நல்வரவு_()_


Thursday 12 March 2020

அதிராவின் தமிழும், கொரொனாவும்:)

நிறைய விஷயங்கள் போஸ்ட் போடுவதற்கு இருக்கு, ஆனா அதற்கிடையில சிலதை சொல்லோணும் என விரும்பி இன்று எப்பூடியாவது போஸ்ட் போட்டிடோணும் என அவசரமாக எழுதுகிறேன்.
முதலில் என் தமிழுக்கும் நெல்லைத்தமிழனுக்கும் இடையில எப்பவும் முட்டி மோதலாகவே இருந்து கொண்டிருக்குது:))  ஹா ஹா ஹா... அதனால அதை முதலில் தெளிவு படுத்துவமே என ஆரம்பிக்கிறேன்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த வலையுலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து, நான் என்ன நினைத்திருக்கிறேன் எனில், புளொக் என்பதற்கு, எந்த வரைமுறையும் இல்லைத்தானே, அத்தோடு நாம் இதை முக்கியமாக நம் பொழுது போக்குக்காகவும் சந்தோசத்துக்காகவும்தானே உபயோகப்படுத்துகிறோம் என்பதனால, நான் எழுதும்போது 80 வீதமும்  “என்பேச்சு வழக்கு மொழியிலேயே”.. எழுதி வருகிறேன். இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு, அத்தோடு வீட்டில் நான் எப்படித் தமிழில் பேசுவேனோ அப்படியேதான் இங்கும் பேசுகிறேன், சுத்தமான தமிழில் எழுதுவது எனக்கு விருப்பமில்லை, அது ஏதோ எக்ஸாமுக்கு எழுதுவதைப்போல இருக்கு,.. பலர் அப்படித்தான் எழுதுகிறார்கள், அது அவரவர் விருப்பம்.

அதனாலதான் நான் பேசும்போது, தமிழ்ச் சொற் பிழை விடுகிறேன் என நெல்லைத்தமிழன் சண்டைக்கு வருகிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா.

இப்போ அஞ்சு பேசும்போது “தீ பத்திடிச்சி” என்பா, இதை நான் சொல்லும்போது “நெருப்புப் பத்திவிட்டது” என்பேன்... பத்திடிச்சி, பத்திவிட்டது இரண்டுமே சரியான தமிழ் இல்லை என்பது எனக்குத் தெரியும், ஆனா நான் என் பேச்சு வழக்கு மொழியையே இங்கு பாவிக்க விரும்புவதாலும், அது எழுதும்போது ஈசியாக இருப்பதாலும் அப்படியே எழுதுகிறேன்.

சில சொற்கள் நாம் பேசும்போது பாவிக்க மாட்டோம்.. அதாவது தீ எனப் பேசமாட்டோம், நெருப்பு என்றே சொல்லுவோம், அதேபோல, தூக்கம் எனச் சொல்வதில்லை, நித்திரை என்போம்..

மற்றும்படி நாங்கள் பரீட்சையின்போது அல்லது ஏதும் ஒபிஷல் லெட்டர் எழுதுவதாயினும், சரியான தமிழில்தான் எழுதுவோம்.

இப்போ ரவா எனச் சொல்லோணும் என நெ.தமிழன் சொன்னார்.. அதுதான் சரியான தமிழாக இருக்கலாம், ஆனா நாங்கள் வீட்டில் ரவ்வை எனச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்டோம்.. அது  “பேச்சுவழக்குமொழி”..  அதனாலயே நான் இங்கும் ரவ்வை எனப் பாவிக்கிறேன்.. இப்போ நான் வீட்டில், “இன்று நான் ரவா செய்திருக்கிறேன்” எனச் சொன்னால்.. வட் இஸ் தட்.. எனக் கேட்பினம் ஹா ஹா ஹா..

இதேபோல பல சொற்கள்...  “ரொம்ப” என நாம் பேசமாட்டோம்.. “நிறைய” அல்லது “அதிகம்” இப்படிச் சொற்கள்தான் பாவிப்போம்.. இப்போ நான் வீட்டில் பேசும்போது  “ரொம்ப நோகுது”.. எனச் சொன்னால் .. எல்லோரும் சிரிப்பார்கள்.. நீ எப்போ இந்திய தமிழுக்கு மாறினாய் எனக் கேட்பினம்.

இதேபோலத்தான் “ஓம்” என்றுதான் நாங்கள் பேசுவோம், ஆனா நீங்க “ஆமா” எனச் சொல்லுவீங்க.. இப்போ நாங்கள் வீட்டில் ஆமா ஆமா என்றால் எல்லோரும் நகைச்சுவையாகச் சொல்கிறேன் எனச் சிரிப்பார்கள்.. உங்கட வீட்டிலும் அப்படித்தானே இருக்கும்.

அதேபோல saree  என்றால் நாங்கள் பேசும்போது “சாறி” எனத்தான் பேசுவோம்.. அதைத்தான் அப்படியே இங்கும் எழுதுவேன், ஆனா இதை அப்படிச் சொல்லக்கூடாது “சாரி” எனத்தான் சொல்லோணும் என நெ.தமிழன் சொன்னார்... என்னைப்பொறுத்து இரண்டுமே தப்புத்தானே, தமிழில் பேசுகிறோம் எனில் சேலை எனத்தானே சொல்ல வேண்டும், மற்றும்படி பேச்சு வழக்குத்தானே.. இதேபோலத்தான்  sorry என்பதையும்.. நான் சொறி.. என்றே பேசுவதை அப்படியே எழுதுகிறேன்.

இதனால இப்படிச் சொற்களில் சரிபிழை என்பதை விட, நான் இங்கு எழுதுவது என் பேச்சு வழக்கு மொழி:)).. என்னோடு வலையுலகில் பேசிப்பழகிய சிலர், ஃபோன் தொடர்புக்கு வந்தபோது சொன்ன வசனம்.. “அதிரா நீங்கள் புளொக்கில் பேசியதுபோலவே அதே அதிராவாகவே நேரிலும் இருக்கிறீங்க” என்றார்கள்.. எனக்கு அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

இதைத் தாண்டி, ச்சும்ம்மா முசுப்பாத்திக்காக பல சொற்கள் எழுதுவேன்.. அது என் பேச்சு வழக்கு மொழி அல்ல:)) அதாவது “டமில், ஜந்தேகம்... டப்பு, ஜத்தியம், தெகிறியம்...” இப்பூடிப் பல சொற்கள்.. இவை எல்லாம் கொமெடிக்காகவே எழுதுவேன் அப்பப்ப அதைப் புரிஞ்சுக்கோங்க:)) ஹா ஹா ஹா:)).

ஆனா இந்த ழ, ள எழுத்துப் பிழை என்பது.. அது பிழைதான்.. எனக்கு தெரியாமல்தான் பல சொற்கள் பிழையாக எழுதி வருகிறேன்.. அதில் நீங்கள் எல்லோரும் சொல்லிச் சொல்லி.. 2008 இலிருந்து:)).. திருத்தி வருகிறேன்:))..

இப்போ என் தமிழ் பற்றி எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும் என நினைக்கிறேன்:)).. இத்துடன் என் தமிழ்ச் சிற்றுரையை முடித்துக் கொண்டு....:)
😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐

இதுவே பெரிய போஸ்ட்டாகி விட்டதே ஹா ஹா ஹா.. பொறுமையைக் கொஞ்சம் கடைப்பிடியுங்கோ... மிகுதியையும் சொல்லிடுறேன்..:)

பொயிங்கக்கூடாது, பொயிங்கினால் பிபி ஏறும் சொல்லிட்டேன்:))

இந்தக் கொரொனாபற்றித்தான் இப்போ எங்கு பார்த்தாலும் பேச்சு.. இது பற்றி என் “செக்” ஏ போஸ்ட்டில சொன்ன பின்பு, நான் சொல்லாட்டில் எனக்கு ஒரு மருவாதை:).. இருக்காதெல்லோ:).

ஆனா எனக்கு இதில ஒரு வருத்தம், கொரொனாவை ஆரம்பித்தது சைனாக்காரர் என எல்லோரும் திட்டுகின்றனர்.. சைனீஸ் ஐக் கண்டால் தூர ஓடுகின்றனர்.. இதைப் பார்க்க எனக்கு மனதுக்கு வருத்தமாக இருக்கு, இவை எல்லாம் விதி, முன்வினைப்பயன்கள் அல்லது கர்மா எனக்கூடச் சொல்லாமே தவிர, இப்படி பேசுவது கொஞ்சம் கஸ்டமாகவே இருக்குது.

நான் யோசிக்கிறேன், இப்போ இலங்கையில் ஒரு கொடிய நோய் பரவுது எனில், என்னைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடினால், எனக்கு எவ்வளவு கஸ்டமாக இருக்கும், நான் என்ன தப்பு பண்ணிட்டேன் எனத்தான் கவலைப்படுவேன், அப்படித்தானே வெளிநாட்டில் வாழும் சைனீஸ்காரரும், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனராம்.

இப்போ 2 நாட்களுக்கு முன்னம் ஒரு சைனீஸ் ஐப் பிடிச்சு, ஒரு வெள்ளைக்காரர் கன்னமெல்லாம் வீங்குமளவுக்கு நல்ல அடி கொடுத்திட்டாராம் “உங்களாலதாண்டா எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை” என... இதெல்லாம் தப்புத்தானே... நமக்கு ஒரு விஷயம் நடக்கோணும் என இருப்பின் அது நடந்தே தீரும், நடக்காதெனில் நடக்காது, இதற்காக அடுத்தவரைக் குற்றம் சொல்லி என்ன பயன், ஆனா நாம் கவனமாக இருக்கோணும்..

அடிக்கடி கையை நன்கு சோப் போட்டுக் கழுவச்சொல்லி, ஸ்கூலிலும் வற்புறுத்துகிறோம், இதனால பாட நேரம் கூட குறையுது, வகுப்பில் அத்தனை பிள்ளைகளும் சோப் போட்டுக் கை கழுவ வைக்கிறோம் அடிக்கடி, இதனால கை துடைக்கும் ரிஷூக்களும் பெரிய பெரிய குப்பையாக நிரம்புது.

இன்று இப்போ வந்த தகவல், அயர்லாந்தில் ஒருவர் காலமானதால், அங்குள்ள ஸ்கூல்கள் மாத இறுதிவரை மூடப்பட்டுள்ளதாம்.. நமக்கு எப்பவோ தெரியவில்லை.

