நல்வரவு_()_


Thursday 16 March 2017

பாவற்காயும், றீட் மோர் உம்:)

வாங்கோ வாங்கோ... பாவற்காய் தெரியும் அதென்ன மோர்? றீட் மோர் எனப் புதிசா இருக்கே என நினைச்சு வந்திருக்கிறீங்க... தயங்காமல்  வாங்கோ.. நான் இம்முறை இரண்டு மெயின் டிப்பாட்மென்ட்களைப்:) பற்றிப் பேசப்போகிறேன்...
தில் முதலாவது கிச்சின் டிப்பார்ட்மெண்ட்:)... ஹையோ எதுக்கு இப்போ , கிச்சின் என்றதும்..மருந்தடிச்ச பூச்சிபோல எல்லோரும் பொத்துப் பொத்தென மயங்கி விழுறீங்க?:).. அப்பூடி நான் என்ன சொல்லிட்டேன்ன்:).. ஆராவது ஐஸ் வோட்டர் அடிச்சு எழுப்பிவிடுங்கோ எல்லோரையும்:).. இல்லையெனில் என் கைக்கு சங்கிலி வந்திடப்போகுதே வைரவா...:).

சரி சரி.. பாகற்காய் எனில் ஆரம்பம் கசக்கும்தானே:), எதுக்கும் பக்கத்தில் இருக்கும் பனை ஓலை, கிடுகு வேலிகளைப் பிடிச்சபடி:) ஸ்மார்ட்டா நின்று என் சமையல் குறிப்பைப் படியுங்கோ.

பாவற்காய்களில் வெள்ளையும் இருக்கு, குட்டிக் குட்டியாக பச்சையும் இருக்கு... இதில் இந்தப் பச்சைப் பாவக்காய்கள்தான் அதிகம் மருத்துவம் நிறைந்ததாம், பிளட்டில் சுகர் இருப்பதுபோல காட்டினால், பயப்படாமல் இந்த பச்சைப் பாவலை, தினமும் காலையில் கரட் துருவலில் துருவி, அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிட்டால்.. ஒரு மாதத்தில் எல்லாமே நோர்மலாகிடும்...[இது எங்கட அப்பாவின் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், ஸ்ஸ்ஸ் இப்பூடி விளக்கமா எழுதாட்டில்.. அதிராவுக்கு சுகரோ எப்ப தொடக்கம் எண்டெல்லாம் குறொஸ் குவெஷ்ஸன்ஸ் வரும்:).. ].

ங்களுக்கு இப்போதான் புதுசா தமிழ்க்கடை திறந்திருக்கு என்றேனே, அங்கு இந்த பச்சைப் பாவல்தான் கிடைக்குது. சரி இதை, கசப்பில்லாமல் எப்படி கறி வைப்பது எனச் சொல்கிறேன்... செய்து பாருங்கோ.

பாவற்காய்க் கறி:
ரு அரைக்கிலோ பாவற்காயை, வளமையாக பொரியலுக்கு வெட்டுவதுபோல வெட்டி எடுத்து, நல்ல புளி:) ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து அப்படியே கரைத்து, இந்த பாவற்காயோடு மட்டமாக விட்டு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், வெங்காயம், பச்சை மிளகாய், விருப்பப்படி உள்ளி, அளவுக்கு கறித்தூள் சேர்த்து மூடி வேக விடோணும். 

ம்மா சொல்லுவா இக்காலத்துப் பெண்கள், தாம், வன் அவரில் சமையல் முடிக்கிறோம் என ஸ்டைலாச் சொல்லிப்போட்டு... நல்லா நெருப்பை எரியவிட்டு சமைச்சு முடிக்கிறார்கள்.. அது சுவை குறைவாக இருக்கும், எப்பவும் மெல்லிய நெருப்பில் கொஞ்ச நேரம் எடுத்து அவிக்கும்போது கனிந்து வரும்.. சுவையும் அதிகமாகும் என... ஹா ஹா ஹா நமக்கு நேரம்தானே முக்கியம்:).

தேபோல நெருப்பை கொஞ்சமாகவே வைத்து அவிய விட்டு, அவிந்து வத்தி வந்ததும், மூடி திறந்து பிரட்டி, கால் டம்ளர் அளவு பால் விட்டு, அளவுக்கு உப்பு போடவும்...[பால் கட்டாயமில்லை]. நன்கு பிரட்டலானதும் , ஒரு தேக்கரண்டி சீனி[sugar], கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். கடைசியில் உப்பு சேர்த்தால்தான், கசப்பு தன்மை பார்த்து சேர்க்க முடியும், ஆரம்பம் சேர்த்தால் சிலசமயம் கசப்பு அதிகமாகிடும்.

டுத்து, அதிரா கிச்சினில் நாம் பார்க்கப்போவது...:).. ஸ்ஸ்ஸ் அதாரது எழுந்து ஓடுவது, நாம ஆரு?:) வருமுன் காப்போனாக்கும்:) டோர் லொக்ட்:)..

பாவற்காய் சம்பல்:
தேபோல கட் பண்ணிக் கொஞ்சப் பாவற்காயை எடுத்து, நொன் ஸ்ரிக்கில் போட்டு தண்ணித்தன்மை வற்றும் வரை வாட்டவும், நன்கு வாடியதும், 2,3 கறண்டி நல்லெண்ணெய் விட்டு, அதில் அரைப்பதமாக வாட்டி எடுக்கவும்.
தற்குள், சின்ன வெங்காயம் குட்டிகுட்டியாக வெட்டிப்போட்டு, சுவைக்கு உப்பு சேர்த்து, கொஞ்சம் தேசிக்காய் பிளிந்து விட்டு, கடைசியில்... பிரின்சிபல், டாக்டர் தாமோதரம்பிள்ளை அங்கிள் சமைக்கும்போது கையால் பிசைவாரே:) அப்படி கொஞ்சம் வெங்காயம் பாவற்காயுடன் சேருமாறு மெதுவாக பிசைந்து விட்டால் பாவற்காய் சம்பல் ரெடி. இதிலும் தக்காளிப்பழம் விரும்புவோர் இதனுள் ஒரு தக்காழிப்பழத்தைக் குட்டியாக அரிந்து போட்டு ஒரு மேசைக்கரண்டி பாலும் சேர்த்தால்ல் சூப்பரோ சூப்பர்...  விருந்து நேரங்களில் இப்படி தக்காளிப்பழம் சேர்த்து வைப்பது வளமை. எங்களுக்கு தக்காளி அலர்ஜி:).
========&&&===== ஒக்கே கிச்சின் டிப்பார்ட்மெண்ட் குளோஸ்ட்=====&&&========

ஊசி இணைப்பு:-
அடுத்த டிப்பார்ட்மெண்ட்தான்.. எங்கட புளொக்:)...,  ஊரெல்லாம் பென்னாம்பெரிய போஸ்ட்டாகவும், ஸ்லோவாகவும் இருந்த புளொக்குகளை எல்லாம் குட்டிப் போஸ்ட்டுக்களாகவும், ஸ்பீட்டாகவும் மாத்தச் சொல்லி, ரியூஷன் பீஸ் இல்லாமல் கிளாஸ் எடுத்து, மிரட்டி:) வெருட்டி:)... மாத்த வச்ச பெருமைக்குரியவருக்கு எப்படி நன்றி சொல்வதெனத் தெரியாமல், இங்கே உண்டியல் வைக்கிறேன்.. மொய் வச்சிடுங்கோ.. எல்லோரும் சேர்ந்து ஒரு “மொடல்” கார் வாங்கிக் குடுக்கப்போறோம்:).... அவர் யாரெனத் தெரிஞ்சிருக்குமே,  இருப்பினும் ஒரு சின்ன விளக்கம்.. அன்பாக அழைச்சால் அஞ்செழுத்து:).. செல்லமாக அழைத்தால் ரெண்டெழுத்து:)... அவர்தான் எங்கள் அன்புச் சகோதரர் டிடி... 

