸ்ஸ்:)..

   Delete
 9. அப்பாடி கடைசீயா கிச்சனுக்கு விசிட் விட்டாச்சு ..ஆமா விசிட்டர்ஸ்க்கு ஒரு falooda மாங்கோ மில்க்க்ஷேக் எல்லாம் தரக்கூடாதா :)
  அழகா இருக்கு உங்க கிச்சன்

  ReplyDelete
  Replies
  1. கிச்சன் என்றால் படு சுத்தமாக இருக்க வேண்டாமோ?

   கரப்பான் பூச்சி, எலி முதலியன எப்போதாவது வந்து உணவுப்பொருட்களில் வாயை வைத்து விடுமே என நாங்கள் மிகவும் கவலைப்படுவோம். எல்லாவற்றையும் அடிக்கடி மூடி வைப்போம். இங்கு என்னடான்னா பூனைகளும் யானைகளுமாகக் காட்சியளிக்கிறதே.

   பால் தயிர் முதலியவற்றை வாயை வைத்து நக்கி நக்கிக் குடித்து விடாதோ !

   சுத்தமாக இருந்தால் போதாது .... சுகாதாரமாகவும் இருக்கணுமாக்கும்.

   பெட் அனிமலானாலும் அதை அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணுமாக்கும். நாயையும் பூனையையும் படுக்கையிலும், சமையல் அறையிலுமா வைப்பார்கள்????? என்னவோ போங்கோ ...... !

   Delete
  2. ///AngelinWednesday, April 05, 2017 12:41:00 pm
   அப்பாடி கடைசீயா கிச்சனுக்கு விசிட் விட்டாச்சு ..ஆமா விசிட்டர்ஸ்க்கு ஒரு falooda மாங்கோ மில்க்க்ஷேக் எல்லாம் தரக்கூடாதா :)///

   இது செகண்ட் விசிட் தானே? நோஓஒ சுகர் பேசண்ட்டுக்கெல்லாம் ஒன்லி பாவக்காய் ஊஸ் அல்லது வல்லாரை ஊஸ்தேன் கொடுப்போம்ம்:)).. ஹா ஹா ஹா ஹையோ பிளீஸ்ஸ்ஸ் ஆராவது சேவ் மீஈஈஈஈஈஈஈஈ

   Delete
  3. ///வை.கோபாலகிருஷ்ணன்Wednesday, April 05, 2017 3:04:00 pm
   கிச்சன் என்றால் படு சுத்தமாக இருக்க வேண்டாமோ?

   கரப்பான் பூச்சி, எலி முதலியன எப்போதாவது வந்து உணவுப்பொருட்களில் வாயை வைத்து விடுமே என நாங்கள் மிகவும் கவலைப்படுவோம். எல்லாவற்றையும் அடிக்கடி மூடி வைப்போம். இங்கு என்னடான்னா பூனைகளும் யானைகளுமாகக் காட்சியளிக்கிறதே.///

   ஹா ஹா ஹா முதலில் மேலே நான் கொடுத்த லிங்கை கிளிக் பண்ணி உள்ளே போய் கிச்சினைப் பாருங்கோ:) இது மேலே இருக்கும் பொம்மைகளைப் பார்த்துப்போட்டு குய்யோ முறையோ என்றால்ல் பயந்திடுவனோ மீ?:) மீ ரொம்ப ஸ்ரோங் ஆக்கும்:)).. ஆஅவ்வ்வ்வ் ஏன் என் கை இப்பூடி நடுங்குதூஊஊஊ:)..

   இங்கு எலி, பூச்சி , ஊர்வன பறப்பன எதுவுமே இல்லை கோபு அண்ணன், கோடை காலங்களில் மட்டும்.. ஏதும் குட்டிக் குட்டி தேனீக்கள் கொசுக்கள் சிலது பறக்கும்.

   Delete
  4. ///பால் தயிர் முதலியவற்றை வாயை வைத்து நக்கி நக்கிக் குடித்து விடாதோ !/// இவை எப்பவும் ஃபிரிஜ்ஜில் தான் வைப்போம். எங்கள் டெய்சி கிச்சினுக்குள் வந்து போவா, நான் சமைப்பதை நித்திரை தூங்கித்தூங்கிப் பார்ப்பா.. ஆனா அவவுக்கு எங்கள் உணவுகள் பிடிக்காது, மணக்கவே மாட்டா.. அவவின் ஸ்பெஷல் ஃபூட் மட்டுமே சாப்பிடுவா.

   ///பெட் அனிமலானாலும் அதை அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணுமாக்கும். நாயையும் பூனையையும் படுக்கையிலும், சமையல் அறையிலுமா வைப்பார்கள்????? என்னவோ போங்கோ ...... !///
   உண்மைதான், ஆனா என்னமோ அவை நமக்கு அனிமல் மாதிரியே தெரிவதில்லை, நம் பிள்ளைகள் போலவே பழகிவிட்டது... பழக்கமில்லாதோருக்கு பார்க்க அருவருப்பாகத்தான் இருக்கும்.

   இங்கு ஒரு வெள்ளை தம்பதிகள் தம் நாயை 14 வருடம் வளர்த்ததுக்கு, திடீரென வருத்தமாகி, இறக்கப் போகிறது என தெரிந்து விட்டதாம், அவர்கள் அன்று நைட் முழுதும் நாயை நடுவில் படுக்க வைத்து ஹஸ்பண்ட் வைஃப் இருவரும் இரு பக்கத்திலும் படுத்து கட்டிப்பிடித்தபடியே தூங்கினார்களாம்.. விடிய நாய் இறந்து விட்டது.. அந்தப் படம் இங்கு ஏற்கனவே போட்டிருக்கிறேன் புளொக்கில்.

