"தேம்" ஸ் நதி..

கேள்வியும், அர்த்தமுள்ள நகைச்சுவை கலந்த பதில்களும்...
ஒரு பிரபலமான பத்திரிகையில், பல பல வருடங்களுக்கு முன்னர் வெளியான, மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பிரபலமான ஒருவரின் பதில்கள்..
இது cut and paste அல்ல.. நானே ரைப் பண்ணியது..
கேள்வி:-
கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாதவர்களை என்ன செய்யலாம்??
பதில்:-
வள்ளல் சீதக்காதியிடம் பாடம் கேட்கச் சொல்லலாம்.
உடலை வைத்து தொழில் நடத்தும் ஒரு பெண்ணிடம், அவளது தொழிலை நிறுத்தும்படியும், அவளது தேவைக்கேற்ற பணத்தை மாதாமாதம் தருவதாகவும், சொன்னார் சீதக்காதி.
கோயில் மாடத்தில், மாதாமாதம் அவளுக்குத் தேவையான பணம் வைக்கப்படும், அவள் வந்து எடுத்துச் செல்லலாம் என்பதுதான் ஏற்பாடு.
அப்படியே முதல்மாதம் வந்து பணமெடுத்துச் சென்றவள் பின்னர் வரவில்லை. 7 வருடங்களின் பின், அப்பெண் சீதக்காதியிடம் வந்தாள்.
"ஐயா எனக்குப் பணம் தந்து உதவுங்கள்!! மகளுக்குக் கல்யாணம்" எனக் கேட்டாள்.
ஒரு தொகைப் பணத்தை உதவியாகக் கொடுத்த வள்ளல் சீதக்காதி, “கோயில் மாடத்தில் சென்றுபார்” என்றார்.
அங்கே மாடத்தில், ஏழு வருட காலமாக, அவள் வந்து எடுக்கத் தவறிய பணம், அப்படியே சேர்ந்திருந்தது. வாங்க வருபவர் மறந்தாலும், வாக்குக் கொடுத்தவர் மறக்காமல் இருந்திருக்கிறார்.
நம்மில் சிலர் இருக்கிறார்கள், கடன் வாங்கியதைக்கூட மறந்துவிடுவார்கள்.
கேள்வி:-
எதற்கெடுத்தாலும் குறுக்குக் கேள்வி கேட்பவர்களை என்ன செய்யலாம்?
பதில்:-
குறுக்குக் கேள்விகளைப் பொறுமையாக நேர்ப்படுத்திப் பாருங்களேன். ஒரு குட்டிக் கதை.
ஓர் ஆசிரியர், பொறுமையாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” எனச் சொன்னார். . அப்போது ஒரு குறும்புக்கார மாணவன் குறுக்குக் கேள்வி கேட்டான்:
"சில பண்டங்களுக்கு உப்பே இல்லையே. லட்டு போன்ற இனிப்பு வகைகளிலும் உப்புக் கிடையாது. அதற்காக அவற்றையெல்லாம் குப்பையில் போடலாமோ?” எனக் கேட்டான்.
சிலர் என்றால் முறைத்திருப்பார்கள், அந்த ஆசிரியர் அமைதியாகப் பதில் சொன்னார்.
“உண்மையில் உப்பு இல்லாத பண்டமே கிடையாது, லட்டு, ஜிலேபி, போன்ற இனிப்புக்களிலும் உப்பு இருக்கின்றது. அதுபோக, அறுசுவைப் பதார்த்தங்களிலும் உப்பு இருக்கிறது. எப்படித் தெரியுமா? இதோ பார் என எழுதிக் காட்டினார்...
இன் + உப்பு = இனிப்பு
கச + உப்பு = கசப்பு
துவர் + உப்பு = துவர்ப்பு
எரி + உப்பு = எரிப்பு
கை + உப்பு = கைப்பு
புளி + உப்பு = புளிப்பு.
இது இடைவேளை.......
United Kindom Parliement.வினாத் தொடர்கிறது.........
