நல்வரவு_()_


Thursday 21 September 2017

ண்ளால் ப்டியும் ம் டுக்முடியுமோ?:)

ஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்து யாரும் பயந்திடாதீங்கோ:) இந்தக் காலத்தில உங்களை யாரும் இப்படி சபதம் எடுக்கச் சொல்லிக் கேய்க்கவே மாட்டோம்:).

2ம் பகுதியிலிருந்து கதை தொடர்கிறது.. வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:).. இதன்
முதல் பாகம் படிக்க இங்கு..
2ம் பாகம் படிக்க இங்கு..

தூரத்திலே அப்பெண்ணிலிருந்து வரும் மல்லிகை வாசனையையும், அவ படகோட்டும் அழகையும் பார்த்து அப்படியே லயித்துப் போயிட்டார் வல்லபன்... அப்பெண்ணைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் எனும் எண்ணம் மனதில் அதிகமானது.  கரையிலே காத்திருந்தார்.. அது ஜமுனைக் கரையாம்... படகு வந்து ஆட்களை இறக்கியது, திரும்பும்போது வல்லபன் அதில் ஏறி அமர்ந்து கொண்டார்... வேறு யாரும் ஏற இல்லாமையால், இவரை மட்டுமே ஏற்றிக்கொண்டு, அப்பெண் திரும்பினா(பார்த்தீங்களோ இதுதான் விதி என்பது:)).

ஏறி அமர்ந்தவருக்கு மனம் துடித்தது, அப்பெண் அழகென மட்டுமில்லை ஏனோ அவருக்கு மிகவும் பிடித்து விட்டது, இப்பெண்ணை மணந்தால் என்ன?எனும் எண்ணம் அதிகமானது.. அவர்தான் பன்னாட்டு ராஜா ஆச்சே.. நினைத்தால் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம், அப்படியிருக்க இப்பெண்ணையே மனம் நாடியது. உடனே அப்பெண்ணிடம் சும்மா விபரம் கேட்டார்...

அதுக்கு அப்பெண் பதில் சொன்னா... என் பெயர் “பரிமளா”:) நான் ஒரு மீனவப் பெண், இப்படகை இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓட்டுவதுதான் என் தொழில், என் தந்தை ஊரிலே இருக்கிறார்.. என பெயர் விபரம் சொன்னா.

ஆனா உன்னைப் பார்த்தால் ஒரு மீனவப் பெண்போல இல்லயே, தேவலோகப் பெண்போலல்லவா இருக்கிறாய் என்றார். அதுக்கு அப்பெண் சொன்னா, முன்பு அப்படித்தான் இருந்தேன், என் படகிலே ஒரு மகரிஷி ஏறினார்.. அவர் கொடுத்த வரத்தினாலே இப்படி ஆகிட்டேன், என் பெயரும் மாற்றப்பட்டு விட்டது என.

உரையாடல் முடிஞ்சுது, எதுவுமே பேசாமல் வல்லபன் வீடு திரும்பிட்டார். வீட்டுக்கு வந்தவருக்கு எதுவும் சரியாக ஓடவில்லை, மனம் பறிபோய் விட்டது, அதனால் அடிக்கடி ஜமுனைக்கரைக்குப் போவார், படகில் ஏறிச் சவாரி போவார், திரும்பி வந்திடுவார்.. பரிமளாவோடு ஏதும் பேச மாட்டார்...

ஏனெனில் அவரின் மனதில் குழப்பம். மகனைப் பட்டத்து இளவரசன் என அறிவித்தாகிவிட்டது, மகனுக்கு பெண்தேட வேண்டிய வேளையில், எனக்கு எப்படிப் பெண் தேடுவது ??.. அவருக்கும் 50 வயதுக்கு கிட்ட வந்துவிட்டது.. புத்தி சொல்லியது .. இது தப்பு என, ஆனா மனம் சொல்லியது, அதனாலென்ன எனக்கொரு வாழ்க்கை தேவைதானே? இத்தனை காலமும் என்னத்தைக் கண்டு விட்டோம் என.

இப்படிப் போராட்டத்தின் மத்தியில், அவர் நேர்மையாகவே முடிவெடுத்தார், நேராகப் பரிமளா வீட்டுக்குப் போய், தந்தையிடம் பெண் கேட்கலாம் என.  தன் தேரிலே ஏறி, பரிமளா வீடு சென்றார்.. அது ஒரு குடிசை. குடிசை வாசலில், தேரில் இருந்து நாட்டின் அரசன் இறங்கி, வீட்டுக்குள் வருவதைக் கண்டதும், பரிமளாவின் தந்தைக்கு லெக்ஸ்ச்சும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல:).

வந்த வல்லபன் நேரே பெண் கேட்டார். தந்தைக்கோ சந்தோசம், என் மகள் உங்களுக்கு மனைவியாவதற்கு கொடுத்து வைத்தவ.... ஆனால் ஒரு கண்டிஷன் என்றார் தந்தை:)...

கண்டிஷன் எனும் சொல் காதில் விழுந்ததும் உஷாராகிட்டார் வல்லபன்:), ஏனெனில் ஏற்கனவே ஒரு கண்டிசனுக்கு கட்டுப்பட்டுத்தானே இவ்ளோ கஸ்டப்படுகிறார் இன்றுவரை:).  இருப்பினும் என்னதான் போடப்போகிறார் என நினைச்சு சொல்லுங்கள் என்றார்...

பெண்ணின் தந்தை சொன்னார், என் மகளை மணம் முடிச்சு, அதனால் பிறக்கும் குழந்தைக்கே, சொத்தும், அரச உரிமை.. நாடாளும் மன்னன் எனும் பதவி கொடுக்கப்பட வேண்டும். உங்கள் இப்போதைய மகன்  “விஷ்ணு” வுக்கு கொடுக்கக்கூடாது என...

இக் கண்டிஷனைக் கேட்ட வல்லபனுக்கு மனம் இடிந்து விட்டது, இது எப்படி சாத்தியமாகும், விஷ்ணுதான் அடுத்த அரசன் என முடிசூட்டுவிழாவும் நடத்தியாச்சே... அனைத்து திறமைகளையும் கொண்ட விஷ்ணு.. இருக்கும்போது, இன்னும் பிறக்காத குழந்தைக்காக எப்படி வாக்குக் கொடுக்க முடியும் என நினைச்சு, பெண் வேண்டாம் எனச் சொல்லி விட்டுத் திரும்பி விட்டார்.

சொல்லிவிட்டாரே தவிர, அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.... உண்ண முடியாமல், உறங்க முடியாமல், சரியாக தன் நாட்டைக் கவனிக்க கூட முடியாதளவுக்கு சோர்வடைந்து விட்டார். இதைக் கவனித்த மகனுக்கு தெரிந்துவிட்டது, தந்தைக்குள் ஏதோ ஒரு சோகம் இருக்கிறது என. ஆனா இப்படி ஒரு பிரச்சனை இருக்குமென எண்ணவில்லை.

நேரடியாகத் தந்தையிடம் கேட்டான் , அவர் வழமையான தந்தையர்கள்போல, இக்க்கதையை மகனிடம் எப்படிச் சொல்ல முடியும் என நினைச்சு, வேறு காரணம் சொல்லி மழுப்பி விட்டார். விஷ்ணுவால் சமாதானமடைய முடியவில்லை, ஏதோ இருக்கிறது என நினைச்சு.. நேரே தேரோட்டியிடம் போனார்.

ஏனெனில் கார் ட்றைவருக்குத்தான் தெரியும், கார் உரிமையாளர் எங்கெல்லாம் போகிறார் என:), அதேபோல அக்காலத்தில் தேரோட்டிகளுக்கே தெரியும் ராஜா எங்கெல்லாம் போகிறார் என. தேரோட்டிக்கு விபரம் தெரியாது, ஆனா அந்த மீனவ வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்தே இப்படி ஆகிவிட்டார் எனச் சொன்னார்.

உடனே விஷ்ணு தேரில் ஏறி, அவ் மீனவ வீட்டுக்கு போகும்படி சொன்னான், அங்கு போனதும் பரிமளாவின் தந்தையிடம் விபரம் கேட்டான். தந்தை நடந்ததைச் சொன்னார்.

உடனே விஷ்ணு சொன்னான், அரசாளும் உரிமை வேணும் எனில், என்னையல்லவா நீங்கள் கேட்டிருக்க வேண்டும், விட்டுக்கொடுக்கப் போவது நான் தானே... என் தந்தையின் சந்தோசம்தான் எனக்கு முக்கியம்... அதனால ..
இதோ சொல்கிறேன் கேளுங்கள்.. எனக்கூறி...

பூலோகம், தேவலோகம் என அனைத்துலகுக்கும் கேட்கும்படி தன் சபதத்தைச் சொன்னார்... 

என் தந்தைக்கும், உங்கள் மகள் பரிமளாவுக்கும்[பரிமளகந்தி], பிறக்கப் போகும் குழந்தைக்கே முழுச் சொத்தும், அரசாளும் உரிமையும் உண்டு, நான் எதிலும் குறுக்கே வரமாட்டேன், ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் வரலாம், எனக்குத் திருமணமாகி அதனால் வரும் வாரிசுகள் போட்டிக்கு வந்திடுமோ என, அச் சந்தேகம் வேண்டாம், நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்..