திவில்லாத புளொக்குகள் இருக்கலாம், ஆனால் அவரின் கொமெண்ட் இல்லாத புளொக்குகளைக் கண்டு பிடிப்பது அரிது... நேரமில்லை, வேலை, போட்டி, பொறாண்மை, எனக்கு சொறிஞ்சால்தான் உனக்கும் சொறிஞ்சுவிடுவேன்.. ஹா ஹா ஹா இப்படிப் பல பிரச்சனைகளையும் தாண்டி , அவரது கொமெண்ட்ஸ் ஐ எங்கும் காணலாம்... மிக்க நன்றி சகோதரர் தனபாலன்.
=============================================================================
=============================================================================

115 comments :

  1. இன்னுமொன்று சொல்லோணும்... புளொக்கை Dot com( .com), ஆக மாற்றியபின் நம் போஸ்ட்கள் பழையபடி எல்லோருக்கும் நோட்டிபிகேசன் காட்டாது என நினைக்கிறேன், ஏனெனில் சமீபத்தில், நேசன் மாற்றியதாக சொன்னார்.. அதிலிருந்து அவரின் புதிய பதிவுகள் எதுவும் காட்டப்படவில்லை, நான் திரும்பவும் இணைச்சேன் இப்போ காட்டுது. இப்படி என்னுடையதும் சிலருக்கு காட்டாமல் இருக்கலாம், அப்படியெனில் திரும்பவும் இணைத்துக் கொள்ளுங்கோ என் புளொக் லிங்கை.. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது தனிமரம் நேசன் அவர்கள் தானே...? (http://www.thanimaram.org)

      அவர் தனி Domain-ல் வைத்திருந்தார்... வருடாவருடம் தவறாமல் Domain-க்கு பணம் செலுத்த வேண்டும்... மறந்து விட்டால் Domain நம்மை விட்டு போய்விடும்... மீண்டும் blogspot தான் தொடர வேண்டும்...

      Delete
    2. வாங்கோ சகோ டிடி வாங்கோ... ஓ அதுவா விஷயம்.. முன்பு ஒருகாலம் சிலபேர் டொமைன் வாங்கியாதாகத்தான் அறிந்தேன்.. ஹா ஹா ஹா அதுதான் இப்படி ஆகியிருக்கு, நான் பயந்திட்டேன் டொட் கொம் க்கு மாறியதாலாக்கும் என:)...

      அதிலயும் இன்னொரு புறுணம்... இப்போ அவரது புளொக்கை திறக்க.. கூகிள் கேட்குது... அவர் அடல்ஸ் விசயங்கள் போட்டிருக்கிறார் உனக்கு அது ஓகேயா என.. ஓகே எனச் சொன்னால் மட்டுமே என்னை உள்ளே விடுது ஹையோ ஹையோ:)...

      மிக்க நன்றி டிடி என் சந்தேகத்தை தெளிய வைத்தமைக்கு.

      Delete
    3. ஓ அதான் தனிமரம் நேசன் அவர்களின் பதிவுகள் எங்களையும் சேருவதில்லையா...அப்போ மீண்டும் அங்கு போய் சப்ஸ்க்ரைப் பண்ணோணூம்...இல்லையா...பண்ணிடறோம்....அவர் தனிமரம் அல்லானு சொல்லோனூம் இல்லையா...

      கீதா

      Delete
    4. தனிமரம் நேசன் அவர்களின் தளத்திற்குப் போய் சப்ஸ்க்ரிப்ஷன் கொடுத்தால் ஏற்கனவெ இருக்குனு வருது ஆனால் அவரது பதிவுகள் வருவதில்லை.....

      கீதா

      Delete
    5. //அவர் தனிமரம் அல்லானு சொல்லோனூம் இல்லையா...

      கீதா///

      கீதா, அவர் இப்போ பெரிய தோப்பாகிட்டாலும் தான் தனிமரம் எனவே சொல்லிக்கொண்டு திரிகிறார்.. ஏன் தெரியுமோ?:) காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ சொல்றேன்ன்.. ஸ்ஸ்ஸ் லக்ஸ் வாசனை சோப் போட்டுக் கழுவிப்போட்டுக் கொண்டு வாங்கோ:)).. ஆங்ங்ங் இப்ப ஓகே...

      அது கீதா, ஸ்நேகாவைக் கரெக்ட் பண்ணவே இப்பூடி இருக்கிறார்ர்.. இவராலயே ஸ்னேகா பிரசன்னாவுக்குள் சண்டையாம்.. எனக்குத் தெரியாது.. சுசித்ரா அக்கா டுவிட்டரில் போட்டதைப் படிச்சேன்ன்ன்.. ஹையோ மீ எஸ்கேப்பூஊஊ:)..

      Delete
    6. ///ஏற்கனவெ இருக்குனு வருது ஆனால் அவரது பதிவுகள் வருவதில்லை.....

      கீதா///

      சபரிமலை போய் திரும்பும் வழியில், யாரோ நேசனின் புளொக்குக்கு சூனியம் வச்சிட்டாங்கோஓஓஓஓ:)) ஹா ஹா ஹா...

      Delete
    7. மீண்டும் மீடகலாம் 3 மாதத்து உள் என்று என் நட்பு சொல்லியது ஆனால் டைமன் ஓ ஆர் ஜீ போய்விட்டது டிடி அதுபற்றி உங்களுடன் கொசு செய்தி போட்டிருந்தும்! எதுவோ இப்ப தனிமரம் கொம் ஆனால் அது செய்யும் தொல்லை தாங்க முடியல யாரின் காலில் விழுவது என் மெயில் முகவரி/பாஸ் வேட் எல்லாம் தருகின்றேன் உடனே செய் என்றால் பிசி பிசி என்று ஓடும் வலையுறவுகளின் நிலையில் தனிமரம் நானும் என்ன செய்ய்வேன்[[

      Delete
    8. சபரி மலைக்கு போகா வேண்டாம் என்று கடைசியில் இந்தியன் எம்பசியில் கூட சூனியம் வைத்தார்கள்! நல்ல மனிதர்களை கடவுள் சோதிப்பார் கைவிட மாட்டார் என்ற பாட்ஷா தத்துவம் பலித்தது! போய் வந்தாச்சு ஜ்ல்லிக்கட்டு போராட்டம் எல்லாம் பார்த்தாச்சு[[ யாரோ சினேஹா மீது இப்படி வீன்பழி போடுவதை இனியும் பொறுக்க முடியாது! அதனால் அடுத்த காதலி தேட அலைகின்றேன் தனிமரம்[[ அடுத்த தொடரில் நீக்க ஆசை! பார்ப்போம் காலம் கூடி வரட்டும் விரைவில் தனிமரம் கொம்மில்!

      Delete
    9. ஹா ஹா ஹா சூனியக் கதை உண்மைதான் போல:)..

      //அடுத்த தொடரில் நீக்க ஆசை! /// நோஓஓஓஓஒ இது அநியாயம் அக்கிரமம்.. இத்தனை வருடமாக காதலிச்ச ஸ்நேகா கலியாணம் கட்டி குழந்தையும் கிடைத்துவிட்டது என்றதும்.. கை கழுவப் பார்க்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பாட்டி வயசானாலும் ஸ்நேகாதான் உங்களுக்கு:).. கீர்த்தியைக் கனவிலயும் நினைச்சிடக்கூடா கர்ர்ர்ர்:)).

      Delete
  2. //அதிராவுக்கு சுகரோ எப்ப தொடக்கம் எண்டெல்லாம் குறொஸ் குவெஷ்ஸன்ஸ் வரும்:).. ].//
    இல்லையே எனக்கு டவுட் வராதே /..எனக்கு தெரியும் உங்களுக்கு 80 வயசாச்சின்னு அதனால் இதெல்லாம் 80 இல் சகஜமாச்சே

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... ஹையோ வைரவா பழனியாண்டவா... அஞ்சுக்கு காது கேட்காதெனத் தெரியும்.. அதுக்கு இப்பூடியா?:)).. 8 ஐ 2 ஆல பெருக்கினால் என் வயது வரும் எனச் சொல்லி இப்போ ஒரு மாதம் ஆகுதே:)..சரி சரி விடுங்கோ... 80 இலும் ஆசை வரும்.. ஹையோ டங்கு ஸ்லிப்ட்.. சுகர் வரும்ம்ம்ம்ம்:)...

      Delete
    2. நல்ல கண்டுபிடிப்பு அட்ரெஸ் அனுப்புங்க அல்வா அனுப்புகிறேன்

      Delete
    3. ஆஹா வாங்கோ மேஜர் வாங்கோ...
      //சீராளன்.வீFriday, March 17, 2017 5:30:00 pm
      நல்ல கண்டுபிடிப்பு அட்ரெஸ் அனுப்புங்க அல்வா அனுப்புகிறேன்///

      ஹா ஹா ஹா இது ஆருக்கு? அஞ்சுவுக்கோ?:).. அஞ்சுவுக்கு அல்வா ஒத்துக்கொள்ளாதாம்ம்:) ஒரு கிலோ பாவக்காய் பக்கோடா அனுப்பி வையுங்கோ:).. இதுக்காக எண்டாலும் நான் ஒத்துக் கொள்கிறேன்.. நேக்கு.. வயசு 8......*2 என்பதை:).

