நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Sunday, 26 March 2017

நானும் விவசாயிதான்:)

நானும் படு பயங்கர உழைப்பாளிதான்:).. இங்கே என் வலது பக்கத்தில் இருக்கும் லேபல்களில்...  “என்னுள்ளே புதைந்து கிடப்பவை”, எனும் லேபலை கொஞ்சம் ஓபின் பண்ணிப் பாருங்கோ தெரியும் என் கை வேலைப்பாடெல்லாம்:)..


மீபத்தில் எங்கள் வீட்டுக்கு அண்ணன் வந்திருந்தார், அப்போ நான் என் குயிலிங் வேலைகளை எல்லாம் எடுத்துக் காட்டினேன்:), உண்மையில் அசந்து போயிட்டார்... என்ன சூப்பரா இருக்கு, நீ இன்னும் நிறைய செய்து ஓடருக்கு கொடுக்கலாமே என்றிட்டார்ர்... (ஙேஙேஙேஙே.. அஞ்சு கேட்டிருந்தால், என்னை ஓட ஓட அடிச்சிருப்பா:)).

துபோலத்தான், இங்கு பலத்த குளிர் எப்பவும் இருக்கும், ஒரே மழை பெய்யும்... இவ்ளோ இன்னல்களுக்கு இடையிலும்... “அடாது மழை பெய்தாலும், விடாது பயிர்ச்செய்கை நடத்துவேன்”:).. எங்க வீட்டுக் கார்டினில் விளைந்த பயிர்களைப் பார்க்க, முதலில்  ரிக்கெட் எடுங்கோ.. கலரி- 50 பவுண்டுகள்.. முதலாம் பெட்டி- 200 , 2ம் பெட்டி- 350, பல்கணி- 500..:).

து பின் கார்டின் ... இதிலே ஒரு குட்டியூண்டு இடத்தில்தான் பயிர்கள் நடுவோம்:).. இதில் ஊஞ்சல் கட்டியிருக்கும் மரம் பற்றி பெரிய ஒரு கண்ணீர்க் கதை இருக்கு, அதை தனியா சொல்றேன்:).

பூப்பூவாய்ப் பூத்திருக்கு, பார்வையிலே பேப்பிள் பூ, அதிரா கார்டினில் விளைஞ்ச பூ இது என்ன பூ?:)-,  தூதுவளைப்பூவோ?:)


இது வெந்தயக்கீரை

பூசணிக்கொடியை கிச்சின் ஜன்னலில் வைத்து வளர்த்த பெருமை என்னையே சாரும்:).. பூத்துது அழகா, குட்டியா காயும் வந்துது.. தெரியுதெல்லோ படத்தில்.. இதே சைசிலேயே இருந்து வாடிப்போச்ச்ச்ச்:), ஆனா இவ்வருடம்தான் ஒரு அவ்ரிக்கன் பிள்ளை சொல்லிய இடத்தில், அக்கா வீட்டுப் பூசணி இலைகளைச் சுண்டியதாகவும்(வறை) , சூப்பராக இருந்ததாகவும் அம்மா சொன்னா, இது அப்போ தெரிஞ்சிருந்தால் நானும் சமைத்திருப்பேனே:).

இது அவரை மரம், கொடியல்ல... இலைகளுக்கு இடையே கொத்துக் கொத்தாய்க் காய்க்கும், ஆனா இனிப்பானது அதனால இங்குள்ள ஸ்லக் எல்லாம் விடாது கர்:) அதனால் இப்படி உயரத்தில் வைத்திருக்கிறேன்:)

இதுவும் அதே அவரை தான், இது நிலத்திலே, உயரமான ட்ரம் இல் வச்சு வளர்த்தேன்..

 இது, அஞ்சுவும் பங்காளி:) ஆக இருக்கும் பசுமை விடியல் எனும் குரூப்பில் சொல்லியிருந்தார்கள், இப்படி பழைய bag ஐப் பயன்படுத்தி, கிழங்கு செய்யலாம் என, இது கிழங்கை பாதி பாதியாக வெட்டி இப்படி நட்டேன்..

இப்படி வளர்ந்து, இலைகள் பழுப்பு நிறத்துக்கு வந்ததும் (வலது பக்கப் படம்)அறுவடை காலம் என முடிவெடுக்கலாம்

இது நிலத்திலே வேலி ஓரமாக, நீட்டாக ஒரு குட்டி மேடை அமைத்து, கிழங்கும் வெங்காயமும் நட்டேன். மற்றப்பக்கம் புரோக்கோலி, கேல் லீவ்ஸ், கபேஜ் நட்டேன், இப்போ தேடினால் படங்களைக் காணவில்லை.

இப்போ வளர்ந்திட்டினம்.. பார்க்க எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமோ? இந்த அழகுக்காகவேதான் இப்படி தோட்டம் செய்கிறோம்

இப்போ தெரிகிறதோ என்ன பூ என?:) உருளைக்கிழங்குப் பூக்கள். இது சிவப்புக் கிழங்கு நட்டோம், அதனால சிவப்பு பூக்கள், மற்றும்படி நோர்மல் கிழங்கெனில் வெள்ளைப்பூத்தான் வரும், பெரிசா பூர்ப்பதில்லை அவை.

ஆங்ங் கிழங்கு அறுவடை செய்தாச்சு, இது இயற்கை உரம் மட்டும் போட்டு வளர்ப்பதால் சூப்பர் சுவை..

இவை கரட்:), இடையில் கீரை விதைத்தேன், அவை நன்றாக வரவில்லை, குளிர் அதிகம் என்பதால்.. அழகான குட்டிக் கரட்டுக்கள் வந்தன.

