நல்வரவு_()_


Saturday 16 September 2017

இப்படியும் ஒரு மகன் இருக்க முடியுமோ?

ன்னமோ தெரியல்ல.. இக் கதை கேட்டதிலிருந்து .. இதை எல்லோருக்கும் சொல்லோணும் எனும் ஆவல் அதிகமானது, அவ்ளோ தூரம் மனதை டச்சுப் பண்ணி விட்டது.... அதனால நான் உள் வாங்கியதை.. என் பாஷையில் சோட் அண்ட் சுவீட்டாகவும் அங்கங்கு மானே.. தேனே எல்லாம் போட்டு மெருகூட்டியும்... வெளியே தருகிறேன்.. தப்புக்கள் தவறுகள் இருப்பின் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:). பெயரெல்லாம் என் விருப்பத்துக்கு வைத்துள்ளேன்.. ஆனாலும் நீங்க கண்டு பிடிச்சிடுவீங்க:).

பல நாடுகளின் அரசன், மகா வீரன்..அந்த சபையிலே, மிகவும் கம்பீரமான, வசீகரமான வாலிபன் வீற்றிருக்கிறார்.. பெயர் வல்லபன். அச்சபைக்கு ஒரு பெண் வருகிறார்.. அழகென்றால் அப்படி ஒரு அழகு.. பெயர் அகல்யா. அபெண்ணைப் பார்த்த அக் கணத்திலேயே தன் உள்ளத்தைப் பறிகொடுக்கிறார் வல்லபன். ஆனா அப்பெண் யார், எங்கிருக்கிறார், எப்படிப்பட்டவர் எதுவுமே தெரியாதே. ஆனால் காதல் மோகம் அதிகமாகி, எதையும் அறியும் ஆவலில்லாமல் ...

உடனே அருகில் சென்று நேரடியாகக் கேட்டு விடுகிறார்..  “பெண்ணே உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, உன்னைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் உன் விருப்பம் என்ன?”.. இதுதான் வெட்டு ஒன்று துண்டு ரெண்டோ?:).. ஹா ஹா ஹா. அகல்யாவுக்கு வல்லபன் யாரெனத் தெரியும், ஆனா வல்லபனுக்கு அகல்யா யாரெனத் தெரியாது.

அகல்யா ஒரு நிமிடம் யோசிக்கிறா.. ஆள் ஓகேதான், ஆனால் இவரை நம்பலாமா? உண்மையிலேயே இவர் என்னை விரும்பித்தான் கேட்கிறாரா.. இல்லை என் புற அழகில் மயங்கிக் கேட்கிறாரா... உண்மையிலேயே விருப்பம் ஏற்பட்டுக் கேட்பவராயின், நான் சொல்வது போல் நடப்பார்.. பார்க்கலாம், என எண்ணிக் கொண்டே பதில் சொன்னா..

 “நீங்கள் நாளை மாலை, வல்லப பூங்காவுக்கு வாருங்கள், அங்கே வைத்து முடிவு சொல்கிறேன்” என. ஓகே அப்படியே வருகிறேன் எனச் சொல்லி வல்லபன் போய் விட்டார். அடுத்தநாள் மாலை அகல்யா அப்பூங்காவில் காத்திருந்தா. உண்மையில் காதலித்தால் வல்லபன் இங்கு வருவார் என எண்ணிக்கொண்டு.

சொன்னபடியே வல்லபன் வந்தார்...  “சொல்லு பெண்ணே உன் முடிவைச் சொல்லு?”.. உடனே அகல்யா சொன்னா,  “நான் உங்களை மணம் முடிக்கச் சம்மதிக்கிறேன், ஆனா சில கண்டிஷன்கள் போடுவேன், அதுக்கு நீங்கள் ஒத்துக் கொண்டால் மட்டுமே, நான் முடிப்பேன்” என்றா.

அகல்யா சொல்லி வாய் மூடமுன், வல்லபன் சொன்னார்.. “எனக்கு நீதான் முக்கியம், நீ கிடைப்பாய் எனில் எந்தக் கண்டிஷனுக்கும் கட்டுப்பட நான் தயார்.. சொல்லு”.. [காதல் மயக்கத்தில் இருக்கும்போது இப்படித்தான் ஆகும்:).. கண்மண் தெரியாமல் அனைத்துக்கும் சம்மதித்து விட்டு பின்னர் அவதிப்படுவார்கள்:) ஹா ஹா ஹா..].

உடனே அகல்யா சொன்னா, “என் பெயர் அகல்யா, இதுக்கு மேல் என்னை எதுவும் கேட்கக்கூடாது, நான் என்ன செய்தாலும் .. ஏன் செய்கிறாய்? எதுக்காக செய்கிறாய்?, நீ யார்? எனும் கேள்விகள் கேட்கக்கூடாது... அப்படியான கேள்வியை எப்போ நீங்கள் என்னிடம் கேட்கிறீங்களோ.. அன்றே நான் உங்களை விட்டுப் பிரிந்து போய் விடுவேன்” என.

இதைக் கேட்ட வல்லபன்.. “ ஓ இவ்வளவுதானா?  நீ ஏதோ பெரிதாகச் சொல்லப்போகிறாய் எனப் பயந்தே போய் விட்டேன், இதெலென்ன இருக்கு, எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் உன்னைப் பற்றி, நானும் இப்படிக் கேள்விகள் எதுவும் கேட்க மாட்டேன், வா மணம் முடிக்கலாம்” என அழைத்துப் போனார்...

VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV
இடைவேளை விடோணும் எல்லோ?:).. இது என் கவிதைக் கலெக்‌ஷன்ஸ்:) டயரியிலிருந்து.... பேப்பரில் வரும் கவிதைகளை வெட்டி எடுத்து ஒட்டிச் சேர்ப்பேன்... இப்பொழுது பேப்பர் இல்லாமல் நெட் லயே படிப்பு என்றாகிவிட்டதே:(.
VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

திருமணம் கோலாகலமாக நடந்தேறியது,  நல்ல இனிமையாக வாழ்க்கை ஓடியது...அகல்யா கற்பமானார்,. ஒரே குதூகலமாக இருந்தவேளை, அந்தப்புரத்தில் பரபரப்பு.. அகல்யாவுக்கு குழந்தை பிறக்கிறது.... இதை அறிந்து அந்தப்புரத்துக்கு வெளியே ஆவலோடு காத்திருக்கிறார் வல்லபன்... 