இப்ப மக்கள் எதற்காக பொருட்கள் வாங்கி வைக்கின்றனர் எனில், நமக்குத் தெரியாதுதானே, நமக்கு வருமோ இல்லையோ என்பது, தப்பித்தவறி நம் வீட்டில் ஒருவருக்கு வந்திட்டால், இங்குள்ள இப்போதைய றூள்ஸ்.. வெளியே வர வேண்டாம், ஃபோன் மட்டும் பேசுங்கோ என்பதே, அப்போ அவர்கள் வீட்டுக்கு வந்து செக் பண்ணுவினம், கொரோனா தான் எனக் கொன்ஃபோமானால், எல்லோரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்வார்கள், வெளியே ஒரு போர்ட் மாட்டி விடுவார்களாம், அதனால 15 நாட்களுக்கு ஆரும் உள்ளேயும் வரக்கூடாது வெளியேயும் போகக்கூடாது என்பது. இப்படி திடீரெனச் சம்பவம் நிகழ்ந்தால் என்ன பண்ணுவது என்பதற்காகவே கொஞ்சம் பொருட்கள் வாங்கி சேஃப் பண்ணுவது முக்கியம்.

பொதுவாக கடும் வயதானோரையும், கடும் வருத்தமுள்ளோரையும்தான் இந்நோய் தாக்குகிறதாம், ஏனையோருக்கு வந்தாலும், பெரிதாக பயப்படத்தேவையில்லை மாறி விடும் என்கிறார்கள். இதுவரை இதனால இறந்தோரும் கடும் வயதானோர்தான்.

இதற்கு நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியம், இதற்காக இயற்கை வைத்தியமாக, இஞ்சி, உள்ளி, வெங்காயம், மஞ்சள், மிளகு.. இப்படியானவற்றை அதிகம் உணவில் சேர்க்கச் சொல்கின்றனர்...

நன்றி, 
இப்படிக்குப் பிஞ்சுப் பேச்சாளர்:)) 
அதிரா:).

ஊசி இணைப்பு

ஊசிக் குறிப்பு

ஹா ஹா ஹா நான் வீட்டில் சொல்லியிருக்கிறேன் டெய்ஷிப்பிள்ளைக்கு ஒரு மாஸ்க் போட்டே வெளியில விடோணும் என, அடிக்கடி வெளியே போய் ஊற் சுற்றி வந்து , கட்டிலில் ஏறி நம் முகத்தோடு முகம் வைத்துப் படுக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா, ஆனா நான் வெட் வைப்ஸ் பொட்டு உருட்டி உருட்டி துடைச்சுத்தான் உள்ளே எடுக்கிறனான்.

குளிருக்கு ஹீட்டருக்குப் பக்கத்தில் இருக்கிறாவாம், ஆனா முன்னங்கால் வைக்க அங்கு இடமில்லையாம், அதைக் கீழே வச்சிருக்கிறாவாம் ஹா ஹா ஹா.. என்னா அறிவு.. அவட மம்மியைப்போல:)
()()()
தடங்கலுக்கு வருந்துகிறேன்:).. என் ரொட்டிப் போஸ்ட் விரைவில் வெளிவரும்...
)))))))))))))))))))_()_((((((((((((((((((((

127 comments :

  1. ஆஆஆஆ :) ஒரு வார்த்தையை மாத்தி டைட்டில் போட்டாபோவே கவனிச்சிருக்கணும் 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. நீங்க கொஞ்சம் லேட்டா வந்தமையால இம்முறை 1ச்ட்டூ எனப் பயத்தில கத்தவில்லைப்போலும் ஹா ஹா ஹா..

      புரியவில்லையே:))

      Delete
    2. ,, அது :) எழுத்தாளர்லருந்து பேச்சாளர்னு மாத்திருக்கிங்களே அதை சொன்னேன் 

      Delete
    3. ஓ அதுவோ.. பெயர் மாற்றத்தை நீங்க கவனிக்கவில்லை என நினைச்சிட்டேன்:))

      Delete
  2. //ஆனா முன்னங்கால் வைக்க அங்கு இடமில்லையாம், அதைக் கீழே வச்சிருக்கிறாவாம் ஹா ஹா ஹா.. என்னா அறிவு.. அவட மம்மியைப்போல:)//
    ஹாஆஹா :) மம்மிபோல பிள்ளை என் பொண்ணு என்னைப்போலவே குட்டி உடம்பு இப்டி கால் வைக்க இடம் தேட வேண்டாம் ஹஆஹாஆ 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  3. பிரபஞ்ச நியதி உண்மைதான் :) அவரவர் செய்வதற்ககு அவரே பலன் அனுபவிப்பர் .சில வருஷமும் என் உறவினர் ஒருவரை தானாக முடியாமல் நிந்தித்துவிட்டேன் ..ஆனா 5 செக்கண்டில் மனம் மாறி இறைவனிடம் மன்னிப்பும் கேட்டாச்சு .அந்த உறவு இது வரைக்கும் திருந்தலை இனியும் திருந்தாதது .அதைப்பற்றி நான் கவலையும் படப்போவதில்லை :) 

    ReplyDelete
    Replies
    1. //ஆனா 5 செக்கண்டில் மனம் மாறி இறைவனிடம் மன்னிப்பும் கேட்டாச்சு//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)).. அது மன்னிப்புக் கேட்டாலும் “நடந்தவை யாவும் நடந்தவைதானே”.... நாமும் மனிதர்கள் தானே சிலசமயம் முடியாத பட்சத்தில் மனதில் திட்டவேண்டியும் வந்திடுது.

      எனக்கு உண்மையில் சில சம்பவம் நடந்திருக்கிறது, அநியாயமான சில தவறு எனக்கு நிகழ்ந்து, மனதால மிக வருந்தினேன், அதன் பலன் காட்டப்பட்டது எனக்கு.. ஆனா கடவுளே நான் மனம் வருந்தியதாலதான் இப்படி ஆச்சோ அவர்களுக்கு என அதுக்கும் மனம் கவலைப்பட்டேன்ன்.. மீ ஒரு லூஸு [அல்லோலோ எப்பவும் அல்ல சில சமயங்களில் மட்டுமாக்கும்:))] ஹா ஹா ஹா..

      சிலர் திருந்த மாட்டினம் அஞ்சு, அப்படியானோரை விட்டு நாம் ஒதுங்குவதே நல்லது, கூட சேர்ந்து சேர்ந்து எதுக்கு நாமும் கஸ்டப்பட்டு, அவர்களையும் குறை சொல்ல வேண்டும்.

      Delete
  4. // நம் முகத்தோடு முகம் வைத்துப் படுக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா, ஆனா நான் வெட் வைப்ஸ் பொட்டு உருட்டி உருட்டி துடைச்சுத்தான் உள்ளே எடுக்கிறனான்.//

    என் பொண்ணுங்க அதுவும் ஜெசி டைரக்ட்டா கன்னத்தில் கிஸ் குடுப்பா :) நான் ஒன்னும் செய்றதில்லை :))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. அவர்களும் நம் குழந்தைகள்தானே.. நம்மை தம் அம்மா என்றே நினைக்கும்போது நாம் எப்படி தடுக்கமுடியும்...
      நான் நித்திரை கொண்டால், தன் கையால என் கன்னத்தில மெதுவா தடவித்தடவி எழுப்புறா, டோர் ஐத் திறக்கச்சொல்லி ஹா ஹா ஹா..

      Delete
  5. //இதுவரை இதனால இறந்தோரும் கடும் வயதானோர்தான்.///

    உண்மைதான் ஏற்கனவே நிமோனியா ஃப்ளு பாதித்த 85/90 வயதானோர்தான் இறந்திருக்காங்க 

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு, எதை நினைச்சாலும் பயமாகத்தான் இருக்குது.. வயதானோர் கூடுதல் கவனமாக இருக்க வேணும்.. நான் அம்மாவிடம் சொல்லிட்டேன் வெளியே எங்கும் போகக்கூடாது என, நேற்றுக் கதைக்கும்போது சொன்னா, அக்காவின் மகன் நாளைக்கு மோல் க்கு வரச் சொன்னார் தன்னோடு என, அதுதான் எங்கும் போக வேண்டாம் எனச் சொல்லிட்டேன்..

      வருவதை நம்மால் தடுக்க முடியாதுதான், ஆனா நாமாக எதுக்கு வலியப் போய் வாங்க வேண்டும்..

      Delete
  6. //இப்படி திடீரெனச் சம்பவம் நிகழ்ந்தால் என்ன பண்ணுவது என்பதற்காகவே கொஞ்சம் பொருட்கள் வாங்கி சேஃப் பண்ணுவது முக்கியம்.//
    சரி பேச்சாளர் :) இப்போவே புறப்படறேன் :)) எனக்கு பிடிச்ச பனானா சிப்ஸ் 10 பாக்கெட் வாங்கி வைக்கணும் :))))))))))))

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது மேட் இன் சைனாவாக இருந்திடப்போகுது:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. நான் பஹ்ரைனில் இருந்தபோது நம் இந்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம், அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்தார். டக்குனு மனசுல சிந்திக்க நேரம் இல்லாமல், கட கடவென 3 சாக்கு அரிசி வீட்டில் வாங்கிவைத்தேன் (அப்படி வாங்கியிருக்கத் தேவையில்லை. மற்றவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே நாமும் இருப்போம் என இருந்திருக்கலாம். அரிசிக்கு இந்தியாவைவிட, பாகிஸ்தான் அரிசியே அங்கெல்லாம் மிகவும் அதிகம்).

      பயத்தில் பொருட்களைப் பதுக்கினால், அது யாருக்கும் உபயோகம் இல்லாது வேஸ்ட் ஆகிவிடும்.

      Delete
    3. உண்மைதான் நெ.தமிழன், ஆனாலும் கொஞ்சம் ரெடியாக இருக்கோணும்.. இது ஹவுஸ் அரெஸ்ட் போல பண்ணுகிறார்கள் எனும்போது, வீட்டில் எப்பவும் கொஞ்சம் ரெடியாக இருந்தால் நல்லதுதானே...

      இப்போ இங்கு யூனிவசிட்டிகளையும் மூடி வருகிறார்கள், இன்று மகனாட்களின் யூனியும் மூடி விட்டார்கள்... இனி ஸ்கூல்களும் மூடப்படலாம் கொஞ்ச நாட்களுக்கு.

      Delete
  7. //“செக்” ஏ போஸ்ட்டில சொன்ன பின்பு, நான் சொல்லாட்டில் எனக்கு ஒரு மருவாதை:).. இருக்காதெல்லோ:).//

    தலவீ அது ட்ரெய்லர் மட்டும்தென் :) நீங்க சொன்னதே மெயின் பிக்சர் 

    ReplyDelete
    Replies
    1. //தலவீ அது ட்ரெய்லர் மட்டும்தென் :) நீங்க சொன்னதே மெயின் பிக்சர் //

      ஹா ஹா ஹா ஓ அப்பூடியா? அதுதானே பார்த்தேன்ன்:))..