கரட் இலையில் சுண்டல்/வறை செய்வோம் சூப்பராக இருக்கும்.

இவை நான் ஆசைப்பட்டு வைத்த கூஸ்பெரி, சூப்பரா காய்க்கும். எனக்கு நெல்லிக்காய் எனில் பைத்தியம்:), ஆனா இங்கு கிடைக்காது என்பதனால்தான் இந்த வெளிநாட்டு நெல்லி:) வாங்கி வச்சோம். [இப்போ எமக்கு தமிழ்க்கடை இருப்பதனால் நல்ல குண்டு குண்டா நெல்லிக்காய்கள் கிடைக்குதே:)]சின்ன குட்டிக் கன்றுதான் ஆனா நல்லா காய்க்குது.

 வெங்காயம், கீரை, கபேஜ் இலை, கூஸ்பெரி அறுவடை:)

இவை நாங்கள் வளர்ப்பதில்லை:) பக்கத்து வளவில் பற்றையாக வளர்ந்து, எங்கள் வளவை எட்டிப் பார்ப்பினம், நான் வெட்ட விட மாட்டேன், [வலிய வரும் சீதேவியைக் காலால உதைக்கக்கூடாது என அம்மம்மா சொல்லுவா:))]அவை கொத்துக் கொத்தா காய்த்து பழுக்கும்,  Blackberries இங்குள்ளவர்களின் பாசையில் இதை  Brumble apple எனவும் செல்லமாக அழைப்பர்கள்:).


இது இப்போ சுடச்சுட எடுத்த படம், வின்டர் காலம் என்பதால் எல்லாம் காய்ந்ததுபோல இருக்கு... இதில் குட்டியாக 5 அடி சதுரத்தில் , ரெடிமேட் Garden beds என கிடைக்குது, அதை வாங்கி பசளை மண் நிரப்பி, இதிலும் கொஞ்சம் பயிர்கள் நட்டோம், இது நிலப்பூச்சி புழுக்களில் இருந்து பாதுகாக்க..

கிட்டவாக போய் எடுத்தேன், கிட்டத்தட்ட 4 மாதங்களின் பின்பு இப்படம் எடுக்கவே கார்டினில் கால் வைத்தேன் இன்று.. ஆனாலும் புரோக்கோலி, கேல் இல் சிலது, எப்படி வளர்ந்து இந்த ஸ்னோவிலும் நின்று பிடிச்சிருக்குது பாருங்கோ, இனி சுண்டல் செய்வேன் விரைவில்..

இது வேலியோரம் நட்ட Kale leaves and Brocoli, இதுவும் இன்று எடுத்த படம், நேற்றும் இன்றும் இங்கு பயங்கர வெயில்..

ஸ்ஸ்ஸ் அப்பாடா என்னிடம் இருந்த ஸ்ரொக் ஐ எல்லாம் தேடிப் பிடிச்சு இங்கின போட்டுவிட்டேன்.

ஊசிக்குறிப்பு:

68 comments :

 1. வீட்டில் சும்மா இருக்காமல் இப்படி பல பயன் உள்ள வேலைகளை செய்து தங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உகளுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ. எனக்கு ச்ச்சும்மா ஓரிடத்தில் இருப்பது பிடிக்காது, உடம்பு முடியவில்லையாயின் மட்டும் நல்லா நித்திரை கொள்ளுவேன் மற்றும்படி இருக்க மாட்டேன்ன்.... ஏதும் நிகழ்ச்சிகள் பார்க்கும்போதுகூட, ஏதாவது செய்தபடியேதான் பார்ப்பேன், சும்மா சோஃபாவில் இருந்து பார்ப்பது பிடிக்காது..

   சரி சரி இதுக்கு மேல சொன்னால் ஓவரா நல்லபிள்ளை என நினைச்சிடப்போறீங்க:)...

   இம்முறை முதலாவதா வந்திருக்கும் உங்களுக்கு.. ஆரியபவான் ஹோட்டலில் சுடச்சுடச் செய்த மட்டின் பிர்ர்ர்ர்ர்ர்ர்ராணி:)...

   இரண்டாவதா வந்து பின்னூட்டம் போடுவோருக்கு, என் புளொக் வழக்கப்படி.. “ஆயாவை” அனுப்பி வைப்பது வழக்கம்:).. இம்முறை ஆயா ரொம்ப மோசமான கண்டிசனில் இருப்பதால் அவவை நன்கு பராமரிக்கும் ஒருவர் தேவை:) பார்ப்போம் யார் மாட்டியிருக்கிறார்கள் என...:) மிக்க நன்றி ட்றுத்.

   ஏனைய பின்னூட்டங்களுக்கு நாளைதான் பதில் தருவேன்ன்.. இன்று முடியல்ல்ல்ல:).. எல்லோரும் என்னை பெரிய மனசு பண்ணி மன்னிச்சுங்கோங்ங்ங்ங்ங்ங்ங்ங்:).

   Delete
  2. நோ நோ !!! நான் அக்செப்ட் பண்ணமாட்டேன் .ட்ரெடிஷன் மாற்றக்கூடாது ..ப்ளீஸ் அந்த லொக் லொக் ஆயாவை ட்ரூத் கையில் புடிச்சி குடுங்க ..இல்லேனா நான் உண்ணா விரதம் இருக்க மாட்டேன் ஆனா .20 சமோசா சாப்பிடுவேன் சொல்லிட்டேன்

   Delete
  3. ஹா ஹா ஹா.. ஆவ்வ் நான் இன்னும் 2 ஆவது ஆரெனச் செக் பண்ணவே இல்லயே:).. என்னாதூஊஊஊஊஊஊ சமோசா சாப்பிடப்போறீங்களோ? நான் 2 வீக்ஸ் அந்தாட்டிக்கா பயணமாகிறேன்ன்ன்:).