குழந்தை அழும் சத்தம் கேட்கிறது, ஒரு பெண் துணியிலே சுற்றி குழந்தையை எடுத்து வருகிறார், ஆவலோடு பார்க்க ஓடுகிறார் வல்லபன், அப்பெண் சொல்கிறா..  “நீங்கள் பார்க்கக்கூடாது குழந்தையை, இக்குழந்தையை கொண்டுபோய் கங்கையிலே விட்டு விட வேண்டும் இது மகாராணி உத்தரவு”.. அப்படியே இடிந்து போய் விடுகிறார்.. அகல்யாவின் கண்டிஷன்ஸ் நினைவுக்கு வருகிறது, இப்போ எதுவும் பண்ண முடியாது...

என்ன குழந்தை எனக் கேட்கிறார்.. ஆண்குழந்தை எனச் சொல்லி விட்டு குழந்தையைக் கொண்டு போய்விடுகிறா கங்கையில் விடுவதற்கு.  உள்ளே போகிறார், அகல்யா எதுவுமே நடக்காததுபோல புன்னகையோடு பேசுகிறா, இவரால் எதுவும் கேட்க முடியவில்லை.. கேட்டால் பிரிந்து போய் விடுவேன் எனச் சொல்லி விட்டாவே, அதனால் பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டார். வாழ்க்கை வழமைக்குத் திரும்பியது.

2ம் தடவையாக அகல்யா கற்பமானா, மீண்டும் மட்டற்ற மகிழ்ச்சி.. ஒருநாள் அதே ஆரவாரம்.. குழந்தை பிறக்கிறது, வல்லபன் காத்திருக்கிறார்.. அதேபோல துணியிலே சுற்றிக் குழந்தையை எடுத்து வருகிறார் மருத்துவப் பெண், கேட்கும்போது ஆண்குழந்தை என்கிறார்.. கொண்டு போய் ஆற்றில் விட்டு விட்டார்.

கொஞ்சம் மனமுடைந்தவராகிவிட்டார் வல்லபன், இருப்பினும் என்ன பண்ண முடியும்? காதல் மோகத்தால் வாக்குக் கொடுத்தாயிற்றே, கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தானே வேண்டும்.. பொறுமையைக் கடைப்பிடிக்கிறார்..

இப்படியே 3ம் தரம், 4, தரம், 5, தரம், 6 , 7 ம் தரமும் கர்ப்பமாகி ஏழு குழந்தைகள்.. ஏழும் ஆண்குழந்தைகள்.. அத்தனை குழந்தைகளையும் கங்கையில் விட்டாயிற்று. பொறுமை இழந்தே விடுகிறார் வல்லபன். பெண்குழந்தைகள் என்றால்கூட ஏதும் காரணம் இருக்கலாம், இது ஆண் குழந்தைகள்.. அரச வம்சத்தை வளர்க்க வேண்டியவர்கள், இவர்களை எதுக்காக கங்கையில் விடுகிறா.. தனக்கு ஒரு வாரிசாவது வேண்டுமே, தன் அரச பரம்பரையை நடாத்த.. இப்படி பலவிதமாக யோசிக்கிறார் வல்லபன். இருப்பினும் எதுவும் கேட்கவில்லை அகல்யாவிடம்.

8ம் தடவையாக அகல்யா கற்பமாகிறா.. இம்முறை உசாராகி விடுகிறார் வல்லபன்... இப்போ மனைவி மேல் இருக்கும் அந்த உணர்வை விட[பாச உணர்வல்ல காம உணர்வு] பிள்ளை வேண்டும் எனும் உணர்வு அதிகமாகியிருக்கிறது.. இனி என்ன ஆனாலும் சரி, இம்முறை குழந்தையை இழந்திடக்கூடாது என முடிவெடுக்கிறார்.

அதேபோல அந்தப்புரத்தில் ஆரவாரம்..  8 வதும் ஆண் குழந்தை பிறந்தது, மருத்துவப் பெண் துணியில் சுற்றி எடுத்துச் செல்கிறா.. வல்லபன் வழி மறிக்கிறார், கொண்டுவா இங்கே என் குழந்தையை என, கையிலே வாங்கிக் கொள்கிறார்.. வாங்கியவர் குழந்தையோடு நேரே அகல்யாவிடம் போகிறார்... தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்கிறார்...

 “அகல்யா சொல்? யார் நீ? எதுக்காக நமக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் கொல்கிறாய்?.. இக்குழந்தை எனக்கு வேணும்..” என்கிறார்... 

கொடுத்த வாக்கை மீறி விட்டாரெல்லோ? என்ன ஆகியிருக்கும்? மீதி அடுத்த தொடரில்..... டொட்ட டொயிங்ங்ங்ங்ங்:)..

ஊசி இணைப்பு:
உங்கள் அன்பான வாக்குகளை, ஆசியோடு சே.சே.. ஆசையோடு ஓடிவந்து போட, இங்கின அமுக்குங்கோ:)
மகுடம் கிடைத்து விட்டது.. நன்றி_()_

((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
இதன் பகுதி -2  க்கு இங்கே கிளிக் பிளீஸ்:)

85 comments :

 1. ஆஹா நல்ல சுவாரஸ்யமான இடத்தில் தொடருமா ?

  சரித்திரக்கதைதான் தங்களது பாணியில் வரட்டும்.

  சோலந்தூர், சோசியர் சோனைமுத்துவிடம் அகல்யா போயிருந்து அவரு ஏதும் தோஷம் என்று ஜொள்ளி"ட்டாரோ... ?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...
   இன்னும் ஒரு தொடரில் முடிச்சிடலாம் என நினைக்கிறேன் தெரியல்ல பார்ப்போம்..

   ஹா ஹா ஹா சோலந்தூர்.. சோசியரின் அட்ரஸ் கொஞ்சம் எனக்கும் தாங்கோவன்:).. மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. வசீகரமாக! வல்லபன் என்று பெயர் வைத்ததற்கு வசீகரன் என்றே வைத்திருக்கலாமோ!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... இம்முறை 2 வதாக ஆவலோடு கதை படிக்க ஓடிவந்த உங்களை ஏமாத்துவேனோ?:).. ஆயா உங்களுக்கே:)).. பல மாதமாக அவவின் தொல்லை தாங்க முடியவில்லை.. ஒரே யுரம், இருமல் பல்லு ரெண்டு இன்றோ நாளையோ என ஆடுகிறது:).. ஹொஸ்பிட்டலுக்கு கூப்பிட்டால் வரமாட்டாவாம் என அடம்புடிச்சா...

