என்ன இது.... இப்பூடிக் கத்தியும்.. ஆருமே ஓடி வந்து ஆஆஆஆஆ வந்திட்டீங்களோ வாங்கோ வாங்கோ எனக் கூப்பிடுறமாதிரிக் கேக்கேல்லையே:).... இப்பூடியெண்டால் நான் அங்கின “நயகரா” விலயே குதிச்சிருப்பேனே:)).. உசிரைக் கையில இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேனேஏஏஏஏஏஏ:))).. ஒருவேளை எனக்குத்தான் பிளைட்டில வந்து காது அடைச்சிட்டுதோ?:) எதுவும் கேட்குதில்லையோ? இருக்கும் இருக்கும் அப்பூடித்தான் இருக்கும் எல்லாத்தையும் “மாத்தியோசி” க்கோணும்.. பெரியவங்க சொல்லியிருக்கினம்ம்ம்ம்ம்:))).
கண் திறக்க முடியேல்லை.... ஒரு கண்ணாலதான் ரைப்பிங் நடக்குது.... இதெல்லாம் புதுசா என்ன?:))....
கட்டிலெது மேசை எது எனத் தெரியாமல் நித்திரை வருது:))))
போன தலைப்பில் பின்னூட்டமாகப் போட நினைத்தேன், ஆனால் பின்னூட்டம் அதிகமாகிட்டுதே என்பதால.. புதுசாப் போட்டுவிட்டேன் இதை.
எப்படி ஆரம்பிப்பது எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.... நான் இல்லையெனினும் மறவாமல் வந்து பின்னூட்டம் போட்டு கதைத்து மகிழ்ந்து போன அனைவருக்கும் நன்றி.... நன்றி.... நன்றி...
நான் கேட்டுக்கொண்டதற்கும் மேலாக என் புளொக்கைப் பார்த்துப் பராமரித்த அன்புத் தங்கை கலைக்கு... எப்பூடி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை... நன்றி நன்றி நன்றி...
முக்கியமான ஒருவர், நான் எதிர்பாராமல், தினமும் வந்து என் பிளாக் இருக்கு என பாதுகாத்த “யோகா அண்ணனுக்கு” என்ன சொல்வது? எப்படி நன்றி சொல்வது?.... சுயநலம் கருதாமல், தன்னிடம் புளொக் இல்லாதபோதும், எதையும் எதிர் பார்க்காமல் தினமும் வந்து “வெளிநாட்டு + உள் நாட்டுத் திருடர்கள்” இடமிருந்து:)பத்திரமாகப் பாதுகாத்து வந்த உங்களுக்கு நன்றி ..நன்றி.. நன்றி...
வதன புத்தகத்தில் கககககககலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்......இன்னும் உஷாராகக் கலக்க மருந்து கொண்டு வந்திருக்கிறேன்:).. (இது வேற கலக்கல்:))) கொஞ்சம் பொறுங்கோ.. இப்போ மீ ரூ ரயேட்ட்ட்ட்ட்ட்ட்:)).
எல்லோருக்கும் அண்டாட்டிக்கா இனிப்புக் கொண்டு வந்திருக்கிறேன், நம்புங்கோ...எந்த பாக்கில(Bag) வச்சனான் எனத் தெரியேல்லை:), அதனால இனிவரும் தலைப்புக்களில் தேடிக் கண்டு பிடிச்சுத் தருவேன்ன்ன்ன்ன்ன்ன்:)).
உடம்பும் மனமும் வழமைக்குத் திரும்பட்டும்... அனைவருக்கும் மீண்டும் நன்றி நன்றி நன்றி...
|
|
Tweet |
|
|||