      Delete
  3. எனக்கு அந்த பாவக்கா புளி குழம்பு வேணும் காலிப்ளவர் ரைஸோட சாப்பிட நல்ல இருக்கும் .சட்டி செமையா வேலை செய்றாப்ல இருக்கு அதிரா ..நானும் சட்டிதான் ரெண்டு வாங்கிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது புளிக்குழம்பில்லை:).. தண்ணியாக இருந்தால்தான் குழம்பு.. இது பிரட்டி எடுத்திருக்கிறேன் அதனால கறீஈஈஈஈஈஈஈஈஈஈ:).. இன்னொன்று அஞ்சு.. குழம்பாக இருந்தால் கொஞ்சம் கசப்பு அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்..

      யேஸ்ஸ்ஸ் இப்போ எல்லாம் மண் சட்டியில்தான் வேலை நடக்குது.. சமைக்க சமைக்க இன்னும் சமைக்கோணும் என பயங்கர ஆசையா இருக்கு.. ஏன் இப்படி என எனக்கே புரியுதில்ல:)

      Delete
    2. ஒருவேளை, சாப்பிடுபவர்கள் மீது பயங்கர கோபம் இருக்கிறதோ உங்களுக்கு. ரொம்ப பழி வாங்குகிறீர்களோ?

      Delete
  4. //ஊரெல்லாம் பென்னாம்பெரிய போஸ்ட்டாகவும், ஸ்லோவாகவும் இருந்த புளொக்குகளை //
    கர்ர்ர்ர் :) நானில்லை நானில்லை :) என்னுது எல்லாம் அதுக்கும் மேலே ஹா ஹா

    ReplyDelete
  5. இங்கே பதிவில் பாவக்கா இருக்கு மோர் எங்கே ? தலைப்பில் இருக்கும் மோர் பதிவில் இல்லை எங்கே மோர் மோர் ஐ வாண்ட் மோர்

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... மிகவும் ரசித்தேன்...

      Delete
    2. ஹா..ஹா...ஹா அஞ்சு..

      Delete
    3. மோர் வற்றிப் போச்சு .....

      Delete
    4. ஹா ஹா ஹா எல்லோரும், ஏதோ புதுவித மோராக்கும் என நினைச்சு உள்ளே வரட்டும் என்றுதான்.. பாவக்காய் சமையலோடு அதைப் போட்டேன்...:).. மோர் என்பதை inverted commas க்குள் போட நினைச்சு மறந்துபோய் பப்ளிஸ் பண்ணியதால் சரி போகட்டும் என விட்டிட்டேன்ன்:)...

      இப்போ வலையுலகெங்கும் மோர் தான்... றீட் மோர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)

      Delete
    5. //சீராளன்.வீFriday, March 17, 2017 5:36:00 pm
      மோர் வற்றிப் போச்சு .....///

      ஏன் இம்முறை நான் றீட் மோர் இல் எழுதியது பத்தாதோ?.. இருங்கோ அடுத்த போஸ்ட்டில் எல்லோரையும் மயங்கி விழ வைக்கிறேன்ன்ன்.. ஆனா நீங்கதான் நான் நிறைய எழுதும்போது வருவதில்லையே சீராளன் ஏன்ன்ன் உங்கள் புளொக் தூசு தட்டுப்படவில்லை?:)

      Delete
    6. நாங்களும் மோரைத் தேடினோம்....ஆஹா இதுதான் அந்த மோரா!!!!???

      Delete
    7. வணக்கம் மியாவ் !

      //ஏன்ன்ன் உங்கள் புளொக் தூசு தட்டுப்படவில்லை?://

      வீசும் காற்றில் விளையும் தேனால்
      விரும்பிப் பேசும் பூக்கள் - இவன்
      பாசம் எங்கும் பழியைக் கண்டால்
      பருகக் கூடுமோ பாக்கள் !

      காரம் இட்டுக் கடித்தால் உணவும்
      கண்ணீர் காண வைக்கும்- மனப்
      பாரம் போக்கப் பழகும் உறவின்
      பாசம் முள்ளாய்த் தைக்கும் !

      மானும் இல்லை மயிலும் இல்லை
      மரணம் கண்டது காடு - இங்கே
      நானும் இல்லை நகலும் இல்லை
      நரகம் ஆனது வீடு !

      அன்பால் விளையும் உன்றன் தேடல்
      அளிக்கச் சொன்னது பாடல் - இனி
      முன்போல் வலையில் முத்தைக் கோர்ப்பேன்
      முடிந்தால் பாரென் ஆடல் !

      நன்றி அதிரா

      Delete
    8. //Thulasidharan V ThillaiakathuSaturday, March 18, 2017 8:11:00 am
      நாங்களும் மோரைத் தேடினோம்....ஆஹா இதுதான் அந்த மோரா!!!!???///

      ஹா ஹா ஹா அதே அதே..:)

      Delete
    9. @ சீராளன்///
      அடடா பட்டுப் பட்டென எப்பூடி வருது கவிதை உங்களுக்கு.. மிக அருமை, சந்தோசம் விரைவில் தூசு தட்டுங்கோ...

      Delete
    10. சீராளன்.. இன்றுதான் படித்தேன். கீழே உள்ளவை மிக அருமை. Well Done.

      "மானும் இல்லை மயிலும் இல்லை
      மரணம் கண்டது காடு - இங்கே
      நானும் இல்லை நகலும் இல்லை
      நரகம் ஆனது வீடு "

      மொத்தப் பாடலையும் ரசித்தேன். பாராட்டுகள்.

      Delete
  6. அதிரா முந்தி உங்க பிளாக் உள்ளே நுழைஞ்சா உலகையே பழத்தோட சுற்றிவந்த முருகன் மாதிரி இருக்கும் :) இப்போ உடனே பிளாக் திறக்குது உடனே வாக்கும் போட்டாச்சு :)

    ReplyDelete
    Replies
    1. அப்போ இப்போ பிள்ளையார்போல இருக்கு எனச் சொல்றீங்க அப்படித்தானே?:)... ஆவ்வ்வ் சகோ டிடி பாருங்கோ நான் சொல்லல்ல அஞ்சு உங்களை பிள்ளையாராம்ம்ம்:)... அவ்ளோ வண்டியா அவருக்கு?:) ஹையோ நா வள்ள இந்த வம்புக்கு.. மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:).

      தமிழ் வாக்குக்கு மிக்க நன்றி, எனக்கே இப்போதான் ரைம் கிடைச்சுது போட.. மொபைலில் போட முடியாமல் இருக்கே.. அது ஏன் எனக் கண்டு பிடிக்கோணும்...:)

      ஆனா அவர்கள் ட்ருத்தினது மட்டும் இடைக்கிடை தமிழ்மண வோட் மொபைலிலும் காட்டுது... ஒருவேளை அவர் போஸ்ட்டின் ஆரம்பத்தில் போட்டிருப்பதாலயோ?:)

      Delete
    2. awwww :)கர்ர்ர்ர் :) ஒரு எடுத்துக்காட்டுக்கு சொன்னா எதுக்கு பிள்ளையார் பிள்ளையை வம்புக்கு இழுக்கறீங்க

      Delete
    3. ///ஒரு எடுத்துக்காட்டுக்கு சொன்னா/// ஹா ஹா ஹா மீயும், ஒரு எடுத்துக்காட்டா இருக்கட்டுமே எண்டுதான்ன்ன்ன்.. அது டப்பா?:))

      Delete
    4. அதிரா அப்பா 6 வயது க்கு முன்னாடி நல்ல பொண்ணு இல்லியோ ஹிஹிஹிஹ்

      கீதா

      Delete
    5. ///Thulasidharan V ThillaiakathuSaturday, March 18, 2017 8:13:00 am
      அதிரா அப்பா 6 வயது க்கு முன்னாடி நல்ல பொண்ணு இல்லியோ ஹிஹிஹிஹ்///

      இந்த டவுட்டூ இங்கின பல பேருக்கு இருக்கு கீதா:).. அதுக்கு காரணம் என்னவென்றால் 6 வயசுக்கு முந்திய சம்பவம் எதுவும் நினைவுக்கு வரமாட்டுதாமே:) கர்ர்ர்ர்:)

      Delete
    6. பழத்தோட உலகத்தை முருகன் சுற்றிவந்தாரா? இது எந்த முருகன்? எனக்குத் தெரிந்து பழத்துக்காகத்தான் முருகன் மயில் மீதேறி உலகத்தைச் சுற்றிவந்தார் என்று படித்திருக்கிறேன். ஏஞ்சலினுக்கு கதை எழுதத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். கதைவிடத் தெரியும் என்பது இன்றுதான் தெரிந்துகொண்டேன்.

