நல்வரவு_()_


Thursday 10 January 2019

அவருக்குத்தான் தெரியும் ஒரு ...🙈

ஆரம்பமும் அதன் முடிவும்:))
வர்[கடவுள்] நினைத்தால்தான் எதுவும் நடக்கும். நம்மிடம் பணபலம் இருந்தாலோ இல்லை ஆட்பலம் இருந்தாலோ, அதை வைத்து நம்மால் ஒரு பூஸ் குட்டியின் உயிரைக்கூட காப்பாற்ற முடியாது:(, கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுதான் நடக்கும்.
ம்மால் முடிந்தது முயற்சி எடுப்பது மட்டுமே, பலனைத் தருவது ஆண்டவனே. ஒரு விதை விதைக்கிறோம், அது முளைப்பதும் முளைக்காமல் போவதும் நம் கையில் இல்லையே, அதுபோல முளைத்தாலும் அதிலிருந்து நிறைய விளைச்சல் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும், இயற்கை அழிவு வருவதும்கூட நம் கையில் இல்லையே.

கடவுள் என்றால் என்ன. ஞானம் என்றால் என்ன என, உங்களில் பலருக்குக் குழப்பமிருக்குமெல்லோ?:).. அந்தக் கொயப்பத்தைத் தீர்க்கவே என்னாலான ஒரு முயற்சிதான் இந்தப் பதிவு:).. இல்லாவிட்டால், மீ ஞானியாகி என்ன பலன்?:) காசிக்குப் போயும் என்ன பலன் டொல்லுங்கோ?:)..

எதை நம்மால் உண்டாக்க முடியாதோ, எது இல்லாமல் வாழ முடியாதோ.. அதுதான்  “கடவுள்”.
கோயிலுக்குப் போகிறோம் கும்பிடுகிறோம்... இது ஞானம் அல்ல பக்தி.. ஞானம் என்பது பிரார்த்தனையில்தான் வெளிப்படும். அழகழகாக விதம்விதமாக சமைக்கிறோம்.. இது பக்தி., ஆனா இந்த சமையலை நன்கு ரசிச்சு ருசிச்சு இன்னொருவரால் சாப்பிட முடிந்தால்.. அதுதான் ஞானம். பக்தியிலே பக்குவப்படும்போது வருவதுதான் ஞானம், எப்படியோ:) சமைக்க தெரிவது பக்தி[அஞ்சுவைப்போல:) ஹா ஹா ஹா], ஆனா அந்த சமையல் நன்கு பக்குவப்பட்டதாக இருந்தால்[அதிராவுடையதைப்போல:)] அதுதான் ஞானம். இப்போ புரியுதோ எல்லோராலும் பக்தியை அடைய முடியும், ஆனா ஞானத்தை அடைவதென்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்.

இப்போ ஒரு விசயம் நமக்குத் தெரிஞ்சிருந்தால் அது அறிவு, அதை அடுத்தவர்களுக்குப் புரியும்படி சொல்லக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய தன்மைதான் ஞானம். புரிஞ்சிட்டுதோ? கொயப்பிட்டனோ?:).. சரியான தெளிவு கிடைக்காவிடில்:) என் ஆச்சிரமத்துக்கு நேரில் வரவும்..[நன்கொடைகள் முக மலர்ச்சியுடன், கூச்சப்படாமல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன பவுண்ட்ஸில்:)].

உண்மையான ஞானநிலை என்பதுகூட எல்லோருக்கும் ஏற்படாது, அதுவும் ஒரு விதத்தில் தானாக வரவேண்டும், அத்தோடு ஞானத்தைக்கூட புதுப்பித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும், இல்லை எனில் அது இல்லாமல் போய் விடும்:).

பொதுவாக மனிதருக்குள் ஒரு கருத்திருக்கிறது, அதாவது வயதாகிவிட்டால்தான் ஞானநிலையை விரும்புவது, கோயில்களுக்குச் சேவை செய்வது, விரதமிருப்பது, கோயில் கோயிலாக யாத்திரை செல்வது[நெ.தமிழனைப்போல:)], தியாகம் பண்ணுவது, தான தர்மம் செய்வது, இப்படியானவை அனைத்தும், வயதானவர்கள்தான் செய்வார்கள்...செய்ய வேண்டும் என்பது போலவும், இளையவர்கள் செய்தால், அதை நகைப்பது.. உனக்கு வயதாகி விட்டது நீ சாமியாராகி விட்டாய், உனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டதா என்றெல்லாம் கேலி பண்ணுவது.. இவை நம்மவருக்குள் இருக்கிறது.. அது தப்பு... [நகைச்சுவைக்குச் சொல்வது வேறு:)].

ஆனா உண்மையில் எந்த ஒரு விசயமும், இளமையில் செய்வது சுலபம், வயதாகிவிட்டால் நிறையப் பிரச்சனைகள் வரலாம், மனதளவும் உடலளவிலும் ஒத்துளைப்புக் கிடைப்பது குறைவாகவே இருக்கும்,  அதனால இவற்றை நாம் இளமையிலேயே செய்தால்.. செய்து வந்தால்.. அதன் பயனை முதுமையில் அடையலாம்.. இப்போ புரியுதோ அதிரா எதுக்காக இப்பவே ஞானத்தைத் தேடி ஓடுகிறேன் என:)).

வயதாகிட்டால் சில சலுகைகள் தானாக வந்துவிடும், ஆனால் அந்த சலுகையைச் சிலர் தப்பாகப் பயன் படுத்துவதும் உண்டு, அதாவது ஒரு பஸ்ஸில் போகும்போது, தவறுதலாக ஒரு வாலிபன் ஒரு பெண்ணை இடித்து விட்டால், ஊரே சேர்ந்து அடிக்க வரும், ஆனா ஒரு வயதானவர் வேண்டுமென்றே ஒரு பெண்ணை இடித்தால் கூட, அவர் வயதானவர் அவரை எதுக்குத் திட்டுகிறாய் என உலகமே சப்போர்ட் பண்ணும்.. அப்போ கடவுளால் நமக்குக் கிடைக்கும் இந்த வயோதிப காலச் சலுகைகளை நாம் தப்பாக பாவித்திடக் கூடாது...

தானத்திலேயே சிறந்தது அன்னதானம், ஆனால் அதை மனிதருக்குத்தான் செய்ய வேண்டுமென்றில்லை, ஒரு எறும்புப் புற்றிலே ஒரு பிடி அரிசி போட்டாலும், அதற்குரிய பலன் நமக்குக் கிடைக்கும்., அதே நேரம் அது நம் உழைப்பில் கிடைத்ததாக இருந்தால் தான் அதிக பலன் நம்மைச் சேரும்.

 “உள்ளவருக்குக் கொடுத்தால் உதட்டால் வாழ்த்துவார்கள்
இல்லாதவருக்குக் கொடுத்தால் இதயத்தால் வாழ்த்துவார்கள்”.

மாலை மாலையாகக் கட்டிக் கட்டிப் பிள்ளையாருக்குப் போட்டேனே.. பூப் பூவாகப் பறிச்சுப் பறிச்சுச் சிவனுக்குக் கொடுத்தேனே.. ஆனா எனக்கு எப்பவும் துன்பத்தையே தருகிறார்களே எனப் புலம்புவோரும் உண்டு.

கடவுளுக்குப் பூவோ மாலையோ போடுவதுகூட, நம் வீட்டில் நட்டு நீரூற்றி வளர்த்துப் போட்டால் அதிக பலன் நமக்குக் கிடைக்கும், அடுத்தவர் பூவை வேலிக்கு மேலாக எட்டிப் பிடுங்கிக் கொண்டுபோய் கோயிலில் குடுத்தால் அதுக்கு எப்படி நல்ல பலன் கிடைக்கும்?.. கெட்ட பலன்களே கிடைக்கும்.. இதைவிட, பூப்போடாமல் கும்பிட்டால் அதிக பலன் கிடைக்கலாம்.

இனி ஸ்ரீராமின் எங்கள்பக்கத்து சொற்பலன்/சொல்முகூர்த்தத்துக்கு வருகிறேன்..:).

ப்பவுமே ஒரு தேவதை, நமக்கு மேலே பறந்து கொண்டிருக்குமாம், அத் தேவதைக்குத் தெரிந்தது “அப்படியே ஆகட்டும்” எனும் வார்த்தை மட்டும்தானாம். அது அப்படியே சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும், ஆனா நமக்கு மேலே எப்போ பறக்கிறது என நமக்குத் தெரியாதே.. இதனால நாம் யாரைவாது திட்டினாலோ, கோபத்தில் சாபமிட்டாலோ.. அந்நேரம் பார்த்து அத் தேவதை நமக்கு மேலே பறக்குமாயின்.. “அப்படியே ஆகட்டும்” எனச் சொல்லிவிடும்.. அப்போ நாம் சொல்வது பலித்துவிடும்.

அதனால, நாம் எப்பவுமே நல்ல சொற்களையே பாவிக்க வேண்டும், கோபம் வந்தால், வார்த்தைகளைக் கொட்டிடாமல், பேசுவதை நிறுத்தி விடுவது நல்லதே.. போய் வருகிறேன் என்பது பற்றி ஏற்கனவே எங்கள் புளொக்கில் பேசி விட்டோம்..,

இப்ப “நான் போகிறேன்” எனச் சொல்லிப் புறப்பட்டால்ல்.. அந்நேரம் பார்த்து அத்தேவதையும் பறக்குமாயின்.. அது வாழ்த்திவிடும்:).. நம் பயணமும் அப்படியே கடசியாகிடும்:)...

இது ஒருவித மூட நம்பிக்கையாகவும், கேலியான விசயமாகவும், நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒரு விசயமாகவும் தெரியலாம், நமக்கே தோணும்:), ஆனாலும் நான் எப்பவும் நினைப்பது, நாம் உயிரோடிருக்கும்போது, நமக்கோ, அடுத்தவருக்கோ தீமை செய்யாத எந்த நஸ்டமும் இல்லாத, இதனால் நமக்கு நன்மைதான் நடக்கும் எனச் சொல்லும் சில விசயங்கள்... அவை மூட நம்பிக்கைபோலத் தோன்றினாலும், அதைக் கடைப்பிடிப்பதில் தப்பில்லை.
😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺😺

ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு

ஸ்பெசல் இணைப்பு:
குருவே எதுக்கு இவ்ளோ சிரிப்பு?:)..
இல்ல.., அதிரா சொல்றது அதிராவுக்கே புரியுதோ தெரியாது:), இதில விளக்கம் ஜொள்ள வாறாவே என நினைச்சேன், சிரிக்கிறேன்ன்:))
😺😺😺😺😺😺😺😺_()_😺😺😺😺😺😺😺😺

165 comments :

  1. [im]https://i.ebayimg.com/images/g/CW0AAOSwImRYcFzq/s-l300.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவோ முயன்றும் மொபைலில் லிங் ஐ பேஸ்ட் பண்ணி பார்க்க முடியல்லியே கர்ர்ர் அந்த ஐ எம் விடுகுதில்ல:)

      Delete
    2. ஓ ஹா ஹா ஹா கொம்பியூட்டரில் ஜெரி ஃபிரீஸ் ஆனதுபோல இருக்குதே:) ஞானியைப் பார்த்து ஏங்கிப் போயிட்டுதோ?:) இதுக்கு வேப்பங்குழை வைத்தியம் பண்ணினால்தான் சரியாகும் ஹா ஹா ஹா...

      Delete
  2. அஆவ் !! இருங்க எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு நான் எங்கே இருக்கேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ..
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க உங்கட கொம்பியூட்டர் கதிரையிலதான் இன்னும் இருக்கிறீங்க:)... நீங்க இன்னும் ஞானி ஆகல்ல:)... நீங்க எப்போ ஞானி ஆகிறது... நான் எப்போ சொர்க்கம் பார்க்கிறது... காசிக்கு வாங்க முதல்ல என்னோடு டீல்?:)...

      இந்தச் சாட்டிலயாவது ஆளை அங்கின விட்டிட்டு வந்திடலாம்:)...

      Delete
    2. ஆஹா ஏஞ்சல் எனக்குத்தான் சுத்திச்சுனு நினைச்சேன் உங்களுக்குமா!!! ஹப்பா கூட ஒரு ஆள் இருக்காங்க...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. என்னாதூஊஊஊஊஉ கீதாவுக்கும் ஹெட்டு சுத்துதோ?:).. அப்போ அம்பியூலன்ஸ்சுக்கு அடிக்கிறேன்ன் ரெண்டு பேரையும் உடனேயே செக் பண்ணோனும்:) ஏனெனில் என் புளொக்கில் இன்சூரன்ஸ் இல்லையே .. கடவுளே ஞானி ஆக வெளிக்கிட்டு, கம்பி எண்ணப்போக வேண்டி வந்திடப்போகுதே:))

      Delete
  3. அதே அதே ஆரம்பமும் முடிவும் அவருடையதே ..நாம் Marionette லிருக்கும் பொம்மைகள் ..நூலால் ஆட்டுவிப்பவர் கடவுள் .அவர் நிறுத்தினா நாமும் நிக்கணும் :)

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆவ்வ்வ் நீங்க குவாட்டர்:) ஞானியாகிட்டீங்க அஞ்சூஊஊ... அப்போ காசிக்கு வருவீங்கதானே?:)..

      Delete
    2. இல்லை. குவாட்டருட கூட பிரியாணியும் சாப்பிட்டாதான் காசிக்குப் போக முடியும்.
      Jayakumar

      Delete
    3. ஹா ஹா ஹா ஜே கே ஐயா.. மின்னாமல் முழங்காமல் ஜோக் பண்றீங்க:)

      Delete
  4. நிறைய படம் போட்டிருக்கிங்க நம்பர் அன்னிக்கு போட்ட மாதிரி போட்டிருந்தா ஈஸியா இருக்கும் .சரி பரவால்ல
    .//சிலரிடம் சில விஷயங்களை // உண்மைதான் எவ்ளோ சொன்னாலும் புரியாதவங்ககிட்ட நாம் சொல்ல முடியாது தானே எங்காச்சும் அடி வாங்கி நொந்து வரும்போது நம்மால் முடிஞ்சது ஒரு ஆறுதல் :)

    ReplyDelete
    Replies
    1. அதேதான் அஞ்சு, சிலருக்கு ஆறுதல் சொல்வதும் பிடிக்காது ஹா ஹா ஹா உதாரணம் எங்கட .......... சரி வாணாம் விடுங்கோ ஹா ஹா ஹா:).

      Delete
    2. ஹலோ யாரு யாரு ?? பலர் வரங்களே கண்ணு முன்னாடி :) சரி சரி விடுங்க

      Delete
    3. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பலர் இல்ல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  5. ///கிடைக்காமல் போவதும், இயற்கை அழிவு வருவதும்கூட நம் கையில் இல்லையே.//
    நொவ்வ்வ் இது தப்பூ :) விதையை விதைச்சா போதுமா மண் பாத்தி கட்டி உரம் போட்டு நீர் ஊற்றி பூச்சிகிட்டேருந்து காப்பாற்றி அந்த விதையை வளரும் வரை பாதுகாத்து அந்த ..சீக்கிரம் வளரூடா செல்லமேனு கொஞ்சி இவ்ளோ செய்யணும் அப்படியும் வளரல்லேனா அது இறைவன் சித்தம்னு விடலாம் .
    அது போல க்ளோபல் வார்மிங்கினாலாதானே இயற்கை அழிவு வருது ..கடவுள் மூளை கொடுத்திருக்கிறார் அதை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தனும்

    ReplyDelete
    Replies
    1. எவ்ளோ முயற்சி பண்ணியும் சில விசயங்கள் பலனளிக்காமல் போவதுண்டெல்லோ... புயலை வெள்ளப்பெருக்கெல்லாம் நம் கொன்றோலுக்குள் இல்லையே:(..

