நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Sunday, 12 March 2017

நானும் என் செல்ல மகளும்..

ங்கள் டெய்சி பற்றிச் சொல்வதானால், ஒரு புத்தகமே எழுதலாம், ஊரில் பல வளர்த்தோம் ஆனா வெளிநாடு வந்து பலகாலத்தின் பின்பு, முதன் முதலில் பூனை வளர்க்கவே ஆசையாக இருந்துது, பெட் ஷொப் போனோம் அங்கு பூஸ் இருக்கவில்லை, அழகழகான முயல்குட்டிகள் புசுபுசுவென இருந்திச்சா... பார்த்தவுடன் எனக்கு ஆசை அதிகமாகி:) இந்த முயல் இப்பவே எனக்கு வேணும் எனக் கேட்டு உடனேயே வாங்கி வந்தோம், மொப்பி எனப் பெயரிட்டு வளர்த்தோம்... இந்த   ஆல்பத்தில் பாருங்கோ எங்கள் மொப்பிப் பிள்ளையை...பின்பு ஹம்ஸ்டர், ஃபிஸ் வளர்த்தோம்.. பிஸ்கள் இப்பவும் இருக்கிறார்கள்.. ஹம்ஸ்டர் பிள்ளையை இங்கே போய்ப் பாருங்கோ...

============()==============()===============()=================()==============

வை எல்லாம் முடிஞ்ஞ்ஞ்ஞ்... இப்போ பூஸ்குட்டி வாங்கலாம் என கூகிள் பண்ணிய இடத்தில், இவ சேல் எனப் படத்தோடு போடப்பட்டிருந்துதா, உடனேயே போய் வாங்கி, அப்படியே pet shop போய் அவவுக்கான உணவுகள் படுக்கும் பெட், விளையாட்டுச் சாமான்கள் என எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தோம்... வரும்போதே காருக்குள் வைத்தே... கலந்து பேசி.. “டெய்சி” என பெயர் வைக்கலாம் எனும் முடிவுக்கு வந்தோம்.

நாந்தான் டெய்சி, இந்த வீட்டில் இப்போ நான் தான் “பொஸ்”:)

மம்மியும் நானும் விளையாடுவோம் இப்படி பல விளையாட்டுக்கள்..:)
ரம்பம் வீட்டுக்குள் வந்ததும் ரூமுக்குள் விட்டோம், கட்டிலோடும், ஒரு ஓரமாகவும் பேசாமல் இருந்தா, நாம் பெயர் சொல்லிக் கூப்பிட்டு விளையாட்டுப் பொருள்கள், உணவு என எல்லாம் முன்னால் வைத்தோம்.

Catnip என ஒரு தாவரம் இருக்கு, தமிழில் அதை “பூனை விரும்பி” என்பார்கள்.. இந்த கற்னிப் இலைகளைப் பவுடராக்கி, இப்படி எலிப்பொம்மைக்குள் , போலுக்குள் வைத்து தைத்திருக்கும், அதனைத்தான் ஆரம்பம் கொடுத்தோம்.. அந்த வாசனையில் பூனைகள் மயங்கியிருப்பார்கள்..

பின்பு மெதுவாக அவவின் bed இல் படுக்க அவவுக்கு பயம், litter tray நன்கு பிடித்திருந்தது, அதில் மணல்போல மரத் தூசு/கட்டிகள் வாங்கிப் போடுவோம்.. அதில் ஏறிப் படுத்தா, நைட் முழுவதும்.

அடுத்தநாள் றூமை விட்டு வெளியே வந்து, அவவுக்கான  scratching post இல் பிராண்டி விளையாடினா..

கொஞ்ச நாளிலேயே “குளப்படி”:) டெய்சியாகவும் , தான் தான் இந்த வீட்டுக்கு பொஸ் போலவும் மாறிட்டா.. எப்பவும் என்னோடுதான், என்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டா, ஓடிவந்து கையைக் கடிப்பா, பெயிண்ட் பண்ணினால் பிரஸ் ஐக் கடிப்பா... போட்டோவுக்கு போஸ் குடுக்கிறாவாம்ம்:)

மீனுக்கு சாப்பாடு போடும்போது தானும் ஓடிவந்து, கையால் அடிச்சு அடிச்சு ட்ரை பண்ணுவா:) மீன் பிடிக்க.. அவவுக்காகவே இந்த ஸ்டூல் போட்டு விட்டிருக்கு.. அதில் ஏறி இருந்து பிடிக்க ட்ரை பண்ணுவா:).


இதுதான் அவவின் முதலாவது ஸ்னோ... படு அட்டகாசம் தன்னை வெளியே போக விடச்சொல்லி, சரி என கதவைத் திறந்ததுதான்.. துள்ளித் துள்ளி விளையாடினா, அவவின் குட்டிக் கால்கள் பதிந்திருக்கு ஸ்னோவில்...:)

தன் இஸ்டத்துக்கு... பிடிச்ச இடத்தில் பயமில்லாமல் படுக்கவும், விளையாடவும் பழகிட்டா...

அவவின் முதலாவது கிரிஸ்மஸ்... அண்ணாக்களின் பிரசண்ட்ஸ் ஐப் பாதுகாக்கிறாவாம்ம்ம்:)

குழந்தையை நித்திரையாக்கிவிட்டுத்தானே, நம் வேலைகளை அவசரமாகச் செய்து முடிப்போம்.. அப்படித்தான் இவ இல்லையெனில் மட்டுமே என்னால் வேலை எதுவும் செய்ய முடியும்.. பாருங்கோ என் Diary இல் தான் ஓடிவந்து ஏறிப் படுத்திட்டா... நான் எப்படி எழுதுவேன்ன்:)

தான் எழுத ட்ரை பண்ணுறா:)

இப்படி ஓடிவந்து நித்திரைபோல் ஆக்ட் பண்ணினால்:) எப்படியாம் ஐபாட் பார்ப்பது:) இது நித்திரை எண்டோ நினைக்கிறீங்க?.. ஹா ஹா ஹா அத்தனையும் நடிப்பூ:)

ந்த வீடியோவும் சரியாக இங்கு இணைக்க முடியவில்லை  100MB க்கு உட்பட்டது மட்டுமேதான் இதில் இணைக்க முடியுமாம்.. இனி யூ ரியூப்பில் போட்டுத்தான் இங்கு போட வேண்டும்... நிறைய வீடியோக்கள் இருக்கு டெய்சியினுடையது....

கிச்சின் டோர் ஐ திறந்து விடட்டாம், தான் வெளியே போக...

