நல்வரவு_()_


Thursday 30 March 2017

நான் ஒரு முட்டாளுங்க:)

சின்ன வயதிலிருந்தே, இந்த ஏப்ரல் fool என்பது எங்களிடத்தில்/ நம்மவர்களில் ஒரு கொண்டாட்டமான நிகழ்ச்சிதான், எப்படிக் கவனமாக இருந்தாலும் ஃபோன் க்குள்ளாலே என்றாலும் ஏமாத்திப் போடுவார்கள், நாமும் ஏமாத்தியிருக்கிறோம். இப்போகூட இம்முறை யாரும் ஏமாத்த விட்டிடக்கூடாதென்றே நினைச்சுக்கொண்டிருக்கிறோம், எங்கள் அக்கா இதை நன்றாக செய்வா கர்:).


சின்ன வயதில் வகுப்பு ரீச்சரை ஏமாத்துவோம், அப்பா அம்மாவை ஏமாத்துவோம்.. பெயிண்ட்டைப் பூசிவிட்டு, ரத்தம் வருகிறது எனச் சொல்லி... இப்படி ஏமாற்றுவதிலும், ஏமாற்றப்படுவதிலும் நல்ல மகிழ்ச்சியாக இருந்த நான், திருமணத்தின் பின்பு கணவரோடு சேர்ந்து நிறைய அட்டகாசம் பண்ணியிருக்கிறேன்.
================================Tea Break=============================
========================================================================

தில் ஒன்று, நாங்கள் முன்பு Quarterzல் இருந்தோம், அப்போ பக்கத்தில் இருந்தவரும் ஒரு இலங்கையர், நம் குடும்ப நண்பர். இரவு 9 மணிவரை,  நம் வீட்டில்தான் இருந்து நன்கு சிரித்துப் பேசி விட்டுச் சென்றார், அடுத்தநாள் ஏப்ரல் fool..  விடிய எழுந்ததும் எனக்கும் கணவருக்கும் மனம் துறுதுறுத்தது, ஏதாவது பண்ணுவமே என,

உடனே கணவர் சொன்னார், நான் Bed ல் இருக்கிறேன், பக்கத்து நண்பருக்குப் போன் பண்ணிச் சொல்லுங்கோ, எனக்கு உடம்பு முடியவில்லை அம்பியூலன்ஸ் க்கு கோல் பண்ணோனும் என.

அப்போ காலை 7 மணியிருக்கும் , கோல் பண்ணினேன், அந்த நேரம்  பொதுவாக யாரும் யாருக்கும் கோல் பண்ண மாட்டோம், அதனால என் குரல் கேட்டதும் பயந்திட்டார்ர்... ஆ என்ன அதிரா என்ன இப்போ கோல் பண்றீங்க ஏதும் பிரச்சனையா?..

நான்:.. ஓம் xxx...., இங்கே yyy க்கு சுகமில்லை, கொஞ்சம் வாறீங்களோ...

நண்பர்:விழி பிதுங்குவது போல ஆ அப்படியா? ... இதோ வருகிறேன்...

இதுக்கு மேல் பேசினால் பிடிபட்டிடுவேன் என போனை கட் பண்ணிட்டேன்..

நைட் உடுப்புக்கு மேல், ஜக்கெட்டைப் போட்டபடி ஓடிவந்தார்... வந்ததும் கேட்டார் yyy எங்கே, நான் சொன்னேன்ன்ன் upstairs room இல் என...

ஓ கீழே இறங்கிவர முடியாமல் இருக்கிறாரா..  எனப் பதறினார்... இதுக்கு மேல் பொறுக்க முடியாமல் கணவர் கீழே இறங்கி வந்தார்.... நண்பருக்கு எதுவும் புரியவில்லை, பின்னர் நாங்களே சொன்னோம், இருப்பினும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் சேர்ந்து சிரிச்சார்.. ஒரே சிரிப்பு....
சரி சரி நீங்களும் இப்போ சிரிக்கோணும் சொல்லிட்டேன்...

================================Lunch Break=============================
========================================================================

ன்னொன்று இதேபோல ஒன்றுதான், கனடா போயிருந்தோம், அங்கு ஒரே Condominium திலேயே, 15 ஆவது மாடியில் அண்ணன் குடும்பம், பத்தாவது மாடியில் என் in-laws இருந்தார்கள், நாம் யூகே யில் இருப்பதனால், அங்கு அவர்களுக்கு என்ன தேவை எனினும் எங்கள் அண்ணன் பார்த்துக் கொள்ளுவார்.

அப்போ நாங்கள் மாமா மாமி வீட்டில் இருந்து, விடிய எழும்பி , இன்று ஏப்ரல் fool ஆச்சே என்ன பண்ணலாம் என யோசிச்சோம்.... நான் ஐடியாக் கொடுத்தேன்...  “அண்ணனுக்கு போன் பண்ணிச் சொல்லுங்கோ, மாமா(கணவரின் அப்பா) திடீரென மயங்கிட்டார் உடனே வாங்கோ என”.

