நல்வரவு_()_


Friday, 24 March 2017

பெண்களைப்பற்றி, எங்களைப்பற்றி என்ன தெரியும் ..
_(-^_^-)_

 நீண்ட நாட்களாக நினைப்பதுண்டு, நம்மைப்பற்றி நாங்களே கொஞ்சம் புகழோணும் என... “தன்னைப் புகழாத தனையன் உண்டோ?”, என ஒரு பழமொழிகூட இருக்கே:).  மார்ச் மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், பிரித்தானியாவில் மதேர்ஸ்டே கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி என் மனதில் உதித்த எம்மைப்பற்றிய சில விசயங்களைப் பகிரலாம் என நினைச்சேன். நான் பெண்களைப்பற்றி மட்டுமே இதில் பேசப்போகிறேன்:)..


ன்னை வைத்தும், என்னைச் சுற்றி இருப்போர், உறவுகள் நட்புக்கள் என இந்த கடந்த சுவீட் 16:) வருடங்களாக நான், ஒட்டி உறவாடிய + உறவாடிக் கொண்டிருக்கும் பெண்களை வச்சும், மற்றும் கேட்டது பார்த்தது அறிஞ்சவற்றைக் கொண்டும், நம்மைப் பற்றிச் சொல்ல உள்ளேன்.. இது முற்று முழுவதும் என் கருத்து மட்டுமே...

ண்மையிலேயே பெண்கள் மிகவும் நல்லவர்கள், மென்மையானவர்கள், அன்பானவர்கள், அவர்களுக்குள்ளே அத்தனை திறமைகளும் ஒளிஞ்சிருக்கு, பொதுவாக எல்லாப் பெண்களுக்குள்ளும் எல்லா திறமைகளும் ஒளிஞ்சிருக்கு, ஆனா சிலர் அதை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர், சிலர் வெளிப்படுத்த தயங்குகின்றனர்.

யக்கத்துக்கு காரணம், யாரும் ஊக்குவிப்பதில்லை, உறவுகள் நட்புக்கள் யாராவது எதுவும் சொல்லி விடுவார்களோ, தப்பாகப் போயிடுமோ, என்றெல்லாம் பல பெண்கள் எண்ணி ஒதுங்கியே வாழ்கின்றனர். அது தப்பு, எதுக்கு பயப்பட வேண்டும், நாம் நடப்பது சரியாக இருப்பின் யாருக்கும் பயப்படத் தேவையில்லை, முதலில் எதிர்மறைக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது, முக்கியத்துவம் கொடுத்தால் அது நம் முன்னேற்றத்தை தடை பண்ணி விடும். அதே நேரம் எல்லாவற்றையும் நெகடிவ்வாகவே பார்க்கக்கூடாது, முடிந்தவரை அனைத்தையும் பொசிட்டிவ்வாகவே எடுத்துக் கொள்ளப் பழகிட்டால் வாழ்க்கை ஈசியாகிடும்.

பொதுவாக பெண்கள் தொட்டாச்சுருங்கிகள் போலத்தான் இருப்பார்கள், அதாவது மென்மையான மனம் படைத்தவர்கள்.( புகையுதோ?:) மோர் குடிச்சிட்டுத் தொடருங்கோ ஹா ஹா ஹா:)).

ண்மைதான், அதனால பெண்களை இலகுவில் ஓஃப் ஆக்கிட முடியும், சிலர் ஒரு பெண்ணின் வீக்நெஸ் எதிலிருக்கு, எனத் தெரிந்தே தாக்குவோரும் உண்டு. பெண்களுக்கு பெரும் எதிரி பெண்களேதான்.

சிலர் உடனே ஓஃப் ஆனாலும் டக்குப் பக்கென மீண்டு விடுவார்கள்,  சிலர் மீள நாளாகும், சிலர் அதுக்கு கதிரை போட்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வைத்து விடுவார்கள். இதுக்குத்தான் சொல்கிறேன், நம் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற இடமளிக்கக்கூடாது, முடிந்தவரை அனைத்தையும் பொஸிடிவ் ஆகவே எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் எதிர்க்கருத்துக் கூறுவோர்/ பிடிக்காதோரிடம் இருந்து நைசா ஒதுங்க தெரிஞ்சிருக்கோணும், அதை விட்டுப் போட்டு அவர்களை விட்டு விலகாமல் எப்பவும் குறைகூறிக்கொண்டும், எதிர்க்கருத்துக்கள் சொல்லிக் கொண்டும் இருப்பது அழகல்ல.
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
கையைக் காட்டுங்கோ.. கையைக் காட்டுங்கோ.. ஹையோ பயப்பூடாமல் காட்டுங்கோ நான் ஒண்ணும் முகமூடிக் கொள்ளைக்காரன் இல்லை:).. மை இருக்கோ எனச் செக் பண்றேன்ன்ன்:).. ஆங்ங்ங்ங்ங்ங் இனி தொரருங்கோ வாசிப்பை:)
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
ன்னொன்று, அடுத்தவரை ரோல் மொடலாக எடுக்கலாமே தவிர, நாமும் அவரைப்போலவே ஆகிடோணும் என சிலர் நினைப்பதால், விரைவில் தோற்றுப்போய் மனம் உடைஞ்சு விடுகின்றனர்.. கவிஞர் கண்ணதாசன் போல இன்னொரு கண்ணதாசன் உருவாகவே முடியாது, ஆனா கவிஞர் வைரமுத்து உருவாகலாம்.

பெண்கள் எல்லோருமே அழகானவர்களே... உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு பெண்களைத்தான் அதிகம் பிடிக்கும், அதிகம் ரசிப்பேன்.. என் கணவரிடம் கூட பல பெண்களைக் காட்டியிருக்கிறேன், பாருங்கோ அவ எவ்வளவு அழகாக இருக்கிறா, இவவின் கண்ணைப் பாருங்கோ மூக்கைப் பாருங்கோ இப்படி.   ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒவ்வொரு அழகு ஒளிஞ்சிருக்கு.. வெள்ளையாக மெல்லிசாக இருந்தால்தான் அழகு என்றில்லை, கட்டையாக குண்டாக கறுப்பாக இருப்போரும் அழகுதான்.. “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.

னா அடுத்தவரைப் பார்த்துக் கொப்பி பண்ணாமல், நமக்குள்ளிருக்கும் அழகை, திறமைகளை வெளிக்கொணர வேண்டும்... சிலருக்கு தலைமயிரை விரித்து விட்டால் ரொம்ப அழகா இருக்கும்... சிலருக்கு சுருட்டி விட்டால் அழகு, ஆனா அவ அப்படி செய்தமையால அழகா இருக்கிறாவே அப்போ நாமும் அப்படிச் செய்தால் அழகாயிருப்போமே என எண்ணக் கூடாது, நமக்கு ஒருவேளை போனி ரெயில்தான் ரொம்ப அழகைக் கொடுக்கும்.

கானமயில் ஆடக் கண்ட வான்கோழி தானும் ஆடியதாம்... என்பார்கள், ஆனா வான்கோழியும் ஒன்றும் குறைந்ததில்லை, மயில்போல தோகை இல்லையே தவிர, வான்கோழியிடம் இருக்கும் பல திறமைகள் மயிலிடம் இல்லாது இருக்கலாம்... அதனால நம்மிடம் என்ன இருக்கோ அதை வெளிப்படுத்த வேண்டும்...

ஒரு குட்டிக் கதை...
ஒரு பஸ் போய்க்கொண்டிருக்கிறது, ஒரு பாட்டி அதில் ஏறினா, உடனே அந்த கண்டக்டர் எழுந்து,  “பாட்டி என் சீற்றில் இருங்கோ” என இடம் கொடுத்தார்... அதுக்கு அந்த பாட்டி.. தம்பி ராசா நீ நல்லாயிருப்பாய்.. என பல வாழ்த்துக்கள் சொன்னார்.

இதைப் பார்த்த ட்றைவருக்குப் பொறாமை:), இப்படி கண்டக்டரைப் பாட்டி வாழ்த்தி விட்டாவே என எண்ணியபோது, அடுத்த கோல்டில் ஒரு தாத்தா ஏறினார்.. உடனே ட்றைவர் எழுந்து “தாத்தா இந்தாங்கோ வந்து என் சீட்டில் இருங்கோ” என இடம் கொடுத்தார்.. அப்போ முடிவு என்னாகும்?... 
ட்றைவர், வாகனத்தை நன்கு பத்திரமாக ஓட்டி, தன் திறமையை வெளிப்படுத்தும்போதுதான் அவருக்கு வாழ்த்துக் கிடைக்கும்.

ப்போ நமக்கு ஏற்றதைத்தான் கண்டு பிடித்து, நாம் பண்ண வேண்டும், சோர்ந்திடக்கூடாது. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது..அப்பப்ப நம்மை கொஞ்சமாவது அப்டேட் பண்ணோனும்... நம்மை நாம்தான் அழகுபடுத்தி உஷாராக வைத்திருக்க, நம்மால் முடிந்த வழிகளைக் கையாளோணும். நான் இப்படித்தான், மாறவே மாட்டேன் என இருக்காமல் கொஞ்சமாவது நம்மை மாற்ற வேண்டும்.. அலங்கரிப்பு முதல் அனைத்திலும்.

பொதுவாகப் பெண்களுக்கு போட்டி, பொறாமை உணர்வுகள் அதிகம், அதுக்கு நான் நினைக்கும் காரணம்.. பெண்கள்தானே விதம் விதமா ஆடை அணிவது, நகை போடுவது, அலங்கரிப்பது.. இப்படி, இதனால்கூட இருக்கலாம்.

ன்னுமொன்று, சில பெண்கள் தாம் எதுவும் செய்வதில்லை என்பதற்காக, அடுத்த பெண்களைப் பார்த்துக் குறை கூறுவார்கள், தாம் லூஸாக ஆடை அணிந்தால், இறுக்கமாக ஆடை அணிவோரைப் பார்த்து, தப்பாகப் பேசுவது, தாம் அலங்கரிக்காமல் இருந்தால், அலங்கரிக்கும் பெண்ணைப் பார்த்து.. நடிகை போல அலங்கரித்திருக்கிறா எனச் சொல்வது... இதெல்லாம் இயலாமையின் வெளிப்பாடுகள், இதனை மாற்ற வேண்டும், நாமும் காலத்துக்கு ஏற்ப நம்மை அப்டேட் பண்ண வேண்டும், இல்லை பிடிக்கவில்லையா, அடுத்தவரைக் குறை கூறாமல் இருக்க கற்றுக் கொள்ளோனும்.

சிலருக்கு புளொக் திறந்து எதை எழுதுவது என.. சமையல் குறிப்பை மட்டும், அல்லது சமய பதிவுகளை மட்டுமே போட தொடங்குவார்கள்(for an example). அவர்களை நாம் ஊக்கப்படுத்தி இன்னும் எழுத வைக்கோணும்... எதுக்கு எப்பவும் சமையலே போடுகிறாய் உனக்கு வேறு எதுவும் வராதா எழுத எனக் கேட்டால், சிலர் அத்தோடு மனமுடைந்து காணாமல் போய் விடுவார்கள், இந்த மன நிலையை மாற்றோணும், கேட்டவர், வேண்டுமென இல்லாமல் ஏதோ ஒரு நினைப்பில் கேட்டிருக்கலாம், இதுக்கெல்லாம் பயந்து ஒதுங்கிடக்கூடாது. தீட்டத் தீட்டத்தானே தங்கம் துலங்கும்... நமக்கு தெரிந்ததை எழுதோணும், பேசோணும் ... நாளடைவில் நமக்கும் நிறைய பேச வந்திடும்.

