நல்வரவு_()_


Sunday 2 April 2017

னிர்தாங்முக்கிம்:)

மனிசர் தாங்க முக்கியம், அதுக்குப் பின்னர்தான் அனைத்தும். சில நேரங்களில் மனிதர்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை விட ஏனையவற்றுக்கு முக்கியம் கொடுத்து விடுகிறோம்.
ங்கே, அன்பு, பாசம் + மரியாதை குறைகிறதோ, அங்கே நமக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதென்றே அர்த்தம், அப்படியான இடங்களில், புரிந்து கொண்டு அமைதியாக வெளியேறி விடுவதே நமக்கு அழகு.

“மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று, மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது”

அன்பு எங்கே அதிகமாக இருக்கிறதோ, அங்கே குறைகள் ஏதும் கண்ணுக்குத் தெரியாது. அன்பு குறைகின்றபோது, குட்டிக் குட்டிக் குறைகள் எல்லாம் பெரிசாகத் தெரியும். எது எப்படி இருப்பினும் எப்பவும் ஒன்றை நாம் மறந்திடக்கூடாது.. மனிசங்கதாங்க முக்கியம்:).

அடிக்கடி குறைகளைக் கூறிக்கொண்டும், ஆனா எனக்கு  உன்மேல் அவ்ளோ பாசம்/நட்பு இருக்குது தெரியுமோ.. எனவும் சிலர் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.. இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... தானாடாவிட்டாலும் தசை ஆடுவதுதான் அன்பு.

ரு குட்டிக் கதை... தன் மனைவிக்கு பிறந்தநாள் வந்ததாம், அப்போ அதிர்ச்சியாக, மனைவிக்கு ஒரு அழகான காரை, மனைவி அடிக்கடி பேசும், விருப்பப்படும் கலரில், வாங்கிக் கொடுத்தாராம் கணவன். மனைவிக்கோ அளவில்லா மகிழ்ச்சி, என் மனதில் இருந்ததை அறிந்து, எப்படி இப்படி என் ஆசையை நிறைவேத்தினார் கணவர் என.

கணவர் மனைவியிடம்,  கார்த் திறப்பைக் கையிலே கொடுத்து, கூடவே ஒரு என்வலப்பையும் கொடுத்து, இதிலே காரின் பத்திரங்கள் அனைத்தும் இருக்கு, ஏதாவது ஆபத்து நேர்ந்தால், அல்லது பொலீஸ் மறிச்சால் தேவைப்படும், இதனை உன் காண்ட் பாக்கிலே பத்திரமா வச்சுக்கொள் எனக் கொடுத்தார்.

மனைவியும் கடவுளை வேண்டியபடி, காரை எடுத்து ஓடிக்கொண்டு போனா, போன வழியிலே , ஒரு போலீசைப் பார்த்துப் பயந்ததில், ஒரு மரத்தில் மோதிவிட்டா, முன்பக்கம் இடிபட்டு விட்டது. பொலீஸ் ஓடிவந்து லைசென்ஸ் ஐக் காட்டு என்றதும்... இவவுக்கு மனதில் எழுந்த நினைவு.. கடவுளே புதுக்காராச்சே, கணவர் ஆசையா வாங்கிக் கொடுத்தாரே, திட்டுவாரோ என எண்ணி நடுங்கிய படியே..

காண்ட் பாக்கைத் திறந்து அந்த என்வலப்பை எடுத்து பிரித்தா லைசென்ஸ் ஐ எடுக்க, அப்போ அதனோடு ஒரு கடிதம் இருந்தது கணவனின் கை எழுத்தில்.. அதில் எழுதியிருந்தது...

“ஒருவேளை நீ ட்றைவ் பண்ணும்போது ஆக்சிடண்ட் ஏதும் ஏற்பட்டு , காருக்கு ஏதும் சேதம் ஏற்பட்டாலும்கூட, பயந்துவிடாது, ஏனெனில் “எனக்கு முக்கியம் நீதானே அன்றிக் கார் அல்ல”... என. இதைப் படித்த மனைவியின் கண்ணால் அருவி கொட்டியது:)..

இதுதானே அன்பு, இதுதானே காதல்.. இந்த அன்பு பாசம் இருப்பின் குறை என்பது கண்களுக்குத் தெரியாது.

சமீபத்திலே நடந்த ஒரு சம்பவம்... எங்கள் குடும்பத்தில் நான் தான் அதிகமாக எல்லோரோடும் தேடித் தேடிப் பேசுவேன், உறவுகளை படுபயங்கரமாக ஒன்று சேர்த்து, கதைத்துப் பேசி வைத்திருப்பதில் எனக்கு ஒரு மிகுந்த அக்கறையே உண்டு. அக்கறை என்பதை விட, என் பழக்கம் அப்படி எப்பவும் எல்லோரையும் ஒன்றிணைத்து, ஒட்டாக வைத்திருப்பதில் விருப்பம்.

ஆனா வேலைக்குப் போகும் காலங்களில், கோல் பண்ணுவது, தேடுவது  குறைவாகவே இருக்கும். அப்போ சமீபத்தில் அக்கா கோல் பண்ணினா,  “என்ன, நீ இப்போ தேடுவது குறைந்துவிட்டது.. என்ன நடக்கிறது” என்றா,

 “நான் இப்போ ரயேட் ஆகிடுறேன், அதனால கோல் பண்ணுவது குறைவு” என்றேன்... உடனே சொன்னா பாருங்கோ:)

 “அதிரா, வேலைக்குப் போவதால், கோல் பண்ணி எல்லோரையும் சுகம் விசாரிக்க முடியவில்லை எனில்.. வேலையை விட்டிடு:) ஏனெனில் மனிசர்தான் முக்கியம்:)” என்றிட்டா கர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா.

இதேபோல இன்னொரு சம்பவம், கனடாவில் ஒரு வெடிங். அதுக்கு நாம் இங்கிருந்து போக முன்பே, எனக்குப் பிடித்த பிங் கலரில் அதிக விலையில், தான் வாங்குவதோடு சேர்த்து, எனக்கும் சாறி வாங்கி, அதுக்கு மச்சிங்காக பிளவுஸ் தைத்து, என்ன தேவையோ எல்லாம் செட்டாக எடுத்து வச்சிட்டா என் மச்சாள்(கணவரின் சகோதரி).