இன்னொரு சந்தேகமும் வரலாம், திருமணமாகாமல், என் மனம் தடுமாறி, இன்னொரு பெண்ணோடு உறவுகொண்டு, அதனால் குழந்தை தவறுதலாகப் பிறந்தால், அக்குழந்தை பங்குக்கு வந்திடுமே என.. அதுக்கும் சத்தியம் செய்கிறேன், மனதால்கூட எப்பெண்ணையும் நினைக்க மாட்டேன்..

[இன்னொன்று இருக்கிறது, அக்காலத்தில் அதிக வரமும், பலமும் பெற்றிருக்கும் மகரிஷிகளின் உடம்பிலிருந்து உயிரணுக்கள் வெளியே வந்தால்கூட, அதிலிருந்து குழந்தைகள் தானாக உருவாகுமாம்]... அதனால் விஷ்ணு தொடர்ந்தார்... நான் பெற்றிருக்கும் வரங்களினால், என் உடம்பிலிருந்து உயிரணுக்கள் வெளியே வர விடமாட்டேன், தியானத்தின் மூலம் அவற்றை வெளிவராமல் பண்ணுவேன்.. இவை அனைத்தும் சத்தியம்... இப்போ பெண்ணைக் கொடுங்கள் என்றார்.

இப்படி ஒரு சபதத்தை இதுவரை யாருமே செய்ததில்லை என்பதால், தேவலோகத்திலிருந்து தேவர்கள்.. “வீஷ்ம.. வீஷ்ம.. வீஷ்ம...” எனக் குரல் கொடுத்தார்கள்... விஷ்ம என்றால் பயங்கர.. என அர்த்தமாம்.. அதாவது பயங்கரமான சபதத்தை மேற்கொண்டவர் எனும் காரணத்தால் அவர் “வீஷ்மர்” எனும் பெயர் கிடைக்கப்பெற்றார்.. விஷ்ணு:).

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா, இச் சபதத்தை உங்களுக்கும் சொல்ல வேணும் என்றே, இக்கதையை எழுதத் தொடங்கினேன். அத்தோடு பெண்ணைக் கொடுத்தார், உடனேயே தேரிலே ஏற்றிச் சென்று தந்தைக்கு மணம் முடித்து வைத்தார்..

இப்போ தான், ஜி எம் பி ஐயாவின் லிங்கில் போய்ப் படிச்சு அறிஞ்சு கொண்டேன்.. இந்த, என் கதை நாயகன் வல்லபனுக்கும்:)[சந்தனு]... பரிமளாவுக்கும்[பரிமளகந்தி] பிறந்த மூத்த மகன் தான் திருதராஷ்டிரன் என்பதை.. ஹையோ ஹையோ:).

மிகுதியை மகாபாரதம் படிச்சு தெரிஞ்சு கொள்ளுங்கோ.. நன்றி வயக்கம்:) __()__

முடிவுற்றது:).

எனக்கொரு சந்தேகம், இவ்ளோ பெரிய, பயங்கரமான பிரமச்சரியத்தை மேற்கொண்டு, தந்தைக்கும் ஒரு நல்ல மகனாக இருந்த வீஷ்மருக்கு ஏன் கோயில் ஏதும் இல்லை?.. யாரும் இவரை நல்லவர் என வணங்குவதில்லை?.. ஏதும் மறைபொருள் காரணம் இருக்குதோ?... ராமன் மட்டும் எப்படிக் கடவுளாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்?.

ஊசிக்குறிப்பு:
இது.. மேஜராக(இது வேற மேஜர்:)) இருக்கும்சகோ சீராளன், நான் எழுதிய ஒவ்வொரு பகுதியையும் ... கவிதையில் அழகாகச் சுருக்கிச் சொன்னார்.. அதையும் இங்கே இணைக்கிறேன்.. மூன்றாம் பாகத்திற்கான கவிதையை பின்னூட்டத்தில் தருவார் என பிரித்தானிய பூஸ் வானொலி நிலையம் எதிர்பார்க்கிறது:).. மிக்க நன்றி சீராளன்.

பகுதி ஒன்று:-
வாக்கினால் இணைந்த காதல் 
...வலியதைச் சேர்த்த பாங்கை 

நோக்கினால் உள்ளம் வாடும் 

...நுடங்கியே உயிரும் ஆடும்

தேக்கினால் நீரும் மாசாம் 
...தெளிந்திடா வாழ்க்கை தூசாம் 
நாக்கினால் கெட்ட மன்னா 
...நலிந்திடல் வீழ்ச்சி கண்ணா....!


----------------------()()()()()()()()---------------------
பகுதி 2:-
எண்ணிய படிதான் வாழ்க்கை 
..இருந்திடு மென்ப தைப்போல் 

நண்ணிய மனையாள் விட்டு 

..நகர்ந்ததும் மன்னன் நாளும் 

கண்ணிய மெல்லாம் காத்துக் 
..கற்பிலே ஒழுகி நின்றான் 
திண்ணிய மனத்தில் அந்தத் 
..தேவதை நினைவு காத்தான் !


எட்டிரெண் டாண்டு போனால் 

..எழிலவள் வருவாள் என்றே 

கட்டினான் காதல் கோட்டை 

..கனவிலும் வளர்த்தான் நாட்டை 
முட்டிடும் விழிநீர் தன்னை 
..முகாரியாய் மறைத்த போதும் 
கட்டளை இட்டாள் தன்னைக்
..காணவே வாழ்ந்தி ருந்தான் !


வந்திடும் அவளைத் தன்பால் 

..வைத்திட நினைத்தான் மீண்டும் 

தந்திடும் மகனைப் பார்த்துத் 

..தயங்கியே அவளைக் கேட்டான் 
வெந்திடும் வார்த்தை இன்றி 
..விளக்கியே மறைந்து போனாள் 
அந்திடும் இருளைப் போலே 
..அடிமனம் கறுத்தான் மன்னன் !


அருங்கலை யாவும் ஊட்டி 

..அன்புடன் மகனைத் தந்தே 

பெரும்பணி முடிந்ததென்று 

..பிரிந்தவள் எண்ணி வாழ்ந்தால் 
அரண்மனை செழிக்கா தென்றே 
..அடிமனம் சொன்ன போதில் 
விரும்பிய மனையாள் தேடி 
..விரைந்தவன் கதையைக் கேளீர் !

உற்றவள் போன பாதை 

..உயிர்ப்புடன் இருந்தும்! ஆங்கே 

அற்பமாய் வந்து போனான் 

..அதனையும் மறந்தான்! பின்னே
கற்புளாள் காதல் தேடிக் 
..கரையினில் வந்தான் ! ஐயோ 
இற்றவன் மனத்தை மீண்டும் 
..எழுப்பிட வருவாள் யாரோ....?
======================================================================
ஊசி இணைப்பு:
முகிலிடை இருக்கும்வரை - நிலவு
ஒளியற்றுத்தான் இருக்கும்...
தத்துவம் தத்துவம்:).. இதனை பூஸ் ரேடியோவில் கேட்டு, இங்கே உங்களுக்காகக் காவி வந்தவர்:_ உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:).
AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
இதோ அதிராவுக்கு தமனா மகுடம் சூட்ட வரும் உங்களுக்காக:)
=====================================================================================



95 comments :

  1. Replies
    1. யேஸ்ஸ்ஸ் வாங்கோ அஞ்சு வாங்கோ.. முதலாவதாக வந்த உங்களுக்கு அந்த ஜமுனை ஆற்றைக் கடக்க இதோ ஒரு இலவச ரிக்கெட்:).. பரிமளகந்தியின் பேர்பியூம் வாசனையோடு நதியைக் கடவுங்கோ ஹா ஹா ஹா:)..

      Delete
    2. எனக்கு வாசனை பெர்பியூம் எல்லாம் ஆகாது :) என்னை மயங்கி விழ செஞ்சி தண்ணியில் தள்ளிவிட ட்ரை பண்றீங்க அது நடக்காது :)

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நீங்கதான் என்னைவிட:) அயகா நீந்துவீங்களே அஞ்சு.. பிறகென்ன பழம் சே..சே... பயம்:))

      Delete
  2. அடடா !!பீஷ்மர் தானா அந்தமகன் :) சூப்பர் ..
    முந்தி முந்தி காலத்தில் எங்க மங்கையரற்கரசி டீச்சர் அஸ்வத்தாமன் திருதராஷ்டிரன் கதையெல்லாம் சொல்வாங்க இதையும் சொல்லியிருப்பாங்க :) நானா தான் மறந்திருப்பேன் இப்போ நினைவுக்கு வந்திருச்சு

    ReplyDelete
    Replies
    1. எனக்கிது படிச்சதா எப்பவுமே நினைவில்லை அஞ்சு.. நான் படிச்சது எல்லாம் பாண்டவர் கதையும் யுத்தமும்தான்...

      Delete
  3. //பிறந்த மூத்த மகன் தான் திருதராஷ்டிரன் என்பதை.. ஹையோ ஹையோ:).

    மிகுதியை ராமாயணம் படிச்சு தெரிஞ்சு கொள்ளுங்கோ/

    ????????????????????