      Delete
    7. ஹையையோ :) அது பழத்துக்காக உலகையே சுற்றி வந்த என்று வரவேண்டியது :)

      அது என் தவறுதான் கவனிக்காம போட்டிருக்கேன் டைப்பிங் எரர் னு சொல்லி தப்பிக்கமுடியாது :)
      நிறைய இடத்தில அவசரமா இப்படி மிஸ்டேக் செஞ்சிடுவேன் .ஆனா பாருங்க இவ்ளோ நாள் யார் கண்லயும் படலியே :)
      நெல்லைத்தமிழன் நான் என்ன இராமாயணத்தை கொண்டாந்து மகாபாரத்தில் இணைச்சேனா :) இல்லை லவனும் குசனும் சீதையின் ப்ரதர்ஸ்ன்னு சொன்னேனா :) ஆகவே கைன்ட்லி எச்சூஸ் மீ :) சில நேரம் அவசரமா மனசில் தோணுறதை படபடன்னு தட்ட இப்படி நடந்திருக்கு :)

      Delete
    8. பார்த்தீங்களா எனது அடுத்த கமெண்ட் அன்னிக்கு 14,000 ஸ்டெப்ஸ் நடந்திருக்கேன் அதான் கமெண்ட் தவறா அடிச்சிவிட்டிருக்கேன்

      Delete
    9. ஐயோ பாவம். இதுல அதிராவை ஏன் இழுக்கறீங்க.

      எனக்கு ஆச்சரியம் என்னன்னா, யாருமே இதைக் கவனிக்கலையே.

      14,000 ஸ்டெப்ஸ்னா, 6 கிலோமீட்டர் வருமா?

      Delete
    10. Yes:)ரொம்ப நடப்பொம் இப்போ கூட நடக்க வெளியே பார்க்க மழை கர்ர்.

      Delete
    11. ஆச்சர்யம் இங்கே கமெண்ட் போநில் உடன் ஏற்குது.

      Delete
  7. யம்மாடி இன்னிக்கு 14,000 ஸ்டெப்ஸ் நடந்து மீ வெற்ற்ரி டயர்ட் ,,நாளைக்கு தொடர்கிறேன் பின்னூட்டங்களை

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு கெதியா வாங்கோ......

      Delete
    2. ////யம்மாடி இன்னிக்கு 14,000 ஸ்டெப்ஸ் நடந்து மீ வெற்ற்ரி டயர்ட் ,,நாளைக்கு தொடர்கிறேன் பின்னூட்டங்களை//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடுங்கோ விடுங்கோ என்னை விடுங்கோ தடுக்காதீங்கோ... நான் இப்பவே தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்...

      அய்ய்ய்ய்ய்ய் அதிரா குதிக்கப்போறா ஹை ஜாலி என நினைக்கிறீங்க?:) அதுதான் இல்லை.. மீயும் வோக் போகத்தான்.. 7600 தான் நேற்று என்னால முடிஞ்சுது... வேர்க்கும், நடையும் கஸ்டம்.

      Delete
    3. ///priyasakiFriday, March 17, 2017 2:27:00 pm
      அஞ்சு கெதியா வாங்கோ......///

      ஹா ஹா ஹா வாங்கோ பிரியாஅம்முலு வாங்கோ... வந்த வேகத்தில அவசரத்தில அதிராவை அழைப்பதற்குப் பதிலா.. அஞ்சு எனப் போட்டிட்டீங்களோ....:).. அவவும் இதுதான் சாட்டென..

      ///AngelinFriday, March 17, 2017 5:47:00 pm
      vanthaachu :)///
      வந்தாச்சாம்ம்ம்.. ஹையோ அஞ்சு அது அம்முலு உங்க நடையைப் பார்க்கச் சொல்லி என்னைக் கூப்பிட்டிருக்கிறா.. வெயிட் பார்ப்போம் அம்முலு வரட்டும்...

      அம்முலு ஓடியாங்கோ:)..

      Delete
    4. சரி உங்கட ஆசையை ஏன் கெடுப்பான்.கனநாளைக்கு பிறகு வந்தனான். அதிரா என்றே சொல்லிவைப்பம்.
      (அஞ்சு உங்கட காதை கொண்டாங்கோ நான் உங்களைதான் கூப்பிட்டனான்.)

      Delete
    5. ///priyasakiFriday, March 17, 2017 10:18:00 pm
      சரி உங்கட ஆசையை ஏன் கெடுப்பான்.கனநாளைக்கு பிறகு வந்தனான். அதிரா என்றே சொல்லிவைப்பம்.///

      நோஓஓஓஓஓஓஓ இது அநீதி, அநியாயம்... அலாப்புத்தனம்..:) மீ காண்ட் கோர்ட்டுக்குப் போகிறேன்ன்ன் எனக்கு நீதி நேர்மை கடமை எருமை.. ஹையோ ஒரு ஃபுளோல வந்திட்டுது:) தான் முக்கியம்:)).. ஹா ஹா ஹா நடக்கப் போன அஞ்சுவை எதுக்கு கூப்பிட்டீங்க?:)..

      Delete
    6. அஞ்சு.... எதுக்கும் அந்த புஸ்பா அங்கிள் கடையில:), வன் டொலருக்கு வாங்கிய, டூப்பிளிகேட் வைரத்தோட்டைப் போட்டபடி கொடுங்கோ காதை:).. பிறகு என்பக்கத்தில் வச்சு ஏதும் அசம்பாவிதம் நடந்தால்ல்.. நானும் எல்லோ கோர்ட்டுக்கு வரோணும் .. ஐ விட்னெஸ் என அழைப்பினமே முருகா:)..

      Delete
  8. நன்றி சகோதரி...

    அந்தக் கசப்பு தான் சுவையே... (வேறு என்ன சொல்ல முடியும்...? 20 வருசமா அடியேன் இனிப்பான ஆளாக்கும்...!)

    ஆமாம்... பாவற்காய்க் கறியில் சீனி சேர்த்தே ஆக வேண்டுமா...?

    ReplyDelete
    Replies
    1. நான் மட்டும் இங்கே இனிப்பான மனிதன் என்று நினைத்தால் தலைவர் தனபாலன் அதில் சீனியராக இருக்கிறார் கருத்து போடுவதில் மட்டும் முதலாவதாக வருகிறார் என்று நினைத்தால் இனிப்பான விஷயத்திலும் என்னை முந்திவிட்டார்

      Delete
    2. vஆங்கோ டிடி..
      //திண்டுக்கல் தனபாலன்Friday, March 17, 2017 3:16:00 am
      நன்றி சகோதரி...

      அந்தக் கசப்பு தான் சுவையே... (வேறு என்ன சொல்ல முடியும்...? 20 வருசமா அடியேன் இனிப்பான ஆளாக்கும்...!)//

      ஹா ஹா ஹா கொன்றோலில் இருந்தால் பிரச்சனை இல்லை. பாவக்காய் சாப்பிட்டால் மட்டும் போதாது.. உணவுக்கட்டுப்பாடும் முக்கியம்.. சிலர் பப்ளிக்கில் பாவக்காய் சாப்பிட்டுப்போட்டு.. மறைவில நின்று ஐஸ்கிரீம் குடிப்பினம் ஹா..ஹ..ஹாஆ....:).

      ///ஆமாம்... பாவற்காய்க் கறியில் சீனி சேர்த்தே ஆக வேண்டுமா...?///
      இல்லை கட்டாயமில்லை, நல்ல பழப்புளி கிடைச்சால் அதுவே இனிமையைக் கொடுக்கும்... சின்னவர்களுக்கு கசக்கும் என்பதற்காக, நான் சின்னனாக இருந்தபோதே அம்மா இப்படி சமைப்பா.. அது பழக்கமாகிவிட்டது.. வெள்ளைப்பாவல் எனில் பிரச்சனை இல்லை கசப்புக் குறைவு தானே...