அதை விட நிறைய செலவுகள் செய்திட்டா நம் எல்லோருக்கும், [கணவர் கொடுக்கத் தேவையில்லை, விடுங்கோ  எனத்தான் சொன்னார்], ஆனா எனக்கு மனம் கேட்கவில்லை, நிறைய செலவழிச்சிட்டாவே நமக்காக, பேசாமல் இருக்கக்கூடாது என, சாறியின் காசைத் தரப்போறேன் என்றேன், இல்லை வேண்டாம் என்றிட்டா. கையில் கொடுத்தால் வாங்க மாட்டா என நான் ஒரு பிளான் போட்டேன்.... இதை மனதில வச்சபடி இன்னொரு கதை கேழுங்கோ..

அவவிடம் சிங்கப்பூரில் வாங்கிய நெக்லெஸ் ஒன்றிருக்கு, அது ஒரு வித்தியாசமான டிசைன்.. அதில எனக்கு விருப்பம்:). ச்சும்மா சொல்லுவேன் (நம்புங்கோ ச்சும்மாதான்) இதை நான் கொண்டு போகப்போகிறேன் என:).  அப்போ எல்லோரும் வெடிங் போய் வந்து, நகைகளைக் கழட்டி, அறை மேசையிலும் லாச்சியிலும் வைப்பது வழக்கம்.

அவ தன் நெக்லெஸ் உட்பட அனைத்து நகைகளையும் சும்மா லாச்சியில் போட்டிருந்தா, பின்பு லொக்கரில் வைப்பா.

அப்போ நாங்கள் திரும்பி இங்கு வர ஆயத்தமாகி எயாபோட்டுக்கு வெளிக்கிட்டு, வீட்டிலிருந்து இறங்கும் நேரம், நான் ஓடிப்போய் அந்த சாறிக்கான பணத்தை, அவவின் லாச்சியில் இருந்த நெக்லெஸ் இனை தூக்கிப்போட்டு அதன் கீழ் வைத்துப்போட்டு, எயார்போர்ட்டுக்கு எல்லோரும் வந்தாச்சு:).

எயார்போட்டில் நாம் எல்லோரும்... அக்கா, அண்ணி, மச்சாள்.. இப்படி சுற்றிச் சுற்றி நிண்டு பேசிக்கொண்டிருந்தோம், அப்போ நான் சொன்னேன்.. அவவை.. XXX அக்கா எனத்தான் கூப்பிடுவேன்.   “............... அக்கா, வீட்டுக்குப் போனதும் உங்கள் லாச்சியைத் திறந்து, நெக்லெஸ் இருக்கோ எனச் செக் பண்ணுங்கோ”என:),

அதுக்கு உடனே அவ பயந்திட்டா ஹா ஹா ஹா ... ...ஙேஙேஙேஙேஙே என்றா:). இதைப் பார்த்த என் அக்காவுக்கு அடியும் தெரியாது நுனியும் தெரியாது:) ஆனா என்னமோ நடக்குது என மட்டும் புரிந்து... உடனே சொன்னா..
“இஞ்ச பாருங்கோ XXX அக்கா, எதுக்கு ஏங்குறீங்க, மனிசர்தான் முக்கியமே தவிர நகை அல்ல” என:) என் அக்காவும் அவவை.. XXX acca  என்றுதான் கூப்பிடுவா.. உடனே அவ உட்பட எல்லோரும் கொல்ல்ல்ல்ல் எனச் சிரிச்சு ஒரே சிரிப்பலையாகிட்டுது:).[சிரிப்பதை அப்பூடித்தான் சொல்லோணுமாம்:)].

அதனால நான் சொல்ல வருவது என்னவெனில்... மனிசர்தாங்க முக்கியம், மனிசருக்கு மரியாதையும் அன்பையும் எப்பவும் கொடுக்கோணும்.. இரண்டையும் கொடுத்தால்தான் திரும்ப பெற முடியும்... கொடுக்காட்டில் கிடைக்காது, கிடைக்கும் ஆனா நிலைக்காது:)


ஊசிக்குறிப்பு:

106 comments :

  1. என் தளத்தில் புதிய பதிவு ஒரு தொலைக்காட்சி சானலில் பார்த்தேன் ஒருவர் வளர்த்த அவருடைய செல்ல நாய்களே அவரைக் கடித்துக் குதறி தின்பதை . கொடூரம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா வாங்கோ... ஓ நான் கவனிக்கவில்லை... இதோ வருகிறேன், மிக்க நன்றி.

      Delete
  2. இதோ வந்திட்டேன் :) ஊசி குறிப்பு அட்டகாசம் ..மற்ற பின்னூட்டங்களுக்கு கொஞ்சம் கழிச்சி வரேன் :)
    as usual reverse order :))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... நோஓஓஒ கர்ர்ர்ர்ர் இம்முறை றிவேர்ஸ்ல வந்தால், குட்டிக்கதை படிக்கும்போது சுவாரஷ்யம் இருக்காது சொல்லிட்டேன்ன்:)

      Delete
    2. அது பழக்க தோஷம் மாறாது மியாவ்

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களை அப்டேட் பண்ணப் பழகோணும் சொல்லிட்டேன்ன்:) இப்பூடியேதான் இருப்பேன்:) மாறமாட்டேன் எண்டெல்லாம் சொன்னால்.. பிடிச்சு இழுத்துத் தள்ளியாவது முருங்கி:) மரத்தில ஏத்திப்போடுவன் ஜாக்ர்ர்ர்ர்தை:)..

      ***இப்போ யாரும் தேம்ஸ்க்குப் பயப்படுவதில்லை அதனால்தான் முருங்கி:).

      Delete
  3. தத்துவ மேதை அதிராவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ ட்றுத் வாங்கோ.. அது தானா வருது:) மற்றும்படி மேதை கோதை எல்லாம் இல்லை:).

      Delete
    2. மேதையாக இருந்தாலும் என்ன தன்னடக்கம் உங்களுக்கு

      Delete
    3. @ஏஞ்சல் மேலே உள்ளே கருத்தை பார்த்து சிரித்து உங்களுக்கு வயிற்று வலி வந்தால் நான் பொறுப்பு அல்ல

      Delete
    4. ///Avargal UnmaigalMonday, April 03, 2017 4:21:00 pm
      மேதையாக இருந்தாலும் என்ன தன்னடக்கம் உங்களுக்கு///

      ஹா ஹா ஹா வழி விடுங்கோ வழிவிடுங்கோ... [im]https://s-media-cache-ak0.pinimg.com/736x/bf/91/6d/bf916d1f2cc4b7ede7c6f8c81f9bba0b.jpg[/im]

      Delete
    5. அதிரா நீங்கள் கோதைதான் அதில் நோ டவுட்!!!

