நல்வரவு_()_

****

Saturday, 2 September 2017

கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் மகிழ்ச்சி:)

இது  “நம்மஏரியா” வுக்கான, கதையின் கருவை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை... கதையின் கருக் கண்டிஷனாக மூன்று வசனங்களைக் கெள அண்ணன் கொடுத்திருந்தார்.. அவை இங்கே ஆரம்பத்திலும் நடுவிலும்.. முடிவிலும் பச்சை எழுத்துக்களால் காட்டப்பட்டிருக்கு.. விபரம் அறிய மேலே நம்மஏரியா வைக் கிளிக் பண்ணிப் போய்ப் படிச்சிட்டு வாங்கோ..  வெரி சோரி நான் வரமாட்டேன்ன்:).. நான் அவரோடு கோபமாக்கும்:)..பஸ் அந்த நிறுத்தத்திலிருந்து, நடத்துனர் விசில் சத்தம் கேட்டதும் கிளம்பியது. அவர்கள் அதில் இருந்தார்கள்....

பஸ்  யாழ் நகரை விட்டு வேகமெடுத்ததும்.. விண்டோ சீட்டில் இருந்த  “ஓவியா” வின் கண்களில் அருவி பாய்ந்தது.... சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல பஸ்ஸில் சிட்டுவேஷன் சோங்.. “அண்ணே போய் வரவா?.. அழகே போய் வரவா...?”..  ஒலித்து, ஓவியாவின் விம்மலை இன்னும் அதிகப்படுத்தியது.. சத்தமின்றிக் குலுங்கி அழத் தொடங்கினாள்..

அனைத்துச் சூழ் நிலையையும் நன்கு புரிந்திருக்கும் அருகிலிருந்த “ஆரவ்”.., அழுதால்தான் மனம் இலேசாகும் அதனால் அழட்டும் என விட்டு, மெளனமாக, மெதுவாக தோளில்:) தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான்...

பஸ் வேகமாக முன்னோக்கிப் பறந்து கொண்டிருந்தது.. ஓவியாவின் மனமோ பின் நோக்கிப் பாய்ந்தது..

பிறந்ததிலிருந்தே ஊரை விட்டு வெளியே போனதில்லை, அம்மாவைத் தம்பியைப் பிரிந்ததில்லை. பஸ் ஸ்ராண்டிலே.. சேலைத்தலைப்பால் வாயை மூடி அழுத அம்மாவின் முகமும்.. சந்தோசமாகப் போய் வா அக்கா..., அத்தான் உன்னை நன்கு பார்த்துக் கொள்வார் எனக் கட்டி அணைத்து ஆறுதல் சொல்லி, வழியனுப்பிய தம்பியின் முகமுமே கண்ணுக்குள் நின்றன.. அருகில் இருந்த ஆரவ்  ஐக்கூட அவளுக்குத் தெரியவில்லை.

ஓவியா பிறந்து மூன்று ஆண்டுகளில் தம்பி பிறந்தான், தம்பிக்கு ஒரு வயதானபோது, இந்திய யாத்திரை எனக்கூறிச் சென்ற அப்பா, அப்படியே காணாமல் போய் விட்டார்.. அன்றிலிருந்து, அப்பா, என்றாவது வந்து விடுவார் என தெருவைப்பார்ப்பதும் கோயிலுக்குப் போவதுமாக வாழும் அம்மா.. . நமக்காக இல்லாவிட்டாலும், அம்மாவுக்காக எப்படியாவது அப்பாவைத் தேடித்தந்து விடு ஆண்டவா என ஓவியா வேண்டாத தெய்வமில்லை.. கடவுள் பக்தி அதிகம், விரதங்கள் பிடிப்பாள்.. ஆனால் வேண்டுவது என்னவோ..  “என் அப்பாவை என் கண்ணில் காணும் நாள் தான் எனக்கு பொன்னாள்.. அவரைக் கண்ணிலே காட்டு” என்பது மட்டும்தான்.

திருமணமாகி இன்றோடு 6 நாட்கள் ஆகிவிட்டது.. பிறந்ததிலிருந்து திருமணம் வரை அம்மாவுடனேயே ஒட்டி உறங்கிய ஓவியா.. இப்போ திடீரெனத் திருமணமாகி.. ஊரை விட்டு... நாட்டை விட்டு.. சென்னைக்குச் சென்று புகுந்த வீட்டினரோடு வாழ்வது என்பது எப்படி இருக்கும் எனும் திகிலோடு பயணித்துக் கொண்டிருந்தாள்.

பஸ் வவுனியா ரெயின் ஸ்டேசனை வந்தடைந்தது..

இறங்கி ஒரு ரீ குடித்து முகம் கழுவிக்கொண்டு.. ஸ்டேஷனில் இருந்தார்கள்..
அப்போ திருகோணமலை ரயில்  வந்து அந்த ஸ்டேஷனில் நின்றது. அவர்கள் காத்திருந்தார்கள் கொழும்பு  ரெயினுக்காக:).. 
[ஹா ஹா ஹா எப்பூடி?.. ஜொயின் ஆக்கிட்டேன் வசனத்தை].

முதன் முதலில் நீண்ட தூரப்பயணம்.. முதன்முதலில் ஊரை விட்டு வெளியே வருகிறாள்.. எல்லாமே புதுமையாக இருந்தது.. நெஞ்சின் பாரம் குறைந்து மனம் கொஞ்சம் இலேசாகியது... ஆரவ் உடனான காதல் நினைவுகள் வந்து அலைமோதின...

யாழ் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவில் இருந்து வந்திருந்தான் ஆரவ். ஓவியாவும் அதே ஆண்டில் சேர்ந்திருந்தாள்.. ஓவியாவின் அழகும், குழந்தைத்தனமும் எல்லோரோடும் நன்கு சிரித்துப் பேசும் பேச்சும்... முதல் பார்வையிலேயே முழுவதுமாகப் பிடித்திருந்தது ஆரவ் க்கு.

ஆரவ் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது ஓவியா தயங்கினாள்.. வேறு நாடு.. ஏமாற்றி விட்டுப் போய் விடுவானோ எனும் பயத்திலேயே, பிடித்திருந்தும் எதுவும் சொல்லாமல் மெளனமாகவே, ஆனால் நல்ல நண்பர்களாக காலத்தைக் கடத்தி வந்தாள்.. படிப்பு முடியும் தறுவாயில், ஆரவ், தன் பெற்றோருடன் வந்து, பெண் கேட்டு, திருமணம் நிறைவடைந்தது.. ஓவியா தன் தந்தை பற்றியே எப்பவும் ஆரவ் இடம் பேசுவாள்...  “எப்படியாவது தன் தந்தையை இந்தியாவில் தேடிக் கண்டு பிடித்து தந்தால்ல்.. நீ எனக்கு ஒரு கடவுளாகத் தெரிவாய்” என அடிக்கடி ஆரவ் இடம் சொல்லுவாள்.

புகையிரதம் இருவரையும் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பறந்தது.. நேரே கட்டுநாயக்கா விமான நிலையம் போகிறார்கள்.. இரவு 6 மணிக்கு சென்னை பிளைட்.

சென்னை எப்படி இருக்கும்.. மாமா மாமி எப்படி இருப்பார்கள்.. தன்னை நல்லபடி பார்த்துக் கொள்வார்களா.. என மனம் பயந்து கொண்டிருந்தது. ஆனா என்ன ஆனாலும் ஆரவ் மிக நல்லவன்.... அதுக்குக் காரணம் பெற்றோரின் வளர்ப்பும்தானே.. அதனால ஆரவ் வைப் பார்க்க தெரிகிறது அவனது பெற்றோரும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என எண்ணினாள். என்ன இருந்தாலும் அம்மாவோடு இருந்த சுகந்திரம் இனிக் கிடைக்குமா?..

அம்மாவின் மடிமேல் காலைப்போட்டு விட்டுக் கண்ணை மூடிப் படுத்திருப்பதும் , அம்மா காலை அமுக்கிக்கொண்டே.. அப்பாவின் கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பதும்.. இடையே எழுந்து போய் ரீ ஊத்தித் தருவதும்... இப்படியான காலங்கள் இனித் திரும்ப வருமா?... எதுவும் நம்மோடிருக்கும்வரை அதன் அருமை நமக்குத் தெரிவதுமில்லை, அதைப்பற்றி நாம் சிந்திப்பதுமில்லை, ஆனால் பிரிவென்ற ஒன்று வரும்போதுதான்.. அனைத்தையும் நமக்கு உணர்த்தி விடுகிறது... உணர்வதற்காகத்தான் பிரிவு வருகிறதோ...

தம்பியோடு எப்பவும் சண்டைப்பிடித்ததில்லை, ஆனா தம்பிக்காக எதையும் செய்ததில்லை.. இப்போ நினைக்க கஸ்டமாக இருக்கு.. படிப்பு படிப்பு எனவே இருந்து விட்டேனே.. தம்பியுடன் இன்னும் அதிகம் பொழுதைக் கழித்திருக்கலாமோ?... என் கால் மேலயே படுத்துறங்கும் செல்ல பூஸ், இன்று என்னைத் தேடிக்கொண்டிருக்குமோ?..

நான் சாப்பிடும்வரை, தான் சாப்பிடாமல் வெயிட் பண்ணும் பப்பி.. இன்று என்ன செய்வானோ? சாப்பிடுவானோ இல்லை சோகமாக இருப்பானோ?... என் தோழி போனமாதம்தான் என் பிறந்தநாளுக்காகக் கொடுத்த “மனோகரஞ்சித பூக்கன்று”.. அதை நட்டு தண்ணி ஊற்றி வந்தேன்.. இப்போ தம்பியிடம் சொல்லி விட்டு வந்தேன், “பத்திரமாக பார்த்துக் கொள், நான் அது பூக்கும்போது, முதல் பூ பிடுங்க வருவேன்” என... அப்படிச் சொல்லியிருக்கப்படாதோ? என்னால் வரமுடியுமா? தம்பிக்கு எதிர்பார்பைக் கொடுத்து விட்டேனோ?..

சே..சே.. என்ன மனித வாழ்க்கை இது? இனி எப்போ காண்பேன் எல்லோரையும்... இப்படி எல்லாம் ஒரு திருமணம் தேவைதானா? கொஞ்சம் தாமதமாக்கியிருக்கலாமோ திருமணத்தை?.. ஆனா 5 வருடங்கள் ஆரவ் உடன் சேர்ந்து நண்பர்களாக கடந்து விட்டது, இனி ஆரவ் இல்லாமல் ஊரில் இருப்பதென்பதும் சாத்தியமில்லை.. விதி என் வாழ்க்கையில் அடிக்கடி விளையாடுகிறதே...
இப்படியே ஓவியாவின் மனதில் பல எண்ணங்கள் வந்து குழப்பிக் கொண்டிருந்தன.. அப்போது ஆரவ் க்கு ரெலிஃபோன் கோல்கள் மாறி மாறி வரத்தொடங்கின.. ஆரவ் எழுந்து சென்று பேசுவதும் பின்னர் வந்து அமர்வதுமாக இருந்தான், ஏதோ கலவரம்போலவும் ஆனா முகம் மலர்ச்சியாகவும் இருந்தது.. ஆரவ் இன் அப்பா பேசுகிறார் என தானாகவே சொன்னான். என்ன பேசினார் எனச் சொல்லவில்லை.