கேள்வி:-
இந்தக் காலத்துப் பிள்ளைகளின் புத்திசாலித்தனம், வளர்ந்திருக்கிறதா? தேய்ந்துபோகிறதா?
பதில்:-
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..
ஒரு சின்னப் பையன், தன் அப்பாவிடம் சென்று, “அப்பா, நீங்கள் இந்த உலகத்தில் ஒரு மனிஷனாகப் பிறந்தது, என்னுடைய அதிர்ஷ்டம்” என்றான். அப்பாவுக்கு மஹா சந்தோசம்.
ஏன் மகனே அப்படிச் சொல்கிறாய்? எனக் கேட்டார். மகன் சொன்னான்...
"நீங்கள் ஒரு கரடியாகப் பிறந்திருந்தால், இந்நேரம் நானும் ஒரு கரடிக்குட்டியாகத்தானே இருந்திருப்பேன்”
கேள்வி:-
வேலைக்காரர்களை இளக்காரமாக நினைத்து, அடக்கி ஒடுக்குபவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?
பதில்:-
ஒரு அடிமை இருந்தான், தன்னுடைய முதலாளிக்கு மிக விசுவானமானவன்.
ஒருநாள் அந்த அடிமை, முதலாளியின் கால்களை அமுக்கிக்கொண்டிருந்தான். முதலாளி கொஞ்சம் ஜாலி டைப். பணத்திமிரும் அதிகம். முதலாளி அடிமையிடம் சொன்னார்..
“டேய்! உனக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்துவிட்டேன்” என்றார். அடிமைக்கோ அளவில்லாத மகிழ்ச்சி.
“ஆனால் ஒரு நிபந்தனை” என்றார் முதலாளி .
என்ன எஜமான்?
“உன்னுடைய மனைவியும், அப்பப்ப எனக்கு கால் அமுக்கிவிட வேண்டும். சம்மதமா” என்றார் முதலாளி..
“சரிங்க எஜமான்”| என்றான் அடிமை. முதலாளிக்கு மஹா சந்தோஷம்.
“ஆனால் ஒரு நிபந்தனை”” என்றான் அடிமை.
“என்னடா நிபந்தனை| எனக்கேட்டார் முதலாளி.
அடிமை சொன்னான்,
“உங்கள் மகளையே எனக்குத் திருமணம் முடித்து வைக்க வேண்டும்”.
கேள்வி:-
எப்போதுமே, எதிலும் குறைகண்டு பிடிப்பவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:-
ஏசுநாதரும், அவரது சீடர்களும் சென்றுகொண்டிருந்த பாதையில் ஒருநாய் செத்துக்கிடந்தது. நாற்றமோ தாங்க முடியவில்லை. ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. சீடர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டார்கள், ஏசுநாதர் மட்டும் நாயைக் கவனித்துவிட்டு,"அடடா, அழகான பற்கள்” என வியந்து கொண்டார்.
இந்த நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, உங்களால் எப்படி வியக்க முடிகிறது? என்று ஒரு சீடர் கேட்டார்.
அதற்கு ஏசுநாதர் சொன்னார்..
"எதிலும், நல்லவற்றையே காண்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்”.
கேள்வி:-
பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்துவதை மட்டும்தான் கண்டிப்பீர்களா?ஆண்களைப் பெண்கள் அதிகாரம் செய்வது உமக்குத் தெரியாதோ?
பதில்:-
தெரியுமே.. ஒரு அம்மா, மகனிடம் விடுகதை ஒன்று கேட்டார் “சிங்கம் போல உள்ளே வரும், ஆடு போல வெளியே போகும், அது என்ன?”.
மகன் சட்டெனப் பதில் சொன்னான் “அது அப்பா”.
~~~~~~~படிச்சுப் பயன் பெறுங்கோ~~~~~~~
பின் இணைப்பு..
அன்பு இளமதி, தன் செல்லங்களை, எனக்காக சில நாட்கள், விளையாட அனுப்பியது..

இன்னும் நாங்கள் விளையாடி முடியேல்லை...
|
|
Tweet |
|
|||