   இங்கத்தைய குழந்தைகள்கூட, கிராண்ட்பேரன்ஸ் இறந்தால்கூட பியூன்றல் அன்றுமட்டும்தான் லீவு எடுப்பார்கள் மற்றும்படி ஸ்கூல் வருவினம், ஆனா இப்படி பெட்ஸ் இறந்தால், ஸ்கூலுக்கு வராமல் கவலை என அழுது கொண்டிருப்பார்கள்.... என்ன சொல்வது உலகம் எங்கயோ போய்க் கொண்டிருக்குது... என்னதான் இருப்பினும் நீங்க சொல்வது உண்மையே... எதற்கும் ஒரு எல்லை வைத்துப் பழக்க வேணும் மிக நன்றி கோபு அண்ணன்.

   Delete
 10. முன்பு வீட்டின் பின்புறம் மூன்று நான்கு வாழை மரங்கள் இருந்தன. வாழைப்பூவிலிருந்து வடை செய்வதுகடினமான பணி என்பார் என் மனைவி. இந்த வாழைப்பூவை வடையாக மட்டுமே செய்ய முடியு ம் ஆஹா நல்ல ருசி வாழைத்தண்டு உடலுக்கு நல்லது என்று கறி செய்வாள் என் மனைவி. வாழையில் காயும் பழமும் மட்டுமே எனக்குப் பிடித்தது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா வாங்கோ.. வடை செய்வது கொஞ்சம் கடினமான வேலைதானே, ஆனா பெரிய கஸ்டமில்லை. ஓம் வாழைத்தண்டு, வாழைக்காய்க் கறியில்கூட நிறைய சத்திருக்கு.

   மிக்க நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 11. எனக்கு அதிகம் பிடிக்காத வாழைப்பு கறியை போட்டு யாரோ பழிவாங்குகிறார்கள் அவர்களுக்கு எதிராக கூடிய விரைவில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ... என்னாது வாழைப்பூக் கறி உங்களுக்குப் பிடிக்காதா?:).. அப்போ எதுக்கு எப்பவும் உங்கட ஃபிரிஜ்ல வாழைப்பூ இருக்குது என அடிக்கடி சொல்றீங்க?:) முன்பும் சொன்னீங்க எங்கயோ?:)..

   சரி சரி உண்ணாவிரதப் போராட்டம்தானே? எங்கே எனச் சொன்னால்.. நாங்க கடலை, கச்சான், குருவி ரொட்டி எல்லாம் பார்சல் பண்ணிக்கொண்டு புறுணம் பார்க்க வருவோம் எல்லோ:)..

   Delete
 12. இடைவெளி என்று ஒரு படம் போட்டு உங்கள் வீட்டு நிலமையை மறைக்காமல் எடுத்து சொன்ன உங்கள் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:).. அது சூப்பரா இருக்குதெல்லோ.. ரசிச்சு சிரிக்க வைக்குது:).

   Delete
  2. ஹஹஹஹ் மதுரை நீங்க முன்னாடி வந்துட்டு சொல்லிட்டீங்க...நான் ரொம்ப லேட்டுங்கோ பதிவு வரது எல்லாம் தெரிய மாட்டேங்குது...இந்த அதிரா நான் முதல்ல பார்க்கக் கூடாதுனே எனக்குத் தெரியாம போடுறாங்கோ...ஹிஹிஹிஹி

   கீதா

   Delete
  3. ///Thulasidharan V ThillaiakathuThursday, April 06, 2017 7:53:00 am
   ...நான் ரொம்ப லேட்டுங்கோ பதிவு வரது எல்லாம் தெரிய மாட்டேங்குது///

   நோஓஓஓஓஓஓஓஒ இது அநியாயம் அக்கிரமம்.. நான் இப்பவே போறேன்ன் ஹண்ட் கோர்ட்டுக்கு:)... நீங்க என் போஸ்ட் உடனேயே தெரிகிறமாதிரி ஏதும் வழி பண்ணி வைக்கோணும் கீதா. சகோ ஸ்ரீராமும் இப்பூடிச் சொல்லியே லேட்டா வாறார் கர்ர்:))... விடுங்கோ விடுங்கோ.. அப்போ நான் டெய்லி போஸ்ட் போட்டால் என்ன பண்ணுவீங்க? எப்படி வருவீங்க?:)... நான் இதோஓஓஓஒ பிளேன் படியில கால் வச்சிட்டேன்ன் காசிக்குப் போய் தியானத்தில அமரப்போறேன்ன்ன்ன்:) எனக்கு நீதி வேணும்:) என் போஸ்ட் மட்டும் லேட்டா தெரிகிறமாதிரி செட் பண்ணி வச்சிருக்கினம்:).. எனக்கு கடமை நேர்மை எருமை:) தான் முக்கியம்...:)

   ஸ்ஸ்ஸ்ஸப்பாஅ நல்லவேளை யாரும் இங்கின இல்ல்லை:) கல்லெறி படமுன் ஓடிடலாம்ம்ம்:).