உடனே கணவர் அண்ணனுக்கு கோல் பண்ணி, அப்படியே சொல்லிப்போட்டு டக்கென ஃபோனைக் கட் பண்ணிட்டார்ர், கதைச்சால் பிடிபட்டுவிடுவோம் எல்லோ. அங்கு என் அப்பா அம்மாவும் இருந்தார்கள்.. எல்லோரும் அறிந்து கலவரம் போல ஆகிட்டுது அண்ணன் வீட்டில், அண்ணன் அதேபோல நின்றபடி லிவ்ட்டில் இறங்கி ஓடிவந்தார், கதவைத் திறந்தால் இங்கே மாமா சிரிச்சுக்கொண்டு கதிரையில் இருக்கிறார்... அப்போ டக்கென அண்ணன் புரிஞ்சிட்டார்ர், ஆனா ஒருகணம் உடம்பு நடுங்கும் எல்லோ:) அந்த நடுக்கம் போகும்வரை சிரிச்சபடி சோபாவில் இருந்தார்...

கடவுள் புண்ணியத்தில் எப்பவும் யாரும் எம்மோடு கோபிக்கவில்லை இதனால, இதுவரை:) ஹா ஹா ஹா:).
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ன்னொன்று, இது சோகமான, வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு April Fool. அப்போ எனக்கு 12/13 வயதிருக்கும், ஸ்கூலுக்கு, ஸ்கூல் பஸ் ல போய் வருவோம். அன்று முன் சீட், கோனர் சீட்டில் இருந்தேன், அன்று ஏப்ரல் fool. அப்போ எங்கள் பஸ், ஒரு ஸ்ரொப் இல் நிறுத்தப்படுகிறது, பிள்ளைகள் ஏற தொடங்குகிறார்கள், பயங்கர சனநெருக்கமான ஊர் அது, நான் ஜன்னலால் பார்க்கிறேன், ஒரு 6,7 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை, வெள்ளை யூனிஃபோம், சூஸ், சொக்ஸ், ரை எல்லாம் கட்டி ஸ்கூலுக்கு வெளிக்கிட்டபடி..

அம்மா சொல்லியிருக்கிறா போய் bread வாங்கி வரும்படி, கையிலே பிரெட் பாக் உடன், நம் பஸ்சின் இடது கரையால் நடந்து வந்து, பஸ் முன்னே போய் நேரெ நடக்கிறா...

அந்நேரம் பின்னாலே வந்து கொண்டிருந்த ஒரு பெரிய ட்ரக்.. கல்லு மண் ஏத்துவதுபோல ஒரு ட்ரக், நம் பஸ்சை முந்தி, டக்கென பஸ்சின் முன்னால திருப்பி எடுத்தார், புரியுமென நினைக்கிறேன், ஒரு வாகனத்தை நம் நாட்டில் முந்துவதாயின், வலது பக்கத்தால்தானே முந்தி, பின்னர் நமக்கு முன் நேர் எடுப்பார்கள்... இது முந்தியவர், ஸ்பீட்டாக டக்கென கரைக்கு வெட்டி நேரே எடுத்தார், ..

பஸ் இன் இடது கரையால் நடந்து முன்னாலே போன பிள்ளையை ஒரு தட்டுத் தட்டி விட்டது ட்ரக்:(,

அந்த ட்ரைவருக்கு புரிந்து விட்டது, மின்னல் வேகத்தில் ட்ரக் பறந்துவிட்டது. அக்குழந்தை கீழே விழுந்து தலையால் ரத்தம் பாய்ந்ததுதான் தெரியும், கூட்டம் கூடி விட்டது. அதிலேயே குழந்தை முடிந்து விட்டதாக சொன்னார்கள்.... நம் பஸ் வந்துவிட்டது... எப்படி இருக்கும் நமது மனநிலை... என் கண்ணால் அனைத்தையும் முன் சீட்டில் இருந்தபடியே பார்த்தது எனக்கு பைத்தியம் பிடித்தது போலாகிட்டேன்.

அதனை ஸ்கூலில் போய் சொல்றேன் சொல்றேன், கண் கலங்கிக்கூடச் சொன்னேன்... யாருமே நம்பவில்லை... நடிக்காதே இன்று ஏப்ரல் fool  என எமக்கு தெரியும் என்றார்கள்.... அதனை என்றுமே என்னால் மறக்க முடியாது.

சரி கவலையில் மூழ்கிடாதிங்கோ.. இதேபோல் எத்தனையோ சம்பவங்கள் நம் நாட்டில்... நடந்து, கடந்து விட்டது... “இதுவும் கடந்து போகும்”... உங்களுக்கும் நினைவுகள் வருமே, ஆனா இங்கு வெள்ளையர்களிடத்தில் இதுக்கு பெரிய அமளி துமளி ஏதுமில்லை...

