நல்வரவு_()_


Saturday 4 February 2017

மண் சட்டியும் மீன் குழம்பும்.. பக்குப் பக்கூஊ:)

ன்ன? என் தலைப்புப் பார்த்துப் பக்குப் பக்கெண்ணுதோ உங்களுக்கெல்லாம். முந்தின காலத்தில மண் பாத்திரங்கள், பித்தளை, கல்வெள்ளி, இரும்பு என வகை வகையாக சமைச்சார்கள். அதனால் அக்காலத்தவர்கள்  நலமாக இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். இதுபற்றி விரிவாக நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?:).


ந்த மணத்தக்காளி:) மட்டருக்குப், பிறகு என்னைப் பாதிச்ச அடுத்த விஷயம் இந்த மண்சட்டிதான். எங்களூரில் ஏசியன் கடைகள் இருக்கவில்லை[இப்போ இலங்கைத் தமிழ்க் கடை வந்திட்டுது எனச் சொன்னேன்தானே].

னா, நான் மண்சட்டி பற்றி பெரிதாக சிந்திக்காமல் இருந்தவேளை, எங்கட அஞ்சு ஓடிவந்து... “அதிரா, நான் மண்சட்டி வாங்கிட்டேன், உடம்புக்கு ரொம்ப நல்லது, இனி அதிலதான் கறிகள் சமைக்கப் போறேன்”... எண்டு ஒருநாள் சொன்னா பாருங்கோ.. எனக்கிதைக் கேட்ட நேரம் தொடங்கி அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு:)... புகையே வரவில்லை எனக்கு:)) அவ்ளோ அம்பு.. வெறி சொறி டங்கு ஸ்லிப் ஆச்சு:) அவ்ளோ அன்பு அஞ்சுல:)... ஐ மீன் எனக்குப் புகைக்கேலை எனச் சொன்னேன்...:).

னாப் பாருங்கோ நான் அன்றிலிருந்து ஒழுங்கா நித்திரை கொள்ளேல்லை:). எப்பூடி நான் மண்சட்டி வாங்குவேன், என ஃபோன் பண்ணும்போது எல்லோரிடமும் புலம்பினேன். ஊரில இருக்கும் மாமா மாமி எங்களுக்கு பார்சல் பார்சலா தமிழ்ச் சாமான்கள் அனுப்புவினம்[நான் வேண்டாம் என்றுதான் சொல்லுவேன், சொல்லாமல் அனுப்புவினம்], இங்கு கிடைக்காதே என. அவர்களிடம்கூட இதுபற்றிப் பேசினபோது மாமி சொன்னா... வெளிநாட்டிலிருந்து வருவோர் இப்போ மண்சட்டி வாங்கிக்கொண்டு போகிறார்கள், பார்சலில் அனுப்பமுடியாதே உடைஞ்சிடும் எனக் கவலைப்பட்டினம்.

னடாக் காரரோடு பேசிய இடத்தில் இங்கு யாரும் மண்சட்டி பாவித்ததாக தெரியவில்லை, கடைகளிலும் காணவில்லை என்றார்கள்.

துக்கொரு காரணம் நானே ஓசிச்சு கண்டு பிடிச்சேன். அதாவது கனடாவில் அடுப்புக்கள் எல்லாம் எலக்றிக்.. அதில் மண்சட்டி வைத்து சமைக்க முடியாது, தட்டையா எல்லோ இருக்கும். ஆனா பிரித்தானியாவில் எல்லாம் ஹாஸ் அடுப்பு, அதனால அடி கூரான பாத்திரங்கள் வைத்து சமைப்பது இலகு.

நான் சின்னப்பிள்ளையாக[இப்போ வளந்திட்டீங்களோ என நோ குரொஸ் குவெஷன்ஸ் பிளீஸ்ஸ்.. சொல்லி வைக்காட்டி விடமாட்டாங்க ஸ்ஸ்ஸ்ஸ்] இருந்தபோது வீட்டில் மண்சட்டி இருந்தது. இலங்கையில், மண்ணில், விதம்விதமாக சட்டி, பானை, பூச்சாடி, தயிர்வைக்கும் பானை, தண்ணீர் நிரப்பிக் குடிக்கும் கூசா, இப்படி எல்லாம் பற்றன் போட்டு அழகாக செய்வது சிங்கள இன மக்கள்தான். கொழும்பை அண்டிய பகுதிகளில் ரோட்டால் போகும்போது சில ஊர்களில் ரோட்டோரமெல்லாம் அழகழகா செய்து அடுக்கியிருப்பார்கள், வான் இல் பயணம் செய்யும்போது நிறுத்தி வாங்குவோம்.

திலும் “கூசா” என்பது, தண்ணீரை சுட வச்சு இதில் ஊற்றி விட்டால், 2,3 மணித்தியாலத்தில் ஐஸ்வோட்டர் போல கிடைக்கும், அந்த வெய்யிலுக்கு வெளியே விளையாடிப்போட்டு வந்து கூசாத் தண்ணியை வார்த்து மடக்மடக்கெனக் குடிக்கும்போது ஏதோ ஒரு இனிமையாக இருக்கும், பெரும்பாலும் ஃபிரிஜ்ஜில் தண்ணி வைப்பதில்லை, கூசாவில்தான் வைத்திருப்போம். கூசா என்பது சிங்களச் சொல்:).