      கீதா

      Delete
    6. ///Avargal UnmaigalMonday, April 03, 2017 4:22:00 pm
      @ஏஞ்சல் மேலே உள்ளே கருத்தை பார்த்து சிரித்து உங்களுக்கு வயிற்று வலி வந்தால் நான் பொறுப்பு அல்ல//

      ஹா ஹா ஹா அஞ்சுவுக்கு வயிற்று வலி வரல்லயாம்ம்ம் புகைப்புகையாம் புகையுதாம்:) மோர் குடிக்கப் போறேன் நைட் வாறேன் என சொல்லிட்டுப் போயிருக்கிறா ஹையோ ஹையோ:)

      Delete
    7. ///Thulasidharan V ThillaiakathuMonday, April 03, 2017 4:38:00 pm
      அதிரா நீங்கள் கோதைதான் அதில் நோ டவுட்!!!

      கீதா///

      அய்யையோ.. கோதை என்றால் யார்.. ராதை கோதையா?:)).. ஹா ஹா ஹா.. நான் மேதையும் இல்லை கோதையும் இல்லை.. நான் அதிரா:).. ஆனா டூப்பும் இல்லையாக்கும்:).. ஹா ஹா ஹா.

      Delete
    8. //மேதையாக இருந்தாலும் என்ன தன்னடக்கம் உங்களுக்கு//

      ஹா ஹா :) இப்பிடி சொல்லி சொல்லி உசுப்பி விட்டே பூனை தென்னை மரத்தில் ஏறிட்டாங்க :) ..இதைப்பார்த்து எனக்கு நிஜம்மா மயக்கம் வந்திச்சி :)
      இந்த பூனை எந்தளவு உங்களை மிரட்டி இருந்தா இப்படி அண்டா ஆகாச புளுகு சொல்லிருப்பிங்க :) ஹா ஆஹா

      Delete
    9. ///இதைப்பார்த்து எனக்கு நிஜம்மா மயக்கம் வந்திச்சி :)
      இந்த பூனை எந்தளவு உங்களை மிரட்டி இருந்தா இப்படி அண்டா ஆகாச புளுகு சொல்லிருப்பிங்க :) ஹா ஆஹா
      ///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் படுபயங்கர அமைதியாகி இருக்கிறேன்ன் என்னைப்போய்.. மிரட்டி அது இது என்று கர்ர்:).

      Delete
  4. நன்றி கெட்ட மனிதர்களைவிட நாய்கள் மேலடா என்ற பாட்டின் வரிகள்தான் இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. அது நிஜம்தான், மனிசர்தான் முக்கியம் என எண்ணத் தவறும்போது.. இப்படித்தான் நினைக்கத் தோணுது..:(.

      Delete
    2. உண்மைதான் ....எனக்கு உடம்பு சரியிலேனா ஜெஸி பக்கத்திலேயே இருப்பா ..unconditional love

      Delete
    3. அதேதான் அஞ்சு, எதுவுமே பழகும் வித்தத்தில்தான் இருக்கு.. அன்பு காட்டும் விதத்தில் அமைஞ்சிருக்கு அனைத்தும்.

      Delete
    4. என் மனைவிக்கும் குழந்தைக்குக் உடல்னிலை சரியில்லை என்றால் நானும் ஜெஸியை போலவே அவர்கள் பக்கத்திலேயே இருப்பேன்..unconditional love

      Delete
    5. ///Avargal UnmaigalMonday, April 03, 2017 4:24:00 pm
      என் மனைவிக்கும் குழந்தைக்குக் உடல்னிலை சரியில்லை என்றால் நானும் ஜெஸியை போலவே அவர்கள் பக்கத்திலேயே இருப்பேன்..unconditional love///

      ஹா ஹா ஹா [im]https://img.memesuper.com/aba169a49855fc9f254e5825dd6d1372_img-funny-memes-laughing_500-395.jpeg[/im]

      Delete
    6. யெஸ் ட்ரூத்..ஓ! உண்மை நு சொல்ல வந்தது அதிரா பக்கம் வந்ததுனால ட்ரூத்னு ஆகிப் போச்சு..ஹ்ஹாஹ்ஹ்...ஆம் மதுரைத் தமிழன்...

      ஏஞ்சல் ஆமாம் நம்ம முகத்த வைச்சே நாலுகால் அதுக்கு ஏத்தா மாதிரி பாக்கும்...அவங்களுக்கு நல்லா புரியும்..

      கீதா

      Delete
    7. ஹா ஹா ஹா 8 எழுத்தைச் சுருக்கி சோட் அண்ட் சுவீட்டா 3 எழுத்தில வச்சிருக்கிறேன் ட்றுத் என:)..

      Delete
    8. ஹாஹா :) truth கர்ர்ர்ர் அப்போ நீங்களும் ஜெசி மாதிரி வாயில்லாத ஜீவன் என்று ஒத்துக்கறோம் போதுமா :)

      Delete
    9. ///AngelinMonday, April 03, 2017 9:10:00 pm
      ஹாஹா :) truth கர்ர்ர்ர் அப்போ நீங்களும் ஜெசி மாதிரி வாயில்லாத ஜீவன் என்று ஒத்துக்கறோம் போதுமா :)//

      என்னாது வாயில்லா ஜீவனாஆஆஆஆஅ??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஃபிரிஜ்ஜில மிச்ச மீன் குழம்பை வச்சதை மறந்திட்டீங்களோ அஞ்சு?:) வாயில்லாட்டில் எப்பூடி?:)..

      Delete
  5. ஹலோ உங்கள் தளத்திற்கு ஆண்களும் வருகிறார்கள் அதனால் பிங்க் கலரை கொஞ்சம் குறைங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஆஹா :) ஹலோ ட்ரூத் உங்களுக்கு விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறேன் ..இந்த மியாவ் அழும்போது கண்ணீர் துடைக்க கூட பிங்க் டிஸ்யூ தான் கேப்பாங்க :)

      Delete
    2. ///Avargal UnmaigalSunday, April 02, 2017 6:44:00 pm
      ஹலோ உங்கள் தளத்திற்கு ஆண்களும் வருகிறார்கள் அதனால் பிங்க் கலரை கொஞ்சம் குறைங்கப்பா///

      ஹா ஹா ஹா ஆண்டவா, பப்ளிக்கில் பழகும்போது, பிரச்சனைகள் எத்தனையோ ரூபத்தில் வரலாம், எதையும் தாங்கும் இதயத்தோடு இருக்கப் பழகோணும் என, எப்பவும் என்னை ரெடியாக்கி வச்சிருப்பேன்ன்:)).. ஆனா நான் இத:) எதிர்பார்க்கல்லயே:)

      Delete
    3. ///AngelinSunday, April 02, 2017 8:13:00 pm
      ஹா ஆஹா :) ஹலோ ட்ரூத் உங்களுக்கு விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறேன் ..இந்த மியாவ் அழும்போது கண்ணீர் துடைக்க கூட பிங்க் டிஸ்யூ தான் கேப்பாங்க :)///