ஓவியாவில் ஒரு பழக்கம், யாரிடமும் எதையும் கேட்பதில்லை, தனக்கு சொல்ல வேண்டுமெனில் சொல்வார்கள்தானே என எதையும் எண்ணிக் கொள்வாள். ஆரவ் விஷயத்திலும் அப்படித்தான், அவனை முழுவதும் நம்பினாள்... தனக்கு அவன் எப்பவும் எதையும் மறைத்ததில்லை, அதனால அவளுக்கு சொல்ல வேண்டியதை நிட்சயம் சொல்லுவான் என்பதால், அவனிடம் எதையும் துருவிக் கேட்பதில்லை..

திருமணம் முடிந்தபின், ஆரவ் இன் கைப்பிடித்து அவனிடம் ஓவியா கேட்ட முதல் கேள்வி “நீ எனக்குக் கணவனாகி விட்டாய், ஆனா இனியும் எனக்கு இத்தனை காலம் இருந்ததைப்போல நல்ல நண்பனாக இருப்பாயா?” என்பதே...
“இது என்ன கேள்வி, எனக்கு எப்பவும் நீ தான் பெஸ்ட் ஃபிரெண்ட்”  என ஆரவ் சொன்னதைக் கேட்டு பூரித்திருந்தாள் ஓவியா...

கற்பனைகளோடயே பிளேனில் ஏறி அமர்ந்தாச்சு... புதுப் பயணம் புதுப்புது வாகனங்கள் என ஒரு நாளிலேயே அனைத்துப் புதுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஓவியாவுக்கு, கற்பனைகளைத் தவிர எதையும் ரசிக்க முடியவில்லை.. இருப்பினும் எதுக்கு அப்படி நிறையப் ஃபோன் கோல்கள் வந்தன.. என ஒரு மூலையில் மனம் பதைத்துக் கொண்டிருந்தது, ஆரவ் வீட்டில் ஏதும் பிரச்சனையாக இருக்குமோ என பல கோணங்களில் மனம் எண்ணத் தொடங்கிய வேளை...

விமானம் தரை இறங்கப் போகிறது, பெல்ட்களை அணிந்து கொண்டிருங்கள் என ஃபைலட் எனவுன்ஸ் பண்ணினார்... பெல்ட்டை பூட்டிய ஆரவ்...  ஓவியாவின் கைகளை இறுகப் பற்றினான்... 

 “ஓவியா நான் எப்பவும் நினைத்திருந்தேன், திருமணப் பரிசாக, என் வீட்டுக்குள் உன்னை அழைத்துப் போகமுன்,  உனக்கு ஏதும் ஆச்சரியமான, ஒப்பற்ற, திருமணப் பரிசு தர வேண்டும் என, அதற்காக பல முயற்சிகளில் இறங்கினேன்... நான் எண்ணியது நிறைவேறாமல் போய் விட்டதே எனும் கவலையோடு பஸ்ஸில் ஏறினேன்... 

ஆனா ரெயினில் ஏறியபோது, நான் நினைத்தது நிறைவேறி விட்டது, அதனால்தான் எனக்கு ஃபோன் கோல்கள் வந்தன.. உணர்ச்சி வசப்பட்டு விடாதே, மனதை நிதானப்படுத்து... உன் அப்பாவைக் கண்டு பிடித்து விட்டோம், சென்னையில் ஒரு அம்மன் கோயிலில் தொண்டராக இருந்தாராம்.. இப்போ அவரும் வந்திருக்கிறார் எயாபோர்ட்டிற்கு நம்மை வரவேற்க, உன் தம்பியையும் அம்மாவையும் நாளை சென்னைக்கு வரும்படி, அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டேன்.. இனி அனைவரோடும் சென்னையில் நம் றிஷப்சனை நடத்தலாம்”...

எனச் சொன்னதைக் கேட்டு ஓவியா சிலையாகி இருந்தாள்.. கண்கள் இமைக்க மறுத்தன.. இதயம் தன் துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டது...

விமானம் ஓடு பாதையில் வேகமாக ஓடி நின்றது. அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! 
முடிந்தது.. நன்றி_()_
[[[ஆனா இங்கு ஓவியாவின், தந்தையைப் பற்றிக் கூறிக் கதையைப் பெருப்பிக்க விரும்பவில்லை, ஏதோ ஒரு காரணத்தால் ஊரை விட்டு, சென்னைக் கோயிலுக்கே தன்னை அர்ப்பணிந்திருந்தார்.. அவர் ஒரு நல்ல மனிதர்தான் என எடுத்துக் கொள்ளலாம்:)]]].

888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
ஊசிக்குறிப்பு:
 “சிலை உயிர் பெற்றதென அறிந்திருக்கிறேன் - ஆனால்
இங்கு வந்த நானோ சிலையாகிப் போனேன்” 
இவ்வரிய வசனத்தை உங்களுக்காக, பூஸ் ரேடியோவில் செவிவழி கேட்டு, இங்கு வெற்றிகரமாகக் காவி வந்து பதித்திருப்பவர்.. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமான பேரறிவுமிக்க.. புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்.
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

தமிழ் மணத்தில் வாக்களித்து அதிராவுக்கு மகுடம் சூட்டுவதற்காக கியூவரிசையில் நிற்கும் உங்களுக்காக.. 
உங்களை ஏமாத்துவேனோ?:)  இதோ வோட் லிங்..

இங்கு ஒரு சிறிய ஊசி இணைப்பு:
எனக்கு நீங்கள்.. தமிழ் மணத்தில் முதலாம் இடம் பெற்றுத் தர வேண்டாம்.. எனக்கு அப்படி ஓவர் ஆசை இல்லை:).. மூன்றாம் இடமும் வேண்டாம்.. அது கில்லர்ஜி வைத்துக் கொள்ள்வாருக்கும்:).. ஆனா இடையே இருக்கும் அந்த “ரெண்டாம்” இடத்தைப் புடிச்சுத்தர முடியுமோ?:)... ஹையோ அப்பூடி என்ன தப்பாக் கேட்டிட்டேன்:).. எதுக்கு ஸ்ரீராம் இப்பூடி முறைக்கிறார்ர்ர்ர்:)
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

 ஆவ்வ்வ்வ்வ் கிடைச்சிட்டுதூஊஊஊஊஊஊ அதுவும் பிங் கலரில கிடைச்சிருக்கே.. நேக்குத் தெரியுது.. உங்களுக்குத் தெரியுதோ?:) கலரைக் கேட்டேன்:))
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

116 comments :

 1. ஓவியா - ஆரவ் வைத்து கதையா? நடத்துங்க.. ஒரு மாறுதலுக்கு ஆரவ் ஓவியாவைக் காதலிக்கிறானா?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... இம்முறை முதலாவதாக வந்திருக்கும் உங்களுக்கு எதையாவது தரோணும் என மனம் துடிக்குதே... நில்லுங்கோ அஞ்சு வீட்டுக் கார்டினில் ஓடிப்போய் எடுத்து வாறேன்ன்:)...

   பெயரைப் பார்த்தவுடன் பொக்பொஸ் இல் புகுந்து விட்டீங்களே.. ஹையோ இது அஞ்சுவின் பின் வீட்டு ஓவியாவும் எங்கட முன் வீட்டு ஆரவ் உம்:)...

   ஹா ஹா ஹா உண்மையில் எங்கள் புளொக்கில் சீதைக் கதை எழுதிய ஐயப்பன் கிருஸ்ணன் பெயரைத்தான் போட நினைச்சேன்ன்:).. ஆனா கோபிச்சாலும் எதுக்கு வீண் வம்பு என ஆரவ் ஐப் போட்டேன்:).

   Delete
 2. /எதுவும் நம்மோடிருக்கும்வரை அதன் அருமை நமக்குத் தெரிவதுமில்லை, அதைப்பற்றி நாம் சிந்திப்பதுமில்லை, ஆனால் பிரிவென்ற ஒன்று வரும்போதுதான்.. அனைத்தையும் நமக்கு உணர்த்தி விடுகிறது... உணர்வதற்காகத்தான் பிரிவு வருகிறதோ...//

  அருமையான வரிகள். நானும் அடிக்கடி நினைப்பதுண்டு.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், நம்மோடிருக்கும்போது காலைச் சுற்றிவரும் பூஸ் குட்டியைப் பெரிதாக எண்ண மாட்டோம்ம்.. ஆனா எங்காவது போனபின் அதைப் பயங்கரமாக மிஸ் பண்ணுவோம்.

   ஆனாலும் இன்னொறு... நிஜமாகவே நம்மோடு உண்மையான அன்பு பாசம்.. நெஞ்சாரக் காட்டும் நண்பர்கள், உறவுகளை மட்டுமே மனம் பிரிவின்போது மிஸ் பண்ணும்.. நடித்துக்கொண்டிருந்தோர் வேஷம் போட்டோரைப் பிரிய நேர்ந்தால் மனம் எதையும் மிஸ் பண்ணாது.. பிரிவின்போதுதான் மனதுக்கு தெரியும் நல்லதும் கெட்டதும் ஹா ஹா ஹா.

   Delete
 3. //உன் அப்பாவைக் கண்டு பிடித்து விட்டோம், சென்னையில் ஒரு அம்மன் கோயிலில் தொண்டராக இருந்தாராம்.. //

  அவர் ஓவியாவின் அப்பாதானா என்கிற கன்பர்மேஷன் எல்லாம் தேவை இல்லையா?!!!!

  ReplyDelete
  Replies
  1. அது ஈஸி ஸ்ரீராம் :) அவர் கிட்ட குடும்ப பாட்டை பாடச்சொல்லி கேட்டா அவர் டான்ஸ் ஆட்டிக்கிட்டே கொக்கு நெட்டை கொக்கு பாட்டை பாடுவார் அப்புறமென்னா ஈஸியா ஐடென்டிபை CONFIRM செஞ்சிருவாங்க

   Delete
  2. ///அவர் ஓவியாவின் அப்பாதானா என்கிற கன்பர்மேஷன் எல்லாம் தேவை இல்லையா?!!!!///

   இதுபற்றிச் சொல்ல வெளிக்கிட்டால் கதையை அதிகம் பெரிதாக்கி அலட்டுவதுபோலாகிடும் என்பதாலேயே.. இப்படி ஒரு வசனம் போட்டிருக்கிறேனே...
   ///என் வீட்டுக்குள் உன்னை அழைத்துப் போகமுன், உனக்கு ஏதும் ஆச்சரியமான, ஒப்பற்ற, திருமணப் பரிசு தர வேண்டும் என, அதற்காக பல முயற்சிகளில் இறங்கினேன்..///

   இதில் பல முயற்சிகளில் இறங்கினேன்.. என்பதுக்குள் அனைத்தும் அடங்கும்.. அதாவது ஓவியா தன் அப்பா பற்றி அடிக்கடி ஆரவ் இடம் புலம்புவதால்.. ஓவியாவுக்கு தெரியாமல் அனைத்து விபரங்களும் திரட்டப்பட்டு கடந்த பல வருடங்களாக தேடப்பட்டு வந்தது எனவும் எடுத்துக் கொள்ளலாம்ம்ம்....:)

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊஊ ஹொட்டா ஒரு மங்கோ ஊஸ் பிளீஸ்ஸ்ஸ்.. :).