பின்னர் வெளியே போய் வரப் பழகிட்டா, ஆளைக் காணவில்லை எனில், நாம் கதவைப் பூட்டி விட்டுப் போய்விடுவோம், கிச்சின் வாசலில் இருக்கும் இந்த பழைய டிஸ்வோஷர் மேலே ஏறி இருந்து முன்னே ஆற்றில் என்ன போகிறது , நாம் வருகிறோமா, எனப் புதினம் பார்த்தபடி இருப்பா..ஆத்திலே நீர்மூழ்கிக் கப்பல் போவது தெரியுதோ?..
 இங்கு நமக்கு அடிக்கடி மழை பெய்த வண்ணம் இருக்கும், எப்போ மழை வருமெனச் சொல்ல முடியாது, இவ வெளியே போனால், மழையில் நனைந்து ஓடிவருவா மின்னல் வேகத்தில் வீட்டுக்குள்ளே... முதலில் மியாஆஆ மியாவ்வ் என பெரிய கூக்குரலோடு வீடெல்லாம் என்னைத் தேடுவா, நான் இல்லை எனில், ஏனையோரிடம் ஓடிப்போய் தன்னை துடைத்து விடச் சொல்லிக் கேட்பா, துடைக்கும்போது கீழே உருண்டு பிரண்டு... இங்கே துடை.. ஆ இங்க.. ஆ இங்க என்பதுபோல, கை கால் எல்லாம் தருவா:).

விடியக்காலை 5.30/6 மணியானதும் தன் Bed டை விட்டு இறங்கி ஓடிவருவா என்னோடு படுக்க... இங்கே பாருங்கோ எந்தக் கவலையும் இல்லாமல் படு சுகந்திரமா நிம்மதியா என்னோடு ஒரே தலையணையில் படுத்திருப்பதை... குளிர் அதிகமாயின் என்னை இடிப்பா, உடனே குல்ட்டால் போர்த்து விடோணும்... எனக்கு பல நேரங்களில் பூனைபோல தெரிவதேயில்லை.. நம் குழந்தையாகவே இருக்கிறா...


 அயன் பொக்ஸை ஓன் பண்ணியதும், எங்கிருந்தாலும் ஓடிவந்து நடுவில் ஏறி இருப்பா.. எப்பூடி நான் அயன் பண்ணுவேன்ன்:)

உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:), பிள்ளை நல்ல நித்திரை, குல்ட்டால போர்த்து விட்டிருக்கிறேன்... மிகுதி பின்பு தொடரும்... நல்லிரவு:) _()_.

மீண்டும் இன்னொரு பாகத்தில் சந்திப்போம்....

ஊசி இணைப்பு:-

70 comments :

 1. Hi daisy darling .hugs and kisses to you ..Don't let your mum to sleep. .keep biting her toes 😄 ..my mom had trained me to disturb only dad cheeky girl innit ..I'm gonna catch the sparrows ttyl..bye for now ..jessie

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜெஸி அக்கா வாங்கோ.. நோஓ மம்மி பாவம்:).. ஏன் உங்களுக்கு உங்கட மம்மி தமிழ் சொல்லித் தரேல்லையோ?:).. மல்ட்டி அக்கா என்ன பண்றா?.. மிக்க நன்றி ஜெஸி அக்கா.

   Delete
  2. ஷ்ஹ் டோன்ட் கால் மீ அக்கா ..இங்கிலாண்ட்ல எல்லாரும் நேம் சொல்லித்தான் கூப்பிடணுமாம் மாம் சொன்னாங்க அவங்களே gamma உங்க மம்மியை நேம் சொல்லித்தான் கூப்பிடறாங்க ..

   Delete
  3. shall i tell you a secret daisy ..i am going to get mom a big moth or sparrow for mothersday ..what are you going to give your mummy .i have loads of ideas :) kik me will give you some ideas .also its great fun to boss around multi :) bye for now ..jesi

   Delete
  4. ///AngelinSunday, March 12, 2017 11:44:00 pm
   ஷ்ஹ் டோன்ட் கால் மீ அக்கா ..இங்கிலாண்ட்ல எல்லாரும் நேம் சொல்லித்தான் கூப்பிடணுமாம் மாம் சொன்னாங்க///

   நோஓஓ ஜெஸி அக்ஸ்:).. எங்கட மம்மி சொல்லியிருக்கிறா, இங்குள்ளவர்களைத்தான் பெயர் சொல்லி அழைக்கட்டாம், நம் நாட்டவரை முறை சொல்லித்தான் அழைக்கோணுமாம்:) உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது டெய்சி எனச் சொல்லித் தந்தவ:).

   ///அவங்களே gamma உங்க மம்மியை நேம் சொல்லித்தான் கூப்பிடறாங்க ..///
   ஹா ஹா கடவுளுக்கே பொறுக்கல்ல இது:) அதனாலதான் ஸ்பெல்லிங்கூ மிசுரேக்க்க்க்கூஊஊஊஊஊஊ:)

   Delete
  5. ஸ்ஸ்ஸ் எனக்கு இங்கு ஃபிரெண்ட்ஸ் ஆருமே இல்ல.. அதனால ஒரு பிரதர் அல்லது சிஸ்டர் வேணுமென கேட்டுக்கொண்டிருக்கிறேன்:).. கிடைச்சிடும் என நம்புறேன்... உங்களுக்கு மல்ட்டி இருக்கிறா பேச்சுத் துணைக்கு:). நான் போன சமரில மம்மிக்கு கொடுத்த கிவ்ட்டை சீக்ரெட்டா வச்சிருக்கிறா மம்மி.. அடுத்த தொடரில் போடுவா:)... ம்ம்ம்ம் மதேர்ஸ் டே வருது.. அட்லீஸ்ட் குட் கேளாக இருக்க ட்ரை பண்ணுவேன் அன்று:)... மிக்க நன்றி ஜெஸி(அக்கா:))..

   ஹா ஹா ஹா... [நாங்களெல்லாம் லூஸ் கூட்டம் என நினைச்சிடப்போகினமே முருகா:))]

   Delete
  6. Gamma is nickname for grandma athira aunty🐭🐭🐭🐭🐭🐹🐹🐹🐹🐹🐹

   Delete
 2. என்னவொரு பிரியம்...! அசர வைக்கிறது சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ டிடி.. உண்மைதான், அவவின் விளையாட்டுக்கள் சொல்லி முடியாது... இங்கு போட்டு வைத்தால் ஒரு பொக்கிசமாக எக்காலமும் இருக்குமே எனத்தான் அனைத்தையும் போட நினைக்கிறேன்.

   Delete
 3. என்ன கிறிஸ்துமஸ் மரம் வைப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் கிறிஸ்துமஸுக்கு செடி வைத்திருப்பதை இப்பதான் பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அது இங்கே நாங்க எல்லா ரூம்லயும் ஒரு மினி செயற்கை மரத்தை வைப்போம் பெரிய மரம் கீழே முன் லிவிங் ரூமில் இருக்கும் நாங்க மக ரூம்லயும் அப்புறம் டைனிங் ஹாலிலேயும் வைப்போம் குட்டி மரம்

   Delete
  2. வாங்கோ ட்றுத் வாங்கோ.. முதல்ல மன்னிச்சுக்கோங்கோ:) ஒரு நாள் முழுக்க கண்டுபிடிக்கப்படாமல் ஸ்பாமிலயே இருக்க விட்டமைக்கு:).

   ///ஆனால் கிறிஸ்துமஸுக்கு செடி வைத்திருப்பதை இப்பதான் பார்க்கிறேன்///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எப்பபார்த்தாலும் முட்டையில முடி பிடுங்குவதே வேலையாப்போச்ச்ச்ச்ச்:)... அங்கின இங்கின எல்லாம் பார்க்கப்பூடா... அர்ச்சுனன் கண்ணுக்கு குருவித் தலை மட்டுமே தெரிஞ்சதுபோல... மெயினை மட்டுமே பார்க்கோணும்:).. சரி சரி குட் டவுட் தான்.. இருங்கோ விளக்கம் சொல்றேன்ன்...