      Delete
    3. vஆங்கோ ட்றுத் வாங்கோ...
      ///Avargal UnmaigalFriday, March 17, 2017 12:20:00 pm
      நான் மட்டும் இங்கே இனிப்பான மனிதன் என்று நினைத்தால் தலைவர் தனபாலன் அதில் சீனியராக இருக்கிறார்///

      ஹா ஹா ஹா.. என் ஒரு சமையல் குறிப்பால பல உண்மைகள் வெளில வருது:).. அப்போ இப்போ எங்களோடு பேசுவோர் பழகுவோர் எல்லோரும் இனிப்பான ஆட்கள்தான் போல:)...

      எங்கோ ஓரிடத்தில் ட்றுத்தின் கொமெண்ட் பார்த்தேன்ன்... ///ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனப் போட்டிருந்ததை:)///
      இங்கு 2 சோறு பதம் பார்த்தாச்சு:).

      ///கருத்து போடுவதில் மட்டும் முதலாவதாக வருகிறார் என்று நினைத்தால் இனிப்பான விஷயத்திலும் என்னை முந்திவிட்டார்

      /// ஹா ஹா ஹா...

      Delete
    4. ///திண்டுக்கல் தனபாலன்Friday, March 17, 2017 3:16:00 am
      //
      இதைச் சொன்னால் திட்டிடுவீங்க:) சொல்லாமல் இருக்கவும் முடியல்ல.. அதனால இவ்ளோ நேரமா ஓசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன் சொல்வோம் என:)..

      நேற்று போஸ்ட் போட முன்பே html open செய்து... உங்கட பூட்டு பக்கத்தையும் ஓபின் பண்ணி... நீங்க கலையரசி அவர்களுக்கு கொடுத்த பதிலைப் பார்த்துப் பார்த்து...

      தமிழ்மணத்தை நீக்கி... புதிதாக போடும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டு.... பேஸ்ட் பண்ண வேண்டியதை கொப்பி பண்ணலாமே என உங்கட ஸ்கிறிப்ட்டை கொப்பி பண்ணினால்ல்.. ஙேஙேஙேஙேஙேஙேஙே... முடியாமல் போச்சா...:)

      தலை தப்பினாலே போதும்.. பிச்சையே வாணாம் நாயைப் பிடிங்கோ என.. அன்சேவ் பண்ணி வெளியே வந்திட்டேன்ன்.. கைமாறி சேவ் பண்ணியிருந்தால்.. தமிழ்மணம் போயிந்தி:).. அப்படியும் கலையரசி அவங்க பக்க்ம் போய் தேடுறேன் தேடுறேன் கண்டு பிடிக்க முடியல்ல...:(..

      சரி எதுக்கும் காலநேரம் வரோணும் என விட்டிட்டேன்ன்:).

      Delete
    5. ஐயோ... பூட்டு பதிவில் உள்ள எதையும் காப்பி செய்ய முடியாதே... கீழே ஒரு இணைப்பு கொடுத்துள்ளேன்... அதிலே விளக்கமாகவும் சொல்லி உள்ளேன்...

      http://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Blog-Tips-4-6.html

      Delete
    6. ///திண்டுக்கல் தனபாலன்Saturday, March 18, 2017 2:45:00 am
      ஐயோ... பூட்டு பதிவில் உள்ள எதையும் காப்பி செய்ய முடியாதே///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      மிக்க நன்றி, நேரம் ஒதுக்கி, தேடிப்பிடித்து மாற்றிய பின் சொல்கிறேன்ன் அப்போ ஓடியாந்து திறந்து பாருங்கோ என் புளொக்கை... மிக்க நன்றிகள்.

      Delete

  9. என்னது பாவக்காய் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் சுகர் போகுமா? அட அப்படின்னா எதுக்கு டாக்டரும் மருந்தும். அதற்கு எல்லாம் வீணா பணம் செலவழிப்பது பேசாமல் அக்கா அதிரா சொல்லும் வைத்தியத்தை கடைபிடியுங்க அப்படியும் சுகர் குறையலன்னா அவங்க மேலே கேஸ் போட்டுடலாம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ,,,

      ///என்னது பாவக்காய் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் சுகர் போகுமா?/// இல்ல இல்ல சுகர் எங்கேயும் போகாது அது ரின் லயோ இல்ல பக்கட்டிலயோதான் இருக்கும்:)) இதென்ன புது வம்பில மாட்டிட்டேன் நான்ன்:)..

      .. நீங்கதான் டெய்லி நிறைய நடக்கிறேன் என்றீங்களே பிறகு எப்படி உங்களுக்கு..... சரி அதை விடுங்கோ.. நம் உடல் அமைக்கப்பட்டிருப்பது நம் நாட்டு சுவாத்தியத்துக்கு... அப்படிப்பட்ட உடம்பை, நாம் வேறு காலநிலைக்கும்... உணவுக்கும், இடையே கொண்டு வரும்போது(வெளிநாட்டுக்கு) உடல் கஸ்டப்படுகிறதாம் இதனாலேயே பல வருத்தங்கள் வந்து ஒட்டிக்கொள்கிறது.

      //அக்கா அதிரா // ஹையோ முருகா.. கொஞ்சம் நில்லுங்கோ ட்றுத் வாறேன்ன்ன்.. இதுக்கெல்லாம் காரணம் இந்த பிரியாதான்... இனி நான் பிரியா/அம்முலு அக்கா எனக் கூப்பிட்டால்தான் நேக்கு சேவ்ற்றி:)..

      கோடைக்கானல்ல இடி இடிச்சா... கடலூரில மழை கொட்டின கதையா எல்லோ இருக்கு இக்கதை:)... ஏதோ.. “ட்றுத் அங்கிள்”:) எனக் கூப்பிட வேண்டியவரை:)... தவறுதலா ட்றுத் அண்ணாஆஆஆஆஆ:) என பிரியா கூப்பிட்டிட்டா:).. அதனால இவர் இங்க ஓடிவந்து அதிரா அக்காவாமே:)[ஒரு சுவீட் 16 பிள்ளையைப் பார்த்து இப்படியா அழைப்பது?:)] ... விடுங்கோ விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்ன்:))... மீ முற்றும் துறந்த ஞானியாகிட்டேஏஏஏஏன்ன்ன்ன்:). ஹா ஹா ஹா..

      Delete
    2. மதுரை நான் தான் உங்கள் எல்லாருக்கும் சீனியர் ரொம்ப இனிமையானவள் என்பதில் தெரியுமா!!! ஹிஹிஹி20 வருடங்கள்!!!

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா கீதா அப்போ நீங்களும் சுவீட்தானா?:) நான் சொன்னேனே என்னோடு பழகுவோர் எல்லோரும் சுவீட்தான்போல என:)..

      நான் கைப்பும் புளிப்பும் ஆக்கும்:) ஆனாலும் என் வயசில சுவீட் இருக்கே:)..ஹா ஹா ஹா .. மீ இப்போ கட்டிலுக்குக் கீழ இருந்துதான் இதை டைப்புறேன்:)..

      Delete
  10. பாவக்காய் சாப்பிட்டால் வாய் கசக்கும் வாய் கசந்தால் நாம என்ன பண்ணுவோம் உடனேவீட்டில் உள்ள சுகரை அள்ளி வாயில் போடுவோம் இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் உங்கள் வீட்டில் உள்ள சுகர் எல்லாம் காலியாக போய் இருக்கும்.