   Delete
  3. ///AngelinSaturday, September 02, 2017 8:28:00 am
   அது ஈஸி ஸ்ரீராம் ://

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நல்லாத்தான் பிக்பொஸ் பாக்கிறீங்க:).

   Delete
  4. ஏஞ்சல்.... படித்ததும் கண்ணில் நீர் வரச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துச் சிரித்து இருமல் வந்து......

   ஸூப்பர்.

   Delete
  5. பை தி பை அந்த கொக்கு நெட்டை வீடியோ அவ்வப்போது பார்ப்பேன். ஸ்ப்ரே அடிச்சுடுவேன் வீடியோவும்!

   Delete
  6. ///பை தி பை அந்த கொக்கு நெட்டை வீடியோ அவ்வப்போது பார்ப்பேன். ஸ்ப்ரே அடிச்சுடுவேன் வீடியோவும்!///
   ஹா ஹா ஹா.. என்ன இப்போதெல்லாம் வரவர ஸ்ரீராம் ஒன்றிரண்டு கொமெண்ட்ஸ் உடன் ஓடிவிடுகிறாரே... தன்புளொக்கிலும் பலநேரம் பதில் கொடுக்கிறாரில்லையே என நினைச்சேன்ன்ன்ன்:)... இப்போதானே தெரியுது.. நேரம் எல்லாம் எங்கின செலவிடப்படுகுதென:).. ஹையோ எனக்கெதுக்கு வீண் வம்ஸ்ஸ்ஸ்:)...

   அஞ்சூஊஊஊஊஊஊ உங்களுக்கு நேற்றுக் கொடுத்த அந்த இருமல் ரொனிக் ல கொஞ்சம் கொடுங்கோ ஸ்ரீராமுக்கு:)..

   Delete
  7. ஹாஹாஆ :) பார்த்திங்களா அதிரா உண்மையை வரவழைச்சிட்டேன் :))

   Delete
  8. லண்டனுக்கும் ஸ்காட்லாந்துக்கும் இன்னும் புரியலை. இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் பாகுபலி-2 சொதப்பலுக்குப் பிறகு நமக்குத் தெரிந்த ஒருவர் "ஓவியா ஆர்மிக்கு" அப்ளை பண்ணி நுழைவுத்தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். (நமக்குத் தெரியாமல் ஏஞ்சலின் அந்த ஆர்மியில் சேர்ந்தாச்சு. அதிரா அநேகமா நுழைவுத்தேர்வுல ஃபெயில்தான்)

   Delete
  9. ///AngelinSaturday, September 02, 2017 10:30:00 am
   ஹாஹாஆ :) பார்த்திங்களா அதிரா உண்மையை வரவழைச்சிட்டேன் :))///

   ஹா ஹா ஹா போட்டு வாங்குவதில்.. நம்மை யாரும் மிஞ்ச முடியாதூஉ.. ஹையோ இந்த உண்மை நமக்குள் இருக்கட்டும் அஞ்சு:).. படிச்சதும் கிழிச்சுடுங்கோ:).

   Delete
  10. /// (நமக்குத் தெரியாமல் ஏஞ்சலின் அந்த ஆர்மியில் சேர்ந்தாச்சு///
   ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. இதை நான் படுபயங்கரமாக ஆமோதிகிறேன்ன்:) ஏனெனில் எனக்கும் இதில் சந்தேகம் உண்டு:).. எப்ப பார்த்தாலும் ஆள்.. “கம்பிமேலயே”:) நிக்கிறா:).. ஹா..ஹா..ஹா..

   //அதிரா அநேகமா நுழைவுத்தேர்வுல ஃபெயில்தான்)///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..... இது தெரிஞ்சுதான் நான் கிட்டவே போகவில்லை..:) என்னில் ஒரு பழக்கம் இருக்கும்... கிடைக்கும் எனத் தெரிவதைத்தான் கேட்பேன்:).... கிடைக்காதெனத் தெரிந்து கொண்டால்.. கேட்கப்போக மாட்டேன்ன்ன்.. :)..

   அப்பூடித்தான் இதுவும் தூர நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி.. ஆனா சில நேரங்களில் மிக ஆர்வமாகவும் பல நேரங்களில் ப்டு போறிங்காகவும் இருக்கு:)

   Delete
 4. இந்தியா, சென்னை எல்லாம் ஏன் சிவப்பு எழுத்தில் இருக்கிறது? ஒரு நிமிடம் ஆரவ் அப்பாவும் ஓவியா அப்பாவும் ஒன்றாயிருந்து விடுவார்களோ என்று பயந்தது நிஜம்! இரண்டாவது வாக்காக என் வாக்கை அளித்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ஸ்ரீராம் கதையை வாசித்து வந்த போது கண்டுபிடித்ததும் அப்படித் தோன்றியது ஒரு செகன்ட்..ஆனால் ஓவியாவை விட அட்லீஸ்ட் 4 வயது குறைவாக இல்லையா இருக்கணும் தம்பி போன்று அல்லது அவளது தம்பியையும் விடச் சிறியவனாக..அதுவும் கல்லூரியில் பார்த்துப் பழக்கம் என்று. வருவது ஸ்ரமமாச்சே!!!.இப்போது 4, 5 வயதுகுறைவான பையன்களைப் பெண்கள் மணப்பது எல்லாம் நடக்கிறதுதான் (டெண்டுல்க அஞ்சலி). ஆனால்..ஹையோ.அதிராவின்.கதையே மாறிவிடுமே!!! அப்புறம் பி கு வில் ஓவியாவின் அப்பா நல்லவர் என்றும் சொல்லியிருந்ததால் சரி அப்படி இருக்கா சான்ஸ் இல்லை...

   கீதா

   Delete
  2. ///ஸ்ரீராம்.Saturday, September 02, 2017 2:11:00 am
   இந்தியா, சென்னை எல்லாம் ஏன் சிவப்பு எழுத்தில் இருக்கிறது?//

   ஹா ஹா ஹா கரெக்ட்டாக் கவனிச்சிருக்கிறீங்க:).. அது ஸ்ரீராம் கதைபடிப்போருக்கு ஒரு குளூ கொடுப்பதற்காகவே அப்படிப் போட்டேன்ன்.. அதாவது அப்பா காணாமல் போன இடமும்.. இப்போ மகள் திருமணமாகிப் போகும் இடமும் ஒன்றாக இருக்கே என்பது கண்ணுக்கு துலக்கமாகத் தெரியும்போதுதானே.. படிக்கும்போதே பல கோணத்தில் யோசிக்கத் தோணும்...

   அதனாலதான்.. ஆரவ் இன் அப்பாவாக இருந்திடுவாரோ என யோசிச்சீங்க ஹா ஹா ஹா... ஆனா அப்படி இருக்க சான்ஸ் இல்லையே... ஏனெனில் கதையில் சொல்லிவிட்டேனே.. ஆரவ் தன் பெற்றோரை அழைத்து வந்து பெண் கேட்டார்.. என.

   வோட் போட்டமைக்கும் உடன் வருகைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

   கதையை எழுதி முடித்திட வேணும் எனக் கங்கணம் கட்டி விழித்திருந்து முடிச்சேன்ன்:)

   Delete
  3. ஹா ஹா ஹா நல்லாத்தான் கதைக்குள் நுழைந்து போராடியிருக்கிறீங்க கீதா, நல்ல சிந்தனை....

   இப்படியும் ஒரு கோணத்தில் சிந்திக்கலாமே.. அதாவது ஆரவ் பிறந்தபின் தந்தை இறந்துபோக.. ஓவியாவின் அப்பா .. ஆரவ் இன் அம்மாவை முடித்திருக்க வாய்ப்பிருக்கெல்லோ:) ஹா ஹா ஹா.. இப்படி எந்த சிந்தனையும் வந்திட வேண்டாம் என நினைச்சே.. பெற்றோரை ஆரவ் யாழ்ப்பாணம் அழைத்து வந்து பெண்கேட்டார் எனப் போட்டேன்ன்ன்ன்.. பூஸோ கொக்கோ... மீ ரொம்ப உஷாராக்கும்:) ஹா ஹா ஹா:).

   Delete
 5. ஊசி குறிப்பு படித்துவிட்டேன் வோட்டும் போட்டுவிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ... ஹா ஹா ஹா.. பெயர்களைப் பார்த்தே நீங்க கோபமாக இருக்கிறீங்க என்பதிலிருந்தே தெரியுது நீங்க பிக்பொஸ் பார்க்கிறீங்க என:) இல்லை எனில் வெறுப்பு வந்திருக்காதே:).. ஹா ஹா ஹா ஹையோ அஞ்சூஊஊஊ பிளீஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈஈ:)..

   ஹா ஹா ஹா நிஜப்பெயர்களோடு ஒப்பிடாமல்... இது கதைதானே.. கற்பனைப்பெயராக எடுத்து.. ஸ்போட்டிவ் ஆக இருப்போம்.

   மிக்க நன்றி ட்றுத்... இப்பொதெல்லாம் மறக்காமல் எல்லோருக்கும் வோட் போடுறீங்க... யாருக்கும் வோட் போடமாட்டேன் என இருந்த உங்களை.. அடம்பிடிச்சு:) வோட் பாட வைத்த பெருமை என்னையே சேரும் என நினைக்கிறேன்.

   Delete
 6. நல்லாத்தான் ஜோய்ண்ட் பண்ணி இருக்கிறீர்கள் வசனத்தை.

  பிக்பாஸ் நல்லாத்தான் உலகம் முழுவதும் ஆட்டி வைக்கிறார்.

  சென்னை முகவரி கொடுத்திருந்தால் ஓவியாவைப் பார்த்து ஆறுதல் ஜொள்ளி இருப்பேனே...

  தமிழ் மணத்தில் மூன்றாம் இடம் வேண்டிமானால் எடுத்துக் கொள்ளவும் எனக்கு ஆட்சேபனை இல்லை..

  கதை ஆ’’சிரி’’யருக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ///KILLERGEE DevakottaiSaturday, September 02, 2017 4:21:00 am
   நல்லாத்தான் ஜோய்ண்ட் பண்ணி இருக்கிறீர்கள் வசனத்தை.///

   வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.... ஹா ஹா ஹா கவனிச்சிருக்கிறீங்க.. அந்த வசனம் கெள அண்ணன்.. மாற்றிக் கொடுத்திட்டார்ர்.. அதாவது ரெயின் வந்தபின்பும் அவர்கள் காத்திருந்தார்கள் என்பதுபோல எல்லோ வருது.. அதனால்தான் இப்படி ஜொயின் பண்ண வேண்டியதாப்போச்ச்ச்ச்ச்:).