   இப்போ ஸ்ரீராம் ஏசிக் காரில வந்திருக்கிறார் என்றதும்.. 30 வயசுபோல எழும்பி மேக்கப் போடுறா:).. பத்திரமாக் கூட்டிப்போய் அந்த பூஸ்குட்டி ஒய்யாரமாக அமர்ந்திருந்த சோபாவில படுக்க விடுங்கோ:)).. ஆயா பத்திரம்:))

   Delete
 3. வல்லபனின் காதல் மயக்கத்தைப் பார்க்கும்போது கில்லர்ஜி சொல்லும் அறியாமைகள் நினைவுக்கு வருகிறதே...

  ReplyDelete
  Replies
  1. இதை அந்தக்காதலோடு ஒப்பிடாதீர்கள் ஸ்ரீராம்ஜி.

   அது "அந்து" போகும் காதல்.

   Delete
  2. //இதை அந்தக்காதலோடு ஒப்பிடாதீர்கள் ஸ்ரீராம்ஜி.//

   உடைந்தடியாக வசீகரன் சே வல்லபன் கண்டிஷன்களுக்கு ஒத்துக்கொண்டது காமத்தால்தானே? அதனால் சொன்னேன். இதுவும் கிட்டத்தட்ட இப்படித்தானே? அப்புறம் கங்காவை சே.. அகல்யாவை வசீகரன் சே வல்லபன் எங்கே பார்க்கப்போகிறார்?!!!

   Delete
  3. //ஸ்ரீராம்.Saturday, September 16, 2017 2:09:00 pm
   வல்லபனின் காதல் மயக்கத்தைப் பார்க்கும்போது கில்லர்ஜி சொல்லும் அறியாமைகள் நினைவுக்கு வருகிறதே...//

   உண்மைதான்... அவசரக்காரருக்கு புத்தி மத்திமம்:) என்பது இதுதான்போல:)..

   Delete
  4. //KILLERGEE DevakottaiSaturday, September 16, 2017 2:20:00 pm
   இதை அந்தக்காதலோடு ஒப்பிடாதீர்கள் ஸ்ரீராம்ஜி.

   அது "அந்து" போகும் காதல்.//

   ஹா ஹா ஹா உண்மைதான், இதில் வல்லபன் ஒன்றும் ஏமாற்றவில்லையே.. சொன்னபடி நடக்கிறார்ர்.. நியாயமாக கல்யாணம் பண்ணுகிறார்:)..

   Delete
  5. ///ஸ்ரீராம்.Saturday, //
   உடைந்தடியாக வசீகரன் சே வல்லபன் கண்டிஷன்களுக்கு ஒத்துக்கொண்டது காமத்தால்தானே? அதனால் சொன்னேன். இதுவும் கிட்டத்தட்ட இப்படித்தானே? அப்புறம் கங்காவை சே.. அகல்யாவை வசீகரன் சே வல்லபன் எங்கே பார்க்கப்போகிறார்?!!!///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்று ஸ்ரீராமுக்கு கண்டபடி டங்கு ஸ்லிப்ட் ஆகி:) என் கதையை மொத்தமும் அவிழ்த்து விடப்பார்க்கிறார்ர்:).. சிரிச்சதில கீழே விழுந்து உருண்டு.. எழும்பி ஓடினதுதான்.. இப்போதான் திரும்ப வந்தேன்:)..

   Delete
 4. அகல்யையின் முதல் கேள்வியைப் படித்ததும் அவள் பெயரை கங்கா என்று மாற்றி விடலாமோ என்று தோன்றியது!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம் மெதுவாப் பேசுங்கோ:)ஹா ஹா ஹா:).

   Delete
 5. வீதிக்கு வந்த கவிதை ரசித்தேன்... இஸ்ஹாக் யாரை நினைத்து உருகினாரோ?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா யேஸ்... இஸ்ஹாக் இடம்தான் கேட்கோணும்..பேப்பரில் வந்த கவிதை.

   Delete
 6. கர்ப்பம் கற்பமானதேன்?

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகள் கற்பூரமாய் கரைந்து போனதால் இருக்குமோ ??????

   Delete
  2. கில்லர்ஜி... ரசிக்கும் பதில். Brilliant

   Delete
  3. //ஸ்ரீராம்.Saturday, September 16, 2017 2:10:00 pm
   கர்ப்பம் கற்பமானதேன்?//

   ஓ ஹா ஹா ஹா சிலசமயம் “கெற்பம்” எனவும் சொல்லக் கிளவி.. சே..சே.. கேள்வி:).. அது கர்ப்பம் தான்.. எழுதும்போது மனதில் வரவே இல்லை:)).. இப்போ புரிஞ்சு கொள்ளுங்கோ அவ்ளோ மெய்மறந்து:) கதை எழுதினேனாக்கும்:).

   Delete
  4. //KILLERGEE DevakottaiSaturday, September 16, 2017 2:21:00 pm
   குழந்தைகள் கற்பூரமாய் கரைந்து போனதால் இருக்குமோ ??????//

   இவைதான் ஆறு தாமரையில் இருந்த குழந்தைகளோ? இல்ல அது வேறு என்ன?..

   Delete
 7. ஆஹா.... அகல்யாவின் பெயர் மாற்றியது சரிதான் போலவே.... ஆனால் இங்கு அகல்யா தேடி வருகிறாள் வசீகரனை... சே.. வல்லபனை! இவரல்லவோ அவளிருக்குமிடம் சென்று "உலவும் தென்றல் காற்றினிலே" பாடியிருக்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஹையோ இதில் படம் வேறு வெளிவந்திருக்கோ?:) என் கதையை யாரோ திருடிட்டாங்க:) எனக்குத் தெரியாமல் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

   Delete
 8. பிழைத்தார் பிதாமகர்! தம ரெண்டாம் வாக்கு என்னுது!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ் அப்போ கில்லர்ஜி இன்னும் மை வைக்கல்லியோ?:)கர்ர்ர்ர்ர்ர்:).. இதைத்தான் குடும்பத்தோடு வந்து வோட் பண்ணுகிறேன் என்று அவர் சொன்னதன் அர்த்தமோ?:)) ஹா ஹா ஹா... அனைத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.. பின்பு வருகிறேன் மிகுதிப் பதில்களுக்கு.

