
()ஒரு மனிதன் கோபம் அடையும்போது, அவர் மனதுக்குள்ளேயே புயல் எழும்புகிறது, மனச்சாட்சியை அது அழித்துவிடுகிறது.
()சூழ்நிலையும் மனிதர்களும் துன்புறுத்தினாலும், ஒரு அறிவாளி, தன் நிலையைவிட்டு அசையாமல், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்க வேண்டும்.
()கோபம் முதற்கட்டத்தில் வென்றதுபோல் தெரிந்தால், நிரந்தரமாகத் தோல்வி அடையப்போகிறது என்று பொருள்.
()எது நடக்கக்கூடாது என்பதற்காக கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது.
()மனதில் பகைமையை அடக்கி வைத்தல், நேரடிப் போரை விடக் கொடியது.

()அறுந்த பட்டமும், ஆத்திரக்காரரின் பேச்சும், எதிலே போய் முடியுமென்பது, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
()சீறிச் சினப்பதற்கு 60 தசைகள் இயங்க வேண்டும், ஆனால் சிரிப்பதற்கு 13 தசைகள்தான் இயங்க வேண்டும், ஆகவே வீணே ஏன் நாம் சக்தியை இழக்க வேணும்?
()உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்கவேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.
()ஒரு பூனை திருட்டுப்போய்விட்டதென நீங்கள் சட்டத்தை நாடினால், ஒரு பசுவையே இழக்கவேண்டிவரும்.
()கடன் கொடுத்தவருக்கு கோபம் கூடாது, கடன் வாங்கியவருக்கு ரோசம் கூடாது.
()நாய், தன் நாக்கை ஆட்டாமல் வாலை ஆட்டுவதினால்தான், அதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
()உண்மையான வீரன் யார் என்றால், எதிரிகளை அதிகமாகக் கொல்லும் உடல் வலிமையுள்ளவர் அல்ல, தனக்கு வரும் கோபத்தை அடக்கிக் கொள்பவரே.
Cool down பூஸ்.... cool down...
A silent tongue and true heart are the most admirable things on earth. ...

இத்தனை தத்துவ முத்துக்களையும் படித்தபின்பும், கோபம் யாருக்கும் வருமோ?...
பின் இணைப்பு...
பூனை விரட்டி வளர்ப்பவர்களெல்லாம், பூனையைக் கோயிலில் கண்டதும், ஓடிச் சென்று படமெடுக்கிறார்கள், அதுவும் பாருங்கள் கிட்டப்போய் எடுக்கப் பயமாக்கும்... நிழல்பட கருவி, படமெடுத்தவரின் நிழலையும் படமெடுத்துவிட்டதே

பூனையின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல், ரின்னிலே அடைத்துவிட்டாராம்.... என்ன கொடுமை இது...

அப்பாடா.. கோபமில்லாமல், பொறுமையாகப் படித்த உங்களுக்கு.... மிக்க நன்றி.
|
|
Tweet |
|
|||