   Delete
 2. நீங்கள் இடும் படங்களுக்கு பார்டர் ஏதும் இல்லாமல் படங்கள் போட்டால் படங்கள் இன்னும் தெளிவாக இருக்கும் என்பது என் கருத்து

  ReplyDelete
  Replies
  1. அது ட்றுத், நீங்க சொல்லித்தான் தெரியும் எனக்கு படங்கள் தெளிவில்லை என்பது, ஏனெனில் எனக்கு கொம்பியூட்டரிலும் சரி ஃபோனிலும் சரி நல்ல தெளிவாகவே இருப்பதனால் சந்தேகம் வரவில்லை.

   போடர் என்பது, HTML settings இலேயே போட்டிருப்பதால், நான் படத்தை இணைப்பேன் , போடர் தானாக சேரும், அதனால பாதிப்பு இருக்காது என நினைக்கிறேன், ஏனெனில் இந்த போடர் 3,4 வருடமாக இருக்குது.

   ஆனா இப்போ பெயர் போடுவதற்காக, படங்களை, போட்டோ எடிட்டர் போய் பெயர் மட்டும் போட்டு வருகிறேன், அதனால தான் கிளாறிட்டி குறைகிறதுபோலும்.

   பெயர் போடாமல் படங்கள் போட்டால், கூகிளில் எதையாவது தேடும்போது, நம் படங்கள் அங்கு அநாதரவா இருக்குது பலசமயம், அதனால பெயர் போடுவது நல்லதென நினைச்சேன்.

   கடசி 3 படங்கள் போட்டோ எடிட்டர் போகவில்லை.. அவையும் கிளியர் போதாதோ?..

   Delete
 3. அந்த ஊசிக்குறிப்பு அய்ய்யாங் ஆங்காங் ..எனக்குத்தானே சொல்றீங்க

  ReplyDelete
  Replies
  1. இல்ல நீங்க இதுக்கும் மேல:) அதாவது கொப்பிலயும் தலைகீழாகவெல்லோ தொங்குறீங்க:) கர்:)

   Delete
 4. ஹை ..இங்கேயும் நல்லா வெயிலாச்சே நேற்று 9800 ஸ்டெப்ஸ் இன்னிக்கு 11053 ஸ்டெப்ஸ் வாக் போனோமே நாங்க
  இப்போதான் கார்டின் கொத்தி வச்சேன் அதிரா ..இன்னும் குளிர் இருக்கு எங்க ஏரியால

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இது ஸ்ரெப்ஸ் க்கு:)

   ஆவ்வ்வ் கார்டின் கொத்திட்டீங்களோ... நோஓ இங்கு நான் கால் வச்சதே ஞாயிறுதான், ஆனா இன்று படு பயங்கரக் குளிர்... இனி மழை வருமாம், அடுத்தவாரம் ஹொலிடேஏஏஏஏஏஎ அதனுள் தோட்ட வேலை முடிக்க உள்ளேன் பார்ப்போம்ம்..

   Delete
 5. //எங்கள் வளவை எட்டிப் பார்ப்பினம், நான் வெட்ட விட மாட்டேன், [வலிய வரும் சீதேவியைக் காலால உதைக்கக்கூடாது என அம்மம்மா சொல்லுவா:)//

  போலீஸ் ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸ் இக்கட சூடு ஒரு வீட்டில் பிளக்கரன்ட்ஸ் களவு போகுது புடிங்க soooon

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹ அதானே! ஸ்காட் போலீச் துப்பு துலக்குவதில் கில்லாடிகளாமே எப்படிக் கண்ணில் படாமல் போச்சு ஹஹ்...

   கீதா

   Delete
  2. [im]http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89[/im]

   Delete
 6. இப்போ எமக்கு தமிழ்க்கடை இருப்பதனால் நல்ல குண்டு குண்டா நெல்லிக்காய்கள் கிடைக்குதே:)]//

  ஓ தெரியுமே உங்களுக்கு கிடைக்கறதெலாம் உங்களை மாதிரி குண்டூஸ் தானே :) இன்க்ளூடிங் டெய்ஸி

  டெய்சிக்கு அங்கேன்னா விளையாட்டு :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா,,,.. மனைவிமார் குண்டாக இருந்தால்.. கணவன்மார் சந்தோசமாக வைத்திருக்கிறார்கள் மனைவியை என அர்த்தமாம்... நான் குண்டாகிட்டேன் என முன்பு ஒரு தடவை சொன்னதற்கு, கணவர் சொன்ன பதில் இது.. ஹா ஹா...

   அதேபோல டெய்சி குண்டாக இருக்கிறா எனில்.. அவட மம்மி அவவை ஹப்பியா வச்சிருக்கிறா என அர்த்தம்:)..