ஊசிக்குறிப்பு:
நான் எழுதும் என் diary இலிருந்து

62 comments :

  1. முதல் வோட் என்னோடது. ஏப்ரில் ஃபூல் ஆக்கச் சொல்லவில்லை. நிஜமாகவே முதல் வோட் என்னோடது மட்டுமே.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன்.. முதேல்ல்ல் வோட் மட்டுமில்லை... ஆயா சுட்ட முதேல் அடையும் இம்முறை உங்களுக்குத்தான்ன்ன்:). நான் மறந்துபோய்ப் போயிட்டேன் இப்போ 4 ஆவதுதான் என்னோடது..

      மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
  2. தலைப்பில் உங்களைப் பற்றிய உண்மையைச் சொல்லியிருக்கீங்க. அதற்கு என் பாராட்டுகள். அதிரா.

    பதிவு முழுவதும் படித்தேன். நல்லா இருக்குது. இனி ஏப்ரல் 2 க்குப் பிறகு சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ///தலைப்பில் உங்களைப் பற்றிய உண்மையைச் சொல்லியிருக்கீங்க. அதற்கு என் பாராட்டுகள். அதிரா. ///

      ஹா ஹா ஹா நீங்க நகைச்சுவையாச் சொன்னாலும், நான் சீரியசாகவே சொல்றேன்ன் உண்மையில் நான் ஒரு முட்டாள்தேன்ன்ன்:). சரி சரி உங்கள் வருகைக்கும் கொமெண்ட்ஸ்க்கும் வோட்டுக்கும் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி... மின்னூலில் கலக்குங்கோ... வாழ்த்துக்கள்.

      Delete
  3. நான் லாஸ்ட்லருந்துதான் வருவேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கஞ்சு வாங்கோ... அப்போ வெளவால்ல்:))..

      “ஒரு வெளவால் வீட்டுக்கு இன்னொரு வெளவால் வந்தால், அதுவும் தலைகீழாகத்தான் தொங்குமாம்”.... ஹா ஹா ஹா என் டயரிலிருந்து:).

      Delete
  4. நோஊஊ !! கர்ர்ர் பூனை ..அதென்ன உயிரோட னு பெரிய பேச்செல்லாம் .அந்த டைரி என்கைல கிடைச்சா ஒளிச்சிடுவேன்
    பட் பாருங்களேன் எப்பவுமே லெப்ட் பார்த்திட்டு ரைட் பாக்கும் பழக்கம் என்னை விட்டு போகலை அதனால் ரைட் சைடில் இருக்கும் அன்பை மட்டும் விதைத்து எனக்கும் பிடிக்குமே ..:)

    ReplyDelete
    Replies
    1. ///AngelinThursday, March 30, 2017 9:48:00 pm
      நோஊஊ !! கர்ர்ர் பூனை ..அதென்ன உயிரோட னு பெரிய பேச்செல்லாம் .அந்த டைரி என்கைல கிடைச்சா ஒளிச்சிடுவேன் ///

      ஹா ஹா அது 20 வருசமா காவிட்டு வரும் என் டயறி.... அதைத் தரமாட்டேன்ன்:).. உயிரோடு இருக்கும்போதே இடைவெளி விட்டால் மறந்திடுறாங்க.. அப்போ உயிர் போயிட்டாலா நினைக்கப்போறாங்க.. அதுதான் மிரட்டி இருக்கிறேன் எல்லோரையும்:)

      நீங்க றைட் ல பிள்ளையார் அங்கிளைப் பார்த்திட்டீங்க.. குண்டா அழகா.. வைரம் எல்லாம் போட்டிருக்கிறாரா.. அதுதான் பிடிச்சுப் போச்சு உங்களுக்கு ஹா ஹா ஹா :).

      Delete





  5. //இதுவும் கடந்து போகு//ம்ச்சோவ் பாவம் நீங்க :( நம்ம ஊர்ல இப்படிப்பட்ட காட்சிகள் சகஜம் :( அதெலாம் மனசுக்கு கஷ்டமாகிடும் ..ஆனா உங்க பிரண்டுங்க அதை நம்ப மாட்டேன்னுட்டாங்கன்னா நீங்க எந்த naughty பூனையா இருந்திருப்பீங்கன்னு தெரியுது

    ReplyDelete
    Replies
    1. அது அஞ்சு அவ்வளவுக்கு ஏப்ரல் ஃபூலைக் கொண்டாடுவோம்... குட்டிக் குட்டிக்கெல்லாம் ஏப்ரல் ஃபூல் எனச் சொல்லி வெறுப்பேத்துவார்கள்:) கர்ர்ர்ர்:)

      Delete
  6. ஆவ் !! இங்கேயும் இருக்கு கொஞ்சம் ரொம்ப நம்ம ஊர் போலில்லை ..ஆனா இங்கே நண்பருக்கு oreo பிஸ்கட் வித் கோல்கெட் பேஸ்ட் க்ரீமோட கிடைச்சுதாம்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்படியா. இங்கு இதுவரை பெரிசா யாரும் ஏப்ரல் 1ஸ்ட் வருகிறது என அலேட் ஆனதா தெரியல்ல நம்மளவுக்கு.