   Delete
 13. எங்க வீட்டு ப்ரிஜ்ஜில் ஒரு வாழைப்பூ ஒளிந்து இருக்கிறது மாமி எடுத்து ஏதாவது பண்ணினால்தான் உண்டு மாமி சோம்பேறியாக இருந்து ஒருவாரத்திற்கு மேல் இருந்தால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போடும் போது எனக்கு கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. மாமியிடம் சொல்லுங்கோ வடை சுடச் சொல்லி.. அதன் பின்னர் உங்கள் ஃபிறிஜ்ஜில் நீங்களே வாழைப்பூ வாங்கி வைப்பீங்க.. ஆனா பின்பு மாமி வாங்க விடமாட்டா:) வடை சுடுவது கஸ்டம் எனச் சொல்லுவா:).

   Delete
  2. மதுரை சகோ வாழைப்பூ நன்றாகச் செய்யலாமே...நல்ல காரசாரமாக, உப்பும் உரைப்புமாகச் செய்தால் நன்றாக இருக்குமே..உசிலி ரொம்ப நல்லாருக்கும்..

   கீதா

   Delete
  3. அப்படிச் சொல்லுங்கோ கீதா, அதிலும் வாழைப்பூவில் எவ்வளவோ மருத்துவம் இருக்கு.. நகம் கடித்துச் சாப்பிடும் குழந்தைகளுக்கும் மற்றும்.. வயிற்றில் சேரும் குட்டிக்குட்டிக் கல், மண்ணை எல்லாம் வெளியே அகற்ற இது மிகவும் நல்லது.

   உசிலி எனில் வறையோ கீதா? தேடிப் பார்த்துச் செய்கிறேன்.. இப்போதான் எமக்கு வாழைப்பூ தாராளமாகக் கிடைக்குது.

   Delete
 14. /
  ஒரு டிஸ் கறி வாங்கினால், ஒரு குட்டி டிஸ் மாங்காய்ப் பச்சடி இலவசம்///

  இலவசத்தை மட்டும் எடுத்து கொள்கிறேன் டிஸ்ஸை நீங்களே வைத்து "கொல்"லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா... அப்போ அதை அஞ்சுவிடம் கொடுத்திடலாம்:).

   மிக்க நன்றி ட்றுத் அனைத்துக்கும்.

   Delete
 15. ஹையோ கன்பியூஷன்ல ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் எங்கியோ பார்த்தேன் மிஸ் பண்ணிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா... மஞ்சவனப்பதியின் வலது பக்கம் இருக்கும் வைரவருக்கு நான் வச்ச நேர்த்திக்கடன் பலிக்குது:).. ஹையோ இப்போ நேர்த்திக்கடனா வைர மூக்குத்தி கொடுக்க எங்கின போவேன் ஜாமீஈஈஈஈ:).

   Delete
  2. ஹலோ :) மியாவ் நானா அன்னிக்கே பார்த்தேன் பிளிந்து //பிழிந்து ..ஆனாலும் நீங்க மை செல்ல பூனை இல்லையா (எங்கேயோ எரியற வாசனை வருதா :) அதான் இனிமே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பற்றி இனிமே பேசக்கூடாதுன்னு தோணிச்சி எதுக்கும் மல்ட்டிகிட்ட ஓரு வார்த்தை கேட்டுட்டு இனிமே கிண்டல் பண்றதா வேணாமான்னு டிசைட் செய்றேன் ஹா ஆஹா :) சும்மா தெரியாதமாதிரி நடிச்சிட்டு போனேனாம்

   Delete
  3. ///AngelinThursday, April 06, 2017 12:35:00 pm
   ஹலோ :) மியாவ் நானா அன்னிக்கே பார்த்தேன் பிளிந்து //பிழிந்து ..ஆனாலும் நீங்க மை செல்ல பூனை இல்லையா (எங்கேயோ எரியற வாசனை வருதா :)///

   ஹா ஹா ஹா கிழக்கால மேற்கால கீழால மேலா எல்லாம் ஒரே புகை மூட்டமா இருக்கே ஏன் என ஓசிச்சேன்ன்:) இதுவா புறுணம்:)...

   ////அதான் இனிமே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பற்றி இனிமே பேசக்கூடாதுன்னு தோணிச்சி///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ நான் எப்பூடி திருந்துவதாம்:)... பிழை எனில் சுட்டிக்காட்டுங்கோ அதிலும் ஒரு சந்தோசம்தானே அஞ்சு... ஆனாலும் நான் இனிப் பிழையே விடமாட்டேன்ன்...
   பிழிதல்......
   விளையாட்டு.....
   வழுக்குதல்....
   உளுந்து...
   வளக்கப்படி....
   எப்பூடி திருந்திட்டேனெல்லோ..:)

   Delete
  4. haahaa garrrrrrrrrrrrrrrr//வளக்கப்படி..///

   அது ழ ழ வழக்கப்படி

   Delete
 16. புகைப்படங்களை காணும்பொழுது சாப்பிட ஆசையாகத்தான் இருக்கு சாப்பிட்டால்தானே தெரியும் ருசி ஆகவே பார்சல் அனுப்பினால் நன்று. - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ் வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க மகிழ்ச்சி... ஹா ஹா ஹா இல்ல முன்ன முன்னம் வந்திருக்கிறீங்க... அதனால உங்களுக்கு ஒரு சுவீட்டா கேசரிப் பார்சல்.. என் செகரட்டறி மூலம்:) அனுப்பி வைக்கிறேன்:)..