      Delete
  8. சென்னை தமிழ், மதுரை தமிழ், கொங்கு தமிழ், தஞ்சை தமிழ், நெல்லை தமிழ். நாஞ்சில் தமிழ், என்று பல தமிழ் வழக்குகள் தமிழ் நாட்டிலேயே உள்ளதே. பரவா இல்லை கொஞ்சம் யாழ்  தமிழையும் கற்றுக்கொள்கிறோம். கொழும்பு தமிழையும் யாராவாவது எழுதினால் படிக்கலாம். என்னுடைய யாழ் தமிழ் பரிச்சயம் டொக்டர் முருகானந்தம் அவர்களுடைய https://hainalama.wordpress.com/ மற்றும் அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதை வாசிப்பில் இருந்தும் http://amuttu.net/ பெற்றவை.
    இந்த வாரம் உபதேசம் நன்று. யாரையும் திட்டாதீர்கள். என்னையும் கூட. 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..

      கொழும்பிலுள்ளோர் தமிழ் கிட்டத்தட்ட சென்னைத்தமிழாகவே இருக்கும்.. காரணம், தென் இலங்கையில் இருப்போர் பெரும்பாலும் தமிழ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து இலங்கைக்கு வந்தவர்கள்.. அந்த அடியைச் சார்ந்தோர்தான் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர்கள், மற்றும்படி இலங்கையின் அனைத்துப் பகுதி மக்களும் கொழும்பில் வசிக்கிறார்கள் தானே.. சென்னையைப்போல.

      இலங்கையிலும் ஒவ்வொரு மாகாண மக்களின் பாஷையும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்படும்.

      //யாரையும் திட்டாதீர்கள். என்னையும் கூட.//

      ஹா ஹா ஹா உங்களை எதுக்குத் திட்டப்போகிறேன்..:))

      Delete
  9. //கொரொனாவை ஆரம்பித்தது சைனாக்காரர் என எல்லோரும் திட்டுகின்றனர்.. சைனீஸ் ஐக் கண்டால் தூர//

    ஒரு ரெஸ்டாரண்டில் பிரிட்டிஸ்காரரின் சீன மனைவியுடன் சென்றபோது உள்ளே விடலைன்னு படிச்சேன் .என் ப்ரெண்டுடன் நேற்று வெளியே போனோம் அவர் மருமகள்  சீனப்பெண் .நேற்று சொன்னார் அவர் எங்கும் போக மாட்டேங்கிறாராம் 18 மாத குழந்தை இருப்பதால் பயமா இருக்காம் நோய் தொற்றும்னு

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு, ஒரு அந்தர அவசரத்துக்குக் கூட பப்ளிக்கில் இரும முடியாமல் இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      Delete
  10. //மஞ்சள், மிளகு.. இப்படியானவற்றை அதிகம் உணவில் சேர்க்கச் சொல்கின்றனர்.../
    நான் டெய்லி TURMERIC டீ குடிக்கிறேன் ஹெஏ ஹி  

    ReplyDelete
    Replies
    1. //நான் டெய்லி TURMERIC டீ குடிக்கிறேன் ஹெஏ ஹி//

      அல்லோ மிஸ்டர்.. அது மிக மிகச் சூடு... அப்படி ரீயாகக் குடிப்பதைக் காட்டிலும் உணவில் எடுங்கோ.. சூடு உடம்பில் அதிகமானாலும் தொண்டை நொந்து பின்பு காச்சல் வரக்கூடும்..

      நான் அப்படி ஒரு கிழமை தொடர்ந்து மஞ்சள் ரீ குடிச்சு காச்சலாக்கி அவதிப்பட்டேன் தெரியுமோ.. அனுபவம் பேசுது:))

      Delete
  11. //ரொம்ப நோகுது”.. எனச் சொன்னால் .. எல்லோரும் சிரிப்பார்கள்.. நீ எப்போ இந்திய தமிழுக்கு மாறினாய் எனக் கேட்பினம்.//

    HAAAHAA :) எனக்கு ரொம்ப ரொம்ப ....ரொம்பவே அடிக்கடி வாடும் வார்த்தை 

    ReplyDelete
    Replies
    1. நாங்க சொல்லும்போது.. நிறைய, கனக்க, அதிகம், சரியா.. இப்படித்தான் பாவிப்போம்.

      ரொம்ப நோகுது= சரியா நோகுது என்போம்:))

      Delete
  12. //“அதிரா நீங்கள் புளொக்கில் பேசியதுபோலவே அதே அதிராவாகவே நேரிலும் இருக்கிறீங்க” என்றார்கள்.. எனக்கு அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.//
    அஆவ் அஆவ் :)எச்சூஸ்மீ .உங்கள் வாட்சாப் வைபர் நம்பர் ப்ளீச் :) நாங்களும் கன்போர்ம் பண்ணலுமில்லையா :)

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் பொல்லுக் கொடுத்தே அடி வாங்கிறேனோ:)).. ஹா ஹா ஹா.. அது முன்பு தொடர்பில் இருந்தேன் ஒரு 6,7 பேருடன்... :)..

      நெல்லைத்தமிழனிடமும் கோபு அண்ணனிடமும் என் வாச்சப்:)) நெம்பர் இருக்குது வாங்குங்கோ.. நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. நீங்க வேற... இந்த ஸ்ரீராம், கீதா ரங்கன், கீசா மேடம்..... இவங்களோட வாட்சப் நம்பரே இன்னும் எனக்குக் கிடைத்த பாடில்லை. கூரை ஏறியே கோழி பிடிக்கலை..இதுல வானம் ஏறி வெளிநாட்டு வாட்சப் நம்பர்லாம் வாங்கப்போறேனாக்கும்...

      Delete
    3. //இந்த ஸ்ரீராம், கீதா ரங்கன், கீசா மேடம்//

      இந்த வரிசையில கோபு அண்ணனை விட்டிட்டீங்களே.. இஃகி.. இஃகி:)) கஸ்டப்பட்டுக் கீசாக்காவைப்போல சிரிச்சேன்:))
      ஒரு வட்ஸப் நம்பர் கிடைக்காததுக்குப் போய் எதுக்கு கூரையைக் கோழியை எல்லாம் கூப்பிடுறீங்க ஹா ஹா ஹா:))..

      என் வட்சப் நம்பரும் யாரிடமும் இல்லை, நான் மேலே சொன்னதெல்லாம் முன்னொரு காலம் வட்சப் வைபர் இல்லாத காலத்தில் நிகழ்ந்தவை.. இப்போ இல்லை.

      Delete
  13. வணக்கம் அதிரா சகோதரி

    பதிவு நன்றாக உள்ளது. தாங்கள் பேசும் பேச்சு வழக்கு உண்மையிலேயே நன்றாக இருப்பதால்தான் உங்களுக்கு இவ்வளவு விசிறிகள். இதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்.?
    உங்களின் பேச்சின் மூலம் நாங்களும் இலங்கை தமிழை ரசிக்கிறோம். எனவே உங்கள் பாணியிலேயே பேசி, எழுதி வாருங்கள். அதை மாற்ற வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த வைரஸ் பயம் இப்போது எல்லாவிதத்திலும் கொடி நாட்டி பறக்கிறது. இங்கு பள்ளிகளில் பயிலும் சின்ன குழந்தைகளுக்கு கால வரையற்ற விடுமுறை விட்டாகி விட்டது. முழு நாளும் ஒரே ரகளைதான்.

    வைரஸ் குறித்த ஜோக்குகள் சிரிப்பை வரவழைத்தன. ஒரு இனம் புரியாத பயத்தை இப்படி சிரிப்பாக்கி ரசிக்கிறோமோ என்ற பயமும் இடையில் எழுகிறது.

    ஊசிக்குறிப்பின் வாசகங்கள் அருமை.
    நீங்கள் டெய்சி பிள்ளைக்கு அளித்து வரும் பராமரிப்பு பாராட்டத்தக்கது. தங்கள் டெயிசி பிள்ளை மிகவும் அழகாக போஸ் தருகிறார். அவரது அறிவும் உங்களுடையதைப் போலவே வியக்க வைக்கிறது.

    தங்களது ரொட்டிப் போஸ்டையும் எவ்வித தடங்கலுமின்றி சீக்கிரம் வெளியிடுங்கள். படிக்க ஆவலாக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ...

      //இதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்.?//
      வருத்தமோ ஹையோ அப்படி ஏதும் சொல்லவில்லை, விளக்கம் சொல்லியிருக்கிறேன்ன்..

      //அதை மாற்ற வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

      ஹா ஹா ஹா அதை மாத்தி, சுத்தத் தமிழில் எழுத வெளிக்கிட்டேன் என்றால் பிறகு நீங்கள் எல்லோரும் புளொக்கை மூடிவிட்டு ஓடி விடுவீங்கள்.. இதைவிடக் கொரொனா பெட்டர் என்பீங்கள் ஹா ஹா ஹா..

      //ஒரு இனம் புரியாத பயத்தை இப்படி சிரிப்பாக்கி ரசிக்கிறோமோ என்ற பயமும் இடையில் எழுகிறது.//
      அது துன்பம் வரும்போது சிரிக்கோணும்:)) என்பதைப்போலத்தான் ...:)

      Delete
    2. //நீங்கள் டெய்சி பிள்ளைக்கு அளித்து வரும் பராமரிப்பு பாராட்டத்தக்கது//

      அவதான் எங்கட வீட்டில பொஸ், தான் தப்பு பண்ணிட்டால் நான் துரத்துவேன் வேணுமென அடிப்பேன் செல்லமாக, கால்களை மேலே தூக்கியபடி.. மன்னிச்சுக்கொள் என்பதைப்போல படுத்திருப்பா..

      ஆனா அவ தப்புச் செய்யாமல் நான் சும்மா மிரட்டினால்.. என்னைக் கடிப்பா.. காலில் எல்லாம் கடிச்சு கடிச்சு இழுப்பா, திருப்பி அடிப்பா ஹா ஹா ஹா.. அது 4 கால் மனிதக் குழந்தைபோலவே தான் எங்களுக்கு.

      //தங்களது ரொட்டிப் போஸ்டையும் எவ்வித தடங்கலுமின்றி//

      ஹா ஹா ஹா அதைப்போடத்தான் ஹெடிங் எழுதிப்போட்டுப் பின்பு இதை எழுதினேன்.

      மிக்க நன்றி கமலாக்கா.