“சோம்பிப் படுத்தால்,
படுக்கையே உனக்கு சாக்காடு
எழும்பி நடந்தால்
இந்த உலகமே
உனக்குப் பூக்காடு..”

பெண்கள், சின்ன வயது முதலே பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டுத்தான் வருகிறார்கள், காலம் முழுவதும் யாரோ [பெற்றோர், கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்..]துணையோடுதான் பாதுகாக்கப்படுகிறார்கள்.. இது 100 வீதம் இல்லாவிடினும்.. இன்னும் இப்படியான கட்டமைப்பில்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

ரம்பகாலத்தில், முழுக்க முழுக்க இன்னொருவரின் உதவி இல்லாமல் பெண்ணால் வாழவே முடியாது எனும் நிலை இருந்தது, ஆனா இப்போ பெண்களும் சரிக்குச் சரி உழைக்கத் தொடங்கியபின், இந் நிலை மாறி, தனித்து வாழத் துணியும் நிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது, வெளிநாடுகளில் இப்போ எல்லாம், குழந்தையைப் பெற மட்டுமே ஒரு ஆண் துணை தேவைப்படுகிறது.., [மற்றும்படி குழந்தை வளர்ப்பதிலிருந்து அனைத்துக்கும் அரசாங்கம் உதவி செய்து விடுகிறது என்பதால், தைரியமாக கூட்டை உடைத்து தனித்து வாழ முடிவெடுக்கின்றனர் டக்குப் பக்கென], இந்நிலை மாற வேண்டும், மிருகங்களில் புலியானது, பெண்புலிதானாம் ஆட்சி செய்யும், குட்டி பெறுவதற்கு மட்டும் ஆணை கிட்ட எடுக்குமாம்.. இப்படி மனித வாழ்க்கையும் மெல்ல மெல்ல மிருகத்தனத்தை நோக்கி நகர்வதை காண முடிகிறது.

ருங்காலத்தில் ஆண் இல்லாமலே குழந்தையை உருவாக்கக்கூடிய நிலை உருவாகும் என விஞ்ஞான ஆராட்சிகள் கூறுகின்றன, ஆனா பெண் இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்க முடியாது எனவும் கூறுகின்றனர். அப்போ உலகம் போகும் போக்கைப் பார்க்கப் பயமாகவே இருக்கிறது, ஆதி காலத்துக்கே போயிடலாமோ என எண்ணத் தோணுது...

நாம் எப்பவும் எல்லோரையும் மதித்து நடக்கப் பழக வேண்டும், சில பெண்கள் ஓவர் சுகந்திரம் கிடைத்தால், அதை மிஸ்யூஸ் பண்ணப் பார்க்கிறார்கள்.. தலைக்கனம் வந்துவிடுகிறது, அதாவது நான் தான் எல்லாமே, எனக்கு அடங்கியேதான் எல்லோரும் நடக்கோணும் என்பதுபோல, கணவனைக் கூட மதிப்பதில்லை, அப்படி இருக்கக்கூடாது, நமக்கு எவ்வளவு சுகந்திரம் கிடைச்சிருக்கோ அந்தளவுக்கு அனைவரையும் மதிக்க தெரிய வேண்டும். அடக்க ஒடுக்கம், ஒழுக்கம் என்பது அடுத்தவர் சொல்லி நமக்கு வருவதல்ல, நாமே நமக்கு ஒரு எல்லை வகுத்து நடக்கப்பழக வேணும்.

பெண்கள், இன்னொருவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலம் இப்போ மிகவும் குறைந்து விட்டது எனலாம், அனைத்துப் பெண்களும் வாழ்க்கையை  “வாழவே” விரும்புகிறார்கள்.. ஒரு கட்டுப்பாட்டுக்குள் அல்லது இன்னொருவருடைய அபிப்பிராயத்தின் கீழ் இருக்கும்போது அது வாழ்தல் ஆகிடாது, அது “ஏதோ இருக்கிறேன்” என்பதற்குச் சமனாகும். அதாவது வாழ்வதற்காகப் போராடிப் பிழைத்துக் கொண்டிருக்கும் நிலை.

லுவலகத்தில் இருக்கிறேன் , ஜெயிலில் இருக்கிறேன், எனத்தான் சொல்வோம்,  ஆனால் வீட்டில்தான் வாழ்கிறோம். அப்போ இந்த வாழ்தல் வீட்டில் கிடைக்காத போதுதான், இப்போ பல பெண்கள் துணிந்து, குடும்பத்தை உடைத்து வெளியே வந்து விடுகின்றனர், இந்நிலை வருமளவுக்கு கட்டுப்படுத்தாமல்,வீட்டிலுள்ளோர், பெண்கள் பூரண சுகந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க ஒத்துழைக்க வேண்டும்.

பெண்களை, குடும்பக் குத்துவிளக்கு என்பார்கள். இது 100 வீதம் உண்மை என்றே நான் சொல்வேன். அதாவது ஒரு குடும்பத்தில் தந்தை எவ்வளவு கலகலப்பாக இருந்தாலும், பிள்ளைகள் எவ்வளவோ கலகலப்பானவர்களாக இருந்தாலும், அக்குடும்பத்து தாயாகிய மனைவி கலகலப்பானவராக இருந்தால் மட்டுமே அக்குடும்பம் பிரகாசிக்கும். தாய் சோகமாகவோ அல்லது ம்ம்ம்ம்ம்ம் என முகத்தை எந்நேரமும் வைத்திருந்தாலோ குடும்பமே கலகலப்பை இழந்துவிடும்,

குத்து விளக்கு சுடர் விட்டால்தான் வெளிச்சம் பரவும். அப்போ உண்மையில் மனைவியை சந்தோசப்படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி விட்டால் போதும் அக்குடும்பத் தலைவருக்கு வேறு எந்த வேலையும் இருக்காது, அனைத்தையும் இழுத்து வைத்து மனைவியே செய்து முடிப்பார். ஒவ்வொரு குடும்பத் தலைவரும் இந்த வித்தையைக் கற்றுக் கொண்டால் போதும் குடும்பத்தில் கலகலப்புத்தான் நிகழும். [ டிஸ்கி:-மனைவியிடம் உங்களை முழுமையா ஒப்படைத்து விட்டுப் பேசாமல் இருங்களேன்.. குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ஹா ஹா].

க்காலத்தில் பொதுவாக எல்லா ஆண்களும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களே, பெண்களில் நகைச்சுவை உணர்வைக் காட்டுவோர் பாதியளவினர்தான், ஏனையோர் எப்பவும் சீரியசாகவே இருக்கின்றனர், இதனாலேயே சில குடும்பங்களில் பிரச்சனை அதிகமாகிறது.

ன் நண்பி ஒருவர் ஊரில் இருக்கிறா, அவவுக்கும் கணவருக்கும் ஒரே பிரச்சனை, பெரிதாக ஏதுமில்லை ஆனா உப்புச் சப்பில்லாதவற்றுக்கெல்லாம் சண்டை, மற்றும்படி இருவரும் மிக நல்லவர்கள், நண்பி கொஞ்சம் சீரியஸாகவே இருப்பா, பக்தி அதிகம், நாடகங்கள், படங்கள், கொமெடிகள் பார்ப்பதில்லை, தன்னை கொஞ்சம்கூட அலங்கரிப்பதே இல்லை இப்படியான போக்கு. கணவரோ படு கொமெடியன் இதனால, அவர் கொமெடியாக சொல்லும் அனைத்தையும் இவ சீரியசாக எடுத்து, நேரடியாக கேட்காமல் மனதில் வைத்துப் புழுங்கி.. பிரச்சனை.

கொஞ்சக் காலம் முன் போனில் பேசினேன் அப்போ சொன்னா, பாருங்கோ அதிரா என் கணவர் என் பேச்சை மதிப்பதே இல்லை எதுக்கெடுத்தாலும் கிண்டல் செய்கிறார் என, என்ன நடந்தது எனக் கேட்டேன், “நிறைய நடந்திருக்கு, ஆனா ஒன்றை மட்டும் சொல்கிறேன், நான் சமைக்கும்போது கிச்சின் விண்டோவால் இலையான்கள்(கொசுக்கள்) உள்ளே வந்துது, அப்போ சொன்னேன், கொஞ்சம் விண்டோவை சாத்தி விடுங்கோ கொசு வருது என”, அதுக்கு அவர் சொல்றார்... “கொசுக்களுக்கு வெளியே வீடில்லை அதனால நம்மிடம் அடைக்கலம் தேடி வருது, அதை ஏன் நீங்க தடுக்கிறீங்க பாவம்தானே என”... அது எனக்கு கோபம் வந்துவிட்டது, இப்படித்தான் எப்பவும் என் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறாரே இல்லை என்றா.

நான் நல்லா திட்டினேன், அவர் நல்லவர்தான், கொமெடியனாக இருக்கிறார், நீங்கதான் உங்களை மாத்தோணும், இனிமேல் பக்தியைக் குறைச்சு, கொமெடி நிகழ்ச்சிகள், படங்கள் பார்த்து நீங்களும் பதிலுக்கு கொமெடியாக பேசப் பழகுங்கோ என்றேன்.. அப்படியா சொல்றீங்க? என்றா.[ இப்படிப் பல நாட்கள் நான் சொல்லியிருக்கிறேன்].

மீபத்தில் கோல் பண்ணியபோது சொன்னா, அதிரா உங்களால் நான் இப்போ நிறைய கொமெடியாக பேசப் பழகிட்டேன், என் உறவுகள்கூடக் கேட்கிறார்கள் எப்படி இப்படிப் பேசக் கற்றுக்கொண்டாய் என, இப்போ நமக்குள்ளும் பிரச்சனைகள் வருவது குறைவு என்றா.

ண்மையிலே பெண்கள் மிகவும் நல்லவர்கள்... சமீபத்தில் ஒரு மேடைப்பேச்சில் கேட்டேன், ஒரு பெண், ஒருவரில்(ஆணோ, பெண்ணோ) நம்பிக்கை வைத்து மனதாரப் பழக ஆரம்பித்து விட்டால், அவர் ஒரு எக்ஸ்றீம் நிலைக்குப் போகக்கூடியவர்களாம், அதாவது அவர்களுக்காக என்ன செய்யவும் துணிவார்களாம், ஆனா அதேபோல மிகவும் மனமொடிந்து விட்டால்.. அதுக்கு எதிரான மற்றத் தொங்கலுக்கும் போகத் தயங்க மாட்டார்களாம் என பெண்களின் உளவியல் சொல்கிறதாம்.

ம்முறை எனது “றீட் மோர்” அதிகமாகி விட்டது, மிகவும் சுருக்கியே:) இதனை வெளியிடுகிறேன், இதை இரு பாகமாக்கிப் போடவும் விருப்பமில்லை:).