   மிக்க நன்றி வருகைக்கு.

   Delete
 17. வாழைப்பூ வைத்து பருப்புசிலி செய்வார்கள்.... ஆனால் அதில் கள்ளனை எடுத்துவிட்டு தான் நறுக்குவோம்.... இப்படி மொத்தமாய் நறுக்கியதில்லை!

  வாழைப்பூ வடை எனக்கும் பிடிக்கும். செய்யும் அளவிற்குப் பொறுமை இல்லை! ஊருக்குச் சென்றால் இரண்டு பேருமாகச் சேர்ந்து செய்து சாப்பிட வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஓம் பார்த்திருக்கிறேன் இந்தியாவில் யாரும் இப்படி செய்வதில்லை வாழைப் பொத்தியில்.

   வாழைப்பூ துப்பரவாக்கி வெட்டுவதுதான் கொஞ்சம் கஸ்டம்... இதுக்காக ரீவில் ஏதும் பார்க்கும் நேரங்களில்தான் இப்படியான வேலை செய்து பிரிஜ்ஜில் வைத்து விடுவேன் நான். சமைப்பது இலகுதான்.

   மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 18. //ஊரில் நாம் வாழைப்பொத்தியைப் பிரித்துப், பூவை மட்டும் பாவித்த வரலாறே கிடையாது// உண்மைதான் அதிரா.
  வாழைப்பூவில் இப்போ சம்பலும் (துவையல்)செய்கிறேன் அதிரா.நல்ல டேஸ்ட். வாழைப்பூவில் என்ன செய்தாலும் அது ஒரு தனி டேஸ்ட் தான். எனக்கு இந்த வாழைத்தண்டுதான் கிடைக்கேல்லை. உங்க குறிப்பின் படி கறி செய்யோனும்.

  ////வாழைப்பூவை சுடுமோரில் ஊறவிட்டு//// ஆவ்வ்வ்....சுடுமோரிலாஆ.. அஞ்சு இங்கன வாங்கோ.....

  நான் மோரில் உப்பு போட்டு அதில்தான் ஊறவிட்டு பின் பிழிந்து (பிளிந்து..இல்லை) விட்டு சேர்ப்பேன். உப்பு போட்ட மோரில் போட்டால் கசக்காது. கயர்ப்பு இருக்காது.அம்மா இப்படி செய்வா. வாழைப்பூ வடையும் இன்னும் செய்யல. உங்க குறிப்பில் இந்த 2 ம் செய்யவேணும். மாங்காய் பச்சடி மாங்கோ கிடைக்கும்போது செய்வது.
  எல்லா குறிப்பும் அட்டகாசம். இடையில் ஜோக், பாடல் எனக்கும் பிடித்தது. சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ...
   ///வாழைப்பூவில் இப்போ சம்பலும் (துவையல்)செய்கிறேன் அதிரா.நல்ல டேஸ்ட். // துவையல் என வறையைத்தான் சொல்றிங்களோ? எதுக்கும் உங்கள் புளொக்கை தூசு தட்டி இக்குறிப்பை எழுதுங்கோவன் எல்லோருக்கும் பயன்படும்.

   ////////வாழைப்பூவை சுடுமோரில் ஊறவிட்டு//// ஆவ்வ்வ்....சுடுமோரிலாஆ.. அஞ்சு இங்கன வாங்கோ.....///
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நோஓஓஓஓஓஓஓ இப்போ எதுகு அஞ்சுவை எல்லாம்:) பாவம் அந்தப்பிள்ளை நடக்கிறேன் பேர்வழி என.. தேம்ஸ்கரைச் சருகெல்லாம் ஹீல்ஸ் ஆல கூட்டிப்பெருக்கி ரொம்பக் களைப்பாகி இருக்கிறா.. ச்ச்ச்சோ பீஸ்ஸ் டோண்ட் டிசுரேப்பு ஹேர்ர்:).

   அது அம்முலு சீதாலக்ஸ்மி அக்கா.. எங்கட அறுசுவை வட்டம்.. அவவின் குறிப்பில் மோரில் அவித்து எடுக்கச் சொன்னா, நான் சுட வச்சு ஊறவிட்டேன்ன்.. ஹையோ ஹையோ... விளக்கம் கொடுக்கமுன்பே பொசுக்கெனப் போயிடுவேன் போல இருக்கே வைரவா:)

   Delete
  2. ///நான் மோரில் உப்பு போட்டு அதில்தான் ஊறவிட்டு பின் பிழிந்து (பிளிந்து..இல்லை///

   ஆவ்வ்வ்வ்வ் அகப்பட்டிட்டேனா.. அகப்பட்டிட்டேன்னாஅ... இதைத்தான் அஞ்சு பார்த்து மிஸ் பண்ணிட்ட:).. மகியும் இதை மென்சன் பண்ணியிருந்தா:).. என் ஸ்பெல்லிங் மிசுரேக்குக்கெனவே ஒரு பெரிய ஃபானேஏஏஏஏஏஏஏ இருக்கு அதிராவுக்கு:) ரொம்பப் பெருமையா இருக்கு:) ஹா ஹா ஹா.. இதிலயாவது ஃபான்ஸ் இருக்கே எனக்கு என:).

   அனைத்துக்கும் மிக்க நன்றி அம்முலு.