   Delete
  3. அது ட்றுத், எங்கள் விசிட்டிங் கோல் விண்டோ... வந்து அப்படியே சுவர் முழுக்க கண்ணாடி... ஏனெனில் வெளியே மலையும் ஆறும் தெரியும்.. இந்த வியூவுக்காகவே இந்த வீடு வாங்கினோம்.

   வீடு வாங்கிய புதிதில் பெரிய மரம்தான் வச்சோம், வீட்டுக்கு வருவோர் எல்லாம் பேசினார்கள்.. எதுக்கு இதை வச்சு வியூவைக் கெடுக்கிறீங்க என.... அதனாலயே குட்டி.. செடி:) வாங்கினோம்... இடம் மாத்தி வைக்கலாம் ஆனால் பிள்ளைகளுக்கு இங்கு வைப்பதுதான் விருப்பமாம்.. வெளியில் லைட் தெரியோணும் என்பதால்தான் இந்த ஐடியா:)).. ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா சொல்லி முடிச்சிட்டேன்ன்ன்:).

   Delete
  4. அஞ்சு... நீங்க சொல்வதுபோலதான் இங்கும் பல வீடுகளில் ஒவ்வொரு விண்டோவிலும் ஒவ்வொரு குட்டிமரம் வைத்திருப்பார்கள், நைட்டில் பார்க்க அழகா இருக்கும், ஆனா நாங்கள் இதுவரை ஒன்றிற்கு மேல் வச்சதில்லை..

   இதுகூட பிள்ளைகளுக்கு பிரசண்ட்ஸ் வைப்பதற்காகவே வைக்கிறோம்ம்.. ட்ரீ வைக்காட்டில் பிரசண்ட்ஸ் வராதெல்லோ ஹா ஹா ஹா.

   Delete
 4. ஒவ்வொரு தடவையும் பெட் ஷாப்பிற்கு போகும் போது பூனைக்குட்டியை தூக்கிட்டு வந்திடலாம் என நினப்பேன் ஆனால் அது வீடு முழுவது ஸ்க்ராட்ஸ் பண்ணி விடும் என்பதாலும் வீடேங்கும் முடியாகிவிடும் என்பதால் வாங்காமல் வந்துவிடுவேன்.

  இதற்காகவே நான் நாய் குட்டியை வள்ர்க்கிறேன் அதுவும் முடி உதிராத நாயாக பார்த்து வாங்கினேன் நாய்குட்டி வந்த பின் வாழ்வில் மன அழுத்தமே வருவதில்லை வாழ்க்கை மிக இனிமையாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. ///ஆனால் அது வீடு முழுவது ஸ்க்ராட்ஸ் பண்ணி விடும் என்பதாலும் வீடேங்கும் முடியாகிவிடும் என்பதால் வாங்காமல் வந்துவிடுவேன்./// பூஸ் குட்டி மட்டுமில்லையே நாய்க்குட்டியாரும்தான் ஸ்கிராஜ் பண்ணுவாராமே.. எங்கள் அக்கா வீட்டில் நாய் வளர்க்கிறார்கள்.. லெதர் சோபா இதுவரை 3 மாற்றி விட்டார்களாம்.

   பூஸ் குட்டிகள் பெரிதா மோசமில்லை.. நீங்க அங்கு இங்கெல்லாம் கார்பெட் விரிச்சு(நிலம் வூட் எனில்), ஸ்கிரச்சிங் போஸ்ட் வாங்கி வீட்டில் மேலே கீழே எல்லாம் வச்சு விட்டால் அதிலயே பிராண்டிப் பழகிடுவினம்.

   ஆனாலும் லெதர் எனில் பிராண்டுவினம்.. எங்கள் லெதர் பெட், செயார், பிராண்டி வைத்திருக்கிறா ஆனா பெரிதாக ஏதும் அடையாளமில்லை.

   இன்னொன்று, முடி எல்லாம் பயப்படும் அளவுக்கு கொட்டாது. அடிக்கடி பிரஸ் பண்ணி விடோணும், அத்தோடு இவ நைட்டில் அவவின் இக்ளூ பெட்டில்தான் படுப்பா, பழக்கிட்டோம்.. பகலி்ல், காலையில் தான் நம் பெட்டில் படுப்பா.. அதனால பெரிதா மயிர் கொட்டி இல்லை. நாங்களும் ஆரம்பம் பயந்தோம், சின்னவருக்கு அலர்ஜி இருக்கு என... ஆனா அப்படி இல்லை.

   இன்னொன்று முடி கொட்டாத +நொன் அலர்ஜி கட் எனவும் இருக்கு... அது ஒவ்வொரு பிரீட் ஐப் பொறுத்தது, இனி வாங்குங்கோ.

   மிக்க நன்றி ட்ருத்.

   Delete
 5. 4-ம் நம்பர் வோட் என்னோடது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன்... உங்கள் கையில் மையைப் பார்த்ததுமே புரிந்துகொண்டேன்.. வோட் போட்டிட்டீங்களென:) மிக்க நன்றி.

   Delete
 6. பதிவு தலையோடு கால் + வால் வரை நல்லா இருக்குது. கொடுத்து வைத்த பூனை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
 7. மீ ஏஞ்சல் லாண்டட் :)
  ஹா ஹாஹா அம்மாவும் மகளும் ஒரே போல குண்டூஸ் பாப்பாஸ் :) chooo ஸ்வீட் அன்ட் கியூட் .
  வீடியோ இப்போ தெரியுது ..என்னா சத்தம் பொண்ணுக்கு .எங்க ஜெசி அமைதியாக்கும் அம்மா மாதிரியே :)ட்ரவுசர் மேலே வந்து இடிப்பா முகத்தை தலையால் nudge பண்ணுவா இவ்ளோதான் :) வெளில விட கேக்கறதுக்கு ..

  நாம அவங்க வீட்ல இருக்கறோம் அதுதான் உண்மை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு..//அம்மாவும் மகளும் ஒரே போல குண்டூஸ் பாப்பாஸ் :)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   அது பெரிய வீடியோ அஞ்சு, இதில் இணைக்கும்போது கட்பண்ணுப்பட்டு விட்டது. ஹையோ எங்கட டெய்ஷி.. என்னைப் போலவே படு அட்டகாசம்.. இருவரும் வீடு முழுவதும் ஓடிப்பிடித்து விளையாடுவோம்.. ஹைட் அண்ட் சீக் எல்லாம் சூப்பரா விளையாடுவா.. எந்நேரமும் துடிப்பாகவே இருப்பா... அதுக்கு காரணம் நானும் தான்.. நான் அவவை சும்மா இருக்கவே விடமாட்டேன் சீண்டிச் சீண்டி விளையாடப் பண்ணுவேன்ன்..