   //பிக்பாஸ் நல்லாத்தான் உலகம் முழுவதும் ஆட்டி வைக்கிறார்.//

   ஹா ஹா ஹா ஆங்கில பிக்பிறதரையே விடுவதில்லை அப்போ தமிழில் வரும்போது பார்க்கத்தானே தோணும்.

   //சென்னை முகவரி கொடுத்திருந்தால் ஓவியாவைப் பார்த்து ஆறுதல் ஜொள்ளி இருப்பேனே...///
   ஹா ஹா ஹா அதெல்லாம் ஒண்ணும் வாணாம்ம்:)..

   //தமிழ் மணத்தில் மூன்றாம் இடம் வேண்டிமானால் எடுத்துக் கொள்ளவும் எனக்கு ஆட்சேபனை இல்லை..//
   இல்லை எனக்கு 2ம் இடம்தான் வேணும்.. ஹா ஹா ஹா ஹையோ.. நான் அதையெல்லாம் கவனிப்பதில்லை.. அது தக்கவைப்பதும் என்னால முடியாத ஒன்று.. மகுடம் மட்டுமே இப்போது மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒர்ன்றாக இருக்கு:)..

   ///கதை ஆ’’சிரி’’யருக்கு வாழ்த்துகள்//
   ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
  2. கில்லர்ஜி இன்னொன்று.. பகவான் ஜி யைக் கூட்டி வாங்கோ... அவர் தன்பக்கம் போஸ்ட் போட இப்போ மனம் சரியில்லை எனினும் நம்மோடிருக்கச் சொல்லுங்கோ.. பின்னர் மனம் ஆறியதும் அவர் தொடரலாம்... “கம்பி” வழியே இத்தகவலி அனுப்ப்டுங்கோ பிளீஸ்ஸ்:)

   Delete
 7. ஆஹா கதை சூப்பரா இருக்கு! // இப்படியான காலங்கள் இனித் திரும்ப வருமா?... எதுவும் நம்மோடிருக்கும்வரை அதன் அருமை நமக்குத் தெரிவதுமில்லை, அதைப்பற்றி நாம் சிந்திப்பதுமில்லை, ஆனால் பிரிவென்ற ஒன்று வரும்போதுதான்.. அனைத்தையும் நமக்கு உணர்த்தி விடுகிறது... உணர்வதற்காகத்தான் பிரிவு வருகிறதோ...// GOOD!

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆங்ங்ங்ங் வாங்கோ கெள அண்ணன் வாங்கோஓஒ.. கொஞ்சம் இருங்கோ வாறேன்ன்ன்ன்ன்...:)


   ஆவ்வ்வ்வ்வ்வ்வ் மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்.. இப்போ கெள அண்ணன் நேசம் போட்டிட்டார்ர்ர்ர்.. கா இல்லை:) ஹா ஹா ஹா:).

   மிக்க நன்றி கெள அண்ணன் வரவுக்கும் வோட் போட்டமைக்கும்... ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் நல்ல ஒரு ஒற்றுமைதான்:).. கொமெண்ட் இற்குச் சொன்னேன் ஹா ஹா ஹா.

   Delete
 8. பெண்கள் ரொம்ப difficult ஆனவர்கள் என்று தெரியும். ஆனால் காரணமில்லாமல் கோபம் ஏனோ?

  கதை படித்தேன். பிக்பாஸ் பெயர்களினால் கதையின் அட்ராக்‌ஷன் குறைந்துவிட்டது. ஆரவ் நல்லவன்போல் பிக்பாஸில் இல்லை. உங்கள் எதிர்பார்ப்புக்காக அவனை நல்லவன்போல் கொடுத்திருக்கிறீர்கள். பிறகு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் :) நான் ஓவியா ஆர்மிக்கு இந்த கதை லிங்கை ட்விட்டர்லயும் தரப்போறேன்

   Delete
  2. ///நெல்லைத் தமிழன்Saturday, September 02, 2017 4:38:00 am
   பெண்கள் ரொம்ப difficult ஆனவர்கள் என்று தெரியும். ஆனால் காரணமில்லாமல் கோபம் ஏனோ? ///

   வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... இதில் என்ன சொல்றீங்க எனப் புரியவில்லையே? கோபமா? கதையில் வருகிறதோ?.

   Delete
  3. ////கதை படித்தேன். பிக்பாஸ் பெயர்களினால் கதையின் அட்ராக்‌ஷன் குறைந்துவிட்டது. ஆரவ் நல்லவன்போல் பிக்பாஸில் இல்லை. உங்கள் எதிர்பார்ப்புக்காக அவனை நல்லவன்போல் கொடுத்திருக்கிறீர்கள். பிறகு வருகிறேன்.///

   ஹா ஹா ஹா இல்லை நெ.தமிழன்.. பிக்பொஸ் ஐ இதனோடு ஒப்பிட வேண்டாம்ம்ம்... சும்மா ஒரு ஜோடிக்கு அப்பெயர்களை இட்டேன் அவ்ளோதான்... இப்போ நம் பக்கத்து வீட்டில் ஆரவ் என ஒரு தம்பி இருந்தால் .. பிக்பொஸ் உடன் ஒப்பிட்டு வெறுப்போமா? இல்லைத்தானே...

   உண்மையில் ஐயப்பன் பெயரைத்தான் போட நினைச்சேன்ன்:) அவர்தான் ஓவியா வேணும் எனக் கேட்டார் ஹா ஹா ஹா.

   இன்னொன்று, என்னைப்பொறுத்து உலகில் யாருமே நல்லவர்களும் இல்லை.. கெட்டவர்களுமில்லை.. எல்லோரிடமும் எல்லாம் இருக்கு.. சிலரிடம் சிலது கொஞ்சம் கூட இருக்கு... பரந்த உலகில் கமெரா இல்லாமல் இருப்பதனால்.. நம்மை முழுவதுமாக அடுத்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை.. அதனால்தான் கடவுள் பார்க்கிறார்.. கடவுளுக்குப் பயந்து வாளோனும் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்...

   இப்போ அந்த உலகம் குட்டியாக்கப்பட்டு.. ஒரு குறுவட்டம் எனும் பிக்பொஸ் ஆக்கி... கடவுள் மட்டுமே பார்க்கும் கமெராவை.. நாம் எல்லோரும் பார்ப்பதுபோல பண்ணியிருப்பதனால் உண்மை தெரிகிறது..

   இந்த உலகத்துக்கு பல கமெராக்கள் பூட்டப்பட்டால்ல்.. இதைவிடக் கொடுமையானோர் எத்தனை பேர் இருப்பார்கள் இவ் உலகில்...

   அதனால என்ன பண்ணுவது பிக்பொஸ் உம் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியே மற்றும்படி எதையும் சீரியசாக்கி.. கோபப்பட வேண்டாம் என்பது என் கருத்து..

   மிக்க நன்றி நெல்லைத்தமிழன்...

   Delete
  4. ///AngelinSaturday, September 02, 2017 8:20:00 am
   ஆமாம் :) நான் ஓவியா ஆர்மிக்கு இந்த கதை லிங்கை ட்விட்டர்லயும் தரப்போறேன் ///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னை மாட்டி விடுவதில் என்னா ஒரு சந்தோசம்:).. சே..சே.. கொஞ்சம் அவசரப்பட்டுக் கூப்பிட்டிட்டோமோ அஞ்சுவை.., இன்னும் ஒருமாதம் ஹொலிடே இலேயே இருக்க விட்டிருக்கலாமோ?:)).. சொந்தச் செலவிலேயே சூனியம் வச்ச நிலைமைக்கு என்னை ஆளாக்கிட்டியே முருகாஆஆஆஆஆஅ:)..

   Delete
  5. கேஜிஜி சார்மேல் கோபம் ஏனோ? அவர் அனேகமா உங்கள் இடுகையைத் தவிர எங்கேயும் பின்னூட்டமிட மாட்டார். பாருங்க.. அங்க பின்னூட்டம் இல்லை, அதுக்கப்பளம் வந்த உங்க கதைக்கு பின்னூட்டம் இருக்கு.

   Delete
  6. ///நெல்லைத் தமிழன்Saturday, September 02, 2017 11:19:00 am
   கேஜிஜி சார்மேல் கோபம் ஏனோ?///

   ஹா ஹா ஹா ஓ இதையோ கோபம் ஏனோ எனக் கேட்டீங்கள்?:).. அது கெள அண்ணன் போன்றோரோடு இப்படிச் செல்லச் சண்டை போடப்பிடிக்கும் அவ்ளோதான்.. மற்றும்படி நானாவது கோபிப்பதாவது.. நேரே திட்டினால்கூட... சிரிச்சிட்டுப் போய் விடுவேன்:).., உண்மையிலேயே மனதாரக் கோபம் வந்தால்... ஒதுங்கிப்போயிடுவேனே தவிர இப்படிக் கூவிக்கொண்டு திரியமாட்டேன்ன்ன்:).. பாவம் அவர் சிவனே என தன்பாட்டில் இருக்கிறார்:).. அவரைப்போய்க் கோபிக்கலாமோ?:)..

   இது என்பக்கம் வரவில்லை எனச் சொல்லவில்லை.. ஹையோ இன்னும் கொஞ்சம் விட்டால்ல்ல்.. நிஜமாலுமே கோபம் போட வச்சிடுவீங்க கர்ர்ர்ர்:).. இப்போ நானும் கெள அண்ணனும் கோபமில்லையாக்கும்:)..

   அவர்தான் எங்கும் போவதில்லையே எனக்கும் தெரியுமே.. இதுக்கெல்லாமா கோபிப்பாங்க:)... அது அவர் பக்கத்தில் கூவிக்கூவிக் கேள்விகள் கேட்டும்.. எதுக்கும் பதிலே சொல்லாமல் காக்கா போயிட்டார்ர்... :) அதனால்தான் பயங்கர சண்டை பிடித்தேன்ன் ஹா ஹா ஹா இப்போ ஓகே:)....

   ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா.. நல்லவேளை இக்கேள்வியை மனதில் வைத்திருக்காமல் நேரே கேட்டீங்க... அதுக்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்... அஞ்சூஊஊஊஊஊஊ ஒரு கப் சூடாஆஆஆஆஆ மோர் பிளீஸ்ஸ்ஸ்:).

   Delete
 9. அதிரா வருகிறேன் பின்னர். ஓட்டு போட்டாச்சு. நம்ம ஏரியாவிலும் கமென்ட்டனுமே....நெதவின் கதையே இன்னும் முழுவதும் வாசிக்கவில்லை. இன்றும் வாசிக்க நேரம் கிடைக்கணும். அதைக் கமென்டிவிட்டு உங்கள் கதைக்கு வருகிறேன் ஓகேயா....துளசிக்கும் இரு கதைகளையும் அனுப்பி உள்ளேன்...அவர் இப்போது ஓணம் ஹாலிடேய்ஸில் ஊரில் இருக்கிறார்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ... உண்மைதான் சில நேரங்களில் பல பதிவுகள் ஒரே நேரத்தில் வந்திருக்கும்.. எதுக்கு கொமெண்ட் போடுவதெனத் தெரியாமல் அவதிப்படுவோம்...