   Delete
 19. முதலில் பூச்சையின் படத்துக்குக் கமென்ட்...ஐயையோ அதிரா சமைக்கிறாங்களானு இப்படிப் பார்க்குதோ....ஹிஹிஹிஹ்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ.. இம்முறை துளசி அண்ணன் எங்கே போயிட்டார்ர்ர்??? கர்ர்ர்ர்ர்ர் அவரோடு அதிரா கா போட்டிட்டா எனச் சொல்லிடுங்கோ கீதா:)..ஹா ஹா ஹா... ச்ச்ச்சும்மா சொன்னேனாக்கும்:).

   அதேதான் கீதா, என் சமையலை பூஸ் ஏ இப்படி பார்க்குதெனில்:) மேலே வாணாம் விட்டிடலாம்.. இதுவும் கடந்து போகும் ஹா..ஹா...ஹா..:).

   Delete
 20. அதிரா கிராம் எல்லாம் அளந்து வைத்துக் கொண்டு எழுதுவீர்களோ...எனக்கு அந்த அளவு பொறுமை இல்லை..ஹிஹி அதான் சமையல் குறிப்புகள் எழுதுவதில்லை....பொறுமை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது கீதா முன்பு கிட்டத்தட்ட 50 குறிப்புக்களுக்கு கிட்ட சமைச்சு படங்களோடு எடுத்து அனுப்பியிருக்கிறேன், அப்போ புதியவர்களும் சமைக்க வசதியாக இருக்குமே என, உப்பிலிருந்து, பால், தண்ணீர்கூட அளந்து சேர்த்து.. அப்படியே குறிப்பெழுதியிருக்கிறேன்.. இப்போ இங்கு வரும் எல்லோரும் சமையல் சமுத்திரங்கள்:) என்பதனால்...ச்ச்ச்சும்மா மேலோட்டமாகச் சொன்னால்போதும் என விட்டிட்டேன்:).

   Delete
 21. வாழைப்பூவில் மேலுள்ள அந்த இதழ்கள் எல்லாம் எடுத்துவிட்டு உள்ளே இருக்கும் பூவை மட்டும் எடுத்து, அந்தப் பூவிலும் கள்ளனை அதான் நடுவில் குண்டாகத் தலை நீட்டி இருக்குமே அதனை எடுத்துவிட்டுத்தான் சமைப்போம். அந்தக் கள்ளன் டெண்டராக இருக்காதவரை எடுப்போம். அப்புறம் கடைசியாக உரித்து உரித்து சின்ன பூவாக மாறியதும் அப்படியே அடிபாகத்தை வெட்டிவிட்டு மற்றதை அப்படியே கட் செய்து போடுவோம். கள்ளன் டைஜஸ்ட் ஆகாது என்பதால்,,,நேரம் எடுக்கும் என்பதால் சேர்ப்பதில்லை. வயிற்று வலியும் சிலருக்கு வரும் என்பதால்...

  வடை செய்வதண்டு உசிலி செய்வதுண்டு. கறி செய்வதுண்டு. கூட்டு செய்வதுண்டு. பால் சேர்த்துச் செய்தத்ல்லை உங்கள் குறிப்பைச் செய்துவிடுவோம்...

  வாழைத் தண்டும் அதே போலத்தான் புளிப்புக் கூட்டு, மோட்க்கூட்டு, கறி, குழம்பு எல்லாம் செய்வதுண்டு....உகள் ரெசிப்பி போல் க்ரில் எல்லாம் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்...

  மாங்காய் பச்சடி என்றால் நாங்கள் வெல்லம் போட்டுச் செய்வதைத்தான் சொல்லுவோம். இது சாலட் என்போம்...நல்ல குறிப்புகள்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா... நல்லாச் சொல்லிட்டீங்க கள்ளன்:) ஹா ஹா ஹா.. இதுவரை இந்தக் கள்ளனைப் பற்றி எனக்கு தெரியாது, சில நேரம் வெட்டும்போது வெட்டப்படமாட்டேன் என அடம்பிடிப்பார் அப்போ பிடுங்கி வீசுவதுண்டு, மற்றும்படி கவனிப்பதில்லை... இவ்ளோ இருக்கா இதனுள்.

   வாழைத்தண்டை வெட்டிப் பொரித்துவிட்டு பிரட்டல் கறி வைக்க சுவையாக இருக்கும் என கேள்விப்பட்டேன், ஆனா எதுக்கு எண்ணெய் பாவிக்கவேண்டும் என நினைச்சே கிரில் பண்ணினே.. அதுவும் மெல்லிசாதான் இல்லையெனில் கருகிவிடும்.

   மாங்காய் பச்சடி.. ஹா ஹா ஹா பச்சையாகச் செய்தமையால் பச்சடி எனச் சொன்னேனாக்கும்:)..

   மிக்க மிக்க நன்றிகள் கீதா, துளசி அண்ணனுக்கும்.

   Delete
 22. வாழைப்பூவில், இதழ்களை சாப்பாட்டிற்கு உபயோகப்படுத்தி கேள்விப்பட்டதே இல்லை. சின்ன வயதில், பெரியவர்கள், எங்களையெல்லாம் உட்காரவைத்து கையில் சாப்பாடு போடுவார்கள். அப்போது, கீழே ஆளுக்கு ஒரு வாழைப்பூ இதழை, தட்டுக்குப் பதிலாக வைத்திருப்போம். பூவிலும், நடுவில் இருக்கும், (அதாவது பூவின் இதழுக்குக் கீழ் இருக்கும் வாழைப்பூவில்) கள்ளனை எடுத்துவிட்டுதான் உபயோகப்படுத்துவோம். இதற்கெல்லாம் காரணம் இருக்கும். (சீரணமடையாது அல்லது எதுக்காவது பிரச்சனை என்று). இப்படி மொத்த வாழைப்பூவைத் திருத்தி உபயோகப்படுத்தியதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  வாழைத் தண்டும், நீங்கள் செய்த பொரியல், ஏன் கறுத்துவிட்டது? பொதுவாக வெண்மை நிறமோ அல்லது சிறிது மங்கிய வெண்மை நிறமோதானே இருக்கும்.