நெட்டில் தேடினேன் கிடைக்கவில்லை, கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும், கழுத்து ஒரு அடி உயரமாக இருக்கும், பானை.. இதை விட சின்னதா இருக்கும், டார்க் பிரவுண் கலரில், அழகழகா பற்றன் போட்டு மூடியும் இருக்கும்.. அதைத்தான் கூசா என்போம்..
==============================INTERVAL=============================
ஹையோ இடைவேளை வந்திட்டுது, தப்பி ஓடிடலாம் என ஓடிப் போயிடாதையுங்கோ.. இனிமேல்தானே கதையே ஆரம்பம்:)...
இந்த மண்சட்டி, நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது வீட்டில் பாவித்தோம் எனச் சொன்னேன் தானே. அப்போ ஒருநாளாம், எனக்கொரு 3/4 வயதிருக்குமாம். அன்று சமைச்ச ஒரு சட்டி கீழே விழுந்து உடைந்து விட்டதாம், அதனை கிளீன் பண்ணியாச்சாம், ஆனா கொஞ்ச நேரத்தில் என்னைக் காணவில்லையாம்:), வீடெல்லாம் தேடி கூப்பிட்டுப் பார்த்து அம்மா பயந்துபோயிருந்தபோது, அக்கா கூப்பிட்டாவாம்.. அம்மா இங்க ஓடிவாங்கோ என.. அம்மா வந்து பார்த்தால், அந்த உடைந்த சட்டியின் ஒரு துண்டை எடுத்து மெதுவாக கடித்தோ நக்கியோ என்னமோ செய்து கொண்டு கிச்சின் கதவின் பின்னால் சுவரோடு ஒளிச்சிருந்தேனாம்:))..

எனக்கு அப்பவே கயர்ப்புத் தன்மை ரொம்ப பிடிக்கும்... அதனால்தானாக்கும்:))
=====================இடைவேளைமுடிஞ்சுது=====================

ப்படி இருந்தவேளை, இந்த வருடம் எங்களுக்கு தமிழ்க் கடை ஓபின் பண்ணினார்கள்தானே.. என் சந்தோசத்துக்கு எல்லையே இல்லை, அங்கு போனால் கடையின் உள்ளே நுழைந்ததும் வாசலிலேயே மண்சட்டிகள்:)).. ஃபிரீஸ்ஸ்ஸ்ஸ் ஆகிட்டேன்ன் நான்:). [என் கண் முன்னே அஞ்சு வந்து போனா:)].

தைப் பற்றிக் கதைச்சபோது, அங்கு கவுண்டரில் நிண்ட தம்பி(தம்பி என நினைக்கிறேன்:)), சொன்னார் அக்கா , இங்குள்ளவர் இந்த மண்சட்டியை வாங்கிப்போய்விட்டு சொல்கிறார்கள், மண்மணக்குது.. சரியாக செய்யப்படவில்லை என்றெல்லாம், அதனால பார்த்து சமையுங்கோ என்றார்.

ஞ்சு எனக்கு ஃபுல் ட்ரெயினிங் தந்தவ(தான் நெட்ல தேடிப்பிடிச்சனான் என).. மண் சட்டியை எப்படி புதிதில் பாவிப்பதென.. அம்மாவிடமும் கேட்டு, எப்படி புது மண்சட்டி பாவிப்பதென தெரிஞ்சுகொண்ட முறையை அத்தம்பிக்கு சொன்னேன், அவர் சொன்னார், அதுதான் சரி அக்கா, இவர்கள் பாவிக்க தெரியாமல் பாவிக்கிறார்கள் என.

தாவது புது மண்சட்டிக்குள் தண்ணி விட்டு அப்படியே வைக்க வேண்டும். பின்பு தண்ணி விட்டு சும்மா அடுப்பில் தண்ணியை சூடாக்க வேண்டும். இப்படி 2,3 தடவைகள் செய்தபின், எண்ணெய் விட்டு ஏதும் பொரிக்க வேணும், பின்பே மெதுவா கறி வைக்க ஆரம்பிக்க வேணும், அப்போ மணம் ஏதும் இருக்காது.

நான் “வண்டி” அங்கிள்:) தாமோதரம்பிள்ளையின் சமையல் அடிக்கடி பார்ப்பேன், காரணம் அவர் மண்சட்டியில்தான் அனைத்தையும் சமைச்சுக் காட்டுவார், பார்க்க பார்க்க ஆசையா இருக்கும்.

நான் இப்படி எல்லாம் செய்துபோட்டு, முதன் முதலா என்னவெல்லாம் சமைச்சிருக்கிறேன் எனப் பாருங்கோ.. சரியான சந்தோசமாகிட்டுது எனக்கு.
முருங்கை இலை சுண்டல், அகத்திச் சொதி, பொன்னாங்காணிக்கறி:)

க்காலத்துப் பழமொழிகள் பலதும், பிறக்டிக்கலா உணரும்போது எவ்வளவு உண்மையானவை என்பதை நிரூபிக்குது... இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை இது எனக்கு உணர்த்துது. ஏனெனில் ஊரில் இருக்கும் போது மண்சட்டியில் சமைப்பது பிடிக்காது, , இங்கு எனக்கு மண்சட்டியில் சொர்க்கமே தெரிவதுபோல இருக்கு, அதில் சமைக்கும் ஆசையில் நிறையக் கறிகள் செய்கிறேன் இப்போ:)...