   Delete
 7. /இது, அஞ்சுவும் பங்காளி:) ஆக இருக்கும் பசுமை விடியல் எனும் குரூப்பில் சொல்லியிருந்தார்கள், இப்படி பழைய bag ஐப் பயன்படுத்தி, கிழங்கு செய்யலாம் என, இது கிழங்கை பாதி பாதியாக வெட்டி இப்படி நட்டேன்..//

  டாங்க்ஸு பப்லிகுட்டிக்கு ..அப்போ ஒரே வீட்டுத்தோட்டம் போஸ்ட்ஸ்தான் ..மீண்டும் களத்தில் இறங்கணும் நான் :)

  ReplyDelete
 8. /எங்க வீட்டுக் கார்டினில் விளைந்த பயிர்களைப் பார்க்க, முதலில் ரிக்கெட் எடுங்கோ.. கலரி- 50 பவுண்டுகள்.. முதலாம் பெட்டி- 200 , 2ம் பெட்டி- 350, பல்கணி- 500..:).//
  எனக்கு 25 ரூபீஸ் தந்தா நான் ஸ்டூல் வாடகைக்கு தருவேன்
  மக்களே யாரும் ஏமாறாதிங்க ..ஒரு ஸ்டூல் போட்டு ஏறி நின்னா free view முழுத்தோட்டமும் தெரியும் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நீங்க எதில ஏறி நிண்டு எண்டால்லும் பாருங்கோ ஆனா பார்ப்பதற்கு ரிக்கெட் எடுக்கோணும்:), வேணுமெண்டால் பல்கணி ரிக்கெட்டுக்கு மட்டும் ஒரு பிடி கரட் லீவ்ஸ் இலவசம்:)

   Delete
 9. //அப்போ நான் என் குயிலிங் வேலைகளை எல்லாம் எடுத்துக் காட்டினேன்:), உண்மையில் அசந்து போயிட்டார்... என்ன சூப்பரா இருக்கு, //
  அண்ணா சொன்னது அது உண்மை அதிரா உங்ககிட்ட நல்ல திறமை இருக்கு மெயில் டியூஷன் கொடுத்தே அந்த பப்பி அழகா செஞ்சீங்க .இன்னும் தொடர்ந்து செய்யுங்க

  ReplyDelete
  Replies
  1. இப்போ நான் குயிலிங் செய்யாமைக்கு காரணமும் அஞ்சுதான் என்பதனை, எங்கட டெய்சி நேற்றுப் பிடிச்சு வந்த ஸ்பரோவின் காலில் அடிச்சுச் சத்தியம் பண்றேன்ன்ன்:).
   ஹா ஹா என்ன் தெரியுமோ இப்போ அஞ்சு ஊக்கப் படுத்துவதில்லை:), நோ அஞ்சு பிரிண்ட்ஸ் எல்லாம் எடுத்து ரெடியா இருக்கு, இந்த ஹொலிடேய்ஸ்ல செய்திடுவேன் . 3 செய்யோணும்,

   Delete
 10. விவசாயி ..விவசாயீ லாலா லலல்லாலா ..ஒண்ணுமில்ல பாடினேன் :)
  ஓகே எல்லாம் வாசிச்சாச்சு ..பசுமையான தோட்டக்காட்சிகளை கண்ணார கண்டேன் இனிமே அவர்கள் ட்ரூத் அப்புறம் கீதா வந்தா வில் கம் அண்ட் கும் கும்மி யூ :)

  ReplyDelete
  Replies

  1. மீ ரொம்ப் அப்பாவி நல்ல பையன்...இங்க பாருங்க நான் ஒழுங்காக உங்களை பாராட்டி கருத்து சொல்லி இருக்கிறேன் ஆனால் ஏஞ்சல் அவர்கள் உங்களை கும்மி அடிக்க ஐடியா சொல்லுறாங்க

   Delete
  2. அதிரா புள்ள என்னமா உழைச்சு உழைச்சு தேஞ்சு போய்...இருக்குது...80 வயசுலயும் எப்படி உழைக்குது பாருங்க ஏஞ்சல்!!..ஹஹஹ்

   கீதா

   Delete
  3. @geetha 88 years :) அப்போதான் திருப்பி போட்டாலும் சேம் வயசு வரும்

   Delete
  4. பாட்டு நல்லாத்தான் பாடுறீங்க அஞ்சு.... என்னாது கும்மியாஆஆஆஆ ங்ங்ங்ங்ங்ங்க????:).

   Delete
  5. அதேதான் ட்றுத், நீங்க புடலங்காயைக் கட் பண்ணினபோதே நான் புரிஞ்சிட்டேன்ன்ன் நீங்க ரொம்ப நல்லவர் என:)... அஞ்சு உங்களை கும்மிக்கு கூப்பிட்டாலும் நீங்க ஸ்ரெடியா நில்லுங்கோ நம்ம கீதாவைப்போல:)

   Delete
  6. ////Thulasidharan V ThillaiakathuTuesday, March 28, 2017 5:00:00 am
   அதிரா புள்ள என்னமா உழைச்சு உழைச்சு தேஞ்சு போய்...இருக்குது...80 வயசுலயும் எப்படி உழைக்குது பாருங்க ஏஞ்சல்!!..ஹஹஹ்

   கீதா////

   என்னாதூஊஊஊஊஉஹ் 80 ஆஆஆஆஆ அந்த ஆண்டில நான் பிறக்ககூட இல்லயே ... ஓ மை லாட்ட்ட்ட்ட் நோஓஓஓஓ பீஸ் ஒவ் மைண்ட்ட்ட்ட்ட்ட்.... :) விடுங்கோ விடுங்கோ அந்த மரத்தில ஓடிப்போய் நானும் தொங்கப்போறேன்ன்ன்ன்:)

   Delete
  7. ///AngelinTuesday, March 28, 2017 8:37:00 pm
   @geetha 88 years :) அப்போதான் திருப்பி போட்டாலும் சேம் வயசு வரும்///

   karrrrrrrrrrrrrrr இது உங்கள் இருவருக்கும்தான் பொருந்தும்.. ஏன் தெரியுமோ.. நீங்கள் இருவரும்தேன்ன் தலைகீழாகப் பின்னூட்டமிடும் பேர்வழிகள்:).. அதாவது தலைகீழாகப் போட்டாலும் 88 தேன் வரும் மாறாது, திருப்பிப் போட்டாலும் அதே:).. எப்பூடி என் கிட்னியா?:) ஆங்ங்ங்ங் போதும் போதும் கை தட்டினது...:) எனக்கு புகழ்ச்சி புய்க்காதூஊஊஊஊஊ:)..