   Delete
  2. ஸ்ரீராம்ஜி இரண்டு என்று எழுதினால் நான் ஓட்டு போடவில்லை என்று அர்த்தமா ?

   Delete
  3. //ஸ்ரீராம்ஜி இரண்டு என்று எழுதினால் நான் ஓட்டு போடவில்லை என்று அர்த்தமா ? //

   அப்படி எல்லாம் இல்லை கில்லர்ஜி. நான் வரும்போது வாக்கு எண்ணிக்கை ஒன்று. எனவே உடனடியாக வாக்களித்ததால் இரண்டாவது வாக்கு என்றேன். இப்போது வாக்கு எண்ணிக்கை மூன்று என்று காட்டுகிறதே!

   Delete
  4. //KILLERGEE DevakottaiSaturday, September 16, 2017 2:18:00 pm
   ஸ்ரீராம்ஜி இரண்டு என்று எழுதினால் நான் ஓட்டு போடவில்லை என்று அர்த்தமா ?//

   ஹா ஹா ஹா நான் பதில் சொல்ல தாமதமானதால், இது தன்னைப் பார்த்துக் கேக்கிறீங்க என நினைச்சுட்டார்ர் ஸ்ரீராம்ம்ம்... இவரும் கு...கு வாக இருப்பாரோ ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

   Delete
  5. ஸ்ரீராம்ஜி இப்படி நடந்திருக்கலாம் ஆகவே உடனே ஓட்டு போடவில்லை என்று ஜொள்ளக்கூடாது இப்படி ஜொள்பவர்களை தேம்ஸ் ஊரணியில் தள்ளி விடணும்.

   Delete
  6. //ஸ்ரீராம்.Saturday, September 16, 2017 2:24:00 pm
   //
   அப்படி எல்லாம் இல்லை கில்லர்ஜி. நான் வரும்போது வாக்கு எண்ணிக்கை ஒன்று. எனவே உடனடியாக வாக்களித்ததால் இரண்டாவது வாக்கு என்றேன். இப்போது வாக்கு எண்ணிக்கை மூன்று என்று காட்டுகிறதே!///

   ஆவ்வ்வ்வ்வ்வ் இருவரையும் மூட்டி விட்டுவிட்டேன்ன்ன்ன் என் நாரதர் கலகம் நல்லப்டி நடக்கிறது ஓடிப்போய்த் தேம்ஸ் கரையில் நிண்டு புதினம் பார்த்திடலாம்ம்:).. ஹா ஹா ஹா:)

   Delete
  7. ///KILLERGEE DevakottaiSaturday, September 16, 2017 2:30:00 pm
   ஸ்ரீராம்ஜி இப்படி நடந்திருக்கலாம் ஆகவே உடனே ஓட்டு போடவில்லை என்று ஜொள்ளக்கூடாது இப்படி ஜொள்பவர்களை தேம்ஸ் ஊரணியில் தள்ளி விடணும்.//

   ஹா ஹா ஹா யூ 2 கில்லர்ஜி?:).. இப்பூடி டக்குப் பக்கென அஞ்சுவின் கட்சியில் சேரக்குடா ஜொள்ளிட்டேன்ன்ன்:).. அவ இன்னும் உங்களுக்கு வந்து வோட் போடவில்லை என்பதை.. உங்க மனதுக்கு நினைவூட்டுகிறேன்ன்ன்:)).. ஹா ஹா ஹா:)

   Delete
  8. நான் கேட்டது ஸ்ரீராம்ஜியை அல்ல! உங்களைத்தான்.

   ஒருவேளை நம்மளைத்தான் கேட்கிறேன் என்று ஸ்ரீராம்ஜி தவறாக நினைத்து பதில் சொல்லி விட்டாரோ....

   Delete
  9. ///ஒருவேளை நம்மளைத்தான் கேட்கிறேன் என்று ஸ்ரீராம்ஜி தவறாக நினைத்து பதில் சொல்லி விட்டாரோ....///

   அதே.. அதே.. கில்லர்ஜி:) எனக்கு உடனேயே புரிந்து விட்டது:) நான் தான் கற்பூரம் ஆயிட்டே:).. ஹா ஹா ஹா.. ஹையோ ஸ்ரீராம் இனிமேல் என் பக்கம் கால் வைக்கவே பயப்புடப்போறாரே.. இப்போ நான் என்ன பண்ணுவேன்ன்ன்:)).

   Delete
  10. மிக்க நன்றி ஸ்ரீராம், கில்லர்ஜி.. இம்முறை என்றுமில்லாமல் அதிகம் பேசி விட்டீங்கள் கண்படாமல் இருக்க நீத்துப் பூசணியைச் சுத்திப் போட்டு.. அதிரா வீட்டுச் சந்தியில் இரவு 9 மணிக்கு டமார் என அடிச்சு உடைக்கிறேன்:).

   Delete
 9. Replies
  1. வாங்கோ புலவர் ஐயா.. மிக்க மிக்க நன்றி.

   Delete
 10. ஆகா,
  தொடரும் போட்டு விட்டீர்களே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி. யேஸ்.. தொடரும்:).

   Delete
 11. பார்க்க வைத்து ,தாலி கட்ட வைத்து ,ஆறு பிள்ளைகளைப் பெற வைத்து ....கதை செம ஃபாஸ்ட் ...வல்லபன் போலவே காத்திருக்கிறேன் ,அகல்யாவின் பதிலுக்கு :)

  ஸ்ரீராம்ஜி இன்னிக்கு எவ்வளோ கதைத்து இருக்காரே ,நேற்று ,நாம் கதைத்ததை கண்டுகொள்ளவே இல்லயே:)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ..

   //வல்லபன் போலவே காத்திருக்கிறேன் ,அகல்யாவின் பதிலுக்கு :)//

   ஹா ஹா ஹா அகல்யாவிடம் கேட்டு.. அதிரா உங்களுக்குச் சொல்கிறேன்:).

   ///ஸ்ரீராம்ஜி இன்னிக்கு எவ்வளோ கதைத்து இருக்காரே //
   ஹா ஹா ஹா கண்படுத்திடாதீங்கோ:).. இம்முறைதான் ஸ்ரீராமும் கில்லர்ஜி யும் தம் வீடுகள் தவிர அடுத்த வீட்டில் அதிகம் பேசி நான் பார்க்க்கிறேன்ன்:)).