   ஓ ஹொலிடேயில் இருக்கும் துளசி அண்ணனை எதுக்கு டிஸ்ரேப் செய்ய வேண்டும்.. நீங்கள் போட்டால்ல்.. இருவருக்குமானதுதானே...

   Delete
 10. Replies
  1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. ஆங்ங்ங் கையைக் காட்டுங்கோ.. மை ...ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏ?:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி..

   Delete
 11. எவ்வளவு அழகாய் எழுதிவிட்டீர்கள்.
  அன்பு, பாசம், நேசம் எல்லாம் கலந்த கலவை கதை.
  நட்பு அதையும் சொல்ல வேண்டும் காதல் கணவன் திருமணத்திற்கு பிறகும் நல்ல நண்பனாக இருப்பது கொடுப்பினை.
  ஊசிக்குறிப்பும் அருமை.

  //ஏதோ ஒரு காரணத்தால் ஊரை விட்டு, சென்னைக் கோயிலுக்கே தன்னை அர்ப்பணிந்திருந்தார்.. அவர் ஒரு நல்ல மனிதர்தான் என எடுத்துக் கொள்ளலாம்:)]]].//

  அப்படியே எடுத்துக் கொள்வோம்.


  விளையாட்டு குழந்தை போல் இருந்தாலும் சொல்லிய விதம் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதை உணர்த்துகிரது.
  வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   ///எவ்வளவு அழகாய் எழுதிவிட்டீர்கள்.
   அன்பு, பாசம், நேசம் எல்லாம் கலந்த கலவை கதை///
   ஆவ்வ்வ்வ்வ் மிக்க நன்றி.. நீங்க பிக்பொஸ் உடன் சம்பந்தப்ப்டுத்தாமல் கதை படிச்சமைக்கு முதலில் மிக்க மிக்க நன்றிகள்.

   ///விளையாட்டு குழந்தை போல் இருந்தாலும் சொல்லிய விதம் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதை உணர்த்துகிரது.///
   ஹா ஹா ஹா நன்றி நன்றி... ஸ்ஸ்ஸ்ஸ் கோமதி அக்கா மெதுவாப் பேசுங்கோ.. இங்கின ஒருவர் விளக்கெண்ணெய் கண்ணுக்குள் விட்டபடி உலா வருகிறா:).. அவ இதைப் படிச்சாவோ அவ்ளோ தான்ன்.. மீ ஸ்ரெயிட்டா தேம்ஸ்க்குள்ளதேன்ன்:)..

   மிக்க நன்றி அனைத்துக்கும்.

   Delete
 12. ஓட்டும் அளித்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. சொல்லாவிட்டாலும் பெயர் பார்த்துக் கண்டு பிடிப்பேன்ன்.. மிக்க மிக்க நன்றி.

   Delete
 13. பேருந்து, ரயில், விமானம் என மாற்றி மாற்றி இலங்கையிலிருந்து சென்னை வரை விருவிருப்பாக வந்து சேர்ந்தது இக்கதை! பாராட்டுகள்.

  பிக் பாஸ் மோகம் உங்களையும் விட்டுவைக்கவில்லையே! ஓவியா, ஆரவ் என சமயத்திற்குத் தகுந்தால் போல கதாபாத்திரங்களின் பெயர்கள்! நடத்துங்க.....

  கதைப் பகிர்வுக்கு வாழ்த்துகள் அதிரா. தொடரட்டும் அதிரடி!

  த.ம. ஒன்பதாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. இம்முறை கதை முழுவதையும் படிச்சு பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி.

   ///பேருந்து, ரயில், விமானம் என மாற்றி மாற்றி இலங்கையிலிருந்து சென்னை வரை விருவிருப்பாக வந்து சேர்ந்தது இக்கதை! பாராட்டுகள்.//
   யேஸ்ஸ் கதையின் கருவில் கப்பல் மட்டும்தான் பாக்கி ஹா ஹா ஹா:)..

   //பிக் பாஸ் மோகம் உங்களையும் விட்டுவைக்கவில்லையே!///
   ஒரு ஆர்வக்கோளாறுதான் ஹா ஹா ஹா..

   அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
 14. ஆஆஆஆஆஆஅதிரா இங்கும் பிக் பாஸா!!!! ஓவியா ஆரவ்!!!! ஹப்பா இங்கியாவது சேர்ந்தாங்களே!!!

  இதோ அடுத்து வரேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆங்ங்ங்ங் கீதா.. மெதுவா.. என்னை கம்பி எண்ண வச்சிடுவீங்கபோல இருக்கே... இல்ல ஆரவ் நல்ல பிள்ளையாக இருந்தால் நன்றாக இருக்குமெல்லோ.. ஏனெனில் ஜோடிப்பொருத்தம் சூப்பர்ர்... ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)..

   அடுத்து வாறீங்களோ.. ஹையோ மீ இப்போ “எங்கள்புளொக்” ஒபிஷ் மேசைக்குக் கீழ இருக்கிறேன்ன் ஒளிச்சூஊஊஊ:)..

   Delete
 15. ரயில் வந்து அந்த ஸ்டேஷனில் நின்றது. அவர்கள் காத்திருந்தார்கள் கொழும்பு ரெயினுக்காக:).. // இப்படி இணைக்கலாமா??!!!! ஓ!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வேறு வழியில்லை.. ரெயின் வந்தபின்னும் காத்திருந்தார்கள் என்பதுபோல தானே கெள அண்ணன் கொடுத்திருந்தார்.. அப்போ என் கதையில் இவர்கள் ரெயினில் ஏற வேண்டும்.. அப்போ மீ[சுவீட் 16:)]] பாவம் எல்லோ :) என்ன பண்ணுவேன்ன்.. அதனால்தான் இப்பூடி ஜொயின் பண்ணினேன்ன் ஹா ஹா ஹா:)..

   Delete
 16. கதையை வெளியிட்டுவிடவேண்டியது. 10-12 பேர்கள் படித்து, த ம போட்டு, பின்னூட்டமும் இட்டுடுவாங்க. அப்புறம் அடுத்த இடுகை வெளியிடும்போதுதான் மீண்டும் தளத்துக்கு வந்து பழைய பின்னூட்டங்களையும் வெளியிடவேண்டுயது. இதை எழுதும்போது 10 த ம ஆனால் ஒரு பின்னூட்டமும் காணோம். நல்லவேளை இதைக் கேக்கவேண்டிய ஆள் விடுமுறை முடிந்து திரும்பியாச்சு.

  ReplyDelete
  Replies
  1. அது ஓவிய ஆர்மி பிரித்தானிய கிளை கிட்ட வசமா பூஸ்ஸார் மாட்டிக்கொண்டார்னு பிபிசி நியூஸ் பிளாஷ் நியூஸ் போகுது நெல்லை தமிழன் ..நான் போய் காப்பாற்றி கூட்டி வரேன் இருங்க

   Delete
  2. நெல்லை ஹாஹாஹாஹா..ஜெஸி வரதுக்கு இன்னும் கொஞ்சம் ஆகும்னு நினைக்கிறேன்...இப்பத்தானே அவங்களுக்கு விடிஞ்சுருக்கும்.....நான் நினைத்தேன் ஆனால் நேரம் பார்த்தேன்...அதிரா வெளியிட்ட நேரம் இந்திய நேரம் ஒரு மணி..15 நிமிடங்கள்...ஏன் இன்னும் பின்னூட்டங்கள் வெளியிடலைனு கேக்கணும்னு நினைச்சேன் ஆனால் அவங்க இரவாச்சே பாவம் பாட்டிமா தூங்கிட்டுருப்பாங்க...நு விட்டுட்டேன் ஹிஹிஹிஹி

   கீதா

   Delete
  3. ஹையோ நெல்லைத்தமிழன் உண்மைதான் மன்னிச்சுக்கோஒங்க.. கொமெண்ட்ஸ் போட்டவுடனேயே வெளியிட்டால்தான் போடுவோருக்கும் ஒரு மகிழ்ச்சி.. இது கதையை வெளியிட்டே தீரோணும் எனும் முடிவில் தீவிரமாக இருந்தமையாலும்.. ஈவினிங் நன்கு மெய்மறந்து நித்திரை கொண்டுவிட்ட காரணத்தாலும்:).. ஜாமமானாலும் பறவாயில்லை என இருந்து கதையைப் போஸ்ட் பண்ணிவிட்டு நித்திரையாகிவிட்டேன்:).. அதனால உடனுக்குடன் கொமெண்ட் பப்ளிஸ் பண்ண முடியல்ல:)..

   ///நல்லவேளை இதைக் கேக்கவேண்டிய ஆள் விடுமுறை முடிந்து திரும்பியாச்சு.///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) இதுக்கு மட்டும் அவ என்னிடம் கிளவி.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகத் தொடங்குதே..:) கேள்வி கேட்க மாட்டா:) ஏனெனில் நான் எங்கிருந்தாலும் மொபைலில் கொமெண்ட்ஸ் ஐப் பப்ளிஸ் பண்ணிடுவேன்:) ஆனா அவ, கொம்பியூட்டர் வந்துதான் பப்ளிஸ் பண்ணுவேன் என அடம் புடிக்கிறா:) ஹா ஹா ஹா.

   மீள் வருகைகள் மகிழ்ச்சி அளிக்கிறது நெல்லைத்தமிழன்.. மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
  4. ///AngelinSaturday, September 02, 2017 8:23:00 am
   அது ஓவிய ஆர்மி பிரித்தானிய கிளை கிட்ட வசமா பூஸ்ஸார் மாட்டிக்கொண்டார்னு பிபிசி நியூஸ் பிளாஷ் நியூஸ் போகுது நெல்லை தமிழன் ..நான் போய் காப்பாற்றி கூட்டி வரேன் இருங்க///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அம்மா தாயே!!! காப்பாற்றுகிறேன் பேர்வழி என வெளிக்கிட்டு என்னை நிரந்தரமா கம்பி எண்ண வச்சிடுவீங்கபோல இருக்கே:) வாணாம் இந்த விபரீத முடிவை வாபஸ் வாங்கிடுங்கோ:)..பீஸ்ஸ்ஸ்ஸ் போற வழியில புண்ணியம் கிடைக்கும்:))

   Delete
  5. கீதா ரங்கன்... இடுகைல போட்டிருக்கிற படம், அதிராவிட் பேரன் இல்லைனுதான் நினைக்கறேன். அப்புறம் எப்படி, "பாட்டிமா தூங்கிக்கிட்டிருப்பாங்கன்னு" போட்டிருக்கீங்க? என்னைவிட நிறைய விஷயம் தெரிஞ்சுவச்சிருக்கீங்க. லண்டன் கன்ஃபர்ம் பண்ணுமா? அவங்க ஃப்ரெண்டைப் பத்தி தெரிஞ்சிருக்குமே

   Delete
  6. கீதாக்கு இது:).. இந்தாங்கோ...