      Delete
  6. //கடவுள் என்றால் என்ன. ஞானம் என்றால் என்ன என, உங்களில் பலருக்குக் குழப்பமிருக்குமெல்லோ?:).//
    [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRAjD0f2TquTuVPSilgJhOtBbBu_nmvnbUqpCZvy9UIEobEQnFK7Q[/im]

    இல்லையே இல்லையே :)டவுட்டே வர்லியே


    ReplyDelete
  7. //எது இல்லாமல் வாழ முடியாதோ.. அதுதான் “கடவுள்”.//
    டோட்டலி ப்ரூட்டலி அண்ட் ஹாப்பிலி அக்ரீ வித் திஸ் :)
    /ஞானம் என்றால் என்ன//

    ஆங் ஞானம் என்பவர் மூணாவது வீட்டு அங்கிள் ஊரில் :)

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான் ஞானம் என்று சொல்வார்கள்.ஒன்றிருக்க வேறு ஒன்று நினைவில் உதிப்பது.

      Delete
    2. @அஞ்சு
      /////எது இல்லாமல் வாழ முடியாதோ.. அதுதான் “கடவுள்”.//
      டோட்டலி ப்ரூட்டலி அண்ட் ஹாப்பிலி அக்ரீ வித் திஸ் :)///

      அப்பாடா... ஆச்சிரமத்துக்கு ஒரு ஆள் சேர்த்திடுச்சீஈஈஈஈஈஈ:)).

      //ஆங் ஞானம் என்பவர் மூணாவது வீட்டு அங்கிள் ஊரில் :)//
      கர்ர்ர்ர்ர்:))

      Delete
    3. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ...
      //ஒன்றிருக்க வேறு ஒன்று நினைவில் உதிப்பது.//
      ஹா ஹா ஹா இது எப்படி ஞானம் ஆகும்?:).. இது மன அமைதியைக் குலைக்கும் எல்லோ.. தாவும் மனதை அடக்குவதுதானே ஞானம்?:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
  8. /ஆனா அந்த சமையல் நன்கு பக்குவப்பட்டதாக இருந்தால்[அதிராவுடையதைப்போல:)] //
    கர்ர்ர்ர் இதற்க்கு ஜட்ஜ் நெல்லை தமிழன் :) அவர் சொல்லட்டும்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அவர்தான் ஹனிமூன் ட்ரிப் இல் இருக்கிறாரெல்லோ:).. அந்நாளில் தவற விட்டதை இப்போ நிறைவேத்துறாராம்ம்ம்ம் ஹா ஹா ஹா.. அவரை எதுக்கு இப்போ டிசுரேப்புப் பண்ணுறீங்க?:) .

      Delete
  9. வயதாகிட்டால் சில சலுகைகள் தானாக வந்துவிடும்//

    ஹலோவ் இப்போ யாராலையோ வசமா வம்பில் மாட்டப்போறீங்க :) பிக்காஸ் பிக்காஸ் :)

    //தானத்திலேயே சிறந்தது அன்னதானம், ஆனால் அதை மனிதருக்குத்தான் செய்ய வேண்டுமென்றில்லை//

    அதனால்தான் நான் பூஸ் ,புறா ,குட்டி பேர்ட்ஸ் ,சீகல்ஸ் வாத்து அன்னம் எல்லாத்துக்கும் உணவு தரேன் :)
    //எதையெல்லாம் வேண்டும் என்று பிடிவாதமாக ///
    அய்யாங் மூணுநாலு வருஷம் முன்னாடு ஒன்லி சப்பாத்தி கோதுமைனு இருந்தேன் இப்போ தொட முடிலயே :(

    ReplyDelete
    Replies
    1. //ஹலோவ் இப்போ யாராலையோ வசமா வம்பில் மாட்டப்போறீங்க :) பிக்காஸ் பிக்காஸ் :) ///

      சே..சே... என் பக்கம் வருவோர் யாரும் வயதானவர்கள் இல்லை.. மனதால எல்லோரும் இளைஞர்களே.. அஞ்சுவைத்தவிர:).. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ எசுக்கேப்பூ:))..

      //அதனால்தான் நான் பூஸ் ,புறா ,குட்டி பேர்ட்ஸ் ,சீகல்ஸ் வாத்து அன்னம் எல்லாத்துக்கும் உணவு தரேன் :)//
      அல்லோ அது உங்கட உளைப்பில குடுக்கோணுமாக்கும் ஹா ஹா ஹா:)).

      ///அய்யாங் மூணுநாலு வருஷம் முன்னாடு ஒன்லி சப்பாத்தி கோதுமைனு இருந்தேன் இப்போ தொட முடிலயே :(//

      யேஸ் சிலது மனம் விரும்பினாலும் முடியாமல் போவது, நான் சொன்னது மனதால வெறுத்து விடுவோம் சிலதை... இப்போ இண்டநெற் இல்லாமல் வாழவே முடியாது என நினைக்கும் மனம்.. ஒரு கட்டத்தில் எதுவுமில்லாமல் ஒதுங்கி இருப்பதுதான் சுகந்திரமாக றிலாக்ஸ் ஆக இருக்கு என நினைக்கவும் கூடும்...

      Delete
  10. ஸ்ஸ்ஸ் ஹப்பா ..இந்த சொல்முகூர்த்தம் என்னை அக்டொபர் மாசம் துவங்கி இப்போ வரை பாடாய்படுத்தி :(
    நான் பாட்டுக்கு ஜாகிங் போனேன் போகும்போது தானா முட்டி இப்போ நல்லா இருக்கே முந்தி ஓடும்போது போன்ஸ் வலிக்கும்னு நினைச்சி தொலைச்சேன் அந்த நேரம் தேவதை என் ஹெட் மேலே பறந்து இந்த நீ கேட்டதுன்னு வாரி வழங்கிடுச்சி ஸ்ஸ் அம்மா இப்போதான் கடவுள் புண்ணியத்தில் வேகமா நடக்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. என்னால ஓட முடியாது.. இப்படிச் சொல்லக்கூடாதாம்.. அப்படியே ஆகட்டும் மகளே என அந்த தேவதை அப்போது சொல்லிட்டால் ஹா ஹா ஹா.. இப்போ வாய் திறக்கவே பயம்மாக்கிடக்கூஊஊஊஊ:).. இதுக்குத்தான் சிலர் சொல்வார்கள்.. சில விசயங்கள் தெரியாமல் இருப்பதும் நல்லதென ஹா ஹா ஹா:)..

      Delete
  11. ஊசி இணைப்பு ஊசி குறிப்பு இரண்டும் சூப்பர் ஆனா ஸ்பெஷல் குறிப்பு ஸூப்ப்ரோ சூப்பர் :)))))
    அது சரி எதுக்கு கேப்டன் அங்கிளை போட்டிங்க :) அவர் ஹாப்பியா ஜாலியா அமெரிக்காவில் படம் பார்க்கிறார் பிரேமா ஆன்டிகூட :)
    அந்த மூணு முடிச்சுதான் அவருக்கு ஸ்ட்ராங் சப்போர்ட்

    ReplyDelete
    Replies
    1. //ஆனா ஸ்பெஷல் குறிப்பு ஸூப்ப்ரோ சூப்பர் :)))))//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் கிரேட் குருவை நீண்ட நாளா எல்லோரும் மறந்திட்டினம்:) அதுக்காகவே:).

      //அந்த மூணு முடிச்சுதான் அவருக்கு ஸ்ட்ராங் சப்போர்ட்//

      ஹா ஹா ஹா அது உண்மைதானெ அஞ்சு அனைவருக்குமே.. ஆனா இது ஒரு கொமெடி சோங்.. அதிலயும்.. முளுசாக் கேட்டீங்களோ தெரியல்ல. நல்ல சிரிப்பாக வரும்..

      வேணாண்டா சம்சாரம்.. நான் போறேன் சந்நியாசம்...
      வாணாண்ணே வாணாணே... இப்படி வரும்.. ஹா ஹா ஹா அந்த சந்நியாசம் வருவதனாலேயே அப்பாடலைப் போட்டேன்.. ஞானிக்குப் பொருத்தமாக இருக்கோணுமெல்லோ... ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
    2. ம்ம்ம்ம் இதை விட நாகேஷும் எம்ஜாரும் நடிச்ச ஒரு படத்தில் "காசிக்குப் போகும் சந்நியாசி!"னு ஒரு பாட்டு நல்லா இருக்கும். ஒலியும் ஒளியும் பார்க்கிற காலத்திலே பார்த்தது. படம் பேரெல்லாம் நினைவில் இல்லை! )))))

      Delete
    3. ஓ எனக்கும் எங்கோ கேட நினைவா வருது கீசாக்கா தேடிப் பார்க்கோணும்...

      இன்னொரு கொமெடிப் பாடலும் இருக்கு...

      அஞ்சு பிறந்தது போதுமென்றுநான் காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன்.. என வரும் ஹா ஹா ஹா..

      https://www.youtube.com/watch?v=vTFghpHlCYc

      https://www.youtube.com/watch?v=xNMzhl4VoYs

      Delete
    4. ஆறு பிறந்தது போதும் என்று ஆறு குளம் சுற்றி வந்தேன். "இருவர் உள்ளம்' படம்.'

      Delete
    5. ஹா ஹா ஹா ஓம் கோமதி அக்கா.. ஆறை அஞ்சாக்கிட்டேன்ன்ன்:)..

      Delete
  12. பகிர்ந்திருக்கும் பாட்டைப்பற்றி நோ கமென்ட்ஸ். தலைப்போபு இருக்கிறதே தலைப்பு... அந்த வரிகளில் ஒரு பாட்டு இருக்கிறதே.. அது கேட்பேன். ஆனால் ரசிக்கப் பிடிக்காது. ஒரே நெகட்டிவ் வரிகளாக வரும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா எனக்கென்னமோ அப்பாடலில் நிறைய நகைச்சுவை இருப்பதுபோல இருக்கும்.. அவர் என்னை விடு நான் சந்நியாசம் போறேன் என்பதுபோலவும்.. அவர்கள் இல்ல வாணாம் அண்ணே போகாதே எனத் தடுப்பதும் எனக்கு சிரிப்பாக இருக்கும்..:).

      அதனாலேயே அப்பாடல் மற்றும்படி பாடல் உண்மையைச் சொல்லுதென்றோ.. சரி என்றொ சொல்ல முடியாதே...

      ஓ தலைப்புப் பாடல் தத்துவப் பாடலாச்சே....

      Delete
  13. முதல் உண்மை உணர்ந்த தத்துவம் ஞானிகளுக்கே உரியது. இரண்டாவது தத்துவம் அருமை. நான் அடிக்கடி செய்வது!

    ReplyDelete
    Replies
    1. ///முதல் உண்மை உணர்ந்த தத்துவம் ஞானிகளுக்கே உரியது//
      சிரித்துக் கொண்டே கடப்பதோ?:).. அது ஓரிரு தடவை யாரிடமாவது முறையாக வாங்கிக் கட்டினோம் எனில் தானாக வந்திடும் அவ்வியல்பு .. நமக்கெதுக்கு ஊர் வம்பு என ஹா ஹா ஹா..

      //இரண்டாவது தத்துவம் அருமை. நான் அடிக்கடி செய்வது!///
      அடிக்கடி விரும்புவதை எல்லாம் வெறுப்பீங்களோ?:) அவ்வ்வ்..

      Delete
  14. மேன் ப்ரபோஸஸ் காட் டிஸ்போஸஸ் என்று சொல்வார்களே... அதுதானே? இன்னொன்றும் சொல்வார்களே... அவர் இதை உனக்கு மறுத்தால் இதைவிட பெரிதாக அல்லது வேறு கதவு உனக்குத் திறந்திருக்கும் என்பார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இறைவன் ஒரு கதவை மூடினால்.. இன்னொரு கதவை நிட்சயம் திறப்பார்ர் எனவே வருந்தாதே என்பார்கள்.. எதிலும் அனுபவப்பட்டால்தான் நம்பிக்கை வரும்.. இல்லை எனில் இவை ஆறுதல் வார்த்தைகளாகவே இருக்கும்...

      Delete
  15. பக்திக்கும் ஞானத்துக்கும் புதிய விளக்கங்கள். வாழ்க அதிரா, வாழ்க மஞ்சு... ச்சே அஞ்சு!

    ReplyDelete
    Replies
    1. ///வாழ்க மஞ்சு... ச்சே அஞ்சு!///

      ஹா ஹா ஹா அந்த சமையல் சம்பந்தப்படுத்திய விளக்கம் தானே?:) அதுபார்த்து த்றீராமுக்கே ச்சே சே..டங்கு ஸ்லிப்பாகுதே எனக்கும் கர்ர்ர்:)..ஸ்ரீராமுக்கும் டங்கு ஸ்லிப்ட்:)))...

      பின்ன ஒரு ஞானி என்பவர், மந்திரம்போல அல்லாமல் மக்களுக்குப் புரியும்படியாகத்தானே விளக்கம் குடுக்கோணும் ஹா ஹா ஹா..

      Delete
  16. ஒத்துளைப்பு தப்பு. ஒத்துழைப்பு சரி! வயதாகி விட்டால்தான் ஞானநிலை என்பது படிபப்டியான அறிவு வளர்ச்சியால் வருவது. சிறுவயதிலேயே எல்லாம் அறிவது கோடியில் ஒருவருக்கு கிடைக்கலாம் - விவேகானந்தரைப்போல.

    ReplyDelete
    Replies
    1. //ஒத்துளைப்பு தப்பு. ஒத்துழைப்பு சரி//

      அவ்வ்வ்வ்வ் அது எப்படித்தான் ள/ழ வித்தியாசம் கண்டு பிடிக்கிறீங்களோ? ஹா ஹா ஹா என்னால முடியுதே இல்ல... இதில் பாடமாக்கித்தான் எழுதுகிறேன் இப்போ பல சொற்கள்.. ஹா ஹா ஹா.. சே..செ... மோடி அங்கிளிடம் மனுக் குடுக்கச் சொன்னாலும் கீசாக்கா குடுக்கிறா இல்லை கர்ர்ர்ர்:).

      //வயதாகி விட்டால்தான் ஞானநிலை என்பது படிபப்டியான அறிவு வளர்ச்சியால் வருவது///

      அத்தோடு அனுபவ முதிர்ச்சி எனவும் சொல்லலாம்.. ஆனா ஸ்ரீராம் சின்ன வயதில் பல பிள்ளைகள் இப்போ ஞான நிலையில் இருப்பதைப்போல பேசுகின்றனர்.. அதாவது உயிர்களிடத்தில் அன்பாக இருக்கோணும்.. பொய் சொல்லக்கூடா, நல்லவராக இருக்கோணும்.. உதவி செய்யோணும்.. இப்படிப் பல.. அதுவும் ஒரு விதத்தில் ஞானப்பக்குவம் எனச் சொல்லலாம் தானே.. சின்னவர்கள் வெளிநாடுகளில் கோயில்களில் எப்படி ஓடி ஓடி சேவை செய்கிறார்கள் தெரியுமோ.. அதுவும் மிகவும் பயபக்தியோடு.

      Delete
    2. இதில் ஒரு கதை நினைவுக்கு வருது.. அஞ்சுவுக்கும் சொல்லோணும் என நினைச்சிருந்தேன்.