      Delete
  7. //கடவுள் புண்ணியத்தில் எப்பவும் யாரும் எம்மோடு கோபிக்கவில்லை இதனால, இதுவரை:) ஹா ஹா ஹா:).//
    கர்ர்ர்ர்ர் நானா அங்கிருந்தா நடந்திருப்பது வேற :) துவைச்சிருப்பேன் உங்களை

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்[im]http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg[/im]

      Delete
  8. //சரி சரி நீங்களும் இப்போ சிரிக்கோணும் சொல்லிட்டேன்...//

    நோ நான் சிரிக்க மாட்டேன் பெரிய கட்டையோட வரேன் ,,இப்படி அப்பாவிங்களை ஏமாத்தினத்துக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அப்பாவிகளை மட்டும்தானே என்னால ஏமாத்த முடியும்:).. ஏனெனில் நான் ஒரு முட்டாளுங்க:)

      Delete
  9. இப்போ என் விஷயத்துக்கு வரேன் ..எனக்கு இப்படி ஏமாற்ற வரவே வராதது :) மனசுக்குள்ள எதையும் வச்சுக்க தெரியாது கோபமானாலும் அன்பானாலும் அதுதான் என்னோட பலவீனமே இப்போகூட உங்களை ஏதாச்சும் ஏமாத்தலாம்னு நினைச்சாலும் அச்சோ பாவமாச்சேன்னு தோணுது அதனால் நீங்க நாளன்னிக்கு எதனை பேரை ஏமாத்தினீங்கன்னு சொல்லுங்க :)

    ReplyDelete
    Replies
    1. இப்போவெல்லாம் நம்மவர்கள் ரொம்ப உசாராகிட்டாங்க... போன் பண்ணினாலே அலேர்ட் ஆகி, ஹலோக்குப் பதில் ஹப்பி ஏப்ரல் ஃபூல் என்பார்கள் :) ஹா ஹா ஹா..

      ஆனா போன வருடம் கூட ஒருவரை .. அவரும் ஒரு ரொம்ப அப்பாவி:) ஏமாத்திட்டேன்ன்:).. கீழே விந்து கால் நடக்க முடியல்ல பெட்டில இருக்கிறேன் என ஃபோன் பண்ணி.. பிறகு ரியக்‌ஷன் பார்த்து எனக்கே பாவமாகி, உண்மையைச் சொல்லிட்டேன்ன்:).

      Delete
  10. ஹா ஆஹா :) லன்ச் பிரேக் படமும் கருத்தும் சூப்பர் .எல்லாருக்கும் அழகிய மெமரிஸ் மட்டுமே கிடைக்கட்டும்
    லெசன்ஸ் வேணாம்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் எல்லோரும் நல்லதைத்தான் விரும்புவோம்ம்.. ஆனா வாழ்க்கை என்பது அனைத்தும் கலந்ததுதானே.. சின்ன விசயங்களில் கூட பெரிய லெசென்ஸ் கிடைச்சிடுது சில சமயங்களில்...

      மிக்க நன்றி அஞ்சு... அனைத்துக்கும்.

      Delete
  11. நான் ஒரு மூட்டாளுங்க.......ஓ அப்படியா நீங்க பெரிய அறிவாளின்னு இத்தனை நாள் நான் நம்பி ஏமாந்திட்டிடேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ட்றுத் வாங்க... இதுக்குத்தான் சொல்றது அவதிப்பட்டு யாரையும் நம்பிடக்கூடாதென:).. இருந்தாலும் பழகிய கொஞ்ச நாளிலேயே.. கண்டு பிடிச்சிட்டீங்க என்னைக் கரெக்ட்டா:).. இனி என்ன தப்பு நடந்தாலும்... நான் ஒரு முட்டாள் என மன்னிச்சு விட்டிடுங்கோ:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
  12. ஏப்ரல்பூல் என்றாலே முட்டாள் நினைப்புத்தான் பலருக்கு[[ ஆனாலும் அந்த டக்டர் கதை நிஜம் தான் போலும்[[

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. இம்முறை உடனேயே என்பக்கம் வந்திருக்கிறீங்க மிக்க நன்றி. அது ட்ரக்டர் இல்லை நேசன்... பெரீய ட்ரக்.. கிட்டத்தட்ட ஆமி ஊரில் உலாவரும் ட்ரக் போல பெரிசு.. அது மூச்சு விட்டாலே நாம் விழுந்திடுவோம், முட்டினால்ல் என்னவாகும்:(.