====================குட்டிஇணைப்பு=====================
எங்கட கடைக்கு பனங்கிழங்கும் வந்துதே... வாங்கி அவிச்சுச் சாப்பிட்டும் விட்டோம்ம்..:)) ஏன் தெற்கால:) இப்பூடிப் புகைக்குது:)

==================================================================
ஊசிக்குறிப்பு:
என் ஊசிக்குறிப்பு, வரவர ஊதிப்பெரிசாகுதாம் என முறையீடு வந்துது:) அதனால இம்முறை ஊசியேதான்:).. அதாவது “தமிழ்மணம் வோட்” போடாமல் போனீங்களென்றால், கெட்ட கெட்ட கனவா வந்து சாமம் சாமமா திடுக்கிட்டு முழிச்சு எழும்பி.. பெட்டர் காஃப்:) ... வாயிலிருந்து கெட்ட கெட்ட:) திட்டா ... திட்டு வாங்குவீங்கள் என்பதை, இந்த தேம்ஸ் நதியில் படர்ந்திருக்கும் பாசிமீது அடித்துச் சத்தியம் பண்றேன்ன்:)).
==================================================================
இதைப்போலதான், தமிழ்க்கடை இல்லாத ஊரிலிருக்கும் ஒரு “அப்பாஆஆஆவி சுவீட் 16” பிள்ளையிடம்:) போய், தமிழ்க்கடைகள் பற்றிப் பேசக்குடா:))
***********************************************************************************

58 comments :

  1. ///நான் “வண்டி” அங்கிள்:) தாமோதரம்பிள்ளையின் சமையல் அடிக்கடி பார்ப்பேன், காரணம் அவர் மண்சட்டியில்தான் அனைத்தையும் சமைச்சுக் காட்டுவார், பார்க்க பார்க்க ஆசையா இருக்கும்.///


    😃😃😂 avaruku ithu therinjathu / “வண்டி” avlothan

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. முதலாவதா வந்த உங்களுக்கு “ஒரு மண் சட்டி” இலவசம்:)...

      என்னதான் பிஸியாக இருப்பினும் வந்தோருக்கு ரீ கொடுக்காமல் இருப்பது ஐ மீன்:) பதில் போடாமல் இருப்பது எனக்கு கஸ்டமாக இருக்கும் அதனாலயே ஓடிவந்தேன்... அவருக்கு தெரிஞ்சால் நம்மோடு சேர்ந்து சிரிப்பார்ர் ஹா ஹா ஹா.. தன் காரைப் பற்றிக் கதைக்கிறோம் என நினைச்சு:))

      Delete
  2. I am very busy in the kitchen. .do we need to add coconut milk for pineapple curry

    ReplyDelete

  3. எல்லாமே சரி...

    ஆனால்..... (ஊசிக்குறிப்பு அல்ல...) கிக்கி கிக்கி.. சிரிச்சேனாக்கும்... ஏன்...?

    உங்கள் தளத்தை blogspot.com என்று மாற்றி விடுங்கள்...

    ஏன் என்பதை கீழே இணைப்பில் சென்று வாசிக்கவும்...

    http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

    உதவி தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள் சகோதரி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் வாங்கோ சகோ தனபாலன்.. வாழ்க்கையில் முதேல் தடவையா உங்களிடமிருந்து பெரீய பின்னூட்டம் பார்த்து பிறீஸ்ஸ்ஸ்ஸ் ஆகிட்டேன்ன்:)..

      ஹா ஹா ஹா அப்போ கெட்ட கெட்ட திட்டா வாங்கியிருக்கிறீங்க:) அதுதான் சிரிக்கிறீங்க?:).

      இணைப்பில் சென்று படித்தேன், செய்கிறேன், ஆனா அங்கு சிலரின் பின்னூட்டங்கள் படிச்சதும் பயமாகவும் இருக்கு, மாற்றியபின் என் புளொக்கில ஏதும் ஏடாகூடமானால்... கைவலிக்கக் கால்வலிக்க புளொக்கைத் தூக்கிக்கொண்டு உங்களிடம்தான் ஓடி வருவேன்.. ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
    2. பிரச்சினை ஏதும் வராது தைரியமாக செய்யுங்கள்

      Delete
  4. //வரவில்லை எனக்கு:)) அவ்ளோ// ஒரு வேளை E சிகரெட்டா இருக்குமோ :)) ஹா ஆஹா

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அதிலயும் புகை விடுகினமே:)) ஹா ஹா ஹா..

      Delete
  5. மண் பானையில் மோர் குழம்பு ,அப்பளக்குழம்பு ,நெய் கத்திரிக்கா புடலங்கா கூட்டு கீரை மொளகூட்டல் சாம்பார்
    புளிசேரி வெண்டக்கா மண்டி அப்புறம் வருத்தல் எல்லாமே சூப்பரா வரும்
    நான் NON ஸ்டிக் பாத்திரங்களை தூக்கி [போட்டாச்சு எல்லாமே சட்டியில் தான் இப்பெல்லாம் செம டேஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. pineapple pulissery இன்னிக்கு மண்சட்டியில் செய்தென் என்று சொல்லிமுடித்து கொள்கின்றேன்

      Delete
    2. ஆவ்வ்வ்வ் நான் இன்று எண்ணெய்க் கத்தரிக்காய்.. மண் சட்டியில் செய்ய இருக்கிறேன் என்பதை மிகவும் ஏழ்மையாக.. ஹையோ டங்:) ஸ்லிப்ட்:).. தாழ்மையா சொல்லிக்கொள்கிறேன்...

      அஞ்சூஊஊஊஊஊ மீயும் நீஈஈஈஈஈஈஈஈண்ட காலத்துக்குப் பிறகு பைன் அப்பிள் வாங்கி வந்தேன்ன்ன் கறி சமைக்க:))..