   [im]https://thumb1.shutterstock.com/display_pic_with_logo/2284979/578901433/stock-photo-close-up-portrait-of-ginger-cat-lover-brought-flower-as-a-gift-in-mouth-with-smile-isolated-on-578901433.jpg[/im]

   Delete
  7. ///AngelinSaturday, September 02, 2017 8:37:00 am
   jessie arrived geetha :))//

   ரொம்ப முக்கியம் ம்ஹூம்ம்..:)) ஹா ஹா ஹா:)

   Delete
  8. ////நெல்லைத் தமிழன்Saturday, September 02, 2017 1:04:00 pm
   கீதா ரங்கன்... இடுகைல போட்டிருக்கிற படம், அதிராவிட் பேரன் இல்லைனுதான் நினைக்கறேன். அப்புறம் எப்படி, "பாட்டிமா தூங்கிக்கிட்டிருப்பாங்கன்னு" போட்டிருக்கீங்க?///

   ஹையோ இதை மறந்துபோய் அவசரப்பட்டிட்டு ரோசாக் கொடுத்திட்டனே:).. கீதாக்கு ரோஜாப்பூக் கான்சல்ட்ட்:)) ஹா ஹா ஹா:)..

   //என்னைவிட நிறைய விஷயம் தெரிஞ்சுவச்சிருக்கீங்க.///

   ஹா ஹா ஹா பாம்பில் கால் பாம்புதான் அறியும்:).. ஒரு பெண்பற்றி இன்னொரு பெண்ணுக்கே அதிகம் புரியுமாக்கும்:) ஹா ஹா ஹா:))..

   /// லண்டன் கன்ஃபர்ம் பண்ணுமா? அவங்க ஃப்ரெண்டைப் பத்தி தெரிஞ்சிருக்குமே//

   ஹையோ காயத்திரியை.. சக்தியை விட மோசமா இருப்பார்போலிருக்கே... ஹா ஹா ஹா... திரும்படியும் பிக்பொச் ஐ நினைக்க வச்சிட்டியே வைரவாஆஆஆஆஆ:)).. மீ என்ன பண்ணுவேன்ன்ன் தானாடா விட்டாலும் தசை ஆடும் என்பது இதுதானோ:))

   அஞ்சு வரமுன் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்.. கொஞ்சம் லேட்டா வாறேன்ன் மிகுதிக்கு:...

   Delete
 17. பப்பி, பூக்கன்று என்று இயற்கையையும் செல்லங்களையும் கலந்துவிட்டீர்கள் சூப்பர்!!

  கதை நன்றாக இருக்கிறது அதிரா!! டக்கென்று எழுதியமை ஒரு திறமை, கலை!!! எல்லோருக்கும் கிடைக்காது. உங்களுக்கு அந்தத் திறமை இருக்கிறது!! பாராட்டுகள்!

  எனக்கு நிறைய கதைக்குக் கரு தோன்றும். எழுத உட்கார முடியாத சூழல் ஆகிவிடுவதால் பல எழுதாம சில அப்படியே பாதியில் ட்ராஃப்டில் கிடக்கிறது...ஹிஹிஹி...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ.. இது கெள அண்ணனின் போஸ்ட் பார்த்ததுமே.. சமைக்கும்போதே கிச்சினில் ஒரு நோட் புக் வைத்து.. மனதில் தோன்றியபடி பாதிக் கதை எழுதிவிட்டேன்.. பின்னர் மீதியை இன்று.. நாளை என அப்படியே நாளாகி விட்டது, அதனால் நேற்று இருந்து நேரடியாகவே எழுதி முடித்தேன்..

   காண்ட் பாக்கில் எப்பவும் ஒரு நோட் புக்.. பென் வைத்திருங்கள்.. எங்காவது வெயிட்டிங் ரைம் கிடைத்தாலும்.. ச்ச்சும்மா பொயிண்ட்ஸ் ஐக் கிறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.. பின்பு கோர்வையாக்கி மானே தேனே எல்லாம் போட்டு எழுதுவது ஈசி:)..

   மிக்க நன்றி கீதா.

   Delete
 18. நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க இல்லன்னா ஹீரோ ஹீரோயின் நேமை மாற்றுங்க ..ஓவியா ஆரவ் சான்ஸ் இல்லை ஹையோ ஹையோ நீங்க காலி இன்னிக்கு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. யார் என்ன சொன்னாலும் ஓவியாவுக்கு ஆரவ் ஐப் பிடித்திருக்கிறதே.. அதுவும் வெளியே வந்து அனைத்து வீடியோக்கள் பார்த்தபின்பும் அவவுக்கு பிடித்துத்தான் இருக்கிறது.. அப்போ நீங்க எதுக்கு நந்திபோல குறுக்கே நிக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:)... சின்னஞ் சிறுசுகளை விருப்பப்படி வாழ விடுங்கோ.. ஹா ஹா ஹா.. என்னால முடியல்ல முருகா:))

   Delete
 19. எதுவும் நம்மோடிருக்கும்வரை அதன் அருமை நமக்குத் தெரிவதுமில்லை, அதைப்பற்றி நாம் சிந்திப்பதுமில்லை, ஆனால் பிரிவென்ற ஒன்று வரும்போதுதான்.. அனைத்தையும் நமக்கு உணர்த்தி விடுகிறது... உணர்வதற்காகத்தான் பிரிவு வருகிறதோ..// செம வரிகள்.....நான் அடிக்கடிச் சொல்லுவதுண்டு...முற்றத்து முல்லையின் அருமை தெரியாது என்று....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓம் கீதா... இந்த வசனம்கூட ஒன்றும் புதிதல்ல.. எல்லோருக்கும் தெரிந்ததுதான், ஆனா தெரிந்தும் கூடவே இருக்கும்போது... மலிவாகி விடுகிறது..

   Delete
 20. அது சரி அதிரா....ஓவியாவின் அப்பாவைக் கண்டுபிடித்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் ஓவியாவுக்கே அவள் அப்பா நினைவில் இருப்பது கடினம் இருந்தாலும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு மாற்றங்கள் எட்செட்ரா......அப்படியிருக்க ஆரவின் உறவினர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? அவர்தான் ஓவியாவின் அப்பா என்று? பி கு வில் ஓவியாவின் அப்பா நல்லவர் என்றெல்லாம் கொடுத்திருப்பது ஓகே ஆனால் இந்த டவுட்டு...?!!! அவரின் புகைப்படம் கொடுத்துத் தேடச் சொல்லியிருப்பதாக வந்திருக்கலாமோ ஒரு லைன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா நான் ஸ்ரீராமுக்கு கொடுத்த ரிப்லை பாருங்க அந்த குடும்ப பாட்டு :)

   Delete
  2. குட் குவெஷன்:) கீதா,.. இதே டவுட்டு மேலே ஸ்ரீராமுக்கும் வந்திருக்கு... அவருக்கு விளக்கியிருக்கிறேன் பாருங்கோ.. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுக்க வெளிக்கிட்டால் கீதா.. கதை அலட்டல்போலாகிவிடும்.. கதை எழுதும்போது நான் எப்பவுமே பயப்படும் ஒரு விசயம்.. “கடவுளே யாருக்கும் போரடித்துவிடக்கூடாது” என்பதே..:)

   அஞ்சுவும் ஏதோ ஐடியாச் சொல்றா ஹா ஹா ஹா அதையும் கவனத்தில் கொள்ளவும்:).

   Delete
 21. அதிரா கலாய்த்தலுக்கு பிறகு இப்போ கதைக்கு வரேன் ..அட்டகாசமா எழுதியிருக்கீங்க ..

  வெளிநாட்டுக்கு வாக்கப்பட்டு போற பெண்கள் இப்படித்தான் குறிப்பா வீட்டில் ஆடு மாடு கோழி என வீட்டில் வளர்ந்த பொண்ணுங்க மனசு இப்படித்தான் சிந்திக்கும் அதிரா என்னதான் இங்கே சந்தோஷம் கொட்டி கிடைச்சாலும் அந்த இளவயது சந்தோஷம் இன்னும் நான் மிஸ் செய்றேன்

  ReplyDelete
  Replies
  1. பூஸ், பப்பி பற்றி எழுதும்போது உங்களையும் நினைச்சேன்ன்.. என்னைப்பொறுத்து ஆண்கள் பெரிதாக வீட்டை மிஸ் பண்ண மாட்டார்கள்.. அதாவது பூனை நாய் கோழி.. பூமரம்.. இப்படியானவற்றை... மனிதர்களை மட்டும்தான் அவர்கள் மிஸ் பண்ணுவார்கள் என நினைக்கிறேன்..

   காரணம் அவர்கள் எப்பவும் வெளியேதானே அதிகம் சுற்றித்திரிவார்கள். ஆனா பெண் பிள்ளைகள் அப்படி இல்லைத்தானே.. எப்பவும் வீட்டில் ஒட்டியபடி இருப்போம்ம்.. வ்கில்ட்டன்க்ட்டிங்யாக்ுகள் மிருகங்களோடு பேசுவோம்.. பொருட்கள் சேர்ப்போம்ம்.. ஏதாவது பண்ணிக்கொண்டிருப்போம்.. அதனால்தான் நாம் வீட்டை விட்டுப் போகும்போது மிஸ் பண்ணுவது அதிகம் என நினைப்பேன்..

   Delete
 22. கத்தாலங் காட்டு வழிக்கு பதில் போறாளே பொன்னுத்தாயி பாட்டும் நல்லா இருந்திருக்கும் :)
  situation song ஹ்ஹா :) சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஓ.. நான் கதையில் எழுதிட்டேன்ன்.. அண்ணே போய்வரவா எனும் பாட்டு பஸ்ல போனது என.. அதனாலயே இதனைப் போட்டேன்.

   Delete
 23. அதிரா, "உன் அப்பாவைக் கண்டுபிடித்துவிட்டோம் அம்மன் கோயிலில் தொண்டராக இருந்தாராம்// அப்போ இப்போ இல்லையா? இருக்கிறாராம் என்று வந்தால் சுகமோ?!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதில் எனக்கும் ஒரு குழப்பம் எழுந்தது... ஆனா என்ன நினைத்தேன் எனில்.. அவரைக் கோயிலில் கண்டுபிடித்தார்கள்.. இப்போ அவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார்.. இனி யாழ்ப்பாணம் திரும்பிடுவார்... இப்படி கற்பனையை ஓடவிட்டு எழுதினேன்...

   அனைத்துக்கும் மிக்க நன்றி கீதா.. நீங்க எப்போ கதை முடிக்கப்போறீங்க... நாளைக்கெனில் எனக்கு கொஞ்சம் கஸ்டம்.. மற்றப்படி வந்திடுவேன்.

   Delete
 24. காதலித்தவனையே மணம்புரிந்து முதன்முறையாகப் புகுந்தவீடு செல்லும் இளம்பெண்ணின் இயல்பான மன ஓட்டம் சிறப்பாகக் சித்திரிக்கப்பட்டுள்ளது.

  ஆர்வத்துடன் படிக்கத்தூண்டும் தொய்வில்லாத நடை. கட்டுக்கோப்பான நிகழ்ச்சி அமைப்பு. எதார்த்தமான கதை முடிவு.