      இப்போ கிரிஸ்மஸ் ஹொலிடே க்கு, எங்கள் அக்கா குடும்பம் கியூபா போயிருந்தார்கள், அங்கு சுற்றிப் பார்க்க, குதிரை வண்டில் இருந்ததாம்[வாடகைக்குப் பிடிப்பது], எல்லோரும் ஏறிவிட்டார்களாம், அக்காவின் மகள்[போனமுறை படம் போட்டனே பின்னல் பின்னி:)] மட்டும் ஏறவே மாட்டேன் என ஒரே அடமாம்ம்.. குதிரை பாவம்... அது நம்மை இழுப்பதா? கூடாது அப்படிச் செய்யப்படாது, நான் வரமாட்டேன்.. என பெரிய பிரச்சனையாம்ம்[இப்போ யுனியில் முதல் வருடத்தில் இருக்கிறா]... பின்பு அவவுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லி, நாம் போய் பணம் கொடுத்தால்தான் குதிரைக்கு உணவு வாங்கிப் போட முடியும்.. இல்லாட்டில் உணவுக்கு எங்கே போவது இப்படிப் பல கதைகள் சொல்லியே ஏறப் பண்ணினார்களாம்... நம் நாட்டில் ஆடு மாட்டை எல்லாம் தடியால் அடிப்பதைப் பார்த்தால் இவர்கள் என்ன சொல்லுவார்களோ.. இப்படியானவற்றை எங்காவது புரோகிராமில் பார்த்தாலே.. எங்கள் மகனுக்கெல்லாம் கண் சிவக்கும் கவலையில்... இப்படி நிறையக் கதைகள் சொல்லலாம்.

      Delete
  17. எறும்புக்கு அரிசி போட்டால் எறும்பளவுதான் புண்ணியம் கிடைக்கும், மனிதர்களுக்குப் போட்டால் பெரிய அளவில் புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணியிருக்கிறேனே, அது தப்போ?!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்படியும் ஒன்றிருக்கோ? உடல் பருமனை வைத்தோ புண்ணியம் கிடைக்கும்? அவ்வ்வ்வ் அப்போ இனி ஆனையைத் தேடித்தான் போகோணுமாக்கும்:) ஹா ஹா ஹா..

      இல்லை, புண்ணியம் கிடைக்கும் என நினைத்துச் செய்யும் எதுவும் பலிக்காதென்பார்கள்.. நம் கண்முன்பே எது கஸ்டப்படுகிறதோ அதுக்குச் செய்ய வேண்டும்.. அது பூச்சி ஆயினும் எறும்பாயினும் மனிதராயினும்.. எனத்தான் நான் நினைக்கிறேன்ன்..

      Delete
  18. உதட்டால், இதயத்தால் வாழ்த்து... ரைமிங் சூப்பர்.

    ReplyDelete
  19. ஆமாம்... தினமும் உன் கோவிலுக்கு வந்து உன்னைப் பார்த்தேனே, எனக்கு கருணை காட்டவில்லையே என்று புலம்புவோர் ஞானத்தை அடைய இன்னும் வெகுதூரம் போகவேண்டும். முதலில் நான் உனக்கு இதைச் செய்கிறேன், நீ எனக்கு அதைத்தா என்று கேட்பதே வியாபாரம்தானே?

    ReplyDelete
    Replies
    1. ஒரு விதத்தில் உண்மைதான்.. ஆனா தேவைக்கு அதிகமாக அல்லது ஆசை அதிகமாக ஒரு விண்ணப்பத்தை முன் வைத்து கடவுளிடம் பேரம் பேசுவது என்பது வியாபார நோக்கம் போல கருதலாம், ஆனா சின்ன சின்ன தேவைகள்.. யாரிடமும் கேட்டுப் பெற முடியாதவற்றை.. இறைவனை விட்டால்ல் வேறு யாரிடம் போய்க் கேட்க முடியும்??...
      எதுவுமே கொடுக்காமல் அது கொடு இது கொடு என இறைவனைக் கேட்பதைக் காட்டிலும் நம்மால் முடிஞ்ச சின்ன சின்ன சந்தோசங்களை அவருக்கு வழங்கி விட்டுக் கேட்பதில் தப்பில்லை என நினைக்கிறேன்.

      எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாமல் ஒரு நட்புக்கூட இருக்க முடியாது என்கின்றனர்... திருமணம் முடிப்பதில் இருந்து குழந்தை பெறுவதுகூட ஏதோ ஒரு எதிர்பார்ப்பில்தானே...

      Delete
  20. //இனி ஸ்ரீராமின் எங்கள்பக்கத்து சொற்பலன்/சொல்முகூர்த்தத்துக்கு வருகிறேன்..:).//

    அச்சச்சோ... நான் தான் பலியா? இது தெரியாமல் விழுந்து விழுந்து கமெண்ட் போட்டிருக்கிறேனே... என்ன செய்ய.. நல்லவேளை, ஒன்றும் அடிவிழவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ///அச்சச்சோ... நான் தான் பலியா? இது தெரியாமல் விழுந்து விழுந்து கமெண்ட் போட்டிருக்கிறேனே...///

      ஹா ஹா ஹா இப்போதெல்லாம் எங்கள்புளொக் பேச்சை எடுத்தாலே பதற்றமாகிடுறீங்க:) எல்லாம் அந்த அம்மா காலமான கதைக்குப் பின்புதானே ஹா ஹா ஹா:))..

      //என்ன செய்ய.. நல்லவேளை, ஒன்றும் அடிவிழவில்லை!//

      அப்பாடா அப்போ இன்சூரன்ஸ் கிளைம் பண்ண மாட்டீங்கதானே என் பக்கமிருந்து:)).

      Delete
  21. மூட நம்பிக்கை ஆயினும் நல்ல விஷயங்களாயின் கடைப்பிடிப்பதில் தப்பில்லை. இப்போ வந்திருக்கும் பேட்ட படத்தின் மாஸ் பாடல் எனக்கு அதனாலேயே பிடிக்கவில்லை. அறம்!

    ReplyDelete
    Replies
    1. ஓ... நான் படமும் பார்க்கவில்லை, பாடலும் கேட்கவில்லை.

      Delete
  22. சிவன் பார்வதி பகிரல் நீண்ட நாட்களாய் சுற்றிக் கொண்டிருந்தது. இதற்கு பதில் கூட ஏதோ வந்தது. நினைவில்லை! ஊசிக்குறிப்பு ஸூப்பர்.

    ஸ்பெஷல் இணைப்பு : நான் மறுக்கிறேன். அதிரா ஞானி என்பது உங்களுக்குத் தெரியும். சே.. கூகிள் எங்களுக்கு என்று ரைப் அடித்தால் உங்களுக்கு என்று வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. //சிவன் பார்வதி பகிரல் நீண்ட நாட்களாய் சுற்றிக் கொண்டிருந்தது//

      ஓ அப்படியோ ஹா ஹா ஹா..

      //ஊசிக்குறிப்பு ஸூப்பர். //
      நன்றி நன்றி..

      //அதிரா ஞானி என்பது உங்களுக்குத் தெரியும். சே.. கூகிள் எங்களுக்கு என்று ரைப் அடித்தால் உங்களுக்கு என்று வருகிறது!///

      ஹா ஹா ஹா டங்குதான் ஸ்லிப்பாகுது எனப் பார்த்தால் கையும் ஸ்லிப்பாகுதே:))

      Delete
  23. விளையாட்டாய் நகைச்சுவையாய்ச் சொல்லி இருந்தாலும் நல்லதொரு பகிர்வு அதிரா.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஒரு குட்டி விசயமாவது, ஒவ்வொருவர் மனதை டச்சு பண்ணுமெல்லோ அதனாலதான்..

      ஊரிலே ஒருநாள், ஒரு குட்டி, அழ அழ.. ஒரு 3.5 வயசிருக்கும்.. அதுக்கு பாக்கும் கொழுவி.. கூட்டிப்போய், நேசறியில் விட்டு விட்டு வந்தா தாய்... அப்போ நான் ரோட்டில் நின்றிருந்தேன் மாமியுடன், உடனே அவவுக்கு ஒரு மாதிரி ஆகிட்டுதுபோல, பிள்ளை அழ அழ விட்டிட்டு வாறாவே என நினைச்சாலும் என.. நினைச்சாவோ என்னமோ..

      நம்மைப் பார்த்ததும் சொன்னா... ஒரு நாளைக்கு ஒரு எழுத்தாவது பழகிடும்தானே பிள்ளை அதனாலதான் கூட்டிப்போய் விட்டேன் என... அது எனக்கு ஒரு வேத வாக்குப்போல இருந்துது.. உண்மைதானே.. சிறுதுளிதானே பெரு வெள்ளம்...

      அப்போதிருந்தே நான் நினைப்பேன்ன் பெரிசா ஒன்றும் கிழிக்காட்டிலும்.. குட்டிக் குட்டியாக ஏதாவது எழுதலாம் படிக்கலாம் கேட்கலாம்.. அப்போ அறிவு வளரும்தானே?:).

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  24. //உடலளவிலும் ஒத்துளைப்புக் // நீங்க தமிழிலே "D"???? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல் இரண்டு தத்துவங்களும் நல்லாவே இருக்கு. மத்ததையும் படிச்சுட்டு வரேன். ஒத்து"ழை"ப்பு இம்பொசிஷன் எழுதுங்க லக்ஷம் தரம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா இந்த ள/ழ வை வச்சே என் டி ஐப் பறிக்க்கப் பார்க்கிறீங்க:)).. இந்த ழ/ள மட்டும் இல்லை எனில் மீ டி பிளஸ் பிளஸ் எல்லாம் எடுத்திருப்பேனாக்கும்...:)..

      ஓ உழைப்புக்கு வருவது போல எழுதோணும்.. நோட் பண்ணிட்டேன் எனத்தான் நினைக்கிறேன்ன்.. அது கீசாக்கா மெய் மறந்து எழுதும்போது கை தானாக எழுதிவிடுதே அவ்வ்வ்வ்வ்வ்:))..

      Delete
  25. ஊசி இணைப்பை லக்ஷம் தரம் படிச்சாச்சு. ஊசிக்குறிப்பு எனக்குத் தேவைதான். நம் உள்ளத்தில் தோன்றும் நஞ்சான எண்ணங்களை எப்போது நீக்கப் போகிறோம்? இதே கேள்வி தான்! பதில் தான் இல்லை! :(

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்க எல்லோரும் பேஸ் புக்கில் இருப்பதால அங்கு படிச்சீங்களோ..

      உண்மைதானே கீசாக்கா.. எப்பவும் அடுத்தவரைக் குறை சொல்கிறோம், நம்மிடம் எந்தக் கூடாத எண்ணங்களும் இல்லையா என்ன.. மனமறிஞ்சு இருக்காட்டிலும் அடுத்தவர் சுட்டிக் காட்டும்போதுதான் தெரியவரும்... இதில இன்னொன்றும் தெரிய வருது.. அடுத்தவரைக் குறை சொன்னால்தானே.. அடுத்தவருக்கு தெரியவரும் அவரிடம் என்ன குறை இருக்குது என்பது ஹா ஹா ஹா..

      ஆனா நம்மிடம் ஒரு குறை இருக்குதென ஒருவர் சொல்லிட்டால் அதைத் திருத்தப் பார்க்கோணும் அதுதானே நல்ல உள்ளத்துக்கு அழகு.

      Delete
  26. குரு சரியாத்தான் சொல்லிச் சிரிக்கிறார். அதிராவுக்குப் புரியணுமே! ஞானினு தன்னை நினைச்சுட்டு இருந்தா! இஃகி,இஃகி! அதிராவோட குழை சாதம் மாதிரி ரொம்பக் குழைஞ்சுட்டா என்ன செய்யறதாம்? அதைப் பக்குவம்னா சொல்ல முடியும்? :P:P:P:P

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சந்தடி சாக்கில குழாய்:) ஜாதத்தை உள்ளே இழுத்திட்டீங்க:)) என் மாவிளக்கை மறந்திட்டீங்க புவஹா புவஹா..புவஹா....

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  27. அமுதசுரபி மீண்டும் ஞானியாக் அமுதசுரபியாக தத்துவ முத்துக்களை அள்ளி அள்ளித் தந்திருக்கார் புலியூர் பூஸாநந்தா!!!!!!

    முதல் பாக்ஸ் செய்தி ஆமாம் அதிரா நானும் பெரும்பாலும் நாம் சொல்வது யாருக்கும் புரியாவிட்டால் அப்படியே கடந்து சென்றுவிடுவேன்...உட்கார்ந்து விம் போட்டு விளக்கிக் கொண்டிருப்பதில்லை...முன்பெல்லாம் விளக்கியதுண்டு..பல வருடங்களுக்கு முன். அனுபவம் நம்மை ஞானியாக்கிவிடுமே! அப்படி ஆகி கடந்து சென்றுவிடுவதுண்டு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ... ஸ்ஸ்ஸ் அது புலியூர் இல்லை:) புலாலியூர்:)) ஏன் தெரியுமோ? அப்படி ஒரு ஊரே இல்லையாக்கும் ஹா ஹா ஹா.. இருப்பதைச் சொன்னால் எனக்கேது பெருமை?:).

      //உட்கார்ந்து விம் போட்டு விளக்கிக் கொண்டிருப்பதில்லை...முன்பெல்லாம் விளக்கியதுண்டு//

      ஹா ஹா ஹா இதேதான் கீதா.. அடிபட அடிபட ஞானம் பிறந்திடுது:)) நமக்கெதுக்கு ஊர் வம்பு எனும் ஞானோதயம் பிறந்திருக்கு.. இல்லை நமக்கு மிகவும் உரிமையான ஒருவர் எனில்.. எப்படியாவது சிலதை சொல்லிப் புரிய வைக்கலாம்.. மற்றும்படி வீணாக எதுக்கு வெளியாட்களிடம் வம்பு:).

      Delete
  28. சொல் முகூர்த்தம் இதே தான் ததாஸ்து என்று தேவதைகள் சொல்லும் என்று எபியிலும் சொல்லப்பட்டிருந்தது..நம் தமிழில் அப்படியே ஆகட்டும் என்று...ஆமாம் எனக்கும் இதில் மிகுந்த நம்பிக்கை உண்டு ..அதாவது நாம் நல்ல சொற்களைத்தான் பேச முயற்சி செய்யனும் என்று...அதெ போல செயல்களும். கூடியவை நம்மால் யாருக்கும் எந்தத் தீங்கும் வராமல் மற்றவர் மனது புண்படாமல் பேச வேண்டும் என்பதும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //இதே தான் ததாஸ்து என்று தேவதைகள் சொல்லும்//

      ஆஆ இந்தச் சொல்லை மறந்திருந்தேன் கீதா.. இல்லை எனில் இதையும் இணைச்சிருப்பேன்.

      //கூடியவை நம்மால் யாருக்கும் எந்தத் தீங்கும் வராமல் மற்றவர் மனது புண்படாமல் பேச வேண்டும் என்பதும்...//
      இதேதான்... சிலசமயம் நன்மை செய்கிறேன் பேர்வழி எனப் புறப்பட்டு, அதனால மற்றவர்கள் மனம் புண்ணாகிவிடுவதும் உண்டு ஹா ஹா ஹா..

      Delete
  29. மனம் பக்குவப்படலுக்கு அதாவ்து ஞானம் பெற வயது என்பது காரணமே இல்லைதான். ஒரு சிலருக்கு தானாகவே கிடைக்கும் சிலருக்கு அனுபவங்கள் புடம் போட்ட்டு வரவழைக்கும்...சிலருக்கு அப்படியும் வராதுதான்...

    ஞானம் என்பது பெரிய விஷயம் என்று நினைக்கிறேன் நான்..அதிரா...அத்தனை எளிதல்ல நம் மனிதருக்கு. முயற்சி செய்யலாம்...அதனை அடைய.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதுதானே கீதா, வயசு ஒரு காரணம் எனில், வயதான எல்லோருக்குமே ஞானம் வரோணுமே.. அப்படி இல்லையே.. பல வயதானோரை விட இளையவர்கள்.. மனப்பக்குவத்தோடு இருக்கிறார்கள்.

      //ஞானம் என்பது பெரிய விஷயம் என்று நினைக்கிறேன் நான்//
      உண்மைதானே கீதா, அதை ச்சும்மா ஒரு போஸ்ட்டில் சொல்லிட முடியுமோ? எனக்கே சரியாப் புரியல்ல ஹா ஹா ஹா.. ஏதோ என்னாலான ஒரு திரட்டல்தான் இங்கே..

      Delete
  30. மிக அருமையான் பதிவு அதிரா.
    அமுதசுரபி அதிரா அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொடுத்து விட்டார்.
    வாழ்த்துக்கள்.