   இங்கு வந்த ஸ்கொட்டிஸ் பிரெண்ட் ஒருவர், அவ 2 பூஸ் குட்டீஸ் வளர்க்கிறா, அவவின் மகனும் எங்கள் மகனும் ஒரே கிளாஸ் என்பதால் நாம் மம்மீஸ் அடிக்கடி மீட் பண்ணுவோம்.. அவ சொன்னா.. உங்கட டெய்சி இவ்ளோ உசாரா இருக்கிறா என்னால் நம்பமுடியவில்லை.. எங்கட கிட்டின்ஸ் சாப்பிடுவதும் ஸ்லீப் பண்ணுவதும்தான் வேலை என. நாம் தான் அவைகளுக்கு பழக்கோணும் என சொல்லிக் கொடுத்தேன் அவவுக்கு..

   Delete
 8. என்ன சொன்னாலும் இவற்றின் மூலம் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்துக்கு அளவில்லை ..மனசு ஸ்ட்ரெஸ் இல்லாம போயிடும் இவங்களோட கொஞ்சம் நேரம் பேசினா :) எனக்கு நிறைய பூஸ் ப்ரண்ட்ஸ் இருக்காங்க :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அஞ்சு, மனதை வேறு எதிலும் ஈடுபடுத்த விடாமல் எப்பவும் தம்மையே கவனிக்க வைப்பார்கள். உங்கள் ஏரியாவில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.. எங்களுக்கு இல்லை:(.

   ஊசிக்குறிப்பு:
   பூஸ் க்கு.., உணவு, மருத்துவம் இப்படியான விசயங்களில் நீங்கதான் எனக்கு ”பொஸ்” அஞ்சு:).., மற்றதிலெல்லாம் நான் தான் பொஸ்:) சொல்லிட்டேன்ன்ன்:)). மியாவும் நன்றி அஞ்சு.

   Delete
 9. என்னவொரு பிரியம் அருமை

  ReplyDelete
 10. பூனைகளை எப்படிப் பழக்குவது என்று நான் முன்னர் கேட்ட கேள்விக்கு பதில் பாதிரி இருக்கிறது பதிவு. ரொம்பப் பொறுமை வேனுமுங்கோ... நமக்கு அது ரொம்ப கிடையாது! ரசித்து வளர்க்கிறீர்கள். ஆசீர்வதிக்கப் பட்ட பூனைகள்!

  தம போட்டாச்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரர் ஸ்ரீராம் வாங்கோ..

   அது உண்மைதான், நீங்கள் கேட்டபோதே மனதில் நிறைய பதில்கள் வந்துது, அப்போ மொபைலில் பதில் போட்ட காரணத்தால் நிறைய எழுத முடியவில்லை.

   உண்மைதான் வளர்த்தால் மட்டும் போதாது, அவற்றோடு ரைம் ஸ்பெண்ட் பண்ணோனும்.. இல்லையெனில் பாவம்தானே. இவ வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வரும்போது நீங்க பார்க்க வேணுமே.... ம்ம்ம்மாவ்வ்வ்வ் ம்ம்மாஆஆவ்வ் என பெரிய சவுண்டோடு ஒவ்வொரு றூம் ஆக தேடித் தேடி என்னிடம் வருவா, தப்பித்தவறி நான் பாத்ரூமில் எனில்.. வாசலிலேயே டோர் ஐ அண்ணாந்து பார்த்தபடி இருப்பா.. கதவைத் திறக்கும்போது பெரிய பரிதாபமாக இருக்கும்...

   எங்கள் பிள்ளைகள் சின்னவர்களாக இருக்கும்போதும் இப்படித்தான், தமக்கு ஏதும் தேவை எனில்.. நான் கதவைத் திறக்கும்வரை பாத் றூம் வாசலில் இருப்பார்கள்... இப்போ அப்படியே இவ பண்றா:).. ஹா ஹா ஹா..

   பூனை மட்டும் என்றில்லை... நான் என்ன வளர்த்தாலும் இப்படித்தான்.. பயங்கரமாக ஒட்டியே இருப்பேன். மிக்க நன்றி.

   Delete
 11. பழைய நடைப் பதிவில் பூனைக் கவிதை போட்டிருந்தேனே.. நோ கமெண்ட்ஸ்?

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ என்ன இப்படிக் கேட்டு எனக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சிட்டீங்க... உடனேயே பதில் போட்டேன், அஞ்சுவும் உங்களுக்கு பதில் போட்டாவே நீங்கதான் போய்ப் படிக்கவில்லை கர்ர்ர்ர்:), இப்போ ஓடிப்போய் கண்ணில் தெரியுதோ என கன்போம் பண்ணி வந்தேன்.... சொற்ஜ் ரைம் ஆச்சு ஈவினிங் வாறேன் பதில்களுக்கு.

   Delete
  2. அது சொறி.... ஸ்பெல்லிங்கூஊஉ ஹா ஹா

   Delete
  3. ச்கோ ஸ்ரீராம்..நான் எப்பவுமே.. என் பக்கம் வரும் கொமெண்ட்ஸ்களுக்கு பதில் போடாமல் விடுவதில்லை.. ஆரம்பம் முதலே என் எந்தப் போஸ்ட்டைப் பார்த்தாலும் உங்களுக்கு அது புரியும்.. ஏதோ ரீ கொடுக்காமல் விட்டுவிட்டதுபோல இருக்கும் எனக்கு பதில் கொடுக்காட்டில்.. பழகிப்போச்செனக்கு.

   சும்ம்மா ஒரு ஸ்மைலி போட்டாலே, அதுக்கு 2 வரி பதில் போட்டுவிடுவேன்ன்:).. ஹா ஹா ஹா..

   அதனால நீங்க உங்கட நோட்டிபிகேசனைக்கூட நம்பாமல் விடலாம், ஆனா அதிரா நியூ போஸ்ட் போட்டிருக்கிறேன் எனில்.. பழைய போஸ்ட் இல் இருக்கும் அத்தனை கொமெண்ட்ஸ்களுக்கும் பதில் போட்ட பின்னரே நியூ போஸ்ட் போடுவேன்...

   நான், நியூ போஸ்ட் போட்ட பின்னர்.. பழைய போஸ்ட்களுக்கு வரும் கொமெண்ட்களுக்கு மட்டுமே பதில் போட தாமதமாகலாம்.. தெரியாமல் சிலது விடுபட்டும் போயிருக்கலாம். மிக்க நன்றி.

   இனிமேல் நோட்டிபிகேசனை நம்பாமல் நேரே வந்து பாருங்கோ.. என சொல்லிக்கொண்டு:)...

   Delete
 12. டெய்சி...sooo cute..

  எனக்கு இந்த மாதிரி அனுபவம் இல்லை...ஆன உங்களையும் , உங்க செல்ல மகளையும் பார்க்க சந்தோசமா இருக்கு..


  டெய்சி நிக்கிற அந்த woollen mat...beautiful colour..

  டைரிக்கு பக்கத்துல இருக்க பென்சில்...nice

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ... அனைத்தையும் பொறுமையாக ரசிச்சு.. அதனை சொல்லியும் இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கெனக்கு.