    ReplyDelete
    Replies
    1. பூஸாருக்குச் சொல்லிட்டேன்...மகாபாரதம்னு..ஹாஹாஹா

      கீதா

      Delete
    2. மாறி எழுதிட்டேன் அஞ்சு.. கீதா சுட்டிக் காட்டியதும் மாத்திட்டேன் அது மகாபாரதம்.. யூ ரியூப்பில் , ஒன்லைனில் வாசிக்கவும்.. எல்லா இடமும் நிறையவே இருக்கு.. நமக்குப் பிடித்ததைத் தேடிப் படிக்கலாம் கேட்கலாம்...

      Delete
    3. ஹா ஹா ஹா கீதா அது டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்ச்:).. எங்கள்புளொக்ல ராமாயணம் படிச்சே மனதில அது பதிஞ்சுபோச்ச்ச்ச்:) ஹா ஹா ஹா:)

      Delete
    4. கீதா :) அதுக்குதான் கேள்விக்குறி போட்டு கேட்டேன் ராமாயணமான்னு :) ஹா ஹா
      திரிதராஷ்டிரன் எங்கே ராமாயணத்தில் வந்தார்னு எனக்கு தலையே சுத்திடுச்சி

      Delete
    5. ஹா ஹா ஹா அஞ்சு மீ சுவீட் 16 எல்லோ?:) எனக்கு எதுவும் நேரடியாச் சொன்னால்தான் புரியும்:).. மறைமுகமாக சொன்னால் புரிந்துகொள்ளவே மாட்டேன்ன்.. நல்ல விதமா எடுத்திட்டுப் போயிடுவேன்:))

      உங்கள் கேள்விக்குறி பார்த்து நினைச்சேன்ன்.. எங்கு படிக்கலாம் எனக் கேட்கிறீங்க என ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:).. இண்டைக்கு இதனால நெல்லைத்தமிழனுக்கு திருப்பதி லட்டு கிடைச்சதைப்போல ஆச்ச்ச்ச்:).. வேலை பிசியிலும் டொமார் எனக் களம் குதிச்சிட்டார்ர் கீழே ஹா ஹா ஹா ஆண்டவா எப்பூடித்தான் ஜமாளிக்கப்போறேனோ தெரியல்லியே:))

      Delete
  4. எங்கோ வட நாட்டில் பீஷ்மருக்கு கோவில் இருக்குன்னு டீச்சர் சொன்னாங்க ..
    இருங்க யாராச்சும் சொல்வாங்க பின்னூட்டத்தில்

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஏஞ்சல் அலகாபாத்தில் இருக்கிறது. இடம் பெயர் தாராகஞ்ச் என்று நினைக்கிறேன். ரொம்பப் புராதானக் கோயில் என்று சொல்ல முடியாது...அது ஒரு தனிநபரால் கட்டப்பட்டது...என்று வாசித்த நினைவு...

      கீதா

      Delete
    2. விஷ்ணு கோயில்கள் இருக்கிறது.. வீஷ்மருக்கு இருக்கோ தெரியவில்லை.. யாரும் வீட்டில் படமேதும் வைத்திருந்தும் நான் இதுவரை பார்க்கவில்லை. யேஸ் ஆரும் சொல்லீனமோ பார்ப்போம்.. மிக்க நன்றி அஞ்சு.. ரிக்கெட் பத்திரம்:)..

      Delete
    3. புதிய தகவல் கீதாக்கா.

      Delete
    4. வாங்கோ ராஜி.. வருகைக்கு நன்றி.

      Delete
  5. மிகுதியை ராமாயணம் படிச்சு தெரிஞ்சு கொள்ளுங்கோ.. நன்றி வயக்கம்:) // அதிரா என்னாது இது கதையையே மாத்திட்டீங்களே!!! ராமாயணமா? ஹலோ இது மகாபாரதமாக்கும்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. ஹையோ இந்தக் கொமெண்ட் படிச்சு பிடரியில் பின்னங்கால் அடிக்க ஓடி வந்தேன்ன்ன் தோஓஓஓஓஒ மாத்திடுறேன்ன்... ஹா ஹா ஹா மிக்க நன்றி மாத்தி விடுறேன்.. வாயில் அப்படி வந்திடுச்சு எழுதும்போது..

      Delete
  6. இதுக்கு, கதை தெரியாத ஏஞ்சலின் முதல் பின்னூட்டம் போட்டது சரிதான். கொஞ்சம் காத்திருந்தால் நல்லா ஓட்டியிருக்கலாம்.

    விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா முறை என்று சொன்னான் எனச் சொல்லுவார்கள். அது எப்படி ஒருத்தர் அப்படிச் சொல்லுவார் என நினைத்தேன். இந்த இடுகையைப் படித்தபின்பு, அப்படியும் ஆட்கள் உண்டுன்னு தோணித்து.

    மகாபாரதத்தின் ஆரம்ப மற்றும் முக்கியமான கதையைச் சொல்லிவிட்டு, மீதியை ராமாயணம் படித்துத் தெரிந்துகொள்ளவும்னு சொல்லியிருக்கீங்களே... இது நியாயமா? இதுலவேற ஜி.எம்.பி. சாரின் இடுகைகளைவேறு படித்தீர்களாம். பீஷ்மர், கடைசியில் கண்ணனோடுதான் தொடர்பில் இருந்தார் (தூது, போர், கடைசி காலம் என்று). கண்ணனுக்கு மட்டும் கோவிலா என்று கேட்டிருந்தால் கொஞ்சம் லாஜிக் இருக்கும். பீஷ்மரை ராமனோடு compare செய்திருக்கிறீர்களே. அநியாயத்துக்கு ஒரு அளவில்லையா?

    "முகிலிடை இருக்கும் நிலவு ஒளியற்று"-- இதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா? சமீபத்தில்தான் இருவர், தங்கள் முகம் நிலவுபோல, சங்குக் கழுத்து என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அதுக்கு சிலர், (பொறாமையில்?) அமாவாசை நிலவு என்று பதில் சொன்னமாதிரி ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. //தியை ராமாயணம் படித்துத் தெரிந்துகொள்ளவும்னு சொல்லியிருக்கீங்களே... இது நியாயமா?//
      yes thats why i put ..??????????????????

      Delete
    2. விடாதீங்க நெல்லை தமிழன் நல்லா ஓட்டுங்க :) நான் கேள்வி குறி போட்டு ங்கே போட ட்ரை செஞ்சிட்டிருந்தேன்

      Delete
    3. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. ஹா ஹா ஹா அதிராவை ஓட்டுவதற்காகவே இம்முறை அதிரடியாக் களம் இறங்கிட்டீங்க:).. எனக்குத்தான் அடிக்கடி டங்கு ஸ்லிப் ஆகுமே:)) அப்பூடி இங்கும் ஸ்லிப் ஆகிப்போச்சூஉ.. அதிராவோ கொக்கோ:) ஒரே ஓட்டமாக ஓடிப்போய் மாத்திட்டேன் மகாரதம் என ஹா ஹா ஹா:)..

      ///இதுக்கு, கதை தெரியாத ஏஞ்சலின் முதல் பின்னூட்டம் போட்டது சரிதான்.///

      ஹா ஹா ஹா இதுதான் இன்றைய ஹொட் நியூஸ்ஸ்ஸ் ஹையோ ஹையோ.. இதுக்குத்தான் பலதடவை சொல்லிட்டேன்ன்ன்.. பன்றியோடு சேர்ந்து பசுவும் பழுதாகப் போகுதென:) அது இன்று நடந்திடுச்சூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)..

      Delete
    4. //விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா முறை என்று சொன்னான் எனச் சொல்லுவார்கள். அது எப்படி ஒருத்தர் அப்படிச் சொல்லுவார் என நினைத்தேன். இந்த இடுகையைப் படித்தபின்பு, அப்படியும் ஆட்கள் உண்டுன்னு தோணித்து.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) “மூத்தோர் சொல் வார்த்தை எல்லாம் முன்னர் பொய்யாகும்:), காலம் வந்து பாடம் சொன்னால் பின்னர் மெய்யாகும்”:).. ஹா ஹா ஹா:).. சரி சரி ரெண்டுமே சரித்திரக் கதைகள்தானே:) அஜீஸ் பண்ணுங்கோ:)..

      ///பீஷ்மர், கடைசியில் கண்ணனோடுதான் தொடர்பில் இருந்தார் (தூது, போர், கடைசி காலம் என்று). கண்ணனுக்கு மட்டும் கோவிலா என்று கேட்டிருந்தால் கொஞ்சம் லாஜிக் இருக்கும். பீஷ்மரை ராமனோடு compare செய்திருக்கிறீர்களே. அநியாயத்துக்கு ஒரு அளவில்லையா?///

      ஹையோ இல்ல இல்ல.. அப்படி இல்ல.. நானும் ஸ்ரீராம ஜெயம் எழுதி நம்பிக்கை வைத்துக் கும்பிடுறேன் ராமரை, ஆஞ்சநேயரை... இருப்பினும் எனக்கு ஒரு டவுட்.. ராமரை பதிவிரதன்... தந்தை தாயின் சொல்லை மீறாதவர்.. அடுத்த பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவர் என்பதாலதானே அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.. எனும்போது..

      பீஷ்மர் அதைவிட இங்கு உயர்வாக தெரிகிறாரே என எண்ணினேன்.. அப்போ முழுக்கதையையும் அலசி ஆராய்ந்து விட்டுத்தான் பேசோணும் போல:)).. சரி இப்போ புரிகிறது... ஆனா மகாபாரதம் படித்து முடியுமா?.. முடிவு இருக்குதோ..