    கை, கால், சுகமாய் இருக்கும் போதே இறைவனை வழிபட்டு விட வேண்டும்.வயதானால்
    உடல் முடியாது போகும், நினைவு மறதி வரும். அப்போது வணங்கி கொள்ளலாம் என்று தள்ளி போடக்கூடாது.
    பதினோராம் திருமுறையில் ஒரு பாட்டு இப்படி சொல்கிறது.

    குந்தி நடந்து குனிந்தொரு கை கோலூன்றி
    நொந்து இருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
    ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
    ஐயாறு வாயால் அழை.

    முன்பே அவரை அழைத்து வணங்கிவிட வேண்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், அப்புறம் வணங்கி கொள்ளலாம் என்று தள்ளி போடக்கூடாது. வாய்ப்பு கிடைக்கும் போது அவர் குடி கொண்டுள்ள கோவில்களில் அவரை காணலாம் முடியாத போது அவரை நம்நெஞ்சத்தில் குடியமர்த்தி வணங்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      //மிக அருமையான் பதிவு அதிரா.
      அமுதசுரபி அதிரா அள்ள அள்ள குறையாத செல்வத்தை கொடுத்து விட்டார்.
      வாழ்த்துக்கள்.//
      வாவ்வ்வ்வ் மிக்க நன்றி கோமதி அக்கா.. எழுதும்போதே நினைத்தேன் கோமதி அக்காவுக்குப் பிடிக்கும் என.

      //வயதானால்
      உடல் முடியாது போகும், நினைவு மறதி வரும். அப்போது வணங்கி கொள்ளலாம் என்று தள்ளி போடக்கூடாது.
      பதினோராம் திருமுறையில் ஒரு பாட்டு இப்படி சொல்கிறது.//

      சரியாகச் சொன்னீங்க.. உண்மைதானே.. ஓ திருமுறை அழகாகச் சொல்லி நிற்கிறது.

      //வாய்ப்பு கிடைக்கும் போது அவர் குடி கொண்டுள்ள கோவில்களில் அவரை காணலாம் முடியாத போது அவரை நம்நெஞ்சத்தில் குடியமர்த்தி வணங்க வேண்டும்.///

      மிகச் சரியான கூற்று.. எல்லோராலும் எல்லா இடங்களுக்கும் போயிட முடியாதே அப்போ மனதில் நிறுத்தித்தான் வழிபட வேண்டும்.

      Delete
  31. அதிரா என்ன தத்துவமழையை பொழிகின்றீர்கள் ஏற்கனவே எனக்கு ஜலதோசம் (இருப்பினும் ரசிக்க வைத்தன)

    //ஒரு வயதானவர் வேண்டுமென்றே ஒரு பெண்ணை இடித்தால் கூட, அவர் வயதானவர் அவரை எதுக்குத் திட்டுகிறாய் என உலகமே சப்போர்ட் பண்ணும்//

    மறைமுகமாக நெல்லைத்தமிழரை வயதானவர் என்று வர்ணித்து விட்டு இப்படி தாக்குவது நன்னா இல்லை அதிரா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //அதிரா என்ன தத்துவமழையை பொழிகின்றீர்கள்//
      அது தானா வருது கில்லர்ஜி.. பின்ன ஞானி ஆகிட்டாலே அப்படித்தானே வரோணும்:).

      //மறைமுகமாக நெல்லைத்தமிழரை வயதானவர் என்று வர்ணித்து விட்டு இப்படி தாக்குவது நன்னா இல்லை அதிரா//

      ஹா ஹா ஹா அவர் ஹனிநிலவு ட்றிப்பில் இருப்பதால், அவரை வயதானவர் எனச் சொல்லுறீங்கபோல ஹா ஹா ஹா.. இதைப் படிப்பதனாலோ என்னவோ ஷையாகி:)) ஆளைக் காணம் இந்தப் பக்கங்களில் ஹா ஹா ஹா.. பின்ன கோயில் தரிசனம் எனில் மக்களை[புளொக்ஸை] மறப்பதோ?:) அவ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  32. கண்டிப்பாக நம் கையில் எதுவுமே இல்லை என்பதை நான் அடிக்கடி நினைப்பவள் சொல்வதும் உண்டு.

    சிலர் சொல்வதுண்டு யோகா, மூச்சுப்பயிற்சி செய்தால் நாம் நெடுநாள் வாழலாம் என்று. அதுவுமே அப்படிப் பயிற்சி செய்யவும் நமக்கு அது எழுதப்பட்டிருந்தால் மட்டுமே...அதே போல அது செய்தால் நாம் நிறைய நாள் வாழ்வோம் என்பதும் இல்லை...அதுவும் நம் கையில் இல்லை. எனக்கு யோசா சொல்லிக் கொடுத்த குருவிற்கும் எனக்கும் வந்த ஒரு சிறு தர்க்கம் இதுதான். அவர் வகுப்பில் இதைச் சொன்னார். கண்டிப்பாக யோகா நம் வாழ்நாளை அதிகரிக்கும் என்று. தான் இத்தனை வயதிலும் (அப்போவே அவர் 75 வயது) இருக்கிறேன் என்றால் அதற்கு யோகா தான் காரணம் என்றார். நான் மன்னிக்கவும் நிச்சயமாக இல்லை என்றேன். வகுப்பிலும் எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். குருவுக்கும் கோபம் வந்தது. (நோட் இட் கோபம்!!!!!)

    நாம் இருப்பதும் இல்லாததும் நம் கையில் இல்லை. யோகா மூச்சுப்பயிற்சி நமக்கு நிச்சயமாக உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் நம் உயிர் என்பது நம் கையில் இல்லை என்று..இரண்டாவது இப்படி யோகா கற்று நாம் அதைத் தொடரனும் தொடர்வோம் என்பதும் கூட எழுதப்பட்டிருந்தால் மட்டுமே...ஆனால் அதற்காக விதி என்று நாம் முயற்சிக்காமல் இருக்கக் கூடாது...நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து போராட வேண்டும்...என்றும் சொன்னேன்.

    ..குருவுக்கு மீண்டும் எரிச்சல்...வகுப்பிலும் எல்லோரும் கேட்டார்கள் அதெப்படி என்று...அப்போதுதான் எனக்கு உரைத்தது...ஓ! நாம் சொல்லியது இங்கு நெகட்டிவாகப்பட்டுவிட்டது....அதாவது யோகாவினால் எந்தப் பயனும் இல்லை வாழ்நாள் எல்லாம் நீளாது...எனவே வகுப்பிற்கு வருபவர்கள் குறைந்துவிடுவார்கள் என்ற ஒரு எண்ணம் குருவுக்கு வருதோ என்று எண்ணி அதன் பின் நான் "சாரி இது என் தனிப்பட்ட எண்ணம்...உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறேன் குருஜி" என்று சொல்லி முடித்துவிட்டேன்...அங்கு நாம் சொல்லிப் பயனில்லை...

    நீங்கள் சொல்லியிருப்பது போல ஒரு செடி வளர வேண்டும் என்றால் கூட விதைத்து தண்ணீர் விட்டாலும் பக்குவமாகப் பார்த்தாலும் கூட அது வளர வேண்டும் என்றிருந்தால்தான் வளரும்..அது போலத்தான் உயிரும்..அது பிழைக்க இருந்தால் மட்டுமே பிழைக்கும் நாம் காப்பாற்றினாலும்..

    அதற்காக நாம் முயற்சியைக் கைவிடக் கூடாது.முடிந்தவரை போராடிப் பார்க்கனும்...பலன் கிடைத்தால் ஓகே இல்லையா அவ்வளவுதான் நமக்கு விதித்தது என்று நகர வேண்டியது...

    உங்கள் கருத்துகளை அப்படியே டிட்டோ செய்கிறேன் அதிரா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //கண்டிப்பாக நம் கையில் எதுவுமே இல்லை என்பதை நான் அடிக்கடி நினைப்பவள் சொல்வதும் உண்டு.//

      நானும் அப்படித்தான் நம்புகிறேன் கீதா, அதுக்காக முயற்சி செய்யாமல் இருந்திடக்கூடாது, ஏனெனில் முயற்சி செய்யாமல் இருந்தாலும் கடவுளுக்குப் பொறுக்காது அப்படியே ஆகட்டும் என விட்டாலும் எனப் பயம், அதனால நம் முயற்சியைப் பார்த்து கொஞ்சமாவது ஏதும் அனுக்கிரகம் கிடைக்கலாம் எனும் நம்பிக்கைதான்:).

      //சிலர் சொல்வதுண்டு யோகா, மூச்சுப்பயிற்சி செய்தால் நாம் நெடுநாள் வாழலாம் என்று. அதுவுமே அப்படிப் பயிற்சி செய்யவும் நமக்கு அது எழுதப்பட்டிருந்தால் மட்டுமே...அதே போல அது செய்தால் நாம் நிறைய நாள் வாழ்வோம் என்பதும் இல்லை..//
      இது அப்பட்டமான பொய்தானே கீதா.... அப்போ மூச்சுப் பயிற்சி யோகா செய்யாதோர் யாரும் நெடுநாள் வாழவில்லையா எனத்தானே கேள்வி எழுகிறது..

      //தான் இத்தனை வயதிலும் (அப்போவே அவர் 75 வயது) இருக்கிறேன் என்றால் அதற்கு யோகா தான் காரணம் என்றார். நான் மன்னிக்கவும் நிச்சயமாக இல்லை என்றேன். வகுப்பிலும் எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். குருவுக்கும் கோபம் வந்தது. (நோட் இட் கோபம்!!!!!) //

      ஓ... நானும் இதை நிட்சயமாக எதிர்ப்பேன்ன்.. யோகா, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இப்படி இருந்தால்.. உயிரைத்தக்க வைக்க முடியாது, ஆனா உயிரோடிருக்கும்வரை நோய் நொடி குறைவாக, ஆரோக்கியமாக வாழலாம்... நான் நினைப்பேன், நாம் சரியான குண்டு எனில், சப்போஸ் ஒரு இடத்தில் மயங்கி விழுந்திட்டோம் எனில், டக்கென யாராலும் தூக்க முடியாதெல்லோ.. அப்போ நம் உடலைக் கொஞ்சம் பேணி வைத்திருப்பது நோய் நொடி குறைவாக வாழவே இப்படித்தான் நான் நினைக்கிறேன்.. ஆயுளை யாராலும் விலைக்கு வாங்கிட முடியுமோ... மைக்கல் ஜாக்‌ஷனுக்கு என்ன ஆச்சு.. தான் நீண்ட காலம் வாழோணும் எனும் ஆசையிலயும்.. அதிக சத்து மருந்துகள் உண்டாராம்ம் அதுவும் ஒரு காரணம் என்றனர்... விதி எப்படி எல்லாம் விளையாடுது பாருங்கோ.

      Delete
    2. //அதாவது யோகாவினால் எந்தப் பயனும் இல்லை வாழ்நாள் எல்லாம் நீளாது...எனவே வகுப்பிற்கு வருபவர்கள் குறைந்துவிடுவார்கள் என்ற ஒரு எண்ணம் குருவுக்கு வருதோ என்று எண்ணி அதன் பின் நான் "சாரி இது என் தனிப்பட்ட எண்ணம்...உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறேன் குருஜி" என்று சொல்லி முடித்துவிட்டேன்...அங்கு நாம் சொல்லிப் பயனில்லை...//

      ஒரு பழமொழி சொல்லுவினம்.. “கோவணாண்டிகளின் ஊரில் வேஸ்டி கட்டுபவர் பைத்தியக்காரர்”.. என்பது போலத்தான், சில விசயம் நமக்கு தப்பு எனப் பட்டாலும் நம்மால் ஒன்றும் பண்ண முடியாத சூழ்நிலை வந்திடுது.. ஹா ஹா ஹா..

      //அது போலத்தான் உயிரும்..அது பிழைக்க இருந்தால் மட்டுமே பிழைக்கும் நாம் காப்பாற்றினாலும்..//

      அதேதான்... இதுபோலத்தான் ஆகவும் ஓவராக தவமிருந்தும் ஒரு விசயத்தைப் பெறுவது நல்லதில்லையாம்ம்.. அது கேட்டதற்காக கொடுத்துவிட்டு பறித்துக் கொள்வாராம் எனவும் மிரட்டுவார்கள்:).

      //உங்கள் கருத்துகளை அப்படியே டிட்டோ செய்கிறேன் அதிரா...
      //
      ஹா ஹா ஹா நன்றி கீதா..

      Delete
  33. //கோயிலுக்குப் போகிறோம் கும்பிடுகிறோம்... இது ஞானம் அல்ல பக்தி.. ஞானம் என்பது பிரார்த்தனையில்தான் வெளிப்படும். அழகழகாக விதம்விதமாக சமைக்கிறோம்.. இது பக்தி., ஆனா இந்த சமையலை நன்கு ரசிச்சு ருசிச்சு இன்னொருவரால் சாப்பிட முடிந்தால்.. அதுதான் ஞானம். பக்தியிலே பக்குவப்படும்போது வருவதுதான் ஞானம், எப்படியோ:) சமைக்க தெரிவது பக்தி[அஞ்சுவைப்போல:) ஹா ஹா ஹா], ஆனா அந்த சமையல் நன்கு பக்குவப்பட்டதாக இருந்தால்[அதிராவுடையதைப்போல:)] அதுதான் ஞானம். இப்போ புரியுதோ எல்லோராலும் பக்தியை அடைய முடியும், ஆனா ஞானத்தை அடைவதென்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்.//

    ஆஹா ! அருமையான விளக்கம் .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  34. அந்த சிவன் ஜோக் ஏற்கனவே வாசித்திருக்கிறேன் இப்போது மீண்டும் ரசித்தேன்...

    அந்த ஊசிக்குறிப்பு என்னிடமும் மகனிடமும் இருக்கிறது. விவேகானந்தரின் பல பொன்மொழிகள் எம்மிடத்தில் உண்டு...அதேதான் நம் உள்ளத்தைத் தூய்மையாக்கினாலே உலகமும் ஆகிவிடும் இப்படி ஒவ்வொருவரும் எண்ணினால் ஆனால் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு படைப்பல்லோ??!!!

    ஸ்பெஷல்....ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. விவேகானந்தரின் பொன் மொழிகள் எனும் ஒரு புக்.. அப்பாவுடையது இப்போ நான் வைட்த்ஹிருக்கிறேன் தேடி எடுக்கோணும்..

      மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  35. அழகழகாக விதம்விதமாக சமைக்கிறோம்.. இது பக்தி., ஆனா இந்த சமையலை நன்கு ரசிச்சு ருசிச்சு இன்னொருவரால் சாப்பிட முடிந்தால்.. அதுதான் ஞானம். பக்தியிலே பக்குவப்படும்போது வருவதுதான் ஞானம்,...


    வித்தியாசமான விளக்கம் அதிரா இப்படி பார்க்கலாம் ன்னு...



    ....இளையவர்கள் செய்தால், அதை நகைப்பது.. உனக்கு வயதாகி விட்டது நீ சாமியாராகி விட்டாய்,..

    இது ரொம்ப அருமை ...எங்க அப்பா 50 வயதில் தெரிந்து கொண்டதை, எனக்கு 30 வயத்தில் தோன்ற வைத்தார், பையனுக்கு 10 திலேயே புரிய வைக்கிறார் ..

    வயதாகும் போது செய்யலாம் ன்னு நினைப்பது எல்லாம் செய்ய முடிவதில்லை வயதின் காரணமாக,அதனால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்ய வேண்டும் ...மனதிற்கு பிடித்ததை.. கோவில் செல்வது போல் எதுவாக இருந்தாலும் ...

    அது போல் அப்பா அவரின் 60 வயதில் இமயமலைக்கு யாத்திரை போனார் அப்போ அங்கிருந்து எனக்கு கால் பண்ணி ..அம்மா நாங்க இப்போ வந்தும் சிரமமா இருக்கு நீங்கலாம் வயது காலத்திலேயே குடும்பத்துடன் வந்து பார்க்கணும் ன்னு சொன்னது இன்னும் நினைவில் ...அதனால் எதையும் வயதான காலத்தில் என தள்ளி போட கூடாது ..