   Delete
 11. ஸ்காட்லாந்து விவசாயி உங்கள் தேம்ஸ்நதியில் இருக்கும் தண்ணீரை தமிழ்நாட்டிற்கு அனுப்பலாமே அல்லது நீங்களாவது இன்னும் அதிகம் பயிரி செய்து சத்துள்ள காய்கறிகளை தமிழ் நாட்டிற்கு அனுப்பலாமே

  ReplyDelete
  Replies
  1. ஓ அதிரா ஸ்காட்லாண்டா!! நான் ஏஞ்சல் வீட்டுப் பக்கம்னு நினைச்சேன்!!! நல்ல யோசனை

   கீதா

   Delete
  2. ////Avargal UnmaigalSunday, March 26, 2017 10:55:00 pm
   ஸ்காட்லாந்து விவசாயி உங்கள் தேம்ஸ்நதியில் இருக்கும் தண்ணீரை தமிழ்நாட்டிற்கு அனுப்பலாமே அல்லது நீங்களாவது இன்னும் அதிகம் பயிரி செய்து சத்துள்ள காய்கறிகளை தமிழ் நாட்டிற்கு அனுப்பலாமே///
   ஸ்ஸ்ஸ்ஸ் ட்றுத் மெதுவா பேசுங்கோ:) தமிழ்நாட்டுக்காரரின் காதில கேட்டால் அவ்ளோதேன்ன்ன்:)).. உங்களை நயகரால தள்ளிட்டு, என்னைத் தேம்ஸ்ல தள்ள வருவினம்:).. ஆனா நான் எப்படியோ தப்பிடுவேன்ன்.. இத்தனை வருசமா தப்பி வருவதைப்போல:).. நீங்க மாட்டிடுவீங்க:)

   Delete
  3. ///Thulasidharan V ThillaiakathuTuesday, March 28, 2017 5:19:00 am
   ஓ அதிரா ஸ்காட்லாண்டா!! நான் ஏஞ்சல் வீட்டுப் பக்கம்னு நினைச்சேன்!!! நல்ல யோசனை

   கீதா///
   ஹா ஹா ஹா ஏஞ்சலுக்கு எதிர்வீடுதேன்ன்:)

   Delete
 12. அடியாத்தே என்றைக்கும் இல்லாத அதிசயம் இன்றைக்கு நடக்குதே நான் போட்ட கருத்து இந்த தடவை உடனே பதிவாகி இருக்கிறதே

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா... அஞ்சு சொன்னா இனிக் கும்மியை ட்றுத் உம் கீதாவும் தொடர்வார்கள் என:) அதைப் படிச்சதும் நினைவு வந்து.... ஓடினேன்ன் ஓடினேன்ன்ன்:) வெயிட்டிங் கொமெண்ட்ஸ்க்கு ஓடினேன்.. பார்த்தேன்ன்ன் ... டக்குப் பக்கெனப் போட்டுவிட்டேன்ன்ன்ன் ஹா ஹா.. மிக்க நன்றிகள் ட்றுத் அனைத்துக்கும்.

   Delete
 13. என் வோட் எண்: 3

  ஒரேயடியா இப்படிப் பச்சை பச்சையாவாப் பதிவு போடுவது? :)

  இதையெல்லாம் எங்கெங்கு யார் யார் வீட்டில் போய்ப் படமெடுத்துப் போட்டிங்களோ.

  உங்கட அஞ்சுவைக் கேட்டால் தான் உண்மை வெளியே தெரிய வரும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. என்னடா இன்னும் புகையைக் காணல்லியே என ஓசிச்சேன்ன்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி வோட்டுக்கும் வந்தமைக்கும்.

   Delete
 14. ஊசிக்குறிப்பு படம் நல்லா இருக்குது. அங்கு அந்த மரத்தில் தொங்குபவன் உங்கள் பதிவுகளைப் பார்க்கும் நாங்கள் தான் என்பது புரிகிறது. :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஓவராப் பேசினால்.. அந்தக் கொப்பைக் கட் பண்ணி தேம்ஸ்ல விழுத்திடுவேன்ன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:)..

   மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
 15. வணக்கம்
  தாங்கள் விவசாயி என்பதற்கு வேறுஆதாரம் தேவையில்லை இது போதும்....தொடரட்டும் பணி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ரூபன் வாங்கோ.. நானும் இடைக்கிடை உங்கள் புளொக்கை செக் பண்ணுறேன், ஒருவேளை நோட்டிபிகேசன் காட்டுவதில்லையோ என, ஆனா நீங்க பல நாட்களாக எதுவும் எழுதுவதில்லைப்போல இருக்கே..

   ஓ அப்போ ஒத்துக் கொள்றீங்க நானும் விபசாயி என:)ஆவ்வ்வ்வ்வ் மிக்க நன்றிகள்.

   Delete
 16. வாழ்க விவசாயி அதிரா....வளர்க அவர் தோட்டம்...என்றும் பூத்து குலுங்கி மணம் பரப்பட்டும்...


  உங்க தோட்டம் ரொம்ப சூப்பர இருக்கு....

  அந்த ஊஞ்சலும் மரமும்..ஆஹா...