      Delete
    5. ///"முகிலிடை இருக்கும் நிலவு ஒளியற்று"-- இதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா? சமீபத்தில்தான் இருவர், தங்கள் முகம் நிலவுபோல, சங்குக் கழுத்து என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அதுக்கு சிலர், (பொறாமையில்?) அமாவாசை நிலவு என்று பதில் சொன்னமாதிரி ஞாபகம்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை எல்லாம் ஒழுங்கா நினைவு வச்சு அப்பப்ப கொழுவி விடப்பார்க்கிறீங்க:)).. அதுதான் நடக்காது:) ஏனெனில் அஞ்சுவுக்கு தத்துவங்கள் பெரிதா புரிவதுமில்லை:) பெரிதாக ரசிப்பவர்போலவும் தெரிவதில்லை:).. கீதா பிசிபோல:) ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த பேரீச்சை மரத்தடியில புதைச்சிடுங்கோ:)..

      ஏற்கனவே என்னால, தானும் ராமாயணம் பேசி மாட்டிட்டமே எனக் கொலை வெறியோடிருக்கிறா அஞ்சு:) ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி நெ.த.

      Delete
    6. ////AngelinThursday, September 21, 2017 11:46:00 am
      //தியை ராமாயணம் படித்துத் தெரிந்துகொள்ளவும்னு சொல்லியிருக்கீங்களே... இது நியாயமா?//
      yes thats why i put ..??????????????????//

      ஹா ஹா ஹா இப்போ குதிச்சு என்ன ஆகப்போகுது அஞ்சு?:) உங்கட குவெஷ்ஸன் மார்க் பார்த்து, மீ நினைச்சேன்ன் எங்கே எங்கே இதெல்லாம் இருக்குது எனக் கேட்கிறீங்க என:) ஹா ஹா ஹா நீங்களும் கொஞ்சம் டவுட்டோடுதான் இருந்திருக்கிறீங்க இது ம்.பாரதமா இல்ல ராமாயணமோ என.. ஹா ஹா ஹா இதில நெல்லைத்தமிழனை ஓட்டச் சொல்லி பூஸ்ட் வேறு குடுக்கிறா கர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா:).

      Delete
    7. /ஏனெனில் அஞ்சுவுக்கு தத்துவங்கள் பெரிதா புரிவதுமில்லை:) பெரிதாக ரசிப்பவர்போலவும் தெரிவதில்லை:).. கீதா பிசிபோல:) ஹையோ படிச்சதும் கிழிச்சு அந்த பேரீச்சை மரத்தடியில புதைச்சிடுங்கோ:)..

      ஏற்கனவே என்னால, தானும் ராமாயணம் பேசி மாட்டிட்டமே எனக் கொலை வெறியோடிருக்கிறா அஞ்சு:) ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி நெ.த. /

      ஹையோ உண்மையில் என் கண்ணில் படவேயில்லை :)

      நான் அந்த ராமாயணம் விஷயத்திலேயே இருந்தேன் :)
      @மியாவ் வேணாம் அப்புறம் அந்த மெயில் அப்படியே காபி பேஸ்டு வேன் இங்கே :)
      நான்தான் முதல்ல கண்டுபிடிச்சேன் அந்த மிஸ்:)மியாவ் டேக்கை :)

      Delete
    8. ///@மியாவ் வேணாம் அப்புறம் அந்த மெயில் அப்படியே காபி பேஸ்டு வேன் இங்கே :)
      நான்தான் முதல்ல கண்டுபிடிச்சேன் அந்த மிஸ்:)மியாவ் டேக்கை :)//

      ஹா ஹா ஹா கர்:) என்னைப்பற்றி உங்களுக்கு நன்கு தெரியுமெல்லோ?:) பிறகெதுக்கு குவெஷ்ஸன் மார்க் போட்டு... கோர்ட்வேர்ட்ல:) கேக்க நினைச்சீங்க ஹா ஹா ஹா.. நேரடியா சொல்லியிருந்தால் மட்டுமே புரியுமாக்கும் ஏனெனில் நான் படுபயங்கரமா.. சபதம் பற்றி மின்னல் முழக்கத்தோடிருந்த நேரம் அது ஹா ஹா ஹா..

      இருப்பினும் அஞ்சு.. ஒரு 15 நிமிடத்துக்குள் திருத்தி விட்டேன்ன்ன்.. ஆனா பாருங்கோ அதுக்குள் 7 கடல் தாண்டி விட்டது இந்த ராமாயணக் கதை ஹா ஹா ஹா அவ்ளோ ஸ்பீட்டு:))

      Delete
  7. பாண்டவர்களுக்குக் கோவில் உண்டு. கௌரவர்களுக்கு, அதிலும் துரியோதனனுக்குக் கோவில் கிடையாது. வீடமர் (பீஷ்மர்) நல்லவர், ஆனால் சூழ்நிலைக் கைதியாகி (கட்டப்பா இவரை வைத்துதான் உருவாக்கினார்கள்-பாஹுபலியில். அதில் அவர் நல்லவர் பக்கம் இல்லை, அரசு பக்கம்தான். பாஹுபலி-தர்மன் நல்லவன் என்றபோதும் பல்லாளன்-துரியோதனன் பக்கம் நின்றான்) தவறுகளின் பக்கம் நின்றார். வீடமருக்கு, அவருடைய உயர்ந்த குணத்தால், தான் விரும்பியபோது மரணத்தைப் பெறும் வரம் பெற்றிருந்தார்.

    ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பாஆஆ முடியலை.... அதிராவுக்கு மகாபாரதம் கிளாஸ் எடுத்து.

    நீங்க சொன்ன பகுதிக்கு அப்புறம் வரும் கதை, இந்தக் காலத்தில் நாம டைஜஸ்ட் பண்ணமுடியாது. (திருதராஷ்டிரன், பாண்டு, விதுர்ர் பிறப்பு)

    ReplyDelete
    Replies
    1. ஓ மிகுதியைத் தொடர்ந்து கேட்டால்தான் புரியும் என நினைக்கிறேன்ன்:))

      //அவருடைய உயர்ந்த குணத்தால், தான் விரும்பியபோது மரணத்தைப் பெறும் வரம் பெற்றிருந்தார்.//
      யேஸ்ஸ் இது அறிஞ்சேன்ன்ன்.. பரிமளாவை தேரில் ஏற்றிச் சென்று தந்தையிடம் ஒப்படைத்தபோது, மகனின் பெருந்தன்மை பார்த்து தந்தை கொடுத்த வரம்..”நீயாக விரும்பிக் கேட்டால் ஒழிய.. உனக்கு மரணம் வராது”.. என்பது.

      Delete
    2. ///ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பாஆஆ முடியலை.... அதிராவுக்கு மகாபாரதம் கிளாஸ் எடுத்து.//

      ஹா ஹா ஹா இந்தாங்கோ மங்கோ லஸி.. சூடா இருக்கு குடிச்சிட்டுத் தொடருங்கோ பிளீஸ்ஸ்:)).. இல்ல நெ.தமிழன்.. எனக்கும் பாரதக் கதை தெரியும் எனும் எண்ணத்தோடுதான் இருந்தேன் இவ்ளோ காலமும்.. ஆனா பாருங்கோ இப்போ இந்த சபதம் எழுதப்போய் நிறைய விசயங்கள் தெரிய வருது...

      திருதராஷ்டிரன் கதையிலிருந்து பாண்டவர் கதை.. யுத்தம் .. இப்படிச் சில பகுதிகள்தான் படித்தோம்..

      //நீங்க சொன்ன பகுதிக்கு அப்புறம் வரும் கதை, இந்தக் காலத்தில் நாம டைஜஸ்ட் பண்ணமுடியாது. (திருதராஷ்டிரன், பாண்டு, விதுர்ர் பிறப்பு)///

      தொடர்ந்து கேட்கப்போகிறேன் மிகுதியை.. ஓம் திருதராஷ்டிரனுக்கு ஏன் கண் தெரியாமல் போனது என்பதற்குக் காரணம் கேட்டு ஃபிரீஸ் ஆகினேன்ன் படிக்கும்போது... அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.

      Delete
  8. "வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:)."

    அதிரா. நீங்க போட்டிருப்பது சாதாரண கவனக்குறைவு இல்ல. ராம்சே ரெஸ்டாரன்டுக்குப் போய், ஐயங்கார் புளியோதரை ஒரு பிளேட் ஆர்டர் செய்வது போன்றது.