      என்னைக் குழப்பி விடுவதே இந்த ரெலிபோன் உரையாடல்தான்:) போனகிழமை அம்மா பேசும்போது சொன்னா, அதிரா பைன் அப்பிள் வாங்கி கறி வச்சோம் சூப்பரா இருந்துது, நீயும் கிடைத்தால் வாங்கிச் சமைத்துப்பார் என...

      இதுக்கு மேலயும் நான் பொறுமை காப்பனோ?:) வாங்கி வந்திட்டேன்ன்ன்...

      அஞ்சு நான் சொல்லும் தலைப்பிலே ஒரு போஸ்ட் போடுங்கோ பீஸ்ஸ்ஸ்..

      “மண்சட்டியும் பைன் அப்பிளும்”

      Delete
  6. ///எனக்கு அப்பவே கயர்ப்புத் தன்மை ரொம்ப பிடிக்கும்... அதனால்தானாக்கும்:))'''பக்கத்துக்கு வீட்ல ROOF ஓடு மாத்தறாங்க ..உங்களுக்கு ஒரு மூட்டை பார்சல் அனுப்பட்டா :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஓட்டுத் துண்டு கிடைத்தால் சாப்பிட்டுப் பார்க்க மாட்டேன், அப்படியே உதட்டில் ஒட்டித் தொங்க விட்டுக் கொண்டு திரிவோம் ஆவ்ரிக்கன்ஸ் போல:)).. என்ன கூத்தெல்லாம் போட்டோம் அக்காலத்தில்:)

      Delete
  7. வண்டி அங்கிள் தாமு மட்டுமில்லை உங்க அக்கா BIRD முனியம்மாகூட மண் சட்டியில் தான் குக் பண்ணுவாங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓம் என்ன?:) ஒரு தடவை பார்த்ததா நினைவு.. அவ இப்போ இல்லை எல்லோ:(.

      Delete
  8. ஸ்வீட்போ 16 ய், தமிழ்க்கடைகள் பற்றிப் பேசக்குடா:))// சரி அப்போ சரவணபவன் வரப்போதே அப்புறம் சென்னை தோசா வரப்போதே அதுபத்தி பேசலாமா ::)))


    ReplyDelete
    Replies
    1. நோஓஓஓஓஓஓஓஒ இது அநியாயம் அக்கிரமம்... விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்..:) நான் ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:).

      Delete
  9. சீ சீ இந்த பனம் புளிக்கும் ..நானாக பேலியோ புலிகள் நிலத்துக்கு கீழே விளையறத தொடமாட்டோம்

    ReplyDelete
    Replies
    1. என்ன இந்த மண்புளு:) ஸ்லக்... கறையான் இவற்றைப்பற்றியா பேசுறீங்க? ஹையோ என்னால அவற்றைப் பார்க்கக்கூட முடியாதே:)) நாங்கல்லாம் போலியா(ன) பூஸ்கள்:) கிக் கிக் கீஈஈஈஈஈ:))

      Delete
  10. //அஞ்சு எனக்கு ஃபுல் ட்ரெயினிங் தந்தவ///

    இன்னும் பீஸ் வந்து சேரலை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் நன்னன்

    ReplyDelete
    Replies
    1. அதுதான் சொல்லிட்டனே:) ஒரு மண் சட்டி அனுப்பி வைப்பேன்:) உடையாமல் றிசீவ் பண்ணுவது உங்க பொறுப்பு:)).. ஒரு சின்ன யெல்ப்:) பெட்டியின் வெளியே.. “காண்டில் வித் கெயார்” :) என போட்டு விடுகிறேன்:)).. முத்திரைக் காசைக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளவும்:))

      Delete
  11. /வான் இல் பயணம் செய்யும்போது நிறுத்தி வாங்குவோம்.// வானத்திலே மண் பானை பொருள் விற்பாங்களா .//நீங்க கிரேட்டோ க்ரேட் ..நாடு வானில் ஷாப்பிங் செய்த சையாமிஸ் பூனை வாழ்க :)

    ReplyDelete
    Replies
    1. [im]http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89[/im]

      Thank you so much Anju.

      Delete
  12. முதலில் நேரே கீழே இறங்கி நாலாம் நம்பராக வோட் போட்டு விட்டேன்.

    தலைப்பைப் பார்த்ததும், பதிவைப்படிக்காமல் கண்களையும், வாயையும், மூக்கையும் பொத்திக்கொண்டு தலைதெரிக்க ஓடியே விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன்.. என்னா இப்பூடிப் பண்ணிட்டீங்களே:)..

      //தலைப்பைப் பார்த்ததும், பதிவைப்படிக்காமல் கண்களையும், வாயையும், மூக்கையும் பொத்திக்கொண்டு தலைதெரிக்க ஓடியே விட்டேன்.///

      தீ என்றால் வாய் வெந்திடுமோ?:)) அப்படி ஆச்சே நிலைமை:) தப்புக் கணக்குப் போட்டிட்டீங்க கோபு அண்ணன்,:).

      அது சமீபத்தில் வெளி வந்த ஒரு படத்தின் தலைப்பையே வைத்தேன்.. மற்றும்படி உள்ளே “சைவம்” தான்.. திரும்ப படிங்கோ.. ஹையோ ஹையோ:).

      இருப்பினும் தப்பாமல் வோட்ட் போட்ட மைக்கு மிக்க மிக்க நன்றி.