    “அப்படியே ஆகட்டும்” ...இதில் எங்களுக்கு பலமான நம்பிக்கை நாம் சொல்வது தான் நடக்கும் அதனால் எப்பவும் வெல்லும் வார்த்தைகளை மட்டுமே சொல்ல வேண்டும் என செயல் படுகிறோம் ...


    நிறைவான பதிவு அதிரா ....வாழ்க வளமுடன் ..




    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      //வித்தியாசமான விளக்கம் அதிரா இப்படி பார்க்கலாம் ன்னு..//
      ஹா ஹா ஹா நமக்குப் புரியும்படியாகத்தானே பேச வேண்டும்..

      //எங்க அப்பா 50 வயதில் தெரிந்து கொண்டதை, எனக்கு 30 வயத்தில் தோன்ற வைத்தார், பையனுக்கு 10 திலேயே புரிய வைக்கிறார் ..//
      இது உண்மைதான், உண்மையில் பெரியவர்கள் சொல்லிக் குடுக்கவேண்டும், அதைப் புரிஞ்சு கொள்வதும் புரியாமல் உதாசீனம் செய்வதும் அவரவர் கையிலதானே இருக்கு.

      //அது போல் அப்பா அவரின் 60 வயதில் இமயமலைக்கு யாத்திரை போனார் அப்போ அங்கிருந்து எனக்கு கால் பண்ணி ..அம்மா நாங்க இப்போ வந்தும் சிரமமா இருக்கு நீங்கலாம் வயது காலத்திலேயே குடும்பத்துடன் வந்து பார்க்கணும் ன்னு சொன்னது இன்னும் நினைவில் ...அதனால் எதையும் வயதான காலத்தில் என தள்ளி போட கூடாது ..//

      பார்த்தீங்களோ.. நான் எழுதியதை நீங்க பிரக்டிக்கலாக உணர்ந்து சொல்றீங்க.. சந்தோசமாக இருக்கு..

      மிக்க நன்றிகள் அனு.

      Delete
  36. இப்போ ஒரு விசயம் நமக்குத் தெரிஞ்சிருந்தால் அது அறிவு, அதை அடுத்தவர்களுக்குப் புரியும்படி சொல்லக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய தன்மைதான் ஞானம். புரிஞ்சிட்டுதோ? கொயப்பிட்டனோ?:).. சரியான தெளிவு கிடைக்காவிடில்:) என் ஆச்சிரமத்துக்கு நேரில் வரவும்..[நன்கொடைகள் முக மலர்ச்சியுடன், கூச்சப்படாமல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன பவுண்ட்ஸில்:)].

    அறிவு, ஞான்ம் பற்றி அருமையாக விளக்கம் கொடுத்துவிட்டு இப்படி உலகவாழ்க்கைக்கு வந்து விட்டீர்களே நன்கொடை கேட்டு. ஞானியர் ஆனாலும் ஆசை யாரை விட்டது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கோமதி அக்கா.. ஞானம் பெற்றாலும் மீக்கு சுவீட் 16 தானே:) இப்பவே எப்பூடி வாழ்க்கையைத் துறப்பது:)).. மிச்சக் காலம் ஆச்சிரமத்தை நடத்தப் பணம் வேணுமெல்லோ:)..

      Delete
  37. //ஒரு எறும்புப் புற்றிலே ஒரு பிடி அரிசி போட்டாலும், அதற்குரிய பலன் நமக்குக் கிடைக்கும்., அதே நேரம் அது நம் உழைப்பில் கிடைத்ததாக இருந்தால் தான் அதிக பலன் நம்மைச் சேரும்.//

    உண்மை உண்மை.

    ReplyDelete
  38. அதிராஆஆஆ முடியல....... எனக்குமே தலைசுத்துது..அவிச்ச பனக்கிழங்கு,இராசவள்லிழங்கு சாப்பிடமுடியுமோ தெரியாதே. இப்ப சொன்னாதான் உண்டு) இது ஞானி அதிரா எழுதினதோ,இல்லை அமுதசுரபி அதிரா எழுதினதோஓ.

    //அழகழகாக விதம்விதமாக சமைக்கிறோம்.. இது பக்தி., ஆனா இந்த சமையலை நன்கு ரசிச்சு ருசிச்சு இன்னொருவரால் சாப்பிட முடிந்தால்.. அதுதான் ஞானம். பக்தியிலே பக்குவப்படும்போது வருவதுதான் ஞானம், எப்படியோ:) சமைக்க தெரிவது பக்தி[அஞ்சுவைப்போல:) ஹா ஹா ஹா], ஆனா அந்த சமையல் நன்கு பக்குவப்பட்டதாக இருந்தால்[அதிராவுடையதைப்போல:)] அதுதான் ஞானம்.--// ஆவ்வ் இது அமுதஞானி அதிரா எழுதியிருக்கிறா...

    ஊசி இணைப்பு, ஸ்பெஷல் இணைப்பு செம.. சிரிச்சு முடியல.. 😂 😂 😂 மற்றவைக்கு பிறகு வாறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      //அதிராஆஆஆ முடியல....... எனக்குமே தலைசுத்துது//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்குமோ?:).... அந்த மருதனார்மட வைரவர்தான் காப்பாத்தோணும் :))..

      //அவிச்ச பனக்கிழங்கு,இராசவள்லிழங்கு சாப்பிடமுடியுமோ தெரியாதே.//
      என்னாதூஊஊஊ பனங்கிழங்கோ? இப்போ சீசனோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஆரம்பிச்சுட்டுதோ? அப்போ நான் எங்கட தமிழ்க்கடைக்கு ஓடோணும்:)).

      //இது ஞானி அதிரா எழுதினதோ,இல்லை அமுதசுரபி அதிரா எழுதினதோஓ.///
      ஹா ஹா ஹா இது அமுதசுரபிக்குள் இருக்கும் ஞானியின் ஒளிப்பிளம்பில் இருந்து வருது:)).

      //ஆவ்வ் இது அமுதஞானி அதிரா எழுதியிருக்கிறா...//
      ஹா ஹா ஹா இந்தப் பெயர் யூப்பரா இருக்குதே:).

      Delete
    2. மிக்க நன்றி அம்முலு தவறாமல் வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தி முதலிடத்துக்கு ஓட வைப்பதற்கு ஹா ஹா ஹா..

      Delete
  39. “உள்ளவருக்குக் கொடுத்தால் உதட்டால் வாழ்த்துவார்கள்
    இல்லாதவருக்குக் கொடுத்தால் இதயத்தால் வாழ்த்துவார்கள்”.//

    நன்றாக சொன்னீர்கள்.

    //அடுத்தவர் பூவை வேலிக்கு மேலாக எட்டிப் பிடுங்கிக் கொண்டுபோய் கோயிலில் குடுத்தால் அதுக்கு எப்படி நல்ல பலன் கிடைக்கும்?.//

    என் கணவரின் தம்பி வீட்டில் தோட்டத்தில் நிறைய பூச்செடிகள் வளர்க்கிறார்கள், அவர்கள் பக்கத்து வீட்டு அம்மா அதிகாலையில் பூக்களை பறித்து பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு கொடுத்து விடுவார். என் ஓர்ப்படி அவர்கள் பறித்துக் கொண்டு போய் கோவிலுக்கு கொடுப்பது மகிழ்ச்சிதான் ஆனால் உங்க வீட்டுப்பூ என்று வார்த்தை அந்த அம்மா சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தபட்டாள்.
    உன் வீட்டுபூவை கடவுளுக்கு சேர்பதில் அவர்களுக்கு புண்ணியம் உனக்கும் அதில் பங்குண்டு.
    இறைவன் தானே அவர்களை அப்படி செய்ய சொல்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. //அவர்கள் பக்கத்து வீட்டு அம்மா அதிகாலையில் பூக்களை பறித்து பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு கொடுத்து விடுவார்.//

      ஊரில் சிலர் இப்படி இருக்கிறார்கள் கோமதி அக்கா.. நாம் நித்திரையால எழும்ப முன், பறித்துக் கொண்டு போய் விடுவார்கள்.. அது தப்புத்தானே.. கடவுளுக்கென்ன தெரியாதோ அது எங்கு களவெடுத்ததென ஹா ஹா ஹா.. சிலர் கேட்டுப் பறிப்பார்கள் அது பறவாயில்லை.. நம்மால் முடியாத நேரங்களில்கூட, அப்படி பறித்துப் போய்க் குடுக்கச் சொல்லலாம்.

      நாம் மனம் நோகும்படி அடுத்தவர் நடந்து, களவாகப் பிடுங்கி கோயிலுக்கு மாலை போட்டென்ன , ஸ்ரீராம் சொன்னதுபோல, வீட்டினரிடம் கேட்காமல் முருங்கி இலை பறிச்சுக் கூழ் ஊத்தி என்ன?:)... கெட்டித்தனமாக தாம் கடவுளுக்குச் செய்து பலன் அடைகிறோம் என நினைக்கக்கூடும்.. ஆனா அது தப்புத்தானே.

      Delete
  40. //நமக்கோ, அடுத்தவருக்கோ தீமை செய்யாத எந்த நஸ்டமும் இல்லாத, இதனால் நமக்கு நன்மைதான் நடக்கும் எனச் சொல்லும் சில விசயங்கள்... அவை மூட நம்பிக்கைபோலத் தோன்றினாலும், அதைக் கடைப்பிடிப்பதில் தப்பில்லை.//

    உண்மை. நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அக்கா... பிள்ளைகளுக்கும் சொல்லிக் குடுத்திருக்கிறோம் சிலது.. அவர்களும் கடைப்பிடிக்கின்றனர்.. வெள்ளி செவ்வாய்களில் தலைமயிர், நகம் வெட்டக்கூடாது, நைட்டிலும் இப்படி செய்யக்கூடாது என்றெல்லாம்.. இன்னும் சொல்லலாம் வாணாம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  41. இல்லும் பொருளும் இருந்த மனையளவே
    சொல்லும் அயலார் துடிப்பளவே -நல்ல
    கிளை குளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
    வளை குளத்துள் ஈசனையே வாழ்த்து.

    நீங்கள் சொன்னது எல்லாம் இந்த பாட்டில் வருது.
    எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டு, பிறருக்கு உதவி,
    தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ , உடலக்கோ, உயிருக்கோ
    ஊறு விளைவிக்கா செயல் புண்ணியம். ஊறுவிளைவிக்கும் செயல் பாபம்.
    இது படி ஓவ்வொருவரும், மனதால், சொல்லால், செயலால் பிறருக்கு நன்மை செய்து கொண்டு இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அழகிய பாடல் கோமதி அக்கா, நீங்கள் சொன்னதும்தான் பொருள் புரியுது.. நானும் அப்படித்தான், ஒரு விசயம் தவறெனத் தெரிந்து கொண்டு செய்ய மாட்டேன்ன், தெரிஞ்ச ஒரு விசயத்தை, தெரியாததுபோல நடிக்க மாட்டேன்ன்.. மனதில் கோபம் வைத்துக் கொண்டு வெளியே சிரிச்சுப் பேச மாட்டேன்ன்.. அப்படி எனில் நேரே சொல்லி[சண்டைபோட்டாவது:)] என் மனபாரத்தைக் குறைத்துப்போட்டு நோர்மலாகிடுவேன்.

      Delete
  42. ஊசி இணைப்பு எப்படி எல்லாம் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் என்று நினைக்க வைத்தது.
    ஊசிக்குறிப்பு அருமை.. ஸ்பெஷல் இணைப்பு குருவின் சிரிப்பு அழகு.

    ReplyDelete
  43. விஜயகாந்த் பாட்டு இந்த பதிவுக்கு தேவையா? புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் மேலே அஞ்சுவுக்கு ஸ்ரீராமுக்கு விளக்கம் குடுத்திருக்கிறேன் கொஞ்சம் பாருங்கோ கோமதி அக்கா.. எனக்கு அர்ச்சுனனுக்கு குருவித்தலை மட்டுமே தெரிந்ததைப்போல[அம்பு விட:)], எனக்கு அப்பாட்டில் வரும் நகைச்சுவையை மட்டுமே ரசித்து இங்கு போட்டேன்ன்ன்.. சந்நியாசம் பற்றிய:)) ஹா ஹா ஹா..
      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  44. பக்தி ஞானம் பற்றிய தத்துவ விளக்கங்கள், மேலும்
    அதற்கான ‘உதா ர-ண-ங்-க-ள்’ எல்லாமே அருமை.

    ஸ்பெஷல் இணைப்பு (பொருத்தமான படத்துடன் கூடிய) விளக்கம் அட்டகாசம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... உங்களை இங்கு பார்த்ததில் ஆச்சரியம்.. மகிழ்ச்சி.. கொஞ்சம் மனதில் நினைத்தேன் இப்போஸ்ட்டுக்கு வந்தாலும் வருவீங்கள் என.. வந்திட்டீங்க...

      அஞ்சூஊஊஊஊ இப்போ நான் நினைக்கிறதெல்லாம் நடக்குதே:) உண்மையில் ஞானி ஆகிட்டேனோ?:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.

      Delete
    2. நிஜமாகவே கோபு சார் பாராட்டுவதா நினைக்கிறீங்களா? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே. அவர் 'ரணங்கள்' என்று உங்க தத்துவங்கள் காயப்படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறாரே.....

      Delete
    3. //நெல்லைத் தமிழன் Wednesday, January 16, 2019 2:48:00 am
      நிஜமாகவே கோபு சார் பாராட்டுவதா நினைக்கிறீங்களா? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே. அவர் 'ரணங்கள்' என்று உங்க தத்துவங்கள் காயப்படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறாரே.....//

      ஒரு காலத்தில் (16 வயதில்) ’அப்பாவி’யாக இருந்தவர்கள், நடுவில் கொஞ்சம் நாட்கள் ’ஞானி’யாகி இப்போது ’அமுதசுரபி’யும் ஆயாச்சு. மொத்தத்தில் 4-5 மாமாங்கங்கள் ஆயாச்சு. (ஒரு மாமாங்கம் = 12 வருடங்கள்)

      ‘ரணங்களுக்கு’ மருந்திட்டு ஒத்தடம் கொடுக்காவிட்டாலும், இப்படி மேலும் குத்திக் குதறி ரணமாக்கி விட நினைக்கிறீர்களே, ஸ்வாமீஈஈஈஈ. இது நியாயமோ? கர்ர்ர்ர்ர்.

      Delete
    4. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் ரெயினில கடசியா ஓடிவந்து கார்ட்:) பெட்டியில ஏறி இருந்துகொண்டு எஞ்சினுக்கு:) கல்லெறியிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

      பாருங்கோ வர வர நீங்க அனைத்தையும் நெகட்டிவ்வாக்கியே பார்க்கிறீங்க கர்ர்ர்ர்(இப்பூடி எழுதும் சான்ஸ் எனக்கு நெடுகவும் கிடைக்காதெல்லோ:), கிடைச்சதை விடுவேனோ:))).
      மீ ஞானியாகிட்டதால எல்லாமே பொஸிடிவ்வாத் தெரியுது:)... என் போஸ்ட் படிச்சு கோபு அண்ணனே ஆஆஆஅடிப்போயிட்டார்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா இந்த சின்ன வயசிலேயே அதாவது சுவீட் 16 லயே அதிரா, ஞானியாகிட்டேன் என எல்லோருக்கும் பொறாமை:).

      ஆச்சிரமத்துக்கு வாங்கோ எல்லோரையும் இன்ஸ்டண்ட்:) ஞானி ஆக்குறேன் என்றால் யாரும் வாறீங்க இல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்:)... வரும்போது நன்கொடைகளை மறந்திடாதீங்க பிளீஸ்:)..