ன்னொரு முக்கிய விடயம். இந்த Mother's Day" ஆனது, ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு மாதங்களில் கொண்டாடப் படுகிறது. இது ஒருபுறமிருக்க, “மகளிர் தினம்” எனவும் ஒன்று கொண்டாடப் படுகிறது. என்னைக் கேட்டால் இரண்டுமே ஒன்றுதான் எனச் சொல்வேன்.

நான் முன்பும் கூறியிருக்கிறேன், பெண் என்றாலே தாய்மை உணர்வு நிறைந்தவர்களே, இதில் தாய் வேறு பெண் வேறு என்றில்லை, குழந்தை பெற்றால் மட்டும்தான் தாயாக முடியுமோ?..

ந்தப் பெண் குழந்தையாவது, சின்ன வயதில் பாவைப்பிள்ளைக்கு சோறூட்டாமல், குளிக்க வார்க்காமல், உடை மாத்தாமல் வளர்ந்த பெண் குழந்தை ஒன்றையாவது உலகில் காட்ட முடியுமோ?.. அப்போ ஒரு பெண்குழந்தை பிறக்கும்போதே தாய்மை உணர்வோடுதான் பிறக்கிறது.

குழந்தை இல்லாத பல பெண்கள் அடங்கி ஒடுங்கி, வெளியே வர கூச்சப்பட்டு வாழ்வோரும் உண்டு, இதனை நான் வன்மையாகக் கண்டிப்பேன், குழந்தை இல்லாவிட்டால் என்ன? எதுக்காக ஒதுங்கி வாழ வேண்டும்? வாழ்க்கையில் சிலது இல்லையெனில் இல்லைத்தான், அதையே நினைச்சோ அல்லது அடுத்தவர்களுக்குப் பயந்தோ வாழக்கூடாது, இருக்கும் சந்தோசத்தை இழந்திடக்கூடாது. வெள்ளையர்கள் சிலர், திருமணம் முடிக்கும்போதே முடிவெடுக்கின்றனர்.. நமக்கு குழந்தை வேண்டாம், சுகந்திரமாக இருக்கோணும் என.

குழந்தை பெற்றா “திரேசா”..  “அன்னை திரேசா” ஆனார்?.. கோவை சரளா எங்கோ ஓரிடத்தில் சொன்னார், திருமணமாகி குழந்தை பெற்றிருந்தால் என் குழந்தைகளுக்கு மட்டுமே அம்மா ஆகியிருப்பேன், ஆனா இப்போ நான், என்னால் முடிந்தளவு பல குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்து பல சேவைகள் செய்கிறேன் என...

ம் உறவினர் ஒருவருக்கு திருமணமாகி 20 வருடங்கள், குழந்தைகள் இல்லை. ஆனா அவவின் சகோதரங்கள் தாய் எல்லோரும் ஊரில் இவ மட்டும் திருமணமாகி வெளிநாடு வந்தா, இன்று வரை ஊருக்குப் போகமாட்டேன், குழந்தை இல்லாமல் எப்படிப் போவேன் என ஒரே பிடிவாதமாக இருக்கிறா... நான் நினைப்பேன், இதனால அவ அனைத்தையும் இழக்கிறா, இவ உசாராகிட்டால் கணவரும் ஹப்பியாவார், இதனாலே இவ ஒதுங்கி வாழும்போது, கணவரும் இவவோடு சேர்ந்து எங்கும் போவதில்லை. இது தப்பு, மனநிலையை மாத்த வேணும்.

ங்கள் மாமா ஒருவருக்கு குழந்தைகள் இல்லை, அவர், நெருங்கிய உறவினர்களில், ஒருவர் வீட்டுக்கு மட்டும் போவதில்லை, அப்போ ஏன் அங்கு மட்டும் போவதில்லை எனக் கேட்டபோது, மாமா சொன்னார்...

ப்போ அங்கு போனாலும்.. அவர்கள் உடனேயே தங்கள் பிள்ளைகளின் பேச்சையே பேசத்தொடங்குவார்கள், அவர்களுக்கு 3 பிள்ளைகள் மூவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள், அது எனக்கு கஸ்டமாகிடும், அதனால் போவதையே நிறுத்திட்டேன், ஏதும் கொண்டாட்டங்களுக்கு மட்டும் போவோம் என்றார். அப்போ நம்மவர்களிலும் நிறையத் தப்பிருக்கு, எதை யாரிடம் பேச வேண்டும், யாரிடம் பேசக்கூடாது என எண்ணுவதே இல்லை. இங்கே பப்ளிக்கில்கூட, நம் குடும்பக் கதைகளைப் பகிரக்கூடாது, இதைப் படிச்சு நமக்குத் தெரியாமலே சிலர் மன வருத்தத்துக்கு ஆளாகிடலாம், அதுக்கு நான் காரணமாக இருந்திடக்கூடாது என பலதடவைகள் நினைப்பேன், இருப்பினும் சிலவேளை அதை மீறிப் பேசிவிடுவதும் உண்டு:(.

ன்னுமொன்று, நம் பெண்களிலும் இந்த விசயத்தில் தப்பிருக்கு, தமக்கு எல்லாம் அமைந்திருந்தால், உடனே ஓடி ஓடி அடுத்த பெண்ணிடம் விடுப்ஸ் கேட்பது, குழந்தை இன்னும் இல்லயோ? ஏன் டொக்டரைப் பார்க்கேல்லையோ? இந்தியாவுக்குப் போய் ட்ரை பண்ணியிருக்கலாமே? இப்படி, தெரிந்து கொண்டே கேள்விகள் கேட்டு, மன அழுத்தத்தில் இருப்போரை இன்னும் முடங்கப் பண்ணி விடுவதில் நம் பெண்கள் கில்லாடிகள்.  பெண்களுக்குப் பெண்களே எதிரிகள்... இந்நிலை மாறி, போட்டி, பொறாமை, கொதி இல்லாமல்... அடுத்த பெண்களை உசார்ப்படுத்தி, ஊக்குவித்து, முன்னுக்குக் கொண்டு வர வேண்டியது பெண்களின் கடமையே எனக் கூறி,


அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்தை மகிழ்வோடு கூறிக்கொள்கிறேன்......__()__

ஊசிக்குறிப்பு... என் Diary இலிருந்து
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மறந்திடாதீங்கோ, 26.03.17 ஞாயிறு அன்று அன்னையர் தினத்தோடு, பிரித்தானியா மற்றும் யூரோப் எங்கும் நேரம் ஒரு மணி முன்னுக்குப் போகிறது.

113 comments :

 1. எதுக்கு 3 நாட்கள் முன்னாடியே வாழ்த்துப் போட்டிருக்கிறேன் தெரியுமோ? எப்படியும் இதனை நீங்கள் பட்டித்து முடிக்க ... அன்னையர் தினமும் வந்திடும் என்பதனாலேயே ஹா ஹா ஹா:).

  ReplyDelete
  Replies
  1. அதிரா கலர்கலர் பேனா வச்சி எழுதுவீங்களா :) உங்க டைரி பார்த்து சொன்னேன் ..
   முத்துமுத்தான கையெழுத்து எனக்கும் ஒருகாலத்தில் இப்படி இருந்தது :)
   இனிமே கவிதை எழுதி பழக்கலாம்னு இருக்கேன்

   போல்ட் லெட்டரில் நிம்மதி ..ஆமாம் எது நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருதோ அதை மட்டுமே செய்யணும் ..ஒரு சின்ன டிஸ்டர்பன்ஸ் வர மாதிரி இருந்தா அதை விட்டு விலக்குறதில் தவறில்லை ..

   நான் பதிவின் இறுதியில் இருந்து ரிவர்ஸ் ஆர்டரில் பின்னூட்டமளிக்கிறேன் ..:)
   நான் பரீட்சை தலையும் அப்படிதான் லாஸ்ட் கேள்விலருந்து எழுதுவேன் :)

   Delete
  2. குழந்தை திருமணம் போன்ற விஷயங்களில் பெண்கள்தான் பெண்களுக்கு பெரிய எதிரிகள் ..
   இப்போ பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்களும் அதில் சேர்த்தி ..ஆக்ட்ரஸ் வித்தியா பாலனை கேள்வி கேட்க அவர் சமீபத்தில் பொங்கி எழுந்தாராம் குழந்தை விஷயத்தில். இந்த குழந்தை விஷயத்தில் பெண்கள் மாறவே மாட்டார்கள் :(

   Delete
  3. //நான் பரீட்சை தலையும்// பரீட்சை தாளிலும் என்று வாசிக்கவும்

   Delete
  4. வாங்கோ அஞ்சு வாங்கோ.. வாழ்த்துவதை விட்டுப்போட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றால் விட்டிடுவேனோ?:).. ஒழுங்கா வரி வரியா என் போஸ்ட் படிக்கோணும் சொல்லிட்டேன்ன்:) அதுக்காகத்தான் 3 நாள் ரைம் தாறேன்ன்:) ஹா ஹா ஹா..

   Delete
  5. //AngelinFriday, March 24, 2017 8:30:00 am
   அதிரா கலர்கலர் பேனா வச்சி எழுதுவீங்களா :) உங்க டைரி பார்த்து சொன்னேன் ..//

   கலர் கலரா எழுதி, விதம் விதமான ரேஸர் வச்சு அழிப்பேன்ன்... இதெல்லாம் பிடிக்கும் எனக்கு. பொதுவா girls அப்படி இருப்பார்கள் என நினைக்கிறேன், ஆனா இங்கு பிள்ளைகளுக்காக கலர் கலரா வாங்கிக் கொடுப்பேன் கண்ணில் காண்பதெல்லாம்... ஆனா பொக்கட்டில் ஒரு பென் ஒரு பென்சில் மட்டுமே எடுத்துப் போவார்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). boys க்கு இப்படி சேர்ப்பதில் இன்ரஸ்ட் இல்லை... அதனால நான் தான் நிறைய சேர்த்து வச்சிருக்கிறேன்:).


   ////முத்துமுத்தான கையெழுத்து ////எனக்கும் ஒருகாலத்தில் இப்படி இருந்தது/// :)
   நோஓஓஒ இப்பூடிச் சொன்னால் நம்பிடுவமாக்கும்?:) இப்போ அந்த முத்தெல்லாம் எங்கேஏஏஏஎ:)..

   என்னாதூஊஊஊஊஊஉ கவிதை எழுதப்போறீங்களோ?:) எப்போ வெள்ளோட்டம் எனச் சொல்லி அனுப்புங்கோ நான் அவசரமா அந்தாட்டிக்கா போகோணும் ட்ரம்ப் அங்கிளுக்கு ஒரு ஆலோசனை தேவையாம்ம்ம்.. ஹா ஹா ஹா...

   எழுதுங்கோ அஞ்சு.. போனதடவை நீங்கள் போட்ட மகள் வயிற்றில் உதைத்த கதை.. கவிதைபோலவே இருந்துது.

   Delete
  6. ///நான் பதிவின் இறுதியில் இருந்து ரிவர்ஸ் ஆர்டரில் பின்னூட்டமளிக்கிறேன் ///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ இன்றிலிருந்து அஞ்சுவுக்கு... ”கடசிக் குழல்புட்டு இளவரசி” எனப் பட்டமளிக்கிறேன்ன்ன்:) ஏனெனில், குழலில் போடும் புட்டு, கடசியாகப் போட்டதுதான் முதலில் வெளியே வரும்:).. முதலில் போட்டது கடேஏஏஏஏசியாத்தான் வரும்:) ஹா ஹா ஹா.