      Delete
  14. பிஞ்சு உங்கள் பஞ்சு பதிவை வாசித்தேன் :) உண்மையை சொல்லனும்னா நீங்க நீங்களாகவே இருங்க :)இதேபோல் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டே அப்போதான் எங்களுக்கும் பொழுது போகும் ஹஆஹாஆ :)

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அதிரா, கம்பவாருதி ஜெ. போல தமிழில் பிளந்து கட்டி ஒரு இடுகை எழுதினால் நமக்கு என்ன ஆகும்? நாம எல்லாரும் ஆச்சர்யத்தில் ஹார்ட் அட்டாக்கில் உறைந்துபோவோம். அது நமக்குத் தேவையா?

      Delete
    2. அதுதானே நெல்லைத்தமிழன் :) நமக்கு நம் உயிர் முக்கியமோ முக்கியம் 

      Delete
    3. //இதேபோல் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டே அப்போதான் எங்களுக்கும் பொழுது போகும் ஹஆஹாஆ :)///

      ஹா ஹா ஹா அப்போ நெல்லைத்தமிழனின் கதி என்ன ஆவுறதாம் ஹா ஹா ஹா:))..

      Delete
    4. //நெல்லைத் தமிழன்Thursday, March 12, 2020 3:53:00 pm
      கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அதிரா, கம்பவாருதி ஜெ. போல தமிழில் பிளந்து கட்டி ஒரு இடுகை எழுதினால் நமக்கு என்ன ஆகும்?//

      ஹா ஹா ஹா இதைத்தான் மேலே கமலாக்காவுக்குச் சொன்னேன்.. எல்லோரும் புளொக்கை மூடி விட்டு ஓடிவிடுவீங்கள் என..:))..

      Delete
  15. பேச்சுத் தமிழிலேயே தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன்.. ஹா ஹா ஹா நன்றி..

      Delete
  16. விதானையார் என்பவர் யார்? விசர் என்றால் என்ன? 

    ReplyDelete
    Replies
    1. //விசர்//

      MADNESS OR MAD //நம்ம ஊரில் சீ பைத்தியம் மாதிரி பேசாதேன்னு சொல்வோமே அதுதான்னு நினைக்கிறன் 

      Delete
    2. விதானையார் //பஞ்சாயத்து தலைவர் ஊர் தலைவர் // என்று கூகிள் சொல்லுது 

      Delete
    3. விசர்-பைத்தியம் அல்லது மனநிலை பாதிப்பு. விதானையார் - கேள்விப்பட்டதே இல்லை.

      Delete
    4. நானும்தான் கேள்விப்பட்டதேயில்லை :) அதான் உடனே கூகிள் ஆண்ட்டிகிட்ட கேட்டு தெரிஞ்சேன் 

      Delete
    5. விசர் என்பதற்கு மேலே பதில் வந்துவிட்டது ஜே கே ஐயா:)..

      நாம் பேசும்போது “விசர்க்கதை கதையாதே”.. இப்படி சாதாரணமாகப் பேசுவோம்.. அதாவது வீண் பேச்சு என்பதைப்போலவும் வரும்..

      விதானையார் எனத்தான் நாம் பாவிப்போம், விதானையார் எனில் கிராம சேவகர்... GS எனச் சொல்வோம் சோட்டாக..

      முந்தின காலத்தில் பொலிஸ் க்கு அடுத்து கிராமத்தைப் பார்ப்பது இந்த ஜிஎஸ் தான்... ஊர்ப்பிரச்சனை முதலில் இவரிடம் போய்த்தானாம் பின்னர் பொலிஸ்க்கு போகும்.. ஆனா இப்போ இப்பதவி இருக்கோ எனத் தெரியவில்லை.. ஒவ்வொரு ஊர்களிலும் இப்படி ஜி எஸ் ஒபிஸ்கள் இருக்கும்... அங்குதான், வறியவர்களுக்கான கூப்பன்கள், கார்ட்டுகள்.. இப்படியானவை வழங்கப்படும்...

      நன்றி ஜே கே ஐயா..

      விளக்கம் சொன்ன அஞ்சு, நெ தமிழனுக்கும் நன்றி... பாருங்கோ அதிராவால நீங்களும் நிறையத் தமிழ் படிக்கிறீங்க:)).. இப்போ எனக்குப் ஃபீஸ் வேணும்:))..

      Delete
    6. //“விசர்க்கதை கதையாதே”.. // - இதுக்குச் சமமா, நாங்களும், 'சும்மா பைத்தியம் போல உளராதே' அல்லது 'பைத்தியம்போலப் பேசாதே' என்று உபயோகிப்போம்.

      //வறியவர்களுக்கான கூப்பன்கள்// - இது அதிராதானா? இந்த மாதிரி கஷ்டமான வார்த்தைகளில் எழுத்துப்பிழை வராமல் அவரால் எழுதவே முடியாதே.. குறைந்த பட்சம், 'வரியவர்கள், 'வறியவற்கள்' என்றெல்லாம் அவரால் எழுதாமல் இருக்கமுடியாதே

      Delete
    7. ///இது அதிராதானா? இந்த மாதிரி கஷ்டமான வார்த்தைகளில் எழுத்துப்பிழை வராமல் அவரால் எழுதவே முடியாதே.. குறைந்த பட்சம், 'வரியவர்கள்,//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிராவுக்குத் தமிழ்ல டி ஆக்கும்:)).. எனக்கு ற, ர வில எப்பவும் எந்தப் பிரச்சனையுமில்லை.. இந்த ழ, ள் மட்டும்தான் பிரச்சனையே..... ஆனா கறுப்பு, பறவாயில்லை.. இவை இரண்டையும் இப்படித்தான் எழுதுவேனாக்கும்:)) எனக்கு இவை இரண்டுக்கும் ர போட்டு எழுதுவது பிடிக்காது:)) ஹா ஹா ஹா எனக்குப் பிடிக்காதவற்றை நான் மற்றவர்களுக்கும் செய்வதில்லை.. அது என் குறிக்கோள்.. அதனால இப்படித்தான் எழுதுவேனாக்கும்:).. இது அந்த அஞ்சுவின் ஏகாம்பர அங்கிள் மேல் சத்தியம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா..

      Delete
  17. பரத் நடித்து நான் ரசித்த ஒரே படம்!  பாடலையும் ரசிப்பேன்.   ஹரிஹரன் குரலில் ஒரு அற்புதம்,ஆரம்பமும், பல்லவி, சரணங்கள் முடிவில் இழுக்கும் இழுவையும் ரசனை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      ஓ இப்படம் பார்த்திட்டீங்களோ...

      //பரத் நடித்து நான் ரசித்த ஒரே படம்//
      அச்சச்சோ என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க:)).. அப்போ “காதல்” படம் என்ன ஆச்சு பிடிக்கவிலையோ...

      Delete
  18. என்னடா என்னவோ சொல்ல வர்றீங்களேன்னு பார்த்தா பயங்கர விளக்கமா கொடுத்துருக்கீங்களே...  இவ்வளவு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு சீரியஸா எடுத்துகிட்டீங்களா?  

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சீரியஸ் ஓ?:)) சே சே இதில என்ன இருக்குது சீரியஸாக எடுக்க, நான் ரொட்டிப் போஸ்ட்டில் இதனை இடைவேளையாகச் சொல்லலாம் எனத்தான் நினைச்சேன், ஆனா எழுதும்போது பெருத்துவிட்டது அதனால போஸ்ட் ஆக்கி விட்டேன்.. இல்ல என் பேச்சுவழக்குமொழி பற்றி விளக்கமாகச் சொல்லோணும் என ஒரு ஆசை இருந்தது, அது நெ தமிழனைச் சாட்டாக வைத்துச் சொலி விட்டேன்:))..

      Delete
  19. பழைய தமிழ்ப் படங்களில் திடீரென கிளைமேக்ஸ் காட்சியிலோ, அல்லது முக்கியமான உணர்ச்சி மிகுதியான காட்சிகளிலோ நடிகர்கள் தூய தமிழில் பேசி உயிரை வாங்குவார்கள்...   கவனித்திருக்கிறீர்களா?   அப்போது அது ஸ்பெஷலாக இருந்திருக்கும்.   இப்போது பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கும்!

    ReplyDelete
  20. உண்மைதான் உங்கள் பதிவுகள் பேச்சு வழக்கிலேயே இருக்கும்.  நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு தூய தமிழில் சிவாஜி மாதிரி பதிவிடுகிறோம்!   இதுவும் ஒரு சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களையும் குறிப்பிட்டு எழுத நினைச்சு விட்டு விட்டேன் ஸ்ரீராம்.. எதுவெனில், நீங்கள் ஒரு கதை எழுதியிருந்தீங்கள். அப்போ நான் நம்பவில்லை .. அதை நீங்கள்தான் எழுதியது என, ஆனா பின்பு சொன்னீங்கள், அது பேச்சுவழக்கில் எழுதியிருக்கிறேன் என.

      ஏனெனில் இங்கு எழுதுவதை நாம் அப்படியே, ஒவ்வொருவரும் வாயால பேசுவதைப்போலத்தானே கற்பனை பண்ணிக் கொள்கிறோம், அப்போ நேரில் சந்திக்கும்போது, பேசுவது வித்தியாசமாக இருந்தால், இது புளொக்கில் பேசியவரோ என சந்தேகமாக இருக்கும் ஹா ஹா ஹா...

      Delete
  21. காணொளி  புன்னகைக்க வைத்தது.  சீனரைப்பிடித்து அடித்த செயல் வருத்தத்திற்குள்ளாக்கியது.    ஆனால் இங்கு அருகில் இருக்கும் பெரிய அபார்ட்மெண்ட் வளாகத்தில் ஒரு சீனரை அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லியிருக்கிறார்கள்.  அவர் கேட்காமல் வளாகம் முழுவதும் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார்.  எல்லோரும் பயம் ப்ளஸ் எரிச்சலில் இருந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ.. அவர்களும் நம்மைப்போலத்தானே, வைரஸ் அவர்களில் இல்லை எனில், சுற்றுவதில் என்ன தவறு, ஆனா பார்க்கும்போது நம்மை அறியாமல் பயம் வரும்தான் ஹா ஹா ஹா..

      Delete
  22. டெய்சிப்பிள்ளை பாவம்.  அதற்கு இந்த விபரீதம் எல்லாம் தெரியாது.  ஏதோ வெளியில் சுற்றி வந்தால் இதென்னடா புது வேலைகள் எல்லாம் என்று யோசிக்கக் கூடத் தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் ஸ்ரீராம், ஆனா ஓவர் சுழட்டல் பேர்வழி:)).. எப்ப பார்த்தாலும் வெளியே விடு என, ஊர் சுற்றி வருவா...கர்ர்:)..