    இதைத்தான் ஒரு மாதம் பாவக்காய் சாப்பிட்ட்டால் சுகர் கம்மி ஆகும் என்று அதிரா சொல்லுறாங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா என்ன ஒரு அழகான கண்டு பிடிப்பூ:).. ஆனா என்னதான் சொன்னாலும் எனக்கு உங்கட கிட்னி:) கடனாகவும் வேண்டாம்ம்ம்:) தக்காளி சட்னியும் வேண்டாம்ம்ம்:)என இந்த காசிக்குப் போக எடுத்த:), ரிக்கெட்டின் மேல் அடிச்சுச் சத்தியம் பண்றேன்ன்ன்:)

      Delete
  11. அதிரா முதலில் சொன்ன பாவக்காய் ரிசிப்பியை படித்தேன் ஆரம்பத்தில் பாவக்காயில் அவர் ஏதோ புளிக் குழம்பு பண்ணுவத்ஹு போல சொல்லி வந்து தீடிரென்று பால் சுகர் என்று சொல்லி பாயசமாக முடித்துவிட்டார்கள் இவர்கள் சொல்லும் இந்த ரிசிப்பையை செஞ்சு நாம் சாப்பிட்டா நிச்சயம் நமக்கு ஹெல்த் இன்சுரன்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது வேறு யாருக்காவது செஞ்சு கொடுத்தா அவங்க அருவாளை தூக்கிறதுக்குள்ள தேம்ஸ் நதிக்குள்ள நாம் குதிச்சிடனும்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரொப்.. ஸ்ரொப்.. குதிச்சிடாதீங்க அதுக்குள் இன்னும் முதலை விடேல்லையாம்ம்:) விட்டபின்பு குதிக்கலாம்:)...ஹா ஹா ஹா ட்றுத்.. இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க பார்க்கிறீங்க விடமாட்டேன்ன்:) என் பாவக்காய் ரெசிப்பி ஸ்ரெப் பை ஸ்ரெப் படங்களோடு செய்து, எங்கள் புளொக்குக்கு அனுப்புறீங்க:) .. அதுக்கு அஞ்சுவை என் சார்பாகவும்:) கொமெண்ட்ஸ் போட அனுப்பி வைக்கிறேன்ன்:)).. ஏனெனில் நான் தான் அந்தாட்டிக்கா போயிடுவனே:)..

      மிக்க நன்றி ட்றுத் வருகைக்கும் கருத்துக்களுக்கும்...

      Delete
    2. அதிரா ரெசிப்பியில் சீனி சேர்ப்பதில்லை வெல்லம் தான் இங்கு சேர்ப்பது...இப்படித்தான் செய்வதுண்டு ஆனால் கடுகு உளுத்தம் பருப்பு எல்லாம் போட்டுக் கறி செய்வது...கூட்டும் செய்யலாம்..பிட்லை என்றும் செய்யலாம்.நல்லாருக்கும்...

      கீதா

      Delete
    3. ஆங்க் சொல்ல மற்ந்துட்டன் பால்சேர்ப்பதில்லை...

      கீதா

      Delete
    4. என்ன கீதா கொயப்புறீங்க? சீனியைத்தானே வெல்லம் என்பீங்க?.. ஓ கூட்டு, பிட்லை... இன்னொருமுறை ட்றை பண்ணுறேன்.

      ///ஆங்க் சொல்ல மற்ந்துட்டன் பால்சேர்ப்பதில்லை...///
      ஙேஙேஙேஙேஙே:).

      Delete
  12. பாவற்காய்க் கறி,பாவற்காய் சம்பல் இரண்டு சமையல் குறிப்பும் அருமை நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ.. நீங்கதான் ரெண்டும் நல்லமெனச் சொல்லியிருக்கிறீங்க... இதுக்காகவே எனக்கு இப்பவே டக்கென இன்னொரு குறிப்பு போடோணும் என மனம் சொல்லுதே:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
    2. ஆம் நாங்களும் காத்திருக்கோம்

      Delete
    3. ஹா ஹா ஹா வந்த உடனேயே என்னைப் பற்றி நன்கு புரிஞ்சு வச்சிட்டீங்கபோல இருக்கே மொகமட்...:)... கொஞ்சப்பேருக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை இப்போ உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சா?:).. இப்பூடி உசுப்பேத்தினால் நான் டக்கு டக்கெனப் போட்டு விடுவேன் என்பதை:). டாங்ஸ்..:)

      Delete
  13. பாவற்காய் சம்பல்...புதுசா...நல்லா இருக்கு...செஞ்சு பார்க்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ...நல்லா இருக்கும் செய்து பாருங்கோ, சிலர் நன்கு பொரித்து எடுத்து செய்வினம் அது சத்தெல்லாம் போய்விடும், இப்படி அரை வாட்டமாக பொரித்துச் செய்வதுதான் நல்லது. மிக்க நன்றி அனு.

      Delete
  14. பாவக்காயை பாவக் காய் என்று அழைத்தவர் யார்? இவ்வளவு பேர்களுக்கு (அதிராவுக்கு அல்ல) சுகரை எல்லாம் போக்கி, வயிற்றில் பூச்சி இல்லாமல் ஆக்கும் இந்த புண்ணியக் காயை இனி யாரும் பாவக் காய் என்று சொல்லக் கூடாது என்று அதிரா ஒரு ஆர்டர் போடோணும்!

    பாகற்காய் எனக்கு மிகவும் பிடித்த காய்கறியாகும்! நானும் இளம் பாகற்காயாகப் பொருக்கி எடுத்து, விதை நீக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, உப்பு தூவி பச்சையாகவே - அதாவது - தீயில் வைத்து வாட்டாமல் - சாப்பிடுவேனாக்கும்! அதைத்தவிர ரோஸ்ட், பிட்லே, சாம்பார், என்று சகல விதங்களிலும் சமைத்துச் சாப்பிடுவோம்.

    தம போட்டாச்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ...

      //இவ்வளவு பேர்களுக்கு (அதிராவுக்கு அல்ல) சுகரை எல்லாம் போக்கி,/// நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர்... பாருங்கோ நம் மக்கள்ஸை நல்ல தெளிவா:) அறிஞ்சு வச்சிருப்பதால, தெளிவாப் போட்டிருக்கிறீங்க:)..

      ஹா ஹா ஹா கடவுள் சத்தியமா.. பாகற்காய்/பாவற்காய் இப்படித்தான் ஹெடிங் போட்டேன்ன், ஆனா அது பெரிசா இருந்துதா... பாவற்காய்தான் கரீட்டு என முடிவுக்கு வந்தேன்ன்ன்:) ஏனெனில் பாவல் கொடி எனச் சொல்வார்கள் ஊரில்... அது பேச்சுவளக்கு என நினைக்கிறேன்..:)..

      ஓ நீங்களும் பபபபபச்சையா சாப்பிடப் பழகிட்டீங்கள்... வருத்தம் இருக்கோ இல்லையோ பாகற்காய்:) மிக நல்ல ஒரு மருந்து... எல்லா சுவையும் பழக்கத்தில் வருவதுதான்.

      இலங்கையில் வட பகுதி தமிழர்கள் றைஸ் க்கு உப்பு சேர்க்க மாட்டோம், ஆனா கிழக்கு பகுதி மக்கள் உப்பு போடாமல் றைஸ் சமைக்க மாட்டார்கள்... அதெப்படி உப்பில்லாமல் சாப்பிடுவது என்பினம்... எல்லாமே பழக்கம்தான்...

      கையைக் காட்டுங்கோ.. ஓ மை இருக்கு:) மிக்க நன்றி வோட் பண்ணியமைக்கு:).

      Delete
    2. இது கொப்பி பேஸ்ட்:-
      மருத்துவக் குணங்கள்:
      பாகற்காய் என்றவுடனே பலருக்கும் நாவில் கசப்பு சுவை தான் ஊற்றெடுக்கும். ஆனால், அதில் பல மருத்துவக் குணங்கள் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
      பாகற்காயில் 2 வகைகள் உண்டு. பொடியாக இருப்பது மிதி பாகற்காய். நன்கு பெரிதாக நீளமாக இருப்பது கொம்பு பாகற்காய்.

      நீரிழிவு, ஜூரம், இருமல், இரைப்பு, மூலம் மற்றும் வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு பாகற்காயை அருமருந்து.
      பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

      பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை மறைந்துவிடும்.

      இதேபோல, ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விகிதத்தில் பாகற்காய் இலையின் சாறை குடிக்க, மிக விரைவில் நோய்கள் குணமாகும்.

      சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது.
      இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

      அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.
      ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும்.

      பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

      நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம். பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது.

      பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும்.

      Delete
    3. அட ஸ்ரீராம் பாகற்காயை இப்படிச் செய்வதை நானும் செய்வேன்...கசக்காது அவ்வளவாக...மிகவும் பிடிக்கும்...

      Delete
    4. அது கீதா என்று போட மறந்துட்டன்!!!