      ஆமா அவருக்கு ஒண்ணும் தெரியாது:) எடுத்து எடுத்துக் குடுங்கோ:) அப்பூடியே அந்த வள்ளிக்குப் போட வேண்டிய வைர நெக்லெஸ் பத்தியும் சொல்லுங்கோ.. அமேஏஏஏஏஎரிக்காவில ஒரு உண்டியல் வச்சாவது கொஞ்சம் சேர்த்துத் தரமாட்டாரா என் நேர்த்திக்கடனை முடிக்க:)

      Delete
    4. எல்லோருக்கும் ரத்தம் சிவப்பு என்றால் அதிராவிற்கு மட்டும் பிங்காக இருக்கும் என நினைக்கிறேன் அதனால அவங்களால் எப்பவுமே இரத்தக் கண்ணிர் வடிக்க முடியாது ஹீஹீ

      Delete
    5. பச்சை பச்சையா அழத் தெரியுமே ஹா ஹா ஹா:)

      Delete
  6. / என் அக்காவுக்கு அடியும் தெரியாது நுனியும் தெரியாது// ஹா ஆஹா :) உங்க அக்கா அந்த பதிவர் மாதிரின்னு நினைக்கிற்றேன் :) ஒன்னும் புரியாம தலையை ஆட்டுறதில் க்ரேட் அந்த பிரித்தானிய பதிவர்

    ReplyDelete
    Replies
    1. ஓ அந்த பிரபல சமையல் செவ்... பத்துவருச மோர்மிளகாய் பிரபல்யம் பற்றியா சொல்றீங்க:).. ஹா ஹா ஹா இருக்கலாம்,

      ஆனா ஒண்ணும் தெரியாட்டிலும் பதில் மட்டும் எல்லாம் தெரிஞ்சமாதிரிக் குடுத்திட்டா பாருங்கோ:)

      Delete
  7. ஹ்ம்ம் ஊசிகுறிப்பு செம ..வியாபாரத்துக்குத்தான் மியாவ் இங்கே மிகவும் அதிக மவுசு ..என்னபண்றது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு.. எந்த லாபமும் எதிர்பார்க்காமல் பழகுவோர் மிகக் குறைவானவர்களே..

      Delete
  8. //மனிசர்தான் முக்கியமே தவிர நகை அல்ல” //
    அப்படியா ஓகே அந்த பச்சைக்கல் நெக்லஸை எனக்கு உடனே அனுப்பி வைக்கவும் உங்களுக்கு நான் தானே முக்கியம் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தேம் மேல சத்தியமா, எங்கட சகோ ஸ்ரீராமின் காஞ்ச மண்ணில நிற்கும் அந்த “முருங்கிமரம்” மேல் சத்தியமா... இந்த வசனம் எழுதும்போது.. ஃபிஸ் ஐ நினைச்சேன்:).. கேட்டிட்டீங்க:)

      Delete
  9. ஹாஆ ஹாங் //இதை மனதில வச்சபடி இன்னொரு கதை கேழுங்கோ..///என்னாதிது ளு ளு ளு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வேதாளம் முருங்கில ஏறின கதையாப்போச்சே என் கதை:).. இப்போ கொஞ்ச நாளாக யாருமே எந்த எழுத்துப் பிழையும் பிடிக்கல்லியே என ரொம்பப்ப்ப்ப் பெருமையா இருந்தேன்ன்:).. அது நேற்று முருங்கி:) ல ஏறினனா... எல்லாம் மாறிப்போச்ச்ச்ச்:).

      Delete
  10. அந்த பிள்ளை இன்னொருத்தர் டயரியை படிக்காதாமே :) டெய்சி கியூட்டி :)

    ReplyDelete
    Replies
    1. அது “மம்மியின்” வளர்ப்பு அப்பூடி:) ஹா ஹா ஹா எங்கள் பிள்ளைகளும் இப்படித்தான்.. கடிதம் டயரி.. எதுவும் தொடமாட்டினம், பாஸ்வேர்ட், பாங் கார்டில் பின் நம்பர் அடிக்கும்போது வேறு எங்காவது அல்லது கீழே பார்ப்பினம் ஹா ஹா ஹா...

      ஏதும் பஞ்சவர்ண என்வலப்பில் லெட்டர் வந்திருந்தால்.. ஓடிவந்து கேட்பினம் உடைக்கலாமா என, ஓம் சொன்னால் மட்டும் ஒபின் பண்ணுவார்கள். நாம் எப்பவுமே எதுக்குமே வெருட்டுவதில்லை, ஆனா சொல்லிக் கொடுப்போம் அடிக்கடி, ஏனெனில் இன்னொருவரோடு போகும்போது தவறு நடந்திடக்கூடாதே என்பதற்காக.

      Delete
  11. அதிரா அந்த உதவி பற்றி சொன்னது அப்படியே ப்ரேம் போட்டு வைக்கணும் :) அவ்ளோ அழகான கையெழுத்து .மிகவும் உண்மையான தத்துவமும் கூட

    ReplyDelete
    Replies
    1. அது எங்கட கண்ணதாசன் அங்கிளின் தத்துவ வசனம் அஞ்சு, அவரது கதைப்புத்தகம் படிக்கும்போது கண்ணில் பட்டுதா.. எழுதி வச்சேன். அது உண்மையேதான்..

      Delete
  12. கார் பற்றிய குட்டி கதை சூப்பர் :)
    பெரும்பாலான பெண்களுக்கு இங்குள்ள கணவன்மார் புதுப்புது கார்களை வாங்கி கொடுத்திருக்காங்க அவங்களும் ஏறாத இடமில்லை தேய்க்காத சுவர் மரமில்லை புது காரில் அவ்ளோ ஸ்க்ராட்ச் இருக்கும் :) எல்லார் கார் டேஷ்போர்டிலும் இப்படி லெட்டர் இருக்குமான்னு செக் பண்ணனும் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. நம்மவர்கள் தப்பு பண்ணுவது பார்க்கிங்கில்:).. என் காரைக்கூட நான் ஒரு ஃபிரெண்ட்டாக/பிள்ளையாகத்தான் பார்ப்பேன் அஞ்சு.. அதனாலயோ என்னமோ எப்பவும் பத்திரமாக/அழகாக சோடிச்சு:) வைத்திருப்பேன்.

      அதை ஒரு ஜடப்பொருளாகப் பார்க்கும்போது கண்டபடி ஓட்டி விடுகின்றனர்.