      ஆனா அனிமல்ஸ்க்கு கொரொனா வராதாம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  23. சுத்துது சுத்துது பாட்டு கலகலப்பா இருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. ஓம் அஞ்சு நானும் ரேடியோவில் கேட்டதும் குறிச்சு வச்சிட்டேன்..

      அனைத்துக்கும் மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  24. உங்க தமிழை விட்டு யார் மாறச் சொன்னாங்க. உங்க ஊர்த் தமிழை நாங்களும் தெரிஞ்சுக்கணும் இல்லையா. ரவ்வை என்று சொன்னால் டப்பில்லை. றவ்வை என்று சொல்லும்போதுதான் ற எழுத்தை ஆரம்பமா வைத்து ஒரு வார்த்தையும் டமில்ல வராது என்பதால் சொல்றேன். உங்க மொழிதான் உங்க இடுகையின் ஸ்டெரெந்த்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      ஹா ஹா ஹா ஆரும் மாறச் சொல்லவில்லை, நான் என் பேச்சுவழக்குத் தமிழ் பற்றி சொல்லோணும் என பல நாட்களாக நினைச்சிருந்தேன்..

      //ரவ்வை என்று சொன்னால் டப்பில்லை//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. ரவ்வை என்பது சரியான சொல் இல்லை எனும்போது றவ்வை என்றால் என்ன ரவ்வை என்றால் என்ன:)).. டப்பு டப்புத்தானே..:))

      அது உண்மைதான் ற வில் எழுத்து ஆரம்பிக்காது.. ஆனா ர விலும் ஆரம்பிக்காதெல்லோ.. ஆஆஆஆஆஆ அதானே... இர... என முன்னாலே இ வரோணும் தெரியுமோ.. ஆவ்வ்வ்வ்வ் நெ டமிலன்:)) சூப்பர் மாட்டி அதிராவிடம்.. கை ரைப்பண்ணும்போதே எனக்கு பல்ப் பத்தியது ஹா ஹா ஹா.. ராமநாதன் என்பது தப்பு.. இராமநாதன் என்பதுதான் சரி...

      ஹா ஹா ஹா நான் ஒரு போஸ்ட்டாவது சுத்தத் தமிழில எழுதோணும்:)).. அதுக்கு முதல் அஞ்சுவை ஒரு ட்ரெயிலர் விடச் சொல்லுங்கோ நெ.தமிழன் சுத்தத் தமிழில்.. பார்ப்போம் என்ன ஆகிறதென ஹா ஹா ஹா..

      Delete
    2. /ர விலும் ஆரம்பிக்காதெல்லோ// - இலக்கியமாக எழுதும்போது 'ர' வில் ஆரம்பிக்கக்கூடாது. ரப்பர் மரங்கள் இருந்தன என்றுதான் எழுதுவோம். அதுக்குப் பதில் இரப்பர் மரங்கள் இருந்தன என்று எழுதினால் புரிந்த மாதிரிதான்... ஹா ஹா.... ரம்பம், ரப்பர், ரவை, ரசீது, ராசி, ரஞ்சனி (ஏய்.. பொருட்கள் பேர் எழுதும்போது பெண் பெயர் எதற்கு?). "ற" வில் ஒரு வார்த்தையும் கிடையாது.

      Delete
    3. ஆஆஆ அப்பூடியோ.. நான் இந்தக் கிளாஸ்க்கு மட்டும் போகவில்லை நெல்லைத்தமிழன்:) அதனாலதான் தெரியவில்லை:).. அன்று எனக்கு சிக்கின் குனியா:)) ஹா ஹா ஹா..

      Delete
  25. //ஒபிஷல் லெட்டர் எழுதுவதாயினும்// - ஆபீஸில் அல்லது அஃபீஷியல். நீங்க ஒபிஷில் அல்லது ஒபிஷியல் என்று எழுதினாலும் ஒண்ணும் சொல்லமாட்டேன். ஒபிஷல் என்றால் என்ன? ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்போ எல்லோருக்கும் கொரோனா வராத குறைதான் போங்கோ:))

      Delete
  26. பையன் மருத்துவம் படிக்க ஆரம்பித்தால், அம்மா டாக்டராக ஆகிவிடுவார்களா?

    கொரானாவுக்கு வைத்தியம்லாம் சொல்ல ஆரம்பித்துட்டீங்க.

    ஓ... அது பாட்டி வைத்தியமா? (அப்படீன்னா என்னன்னு ஏஞ்சலினிடம் கேட்டுக்கோங்க)

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ !! எனக்கு புதன் கேள்வி கிடைச்சாச்சு ..ஐ ஆம் கமிங் கௌதமன் சார் :)

      Delete
    2. //அம்மா டாக்டராக ஆகிவிடுவார்களா?//
      ஹா ஹா ஹா நான் ஏற்கனவே டொக்டர் அதிரா எனப் பட்டம் சூட்டி விட்டேன் எல்லோ:)))

      //ஓ... அது பாட்டி வைத்தியமா? //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்காகவே நான் இப்பவே எம்பிபிஎஸ் படிக்கப்போறேன்ன்:)).

      //ஐ ஆம் கமிங் கௌதமன் சார் :)//
      மீயும் மீயும் கம்பிங் யா:)) ஹா ஹா ஹா..

      Delete
  27. ஒரு நோய்க்கு ஒரு இனத்தைப் பழிப்பது மிக மோசமான செயல். 9/11 க்கு அப்புறம் இஸ்லாமியர்கள் எல்லோரையும் சந்தேகத்தில் பார்த்ததைப் போல.

    எனக்கு சின்ன வயதிலிருந்தே எங்க அம்மா, யாரோட மூச்சுக் காத்தும் படக்கூடாது (அதாவது மூச்சு நம் முகத்துக்கு எதிரே வந்தால் உள்ளிழுக்கக்கூடாது), மற்றவர் இருமினால் தும்மினால், நாம வேற பக்கம் திரும்பிக்கணும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி வளர்த்ததனால், யாரேனும் தும்மினால் - என் பக்கம் பார்த்து அல்லது இருமினால் எனக்கு ரொம்ப டென்ஷனாகிவிடும். மூச்சு இழுப்பதை நிறுத்தி, சிறிது தள்ளிப்போன பிறகுதான் மூச்சிழுப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ ஹா ஹா ஹா இந்தப் பழக்கம் எனக்கும் இருக்குது நெ.தமிழன், என் மூச்சை இறுக்கிப் பிடித்து பின்பே மூச்செடுப்பேன்... அப்படி நடப்பது இங்கெல்லாம் குறைவு, நம் நாட்டில்தான் பஸ்களில் வான்களில் சன நெரிசலில் நடக்கும்..

      Delete
  28. //ஒரு வெள்ளைக்காரர் கன்னமெல்லாம் வீங்குமளவுக்கு நல்ல அடி கொடுத்திட்டாராம்// - பொதுவா அவங்க மனசுல, பங்களாதேசி, சைனா, இந்தியர்கள் போன்றோர், கம்மி சம்பளத்துக்கு வேலைக்கு வந்து நம்ம வேலையை எல்லாம் காலி பண்ணிட்டாங்க என்ற எண்ணம் ஆங்காரம் மனதில் இருக்கும். அதனால் வாய்ப்பு கிடைத்தபோது வெளிப்படுத்துகிறார் போலிருக்கு. என்ன மாதிரியான ஆள் அவர்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் அப்படியுமிருக்கும், இன்னுமொன்று என்னவெனில் வழமையை விட இப்போ கொரொனா அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைச்சு பீதியடையச் செய்யுதெல்லோ அந்த ரென்ஷனாகக்கூட இருக்கும்.. ஆருக்கு எப்போ என்ன ஆகுமோ எனும் நிலைமை எல்லோ ஹா ஹா ஹா..

      ஆனா பொலிஸ் கேசானால் நிட்சயம் அவருக்கு ஏதும் தண்டனை உண்டு, என்ன ஆனதெனத் தெரியவில்லை..

      Delete
  29. பாடலைப் பார்த்துக் கேட்டேன். ஆனால் தொண்டை பிரச்சனை, கடும் ஜலதோஷம் போன்றவை இருப்பதால், ரசிக்க முடியலை. பயணம் சென்று வந்த பிறகு பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன்.

    இது ரொம்ப பழைய படம் போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் தொண்டை பிரச்சனை, கடும் ஜலதோஷம் போன்றவை இருப்பதால்,//
      ஆஆஆஆ இது கொரொனாவின் அறிகுறி:)) ஹா ஹா ஹா...

      //ரசிக்க முடியலை.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுக்குக் காரணம் நீங்க இப்போ தமனாக்காவைக் கழட்டி விட்டிட்டீங்க கர்ர்ர்ர்:))..

      ஏன் வேர்க் லீவில நிக்கிறீங்களோ.. எதுக்கும் நன்கு ரெஸ்ட் எடுங்கோ.. இருக்கலாம் 10 வருடங்கள் ...

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

      Delete
  30. வெள்ளைக்காரர் சைனாக்காரரை அடித்தது நியாயமற்றது இது பொது பிரச்சனை அவர் மட்டும் என்ன செய்யக்கூடும் ?

    நீங்கள் நெல்லைத்தமிழரை நோகடிக்கணும் என்ற முடிவோடு எழுதும்போது அவரை யார் காப்பாற்ற முடியும் ?

    காணொளியில் உங்களது நண்பர் திருமணவிழாவா ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      அதுதான், சைனாக்காரர் பாவம்தான், அவர்கள் என்ன வேணுமெண்டோ இந் நோய் வந்தது.. அது தானாக வந்ததுக்கு அவர்கள் என்ன பண்ணுவார்கள்..

      ஆனா சைனீஸ் கவன்மெண்ட் அறிவித்திருக்காம் இனி அங்கு நாய், நரி.. இன்னும் என்னமோ மிருகங்கள் உண்னத்தடை என.. சரியாகத் தெரியவில்லை...

      //நீங்கள் நெல்லைத்தமிழரை நோகடிக்கணும் என்ற முடிவோடு எழுதும்போது அவரை யார் காப்பாற்ற முடியும் ?///

      ஹா ஹா ஹா நான் எழுதுவதைத் திருத்தித் திருத்தியே அவர் பாதி இளைச்சிருப்பார்ர்ர்:)), அதனாலேயே இந்த விளக்கம்:)).. இருப்பினும் என் டொல்லை டொடரும்:))..