  நீங்க அறுவடை செய்த வெந்தயக்கீரை , கிழங்கு, காரட், ....ம்ம்ம்ம் கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ... மிக்க மிக்க நன்றிகள்.. நீங்களும் இப்படி தோட்டம் செய்வீங்களோ?

   Delete
 17. உங்க தோட்டம்,உருளைகிழங்கு,காரட்,கீரை,வெங்காயம் கலக்கிறீங்க. சூப்பரா இருக்கு. இது போனவருடத்து அறுவடையா..?
  பசுமையை பார்க்க அழகா இருக்கு. இப்போதான் இங்கு வெயில் ஸ்டார்ட். இனிமேல்தான் நானும் தொடங்கனும்.ஆனா நிறைய செய்யமுடியாது. ஒன்று நத்தை விடாது. எப்படி பாதுகாத்தாலும் ,எப்படிதான் ஏறீனமோ தெரியாது. அதோடு இம்முறை கார்டின் புதுசா திருத்தவேலை செய்யனும்.
  ஊஞ்சலில் சந்தோஷமா மகன் ஆடுறார். நல்லா நிறைய பிரயாசைப்பட்டிருக்கிறீங்க. கேல்கீரை நல்ல சத்து என இப்போ நாங்களும் சமைக்கிறம். ஆவ்வ் வெந்தயகீரை.என் கண்ணே பட்டிடும் போல.நல்லா இருக்கு. நேற்று சமைத்தேனே.
  அழகான படங்கள். அப்பாடி இன்னைக்கும் பிரச்சனைதான்.ஆனா ஓபன் ஆகிட்டுது. உங்க பக்கம்தான்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ.. அது என்னமோ தெரியவில்லை, மகியும் சொல்கிறா என் பக்கம் ஓபின் பண்ணி படிக்க முடியுது ஆனா கொமெண்ட் பொக்ஸ் ஓபின் ஆக ரைம் எடுக்கிறது என... தெரியவில்லை.. வேறு browser மாத்தி ஓபின் பண்ணிப் பாருங்கோ...

   ஓம் எங்களுக்கும் இப்போ தான் நல்ல வெயில் ஆரம்பமாச்சுது, ஆனா திரும்ப குளிருது... குளிரக் குளிரத்தான் உருளைக்கிழங்கு நடோணும்.. பார்ப்போம் இனித்தான் களம் இறங்கோணும்.

   வெந்தயக்கீரை சாடியில் போட்டமையால் நன்றாக வந்துது, நிலத்தில் மல்லி போட்டேன் வரவில்லை.

   இங்கும் அதேதான் கொஞ்சம் மழை தூறினால் போதும் ஸ்லக்கும் நத்தையும் குட்டிக் குட்டியா உலாவுது.. ஏறிக் குருத்தில் இருப்பார்கள்.. நான் மருந்தடிப்பதும் மஞ்சள் தூள் கரைச்சு குருத்தெல்லாம் ஊத்தி விட்டிடுவேன்:)..

   சின்னவருக்கு ஊஞ்சலிலேயேதான் பொழுது போகும்..

   மிக்க நன்றி அம்முலு.

   Delete
 18. நிஜமாக நீங்கள் நல்ல பொறுமைசாலி மற்றும் உழைப்பாளி. இரண்டு மூன்று செடிகள் வளர்த்தாலே நாக்கு தள்ளி விடுகிறது. தண்ணீர் ஊற்றப் பொறுமை இல்லை. முருங்கை மட்டும் ஏதோ தானாய் வந்து கொண்டிருக்கிறது. படங்கள் அழகு.

  தம வாக்குப் போட்டாச்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. இம்முறை யாருக்கும் உடன் பதில் போட முடியாமல் போய் விட்டது, நேரம் கிடைக்காதெனத் தெரிந்தால் நான் போஸ்ட் போடுவதில்லை.. இது ஏதோ போஸ்ட் ரெடி ஆனதால், பொறுமையில்லாமல்:) போஸ்ட் போட்டுவிட்டேன்.

   இங்கு எங்களிடத்தில் தண்ணி விடும் பிரச்சனை குறைவு.. அடிக்கடி மழை பெய்யும்... மற்றும்படி கோர்ஸ் பைப் தானே... அதில் அடிப்பதும் ஒரு சுகம்தான்.

   ஓ அது எங்கள் ஊரிலும் இருந்துது “முருங்கி” மரம்:).. அதுக்கு தண்ணி தேவையில்லையே... வறண்ட நிலத்தில்தான் நிறையக் காய்க்கும்...

   மிக்க நன்றி.. மை வச்சமைக்கும்.. வந்து கொமெண்ட் போட்டமைக்கும்.

   Delete
 19. பார்க்கப் பார்க்க ஆசையாக உள்ளது. தோட்டம் போடவேண்டும் என்று உள்ளுக்குள் இருக்கும் ஆசை இப்போது அதிகமாகத் தலைதூக்கிவிட்டது. வின்டர் முடியட்டும். நானும் தோட்டம்போட்டு இப்படி படம் போடுறேன் பாருங்க. :))) உருளைப்பூ அழகு.. பாராட்டுகள் அதிரா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ.. இன்னும் நிறைய செய்வேன்ன்.. போனவருடம் இவ்வளவுதான், பீன்ஸ் வகை நல்லா வரவில்லை.. இடையில் சுற்றுலா செல்வதனால் சிலது ஒழுங்காக வருவதில்லை+ பராமரிக்க முடியாமல் போய் விடும்.

   ஹா ஹா ஹா நிட்சயம் செய்யுங்கோ.. உங்களிடத்து காலநிலைக்கு ஊர் மரக்கறிகள் எல்லாம் நல்லா வருமே.