   ///நேற்று ,நாம் கதைத்ததை கண்டுகொள்ளவே இல்லயே:)//
   அது வந்து பகவான் ஜீ, நேற்று ஸ்ரீராம் சிக்:) லீவில இருந்திருக்கிறார் என நினைக்கிறேன்:) அதனால பார்க்கவில்லைப்போலும்:).. ஹையோ எப்பூடி எல்லாம் ஜமாளிக்க:) வேண்டிக்கிடக்கு:)..

   மிக்க நன்றி பகவான் ஜி.

   Delete
 12. ஹலோவ் தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை //தொடரும் //
  ஹாங் ஹாங்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஞ்சு வாங்கோ... அப்போ “டொடரும்” எனப் போடட்டோ?:).. இரு பாகத்தில் முடிக்கலாம் என நினைச்சேன் அஞ்சு.. ஆனா அழகாக சொல்வதானால் 3 தேவைப்படும்போல இருக்கு.. தெரியல்ல பார்ப்போம்.

   Delete
 13. புளுங்கி //

  ஆமா இந்த இஸ்ஹாக்குக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை :)
  யார் கண்ணிலும் படலை அவருக்கும் உங்க போல் ழ தகராறு :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது வேறையோ?:).. எனக்குத்தப்புத் தெரியாமையால் எடுத்துப் போட்டிட்டேன்ன்:).

   Delete
 14. இந்த frog ஸ்டோரியை எங்க சித்தப்பா சொல்லியிருக்கார் :) ஹாஹா

  ReplyDelete
  Replies
  1. ஓ அப்படியா?:) அவர் நேக்குத் தாத்தா முறையாக்கும் ஹா ஹா ஹா:)..

   Delete
 15. அடுத்த பார்ட் போட்டா தான் நான் ஒரு முடிவுக்கு வந்து யார் தவறுன்னு சொல்ல முடியும் சீக்கிரம் போடுங்க நெக்ஸ்ட் பார்ட்

  ReplyDelete
  Replies
  1. ///யார் தவறுன்னு சொல்ல முடியும்//

   ஹா ஹா ஹா அதுதான் இல்ல அஞ்சு:).. இங்கு தவறு பிழை என்பதல்ல கதை... இப்படியும் ஒரு மகன் இருப்பாரா உலகில்.. என்பதுதான் கதை:).. போகப்போகப் புய்யும்:)..

   மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 16. சாந்துனு கங்கை கதைபோல் இருக்கிறதே. அப்புறம் படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... ஹா ஹா ஹா நீங்க சாந்தனு என்கிறீங்க.. ஸ்ரீராம் வசீகரன் என்கிறார்:) எனக்கு ஒரே கொயப்பமா இருக்கே:)).. சரி சரி அமைதி பிளீஸ்ஸ்ஸ்.. கதையைச் சொல்லி முடிச்சிடுவீங்கபோலிருக்கே:)

   Delete
 17. Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ... ஆஹா அருமை:).. உங்கள் சேவை நமக்கு எப்பவும் தேவை:)..

   Delete

 18. அரசன் சரியான லூசாக இருப்பான் போல இருக்கே அவ்ந்தான் நேரடியாக கேட்க் கூடாது அதனால் அவன் மந்திர்களின் சொல்லி என்ன காரணம் என்பதை அறிந்து வர செய்து இருக்கலாமே அப்படி இல்லையென்றால் அவர்களின் தலையை வெட்டிவிடுவதாக சொல்லி இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. /// அப்படி இல்லையென்றால் அவர்களின் தலையை வெட்டிவிடுவதாக சொல்லி இருக்கலாம்///
   ஹா ஹா ஹாஅ ... காரில் இருந்தபோது இதைப் படிச்சு சிரிச்சதில் கார் ஆடியதே ஹா ஹா ஹா:).. அருமையான ஐடியா ட்றுத்... உங்களை மந்திரியாகப் போட்டிருக்கலாம்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 19. தவளையின், ஊசிக்குறிப்பு பார்த்தேன். நான் தொடரும் (ஆபீசில்) பாலிசி இதுதான். நெகடிவ் எண்ணம் உடையவர்கள், காரியம் செய்ய முடியாது என்றெல்லாம் எதிர்மறையா பேசுறவங்களை பக்கத்துலயே சேர்க்கமாட்டேன். எப்போவும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், எதிர்மறை எண்ணத்தை ஆகர்ஷிப்பார்கள், தோல்வியை நோக்கி அது அவர்களைத் தள்ளும். தமிழ்ல போட்டிருந்தால் இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ///நெகடிவ் எண்ணம் உடையவர்கள், காரியம் செய்ய முடியாது என்றெல்லாம் எதிர்மறையா பேசுறவங்களை பக்கத்துலயே சேர்க்கமாட்டேன்//

   ஹா ஹா ஹா நான் அப்படியானவர்களுக்கு திட்டுக் கொடுத்து பொஸிடிவா திங் பண்ணுங்கோ என சொல்லுவது வழக்கம்:).

   ///எப்போவும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், எதிர்மறை எண்ணத்தை ஆகர்ஷிப்பார்கள், தோல்வியை நோக்கி அது அவர்களைத் தள்ளும்.//
   100 வீதம் உண்மை.. What we think, we become.

   //தமிழ்ல போட்டிருந்தால் இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.//உண்மைதான், எனக்கும் புளொக்கில் ஆங்கிலம் போடுவது பிடிப்பதில்லை.. பல வருடங்களாக ஆங்கிலக் கலப்பு இல்லாமலேயே பார்த்து வந்தேன்.. இப்போதான் இடைக்கிடை போடுகிறேன்... இனிக் கொஞ்சம் கவனிக்கிறேன்.. நன்றி. தமிழை விட ஆங்கிலத்தில் நல்ல நல்ல விசயங்கள் இப்படி வருகின்றன.. அல்லது என் கைக்குக் கிடைக்கின்றன அதனாலேயே போடும் ஆசை வந்திடுது.

   மிக்க நன்றி நெல்லைத்தமிழன்..

   Delete
 20. வணக்கம் பூசாரே !

  என்னமோ கதை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு இடைக்கிடை என்ன ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ..கதையின் சுவாரசியத்தைக் கெடுக்கும் அலப்பறைகளைத் தவிர்த்திருக்கலாம் இருந்தும் அருமை விரைவில் மிகுதியை எதிர்பார்க்கிறேன் .....