      Delete
    5. ////Thulasidharan V ThillaiakathuSaturday, March 18, 2017 8:33:00 am
      அது கீதா என்று போட மறந்துட்டன்!!!///
      ஹா ஹா ஹா துளசி அண்ணன் ஓடியாங்கோ:) நீங்கதான் இனிப்பானவர், பாவக்காய் சாப்பிடுறீங்க என எல்லோரும் நினைக்கப்போகினம்:)

      Delete
  15. பாகற்காய் சாம்பல் என்று படித்து விட்டு அப்புறமாத்தான் பார்த்தேன், சம்பல் என்று! பாகற்காயில் வெல்லம், சீனி எல்லாம் போடுவதற்கு எதிரி நான்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பிள்ளைகளை சாப்பிட வைப்பதற்காக சீனி சேர்ப்பது சைனீஸ் ஸ்டைல்:).. இன்னுமொன்று நல்ல கறுப்பு நிறப் புளி எனில் இனிப்பாக வரும் கறி, சீனி தேவையில்லை.. இது இங்கு கிடைக்கும் புளியே கசக்குது:)..

      Delete
    2. சொல்ல மறந்திட்டேன்ன்.. அனைத்துக்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம்...

      Delete
  16. ஓ.மை கோட் கனநாளைக்கு பிறகு சிரிக்கிறேன் அதிரா. இந்த பாவக்கா பாவம். அதான் யாரும் அவ்வளவா விரும்புறதில்லை.கசக்குமென. எங்க வீட்டுக்கு இவாதான் வருவா. வெள்ளை பாவக்கா பிடிக்காது.மகனுக்கு இதில் பொரியல், (நீங்க சொன்னகுறிப்பின்படிதான் சம்பல் செய்வது) சம்பல் செய்தால் விரும்பி சாப்பிடுவார். 3பேருக்கும் பிடிக்கும். சம்பலில் பச்சைமிளகாய்,தக்காளி குட்டிகுட்டியா வெட்டிபோட்டு செய்வேன். என்ஜாய் அதிரா.

    நீங்க சொன்ன மாதிரி டிடி அண்ணாவுக்கு நன்றி சொல்லி முடியாது.
    நல்ல அறிமுகம். நன்றி டிடிஅண்ணா.
    எனக்கும் பிடித்த பாடல், பொருத்தமா செலக்ட் செய்திருக்கிறீங்க.
    மற்றைய பதிவுகளையும் வாசித்து கருத்திடுகிறேன் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ பழையவர்களை மீண்டும் பார்ப்பதில் ஒரு பயங்கர மகிழ்ச்சி... ஓ மகனுக்கு பிடிக்குமோ நல்லது. எங்கள் வீட்டில் என்னைத்தவிர யாருக்கும் புய்க்காது.. ஆனா விரட்டி விரட்டி கொடுத்திடுவேன்:).

      நீங்களும் றீட் மோர் ஆக்குங்கோ அம்முலு:)... கனநாட்களுக்குப் பின் சிரிச்சமைக்கு மிக்க நன்றி. பாடலை ரசித்தமைக்கும் நன்றி. நான் படம் பார்த்தேன்ன்.

      மியாவும் நன்றி அம்முலு.. விரைவில் தூசு தட்டுங்கோ.

      Delete
  17. பாகற்காய்க்கு சீனி போட்டு சமைத்த முதல் ஆள் ......
    வாவ்....சுப்பர் நல்லா ஈக்குது ஆனால் கலர்தான் கன்றாவியா இருக்கு
    மற்றப்படி எல்லாம் நல்லாத்தான் இருக்கு !

    (நம்மளும் ட்ரை பண்ணிப் பார்ப்போம் ..மைண்டு வாய்சு )

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சீராளன் வாங்கோ...
      ///பாகற்காய்க்கு சீனி போட்டு சமைத்த முதல் ஆள் .// கர்ர்ர்ர்ர்ர்ர்ர் இலங்கையில் இப்படிச் சமைப்போமே.. உங்கள் வீட்டில் கேட்டுப் பாருங்கோ.. இது அப்பம்மா எங்கட அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்த ரகசியமாம்:)..

      //கலர்தான் கன்றாவியா இருக்கு /// ஹா ஹா கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டீங்க.. நல்ல டார்க் கலரில் வரும் ஆனா இது நான் பால் விட்டமையாலும், என் புளியின் நிறம் வெள்ளை:) என்பதாலும் இப்படி ஆச்ச்ச்ச்ச்ச்:)..

      பண்ணுங்கோ பண்ணுங்கோ ட்றை பண்ணுங்கோ... ச்ச்சும்மா பேச்சுக்குச் சொல்லப்பூடா...

      மிக்க நன்றி சீராளன் இடைக்கிடை எனினும் மறவாமல் எட்டிப் பார்ப்பதற்கு...

      Delete
  18. அதிரா அந்த dubsmash ஜூப்பர் :) பேசறது நீங்க ,முகம் சிவாஜி கணேசன் செமஹா ஹாங் :)

    ReplyDelete
    Replies
    1. ஓ வீடியோ தெரியுதோ அஞ்சு? யாரும் அதுபற்றி சொல்லாததால் யாருக்கும் தெரியவில்லையோ என நினைச்சேன்...

      என்னாது பேசுறது நானா?:) அது என் மைண்ட் வொயிஸ்.. அதைப் பேசுபவர் சிவாஜி அங்கிள்:).. மிக்க நன்றி.

      Delete
  19. அதிரா பால் சேர்த்துச் செய்து பார்க்கணும்....நான் சில சமயம் வெல்லம் போடுவேன். சில சமயம் போடாமலேயே செய்துடுவேன். அதுவும் நல்லாருக்கும்

    நல்ல ரெசிப்பி....அதிரா...உங்க வீட்டில் பாகற்காய் செடி உண்டா?

    ஏஞ்சல் வீட்டுல போட்டுருப்பாங்களே....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா, துளசி அண்ணன் வாங்கோ.. முதலில் இருவரும் கையைக் காட்டுங்கோ மை இருக்கோ எனச் செக் பண்ணப்போறேன்:)..

      ஓ பார்த்தீங்களோ நீங்களும் வெல்லம் போடுவதை ஒத்துக் கொள்றீங்க.. அப்போ கொஞ்சம் ட்றுத் க்கு காதில போய்ச் சொல்லுங்கோ வெல்லம் போடலாம் என:).

      பால் கட்டாயம் இல்லை கீதா, ஏற்கனவே சொல்லிட்டேன், புளி நல்ல புளியாயின் அதுவே போதும்.

      இல்ல கீதா நாம் இருப்பது மலையும் ஆறும் நிறைந்த மலைநாடு என்பதால்.. எப்பவும் சில்லெனக் குளிர்.. அடிக்கடி மழை.. இதனால நம் ஊர் மரக்கறிகள் வரவே வராது.. கரட், கோவா, புரோகோலி, பீற்றூட், உ.கிழங்கு.. வெங்காயம் இவை எல்லாம் நல்லா வருது.. பீன்ஸ் வகைகள்..

      யேஸ் ஏஞ்சல் பக்கம் இப்படிக் குளிர் இல்லை.. அத்தோடு நல்ல ராசியான கை ஏஞ்சலுக்கு:) எல்லாம் முளைக்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்குப் புகையவில்லை என்பதை:) இந்த பாவல்காயைக் காய்த்த:) ஹையோ ஸ்ரீராம் அடிக்கப்போறார்ரே.. அது பாகற்காய்.. காய்த்த மரத்தின் மேல் அடித்துச் சத்தியம் பண்றேன்ன்:)..

      Delete
  20. உங்களை சுத்தி இருக்கற நண்பர்கள் எல்லாரும் நல்லாருக்கணும் அதுக்காகத்தான் பாகற்காய் ரெசிப்பீயோ??!!!!சிவாஜி வீடியோதான் சொன்னோம்....ஹஹஹஹ அதுக்கு ஒரு இனிப்பு கொடுக்கலாமல்லோ...

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆவ்வ்வ் அப்போ வீடியோ இந்தியாவிலயும் ஓபின் ஆகுதூஊஊஊஊஊ.. மிக்க சந்தோசம்... என்னைச் சுற்றி இருப்போர் எல்லாம் எப்பவும் நல்லாயிருக்கோணும்.. இருப்பீங்க:).. அதுக்கு முதலில் என்னைச் சுத்துங்கோ:)

      Delete
  21. அதிரா பூஸ் குட்டிகள் ரெண்டும் ரொம்ப அழகு...க்யூட்!!!! என்னா ஸ்டைலுப்பா....