   Delete
  7. //இந்த குழந்தை விஷயத்தில் பெண்கள் மாறவே மாட்டார்கள் :(//

   இது மட்டுமில்லை அஞ்சு... சொல்ல வெளிக்கிட்டால் நிறையவே சொல்லலாம்.. எங்காவது ஆண்கள் சீதனம் கேட்டதுண்டா?... மாமியார்/நாத்தனார்/ பெரிய அண்ணி.... இப்படி பெண்கள் தானே கேட்டுக் கொடுமைப் படுத்துகிறார்கள் பெண்களை.

   Delete
 2. //புளொக் திறந்து எதை எழுதுவது என.. சமையல் குறிப்பை மட்டும், அல்லது சமய பதிவுகளை மட்டுமே போட தொடங்குவார்கள்(for an example). // ஹா ஹா நான் கூடத்தான் ஆரம்ப காலத்தில் ஒன்லி கிராப்ட் பதிவுகள் போட்டேன் அப்போ என்னை முதன்முதலா தொடர் பதிவு எழுத ஊக்குவித்தது சித்ரான்னு ஒரு சமையல் பிளாக் பொண்ணு பெல்ஜியம்ல இருக்காங்கன்னு நினைக்கிறன் ..அவங்க இப்பொபதிவு எழுதறதில்லை .எதுக்கு சொல்றேன்னா அன்னிக்கு அந்த பெண் என்ன தொடர் பதிவெழுத கூப்பிட்டதும் எனக்கு தலை கால் புரியல..
  இப்படி தொடர் பதிவில் ஆரம்பித்தது இன்னிக்கு என்னைப்பற்றி வரை தொடர்கிறது

  ReplyDelete
  Replies
  1. எனக்கு உங்களை ஆரம்பம் முதலே தெரியும்.. அப்போ இருந்த அஞ்சுவா இது என பலநாள் உதட்டில் விரல் வச்சு அதிசயித்திருக்கிறேன்ன்:)..

   இதிலும் பல பெண்கள் சைலண்ட் டீடராக பல வருடங்கள் இருந்து பின்னரே மெதுவா.. சுடுதோ குளிருதோ என மெல்ல மெல்ல கால் வச்சு... பின்னர் மெதுவா முளைவிட்டு மரமாகி விருட்சமானோரும் உண்டு... எப்படியாவது எல்லோரும் முன்னேறினால் சந்தோசமே...

   Delete
 3. என்னோட வோட் எண்: 3

  சூப்பர் பதிவு. பெண்ணே நீ வாழ்க !

  அதில் ஓர் குட்டி இருப்பதாலோ என்னவோ .... அந்தக் குட்டிக்கதையை நான் மிகவும் ரஸித்தேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. உங்கட மின்னல் வெளியீட்டு பிசியிலும்.. மின்னல்போல எட்டிப்பார்த்து, மின்னல் போல வோட்டும் போட்டமைக்கு மிக்க நன்றி.

   Delete
  2. அன்புள்ள அதிரா, வணக்கம்.

   இந்த http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan இணைப்பினில் போய்த் தலைமுதல் அடிவரைப் பாருங்கோ. இதுவரை இந்த கடந்த ஒரே வாரத்தில் (17.03.2017 முதல் 22.03.2017 வரை) மட்டும் மின்னல் வேகத்தில் எட்டு மின்னூல்கள் என்னால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான மின்னூல்கள் வெளியாகவும் உள்ளன.

   இதற்கு பின்னால் நானும் மின்னல் வேகத்தில் அதிரடியாகச் செயலாற்ற வேண்டியுள்ளது என்பதை அதிரடி அதிரா முதலானோர் தெரிந்துகொள்ளவும்.

   நம் அஞ்சுவிடமும் இதனை அஞ்சாமல் சொல்லுங்கோ, அதிரா.

   நீங்கள் இருவரும் சும்மா இடி இடிப்பதுபோல மாத்தி மாத்தி தினமும் பதிவுகள் கொடுத்துக்கொண்டே இருந்தால் என்னால் எப்படி மின்னல் வேகத்தில் பின்னூட்டமிட வர முடியும்? இதனைக் கொஞ்சம் யோசியுங்கோ.

   அன்புடன் கோபு அண்ணன்

   Delete
  3. கோபு அண்ணன் போய்ப் பார்த்தேன்.. மயங்கி விழுந்திட்டேன்ன்.. சுட்டாறிய தண்ணி அடிச்சு எழுப்பி விட்டார்கள். உண்மையில் மின்னூல்கள் சூப்பரா இருக்கு. எனக்கு இதைத்தான் மின்னூல் எனச் சொல்லுவார்கள் எனத் தெரியாது, இப்போதான் புரிந்து கொண்டேன்ன்..

   அதுசரி என்போன்ற புளொக் ஓனர்ஸ்க்கு ஏதும் தள்ளுபடி உண்டோ?:) ஹா ஹா ஹா..

   உண்மையில் மிக அருமை, சொல்ல வார்த்தை இல்லை. ஆனா அவசரப்பட்டு, குதப்பிடாமல், ரைம் எடுத்து மெதுவா, அழகா செய்யுங்கோ, அட்டைகள் ஒவ்வொன்றும் சூப்பரா இருக்கு, விலையும் ரொம்பவும் சீப்..

   Delete
  4. //நீங்கள் இருவரும் சும்மா இடி இடிப்பதுபோல மாத்தி மாத்தி தினமும் பதிவுகள் கொடுத்துக்கொண்டே இருந்தால் என்னால் எப்படி மின்னல் வேகத்தில் பின்னூட்டமிட வர முடியும்?//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அப்போ நீங்க வாலிபன் என மின்னி முழக்கியதெல்லாம் பொய்தானே?:) இப்பவாவது ஒத்துக்கோங்க:).

   ஒரு பின்னூட்டம் போடவே ஓட முடியாதென குறை சொல்றீங்க.. அப்போ எப்பூடி எங்களை ஊக்குவிக்கப் போறீங்க கர்ர்:)..

   சரி சரி, கவனத்தை முழுவதுமா மின்னூலில் வையுங்கோ, அவசரப்படாமல் செய்யுங்கோ, அழகா இருக்குது. வாழ்த்துக்கள்.

   Delete
  5. ஆஆ !! கோபு அண்ணா சூப்பர் ..நானா இந்த பின்னூட்டத்தை இப்போதான் பார்த்தேன் அதிரா சொல்லாட்டி நான் கவனிச்சிருக்க மாட்டேன் ..அருமையான முன்னுரை ..ellame சூப்பரா இருக்கு ..
   நான் ரிவர்ஸ் ஆர்டார்லயே படிச்சதில் இந்த கமெண்ட் கண்ணில்படலை

   Delete
  6. ///நான் ரிவர்ஸ் ஆர்டார்லயே படிச்சதில் இந்த கமெண்ட் கண்ணில்படலை///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் ஒழுங்கா இறங்குவரிசையில் படிக்கச் சொல்றது..:)..

   Delete
 4. ஊசிகுறிப்புக்கு முன்பு காட்டப்பட்டுள்ள பெண் குழந்தை அழகோ அழகு ! :)

  நிச்சயமாக அது அதிராவின் பேத்தியோ அல்லது கொள்ளுப்பேத்தியாகவோதான் இருக்கணும் ..... அவ்ளோ அழகாக இருப்பதால். :)

  ReplyDelete
  Replies
  1. யேஸ்ஸ்ஸ் என் பேத்தி இப்பூடித்தான் இருப்பா என இப்பவே போட்டுக் காட்டியிருக்கிறேன்ன்.. .. அவட அப்பம்மாவைப் போலவேதான்ன்ன்.. இது என் பேத்தியைச் சொன்னேன்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
  2. :) நல்ல சமாளிப்பு ! :)

   வெரி குட் !

   Delete
 5. /தாய் சோகமாகவோ அல்லது ம்ம்ம்ம்ம்ம் என முகத்தை எந்நேரமும் வைத்திருந்தாலோ குடும்பமே கலகலப்பை இழந்துவிடும்,//

  ஆமாம் இது நூற்றுக்குநூறு உண்மை யார் நம்மை கவனிக்கலைனாலும் நம் பிள்ளைகள் நம்மிடம் என்ன வித்யாசம் ஏற்பட்டாலும் உடனே கண்டுபிடிப்பாங்க .குறிப்பா பெண் பிள்ளைகள் ரொம்ப ஷார்ப் .எனக்கு ரெண்டு நாள் முன்பு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை .மகள் மீண்டும் மீண்டும் கேட்டாள் //அம்மா ஆர் யூ ஆல்ரைட் // நம்மகிட்ட என்ற மாற்றம் ஏற்பட்டாலும் அது குடும்பத்தை பாதிக்கும் அதனால் நாம் தான் refresh செஞ்சுக்கணும் நம்மை

  ReplyDelete
  Replies
  1. உண்மையேதான் அஞ்சு... என்னதான் சமைக்கத் தெரிஞ்ச கணவராயிருந்தலும், ஹோட்டலில் ஈசியா உணவு வாங்கினாலும்... நாம் வீட்டில் ஒரு தலையிடி என வன் அவர் ரூமை பூட்டிப் படுத்தாலே மயான அமைதி நிலவும்... வீடே உறங்கிப்போயிருக்கும்:).. இதில மூட் அவுட் எனில் என்னாகும் நிலைமை:)....

   Delete
 6. ஹா ஆஹா :) கொசுவுக்கெல்லாமா புசுக்குனு கோபித்தார் ..நல்லவேளை அவருக்கு நீங்க அட்வைஸ் கொடுத்தீங்க ..ஆனா இப்படி காமெடி சென்ஸ் இருவருக்கும் இருந்தால் அக்குடும்பம் சந்தோஷமா இருக்கும் ..நானெல்லாம் டெயிலி உங்க பின்னூட்டங்களை என் கணவருக்கு காட்டுவேன் ..அவருகுசிரிப்பா வரும்

  ReplyDelete
  Replies
  1. அது இப்படி நிறைய இருக்கு எனக்கு பகிர விருப்பமில்லை... அனைத்துமே கணவர் கொமெடியாக சொல்வதை இவ சீரியசாக எடுத்து, மனதில் போட்டு புழுங்கி.. பேசாமல் இருப்பதுதான் வேலை:). புரிதல் போதாது அவர்கள் இருவருக்குமான...:).

   என்னாது என் கொமெண்ட்ஸ் ஐக் காட்டி அவரை சிரிக்க வைக்கிறீங்களோ?:) அவ்வ்வ்வ்வ் அப்போ எனக்கு நீங்க பீஸ் தரோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்:).

   Delete
 7. அப்புறம் இந்த பொறாமை பற்றி சொன்னீங்களே இதில் மட்டும் பெண்களை அடிச்சிக்க ஆளேயில்லை ..
  அதேபோல மேக்கப் ட்ரஸ் சென்ஸ் .எனக்கு யாராக இருந்தாலும் பட்டென்று பாராட்டிடுவேன் .ஒரு நண்பி அழகா ஸாரி கட்டி மேக்கப் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு படம் அனுப்பியிருந்தார் கொள்ளை அழகு ..சத்தியமாக எனக்கு அந்த ட்ரெஸ் சென்ஸ் கிடையாது ..