      கோபு அண்ணன்... புத்தகம்+ பொன்னாடை எல்லாம் நன்கொடைக்குள் அடங்காது:)...

      Delete
  45. எனக்கு நைட் உங்க போஸ்ட் படிச்சி பல கனவுகள் கொஞ்சம் நினைவுகள் எல்லாம் வந்து so நிறைய கேள்வியும் வந்து மத்தியானம் வந்து கேப்பேன் :)

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு தாராளமாக என் ஆச்சிரமத்துக்கு வருகை தரவும்.. ஆச்சிரமக் கதவும் திறந்திருக்கும்.. குழைசாதமும் 24*7 சுடச்சுடக் கிடைக்கும்:)).. மறக்காமல் நன்கொடைகள் தாராளமாக எடுத்து வரவும்.. பணமாகத்தான் தரோணும் என்றில்லை:).., பொன்னாக, வைரமாக எனினும் ஏற்றுக் கொள்ளுவோம்:)) பணத்தாசை நமக்கு எப்பவும் இருந்ததில்லை:0..

      ஹா ஹா ஹா..

      Delete
  46. அனைத்தும் அருமை... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  47. வணக்கம் அதிரா சகோதரி

    நீங்கள் என்னதான் இந்த "சகோதரியை" சுட்டிக்காட்டி குற்றமென பொங்(ய்யிங்) கினாலும், இந்த Dog வாலை நிமிர்த்த முடியவில்லை பாருங்கள்.

    பதிவை மிகவும் அமர்க்களமாய் எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள். பக்திக்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பல விதமான கோணங்களில் சுட்டிக் காண்பித்து அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்துப் படித்தேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ... மீ தான் ஞானி ஆகிட்டேனெல்லோ...:)) எதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வோம்ம்.. உறவு முறையா முக்கியம்.. அன்பு பாசம்தானே முக்கியம்.. நீங்கள் வருவதே மகிழ்ச்சிதான்.

      Delete
  48. /// உண்மையான ஞானநிலை என்பதுகூட எல்லோருக்கும் ஏற்படாது, அதுவும் ஒரு விதத்தில் தானாக வரவேண்டும், அத்தோடு ஞானத்தைக்கூட புதுப்பித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும், இல்லை எனில் அது இல்லாமல் போய் விடும்:).///

    அப்போ ஒவ்வொரு தடவையும் உங் சமையல் குறிப்பை பாக்கும்போது நாங்களே எங்களை தேத்தி புதுபிச்சிக்கிறோமே அது போலத்தானே மியாவ் :)

    ReplyDelete
    Replies
    1. அல்லோ மிஸ்டர்.. இங்கின உங்களுக்கு சப்போர்ட்டுக்கு நெல்லைத்தமிழன் இல்லை என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்ன் ஹா ஹா ஹா:)... இருங்க உங்களுக்கு கறுப்பு உளுந்து வடை ரெசிப்பி போட்டால்தான் எல்லாம் சரியாகும்:).. ஹா ஹா ஹா..

      இன்னும் கிளவிகள் இருக்கினமோ அஞ்சு.. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே... கேள்விகள் இருக்கோ அஞ்சு? மிகுதியை கெள அண்ணனிடம் கேட்டால் என்ன?:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. nooow :) அவர் கௌ :) லாபில் பிசி சோ நீங்கதான் பதில் சொல்லணும்

      Delete
    3. //உங் சமையல் குறிப்பை பாக்கும்போது நாங்களே எங்களை தேத்தி புதுபிச்சிக்கிறோமே//

      ஏஞ்சலின் - உங்களை சப்போர்ட் பண்ணி, 'அப்படியில்லை. அவங்க செய்முறையப் பார்த்து நாம செஞ்சு, கடைசில டாக்டருக்கெல்லாம் போய், ஆள் அடையாளமே தெரியாம புதுசா வர்றோமே அதுமாதிரி' என்று எழுதலாம்னு பார்த்தா,

      இப்போல்லாம் கன்னா பின்னா என்று உங்கள் எழுத்தில் மிஸ்டேக் வந்திருக்கு. இப்போ உங்களை சப்போர்ட் செய்யறதா இல்லை அதிராவையா என்று கன்ஃப்யூஷன்.

      என்ன செய்ய?

      Delete
    4. ஹாஹா :) நெல்லைத்தமிழன் கமெண்டில் போடும்போது அவசர டைப்பிங்கினாலே எர்ரர் வரும் :) அதெல்லாம் மறந்துடுங்க ..உங்களுக்கு ஒரே ஒரு விஷயம் கம்ப பாரதி லவகுச புகழ் அமுதசுரபி செய்ற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் மட்டுமே ஞாபகம் வரணும் சொல்லிட்டேன்

      Delete
    5. @நெ த:)..
      ///ஏஞ்சலின் - உங்களை சப்போர்ட் பண்ணி, 'அப்படியில்லை. அவங்க செய்முறையப் பார்த்து நாம செஞ்சு, கடைசில டாக்டருக்கெல்லாம் போய், ஆள் அடையாளமே தெரியாம புதுசா வர்றோமே அதுமாதிரி' என்று எழுதலாம்னு பார்த்தா,..///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) “பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை” என்பது போல இருக்கே இது:)) இன்னும் என் ஒரு குறிப்புக்கூடச் செய்ததில்லை:)) கடசி அந்த வெங்காயத்தாள் சுண்டல் ம்ஹூம்ம்ம்:)).. படம் பார்த்ததுகே டாஆஆஆஆஆக்டரிடம் போயினமாமே கர்ர்ர்ர்:)).. விடமாட்டேன்ன் என் ஞான திருஸ்டையால எல்லோரையும் என் ரெசிப்பி பார்த்துச் செய்ய வைப்பேன்ன்ன்:)).. இது இந்த தேம்ஸ் கரையில், மீ இருந்து தியானம் பண்ணும் குட்டிக் கல்லின் மேல் ஜத்தியம்:).

      ///இப்போல்லாம் கன்னா பின்னா என்று உங்கள் எழுத்தில் மிஸ்டேக் வந்திருக்கு. இப்போ உங்களை சப்போர்ட் செய்யறதா இல்லை அதிராவையா என்று கன்ஃப்யூஷன்.

      என்ன செய்ய?///

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) மேலே பாருங்கோ.. ஓடி வந்து ஓங்கிக் குரல் குடுக்கிறா:)).. உப்பூடிக் குரல் குடுப்பதால, விட்ட மிசுரேக்கு:) எல்லாம் சரியென ஆகிடாதாம் என ஜொள்ளி வைங்கொ:)).. என்னதான் இருந்தாலும்.. டமில்ல டி எடுத்த ஆட்களைப்போல வராதெல்லோ:))..

      ஊசிக்குறிப்பு:
      ஞானியின் சாபத்துக்கு ஆளாயிடாமல்:)) சப்போர்ட் பண்ணுங்கோ:)) ஹா ஹா ஹா..

      Delete
  49. வணக்கம் சகோதரி

    /எதை நம்மால் உண்டாக்க முடியாதோ, எது இல்லாமல் வாழ முடியாதோ.. அதுதான் “கடவுள்”.
    கோயிலுக்குப் போகிறோம் கும்பிடுகிறோம்... இது ஞானம் அல்ல பக்தி.. ஞானம் என்பது பிரார்த்தனையில்தான் வெளிப்படும்/

    உண்மை. நல்ல நல்ல வார்த்தைகளை கொண்டு அலசியிருக்கிறீர்கள். பக்தியின் முதிர்ச்சி ஞானம் என்று கொள்ளலாமோ?

    /எல்லோராலும் பக்தியை அடைய முடியும், ஆனா ஞானத்தை அடைவதென்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்./

    இதுவும் உண்மைதான். என்னதான் பக்தி முதிர்ந்து ஞானத்தை நோக்கி நடை போட்டாலும், கிடைக்க வேண்டுமென இருக்கும் ஒரு சிலரால்தான் அதை பெற முடியும். இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.
    நமக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அமைதியாக பெறுவதுதான் நமக்கழகு. விதியை மாற்ற யாரால் இயலும்?

    /சரியான தெளிவு கிடைக்காவிடில்:) என் ஆச்சிரமத்துக்கு நேரில் வரவும்..[நன்கொடைகள் முக மலர்ச்சியுடன், கூச்சப்படாமல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன பவுண்ட்ஸில்:)]./

    ஹா ஹா ஹா எனக்கு இன்னமும் சரியான முறையில் தெளிவு வரவில்லை. நான் தங்கள் ஆசிரமத்திற்கு வரத் தயார். ஆனால் "ஏழைக்கேற்ற எள்ளுருண்டையோடுதான்" வருவேன். (அதான் வெற்றிலை பாக்கு, சாஸதிரத்திற்கு கொஞ்சம் பழம், இந்திய ரூபாயில் 11 ரூபாயாக வைத்து கொடுப்பேன்.சரியா?) ஹா ஹா ஹா ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //உண்மை. நல்ல நல்ல வார்த்தைகளை கொண்டு அலசியிருக்கிறீர்கள். பக்தியின் முதிர்ச்சி ஞானம் என்று கொள்ளலாமோ? //

      இதுவும் நல்லாத்தான் இருக்குது... ஆனா சிலர் ஏஎசும்போது.. இவருக்குப் பக்தி முத்திட்டுது அதனால லூஸ் போல ஆகிட்டார் எனவும் பேசுவதுண்டெல்லோ ஹா ஹா ஹா..

      //கிடைக்க வேண்டுமென இருக்கும் ஒரு சிலரால்தான் அதை பெற முடியும். இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.
      நமக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அமைதியாக பெறுவதுதான் நமக்கழகு. விதியை மாற்ற யாரால் இயலும்?//

      உண்மைதானே கமலாக்கா எப்படித்தான் சுற்றிச் சுழன்று யோசித்து.. புரட்டிப் புரட்டி அலசினாலும் விதி என்ற ஒன்றுதானே முடிவில் ஜெயித்து நிற்கிறது.

      //நான் தங்கள் ஆசிரமத்திற்கு வரத் தயார்.///
      ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ வாங்கோ.. அப்பாடா ஒரு கஸ்டமர் வர ரெடியாகிறார்ர்... யாரங்கே அந்த ஃபிரீசரில் இருக்கும் குழை சாதத்தை உடனேயே அடுப்பில வையுங்கோ.. இப்போதான் புதுசா செய்கிறோம் எனச் சொல்லிடலாம்ம்:))..

      // (அதான் வெற்றிலை பாக்கு, சாஸதிரத்திற்கு கொஞ்சம் பழம், இந்திய ரூபாயில் 11 ரூபாயாக வைத்து கொடுப்பேன்.சரியா?) ஹா ஹா ஹா ஹா.///

      நல்ல வெளிர் நிற வெத்திலையாப் பார்த்துக் கொண்டு வாங்கோ. அதுதான் தலை சுத்தாது, வாய் எரியாது:)) பாக்கு கொஞ்சம் நொங்காக இருக்கட்டும்:)) ஹா ஹா ஹா ஹையோ மீக்கு இருட்டடி விழப்போகுதே:)).. காசு 11 ரூபாயென்றாலும் ஓகே.. ஆனா கையில கழுத்தில காதில இருக்கும் வைரம் வைடூரியம் பொன் பொருள் எதுவாயினும் நீங்க கழட்டி எங்கட உண்டியலில் போடலாம்ம்.. நாங்க என்ன வாணாம் என்றா சொல்கிறோம்ம் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
  50. வணக்கம் அதிரா சிஸ்டர்

    வயதாகி விட்டால் ஒருவனுக்கு தானாகவே வரும் சலுகைகள் சிரிக்க வைத்தது. வாழ்க்கை குறித்து சொன்ன தத்துவம் சிந்திக்க வைத்தது.

    அன்னதானத்திற்கு இணையான தானம் வேறு எதுவுமில்லை. ஒரு கைப்பிடி அரிசி சகல ஜீவராசிகளுக்கும் பசி தீர்க்கும்.

    ஊசி இணைப்பு.. குறும்பின் மிளிரல்.
    ஊசிக்குறிப்பு.. கொள்கைச் சிதறல்.
    ஸ்பெஷல் இணைப்பு..சிரிப்போடு பகர்தல். மூன்றுமே மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ///வயதாகி விட்டால் ஒருவனுக்கு தானாகவே வரும் சலுகைகள் சிரிக்க வைத்தது. //

      ஹா ஹா ஹா அது உண்மைதானே.. அவர்கள் என்ன மனநிலையோடு ஒவ்வொன்றைச் செய்கிறார்கள் என்பது அவரவர் மனதுக்கு மட்டுமேதானே தெரியும்.

      ///வாழ்க்கை குறித்து சொன்ன தத்துவம் சிந்திக்க வைத்தது.
      //
      மிக்க நன்றி.

      //ஊசி இணைப்பு.. குறும்பின் மிளிரல்.
      ஊசிக்குறிப்பு.. கொள்கைச் சிதறல்.
      ஸ்பெஷல் இணைப்பு..சிரிப்போடு பகர்தல்///

      ஆவ்வ்வ்வ்வ்வ் மிக்க நன்றி மிக்க நன்றி.

      Delete
  51. வணக்கம் அதிரா சகோதரி

    இன்றைய பதிவில் தாங்கள் தத்துவ மழையாக பொழிந்திருக்கிறீர்கள். தத்துவங்கள் எனக்கு மிகவும் பிடிக்குமென்பதால், உங்களது இந்த பதிவை நான் மிகவும் ரசித்தேன்.

    அதுதான் வேலைகளின் நடுநடுவே வந்து படித்து சூடான கருத்து சாரல்களை தெளித்த வண்ணம் இருக்கிறேன்.

    எப்போதும் போல், மொத்தமாக அனைத்துக்குமாக நீ..ண்..ட..கருத்தாக போட்டால் அது தங்கள் பதிவின்பால் நான் கொண்ட பக்தி.
    சின்ன சின்னதாக எல்லோரையும் போல், ஒவ்வொரு கருத்தாக வந்து போட்டால் அது எல்லோருக்கும் வந்திருக்கும் ஞானம்.

    (ஹா ஹா ஹா ஹா. சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேன். தவறாக நினைக்க வேண்டாம்.)

    ஆகா.. எனக்கு இப்போதுதான் ஏதோ ஆகி விட்டது என நீங்கள நினைப்பது புரிகிறது.
    அதனால்,
    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
    Replies
    1. ///இன்றைய பதிவில் தாங்கள் தத்துவ மழையாக பொழிந்திருக்கிறீர்கள். தத்துவங்கள் எனக்கு மிகவும் பிடிக்குமென்பதால், உங்களது இந்த பதிவை நான் மிகவும் ரசித்தேன்///

      ஆவ்வ்வ் மிக்க நன்றி மிக்க நன்றி.. நான் கண்ணதாசனின் ரைட்டு காண்ட்டாக்கும்[ஹையோ இது நானாக வச்சது:)]. அதனால எனக்கும் தட்த்ஹுவம் எனில் விட்டால் மணிக்கணக்காகப் பேசுவேன்ன்:)).

      //அதுதான் வேலைகளின் நடுநடுவே வந்து படித்து சூடான கருத்து சாரல்களை தெளித்த வண்ணம் இருக்கிறேன்.//
      மிக்க நன்றி _()_ மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி.

      //எப்போதும் போல், மொத்தமாக அனைத்துக்குமாக நீ..ண்..ட..கருத்தாக போட்டால் அது தங்கள் பதிவின்பால் நான் கொண்ட பக்தி.
      சின்ன சின்னதாக எல்லோரையும் போல், ஒவ்வொரு கருத்தாக வந்து போட்டால் அது எல்லோருக்கும் வந்திருக்கும் ஞானம்.///

      ஹா ஹா ஹா எப்பூடி எல்லாம் பக்திக்கும் ஞானத்துக்கும் சிந்திக்க வருகிறது பாருங்கோ.. அருமை...