  வாழைத் தண்டில், அடிவாழைத் தண்டு இன்னும் உடம்புக்கு நல்லது. உங்களுக்குத் தெரியுமா? பாம்பு கடித்து விஷம் ஏறிவிட்டால், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்கு முன், வாழைத் தண்டைச் சுற்றியுள்ள பட்டையைப் பிழிந்து அந்தத் தண்ணீரைக் குடிக்கத் தருவார்கள். (விஷத்தின் வீரியம் குறையும் என்பதற்காக). வாழைத் தண்டும் 'சிறு'நீரகக் கல்' பிரச்சனைக்கு நல்லது. ஆனால், அதிகமாகப் பாவித்தால் (அதாவது தொடர்ந்து பல நாட்கள் உணவில் சேர்த்துக்கொண்டால்), உடலில் இருக்கும் நல்ல உப்பையும் கரைத்துவிடும் அபாயம் உண்டு.

  மாங்காய் பச்சிடியில் சின்ன வெங்காயமா? இதுவும் எனக்குப் புதுசுதான்.

  நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால், பிளாக்குக்கு இன்ஸ்யூரன்ஸைவிட, படித்துச் செய்துபார்க்கும் வாசகர்களுக்குத்தான் இன்ஸ்யூரன்ஸ், நீங்கள் எடுத்துக்கொடுக்கணும்போல (சும்மா.. ஜாலிக்கு எழுதினேன். SERIOUS ஆக எடுத்துக்காதீங்க)

  ReplyDelete
  Replies
  1. ///நெல்லைத் தமிழன்Thursday, April 06, 2017 1:42:00 pm
   வாழைப்பூவில், இதழ்களை சாப்பாட்டிற்கு உபயோகப்படுத்தி கேள்விப்பட்டதே இல்லை.//

   வாங்கோ நெ தமிழன்.. இது 2ம் தடவையாக வந்திருக்கிறீங்க:) ஹா ஹா ஹா... நீங்க ஏற்கனவே வந்து படிக்கிறீங்க என எனக்கு கூகிளார் காட்டியதை வச்சே.. நான், நீங்கள் எவடம்?:) என ரோட்டால போவோரை எல்லாம் மறிச்சு மறிச்சு ஊர் கேட்டேன் தெரியுமோ?:)ஹா ஹா ஹா சரி விடுங்கோ.

   நாங்கள் இதுக்கு நேர்மாறு, மடலை உடைச்சு பூவை மட்டும் சமைச்சதே இல்லை:).. பொத்தியில் இருக்கும் வெளி மடல்களில் சிலதை மட்டும் உரித்து எறிந்துவிட்டு, ஒரு கழிவும் இல்லாமல் சமைப்போம், இதுவரை எந்தக் கோளாறும் வந்ததாக யாரும் சொல்லவில்லை.

   /// (அதாவது பூவின் இதழுக்குக் கீழ் இருக்கும் வாழைப்பூவில்) கள்ளனை எடுத்துவிட்டுதான் உபயோகப்படுத்துவோம். இதற்கெல்லாம் காரணம் இருக்கும். (சீரணமடையாது அல்லது எதுக்காவது பிரச்சனை என்று).///
   இப்போதான் மேலே கீதா சொல்லிக் கேள்விப்படுகிறேன் கள்ளனை:).. இனிக் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன்...

   Delete
  2. ///வாழைத் தண்டும், நீங்கள் செய்த பொரியல், ஏன் கறுத்துவிட்டது? பொதுவாக வெண்மை நிறமோ அல்லது சிறிது மங்கிய வெண்மை நிறமோதானே இருக்கும்.///
   சத்தியமா எனக்கு இதுபற்றி ஏதும் தெரியாது, வழமையா யூ ரியூப்பில் செக் பண்ணுவேன், இது நான் எல்லாம் தெரிஞ்ச பேர்வழி என நேரெ களம் இறங்கிட்டேன். வாங்கி வந்தபோது வெள்ளையாக இருந்துது, 2 நாள் பொறுத்து சமைக்க இப்படி ஆச்சு:).. மேலே கீதாவுக்கான பதிலில் விளக்கமாக சொல்லியிருக்கிறேன் படிச்சுப் பாருங்கோ பிளீஸ்ஸ்ஸ்..

   விரைவில நல்ல ஒரு வாழைத்தண்டுக் குறிப்புக் குடுங்கோ எங்கள்பக்கம்.. ஈசியாக இருப்பதாக பார்த்துக் குடுங்கோ.. உறைப்பாகவும் இருக்கோணும் ஹா ஹா ஹா:).