   நான் வளர்த்த அனைத்து செல்லப்பிராணிகள் பற்றியும் தொடரா, வேறு ஒரு தளத்தில் முன்பு எழுதியிருக்கிறேன்.. முடிந்தால் இங்கே[என் புளொக்கில்] அவற்றை போட முயற்சிக்கிறேன் பின்பு. மிக்க நன்றி அனு.

   Delete
 13. வணக்கம் சகோதரி...

  வலைத்தளங்களிலேயே உங்கள் தளம் தான் வண்ணவண்ணமாக இருக்கிறது... அதற்கு முதலில் பாராட்டுக்கள்...

  சரி, இந்தப் பதிவையே எடுத்துக்காட்டாக சொல்கிறேன்...

  // எங்கள் டெய்சி பற்றிச் சொல்வதானால், ஒரு புத்தகமே எழுதலாம், ஊரில் பல வளர்த்தோம் ஆனா வெளிநாடு வந்து பலகாலத்தின் பின்பு, முதன் முதலில் பூனை வளர்க்கவே ஆசையாக இருந்துது, பெட் ஷொப் போனோம் அங்கு பூஸ் இருக்கவில்லை, அழகழகான முயல்குட்டிகள் புசுபுசுவென இருந்திச்சா... பார்த்தவுடன் எனக்கு ஆசை அதிகமாகி:) இந்த முயல் இப்பவே எனக்கு வேணும் எனக் கேட்டு உடனேயே வாங்கி வந்தோம், மொப்பி எனப் பெயரிட்டு வளர்த்தோம்... இந்த
  ஆல்பத்தில் பாருங்கோ எங்கள் மொப்பிப் பிள்ளையை... //

  இவ்வாறு எழுதி விட்டு அந்த "Insert jump break" ஐகானை சொடுக்கி விட்டு, தொடர்ந்து எழுதி இருக்க வேண்டும்...

  இப்போது கூட கடைசியாக வெளியிட்ட ஏழு பதிவுகளை "edit" செய்யலாம்... அதாவது ஒவ்வொரு பதிவையும் திறந்து, பதிவின் ஆரம்ப பத்திக்கு அடுத்து "Insert jump break" ஐகானை சொடுக்கி விட்டு, "update" செய்யவும்... அப்போது "Fix, Dismiss, Ignore" என்று வந்தால், "Dismiss" என்பதை சொடுக்கி விட்டு, "update" செய்யவும்... வேண்டாம் என்றால் விட்டு விடவும்... அடுத்த பதிவிலிருந்து இது போல் செய்யவும்...

  ஒரு நிமிடம் உங்கள் தளத்தை (Home Page :- http://gokisha.blogspot.com/) திறந்து பாருங்கள்... ஏழு பதிவுகள் முழுமையாக வருகிறது... தளம் திறக்க எவ்வளவு நேரம் ஆகிறது பாருங்கள்...

  இதே நீங்கள் கடைசியாக வெளியிட்ட ஏழு பதிவுகளுக்கும் இந்த "Insert jump break" ஐகானை சொடுக்கி விட்டு, பதிவுகளை வெளியிட்டு இருந்தால், உங்கள் Home Page :- http://gokisha.blogspot.com/ எப்படி இருக்கும் தெரியுமா...? ஏழு பதிவுகள் சின்ன சின்னதாகவும், தளமும் விரைவில் திறக்கும்... வாசகர்கள் அந்த ஏழு பதிவுகளில், எந்த பதிவுக்கு செல்ல வேண்டுமோ, அந்தப் பதிவின் கீழுள்ள "Read more" சொடுக்கி செல்வதற்கு எளிதாக இருக்கும்... தளத்தின் "Pageviews" கன்னாபின்னாவென்று கூடும்...

  ReplyDelete
  Replies
  1. ஆஆ வ்வ்வ்வ்வ்வ்வ் மினக்கெட்டு என்னா பெரிய கொமெண்ட் போட்டிருக்கிறீங்க.... மிக்க மிக்க நன்றி... இப்போ படிக்க இது ஒன்றும் கஸ்டமில்லையே செய்திடலாமே என தோணுது... செய்கிறேன். இது மொபைல் பதில், ஸ்கூலால் வந்து கொம்பியூட்டரில் செய்திட்டு சொல்லுறேன்... உங்கள் பக்கம் படிச்சேனா பயந்திட்டேன் ஹா ஹா ஹா ... நன்றி.

   Delete
  2. ///திண்டுக்கல் தனபாலன்Tuesday, March 14, 2017 2:10:00 am
   வணக்கம் சகோதரி...

   வலைத்தளங்களிலேயே உங்கள் தளம் தான் வண்ணவண்ணமாக இருக்கிறது... அதற்கு முதலில் பாராட்டுக்கள்...///

   ஹா ஹா ஹா இண்டைக்கு முழுவதும் நான் ஃபிளைட்டிலேயே இருந்தேன்ன்ன்:) கீழே லாண்ட் ஆகவே இல்லை:).. ஆனா கிழக்கால மேற்கால எல்லாம் ஒரே புகை மூட்டம்:) என்னால பிளைட் விண்டோவால வெளியே பார்க்கவே முடியேல்லை:) .. நாடெல்லாம் ஒரே புகை:).. ஹா..ஹா..ஹா... மிக்க நன்றி. [ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. இல்லாட்டில் இன்னும் புகை கூடிடும்ம்ம்ம்ம்ம்:)]

   Delete
  3. //ஒரு நிமிடம் உங்கள் தளத்தை (Home Page :- http://gokisha.blogspot.com/) திறந்து பாருங்கள்... ஏழு பதிவுகள் முழுமையாக வருகிறது... தளம் திறக்க எவ்வளவு நேரம் ஆகிறது பாருங்கள்...///

   இதுதான் என் கவலையாக இருந்துது, நான் நினைச்சேன், நான் ஒரு வருடத்துக்கு மேலாக புளொக் எழுதாமல் விட்டமையால், ஏதோ வைரஸ் வந்து ஒட்டிவிட்டதோ என்னமோ .. இல்லை ஏதும் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறதாக்கும் என நினைச்சுக்கொண்டிருந்தேன்...

   Delete
  4. ///இதே நீங்கள் கடைசியாக வெளியிட்ட ஏழு பதிவுகளுக்கும் இந்த "Insert jump break" ஐகானை சொடுக்கி விட்டு, பதிவுகளை வெளியிட்டு இருந்தால், உங்கள் Home Page :- http://gokisha.blogspot.com/ எப்படி இருக்கும் தெரியுமா...?////

   நான் உட்பட பலபேருக்கு இந்த சிம்பல் ஏன் இருக்குது என்றே தெரியாது..:).. எதுக்காக இருக்குது என நினைத்ததோடு விட்டுவிட்டேன்:).. இப்போதான் விளக்கமாக புரிய வைத்திருக்கிறீங்க...

   /// ஏழு பதிவுகள் சின்ன சின்னதாகவும், தளமும் விரைவில் திறக்கும்... வாசகர்கள் அந்த ஏழு பதிவுகளில், எந்த பதிவுக்கு செல்ல வேண்டுமோ, அந்தப் பதிவின் கீழுள்ள "Read more"////

   சத்தியமா இப்போ ஸ்பீட்டில் மாற்றம் தெரியுது, ஸ்லோவாக இருந்தமையால் நான் எப்பவும்,என் புளொக்கை இரண்டு விண்டோக்களில் திறந்து வைத்துவிட்டே, பின்னூட்டங்களுக்கு கடகடவென மாறி மாறிப் பதில் போட்டு முடிப்பேன், இப்போ ஒன்று திறந்தாலே போதுமாய் இருக்கு...