      //ஆகா.. எனக்கு இப்போதுதான் ஏதோ ஆகி விட்டது என நீங்கள நினைப்பது புரிகிறது//

      ஹா ஹா ஹா எனக்கும்தான்.. மிக்க நன்றிகள்.. மிக்க நன்றிகள்.

      Delete
  52. /“உள்ளவருக்குக் கொடுத்தால் உதட்டால் வாழ்த்துவார்கள்
    இல்லாதவருக்குக் கொடுத்தால் இதயத்தால் வாழ்த்துவார்கள்”.//

    ரைட்டோ ரைட்டு :) மியாவ் உங்கிட்ட கட்டுக்கட்டா வச்சிருக்கிறதை எங்க எல்லாருக்கும் பிரிச்சி தரலாமே :)
    நாங்க ஹார்ட்டால் வாழ்த்துவோம்

    ReplyDelete
    Replies
    1. கட்டுக் கட்டா குயிலிங் க்குப் பேப்பர்தான் சேர்த்து வச்சிருக்கிறேன்ன் உங்களைப் பார்த்து .. அனுப்பி விடட்டோ.. ஹார்ட்ட்ட்ட்டால வாழ்த்துவீங்கதானே?:) ஹா ஹா ஹா..

      Delete
  53. பகவத் கீதையில் ஒரு விவசாயி காலை நிலத்துக்கு சென்று உழைத்து இரவு வீட்டுக்கு வந்து தனது ஏர் கலப்பையை வீட்டின் முன் வைக்கும்போது ஆண்டவா என்பாராம் ..நாள்முழுக்க பூஜிக்கும் ஒருவரை விட இறைவன் இவர் மேல் அதிகம் அன்பு காட்டுவாரா ?
    இது ஞானமா பக்தியா ?

    உடல், ஆத்மா, பரமாத்மா இவற்றை விளக்கவும் ப்ளீச்

    ஆத்ம ஞானம் என்றால் என்ன ?

    ஆசாபாசங்களில் இருந்து விலகி இருப்பது பக்தியா ? இல்லை முக்தியா ?

    பக்தி ஞானம் ..அப்புறமா என்னா ?
    இயறக்கை பேரழிவுக்கு உயிர் வாழும் நாம்தானே காரணம் ?

    நேற்று வாக்கிங் போகும்போது அகலமான ரோட்டில் ஒரு குண்டு பூனை சரியா சிஃனலில் உருண்டு பிரண்டு வேகமா ரோடை க்ராஸ் பண்ணி போனது அது போகும் வரை ரெட் சிக்னல் ஒரு வண்டியும் போலை .அது க்ரிஷ்ணமந்திர் /சாயிபாபா கோவிலில் இருந்து வெளியே போனது ரோட் க்ராஸ் பண்ணும்போது அதை காப்பற்றியது ? இறைவன் தானே .பூனைக்கு கடவுள் தெரியாது ஆனா தன கோயிலுக்குள்ளே வந்த ஜீவனை காக்க கடவுள் இருக்கார்



    ReplyDelete
    Replies
    1. ///நாள்முழுக்க பூஜிக்கும் ஒருவரை விட இறைவன் இவர் மேல் அதிகம் அன்பு காட்டுவாரா ?
      இது ஞானமா பக்தியா ?///

      அல்லோ மிஸ்டர்ர்.. இன்றைய ராசிப்பலன் கேட்டேன்ன்ன்.. இண்டைக்குப் போர்த்திட்டுப் படு பிள்ள.. கொம்பியூட்டர் பக்கம் போனால் ஆபத்து என இருந்துது:)).. போகாதே போகாதே என புத்தி சொல்லியும் பாழாப்போன மனசு கேய்க்கலியே கர்:)) தெரியாம எட்டிப் பார்த்துட்டேன்..

      அஞ்சு இது புதன் கிழமையும் இல்ல, எங்க்லள்புளொக்கும் இல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      நான் அறிஞ்சதை மட்டும் சொல்லிடுறேன், கடவுள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பாகவே இருப்பாராம்.. அவரைக் கும்பிடுவோர் மீதும், கும்பிடாதோர் மீதும்.. நல்லோர் மீதும் கெட்ட எண்ணமுடையோர் மீதும்.... அதாவது நாம் கடவுளின் குழந்தைகள் என நினைச்சுப் பாருங்கோ.. பெற்றோருக்கு தன் குழந்தை எப்படிப்பட்டதாக இருந்தாலும்.. எல்லோர் மீதும் பாசம் ஒன்றாகத்தானே இருக்கும்.. அப்படி..

      அது பக்திதேன்ன்ன்ன்:))

      Delete
    2. ///உடல், ஆத்மா, பரமாத்மா இவற்றை விளக்கவும் ப்ளீச்

      ஆத்ம ஞானம் என்றால் என்ன ?///

      ஆவ்வ்வ்வ்வ் ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ அஞ்சு:) இப்பூடிப் பெரிய கேள்வி எல்லாம் கேட்டு.. அதுக்கு நானும் ஏதோ அனுபவசாலிபோலப் பதில் சொல்ல வெளிக்கிட்டு கல்லெறி வாங்கப் பண்ணப் போறீங்க.. மீ அந்த வகுப்புக்கு மட்டும் அப்செண்ட் ஆக்கும்:))..

      இதெல்லாம் ஆச்சிரமத்துக்கு வந்து கேய்க்கோணுமாக்கும்:).

      Delete
    3. ///ஆசாபாசங்களில் இருந்து விலகி இருப்பது பக்தியா ? இல்லை முக்தியா ?///

      இதில் பக்தி வராதே.. சின்னக் குழந்தைகளுக்கும் பக்தி உண்டெல்லோ... ஆசாபாசங்களை விடுவித்தால்தான் முத்தி பெற முடியும்.. இது துறவறம் எனச் சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்ன்.. துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் வித்தியாசம் உண்டு அஞ்சு.

      எனக்கு சரியா தெரியவில்லை, ஞானிகள் குடும்பத்தோடு வனங்களில் வாழ்ந்தார்களாம்ம் முன்பு, துறவிகள்தான் அனைத்தையும் துறந்து வாழ்வார்கள்.. ஆனாலும் துறவிகளுக்கு அனைத்தையும் துறந்தாலும்.. அம்மாவை மட்டும் துறக்க முடியாதாம்.. அம்மா மட்டும் துறவில் வரமாட்டாவாம்... சரி சரி என் கையை விடுங்கோ மீக்கு நேரமாகுது...:))

      Delete
    4. //பக்தி ஞானம் ..அப்புறமா என்னா ?///

      அப்புறம் துறவறம் தான்.. அதுவரை உயிரோடிருந்தால்ல்:).. அதுக்குள் வயசாகிடும்.... ஆராவது ஒருவரின் உதவி தேவைப்படும் அப்போ எப்பூடி அனைத்தையும் துறப்பதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:).

      Delete
    5. விடுங்கோ அஞ்சு என் கையை விடுங்கோ மீ அப்பம் சூட் பண்ணோனும்.. பாலப்பம் முமுமுட்டை அப்பம் ரெண்டும்:)) விடுங்கோ என் கையை விடுங்கோ... சே..சே.. வாழைத்தண்டுபோல வழுக்காமல் இறுக்கிப் பிடிச்சு வச்செல்லோ கேள்வி கேட்கிறா கர்ர்:))..

      //இயறக்கை பேரழிவுக்கு உயிர் வாழும் நாம்தானே காரணம் ?//
      சிறு திருத்தம்.. நாமும்தான் காரணமே அன்றி.. நாம்தான் அல்ல.. அதெப்படி சொல்ல முடியும்...இயற்கை அழிவு.. பலபல வருடங்களுக்கு முந்தின காலங்களிலும் இருந்துதே.. ...

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா எல்லாக் கொஸ்ஸனுக்கும் டாண் டாண் எனப் பதில் ஜொள்ளிட்டேன்ன் பரிசத்தாங்கோ.. என் கையை விடுங்கோ...:))

      Delete
    6. ஹலோ இப்போதான் ஆரம்பிச்சேன் :) இன்னும் 5 பேராவது டவுட் கேக்கணும் அத்தினி பேருக்கும் நீங்க பதில் தரணும்

      Delete
    7. என் போஸ்ட் படிச்சால் ஆருக்கும் டவுட்டே வராதே:) ஹா ஹா ஹா:).. மயக்க நிலைக்கு மாற்றிடுவேன் எல்லோரையும்.. நெல்லைத்தமிழனுக்கே ஹெட் சுத்துதாம் எண்டால் பாருங்கோவன்:).

      Delete
    8. //இது துறவறம் எனச் சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்ன்//

      துறவிகள்கூட வெளியே செல்ல வெளிக்கிடும்போது (அட உங்க பாஷை), எங்க தன்னோட மரச் செருப்பு, கமண்டலம், கைத்தடி, புலித்தோல்/மான் தோல் என்று தேடுவார்களாமே... அப்போ அதிலும் ஆசை இருக்கல்லோ?

      Delete
  54. பூனை உங்கள் உறவு என்பதால் அதைப்பற்றி விளக்கவும் ப்ளீச் :)

    ReplyDelete
    Replies
    1. //அகலமான ரோட்டில் ஒரு குண்டு பூனை சரியா சிஃனலில் உருண்டு பிரண்டு வேகமா ரோடை க்ராஸ் பண்ணி போனது அது போகும் வரை ரெட் சிக்னல் ஒரு வண்டியும் போலை//

      இதுதான் விதி பாருங்கோ...ஹா ஹா ஹா குண்டருக்கு விதி வலியது போலும்:))

      //அது க்ரிஷ்ணமந்திர் /சாயிபாபா கோவிலில் இருந்து வெளியே போனது ரோட் க்ராஸ் பண்ணும்போது அதை காப்பற்றியது ? இறைவன் தானே //

      நாம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால அப்படித்தான் நம்புவோம்.

      //பூனைக்கு கடவுள் தெரியாது ஆனா தன கோயிலுக்குள்ளே வந்த ஜீவனை காக்க கடவுள் இருக்கார்
      //

      உண்மைதான் அஞ்சு, இதில பூஸார் உயிர்தப்பியது கடவுளை விட அவரது விதி.. அவரது காலம் இன்னும் முடியவில்லை என்றே சொல்லுவேன்ன்... ஆனா கோயிலில் இருந்து வந்தமையால்ல்.. கடவுள் அடிகிடி படாமல் காப்பாற்றி இருக்கிறார்ர்.. ஏனெனில் அடிபட்டால் சாகத்தான் வேணும் எண்டில்லைத்தானே...

      இதனாலதான் சொல்வார்கள் கடவுளைக் கும்பிடுவதால், நம் உயிரை அவரால பிடிச்சு வச்சிருக்கவோ.. ஆயுளை நீடிக்கவோ முடியாதாம், ஆனா நாம் உயிர் வாழும் காலம் வரை தன்னை நம்பியோரைக் கைவிடாமல்.. துன்பங்களிலிருந்து விடுவித்து அல்லது துன்பங்களைக் குறைத்து விடுவார்.

      இப்போ நமக்கு ஒரு பாரிய நோய் வந்து தீரோணும் என இருந்தால், நோய் வரும், ஆனால் கடவுளைக் கும்பிடுவதால் அந் நோயின் தாக்கத்திலிருந்து தப்பலாம்ம்.. பெயின் குறைவாகும்...

      இன்னொன்று அப்பூசார் ஞானியாகிட்டாரோ என்னவோ?:)).. மடியில கனமிருந்தால்தானே வழியில பயமிருக்கும்:)) அதால கூடப் பயப்பிடாமல் ரோட்டைக் குறொஸ் பண்ணியிருக்கலாம்ம்..

      ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்... எங்கே என் சிஸ்யைகள்.. உடனே ஆச்சிரம மெயின் டோரை இழுத்து மூடுங்கோ.. ரெண்டு நாளைக்கு ஆச்சிரமத்துகு விடுமுறை:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாப்பா இப்பூடி வேர்க்குதே:)) ஹா ஹா ஹா..

      மியாவும் நன்னி அஞ்சு.. இப்போ டொல்லுங்கோ மீ ஞானியாகிட்டேனா?:))..

      Delete
    2. //ரெண்டு நாளைக்கு ஆச்சிரமத்துகு விடுமுறை:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாப்பா இப்பூடி வேர்க்குதே:)//
      ஹலோவ் மியாவ் நான் இன்னும் full form கு வரல ..வந்தா இன்னும் 10 க்கு குறையாம கேப்பேன் ..அதுக்குள்ளே அவசரப்பட்டு ஆச்ரம டோரை மூடாதீங்க

      Delete
    3. [im] https://i.pinimg.com/originals/71/31/12/713112a38ececbc2cfcbeebaeb7c3b5f.jpg [/im]

      Delete
  55. that me through-----> this me ------->is talking to me :) இதில் மீ என்பது யார்னு மட்டும் சொல்லிட்டா என் கேள்விகள் தற் :) காலி கமா ஸ்டாப் பண்ணிடுவேன் :)

    ReplyDelete
    Replies
    1. மீ எண்டால் அது மே தேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

      Delete
  56. இன்றுதான் உங்கள் இடுகையை லேப்டாப்பில் பார்த்தேன். இதற்கு முன்பு ஐபேடில் வேறு ஸ்கிரீன் வந்து உங்கள் தளத்துக்குச் செல்லவிடாமல் செய்தது (தளம் விற்பனைக்கு என்பதுபோல... ஏகாந்தன் சாரும் சொல்லியிருப்பாரே)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...
      உங்கட ஐபாட்டை காவேரில வீசிடுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா..
      கில்லர்ஜிக்கும் ஒருதடவை அப்படிக் காட்டியதாக சொன்னதாக நினைவு.. ஏனோ தெரியல்ல.

      நீங்கள் போஸ்ட் படிச்சிருந்தால் ஒரு கொமெண்ட்டாவது போட்டிருப்பீங்க அதனால இன்னும் உங்கள் கண்ணில படவில்லை என நினைச்சேன்ன்.. சொல்லப் பார்த்தேன், பின்பு வேண்டாம் சுற்றுலாவில் இருப்பதால் சொல்லி கஸ்டம் கொடுக்கக்கூடாது என விட்டிட்டேன்.. பார்த்தீங்களோ அதிரா ரொம்ப நல்ல பொண்ணு.. சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்:).

      Delete
  57. நடு இரவு..... ஒரு கதை எழுதி முடித்து ஸ்ரீராமுக்கு அனுப்பினேன். அப்புறம் நான் சமீபத்தில் சென்ற இடங்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது சம்பந்தமாக நெட்டிலும் தகவல்கள் படித்துக்கொண்டிருந்தேன். (உதாரணமா... ராஜராஜன் பெயர் இருக்கும் கல்வெட்டு எந்த இடத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கு என்பதுபோல).

    அப்புறம் உங்க தளத்துல வந்து வாசிக்க ஆரம்பிச்சா, தலை சுத்தாத குறை.

    என்னவாயிற்று.... ஒரே தத்துவ மழை.... பிறகுதான் படிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. //நடு இரவு..... ஒரு கதை எழுதி முடித்து ஸ்ரீராமுக்கு அனுப்பினேன்.//

      ஆவ்வ்வ்வ்வ் பொங்கலுக்கோ?.. எனக்கு கும்மி அடிக்க நேரம் கிடைக்காதே:(.

      //அப்புறம் உங்க தளத்துல வந்து வாசிக்க ஆரம்பிச்சா, தலை சுத்தாத குறை.என்னவாயிற்று.... ஒரே தத்துவ மழை....//
      ஹா ஹா ஹா .. பின்ன இந்த உலக மக்கள் எல்லோரும் உலகத்தை அடிக்கடி மறந்திடுகினம்:)) அதனால மீ இடைக்கிடை இப்படிச் சொல்லி.. நாம் எங்கிருக்கிறோம்:) எப்படிப்பட்ட உலகில் வாழுகிறோம் என்பதை ஞாபகப்படுத்த வேண்டிக் கிடக்கே:)).. இல்லை எண்டால் ஆருமே எதுக்கும் பயப்பிடாமல்.. சுரக்காய் தோசையும் வாழைத்தண்டு ஓசையும் சுட்டுச் சாப்பிடீனம் கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      ரைம் உள்ளபோது படியுங்கோ மிக்க நன்றி.