      Delete
  13. சூப்பர்..உள்ளே இருக்கும் மண்சட்டியை எல்லாம் வெளியே எடுக்கனும்..கொஞ்சம் நாளாக ஓரம் கட்டி வைத்திருந்தேன்.ஆசையை கிளப்பி விட்ட ஏஞ்சல் ,அதிராவிற்காகவது சமைக்கனுமே !!

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் வாங்கோ ஆசியா வாங்கோ... நிட்சயம் எல்லாம் எடுத்து கழுவித் துடைத்து சமைக்க ஆரம்பியுங்கோ, எனக்கு மண் சட்டியில் சமைப்பதனால் அடிக்கடி சமைக்கோணும் போல வருதே:) நான் என்ன பண்ணுவேன்ன்.. ஆனா சிரட்டையில் செய்த அகப்பை இன்னும் கிடைக்கல்ல:)..

      மிக்க நன்றி ஆசியா.

      Delete
    2. ஆசியா :) எல்லா மண் சட்டிங்களையும் எடுங்க விதவிதமா ரெசிப்பிஸ் போடுங்கப்பா

      Delete
  14. .மண் சட்டியும் மீன் குழம்பும் என்று தலைப்பு வைச்சுட்டு மண் சட்டியும் பூனையும் என்ற படத்தை பார்த்து பயந்துதான் போனேன். ஒரு வேளை பிரித்தானியாவில் பூனையைத்தான் மீன் என்று சொல்லுவார்களோ என்று

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அவர்கள் ட்ருத் வாங்கோ... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இம்முறையும் உங்கள் கொமெண்ட், மெயிலுக்கு வரவில்லை, புளொக் கொமெண்ட்ஸ் ஸ்பாம் இல் ஒளிச்சிட்டுது, ஏனெனத் தெரியவில்லை, அதனாலேயே தாமதமாச்சு.. மன்னிக்கவும்.
      மிக்க நன்றி.

      Delete
  15. ///கனடாக் காரரோடு பேசிய இடத்தில் இங்கு யாரும் மண்சட்டி பாவித்ததாக தெரியவில்லை, கடைகளிலும் காணவில்லை என்றார்கள்////கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்க நிறைய கடையில இருக்க்காக்கும் .2008 தங்காக்கள் 2 பேரும் கனடா வரேக்க
    பரிஸ்ல கிடைக்காது எண்டுட்டு இங்க கண்ட உடன வாங்கி அதுக்கு ஒரு அடுப்பும் தனியா வாங்கி வந்து மீன் குழம்பு வச்சு சாப்பிட்டனாங்கள் .ஜூப்பரா இருந்தது.பிறவு கழுவி வச்சுட்டம் ஒரு 10 நாளால நண்டு வாங்கி வந்து சட்டியை வெளிய
    எடுத்தா பூஞ்சி படந்தமாதிரி ஒரே மணம். எறிய மனமில்ல அதுக்குள்ள பம்பூ வளக்கிறன் .சூட்டடுப்பும் இருக்கு அதிரா இங்க{கிளப்பி விடுவம்}நான் வாற வருசம் வாங்குவன் .

    அக்கரைக்கு இக்கரை பச்சை உண்மை அங்க எனக்கு 8 வயசா இருக்கேக்க இந்தியால இருந்து மிக்சி, பீங்கான்ஸ்,நிறைய சாமான்கள் வாங்கி வந்ததா ஞாபகம்.வீட்ல ஒரு நாளும் மண் சட்டீல அம்மா சமைச்சதை நான் பாத்ததில்ல.
    மண்ணெண்ணெய் குக்கர்ல ஈயம் ,செப்பு ,சில்வர் பாத்திரங்கள் பாவிச்சதுதான் ஞாபகம். அங்க மிக்சி ஆசை இங்க உரல் ஆசை.{அக்காட்ட பெரிய உரல் உலக்கை இருக்கு லா சப்பேல் ல 200 ஈரோ}

    ஆனா நான் இந்தியாவில இருந்து கொண்டு வாற சாமானை எயார்போர்ட் செக் பண்ணினா செக் பண்ணுறவர் மயக்கம் போடுவார்.இந்தியால இருந்து பிரான்ஸ் போகேக்க அக்காக்கு 13 கிலொ எடை அம்மி ,குழவி கொண்டுபோய் குடுத்தனான்.
    குட்டி குட்டி மண்பானை எல்லாம் வீட்ட கொண்டு வந்து வச்சிருக்கன்.
    என்னத்துக்கெண்டே தெரியா மண்சுட்டியா வாங்கி வந்து அடுக்கி வச்சிருக்கன்.

    இன்னொரு சட்டி வாங்கி நீங்க சொன்னமாதிரி செய்ய போறன்.


    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ் சுரேக்கா... 7 புளொக் வச்சிருக்கும் கோடீஸ்வரி வாங்கோ வாங்கோ:)..

      ///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்க நிறைய கடையில இருக்க்காக்கும் .///
      ஓ மை கடவுளே.. அப்பூடியா சங்கதி? ஆனா ரா சூப்பர்மார்கட், யாழ் சந்தை.. [இன்னும் சில பெயர்கள் மறந்திட்டேன்ன்] போனபோது நானும் காணல்லியே:))..

      இருங்கோ இருங்கோ சொல்லிட்டீங்க இல்ல.. ஃபோனுக்குள்ளால ஊளையிட்டே அவர்களை வாங்க வச்சிடுவேன்ன்ன்.. ஆனா சுரேக்கா.. அக்கா வீட்டிலும் சரி அண்ணியிடமும் சரி... கறண்ட் அடுப்புத்தானே.. அதில் இந்த மண்சட்டி வைக்க முடியாது:(.