  அதிராவுக்கு வெகு சுவையாகக் கதை சொல்லத் தெரிந்திருக்கிறது.

  தொடர்ந்து எழுதவும் சாதனைகள் நிகழ்த்தவும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ... ஆஹா உங்கள் பின்னூட்டத்தின் ஒவ்வொரு வரியும் என்னை எங்கயோ கொண்டுபோய் விட்டதே... “அதிரா இப்போ ஹப்பி”:).. அறிவுப்பசி ஜி..

   ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
 25. ஜெஸி இன்னும் காணலையே பூஸாரை விரட்ட!!! இன்னும் நிறைய வருமே..ஹிஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. /"கீதா ..ஜெஸி இங்கேதான் இருக்கு refresh பண்ணிட்டு கமெண்ட்ஸ் பாருங்க

   Delete
  2. ஹா ஹா ஹா ஜெஷி இங்கின தான் ஓடித்திரிகிறா.. காலுக்குள் ஓடித்திரிவதால் கீதாவுக்கு தெரியேல்லைப்போலும்... ஹா ஹாஅ ஹா.... நினைச்சேன் சிரிச்சேன்ன்:)..

   Delete
 26. //மனோகரஞ்சித பூக்கன்று”///
  \
  நடுவுல //க // எதுக்கு வந்தது மனோரஞ்சிதம் தானே ..நான் பாதி தூக்கத்தில் இருந்தாலும் கண்டு பிடிப்பேனாம் ஹாங்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆமாஇல்ல? அப்பெயரை உச்சரிச்சு பல வருடங்களாயிற்று.. அதனால கொஞ்சம் தடுமாறி எழுதினேன்:)

   Delete
 27. /அனைத்துச் சூழ் நிலையையும் நன்கு புரிந்திருக்கும் அருகிலிருந்த “ஆரவ்”.., அழுதால்தான் மனம் இலேசாகும் அதனால் அழட்டும் என விட்டு, மெளனமாக, மெதுவாக தோளில்:) தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான்...//

  ஹையோ எனக்கு இங்கே இன்னோன்னு தோணுது வேணாம் நான் கொஞ்சம் கழிச்சி வரேன் ஹாஹாஆ

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சலின்... கிடைச்ச சான்செல்லாம் விட்டுவிடாமல் பெண்களின் தோளைத்தட்டும், கட்டிப்பிடி வைத்தியம் பார்க்கும் கவிஞர் சிநேகன் ஞாபகம் வந்திருந்தால் வெகேஷன்ல நீங்களும் பிக்பாஸில் ஐக்கியமாயிட்டீங்கன்னு அர்த்தம்.

   Delete
  2. ஹாஹா :) ஆமாம் ..நான் ஆரம்பத்தில் troll வீடியோஸ் தான் பார்த்தேன் அதுக்கப்புறம் அப்டியே bb யில் மூழ்கிட்டேன் ..எல்லாம் யூ டியூப் வீடியோஸ்தான் :)

   Delete
  3. ஹா ஹா ஹா பிக் பொஸ் ஐ பலர் திட்டினாலும் நம்போன்ற பலருக்கு இப்போ அது நல்லதொரு பொழுதுபோக்கு:).. என்னதான் நடக்கிறது பார்ப்போமே என மனம் எண்ணித்தொலைக்கிறதே:)... காசா பணமா? சும்மா போகும் நிகழ்ச்சியை பார்க்காமல் எதுக்கு இருக்கோணும் என்றெல்லாம் மனம் சொல்லுது.. ஹையோ சரி பிழை தெரியல்ல...

   ஸ்நேகன்.. ஹா ஹா ஹா அவரைப் பற்றியும் முழுசாத் தெரியல்ல ஆனாலும் அவர் பாவம் மிக நல்லவராகவே தெரிகிறார், தப்பான எண்ணத்தோடோ அல்லது வேணுமென்றோ கட்டிப்பிடிப்பதாகத் தெரியவில்லை, அவர் கட்டி அணைகும்போது அது பிடிக்கவில்லை எனில் உடனேயே உதறித் தள்ளி விடலாமே... ஆனா அது ஏதோ ஒரு வகையில் மனதுக்கு ஆறுதல் கொடுப்பதாலதானே அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.....

   ஜூலி வீட்டுக்குப் போகும்போது தூக்கி வச்சிருந்தது கொஞ்சம் ஓவர்தான், ஆனா படமெடுத்து முடியும்வரை ஜூலி இறங்கவே இல்லையே... இப்போ கிட்டப்போகாமல் இருக்கிறா.. அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை..ஸ்நேகனுக்கு இப்போ கொஞ்சம் கிண்ட் கிடைச்சதிலிருந்து உசாராகிட்டார்ர்..

   கவுளே எனக்குக் கல்லடி கிடைச்சாலும் கிடைக்கும்.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)..

   மிக்க நன்றி நெ. த.., அஞ்சு.

   Delete
 28. ஓ குட்டிக்கதை அருமை. ஓவியா ஆர்மில இருக்கீங்களோ.....

  ReplyDelete
  Replies
  1. ஆஆவ்வ்வ்வ் வாங்கோ சுபிதா வாங்கோ.. நலம்தானே.. நீண்ட காலத்தின் பின்பும் மறக்காமல் வந்திருக்கிறீங்க.. நன்றி நன்றி.

   இல்ல சுபிதா.. அவ்ளோ மோகம் எல்லாம் எனக்கில்லை.. ச்ச்ச்சும்மா உள்ளே என்ன நடக்குது என விடுப்ஸ் பார்ப்பதோடு சரி:).. ஹா ஹா ஹா.

   Delete
 29. ஆரவ், ஓவியாவெல்லாம் பிக்பாஸின் நாயக, நாயகியரா? அதெல்லாம் பார்ப்பதே இல்லையா, ஒண்ணும் புரியலை! எங்கே ஆரவின் அப்பா தான் ஓவியாவின் அப்பானு சொல்லிடுவீங்களோனு நினைச்சேன். அப்படி இல்லை, கதையும் பிழைச்சது! கதையும் முடிஞ்சு கத்திரிக்காயும் காய்ச்சது! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதாக்கா வாங்கோ.. அச்சச்சோஒ ச்சும்மா பெயர்ப்பொருத்தம் நல்லாயிருக்கே என எழுதினேன்.. மற்றும்படி இது கற்பனைக் கதைதானே.

   //எங்கே ஆரவின் அப்பா தான் ஓவியாவின் அப்பானு சொல்லிடுவீங்களோனு நினைச்சேன்///

   ஆவ்வ்வ்வ் அப்போ உங்களோடு சேர்த்து இங்கே மூவர் இப்படி நினைச்சமையால்ல்.. நானும் என் கதையில் டுவிஸ்ட்:) வச்சு முடிச்சிட்டேனோ.. ஹா ஹா ஹ..:)..

   ///கதையும் பிழைச்சது! கதையும் முடிஞ்சு கத்திரிக்காயும் காய்ச்சது! :)///

   ஸ்ஸ்ஸ்ஸ் கீதாக்கா... ச்ச்ச்சும்மா இருக்கும் கத்தரிக்காயை எல்லாம் உப்பூடி வம்புக்கு இழுக்கப்பூடா:).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்..

   Delete
 30. வணக்கம் மியாவ் !

  அட அட என்னமா ஒரு கதை பின்னி இருக்கீங்க பிக்பாஸ் தாக்கமும் இருக்கு
  நாட்டைப் பிரிந்த சோகமும் இருக்கு எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணி ஒரு கதை ரெடியாக்கிடிங்க சமத்து ! ஆமா பொண்டாட்டி பிள்ளையை இலங்கையில் விட்டுவிட்டு வந்து கோவிலில் குந்திக்கிட்டா புண்ணியம் கிடைக்குமா கிர்ர்ரர்ர்ர்ர் ???????

  பிஞ்சுக் கரத்தைத் தொட்டுப் பேசச்
  பிள்ளை சிரித்தல் போலே - பலர்
  நெஞ்சைத் தொட்டுப் போகும் கதையில்
  நெகிழ்ந்து போனேன் நானே !

  இன்னும் இன்னும் எழுதிக் கொடுத்தால்
  இதயம் மகிழும் தானே - மனம்
  முன்னும் பின்னும் மூழ்கும் போதும்
  முத்தாய்க் கதைதா மானே !

  ஊசிக் குறிப்பில் உயிரைக் குடித்தாய்
  இருந்தும் வாழ்த்துகிறேன் - நீ
  பேசிக் கொள்ளும் பிரியத் தாலே
  பதிலைப் போர்த்துகிறேன் !

  தமன்னா + எக்காக்

  ReplyDelete
  Replies
  1. ....தொட்டுப் பேச
   பிள்ளை சிரித்தால் தேனே -...
   ......
   ..... நானே

   அல்லது, சிரித்தல் போலும்..... நெகிழ்ந்து மனமும் உழலும்.

   மற்றபடி கவிதை நல்லாருக்கு.

   Delete
  2. வாங்கோ மேஜரே வாங்கோ.. வணக்கம்.. தேடிக் கண்டு பிடிச்சு வந்து வோட்டும் போட்டிட்டீங்க... இன்னும் மகுடம் தலைக்கு வரவில்லை.. கில்லர்ஜி இறுக்கிப் பிடிச்சு கட்டி வச்சுக்கொண்டு திரிகிறார் கர்:) ஹா ஹா ஹா.. நைட் வந்திடும்.. ஆனா இடையே ஆராவது பறிச்சிடுவினமோ தெரியல்லியே:).

   ஆஹா ஒரு கவிஞரே.. கதையைப் புகழ்ந்திட்டார்ர் மிக்க நன்றி.. மிகுதி தொடர்கிறேன்..

   Delete
  3. ///ஆமா பொண்டாட்டி பிள்ளையை இலங்கையில் விட்டுவிட்டு வந்து கோவிலில் குந்திக்கிட்டா புண்ணியம் கிடைக்குமா கிர்ர்ரர்ர்ர்ர் ???????//
   இது நான் குழந்தையாக இருக்கும்போது ஊரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் .. அதாவது சுமார் 15 வருடங்களுக்கு முன்பு:)[இப்பூடிக் கரீட்டாச் சொல்லிடோணும்:)]..

   ஒரு இரண்டு ஆண்கள் சேர்ந்து, இந்தியாவுக்கு கோயில் தரிசனத்துக்காகப் போயிருக்கிறார்கள், அதில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு மாதம் எனச் சொல்லிப் போய்.. பல மாதங்களின் பின்பு திரும்பினார்.

   அப்போ தன் கணவர் எங்கே என , வராதவரின் மனைவி கேட்டிருக்கிறா... வந்தவருக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பதெனத் தெரியவில்லை..

   உண்மையில் நடந்தது என்னவெனில்... கோயில்களுக்கு சுற்றும்போது... அந்த மற்றவர் கொஞ்சம் பக்தி அதிகமாகி ஓடத் தொடங்கினாராம்.. சேர்ந்து போனவர் துரத்திப் போய்ப் பிடிக்க முடியவில்லையாம்... அப்போ மொபைல் வசதிகள் இல்லைத்தானே..