      Delete
    2. ///அப்புறம் நான் சமீபத்தில் சென்ற இடங்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது சம்பந்தமாக நெட்டிலும் தகவல்கள் படித்துக்கொண்டிருந்தேன். (உதாரணமா... ராஜராஜன் பெயர் இருக்கும் கல்வெட்டு எந்த இடத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கு என்பதுபோல). //

      இப்போதான் இவற்றுக்கெல்லாம் போறீங்களோ?...

      Delete
    3. அதிரா... இந்த இடங்களுக்கெல்லாம் இப்போதும் போகக்கூடாது. இன்னும் விஷயங்களை நன்றாகப் படித்துத்தான் செல்லணும்னு தோன்றியது.

      நீங்க முன்னமேயே பார்த்திருப்பீர்கள் போலிருக்கு.
      1. ராஜராஜன் பெயரில் வரும் முதல் கல்வெட்டு எங்க இருக்கு?
      2. எந்த வழில ராஜராஜன் கோவிலுக்கு எப்போதும் நுழைவார்?
      3. கோவிலின் முதலில் வைக்கப்பட்ட நந்தி எங்க இருக்கு?

      இந்த மாதிரி பல விஷயங்களை கூர்ந்து கவனிக்கணும்னா அதனைப் பற்றித் தெரிந்துகொண்டபிறகுதானே போக முடியும்?

      ஒரு மாதத்தில் இரு தடவைகள் சென்றேன். விரைவில் இதுபற்றி எழுதறேன்.

      Delete
    4. பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் - இதனை நீங்கள் இருவரும் சின்ன வயதிலேயே படித்திருப்பீர்கள் போலிருக்கு (அதிரா, ஏஞ்சலின்).

      நல்லவேளை என் மனைவி படித்திருக்கவில்லை. அதனால் நான் தப்பித்தேன்.

      Delete
    5. நெல்லைத்தமிழன் அண்ணாஆஆஆ:).... உப்பூடி எல்லாம் படிச்சபிறகுதான் போவேன் என்றால்.... நேக்கு ஒரு பயமொயி நுனி நாக்கில வருது ஜொள்ளட்டோ....

      அலைகள் ஓய்வதெப்போ? நாம் குளிப்பதெப்போ? ஹா ஹா ஹா...

      Delete
    6. ///நல்லவேளை என் மனைவி படித்திருக்கவில்லை. அதனால் நான் தப்பித்தேன்.///
      ஹா ஹா ஹா இப்பவும் ஒண்ணும் லேட் இல்லை வட்ஸப்பில் அண்ணிக்கும் அனுப்பிட்டால் போச்சூ:)... இந்த உதவிகூடச் செய்யாட்டில், மீ யாஆஆனி:) ஆகி என்ன பயன்?:)...

      Delete
  58. அன்பின் இனிய
    பொங்கல் நல்வாழ்த்துகள்...

    நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. உங்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி.

      Delete
  59. //எல்லோராலும் பக்தியை அடைய முடியும்,//
    //அதை அடுத்தவர்களுக்குப் புரியும்படி சொல்லக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய தன்மைதான் ஞானம்//

    இது இரண்டும் சரி கிடையாது அதிரா. பக்தி எல்லோருக்கும் வராது. மனது ஒருமுகப்பட்டு, இறை உணர்வு மனதில் இருந்தால்தான் பக்தி வரும். இல்லைனா கண்ணை மூடிக்கிட்டு கையைக் கூப்பிக்கிட்டு நடிக்கத்தான் முடியும். பக்தி என்பது உணர்வுபூர்வமானது, நம்பிக்கையோடு செய்யப்படுவது.

    ஞானம் என்பது, அந்த மாதிரி பக்தி செய்யும் தன்மையையும் கொடுப்பவன் அவனே என்ற தன்னுணர்வு. நானும் நீயும் வேறல்ல, எல்லாரிடமும் இறைவன் இருக்கிறான், ஒவ்வொரு மதமும் வேறல்ல என்ற தெளிவுதான் ஞானம். இது கிடைப்பது வெகு அபூர்வம். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று சொன்ன வள்ளலாருக்குக் கிடைத்தது ஞானம். (பெரும்பாலானவர்களுக்கு 'ஞானம்' என்ற பெயரில் மனைவி வந்தால்தான் 'ஞானம்' கிடைத்தது என்று சொல்லமுடியும். அதுக்கும் இப்போ வாய்ப்பில்லை. எல்லாரும் ரேஷ்மா, சூஷ்மா என்று புரியாத பெயரை வைக்கறாங்க.

    நீங்க ஏதோ, 'டீச்சிங்' செய்யறவங்க எல்லாம் ஞானவான் மாதிரி சொல்றீங்க.

    ReplyDelete
  60. நீங்க இன்னொரு கோணத்தில தெளிய வைக்கிறீங்க நெல்லைத் தமிழன்.. நன்றி... பெரும்பாலும் ஒருவருக்கு துன்பம் அல்லது நோய் , பயம் வந்தால் பக்தி தானாக வருமெல்லோ... கடவுளை கட்டிப்பிடிப்பினம் அந்நேரம்... அப்போ இவை மூன்றும் இல்லாத மனிதர் இல்லைத்தானே... அதனால பக்தி எல்லோருக்கும் வரும் என்றேன்...

    நீங்க சொல்வது... பக்குவப்பட்ட பக்தி.... அதைத்தான் ஞானநிலை என்கிறார்கள் அது டப்போ?:)...

    ஸ்ஸ்ஸ் அது டீச்சிங் அல்ல ரீச்சிங் கர்ர்ர்ர்ர்:)...
    சத்தியமா... பயிர் வாடி இருந்தால், ஒரு பறவை மிருகம் நடு ரோட்டில் தவிச்சா ... கண்கள் முட்டி விடும்... பல தடவை றைவ் பண்ண முடியாமல் கண் முட்டியிருக்கு கர்ர்ர்ர்:)..

    நேற்றுக்கூட சயன்ஸ் ரூமில் ஒரு அழகிய பூக்கன்று பூவுடன் வாடி இருந்ததைப்பார்த்து, பதறிப்போய் என் கையில் இருந்த வோட்டர் பொட்டில் தண்ணியை ஊத்தி விட்டேன்ன்ன்... சத்தியமா.. இப்படி எங்கு பயிர் பூங்கன்று வாடி இருந்தாலும் ச்ச்ய்வேன்.
    அப்போ நானும் ஞானி ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்... வள்ளலார்ர்ர் பற:)ம்பறை:) யாக்கும் மீயும்ம்ம்ம்ம்ம்ம்:).. ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மேடம் மியாவ் ..கென்யாலா ஒரு சிங்கம் சரியா சாப்பிடலைனு சொன்னாங்க :) நீங்க அங்கே போய் அதை பார்த்திட்டு ................வர லாமே
      பரம்பரை :) ற முறம் அறம் நிறம்

      Delete
    2. இதோ... உங்களுக்கு இங்க ஆசிரமம் ரெடி பண்ணிடறேன்.... ரிடையர் ஆன பிறகு இங்க வந்திருங்கோ. வரும்போது, தங்கத்தினாலான கப்பரையும், தங்க சிம்மாசனமும், தங்கத்தினாலான உருத்திராட்சமும், தங்கப் பாதுகைகளும், தங்க கைத்தடியும் எடுத்துட்டு வர மறக்காதீங்கோ...

      Delete
    3. ஸ்வாமீ..... என் குரு ஸ்வாமீ.....

      அடியேனுக்கு ஏதேனும் ’இரகசிய அந்தரங்க ஆலோசகர்’ என்ற கெளரவப் பதவி அளிக்க முடியுமா என யோசித்து வைக்கவும்.

      அப்படி ஏதேனும் ஆஃபர் அளிக்கப்பட்டால் அதை பெரிய மனது செய்து ஏற்றுக்கொள்ளலாமா அல்லது நிராகரிக்கலாமா என நானும் யோசித்து வைக்கிறேன்.
      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :))))))

      Delete
    4. //ஹலோ மேடம் மியாவ் ..கென்யாலா ஒரு சிங்கம் சரியா சாப்பிடலைனு சொன்னாங்க :) நீங்க அங்கே போய் அதை பார்த்திட்டு ................வர லாமே//


      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அல்லோ மிஸ்டர்:) அது மேடம் மியாவ் அல்ல:), ஞானீஈஈஈஈ மியாவ் ஆக்கும்:)).. சே..சே.... நான் ஒரு சானி.. சே..சே.. ஞானி என்பதை நானே சொல்ல வேண்டிய நிலைமையாக் கிடக்கே திருப்பதிப் பெருமாளே:)..

      அந்த ஜிங்கத்தைக் கவனிக்க அங்கின ஆயிரம் பேர் இருப்பாங்க:) ஆனா என் ஆச்சிரமத்துக்கு என்னை நம்பி வரும் பக்த கோடிகளைக் கவனிக்க மீ மட்டும்தானே இருக்கிறேன்ன்:) இது புரியாம கர்:)) ஜிங்கமாம் ஜிங்கம்:)).. தேம்ஸ்ல தள்ளோ தள்ளெனத் தள்ள வெளிக்கிட்டு.. மீ எப்பூடியோ என் கிட்னியை ஊஸ் பண்ணி தப்பி வருவதால இப்போ எப்படியோ ஆருக்கோ காசு குடுத்து ஜிங்கத்தை ரெடி பண்ணுறாவோ என, மீக்கு ஜந்தேகமாவே இருக்குது:))..

      எதுக்கு அஞ்சுவின், மே மே பண்ணையில ரெண்டு ஆட்டைப் பிரெண்டாக்கி வச்சிருந்தால் அந்த ஆபத்துக்கு உதவும்:)) ஹா ஹா ஹா:).

      Delete
    5. //நெல்லைத் தமிழன்
      இதோ... உங்களுக்கு இங்க ஆசிரமம் ரெடி பண்ணிடறேன்....//

      இது “ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதையாக இருக்கே ஆண்டவா”.. .. ஒரு குழைஜாதம்:) செய்து பார்க்கவே காசைச் செலழிக்காமல் இருப்பவர்:), ஆச்சிரம் ரெடி பண்ணுறேன் எனச் சொல்லும்போது.. எதுக்கு முச்சந்தி முனியாண்டித் தாத்தாவிடம் என் கையைக் காட்டிட்டே முடிவுக்கு வரோணும்:)).. செவின் பொயிட் ஃபைவ் வேற நடுக்கூறுக்கு வந்திட்டுதாம்:)).

      ///வரும்போது, தங்கத்தினாலான கப்பரையும், தங்க சிம்மாசனமும், தங்கத்தினாலான உருத்திராட்சமும், தங்கப் பாதுகைகளும், தங்க கைத்தடியும் எடுத்துட்டு வர மறக்காதீங்கோ...///
      ஹையோ இது எங்கயோ இடிக்குதே:)).. இது கூட்டு ஜதி:) போலதான் இருக்கு:).. இதுக்கு திருச்சி உச்சிப்பிள்ளையார் வாசல்ல 3 வது மாடியில, முன் றூமில, கட்டிலைச் சுற்றி பகோடாக்கடை போட்டு வச்சிருப்பவரும் உடந்தையாக இருப்பாரோ என ஜந்தேகமாஆஆஆஆஆஆஆஆஆவே வருது:)).. அஞ்சு.. ஆராட்சி அம்புஜமே.. கொஞ்சம் இதையும் ஆராயக்கூடாதோ மீக்காக?:)) ஹா ஹா ஹா:))

      Delete
    6. //வை.கோபாலகிருஷ்ணன்
      ஸ்வாமீ..... என் குரு ஸ்வாமீ..... ///

      //குரு ஸ்வாமீ..// ஆஆஆஆஆஆஆஆஆஆ எப்போதிருந்து இந்தப் ப்புற:)மோசனாக்கும் ஹையோ ஹையோ:)).

      //அடியேனுக்கு ஏதேனும் ’இரகசிய அந்தரங்க ஆலோசகர்’ என்ற கெளரவப் பதவி அளிக்க முடியுமா என யோசித்து வைக்கவும். ///

      ஹா ஹா ஹா கோபு அண்ணன்.. ஆலோசகர் எனில் ஓகே ஆனா உந்த “இரகசிய அந்தரங்க”.. உங்களுக்குச் சரிப்பட்டே வராது ஜொள்ளிட்டேன்ன்ன்ன்.. உந்த ஆசையை இப்பவே தூக்கிப்போய் உச்சிப்பிள்ளையார் கேணியில வீசிடுங்கோ ஹா ஹா ஹா:))..

      //அப்படி ஏதேனும் ஆஃபர் அளிக்கப்பட்டால் அதை பெரிய மனது செய்து ஏற்றுக்கொள்ளலாமா அல்லது நிராகரிக்கலாமா என நானும் யோசித்து வைக்கிறேன்//

      நான் எத்தனை போஸ்ட் அழுதழுது போட்டென்ன:).. இந்தக் காலத்தில உங்களை எல்லாம் ஞானியாக்க முடியாதாக்கும்.. ஹா ஹா ஹா:)).. சே..சே... முடியல்ல முருகா என்னால முடியல்ல:) இந்த ரேஞ்சில போனால்ல்ல், ஆச்சிரமத்தை மூட வேண்டி வந்தாலும் வந்திடப்போகுதே:))

      Delete
    7. @அஞ்சு
      //பரம்பரை :) ற முறம் அறம் நிறம் //

      அல்லோ மிஸ்டர் இப்போதானே கவனிச்சேன்ன் அது ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு என நினைச்சுட்டீங்களோ?:) ஹா ஹா ஹா .. அது நான் வேணுமெண்டே சில சொற்கள் இப்பூடி எழுதுவேன்ன்.. அதனாலதான் எப்பவும் வேணுமென எழுதும் எழுத்துக்கு பக்கத்தில் ஸ்மைலி போடுவேன்ன்.. கவனியுங்கோ ஹா ஹா ஹா:)).

      Delete
  61. எபியில் எனது படைப்பு ஒன்று வெளியாகியிருக்கிறதே - செவ்வாய்க் கிழமை அன்று!...

    வாசிக்கவில்லையா!...

    பழைய பதிவு என்று ஓரமாகத் தள்ளியாயிற்றோ!...

    இதற்கு முன் கூட ஒரு கதைப் பொழுதில் அமுத சுரபி வரவில்லை என நினைக்கின்றேன்...

    அமுதசுரபி வந்து வாசிக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ துரை அண்ணன், உண்மையில் கதை படிக்கவில்லை, ஆனா செவ்வாய்க்கிழமை உங்கள் கதை என்பது தெரியும்... 2, 3 நாட்கள் எங்கயும் போகவில்லை.. அதனால விட்டு விட்டேன்..

      அதிலயும் அதிரா வரவில்லை என, நீங்கள் பெரிதாக கணக்கெடுக்க மாட்டீங்கள்.. என்றெல்லோ நினைச்சிருந்தேன்..

      //இதற்கு முன் கூட ஒரு கதைப் பொழுதில் அமுத சுரபி வரவில்லை என நினைக்கின்றேன்...///

      என்னை...என் கொமெண்ட்ஸ் ஐ பெரிதாக கணக்கெடுக்க மாட்ட்டீங்கள் என நினைச்சே சிலசமயம் உடனே போக முடியாது விட்டால் அப்படியே விட்டு விடுவதுண்டு:).. தப்பாக எடை போட்டு இருந்துவிட்டேன்ன்.. மன்னிச்சுக் கொள்ளுங்கோ..

      //அமுதசுரபி வந்து வாசிக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது...//

      இதோ இப்பவே கதை படிக்க ஓடுகிறேன்ன்.. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

      Delete
  62. என் தளத்தில் குருவியார் அதிராவை தேடுகிறார்.
    ஏஞ்சலையும் தான்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.