   மிக்க நன்றி கீதா.

   Delete
 20. அழகான தோட்டம். தோட்ட வேலைகள் நெய்வேலியில் இருந்தவரை மட்டும். தலைநகர் வந்த பின்னர் தோட்டமே இல்லை! ஓய்வுக்குப் பிறகு தமிழகத்தின் ஏதாவது கிராமத்திற்குச் சென்று தோட்டம் போட்டு பராமரிக்கும் ஆசை உண்டு!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. உண்மைதான் இங்கு வெள்ளையர்கள் பலர்கூட அப்படித்தான் பேசுவார்கள்.. ரிரயேட் ஆனதும்.. தோட்டம் செய்தல், ஆடு கோழி வளர்த்தல் இப்படி ஆரம்பிக்கப்போகிறோம் என.. நல்ல பொழுதுபோக்கான வேலைதானே இது.

   மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 21. விவசாயி....விவசாயி!!! என்ற ஒரு பாடல் கேட்டிருக்கிறீர்களா அதிரா..எம் ஜி ஆர் பாடல் என்று நினைவு..டி எம் எஸ் குரலில்...அதை இங்கு ஷேர் செய்திருக்கலாமோ!!!! பொருத்தமாக இருந்திருக்கும் இல்லையா...

  தங்களின் கடுமையான உழைப்பிற்குப் பாராட்டுகள், வாழ்த்துகள். நல்லதொரு கார்டன்...படங்களும் மிக அழகு!!

  துளசி : எங்கள் வீட்டில் பெரிய கார்டன் உண்டு. ரப்பர் தோட்டம் பின் புறம். முன்புறம், தென்னை, மாங்காய், பலாப்பழம் பூச்செடிகள்,வாழை, சுண்டைக்காய், மிளகு கொடி, சேம்பு பயறு பட்டை அதான் மசாலாவில் சேர்ப்போமே அந்தப் பட்டை மரம் என்று பல....

  கீதா: எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...ஆனால் இருப்பது ஃப்ளாட்., பால்கனியில் சிறிய தோட்டம் வைத்துள்ளேன். வெந்தயக் கீரை எடுத்தாச்சு....கொத்தமல்லி, அப்புறம் முளைக் கீரை போட்டு ஒரு அறுவடை செய்தாச்சு...அடுத்து அரைகீரை அறுவடைக்குத் தயாராக இருக்கு.

  தக்காளி, வெண்டை பூ விடுகிறது. புளிச்ச கீரை/தமிழ்நாடு வரைட்டி...ஆந்திரா கோங்குரா அல்ல.. உயரமாக வளர்ந்துருக்கு இன்னும் சற்று வளர்ந்தால் அறுவடை செய்யலாம்..பாகற்காய் போட்டுருக்கேன். கறிவேப்பிலை வளருது....

  கேரட் இலை, ,முள்ளங்கி இலையும் கூட சமைக்கலாம்...நீங்கள் சொல்லியிருப்பது போல் அருமையாக இருக்கும் பூஷணி இலை சமைத்தது இல்லை..சமைத்துப் பார்க்கணும்...சூப்பர் அதிரா கலக்குங்க

  ReplyDelete
  Replies
  1. ///விவசாயி....விவசாயி!!! என்ற ஒரு பாடல் கேட்டிருக்கிறீர்களா அதிரா..எம் ஜி ஆர் பாடல் என்று நினைவு..டி எம் எஸ் குரலில்...அதை இங்கு ஷேர் செய்திருக்கலாமோ!!!! பொருத்தமாக இருந்திருக்கும் இல்லையா...///
   வாங்கோ கீதா, துளசி அண்ணன் வாங்கோ.. யேஸ் கேட்டிருக்கிறேன், போட நினைச்சேன்ன் ஆனா அது பழைய பாடல் என்பதால் யாரும் ரசிக்க மாட்டினம் என நானே முடிவு கட்டிட்டேன்ன்:))

   Delete
  2. ///துளசி : எங்கள் வீட்டில் பெரிய கார்டன் உண்டு. ரப்பர் தோட்டம் பின் புறம். முன்புறம், தென்னை, மாங்காய், பலாப்பழம் பூச்செடிகள்,வாழை, சுண்டைக்காய், மிளகு கொடி, சேம்பு பயறு பட்டை அதான் மசாலாவில் சேர்ப்போமே அந்தப் பட்டை மரம் என்று பல....///

   வாவ்வ்வ்வ் இவ்வளவும் இருந்துதோ? நான் படித்த பிரைமறி ஸ்கூல் வளவில் பட்டை(கறுவாப்பட்டை என்போம்) மரம் இருந்தது, நாங்க போய் பச்சையா உரிச்சு சாப்பிட்டுப் பார்ப்போம் சுவையே இருக்காது:).

   ஓ மிளகு கொடி, இம்முறை நான் இங்கு போட்டுப் பார்க்கிறேன் வருகுதோ தெரியாது. ஊர் வீட்டில் இப்பவும் சுண்டங்காய் கொத்துக் கொத்தாய் காய்த்து வீணாகிப் ோகுதாம், நம் ஊரில் அதை பெரிசா யாரும் சமைப்பதில்லை, அதனால எங்களுக்கு நல்ல விருப்பம், மாமா மாமி அதில் வத்தல் போட்டு இங்கு அனுப்புவார்கள்.