      //காணொளியில் உங்களது நண்பர் திருமணவிழாவா ?//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      மிக்க நன்றிகள் கில்லர்ஜி.

      Delete
  31. நெல்லைத் தமிழருக்கு எல்லோரையும் வம்புக்கு இழுக்கணும்! :))))) காணொளி எனக்கு வரலை. ஊசி இணைப்பு ஏற்கெனவே வந்திருக்கு. உங்க டெய்சிப் பிள்ளை எடை பார்க்கும் மிஷினில் உட்கார்ந்திருக்காளோ? உங்க தமிழைப் பற்றி இத்தனை விளக்கங்கள் கொடுத்தப்புறமும் நெல்லைத் தமிழர் எதுவும் பேசாமல் இருப்பார் என நம்பினீங்கன்னால்! இஃகி,இஃகி,இஃகி

    ReplyDelete
    Replies
    1. கீசா மேடம்... ஏதோ நான் குறைகள் கண்டுபிடிப்பதால், அதற்கு விளக்கமாக அதிரா இந்த இடுகையை எழுதலை. 'எனக்கு தமிழ் இவ்வளவுதான் எழுத வரும்... நீங்க எல்லோரும் அதில் குறை கண்டுபிடித்தால் அதுக்கு நான் என்ன செய்யறது. சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்' என்று சுருக்கமா எழுதறதுக்குப் பதில், அதிரா ஒரு இடுகையாக எழுதிட்டாங்க.

      நம்மைக் குறை சொல்லிட்டாங்களே என்று நினைத்து, அவங்களோட அடுத்த இடுகையான 'ரொட்டி' போஸ்டில், ஆஹா ஓஹோ என்று பின்னூட்டம் எழுதுவேன் என்று எதிர்பார்க்கிறாரோ? ஹா ஹா ஹா

      Delete
    2. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //நெல்லைத் தமிழருக்கு எல்லோரையும் வம்புக்கு இழுக்கணும்! :)//

      ஹா ஹா ஹா கீசாக்காவும் இபூடிச் சொல்ல ஒரு சான்ஸ் கிடைக்காதோ என வெயிட் பண்ணிக்கொண்டிருந்தா:)) அதிரா ஏற்படுத்திக் குடுத்திட்டேன்:))..

      //உங்க டெய்சிப் பிள்ளை எடை பார்க்கும் மிஷினில் உட்கார்ந்திருக்காளோ?//
      ஹா ஹா ஹா கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டீங்களே.. ஓம் அது பழசு ஆனாலும் பழுதாகவில்லை, அவ அதில ஏறியிருப்பதில் ஒரு ஹப்பி.. மகன் சொல்வார் டெய்சி தன் வெயிட் பார்க்கிறா சாப்பிட முன் என:))..

      //உங்க தமிழைப் பற்றி இத்தனை விளக்கங்கள் கொடுத்தப்புறமும் நெல்லைத் தமிழர் எதுவும் பேசாமல் இருப்பார் என நம்பினீங்கன்னால்!///

      5 இல வளையாதது 50 இலும் வளையாது எனச் சொல்றீங்கபோல இருக்கே :)) ஹையோ இதைச் சொன்னது கீசாக்காதான் நானில்லை ஜாமீஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
    3. //நெல்லைத் தமிழன்Friday, March 13, 2020 2:40:00 pm
      //'எனக்கு தமிழ் இவ்வளவுதான் எழுத வரும்... நீங்க எல்லோரும் அதில் குறை கண்டுபிடித்தால் அதுக்கு நான் என்ன செய்யறது. சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்'///

      [im]https://media1.tenor.com/images/98632603a7a89dadc34d96a39c0c61bd/tenor.gif?itemid=9387351[/im]

      Delete
  32. நீங்கள் உங்கட பாணியிலேயே எழுதுங்கோ...
    ஈழத் தமிழுக்கு ரசிகனாக்கும்....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

      ஹா ஹா ஹா.. என் பேச்சு வழக்கை விட்டால் எனக்கு எழுத வராது.. ஓ.. பெரும்பாலும் எல்லோரும் ஈழத்தமிழை விரும்புகின்றனர் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

      நன்றி துரை அண்ணன்.

      Delete
  33. பாட்டை முதல் முறையாக கேட்கிறேன். உற்சாகப் பாடல் நன்றாக இருக்கிறது.

    “என்பேச்சு வழக்கு மொழியிலேயே” அப்படியே எழுதுங்கள் அதிரா அதுதான் நன்றாக இருக்கிறது.

    நான் முன்பு இலங்கை ரேடியோ கேட்கும் போதும், இலங்கை தொலைக்காட்சி பார்க்கும் போதும் பேச்சு வழக்கை ரசிப்பேன். உங்கள் பேச்சு வழக்கிலேயே எங்களுடன் கதையுங்கோ அதிரா. அதுதான் நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கொமதி அக்கா வாங்கோ..

      ஓ இப்பாடல் ரேடியோக் கேட்டதனாலதான் எனக்கும் தெரிஞ்சது.

      நான் எப்பவும் பேச்சு வழக்குத்தான் கோமதி அக்கா.. மாறினாலும், என்னை அறியாமல் மீண்டும் கை பேச்சுவழக்கிற்கு மாறிவிடும் ஹா ஹா ஹா.

      Delete
  34. பாவிப்பது, கழிவி களைகிறது என்று விள்மபரங்களில் வருவதை ரசிப்பேன்.
    திருநெல்வேலி ஊருக்கு என்று பேச்சு வழக்கு உண்டு. நான் அப்படி பேசுவதே இல்லை, என் அம்மா, எங்கள் சொந்தங்களில் வயதானவர்கள் பேசுவார்கள்.
    எனக்கு அப்பாவுடன் பல ஊர்களில் வசித்து எந்த ஊர் பேச்சு வழக்கும் வரவில்லை. என்னை எந்த ஊர்க்காரி என்று சொல்ல முடிய மாட்டேன் என்கிறது.

    என் கணவருடன் இரண்டு ஊர்களில் இருந்துவிட்டு மூன்றாவது ஊரில் இருக்கிறேன்.

    நீங்கள் சிறுவயதில் இருந்த ஊர் வேறு ஊர் வந்து பல காலம் ஆகி விட்ட போதும் உங்கள் ஊர் பேச்சு வழக்கை மறக்காமல் பேசுவதற்கு பாராட்ட வேண்டும்.
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. அது கழுவி என்பதைச் சொல்றீங்களோ.. கழுவுதல்..

      //என்னை எந்த ஊர்க்காரி என்று சொல்ல முடிய மாட்டேன் என்கிறது.//
      ஹா ஹா ஹா எல்லா ஊர்ப்பாஷையும் கலந்து பேசுவீங்களோ..

      எங்கள் பாஷை மாறாமல் இருந்தமைக்குப் பெரிய காரணம் அப்பாதான், ஒரு சொல் மாறி வேறு ஊர்ப்பாஷையில் கதைச்சால்கூட.. ஆர் உனக்குச் சொல்லித்தந்தது எனப் பேசுவார்ர், அதனால நாங்கள் சொந்த ஊரை விட்டு வெளியே இருந்தபோதும், சொந்த ஊர்ப்பாஷை மாறவில்லை...
      நன்றி கோமதி அக்கா.

      Delete
  35. ஆ.. செந்தமிழில் எழுதப்போறீங்களோ. ஓ...நோ பிஞ்சு பேச்சாளார், இடிதாங்கி அவர்களே நீங்கள் உங்கள் எழுத்து நடையை மாற்றவேண்டாம். அதுவே உங்கள் ஸ்டைல்,பலம். இப்படியே தொடர்ந்து எழுதுங்கோ. எங்க பேச்சுமொழி அழகு. எல்லாருக்கும் பேச்சுமொழியை எழுதவராது. பேசுவது ஒன்று.எழுதுவது இன்னொன்று ஆக வகுப்பில் எழுதுவதுபோல இருக்கும். எனக்கு 2லும் வேறுபாடு வரும். பேசுவதுபோல எழுதுவது கொஞ்சம் குறைவு.. உங்க பக்கம் வந்தால்தான் எழுத வருது. இதன் எபெக்ட் சிலவேளை பதிவு எழுதும்போது வந்திடும்.ஆனா இது உங்க வலது கொப்பி என விட்டுடுவேன். இப்படி எழுதினால்தான் (பிழைவிட்டும்) உங்களை அடிக்கமுடியும்.

    /“அதிரா நீங்கள் புளொக்கில் பேசியதுபோலவே அதே அதிராவாகவே நேரிலும் இருக்கிறீங்க” என்றார்கள்.. எனக்கு அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.// இம்மகிழ்ச்சி தொடர இப்படியே இருங்க.
    கொரோனா வந்தாலும் வந்தது சனம் படும் பாடு. இங்கு எங்க இடத்தில் இன்னும் இல்லை. ஆனா ஜேர்மனியில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டிவியில் எல்லாமே கொரோனாவா இருக்கு. பார்க்கவே ப்யமாஇருக்கு. கொஞ்சம் கவலையாகவும் இருக்கு. சாதராணமா தொண்டை காய்ஞ்சு இருமல் வந்தால் கூட பொது இடத்தில் இரும பயமா இருக்கு. அதேநேரம் யாராவது இருமினாலும் அதேபயம் எங்களுக்கு.... இதேதான் சாக்கு என வதந்திகளுக்கு பஞ்சமில்லை. முடிந்தளவு சேவ் ஆ இருக்கவேண்டியது. மிச்சம் கடவுள் விட்ட வழி.
    டெய்சிக்கு மாஸ்க்..._) நல்ல ஜோக். ஹா..ஹா..ஹா ஊசிஇணைப்பு சுத்திசுத்தி வருது வாட்ஸ்ப்பில்.. ஊசிகுறிப்பு உண்மைதான். நல்லது நினைப்பின் நல்லதே நடக்கும்.
    ரொட்டிபோஸ்டா..... 🤔 🤔 என்னவா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. vஆங்கோ அம்முலு வாங்கோ..

      //ஆ.. செந்தமிழில் எழுதப்போறீங்களோ. ஓ...நோ பிஞ்சு பேச்சாளார், இடிதாங்கி அவர்களே//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).

      //அதுவே உங்கள் ஸ்டைல்,பலம். இப்படியே தொடர்ந்து எழுதுங்கோ. எங்க பேச்சுமொழி அழகு. எல்லாருக்கும் பேச்சுமொழியை எழுதவராது.//
      அப்பூடிங்கிறீங்க:)).. ஹா ஹா ஹா நான் தமிழை வளர்க்கப்போறேன்ன்:)) அதனால பேச்சுவழக்கிலேயேதான் எழுதுவேன்:)).. சுத்தத் தமிழில் எழுதினால் தமிழ் எப்பூடி வளரும்:)).. உங்களுக்கெல்லாம் எப்பூடிப் புரியும்?:)) ஹா ஹா ஹா..