    ReplyDelete
    Replies
    1. நான் இந்த டவிட்டை அவங்ககிட்ட மெயிலில் கேட்டேன் :)
      அப்பவும் இந்த பூனைக்கு புரியல்லியே :))

      விளங்காம அந்த சபதத்தை பற்றி எக்ஸ்பிளேயின் செய்றாங்க :)

      Delete
    2. ஹா ஹா ஹா இன்று அங்கும் இங்கும் என்னால சிரிச்சே முடியுதில்ல.. ஹா ஹா ஹா:))

      //வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:)."///

      என்னைப்பற்றி எனக்குக் கொஞ்சம் தெரிஞ்சமையாலயே இதை ஆரம்பமே போட்டு வச்சேன்ன்.. அப்பவும் காலை வாரி விட்டிட்டுதே:)).. இப்போ எல்லோரும் சபதத்தை மறந்துபோயிட்டினமே கர்ர்ர்:))
      [im]http://www.taurusarmed.net/forums/attachments/funny-farm/111065d1425351047-blonde-joke-you-ve-never-heard-before-cat-laughing.jpeg[/im]

      Delete
    3. நெல்லைத்தமிழன் இன்னிக்கு உங்களுக்கு நல்ல சான்ஸ் இதை விட்டுராதீங்க :) எவ்ளோ அடிக்கலாமா அடிங்க :)
      நான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கிறேன்

      Delete
    4. ///AngelinThursday, September 21, 2017 12:02:00 pm
      நான் இந்த டவிட்டை அவங்ககிட்ட மெயிலில் கேட்டேன் :)
      அப்பவும் இந்த பூனைக்கு புரியல்லியே :))

      விளங்காம அந்த சபதத்தை பற்றி எக்ஸ்பிளேயின் செய்றாங்க :)///

      ஹா ஹா ஹா அர்ச்சுனன் கண்ணுக்கு குருவியின் தலை மட்டுமே தெரிஞ்சுதாமே:).. அப்பூடித்தான் எனக்கு சபதம் மட்டுமே தெரிஞ்சுது அது டப்பாஆஆஆஆஆ?:) ஹா ஹா ஹா:)

      Delete
    5. //AngelinThursday, September 21, 2017 12:05:00 pm
      நெல்லைத்தமிழன் இன்னிக்கு உங்களுக்கு நல்ல சான்ஸ் இதை விட்டுராதீங்க :) எவ்ளோ அடிக்கலாமா அடிங்க :)
      நான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கிறேன்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) விடுப்ஸ் பார்க்கிறதில என்னா ஒரு சுவை:) தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்.. ஒழுங்கா உள்ளே புகுந்து, என் சபதம் பற்றி ஐ மீன் வீஷ்மர்:) பத்து வரி சொல்லோணும் சொல்லிட்டேன்ன்:))

      Delete
  9. Apart from this, ஒரு சபத்த்தால் inspire ஆகி, மூன்று இடுகைகளை ஆர்வத்துடன், கதை பாணியில் வெளியிட்டமைக்கு உங்களுக்குப் பாராட்டுகள் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. ம்ிக்க மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. எனக்கு இப்படி சரித்திரக் கதைகளைச் சொல்லி அரைச்ச மாவையே அரைப்பதில் விருப்பமுமில்லை, ஆர்வமுமில்லை... ஆனா முதல் தடவையாக இச்சபதம் பற்றிக் கேட்டபோது.. அதுவும் இதைச் சொன்ன பேச்சாளரும் மிகவும் அருமையாகச் சொல்லி மெய்சிலிர்க்க வச்சிட்டார்ர்.. அதனால எழுதத் தோணியது..

      இன்னொன்று எழுதியமையாலதான் நிறைய டவுட்ஸ் களும் கிளியர் ஆச்சு.. பல புதுத்தகவல்களும் கிடைச்சது. மிக்க நன்றி அனித்துக்கும்.

      Delete
  10. # அவர் கொடுத்த வரத்தினாலே இப்படி ஆகிட்டேன்#
    தேவலோகப் பெண் மீனவப் பெண் ஆவது வரமா ,சாபம் அல்லவா :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இல்ல நீங்க சரியா கவனிக்கவில்லை என் கதையை.

      மீனவப் பெண் தான் தேவலோகப் பெண்போல ஆக்கப்பட்டாவாம். முன்பு அவவின் பெயர் “மச்சகந்தி” எனவும்.. இப்போ அவவின் பெயர் “பரிமளகந்தி” எனவும் சொல்லப்படுது.... அவவில் முன்பு மீன் வாசம்தான் அடிக்குமாம்.. இப்போ மல்லிகைவாசம் வருகிறதாம்.

      மச்ச...மச்சம்.. என்றால் அசைவம் எனப் பொருள்படும்.

      பரிமளம் என்றால்.. நறுமணம் எனப் பொருளாகுமாம்.

      பாருங்கோ.. பாரதம் நிகழ்ந்தது தமிழ்நாட்டில, ஆனா பாரதத்தில் பாவித்த மொழிகளை.. நாம் இலங்கையில்தான் பாவிக்கிறோம்...

      அதாவது நாம் அசைவம் எனப் பாவிப்பதில்லை.. மச்சம் என்றே சொல்லுவோம்... இன்று அசைவம் சமைத்தோம் எனில்.. இன்று மச்சம் சமைத்தோம்.. இவை மச்சப் பாத்திரங்கள்... மச்ச மணம் வருகிறது.. இப்படித்தான் பேசுவோம்.

      மிக்க நன்றி பகவான் ஜி.

      Delete
  11. இந்த இடுகைக்காக மேலே 'I just Stop by to say Hello' என்ற பூனைப் படத்தைப் பார்த்த உடன், எனக்குத் தோன்றியது,

    அதிரா, காசு செலவழிந்துவிடப் போகிறதே என்பதற்காக, கண்ணாடிக்குப் பின்னால், பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து, பூனையை, கண்ணாடிக்கு அந்தப் பக்கம் வைத்திருக்கிறார். பாவப்பட்ட பூனை, பாலைக் குடிக்கிறோம் என்று நினைத்து கண்ணாடியை நக்கிக்கொண்டிருக்கிறது. அது சோர்ந்தவுடன், பாலை, குளிர்சாதனத்தில் வைத்துவிட்டு, அடுத்த வேளைக்கும் இதேபோல் செய்வார் என்று எனக்குத் தோன்றியது.

    ஏஞ்சலின்/கீதா ரங்கன் - பூனை ஹலோ என்று சொல்கிறதுபோல் உங்களுக்குத் தோணுதா, இல்லை நான் சொன்னதுதான் உண்மையாயிருக்கும் என்று தோணுதா? உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். (என் கருத்தில் தவறிருந்தால் திருத்திக்கொள்ளலாம் இல்லையா?)

    ReplyDelete
    Replies
    1. @நெல்லைத்தமிழன் :))
      ஹாஹாஆ :)
      எனக்கு பூனை நம்மை பார்த்து ஹலோ சொல்ற மாதிரி தோணல்ல ..
      //வெவ்வ்வே // னு சொல்ற மாதிரியிருக்கு :)) அப்புறம் //Nah Nah Nah, Nah Nah Nah Nah// சொல்ற மாதிரியும் இருக்கு





      Delete
    2. அதிரா... நகைச்சுவையா எடுத்துக்குங்க. கோபப்படாதீங்க.... சும்மா கலாய்த்தேன். எனக்குத் தெரியும் உங்கள் எல்லோருக்கும் 4 கால் பிராணிகளிடம் அன்பு ரொம்ப ஜாஸ்தி என்று.

      Delete
    3. ///நெல்லைத் தமிழன்Thursday, September 21, 2017 2:42:00 pm
      அதிரா... நகைச்சுவையா எடுத்துக்குங்க. கோபப்படாதீங்க...//

      கோபமா?:)) சே..சே... நில்லுங்கோ இன்று நேரம் போதவில்லை.. நாளைக்கு வந்து பாலைவன மணலில் உருட்டி விடுறேன்.. அஞ்சூஊஊஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்:) நனனனாஆஆஆஆ பாடியது போதும் பிளீஸ் யெல்ப் மீ 2 உருட்ட:) ஹா ஹா ஹா:)

      Delete
    4. //பாவப்பட்ட பூனை, பாலைக் குடிக்கிறோம் என்று நினைத்து கண்ணாடியை நக்கிக்கொண்டிருக்கிறது. அது சோர்ந்தவுடன், பாலை, குளிர்சாதனத்தில் வைத்துவிட்டு, அடுத்த வேளைக்கும் இதேபோல் செய்வார் என்று எனக்குத் தோன்றியது.

      ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்றதையும் சொல்லிப்போட்டு, கோபப்படாதீங்க என வேறு சொல்றீங்களோ?:)... நான் சொன்னேனே உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி என...:) எங்களைப்போலவே:)..

      எங்க வீட்டுப் பூஸார் பால் குடிக்க மாட்டா..:) கண்டது நிண்டது சாப்பிட மாட்டா.. சரியான பொஸ் லேடி:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  12. மறுமொழிகள் கடக்க மூச்ச வாங்குது த ம 7

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ புலவர் ஐயா... மூச்சு வாங்கினாலும் விடாது கடந்து.. வோட் போட்டிட்டீங்கள்.. ஹாஅ ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  13. //அதனால் பிறக்கும் குழந்தைக்கே, //

    ஓ.. இதுதான் கண்டிஷனல் கரு!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. அங்கயும் இங்கயும் கால் வச்சு ஓடியதால்.. உடன் பதில் தர முடியவில்லை.. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்போல.. அடுத்த கதைக்கான கண்டிஷனல் கரு செலக்ட் பண்ணிட்டீங்களோ?:)

      Delete
  14. //உண்ண முடியாமல், உறங்க முடியாமல், //

    அவர் வல்லபன் அல்ல, ஜொள்ளபன்!