  வாக்கினால் இணைந்த காதல்
  ...வலியதைச் சேர்த்த பாங்கை
  நோக்கினால் உள்ளம் வாடும்
  ...நுடங்கியே உயிரும் ஆடும்
  தேக்கினால் நீரும் மாசாம்
  ...தெளிந்திடா வாழ்க்கை தூசாம்
  நாக்கினால் கெட்ட மன்னா
  ...நலிந்திடல் வீழ்ச்சி கண்ணா....!

  தங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது நன்றி

  '' சன்னலை மூடு ''

  பூசாரே நேரம் இருப்பின் மீண்டும் வருகிறேன் ஊசிக்குறிப்பு சிறப்பு
  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மேஜரே வாங்கோ வணக்கம்...

   /// இடைக்கிடை என்ன ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ..கதையின் சுவாரசியத்தைக் கெடுக்கும் அலப்பறைகளைத் தவிர்த்திருக்கலாம் ///

   ஓ... அடுத்த பகுதியில் இதை கவனத்தில் கொள்கிறேன்ன்.. அது கதையின் நடுவே என் கருத்தைச் சொல்லும்போது சிரித்து விட்டேன்ன்:) சிரிப்பு என்கூடவே வருதூஊஊஊஊ:) ஹா ஹா ஹா:).

   //இருந்தும் அருமை விரைவில் மிகுதியை எதிர்பார்க்கிறேன் ....//

   ஓம்...கதை என்பதால்..விரைவாகப் போட்டு முடித்தால்தான் சுவாரஷ்யம் என நானும் நினைச்சுக் கங்கணம்:) கட்டியிருக்கிறேன்.. பார்ப்போம்.

   ஆஹா கதையை ஒரு குட்டிக் கவிக்குள் அடக்கி விட்டீங்க சீராளன் மிக்க நன்றி வோட்டுக்கும்... நேரம் கிடைக்கும்போது வாங்கோ.

   Delete
  2. சீராளன்-உங்கள் கவிதையை நான் எப்போதும் படித்து ரசிப்பேன். வாழ்த்துக்கள்.

   ஏன் காதல் இணைப்பினால், உயிர் மெலியவேண்டும் (நுடங்குதல்)? அது பிரிவினால் அல்லவோ நிகழவேண்டும்? 'தேக்கினால் நீரும் மாசாம்'-அருமை. 'நாக்கினால் கெட்ட மன்னன்'- வாக்கினால் கெட்ட மன்னனே தவிர, 'நாக்கினால் கெட்ட' என்ற சொற்றொடர், சாப்பிட்டதனால் கெட்ட என்ற பொருளைத்தான் தரும். அல்லது, கெட்ட சொற்களைச் சொல்லுவது என்ற பொருளைத் தரும். இதில் மன்னன் கெடவுமில்லை. கடைசி இரண்டு வரிகள் சிறப்பான பொருளைத் தரவில்லை.

   Delete
  3. ///நெல்லைத் தமிழன்Monday, September 18, 2017 9:18:00 am
   சீராளன்-உங்கள் கவிதையை நான் எப்போதும் படித்து ரசிப்பேன். வாழ்த்துக்கள்.///
   ஆவ்வ்வ்வ்வ் கர்ர்ர்ர்ர்ர்ர்:) என் கதையைவிட, சீராளனின் கவிதை நெல்லைத்தமிழனை மீள் வருகைக்கு ஆளாக்கிவிட்டதூஊஊஊஉ:) ஹா ஹா ஹா.. இன்னும் படிக்க விரும்பினால் இதோ அவர் தளம் போய்ப் படிச்சுப் பாருங்கோ.. ஆனா ஒன்று, அங்கு எப்பவும் அழுதழுதே கவிதை போடுகிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கவலையில் இருந்து வெளியே வரவே மாட்டாராம்.

   http://soumiyathesam.blogspot.com/.

   ஊசிக்குறிப்பு:
   அப்பூடித்தான் விடாதீங்கோ நெல்லைத்தமிழன்:).. எனக்கு மடக்கி மடக்கி கிளவி கேட்குமளவுக்கு ஹையோ அது கேள்வி கேட்குமளவுக்கு இவரின் தமிழ் புரிவதில்லை.. பட்ட் மீக்கு டமில்ல டி ஆக்கும்:)..

   தொடர்ந்து கேளுங்கோ.. ஹா ஹா ஹா..

   இப்பூடிக்கு:)...
   கவிதையில் டவுட் கேட்போரை ஆதரிக்கும் சங்கம்:)..

   Delete
 21. எனக்கில்ல.. இம்முறை மகுடம் எனக்கில்லை:))....

  பத்தாவது முறை தோற்றுக் கீழே விழுந்தவரை பூஸ் முத்தமிட்டுச் சொன்னதாம்:).. “ஒம்ம்ம்ம்ம்ம்பேஏஏஏஏஏஏஏது முறை எழுந்தவரல்லவா நீ?:” என:)).. அதனால விழுவது ஒன்றும் புதிசில்லை எனக்கு:) சரி அடுத்தமுறை கிடைச்சிடும் ஹா ஹா ஹா ....

  [im]http://file.thisisgame.com/upload/tboard/user/2014/08/05/20140805132618_2374.jpg[/im]

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு மகுடம் உங்களுக்கு வரும் ,தகுதிக்கு வந்தும் மகுடம் இன்னும் என்னிடம் வரவில்லை ,எனக்கு எனக்கு மட்டுமே இப்படி எல்லாம் நடக்கிறதோ :)
   தேசிக்காயோ என்னவோ சொல்வீங்களே ,ஸ்டாக் இருக்கா :)

   Delete
  2. ஹா ஹா ஹா பகவான் ஜி இதுக்கு உடன் பதில் கொடுக்காமல் இருக்க முடியவில்லை:) உங்கள் புலம்பல் நியாயமானதுதான்:)... ஆமா சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா?:)....

   ஹா ஹா ஹா ஸ்ரீராம் இம்முறை மகுடத்தைக் கழட்டவே மாட்டேன் என ஓடிப்போய் மொட்டை மாடியில் ஒளிச்சிட்டார்ர்ர்:)...தேசிக்காய் எல்லாம் அவருக்கு வேலை செய்யாது.... வேப்பங்குழை வைத்தியம்தேன்ன்ன்ன்:)...