   இந்த முழங்காலுக்கும்.. மொட்டந்தலைக்கும் இப்படி ஒரு முடிச்சிருக்கும் என எனக்கு தெரியாது... இதுதான் - இதுக்கு காரணம் என மினக்கெட்டு கொமெண்ட் போட்டு புரியவைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி... முழங்கால்ல்..= read more, மொட்டந்தலை = "Insert jump break".. ஹா ஹா ஹா மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.

   Delete
  5. மிக்க நன்றி சகோ டிடி ..நானும் நீங்க அதிராவுக்கு பின்னூட்டத்தில் சொன்ன மாதிரியே செய்திட்டேன் ஜம்ப் பிரேக் போட்டாச்சு
   அதோட இத்தனை நாள் ஒரு பதிவுதான் காட்டும் மெயின் பக்கம் இப்போ 5 போஸ்ட் காட்டறது வசதியா இருக்கு

   Delete
  6. பார்த்தேன் அஞ்சு உங்க பக்கமும் சூப்பரா இருக்கு.. அதுமட்டுமில்லை இப்போ எங்கு போனாலும் ரீட் மோர் தான் காட்டுது ஹா ஹாஅ ஹா..:)

   Delete
  7. நானும் மாற்றி விட்டேனே முதலிலேயே...! அது மட்டுமல்லாமல் கலையரசி மேடம் தளத்தில் DD சொல்லியிருந்ததைப் படித்து read more ஐ "மேலும் படிக்க" வாகவும் மாற்றி விட்டேன்! எல்லாப் புகழும் DD க்கே.... நன்றி DD.

   Delete
  8. ஆவ்வ்வ்வ்வ் நானும் உடனேயே உங்கள் தளத்தில் ரீட் மோர் பார்த்து ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்ன் ஹா ஹா ஹா...:)..

   Delete
 14. செல்லப்பிராணிகள் மேல் இவ்வளவு பிரியமாக இருக்கவும், அதை ரசிச்சு ரசிச்சு இவ்வளவு பெரிய போஸ்ட் போடவும் அதன் மேல் தனி ஆர்வமே வேண்டும் வாழ்த்துக்கள்.
  ஏன்னு தெரியல. எனக்குலாம் இந்த பூனை நாய் இப்படி எந்த செல்ல பிராணியையும் பிடிக்க மாட்டேங்குது :-(

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கவிக்கா வாங்கோ.. எங்கே அடிக்கடி காணாமல் போயிடுறீங்க.. புதுக்கவிதையையும் காணவில்லை..

   உண்மைதான் சிலருக்கு பூனை காலில் முட்டினாலே ஏதோ பூச்சி புழு ஊர்வதுபோல நினைச்சு அலறுவார்கள்:)... அது இயற்கையாக வரோணும் போல...:).

   மிக்க நன்றி கவிக்கா.

   Delete
 15. பூனையை அருமைக்குழந்தையாய் பாவித்து அன்பையெல்லாம் கொட்டி ஆசையோடு வளர்க்கும் உங்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிற‌து அதிரா! மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா, நீங்களும் அடிக்கடி காணாமல் போயிடுறீங்க.. நலம்தானே.. வளர்க்கும்போது நன்றாகவே இருக்கு.. ஆனா இவற்றுக்கு ஒன்று ஆகும்போதுதான் எப்படித் தாங்குவது என எண்ண வைக்குது...

   “இதுவும் கடந்து போகும்”.. என நினைப்பேன்ன்.. துன்பம் வரும்போதெல்லாம்ம்ம்..

   மிக்க நன்றி மனோ அக்கா.

   Delete
 16. பூனை பற்றிய பகிர்வு சிலிர்க்க வைக்குது. வீட்டில் மகனும் பூனை வேண்டும் என்று அடம் பிடிக்கின்றான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ.. மகனுக்குப் பூனை வேணுமாமோ? என்னைப் பொறுத்து நாய்க்குட்டி எனில் ஓகே ஆனா பூனை வளர்க்க இன்னும் கொஞ்சக்காலம் போனால் நல்லது, சின்னவர் குழந்தை எல்லோ.. அதனால யோசிச்சு முடிவெடுங்கோ.

   Delete
 17. பூனை முடிகொட்டுவது கூடாது என்பார்கள் நல்ல வேலை நான் வளர்க்கும் பூனை என்று பதிவு போட வழியில்லை)))

  ReplyDelete
  Replies
  1. //நான் வளர்க்கும் பூனை என்று பதிவு போட வழியில்லை)))///

   ஹா ஹா ஹா.. மிக்க நன்றி நேசன்.

   Delete
 18. சகோதரி... மிகவும் சந்தோசம்... நன்றிகள் பல...

  ஏனென்றால் உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்தை பார்த்தேன்...

  நம் தளம் அழகுக்கு மட்டுமல்ல... முக்கியமாக :-

  (1) உங்கள் தளத்தில் email subscribe செய்தவர்களுக்கு இனி உங்களின் முழு பதிவும் போகாது... பதிவின் தலைப்பும் + படமும் + "jump break" முன்பு உள்ள சில வரிகளும் + "Read more >>"மட்டும் செல்லும்...

  (2) இதே போல் தான் Blog I Follow-விலும் தோன்றும்...

  (3) Reader-ல் பதிவுகளை வாசிப்பவர்களும், இனி உங்கள் முழு பதிவை படிக்க, உங்கள் தளம் தான் வர வேண்டும்...

  (4) இதை விட முக்கியமான விசயம் என்னவென்றால் :- நம் பதிவுகள் சற்று பெரியதாக (நீண்ட பதிவாக) இருந்தால், email subscribe செய்தவர்களுக்கு, அதைப் பதிவு செல்லாது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்... ஆனால் இனி அந்தப் பிரச்சனை இல்லை...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் மீண்டும் மீண்டும் வந்து விளக்கமாக சொல்லித் தருவதற்கு மிக்க மிக்க நன்றிகள் சகோ டிடி. பேஜ் வியூ அதிகரிப்பதன் சூட்சுமம் என்ன என இப்போ தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி.

   Delete
 19. அப்புறம்...

  உங்களை போலவே திருமதி ஞா. கலையரசி அவர்கள் செய்து விட்டார்கள்... ஆனால் அவர்களுக்கு மேலும் இரு விருப்பங்கள் :-

  1) "Read more" என்பதை "மேலும் படிக்க" என்று மாற்றினால் நன்றாக இருக்கும்... அது எப்படி...?

  2) முகப்பு (Home Page) பக்கத்தில் சின்ன சின்னதாக பதிவுகள் வருகிறது... ஆனால் அனைத்து பதிவுகளிலும் "Read more" முன்னால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வருகிறது... அதை மாற்ற வேண்டும்... அதாவது முகப்பு (Home Page) பக்கத்தில் வரக்கூடாது... ஒவ்வொரு பதிவிற்கும் அதன் தலைப்பிற்கு கீழ் வர வேண்டும்... அதை எப்படி செய்வது...?