      //எறிய மனமில்ல அதுக்குள்ள பம்பூ வளக்கிறன் /// என்னாதூஊஊஊஊஉ பாம்பாஆஆஆஆஆஆஆஆஆஆ???? இல்ல மூங்கிலோ?:) தமிழ்ல சொல்லியிருக்கலாமெல்லோ... நேக்கு லெக்ஸு ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல... வைரவா என்னைக் காப்பாத்த்த்த்த்த்த்:))

      Delete
    2. ///சூட்டடுப்பும் இருக்கு அதிரா இங்க{கிளப்பி விடுவம்}நான் வாற வருசம் வாங்குவன் .///
      ஹா ஹா ஹா அதில் பெரிய ஆர்வம் இல்லை எனக்கு, அது புகை வரும்.. பாத்திரம் கறுக்கும்... நோ வாணாம்:)).

      //.{அக்காட்ட பெரிய உரல் உலக்கை இருக்கு லா சப்பேல் ல 200 ஈரோ}///
      ஓ.. என்னிடம் குட்டி மர உரல் இருக்கு, ஒரு சீசனுக்கு இங்கு யூரோப் கடைகள் போடுவார்கள்.. அதில் ஒரு ஜேர்மன் கடையில் வாங்கினேன்... இடிச்ச சம்பல் செய்வேன்ன்.. சூப்பரோ யூப்பர்ர்ர்ர்ர்:).

      ///குட்டி குட்டி மண்பானை எல்லாம் வீட்ட கொண்டு வந்து வச்சிருக்கன்.
      என்னத்துக்கெண்டே தெரியா மண்சுட்டியா வாங்கி வந்து அடுக்கி வச்சிருக்கன்.///
      குட்டிப் பானையா கேட்கவே ஆசையா இருக்கு.. எனக்கும் வேணும், அக்கா வீட்டில் குட்டிச் செம்பு சில்வர்ல இருந்து எடுத்து வந்தேன்ன்.. உந்தச் சுட்டிகள் எனக்கும் அண்ணன் தங்களிடம் இருக்கு நிறைய என தந்தார்.. நானும் எதுக்கென்றே தெரியமல் சேர்த்து வச்சிருக்கிறேன்.

      ஆனா இங்கு எங்கட தமிழ்க் கடையில் சுட்டிகள் இருக்கு.

      ///இன்னொரு சட்டி வாங்கி நீங்க சொன்னமாதிரி செய்ய போறன்.///
      ஹா ஹா ஹா என் நாரதர் கலகம் ... நல்லபடி ஆரம்பிக்குது...:)... நான் இன்னும் அசைவத்துக்கென வாங்கவில்லை, இது நன்றாக இருந்தால் அடுத்து வாங்கலாம் என சைவத்துக்கு மட்டும் ட்ரயல் பார்க்க வாங்கினேன்...

      Delete
  16. இந்த மண் கூசாவும் இருக்கு அதிரா [சங்கர் அண்ட் கோ ல அடுத்த முறை வாங்கி கொண்டு போங்கோ] .ஊர் ல பாவிக்கிற விளக்கு எல்லாம் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஓ யூஊஊஊஊ மீன்ன்ன்ன்ன்ன்ன்ன் மண் கூசாஆஆஆஆஆஆ? வாவ்வ்வ்வ் ஆனா அது காண்ட் லக்கேஜிலும் கொண்டு வரமுடியாதே...

      எனக்கு சங்கர் அண்ட் கோ பிடிக்கவில்லை[பொருள் மாற்றத்தில் ஒரு குட்டிப் பிரச்சனை].. அதிலிருந்து அக்கடைக்குப் போவதில்லை ஆனா அங்கு நல்ல நல்ல சாமான்கள் இருக்கு, இனி போனால் போய்ப் பார்க்கிறேன்.

      Delete
    2. மிக்க நன்றி சுரேக்கா... மேலே சொல்ல மறந்துட்டேன்ன்ன்:)..

      Delete
  17. பானை வந்தாச்சா நல்லதாப்போச்சு அடுத்த கோடையில் மோர் அதிரா வீட்டில் குடிக்கலாம்[[!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ நேசன் வாங்கோ.. ஹா ஹா ஹா.. நாங்கள் எல்லாம் ஒரு விதமா சிந்திக்கிறோம்.. நேசனின் யோசனை மோரில இருக்குதே:).. பானை இல்ல நேசன் சட்டிதான் இப்போ பொங்கலுக்கு எடுத்திருக்கிறார்கள் கடையில், இனி பானையும் வரலாம்...

      Delete
  18. ஓட்டுப்போடும் வசதி இல்லாத தனிமரம்[[

    ReplyDelete
    Replies
    1. என்னாஆஆஆஆஆது ஒரு ஜனநாயக நாட்டில:) ஒரு ஓட்டுப் போட உரிமை இல்லையா நேசனுக்கு... இதை விடக்கூடாது நேசன்... ஆத்தோரமா.. அந்தப்பக்கமா சென்நதிக்கரையில ஆரம்பியுங்கோ உண்ணாவிரதத்தை... நானும் அஞ்சுவும் ஆத்துக்கு இந்தப் பக்கமா.. தேம்ஸ் கரையில ஆரம்பிக்கிறோம்ம்..

      எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ.. நான் இண்டைக்கு சிக்கின் பிர்ராஆஆஆணியும்.. எண்ணெய்க் கத்தரிக்காயும் செய்யப்போறேன்ன்.. சாப்பிட்டுப் போட்டு.. தெம்ம்ம்ம்ம்பா ஆரம்பிப்போம்ம் உண்ணாவிரதத்தை:)..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி நேசன்.. போனதடவை வோட் பண்ணினனீங்கதானே... மிக்க நன்றி.

      Delete
  19. எங்கட வீட்டில மண்சட்டி பாவித்ததில்லே... மண்பானைல தண்ணீர் மட்டுமே வைச்சு குடிப்பினம்! அதிலும் வெட்டி வேர், விளாமிச்சை வேர் போட்டு ஊஸ் பண்ணுவம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோதரர் ஸ்ரீராம்ம்ம் , கொஞ்சம் இருங்கோ ஓடிப்போய் மதிலுக்கு மேலால அஞ்சுவைக் கூப்பிட்டு ஒரு விசயம் சொல்லிட்டு ஓடிவாறேன்ன்ன்ன்:)
      ------------------ ----------------- -------------------
      அஞ்சூஊஊஊ எங்கட..... ஸ்ரீராம் இப்போ இலங்கைத் தமிழோடு பூஸ் பாஷையும் "ஊஸ்" :) பண்ணத்தொடங்கிட்டார்ர்ர் ஹா ஹா ஹா ....
      ----------------- ------------------- ----------------------

      Delete
    2. வெட்டி வேர் என்றால் நன்னாரி வேரோ? அது இப்பவும் என்னிடம் இருக்கு, ஊரிலிருந்து மாமா அனுப்பிவிட்டவர். விளாமிச்சை ... தெரிகல்ல கேள்விப்பட்டதில்லை.

      Delete
    3. முதலில் ஜெய் அப்புறம் நான் இப்போ ஸ்ரீராம் எல்லாரையும் தெனாலியாக்கிடுச்சே பூனை :)

      Delete
    4. @ஸ்ரீராம்.. மோர் குழம்பு அவியல் இப்போல்லாம் மண்சட்டியில் தான் செய்றேன் ...ரொம்ப டேஸ்டா இருக்கு ஒரு குட்டி சட்டி வாங்கி செய்து பாருங்க

      Delete
    5. @sriram ..அன்ட் தட் வத்தக்குழம்பு வத்தக்குழம்பு ...

      Delete
    6. ///AngelinMonday, February 06, 2017 9:48:00 am
      @ஸ்ரீராம்.. மோர் குழம்பு அவியல் இப்போல்லாம் மண்சட்டியில் தான் செய்றேன் ...ரொம்ப டேஸ்டா இருக்கு ஒரு குட்டி சட்டி வாங்கி செய்து பாருங்க///

      ஏதோ அவர்தான் வீட்டில் சமைக்கிறார் என்பதுபோலவே சொல்றீங்களே:)

      Delete
  20. மண்பாண்டச் சமையல் செய்ததில்லையே தவிர கற்சட்டிச் சமையல் செய்ததுண்டு. அவற்றையும் இப்படித்தான் "பழக்க" வேண்டும். சமயங்களில் வீட்டுப் பெரியவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு இக் கற்சட்டிப் பாத்திரங்களைப் பழக்கிக் கொடுப்பார்கள். அவற்றில் சமைப்பது சுவையோ சுவை.

    ReplyDelete
    Replies
    1. ஓம் நொன் ஸ்ரிக் வரமுன்பு எல்லா வீட்டிலும் கல்வெள்ளிதான்.. ஆரம்பம் கஸ்டம் பின்பு பழகிவிடும். இப்போ எதுவுமே இல்லை.. கலர் கலரா நொன் ஸ்ரிக்தான்.

      மிக்க நன்றிகள்.

      Delete
  21. //உடைந்த சட்டியின் ஒரு துண்டை எடுத்து மெதுவாக கடித்தோ நக்கியோ// ;) எனக்குத் தெரியுமே! :-) மண் சட்டித் துண்டுகள் ஈரம் பட்டால் பக்கெண்டு ஒட்டிக் கொள்ளும். கீழ்ச்சொண்டில ஒட்டி விளையாடுறனாங்கள்.

    கூசா - நீங்கள் சிங்களச் சொல் எனவும் சந்தேகம் வந்து தேடினன். சிங்களத்திலயே தட்டித் தேடியும் கிடைக்கேல்லயே! பொறுங்கோ, என் சிங்கள ஃப்ரெண்டைப் பிடிச்சுக் கேட்டுட்டு வந்து சொல்லுறன். ஆனால் நான் தேடினதில அது உருதுச் சொல் எண்டு தெரிய வந்துது. உண்மை பொய் தெரியேல்ல. ஜா வட எழுத்து. அதால தமிழில சா போட்டுச் சொல்லுறமோ!

    இங்கயும் சட்டி, மூடி, அடுப்பு, சூட்டடுப்பு எல்லாம் விக்கினம். கூசாவும் இருக்கு. அதை விட பைப் மாட்டின மாதிரி ஒன்றும் மூடியோட விக்கினம். நானும் ஒரு சட்டி வாங்கினன். ஆனால் அஹு சரியாச் சுடேல்ல போல. சிரட்டை அகப்பை தான் பாவிச்சனான். ஆனாலும் கரையுற மாதிரி இருக்கு. ஸ்ரீராம் சொன்ன மாதிரி பழக்க வேணும். அதுக்கு இங்க உமி கிடைக்காது. கன நேரம் வேற எடுக்குது. இப்ப அது ஸ்டைலா மேசையில பரிமாற எண்டு வைச்சாச்சுது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ றீச்சர் வாங்கோ... ஹா ஹா ஹா நாங்க அதிகமா உடைந்த கூரை ஓடுகளைத்தான் சொண்டில் ஒட்டுவோம்.. ஏனெனில் அதில்தான் பசை அதிகம், நன்கு ஒட்டிவிட்டால் பின்பு வலிக்கும் பிரித்து எடுக்க:)..