      //ஆனா இது உங்க வலது கொப்பி என விட்டுடுவேன். //

      ஹா ஹா ஹா...

      Delete
    2. // இப்படி எழுதினால்தான் (பிழைவிட்டும்) உங்களை அடிக்கமுடியும்.//

      நேக்கு டமில்ல டி ஆக்கும்.. ம்ஹூம்ம்:))..

      கொரோனாவைக் கிண்டல் பண்ணியது முடிஞ்சு இப்போ பயம் வரத் தொடங்கியிருக்குது.. யூகேயில் கொரோனாவின் தாக்கம் கூடிக்கொண்டு வருது... இனி ஸ்கூல்களும் மூடுப்படலாம், இன்று எங்கள் பார்மசிக்குள் போக முடியவில்லை, டோரில ஸ்பீக்கர் வச்சுக் கதைக்கினம், டோரில ஒரு பெட்டி வச்சு அதில் தேவையானதை வச்சு எடுக்கினம், ஆரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.. ஹொஸ்பிட்டலிலும் தீவிர வருத்தம் தவிர மற்றும் எல்லோரின் அப்பொயிண்ட்மெண்ட்டும் கான்சல் பண்ணியாச்சு.. வெளியே வருவதைக் குறைக்கச் சொல்லியிருக்கினம்.

      நல்லதே நடக்கட்டும்.. நன்றி அம்முலு.

      Delete
  36. //நமக்கு ஒரு விஷயம் நடக்கோணும் என இருப்பின் அது நடந்தே தீரும், நடக்காதெனில் நடக்காது, இதற்காக அடுத்தவரைக் குற்றம் சொல்லி என்ன பயன், ஆனா நாம் கவனமாக இருக்கோணும்..//

    உண்மை.

    ReplyDelete
    Replies
    1. இதை நான் நம்புகிறேன் கோமதி அக்கா.. பகவத் கீதை..

      Delete
  37. கல்யாண காணொளி, ஊசி இணைப்பு எல்லாம் சிரிப்பாக இருந்தாலும் வருத்தமாய் இருக்கிறது. வேதனையான நேரத்தில் சிரித்து ஆற்றிக் கொள்ளவோ!

    ஊசிக்குறிப்பு சொல்வது உண்மை. பிறரை வருந்த செய்வது பாவம், பிறரை மகிழ்விப்பது புண்ணியம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் துன்பம் வரும்போது சிரிக்கச் சொல்லுகின்றனர்ர்.. ஹா ஹா ஹா..
      நன்றி கோமதி அக்கா.

      Delete
  38. டெய்சி பிள்ளையும் அவ அம்மாவும் பத்திரமாய் இருங்கள்.
    விரைவில் கொரொனா நோயில் இருந்து உலக மக்கள் அனைவரும் பாதுகாக்கபடனும்.
    ஒரு டம்ளர் சுடுநீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால் கொரானா வைரஸ் தாக்காது என்று ஒருவர் அனுப்பி இருக்கிறார்.
    மிளகு, பூண்டு, சீரகம், இஞ்சி, மஞ்சள் எல்லாம் நாம் அன்றாட உணவில் சேர்த்து வருகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சுத்திச் சுத்திப் பார்த்தால் நாம் உணவில் தினம் எடுப்பதைத்தான் எடுக்கச் சொல்கின்றனர், ஆனா வேற்று நாட்டினருக்கு.. முக்கியமாக வெஸ்ரேன் நாட்டு மக்களுக்கு இந்த ஸ்பைசஸ் புதுசுதானே..

      நன்றி கோமதி அக்கா.

      Delete
  39. //நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த வலையுலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து, நான் என்ன நினைத்திருக்கிறேன் எனில், புளொக் என்பதற்கு, எந்த வரைமுறையும் இல்லைத்தானே, அத்தோடு நாம் இதை முக்கியமாக நம் பொழுது போக்குக்காகவும் சந்தோசத்துக்காகவும்தானே உபயோகப்படுத்துகிறோம் என்பதனால, நான் எழுதும்போது 80 வீதமும் “என்பேச்சு வழக்கு மொழியிலேயே”.. எழுதி வருகிறேன்.//

    அதுதான் எனக்கும் (எங்களுக்கும்) மிகவும் பிடித்துள்ளது. அதனால்தான் அடியேன் அதிராவின் கொச்சை எழுத்துக்களின் தீவிர ரஸிகர் ஆகி விட்டேன்.

    //இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு, அத்தோடு வீட்டில் நான் எப்படித் தமிழில் பேசுவேனோ அப்படியேதான் இங்கும் பேசுகிறேன், சுத்தமான தமிழில் எழுதுவது எனக்கு விருப்பமில்லை, அது ஏதோ எக்ஸாமுக்கு எழுதுவதைப்போல இருக்கு,.. பலர் அப்படித்தான் எழுதுகிறார்கள், அது அவரவர் விருப்பம்.//

    அருமையான விளக்கம், அதிரா. உங்களை நீங்கள், யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவே கூடாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..

      நீங்கள் இப்படி தொடர்ந்து வருவதோடில்லாமல், நெல்லைத்தமிழனின் பக்கம் சாயாமல்:), குண்டா இனிப்புத்தராத எனக்குச் சப்போர்ட் பண்ணுவது, அந்த புளியடி வைரவரின் அருள்தான் என நினைக்கிறேன்..:) ஹா ஹா ஹா.

      //அதனால்தான் அடியேன் அதிராவின் கொச்சை எழுத்துக்களின் தீவிர ரஸிகர் ஆகி விட்டேன்.//
      நன்றி நன்றி நன்றி.. அஞ்சு நெ,தமிழன் எல்லோரும் இதைப் பல தடவைகள் படிக்கோணும் என மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கிறேன்...

      //அருமையான விளக்கம், அதிரா. உங்களை நீங்கள், யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவே கூடாது.//
      நன்றி கோபு அண்ணன் நன்றி, நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ளவே மாட்டேன்ன்:)) ஆனா நான் ஆரோடு ஒட்டி உறவாடுகிறோனோ.. அவர்களைப்போல என்னை அறியாமல் மாறிவிடுவேன் என்பது உண்மை ஹா ஹா ஹா..

      Delete
  40. //அதனாலதான் நான் பேசும்போது, தமிழ்ச் சொற் பிழை விடுகிறேன் என நெல்லைத்தமிழன் சண்டைக்கு வருகிறார்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதிகம் படித்துள்ள அவர் கிடக்கிறார், அதிரா.

    ’குற்றம் கண்டுபிடித்தே பெயர் பெற்றுள்ள புலவர்கள் சிலர் உண்டு’ என திருவிளையாடல் படத்தில் நக்கீரரைப் பார்த்து தருமி (நாகேஷ்) சொல்லுவார். அதுபோலத்தான் இவரும். :))

    ReplyDelete
    Replies
    1. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதிகம் படித்துள்ள அவர் கிடக்கிறார், அதிரா.//

      ஆஆஆஆ இந்தாங்கோ கோபு அண்ணன், இது உங்களுக்காக நானே செய்து பக் பண்ணியது..

      //’குற்றம் கண்டுபிடித்தே பெயர் பெற்றுள்ள புலவர்கள் சிலர் உண்டு’ என திருவிளையாடல்//
      ஹா ஹா ஹா இதைத்தான் நானும் நினைச்சேன்:)) என்றால் நம்பவோ போறீங்கள்.. அவருக்கு நான் டமில்ல டி எடுத்தது பொறாமை:)) ஹா ஹா ஹா.. உங்களுக்கும் தமிழ்ல டி ஓ கோபு அண்ணன்?:)) ஹா ஹா ஹா..

      [im]https://www.kmfnandini.coop/sites/default/files/styles/product_thumbnail/public/products/kunda_pack%26tin.png?itok=aE6kkuaH[/im]

      Delete
  41. //என்னோடு வலையுலகில் பேசிப்பழகிய சிலர், ஃபோன் தொடர்புக்கு வந்தபோது சொன்ன வசனம்.. “அதிரா நீங்கள் புளொக்கில் பேசியதுபோலவே அதே அதிராவாகவே நேரிலும் இருக்கிறீங்க” என்றார்கள்.. எனக்கு அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.//

    எனக்கு அதைக் கேட்காமலேயே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அது முந்திய நிகழ்வு கோபு அண்ணன், இப்போ ஆரோடும் தொடர்பில் இல்லை.. குறை நினைச்சிடாதையுங்கோ.

      Delete
  42. //இதைத் தாண்டி, ச்சும்ம்மா முசுப்பாத்திக்காக பல சொற்கள் எழுதுவேன்.. அது என் பேச்சு வழக்கு மொழி அல்ல:)) அதாவது “டமில், ஜந்தேகம்... டப்பு, ஜத்தியம், தெகிறியம்...” இப்பூடிப் பல சொற்கள்.. இவை எல்லாம் கொமெடிக்காகவே எழுதுவேன் அப்பப்ப அதைப் புரிஞ்சுக்கோங்க:)) ஹா ஹா ஹா:)).//

    ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்திருந்தாலும், நாளடைவில் அதிரா ஸ்டைலை நன்கு புரிஞ்சுக்கிட்டேன். இப்போ அதுவே எனக்கும் பழகிப்போய் விட்டது. நெல்லைத்தமிழன் போன்றோர் எழுதும் தூய டமில் எழுத்துக்கள், எனக்குப் புரிபடாமல் மிகவும் குயப்பமாக உள்ளன. :)

    ReplyDelete
    Replies
    1. //நெல்லைத்தமிழன் போன்றோர் எழுதும் தூய டமில் எழுத்துக்கள், எனக்குப் புரிபடாமல் மிகவும் குயப்பமாக உள்ளன. :)//

      ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே:)).. பின்ன என்ன கோபு அண்ணன், தூய தமிழில எழுதுவதோ இல்ல அடுத்தவர்கட்குப் புரியும்படி எழுதுவதோ சிறந்தது?:))..
      எதுக்கும் ஓடிப்போய் உச்சிப் பிள்ளையார் கேணியில இறங்கி ஒளிச்சிருங்கோ கோபு அண்ணன், மீ கட்டிலுக்குக் கீழ இருந்துதான் ரைப்பிங்:))

      Delete
  43. //()()()
    தடங்கலுக்கு வருந்துகிறேன்:).. என் ரொட்டிப் போஸ்ட் விரைவில் வெளிவரும்...
    )))))))))))))))))))_()_((((((((((((((((((((//

    கொரானா ஒரு பக்கம் என்றால் இதுவேறு மறுபக்கம்.