  ReplyDelete
  Replies
  1. நான் பெண்கள் அழகாக இல்லைன்னாலும் பாரட்டிவிடுவேன்...அதிரா ஏஞ்சல் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகு உண்மையாகட்தான் சொல்லுறேன்
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   .
   ,
   .
   ,
   .'

   ஆ...... இந்த வரிகள் இரண்டையும் தனிதனியாக் போட்டு இருக்கனும் சரி சரி இவங்க ஸ்மார்ட்டான பொண்ணுங்க என்றால் நான் சொல்லுவதை புரிஞ்சுகுவாங்க

   Delete
  2. அதிரா அந்த நவரத்ன அடைதோசை போன வருஷம் செஞ்சது ப்ரிட்ஜில் இருக்கே அதை எடுத்து நியூ ஜெர்சி டைரக்சன் பார்த்து வீசி விடுங்க கொஞ்சம்

   Delete
  3. Angelin
   ///ஒரு நண்பி அழகா ஸாரி கட்டி மேக்கப் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு படம் அனுப்பியிருந்தார் கொள்ளை அழகு///
   என்னைச் சொல்லலியே? ஹா ஹா ஹா:)..

   Delete
  4. வாங்கோ ட்ருத் வாங்கோ.. வந்ததும் வராததுமா பாராட்டியிருக்கிறீங்க...:) இதில் இரண்டு வசனம் இருக்கு எனச் சொன்னீங்க:) எனக்கு பின் வசனம் மட்டுமேதான் தெரியுது:)).. நாம ஆரு?.. அன்னம் பரம்பரையாக்கும்..க்கும்...க்கும்...:).

   ///AngelinFriday, March 24, 2017 5:25:00 pm
   அதிரா அந்த நவரத்ன அடைதோசை போன வருஷம் செஞ்சது ப்ரிட்ஜில் இருக்கே அதை எடுத்து நியூ ஜெர்சி டைரக்சன் பார்த்து வீசி விடுங்க கொஞ்சம்///
   தோசை என்ன ஓசை..:) அதுக்கு முதல் வருடம், என் கேதார கெளரி விரதத்துக்கு செஞ்ச.. அரிசிமாவில் செய்த... சீனி அரியதரம்... சுட்டியலாலகூட உடைக்கேலாமல் போய் ஃபிரீசரில் போட்டு வச்சேன்ன்.. எப்பவாவது உதவும் என:).. இப்போ வெள்ளி துலாவில:) ரைம் கைகூடியிருக்கு:).. ஸ்ராட் மூசிக் அஞ்சு:))..

   Delete
  5. ///என்னைச் சொல்லலியே? ஹா ஹா ஹா:)..///😄😘

   Delete
  6. இங்கின ஃபோன் ஸ்மைலி எல்லாம் காட்டாதாக்கும்:)

   Delete
 8. ஹையோ அந்த பஸ் ட்ரைவர் :) ஹாஹா பொறாமைல இப்படியா செய்து தொலைப்பர் ..நாம் அந்த ட்ரைவர் மாதிரி ஆளுங்க பஸ்ஸில் ஏறினா என்னாவது நம் கதி ..#
  சரி மிச்ச கும்மியை கீதா ட்ரூத்துடன் தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நான் பஸ் டிரைவராக இருந்தால் எழுதிருச்சி இடம் கொடுக்கமாட்டேன் அம்மணியை கூப்பிட்டு மடியில் உட்கரா வைச்சு ப்ஸ் ஒட்டீருப்பேன். கொஞ்சம் கூட விவரம் இல்லாதவராக அந்த கண்டெக்டர் இருக்கிறார்

   Delete
  2. சாமீ நான் இனிமே பஸ்ஸில் ஏறவே மாட்டேன் :)

   Delete
  3. ஹா ஹா ஹா... பிடிங்கோ அஞ்சு இனியும் பொறுக்கேலாது தேம்ஸ்ல தள்ளிட வேண்டியதுதான்..:)

   Delete
 9. இன்னுமொன்று அதிரா சில பெண்களுக்கு இயலாமை பொறாமையாக கோபமாக வெளிப்படுதுன்னு நினைக்கிறன் .நான் பதிகிவுலகம் வந்த நாள்முதல் எல்லா சக பதிவர்கள் ஆண் பெண் வேறுபாடின்றி நன்கு பழகுவேன் தைரியமாக பின்னூட்டங்களை தருவேன் எந்த சப்ஜெக்ட்டாக இருந்தாலும் ..இதெயெல்லாம் எதுக்கு சொல்றேன்னா இவ்வளவு என்னை உற்சாப்படுத்தி உசுப்பி விட்டது நிறைய ஆண்கள் தான் ,இந்த பெருந்தன்மை பெண்களிடம் காண்பது அரிது ..
  முதலில் தாங்களே தங்களை சுற்றி போட்டுக்கொண்ட மாய கூட்டுக்குள் இருந்து வெளி வரணும் பெண்கள் ..

  ReplyDelete
  Replies
  1. இது கிண்டல் அல்ல உண்மை ஒன்றை சொல்லுகிறேன்......ஒரு பெண்பதிவரிடம் பேசும் போது அவர் என்னிடம் நீங்கள் வேற எந்த பெண்பதிவரிடமாவது பேசி இருக்கிங்களா என்று கேட்டார் அப்போது நான் சிலபேர் பெயர் சொல்லி அவர்களிடம் பேசி இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே சொன்னேன் அதற்கு அவர் சொன்னது இப்படி என்னிடம் சொன்னது போல வேறுயாரிடமும் சொல்லாதீங்க இங்கு உள்ள பதிவர்கள் பொறாமை புடிச்சவர்கள் என்று பதில் அளித்தார் அதை கேட்டதும் எனக்கு ஆச்சிரியமாகி போனது இவ்வளவிற்கும் அவரும் நான் மதிக்கும் ஒரு நல்ல பதிவர்தான்.


   என்னதான் பெண்கள் வரிந்து கட்டி எழுதினாலும் கடைசியில் இப்படித்தான் இருக்கிறார்களா என்று ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது

   Delete
  2. ஹையோ இந்த பொறாமை பற்றி எழுதினா அது அனுமார் வால் மாதிரி போகுங்க ..இந்த இடத்தில fb emoticon ஒன்னு வருமே வாயில் பிளாஸ்டர் ஒட்டி அதை போட்டுக்கோங்க :) ஆண்களுக்கு பொறாமை இல்லை இல்லை ..பெண்கள் தான் பெண்களுக்கு ஒரே எதிரி

   Delete
  3. @அஞ்சு..////இந்த பெருந்தன்மை பெண்களிடம் காண்பது அரிது ..///

   இது 100 வீதமும் உண்மையேதான் அஞ்சு... அது பெண்களின் மரபு அணுக்களில் ஒட்டியே இருப்பதாகக்கூட இருக்கலாம், தங்கமானவர்களாக இருப்பினும், கொஞ்சம் பொறாமை இருந்தாலே ஒதுக்கிவிட வேண்டியர்களாகின்றனர்..

   Delete
  4. ///Avargal UnmaigalFriday, March 24, 2017 12:53:00 pm
   இது கிண்டல் அல்ல உண்மை ஒன்றை சொல்லுகிறேன்//

   இதை நான் நம்புகிறேன், பல பெண்களுக்கு பப்ளிக்கில் எல்லோரோடும் கதைக்க பயம், ஆனா உள்பெட்டியில் நன்கு மின்னி முழக்குகிறார்களாம், பப்ளிக்கில் ஒரு வரியில் கொமெண்ட் இருக்கும்.. இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என எண்ணத் தோணியது.. இது நான் நேரடியாகக் கேள்விப்பட்ட உண்மை.

   இன்னுமொன்று அதிகமாகக் கும்மி நடக்கும் இடங்களுக்கு சிலர் போவதில்லை ஆனால் புதினம் பார்ப்பார்கள்... :) இதுகூட ஒருவித பொறாமை உணர்வோ என எண்ணத் தோணும்... சரி நிறையவே வருது வாயில் ஆனா அதிகம் அடுத்தோரைக் குறை கூறும் அளவுக்கு நான் ரொம்ப நல்ல பிள்ளை எனச் சொல்ல மாட்டேன்ன்.. ஆனா ஒன்றை மட்டும் சொல்வேன்ன்.. மனமறிந்து சத்தியமா பொறாமைப் பட்டதுமில்லை நோகடித்ததுமில்லை, நோக வைக்க நினைத்து எதுவும் எழுதியதுமில்லை. நான் ஏதோ எழுத, அதை தவறாகப் புரிந்து யாரும்.. கவலை அடைந்திருக்கலாம் .

   Delete
 10. உங்களை மனதில் இருத்திப் பெண்களைக் கணிக்கிறீர்களோ தெரியவில்லை. தமிழில் ஒரு சொல் வழக்கு உண்டு. காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள் ஆய்வு செய்வது அறி வுடையார் கண்ணதே எனக்கும் பெண்கள் பற்றிய ஒரு பொதுக் கருத்து உண்டு. சிலவற்றை அவ்வப்போது தமாஷாக எழுதி இருக்கிறேன் என் மனைவியின் சம்மதத்தோடுதான். பெண்களின் மன ஆழத்தை உணர்வது மிகவும் சிரமம் நீங்கள் எழுதீருப்பவை எல்லாவற்றுக்கும் பின்னூட்டம் எழுதினால் இந்தப்பதிவை விட நீண்டுவிடும் என் ப்ளாக் திறப்பதில்லை என்னால் அதில் எழுத முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது பெண்கள் பற்றிய என் சில பதிவுகளை அனுப்பித் தருகிறேன் படித்துப் பாருங்கள் ஆனால் எந்த முகவரி தெரியவில்லையே வாழ்த்துகள் ஒரே ஒரு குறிப்புடன் முடிக்கிறேன் The beauty lies in the eyes of the beholder

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா GMB வாங்கோ..//G.M BalasubramaniamFriday, March 24, 2017 10:46:00 am
   உங்களை மனதில் இருத்திப் பெண்களைக் கணிக்கிறீர்களோ தெரியவில்லை///
   எனக்கிது சரியாகப் புரியவில்லை, என் மனதில் தோன்றிய கணிப்பைத்தான் எழுதியிருக்கிறேன்.. அதுக்காக நான் எழுதியதே சரி என சொல்ல முடியாது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் கருத்து இருக்கும் தானே.

   ///பெண்களின் மன ஆழத்தை உணர்வது மிகவும் சிரமம் ///

   உண்மையேதான், பெண்களாலேயே பெண்களின் மனதை ஈசியா அளவு போட்டிட முடியாது, ஆனா உள்ளுணர்வு மூலம், ஒரு ஆணை இலகுவில் 75 சத வீதமாவது கணிப்பிட்டிட முடியும்:).

   ///எல்லாவற்றுக்கும் பின்னூட்டம் எழுதினால் இந்தப்பதிவை விட நீண்டுவிடும் ///ஹா ஹா ஹா உண்மைதான்..