    ReplyDelete
    Replies
    1. //அவர் வல்லபன் அல்ல, ஜொள்ளபன்!//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்படிச் சொல்லக்கூடாது, நாம் நலமாக இருக்கும்போது அடுத்தவரின் வலி நமக்குப் புரிவதில்லை.. அவரின் இடத்தில் இருந்து யோசிக்கும்போது.. அவர் பாவம்தானே.. அதில் பெரிதாக தவறிருப்பதாக எனக்குத் தெரியவில்லை...

      மனைவி இருக்க, இன்னொரு பெண்ணை ரகசியமாக பார்த்தால் ஜொள்ளு எனலாம்:).. என நினைக்கிறேன்.

      Delete
  15. /முன்பு அப்படித்தான் இருந்தேன், என் படகிலே ஒரு மகரிஷி ஏறினார்.. அவர் கொடுத்த வரத்தினாலே இப்படி ஆகிட்டேன், என் பெயரும் மாற்றப்பட்டு விட்டது என.//

    ஏனப்பா... ஜொள்ளபா... அந்த வரம் ஏன் கிடைத்தது என்று அவளிடம் கேட்கக் கூடாதோ!

    :)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எதுக்கு என் கதைநாயகன் மிஸ்டர் வல்லபன்:) மீது இவ்ளோ கோபம்:).. 50 வயதில் 20 வயசுப் பெண்ணை மடக்கி விட்டாரே என்றா?:) ஹா ஹா ஹா ஹையோ... கடவுளே... நான் தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்ன்:))..

      அவர் கேட்டிருப்பார் நான் தான் கதையைப் பெருப்பிக்க விரும்பவில்லை:)... என் கதையின் ஜீரோவை:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. ஹீரோ வைக் குறை ஜொள்ளப்பூடாது ஜொள்ளிட்டேன் ஹா ஹா ஹா:)..

      Delete
  16. கவிதை எல்லாம் எழுத்தச் சொல்லிக் கேட்கிறேனே தவிர, எனக்கும் கவிதை என்றால் அலர்ஜிதான். அதுவும் இந்த மாதிரி இலக்கணங்களுக்குட்பட்ட கவிதை எனக்கு வரவே வராது! நெல்லைத்தமிழன் பாராட்டிச் சொல்லியதிலிருந்து திரு சீராளன் அவர்களின் கவிதையை ஆங்காங்கே பின்னூட்டத்தில் படித்து வருகிறேன். நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கவிதை ரொம்பப் பிடிக்கும்.. அதிலும் நாம் கதைப்பதைப்போலவே கவிதையாக சொல்வதுதான் பிடிக்கும்...

      உண்மைதான் எனக்கும் அப்படித்தான் இலக்கணம் வராது அத்தோடு அப்படிக் கவிதைகள் புரிந்து எடுப்பதும் கஸ்டம்:))..இலக்கணம் என்றாலே அரசியல்போல எனக்கு அலர்ஜி:)..

      Delete
  17. ஊசி இணைப்பின் தத்துவம் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... ரேடியோவில் சிலசில குட்டிக் குட்டிப் படக் கட்டங்கள் போடுவினம் இடையிடை... அதில் பிடித்தவற்றை எழுதி எடுத்திடுவேன் பட்டென.. இது ஒரு பழைய ஜெமினி நடித்த [என நினைக்கிறேன்] படத்தில் வரும் ஒரு வசனம்..

      Delete
  18. /எங்கள்புளொக்ல ராமாயணம் படிச்சே மனதில அது பதிஞ்சுபோச்ச்ச்ச்:) ஹா ஹா ஹா:)//

    எங்கள் பிளாக்கில் ராமாயணமா? ஓ... சீ ரா ம ளா?

    ReplyDelete
    Replies
    1. //சீ ரா ம ளா?///

      ஓ மை கடவுளே.. சியாமளா?:) இதென்ன இது மழைக்குக் காளான் முளைப்பதைப்போல:) அடிக்கடி பல பெயர்கள் முளைக்குதே..:))..

      ஹா ஹா ஹா பயந்திடாதீங்கோ:).. அதேதான்.. சீதை ராமனை.... மன்னிச்சா:))..

      மிக்க நன்றி ஸ்ரீராம் அனைத்துக்கும்.

      Delete
  19. கடைசியில் ராமாயணத்தில் கொண்டு வந்து முடிச்சு போட்டீங்க...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      கர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க இங்கு வரும்போதே நான் அதை திருத்தி விட்டேனே:).. உகண்டாவில் இருந்தே படிச்சிட்டீங்களோ?:) ஹா ஹா ஹா எனக்கு சபதம் தவிர வேறேதும் கண்ணில் தெரியவே இல்லை போஸ்ட் எழுதியபோது:))

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  20. ஹே நான் புதுசு வணக்கங்கோ தோழி இங்கே உங்க பிளாக் சூப்புரு ருருருரு...... ஒரு ரவுண்டு போய்ட்டு வந்தேங்கோ.....உங்க கட்சியில கைநாட்டு வாச்சாச்சுங்கோ ..... கதை பழசு ஆனா சொன்னவிதம் புதுசு இதுவும் சூப்பரு .......

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ... பூவிழி வாசலில் யாரது.. வந்தது.... சிட்டுவேஷன் சோங் போகுது பிபிசில.. முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க நன்றி..

      கைநாட்டு வச்சிட்டீங்க: ஆனா கையில மை வைக்கலியேஏஏஏஏஏஏ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி பூவிழி...

      என்பக்கத்துக்கு நீங்க புதுசு:)- ஆனால்
      எங்கள்புளொக்கில் நீங்க பழசு:)..

      Delete
  21. Replies
    1. வாங்கோ மொகமட்.. மிக்க நன்றி அனைத்துக்கும்.

      Delete
  22. மகாபாரதம் பல கிளைக்கதைகள் கொண்ட ஒரு காவியம். இதில் விடயத்தை சொல்லிய விதம் அருமை மூன்று பாகமும் படித்த திருப்தி இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ... ஓம் மகாபாரதம் படிச்சு முடிக்க முடியுமோ தெரியவில்லை... மிக்க நன்றி.

      Delete
  23. வட இந்தியாவில் பீஸ்மருக்கு கோயில் இருப்பதாக எங்கோ படித்த ஞாபகம் இருக்கு தேடிச்சொல்லுகின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் இங்கும் சொல்கிறார்கள்.. ஆனா பொதுவாக எல்லோரும் வணங்குவதாக நாம் அறியவில்லையே..

      Delete
  24. அடுத்த தொடரில் சந்திப்போம்)))

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நேசன்.. வந்ததுக்கும் வோட் போட்டமைக்கும்.

      Delete
  25. வணக்கம் அதிரா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ .......

    தங்கள் ஒட்டு சேர்க்கப்பட்டது நன்றி !

    மீண்டும் வருகிறேன் தங்கள் எதிர்பார்க்கைகளோடு
    அன்புக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. aiyoooooooooooooooooo! vaanga pulavaree)) snathosham))

      Delete
    2. வாங்கோ மேஜரே வாங்கோ.. ரொம்ப பிசியாக இருக்கிறீங்கபோல இருக்கு.. பிசியின் மத்தியிலும் வந்து வோட் போட்டமைக்கு மிக்க மிக்க நன்றிகள்...

      கவிதையுடன் வாங்கோ.. இங்கு பலபேர் வெயிட்டிங் உங்கள் கவிதைக்காக.

      ஹா ஹா ஹா நேசன் எதுக்கு இப்போ மிஸிஸ் எமனைக் கூப்பிட்டீங்க:)

      Delete
    3. தனிமரம் ..................................

      அன்புக்கு நன்றி கவிதை இதோ..................


      வணக்கம் பூஸ் !

      தன்னையும் நேசிக் கின்ற
      ...தண்ணிலா நெஞ்சத் தாருள்
      என்னையும் இணைத்துக் கொண்ட
      ...எழிலணங் கதிரா வலையில்
      புன்னையும் பூக்கப் பாடும்
      ...பூங்குயில் போலக் கூட்டம்
      அன்பினைத் தூவக் கண்டேன்
      ...அடிமனம் நெகிழ்ந்து நின்றேன் !

      ----------------------------
      பகுதி மூன்று !

      வாசமே தந்த பெண்ணை
      ...வாஞ்சையோ டெண்ணி நாளும்
      தேசமே வாழ்த்தும் மன்னன்
      ...தேடியே வந்த வேளை
      நேசமே உருவாய்க் கொண்டு
      ...நெருங்கினாள் படகை ஓட்டி
      ஆசுக விழியாள் கண்டே
      ...அடங்கினான் அந்தோ பாரீர் !

      தீண்டுமோர் வண்டைக் கண்டு
      ...திடுக்கிடும் பூவைப் போல
      மீண்டுமோர் அழகைக் கண்டு
      ...மெய்மறந் திருந்த மன்னன்
      ஆண்டுகள் பலவாய்த் தன்னுள்
      ...அடக்கிய ஆசை போக்கும்
      வேண்டுதல் பலவும் செய்தே
      ...விரைந்தவள் பக்கம் வந்தான் !

      தாரடி கொத்தை எல்லாம்
      ...தாங்கிய தேகம் கொண்டாள்
      பாரதி தந்த பாப்போல்
      ...பைந்தமிழ் மொழியும் கொண்டாள்
      ஈரடிக் குறளைப் போலே
      ...எழில்விழி இமையும் கொண்டாள்
      யாரிவள் என்று கேட்டே
      ...யாசகன் ஆனான் மன்னன் !

