ஸ்கொட்லாந்தில் வந்து காலை எடுத்து வைக்கிறேன் நிலத்திலே.... சில்லென ஒரு குளிர்... பின்னேரம் ஒரு 3 மணி இருக்கும்.. சுட்டெரிக்கும் வெயில்... அப்படியே எயார்போர்ட்டிலிருந்து வீடு நோக்கிப் பயணம்.. பச்சைப் பசும் புல் வெளிகளும்.. அங்காங்கு செம்மறி ஆட்டுப் பிள்ளைகள்.. கொழுத்த குண்டு மாட்டுக் கண்டுகள், அழகிய மலைகள்.. இடையே ஆறு. இப்படி ரிவியில் பார்த்ததை நேரில் பார்த்தபோது ஏதோ ஒரு பரவசம்... விதம் விதமாக கண்ணில் இடையிடையே பட்டது.. மனதை மிக உற்சாகமாக்கி விட்டது...
வீட்டுக்குப் போன களைப்பில் சாப்பிட்டு விட்டு, நித்திரையாகி விட்டோம், திடீரென கண்ணில ஏதோ சுடுவதைப்போல இருந்துது, திடுக்கிட்டு கண் முழிச்சேன், ஜன்னல் கேர்ட்டின் சரியாக மூடுப்படவில்லை, அந்த இடைவெளிக்குள்ளாலே சூரியன் என் கண்ணை கூசப்பண்ணியது..
படாரென துடிச்சுப் பதைச்சு எழுந்தேன், அய்யய்யோ காலை விடிஞ்சு பத்து மணி வெயில்போல இருக்கே[இலங்கையில் அப்படித்தானே], நேரமும் புரியுதில்ல, எங்கு இருக்கிறேன் எனவும் தெரியவில்லை, இது இலங்கையா இல்ல ஸ்கொட்லாண்ட் வந்து விட்டோமா.. என பதைபதைத்து கொஞ்சம் நிதானத்துக்கு வந்து, நாளைக்கு வேர்க் இருக்கு என ஹஸ்.. சொன்னாரே, எலாம் வைக்க மறந்து விட்டோமே என அவசரமாக கணவரைத் தட்டி எழுப்பினேன், அவர் எழும்பி நேரத்தைப் பார்த்துப்போட்டுச் சொன்னார்.. இப்போ நேரம்- இரவு பத்து மணியாகிறது .. பயந்து விட்டீங்களோ.. இப்பவே வெளிக்கிடுங்கோ வெளியே போய்ச் சுற்றிவிட்டு வரலாம் என, “என்ன? பத்து மணிக்கு இப்படி வெய்யிலா?.. நீங்க பொய் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன், இது விடிஞ்சுபோச்சு”.. எனச் சொன்ன, அந்த முதல் நாள் இரவு வெயிலை, வாழ்க்கையில் மறக்கவே முடியாது.
இங்கு கோடை காலத்தில் இரவு 11 வரை வெயில் இருக்கும்... அதேபோல காலை 3.30-4 மணிக்கே சூரியனார் பளாச் என மின்னுவார்ர்... அதனால இவ்வருடம் சில படங்கள் எடுத்தேன்.. இரவுப் படங்கள்.. ஏதோ ஓடி ஓடி நிறைய எடுத்ததைப்போல இருந்துது, ஆனா இப்போ பார்க்க கொஞ்சம் தான்:).. ஆனா படத்தில வெளிச்சம் குறைவாகக் காட்டுது நேரில் பார்பதை விட..
இந்தப் படம் இரண்டும் ஒரே நேரத்திலேயே எடுத்தேன் நேரம் இரவு 10.30. நிலவு இடது பக்கமும் சூரியன் வலது பக்கத்தில் மறைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.. ஆனா நிலவு தெரியும் திசை தென்மேற்கு, சூனியன் அங்கிள் மறைவது வட மேற்கில்...
இது நேரம் சரியாக சொல்லத் தெரியவில்லை, அநேகமாக 10-11 மணிக்கு இடைப்பட்ட நேரம்தான்..
இதில் பாருங்கோ காரில் நேரம் தெரிகிறது, நைட் 9.46 காட்டுது, வெளியே போனபோது ரோட்டில் எடுத்தேன்.. ரோட் லைட் கூடப் பத்தவில்லைப்பாருங்கோ.. அவ்ளோ வெளிச்சம்..
😊😊===============😊😊INTERVAL😊😊==============😊😊
ஆவ்வ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:).. இந்தப் பூங்கொத்தை எப்பூடி நெல்லைத்தமிழனிடம் குடுப்பேன், நேக்கு ஒரே ஷை.. ஷையா வருதே ஏனெண்டால்ல்.. புளொக்குகளிலெல்லாம்.. என்னைத் “தமனா” எனச் சொல்லாமல்.. “கொடி இடையாள்”.. “இடையிலாள்”, எண்டெல்லோ சொல்றாராம்.., அதில அவர் இப்போ நெருங்கிட்டாராமே.. ஐ மீன் சென்னைக்கே வந்திட்டாராமே... சீ..... நேக்கு வெய்க்கமா வருது:))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன ஸ்ரீராம்.. எதுக்கு இவ்ளோ வெய்க்கப் படுறீங்க?:) நிமிர்ந்து பாருங்கோ:). இந்தாங்கோ பூங்கொத்து... புளொக்குகளிலெல்லாம் என்னை அனுஸ்.. அனுஸ்ஸ் எனச் செல்லமாக அழைக்கிறீங்களாமே.. அப்போ வராத வெய்க்கம் இப்போ எப்பூடி.. வெய்க்கப் படாதீங்கோ ஸ்ரீராம்:))
========================😛😛😛😛=======================
இந்தப் படங்கள் இரவு பகல் கலந்திருக்குது.. முகில்களைப் பாருங்கோ ஏதும் கதை சொல்லுதோ உங்கள் காதில்:).. கப்பல் போவது இந்த விண்டரில். மலை மீது.. ஸ்னோ இருப்பது தெரியுதெல்லோ...
இது ஒரு மழைநேரம் போல இருக்கே... கண்ணழகிபோல இன்னொரு அழகி போகிறா எங்கள் ஆத்தில்:)..
இது நல்லா இருக்குதெல்லோ?:)
ஹா ஹா ஹா எங்கட குண்டுப்பிள்ளையாரை, குட்டி எலிப்பிள்ளை ஏத்திப் போகுதே.. என்னா தைரியம் :).
ஹா ஹா ஹா அதானே?:)
ஊசி இணைப்பு:)
ஊசிக்குறிப்பு
💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑
திருவாவடுதுறை முருகப் பெருமானே வள்ளிக்கு இம்முறை ஏமாத்தாமல் வைர மூக்குத்தி போடுவேன் என்னைக் காட்டிக் குடுத்திடாமல் காப்பாத்துங்கோ:)..
()()()()()()()()()()()()()()()()()
|
|
Tweet |
|
|||





