   சத்துப் பொறுமையா இருங்கோ மகுடம் வந்திடும் கைக்கு:)... எனக்கு இம்முறை வாணாம் ஏனெனில் கில்லர்ஜி தட்டிப் பறிச்சிடுவார் கர்ர்ர்ர் :) அதனால நான் விட்டுக் குடுத்திடுறேன்ன்ன்ன் ஆவ்வ்வ்வ்வ்வ். அதிராவுக்கு என்னா பெரிய மனசு எனச் சொல்வது கேட்குது... இருக்கட்டும் இருக்கட்டும்:) எனக்குப் புகழ்ச்சி புய்க்கதூஊஊ:).

   Delete
 22. ம்ம்ம்... தெரிந்த கதை என்றாலும் உங்கள் பாணியில் படிக்க ஸ்வாரஸ்யம்.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ... ஸ்ஸ்ஸ்ஸ் உபூடிச் சொல்லப்பூடா:)...

   ஆஹா நல்ல கதையா இருக்கே.. எப்பூடி இப்பூடி எல்லாம் எழுதுறீங்க... இப்படித்தான் சொல்லோணும். ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 23. த ம 12
  மகுடம் ,உங்க தலைக்காவது வருமா ?இன்னும் சிறிது நேரத்தில் உங்க யோகம் எப்படின்னு தெரிந்து விடும் :)

  ReplyDelete
  Replies
  1. "அமைதிக்குப் பெயர்தான் 'சாந்தி' "..... ஹா ஹா ஹா மிக்க நன்றி பகவான் ஜி... அடுத்த வரிசையில் நான் தான் துண்டு போட்டு இடம்பிடித்திருக்கிறேன்:).. நீங்கள் பறிக்காமல் இருந்தால் சரி:).

   Delete
  2. #அடுத்த வரிசையில் நான் தான் துண்டு போட்டு இடம்பிடித்திருக்கிறேன்:#
   பதிவு ,உங்கள் தளத்தில் இருந்தால் மட்டுமே உங்களுக்கு ,அடுத்தவர் தளத்தில் இருந்தால் மகுடம் அவருக்குத்தானே :)

   நேற்றிரவு நான் கொர்ர்ர் ,மகுடம் என் தலைக்கு வந்ததா இல்லையா :)

   Delete
  3. //Bagawanjee KAMonday, September 18, 2017 8:37:00 am
   #அடுத்த வரிசையில் நான் தான் துண்டு போட்டு இடம்பிடித்திருக்கிறேன்:#
   பதிவு ,உங்கள் தளத்தில் இருந்தால் மட்டுமே உங்களுக்///

   பகவான் ஜீ இங்கே துண்டு போட்டு விட்டேன் எனச் சொன்னது.. என் இந்தப் பதிவையே குறிப்பிட்டேன்ன்.. இங்கேஎ இதைச் சொல்லும்வரை மகுடம் என் கைக்கு வரவில்லை.. காலையில்தான் வந்திருந்தது.

   //அடுத்தவர் தளத்தில் இருந்தால் மகுடம் அவருக்குத்தானே :)///

   ஹையோ பகவான் ஜீ... நமக்கு இங்கு கூடிப்பேசுவோரில் யாருக்குக் கிடைச்சாலும் சந்தோசம்தானே... நமக்குள் போட்டிதானே(செல்லப்போட்டி) உண்டே தவிர பொறாமை இல்லையே...

   //நேற்றிரவு நான் கொர்ர்ர் ,மகுடம் என் தலைக்கு வந்ததா இல்லையா :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடிக் குறட்டை விட்டால் உங்களுக்கு எப்பூடி வரும்.. வரவே இல்லை:).. நித்திரை கொள்ளாமல் விழிச்சிருந்து நானே பறிச்சுக்கொண்டேன்ன்ன்ன்:)).. இப்போ ஸ்ரீராம் என்னைப் பார்த்து முறைக்கிறார்ர்.. ஹையோ பீஸ்ஸ்ஸ் ஆராவது சேவ்வ் மீஈஈஈஈ:).

   Delete
  4. #நமக்குள் போட்டிதானே(செல்லப்போட்டி) உண்டே தவிர பொறாமை இல்லையே...#
   இப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் ,மைனஸ் வோட் போட்டு இருவர் (ஒருவரே / ஒருவளே கூட இருக்கலாம் )பொறாமை உண்டுன்னு நிரூபித்து விட்டார்களே :)இப்படி என்னை குறுக்கு வழியில் கவிழ்த்து என்ன அள்ளிக் கொள்ளப் போகிறார்கள் ?தமிழ் மணம் நம்பர் 1 ஆகவேண்டுமென்றால் அதற்காக உழைக்கட்டும் !கூட இருந்தே கழுத்தை அறுப்பேன் என்பது நியாயமா ?

   Delete
  5. எப்ப்பூடி ,செல்லப் போட்டியில் ,உங்களிடம் இழந்த மகுடத்தைப் பறிச்சிட்டேன்,
   இனிமேலாவது உங்க தோழி jessi வோட்டைப் போடச் சொல்லுங்க ,அமைதிக்கு பெயர்தான் ஜெச்சின்னு பாடிட்டுப் போறேன் :)
   பெட்டர் லக் நெக்ஸ்ட் டையம்:

   Delete
  6. ”சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு” பகவான் ஜீ.. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுது:).... கண்டதையும் நினைச்சு யாரையும் பகைக்காதீங்க... நான் நினைச்சேன்ன்.. ஏதும் பேஸ்புக் பிரச்சனையாக இருக்குமோ என.. ஏனெனில் இப்போ பெரும்பாலான பிரச்சனைகள் அங்கிருந்துதான் ஆரம்பமாகின்றன..

   இருப்பினும் இப்பூடி அழுதழுது:) அதிராவிடமிருந்து மகுடத்தைப் பிடுங்கிட்டீங்களே:) இது உங்களுக்கே ஞாயமாப் படுதோ?:) ஹா ஹா ஹா.. இப்போ மகுடம் உங்கள் தலையில் பகவான் ஜீ.. கவனிச்சீங்களோ தெரியல்ல.

   Delete
  7. Bagawanjee KAMonday, September 18, 2017 1:17:00 pm
   எப்ப்பூடி ,செல்லப் போட்டியில் ,உங்களிடம் இழந்த மகுடத்தைப் பறிச்சிட்டேன்,///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா இப்போதான் மெயில் பார்த்து கொமெண்ட் பப்ளிஸ் பண்ணினேன்:)..