      மானொரு அசைவு கண்டால்
      ...மருண்டது ஓடும் ! இந்த
      மீனவப் பெண்ணோ எந்த
      ...மிரட்சியும் கொள்ள வில்லை
      நானொரு படகு ஓட்டும்
      ...நங்கையே என்றாள் ! இந்தக்
      கோனொரு கேள்வி கேட்டார் !
      ...கொடுத்தது ரிசிதான் என்றாள் !

      அவனகத் துள்ள அன்பும்
      ...அணைகடந் தோட மீண்டும்
      இவளினை அடைய எண்ணி
      ...இருப்பிடம் கேட்டான் ! மாயைத்
      தவமென வந்த பெண்ணும்
      ...தயக்கமே இன்றிச் சொல்ல
      அவளது பிதாவைத் தேடி
      ...அன்புடன் மகளைக் கேட்டான்


      முன்னவள் நிபந்த னைபோல்
      ...மொழிந்திட மாமன் ! இந்த
      மன்னவன் மறுத லித்தான்
      ....மறந்திட முடிவும் செய்தான்
      என்னதான் அவனின் நெஞ்சும்
      ...இறுக்கமாய் இருந்த போதும்
      தன்னிலை மறந்த தைப்போல்
      ...தளர்ந்திட மகவும் கண்டான் !

      விந்தையாம் பிறப்பைப் பெற்ற
      ...மேதகு மைந்தன் நாளும்
      தந்தையின் வலியைப் போக்கத்
      ....தன்மனம் துடித்தான் அந்தோ !
      முந்தைய கதைகள் எல்லாம்
      ....மொழிந்திடத் தேரின் பாகன்
      சிந்தையில் துணிவு கொண்டே
      ....சேவகன் ஆகி நின்றான் !

      நெஞ்சிலே மாட்சி கொண்டு
      ....நித்தியம் வளர்ந்த செம்மல்
      பிஞ்சிலே கற்ற தெல்லாம்
      ....பிடித்தமாய் இருந்த போதும்
      நஞ்சிலே கலந்த வார்த்தை
      ....நாயகி பிதாவும் சொல்ல
      வஞ்சமே அறியா வள்ளல்
      ....வழங்கினான் சத்தி யத்தை !

      இத்தரை என்ன! வானம்
      ...இருப்பவர் தாமும் கேட்க
      சத்தியம் கொடுத்தான் எந்தச்
      ...சலனமும் இன்றி ருந்தான்
      அத்தனும் அமைதி இன்றி
      ...அருங்கொடை வாழ்வும் இன்றிப்
      பித்தனாய்ப் போகும் முன்னே
      ...பிதாமகன் காத்துப் போனான் !

      காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் பூசாரே

      Delete
    4. வாங்கோ சீராளன் வாங்கோ.. மிக அருமையாக தொகுத்து எழுதித்தந்திட்டீங்க.. இதிலென்ன தாமதம் இருக்கு... என்னைப்பொறுத்து இது விரைவாகவே எழுதித்தந்திட்டீங்க மிக்க மிக்க நன்றி..

      Delete
    5. வணக்கம் பூசாரே புரிதலுக்கு நன்றி !

      இரவோடு இரவாக எழுதிப் போட்டதுதான் இப்போ படித்தேன் நிறையத் தவறுகள் இருக்கின்றன ......அவ்வ்வவ்வ்வவ்வ்வ்
      நெல்லைத் தமிழன் விமர்சனம் நெஞ்சம் நெகிழ வைக்கிறது ..
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      . கடைசியில் ..
      ஆனால் திருத்த முடியாதே வெவ் வெவ் வே.....

      Delete
  26. இப்போத் தான் வர முடிஞ்சது. எல்லாத்தையும் படிச்சேன். சீராளன் என்பவரின் கவிதை உட்பட! பீஷ்மருக்கு ஏன் கோயில் இல்லை என்றும் ராமருக்கு மட்டும் இருக்கே என்றும் கேட்டிருக்கீங்க! முதல்லே பீஷ்மர் அவதாரம் எல்லாம் இல்லை. அஷ்டவசுக்களில் எட்டாவது வசு அவர். சாபத்தின் காரணமாக பூமியில் பிறக்க நேரிட்டது. எட்டாவது வசுவான இவர் மட்டும் அதிக காலம் பூமியில் வாழ வேண்டும் எனவும், ஆனால் அவர் இறப்பு எப்போ என்பதை அவரே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் சலுகை கொடுக்கப்பட்டது. சாதாரணப் பெண்ணின் வயிற்றில் பிறக்காமல் இருக்கும்படியும் கேட்டுக்கொள்ள அதன்படி கங்கை மானுடப்பெண்ணாக மாறி இவர்களைப் பெற்றெடுத்து முதல் ஏழு வசுக்களையும் அவரவர் இருப்பிடம் சேர்க்கிறாள். சாபத்தின் காரணமாயும், அது வரை பேசாமல் இருந்த சந்தனுவின் சந்தேகம் காரணமாகவும் பீஷ்மர் மட்டும் பூமியில் தங்குகிறார். இவருக்கு சந்தனுவும் இஷ்டப்பட்டபோது மரணத்தை ஏற்கலாம் என்று வரம் கொடுத்ததாகச் சொல்லுவார்கள். இன்னும் எழுதினால் விரிவாகும். பின்னர் வருகிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ....

      ///முதல்லே பீஷ்மர் அவதாரம் எல்லாம் இல்லை/// ஓ இப்போ புரிகிறது..நன்றி.

      நீங்கள் சொல்லியுள்ள அனைத்தும்.. இங்கு நான் விரிவாகக் கேட்டேன், ஆனால் போஸ்ட்டில் எழுதவில்லை.. சுருக்கமாக கதையை நகர்த்தி சபதம் சொல்லி முடிச்சேன்... இச்சபதத்துக்குப் பின்னர் நடப்பதை இன்னும் படிக்கவில்லை.. இனிமேல்தான் தொடரப்போகிறேன்.

      மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
  27. ரொம்ப நன்றாக கதை சொல்றீன்ங்க அதிரா...


    எல்லாருக்கும் தெரிஞ்சதை ஏன் நாமும் சொல்லணும் நினைக்கிறது சரிதான்...

    ஆன ப்லோக்க்கு ன்னு தேடும் போது ...எழுத்தும் போது நிறைய புது விசயங்களை அறிந்துக் கொள்கிறோம்....

    மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தாலும் நமக்கு அது புதுசு தானே..

    சோ தொடர்ந்து எழுதுங்க....

    இந்த கதைக்கு ...பரிசாக..எனது பூங்கொத்துகளை வாங்கிகோங்க...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. உண்மைதான் எல்லோருக்க்கும் தெரிஞ்சதை திரும்ப சொல்லும்போது படிப்பவர்களுக்கு அது போறிங்தானே.. அதனால என் பாஷையில் எழுதும்போது ஒரு மாற்றமாக இருக்குமென நினைச்சேன்.

      //சோ தொடர்ந்து எழுதுங்க....//

      அச்சச்சோ.. நீங்க வேற உசுப்பேத்தி விடுறீங்க:)) பாரதம் இனித் தொடர்ந்தால்.. கம்பராமாயணத்தில் போய்ச் செருகிப் போடுவேன்ன்:) அந்த வம்பே எனக்கு வேண்டாம் ஹா ஹா ஹா...

      பூங்கொத்தா.. மிக்க மிக்க நன்றிகள் அனு.

      Delete
  28. நான் எழுதி இருந்த சாந்தனுவின் சந்ததிகளை படித்ததற்கு நன்றி மகாபாரதம் ஒரு அற்புதக் கதைக்களஞ்சியம் ஏராளமனகதைகள் நிறையப் படிக்க வேண்டும்புரிந்து கொள்ள ஆனால் வழி வழியாகச் சொல்லி வந்தகதைகளை- உணமை என்று மட்டும் நம்பவேண்டாம் கதைகளுக்குள் நிறையவே இண்டெப்ரெடேஷன்சொல்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

      உண்மைதான் அனைட்த்ஹையும் நம்ப முடியாது.. என்னைப்போல கதை சொல்லுவோர்ர் திரிச்சு திரிச்சே:) பல பொய்ச்சம்பவங்களைப் புகுத்தி விடுகின்றனர்.. ஆனால் மகாபாரதம் பொய் அல்ல.

      மிக்க நன்றி ஐயா.

      Delete
  29. நீண்ட நாட்களாக சகோ டிடி யைக் காணல்லியே.. அடிக்கடி விசாரிப்பது சரியல்ல என நினைச்சு விட்டிருந்தேன்.. இன்று வோட் போட்டிருக்கிறார்ர்.. மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி டிடி.

    ReplyDelete
  30. கொமெண்ட் போட இன்னமும் முடியவில்லையோ? அம்முலு.... இருப்பினும் தொடர்ந்து வோட் போடும் உங்களுக்கு இதோஓஓஓ ஒரு சிகப்பு ரோஜா:) வாடாமல் பார்த்துக்கொள்ளுங்கோ.. மிக்க நன்றி அம்முலு.

    ReplyDelete
  31. வணக்கம் பூஸ் !