  பதில்கள் அவர்கள் தளத்தில் சொல்லி உள்ளேன்...

  இணைப்பு : http://unjal.blogspot.com/2017/03/blog-post.html

  நீங்கள் செய்து பாருங்கள் சகோதரி...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அதே அதே... இதில் 2 வதுக்கு நானும் கேட்க யோசித்தேன், ஆனா ஆகவும் கஸ்டம்கொடுக்கக்கூடாது, இன்னொரு தடவை கேட்கலாம் இப்போ இது போதும் என நினைச்சேன் சொல்லிட்டீங்க....

   உங்கள் பூட்டில்.. கலையரசிக்கு நீங்கள் கொடுத்த பதில் படிச்சேன் இப்போ, கொஞ்சம் ரைம் எடுத்துச் செய்யோணும்.. விரைவில் செய்கிறேன். ஆனா எனக்கு தமிழ்மணப்பட்டை, இப்போ இருப்பதைப்போலவே வரோணும்.. அதாவது போஸ்ட்டின் முடிவில் ஆனா றீட் மோர் என்பதில் தெரியக்கூடாது.

   உங்கள் பக்கத்தில் இருப்பதைப்போல வரோணும், இதில் தலைப்புக்கு கீழே வரும் என்கிறீங்க.. அது விருப்பமில்லை எனக்கு.

   சரி எதுக்கும் .. கொஞ்ச நாள் ஆகட்டும் முயற்சிக்கிறேன்ன்... மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
 20. மகளுக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்கறீங்க.. என்னமா அழகா தான் நினைக்கிறதை சாதிக்கிறாங்க.. அழகு செல்லம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா, உண்மைதான், தனக்கு என்ன தேவை என்பதைச் சொல்ல ஒவ்வொரு ஸ்டைல் வச்சிருக்கிறா.. அது எனக்கு மட்டுமே புரியும்.. வெளியே போகக்கேக்கிறாவா.. விளையாடவரச்சொல்லி அழைக்கிறாவா... பசிக்குதெனக் கேட்கிறாவா என:)...

   மிக்க நன்றி கீதா.

   Delete
 21. பூனைக்குட்டி ரொம்ப லக்கி! இப்படி உங்கள் அன்பிலும் அரவணைப்பிலும் தவழ்கிறாள்!! வாழ்த்துகள் இருவருக்குமே!!

  கீதா: அட ! அதிரா ஆண்டி இப்படி டெய்சியை இங்க மெயில் பெட்டியில் ஸ்பாமில் போட்டு பூட்டிவிட்டு என் கண்ணில் படக்கூடாதுன்னுதானே!! ம்ம்ம் டெய்சியை எனக்கு மட்டும் காமிக்கச் சொன்னேன் என் அம்மாவிடம்....நான் நல்லவளாக்கும் நான் ப்ரௌனி...நான் டெய்சியைப் பார்த்தா துரத்துவேன் ஆனா கடிக்க மாட்டேன். ஃப்ரென்ட் ஆகிடுவேன்...ஆனா இந்த கண்ணழகியிட்ட காமிக்காதீங்கோனு சொன்னேன் அம்மாகிட்ட....கண்ணழகி வெரி பேட் கேர்ல்...பார்த்து துரத்திக் கடிச்சுடுவா....நான் டெய்சியை பார்த் தா முகர்ந்து பார்த்துட்டு தட்டி தட்டி விளையாடுவேன்...ஆனா துரத்துவேனாக்கும்....டெய்சி ரொம்ப அழகா இருக்கா....ஜெசி போல...மல்டி போல...டெய்சி ரொம்ப சேட்டை பண்ணினா எங்கிட்ட சொல்லுங்கோ ஓகேயா...நான் அவளைச்க் சொல்லி வைக்கிறேன் அதிரா அம்மாவைப் படுத்தாதேனு...பௌ பௌ பௌ...என் வாழ்த்துகள் டெய்சி அம்மா ரொம்ப செல்லம் கொடுக்கறாங்கஓ என் அம்மாவைப் போல ....என் அம்மாவுக்கும் பூஸ் வளர்க்க ஆசை ஆனா எங்க ரெண்டு பேரில இந்த கண்ணழகி நினைச்சு பயம்....கண்ணழகிகிட்ட சொல்லிடாதீங்க னான் டெய்சி பார்க்க வந்தேன்னு...அவளைப் பத்திச்க் சொன்னதையும் சொல்லிராதீங்கோ...

  இப்ப தூக்கம் வருது பை பை டெய்சி...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா துளசி அண்ணன், பதில் ரொம்பத் தாமதமாகி விட்டமையால்.. நன்றியோடு நிறுத்திக் கொள்கிறேன்.

   Delete
 22. டெய்ஸி வடிவா இருக்கிறா; டெய்ஸிட மம்மியும் தான். :-) இங்கயும் டெய்ஸி போல ஒரு பெரிய ஆளும் ஒரு குட்டிப் பிள்ளையும் வந்து போறாங்கள். இதனால் ட்ரிக்ஸியும் ட்ரேஸியும் பகலில் அடைபட்டுக் கிடக்கினம்.

  குட்டிப் பிள்ளையோட நல்லா நேரம் போகும். Enjoy.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா, லேட்ட வந்த எல்லோருக்கும் பதில் தரவும் லேட்டாகிட்டேன் மன்னிச்சுக்கொள்ளவும்.. ஹா ஹா ஹா ஏன் ட்றிக்ஷி.. ரேஸிக்கு, பூஸாரைக் கண்டால் பயமோ.. மிக்க நன்றி.

   Delete
 23. என்னால இதை கற்பனை பண்ணிக்கூட பார்க்க இயலவில்லை. நான் PET எதுவும் வளர்த்ததே கிடையாது. நான் பையன் என் வேலைக்கு (குழந்தையா இருந்தபோதும், இப்போதுமே) இடைஞ்சல் பண்ணினா 'கர்ர்ர்ர்ர்ர்ர்' என்பவன். பூனையோ நாயோ பக்கத்துல படுத்திருக்கும்போது அது கடித்துவிடாதா? மறந்துபோய் தூக்கத்துல அமுக்கிட்டா அது கத்தாதா?

  பிராணிகளிடம் இவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களே ( நீங்கள், ஏஞ்சலின், ஸ்ரீராம் மற்றும் பலர்). எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். IT REQUIRES GENUINE AFFECTION AND LOT OF PATIENCE. WOW.

  (இதுக்கு ஏஞ்சலின் போட்டிருந்த லிங்க் மூலமா வந்தேன்).