      Delete
  13. டயரி அழகாய் இருக்கு பிள்ளையார் என்னைப்போலவே சிரித்த படி[[

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அவ்ளோ குண்டாவா இருக்கிறீங்க நேசன்??? வண்டியோடு எப்படி மலை ஏறினனீங்க:).... ஹா ஹா மிக்க நன்றி நேசன், நீங்க இன்னும் வோட் போடல்ல:)...

      Delete
  14. அந்த குட்டி பாப்பா சம்பவம் ..ரொம்ப கஷ்டமா இருக்கு...இது போல் கொடுமையான நிகழ்வுகள் என்றுமே நம்மால் முழுமையாக மறக்க இயலுவது இல்லை..மனத்தின் அடி ஆழத்தில் ஒரு வடுவாக நின்று விடும்...


    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ... உண்மைதான் சில, பல சம்பவங்கள் மனதை விட்டு என்றைக்கும் நீங்காது, அதிலும் எனக்கு 5 வயதிலிருந்து எல்லாமே நினைவிலிருக்கு...:).

      Delete
    2. 5 வயதில் இருந்தா....? ....கிரேட்டு

      Delete
    3. யேஸ்ஸ் எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் ஓவர்:) இதனால ஒரு பிரச்சனை என்னவெனில்... ஏதும் கெட்டது நடந்தாலும் இலகுவில் மறந்திடமாட்டேன்ன்:)

      Delete
  15. இருந்ததாலும் உடல் நலத்தை கூறி விளையாடுவது எல்லாம் மிகவும் கண்டிக்க தக்கது பா....பாவம் சில நிமிடங்கள் என்றாலும் தேவையில்லா பதற்றம் தானே...


    ( அதிரா குட்டி பொண்ணு அப்பப்ப நிருபிக்கீறிங்க.. வவ்..வ் )

    ReplyDelete
    Replies
    1. ///இருந்ததாலும் உடல் நலத்தை கூறி விளையாடுவது எல்லாம் மிகவும் கண்டிக்க தக்கது பா///

      உண்மைதான் அனு...

      ///
      ( அதிரா குட்டி பொண்ணு அப்பப்ப நிருபிக்கீறிங்க.. வவ்..வ் )///
      ஹா ஹா ஹா கொஞ்சம் உரக்கச் சொல்லுங்கோ அனு:) ஊரெல்லாம் ஏற்கனவே புகைக்குது:) இன்னும் புகை அதிகமாகி நான் அந்தாட்டிகா போய் ட்ரம்ப் அங்கிளைச் சந்திப்பதும் கான்சல் ஆகப்போகுதே ஜாமீஈஈஈஈஈ:).

      Delete
  16. ஊசிக்குறிப்பு....சூப்பர்..

    உங்களதே பார்க்கும் போது எனக்கும் இதுபோல் பகிர ஆசை வருதே...

    என்னோடத்தில் பாரதியின் வரிகள் கண்டிப்பாக வரும்...ஆரம்பத்தில் இதுபோல் எழுதி பகிரவே நினைத்தேன்..அப்பறம் தான் images போட்டு செய்ய ஆரம்பித்தேன்...

    ஒவ்வொரு தடவையும் இங்க வாசிக்கும் போது ... உங்கள மாதரி காப்பி அடிக்க தோணுதே....

    இது மாதரி நானும் எழுத போறேன்...ம்ம்ம்...

    அதிரவோட கையெழுத்துக்கு போட்டியா.....


    ( அப்ப...எவ்வளோ பெரிய ய ய .....பதில் போடுறேன்...முச்சு வாங்குது....
    அனுவோட அறிவு வளந்துகிட்டே போகுது...எங்க போய் முட்ட போகுதோ..)

    ReplyDelete
    Replies
    1. //ஒவ்வொரு தடவையும் இங்க வாசிக்கும் போது ... உங்கள மாதரி காப்பி அடிக்க தோணுதே....///
      ஹா ஹா ஹா காப்பி எல்லாம் ஊத்தாதீங்க.. இதை ரோல்மொடலாக்கி உங்க சொந்த டயரியைப் போடுங்கோ அதனாலென்ன... யான் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகம்.

      உண்மையில் எனக்கு பென்சில் பேனை கலர் கலரா எழுதுவது ரொம்பப் பிடிக்கும்.. அது பற்றி ஒரு பதிவே போடலாம் பின்பு போடுறேன்..

      ///அதிரவோட கையெழுத்துக்கு போட்டியா...../// போட்டி இருக்கலாம் பொர்ர்ர்ர்ராமைதான் இருக்கப்பிடாது:)..