   ///இனிமேலாவது உங்க தோழி jessi வோட்டைப் போடச் சொல்லுங்க ,அமைதிக்கு பெயர்தான் ஜெச்சின்னு பாடிட்டுப் போறேன் :)
   பெட்டர் லக் நெக்ஸ்ட் டையம்:///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:))..

   Delete
 24. அருமையான கதை அடுத்த தொடருக்காய் waiting

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் மிக்க நன்றி. அடுத்தது.. தோ ஓஓஓ வந்து கொண்டிருக்குது.. நீங்களும் உடனே வந்திடுங்கோ:)

   Delete
 25. ரொம்ப சுவாரஸ்யமாய் சொல்லி ....டக்குனு தொடரும் போட்டீங்க ....

  டூ பாட்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. அநேகமா இன்றே வெளிவந்திடும் அடுத்த பகுதி ஆனா முடிஞ்சிடுமோ இல்ல இன்னும் தொடருமோ?:) வெயிட் அண்ட் சீ:).. மிக்க நன்றி அனு.

   Delete
 26. இம்மாதிரி மூலக்கதையிலிருந்து எழுதியே ப்ளோக நிரப்பலாம் அத்தனை கதைகள் உண்டுஐடியவுக்கு பாராட்டுகள் பெயரை மாற்றினாலும் வாசகர்கள்கண்டுபிடித்து விடுவார்கள் என்பதையும் யூகிக்க முடிந்திருக்கிறதே ஊசி இணைப்பை ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா.. வாங்கோ.. அச்சச்சோ அப்பூடியெல்லாம் நினைச்சு போஸ்ட் போட வெளிக்கிட்டிடாதீங்கோ.. இது எத்தனையோ கதைகளுக்குள் என் மனம் கவர்ந்த கதை.. அதனால என்னைப்போல் தெரியாமல் இருப்போர் தெரிஞ்சு கொள்ளட்டுமே எனத்தான் ஆரம்பித்திருக்கிறேன்ன்.. முழுவதும் சொல்ல மாட்டேன்.. அந்த மகன் பற்றி மட்டும் சொல்ல விருப்பம்.. இப்படியும் ஒரு பிள்ளையா?:)).. மிக்க நன்றி.

   Delete
 27. ஆஹா தொடர் என்று சொல்லி படபடப்பைக்கூட்டிவிட்டீர்கள்! வல்லப்பன் இனித்தனிமரம் போலும்)))

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏன் நேசன் வல்லபனோடு ஒப்பிடுறீங்க உங்களை.. வீட்டில பூரிக்கட்டையால அடி வாங்கப்போறீங்க:).

   Delete
 28. அகல்யா எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கு! சிந்திப்போம் சினேஹாவிடம் கேட்டு)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அது உங்களோடு 10ம் வகுப்பில படிச்ச அகல்யாவாக இருக்கும்:).. ஸ்நேகாவோடு வட்ஸ்சப் லயோ கதைக்கிறனீங்க?:) இல்ல சும்மா ஒரு பொது அறிவுக்காகக் கேட்டேன்ன்:)

   Delete
 29. கவிதை வெட்டி ஒட்டுதல்கூட தனி அழகு))) பத்திரமாக கொப்பியை கொண்டுவந்துவிட்டீர்கள் தேம்ஸ் வரை)))

  ReplyDelete
  Replies
  1. அதை பாதுகாத்து கொண்டு வரப்பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.. அம்மா பேசுவா, ஆமி செக்கிங்கில் பயம் வேண்டாம் கொண்டு வராதே என, ஆனா அப்பா சொல்லுவார் இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன், விருப்பம் எனில் எடுத்துவா என.. இப்படியே பூனை குட்டி காவுவதைப்போலவே காவி.. இங்கும் கொண்டு வந்திட்டேன், ஆனா கொண்டு வந்ததன் பயனை இப்படி பப்ளிக்கில் போடும்போது அடைகிறேன்..

   மிக்க நன்றி நேசன்.. கெதியா வாங்கோ அடுத்த தொடர் படிக்க:).. வல்லபனுக்கு என்ன ஆச்சு என அறிய வாணாமோ?:).

   Delete
 30. துளசி: அதிரா கதை எங்கேயோ கேட்டது போல இருக்கே!!! சரி சரி பரவாயில்லை தமிழ்சினிமாலயே அப்படித்தானே எங்கேயோ கேட்டதை எடுக்கும் போது நாம மட்டும் எழுதக் கூடாதா என்ன நம்ம ஸ்டைல்ல..என்ன சொல்லறீங்க?!!! இடைவேளைக் கவிதை சூப்பர்.....தவளை அருமை...யெஸ் நெகட்டிவ் எண்ணங்கள் வாழ்க்கையையே புதைத்துவிடும்..!! சரி அடுத்த பார்ட்டுக்கு....

  கீதா: அதிரா இது எப்போ வந்துச்சு....இன்னிக்கு பார்ட் டு பார்த்துட்டுத்தான் இங்க வந்தா...ஓ மை காட் முதல் பாகம்....நான் உடல் நலம் சரியில்லாமல் 4 நாள் வலை வராத போது வந்துருக்கு போல. துளசி கமென்ட் வேற அனுப்பியிருந்தார் முதல் பார்ட்டுக்கு...அப்போதான் புரிஞ்சுது...சே இப்பல்லாம் கும்மி மிஸ்ஸிங்க்...இன்னும் பழைய ஃபார்முக்கு வரலை...நிறைய கமென்ட்ஸ் அடிக்க முடியலை..

  சரி சரி கதை பீஷ்மர் கதை போல இருக்கே!! கங்கே கங்கே!!!! என்று....இரண்டாவது பார்ட்டிற்குப் போறேன்... கவிதைப் பகிர்வு அருமை.....ஃப்ராக் சூப்பர்...அதைப் போலத்தான் நானும் அதிரா...காதில் ஹியரிங்க் எய்ட் அல்லொ...யாரேனும் நெகட்டிவாகப் பேசினால் நான் ஹியரிங்க் எயிடை எடுத்துவிடுவேன்....ஹாஹாஹாஹா....அப்போ எனக்கு எல்லாமே பாசிட்டிவாகத்தான் தோன்றும்...பிடிப்பதில்லை நெகட்டிவ் எண்ணங்கள்...

  ReplyDelete
 31. “ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” ;)))))

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.