   /// நேரம் கிடைக்கும் போது பெண்கள் பற்றிய என் சில பதிவுகளை அனுப்பித் தருகிறேன் படித்துப் பாருங்கள் ஆனால் எந்த முகவரி தெரியவில்லையே///

   நிட்சயம் தேடித் தாங்கோ, படிக்க ஆவலாக இருக்கிறேன்... இங்கேயே பின்னூட்டத்தில் லிங் தாங்கோ.. தனியே எனக்கு அனுப்பினால் நான் மட்டும்தானே படிப்பேன்ன், இங்கு போட்டால் எல்லோரும் படிக்க ஒரு சந்தர்ப்பம் அமையும்.

   ///The beauty lies in the eyes of the beholder/// 100 வீதம் உண்மை.

   எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.

   மிக்க நன்றி உடன் வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
  2. என் பதிவுகள் திறப்பதில்லை dd யை அணுகி இருக்கிறேன் சுட்டி தந்தாலும் பதிவு திறக்காவிட்டால் படிக்க முடியாதே

   Delete
  3. மீண்டும் வந்திருக்கிறீங்க ஐயா, மீள் வருகைக்கு மிக்க நன்றி... நில்லுங்கோ ஏதும் ஒழுங்கு பண்ணுவோம் படிப்பதற்கு...

   Delete
  4. நீங்க என்ன சொல்றீங்களென எனக்குப் புரியவில்லையே... இப்போ போய் உங்கள் 2010 ஆண்டின் ஒரு பதிவை திறந்தேன்.. திறக்கிறதே. அப்போ எது படிக்க முடியவில்லை என்கிறீங்க? சாம்பிளுக்கு ஒரு லிங் தாங்கோ?..

   Delete
  5. எனக்கு என் பதிவுகள் திறக்க வில்லை கூகிள்க்ரோம் வழி வந்தால் திறக்கிறது அன்னையர் தினம் கொண்டாடும் இன்னாளில் இன்றைய அன்னையர் பற்றிய ஒரு கவிதை சுட்டி இதோ
   http://gmbat1649.blogspot.com/2013/05/blog-post_17.html

   Delete
  6. மிக்க நன்றி போய்ப் படிக்கிறேன்..

   Delete
  7. கொடுத்த சுட்டியைஒயே இன்னும் வாசிக்க வில்லை. இதோ மீண்டும் ஒன்று இது மட்டும் போதுமா இன்னும் வேண்டுமா பெண்கள் பற்றிய உண்மையான கணிப்புகளுக்கு அணுகவும் /http://gmbat1649.blogspot.com/2012/05/blog-post_28.html

   Delete
  8. வந்து படித்துவிட்டேன்ன்... மிக்க நன்றி கணிப்புக்கு:) சரியாகத்தான் கணிப்பிட்டிருக்கிறீங்கள்.

   Delete
 11. தங்களை பற்றி தாங்களே பெண்கள் எழுதுவது என்று சொல்லிவிட்டு அனைத்தையும் ஒரே பதிவில் சிறியதாக சொல்லி முடித்திருப்பது பாராட்டதக்கது...ஏனென்றால் பெண்கள் தங்களை பற்றி தாங்களே பேச ஆரம்பித்தால் அதற்கு முடிவு என்பததே கிடையாதே..


  ஆனாலும் மனதில் தோன்றியை சொல்லி சென்றதற்காக பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. ///Avargal UnmaigalFriday, March 24, 2017 10:51:00 am
   தங்களை பற்றி தாங்களே பெண்கள் எழுதுவது என்று சொல்லிவிட்டு//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வந்த வேகத்தில இப்பூடிக் கோத்து விடக்கூடாது:).. பெண்களைப்பற்றி பெண்கள் சொல்லவில்லை.. நான் தான் சொல்கிறேன் எனச் சொல்லியிருக்கிறேன்:).

   /// அனைத்தையும் ஒரே பதிவில் சிறியதாக சொல்லி முடித்திருப்பது பாராட்டதக்கது///
   ஹா ஹா ஹா டங்கூ டங்கூ:) இதில்கூட பாருங்கோ உங்களுக்குத்தான் பாராட்டத் தோணியிருக்கு:) அஞ்சு என்னைப் பாராட்டவே இல்லை:) என்ன காரணம் தெரியுமோ?:) பொறாமைதான்ன்ன்ன்:)) ஹஒயோ ஆண்டவா படிச்சதும் கிழிச்சிடுங்கோ ட்றுத்:) புடலங்காய் கூட்டு ரொம்ப நல்லா செய்திருக்கிறீங்க(பாராட்டுறேன்ன்):)).

   ///.ஏனென்றால் பெண்கள் தங்களை பற்றி தாங்களே பேச ஆரம்பித்தால் அதற்கு முடிவு என்பததே கிடையாதே..///

   இது கிட்டத்தட்ட நீங்கள் அரசியல் பேசுவதைப்போலவே தான்ன்ன் இரண்டுக்கும் முடிவில்லை:)) ஹா ஹா ஹா...

   மிக்க மிக்க நன்றி ட்றுத். இதில் நான் யாரையும் குறை கூறவில்லை... என் மனதில் தோன்றியதை சொல்லியிருக்கிறேன்ன்.. எனக்குத் தெரியாத, என்னைப்பற்றிய எத்தனையோ குறைகள் அடுத்தவரிடம் இருக்கலாமெல்லோ..

   Delete
  2. Garrrrr...naan innum comments finish pannala.going in reverse order will continue tomorrow

   Delete
  3. ஹா ஹா ஹா அப்போ அஞ்சு இன்னும் குழல்புட்டில் முதலாவதாகப் போட்ட புட்டைத் தொடல்லேஏஏஏஏஎ:)..

   Delete
  4. இப்போ தேங்காய் துருவல் நேந்திரங்கா பழமும் தொட்டுட்டேன் :) குழலில்

   Delete
 12. //உண்மையிலேயே பெண்கள் மிகவும் நல்லவர்கள், மென்மையானவர்கள், அன்பானவர்கள், அவர்களுக்குள்ளே அத்தனை திறமைகளும் ஒளிஞ்சிருக்கு, பொதுவாக எல்லாப் பெண்களுக்குள்ளும் எல்லா திறமைகளும் ஒளிஞ்சிருக்கு, ஆனா சிலர் அதை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர், சிலர் வெளிப்படுத்த தயங்குகின்றனர்.

  தயக்கத்துக்கு காரணம், யாரும் ஊக்குவிப்பதில்லை///
  பெண்களுக்கு எல்லாத திறமையும் கொடுத்த இறைவன் இந்த ஊக்குவிக்கும் திறமையை மட்டும் ஆணுக்கு கொடுத்துவிட்டது மிகப் பெரிய அநியாயம் அல்லவா

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ஹா ஊக்குவிக்கும் திறமை ஆண்களிடம் அதிகம் இருக்கிறதுதான்... ஆனா திறமையை வச்சிருந்தும், எல்லா ஆண்களும் ஊக்கம் கொடுக்கிறார்களா என்ன? மனைவி நெட்டில் உலாவுவதை விரும்பாத ஆண்களும் இருக்கிறார்கள்தானே... என்னிடமே சில நண்பிகள் மெயிலில் கவலைப்பட்டதுண்டு, தமக்கு விருப்பம், ஆனா கணவருக்கு பிடிப்பதில்லை என்ன பண்ணுவது என. அதுக்கு காரணம் ஆயிரம் இருக்கலாம்.. யாரையும் குறை சொல்ல முடியாது.

   Delete
 13. /இந்த கடந்த சுவீட் 16:) வருடங்களாக நான்,//

  நீங்கள் நம்பரை டைப்பண்ணும் போது மட்டும் வலமிருந்து இடமாக டைப் செய்வதால் 61 என்பதை பலரும் 16 என்று படித்து புரிந்து கொள்கிறார்கள். வருங்காலத்தில் இந்த தவறை சரி செய்யவும்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)..

   ///61 என்பதை பலரும் 16 என்று படித்து புரிந்து கொள்கிறார்கள். வருங்காலத்தில் இந்த தவறை சரி செய்யவும்///
   இப்பூடி ஆயிரம் தடவைகள் எழுதினாலும்.. ஒரு பொய் உண்மையாகிடாது:))..

   Delete
 14. ///இது முற்று முழுவதும் என் கருத்து மட்டுமே...///

  இது அதிராவின் கருத்துமட்டுமே மற்ற பெண்களின் கருத்து அல்லதான்

  ReplyDelete
  Replies
  1. கரீட்டூஊஊஊஊஊஊஊஊஊ ட்றுத் கரீட்டூஊஊஊ:)

   Delete
 15. ///
  பொதுவாக பெண்கள் தொட்டாச்சுருங்கிகள் போலத்தான் இருப்பார்கள், அதாவது மென்மையான மனம் படைத்தவர்கள்///


  உங்க பேச்சை கேட்டு குழந்தையை ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் விட்டும் போது அங்கு இருந்த ஒரு பெண்ணை தொட்டுதானுங்க பார்த்தேன் அதன் பிந்தான் தெரிந்தது பெண்கள் மென்மையானவர்கள் அல்ல அடிச்ச ஒன்றை டன் என்று சிங்கம் படத்தில் பேசிய சூர்யா பேசின வசனத்தை அந்த் பெண் செயல்படுத்தி காண்பித்தார்

  ஏனுங்க உங்களுக்கு ஏன் இப்படி ஆண்கள் மேல் இந்த அளவு வெறுப்பு இருந்தால் இப்படி சொல்லுவிங்க்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா .. இதுக்கு நீங்க இப்போ மாமி வீட்டில இருந்து கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கோணும்:).. ஏதோ உங்காத்து மாமி செய்த புண்ணியத்தால.. இங்கின வந்து கொமெண்ட் போட்டிருக்கிறீங்க:)... இனியும் யாரையும் தொட்டிடாதீங்க பிளீஸ்ஸ்:) பிறகு நான் சாட்சிக்கு வந்து கூண்டிலே ஏறி நின்று வக்கீல் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வந்திடும்:)

   அதிலும் பெண் வக்கீல் எனில்:) இப்பதிவைப் படிச்சால் அவ்ளோதான்ன்.. எனக்கு 4 வருடங்கள் அல்ல:).. ஆயுள் தண்டனைதேன்ன்ன்:))..

   ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ட்றுத்.. வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்.

   Delete
 16. #“தன்னைப் புகழாத தனையன் உண்டோ?”#
  தனையனுக்கு பெண்பாற் சொல் இல்லையே ,இதை யோசித்து பார்த்தீங்களா :)
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ பகவன் ஜீ(பெயர் கரீட்டுத்தானே?:)) வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்க மகிழ்ச்சி.

   ///தனையனுக்கு பெண்பாற் சொல் இல்லையே ,இதை யோசித்து பார்த்தீங்களா :)///
   எனக்கு இப்போ ஆண் பெண் வேறுபாடே மறந்துபோச்ச்ச்ச்ச்:) ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சிடுங்கோ:) திட்டிடப்போகினமே முருகா என்னை:).

   //த ம 4/// வாவ்வ்வ்வ்வ்வ் வந்த வேகத்திலயே மை வச்சிட்டீங்க.. மிக்க மிக்க நன்றிகள்.. இம்முறை நான் தான் மகிடம் சூட்டப்போகிறேன்ன்ன்.. உங்களுக்கல்ல:) ஹா ஹா தமிழ் மணத்தைச் சொன்னேன்:)..