      ஆமா ஆமா வர வர நல்லாவே பேசக் கற்றுக்கொண்டு வாறீங்க:).. இதுக்குத்தான் சொல்லுவாங்க... பன்றியோடு சேர்ந்த பசுவும் கெட்டதாம் என:) அப்புடி ஆச்சே அனுவோட நிலைமை:)...

      ஹா ஹா ஹா மிக்க நன்றி அனு...

      Delete
  17. நாங்களும் சிறு வயதில் விளையாடியது உண்டு. ஒரு முறை அப்படி இருவருக்குமே வேறு வேறு விதங்களில் அவரவர் வாழ்க்கையில் விளையாட்டு வினையாகிட...அதிலிருந்து ஏப்ரல் ஃபூல் விளையாட்டு விளையாடுவதை விட்டோம்...புலி வருது கதையாகிடக் கூடாது என்றும் விட்டோம்...

    தலைமையகத்தில் ...அதான் கீதாவின் வீட்டில் நெட் பிரச்சனையாக உள்ளது....லோ வோல்டேஜ்....கரன்ட் கட் என்று....அதனால் மீண்டும் வருகிறோம்....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ... உண்மைதான் சில நேரங்களில் விளையாட்டு வினையாகி விடுவதும் உண்டு, பார்த்துத்தான் நடக்கோணும்.

      என்னாதூஊஊஊஊ தலைமையகத்தில் கரண்டூஊஊஊஊ கட்டாஆஆஆஆஆஆ? ஹா ஹா ஹா... அப்போ இப்போதான் யாரும் திட்ட நினைச்சால் நல்லா திட்டிட்டு ஓடலாம் கீதாவை:). மிக்க நன்றி துளசி அண்ணன்.

      Delete
  18. ஏஞ்சல் அதிரா தேம்ஸ் நதிக்கரைல உண்ணாவிரதம் எல்லாம் இருக்கறது இல்லைனு சரஸ்வதி சபதம் போல எடுத்திருக்காங்களாம் சொன்னாங்க....திங்கற விரதம்தான் இருப்பாங்களாம்....ஹிஹீ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. அச்சச்சோ கரண்டு கட்டானதால சார்ஜ் போயிட்டுது கீதாக்கூஊ ஹா ஹா ஹா:)... இனி உண்ணாவிரதம் இல்ல கீதா.. தீ மிதிப்புத்தேன்ன்ன்:)..

      Delete
  19. அந்த சபதத்தை நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம் எஞ்சல் ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா காதைக் கொண்டு வாங்கோ சொல்றன்:).. ஏஞ்சல் என்னை தேம்ஸ்ல எப்போ தள்ளலாம் என்றே எப்பவும் தருணம் பார்த்து இருக்கிறா:) நாம ஆரு.. ஓடுற மீனில நழுவுற மீனாச்சே:))

      Delete
  20. அதிரா சகோ/அதிரா அந்த வாசகங்கள் செம!! ரொம்ப நல்ல வாசகங்கள்...(இப்படி வந்தா நாங்க ரெண்டு பேரும் சொல்றதுனு அர்த்தம் சரியா!!)

    ReplyDelete
    Replies
    1. ///அதிரா சகோ/அதிரா////
      ///(இப்படி வந்தா நாங்க ரெண்டு பேரும் சொல்றதுனு அர்த்தம் சரியா!!)///

      ஹா ஹா ஹா ஓகே ஓகே என் கிட்னியில் சேவ் ஆக்கிட்டேன்ன்ன்:).. ஆனா ஒரு சின்ன திருத்தம்.. சகோ அதிரா/சுவீட் 16 அதிரா எண்டுதான் வரோணும்:).. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:).. கண்ணில பாம்பெண்ணை:) விட்டுக்கொண்டு இங்கின ஒராள்9 நான் அஞ்சுவைச் சொல்லல்லே:)) உலாவிட்டிருக்கிறா:), நான் அதனால்தான் உடம்பெல்லாம் கிரீஸ் பூசிட்டே திரிகிறேன்ன்:).

      Delete
  21. Replies
    1. மிக்க நன்றி... இருவருக்கும்.. அனைத்துப் பின்னூடங்களுக்கும்..
      ஆனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இருவருமே வோட் போடுவதில்லைப்போல:(.

      Delete
  22. யாரும் யாரையும் ஏமாற்றாத்திருக்கட்டும். யாரும் யாரிடமும் ஏமாறாமல் இருக்கட்டும்.

    இந்நாளை நான் அதிகம் "கொண்டாடி"யதில்லை. ஆனால் சட்டையில் இங்க் கறை ஓரிரு முறை வாங்கியிருக்கிறேன். என் நண்பன் ஏப்ரல் இல்லாத ஒரு நாளில் முட்டாளாயிருக்கிறேன்!! சரி, வேண்டாம் விடுங்க!