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமீஈஈஈஈஈ .... ஸ்வாமீஈஈஈஈஈ

    ReplyDelete
    Replies
    1. கோபு சார்... அதிரா 'தவறா தமிழில்' எழுதுவதில் தவறில்லை. ஆனா அதை மெயிண்டெயின் செய்ய மாட்டேன் என்கிறார். அவரது மொழிப் பிரகாரம், 'ஒட்டிப் போஸ்ட்' என்றுதான் எழுதணும். அவருக்கே தெரிகிறது..இது யாருக்குமே புரியாது என்று. அதனால் 'ரொட்டிப் போஸ்ட்' என்று எழுதியிருக்கிறார்.

      இருந்தாலும் உங்கள் ஜால்ரா சத்தம் என் காதைத் துளைக்கிறது. ஹா ஹா ஹா

      Delete
    2. ///கொரானா ஒரு பக்கம் என்றால் இதுவேறு மறுபக்கம். ///

      உந்தக் கதை இருக்கட்டும் கோபு அண்ணன்:), முதல்ல மாஸ்க்கும் கட்டி, கைக்கு சோப் போட்டு 2 நிமிடமாகத் தேயோ தேயெனச் தேச்சுக் கழுவிப்போட்டுத்தானே அதிராவின் பக்கம் வந்து கொமெண்ட் போடுறீங்கள்?:)... இல்லாட்டில் கொமெண்ட் போட விட மாட்டேன்:)
      வெளியே நிற்கிறேன் நைட் தான் பதில்கள்... அதுவரை மன்னிச்சுக்கோங்ங்ங்ங்ங்:)

      Delete
    3. //நெல்லைத் தமிழன்Friday, March 13, 2020 2:44:00 pm
      கோபு சார்... அதிரா 'தவறா தமிழில்' எழுதுவதில் தவறில்லை.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மேலே கீசாக்கா சொன்னதைப்போல ..இவர் திருந்தவே மாட்டார்போல இருக்கே:)) நான் எங்கின டமிலை டப்பா எழுதினேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மீக்கு தமிழ்ல டி ஆக்கும்...:)..

      ரொட்டி எனச் சொல்வதும் தப்பாம், உரொட்டி என்பதுதானாம் சரி.. நான் சுத்த தமிழில் எழுத வெளிக்கிட்டால் இந்தப் பூமி தாங்காதாக்கும் ஹா ஹா ஹா:))..

      அதுசரி உங்களுக்கு எப்போ வேர்க் தொடங்குது நெ.தமிழன்?:))
      [ஹையோ லீவில நிற்பதால மீ மாட்டுப்பட்டு முழிக்கிறேனே:)) ஹா ஹா ஹா]

      மிக்க நன்றி.. தொடர் வருகைக்கு நெ.தமிழன்....

      மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.. என் “உரொட்டி” சாப்பிட வாங்கோ..

      Delete
    4. நெல்லைத் தமிழன் Friday, March 13, 2020 2:44:00 pm  

      //இருந்தாலும் உங்கள் ஜால்ரா சத்தம் என் காதைத் துளைக்கிறது. ஹா ஹா ஹா//

      ஸ்வாமீ, இந்தப் பதிவர் (KB) அதிரா மாமியுடன் எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கமும் பாசமும் அன்பும் அட்டாச்மெண்டும் மிக அதிகமாகவே உண்டு. 

      கீழ்க்கண்ட 8 பகுதிகள் கொண்டதோர் தொடரில் முதல் நான்கை மட்டும், பயணத்தில் இருந்த நீங்கள் அவசர அவசரமாகப் பின்னூட்டமிட்டு ஓடிவிட்டீர்கள்.  முழுமையாகப் படிக்கவே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். 

      மீண்டும் அந்த 8 பகுதிகளிலும் உள்ள, படங்களையும், பின்னூட்டங்களையும் படியுங்கோ ஸ்வாமீ. ஜால்ரா சத்தம் மட்டுமல்லாது அனைத்துவிதமான அபூர்வ சத்தங்களும் கேட்டு அனுபவிக்க முடியும். அதையெல்லாம் முழுமையாகப் படித்துப் புரிந்து அனுபவித்து மகிழ, உமக்குக் கொடுப்பிணை இருக்க வேண்டும்.  ஜொல்லிட்டேன். :))

      http://gopu1949.blogspot.com/2017/06/1-of-8.html 
      http://gopu1949.blogspot.com/2017/06/2-of-8.html
      http://gopu1949.blogspot.com/2017/06/3-of-8.html
      http://gopu1949.blogspot.com/2017/06/4-of-8.html

      http://gopu1949.blogspot.com/2017/06/5-of-8.html 
      http://gopu1949.blogspot.com/2017/06/6-of-8.html 
      http://gopu1949.blogspot.com/2017/06/7-of-8.html
      http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html 

      Delete
    5. //ஸ்வாமீ, இந்தப் பதிவர் (KB) அதிரா மாமியுடன் எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கமும் பாசமும் அன்பும் அட்டாச்மெண்டும் மிக அதிகமாகவே உண்டு. //

      அதென்ன கேபி?.. கோபு அண்ணன்?:) சரி அது போகட்டும் இப்ப அதுவோ முக்கியம்....:)).. இதிலிருந்து கோபு அண்ணன் சொல்ல வருவது என்னவென்றால்..

      அதிராவுடனிருக்கும் அன்பு, பாசம், நேசம், பண்பு, பணிவு,[சரி ஒரு ஃபுளோல வந்திட்ட்டுது விட்டிடுங்கோ:)] அட்டாச்மெண்ட் போல,
      இப்போ சில வருடங்களே அறிமுகமான:), நேரில் சந்தித்து குண்டாக் குடுத்த நெல்லைத்தமிழன் மீது இல்லை என்பதாகும்:)).. ஹா ஹா ஹா சிலருக்குப் புரியாமல் போகலாம் என்பதற்காக, புரியும்படி என் பாஷையில் சொல்லியிருக்கிறேன்ன் அது டப்போ கோபு அண்ணன்?:))..

      இனியும் உங்கட ஸ்வாமி:)), உங்கட லிங்கில போய்ப் போஸ்ட் படிப்பார் எண்டோ நினைக்கிறீங்க?:)) ஹா ஹா ஹா..

      Delete
    6. இதில நெல்லைத்தமிழன் எந்த லிங் படிக்காவிட்டாலும்.. இந்த, கீழே போடும் லிங்கில் போய்க் கொமெண்ட்ஸ் படிக்கோணும் என வேண்டிக் கொள்கிறேன்ன் ஹா ஹா ஹா நான் அங்கு நெ.தமிழன் பற்றி எதுவுமே பேசவில்லை:)).. 2017 ல இருந்தே இந்த டமில் அக்கப்போர் நடக்குதே எனக்கும் நெ.தமிழனுக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      http://gopu1949.blogspot.com/2017/06/2-of-8.html

      Delete
  44. உங்கள் தமிழும் அருமை... அப்படியே தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. ஓ மிக்க நன்றி.

      Delete
  45. அன்பு அதிரா, உங்க தமிழ் கொஞ்சு தமிழ் அப்படியே பேசுங்கள். றீவீ ந்றுதான் புரிய நாட்களாச்சு.
    உங்க செல்லம் நல்லா போஸ் கொடுக்கிறது.

    ஆமாம், நம்ம கர்மாப்படி வினைகள் வருவதும் போவதுமாக இருக்கும்.
    ரொட்டி போஸ்ட் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ...

      //உங்க செல்லம் நல்லா போஸ் கொடுக்கிறது.//
      அவட மம்மியைப்போலவேதான்ன்ன்ன்ன் [என்னைச் சொன்னேன்:)]..

      ரொட்டி விரைவில் வருது வல்லிம்மா.. மிக்க நன்றிகள்.

      Delete
  46. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    14ஆவதாக தங்கள் வலைத்தளமும் இன்று முதல் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உத்தியோகபூர்வமாக அறியத் தருகிறோம்.

    தற்போது, தங்களது அதிராவின் தமிழும், கொரொனாவும்:) பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சி.பாரதி வாங்கோ... மிக்க நன்றி மிக்க நன்றி.

      //உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.//
      எந்த வகையான ஆதரவு எனச் சொன்னால்தானே செய்வோம்ம்.. நாம் என்ன செய்யோணும் என நீங்கள் இதுவரை சொல்லவே இல்லையே..

      Delete
  47. பேச்சுத் தமிழ் பதிவுகள் நன்று - விளக்கம் தர வேண்டிய அளவிற்கு ஆகிவிட்டதே! ஹாஹா...

    கொரானா எல்லோரும் பயந்து தான் போயிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட், தாமதாமானாலும் தவறாமல் வருகை தருகிறிங்கள் மிக்க நன்றி.

      Delete
  48. கொரானோ பயமுறுத்துகிறது இன்று இங்கு பப்ளிக் ஹொலிடே பிரதானம் நாடு சுத்தப்படுத்தல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மாதேவி வாங்கோ.. ஓ அப்படியோ... கொரனா உலகையே ஆட்டிப் படைக்கிறதே... மிக்க நன்றி.

      Delete
  49. வழக்கம் போல் கடைசியில் பின்னூட்டமிடுகிறேன். நீங்கள் நீங்களாகவே இருங்கள். எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம். இலங்கைத் தமிழ் அழகானது. 
    சைனாக்காரரை அறைந்த ஆங்கிலேயருக்கு ஏதோ ஆத்திரம், அதை இப்படித்தீர்த்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானு அக்கா வாங்கோ.. அதனாலென்ன, எல்லா நேரத்திலும் எல்லோரும் ஃபிறீயாக இருப்பதில்லைத்தானே, அதனால முடியும்போதெனிலும், வந்தால் மகிழ்ச்சியே..
      மிக்க நன்றி.

      Delete
  50. “என்பேச்சு வழக்கு மொழியிலேயே”.. எழுதி வருகிறேன். ....

    நல்லது அதிரா ..இப்படி அனைவருக்கும் எழுத வருவது இல்லை ..

    “உங்களாலதாண்டா எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை” என... இதெல்லாம் தப்புத்தானே... அடடா என்ன இப்படி


    பிரபஞ்ச நியதி ...உண்மை
    அவட மம்மியைப்போல:)...இதுவும் உண்மையே ...


    என் ரொட்டிப் போஸ்ட் விரைவில் வெளிவரும்......வரட்டும் வரட்டும் ...ஆறும் முன் நானும் வர பார்க்கிறேன்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.