      ///எல்லார் கார் டேஷ்போர்டிலும் இப்படி லெட்டர் இருக்குமான்னு செக் பண்ணனும் :)///
      ஹா ஹா ஹா இது சூப்பர்:)

      Delete
    2. ஹஹாஹ்ஹ் ...லெட்டர் இருக்கும் றீங்க...நெவர்!!

      கீதா

      Delete
    3. ///Thulasidharan V ThillaiakathuMonday, April 03, 2017 3:48:00 pm
      ஹஹாஹ்ஹ் ...லெட்டர் இருக்கும் றீங்க...நெவர்!!

      கீதா///
      ஹா ஹா ஹா அப்போ இருக்காதோ கீதா?:) நில்லுங்கோ எதுக்கும் கான்பாக்கைச் செக் பண்ணிடுவோம்:)..

      Delete
  13. ஆமாம் அதிரா மனிதர்கள் முக்கியம்தான் எல்லாருமே நல்ல மனசோட இருந்தா நல்லாருக்கும் //எங்கே, அன்பு, பாசம் + மரியாதை குறைகிறதோ, அங்கே நமக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதென்றே அர்த்தம், அப்படியான இடங்களில், புரிந்து கொண்டு அமைதியாக வெளியேறி விடுவதே நமக்கு அழகு.// இப்போ புரிஞ்சிருக்குமே அது உங்களுக்கு நான் அடிச்சி கேட்டாலும் அது என்னானு சொல்லவே மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் விடுப்ஸ் எல்லாம் கேட்க மாட்டேன்ன்ன்.. “இதுவும் கடந்து போகும்”...

      “நாளைக்கும் பூ மலரும்..
      நாளைக்கும் காற்று வீசும்..
      நாளைக்கும் சூரியன் உதிக்கும்...
      ஆனா நாம் இருக்க மாட்டோம்ம்..”..

      இந்த தத்துவம் உணர்ந்தாலே... குறை தெரியாது..

      Delete
    2. ஆம் ஏஞ்சல் அண்ட் அதிரா ஆனா எல்லோருமே நல்ல மனசோட இருந்தா இந்த உலகமே இயங்காது மட்டுமில்ல ஸ்வாரஸ்யமா இருக்காதோ....அதுதான் இயற்கை/இறைவனின் படைப்பு, ரகசியம் அதிசயம்....விந்தை!!! ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்...நோ சிமிலர் பாருங்க அப்ப எவ்வளவு பெர்ம்யுட்டேஷன் காம்பினேஷன்ஸ்!! இல்ல?

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா அப்போ நான் இப்பூடி வெரி பாட் ஆ இருப்பதும் ஒரு விதத்தில் நல்லதென்கிறீங்க?:) உண்மைதானே ஒரு வகுப்பில் எல்லாப் பிள்ளைகளும் ரொம்ப சூப்பராக, அமைதியா இருந்தால் நித்திரைதான் வரும்:)..

      Delete
  14. ஆமாம் உங்க ஹாண்ட் பாக்ல டேப் மெசரும் இருக்குமா :) இல்ல பள்ளத்தில் விழுந்தா ஆழத்தின் அளவை அளக்க வச்சிருப்பீங்களான்னு நினைச்சேன்

    ReplyDelete
  15. ’குட்டிக்கதை’ மூலம் மனிசர்தாங்க முக்கியம் என்பதை சூப்பராகச் சொல்லிப் புரிய வெச்சுட்டீங்கோ. தலையோடு கால் பதிவு சூப்பர். ஏனோ வோட் போட இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன்.. அது என்னமோ ஆச்சு.. வோட் போடும் பொக்ஸ் கூடத் தெரியுதில்லை.. இம்முறை. ஆனா தமிழ்மணத்தில் இணைச்சேன் போஸ்ட்டை.

      மிக்க நன்றி.

      Delete
  16. இப்ப நட்பெல்லாம் பிளாக்/முகநூல் மட்டும் என்றாச்சு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. எல்லோர் நிலைமையும் கிட்டத்தட்ட அப்படித்தான் ஆச்சு.. ஏன் நேரில் சந்திக்கும் நட்புக்களை விட்டுவிட்டீங்களோ?..

      Delete
  17. மனிதர் முக்கியம் யாரையும் கட்டாயம் செய்யாத வரை!

    ReplyDelete
  18. ஊசிக்குறிப்பு அருமை!

    ReplyDelete
  19. உங்க கையெழுத்து அழகு அருமை !இது நிஜம்தானா அதிராவின் கையொப்பம் ஈ ஈ இதைவைத்து இன்னொரு குதிரை ஓட முடியாது பரீட்சையில்[[

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இன்னும் பரீட்சையில் குதிரை ஓடும் நினைப்பிலேயே இருக்கிறீங்களோ? அனைத்துக்கும் மிக்க நன்றி நேசன்.

      Delete
  20. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததுதான் அன்பு என்பார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்குமோ? எனக்கு இந்த அன்பு எனும் வார்த்தை மேல நிறைய சந்தேகங்கள் உண்டு! டிபெண்டன்ஸிக்கு பெயர் அன்பு என்கிறார்களோ!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ... உண்மைதான், வரவர அன்புக்கு வரையறை சொல்லமுடியாமல் வருது... இப்போதெல்லாம்.. பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு போய்க்கொண்டிருக்கு அன்பு..:)

      Delete
  21. டைரிக்குறிப்பு : கண்ணீரைத் துடைக்க அடுத்தவர் கைகளை எதிர்பார்க்கவேண்டுமா என்ன!!! தன் கையே தனக்குதவி!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கரீட்டு, ஆனா இதில் சொல்லியிருப்பது, நண்பனைக் கண்டறிவது எப்படி என்பதற்காக:)... உடுக்கை இழந்தவர் கைபோல... :) அப்படி ஒன்றாக இருக்குமென நம்புறேன் இதை:)..

      Delete
  22. டைரிப் பக்கங்களில் பின்பக்கத்தில் இருக்கும் எழுத்துகளின் அச்சு தெரிகிறதே.. அவ்வளவு அழுத்தியா எழுதுகிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் உற்றுக் கவனிச்சிருக்கிறீங்க, சில சமயம் அழகாக்கி எழுதும்போதும், சில பென்களால் எழுதும்போதும் அப்படி ஆகிடுது, நோர்மலா நான் அப்படி எழுதுவதில்லை.