  ReplyDelete
  Replies
  1. /பூனையோ நாயோ பக்கத்துல படுத்திருக்கும்போது அது கடித்துவிடாதா? மறந்துபோய் தூக்கத்துல அமுக்கிட்டா அது கத்தாதா?//

   ஹாஹாஆ :) இல்லை இதுவரை எங்களுக்கு அப்படி நடந்ததில்லை :)

   என் கணவர் குறட்டை போட்டா மட்டும் ஜெஸ்ஸி பயந்து அலறி ஓடிப்போய் கிட்ட பார்ப்பா :)
   இந்த pets விஷயத்தில் நிறைய இருக்கு எங்கள் சொந்த அனுபவம் ..சில சமயம் நினைப்பேன் ஓவரா போரடிக்கக்கூடாதுன்னு விட்டிடுவேன் ..இதை இங்கே உங்களுக்கு சொல்றேன் .6 /7 மாசம் முந்தி மல்ட்டி நான் அடாப்ட் செஞ்சேன் அந்த கதையில் கூடஎழுதின பூனைக்கு திடீரென என்னாச்சோ தெரில மூன்று நாள் சாப்பிடல்லை .எங்க ஜெஸ்ஸி சின்னத்தில் இருந்து வளர்ப்பதால் அவளுக்கு எல்லா வாக்சின் போட்டிருக்கோம் ஆனா மல்ட்டி சில குறைபாடுகளுடன் பிறந்த பூனை .எங்கள் வெட் சொன்னார் டெஸ்ட் செய்ய நிறைய செலவாகும்னு ..அதிகமில்லை எக்ஸ்ரே எடுக்க 500 பவுண்ட்ஸ் அப்புறம் சில ஆபரேஷன் செய்ய இன்னும் செலவாகும்னு ..எனக்கு எந்த ஜெவராசியையும் கஷ்டப்படுத்தக்கூடாதது ...இந்த மல்ட்டி நேரே மகள் ரூமுக்கு சென்று படுத்திட்டா 4 நாட்கள் ஒன்றும் சாப்பிடலை ..அப்போ நானா தான் தினமும் பால் தண்ணீர் அப்புறம் கொஞ்சம் காமோமைல் தேநீர் மற்றும் கொஞ்சம் க்ரீன் டீ இவற்றை அப்போ ஸ்பூனால் ஊட்டி விட்டேன் நானாக நினைத்தோம் இந்த பூனை எழும்பாது அப்படியே சாமிகிட்ட போகப்போறான்னு :( நான்காம் நாள் காலை பயத்துடன் அவள் அறைக்கு சென்று பார்த்தேன் சேரில் இருந்து மெதுவாய் தலை தூக்கினா .கிட்ட சென்றதும் என் நெற்றியில்நக்கி விட்டது ..எனக்கு அப்படியே சிலிர்த்தது !! அப்புறம் மெதுவா எழும்பி இப்போ பழைய நிலைக்கு நார்மலாகிட்டா :)
   இன்னமும் நன்றியுடன் இருக்கு என்னிடம் ..

   Delete
  2. நான் இதை இன்டெரெஸ்டிங்காகத்தான் படித்தேன். வாவ்... இதுக்கு ஒரு தனிப்பட்ட அன்பு வேணும். ரெண்டு நாட்களுக்குள் வாட்சப்பில் ஒரு நெதர்லாந்த் சிம்பன்சி, தன் இறக்கப்போகும் நாட்களில் சாப்பிடாமல் இருந்து, அதனை வளர்த்தவர் வந்தவுடன், அவரைக் கட்டிக்கொண்டு அவர் கொடுத்ததைச் சாப்பிட்டு பிறகு இறப்பதைப் பார்த்தேன். சிலிர்த்துவிட்டது.

   எனக்குத் தெரிந்தவர்களும், 'நாய்' என்று சொல்வதை விரும்பமாட்டார்கள். அவர்கள் வைத்திருக்கும் பெயரைத்தான் சொல்லவேண்டும். அவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினராகத்தான் அதனைப் பார்க்கிறார்கள்.

   ஆபீஸ் நண்பரின் அம்மா (ஊரில்) ஒரு நாய் வளர்த்துவந்தார். அதனைக் கூட்டிக்கொண்டு செல்லமுடியாத எந்த இடத்துக்கும், சொந்தக்கார வீட்டுக்கும் அவர் செல்வதே கிடையாதாம். அந்த நாய் இறந்தபோது அவருக்கு அவ்வளவு துக்கமாம். அரற்றிக்கொண்டே இருந்தாராம். இதையெல்லாம் கேட்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும்.

   அன்பே சிவம் படம் பார்க்கும்போதும் எனக்கு அந்த எண்ணம் வந்தது.

   Delete


  3. எனக்கும் அன்பே சிவம் படத்தில் வரும் அந்த காட்சிகள் ரொம்ப பிடிச்சது ..
   இந்தாங்க இன்னொரு லிங்க் உங்களுக்கு :)


   http://kaagidhapookal.blogspot.co.uk/2013/01/blog-post_21.html

   Delete
  4. வாங்கோ நெல்லைத் தமிழன், லிங்கைப் பிடிச்சு வந்தமைக்கு மிக்க நன்றி. நான் நினைச்சிருந்தேன் நீங்க இதை முன்பே படிச்சிருப்பீங்களென.

   உண்மைதான் அஞ்சு சொன்னதைப்போல நிறையக் கதைகள் சொல்லிக்கொண்டே போகலாம். படிப்போருக்கு போறிங்காகிடுமோ என நினைச்சே குறைத்து விடுவது வழக்கம்.

   எங்களுக்கும் டெய்சியைப் பூனை என்பது ப்டிக்காது, அத்தோடு அவவை நாம் யாரும் வா.. போ எனப் பேசுவதில்லை.. வாங்கோ போங்கோ தான்..

   இன்னொன்று எங்கள் பிள்ளைகள் இருவருக்கும் வா போ... எனும் வேர்ட்ஸ் ஏ தெரியாது, தமிழில் பேசும்போது வாங்கோ போங்கோ சொன்னார், சொன்னா இப்படித்தான் பேசுவார்கள்.. நாமும் அப்படியேதான்..

   அதனால டெய்சிப்பிள்ளையையும்.. டெய்சி வாறா, டெய்ஸி ஸ்லீப் பண்ணுற... இப்படித்தான் பேசுவோம்.. அவ ஒரு அனிமல் என்றே தெரிவதில்லை... பேசத் தெரியாத குழந்தை.

   ஆனா என்னோடு மட்டும் பேசுவா, நான் விடாமல் கதை கேட்பேன் குழந்தையிடம் பேசுவதுபோல, உடனே தானும் அதுக்கு.. மியாவ்.. ம்ம்ம்யாவ்வ் இப்படிக் குட்டிப் பதில்கள் சொல்லுவா,, நம் வீட்டுக்கு வரும் வெள்ளையர்கள்கூட ஆச்சரியப்படுவினம், ஏனெனில் பூனை எனில் சாப்பிடும், நித்திரை கொள்ளும் இப்படித்தான் பெரும்பாலானோருக்கு தெரியும்...

   சரி ஓவரா அலட்டிட்டேன்:) மிகுதி இதன் பார்ட் 2 வில் தொடரும்:).

   ஓம் அஞ்சு நீங்க சொல்லியிருக்கிறீங்க அக்கதை எனக்கு.

   தமிழில் எழுதும் கஸ்டத்தால் பதிலை சுருக்கிட்டேன்:)

   மிக்க நன்றி.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.