   ///மாங்காய் பச்சிடியில் சின்ன வெங்காயமா? இதுவும் எனக்குப் புதுசுதான்.///

   யேஸ்ஸ்ஸ் இப்படியான பச்சையாக தேங்காய்ப்பூச் சேர்க்கும் சம்பல்களுக்கு நாம் சின்ன வெங்காயம் குட்டியாக அரிந்து போடுவோம்.. உடம்புக்கு நல்லதுதானே.. ஏன் சுவை மாறி விடுமோ?

   Delete
  3. ///நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால், பிளாக்குக்கு இன்ஸ்யூரன்ஸைவிட, படித்துச் செய்துபார்க்கும் வாசகர்களுக்குத்தான் இன்ஸ்யூரன்ஸ், நீங்கள் எடுத்துக்கொடுக்கணும்போல (சும்மா.. ஜாலிக்கு எழுதினேன். SERIOUS ஆக எடுத்துக்காதீங்க)////

   ஆவ்வ்வ்வ்வ் ஒரு பப்ளிக்கு புளொக்கில வச்சு, ஒரு சுவீட் 16 பிள்ளையை:) மானபங்கப்படுத்திவிட்ட குற்றத்திற்காக..:) உடனடியாக பிரித்தானியாக் ஹாண்ட் கோர்ட்டுக்கு வரும்படி, மேன்மை தங்கிய:), பகுத்தறிவுள்ள:), அன்பான:), பண்பான:) ஜனாதிபதி அவர்கள்(அது நாந்தேன்ன்:)).. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்ர்ர்ர்ர்:)...

   ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றி நெ தமிழன்...

   Delete
 23. கிச்சினா? கிச்சனா?

  உங்க "கிச்சின்" (!) சென்று பார்த்து வந்தேன். நீட் அண்ட் க்ளீன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ..

   //ஸ்ரீராம்.Thursday, April 06, 2017 3:10:00 pm
   கிச்சினா? கிச்சனா?///
   ஹா ஹா ஹா நா இந்த வெளாட்டுக்கே வள்ள:).

   ///உங்க "கிச்சின்" (!) சென்று பார்த்து வந்தேன். நீட் அண்ட் க்ளீன்.///

   ஆவ்வ்வ்வ் இன்னும் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்கோ ஸ்ரீராம்ம்ம்.. உச்சிப்பிள்ளையார் மலை உச்சியில் எதிரொலிக்கட்டும்:) ஹா ஹா ஹா.. கோபு அண்ணன் ஓடியாங்கோ.. பார்த்தீங்களோ பேசினீங்க நேற்று எனக்கு:)..
   மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 24. ஓ... தேசிக்காய் என்றால் எலுமிச்சை! ஓகே ஓகே! அதென்ன வாழைப்பூவை அப்படியே வெட்டி எடுத்து சமைக்கிறீர்கள்? நாங்கள் அதன் தோலை இதுவரை சமைத்ததுமில்லை, சாப்பிட்டதுமில்லை. பூவை மட்டும் எடுத்து, அதிலிருந்தும் நடுவில் இருக்கும் அல்லது விழிக்கும் 'கள்ளனை'ப் பிரித்தெடுத்து வெளியில் போட்டுத்தான் சமைப்போமாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. இதேதான், 2008 ஆம் ஆண்டு இப்படி வெட்டிக் காட்டியதை எல்லோரும் உதட்டில் விரல்:) வச்சு ஆச்சரியப்பட்ட்டார்கள்:).. இங்கேயும் அதேதான்:).. அதில் கழிவேதும் இல்லை நல்ல பிஞ்சுப் பூவாக இருப்பின் நல்ல சூப்பர் சுவையாக இருக்கும், எதுவும் கழிக்கத் தேவையில்லை. சொல்லிட்டீங்க இல்ல...கள்ளனை இனி விடமாட்டேன்ன்.. ஹா ஹா ஹா..

   Delete
 25. நாங்கள் அப்படி நறுக்கிய பூவில் தேங்காய்க்கறி, உசிலி முதலானவை செய்வோம். கூட்டும் செய்வோம். கடைசியில் இருக்கும் இளம்பூவை அப்படியே சாப்பிடுவோம்!

  ReplyDelete
  Replies
  1. ///ஓ... தேசிக்காய் என்றால் எலுமிச்சை!///
   ஹா ஹா ஹா ஓம்.. அதேதான்.. கொஞ்சக்காலம் போனால் எங்கட அஞ்சுவைப்போல, கோபு அண்ணனைப்போல, உங்களுக்கும் தமிழ்நாட்டுப் பாசை மறந்து.... அதிராபோலவே பேசப்போறீங்க ஹா ஹா ஹா..:).

   ஓம்ம் பூவைக் கெத்திட்டுக்கொண்டு போகும்போது நடுவில் நல்ல வெள்ளை மொட்டு மாதிரி வரும் அதை கட் பண்ணிச் சாப்பிடுவேன்:) யாருக்கும் சொன்னால் கயரை எல்லாம் சாப்பிடுகிறேன் என திட்டுவினமோ என நினைச்சேன்ன்.. இப்போ நீங்களும் சொல்லிட்டீங்க இனிப் பயமில்லை:)..

   வரும் கிழமை உசிலி செய்யப்போகிறேன்.. இதுவரை தெரியாது.