      Delete
  23. /சமீபத்திலே நடந்த ஒரு சம்பவம்... எங்கள் குடும்பத்தில் நான் தான் அதிகமாக எல்லோரோடும் தேடித் தேடிப் பேசுவேன்//

    எங்கள் வீட்டில் என் பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்போ உங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை எனச் சொல்லுங்கோ:).. யாராவது .. தேடவில்லை சுகம் விசாரிக்கவில்லை எனக் குற்றம் சொன்னால்கூட... உடனேயே அவதான் இதுக்கெல்லாம் பொறுப்பு, நான் இல்லை என நழுவிடலாம் இல்லயா?:)

      Delete
    2. நான் அதை எல்லாம் செய்வதில்லை ; எதிர்பார்ப்பதுமில்லை!!!

      Delete
    3. ஆஹா எதிர்பார்க்காமல் இருப்பது நல்லதே.. எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்.. நலம் விசாரிப்பது நல்லதுதானே... ஆனா ஒதுங்கி இருப்பதும் ஒரு விதத்தில் உபத்திரவம் இல்லைத்தான்...:),

      Delete
  24. /ரயேட் என்றால் களைப்புதானே!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆவ்வ்வ் மறுபடியுமா?? ஆரம்பத்திலிருந்தா.. ஹா ஹா ஹா யேஸ்ஸ் tired.

      [im]https://s-media-cache-ak0.pinimg.com/736x/bf/91/6d/bf916d1f2cc4b7ede7c6f8c81f9bba0b.jpg[/im]

      Delete
  25. //சாறி// ட்வைன் நூலில் நெய்திருப்பர்களோ...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது சாரி? ஆ??? எனக்கு வருகுதில்ல எழுத:) சரி விடுங்கோ.. “இதுவும் கடந்து போகும்”:).

      Delete
  26. அன்பைப்பற்றி அன்பா நிறைய எழுதியிருப்பதை அன்போட படிச்சு, தம வாக்கிட்டுச் செல்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் மிக்க நன்றி, இம்முறை முதல் வோட் போட்டதே நீங்கதான், எனக்கு நேற்று முழுவதும் கண்ணில் தெரியவே இல்லை.

      Delete
  27. மனுசங்கதானே முக்கியம் என தத்துவார்த்தமா அன்பா எழுதி (பொங்கி)யிருக்கீங்க.) ஆனா முகமூடியோட பாசம் அன்பு காட்டுறவங்கள், எதிர்ப்பார்ப்புகளோட பழகிறவங்கள்தான் அதிகமாகயிருக்கிறாங்க. யார் உண்மையானவங்க என்பது ? ஆகிவிட்டது. இருக்கும் வரை நாம் அன்பா இருந்துட்டுபோவோம். இதற்கு தேவை காசா,பணமா என..அப்பா அடிக்கடி சொல்வார்
    தன் மனைவிக்கு பிறந்தநாள் வந்ததாம்,...// கார் உங்களுக்கு பரிசா கிடைச்சதுதானே.. ஹா...ஹா..
    எல்லா டயறி குறிப்பும் முத்துமுத்தான எழுத்துக்களில்...வடிவா எழுதியிருக்கீங்க. எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. ஹா ஹா ஹா நான் பொயிங்க எல்லம் இல்லை... பூஸ் ரேடியோ எப்பவும் கேட்பேன், அதில் பேசுபவற்றில் எனக்கும் சம்பந்தம் இருக்கும் விசயங்களைத் தொகுத்து எழுதுவேன் அவ்வளவே. இதனால நானும், என்னையும் (என்னிலுள்ள குறைகளையும்) திருத்த சந்தர்ப்பம் கிடைக்குதெல்லோ.

      உண்மைதான் என்னத்தைக் காணப்போகிறோம்? காசா பணமா.. அன்பா ரெண்டு வார்த்தை அழகா ஒரு கொமெண்ட் தானே ஹா ஹா ஹாஅ... ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே...:)

      Delete
    2. ///தன் மனைவிக்கு பிறந்தநாள் வந்ததாம்,...// கார் உங்களுக்கு பரிசா கிடைச்சதுதானே.. ஹா...ஹா..///

      ஹா ஹா ஹா எனக்கும் ஒரு பிறந்தநாளுக்கு கார் கிடைத்ததுதான், ஆனா அது இதுவல்ல:).

      மிக்க நன்றி அம்முலு வருகைக்கும் கருத்துக்கும்..

      Delete
    3. அடடா ! நல்லா இருந்த அம்முலுவை குழப்பி விட்ருச்சே இந்த குண்டு பூனை

      Delete
    4. என்னாது அம்முலு நல்லா இருந்தாவா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் பக்கம் வந்து படிச்சுப் பின்னூட்டம் போட்டபின்னர்தான் தெளிவா இருக்கிறா ஹா ஹா ஹாஅ:).

      Delete
  28. மனுசங்க முக்கியம் ,அவங்க வைக்கிற மொய் அதைவிட முக்கியம் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. ஹா ஹா ஹா கரீட்டாச் சொல்லிட்டீங்க:)

      மிக்க நன்றி.

      Delete
  29. ஊசிக் குறிப்பு சூப்பர் அதிரா....நான் ஒரு கதையில் எழுதியிருக்கிறேன். இந்த வாசகம் அல்ல. பொருள் இதேதான்...

    ஆம் நாம் எதிர்பார்த்து அன்பு செய்வது கூடாது...உங்கள் கருத்துகள் அனைத்தும் ஏற்புடையதே எங்கள் சிந்தனைகளும் அதே!!! நெட் ஒரே பிரச்சனை அதான் விட்டு விட்டு வரேன்...உங்க பதிவு எங்க பெட்டிக்கு வரது லேட் ஆகுது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ..

      ஓ அந்தக் கதையையும் போடுங்கோ... சொல்லி அனுப்பினால் போதும்.. வந்து அடிச்சுக் கலைக்கும்வரை அட்டகாசம் பண்ணிட்டு ஓடிடுறோம்:).

      ஆமாம் அன்பு என்பது தானாக வரோணும், ஏன் உனக்கு என்னில் அன்பில்லையா எனக் கேட்பதெல்லாம் தப்பு.. அன்பை வரவழைக்க முடியாது..

      தெரியும் நெட் பிரச்சனைக்கு மத்தியிலும் ஓயாது உழைக்கிறீங்கள்[கொமெண்ட்ஸ் போடுறீங்கள்] என்பது... அதுக்கு ஸ்பெசல் நன்றிகள்.

      //உங்க பதிவு எங்க பெட்டிக்கு வரது லேட் ஆகுது...//

      அச்சச்சோ உப்பூடியெல்லாம் சொல்லப்பூடா:) அப்போ பெட்டியை மாத்துங்கோஓஓஓ:) ஹா ஹா ஹா..

      Delete
  30. 'நல்லா எழுதியிருக்கீங்க. கீழே உள்ளது மனதைத் தொட்டது.