    தம வாக்குப் போட்டாச்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...
      ///யாரும் யாரையும் ஏமாற்றாத்திருக்கட்டும்/// இது கரீட்டூஊஊஉ:)

      /// யாரும் யாரிடமும் ஏமாறாமல் இருக்கட்டும். //// இது டப்பூ:) ஏமாறாமல் இருக்க முடியுமோ?:) இது நடக்கிற விசயமோ?:) ஹா ஹா ஹா...

      சரி அதை விடுங்கோ.. மேலே இப்பூடிச் சொல்லிப்போட்டு.. நீங்களே உங்க நண்பனை ஏமாத்திப்போட்டீங்க.. அதுவும் ஏப்ரல் ஃபூல் இல்லாத நாள்ல:).. ஹையோ இதைத் தட்டிக் கேட்ட ஆருமே இல்லயா?:) சரி வாணாம் இதையும் விடுங்கோ...:)

      ஓ வோட்டுப் போட்டிட்டீங்க..மிக்க நன்றிகள்.. ஆனா ஏன் எல்லோரும் போடுறாங்க இல்ல?:) இந்த ரேஞ்சில போனால் நான் எப்போதான் மகுடம் சூடுவதாம்ம்ம்ம்?:).. எப்போதான் எங்கட பகவான் ஜீ யைத் தள்ளிப்போட்டு நான் முதலாவதா வாறது சொல்லுங்கோ?:).. ஹையோ ஏதோ ஒரு ஃபுலோல எழுதித்தள்ளிட்டேன்ன்.. பிளீஸ்ஸ்ஸ் படிச்சதும் கிழிச்சு அந்த முருங்கி மரத்துக்குக் கீழ வீசிடுங்கோ:)..

      Delete
    2. ஸ்ரீராம் நான் முட்டாளாவது பல சமயங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது!!ஹிஹிஹி அதனால் ஹைஃபைவ் சொல்லிடுவோம் நாம....நான் வீராப்பா சொல்லிக்குவேன் நான் என்ன முட்டாள் நு நினைச்சீங்களா அப்படினு....ஆனால் மெய்யாலுமே ஆவதுண்டு....

      இந்த இங்க் அடிச்சுதான் விளையாடியிருக்கோம். ஆனால் அதுவும் ஒரு வேதனையான நிகழ்வுக்கு வித்திட அன்றிலிருந்து விளையாடுவதை நிறுத்தினேன்.

      கீதா

      Delete

    3. //மேலே இப்பூடிச் சொல்லிப்போட்டு.. நீங்களே உங்க நண்பனை ஏமாத்திப்போட்டீங்க.. அதுவும் ஏப்ரல் ஃபூல் இல்லாத நாள்ல:)..//

      தப்பாப் புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. என் நண்பனை நான் ஏமாற்றவில்லை. என்னைத்தான் என் நண்பன்! ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தான்.

      Delete
    4. ///என் நண்பன் ஏப்ரல் இல்லாத ஒரு நாளில் முட்டாளாயிருக்கிறேன்!!/// ஓ இது எனக்கு சரியாப் புரியல்ல. ஒருவரை வேணுமெண்டே முட்டாளாக்குவது தப்பு, ஆனா இது ஏப்ரல் ஃபூலில் ஒரு சந்தோசத்துக்காகச் செய்வதுதானே.. இன்றும் நடந்துதே:)..

      Delete
    5. //கீதா///
      முட்டாளாவதற்கும் ஹை ஃபை ஆஆஆஆஆஅ கர்ர்ர்:) ஹா ஹா ஹா:)

      Delete
  23. கமெண்ட்டில் படம் போடும் தக்கினிக்கி (டெக்னிக்!!!!) எனக்குத் தெரியாது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கும் புதுசு புதுசா வார்த்தைகள் வருதே:).. அந்த தெக்கினிக்கை(ஆவ்வ் விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:)) சொல்லித் தாறேன்ன்.. அதுக்கு முதல்ல பீஸ் ஐ பவுண்டில என் எக்கவுண்டில் போட்டிடுங்கோ:).

      ஹா ஹா ஹா மிக்க நன்றி சகோ ஸ்ரீராம்.