   அப்படியே அவர் காணாமல் போய் விட்டார்... இவர் எப்படி தனியே ஊருக்குப் போவதென்று, இந்தியாவிலேயே சுற்றிச் சுற்றித் தேடித்திரிந்து களைத்துப்போய்.. உழைப்பும் இல்லை.. பணவசதியும் இருந்திருக்காது... எதுவும் பண்ண முடியாத நிலையில் ஊருக்கு வந்தார்...

   ஊரில் இவர்தான் அவரை என்னமோ பண்ணிவிட்டார் என.. எலோரும் திட்டத் தொடங்கிட்டினம்.. பாவம் அன்று தொடங்கி இந்த மனிசனும் ஒரு சித்த சுவாதீனமானவர் போலாகிட்டார்ர்... எப்பவும் கோயிலிலேயே போய்ப் படுத்திருப்பார்.. அவரைக் கொண்டு வந்து சேர்த்து விடு என.. ஆனா கட்ச்சிவரை அவர் திரும்ப வரவே இல்லை..:(..

   அந்தச் சம்பவத்தை மனதில் கொண்டே இதனை எழுதினேன்.

   Delete
  4. ஆஹா ஆஹா என்ன ஒரு கவிதை.. மிக்க நன்றி சீராளன்.

   Delete
  5. //நெல்லைத் தமிழன்Saturday, September 02, 2017 1:15:00 pm
   ....தொட்டுப் பேச
   பிள்ளை சிரித்தால் தேனே -...///

   இதில் எனக்கும் குழப்பம் தெரியுது நெல்லைத்தமிழன்...
   நான் நினைக்கிறேன் ஒரு எழுத்துப்பிழை என.. அதாவது.. பேச என வராது.. பேசி என வந்திருக்கோணும்:).. நன்றி.. பார்ப்போம் கவனிச்சால் சீராளன் பதில் சொல்லுவார்.

   Delete
  6. வணக்கம் நெல்லைத் தமிழன் அவர்களே !

   ப் வரவேண்டிய இடத்தில் ச் வந்துவிட்டது வருந்துகிறேன்
   சரியாக ஐந்து நிமிடத்தில் எழுதிய கவிதை இது மீண்டும் வாசிக்காமல் பதிவிட்டுவிட்டேன் அதுதான் தவறு மற்றப் படி முதல்கவியில்உவமைதான் முன் அரையடியும் பின் அரையடியும் இயைபுக்காக நெடிலீற்றுத் தேமா வரும்படி எழுதிட்டேன்

   அன்புக்கு நன்றி வாழ்க நலம்

   Delete
  7. /// முதல்கவியில்உவமைதான் முன் அரையடியும் பின் அரையடியும் இயைபுக்காக நெடிலீற்றுத் தேமா வரும்படி எழுதிட்டேன் //

   ஆவ்வ்வ்வ் சீராளன் ஏதோ மலையாளத்தில் பதில் போட்டிருக்கிறார்:).. எனக்குப் புரியவில்லை:) உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன் நெல்லைத்தமிழன்...

   Delete
  8. கொய்யால மலையாளமா இது .....இருக்கட்டும் அடுத்த பதிவுல இருக்கு கண்டம் ...............வெயிட் அண்ட் சீ ..........

   Delete
  9. அச்சச்சச்சோஓஓ நான் தப்பாச் சொல்லிட்டேன் போல அது மலையாளம் இல்லை ஹிந்தி தானே?:).. ஆண்டவா மீயைக் காப்பாத்துங்ங்ங்:)..

   Delete
 31. நீண்டதூரம் கடந்து வந்தேன்! த ம 15

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ புலவர் ஐயா வாங்கோ.. யேஸ் ஸ்கொட்லாந்து கொஞ்சம் தூரம்தான்:) இருப்பினும் அமெரிக்காவை விடக் கிட்டவாச்சே:)..

   வந்த வேகத்தில் வோட்:) ஆவ்வ்வ்வ் மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
 32. சூப்பர் ஆதிரா கலக்கிடீங்க! ஆரவ்,ஓவியா என்று டைமிங் சென்ஸோடு பெயர் கொடுத்திருக்கும் உங்கள் திறமையை மெச்சுகிறேன். அடுத்த காதல் கதைக்கு ஹரிஷ், பிந்து என்று பெயர் கொடுப்பீர்களோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ.. முதன்முதலில் வந்திருக்கிறீங்க.. நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி.. வலது காலை எடுத்து வச்சுத்தானே வந்தீங்க?:)..

   //சூப்பர் ஆதிரா கலக்கிடீங்க! ஆரவ்,ஓவியா என்று டைமிங் சென்ஸோடு பெயர் கொடுத்திருக்கும் உங்கள் திறமையை மெச்சுகிறேன்.//

   ஆவ்வ்வ்வ் மிக்க நன்றி.. மிக்க நன்றி..

   //அடுத்த காதல் கதைக்கு ஹரிஷ், பிந்து என்று பெயர் கொடுப்பீர்களோ?//
   ஹா ஹா ஹா அது கெள அண்ணனிலதான் தங்கியிருக்கு:).. அவர் கொடுக்கும் கண்டிஷனைப் பொறுத்து தொடரும்...

   ஆனா ஒன்று பிந்துவுக்கு ஹரிஸ் பொருத்தமில்லை.. பிந்துவுக்கு கணேஸ் நல்ல ஜோடி.. ஆனா அவருக்கு திருமணமாகி விட்டதே.. ஹா ஹா ஹா:)..

   மிக்க மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.

   Delete
 33. அருமையான ஒரு காதல் கதை . மிகவும் சுவாரசியங்களுடன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்நேகப் பிரியரே.. ஐ மீன் ஸ்நேகாவின் நண்பரே என்றேன்ன் வாங்கோ..:).. நிஜமாத்தான் சொல்றீங்களோ மிக்க நன்றி.

   Delete
 34. சிலையாக ஏன் நிற்பான் நீங்கள்?)) எதுக்கும் ஒரு பொம்மையை சினேஹா போல ஒரு படத்தை போட்டு வைத்துவிடுங்கள்))))

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்நேகாவை பொம்மை ஆக்கிடக்கூடா ஜொல்லிட்டேன்ன்:)ஹா ஹா ஹா..:)

   Delete
 35. வவுனியாவில் திருகோணமலை ரயில் சந்திக்காது )) வராது .அது பொல்ஹாவெலயில் தான் சந்திக்கும் . கதையில் ஓட்டை கண்டு பிடிக்கும் நக்கீரர்)))

  ReplyDelete
  Replies
  1. ///கதையில் ஓட்டை கண்டு பிடிக்கும் நக்கீரர்)))///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) முந்தி வராது எனத் தெரியும்.. ஆனா இப்போதான் பிரச்சனை தீர்ந்திட்டுதே.. ஒருவேளை வரலாம் என நினைச்சு எழுதினேன் கர்:))

   Delete
 36. நல்லா பிக்பாஸ் எல்லாம் பார்க்கின்றீங்க போல))) ஓட்டுப்போட்டாச்சு)))

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நேசன் அனைத்துக்கும்.._()_

   Delete
 37. ஆஆஆஆஆவ்வ்வ்வ் மீக்கு மகுடம் கிடைத்து விட்டதூஊஊஊஊஊஊ.. இதோ பட்டாசு கொழுத்தி அஞ்சு வீட்டுப் பக்கமாக எறிந்து கொண்டாடுகிறேன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா... :).

  மகுடம் சூட வோட் பண்ணிய அனைவருக்கும் நன்றி.. நன்றி... உங்கள் சேவை அடிராவுக்கு.. சே..சே.. டங்கு ஸ்லிப் ஆகுதே... அதிராவுக்கு எப்பவும் தேவை:).._()_


  ஹையோ இந்த மகிழ்ச்சியில் கலந்துகொள்ள இப்போ பகவான் ஜீ இங்கில்லையே....

  ReplyDelete
 38. எதைத்தான் வாசித்தாலும் ரசிப்பதே பின்னூட்டத்தில் இன்னொறு... நிஜமாகவே நம்மோடு உண்மையான அன்பு பாசம்.. நெஞ்சாரக் காட்டும் நண்பர்கள், உறவுகளை மட்டுமே மனம் பிரிவின்போது மிஸ் பண்ணும்.. நடித்துக்கொண்டிருந்தோர் வேஷம்
  வெளுத்து விடும் மற்ற செய்திகளை எல்லாம் டேக் இட் ஈசி பாலிசியில் போய்விடும்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா.. மிகச் சரியாகச் சொன்னீங்க.. மிக்க நன்றி.

   Delete
 39. Replies
  1. வாங்கோ மொகமட் வாங்கோ.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

   ஊசிக்குறிப்பு..:-
   சரவணன் கேட்டு, நெல்லைத்தமிழன் சொன்னார் என் புளொக்கில் தேர்ட் பார்ட்டி கோஸ்டிங் என ஒரு அட் வருது அதை நீக்கச் சொல்லி...

   தம்பி மொகமட் ஒரு லிங் அனுப்பியிருந்தார்.. அதனூடாக சென்று எப்படி நீக்குவது எனப் பார்த்துச் செய்யச்சொல்லி... .

   அது என்னவெனில்.. கீழே இருந்து சடாரென மேலே(புளொக்கில்) செல்வதற்காக ஒரு ”.அரோ”.. போட்டிருந்தேன் முன்பு... அது போட்டோபக்கட் இல் இருந்து லிங் எடுத்துப் போட்டிருக்கிறேன் போல.. முன்பு போட்டோ பக்கட் ஃபிரீயாக விட்டிருந்தார்கள்.. இப்போ பணம் கட்டோணும் எனச் சொல்கிறார்கள்..

   அதனால அவர்களிடம் இருந்து எடுத்த படங்கள், லிங்ஸ் எல்லாமே மறைபட்டுப் போச்சு.. இது என் புளொக்கில் html இல் கோட் எடுத்துப் போட்டிருந்தேன், இப்போ அதை நீக்குவதெனில் அக் கோர்ட் தெரியோணும்.. எனக்கு html settings இல் கை வைக்க கொஞ்சம் பயம்..

   மொகமட் தந்த லிங்கில் சொல்கிறது.. ரெம்பிளேட் ஐ மாற்றி விட்டால் போய்விடும் இந்த அட் என... அதுக்கும் நேரமும் பயமும் விடுகுதில்லை.. பார்ப்போம்.. இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும்.

   மிக்க நன்றி மொகமட்.

   Delete
 40. கதை ஸூப்பர் அக்கா!
  க்லைமெக்ஸ் நன்றாக இருந்திச்சு.
  கதை ஓட்டத்தில் ஓவியாவின் ஃபீலிங்ஸ் வார்த்தைகலில் வடித்த விதம் அருமை.

  ReplyDelete
 41. கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் பேர்கள்... கொஞ்சம் கொமடி ஆக்கிப் போட்டுது. வேற பேர் போட்டிருக்கலாம் அதீஸ்.

  ட்ரிங்கோ ட்ரெய்ன்!! :-)

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.