    “நாளைக்கும் பூ மலரும்..
    நாளைக்கும் காற்று வீசும்..
    நாளைக்கும் சூரியன் உதிக்கும்...
    ஆனா நாம் இருக்க மாட்டோம்ம்..”..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல் வரவு மிக்க மகிழ்ச்சி.

      உண்மைதான் இது எப்பவோ ரேடியோவில் கேட்ட பாடல் வரிகளோ இல்ல கவிதையோ.. என் மனதில் பதிந்துவிட்டது... அதனைப் படிக்கும்போதே மனம் கனக்குது.. உண்மைதானே.. எதுவும் நம் கையில் இல்லையே.

      மிக்க நன்றி.. நெ.த.

      Delete
    2. முதன் முதலா வரலை. முதன் முதலா பின்னூட்டம் போட்டிருக்கேன். உங்களுடைய இடுகைகள் பெரும்பாலும் படித்திருக்கிறேன்.

      Delete
    3. //முதன் முதலா வரலை. முதன் முதலா பின்னூட்டம் போட்டிருக்கேன். உங்களுடைய இடுகைகள் பெரும்பாலும் படித்திருக்கிறேன்.//

      தெரிஞ்சே வந்து நல்லா வசமா மாட்டிட்டீங்களே .... ஸ்வாமி! :)))))

      Delete
    4. ///நெல்லைத் தமிழன்Thursday, April 06, 2017 2:37:00 pm
      முதன் முதலா வரலை. முதன் முதலா பின்னூட்டம் போட்டிருக்கேன். உங்களுடைய இடுகைகள் பெரும்பாலும் படித்திருக்கிறேன்.//

      ஹா ஹா ஹா சமீப காலமாகத்தான் எனக்கும் ஒரு யோசனை வந்துது, இந்த நாட்டில் யாருமில்லையே.. என ஓடுப்பட்டு விசாரித்த இடத்தில் நீங்களாக இருக்கோணும் எனும் முடிவுக்கு வந்து, நாட்டைக் கேட்டு ஓடித்திரிந்தேன்.. அதுக்குள் நீங்கள் களம் இறங்கிட்டீங்கள் இங்கு.. மிக்க நன்றி.

      Delete
    5. ///வை.கோபாலகிருஷ்ணன்Thursday, April 06, 2017 3:02:00 pm
      //முதன் முதலா வரலை. முதன் முதலா பின்னூட்டம் போட்டிருக்கேன். உங்களுடைய இடுகைகள் பெரும்பாலும் படித்திருக்கிறேன்.//

      தெரிஞ்சே வந்து நல்லா வசமா மாட்டிட்டீங்களே .... ஸ்வாமி! :)))))///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) கோபு அண்ணன்... எலி தானாக வந்து வலையில் விழுந்துவிட்டது என்கிறீங்களோ?:).. இனி ஆப்பிழுத்த குரங்காரின் நிலையாகப்போகுதே ஸ்வாமியின்..[ ஹையோ கோபு அண்ணனோடு சேர்ந்து எனக்கும் டங்கு ஸ்லிப் ஆகுதே...:)] நெ த ரின் நிலைமை..:).

      Delete
    6. //ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) கோபு அண்ணன்... எலி தானாக வந்து வலையில் விழுந்துவிட்டது என்கிறீங்களோ?:).. இனி ஆப்பிழுத்த குரங்காரின் நிலையாகப்போகுதே ஸ்வாமியின்..[ ஹையோ கோபு அண்ணனோடு சேர்ந்து எனக்கும் டங்கு ஸ்லிப் ஆகுதே...:)] நெ த ரின் நிலைமை..:). //

      நானாவது ஆழம் தெரியாமல் உங்களிடம் வந்து, வசமாக என்றோ ஒருநாள் இருட்டில் வந்து மாட்டிக்கொண்டவன்.

      இந்த நெல்லைத்தமிழர் ஸ்வாமீ அதுபோல இல்லை. நல்ல மனிதர். தனக்கு என்று சொந்தமாக வலைத்தளம் ஏதும் வைத்துக்கொள்ளாவிட்டாலும், எல்லா சப்ஜெக்ட்களிலும் மிகவும் விஷய ஞானம் உள்ளவர். பொறுமையாக பதிவினைப் படித்துவிட்டு, அழகாக கமெண்ட்ஸ் கொடுக்கக்கூடியவர்.

      இவர் போய் உங்களிடம் இங்கு வந்து மாட்டியுள்ளதில் எனக்கு அழுகையாக வருகிறது. ஏதோ அவருக்கு, இப்போது ஒருவேளை போதாதகாலமாகவும் இருக்கலாம். :)))))

      மேலும் இவர் சமையலில் கில்லாடியானவர். இவரைப்போல வக்கணையாக பெண்களால் கூட சமைக்க முடியாது என இங்கு, அஞ்சுவின் சாட்சியுடன், அதிராவின் தலை மீது அடித்து சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறேன். :)

      அதிராவின் சமையல் பதிவுகளெல்லாம் சுத்தமாக 100% அல்டாப் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த என் ஸ்வாமீக்குத் தெரிய நியாயமில்லை பாவம். இதையெல்லாம் படிச்சுட்டு அவரும், நம் ஸ்ரீராமும் சீரியஸாக எடுத்துக்கொண்டு, அதைப்பற்றி மேலும் விளக்கிக்கொண்டு இருப்பதை நினைத்தால் தான் எனக்கு ஒரே சிரிப்பாக வருகிறது, அதிரா. :)))))

      எப்படியோ அதிரடி, அல்டாப், அட்டகாச, அட்டூழ்ய, அதிரஸ அதிராவின் காட்டில் பின்னூட்ட மழை மிகவும் பலமாகப் பெய்ய ஆரம்பித்துள்ளது. சந்தோஷம். என்ஜாய் ! :)))))

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    7. ஹா ஹா ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபு அண்ணன்.. இருப்பினும் உங்களுக்கு இவ்ளோ பொர்ர்ர்ர்ர்ர்ராமை கூடாது சொல்லிட்டேன்ன்ன்:)..

      ஓ நெ த வுக்கு புளொக் இல்லயோ? நான் தேடிக்கொண்டிருக்கிறேன் அவரது புளொக்கை... அவர் சமையலில் கில்லாடி என்பதை நானும் சில நாட்களிலேயே புரிஞ்சு கொண்டேன்ன்.. இருந்தாலும் என்னைப்போல ஒரு வாழைத் தண்டுக் கறி வைக்க முடியுமோ அவரால எனக் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கோ கோபு அண்ணன்:).. ஹையோ மீ இப்போ புகைக்கூட்டுக்குக் கீழே:))...