   Delete
  2. வன் இல்லே வான் :)

   நேற்றைய என் பதிவுக்கு பதினொரு வாக்கு விழுந்தும் பத்தென்றே சாதிக்கிறது த ம ,எனக்கே மகுடத்தைக் காணாம் :)

   Delete
  3. ஹா ஹா ஹா ஓ வான் ஜீ:) ஆ... சரி இனிமேல் கரீட்டா எழுதிடுவேன். மகுடம் சூட்ட வந்தால் நீங்க 7 ம் கிரகத்தில இருக்கிறீங்களே.. நான் அட்டமத்துச் சனியாக்கிட்டு வந்தேன் உங்களுக்கு... ஹா ஹா ஹா...:)

   Delete
 17. #ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒவ்வொரு அழகு ஒளிஞ்சிருக்கு..#
  உங்களுக்கு புரிந்தது என் இல்லாளுக்கு புரியலே ,நான் ரசித்தால் முறைக்கிறாரே :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. இஞ்ச பாருங்கோ, நான் ஒரு சூட்சுமம் சொல்லித் தாறேன்ன்:)..

   கணவன், எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல், ரசிக்காமல் மனைவியை மட்டுமே புகழ்ந்து கொண்டிருந்தால்:), நாங்களே.. இழுத்து இழுத்துக் காட்டுவோம்ம்.. அந்தப் பெண்ணைப் பாருங்கோ இந்தப் பெண்ணைப் பாருங்கோ என:)..

   ஆனா கணவனாக, இன்னொரு பெண்ணை ரசிச்சு எமக்குச் சொன்னா... அவ்ளோதான் கீசிப்புடுவோம் கீசி:) ஹா ஹா ஹா...

   இதை எல்லாம் என்னையே சொல்ல வைக்கிறியே முருகா:).. இந்தப் போஸ்ட்டோடு நான் காணாமல் போனாலும் போயிடுவேன் போல இருக்கே வைரவா:) என் ராசி அப்பூடி:).

   மிக்க மிக்க நன்றிகள், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்.

   Delete
  2. ரொமான்ஸ் ரகசியம் புரிந்தது :)

   Delete
 18. சாதாரணப் பதிவுகளையே வாசிக்கத் தொடங்குமுன் தம க்ளிக் செய்து விடுவேன். படிக்கவும், யோசித்துப் பின்னூட்டம் போடவும் ஆகும் நேரத்தில் வாக்கு விழுந்து விடும் பாருங்கள்! இதுவா... நீ..... ண்ட பதிவு! எனவே தயக்கமில்லாமல் தம இப்போதும் அப்படியே விழுந்து விட்டது!


  //பெண்கள் எல்லோருமே அழகுதான்//

  ஆம், அழகு என்பது, உடலில் அல்ல, மனதில் இருக்கிறது.

  உங்கள் தோழி கதை படிக்கும்போது எனக்கும் வாய் துருதுரு என்கிறது. நானும் அறிவேன் இப்படிப்பட்ட தம்பதிகளை.. (நாங்கள் அல்ல)

  பதிவை மூச்சு வாங்கப் படித்தேன். அம்மாடி... எம்புட்டு நீளம்! வாழ்க மகளிர்.

  மகளிர் - அன்னையர் -தின வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா என் பதிவு நீண்டு விட்டது என்பதை ..இப்படிக் கூடச் சொல்லமுடியும் என, தமிழ்மணத்தை வச்சே சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா.

   துரு துருத்த வாயை கொஞ்சமாவது ஆட விட்டிருக்கலாம்:).. சரி சரி ரொம்பத்தான் பயப்பிடுறீங்க போல.. ஏதும் சொல்லப்போனால் வம்பாகிடுமோ என:)..

   என் பக்கம் வரும் எல்லோரும் மூச்சு வாங்குது என்றீங்க?:) ரொம்பத் தூரத்தில இருந்து ஓடிவாறீங்களோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

   மிக்க நன்றி வாழ்த்துக்கும், அனைத்துக்கும்.

   Delete
 19. /நம் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற இடமளிக்கக்கூடாது, முடிந்தவரை அனைத்தையும் பொஸிடிவ் ஆகவே எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் எதிர்க்கருத்துக் கூறுவோர்/ பிடிக்காதோரிடம் இருந்து நைசா ஒதுங்க தெரிஞ்சிருக்கோணும், அதை விட்டுப் போட்டு அவர்களை விட்டு விலகாமல் எப்பவும் குறைகூறிக்கொண்டும், எதிர்க்கருத்துக்கள் சொல்லிக் கொண்டும் இருப்பது அழகல்ல///

  மிக ஆழமான அருமையான உண்மையான கருத்து ..எனக்கு பிடிக்கலைன்னா அப்படியே ஒதுங்கிடுவேன் ..

  ReplyDelete
  Replies
  1. யெஸ் இந்தக் கருத்து நல்ல உண்மையான கருத்து!!! பிடிக்கலைனா ஒதுங்கிவிடுதல்!! சூப்பர் அதிரா...ஹைஃபவ் வித் அதிரா அண்ட் ஏஞ்சல்!!

   கீதா

   Delete
  2. மிக்க நன்றி அஞ்சு, கீதா... வீண் வாக்கு வாதம் செய்து என்ன காணப்போகிறோம்? மனக்கவலைதான் மிஞ்சும்... பலநேரங்களில்.. மெளனம் கலகாஸ்திரி:).

   Delete
 20. //.. இது முற்று முழுவதும் என் கருத்து மட்டுமே...//


  இவ்ளோ சொல்லிட்டு எதுக்கு பயம் உண்மையை உரக்க சொல்வீர் ..:) என்னுடைய மற்றும் பலரின் கருத்துக்களை சொல்லியிருக்கீங்க

  சேர்ந்தே கல்லடி படுவோம் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கல்லடி ஓகே:) தேம்ஸ்ல தள்ளிட்டால்ல்ல், நோ நான் மாட்டேன்ன்) ரொம்பக் குளிருது:)..

   Delete
 21. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் தாய்மனம் கொண்ட அனைவருக்கும் ..அப்படி பதிவின் முதல் பாராவுக்கு வந்திட்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜம்ப் பண்ணிட்டீங்களோ முதல் பராவுக்கு:).. மிக்க மிக்க நன்றிகள் அஞ்சு.

   Delete
 22. ஹா ஹா சண்டே இங்கே டைம் மாத்தறாங்க ..பாதி கூட்டம் லேட்டா கோயிலுக்கு வரப்போறாங்க :)
  என்னடா பதிவின் லாஸ்ட் வந்தேன்னு பாக்கறீங்களா :) அது ரிவர்ஸ் ஆர்டார்ல போயி பின்பு ரவுண்டா circle இல் வாசிச்சேன் பதிவை

  ReplyDelete
  Replies
  1. யேஸ்ஸ்ஸ், இனி ஏழியா வீட்டுக்கு வந்திடுவோமே ஈவினிங்ஸ்ல. ஆனா மாத்துவதுதான் நல்லது, முன்பெல்லாம் 7 மணிக்கு லைட் போட்டே ரீ ஊத்த வேண்டியிருக்கும், இப்போ 6 மணிக்கே பயங்கர வெளிச்சமாகிடுது.

   Delete
 23. பாதி வாசித்திருக்கிறோம் இதோ வரோம்....அட்டெண்டன்ஸ் வைச்சாச்சு...

  கீதா: வரேன் வரேன்...

  மதுரைத் தமிழன்கும் இதோ வரேன்....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா எனக்கொரு பழமொழி இங்கே நினைவுக்கு வருது:) வாணாம்ம்... சொல்லவில்லை..:)..

   வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.

   Delete
 24. அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள் அதிரா...

  ரொம்ப அழகாக, தெளிவா உங்க கருத்ததுக்களை சொல்லி இருக்கீங்க...

  ஒவ்வொரு எழுத்தையும் ரசித்தேன்...


  தனி தனியா கருத்து சொல்லனும் பரபரக்குது...
  ஆன வார்த்தைகளே வராம காத்து தான் வருது ......  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. என்னாதூஊஊ வார்த்தைகள் வருகுதில்லையா?:) ஹா ஹா ஹா சரி சரி விடுங்கோ.. மிக்க நன்றி அனு.. வாழ்த்துக்கும் வருகைக்கும்..:).

   Delete
 25. ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா.. இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்! :)

  முதல் முறையா இந்தப் பக்கம் வரேன்... பொறுமையா படிச்சு முடிச்சேன்.

  கொசுமெயில்-ல இருக்கும் கொசு கிட்ட இனிமே பதிவு போட்டா ஓடி வந்து காதோரம் சொல்லுன்னு சொல்லிட்டேன்! இனி தொடர்ந்து வருவேன்....

  தொடரட்டும் பதிவுகள். வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

   ///ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா.. இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்! :) //
   ஹா ஹா ஹா.. என் பக்கம் வருவோர் யோகா ஏதும் செய்வினமோ?:)..

   ஹா ஹா ஹா .. நீங்கள் வராமல் ஒளிச்சாலும் கொசுவார்ர்.. கிணுகிணுத்து வரவச்சிடுவார்... தொடர்ந்து வாங்கோ..
   மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
 26. அதிரா சகோ அருமையான ஓரு பதிவு!!! ஆழமான கருத்துகள் அடங்கிய பதிவும் கூட.!! சகோ வாக்கிங்க் போகும் போது யோசித்துக் கொண்டே போவீர்களோ??!!! ஹஹஹ்

  கீதா: ஊசிக் குறிப்பிலிருந்து வாரேன். நல்லாருக்கு...ஆனா இடிக்குது போல இருக்குதே....எண்ணங்கள் பூர்த்தியானால் நிம்மதி....அப்போ தேவையானதைப் பெற முயற்சி செய்வோம் இல்லையேல் விட்டுவிடுவோம் அப்போதான் நிம்மதி கிடைக்கும்...இரண்டும் முரணாக இல்லையா அதிரா?!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன், ஹா ஹா ஹா எனக்கு கற்பனைகள் பண்ணுவது ரொம்பப் பிடிக்கும்:), இதனால பெரும்பாலும் ட்றைவ் பண்ணும்போது, வோக் போகும்போது.. தனிமையில் எனில் பாட்டுக் கேட்காமல் கற்பனையில் பதிவு எழுதிப் பார்ப்பதுண்டு:).

   வாங்கோ கீதா... ஹா ஹா நீங்களும் அதே குழல்புட்டுத்தான் எனத் தெரிந்து கொண்டேன்:)..

   அதன் விளக்கம் என்னவெனில் கீதா, எண்ணம் பூர்த்தி ஆனால் நிம்மதி, ஒருவேளை பூர்த்தி ஆகாதுவிட்டால்.. பூர்த்தியாகவில்லையே என அதை நினைச்சே நிம்மதியை இழக்காமல்... அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, புதிதாக எண்ணோனும்.. அதையே பிடிச்சுக்கொண்டு தொங்கக்கூடாது என வரும்...:)..

   குழப்பிட்டேனோ?:)

   Delete
 27. எங்கள் இருவரின் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!! எல்லோருக்கும்...