   நாங்கள் ஊரில் இருந்த காலத்தில் எங்கள் வளவிலும், தென்னை, பனை, கொய்யா, மாமரம், தேசிமரம், நெல்லி மரம் இருந்துதே,,, அதைவிட கொஞ்சமா பயிர்களும் செய்வோம்ம், தண்ணி வார்க்க முடியாது, அதுக்கெல்லாம் ஆள் வைத்துத்தான் செய்வோம், வெயிலுக்கு வீடு நல்ல குளிர்மையா இருக்கும். எங்கள் அம்மாவுக்கு இப்படி பயிர் செய்வதில் ஆர்வம்... அதனால்தான் எனக்கும் வந்திருக்குது போலும்.

   சின்ன வயதில், ஒரு குட்டிக் ஏரியாவை எடுத்து.. நான் தனிப்பட்ட முறையா 5,6 மிளகாய் அல்லது வெண்டி இப்படி நட்டு நானே தண்ணி ஊத்தி வளர்த்திருக்கிறேன்:).. அப்பவே அப்படி:).

   Delete
  3. ///கீதா: எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...ஆனால் இருப்பது ஃப்ளாட்., பால்கனியில் சிறிய தோட்டம் வைத்துள்ளேன்.///

   என்ன கீதா இப்பூடிச் சொல்லிப்போட்டு பெரிய தோட்டமே செய்கிறீங்கபோலிருக்கே ஆவ்வ்வ்வ்:)).. ஓம் முள்ளங்கி இங்கு இலையோடு கிடைக்கும் சிலசமயம், வாங்கினால் இலையும் சமைப்பேன்.

   பீற்றூட் டும் நட்டிருக்கிறேன்.. முகியமா இலையில் வறை செய்யவே நடுவேன்.

   எங்களிடம் எப்பவும் சில்லென ஒரு குளிர் இருக்கும் கோடையிலும்.. அத்தோடு அடிக்கடி மழை வரும், அதனால குளிர்தேசத்து மரக்கறிகள்தான் நன்றாக வரும். நம் நாட்டு மரக்கறிகள் ட்ரை பண்ணி அலுத்து விட்டு விட்டேன்.. மிளகாய்ச்செடிகூட வராது.. வந்தாலும் பூக்காது.. பூத்தாலும் காய்க்காது கர்ர்:)..

   இம்முறை விட மனமில்லாமல் கீரை விதைச்சேன்ன்ன் ஒரு இஞ்சியில் வளர்ந்து எல்லாம் ஈஈஈஈஈஈ என நிண்டுது அவ்ளோதேன்ன்:). பாவல், பயத்தை போட்டேன் முளைக்கக்கூட இல்லை.. அவ்ளோ குளிர் இங்கு.

   மிக்க நன்றி கீதா , துளசி அண்ணன் அனைத்துக்கும்.

   Delete
 22. வாழ்க விவசாயி அருமை தொடரட்டும் பணி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 23. நானும் இந்தக்வில்லிங் வேலைகளைக் கற்று கொண்டு சில காதணிகள் செய்தே ந் ஆனால் தொடரவில்லை. நான் செய்ததை யாருக்குப் போடுவது. மேலும் தஞ்சாவூர் பெயிண்டிங் கண்ணாடிப் பெயிண்டிங் எல்லாம் செய்து கொண்டு இருந்தேன் சில காலமாக அவற்றை நிறுத்தி வைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா GMB வாங்கோ.. என்னாது குயிலிங் செய்தீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்:) நிஜமாவோ???... கண்ணாடிப் பெயிண்டிங் மட்டும் நான் இதுவரை செய்ததில்லை... மற்றும்படி பப்றிக் பெயிண்டிங் செய்கிறேன்..

   நேரம் கிடைப்பதில்லை எனக்கு... கிடைத்தால் நிறையச் செய்வேன்ன்.. மிக்க நன்றிகள்.

   Delete
 24. # ஓரிடத்தில் இருப்பது பிடிக்காது# இது உங்கள் கூற்று !
  #உங்களை மாதிரி குண்டூஸ் தானே#இதுதை உங்கள் தோழி ஏஞ்சலின் கூற்று !
  விவசாயி இப்படி இருக்க வாய்ப்பில்லையே ,எதை நம்புறது :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. ஹா ஹா ஹா இப்போ எனக்கு சகோ டிடி கொஞ்சநாள் ஒரு பாட்டுப் பாடிக்கொண்டு உலாவினார்ர்.. “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என.. அப்பாட்டுத்தான் இங்கு சிட்டுவேசன் சோங் ஆ போகுது இப்போ:)..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி.. அதுசரி கையைக் காட்டுங்கோ மை இருக்கோ என செக் பண்ணோனும்:).

   Delete
 25. தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு இன்னும் பல செய்திகள் பகிர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ.. மிக்க நன்றி மிக்க நன்றி.

   Delete
 26. கடைசி காட்சிப்படம் அருமை)!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நேசன்.. அது எல்லோருக்கும் பிடிக்குது:)..

   Delete
 27. பெரும்பாலும் எல்லோரும் கீழே இருந்துதான் மேலே படிச்சுக்கொண்டு போகினம்போல... அதனாலதான் என் உருளைப்பூவைப் பற்றிய கேள்விக்கு , விடை படிச்சிட்டே கேள்விக்குப் போயிருக்கினம்:) அதனால ஆரும் மூச்சு விடேல்லை அதுபற்றி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  கீதமஞ்சரி தவிர:).

  ReplyDelete
 28. விவசாயி அதிராவின் தோட்டம் சூப்பராக இருக்கிறது.
  உழைப்பு நல்ல பலனைத்தரும்.
  ஏஞ்சல் கொடுத்த சுட்டி மூலம் வந்தேன் தோட்டத்தைப்பார்க்க பார்த்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா, தேடி வந்து பார்த்திருக்கிறீங்கள் மிக்க நன்றி.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.