      ///அதிராவின் தலை மீது அடித்து சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறேன். :) ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உச்சிப்பிள்ளையாரின் தண்ணி இல்லாக் கேணியில அடிச்சுச் சத்தியம் பண்ணுங்கோ:) அம்மாடி நேக்குத் தலையும் முக்கியம்:) அதிலிருக்கும் கிட்னியும் முக்கியமாக்கும்:)..

      ஒரு காலத்தில எனக்கு 450 பின்னூட்டங்களும் வந்திருக்குது கோபு அண்ணன்... நான் ஓவரா வந்தாலும் தலைக்கனம் அடைவதில்லை, குறைந்தாலும் கவலைப்படுவதில்லை... இதுவும் கடந்து போகும்.. என எப்பவும் நினைப்பேன்ன்ன்...
      போஸ்ட் போடுவதைக் காட்டிலும், இப்படி எல்லோரும் கூடிக் கும்மி அடிப்பதில் எவ்ளோ சந்தோசம் இருக்கெல்லோ.. அதுதான் எனக்குப் பிடிக்கும்.

      Delete
    8. நான் இப்போதான் கோபு சாரின் பின்னூட்டம் பார்த்தேன். அவர் சொல்றதுல என்னவோ உள்குத்து இருக்கற மாதிரியே எனக்குத் தோணுது.

      நான் எழுதறத நம்பி, 'சாப்பிட வந்தால்' உங்கள் உடல் நலம் கருதி நான் ஹோட்டலுக்குத்தான் கூட்டிட்டுப்போகணும்.

      அதிராவுக்கு பணி 'புதிய ஸ்காட்லாண்ட் யார்டு'லயா? பிளாக்குக்கு வர்றவங்க எந்த தேசம், என்ன பணியில் இருக்காங்க, என்ன வயசுன்னுல்லாம் கண்டுபிடிக்கப் பாக்கறீங்க.

      அதிரா எத்தனை புகைப்படம் எடுத்துப்போட்டாலும், அதிலும் விளம்பரமாக, ஒவ்வொரு புகைப்படத்திலும் 'அதிரா' என்று மார்க் செய்து போட்டாலும், கோபு சாருக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கு. பேசாம, சரவண பவன் ஹோட்டல்லேர்ந்து ஏதேனும் வாங்கி கோபு சாருக்கு கொரியர் அனுப்பிச்சுடுங்க (உங்க பேர்ல). அப்பயாவது நம்புறாரான்னு பார்ப்போம்.

      உங்க வாழைத்தண்டுக் கறி நல்லாத்தான் இருந்தது. ஆனால், வாழைத் தண்டை வாங்கின உடனேயே (கடைலயும் புதுசா இருக்கணும்) செய்துடுங்கோ. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறந்து போய் கன காலம் ஆனபின் செய்தால், நிறம் மாறிவிடும்.

      Delete
    9. ///நெல்லைத் தமிழன்Monday, April 17, 2017 9:26:00 am
      நான் இப்போதான் கோபு சாரின் பின்னூட்டம் பார்த்தேன். அவர் சொல்றதுல என்னவோ உள்குத்து இருக்கற மாதிரியே எனக்குத் தோணுது.//

      ஹையோ நிஜமாலுமோ? எனக்கு சந்தேகம் இதுவரை வரவில்லை.. இப்போ வந்திடிச்சே:)..

      //அதிராவுக்கு பணி 'புதிய ஸ்காட்லாண்ட் யார்டு'லயா? பிளாக்குக்கு வர்றவங்க எந்த தேசம், என்ன பணியில் இருக்காங்க, என்ன வயசுன்னுல்லாம் கண்டுபிடிக்கப் பாக்கறீங்க.//
      ஹா ஹா ஹா கழுதை கெட்டால் குட்டிச் சுவர்:).. பொழுது போக்கும் வேணுமெல்லோ எனக்கு:).


      //ஒவ்வொரு புகைப்படத்திலும் 'அதிரா' என்று மார்க் செய்து போட்டாலும், கோபு சாருக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கு.///

      அதெல்லாம் இல்லை:) “நித்திரை கொள்வோரை எழுப்பிடலாம், நித்திரைபோல் பாசாங்கு செய்வோரை எப்பூடி எழுப்புவதாம்ம் கர்ர்?:).

      ///உங்க வாழைத்தண்டுக் கறி நல்லாத்தான் இருந்தது.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதை நீங்க சுடச்சுட ஓடிவந்து சொல்லியிருக்கோணும்:) அப்போதானே என் புகழ் பரவி.. ஊரெல்லாம் புகை வந்திருக்கும்:) இப்போ ஆறிப்போச்சே:)..

      //தண்டை வாங்கின உடனேயே (கடைலயும் புதுசா இருக்கணும்) செய்துடுங்கோ//
      ஓ எனக்கிது தெரியாமல் போச்சு.. இனிமேல் அப்படியே செய்கிறேன். மிக்க நன்றி மீள் வருகைக்கு.

      Delete
  31. நல்ல பகிர்வு. மனிதர்கள் மிக முக்கியம். பெரும்பாலும் நாந்தான் எல்லோரையும் அழைத்துப் பேசுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஓ உங்க வீட்டில் நீங்கதான் இந்த ஜொப் ஐச் செய்கிறீங்களோ... மிக்க நல்லது,. சில இடங்களில் இருவரும் சேர்ந்து யாரையும் தேடுவதில்லை ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி.

      Delete
  32. மனதைத் தொட்ட பதிவு. வைகோ வின் பதிவில் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். என்ன, சிலோன் பாஷை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. மனதிற்குள் ஏற சண்டித்தனம் பண்ணுது. ஆனாலும் விடமாட்டேன். எப்படியாவது ஏத்தி விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ, முதல் தடவையாக வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்க மகிழ்ச்சி.. ஹா ஹா ஹா இப்போ என் பாசை சண்டித்தனம் பண்ணும், ஆனா கொஞ்ச நாளில் நீங்க என் பாசை மட்டுமே பேசும் அளவுக்கு வந்திடுவீங்க:) உங்கள் பாசை மறந்திடும்.. எங்கட வை.கோபு அண்ணனைப்போலவே:) ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி.

      Delete
  33. குட்டிக்கதை நெகிழ்ச்சி...

    வியாபார பயணம் என்பதால் இணையத்தில் பயணம் குறைவு...

    தொடர முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ தனபாலன்... எங்கே திடீரெனக் காணாமல் போயிட்டீங்களே என யோசிச்சேன், நலம்தான் எனத் தெரிகிறது சந்தோசம், நேரம் உள்ளபோது வந்து போங்கோ. மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.