  ReplyDelete
 28. நான் முன்பும் கூறியிருக்கிறேன், பெண் என்றாலே தாய்மை உணர்வு நிறைந்தவர்களே, இதில் தாய் வேறு பெண் வேறு என்றில்லை, குழந்தை பெற்றால் மட்டும்தான் தாயாக முடியுமோ?..// அதிரா இந்தக் கருத்து எல்லா பெண்களுக்கும் பொருந்துமா என்று தெரியலை....பொதுவாகச் சொல்லுவது பெண் என்றால் தாய்மை என்று. ஆனால் இது பொருந்தாது. எல்லா பெண்களும் உள்ளவர்களாகத் தெரியவில்லை. அதுவும் வயதாக வயதாக இந்த உணர்வு பலரிடமும் குறைகிறது என்றே தோன்றுகிறது அதிரா...தாய்மை என்பது தான் பெற்ற குழந்தைகளிடம் மட்டுமின்றி எக்குழந்தையாக இருந்தாலும் சரி ...அந்த உணர்வு....சரியா நான் சொல்லுவது?

  பெண்களைப் போல ஆண்கள் பலரிடமும் இந்தத் தாய்மை உணர்வு இருப்பதாகச் தெரிகிறது...நம் சகோக்கள், நண்பர்களை எடுத்துக் கொள்ளுங்கள் இங்கே....ஸ்ரீராம், மதுரைத் தமிழன், விசு, துளசி
  இவர்கள் எல்லோருமே நல்ல உதாரணங்கள் என்பது என் கணிப்பு! இவர்களைப் போன்று மேலும் பலர் இருக்கலாம் நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லையாக இருக்கலாம்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை கீதா, ஆனால் எந்த ஒன்றிலும்.. விதிவிலக்குகள் நிட்சயம் உண்டுதானே? இதை வரிக்கு வரி சொல்ல நினைச்சு, இல்லை வாணாம் என விட்டிட்டேன்ன். மஜோரிட்டி அதிகம் எதிலிருக்கு எனச் சொல்ல வந்தேன்.

   அது உண்மை... இக்காலம் சுயநலம் அதிகமாகிட்டே வருது.. என் உடைமை, என் பிள்ளை, என் சொத்து என தன்னுடையதுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போர் நிறையப்பேர் உண்டு.. அதைப்பற்றி ஒரு பதிவே போடலாம்.. இதற்கும் காரணம்.. பொறாமை.. போட்டி உணர்வுதானே...

   ஹையோ கீதா, நான் பெண்களைப்பற்றித்தான் இங்கு பேசியிருக்கிறேன்ன்.. :) நீங்க நான்கே நான்கு பேரின் பெயரை மட்டும் போட்டு ரொம்ப நல்லவிங்க எனச் சொல்லிட்டீங்க:).. ஹையோ ஏனையோர்ர் கொலை வெறியோட பார்க்கினமே:)).. கீதா ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய் மேசைக்குக் கீழ ஒளியுங்கோ:).. என் பக்கம் வந்தோரைப் பாதுகாத்து சந்தோசமா, பத்திரமா அனுப்பி வைக்க வேண்டியது என் கடமை ஆச்சே:).. ஹையோ வைரவா உங்கட வாகனத்தை:) அனுப்பியாவது கீதாவைக் காப்பாத்திடுங்கோ ஜாமீஈஈஈஈ:)..

   Delete
  2. யாரது யாருக்கு ஆபத்து நான் வரேன் இருங்க ( அப்பாடி யாருமில்லை ) இந்த மாதிரி நேரத்தில்தான் கத்தி சுத்தலாம் தனியா :)))

   Delete
  3. கர்ர்ர்ர்ர்:) தனியா நீங்க சுத்துவீங்க ஆனா தனியா சுத்தும் உங்களைப் பார்த்து நான் பயந்திட்டேன்ன்:).. ஒரு சுவீட் 16 பிள்ளை பயப்பிடும்தானே?:)

   Delete
 29. ஓ அதிரா நீங்களும் நான் சொன்ன தாய்மை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் முதலில் பகுதிதான் வந்ததா கணினி மெதுவாக இயங்கியதால்...சாரி...இப்போது வாசித்து விட்டேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அப்போ நீங்களும் அஞ்சுவைப்போல கொறைமாதக் கொயந்தையாக இருப்பீங்களோ?:)..

   Delete
 30. அதிரா பல கணவன்களுக்கு மனைவிகள் நெட்டில் உலாவுவது பிடிப்பதில்லை....எங்கேனும் மனைவிகள் அவர்களை மிஞ்சிவிடுவார்களொ ஃபேமஸ் ஆகிடுவாங்களோனு ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இதுவும் கரெக்ட் தான் கீதா.

   மிக்க நன்றிகள் வரவுக்கும் கருத்துக்கும்.

   Delete
 31. அப்புறம் அதிரா முக்கியமான விஷயம் சொல்லணும் ..நீங்க இந்த போஸ்டை மிக அருமையாக எழுதியிருக்கீங்க ..மகளிர்தினம் மற்றும் அன்னையர் தினம் இரண்டுக்கும் சேர்த்து மெகா போஸ்ட்டாக அமைந்துவிட்ட்டது .

  ம்ம் அப்புறம் நாளைக்கு பெட் காபி பெட் டீ பெட் ப்ரேக்பஸ்ட் எல்லாம் மம்மிக்கு பிள்ளைங்கதான் செய்யணும் :) இன்க்ளூடிங் டெய்சி மல்டி ஜெசி இவங்களும் ஹெல்ப் பண்ணனும்

  ReplyDelete
  Replies
  1. ///அப்புறம் அதிரா முக்கியமான விஷயம் சொல்லணும் ..நீங்க இந்த போஸ்டை மிக அருமையாக எழுதியிருக்கீங்க///

   ஆவ்வ்வ்வ்வ் என் தாம்ஸ் நதியின் பாதியை அஞ்சு பெயருக்கே எழுதி வைக்கிறேன்ன்:)..

   ///இன்க்ளூடிங் டெய்சி மல்டி ஜெசி இவங்களும் ஹெல்ப் பண்ணனும்//
   ஹா ஹா ஹா பண்ணுவாங்க பண்ணுவாங்க.. ஓல் கள்?ளக்கூட்டம்ஸ்ஸ்.. செல்லக்கூட்டம்:)..

   96 ஆவது கொமெண்ட்டைப் போட்டுவிட்டு.. நான் 100 ஆவது போட்டேன் எனக்குப் பரிசு தா என அடம்புய்ப்பது(எங்கே என்றெல்லாம் கேய்க்கப்பூடா:)) அடாவடித்தனம் சொல்லிட்டேன்ன்:).. ஆனாலும் அஞ்சுவுக்குப் பரிசுண்டு..... இதோ என் கழுத்தில் இருக்கும் காராமணிச் சங்கிலியை டக்கெனக் கழட்டி, அஞ்சு கழுத்தில் மாலையாக அணிவிக்கிறேன்:).

   [im]http://boutiquedesignerjewellery.com/wp-content/uploads/2016/03/black-diamond.jpg[/im]

   Delete
  2. சொல்ல மறந்திட்டேன்ன்:)
   ஊசிக்குறிப்பு:-
   பிதன் பணத்தை என் எக்கவுண்ட்டுக்கு அனுப்பி வைக்கவும் பிளீஸ்ஸ்:).. 2 நாட்கள் தாமதமானால் வட்டி போட்டு அனுப்பி விடவும்:).

   Delete
 32. ''எல்லாவற்றையும் நெகடிவ்வாகவே பார்க்கக்கூடாது, முடிந்தவரை அனைத்தையும் பொசிட்டிவ்வாகவே எடுத்துக் கொள்ளப் பழகிட்டால் வாழ்க்கை ஈசியாகிடும்''. மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் இது பெண்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும். நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ, உண்மையேதான், இது எங்கள் அப்பா சின்ன வயதிலிருந்தே சொல்லித் தந்த விசயம்.

   மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 33. நான் என் பிள்ளைகளுக்குக் கூறும் ஒரு புத்திமதி
  Nothing is opened more often by mistake than the mouth........!

  ReplyDelete
 34. கர்ர்ர்ர்ர்ர்ர்......... இது உங்க பக்கத்திற்கு அதிரா. எனக்கு உங்க பக்கம், இன்னும் சிலரது பக்கம் ஓபன் ஆகுதில்லை. கனநேரம் எடுக்குது. கருத்து போடமுடியாமல் பொக்ஸ் ஓபன் ஆகுதில்லை. இப்ப கனநேரம் பொறுமையா இருந்து அதைவிட பொறுமையா உங்க பதிவை வாசித்து... எம்மாம் பெரீய்ய்ய் பதிவு. நீங்க சொன்ன மாதிரி 3நாளாச்சு. எனக்குதான் கருத்து போட..
  அன்னையர்தின வாழ்த்துக்கள்..
  எல்லா விடயத்தையும் நீங்க தான் அழகா சொல்லிட்டீங்களே பெண்களைப்பற்றி.. உங்க பதிவை வாசிச்சாலே வயிற்றுவலி வருமளவு சிரிப்பு. பேசினால் சொல்லத்தேவையில்லை...
  கடேசில வந்தா கருத்து சொல்ல இடமிருக்காது...

  ReplyDelete
 35. சுட்டி கொடுத்திருந்தது உங்களுக்கு, பதிவைப் படித்து பின்னூட்டம் இட்டிருப்பது ஏஞ்செல். நீங்கள் இன்னும் படிக்கவில்லையா. இல்லை மறு மொழி கூற முடியவில்லையா பெண்கள் பற்றிக் கூற இன்னும் நிறையவே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ... கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் ஐயா, நான் வேர்க் பண்ணுகிறேன், ஸ்கூலில் ஆசிரியையாக இருக்கிறேன், இங்கிருந்து மொபைலில் படிச்சு கொமெண்ட்ஸ் போடுவது சிரமம்... அவசரமாக செய்ய வேண்டும், அதனால ஸ்கூல் விட்டதும் ஒழுங்கா படிச்சு கொமெண்ட்ஸ் போடுவேன், நீங்கள் இன்னும் இருந்தால் லிங் ஐ போட்டு வையுங்கோ... அனைத்தையும் படிச்சு மின்னூட்டமிடுகிறேன்..

   நான் தான் அஞ்சுவை மிரட்டினேன்:) போய்ப் படிக்கச் சொல்லி:).. நைட் வருகிறேன்.

   Delete
 36. உங்க 'பழமொழிகள்' எழுதிவைத்திருக்கும் நோட்டிலிருந்து நேரடியா டைப் பண்ணிட்டீங்களா. பதிவு கொஞ்சம் நீளம்தான். ஆனால் நல்லாத்தான் இருந்தது. பின்னூட்டங்களும் நல்லாத்தான் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ.. இல்ல அதை அப்படியே ஃபோட்டோ எடுத்துப் போடுகிறேன்.

   யேஸ்ஸ்ஸ் நீளம்தான், இரு பகுதியாகப் போட விருப்பமில்லை எனக்கு அதனால அப்படியே போட்டேன்.

   மிக்க நன்றி.

   Delete
 37. பெரீ...ய ஆனால் மிகவும் சுவாரஸ்யமான பதிவு. பெண்களைப் பற்றி பொதுவாக சரியாகவே கணித்திருக்கிறீர்கள். பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி என்பதை பல பெண்கள் மனதளவிலாவது ஒப்புக்கொள்வாள்.

  பி ஹெச் டி அளவுக்கு விரிவான அலசல். ரசித்தோம்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.