    தன்னையும் நேசிக் கின்ற
    ...தண்ணிலா நெஞ்சத் தாருள்
    என்னையும் இணைத்துக் கொண்ட
    ...எழிலணங் கதிரா வலையில்
    புன்னையும் பூக்கப் பாடும்
    ...பூங்குயில் போலக் கூட்டம்
    அன்பினைத் தூவக் கண்டேன்
    ...அடிமனம் நெகிழ்ந்து நின்றேன் !

    ----------------------------
    பகுதி மூன்று !

    வாசமே தந்த பெண்ணை
    ...வாஞ்சையோ டெண்ணி நாளும்
    தேசமே வாழ்த்தும் மன்னன்
    ...தேடியே வந்த வேளை
    நேசமே உருவாய்க் கொண்டு
    ...நெருங்கினாள் படகை ஓட்டி
    ஆசுக விழியாள் கண்டே
    ...அடங்கினான் அந்தோ பாரீர் !

    தீண்டுமோர் வண்டைக் கண்டு
    ...திடுக்கிடும் பூவைப் போல
    மீண்டுமோர் அழகைக் கண்டு
    ...மெய்மறந் திருந்த மன்னன்
    ஆண்டுகள் பலவாய்த் தன்னுள்
    ...அடக்கிய ஆசை போக்கும்
    வேண்டுதல் பலவும் செய்தே
    ...விரைந்தவள் பக்கம் வந்தான் !

    தாரடி கொத்தை எல்லாம்
    ...தாங்கிய தேகம் கொண்டாள்
    பாரதி தந்த பாப்போல்
    ...பைந்தமிழ் மொழியும் கொண்டாள்
    ஈரடிக் குறளைப் போலே
    ...எழில்விழி இமையும் கொண்டாள்
    யாரிவள் என்று கேட்டே
    ...யாசகன் ஆனான் மன்னன் !

    மானொரு அசைவு கண்டால்
    ...மருண்டது ஓடும் ! இந்த
    மீனவப் பெண்ணோ எந்த
    ...மிரட்சியும் கொள்ள வில்லை
    நானொரு படகு ஓட்டும்
    ...நங்கையே என்றாள் ! இந்தக்
    கோனொரு கேள்வி கேட்டார் !
    ...கொடுத்தது ரிசிதான் என்றாள் !

    அவனகத் துள்ள அன்பும்
    ...அணைகடந் தோட மீண்டும்
    இவளினை அடைய எண்ணி
    ...இருப்பிடம் கேட்டான் ! மாயைத்
    தவமென வந்த பெண்ணும்
    ...தயக்கமே இன்றிச் சொல்ல
    அவளது பிதாவைத் தேடி
    ...அன்புடன் மகளைக் கேட்டான்


    முன்னவள் நிபந்த னைபோல்
    ...மொழிந்திட மாமன் ! இந்த
    மன்னவன் மறுத லித்தான்
    ....மறந்திட முடிவும் செய்தான்
    என்னதான் அவனின் நெஞ்சும்
    ...இறுக்கமாய் இருந்த போதும்
    தன்னிலை மறந்த தைப்போல்
    ...தளர்ந்திட மகவும் கண்டான் !

    விந்தையாம் பிறப்பைப் பெற்ற
    ...மேதகு மைந்தன் நாளும்
    தந்தையின் வலியைப் போக்கத்
    ....தன்மனம் துடித்தான் அந்தோ !
    முந்தைய கதைகள் எல்லாம்
    ....மொழிந்திடத் தேரின் பாகன்
    சிந்தையில் துணிவு கொண்டே
    ....சேவகன் ஆகி நின்றான் !

    நெஞ்சிலே மாட்சி கொண்டு
    ....நித்தியம் வளர்ந்த செம்மல்
    பிஞ்சிலே கற்ற தெல்லாம்
    ....பிடித்தமாய் இருந்த போதும்
    நஞ்சிலே கலந்த வார்த்தை
    ....நாயகி பிதாவும் சொல்ல
    வஞ்சமே அறியா வள்ளல்
    ....வழங்கினான் சத்தி யத்தை !

    இத்தரை என்ன! வானம்
    ...இருப்பவர் தாமும் கேட்க
    சத்தியம் கொடுத்தான் எந்தச்
    ...சலனமும் இன்றி ருந்தான்
    அத்தனும் அமைதி இன்றி
    ...அருங்கொடை வாழ்வும் இன்றிப்
    பித்தனாய்ப் போகும் முன்னே
    ...பிதாமகன் காத்துப் போனான் !

    காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் பூசாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றி மேஜரே.. மிக அருமையாக பகுதி 3 க்கும் கவிதை வடித்துத் தந்திட்டீங்க.. பகுதி 2 இல்.. உங்களுக்கு நெல்லைத்தமிழன் ஒரு கொமெண்ட் போட்டார், நீங்க படிக்கவில்லையாயின் தவறாமல் படியுங்கோ.

      Delete
    2. அருமை சீராளன். நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

      ஆசுக விழியாள் - அம்பு போன்ற விழிகள், நெஞ்சைத் துளைக்கும் கண்கள். ஆஹா

      தீண்டுமோர் வண்டைக் கண்டு திடுக்கிடும் பூ - பலே. அருமை. வண்டின் கனமும் ரீங்காரமும் தாங்காமல் அசையும் பூவை, திடுக்கிடுவதால்னு சொல்லியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.

      தாரடி கொத்தை- அர்த்தம் புரியவில்லை. தாரடி அர்த்தம் என்ன?

      அந்த மீனவப் பெண்ணை தமிழ்ப்பெண் என்றே சொல்லிவிட்டீர்கள். ஆதாரம் இல்லாதது கவிதையில் வரலாமா? பைங்கிளி மொழி அல்லது பைங்கிள்ளை மொழி (கிளிபோல் கொஞ்சிப் பேசுவது) பொருத்தமாக இருக்குமல்லவா?

      மானொரு அசைவு- தெளிவா மீனவப் பெண்ணின் தைரியத்தைக் கொண்டுவந்திருக்கீங்க. "கொடுத்தது ரிசிதான்" - ரிசி தமிழ் கிடையாது. "கொடுத்தது முனிவ னென்றாள்". அல்லது "கொடுத்தது முனிதா னென்றாள்" என்று வரவேண்டும் எனத் தோன்றுகிறது.

      "மொழிந்திட மாமன்"- அந்த சமயத்தில் மீனவப் பெண்ணின் தந்தை மன்னனுக்கு மாமன் முறை கிடையாது.

      "முந்தைய ... சேவகன் ஆனான்"- இதுவும் பொருத்தம் குறைவா இருக்கு.

      "மாட்சி கொண்டு நித்தியம் வளர்ந்த செம்மல்" - நிரந்தரமாக மாட்சி உடையவன் என்று பீஷ்மரை எப்படிச் சொல்ல இயலும்?

      "அத்தனும் அமைதி இன்றி.... பிதாமகன் காத்துப் போனான்"-- ரொம்ப அருமையாக வந்திருக்கு.

      இந்தப் பகுதில மீனவப் பெண்ணின் குடும்பம் என்ன கண்டிஷன் போட்டான்னு விளக்கமா எழுதலை. அதை படிக்கறவங்களுக்குத் தெரியும்னு அனுமானிக்கக்கூடாது.

      ரொம்ப நல்லா எழுதுறீங்க. நல்ல திறமை. குறைகள் எழுதியிருக்கேன்னு நினச்சுடாதீங்க. இன்னும் சிறப்பா எழுதும் திறமை உங்கள்ட இருக்கு. நேரக் குறைவாகவும் இருக்கலாம். பாராட்டுகள், வாழ்த்துகள்.


      Delete
    3. வணக்கம் நெல்லைத் தமிழன் !

      தங்கள் விமர்சனம் கண்டு நெஞ்சம் நெகிழ்கின்றேன் மிக்க நன்றி

      தாங்கள் சொல்லும் திருத்தங்கள் அனைத்தும் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும் ஆனால் இரவே எழுதிப் போட வேண்டும் என்னும் முயற்சியில் எழுதியதுதான் ஆதலால் சிந்திக்க நேரமின்றிப் போனது வருந்துகிறேன்

      தாரடி கொத்தை.... தார் +அடி--- மலர்மாலைக்கும் தார் என்று சொல்வர் அந்த மலர்மாலையில் அடியில் எப்போதும் பூக்களைக் கொத்தாகக் கட்டி இருப்பார்கள் இல்லையா அதேதான் தாரடி கொத்து

      தாரடி கொத்தை எல்லாம் தாங்கிய தேகம் கொண்டாள் வாசமுள்ளதும் மென்மையானதுமான உடல்வாகானவள் என்று பொருள்பட எழுதினேன் ( எல்லாம் கற்பனையே )

      ஏனைய தங்கள் திருத்தங்கள் கண்டிப்பாக அப்படித்தான் வந்திருக்க வேண்டும்
      வரவில்லை வருந்துகிறேன் மீண்டும் பதிவுகளில் சந்திக்கின்றேன் நன்றி

      வாழ்க நலம்

      Delete
  32. குருஷேத்திரத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருப்பது போல் சிலை கோவில் இருக்கிறது.

    கதை உங்களுக்கு அழகாய் சொல்ல வருகிறது அதிரா. மகாபாரதம் படித்தால் நிறைய கதை எழுதலாம். ஓவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதம் காரண காரியத்துடன் படைக்கப்பட்டவர்கள்.

    ReplyDelete
  33. சீராளன் அவர்கள் கவிதை அருமை.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.