      ஓ அப்போ கூசா சிங்களச் சொல் இல்லையோ? எனக்கு தெரியல்ல ... தமிழ்ச் சொல் இல்லையென்பதால் சிங்களம் என நினைச்சிருந்தேன்.

      ஓ அப்போ உங்களுக்கும் எலக்றிக் குக்கர்தானோ? அதனால்தான் சுரேக்காபோல சூட்டடுப்பு:)... நல்லவேளை எங்களுக்கெல்லாம் ஹாஸ் அடுப்பு.

      மிக்க நன்றி இமா.

      Delete
  22. enakku man sattiyil min kuzampu seythu saappitanumnu ninda naal aasai athil samaichaa suvaiyaa irukumaame kelvi paddathil irunthu ore aasai. vittil kettu vitttachu. ippo unga pathivai padichu antha aasai thulir viddirukkuthe akka:)


    munpellam manpaanai thuya manalil seyvaarkal ippothuthaan cement odu seyvathaal ningal solluvathu pola chillness kidaippathillai.
    pathivu man satti pola manam vissuthu:)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மகேஷ்.. அப்போ உங்க உள்ளுணர்வு சொல்லியிருக்குது.. நான் போஸ்ட்டாப் போட்டிட்டேன்ன்ன்..

      அம்மாவுக்கு ஆக்கினை கொடுத்து மண்சட்டியில் சமைக்கச் சொல்லுங்கோ.. இல்லையெனில் வேர்க்க்குப் போகமாட்டேன் என அடம் பிடிங்கோ:) எப்பூடி என் ஐடியா?:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி மகேஷ்.

      Delete
  23. நமக்கும் கரண்ட் அடுப்புத்தான் அதிரா .நாங்கள் கனேடியன் டயர் ல ஒரு ஒற்றை கரண்ட் அடுப்பு சட்டி வைக்கிற மாதிரி { coil hot plate single} வாங்கினாங்கள் .அப்பம் செய்யுற சட்டியும் அதுல வைக்கலாம் எண்டுட்டு. ரெம்ப சீப் நிறைய நாள் பாவிக்காது எண்டு நினைச்சனான் ஆனா இப்பவும் 3 மாசத்துக்கு ஒருக்கா அதுலதான் தாச்சி சட்டி வைச்சு பிள்ளைகளுக்கு சத்துமா செய்யுற தானியங்கள் வறுக்கிறனான்.ஓம் சங்கரன் கோ இங்க யாருக்குமே பிடிக்காது .விலை போட்டு வைக்கமாட்டினம் ஆக்களை எடைபோட்டுட்டு விலை சொல்லுறது.நீங்கள் சொல்லுறது பெரிய சுப்ப மாக்கட்டுகள் சின்ன சின்ன கடை கிட்டத்தட்ட எல்லாத்திலயும் இருக்கு.இம்ஸ் ஐ கேட்டு பாருங்கோ.இங்க கடையில வாழை இலை ஸ்டைல் சாப்பாட்டு ப்ளேட் இருக்கெண்டு இம்ஸ் சொல்லித்தான் எனக்கு தெரியும்.கண்ணுக்குள்ள ஸ்கான் பண்ணி வைச்சிருக்கா கடையில உள்ளதுகளை.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சுரேக்கா, மண்சட்டியை நீங்களும் விடுவதாய் இல்லை... எனக்கும் இப்போ அனைத்தையும் அதிலயே சமைக்கோணும் என ஆசையா இருக்கு, ஆனா மர அகப்பைதான் பாவிக்கிறேன், சில்வர் கறண்டி பாவித்தால் கறகற என சத்தம் வருது.. அது பல்லுக் கூசுது:))..

      ஓ இம்ஸ்சு.... கன..ஸ்க்கு கம்ஸ் ஆ??? ஹா ஹா ஹா.. றீச்சருக்கு கண் எல்லாப் பக்கமும் இருக்குது தெரியுமோ?:)).. நன்றி சுரேக்கா.

      Delete
  24. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தைப் படித்து ரசித்தேன் (தமிழ்மனத்துள் நுழைய முடியாததால் பின்கு'றிப்புப் படி சாரி ஊசி .... டி செய்யமுடியவில்லை)

    ReplyDelete
  25. அதிரா சகோதரி எங்கள் வீட்டில் மண் சட்டி, விறகு அடுப்பு, எல்லான் பயன்படுத்துவதுண்டு. கேரளம் இல்லையா கிட்டத்தட்ட பல உணவுகள் இலங்கை போலத்தான் இருக்கும்...

    கீதா: எங்கட வீட்டில் மண்சட்டி, கல்சட்டி, வெங்கலப் பானை எல்லாம் பாவிப்பதுண்டு. அதிலெதான் எல்லாம் சமைக்கிறதுண்டு. சட்டி எல்லாம் ஊஸ் பண்ணி ஊஸ் பண்ணி...சமைக்கிறம்...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.