   Delete
 26. வாழைத்தண்டை நறுக்கும்போது அதிலிருந்து நார் பிரித்து எடுப்பது தனிக்கலை! என் அம்மா விரலில் நாரைச் சுற்றியபடியே நறுக்குவார். அந்த நாரில் விளக்குத் திரி போடுவார்! வாழைத்தண்டை நான் பச்சையாகவே அதாவது சமைக்காமலேயே வாரத்தில் இரண்டு நாள் எப சாறு பிழிந்து கால் உப்பு போட்டு, பெருங்காயம் தூவிச் சாப்பிடுவேன். மற்றபடி இதிலும் தேங்காய்க்கறி, மோர்க்கூட்டு எல்லாம் செய்வதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. ///வாழைத்தண்டை நறுக்கும்போது அதிலிருந்து நார் பிரித்து எடுப்பது தனிக்கலை! என் அம்மா விரலில் நாரைச் சுற்றியபடியே நறுக்குவார்.//

   ஓஓ எனக்கிது தெரியாது, கடையில் விற்பது, துப்பரவாக்கத் தேவையில்லை அப்படியே சமைக்கலாம் என நினைச்சிட்டேன், ஆனா அதில் எந்த வேறுபாடும் தெரியவில்லை, ஏனெனில் வாழைமரம் வெட்டும்போது பார்த்திருக்கிறேன், உள்ளே புறிம்பாக வட்டமாக தெரியும் இத்தண்டு, ஆனா நான் வாங்கியது முழுவதும் தண்டாகவே இருந்துதே. ஓ கேள்விப்பட்டிருக்கிறேன், சாறு உடம்புக்கு நல்லதென... இதுவரை வாழைத்தண்டை தொட்டதே இல்லையே.. இனித்தான் முயற்சிக்கோணும்.. மிக்க நன்றி குறிப்புக்கு.

   Delete
  2. //வாழைத்தண்டை நறுக்கும்போது அதிலிருந்து நார் பிரித்து எடுப்பது தனிக்கலை! என் அம்மா விரலில் நாரைச் சுற்றியபடியே நறுக்குவார்.//

   உங்க அம்மா எங்க அம்மா போலெல்லாம் வாழைத்தண்டு நாரை விரலில் சுற்றியபடியே நறுக்காட்டியும், இந்த அதிரா தன் பின்னூட்ட பதில்களால் ஸ்ரீராமின் நாடி நரம்புகளையெல்லாம் சுற்றிச்சுற்றி நறுக்கியே புடுவா. நல்லா வந்து இங்கு மாட்டிட்டீங்க, ஸ்ரீராம்.

   போகப் போகப் புரியும் ... இந்த (வாழைப்)பூவின் வாடை புரியும். :)))))

   இது 101

   Delete
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோபு அண்ணனுக்கு சினிமாப் பாட்டெல்லாம் வாயில வருதே:).

   Delete
 27. மாங்காய் இஞ்சி பிடிக்குமே எனக்கு.

  தம வாக்குப் போட்டாச்சுங்கோ..

  ReplyDelete
  Replies
  1. //ஸ்ரீராம்.Thursday, April 06, 2017 3:11:00 pm
   மாங்காய் இஞ்சி பிடிக்குமே எனக்கு.//

   ஹா ஹா ஹா ச்ச்சும்மாவே மாங்காய் சாப்பிடப் பிடிக்கும் உப்பில் தொட்டு:).

   ///தம வாக்குப் போட்டாச்சுங்கோ..//
   இப்போதான் நீங்க பொயிண்ட்டுக்கு வந்திருக்கிறீங்க ஹா ஹா ஹா இம்முறை பலபேர் வோட் போடவில்லை:(... மிக்க நன்றி..

   Delete
 28. அதற்குள் எம்புட்டு கொமெண்ட்ஸ்!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இந்த ரெயின் வாழைப்பொத்தி, தண்டு எல்லாம் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு 2 நாளாகுது:) நீங்க நல்லவேளை இப்பவாவது ஓடிவந்து கார்ட் பெட்டியில் ஏறிட்டீங்க:) ஹா ஹா ஹா... கார்ட் பெட்டி என்றதும் என் பழைய போஸ்ட் ஒன்று நினைவுக்கு வந்துது, நீங்க நிட்சயம் படிச்சுப் பாருங்கோ... பழைய போஸ்ட்டுக்கெல்லாம் மொய் வைக்கக் கேட்டிடுவேன் எனப் பயப்பிடாதீங்கோ:).. மொய் வேண்டாம்ம்.. படிச்சால் போதும்.. அனைத்துக் கொமெண்ட்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   http://gokisha.blogspot.com/2011/10/guard.html

   Delete
 29. ஹையோ, ஹையோ, இது என்ன அக்கிரமம்? அராஜகம், வாழைப்பூவையும், தண்டையும் இப்படியாக் கறுப்பாக ஆக்கிச் சாப்பிடுவது. இந்த அழகில் இதுக்குப் புகைப்படம் வேறேயா? நிஜம்மாவே ஓடோடி வந்து உங்களைத் தேம்ஸில் தள்ளிடறேன். :))))))

  ReplyDelete
  Replies
  1. கீசா மேடம்.... இடுகையை நீங்க சரியா படிக்கலை. அதிரா எப்போதும் உண்மையைத்தான் பேசுவாங்க. அவங்க வாயில பொய்யே வராது.

   இந்தச் செய்முறைலாம் எழுதிட்டு, அதுல ஒரு விளக்கமும் கொடுத்திருக்காங்க இல்லையா? அதைப் படிக்கலையா?

   சாப்பிடும்போது டி.வி. பார்க்காதீங்க..சாப்பாடு டேஸ்டே தெரியாது........... ஹா ஹா ஹா

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.