      அது ஒன்றுமில்லை, கூகிளில் தேடி, படம் செலக்ட் பண்ணி, ரைட் கிளிக் பண்ணினால்.. நிறைய வருமே... அதில் copy image url என இருப்பதை லெவ்ட் கிளிக் பண்ணுங்கோ(கொப்பி).. பின்பு இங்கு வந்து கொமெண்ட் பொக்ஸ் ஐ ஓபின் பண்ணி [im] இப்படி ரைப் பண்ணிட்டு இங்கு அதை பேஸ்ட் பண்ணி.. முடிவா இங்கிருப்பதை திரும்ப ரைப் பண்ணி பப்ளிஸ் பண்ணுங்கோ படம் இங்கு வரும்... [/im]

      [im]http://img1.dinamalar.com/kovilimages/Story/ST_131738000000.jpg[/im]

      Delete
  24. ஒரு உருளைக் கிழங்கை வெட்டி அதில் இன்வெர்ட் ஆக ஏ எஃப் என்று செதுக்கி இங்க் தோய்த்து நண்பர்கள் சட்டையில் அச்சிடுவோம் இதுவே எங்கள் ஏப்ரல் ஃபூல் விளையாட்டு மற்றபடி விளையாடினால் புலி வருது கதையாகும் பயம் உண்டு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா வாங்கோ..

      ஹா ஹா உண்மைதான், ஏப்ரல் ஃபூல் அன்று என்ன நடந்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்...

      மிக்க நன்றி.

      Delete
  25. கணவரும் மனைவியுமா என்ன ஒரு அட்டகாசம்.. யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் மனம் பதறத்தானே செய்யும்... எப்படியோ மன்னித்து விட்டார்களே.. அதுவரையில் மகிழ்ச்சிதான். :)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. ஹா ஹா ஹா அன்று மட்டும்தானே இப்படிக் கூத்துப்போட முடியும்... கோபம் வந்தாலும் அடக்கிடுவார்கள் வேறு வழி?:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி கீதா.

      Delete
  26. உருளைக்கிழங்கில் A.F. என வெட்டி, அதில் இங்க் தடவி சட்டையில் குத்திவிடுவோம். சில நாட்களில் வெள்ளை உடை முழுவதும் இப்படி ஆகிவிடும். வீட்டில் செம மாத்து தான்!

    நினைவுகள்......

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ எல்லோரும் உருளைக்கிழங்கிலேயே ஏப்ரல் ஃபூல் கொண்டாடியிருக்கிறீங்க:).. மிக்க நன்றி. வோட் போட்டமைக்கும்.

      Delete
  27. அனைத்து அனுபவங்களும் படிப்பதற்கு மிகுந்த சுவாரஸ்யம்! அந்தப் பெட்டி செய்தி மிகவும் அருமை!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா மிக்க நன்றிகள்.

      Delete
  28. இன்று காலையில் ஏழியா முழிச்சிட்டேனா:) நேக்குப் பொழுது போகல்லே:) என்ன பண்ணலாம் ஏப்ரல் ஃபூலாச்சே என நினைச்சதும் மனதில ஒரு ஐடியா வந்துதா... படபடவென பலருக்கு மெசேஜ் இலும் மெயிலிலும் போட்டேன்ன்...

    எழும்பி ஓடிப்போய் பிபிசி நியூஸ் பாருங்கோ.. பக்கிங்காம் பலஸ்ல நெருப்பாம்ம்ம்.. குயின்(அம்மம்மா:) ஹொஸ்பிட்டல்லயாம் என..:) அனுப்பிப்போட்டு கல்லுக்கில்லு வந்தாலும் என குல்ட்டால இழுத்து தலை எல்லாம் மூடிட்டுப் படுத்திட்டேன்ன்.. கொஞ்ச நேரத்தில படபடவென பதில்கள் வருது:)..

    சிலருக்கு நினைவு:) சிலர் மறந்து போய் ஓடிப்போய் நியூஸ் பார்த்தவையாம்.. ஒரு நண்பி கோல் பண்ணிட்டா... நியூஸ் ல ஏதும் காட்டல்லியே என அவ்வ்வ்வ்வ்வ்:)..

    இதில இன்குளூடிங் நம்மட அஞ்சு:).. மெயில் பார்த்துப் பதறினாவோ தெரியல்ல:) ஸ்ரெடியா பதில் வந்துதா.. ஏப்ரல் ஃபூல் என:)...

    ஓகே இன்னொரு இனிய மாலைப் பொழுதில் உங்களைச் சந்திக்கும் வரை, நன்றி கூறி விடை பெறுபவர்... உங்கள் பெருமதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)..
    [im]https://img.memesuper.com/92993adf4f1b08a955339c64679d68ca_img-cat-meme-thank-you_500-295.jpeg[/im]

    ReplyDelete
  29. அனுபவம் நல்லா இருக்கு. ஆனால் 'ஏப்ரல் ஃபூல்' செய்வது சின்ன வயதில் ஜாலியாக இருந்தாலும், நல்ல வழக்கம் இல்லை. 'புலி வருது புலி வருது' கதையாகிவிடும். ரொம்பத் தேவையான போது, உதவி கிடைக்காமல், 'சும்மா தமாசுக்குத்தான் சொல்கிறார்கள்' என்று நினைக்கும்படியாகிவிடும். (நீங்களே ஒரு சம்பவத்தை எழுதியிருக்கீங்க)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.