    உங்கள் இளமையின் ரகசியம் பாகற்காயா அதிரா!!ஹஹஹ்ஹ்...என்னை அடிக்க வராதீங்கோ...எனக்கு இங்க பக்கத்துல இருக்கறது கூவமாக்கும்...குதிக்க முடியாது...ஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. ஓ மிக்க நன்றி. ஊசிக்குறிப்பில் இருக்கும் பூஸ் குட்டி மிக அழகிய சிலை. இது இப்போ ஸ்பிறிங் ஆரம்பித்துவிட்டமையால், கார்டின் செண்டர்களில் எல்லாம் இப்படி அழகிய சிலைப் பொம்மைகள்.. பலபல விற்பனைக்கு வந்துவிட்டன.. இவை எல்லாம் கார்டினில் அழகுக்காக வைப்பதற்காக உருவாக்கப்பட்டவை... முயல், வாத்து, பூஸ், பப்பி, அணில்... இப்படிப் பல சிலைகள்.

      ஹா ஹா ஹா ... சே...சே..சே.. கீதா நீங்க கூவத்தில் குதிக்க, நான் விடுவேனோ?:)..மீ ரொம்ப நல்ல பொண்ணாச்சே:),.. பக்குவமாக் கூட்டியாந்து தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்ன்ன்:)..

      Delete
  22. நான் ப்ளைட் பிடித்து இங்கு வந்துசேர லேட் ஆயிடுச்சு. எனினும் ஏழாம் வோட்டு என்னோடது. பாகற்காய் பதிவு கசக்காமல் இனிப்பாக உள்ளது. எதுவும் சரியாக எனக்கு விளங்கவில்லை. மண்டை காய்ந்து போய்விட்டதால், நான் இப்போப் போய் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..
      ///நான் ப்ளைட் பிடித்து இங்கு வந்துசேர லேட் ஆயிடுச்சு.//
      இல்லயே அப்படி எல்லாம் லேட் இல்லயே... எனக்கு இது லேட்டாக தெரியவில்லை... பல தடவைகள் நான் போஸ்ட்டைப் பப்ளிஸ்ட் பண்ணி விட்டுக் கை எடுக்கமுன் நீங்க வோட்டும் பண்ணி, கொமெண்ட்டும் போட்டிருக்கிறீங்களே.. அதுதான் என் மனதில் நிற்குது..

      ///எனினும் ஏழாம் வோட்டு என்னோடது. பாகற்காய் பதிவு கசக்காமல் இனிப்பாக உள்ளது//
      வாவ்வ்வ்வ் மிக்க நன்றி.. மிக்க நன்றி.

      Delete
  23. நானும் சமையல் குறிப்புகளுக்காக ஒரு தளம் வைத்துள்ளேன் பூவையின் எண்ணங்கள் ஆனால் அவ்வப்போதுதான் இடுகை இடுவது வழக்கம் பாகற்காய் எனக்குப் பிடிக்காது. நான் இனிப்பானவன் சுகர் இருப்பதாக எண்ண வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா GMB வாங்கோ.. முன்னமுன்னம் வந்திருக்கிறீங்க.. நல்வரவு வாழ்த்துக்கள்.
      ஓ நான் பார்த்தேன், அதைக் கைவிட்டு விட்டீங்கள் என நினைத்தேன், அப்போ அதையும் தொடர்கிறேன்.

      ஹா ஹா ஹா சுகர் இருப்பின் மட்டும்தான் இனிப்பானவர்கள் என்றில்லை.. Diabetes இருப்போரும் இனிப்பானோர்தான்:).. ஹா ஹா ஹா சும்மா சொன்னேன்...

      மிக்க மிக்க நன்றிகள் வருகைக்கு.

      Delete
  24. என்னமோ அதிரா இந்த டைமன் மாற்றிய பின் என் நிலையோ சினேஹாவைவிட சோகமா சிரிக்கனும் போல இருக்கு!ம்ம்ம் நீண்ட பெருமூச்சு ! விரைவில் மாற்றங்கள் கிடைக்கும் என நம்புகின்றேன்)) சினேஹா போனால் கீர்த்தி))

    ReplyDelete
    Replies
    1. வாங்க நேசன் வாங்கோ:).. ஹா ஹா ஹா எதுக்கு இப்போ சினேகாவௌக்கும் சோகம் என முடிவு கட்டுறீங்க:) அவ நல்ல ஹப்பியாகத்தான் இருக்கிறா மகனோடு..

      //சினேஹா போனால் கீர்த்தி))///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்படி டக்குப் பக்கென நிறம்மாறக்கூடாது நேசன்:) உங்களுக்கு ஸ்நேகாதான் பொருத்தம்:)..

      Delete
  25. இன்னும் வலைச்சிக்கல் தீர்வு தரவில்லை இது கைபேசியில் இருந்து பின்னூட்டம் இடுகின்றேன் மீண்டும் பேசலாம் தெளிவாக தனிமரம் கொம் விரைவில் வரலாம் என்ற நம்பிக்கையில்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இப்போ வருகிறது புதுப்பதிவு.. நான் உங்கள் புளொக் முகவரியை புதிதாக போட்டு வச்சிருப்பதால், ஆனால் ஃபலோவேர்ஸ்க்கு வருவதில்லைப்போலும்.. விரைவில் சரி செய்து எழுதுங்கள்.

      Delete
  26. இனித்தான் பாவற்காய் மோர் வரை எல்லாம் தேடனும் சினேஹாவே ஒரு இனிப்பு தனிமரம் என் போல [[

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்:) மிக்க நன்றி நேசன்.. மொபைலில் கஸ்டப்பட்டு பின்னூட்டமிட்டமைக்கு... எனக்குத்தெரியும் மொபைலில் இருந்து தமிழில் ரைப் பண்ணுவது எவ்வளவு கஸ்டம் என்பது.

      Delete
  27. Replies
    1. வாங்கோ நாகேந்திரா.. மிக்க நன்றி.

      Delete
  28. பாவற்காய்க் கறி
    நம்ம (எனக்கும்) நீரிழிவுக்காரருக்கு
    நல்ல மருந்தாச்சே!

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ முதன் முதலில் வந்திருக்கிறீங்க மிக்க நன்றி. மின்னூல் வெளியீடு வந்து பார்க்கிறேன்.

      Delete
  29. போன பதிவில் பூனை, இந்த பதிவில் பாவற்காய் என எனக்கு பிடிக்காதவைகளை பற்றியே தொடர்ந்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கவிக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) பிடிக்காத பதிவுக்கு மட்டும்தானே உள்ளே வாறீங்க:), பிடிச்ச பதிவை வெளியே இருந்து படிச்சிட்டு ஓடிடுறீங்க:).

      சரி சரி என் அடுத்த பதிவு வரப்போகுது அது உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு:) கட்டாயம் வந்திடோணும் சொல்லிட்டேன்ன்:)..

      மிக்க நன்றி கவிக்கா.

      Delete
  30. சுகருக்கான பாகற்காய் சிகிச்சை படி செய்து பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ, நிட்சயம் செய்து பாருங்கோ உங்களுக்குப் பிடிக்கும்.

      Delete
  31. அதிரா, சர்வ சாதாரணமாக 'ர' வரவேண்டிய இடத்தில் 'ற', 'ள' வரவேண்டிய இடத்தில் 'ழ', 'ழ'க்குப் பதில் 'ள' என்று நிறைய எழுத்துப்பிழை விடுகிறீர்கள். எனக்குத்தான் பயம், இதனைப் படித்துப் படித்து, என்னோட தமிழும் போயிடுமோன்னு.

    செய்முறை நல்லா இருக்கு. வெங்காயம், பூண்டு இல்லாமல் செய்தால் எனக்குப் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது.

    கடைசியில் இணைத்துள்ள, சிவாஜி கணேசன் அவர்களின் வசனத்திலிருந்து நான் புரிந்துகொண்டது, ஆண்கள் எப்போதுமே தங்களைச் சுற்றி இருக்கறவங்க எல்லாருமே நல்லா இருக்கணும்னுதான் கடவுள்ட வேண்டுவாங்க. (உடனே, பெண்கள், மற்றவர்கள் நலனைப் பற்றிக் கவலைப்படமாட்டாங்கன்னு நீங்க புரிஞ்சுக்காதீங்க. ...... புரிஞ்சிக்கிட்டாலும் சரிதான்....)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.